Thursday, November 20, 2014

ரேவதி பாகம் 10


இரண்டு நாட்களுக்கு பிறகு படித்து முடித்தபின் ரேவதி அருணிடம் மிகுந்த தயக்கத்துடன், "சாயங்காலம் அன்வர் பாய் வந்து இருந்தாரு ..." "ஓ, அப்படியா .. நல்லா இருக்காறா?" "ம்மம் .. வந்து .. அவர்கிட்ட நான் கொஞ்சம் கடன் வாங்கி இருந்தேன் .." என்றதும் "சே, நானே உன்கிட்ட கேக்கனும்னு இருந்தேன் ... அவர் வீடு தேடி வர்ற மாதிரி ஆயிடுச்சே .. சாரிடா. ஓ.கே எவ்வளவு? வேற யார்கிட்டயாவுது வாங்கி இருக்கயா?"

 "அன்வர் பாய் கிட்ட பத்து ஆயிரம் வாங்கி இருக்கேன் .. எங்க ஹவுஸ் ஒனரம்மா கிட்ட பத்து ஆயிரம் ஆனா டெபாசிட் அஞ்சாயிரம் கொடுத்து இருந்தோம். இந்த மாசம் ரென்ட் சேத்துனா அவங்களுக்கு ஆராயிரத்து ஐநூறு கொடுக்கணும் ..." என்றவளை தடுத்து "ஆமா, அந்த முருகேசன் கிட்ட வாங்கினயா இல்ல பாய் சொல்ற மாதிரி ..."
"பாய் சொல்ற மாதிரி அதிகம் கமிஷன் அடிச்சு இருக்கலாம் எனக்கு தெரியல .. ஆனா நான் அவன் கிட்ட இருபதாயிரம் வாங்கி இருக்கேன்"

 "சரி, எப்படியும் நாளைக்கு உன்னை பாங்குக்கு கூட்டிட்டு போய் புது அக்கௌன்ட் ஒண்ணு உம்பேர்ல ஓபன் பண்ணலாம்னு இருந்தேன்.. அப்படியே பணம் ட்ரா பண்ணிட்டு வந்து நாளைக்கே எல்லாரோட கணக்கையும் செட்டில் பண்ணிடலாம்.. .. அந்த முருகேசனோடதையும் சேத்துதான் ... மத்தவங்க பணம் நமக்கு வேண்டாம் ஓ.கே?" கண்கள் பனிக்க "தேங்க்ஸ் ... நான் ஜாபுக்கு வந்ததும் வட்டியோட திருப்பி கொடுத்தடறேன்" "ஒதை! அதைவிட பெரிசா நீ என்னை இன்ஸல்ட் பண்ண முடியாது ...

என்னை உன்னோட ஒரு க்லோஸ் ஃப்ரெண்டா நெனைச்சுக்கோ .. ஃப்ரெண்ட்ஸ்கிட்ட குடுக்கல் வாங்கல் இருக்க கூடாது .. என்ன?" மனதுக்குள் 'க்லோஸ் ஃப்ரெண்டு மட்டும் தானா?' என்று எண்ணி அவனை பார்த்தவளிடம் தொடர்ந்து "பட், இன அ வே, எஸ், ஒரு கடனா நெனைச்சுக்கோ .. நீ படிச்சு முடிச்சப்பறம் வேற யாருக்காவுது ... தேவை இருக்கறவங்களுக்கு ... திருப்பி கொடு. சரியா?" கண்களில் நீர் தளும்ப "மறுபடியும் தேங்க்ஸ் .. அப்ப நான் உங்களுக்கு என்ன செய்யணும்?"

 "ஓண்ணும் செய்ய வேண்டாம் ...போய் படு. நாளைக்கு டெஸ்ட் இருக்கு" 'நீங்க படுன்னதுக்கு பதிலா கூட படுன்னு இருந்தாலும் சந்தோஷமா சரின்னு இருப்பேன்... ஆனா நீங்க அப்படி கேக்க மாட்டீங்கன்னு தெரியும்' என்று மனதில் அவனை பூஜித்தவளாக தன் படுக்கைக்கு சென்றாள். அகிலாவின் மாசாந்த்ரம் எனப்படும் இறந்து முப்பதாவது நாளை இறப்பு நிகழ்ந்த வீட்டில் பூஜை சேய்தோ அல்லது கோவிலுக்கு சென்றோ வணங்குவது வழக்கம் என்று விசாலாக்ஷி அறிவுரைத்ததும்,

அகிலா இருக்கும்போது அவள் திருப்பதி செல்ல வேண்டும் என்று வேண்டியிருந்த்தாக ரேவதி கூற, அருண் அவளை திருப்பதி அழைத்துச் சென்றான். வார இறுதியில் சனி அல்லது ஞாயிறு அன்று வினிதா வந்து ரேவதியுடன் சில மணி நேரங்கள் இருந்து செல்வது வாடிக்கை ஆயிற்று. வெள்ளி அல்லது சனிக்கிழமைகளில் முன்னிரவில் அருண் பாஸ்கருடனோ அல்லது அவனது மற்ற நண்பர்களுடனோ சென்று தொண்டையை நனைப்பதையும் வழக்கமாக கொண்டிருந்தான். பாஸ்கரை பல நாட்களுக்கு பிறகு சந்தித்தபோது நடந்தவை ....

