Friday, June 19, 2015

அக்னி சாட்சி - அத்தியாயம் - 32

இடம்: சிவா பணியாற்றும் உணவகத்தின் வாசல்
நேரம்: பகல் 2:00 மணி


ப்ரீதி, "பாஸ்டாவுக்கு மேல இந்த டெஸர்ட்டையும் சாட்டுட்டு ஆஃபீஸில் தூங்கி வழியப் போறேன்"

ஆனந்த், "பரவால்லை. நாலு மணிவரைக்கும் தூங்கினா கொஞ்சம் ரிலாக்ஸ்டா இருப்பே. ரெய்ட் முடிஞ்சதும் ஜாலியா இருக்கலாம்"



ப்ரீதி, "சீ போ! எப்பவும் நோக்கு விளையாட்டுதான்" என்றவள் ஆனந்த் கீழே இருந்த தன் லாப்-டாப் பையை எடுத்து தோளில் மாட்டுவதைக் கண்டு துணுக்குற்று, "என்னது? உன் லாப்-டாப் பேகை எதுக்கு எடுத்துண்டு வந்தே?"

ஆனந்த், "விக்ரம் ஷாவின் லாப்-டாப்பில் இருந்தது எல்லாம் இப்போ என் லாப்-டாப்பில் காப்பி ஆகி இருக்கு. ரெய்ட் நடக்கும் போது இது அங்கே இருக்க வேண்டாம்ன்னு கீழே எடுத்துட்டு வந்தேன். போகும் போது வண்டியில் வெச்சுட்டுப் போயிடலாம்"

வெளியில் வந்த போது. சிவாவும் செல்வியும் எதிரில் வந்தனர்.

ஆனந்த், "ஹல்லோ சிவா. ஹல்லோ செல்வி"

சிவா, "ஹெல்லோ மிஸ்டர் ஆனந்த். ஹல்லோ மிஸ் ப்ரீதி"

ப்ரீதி, "ப்ளீஸ் சிவா. நானும் உங்க வயசுதான் இருப்பேன். ரொம்ப மரியாதை எல்லாம் வேண்டாமே?"

சிவா, "சரிங்க ப்ரீதி"

ப்ரீதி, "என்ன? உங்க அக்கா ஊரில் இருந்து வந்தாச்சா? ஃப்யூனரல் இன்னைக்கு சாயங்காலம்தானே?"

சிவா, "அதில் கொஞ்சம் சிக்கல். ஷிகாகோவில் இருந்து லன்டன் வந்த ஃப்ளைட் டிலே ஆனதால லன்டனில் கனெக்டிங்க் ஃப்ளைட் பிடிக்க முடியலையாம். இன்னைக்கு நைட் பத்து மணிக்குத்தான் வந்து சேரப் போறாங்க. அதனால நாளைக்கு காலைல ஏழு மணிக்கு எடுக்கப் போறாங்க"

ஆனந்த், "ஓ! சரி, நானும் ப்ரீதியும் வந்துடறோம். நீங்களும் செல்வியும் லீவ் போட்டு இருப்பதா சொன்னீங்க? அப்பறம் எங்கே இந்தப் பக்கம்?"

சிவா, "ரெண்டு பேரும் லீவில்தான் இருக்கோம்தான். செல்வியோட பாஸ் அவசரமா எதோ ஒரு சின்ன வேலை இருக்கு ஒரு மணி நேரம் வந்து செஞ்சு கொடுத்துட்டுப் போக ரிக்வெஸ்ட் பண்ணி இருக்கார். அதான் அவளைக் கூட்டிட்டு அப்படியே ரெஸ்டாரண்டில் என்ன நடக்குதுன்னு பாத்துட்டுப் போலாம்ன்னு வந்தேன்"

செல்வி, "நீ பேசிட்டு இரு. நான் ஆஃபீஸுக்குப் போறேன்"

சிவா, "சரி. நான் வெய்ட் பண்ணிட்டு இருப்பேன்"

ப்ரீதி, "ஆனந்த், நானும் ஆஃபீஸுக்குப் போறேன். நீ பேசிட்டு மெதுவா வா"

ஆனந்த், "ஓ.கே ஹனி"

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

இடம்: கார்ல்டன் டவர் (ஷா ஸிஸ்டம் அலுவலகம் இருந்த கட்டிடம்) பேஸ்மெண்டுக்கும் முதல் தளத்துக்கும் இடையே இருந்த மெஸனைன் பகுதி
நேரம்: பகல் 2:00 மணி



ஒரு பெரிய ப்ளாஸ்டிக் பையுடன் வந்த நந்தகுமார் சுற்றிலும் பார்த்தான். விக்ரம் ஷா சொன்ன ட்ரம் அங்கு இருக்கவில்லை. தரையில் போட்டே தீவைக்கலாம் என்று முடிவெடுத்து அந்தப் கூடையில் இருந்த காகிதங்களை அரையும் குறையுமாக கிழித்து ஒரு மூலையில் போட்டான். பிறகு உடன் கொண்டு வந்து இருந்த பெட்ரோலை ஊற்றி தீவைத்தான். ஒவ்வொன்றாக எறிக்காமல் அத்தனை காகிதங்களையும் ஒன்றாக போட்டு எறித்ததில் சில காகிதங்கள் காற்றில் பறக்கத் தொடங்கின. அவன் கண்ணுக்குப் பட்டவை அனைத்தையும் ஒன்று சேர்த்து எரித்து முடித்தான். .... எரித்து முடித்ததாக நினைத்தான்!

