Monday, November 24, 2014

ரேவதி பாகம் 17


ஆத்திரத்தில் சிவந்த முகத்துடன் கண்கள் சிவந்து வெளியேறியவள் இவ்வளவு நேரமும் அந்தக் கயவர்களின் முன்னால் தன்னை தாழ்த்திக் கொள்ள விரும்பாமல் அவள் அடக்கி வைத்திருந்த பொங்கி வரும் அழுகையை உதடுகளை மடித்து கட்டுப் படுத்தினாலும் கண்கள் குளமாகி அவைகளிலிருந்து புறப்பட்ட ஆற்றுப் பெருக்கை அவளால் அணையிட்டுத் தடுக்க முடியவில்லை. ரேவதி மூக்கை உறிஞ்சியபடி, புறங்கையால் கண்களைத் துடைத்தபடி வேகமாக அறையிலிருந்து வெளியேறி விஜயகுமாரின் காரியதரிசி மரியாவை கடந்து லிஃப்ட் இருக்கும் காரிடோரை நோக்கி நடந்தாள்.

சிறிது நேரத்தில் சிரித்தபடி கண்ணன் வெளிவர அவரை வழியனுப்ப வந்த விஜயகுமார் கதவை திறந்தவாறு பிடித்துக் கொண்டு "விட்டுப் பிடிப்போம் .. எதுக்கும் அவ ரெக்கார்ட்ஸ்ல நான் சொன்ன மாதிரி ஒரு கமென்ட் இன்னைக்கு தேதிலயே போட்டு வைங்க" என்றபடி விடைகொடுத்தார். அன்றிரவு ரேவதியின் மனக் கசப்பு அவளைத் தூங்க விடவில்லை. விஜயகுமாரைப் போன்ற கேடு கெட்டவர்களுடன் படுக்கையை பகிர்ந்து கொண்டதை தன் விதியென்று அவள் மனம் ஏற்றுக் கொண்டிருந்தது. ஆனால் தினவெடுத்தவர்கள் கற்பனையில் அவளை புணர்ந்து சுய இன்பம் கொள்ள தன்னை ஒரு காட்சிப் பொருளாக்க அனுமதிக்க மறுத்தது.
இருப்பினும் தைரியத்துடன் அதே சமயம் நிதானமாக செயல் பட முடிவெடுத்தாள். அவளெடுத்த முதல் முடிவு அருணுக்கு இதனால் எந்த விதமான அவமானமும் வரக்கூடாது என்பதே. தன்னைப் பற்றி இவ்வளவு விவரங்களை சேகரித்தவர் அருண் இப்போது இந்தியாவில் இல்லை என்பதும் அவர் அறிந்து இருப்பார். அதனாலேயே திருமணத்திற்கு முன்னமே தன் இச்சையை தணிக்க அழைக்கிறார் என்று தோன்றியது.

இந்த பிணக்கிலிருந்து விடுபடாமல் அவள் திருமணம் நடந்தால் தன்னை அடைய அவருக்கு இருக்கும் வெறியில் தன் மிரட்டல்களை செயல் படுத்தத் துணிவார் என்றும் தோன்றியது. அன்று மாலை அருண் அவளை தொலைபேசியில் அழைத்து இருக்கவில்லை. ஒருவேளை அழைத்து இருந்தால் தன் மனதில் இருக்கும் ஆதங்கத்தை வெளிப்படுத்தி அழுது அவனையும் துன்பத்தில் ஆழ்த்தி இருப்பாள் என்று தோன்ற அவன் அழைக்காததும் ஒரு விதத்தில் நன்மைக்கே என்று எண்ணினாள். அவளுக்கெதிரில் வைக்கப் பட்டிருந்த விருப்பேற்புக்களை அவள் ஆராய்ந்தாள். தன் இச்சைக்கு அடிபணியாமல் அந்நிறுவனத்தில் தன் பணியை தொடர்ந்தாலும் விடுத்தாலும் விஜயகுமார் அவர் மிரட்டல்களை செயல் படுத்தத் துணிவார். அடிபணிந்த பிறகும் செயல் படுத்த மாட்டார் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

அவருக்கு தேவை அவருக்குத் தினவெடுத்தபோதெல்லாம் தன் உடல். அவருடைய இச்சைக்கு அடிபணியாமல் அவர் அப்படங்களை வெளியிடுவதை எப்படியாவது தடுத்தாக வேண்டும். அதற்கு என்னென்ன வாய்ப்புக்கள் இருக்கின்றன என்று எண்ண ஆரம்பித்தாள். அந்நிறுவனத்தில் அவருக்கும் மேலிடத்தில் முறையிடலாம் என்று நினைத்தாள். ஆனால் அடிமட்டத்தில் இருக்கும் தன் கூற்றை அவர்கள் ஏற்பார்களா என்று பெரிதும் ஐய்யப் பட்டாள். தனக்கும் அவளுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று அவர் கூறினால் அதை எதிர்க்க அவளிடத்தில் எந்த வித மான ஆதாரமும் இல்லை. ஆனால் அவர் தன் பெயரைப் பயன் படுத்தாமல் தன்னை பழிவாங்க முடியும். அவளது அந்த ஆறுமாத வாழ்க்கையின்போதே காவல் துறையின் மேல் இருந்த நம்பிக்கையை முழுவதும் இழந்து இருந்தாள்.