 போட் க்ளப்பில் இம்முறை பாஸ்கர் காத்திருக்க அருண் அவனை சற்று நேரம் காக்க வைத்தபின் பிரவேசித்தான். “என்னடா? இந்தியால ஆறுமாசம் டேராவா?” “ஆறு மாசம்ன்னு உனக்கு யார் சொன்னது?” “நீதான ஃபோன்ல சொன்னே” என்று பாஸ்கர் மழுப்பினான். “இந்தியால கொஞ்ச நாள்னு சொன்னேன். ஆறு மாசம்னு சொன்னதா ஞாபகம் இல்லையே?” “நீ சொல்லலயா? இல்ல .. பிஸினஸ்ல ஹெல்ப் பண்ணப் போறேன்னு சொன்னியில்ல எப்படியும் ஒரு ஆறு மாசம் இல்லாம நீ சொன்னதெல்லாம் முடியாது .. அதனால தான் சொன்னேன்”

 “ம்ம்ம் .. இதனாலதான் நம்மெல்லாம் போர்டிங்க் ஸ்கூல்ல இருந்தப்ப சேந்து எந்த திருட்டுத் தனம் பண்ணினாலும் நாங்க யார் மாட்டுனாலும் பரவால்லெ நீ மட்டும் சிக்கக்கூடாதுன்னு உன்னை பத்தரமா பாத்துக்குவோம்” “டேய், இப்ப அதுக்கு என்ன?” “ஏன்னா உனக்கு ஒழுங்கா பொய் சொல்ல தெரியாது. நீ ஒருத்தன் சிக்குனா போதும் எங்களை எல்லாரையும் மாட்டி விட்டுருவே. இதனால தான் உங்கப்பா எக்ஸ்போர்ட் பிஸினஸ்ல உன்னை மாமா வேலை மட்டும் பண்ண சொல்லி இருக்காரு” “டேய், என்ன விட்டா சும்மா பேசிட்டே போறே” “மவனே, உனக்கு யார் சொன்னாங்கன்னு தெரியும்”

 “ஆமாடா, வினி தான் சொன்னா .. இப்ப திருப்தியா? ஆனா, அவ வேற நிறைய விஷயமும் சொன்னா. அதைப் பத்தி நீயா எங்கிட்ட பேசுவேன்னு இருந்தேன். பரவால்ல ..” “வேற நிறைய விஷயமும்னா? ரேவதியைப் பத்தியா?” “ரேவதியா? அப்படி எனக்கு யாரும் தெரியாதுப்பா. எனக்கு தெரிஞ்சது ரீடான்னு ஒரு செம டிக்கெட். என்னோட பையர்ஸே அவளுக்கு மூணு பேர் ரெகுலர் கஸ்டமர்ஸ். அதுலயும் ஒருத்தன் ஜெர்மன், ஆளு சும்மா ஆறரையடி இருப்பான். இந்த ஊர் பொண்ணுங்க எல்லாம் கோழிக் குஞ்சாட்டம் அவனைக் கண்டாலே நடுங்கி கூட படுக்க ஒத்துக்க மாட்டாளுக.

அவனையே நல்லா சமாளிச்சவ...” என்று பாஸ்கர் அடுக்கிக் கொண்டு போனான். கொதிப்படைந்த அருண் அவனையறியாமல் எழுந்து நின்றபின் தண்டபாணி கேட்ட கேள்விகளில் ஒன்று அவன் மனத்தில் ஒலித்த்து. ‘நல்ல வேளை ரேவதி என் கூட இல்லை ...’ என்று எண்ணி சிறிது மௌனம் காத்து “எதுக்கு சுத்தி வளைக்கறே? சொல்ல வந்ததை சொல்லு” “அந்த பொண்ணைப் பத்தி வினிதா சொன்னா. ரொம்ப பாவம்தான். தெரிஞ்சு இருந்தா நானே எங்கப்பாகிட்ட பேசி அவளுக்கு ஹெல்ப் பண்ணி இருப்பேன். நீ ஹெல்ப் பண்ணறே, சரி, ஆனா காதலிக்கறேன்னு சொன்னியாமில்ல?” “ம்ம்ம்” “ஏண்டா? நீ பாக்காத பொண்ணுங்களா?

யோசிச்சு பாரு.. சொசைட்டில எப்படிறா உன்னால தல நிமிந்து நடக்க முடியும்?” “உனக்கு ஒரே பதில்தான் சொல்ல முடியும் .. அதுவும் நீ கேட்டதேதான் .. ஐ லவ் ஹர் .. பீரியட்.. இதுக்கு ஏன் எதுக்குன்னு எல்லாம் விளக்கம் கொடுக்க முடியாது .. அப்படி கொடுத்து என்னோட லவ்வை கொச்சைப் படுத்தவும் விரும்பல” “அப்படி என்னடா இருக்கு அந்த பொண்ணுகிட்ட?” “மவனே, சொன்னேன் இல்ல .. லீவ் இட் .. “ பேரர் வந்து மெனு கார்டை நீட்ட அவர்கள் பேச்சு தடை பட்டது.