முழுவதும் எரிந்து முடியும் வரை காத்திருக்கப் பொறுமை இன்றி அவ்விடத்தை விட்டு அகன்றான்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

நேரம் : பகல் 2:15 முதல் ...
இடம்: அக்கட்டிடத்தை சுற்றி இருந்த பல இடங்கள்


மங்கையர் இருவருக்கும் விடை கொடுத்த பிறகு ...

சிவா, "உங்களுக்கு அவசர வேலை எதுவும் இல்லையா?"

ஆனந்த், "ம்ம்ஹூம். நான் என் ரிலீவலுக்காக காத்துட்டு இருக்கேன். என் வேலை எல்லாம் முடிஞ்சுது. உங்களுக்கு அவசர வேலை இருந்தா நீங்க புறப்படுங்க"

சிவா, "இல்லை ஆனந்த். நான் இன்னைக்கு வர்றதாவே இல்லை. எங்க கோரமங்களா ப்ராஞ்சில் இருந்த குக்கை வரவெச்சு இருக்காங்க. அவர் பாத்துப்பாரு"

ஆனந்த், "அப்படின்னா வாங்க வெளியே போய் ஒரு தம் அடிச்சுட்டே பேசுவோம்"

சிவா, "நானும் காலைல இருந்து அடிக்கவே இல்லை. வாங்க"

இருவரும் வெளியில் சாலையோரம் வந்து நின்றனர் ...

சிவா, "என்ன மிஸ்டர் ஆனந்த்? விக்ரம் ஷா நந்தகுமார் பத்தி எதாவுது தெரிஞ்சுதா?"

சில கணங்கள் யோசித்த ஆனந்த் நண்பனிடம் மறைக்க வேண்டாம் எனறு முடிவு எடுத்து, "சாரி சிவா. உங்ககிட்டே நேத்து நான் பொய் சொன்னேன். இப்போ ஆஃபீஸில் தான் இருக்கார். கூட நந்தகுமாரும் இருக்கான்"

ஆந்தை சற்று முறைத்த சிவா உடனே தன் ஸெல்ஃபோனை எடுக்க...

ஆனந்த், "ப்ளீஸ் சிவா. நான் சொல்றதை முழுசா கேட்டுட்டு அப்பறம் நீங்க என்ன வேணும்ன்னாலும் செய்யுங்க"

சிவா ஆனந்தை உற்று நோக்கியபடி இருந்தான்.

தொடர்ந்து ஆனந்த், "சிவா, அன்னைக்கு உங்க அப்பா இன்னைக்கு சாயங்காலத்துக்குள்ளே விக்ரம் ஷாவையும் நந்தகுமாரையும் போட்டுத் தள்ளறதா சொன்னார். ஆனா, ப்ரீதிக்கு அவ மாட்டிட்டு இருக்கும் சிக்கலில் இருந்து சட்டரீதியா விடுதலை கிடைக்கணும்ன்னா அவ நிரபராதின்னு நிரூபணம் ஆகணும். அது இன்கம்டாக்ஸ் டிபார்ட்மெண்ட் ரெய்ட் வரும் போதுதான் முடியும். உங்களுக்கு எப்படி நந்தகுமாரின் ஸெல்ஃபோனில் இருக்கும் மெமரி கார்ட் தேவையோ அதே மாதிரி எங்களுக்கு விக்ரம் ஷாவின் லாப் டாப் தேவை. அதை வெச்சுத்தான் அவர் செஞ்ச தில்லு முல்லுகளை நிரூபிக்க முடியும். அதை கைப் பற்றினாத்தான் எங்க பேர்ல எந்த கம்ப்ளெயின்டும் வராம தடுக்க முடியும். இன்னைக்கு சாயங்காலம் நாலு நாலரை மணி வாக்கில் இன்கம்டாக்ஸ் காரங்க வரப் போறாங்க. அதனாலதான் நேத்து நீங்க கேட்டப்ப உங்ககிட்டே பொய் சொன்னேன். ப்ளீஸ் இன்னும் ரெண்டு மணி நேரம் உங்க அப்பாகிட்டே சொல்ல வேண்டாம்"

சிவா, "ஆனந்த், தன் மகன் செத்துப் போன வருத்தம் மட்டும் இல்லை. அவருக்கு இது ஒரு மானப் பிரச்சனை. என்னதான் நான் வெப்பாட்டிக்குப் பிறந்தவன்தான்னாலும் பிரபாகர் என் தம்பி. அவனைக் கொன்னவனை பழிவாங்கணும் அப்படிங்கற வெறி எனக்கும் இருக்கு. போலீஸ் பிடிச்சுட்டுப் போனா விக்ரம் ஷா மாதிரி ஆளுங்களுக்கு ரொம்ப வசதி. போலீஸே அவங்களுக்கு ப்ரொடெக்ஷன் கொடுக்கும் அப்பறம் காசை கொடுத்து அவங்க விடுதலையை விலைக்கு வாங்கிடுவாங்க. நீங்க அமெரிக்காவில் இருந்து வந்து இருக்கீங்க. உங்களுக்கு இந்த ஊர் நியாயம் புரியாது"