அதனால் கையில் ஒரு ஆதாரமும் இல்லாமல் காவல் துறையினரை அணுகுவது மடமை என்று உணர்ந்தாள். இவையெல்லாவற்றையும் விடுத்து ஒரு பத்திரிக்கை நிருபரை அணுகி தன்னைப் பற்றிய உண்மைகளையும் விஜயகுமாரின் மிரட்டலைப் பற்றியும் சொல்லி அவர்களை அதை பதிப்பிக்க விண்ணப்பிக்கலாம் என்று தோன்றியது. பிறகு ஒரு முறை பணமும் புகழும் படைத்த உலகறிந்த தொழிலதிபரின் மகன் தன்னை அழைத்து சென்றிருந்த ஹோட்டலின் லாபியில் ஒரு பத்திரிக்கை நிருபரை அவர்கள் சந்தித்தையும் தன்னை அவரிடம் ஒரு எஸ்கார்ட் என்று அறிமுகப்படுத்திதையும் நினைவு கூர்ந்தாள். பிறகு அவ்வாடிக்கையாளரிடம் அவள், "உங்களைப் பத்தி நாளைக்கு தப்பா பேப்பர்ல போட்டாங்கன்னா?" என்று கேட்டதற்கு "அவனுகளுக்கு எப்ப எந்த மாதிரி ஸ்டோரி தேவைப் படுதோ அப்பத்தான் அந்த மாதிரி ஸ்டோரி போடுவானுக.

அதுவும் என்னைப் பத்தியெல்லாம் போட மாட்டாங்க" என்றார். "ஏன்" என்று ரேவதி கேட்டதற்கு "போட்டாங்கன்னா அதுக்கப்பறம் மாசாமாசம் அரைப் பக்கம் முழுப்பக்கம்ன்னு நாங்க கொடுக்கற விளம்பரத்துல வர காசை அவங்க மறந்துடனும்" என்று பத்திரிக்கை உலகம் பணம் படைத்தவர்களின் தயவை நம்பி இருப்பதை விளக்கி இருந்தார். மறுகணம் அவள் கண்ணனிடம் விளம்பரங்களைப் பற்றி விஜயகுமார் சொன்னதை நினைவு கூர்ந்தாள். அவரை எதிர்த்து தன் வாக்கை நம்பி எந்த பத்திரிக்கையும் தன் கதையையும் தன்னை விஜயகுமார் மிரட்டுவதைப் பற்றியும் பிரசுரிப்பார்களா என்று ஐய்யமுற்றாள். அப்படியே பதிப்பித்தாலும் அதில் விஜயகுமாரின் பெயர் நிச்சயம் இடம் பெறாது. விஜயகுமார் தன் படங்களை வெளியிடுவதை தடுக்க முடியாது. வினிதாவிடம் உதவி கேட்கலாம் என்று நினைத்தாள். கேட்டால் மறுகணம் வினிதா விசாலாக்ஷிக்கும் தண்டபாணிக்கும் தெரிவிப்பாள். அவளுக்கு அறிவுரை சொல்வதை விடுத்து அவர்களால் ஏதும் செய்ய முடியாது என்று எண்ணினாள்.

மேலும் மற்றவர்களிடம் சொல்வதைப் பற்றி விஜயகுமாரின் மிரட்டல் அவள் காதுகளில் மறுபடி ஓலித்தது. அதுமட்டுமல்லாது, எப்படியும் வினிதா அருணிடம் தொடர்பு கொண்டு அவனுக்கு தெரிவிப்பாள் என்று தோன்றியது. அதில் அவளுக்கு ஒப்புதல் இல்லை. தன் உயிர்க்காதலியின் அந்தரங்கம் வெட்ட வெளிச்சமாக்கப் படுவதை தடுக்க முடியாமல் அவனை தவிக்க விட அவளுக்கு மனம் வரவில்லை. அடுத்து அவரிடம் இருக்கும் புகைப் படங்களை அவள் கைப்பற்றுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்தாள். அவருடைய கேமராவில் இருக்கும் மெமரி கார்டிலும் மேலும் அவர் கணிணியிலும் மட்டுமே அப்படங்கள் பதிவாகி இருக்கும் என்று நம்பினாள். அடுத்த நாள் அந்த யூ.எஸ் க்ளையண்ட் அவர்கள் செண்டருக்கு வருகை தர, தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றவர்களுடன் அவரை சந்தித்து கலந்துரையாட ரேவதி விஜயகுமாரின் அறை இருக்கும் தளத்திற்கு சென்றாள்.

விஜயகுமாரும் பங்கேற்ற அந்த கலந்துரையாடலின் நடுவே அங்கிருந்து வெளியேறி விஜயகுமாரின் அறையை அடைந்தாள். அறையின் முன்னே மரியா அவளது இருக்கையில் இல்லாததைக் கண்டு நிம்மதியடைந்து அறைக்குள் பிரவேசித்தாள். அவளது நிம்மதி நீடிக்கவில்லை. அறைக்குள் இருந்த மரியா அங்கிருந்த ஃபைலிங்க் கேபினெட்டிலிருந்து தலையை நிமிர்த்தி "எஸ், கேன் ஐ ஹெல்ப் யூ?" என்றாள். விஜயகுமாரின் மேசைக்கு பின்புறத்த்திலிருந்த ஷெல்ஃபின் மேல் அவரது கேமரா இருக்கவில்லை. ஒன்று வீட்டிற்கு எடுத்து சென்றிருக்க வேண்டும் அல்லது அவ்வறையில் எங்காவது பூட்டி வைத்திருக்க வேண்டும் என்று உணர்ந்தாள். மரியாவிடம், "ம்ம்ம் ... நத்திங்க் .. ஐ தாட் மிஸ்டர் விஜயகுமார் இஸ் இன்சைட்" என்றவாறு அந்த அறையை விட்டு வேகமாக வெளியேறினாள். அன்று காலை முழுவதும் அந்த அறையை நோட்டம் விட்டவள் எப்போதும் மரியா அங்கு இருப்பதை உணர்ந்தாள். மாலை வீடு திரும்புமுன் மறுபடி அத்தளத்தை அடைய எதிரில் தூரத்தில் விஜயகுமார் வருவதைக் கண்டாள். அவர் கண்ணில் படுவதை தவிற்க அருகே இருந்த கழிவறைக்குள் சென்று கதவோரம் நின்று ஒளிந்திருந்து பார்த்தாள்.