இருவரும் அவரவர்களுக்குடைய வாடிக்கையான பானத்தை ஆர்டர் செய்தபின்னும் மௌனம் நீடித்தது. அருண், “நான் லவ் பண்றென்னு அந்த பொண்ணுகிட்ட இப்போதைக்கு சொல்லப் போறதில்லை எப்ப சொல்லப் போறேன்னும் தெரியாது .. அதுக்கு முன்னால அவ வேற யாரையாவுது லவ் பண்ணினான்னா சொல்லவே போறதில்லை” “ம்ம்ம் .. வினிதா சொன்னா .. ஆனா அவங்க எல்லாருக்கும் உன்னைப் பத்தி நல்லா தெரியும் .. அந்த பொண்ணு அப்படி யாரையும் லவ் பண்ணப் போறதில்லை .. நீ கேட்டேன்னா மாட்டேன்னும் சொல்ல போறதில்லை .. so they don’t have any doubt about your impending nuptials with her”. “அப்பறம் நீ ஏன் குறுக்குல?”

 “ஓஹோ, இப்ப நான் உனக்கு வேண்டாதவனா போயிட்டனா? உம் மேல இருக்கற அக்கறைல தாண்டா” “அக்கறை இருக்கு இல்ல? Why the fuck cant you be supportive?” “It’s your life damn it! My being supportive isn’t going to solve the problems you are going to face” சரி, மொதல்ல இதை சொல்லு. உனக்கு அந்த பொண்ணைப் பத்தி முழுசா தெரியுமில்ல? For a moment ignore the society .. நீ என்னை ஆதரிப்பயா?” சிறிது நேர மௌனத்திற்கு பிறகு மெதுவாக “டேய், சொசைட்டிய விடு ... உனக்கு அருவெறுப்பா இல்லையா?” என்று ஆரம்பித்தான்

 “என்னடா அருவெறுப்பு? அவகூட படுக்க நீயேதான எனக்கு அவளை புக் பண்ணி கொடுத்தே” “ஒரு நைட்டு படுக்கறது வேற, அவளே உன் பொண்டாட்டியா உன் படுக்கைக்கு வரும்போது ... பச்சையா சொல்றேன் ... இந்த உடம்பை எத்தனை பேர் உனக்கு முன்னால தொட்டு பாத்து வேணும்கறதெல்லாம் பண்ணியிருப்பாங்கன்னு யோசிச்சா நிச்சயம் அருவெறுப்பா தான் இருக்கும் .. இருக்காதுன்னு சும்மா பொய் சொல்லாதெ. சொசைட்டில இருக்கறவனும் இதைத்தான் யோசிப்பான்” ஒரு கணம் பாஸ்கரின் சொல்லில் இருந்த உண்மை அவனை தாக்கியது .. அடுத்த கணம் ரேவதியை பற்றி வினிதா அவளிடம் கூறியவற்றை மனதில் கூர்ந்து ... அவ்விஷயங்களை வினிதா பாஸ்கரிடம் சொல்லியிருக்க மாட்டாள் என்று உணர்ந்து ..

 “உடம்பை மட்டும் பாத்தா அருவெறுப்பாத் தான் இருக்கும் ... சத்தியமா சொல்றேன் ... எனக்கு அருவெறுப்பா இருக்காது ... என் ரேவதி மேல மத்தவங்க கை படற மாதிரி ஆயிருச்சேன்னு கவலையா இருக்கும் ... call it my possessiveness .. இவளை ஒரு ஆறு மாசத்துக்கு முன்னால பாக்காம போயிட்டமேன்னு எம்மேலயே ஒர் அர்த்தமில்லாத கோவம் வரும் .. வருது. சரி, நான் ஒண்ணு கேக்கறேன், ஒரு வேளை வினிதாவை ஒரு கும்பல் வந்து ரேப் பண்ணிட்டு போச்சுன்னா அதுக்கப்பறம் அவ மேல உனக்கு அருவெறுப்பா இருக்குமா? நல்லா யோசிச்சு பதில் சொல்லு” அதிர்ந்து வெளுத்த முகத்துடன் மௌனம் சாதித்த பாஸ்கரிடம் தொடர்ந்து அருண்,

 “ரெண்டும் ஒண்ணுதான் ... பாக்கற கண்ணோட்ட்த்துல இருக்கு” அருணின் பதிலால் ஸ்தம்பித்துப் போனான் பாஸ்கர் ... அருணின் காதலின் ஆழம் அவனுக்கு புரிந்த்து.
அருணும் வினி எப்படிப்பட்ட ஒருவனை மணமுடிக்கப் போகிறாள் என்று தெரிந்து கொள்ள, அவனை ஆழம் பார்க்கவே அக்கணையை தொடுத்திருந்தான் .. அவன் மௌனம் அருணின் மனதில் நிம்மதியை கொடுத்த்து. “என்ன பதிலே இல்ல .. சரி இப்ப நான் மொதல்ல கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு. நீ எனக்கு சப்போர்ட் பண்ணுவையா?”

 “நீ இந்த அளவுக்கு அவளை லவ் பண்றேன்னா ... எஸ் .. பண்ணுவேன்” “சரி, உனக்கு சொசைட்டில எத்தனை பெரை நல்லா தெரியும் ... ஒரு பத்து பேரு? அந்த பத்து பேர்கிட்ட எனக்கு சப்போர்ட் பண்ணி பேசுவ இல்ல? சொசைட்டிங்கறதுல எல்லா விதமானவங்களும் இருக்காங்க .. சிலர் ஆதரிப்பாங்க சிலர் ஆதரிக்க மாட்டாங்க .. நான் புரிஞ்சுகிட்டேன் .. நாளாக நாளாக அவளை அந்த மாதிரி பாக்கறவங்க எண்ணிக்கை குறையும்” என்று முடித்தான் “எனிவே, ஆல் த பெஸ்ட்” “என்னோட விஷயத்தை விடு.

