Friday, November 21, 2014

ரேவதி பாகம் 12


கையில் அப்பாயின்ட்மென்ட் ஆர்டருடன் வீட்டுக்கு வந்த்தும் தன் தாயின் பட்த்தின் முன் வெகு நேரம் நின்று அழுதாள். ஏற்கனவே அவனிடம் இது பற்றி பேசி முடிவெடுத்து இருந்தாலும் நிஜமாகவே கையில் வேலைக்கான ஆர்டரை வாங்கிய சந்தோஷத்தை பகிர்ந்து கொள்ள அருணை தொலைபேசியில் அழைத்தாள். அவள் அழைத்தது அதிகாலை நான்கு மணியாயிருந்தும் அருணுக்கும் அவளது உற்சாகம் தொற்றிக் கொள்ள வெகு நேரம் பேச்சில் ஆழ்ந்திருந்தார்கள்.

அவள் அமெரிக்காவிற்கு வரும் போது அவளை நேரில் வந்து வரவேற்பதாக சொன்னான். ரேவதியின் சந்தோஷம் இரட்டிப்பானது. அருண் இருக்கும் கலிஃபோர்னியாவிலிருந்து அவள் வேலையில் சேரவிருக்கும் நியூ ஜெர்ஸி அமெரிக்காவின் மறு கோடி. விமானத்தில் ஆறு மணி நேரப் பயணம். இருப்பினும் அவன் வந்து அவளை வரவேற்று ஓரிரு நாள் அவளுடன் இருந்து விட்டு செல்வதாக சொன்னான்.

 அன்று மாலை வினிதா மற்றும் பாஸ்கருடன் கோவிலுக்கு சென்றாள். விசாலாக்ஷி தண்டபாணி தம்பதியினரிடம் அந்த ஆர்டரை கொடுத்து அவர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றாள். இன்னும் ஒரு மாதத்தில் தானும் அமெரிக்காவில் இருக்கப் போவதை எண்ணி ஆர்வத்துடன் பணியை தொடங்கினாள். சேர்ந்து சில நாட்களிற்கு பிறகு ஒரு நாள் அவள் வசந்தை சந்திக்க நேர்ந்தது.
“ஹாய் ரேவதி, வாட் எ சர்ப்ரைஸ்? எப்படி இருக்கே? நீ எப்ப இங்க ஜாயின் பண்ணினே” “ஹாய் வசந்த், எப்படி இருக்கீங்க? நான் இங்கதான் எம்.டெக் இன்டர்ன்ஷிப் பண்ணினேன்.

அப்பறம் ஜாப் ஆஃபர் கொடுத்தாங்கன்னு இங்கயே ஜாயின் பண்ணிட்டேன். என்ன இவ்வளவு நாளா நான் உங்களைப் பாக்கல?” “நான் ஆஸ்ட்ரேலியால ஆன்-சைட் அசைன்மென்டில இருந்தேன். நேத்துதான் இண்டியா திரும்பினேன்” பிறகு அவளுடன் சில வார்த்தைகள் பேசிவிட்டு சென்றான். அந்த வார சனியன்று அருணிடம் பேசுகையில் பேச்சுவாக்கில் ரேவதி, வசந்த இதே சென்டரில் வேலையில் இருப்பதாகவும் அவனை சந்தித்ததாகவும் சொன்னாள். முன்பு ஒருமுறை அவர்கள் பேசிக்கொண்டு இருக்கும்போது ரேவதி அவனைப் பற்றி குறிப்பிட்டு இருந்தாள். அப்போது அருண் தனக்கு வசந்த்தைப் பற்றி தெரியும் என்றும் அவன் பெரிய பணக்காரன் என்றும் பாஸ்கர் சேகரித்து தந்த விவரங்களை சொன்னான்,

அப்போது ரேவதி வசந்த்தை காதலித்த விவரத்தை கூறவில்லை. இப்போதும் அவ்வாறே மறைத்து இருந்தாள். அருண் ரேவதியுடன் பேசி முடித்த சில நிமிடங்களில் பாஸ்கரை தொடர்பு கொண்டான். ஸ்பீக்கர் ஃபோனை ஆன் செய்து வினிதாவையும் அவர்கள் பேச்சில் கலந்து கொள்ள அழைக்கச் சொன்னான். “ஹாய், வினி .. எப்படி போயிட்டு இருக்கு மாரீட் லைஃப். அவன் இருக்கானேன்னு பாக்காதே. தைரியமா சொல்லு” என்ற கிண்டலுடன் தொடங்கிய அருணிடம் “மவனே, ஸ்பீக்கர் ஃபோன் போட்டு நீங்க ரெண்டு பேரும் என்னை நக்கலடிக்கத்தான் கூப்டயா?” “இல்ல சும்மாடா .. எனக்கு உங்க ரெண்டு பேர்கிட்டயும் ஒரு உதவி வேணும்” பாஸ்கர்: “என்ன உதவி” அருண்: “அந்த பையன் வசந்த் இவ்வளவு நாள் ஆஸ்ட்ரேலியால இருந்துட்டு இப்பதான் இண்டியா வந்து இருக்கான்.

ரேவதியை பாத்து காஷுவலா பேசி இருக்கான். ரேவதி என் கிட்ட சொன்னா” பாஸ்கர்:”ஏன், அவ இன்னும் அவனை லவ் பண்றாளா” அருண்: “ரேவதி பேசுனதை வெச்சு அப்படி தெரியல .. அவன் முன்ன திடீர்னு பேசறதை நிறுத்தினது அவ மனசுல இன்னும் உறுத்திட்டு இருக்கும்” பாஸ்கர்:”சரி விடுடா .. இப்ப என்ன அதுக்கு?” அருண்: “நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து அவனை மீட் பண்ணி ரேவதிக்கு நடந்ததை எல்லாம் அவன் கிட்ட சொல்லணும்” வினிதா: “எதுக்கு அருண்?” அருண்: “ரெண்டு பேரும் நான் சொல்றதை முதல்ல கேளுங்க .. இது என் யூகம் .. அவனுக்கு ரேவதியோட அம்மாவைப் பத்தி அவன் ஃப்ரெண்டு மூலம் தெரிஞ்சு இருக்கு.