கடந்து சென்ற விஜயகுமாரின் தோளில் அவரது கேமரா தொங்கிக் கொண்டிருந்தது. இன்னொரு தோளில் அவரது மடிக்கணிணிப் பை. அவள் தப்பிப்பதற்கான வாய்ப்புக்கள் அவள் கண் முன்னே குறைந்து கொண்டிருந்தன. அன்று மாலையும் அருண் அவளை தொலைபேசியில் அழைக்க வில்லை. அடுத்த நாள் தன் இருக்கையில் இருந்து எழக்கூட நேரமில்லாத படி வேலை. ஓலமிட்ட மனதைக் கட்டுப் படுத்தியபடி மதியம் வரை பணி புரிந்தாள். மதியம் ஒருமுறை பாஸ்கர் அவளை கைபேசியில் அழைத்திருந்தான். அவளுக்கிருந்த மன நிலையில் பேசினால் அவனிடம் சொல்லி அழுதுவிடுவோம் என்று தோன்றியது. அப்படிச் சொன்னால் பாஸ்கர் உடனே அருணிடம் தொடர்பு கொள்வான். மதியம் மூன்று மணியளவில் தனக்கு உடல் நிலை சரியில்லை என்று அனுமதி பெற்று அலுவலகத்திலிருந்து புறப்பட்டாள். தன் ஹாஸ்டலின் அறையை அடைந்தவள் அடக்க முடியாத துக்கத்தை தலையணையில் முகம் புதைத்து அழுது தீர்க்க முயன்றாள்.

'எங்காவது தலை மறைவாகி விடு', 'உன்னை மாய்த்துக் கொள்' என்ற மனதின் பலவீனமான பகுதியை தாளிட்டு மூடினாள். அன்று மாலை விஜயகுமாரிடம் சென்று அந்த கயவனிடம் தன்னைக் கொடுக்காமல் அவனை குத்திக் கொலை செய்தபின் போலீஸில் சரணடைய முடிவெடுத்தாள். அத்தகைய பெரிய புள்ளி இறந்தால் நிச்சயம் அது ஒரு பெரிய செய்தியாக வெளிவரும். அதனுடனே தன் சரித்திரத்திமும் வெளிவரும். தன் இருபத்து ஐந்து வருட வாழ்க்கையின் அந்த இருண்ட ஆறு மாதங்களும் புனிதமான மற்ற இருபத்து நான்கரை வருடங்களும் உலகுக்கு வெட்ட வெளிச்சம் ஆகட்டும் என்றும் முடிவெடுத்தாள். அருகில் இருந்த கடைக்குச் சென்று தன் கைப்பைக்கு அடக்கமான ஒரு கூர்மையான கத்தியை வாங்கினாள். அறைக்கு வந்து குளித்து முடித்து புறப்படத் தயாரானாள்.


 அவள் கைபேசி ஒலித்தது. அருண் அழைத்து இருந்தான். "ஹெய் டார்லிங்க் .. ஹவ் வாஸ் த டே? காலைல இருந்து என்ன பண்ணினே" என்றதும் தேக்கி வைத்த துக்கமெல்லாம் கரை புரண்டோடியது .. "என்னடா .. சத்தத்தையே காணோம் .. ஹல்ல்ல்ல்லோ" என்று உரக்க சொன்னவனிடம் பதிலேதும் சொல்லாமல் விசும்பத் தொடங்கினாள். "ஏய், அழறயா? என்னடா ஆச்சு?" என்று பதட்டத்துடன் கேட்டான். மேலும் அழுதவாறு இருந்தவள் "அருண் .. ஐ லவ் யூ .. I don't want to be an embarassment to you .. என்னை மன்னிச்சுடுங்க. ... " என்றபடி தொடர்பைத் துண்டித்தாள். அருண் மறுபடி அழைக்க ரேவதியின் கைபேசியை தொடர்பு கொள்ள முடியவில்லை.. 'என்ன் நடந்திருக்கு? எதுக்கு ரேவதி அப்படிச் சொன்னா' என்று மனம் குமுறினாலும் ஏதோ ஒரு உள்ளுணர்வின் தூண்டுதலில் அவளுக்கு இப்போது உதவி வேண்டும் என்று தோன்ற பாஸ்கரை அழைத்தான்.

அவனது அதிர்ஷ்டம் பாஸ்கர் அன்று காலை பெங்களூர் வந்தவன் சென்னை திரும்ப விமான நிலையத்தில் இருந்தான். "டேய், பாஸ்கர், ரேவதிக்கு என்னவோ பிரச்சனை .. உடனே நீ அவளை போய் பாக்கணும்" "என்னாச்சு போன வாரம் கூட அவகூட பேசுனனே .. இன்னைக்கு மத்தியானம் ட்ரை பண்ணினேன் அவ செல்லுல ரிங்க் போயிட்டு இருந்துது .. சரி பிஸியா இருப்பான்னு விட்டுட்டேன் .." "எங்கிட்ட I don't want to be an embarassment to you என்னை மன்னிச்சுடுங்கன்னு சொல்லீட்டு ஃபோனை கட் பண்ணிட்டா. அவளுக்கு ஏதோ பிரச்சணை. நீ முதல்ல கிளம்பு அவ PG accomadationக்கு போ அவ அங்கதான் இருக்கணும்" பாஸ்கர் அவளது அறைக்கதவை தட்டிய போது ரேவதி புறப்படத் தயாராக இருந்தாள். பாஸ்கரை பார்த்ததும் முதலில் அதிர்ச்சியுற்றாள்.