மவனே எத்தன நாளா நடக்குது உங்க மேட்டரு?” “நீ கடைசியா வந்திருந்தப்ப உன்னை செண்ட் ஆஃப் பண்ண வந்திருந்தேன் இல்ல? அப்பதான் ஆரம்பம்” “ம்ம்ம் .. ரெண்டு வருஷமா? ஏன் இன்னும் அத்தை மாமா கிட்ட சொல்ல்ல .. உங்க அப்பாகிட்ட சொல்லிட்டயா?” “கடுப்பேத்தாதே, அவ என்னை மொதல்ல எங்க அப்பாகிட்ட பேசி சம்மதம் வாங்க சொல்றா அதுக்கப்பறம்தான் அவ அம்மா அப்பா கிட்ட பேசுவாளாம். அவளோட அப்பாவும் எங்க அப்பாவும் casual friends .. ஓரளவு ஒருத்தருக்கு ஒருத்தர் தெரிஞ்சவங்க. வினியோட அம்மா கொஞ்சம் அப்போஸ் பண்ணுவாங்கன்னு வினி நினைக்கறா”

 “பின்ன, நீ பிஸ்கோத்து பி.காம் அவ M.B.B.S, D.P.M அது ஒரு காரணம் போதுண்டா” “டேய், நான் பார்ட்டைம் எம்.பி.ஏ பண்ணிட்டு இருக்கேன் தெரியுமில்ல .. “ “நீ இதை மூணு வருஷமா சொல்லிட்டு இருக்கே. அதைவிடு, உனக்கு ரேவதியை தெரியும்னு வினிக்கு தெரியுமா” “டேய், மச்சா, ப்ளீஸ்டா, உன் காலுல விழுந்து கும்புடறேன் .. நான் எங்க அப்பா பிஸினஸ்ல ஹெல்ப் பண்ணறேன்னுதான் வினி கிட்டே சொல்லி இருக்கேன் .. இந்த மாதிரி வேலையும் பண்ணுவேன்னு அவளுக்கு தெரியாதுடா” “ம்ம்ம் .. நெனைச்சேன் ..அந்த பயம் இருக்கட்டும் ... அப்பறம் வசந்த்ன்னு ஒரு பையன் போன வருஷம் கிண்டில பி.ஈ முடிச்சவன். அவனைப் பத்தி எனக்கு எல்லா டீடெயில்ஸும் தெரியணும். விசாரிக்க் முடியுமா .. “

 “யார் அந்த பையன்?” “அதைப் பத்தி எங்கிட்ட இப்ப கேக்காதே நீ எனக்கு டீடெயில்ஸ் கலெக்ட் பண்ணி குடு” வார கடைசியில் ஒரு நாள் ரேவதியை அழைத்துக் கொண்டு ஏதாவது ஷாப்பிங்க்கோ, சினிமாவிற்கோ, கோவிலுக்கோ சென்று பிறகு ஏதாவது ஒரு நல்ல ரெஸ்டரான்ட் சென்று சாப்பிட்டு வீடு திரும்புவதை வழக்கமாகக் கொண்டான். அப்படி ஒரு சமயம் இருவரும் தி.நகரில் இருந்த ஒரு உணவகத்திற்கு சென்ற போது ப்ரோக்கர் ஷண்முகம் அவர்கள் அமர்ந்திருந்த மேசைக்கு அருகே இருந்த மேசையில் இருந்தார்.

 இருவருக்கும் அவர் அங்கு இருப்பது தெரிந்த்து. இருவருக்கும் இடையே ஒரு மயான அமைதி நிலவியது. அவரைப் பார்த்தும் பார்க்காமல் இருவரும் உணவருந்தியபின் அருணின் காருக்குச் செல்லும்போது வெளியில் நின்றிருந்த ஷண்முகம் அவர்களிடம் வந்தார். “என்ன சார், எப்படி இருக்கீங்க .. என்னை ஞாபகம் இருக்கா சார்?” என்று பிறகு ரேவதியை கைகாட்டி “நான் தான் சார் உங்களுக்கு ரீடாவை கூட்டியாந்தேன்” என்றபின் ரேவதியைப் பார்த்து, “என்னம்மா, அவன் முருகேசு நீ யாருகூடயோ ஃபுல் டைம் செட்டில் ஆயிட்டேன்னா. சார்தானா அது” அவர் பேச்சை மேலும் வளர்க்காமல் அவ்விட்த்தை விட்டு புறப்பட எத்தனித்தவன்

ஒரு கணம் அவமானத்தில் சிவந்த ரேவதியின் முகத்தைப் பார்த்து மனதுக்குள் தண்டபாணியின் கேள்வியை மனதில் கூர்ந்து “ரேவதி, நீ கார்ல கொஞ்ச நேரம் இரு. ஷண்முகம், உங்க கூட கொஞ்சம் பேசணும்” “சொல்லுங்க சார்” என்றார். ஷண்முகம் போன்றவருக்கும் குடும்பம் என்று ஒன்று இருக்கும். தொழில் செய்யும் பல பெண்களை அவர் அறிந்து இருக்கலாம். ஆனால் அவளைப் போன்ற ஒரு நல்ல மாணவியை அவரறிந்து இதுவரை தொழிலில் ஈடுபடுத்தி இருக்க மாட்டார் என்று நம்பினான்.