இவ்வளவு நாள் ரேவதி அதை மறைச்சு இருக்கான்னு கோவப்பட்டு இருக்கான். அவன் கொஞ்ச நாள் பேசறதை நிறுத்தி இருப்பான். ரேவதியும் தன் அம்மாவைப் பத்தி தெரிஞ்ச உடனே பேசறதை நிறுத்திட்டான்னு அதுக்கப்பறம் அவனை அவாய்ட் பண்ணி இருக்கா. உண்மையில ரெண்டு பேரும் காதலிச்சு இருப்பாங்கன்னு நெனைக்கறேன். ஒருவேளை காதலிச்சுட்டு இருந்திருந்தாங்கன்னா ரேவதிக்கு அந்த நிலமை வந்து இருக்குமா? அவனுக்கு இருக்கற பணத்துக்கு ரேவதியோட அம்மாவை அமெரிக்காவுக்கே அனுப்பி வைத்தியம் பாத்து இருப்பான். நீங்க அதை அவன் கிட்ட சொல்லணும்” பாஸ்கர்:”சொல்லி?”

 வினிதா:”என்ன எல்லாம் சொல்லணும் அருண். ரேவதிக்கு ஆன நிலமையைப் பத்தியா? எதுக்கு அருண்? What is in your mind?” அருண்:”ஆமா. எல்லாத்தையும்தான். சொல்லி அவளுக்கு அவங்க பிரிஞ்சதுக்கப்பறம் என்னவெல்லாம் ஆச்சுன்னு சொல்லுங்க. அவன் புரிஞ்சுப்பான். உண்மையா அவன் அவளை காதலிச்சு இருந்தா தன்னால அவளுக்கு நடந்ததை தடுத்து இருக்க முடியும்னு அவனுக்கு தெரியும். நிச்சயம் ரேவதிகிட்ட போய் மன்னிப்பு கேட்டு மறுபடி அவன் காதலை ஏத்துக்க சொல்லுவான்” பாஸ்கர்:”டேய், எனக்கு இப்ப் ஓண்ணு தெரிஞ்சாகணும். நீ ரேவதியை லவ் பண்றேன்னு சொன்னதெல்லாம் ட்ராமாவா?” வினிதா:”ஐய்யோ என்ன சொல்றீங்க .. “ என்று தொடர்வதுக்குள்

 அருண்:”பரவால்ல வினி, டேய் நான் சொல்றதை முழுசா கேளு. ரேவதி என்னை ஒரு நல்ல ஃப்ரெண்டா பாக்கறா. நான் என் காதலை சொல்லும் போது நிச்சயம் ஏத்துக்குவா. ஏன்னா நான் என்ன சொன்னலும் செய்வா. என் மேல அப்படி ஒரு நம்பிக்கை, பக்தின்னே சொல்லலாம். ஆன யாருக்குமே அவங்களோட ஃபர்ஸ்ட் லவ் அப்படீங்கறது ரொம்ப ஸ்பெஷல்டா. It will be true love. எப்பவும் மனசுல இருக்கும். அவங்க ரெண்டு பேருக்குமே அது ஃபர்ஸ்ட் லவ். ரேவதி நடுவுல அவனை காதலிக்காம இருந்தாலும் அவன் சொன்னதுக்கு அப்பறம் மறுபடி அவனை ஏத்துகிட்டான்னா அது அவளோட முழுமனசோட எடுத்த முடிவா இருக்கும்.

அதனால சந்தோஷப் படற முதல் ஆள் நானாத்தான் இருப்பேன். அப்படி அவ ஏத்துக்கலைன்னாதான் எனக்கும் அவளை கம்பெல் பண்ணறனோங்கற ஒரு மன உறுத்தல் இல்லாம என் காதலை சொல்ல முடியும்” பாஸ்கர்:”டேய், சும்மா சினிமா டயலாக் எல்லாம் விடாதே. அவ அவனை காதலிச்சா ரொம்ப சந்தோஷப் படுவேன்னு எல்லாம் சொல்லாதே” அருண்:”எனக்காக நிச்சயம் வருத்தப் படுவேன்தாண்டா .. ஆனா இவ்வளவு நாளும் அவ வாழ்க்கையில ஒரு நல்ல நிலைமைக்கு வரணும்னு இருந்த நான் அவளுக்காக சந்தோஷப் படுவேன் ...” வினிதா (கண்கள் பனிக்க):”I admire you Arun. But are you sure? Have you thought about it? உங்களால தாங்கிக்க முடியுமா அருண்?” அருண்:”ரெண்டு வருஷத்துக்கு முன்னால இருந்த அருண் தாங்கி இருக்க மாட்டான்..

இப்ப இருக்கற அருண் தாங்கிப்பான்” பாஸ்கர்:”டேய், இது விஷப் பரீட்சைடா .. வேண்டாம் .. இப்பதான் ரேவதியை பத்தி எங்க வீட்டுல கூட எல்லாருக்கும் தெரிஞ்சு எல்லாரும் அவளை நம்ம வீட்டு பொண்ணுன்னு பாக்கறாங்க ... இப்ப ஏண்டா?” அருண்:”எதுக்கு நீ இமோஷனலாகறே? வசந்த் அவளை உண்மையா காதலிக்காம இருந்து இருக்கலாம். அப்படியே அப்ப காதலிச்சு இருந்தாலும் இப்ப நீங்க சொன்னதுக்கு அப்பறம் அருவெறுப்போட காதலிக்காம இருக்கலாம். அப்படி அவன் காதலிச்சாலும் ரேவதி அவன் காதலை ஏத்துக்காம இருக்கலாம்.