 "என்னாச்சு ரேவதி? அருண் என்னை ஃப்ளைட்டை விட்டுட்டு உடனே இங்க வந்து உன்னை பாக்கச் சொன்னான் .. நீ என்னடான்னா எங்கயோ ஃபங்க்ஷனுக்கு கிளம்பிட்டு இருக்கே .. ரெண்டு பேரும் என்ன விளையாடறீங்களா?" என்றவன் ரேவதியின் பழைய தோற்றத்தை கண்டு தன் கண்களையே நம்ப முடியாமல் ஒரு கணம் அதிர்ந்து நின்றான். மறுகணம் ஆத்திரத்தில் அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்தான். நிலை தடுமாறி அருகிலிருந்த கட்டிலில் சரிந்தவளைப் பார்த்து பாஸ்கர் "You piece of shit .. உன் புத்தி உன்னை விட்டு இன்னும் போகலயே" என்றான். தன்னை மறுபடி பரத்தைக் கோலத்தில் பார்த்து தவறான முடிவு எடுத்திருக்கிறான் என்று உணர்ந்தவள் ஆத்திரத்துடன் எழுந்து "என்னை அடீங்க கொல்லுங்கண்ணா நான் உங்களுக்கு அந்த உரிமைய கொடுக்கறேன் ஆனா என்னை மறுபடியும் அப்படிப் பட்டவன்னு சொல்லாதீங்கண்ணா" என்று கத்தி விட்டு அடக்க முடியாமல் வாய்விட்டு அழுதாள். மறுபடி அதிர்ந்த பாஸ்கர் குழப்பத்துடன், "அப்பறம் ஏன் இந்த மாதிரி ..." என்றவனிடன் அழுகையின் பாதியிலேயே "சொல்றேன் .. " என்று மெதுவாக தன் அழுகையை கட்டுப் படுத்தியபின் நடந்தவை அத்தனையும் அவனிடம் சொன்னாள்.

 சில நிமிடங்கள மலைத்து நின்ற பாஸ்கர் "ஓ காட் .. அதனால நீ இப்ப அந்த ஆள் ஆசைப் பட்ட மாதிரி .." என்றவனை மேலும் சொல்ல விடாமல் "இல்லை அந்த ஆளை கொலை செஞ்சுட்டு போலீஸ்ல சரணடையப் போறேன்" என்றபடி தன் பையில் இருந்த கத்தியை எடுத்துக் காட்டினாள். "What? Are you out of your mind? இவ்வளவு நீ கஷ்டப் பட்டதுக்கெல்லாம் ஒரு அர்த்தமே இல்லாமெ போயிடும். உன்னை நினைச்சு உருகிகிட்டு இருக்கற அவனை நினைச்சுப் பாத்தியா?" என்று கத்தினான். "அவரைத் தான் முதல்ல நினைச்சேண்ணா. அவரைப் பத்தி மட்டும்தான் நினைச்சேன். பொண்டாட்டிய கண்ட கோலத்துல எல்லாரும் இன்டர்நெட்டுல பாக்கற கொடுமையை அவரு அனுபவிக்கணுமா? சொல்லுங்க" மறுபடி சில நிமிடங்கள் யோசித்தவன்,

"ஒண்ணு சொல்றேன். அவனை கொலை பண்ணறதுதான் ஒரே வழின்னா உனக்கு பதிலா அந்த கொலையை பண்ண நாங்க எல்லாம் இருக்கோங்கறத நீ மறந்துட்டே. அப்படி நீ கொலை பண்ணீட்டு போலீஸுக்கு போயிட்டா நாங்க யாருமே வாழ்நாள் முழுக்க சந்தோஷமா இருக்க மாட்டோம். அருண் செத்தே போயிடுவான்" என்றதும் இது வரை அந்த பந்தங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் தன்னைப் பற்றி மட்டுமே நினைத்து முடிவெடுத்ததை எண்ணி வெட்கி அவன் கைகளைப் பற்றிக் கதறினாள். சிறிது நேரத்தில் அருண் அவன் கைபேசியில் அழைத்தான். சட்டென்று அழுகையை நிறுத்தி பாஸ்கர் பதிலளிக்குமுன் "அருணா இருந்தா அவர்கிட்ட எதுவும் சொல்லாதீங்கண்ணா ப்ளீஸ்" என்றாள். "அவன் கிட்ட அப்பறமா பேசலாம்" என்று கைபேசியில் ஏதும் பேசாமல் காலை கட் செய்தான். தன் உடன் பிறவா தங்கையை அணைத்து ஆறுதலாக தலையைத் தடவிய பாஸ்கர், "இல்லம்மா நிச்சயம் வேற வழி எதாவுது இருக்கும். முதல்ல மாமாவைக் கேக்கலாம்" என்று சொல்லச் சொல்ல வெளியிலிருந்து யாரோ ஒரு பெண்,