ஆனந்த், "சிவா, வரப் போறது இன்கம்டாக்ஸ் டிபார்ட்மெண்ட் மட்டும் இல்லை. R&AWவின் சைபர் க்ரீம் பிரிவில் இருக்கும் ரொம்ப சிவா வாய்ந்த போலீஸ் ஆஃபீஸரும்தான். அவங்களை விக்ரம் ஷா விலை கொடுத்து வாங்க முடியாது"

சிவா, "சரி ஆனந்த். அவங்க எதுக்கு விக்ரம் ஷாவை பிடிப்பாங்க? தில்லு முல்லு பண்ணினதுக்காகத்தானே. கொலை செஞ்சதுக்காக இல்லையே? என்ன செய்வாங்க? சில வருஷங்கள் சொகுசான ஜெயிலில் போடுவாங்க. அவன் கொலை செஞ்சதை நிரூபிக்க நமக்கு வருஷக் கணக்கில் ஆகும் அதுக்குள்ளே விக்ரம் ஷா வெளிய வந்து காணாம போயிடுவான். என் தம்பி செத்ததுக்கு என்ன பதில்?"

சிவாவின் பேச்சில் இருந்த நிதர்சனமான உண்மையால் ஆனந்த் பொட்டில் அடித்தாற்போல் உணர்ந்தான்.


அப்போது அவன் கைபேசியில் ப்ரீதி அவனை அழைத்தாள்

ஆனந்த், "என்ன ப்ரீதி?"

ப்ரீதி, "ஆனந்த்சுகுமாருக்கு ஏதோ ஆபத்து"

ஆனந்த், "என்ன சொல்றேஉனக்கு எப்படித் தெரியும்விளக்கமா சொல்லு"

ப்ரீதி, "எதோ யூ.பி.எஸ் மெண்டனென்ஸாம் எல்லா ஸிஸ்டத்தையும் ஷட் டவுன் செஞ்சுட்டு எல்லாரையும் வீட்டுக்குப் போக விக்ரம் ஷா சொல்லி இருக்கார்எல்லோரும் கிளம்பி போயிண்டு இருந்தாலஞ்சுக்குப் போறதுக்கு முன்னாடி சுகுமார் கிட்டே ஒரு மாட்யூலைப் பத்தி சில விஷயம் சொல்லாம விட்டு இருந்தேன்சொல்லாம்ன்னு அவன் சீட்டுக்குப் போனேன்அவன் சீட்டில் இல்லைஇங்கே தான் எங்கேயானும் இருப்பான்னு அவன் ஸெல் ஃபோனில் கூப்பிட்டேன்வேற யாரோ குரல் கேட்டுதுபின்னணியில் சுகுமார் முனகற மாதிரி சத்தம் கேட்டுது"

ஆனந்த், "நீ இப்போ எங்கே இருக்கே?"

ப்ரீதி, "விக்ரம் ஷாவின் கேபினுக்குப் பக்கத்தில் இருக்கும் கான்ஃபரென்ஸ் ரூமில்"

ஆனந்த், "அங்கே எதுக்குப் போனே?"

ப்ரீதி, "விக்ரம் ஷா எதோ அஞ்சு நிமிஷம் டிஸ்கஸ் பண்ணனும்ன்னு வரச் சொன்னார்இங்கே வந்தேன்ஆக்சுவலா உனக்காகத்தான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன்."

ஆனந்த், "எனக்காகவா எதுக்கு?"

ப்ரீதி, "வேற ஒரு க்ளையண்ட் இதே மாதிரி ப்ராஜெக்ட்டுக்கு ப்ரொபோசல் கொடுக்கச் சொல்லி கேட்டு இருக்காங்களாம்உன்னோடவும் சேர்ந்து டிஸ்கஸ் பண்ணனும்ன்னு சொன்னார்அவருக்கு வந்த R.F.P டாக்யுமெண்டைக் கொடுத்து படிக்கச் சொன்னார்நீ வந்ததும் டிஸ்கஷன் தொடங்கலாம்ன்னு சொன்னார்சுகுமார் எங்கேன்னு கேட்டேன்அவன் இல்லை அதனாலதான் என்னோட டிஸ்கஸ் பண்ணனும்ன்னார்"

ஆனந்த், "அசடேமுதல்ல அந்த ரூமில் இருந்து வெளில வா"

ப்ரீதி, "சரி ... " பின்னணியில் அவள் எழுந்து சென்று கதவைத் திறக்க முயலும் சத்தம் கேட்டதுபிறகு பதட்டத்துடன், "ஆனந்த்கதவை யாரோ பூட்டி இருக்காI am locked insideஎன்றபடி அவள் குரல் உடைந்தது ...