இவ்வளவு IF இருக்கு” பாஸ்கர்: “சரி, நீ சொல்ற வழியிலயே யோசிக்கலாம். அவன் ரேவதியை இப்ப காதலிக்கலைன்னா .. எதுக்கு அவன்கிட்ட அவளைப் பத்தின உண்மையெல்லாம் சொல்லிட்டு.? அவன் அதை மத்தவங்க கிட்ட சொன்னா அது நம்ம ரேவதியைதான பாதிக்கும்” அருண்:”அந்த அளவுக்கு அவன் கீழ்தரமானவன்னு நான் நெனைக்கலெ. எதுக்கும் உன்னைவிட வினிதானால அவனை பத்தி ஈஸியா கணிக்க முடியும். அவன் அப்படி பட்டவனா வினிக்கு பட்டுதுன்னா எதுவும் சொல்ல வேண்டாம். As her well wishers அம்மா இல்லாத அவளுக்கு நீங்க அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கைய அமைச்சுக் கொடுக்கறதா சொல்லீட்டு, சும்மா நீங்க இன்னும் அவளை காதலிக்கறீங்களான்னு கேட்டுட்டு வந்துறுங்க” வினிதா:”அப்படி அவன் ரேவதியை திரும்ப காதலிச்சு அவ அவனை ஏத்துக்கலைன்னா? எதுக்கு சும்மா இருந்தவன் மனசுல காதல் உண்டு பண்ணி ஏமாத்தறது?” அருண்:”எங்க ரெண்டு பேர்ல யாரோ ஒருத்தர் ஏமாறத்தான் வேணும் .. இவ்வளவு அவளை கஷ்டப்படுத்துனதுக்கு அவனுக்கு கடவுள் கொடுத்த தண்டனைன்னு எடுத்துக்க வேண்டியதுதான்.

நீங்க போய் அவன்கிட்ட ரேவதி அவனை காதலிக்கறான்னு சொல்லாதீங்க. நடந்ததை சொல்லுங்க .. ரேவதிக்கு மாப்பிளை பாக்கறதா சொல்லுங்க .. ஒரு வேளை அவ இன்னும் அவனை காதலிக்கலாம்னு சொல்லுங்க” பாஸ்கர்:”நாங்களே கடவுள் ரூபத்தில அவனுக்கு தண்டனை கொடுக்கறதா எடுத்துக்கணுமா” வினிதா:”ஐய்யோ, என்ன உளர்றீங்க? கடவுள் நம்ம ரூபத்துல அவனுக்கு கொடுத்ததா எடுத்துக்கணும்” அருண்:”விட்டுறு வினி ... எப்படி அவனை நீ சமாளிக்கறே?” என்று கிண்டலடித்து சில நாட்களில் அவர்களிடமிருந்து தகவல் எதிர்பார்ப்பதாக விடை பெற்றான். சில நாட்களுக்கு பிறகு பாஸ்கரும் வினியும் அவனை தொடர்பு கொண்டார்கள். அருண்:“என்னாச்சு ... பாத்து பேசுனீங்களா” பாஸ்கர்:”எல்லாம் பேசியாச்சு .. ஒண்ணு ரெண்டு நாள்ல அவன் ரேவதிட்டே பேசப் போறான் ... Keep your fingers crossed .. you have only one life line left”

 வினிதா:”அவன் ரொம்ப நல்லவன் அருண். உங்களோட யூகம் ரொம்ப கரெக்ட். நாங்க சொல்ல சொல்ல அழுதுட்டான். நீங்க சொன்ன மாதிரி நாங்க ரேவதிக்கு மாப்பிள்ளை பாத்துட்டு இருப்பதா சொன்னோம். ரேவதி அவனை காதலிக்கறதா சொல்லலை” அருண்:”எனக்கு ஏமாத்தமாவும் இருக்கு .. அதே சமயத்துல சந்தோஷமாவும் இருக்கு வினி ... சோ, அவன் ரேவதிகிட்ட ப்ரொபோஸ் பண்ணறதா சொன்னானா?” பாஸ்கர்:”அதைத் தானடா நான் இப்ப சொன்னேன். கடுப்பா இருக்கு. நிஜமா சொல்றேன்டா .. உனக்கு பைத்தியம்தாண்டா பிடிச்சு இருக்கு .. அவளை மாதிரி ஒரு பொண்ணை எப்படிடா விட்டுக்கொடுக்க மனசு வருது உனக்கு” அதை கேட்ட அருண் சிரிக்கிறான் பாஸ்கர்:”எதுக்கு சிரிக்கற இப்போ?” அருண்:” ஒண்ணுமில்ல ரெண்டரை வருஷத்துக்கு முன்னால போட் களப்ல நம்ம ரெண்டு பேரும் பேசுனது ஞாபகத்துக்கு வந்துது ..” பாஸ்கர்:”அப்ப அவளைப் பத்தி எனக்கு தெரியாதுடா ..” வினிதா:”அருண், இவர் சொன்ன மாதிரி ... Keep your fingers crossed” அருண்:”Do I have a choice? Its Ok . அவ முடிவு எதுவா இருந்தாலும் நான் தாங்கிப்பேன். கவலைப் படாதே.