அருண் அவரிடம் ரேவதி எப்படிப்பட்ட புத்திசாலி மாணவி என்றும், எப்படி எதற்காக தொழிலில் இறங்கினாள் என்றும், அவள் தாயின் மறைவைப் பற்றியும், இப்போது அவள் தன் உதவியுடன் படிப்பை தொடருவதையும் சொன்னான். அவன் சொல்லி முடிக்கையில் கண்கள் கலங்கிய ஷண்முகம், “இதெல்லாம் எனக்கு தெரியாது சார். இதுக்குதான் சார் நான் யாரையும் ஃபர்ஸ்ட் டைம் தொழில்ல எறக்கறதில்லை .. ஏற்கனவே தொழில் பண்ணீட்டு இருக்கற டிக் ...ம்ம் .. பொண்ணுங்க மட்டும்தான் சார் நான் டீல் பண்ணறது. பாவம் சார் அந்த பொண்ணு, சத்தியமா சொல்றேன் சார் .. இந்த பொண்ணைப் பத்தி மொதல்ல தெரிஞ்சு இருந்தா .. நானே யார்கிட்டயாவுது உதவி வாங்கி கொடுத்து இருப்பேன் சார்” என்றார்

 “பரவால்லை, நீங்க உங்களுக்கு தெரிஞ்ச மத்த ப்ரோக்கருங்க்கிட்ட சொல்றீங்களா?” “சொல்றது மட்டும் இல்ல சார், இதூம் ஃபோட்டோ எல்லார்கிட்டயும் இருக்கும் ..மெட்ராஸ்ல இருக்கற எல்லா ஃபோட்டோவையும் வாங்கியாந்து உங்க கிட்ட குடுக்கறதுக்கு நான் ஏற்பாடு பண்றேன் சார் ... .. அதுக்கப்பறம் எல்லாம் மறந்துடுவானுக சார் .. முன்ன பின்ன தெரியாத நீங்க அந்த பொண்ணுக்கு இவ்வளவு பண்ணும் போது நான் இது கூட பண்ணாட்டி நான் மனுஷனே இல்ல சார்” என்று தனக்கும் மனஷத்தன்மை உண்டு என்பதை உணர்த்தினார்.

 காரில் ஏறியவன் ரேவதி கண்கள் கலங்கியிருந்த்தை பார்த்து அவள் தோளில் கைபோட்டு, “என்னடா?” என்றதும் “எனக்காவுது தலை எழுத்து .. என்னால உங்களுக்கு அவமானம்” என்றவாறு விசும்பினாள் .. “என்ன அவமானம்? ஒரு அவமானமும் இல்லை” “ஷண்முகத்துகிட்ட என்ன பேசீட்டு இருந்தீங்க?” அவர்கள் பேசியதை ஒன்று விடாமல் சொல்ல ரேவதியின் முகத்தில் ஒரு புது நம்பிக்கையை கண்டான். “தாங்க்ஸ் ... எனக்கு இப்படி சொல்ல தோணியிருக்காது ... எல்லா ப்ரோக்கரும் காசுக்காக கட்டுன பொண்டாட்டியையும் பெத்த பொண்ணையுமே படுக்க அனுப்பறவங்கன்னு நெனைச்சு கிட்டு இருந்தேன்”

 “எல்லாரும் கொஞ்சமாவுது நல்லவங்கதான்னு நினைச்சு சொன்னேன், ஷண்முகம் அப்படி இல்லாம இருந்து இருக்கலாம். நம்ம அதிர்ஷ்டம் ஹீ வாஸ் ஓ.கே” மனதுக்குள் ரேவதி ‘இதெல்லாம் இவருக்கு அவமானம் இல்லையா? கடவுளே, நான் எங்க அம்மாகிட்ட கொடுத்த வாக்கை காப்பாத்தறதைவிட இவருக்கு என்னோட நன்றிய காட்டறதுக்காகவாவுது எனக்கு நல்ல படிப்பை கொடு’ என்று வேண்டினாள். அருணுக்காக தன் உயிரையும் கொடுக்க தயாராக இருந்தாள்.

 அருண் வீட்டிலிருக்கும் சமயங்களிலெல்லாம் ரேவதியும் வீட்டிலிருக்கவே, அவன் அன்றாட தேவைகளை கவனிப்பதை தன் கடமையாக மேற்கொண்டாள். காலையில் கையில் காஃபியுடன் அவனை எழுப்புவது, இரவு சாப்பிட்ட பிறகும் காஃபி அருந்துவதை பழக்கமாக கொண்டவனுக்கு பிறகு மறுபடி அவனுக்கு தன் கையால் காஃபி கலந்து கொடுப்பது, சலவை செய்த அவன் துணிகளை அயர்ன் செய்யக் கொடுத்து வாங்கி அடுக்கி வைப்பது, வீட்டிற்கு தேவையான மளிகைப் பொருள்கள் தனித்தோ அருணுடனோ சென்று வாங்கி வருவது, அன்றாட காய்கறிகளை கல்லூரியிலிருந்து வரும் வழியில் இருக்கும் மார்க்கெட்டில் வாங்கி வருவது, அவனுக்கு எது பிடிக்காது என்பதை அறிந்து என்ன சமையல் செய்ய வேண்டும் என்று சமையல் காரருக்கு சொல்வது,

 இப்படி அவன் படுக்கையை பகிர்ந்து கொள்வதை தவிற மற்ற எல்லாவற்றிலும் அந்த வீட்டின் இல்லத்தரசிபோல் நடந்து கொண்டாள். மாதத்தில் ஒரு முறையேனும் இரண்டு மூன்று நாட்கள் அவன் கோவை செல்லும் பயணத்திற்கு தேவையான துணி மணி, டூத் ப்ரஷ், ஷேவிங்க் செட் முதலாக எல்லவற்றையும் எடுத்து வைப்பது. வழியனுப்புமுன் ஏர் டிக்கட், அவன் கொண்டு செல்ல வேண்டிய ஆஃபீஸ் சம்மந்தப் பட்ட ஃபைல்கள் எல்லாம் எடுத்துக் கொண்டானா என்று சரி பார்ப்பது. அவன் திரும்பி வருகையில் கண்விழித்துக் காத்திருப்பது.