"ரேவதீ .. நீ வெளிய போறதுக்கு கார் வந்துருக்கு" என்றாள். சிறு பதபதைப்புடன் பார்தவளிடம் பாஸ்கர், "நீ முதல்ல போய் எதாவுது நம்பற மாதிரி காரணம் சொல்லி இன்னைக்கு முடியாதுன்னு சொல்லி அந்த ஆள அனுப்பு" "அந்த ஆள் வந்துருக்க மாட்டான். அவன் ட்ரைவரை அனுப்பி இருப்பான்" "அவன் ஃபோன் நம்பர் இருக்கா உங்கிட்டே. இல்லாட்டி நிச்சயம் அவன் ட்ரைவ்ர் கிட்ட இருக்கும். கேட்டு வாங்கி அவன் கிட்டயே பேசு" சற்று யோசித்த ரேவதி சட்டென்று குளியலறைக்குள் சென்று ஒரு நிமிடத்தில் தன் புடவையை களைந்து மேக்-அப் ஏதுமில்லாத படி முகத்தை கழுவி ஒரு ஹௌஸ் கோட் அணிந்து வந்தாள். பாஸ்கரிடம் ,

"நீங்க இங்க இருங்க நான் போய் பேசி அனுப்பிட்டு வர்றேன்" என்றபடி வெளியில் சென்றாள். பாஸ்கர் நினைத்த படியே அந்த ட்ரைவரிடம் விஜயகுமாரின் ஃபோன் நம்பர் இருந்தது. ட்ரைவரின் கைபேசியிலேயெ அவரை அழைத்தாள "என்ன ரீடா ட்ரைவர் வரலையா" அடக்க முடியாத எரிச்சலை அடக்கியபடி தேன் குழைத்த குரலில், "வந்துருக்கார் சார், என்னமோ தெரியல இந்த தடவை ப்ளீடிங்க் கொஞ்சம் அதிகமா இருக்கு சார். அதான் கொஞ்சம் ரெஸ்ட்ல இருந்தா ப்ளீடிங்க் நிக்கும்ன்னு மத்தியானமே நான் பர்மிஷன் போட்டுட்டு வந்தேன். இன்னும் இருக்கு சார்" என்றார் இம்முறை எரிச்சல் அடந்தது விஜயகுமார். "ஏய் என்ன விளையாடறயா?" ரேவதி நிதானம் தவறாத சற்று தாழ்ந்த குரலில்

"சார், நம்ம பேசி முடிவெடுத்தாச்சு .. தள்ளி போடறதுல எனக்கு என்ன லாபம்?. இப்படி இருக்கும்போது எப்படி முன்ன மாதிரி நான் உங்களை கவனிச்சுக்க முடியும். சொல்லுங்க" என்றதும் திருப்தி அடைந்தவராக "அப்ப நாளைக்கா?" என்க "நாளைக்கு காலைல நிக்கலேன்னா நான் டாக்டரைப் போய் பாக்கலாம்னு இருக்கேன் சார். நிச்சயம் நான் நாளைக்கு உங்களுக்கு சொல்றேன்" என்று முடித்தாள்.
அவள் கோலத்தை அந்த ட்ரைவர் காணட்டும் என்றே அவள் தன் தோற்றத்தை மாற்றி இருந்தாள். ட்ரைவர் சென்றதும் அறைக்கு சென்றவள் அங்கு பாஸ்கர் தன் கைபேசியில் பேசிக்கொண்டிருப்பதைக் கண்டாள். "சரிங்க மாமா .. இதோ ரேவதிகிட்ட கொடுக்கறேன்" கைபேசியை வாங்கிய ரேவதி குற்ற உணர்வோடு, "ஹலோ அங்கிள்" "ஏம்மா நாங்க எல்லாம் இருக்கறதை மறந்துட்டயா?" விசும்பலுடன் "சாரி அங்கிள் .. எனக்காக இவ்வளவு பண்ணி இருக்கற உங்களுக்கு இன்னும் கேவலம்ன்னு நான் சொல்லலே"

 "என்னம்மா நீ அப்படி இருந்ததுக்கே நீ பொறுப்பில்லைன்னு நினைக்கறவன் நான் .. எவனோ ஒரு பொறுக்கிப் பய பண்ணினதுக்கு உன்னைக் கேவலமா நினைப்பமா சொல்லு. இருந்தாலும் நீ சொல்ற மாதிரி இதை எப்படியாவுது தடுக்கணும். அதுக்காக இன்னோரு தடவை கொலை செய்யறதுக்காக கிளம்பிடாதே. எப்படியும் இன்னோரு நாள் டைம் கேட்டு இருக்க இல்லையா .. நாளைக்கு நான் உன்னை கூப்படறேன்... ஆனா ஓண்ணு, குலைக்கற நாய் கடிக்காதும்பாங்க .. அதுக்காக ரிஸ்க் எடுக்கவும் முடியாது. பாக்கலாம்." "சரி, தாங்க்ஸ் அங்கிள்" "ஏய், பக்கத்துல இருந்திருந்தா அறைஞ்சுருப்பேன் .. இன்னும் ஒரு வாரத்துல அவனுக்கு உன்னை தாரவாத்துக் கொடுக்கப் போறேன். எங்கிட்டயே தாங்க்ஸ் சொல்றியா?" என்று அவள் மனதை லேசாக்கியபின் விடைபெற்றார். திரும்ப பாஸ்கரிடம், "அண்ணா, நாளைக்கு அந்த ஆளை எப்படி சமாளிக்கறது?" என்றதற்கு "மாமா யோசிக்கறேன்னு சொன்னார் .. நான் உன் வழில யோசிக்கறேன் ..

