Monday, November 17, 2014

ரேவதி பாகம் 5


அப்பயணத்தின் போது ரேவதியின் மனநிலையறிந்து அருணும் மௌனம் சாதித்தான் .. அவன் அகத்தில் தோன்றிய நெஞ்சைப் பிழியும் துக்கம் முகத்தில் தெரிந்தாலும் இருட்டில் ரேவதி அதை பார்க்கவில்லை .. பார்க்கும் நிலையிலும் அவள் இல்லை ... அருணுக்கு அவன் தாயின் பிரிவு இத்தனை வருடங்களுக்கு பிறகும் அவ்வப்போது வறுத்தியெடுக்கும் .. 'பாவம் இவ மனசு எந்த அளவுக்கு கஷ்டப்படும்'... புற்று நோயை பற்றியும் அதனை குணப்படுத்த ஆகும் மருத்துவச் செலவுகளைப் பற்றியும் அறிந்தவன் .. 'பாவம் சம்பாதிக்கற காசெல்லாம் இதுக்கு தான் செலவு செய்றாளா?' என்று நினைத்தவன் இதற்காகத்தான் இந்த தொழிலுக்கே வந்தாள் என்று நினைக்கவில்லை.

 மருத்துவ மனையை அடைந்து அவள் தாயை அனுமதித்திருந்த வார்டுக்குள் நுழையுமுன்னரே எதிர்பட்ட நர்ஸ், "அம்மாவ ஐ.ஸீ.யுக்கு எடுத்துட்டு போயிருக்காங்க ரேவதி .. முனியம்மா கூட போயிருக்கு .. நான்தான் அந்த ஆளுக்கு ஃபோன் பண்ணினேன்" என்றதும் இருவரும் ஐ.ஸீ.யூவுக்கு விரைந்தனர்.
அங்கு வெளியில் நின்றிருந்த முனியம்மா தழ தழத்த குரலில் "அரை மணிக்கு முன்னால வரைக்கும் நல்லா தூங்கிகினு இருத்துச்சும்மா ... திடீர்னு ஏந்திரிச்சு .. வயித்த புடிச்சிகினு வாந்தியெடுச்சும்மா ...கருப்பா கருப்பா வந்துச்சு கொஞ்சூண்டு ரத்தம் கூட வந்துச்சும்மா ..

ஒடனே அந்த நர்ஸ் டூட்டி டாக்டரை கூட்டியாந்துச்சு அவரு தான் இங்க எடுத்துனு போகச் சொன்னாரு .. இங்க வந்த உள்ள கீற நர்ஸ் மொதல்ல உள்ள உடமாட்டேன்னுச்சு அப்பறம் பெரிய டாக்டரு போன்ல பேசினப்பறம் உள்ள கூட்டிகினு போச்சு" என்றாள். உள்ளிருந்து வந்த ஐ.ஸீ.யு நர்ஸ் வாயிலிருந்த மாஸ்க்கை கழட்டி அருணை ஒரு கண்ணால் நோட்டம் விட்டவாறு ரேவதியை பார்த்து "நீங்க தான் அந்த பேஷண்ட் அகிலாவோட பொண்ணா?" என்று கேட்ட பின் ரேவதி தலையசைத்ததும்

"என்னம்மா .. இவ்வளவு சீரியஸான கண்டிஷன்ல இருக்கற பேஷண்டை உங்க வேலைக் காரியை அட்டெண்டராப் போட்டுட்டு போயிட்டீங்க" என்று கடிந்தாள். குழம்பிய ரேவதி "சாயங்காலம் வார்டுல இருக்கற நர்ஸ் ஸ்டேபிளா இருக்காங்கன்னு தானே சொன்னாங்க? என்னாச்சு?" என்று தன் குழப்பத்திற்கு அந்த நர்ஸிடமே விளக்கம் கேட்டாள் .. அதற்கு மேல் தெரியாத ஐ.ஸீ.யு நர்ஸ் .. "பெரிய டாக்டரே வீட்டுல இருந்து வந்து உங்களுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கார் .. நீங்க மெதுவா வர்றீங்க .." என்று ரேவதியின் குற்ற உணர்ச்சியை பன்மடங்காக்கினாள் ..