 அவர்கள் உறவில் பேச்சும், சிரிப்பும், சிறிதும் காம்மற்ற சிறு தொடல்களும், நட்பை மட்டும் காட்டும் அணைப்பும் கூட இருந்த்து. இருவர் மனத்திலும் நிரம்பி வழிந்த காதல் இருந்த போதும் அதை சிறிதும் வெளிக்காட்டாதபடி உளமார்ந்த நட்புடன் உறவாடினர். இரண்டு மாதங்கள் கழிந்ததும் வினிதா ரேவதி பூரண குணமானதை அறிவித்தாள். இருப்பினும் அருண் அவன் அமேரிக்கா திரும்பும் வரை தன்னுடனே இருக்கட்டும் என்று அவள் ஹாஸ்டலுக்கு போவதை தடுத்தான்.

எதிபார்த்ததே என்று வினிதா மற்றும் விசாலாக்ஷி தண்டபாணி தம்பதியரும் அதற்கு ஆமோதித்தனர். சபாடிகல் லீவில் இருந்தாலும் அவன் ஈடுபட்டிருந்த மென்பொருள் ஆராய்ச்சியில் மேற்கொண்டு நடக்கும் விபரங்களை அருண் அறிந்து கொள்வதும் அவைகளுக்கு அவனது கருத்துக்களும் அவசியம் என்று உணர்ந்த அவனது மானேஜர் வாரம் ஒரு முறை அவனை டெலிகான்ஃபரன்ஸ் மூலம் தொடர்பு கொள்ளப் பணித்து இருந்தார். ஒவ்வொரு புதன் கிழமையன்றும் இரவு பத்தரை மணியிலிருந்து பனிரெண்டரை வரை அருண் டெலிகான்ஃபரன்ஸில் கலந்து கொள்வான்.

ஹாலில் அமர்ந்து பேசுபவனை அச்சமயங்களில் ஏதாவது ஒரு காரணத்தில் ரேவதி அங்கு வந்தோ அல்லது அவள் அறையில் இருந்தபடியோ வைத்த கண் வாங்காமல் பார்த்து வியந்து கொண்டிருப்பாள். அவன் பேசுவதில் முக்கால் பாகம் புரியாவிட்டாலும் அவன் ஈடுபட்டிருந்த மென்பொருளைப் பற்றி நன்கு அறிந்து இருந்தாள். மனதில், 'ஒரு நாள் இந்த அளவில இல்லெனாலும் .. இதுல பாதி அளவாவுது முக்கியமான ப்ராஜெக்ட்ல நானும் இப்படி வொர்க் பண்ணனும் .. எனக்கும் எங்க கம்பெனில இந்த அளவுக்கு முக்கியத்துவம் கெடைக்கணும்' என்று நினைத்துக் கொள்வாள்.

 இரண்டாவது முறை டெலிகான்ஃபரன்ஸ் முடிந்தபின் அருண், "நீ ஏன் இன்னும் தூங்காம உக்காந்துட்டு இருக்கே" "சும்மா, உங்களுக்கு கம்பெனி குடுக்கலாமேன்னு தான்" "எதுக்கு? நாளைக்கு காலேஜ் இருக்கு இல்ல?" "வாரத்துல ஒரு நாள் ஒண்ணு ரெண்டு மணி நேரம் கம்மியா தூங்கினா ஒண்ணும் ஆயிடாது. போன செமெஸ்டர்ல நெறைய நாள் ஓரெ ஒரு மணி நேரம் கோழி தூக்கம் தூங்கிட்டு எழுந்து காலேஜுக்கு போயிருக்கேன்" என்று அவளது கடந்த காலத்தை பற்றி சாதாரணமாக கூற, மனத்தில் வலி முகத்தில் பிரதிபலித்தபடி பார்த்த அருணிடம் "ஐய்யோ, என்ன அப்படி பாக்கறீங்க? என் கடந்த காலத்தை பத்தி நல்லா புரிஞ்சுட்டு இருக்கேன்.

அதைப் பத்தி நான் இப்பல்லாம் கவலை படறது இல்லை" என்றாள் தன் கண்ணோரம் துளிர்த்த நீரை ரேவதிக்கு மறைத்தபின் “I am so happy டா ... அப்படித்தான் இருக்கணும்" ரேவதி அடுத்த நான்கு மாதங்களில் எழுத வேண்டிய அசைன்மென்டுகளை எல்லாம் நேரத்தோடு எழுதி, டெஸ்டுகளில் முன்பு போல் நூற்றை நெருங்கிய மதிப்பெண்கள் பெற்று, அருணின் உதவியுடன் பாடங்கள் அனைத்தும் விரல் நுனிக்கு கொண்டு வந்து, வரப் போகும் தேர்வை ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தாள்.