என்ன கொஞ்ச வருஷம் என்னால வேற யாரையும் நினைச்சுகூட பாக்க முடியாது... காலப் போக்கில சரியாயிடும்” பாஸ்கர்:”டேய், உங்க பில் கேட்ஸ் வேணும்னா நாப்பத்தி மூணு வயசுல கல்யாணம் பண்ணி இருக்கலாம் ... நடைமுறைல யோசிச்சு பாருடா ... கல்யாணங்கறது காலா காலத்துல நடக்கணும்” அருண்:”பரவால்லடா ... எனக்கு இதுவரை வாழ்க்கையில எல்லாத்துலயும் சக்ஸ்ஸ்தான். எதாவுது ஃபெயில்யூரும் இருக்கணும் இல்லயா .. any way பாக்கலாம் என் ரேவதி என்ன சொல்றான்னு” வினிதா:”கடைசியா என்ன சொன்னீங்க அருண்?” அருண்:”எது ரேவதி என்ன சொல்றான்னு பாக்கலாம்னேன்” வினிதா:”இல்ல அருண். ‘என்’’ ரேவதி என்ன சொல்றான்னு பாக்கலாம்னு சொன்னீங்க” தொண்டை அடைத்த அருண் தொடர்பை அறுத்தான். சில நாட்களுக்கு பிறகு ... ரேவதி அமெரிக்கா புறப்பட ஒரு வரத்திற்கு முன் வசந்த் அவளை மாலை தன்னுடன் தனியாக பேச அழைத்தான்.

 இருவரும் அருகே இருந்த காஃபீ டே சென்று அமர்ந்தனர். “ரேவதி உங்க அம்மா தவறீட்டாங்கன்னு உன் க்லாஸ்மேட் ஒருத்தன் மூலம் கேள்வி பட்டேன். அப்ப நான் ஆன்-சைட் அசைன்மென்ட்ல ஆஸ்திரேலியாவில இருந்தேன். இல்லைன்னா நிச்சயம் உன்னை வந்து பாத்து இருப்பேன்.” “பரவால்ல” “ரேவதி உங்கிட்ட ஒண்ணு சொல்லணும் ... “ “என்ன ?” “ஐ லவ் யூ .. ஐ வான்ட் டு மேரி யூ ..” “அன்னைக்கு எங்க அம்மாவை பத்தி தெரிஞ்சதுக்கப்பறம் என் கூட பேசறதையே விட்டுட்டீங்க. இப்ப என்ன திடீர்னு?” என்றதும் அவன் சிறிது நேர மௌனத்திற்கு பிறகு “இப்ப எனக்கு உன்னைப் பத்தின எல்லா விவரமும் தெரியும் .. உங்க அம்மாவுக்கு கேன்ஸர் வந்தது .. கையில பணமில்லாம நீயும் அதுல மாட்டி கிட்டதும் எனக்கு தெரியும் ..” அதிர்ந்து அவனை கலவரமடைந்த முகத்துடன் பார்த்து “எப்படி தெரியும்?”

 “எப்படியோ தெரியும் .. அதை விடு .. கவலைப் படாதே நான் யார் கிட்டயும் சொல்லப் போறதில்ல ..” “Still you want to marry me?” “ஒரு விதத்துல உனக்கு அப்படி ஆனதுக்கு நானும் ஒரு காரணம் .. நான் உங்கூட நெருங்கி பழகிட்டு இருந்து இருந்தேன்னா நீ நிச்சயம் எங்கிட்ட ஹெல்ப் பண்ண கேட்டு இருப்பே . உனக்குதான் தெரியுமே எங்க அப்பா பெரிய பணக்காரர்ன்னு ... நானும் நிச்சயம் உனக்கு ஹெல்ப் பண்ணி இருப்பேன் .. “

 “இப்ப அதுக்கு ப்ராயச்சித்தம் தேடறீங்களா?” “அப்படி இல்ல ரேவதி .. உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும் .. உங்கிட்ட என் காதலை சொன்னது இல்ல ... யாரோ ஒருத்தன் வந்து உன்னோட அம்மாவைப் பத்தி சொல்றவரைக்கும் நீ எங்கிட்ட மறைச்சு இருக்கேன்னு உன்னை தப்பா நெனச்சுட்டேன். ஐ அம் ரியலி சாரி . இப்பவும் நான் அதை நினைச்சு வெக்கப் படறேன் .. நேத்து எங்க அப்பா சென்னை வந்து இருந்தார். அவர் கிட்ட நடந்ததை பத்தி ஒண்ணு விடாம சொல்லி டிஸ்கஸ் பண்ணினேன் . அவருக்கு எந்த விதமான ஆட்சேபணையும் இல்லை .. அவர் சரின்னா எங்க அம்மாவும் சரின்னுடுவாங்க ... நீ சரின்னா போதும்” அவன் பேச்சில் இருந்த உண்மையை உணர்ந்தாள். ஒரு கணம் அவள் மனதின் ஒரு மூலையில் ‘உன்னை ஒருவன் மனமார காதலிக்கிறான் .. நீயோ உன்னை ஒரு நல்ல சினேகிதியாக பார்க்கும் அருணை மனதில் வைத்து பூஜிக்கிறாய்’ என்ற எண்ணம் தோன்றியது ..