ஆனந்த், "ப்ரீதிCalm downஉன்னை அந்த ரூமில் உட்காரச் சொன்னப்ப விக்ரம் ஷா எதாவுது சொன்னாரா?"

ப்ரீதி, "இல்லைநான் அவர் கேபினுக்கு வந்ததும் சிரிச்சுண்டே பக்கத்தில் இருக்கும் கான்ஃபரென்ஸ் ரூமில் உட்காந்து இதை படிச்சுண்டு இரு ஆனந்த் வந்ததும் டிஸ்கஷன் ஆரம்பிக்கலாம்ன்னார்"

ஆனந்த், "சுத்தியும் பாரு சுவத்தில் எதாவுது விடியோ கேமரா இருக்கா?"

ப்ரீதி, "எதுவும் என் கண்ணுக்கு தென்படலை"

ஆனந்த், "பயப் படாதேபட்டப் பகலில் ஆஃபீஸுக்கு உள்ளே உன்னை யாரு எதுவும் செய்ய மாட்டாங்கHe must be having a planமுதலில் அந்த ரூம் கதவில் உள்ளே இருந்து தாள் போடற வசதி இருக்கா?"

ப்ரீதி, "இருக்குடோர் லாக்கிலேயே ஒரு லாட்ச் இருக்குஅதைத் தவிற மேலயும் கீழயும் தாள் போடற மாதிரி இருக்கு"

ஆனந்த், "மத்த கான்ஃபரென்ஸ் ரூம்ஸ் மாதிரி இதுலும் வுட்டன் டோர் தானேடோர்ல க்ளாஸ் ஃபிக்ஸ் பண்ணி இருக்கா?"

ப்ரீதி, "இல்லை முழுக்க முழுக்க வுட்டன் டோர்சுத்தி எல்லாம் வுட்டன் பார்டிஷன் தான்எங்கேயும் க்ளாஸ் இல்லைபில்டிங்குக்கு வெளியில் பார்க்கற மாதிரி ஜன்னல் இருக்குஅதில் மட்டும்தான் க்ளாஸ் இருக்கு"

ஆனந்த், "சரிஇருக்கும் எல்லா தாளையும் போட்டுட்டு உக்காந்து எதானும் ஸ்லோகம் சொல்லிண்டு இருவெளியில் இருந்து நான் உன் ஸெல்ஃபோனில் கூப்பிட்டு சொன்னா மட்டும் கதவை திறவிக்ரம் ஷாவே சொன்னாலும் திறக்காதேஉன்னை உள்ளே விட்டு கதவை அவங்க பூட்டி இருந்ததாவும் பயத்தில் நீ என்னை கூப்பிட்டதாவும் நான் வந்தப்பறம் கதவை திறப்பதாவும் சொல்லு.கேநான் கொஞ்ச நாழியில் வந்துடறேன்"

ப்ரீதி, "கொஞ்ச நாழின்னா?"

ஆனந்த், "மொதல்ல சுகுமாரின் ஃப்ளாட்டுக்குப் போகப் போறேன்அங்கே போயிட்டு ஆஃபீஸுக்கு வரப் போறேன்வரதுக்கு ஒரு மணி நேரம் ஆகலாம்பட் டோண்ட் வொர்ரி.கே?"

ப்ரீதி, "இப்போ ஆல்ரெடி ரெண்டரை மணி ஆச்சுஅவா நாலரை மணிக்கு ரெய்ட் போறா இல்லையா?"

ஆனந்த், "அதுக்கு முன்னாடியே நான் ஒரு ஏற்பாடு செய்யப் போறேன்வெய்ட் பண்ணுஅப்பறம் ஒரு விஷயம்அவர் வெளியில் கதவை பூட்டினது உனக்கு தெரியாதுன்னு நினைச்சுட்டு இருக்கலாம்இன் டர் காமில் கூப்பிட்டார்ன்னா சாதாரணமா பேசுவெளியில் கதவு பூட்டு இருப்பதை தெரிஞ்ச மாதிரி காமிச்சுக்காதே"

ப்ரீதி, "என்ன சொல்லறேபுரியலை"

ஆனந்த், "சுகுமாரையும் உன்னையும் அவர் எதோ சிக்கலில் மாட்டி விடப் பார்க்கறார்ன்னு நினைக்கறேன்ரெய்ட் நடக்கும் போது நீயோ சுகுமாரோ அங்கே இருக்கக் கூடாதுன்னு ப்ளான் பண்ணி இருக்கார் போல இருக்குR&AW வருவது அவருக்கு தெரிஞ்சு இருக்குமான்னு தெரியலை"

ப்ரீதி, "நேக்கு பயமா இருக்கு ஆனந்த்"

ஆனந்த், "ஹனிப்ளீஸ் என்னை நம்புகதவை உள்ளே தாப்பா போட்டுண்டு நீ உள்ளே இருக்கச்சே நோக்கு ஒரு ஆபத்தும் இல்லை.என்னை நம்பு ஓ.கே?"

ப்ரீதி, "சரிசீக்கரமா வா"

எதிரில் இருந்த சக்தியிடம் ஆனந்த், "உங்க அப்பாவின் ஆளுங்க இப்போ எங்கே இருக்காங்க?"