 அருணும் அவன் தாத்தா தொடங்கிய தொழிலின் முகப்பை வெற்றிகரமாக இருபத்தி ஓராம் நூற்றாண்டுக்கு கொண்டு வந்து இருந்தான். கணிணியும், இணையமும், வலை தளமும், மின்ன்ஞ்சலும் இல்லாமல் வேலை ஒன்றும் நடக்காது என்கிற அளவுக்கு எல்லோருக்கும் பயிற்ச்சி அளித்திருந்தான். புதிய காண்ட்ராக்டுகள் மற்றும் பழைய காண்ட்ராக்டுகளின் புதுப்பித்தல், புதிய தொழில் நுணுக்கங்களுக்கு தக்க தொழிலாளிகளைத் தேர்ந்தெடுப்பது, அவர்களுக்கு தேவையான் பயிற்சிக்கு அனுப்பி அவர்களை கை தேர்ந்தவர்களாக்குவது என பல விதத்தில் கஸ்டமர்களும் சப்ளையர்களும் மூக்கில் விரல் வைக்கும் அளவுக்கு பிஸினஸில் அபிவிருத்தி செய்து இருந்தான்.

 அவன் அமெரிக்கா செல்லும் நாள் நெருங்க இனம் புரியாததொரு சோகம் இருவர் மனத்திலும் குடி புகுந்தது. “இன்னும் மூணு வாரத்துல கெளம்பணும் இல்ல?”
“ம்ம்ம் .. இங்க பிஸினஸ்ல கடைசியா சில விஷயங்களை புதுசா வேலைக்கு எடுத்து இருக்கற மார்கட்டிங்க் மானேஜர் கிட்ட ஹாண்ட் ஓவெர் பண்ணினா என் வேலையெல்லாம் முடிஞ்சுது. உன் செமெஸ்டர் எக்ஸாம் இப்படி போஸ்ட்போன் ஆகும்னு எதிர்பாக்கல .. நீ சமாளிச்சுடுவே .. இருந்தாலும் எனக்கு கொஞ்சம் ஆதங்கம்.

பெரிய பருப்பாட்டம் படிக்கறதுக்கெல்லாம் டைம் மேனேஜ்மென்ட் ஸ்கில் சொல்லி கொடுத்து இருக்கேன். அதனால இல்லேன்னாலும் நீ நல்லா படிச்சு இருக்கறதுனால பரீட்சையில எதிர்பார்த்த ரிஸல்ட் வந்துரும் ... வினிகிட்டே அத்தைகிட்ட எல்லாம் என்னால தான்னு சொல்லி கொஞ்சம் ப்ரௌனீ பாயின்ட்ஸ் வாங்கலாம்னு பாத்தேன்” என்றவனை “அதெல்லாம் ஒண்ணும் இல்லெ .. நீங்க சொல்லிக் கொடுத்த டைம் மேனேஜ்மென்ட் இனிமேல் எல்லாத்துக்கும் யூஸ் ஆகும் ..

நீங்க வேணும்னா பாருங்க .. படிச்சு முடிச்சுட்டு ஜாப்ல ட்ரெயினியா சேரும்போது பெரிய மானேஜர் மாதிரி ஒரு ஆர்கனைஸரை கைல வெச்சுட்டு இருக்க போறது நான் ஒருத்தியாதான் இருக்கும்” “Hey, That’s something to be proud off .. அவங்கெல்லாம் நாலஞ்சு வருஷம் கழிச்சு கத்துக்க போறது உனக்கு மொதல்லயே தெரிஞ்சு இருக்கும்” “ம்ம்ம் ... கிண்டலடிப்பாங்க” “மேடம், அதை அப்பறம் பாக்கலாம். அதுக்கு முன்னால GATE எக்ஸாம்னு ஒண்ணு இருக்கு அதுல நல்ல மார்க் வாங்கினாத்தான் ஐ.ஐ.டில எம்.டெக் பண்ண அட்மிஷன் கிடைக்கும். ஞாபகம் இருக்குல்ல?”

 “இருக்கு. இன்னும் ரெண்டு மாசம் கழிச்சுதானே அதுக்கு அப்ளை பண்ணனும் ... ஆனா எனக்கு ஒரு டௌட் ... GATE எக்ஸாம்ல நல்ல மார்க் வாங்கினாலும் பி.ஈல ஃபர்ஸ்ட் க்ளாஸ் வாங்கி இருக்கணும்னு எக்ஸ்பெக்ட் பண்ண மாட்டாங்களா? அரியர்ஸ் வாங்கினதுனால எனக்கு க்லாஸ் வராதே” “எலிஜிபிலிடி க்ரைடீரியால அப்படி ஒண்ணும் இல்லை .. பட், காண்டிடேட்ஸை ஃபில்டர் பண்ணறதுக்காக ஒரு வேளை அவங்க பாக்கலாம்” “அப்ப என்ன பண்ணறது .. வேஸ்ட் தானே? நான் பேசாம ஜாபுக்கே ட்ரை பண்ணறேனே”

 “ஏய், பிசாசே? இதெல்லாம் நான் யோசிக்காம இருப்பேனா? மறுபடி மறுபடி ஜாப் ஜாப்னு கிட்டு இருக்கே?” என்று பழித்துக் காட்டுவது போல் அருண் சொல்ல ரேவதியின் குலுங்கிச் சிரிக்க பல கணங்கள் தன்னை மறந்து அவளைப் பார்த்தபடி நின்றான் “ம்ம்ம்? என்ன யோசிச்சுட்டு நிக்கறீங்க? யோசிச்சு வெச்சு இருக்கேன்னு சொல்லீட்டு இப்பதான் யோசிக்கறீங்களா?” “இல்ல, இங்க ஐ.ஐ.டீ மெட்ராஸ்ல இருந்த எனக்கு நல்லா தெரிஞ்ச ப்ரொஃபெஸ்ஸர் ஒருத்தர் இப்ப ஐ.ஐ.டீ மும்பைல ஹெச்.ஓ.டீ யா சேந்து இருக்கார் ..