ஆளை விட்டு மிரட்டி அவன்கிட்ட இருக்கற ஃபோட்டோவை எல்லாம் வாங்க முடியுமான்னு பாக்கப் போறேன். இப்ப கிளம்பி சென்னை போறேன் .. எனக்கு இங்க யாரையும் தெரியாது" என்றான் "அப்படி அவர் கொடுக்கறமாதிரி கொடுத்துட்டு சொன்ன மாதிரி வெளியிட்டார்ன்னா?" "மிரட்டும் போது மரண பயம் வர்ற மாதிரி மிரட்டற ஆளுங்க இருக்காங்க .. அப்பாவுக்கு தெரிஞ்சவங்க யாராவுது இருப்பாங்க" என்றான் பிறகு "உனக்கு தனியா இருக்க பயமா இருக்குன்னா வினிய இங்க வந்து இருக்கச் சொல்லவா? இல்லை நீ சென்னைக்கு வந்துடேன்?" "என்னை அந்த ஆளு நாளைக்கு காலைல ஆஃபீஸ்ல பாக்காட்டி நிச்சயம் சந்தேகப் படுவான். எனக்கு பயம் ஒண்ணும் இல்லை. நீங்க போயிட்டு ஃபோன் பண்ணுங்க" "சரி, இன்னும் ஒரு லேட் நைட் ஃப்ளைட் இருக்கு. அதுல டிக்கட் கிடைச்சா ஃப்ளைட்ல போறேன் இல்லேன்னா இப்ப எடுத்து இருக்கற வாடகை காருல போறேன். பத்திரமா இரு. அப்பறம் நாங்கதான் அருணுக்கு பதில் சொல்லணும் மறந்துடாதே." என்றபடி புறப்பட்டு சென்றான்.

 "அண்ணா, அருண்கிட்ட இதைப் பத்தி .." "சொல்லாம இருக்க முடியாது .. ஏற்கனவே நீ அவனை பயமுறுத்தி விட்டுட்டே .. மாமாவும் அது தான் சரின்னார். ஹாங்க், சொல்ல மறந்துட்டேன் நீ அந்த ஆள்கிட்ட பேச போனப்ப அருண் மறுபடி கூப்பிட்டு இருந்தான் ஒரு சின்ன ப்ராப்ளம் ரேவதியே சொல்லுவான்னு சொன்னேன். அவன் வெய்ட் பண்ணிகிட்டு இருப்பான். கூப்பிட்டு சொல்லு. அது தான் நல்லது" என்று திண்ணமாகக் கூறி விடை பெற்றான். மனத்தில் என்ன நடக்கப் போகிறது என்ற திகில் இருந்தாலும் அவளை சுற்றி இருக்கும் அன்பு அவள் முகத்தில் ஒரு புது நம்பிக்கையை வரவழைத்து இருந்தது. இவ்வளவு நேரம் அணைத்து வைத்து இருந்த தன் கைபேசியை ஆன் செய்த அடுத்த நிமிடம் அருணிடமிருந்து அழைப்பு. "ஏய், என்னாச்சு? பாஸ்கர் எதோ ப்ராப்ளம்ன்னான்?"

 மெதுவாகத் தொடங்கி நடந்தவை அனைத்தையும் அருணிடம் சொன்னாள். பதிலேதும் பேசாமல் அருணும் சிறிது நேரம் மௌனம் காத்தான். "சோ, நாளைக்கு வரைக்கும் நீ டைம் கேட்டு இருக்கே இல்லையா? Let me also see what is the way out of this .. தயவு செஞ்சு நீ எந்த தப்பான முடிவும் எடுத்துடாதேடா. அந்த படங்க எல்லாம் வெளிவந்தா உனக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கும்ன்னு தெரியுது. ஆனா நீ இவ்வளவு நாள் பட்ட கஷ்டத்துக்கு ஒரு அர்த்தமே இல்லாம போயிடும்." "உங்களுக்கு அவமானமா இருக்காதா?" "நிச்சயம் இருக்கும். ஆனா பொறுத்துக்குவேண்டா. But I can't bear to see the pain you will go through honey." என்று தன் அவமானம் பெரிதில்லை அவளுக்கு வரக்கூடிய மனவலியை பார்க்கும் சக்தி அவனுக்கு இல்லை என்றான். அருண் தன் மனவலியை மனதில் கொண்டு சொன்னதில் மனம் நெகிழ்ந்து அழுதாள். "சரி, அப்படி எதுவும் நடக்கக் கூடாதூன்னு உன் ஃபேவரைட் திருப்பதி சாமிகிட்ட வேண்டிக்கோ" என்றான்.

 "சரி, வேண்டிக்கறேன்" "டேய், ஒண்ணு சொல்லட்டுமா?" "என்ன?" "நீ யோசிச்சியே அந்த ப்ரெஸ் ரிலீஸ் ஆப்ஷன்? அதுதான் எனக்கு சரின்னு படுது" "ஆனா நான் இப்ப ப்ரெஸ்ஸுக்கு போனா அந்த ஆளை எதிர்த்துகிட்டு என்னை யாரும் சீந்தக் கூட மாட்டாங்க" "அதுவும் சரிதான் .. பாப்போம் .." அடுத்த நாள் அலுவலகத்திற்குச் சென்றவளுக்கு தன் வேலையில் சிறிதும் கவனம் செலுத்த முடியவில்லை தன் கணிணியை ஆன் செய்ததோடு சரி. ஒன்றும் செய்யாமல் அமர்ந்திருந்தாள். மாலை வரை தண்டபாணி, பாஸ்கர் இருவரிடமிருந்தும் ஒரு தகவலும் வரவில்லை. பயத்தில் குலை நடுங்க விஜயகுமாரிடமிருந்து அழைப்பு வர காத்திருந்தாள். அப்படி அவர் அழைத்தால் மறுபடி என்ன சொல்லி சமாளிப்பது என்று எண்ணியவாறு இருந்தாள். ஆனால் மாலை வரை அவளுக்கு விஜயகுமாரிடமிருந்து அழைப்பு வரவில்லை. புறப்பட்டு விடுதியை அடையும் போது அருண் அழைத்தான்