சிவா, "பில்டிங்குக்கு முன்னாடி இருக்கும் பார்கிங்க் லாட்டில் ஒரு காரில் வெயிட் பண்ணிட்டு இருக்காங்க"

ஆனந்த், "நிச்சயம் உங்களுக்கு நான் ஹெல்ப் பண்ணறேன்சிவாகிவ் மீ ஃபைவ் மினிட்ஸ்என்றபடி முதலில் ஷான் ஹென்ரியை கைபேசியில் அழைத்தான்

எதிர்முனையில் ஷான் ஹென்ரி, "ஆனந்த்You know what time is it here?என்று கத்த

ஆனந்த், "ஷான்ப்ளீஸ்ஒரு விஷயம்எந்த அளவுக்கு உண்மைன்னு தெரியலைவிக்ரம் ஷா வேற எதோ ஒரு கொலை கேஸில் சம்மந்தப் பட்டு இருக்காராம்பழிவாங்கறதுக்காக அவரை கொல்ல ஒரு கூட்டம் வெய்ட் பண்ணிட்டு இருக்குன்னு ஒரு ரூமர்.ஒருவேளை ரெய்ட் வரதுக்கு முன்னாடி அவரை யாராவுது தீத்துக் கட்டிட்டா?"

ஷான், "இன்னும் ரெண்டு மணி நேரத்துக்குள்ளே ஒண்ணும் ஆகாதுஅப்படி நாம் அரெஸ்ட் பண்ணறதுக்கு முன்னாடி அவன் செத்துட்டான்னா ஒண்ணும் பண்ண முடியாது

அந்த தகவல் திருட்டின் ஆதாரம் எல்லாம் நமக்குக் கிடைச்சா போதும்கேஸை க்ளோஸ் பண்ணிடலாம்"


ஆன்ந்த, "அப்ப எங்க கதி?"

ஷான், "You mean you and your fiance?"

ஆனந்த், "ஆமா?"

ஷான், "நான் தான் கேஸையே க்ளோஸ் பண்ணிடலாம்ன்னு சொன்னேன் இல்லையா?"

ஆனந்த், "தாங்க்ஸ் ஷான்என் ஃப்ரெண்ட் இந்த விஷயத்தை சொன்னதில் இருந்து பயந்துட்டு இருந்தேன்"

ஷான், "எதுக்கும் நான் உடனே R&AWவைக் கூப்பிட்டு அவரோட பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யறேன்"

ஆனந்த், "தேவை இருக்காதுன்னு நினைக்கறேன் ஷான்எப்படியும் இன்னும் ரெண்டு மணி நேரத்தில் ரெய்ட் வரப் போறாங்கஅவர் என் கண்காணிப்பில் தான் இருக்கார்அவருக்கு எதாவுதுன்னா நான் உடனே ஆஃபீஸர் வந்தனா சக்திவேலுக்கு ஃபோன் செய்யறேன்.கே?"

ஷான், "சரிஇந்த விஷயத்தையும் நீ வந்தனாவுக்கும் சொல்லுஎன்றபடி விடை பெற்றார்.

ஆனந்த் சிவாவிடம், "சிவாநான் அவர்கிட்டே பொய் சொன்னேன்எனக்குத் தேவை விக்ரம் ஷாவின் லாப் டாப் ஹார்ட் டிஸ்க்.உங்களுக்குத் தேவை நந்தகுமார் ஸெல்ஃபோன்இது ரெண்டையும் நமக்கு கிடைக்கும்ன்னா உங்க அப்பாவின் ஆளுங்க அவரை என்ன வேணும்ன்னாலும் செய்யட்டும்ஆனாஅதுக்கு முன்னாடி ஒரு ஹெல்ப்"

சிவா, "என்ன?"

ஆனந்த், "காரில் எத்தனை பேரு வெய்ட் பண்ணிட்டு இருக்காங்க?"

சிவா, "நாலஞ்சு பேர் இருக்கும்கூட அப்பாவோட மச்சினன் கோபாலும் இருக்கார்"

ஆனந்த், "ப்ரீதி மாதிரியே சுகுமார்ன்னு ஒருத்தன் பேரிலும் விக்ரம் ஷா பினாமிக் கம்பெனி வெச்சு இருந்தார்அவனை இப்போ இந்த பில்டிங்கின் பின்னாடி விங்கில் ஒரு ஃப்ளாட்டில் அடைச்சு வெச்சு இருக்காங்கப்ரீதி தப்பிக்க அவனோட சாட்சியமும் தேவையா இருக்கும்அவனை விடுவிச்சுட்டுஅங்கே இருந்து பின்னாடி வழியா விக்ரம் ஷாவின் ஆஃபீஸுக்கு வரதுக்கு நான் வழி சொல்லறேன்.நானும் உங்க கூட வரேன்ஷா ஸிஸ்டம் ஆஃபீஸில் ப்ரீதியை அடைச்சு வெச்சு இருக்கார்நான் ப்ரீதி கூட பேசினதை கேட்டு இருப்பீங்களே"

சிவா, "ப்ரீதி மேடத்துக்கு எதுவும் ஆபத்து இல்லையே?"