மறுகணம் அவள் முன்னமே தன் வாழ்வில் திருமணம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று எடுத்த முடிவை நினைவு கூர்ந்தாள். “எனக்கு இஷ்டமில்லை வசந்த்”
“இன்னும் உனக்கு என் மேல கோவம் அப்படித்தானே?” “நிச்சயம் இல்ல .. நடந்ததுக்கு நான் யரையும் காரணமா நினைச்சு கோவப்படுல .. என் தலை எழுத்து அப்படி நடக்கணும்னு இருந்தது அவ்வளவுதான்” “உனக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைக்கணும்னு சிம்பதில நான் இதை சொல்லல ரேவதி .. அப்ப நான் உன்னை நிஜமா காதலிச்சேன் .. இப்ப மறுபடி காதலிக்க ஆரம்பிச்சு இருக்கேன் ... ஆனா நீ இல்லாம என்னால வாழமுடியாதுன்னு சினிமா டயலாக் எல்லாம் அடிக்கல. ப்ளீஸ் புரிஞ்சுக்கோ”

 “நீங்க சொல்றது புரியுது வசந்த ... நானும் ஒரு காலத்துல உங்களை காதலிச்சேன் .. எப்படி நீங்க மறந்தீங்களோ நானும் மறந்துட்டேன் .... மறுபடி அந்த மாதிரி ஒரு ஃபீலிங்க் இப்ப வரவே இல்ல ..” “சரி ரேவதி .. உன்னோட முடிவு எதுன்னாலும் எனக்கு ஓ.கே .. யோசிச்சு சொல்லு . ... இப்ப இஷ்டமில்லைன்னாலும் பரவாலை .. உனக்கு வேணுங்கற அளவுக்கு டைம் எடுத்துக்கோ” என்று விடைபெற்றான். அவனுக்கு என்ன சொல்லி புரியவைப்பது என்ற குழப்பத்தில் ஆழ்ந்தாள். தன்னை ஒரு சினேகிதியாக பாவிக்கும் அருண் அவளது மனதில் நிறைந்து இருப்பதை ... எப்படிச் சொன்னாலும் எதிர் வாதம் எழும் ..

அவள் குழப்பம் அதிகமானதே ஒழிய குறையவில்லை. கடந்த வாரம் அருண் அவளை அழைத்து இருக்கவில்லை .. மனதில் அவளுக்கு அது மிகவும் உறுத்தலாக இருந்த்து. அடுத்த நாள் சனிக்கிழமை ... எதிர்பார்த்து இருந்த ஃபோன் கால் அவனிடமிருந்து வரவில்லை. அதற்கடுத்த வியாழன் இரவு அவளது அமெரிக்க பயணம். என்னென்ன துணி மணிகள் மற்றும் பொருட்கள் எடுத்து வரவேண்டும் என்றும் சில துணிகளை அங்கு நியூ யார்க்கில் வாங்கி தருவதாகவும் அவனிடமிருந்து ஈமெயில் வந்து இருந்த்து.. அதற்கடுத்த ஞாயிறன்று அமெரிக்கா செல்லுமுன் விசாலாக்ஷி-தண்டபாணி ஆசியை பெற அவர்கள் வீட்டுக்குச் சென்றாள்.

வினிதாவும் பாஸ்கருடன் வந்து இருந்தனர். வசந்த் ரேவதியிடம் பேசியதை பற்றி அதுவரை அவர்களுக்கு தெரிவிக்கவில்லை. வினிதா ரேவதியுடன் தனியே பேசிக் கொண்டிருக்கும்போது “ஏய், என்ன ரேவதி ரொம்ப டல்லா இருக்கே?” “அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லக்கா.” என்று மழுப்பினாள். மேலும் அவள் வினிதாவிடம் எதுவும் கூறாமல் ஊருக்கு போவதற்கு பேக் செய்வதைப் பற்றி பேச்சைத் திருப்பினாள். திங்கள் காலை அருண் வினிதாவை தொலைபேசியில் அழைத்தான். “என்ன வினி? என்ன ஆச்சு? அந்த பையன் அவகிட்ட பேசினானா?” “தெரியல அருண் .., அவன் கிட்ட இருந்து ஒரு தகவலும் இல்லை ... உங்க ஆளும் அழுத்தமா இருக்கா ... நேத்து அவளைப் பாத்தோம் ஆனா ஒண்ணும் அவ சொல்லல. நீங்க அவகூட சனிக் கிழமை அன்னைக்கு பேசலையா?”

 “இல்ல .... வசந்துக்கு ஓ.கே சொல்லி இருப்பாளோன்னு மனசுக்குள்ள ஒரு நடுக்கம். அவளை நேர்ல பாக்கும் போது எப்படியும் சொல்லுவான்னு விட்டுட்டேன். சரி விடு...” “நீங்க ஃபோன் பண்ணி கேட்டுருங்களேன் .. “ “சரி, பண்ணறேன்” அன்றும் அதற்கு அடுத்த நாள் முழுவதும் ரேவதி அவள் இருக்கையில் இல்லை .. அமெரிக்காவில் பங்கேற்கும் ப்ராஜக்ட் பற்றிய டிஸ்கஷனில் இருந்தாள். செவ்வாயன்று மாலை தன் PG விடுதிக்குள் நுழையுமுன் அவளுக்கு ஃபோன் என்று அறிவித்தார்கள். துள்ளிக் குதித்த மனத்துடன் ரேவதி ஃபோனுக்கு விரைந்தாள். "ஹாய் ரேவதி ..." "லாஸ்ட் வீகென்ட் ஏன் கூப்பிடல?" "எக்கச்சக்க வேலை ... வாரம் முழுக்க தினம் வீடு போய் சேர ரெண்டு மூணுன்னு ஆச்சு .. சனிக்கிழமை காலைல பெட்டுல இருந்து எந்திரிக்கவே ஒரு மணிக்கு மேல ஆயிருச்சு ..