 "என்னடா ஆச்சு? மாமா இல்ல பாஸ்கர் எதாவுது சொன்னாங்களா?" "இல்லை" "அந்த ஆளு?" "என்னை கூப்பிடவே இல்லை" "கூப்பிடலயா? என்னாயிருக்கும்?" "ஆஃபீஸ்ல பிஸியா இருந்திருப்பான் .. இனிமெல் கூப்டான்னா .. மறுபடி நேத்து சொன்ன மாதிரியே எதாவுது கதை அளந்து பாக்கறேன். ஆனா நம்புவானான்னு தெரியல. பயமா இருக்குப்பா" என்று சொல்லச் சொல்ல அவளுக்கு அழுகை வந்தது. "ரிலாக்ஸ் ஹனி .. நான் சொல்றதை கேளு இன்னும் நாலு நாள்ல நான் அங்க இருப்பேன் .. எங்க இண்டியா மார்கெட்டிங்க் ஹெட்டுக்கு ஒரு நியூஸ் பேப்பர் எடிட்டரை நல்லா தெரியுமாம். நான் வந்தவுடனே அவரை மீட் பண்ண ஏற்பாடு பண்ணறதா சொன்னார். அவர்கிட்ட உன்னைப் பத்தி எதுவும் சொல்லலை.

அப்படி ஒரு வேளை நாளைக்கே தேவைன்னா நீ போய் அவரைப் பாக்க ஏற்பாடு செய்யறேன். ஆனா எவ்வளவு சீக்கரம் அவங்க பப்ளிஷ் பண்ணுவாங்கன்னு தெரியல" "பாக்கலாங்க .. நான் ஆண்டவன் விட்ட வழின்னு இருக்கேன்" "இந்த மாதிரி சமயத்துல அதுதாண்டா பெஸ்ட்" அதற்கு அடுத்த நாளும் அவள் அலுவலகம் சென்று குழம்பிப் போய் தன் இருக்கையில் அமர்ந்திருந்தாள். மேசையிலிருந்த இன்டர்காம் ஒலித்தது. எடுத்ததும் எங்கோ கேட்ட ஆனால் அவளுக்கு பரிச்சயமில்லாத ஒரு குரல், "பர்ஸனல் மெயில் எல்லாம் தினம் பாக்கற வழக்கம் இல்லையா?" என்றது .. அவள் பதிலுக்கு "ஹல்லோ .." என்றதும் இணைப்பு துண்டிக்கப் பட்டது. சிறிது நேரம் காத்திருந்தும் மறுபடி அழைப்பு வராததால் 'யாரோ ராங்க் எக்ஸ்டென்ஷனுக்கு கால் பண்ணி இருக்கங்க' என்று நினைத்தாள்.

பிறகு அவள் அக்குரல் சொன்னது நினைவு வர தானும் இரண்டு நாட்களாக தன் GMAILஐ திறந்து பார்க்கவில்லை என்று உணர்ந்து GMAILஐ திறந்தாள். பல கணிணி மற்றும் மென்பொருள் சம்மந்தப் பட்ட ஈமெயில்களும் மேலும் பல நட்பு அறிக்கைகளும் குவிந்து இருந்தன. அவைகளுக்கு நடுவே "Your Wedding Gift" என்று தலைப்பிட்ட ஒரு ஈமெயில் இருந்தது. அந்த ஈமெயில் அவளுக்கு இதுவரை அறிமுகமாகாத ஒரு விலாசத்திலிருந்து வந்திருந்தது. ஆர்வத்துடன் திறந்து பார்த்தாள். அது வேறு ஒரு ஈமெயிலின் ஃபார்வர்ட் என்று அறிந்தாள். கீழே விஜயகுமாரின் பர்ஸனல் ஈமெயில் விலாசத்துக்கு அனுப்பப் பட்ட ஈமெயில் இருந்தது.

அந்த ஈமெயிலில் ஒரு zip ஃபைல் அட்டாச் செய்யப் பட்டிருந்தது. அதில் எழுதியிருந்தது:

 Hi Vijayakumar, By now you must have realized that all those crap from your camera memory card and folders in your laptop where you stored them have been wiped out. I have preserved a few pictures which you may find in the attached zip file. To ensure you don't harraass that girl anymore I will be forwarding this mail to her. A Well Wisher


 தமிழில்: ஹாய் விஜயகுமார். உன் கேமரா மெமரி கார்டில் இருந்த அசிங்கங்களும் லாப்டாபில் அவைகளை நீ டௌன்லொட் செய்து இருந்த ஃபோல்டர்களும் அழிக்கப் பட்டிருப்பதை நீ இபபோது உணர்ந்திருப்பாய். அவைகளில் சில படங்களை நான் பாதுகாத்து இந்த ஈமெயிலில் அட்டாச் செய்திருக்கிறேன். நீ மேலும் அந்த பெண்ணை துன்புறுத்தாமல் இருக்க உத்தரவாதமாக இந்த ஈமெயிலை அவளுக்கு ஃபார்வார்ட் செய்கிறேன். ஒரு நலம்விரும்பி ரேவதி