ஆனந்த், "இப்போதைக்கு ஒண்ணும் இல்லைஒரு ரூமில் அடைச்சு வெச்சு இருக்காங்கஅனேகமா அவளையும் சுகுமாரை அடைச்சு வெச்ச இடத்தில்தான் அடைச்சு வெக்க ப்ளான் பண்ணி இருப்பாங்கஎனக்காகவும் வெயிட் பண்ணிட்டு இருக்காங்கவிக்ரம் ஷா எதோ மோப்பம் பிடிச்சு இருப்பார் போல இருக்குநான் வெளியில் இருக்கும் வரை அவருக்கு ஆபத்துநிச்சயம் எனக்காக வெயிட் பண்ணுவார்"

சிவா, "சரி வாங்கஎன்றபடி இருவரும் கட்டிடத்தின் முன்னால் இருந்த பார்கிங்க் லாட்டுக்கு விறைந்தனர்சிவா கோபாலுடன் பேசும்போது ஆனந்த தன் லாப்டாப்பை தன் ஸ்கார்ப்பியோவில் வைத்து விட்டு வந்தான்எல்லோரும் கட்டிடத்தின் பின் புறத்துப் பகுதிக்குச் சென்று அப்பகுதில் இருந்த லிஃப்ட்டில் நான்காம் தளத்தை அடைந்து சுகுமார் இருந்த ஃப்ளாட்டுக்குச் சென்றனர்.

கதவைத் தட்ட ஒருவன் கதவை முழுவதும் திறக்காமல் எட்டிப் பார்க்க அவனை தள்ளியபடி உள்ளே புகுந்தனர்ஒரு மூலையில் ஒரு நாற்காலில் சுகுமார் கட்டிப் போடப் பட்டு இருந்தான்அங்கு இருந்த விக்ரம் ஷாவின் அடியாட்கள் இருவரிடம் கத்தி மட்டும் இருந்தது.கோபாலிடம் கைத் துப்பாக்கி இருந்ததுதுப்பாக்கிக்கு பயந்து சரணடைந்தனர்சுகுமாரை விடுவித்த பிறகு அந்த அடியாட்கள் இருவரையும் கை கால்களைக் கட்டி ஒரு அறையில் அடைத்தனர்.
 
சுகுமார், "தேங்க்ஸ் ஆனந்த்விக்ரம் ஷா நம்ம மூணு பேரையும் தீத்துக் கட்ட ப்ளான் பண்ணி இருக்கார்"
 
ஆனந்த், "யார் மூணு பேரையும்?"
 
சுகுமார், "நீங்கப்ரீதி அப்பறம் நான்உங்களையும் ப்ரீதியையும் இங்கே கொண்டு வந்து ஷூட் பண்ணிட்டு அந்த கன்னில் என் கைரேகை படற மாதிரி செஞ்சுட்டு என்னை தூக்கில் தொங்க விடறதா ப்ளான் பண்ணி இருக்கார்என்னைக் கட்டிப் போடும் போது இந்த ஆளுங்க சொன்னாங்கப்ரீதி இப்போ எங்கே?"
 
ஆனந்த், "ஆஃபீஸில் இருக்காபோலாம் வாங்க"என்று சொல்லச் சொல்ல அவன் கைபேசி சிணுங்கியது. எல்லோரையும் அமைதி காக்கும் படி சொன்ன பிறகு ஸ்பீகர் ஃபோனை இயக்கி இணைப்பை தொடங்கினான்.
 
எதிர்முனையில் விக்ரம் ஷா, "ஆனந்த். எங்கே போயிட்டே? நானும் ப்ரீதியும் உனக்காக வெய்ட் பண்ணிட்டு இருக்கோம்"
 
ஆனந்த், "அப்படியா சார்? ப்ரீதி என் கிட்டே சொல்லவே இல்லையே?"
 
விக்ரம் ஷா, "போதும் உன் நாடகம். நீ அவகிட்டே பேசினது எனக்குத் தெரியும். கதவை உள்ளே இருந்து அடைச்சுட்டு அந்த கான்ஃபரென்ஸ் ரூமில் உக்காந்துட்டு இருக்கா. நானும் நந்தகுமாரும் கையில் கன்னோட அந்த ரூமுக்கு வெளியே இருக்கோம். நீ இன்னும் அஞ்சு நிமிஷத்தில் இங்கே வரலைன்னா கதவை உடைச்சுட்டு உள்ளே போகப் போறோம். அதுக்கு அப்பறம் ப்ரீதியை நீ மறந்துடணும்"
 
ஆனந்த், "மிஸ்டர் ஷா. நான் இன்னும் அஞ்சு நிமிஷத்தில் அங்கே வர முடியாத தூரத்தில் இருக்கேன். கிவ் மீ ஃபிஃப்டீன் மினிட்ஸ்" என்று அவர் அதற்கு மேல் எதுவும் பேசுவதற்கு முன் இணைப்பைத் துண்டித்தான்.
 
அடுத்த கணம் ப்ரீதியை அழைத்து, "ப்ரீதி. Are you O.k?"
 