அதுக்கப்பறம் உன்ன கூப்புட்டு எதுக்கு உங்க PG ஓனர்கிட்ட திட்டு வாங்க வெக்கறதுன்னு கால் பண்ணலை" "ரொம்ப நேரம் உங்க காலுக்கு வெய்ட் பண்ணிட்டு இருந்தேன்.." அவள் குரலில் இருந்து அவளது மன அயர்ச்சியை புரிந்தவனாக அருண் "ஹெ, என்ன why are you sounding so dull? இங்க வர பிடிக்கலயா?" எனக் கிண்டலாக கேட்க "ஆமாம், டல்லாத்தான் இருக்கேன் .. இதுல நீங்க வேற இப்படி என்னை சீண்டினா நான் இப்ப ஓன்னு அழுதுடுவேன் .." "Oh God, சாரி டா, சாரி, நான் அப்படி உன் மனசு கஷ்டப் படற மாதிரி கேட்டிருக்க கூடாது ... I am really sorry" "உடனே, இந்த மாதிரி சாரி கேட்டு என்னை guiltyயா ஃபீல் பண்ண வெச்சுருங்க ..." "ஒகே, ஓகே சாரி அகெய்ன் ... என்னாச்சு ஏன் மேடம் டல்லா இருக்கீங்க?" "வசந்த் , அதான் எனக்கு ரெண்டு வருஷம் சீனியர், உங்களுக்கு கூட தெரியுமே, பெரிய பணக்காரன்னு சொல்லியிருக்கீங்க ... அவன் போன வாரம் எங்கிட்ட ப்ரொபோஸ் பண்ணுனான்" "என்ன ப்ரொபொஸல்?" என்று அவளை மேலும் சீண்ட.

அவன் குறும்புத்தனம் தனக்குக் தொற்றிக் கொள்ள "ம்ம்ம் .. ஒரு பெரிய சாஃப்ட்வேர் ப்ரொஜெக்ட் ப்ரொபொஸல்!!” என்று ஆரம்பித்து “அவன் என்னை காலேஜ்ல இருந்தப்ப இருந்து லவ் பன்றானாம் .. என்னை பத்தின எல்லா விஷயமும் தெரியுமாம் .. அவங்க அப்பா ரொம்ப forward thinkingஆம், அவன் இஷ்டத்துக்கு எப்பவும் தடை சொல்ல மாட்டாங்களாம் .. அப்புறம் என்னென்னவோ சொல்லி எங்கிட்ட நான் சரின்னா உடனே அவுங்க ஊருக்கு கூட்டிட்டு போய் அவங்க அப்பா அம்மா ஆசிர்வாதம் வாங்கிட்டு வந்துட்டு அப்பறம் எனக்கு எப்ப இஷ்டமோ அப்ப கல்யாணத்த வெச்சுக்கலாமாம்..." "ஓஹோ, அதனால தானா மேடம் ஃபோன் பண்ணுவேன்னு எதிர்பார்துகிட்டு இருந்தாங்களா ...

Good ..நீ என்ன சொன்ன? சரின்னுட்டயா? இதுக்கெல்லாம் எங்கிட்ட நீ கேட்க வேண்டிய அவசியமே இல்லம்மா" "ச்சீ .. என்ன நீங்க .. வெளையாடறீங்களா? இஷ்டமில்லேன்னு சொல்லிட்டேன்" என்றாள் கோபம் கொப்பளிக்கும் குரலில் "ஏன் இஷ்டமில்லெ?" "அதையேதான் அவன் ஒரு வாரமா என்னை கேட்டு தொளைச்சுட்டு இருக்கான் .. நானும் அவனுக்கு சரியா பதில் சொல்லாம திரும்ப திரும்ப இதுல இஷ்டமில்லன்னு சொல்லிட்டு இருக்கேன் .." "ஏண்டா அப்படி சொல்றே? உனக்கு அவன நல்லா தெரியாதுன்னா இன்னும் கொஞ்ச நாள் டைம் குடுன்னு சொல்லியிருக்கலாமே? நான் சொல்றேன். அவன் ரொம்ப நல்ல பையன்.

நல்லா படிச்சிருக்கான், நல்ல வசதியான் குடும்பம். அத்தனையும் அவன் தாத்தா சொத்து இவனோட பங்கு மட்டும் இருவது முப்பது கோடி தேறும். இந்த ஐ.டி கம்பெனி வேலை எல்லாம் சும்மா ஓசில உலகத்த சுத்தி பாக்கறதுக்குத்தான் .. அவுங்க அப்பா அம்மா அவன் உன்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதிக்கலைன்னாலும் அவன் பங்கு அவனுக்குதான் வரும். எதிர்காலத்துல நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு software company ஆரம்பிக்கலாம்" "எத்தன நாள் பழகினாலும் எனக்கு அவன் மேலயோ அவன மாதிரி யார்மேலயும் இஷ்டம் வராது" "ஏண்டா? நீ வேற யாரையாவுது லவ் பண்றயா? ‘ஐய்யோ .. ஏன்யா இப்படி கொல்லறே’ என்று மனதில் நினைத்து சொல்வதறியாது மௌனம் காத்தாள். சில கணங்களே "ஏய், ரேவதி, இருக்கயா அங்கே?" என்றதுக்கு "ம்ம்ம்" என்று சன்னமான குரலில் பதில் வந்தது "நீ வேற யாரையாவுது லவ் பண்றயான்னு கேட்டேன் ..