அதை படித்ததும் பதட்டத்துடன் சுற்று முற்றும் பார்த்த பிறகு அட்டச் செய்து இருந்த ZIP ஃபைலைத் திறந்தாள். விஜயகுமார் பல்வேறு பெண்களுடன் புணர்ச்சியில் இருக்கும் பல படங்கள் அவளுக்கு தரிசனமளித்தன. அவைகளில் எதிலும் ரேவதி இல்லை. வேகமாக அந்த ஃபைலை மூடியவள் முதலில் அந்த ஈமெயிலை அருண், பாஸ்கர் மற்றும் தண்டபாணிக்கு ஃபார்வார்ட் செய்தாள். பிறகு தன் மனத்திலிருந்த பாரமெல்லாம் குறைய மேசையில் தலைசாய்த்து குலுங்கிக் குலுங்கி அழுதாள். நான்கு நாட்களுக்குப் பிறகு பெங்களூர் வந்து இறங்கிய அருண் ரேவதியை அவள் விடுதியில் சந்தித்தான்.

 அறைக்குள் நிழைந்தவன் அவளை வாரி அணைத்ததும் உங்கள் இருவருக்கு மட்டும்தானா பிரிவுத்துயர்? எங்களுக்கும்தான் என்று எண்ணிய அவர்களிருவரின் இதழ்கள் அனிச்சையாக கலந்தன. முத்தத்தை முடித்தபின் அவளிடம், "என்ன மேடம் ரெடியா? போலாமா" என்றான். "ம்ம்ம்" இருவரும் அவன் கொண்டு வந்திருந்த காரை அடைந்ததும் அருண் அவளிடம், "உனக்கு ஓ.கே தானேடா?" "பின்ன? எவ்வளவு நாள் தான் இப்படி பயந்து சாகறது, வண்டிய எடுங்க" "ஐ லவ் யூ" என்றவாறு காரை கிளப்பினான்.

 இருவரும் அந்த நாளிதழின் அச்சகத்தின் மேல் தளத்தை அடைந்து "சீஃப்-எடிட்டர், பெங்களூர்" என்று பெயர்பலகை கொண்ட அறையில் நுழைந்தனர். இரண்டு நாட்களுக்குப் பிறகு சென்னையில் இருக்கும் ஆர்ய சமாஜத்தில் அருண்-ரேவதி திருமணம் இனிதே நடந்தேறியது. தங்கள் தேனிலவுக்காக கோவாவிற்கு சென்று தாஜ் ஹாலிடே வில்லேஜில் தங்கியிருந்தனர். அவர்கள் கோவா வந்ததற்கு அடுத்த நாள் ஒரு அகில இந்திய நாளிதழின் வாலன்டைன் தினச்சிறப்பிழலில் சிறப்புத் தம்பதியினர் கதைப் பகுதியில் அருண்-ரேவதி காதலைப் பற்றியும் ரேவதியின் முழுவரலாறும் வெளியாகி இருந்தன.
அவர்கள் பெங்களூரை அடையுமுன்னே சித்ரா அவளை கைபேசியில் அழைத்து வாழ்த்துச் சொல்லி இவ்வளவு நாளும் தன்னிடம் ஏன் இவ்விவரங்களை பகிர்ந்து கொள்ளவில்லை என்று வருத்தப் பட்டாள்.

அவள் டீமில் இருந்த அனைவரும் அவளை கைபேசியில் அழைத்து வாழ்த்துக் கூறினர். அதேபோல் அருணுடைய சக மேனேஜர்கள், அவனுக்கு கீழ் பணியிட இருக்கும் பலரும் வாழ்த்தினர். அவர்கள் அனைவரும் புடை சூழ அடுத்த வாரம் அருணும் ரேவதியும் அவர்கள் பார்த்திருந்த வாடகை வீட்டில் பால் காய்ச்சிக் குடியேறியபின் இல் வாழ்க்கையை தொடங்கினர். இருவரும் திருமணத்திற்காக மூன்று வார விடுமுறை எடுத்து இருந்தனர். வீட்டுக்கு வேண்டிய பொருட்களை வாங்குவதும் வீட்டை அலங்கரிப்பதுமாக என்று அடுத்த வாரத்தை இருவரும் கழித்தனர்.

இடையே ரேவதி குறிப்பிட்டு இருந்த டோஸேஜ் குறையாமல் அருண் பாத்துக் கொண்டான்! அந்த ஒரு வாரத்தில் அப்போது புதிதாக வந்திருந்த ஸ்கோடா லாரா கார் ஒன்றை வாங்கினர். அந்த ஷோரூமில் பார்வைக்கு வைக்கப் பட்டிருந்த ஸ்கோடா ஃபேபியா என்ற சிறிய கார் அருணுக்கு மிகவும் பிடித்து இருந்தது. தன் அடுத்த ப்ராஜக்ட் ரேவதிக்கு காரோட்ட கற்றுக் கொடுத்து அவளுக்கு அந்த காரை வாங்கி பரிசளிக்கவேண்டும் என்று தன் ஆர்கனைஸரில் ஷார்ட் டெர்ம் கோல்ஸ் பகுதியில் குறித்துக் கொண்டான்.

அன்று இரவு அவர்களின் முதல் ஆட்டத்திற்கு பிறகு அடுத்த சேர்க்கைக்கு முன் வழக்கமாக நடக்கும் அவர்களது கொஞ்சல்களுக்கு நடுவில் தலையணையிலிருந்து ஒரு கவரை எடுத்தான்.



No comments:

Post a Comment