நீ நல்ல மார்க் வாங்கினா போதும் .. அவருமூலம் உனக்கு சீட் நிச்சயம் .. “ “ஐய்யோ .. மும்பைலயா?” “ஆமா .. யாரோ படிச்சு முடிச்சு ஒடனே அமெரிக்கா போகணும் இருக்காங்க .. ஆனா மேல படிக்க இங்க இருக்கற மும்பை போறதுக்கு யோசிக்கறாங்க!” “அப்படி இல்ல ... நான் மெட்ராஸை விட்டு எங்கயுமே போனது இல்லை .. கொஞ்சம் தூரம் போனதுன்னா உங்க கூட திருப்பதி வந்ததுதான்” என்று அவள் பரிதாபமாக சொன்னதும் அருண் அவள் தோளில் கைபோட்டு ..”சீ, இதுக்கெல்லாம் பயப்படுவாங்களா? நீ மானேஜ் பண்ணிப்பே .. உன்னால ஈஸியா முடியும்” என்று தேற்ற அவளையறியாமல் அவன் தோளில் சிறிது நேரம் சாய்ந்து இருந்தாள்

 அவளை கட்டியணைத்து முத்தமிட எழுந்த கட்டுக்கடங்காத ஆசையை மனதில் வேறு எதையோ நினைத்தவாறு ஒதுக்கினான். அவளோ, அவன் கழுத்தில் கைகளை மாலையாக போட்டு அவன் உதட்டை கவ்வத் துடித்த தன் உதடுகளை ஒன்றோடொன்றைக் கடித்த படி அவன் புஜங்களில் கன்னத்தை உரைத்தவாறு நின்று இருந்தாள். "அப்பறம் நான் கிளம்புனதுக்கு அப்பறமும் நீ இங்கயே தங்கி இரு என்ன?" "இவ்வளவு பெரிய வீட்டுல நான் மட்டும் தனியா இருந்தா மறுபடி வினிதாக்கா எனக்கு ட்ரீட்மென்ட் கொடுக்க வேண்டியிருக்கும்.

எக்ஸாம் முடிஞ்சு செமஸ்டர் ஹாலிடேஸ் முடியற வரைக்கும் இருக்கேன். அடுத்த செமஸ்டர் தொடக்கத்துல ஹாஸ்டலுக்கு போட்யிடறேன்" "உன்னோட பாங்க் அக்கௌன்டுக்கு பணம் ட்ரான்ஸ்ஃபர் பண்ணி இருக்கேன் .. இன்னும் வேணும்னா நான் வாரா வாரம் ஃபோன் பண்ணும் போது சொல்லு என்ன?" "ஆமா, நானே உங்க கிட்ட கேக்கணும்னு இருந்தேன் .. ஏன் அவ்வளவு பணம் போட்டு இருக்கீங்க? அதுல கால் வாசி போதும்"

 'ஒரு தடவை கேவலம் இந்த பணத்துக்காக நீ பட்டதெல்லாம் போதும்' என்று மனதில் நினைத்து "அப்படி இல்ல எதாவுது எமர்ஜன்ஸின்னா வேணும் அதுக்கு தான்" என்றான். புறப்படும் தினத்தன்று .. "அன்வர் பாயெ உங்கள ஏர்போர்ட்ல கொண்டு விடச்சொல்லுட்டுமா? அவருன்னா நானும் உங்க கூட ஏர்போர்ட் வந்துட்டு திரும்பி வந்துடலாம்"
"வேண்டாம்.

பாஸ்கர் வர்றதா சொன்னான் .. வினி, அத்தை, மாமா எல்லாம் கூட வர்றதா சொன்னாங்க .. அவங்க யாரையாவுது உன்னை இங்க ட்ராப் பண்ண சொல்றேன்" மனதுக்குள் 'அப்ப உங்க கூட தனியா இருக்க முடியாதா?' என்று எண்ணி இருந்தும் அவன் போகும் வரை தன் கண்பார்வையிலாவது அவன் இருக்கட்டும் என்று நினைத்து "சரி .." என்றாள்.

 ஏர்போர்டில் எல்லோரிடமும் அவன் விடைபெற்று செக்-இன் செய்து எஸ்கலேடரில் மேல்மாடிக்கு சென்றவனை அவன் முகம் மறையும் மட்டும் பார்த்துக் கொண்டிருந்தவளின் கண்களில் கண்ணீர் வழிந்ததை மற்ற நால்வரும் கவனிக்க தவறவில்லை.

அவன் கண்களில் கண்ணீர் வழிந்ததை செக்யூரிட்டி செக் க்யூவில் இருந்த பலரும் கவனித்தனர்.



No comments:

Post a Comment