உனக்கு என்கிட்ட சொல்ல விருப்பம் இல்லைன்னா பரவால்ல விடு ..." "அப்படியெல்லாம் இல்ல .. " என்றாள் கிசு கிசுத்த குரலில். "சரி, பரவாயில்லை விடு .. ஏதோ தர்மசங்கடம் அதான் உன்னால சொல்ல முடிய மாட்டேங்குதுன்னு தெரியுது .. it's ok I understand you ...ஆனா ஒண்ணுடா எனக்கும் அதே மாதிரி தர்மசங்கடமான நிலைதான்.. looks like we are in the same boat ... " என்றான் "என்ன? same boatன்னா" "நானும் ஒருத்திய லவ் பண்ணறேன்" அதிர்ந்தாள் ...’என்ன சொல்றார்?’ அடக்கமுடியாமல் என்ன பேசுகிறோம் என்று நினைக்காமல் "லவ் பண்றீங்களா?" என்றாள்

 "ம்ம்ம்" "யாரு?" ""
அவன் மௌனத்தை பொறுக்க முடியாமல், "ஏன் தர்மசங்கடம்?" என்று கேட்கையில் அவள் கண்க்ள் குளமாகி இருந்தன "நானும் அவளை விரும்புறத யார்கிட்டயும் சொல்ல முடியாத நிலமை" "ஏன்?" "அவளும் என்னை லவ் பண்றாளான்னு தெரிஞ்சாதானே வெளியில சொல்ல முடியும்? நானே இன்னும் அவ கிட்ட என் லவ்வ சொல்லலையே" ‘என்ன புதிர் போடறார் ... என்னை மாதிரியே இவரு மட்டும் மனசுல நினைச்சுட்டு இருக்காரா?’ என்று மனதில் எண்ணி "ஏன் அவகிட்ட சொல்லலே? நல்லா பழக்கமில்லாதவங்களா? ஒருதலை காதலா?" என்று கேள்விகளை அடுக்கினாள்.

 "நல்லா ரொம்ப நாளா தெரிஞ்சவதான். நான்தான் இவ்வளவு நாளும் ஒருதலை காதலாவே இருக்கட்டும்ன்னு இருந்தேன். ஆனா இப்ப அவளா எங்கிட்ட சொல்லட்டும்ன்னு காத்துகிட்டு இருக்கேன்" "எப்படி ஒரு பொண்ணு அவளா வந்து சொல்லுவா? USகாரியா? நீங்க சொல்ல வேண்டியதுதானே? ஏன் இவ்வளவு நாளா சொல்லாம இருந்தீங்க? இப்ப மட்டும் ஏன் அவளா சொல்லுட்டும்ன்னு இருக்கீங்க?" "படிச்சுகிட்டு இருந்தா .. படிச்சுகிட்டு இருக்கும்போது காதல் வந்தால் படிப்பு கெடும் .. அது மட்டும் இல்ல ... அப்பா இல்லாத அவளை கஷ்டப் பட்டு நல்லா படிக்க வெச்சு கிட்டு இருந்த அவளோட அம்மாவும் அவ BE மூணாம் வருஷ்த்துலயே இறந்துட்டாங்க ..

அவ படிப்புக்கு நான்தான் எல்லா செலவும் செஞ்சேன் .. அவளுக்கு ஏற்கனவே ரொம்ப inferiority complex.. தன்னையெல்லாம் யாரும் ஏத்துக்க மாட்டாங்கன்னு .. படிச்சு முடிச்சு அவ ஒரு நல்ல பொஸிஷனுக்கு வந்து நல்ல தன்னம்பிக்கை வரட்டும்ன்னு காத்து கிட்டு இருந்தேன்" ‘என்னைத்தான் மென்ஷன் பண்ணறாரா?’ நினைக்கும்போதே ரேவதிக்கு இன்ப அதிர்ச்சியில் தலை சுற்றியது.

 "நல்ல பொஸிஷ்னுக்கு வந்துட்டாளா" என்றாள் "ம்ம்ம் .. இப்போ M.Tech முடிச்சுட்டு ஒரு பெரிய ஐ.டி கம்பெனில சேர்ந்திருக்கா .. ஆன் சைட் அசைன்மென்டுல இப்ப US கெளம்பிகிட்டு இருக்கா ..." அவன் சொல்லச் சொல்ல அவளுக்கு அடக்க முடியாத அழுகை. சில கணங்கள் மௌனமாக அழுதவள் வேகமாக கண்களைத் புறங்கையால் தொடைத்தாள். எஞ்சிய விசும்பலை மறைக்க முடியவில்லை. அடுத்து தானும் அவன் ஆடும் கண்ணாமூச்சியில் முழுப் பங்கு பெற,

"inferiority complex எல்லம் அவ்வளவு சீக்கரம் போயிடாது .. நீங்களாதான் அவகிட்ட சொன்னா என்ன? நீங்க என்ன சொன்னாலும் அவ கேப்பான்னு உங்களுக்கு தெரியாதா?" "தெரியும் .. நானா சொன்னா நான் அவள ஃபோர்ஸ் பண்ணுன மாதிரி இருக்கும். நன்றி கடனா எதிர் பார்க்கற மாதிரியும் இருக்கும். அதனாலதான் சொல்லலே" ‘ஃபோர்ஸ் பண்ணின மாதிரியா? நன்றிக் கடனா? அடப் பாவி மனுஷா!’ என்று மனம் குதூகலித்தாலும் ‘அவர் எடுத்த முடிவு சரியா? இதன் பின் விளைவுகளை யோசிச்சு இருப்பாரா?’ என்று நினைத்து

"ஆனா, அவளோட கடந்த காலத்தை பத்தியெல்லாம் நீங்க நல்லா யோசிச்சீங்களா" "எல்லாத்தையும் யோசிச்சாச்சு ... இன்னும் சொல்லப்போனா அவளே வேற யாரையாவுது லவ் பண்ணி ஒரு நல்ல வாழ்க்கை அவளுக்கு அமைஞ்சுதுன்ன ரொம்ப சந்தோஷ படுவேன். ஆனா, கடைசிவரைக்கும் என்னால வேற யாரையும் நினச்சுகூட பாக்க முடியாது. இப்போது அவளால் தன் அழுகையை அவனிடமிருந்து மறைக்க முடியவில்லை. ‘இவ்வளவு நாளா சொல்லாம என் கழுத்த அறுத்தயில்ல?’ என்று சில நிமிடங்கள் தன் அழுகையை தொடர்ந்த பிறகு