 அந்த நர்ஸின் மேல் எரிச்சலடைந்த அருண் "சரி வா டாக்டரை போய் பாக்கலாம் .. " என்று திரும்பவும் அவன் கையை அனிச்சையாகப் பிடித்து நிறுத்தி நர்ஸிடம் "அம்மாவுக்கு எப்படி இருக்கு ... பாக்கலாமா?" என்றதற்கு நர்ஸ் "ஐ.ஸீ.யுக்குள்ளெல்லாம் போக முடியாது ... செடேட்டிவ் குடுத்திருக்கு .. அன்கான்ஷஸ்ஸா இருக்காங்க" என்றாள் Gastrointestinal Oncology (வயிறு மற்றும் குடல் புற்று நோய்) மருத்துவப் பகுதியில் இருந்த பல சிறு அறைகளின் மூலையில் இருந்த பெரிய அறைக்குள் இருவரும் சென்றனர்..... நோயாளிகளின் நலத்தில் உண்மைக் கவனம் செலுத்தும் சில டாக்டர்களே ஒரு நல்ல மருத்துவமனை உருவாகுவதற்கு முக்கிய காரணம்.

அதற்கு ஒரு எடுத்துக்காட்டாக அந்த இரவிலும் சாவின் வாயிலுக்குள் ஒரு கால் எடுத்துவைத்துக் காத்துக் கொண்டிருக்கும் அகிலாவுக்காக அம்மருத்துவர் அங்கு அமர்ந்து அகிலாவின் கேஸ் ஃபைலை ஆராய்ந்து கொண்டிருந்தார் .. அருணும் ரேவதியும் அவரது அறைக்குள் நுழைந்ததும் .. அருணை ஒரு முறை பார்த்து துணுக்குற்று .. பிறகு ரேவதியிடம் .."வாம்மா .. " என்று ஒற்றை வார்த்தைக்குப் பிறகு மௌனம் சாதித்து இருவரையும் எதிரிலிருந்த நாற்காலிகளில் அமரும்படி கையசைத்தார் ..

 "அம்மாவுக்கு ..." என்று ஆரம்பித்த ரேவதியை கூர்ந்து நோக்கி "சொல்றேன் ... " என்றவாறு தொடர்ந்தார் "இந்த தடவ அட்மிட் ஆகச் சொல்லும் போது அந்த செகண்ட் எரப்ஷன் (இரண்டாவுது கட்டி) மட்டும் தான் ப்ராப்லம்ன்னு நெனைச்சேன் ..ஆனா உன்னோட அம்மாவோட நிலைம அதிவிட மோசமா இருக்கு .. வயித்துல மொதல்ல வந்த கேன்ஸரை ட்ரீட் பண்ணும்போதா இல்ல ரெண்டாவதா குடல்ல வந்ததை ட்ரீட் பண்ணும்போதான்னு தெரியலை .. சில இடங்கள்ல உன்னோட அம்மவோட குடலில சின்ன சின்ன ரப்சர் (காயங்கள்) இருக்கு ..

நார்மல் ஸ்கேன்ல அது தெரியாது .. மத்த பேஷன்ட்ஸ் மாதிரி உங்க அம்மாவுக்கு பேரியம் மீல் எக்ஸ்-ரே which is the least expensive option, எடுக்க முடியாது .. .. அதனால நான் அந்த டெஸ்டை பண்ண சொல்லல .. எப்படியும் ஆபரேஷனுக்கு முன்னால பண்ண வேண்டியிருக்கும்னு என்டோஸ்கோபியும் வாந்தி நின்னதுக்கு அப்பறம் பண்ணலாம்ன்னு இருந்தேன் .. " என்று இழுத்தார். "இப்ப என்னாச்சு டாக்டர் .. " என்று பதட்டத்துடன் கேட்டவளிடம், "அந்த சின்ன சின்ன ரப்சர்னால .. குடலச் சுத்தி இருக்கற மத்த உறுப்புக்கள், முக்கியமா அவங்க லிவரை பாதிச்சு இருக்கு ..கிட்னியையும் பாதிச்சு இருக்கு .. ஏற்கனவே கீமொ, ரேடியேஷன்னு கொடுத்ததுல இந்த உறுப்புங்க எல்லாம் கொஞ்சம் வீர்யம் கொறைஞ்ச நிலைல இருக்கும்" என்றபடி சற்று நிறுத்தி பெருமூச்செறிந்து .