ப்ரீதி, "ம்ம்ம் ... ஓ.கே. கதவை யாரோ வெளில இருந்து திறக்கப் பார்த்தா. நான் எதுவும் செய்யலை. அப்பறம் விக்ரம் ஷா இன்டர்காமில் கூப்பிட்டு எதுக்கு உள்ளே தாப்பா போட்டுண்டு இருக்கேன்னு கேட்டார். நான் அந்த நந்தகுமாரை வெளியில் பார்த்தேன். அவனைப் பாத்தா பயமா இருக்குன்னு கதவை தாப்பா போட்டுண்டு இருக்கேன்னு சொன்னேன். நீ வந்ததும் திறக்கறேன்னு சொன்னேன். ஏன் பயமா இருக்குன்னு எதுவும் கேட்காம சரின்னு வெச்சுட்டார். இப்போ நேக்கு ரொம்ப பயமா இருக்கு. நீ எங்கே இருக்கே?"


 
ஆனந்த், "இதோ வந்துண்டே இருக்கேன். தைரியமா இரு"
 
பிறகு சிவாவிடம் ஆனந்த், "நீங்க வரப் போறது அந்த ஆளுக்கு தெரியாது. இப்போதைக்கு இன்கம்டாக்ஸ் ரெய்ட் வரதுக்கு முன்னாடி எப்படியாவுது ப்ரீதியையும் என்னையும் இங்கே கூட்டிட்டு வரணும்ன்னு இருக்கார். அனேகமா ப்ரீதியை கன் பாயிண்டில் வெச்சு என்னை கூட்டிட்டு வரலாம்ன்னு ப்ளான் பண்ணி இருக்கார். நான் மட்டும் போறேன். நீங்க எல்லாம் இங்கேயே வெயிட் பண்ணுங்க. எப்படியும் இங்கதானே கூட்டிட்டு வரலாம்ன்னு இருக்கார்?"
 
அதற்கு ரெட்டியின் மைத்துனர், "இல்லை சார். உங்க கூட வந்து ஆஃபீஸுக்கு ஃப்ரெண்ட் என்ட்ரென்ஸிலும் நீங்க சொன்ன அந்த பேக் என்ட்ரன்ஸிலும் ரெடியா நின்னுக்கறோம். டைம் வேஸ்ட் பண்ண வேண்டாம் வாங்க"
 
ஆனந்த், "சரி போலாம் வாங்க"
 
எல்லோரும் மேல் தளத்துக்கு விரைந்தனர் ...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இடம்: அக்கட்டிடத்தின் பேஸ்மெண்டில் தொடங்கி பல இடங்கள்
நேரம்: பகல் 2:15 முதல்
 
அவன் தீவைத்த மூலையில் தரையில் சுவற்றை ஒட்டி ஒரு சிறு செப்புக் குழாய் சுவற்றுக்கு மறுபுரம் செல்வதை அவன் கவனிக்கவில்லை.
 
கீழே இருந்த பேஸ்மெண்டில் இருந்த கேஸ் சிலிண்டர்களை அந்த தளத்தில் இருந்த ஒரு உணவகத்தின் கிச்சனில் இருந்த அடுப்புகளுக்கு இணைக்கும்படி அந்த செப்புக் குழாய் அமைக்கப் பட்டு இருந்ததுசூடு பிடித்த செப்புக் குழாயில் சிறு விரிசல் தோன்றுவதற்கு வெகு நேரம் எடுக்க வில்லைவிரிசல்களில் வெளிவந்த கேஸ் குழாயின் வெப்பத்தினால் உடன் தீப்பிடித்து அந்த தீயை ஸிலிண்டர்களை நோக்கிப் பரவச் செய்ததுகுழாயின் வெப்பம் அதன் வழி நெடுக செல்ல ஒரு இடத்தில் அந்தக் குழாயை ஒட்டினாற்போல் அமைத்து இருந்த மின்சார வயர்கள் புகைத்து எரியத் தொடங்கினஅந்த வயர்களில் பிடித்த தீயும் பேஸ்மெண்டை நோக்கிப் பரவத் தொடங்கியது
 
அந்தக் கட்டிடத்தில் அலுவலகங்கள் அமைந்த முன்பக்கத்துப் பகுதியில் முன் பின் இரு புறமும் லிஃப்டுகள் இருந்தனஆனால் பின் புறத்தில் மட்டும் படிகள் அமைந்து இருந்தன. ஃப்ளாட்டுகள் அமைந்த பின்பக்கத்துப் பகுதியில் இரண்டு இடங்களில் படிகள் அமைந்து இருந்தனஅக்கட்டிடத்தைத் திட்டமிட்டவர்கள் முதலில் முன்புறத்திலும் லிஃப்ட்டுக்கு அருகே படிகள் இருக்குமாறு வடித்த திட்டத்தை கட்டிட்டத்தின் சொந்தக் காரர்கள் புரக்கணித்து அப்படிகளுக்குத் தேவையான இடங்களையும் அலுவலகங்களுக்குப் பயன்படுத்தி இருந்தனர்அதன் விளைவாக தீ விபத்து நேர்கையில் முன் பகுதியில் இருப்பவர்களுக்கு கட்டிடத்தில் இருந்து வெளி வர லிஃப்டுகளையும் பின் புறத்துப் படிகளையும் தவிற வேறு வழி இல்லைஅது மட்டும் இல்லாது முன்பக்கத்து பகுதியின் காரிடோர்கள் முழுவதும் மிதமாக ஏர்-கண்டிஷன் செய்யப் பட்டு இருந்ததுஅதனால் ஒவ்வொரு தளத்திலும் ஜன்னல்கள் திறக்க முடியாதபடி அடைக்கப் பட்டு இருந்தனஒவ்வொரு அலுவலகமும் ஏர்-கண்டிஷன் செய்யப் பட்டு இருந்ததுகாரிடோர்கள் ஏர்-கண்டிஷன் செய்யப் பட்டு இருப்பினும் ஒவ்வொரு அலுவலகமும் தனியே ஏர்கண்டிஷன் செய்யப் பட்டு இருந்ததால் அலுவலகக் கதவுகள் பொதுவாக சாத்திய படியே இருக்கும்.
 