"அப்படியா? அவ காதல அவளே சொல்லுவா ... உங்கள நேர்ல பாக்கும்போது" "அதுவும் சரிதான். இல்லன்னா ஃபோன்ல கட்டிபுடிச்சு கிஸ் அடிக்க முடியுமா?" "அவ்வளவு ஆசையா உங்களுக்கு அவ மேல?" "அவள பாத்த மொதல் நாளில் இருந்து நான் அவள் ஆழமா காதலிச்சுகிட்டு இருக்கேன்" "எனக்கு உங்கள இப்பவே பார்க்கணும் ... " "வெயிட், வெய்ட் .. முதல்ல நாளைக்கு ஃபோன்லயாவுது அந்த வஸந்த்கிட்ட பேசி நீ வேற ஒருத்தர லவ் பண்ற விஷயத்த சொல்லு. அவன் பாட்டுக்கு உனக்காக தாடி வளர்த்திகிட்டு வெய்ட் பண்ணிட்டு இருக்க போறான்.

ஆரம்பத்துலயே ஒரு வில்லன் வேண்டாம்" என்று callஐ கட் செய்தான். அடுத்த இரண்டு நாட்களை எப்படிக் கடந்தாள் என்று அவளுக்கு தெரியாது. வழியனுப்ப வினிதாவும் பாஸ்கரும் வந்திருந்தனர். முன் தினம் வசந்த் பாஸ்கருடன் தொலைபேசியில் பேசி இருந்தான். ரேவதி வேறு யாரையோ காதலிப்பதாக சொன்னதை தெரிவித்தான். பிறகு உண்மையான அன்புடன் ‘As her well wisher please ensure that she has chosen the right person. I don’t want her to suffer any more in her life’ என்று கூறி இருந்தான். அவளது பொங்கி வழியும் குதூகலத்தைக் கண்டதும் யாரென்று ஊர்ஜிதமானது. ரேவதி பணி புரிய அயல் நாடு செல்ல வேண்டும் என்ற அவளது பல வருடக் கனவு நிஜமாவது மறந்து அருணைப் பார்க்கப் போகிறோம் என்ற ஒரே எண்ணம் அவள் மனத்தை நிறைத்து இருந்தது.

 அவள் பணி புரியப் போகிற அதே அமெரிக்க நிறுவனத்தில் வேறு ப்ராஜக்டுகளுக்காக செல்லும் சக எம்.டெக் மாணவியான சித்ராவும், ஏற்கனவே ஒரு வருடமாக அமெரிக்காவில் இருந்துவிட்டு விடுமுறையில் வந்து திரும்பி செல்லும் அனுபமாவும் அவ்விமானத்தில் ரேவதியுடன் பயணித்தனர். ரேவதிக்கு சித்ரா ஓரளவுக்கு நெருங்கிய தோழி. சென்னை PG விடுதியிலும் இருவரும் ஓரே அறையில் தங்கி இருந்தார்கள்.

தன்னைப் பற்றிய எல்லா விவரங்களையும் சொல்லாமல் அமெரிக்காவில் அருண் என்று ஒரு நெருங்கிய நண்பர் இருப்பதாக மட்டும் சொல்லி இருந்தாள். விமானத்தில் ஏறிய முதல் வேலையாக ரேவதி தன் கடிகாரத்தை அப்போதைய அமெரிக்க நேரத்தை குறிக்கும்படி மாற்றிக் கொண்டாள். சித்ரா அவளை வேடிக்கையாகப் பார்த்து, ஏய், என்னப்பா இப்பவே யூ.எஸ் டைம் செட் பண்ணிட்டே? நடுவுல ஃப்ராங்க்ஃபர்ட்ல ரெண்டு மணி நேரம் ஸ்டாப் ஓவர் இருக்கு அதுக்கப்பறம் தான் நம்ம நியூ யார்க் ஃப்ளைட் ஏறப் போறோம். அப்ப வெச்சா போதும்" என்றதற்கு


 "தெரியும் ... நியூ யார்க்ல காலைல பதினோரு மணிக்கு லாண்ட் ஆக போறோம் .. இப்ப இருந்தே யூ.எஸ் டைமுக்கு தகுந்த மாதிரி தூங்கி எந்திரிச்சா அங்க போய் சேரும்போது ஜெட் லாக் இருக்காது இல்ல?" அதற்கு அனுபமா "அப்படி நினைச்சுட்டு இரு .. அங்க போய் இறங்கினப்பறம் தெரிய்ம் ஜெட் லாக்னா என்னன்னு" என்று கிண்டலடித்தாள் "எதுக்கும் ஓரளவு ஃப்ரெஷ்ஷா போய் இறங்கினா ... எப்பவும் போல ராத்திரி வரைக்கும் முழிச்சுட்டு இருக்கலாம் இல்ல?"

 "ஏன் உன்னோட ஆர்கனைஸர்ல எதாவுது ப்ரோக்ராம் நோட் பண்ணி வெச்சு இருக்கயா?" என்று கிண்டலாக கேட்டவளுக்கு பதிலேதும் சொல்லாமல் புன்னகைத்து அவளுக்கு மறைத்த படி தனது ஆர்கனைஸரில் அவள் போய் இறங்கும் வெள்ளியிலிருந்து அடுத்த மூன்று நாட்களுக்கான பக்கங்களில் "அருண்" என்று மட்டும் தான் எழுதி இருந்ததைப் பார்த்தாள்.



No comments:

Post a Comment