சிவா பணியாற்றிய உணவகம் அக்கட்டிடத்தின் முன் பாகத்தில் ஒரு எக்ஸ்டென்ஷன் போல இணைத்து இருந்த பகுதில் இருந்ததால் அங்கு தீ பரவ வில்லைஇருப்பினும் கட்டிடத்தின் நடந்த களேபரத்தினால் அங்கு இருந்த வாடிக்கையாளர்களையும் வெளியேறச் சொல்லி அங்கு தீ பரவாமல் இருக்கும் வேலையில் ஈடுபட்டனர்எத்திராஜ் அச்சமயம் உணவகத்தில் இருந்தாலும் சிவாவையும் செல்வியும் இன்னமும் ரெட்டியின் வீட்டில் இருப்பார்கள் என்று நினைத்து எத்திராஜ் சிவாவை அழைக்கவில்லை.
 
ஒரு தீ விபத்தில் தீயினால் வரும் ஆபத்தை விட தீ ஏற்படுத்தும் புகையினால் வரும் ஆபத்தே அதிகம்காற்றில் இருக்கும் ஆக்ஸிஜன் தீக்கு இரையான்பின்காற்றில் அது உரிஞ்சப் பட்ட இடத்தில் கரித்தூளும் கார்பன் டைஆக்ஸைட் மற்றும் கார்பன் மோனாக்ஸைடும் நிறைந்த புகை காற்றை நிறப்பி அங்கு இருப்பவர்கள் சுவாசிக்க முடியாத படி செய்கிறது
 
நந்தகுமார் தொடக்கி வைத்த தீ இரு விதத்தில் பரவியதுஅதன் முதல் பலி முதல் தளத்தில் இருந்த உணவகம்எளிதில் தீப் பிடிக்கக் கூடிய மேசை விரிப்புகளும் சுவர் முழுவதும் இருந்த கர்டன்களும் தீயை வேகமாகப் பரவ விட்டனஅக்கட்டிடத்தில் பேஸ்மெண்டில் இருந்த ட்ரான்ஸ்ஃபார்மரும் லிஃப்ட் அமைந்து இருந்த லிஃப்ட் ஷாஃப்ட் பகுதில் மேல் தளம் வரை இழுக்கப் பட்டு இருந்த மின்சார வயர்களும் பேஸ்மெண்டில் தொடங்கிய தீக்கு இரண்டாவது பலி ஆகினஅதன் விளைவாக அக்கட்டிடத்தின் முன் பக்கத்துப் பகுதி முழுவதும் மின்சாரத் தடை ஏற்பட்டு லிஃப்டுகள் செயலற்று நின்றனபின் புறத்தில் இருந்த படிகளை ஒட்டி பற்றிய தீயின் புகை படிகள் வழியாக கட்டிடம் முழுவதும் இருந்த காரிடோர்களில் பரவத் தொடங்கியதுமுதல் தளத்தைத் தவிற மற்ற தளங்களில் இருந்த அலுவகங்கள் மேலும் ஏர்-கண்டிஷன் செய்யப் பட்டு அடைக்கப் பட்டு இருந்ததாலும் மின்சாரத் தடை ஏற்பட்டாலும் தொடர்ந்து இயங்குவதற்காக அலுவலகங்களில் யூ.பி.எஸ் இருந்ததாலும் பல அலுவகங்களில் இருந்தவர்களுக்கு தீப்பிடித்தது தெரியாமல் இருந்ததுவயர்கள் மூலம் அலுவலகத்துக்குள் தீப்பிடிக்கத் தொடங்கிய போதே அவர்கள் அபாயத்தை உணர்ந்தனர்

.
 
அப்படியும் அலுவகங்களில் இருந்து வெளி வரப் பார்த்தவர்களை காரிடோர்களில் இருந்த புகை தடுத்தது.
 
சுமார் மூன்றரை மணியளவில் அழைக்கப் பட்ட தீயணைப்புப் படையினரால் ஏர்போர்ட் ரோடின் சாலை நெருக்கடியால் நான்கரை மணிக்கே கட்டிடத்தை அடைய முடிந்தது.



No comments:

Post a Comment