"மனச தேத்திக்கம்மா .. looks like she is heading towards a muliple organ failure .." "என்ன சொல்றீங்க டாக்டர், நீங்கதான சொன்னீங்க இந்த செகண்ட் எரப்ஷனை ஆபரேட் பண்ணி எடுத்துடலாம். அப்பறம் ஒரு ஆறு மாசமாவுது தாக்கு பிடிப்பாங்கன்னு .." என்று அவள் அழுகையுடன் கேவிய போது அவளைத் தடுத்து .. "சொன்னேம்மா .. ஆன இந்த ரப்சர்ஸ் இந்த அளவுக்கு சீரியஸா இருக்கும்னு நான் எதிர்பார்கல .. " அவள் அழுகையை தொடர்ந்தபடி "சாங்காலம் கூட எங்கிட்ட நல்லா பேசிட்டு இருந்தாங்களே டாக்டர் .. " என்றதற்கு

 "கிட்னியும் லிவரும் பாதிக்க படும் போது சில மணி நேரங்களிலேயே ஒருத்தர் உயிர் பிரியக்கூடும்மா .. Its a miracle she has remained conscious so long .. which has mislead us further" என்றார். "Did'nt you suspect such ruptures considering the multiple treatments she has already undergone (நீங்கள் ஏன் இதைப் பற்றி முன் கூட்டியே சந்தேககிக்கவில்லை)?" என்று அருண் அதிகாரத்துடன் கேட்டதற்கு சற்றும் முகம் சுருங்காமல் அவன் அடுத்ததாக அப்படி சந்தேகப் பட்டிருந்தால் முதலில் அதை ட்ரீட் செய்ய ஆரம்பித்து இருக்கலாமே என்று கேட்பான் என்று நன்கு அறிந்த டாக்டர் ..

 "I did suspect .. and have been medicating her for that also .. you see young man, her body does not respond to medicines fast enough .. so only option is surgery .. and anyway we were going to operate her for the cancer .." என்று ஒரு நீளமான விளக்கத்தைக் கொடுத்தார் "so what is the current prognosis (இப்போதிய நிலையில் இதன் விளைவுகள் என்ன)" என்று வினவியவனைப் பார்த்து ரேவதியின் கண்களைத் தவிர்த்து ..

"I think we should let her rest in peace .. we will keep the life support on .. even with that she is sinking" (நாம் அவரை அமைதியாக உயிரைவிட அனுமதிக்க வேண்டும்.. இப்போது ஐ.சி.யுவில் மேற்பார்வையும் ட்ரிப்ஸ், ஆக்சிஜன் போன்றவைகளும் தொடரும்.. இருப்பினும் அவர் உயிர் பிரிந்து கொண்டு இருக்கிறது) என்றார் கட்டுப் படுத்த முடியாமல் குலுங்கி அழுத ரேவதியை தோளோடு அணைத்து எழுப்பி டாக்டரிடம் "Please allow us a moment .. If you don’t mind I would like to speak to you further ..(சிறுது நேரத்தில் வருகிறேன் டாக்டர் ..

உங்களிடம் கொஞ்சம் பேசவேண்டும்)" என்றதற்கு அவர் சரியென்று தலையசைக்க அவருக்கு கண்களால் நன்றி கூறியவாறு அவளை வெளியில் அழைத்துச் சென்றான் .. வெளியில் வந்ததும் அவன் நெஞ்சில் முகம் புதைத்து ஓவென்று குலுங்கி அழுதவளை சமாதானப் படுத்த வழியின்றி அவளை இறுக்கி அணைத்தவாறு சிறிது நேரம் சுவற்றில் சாய்ந்து நின்றிருந்தபோதுதான் தன் விழிகளிலிருந்தும் வழிவதை கவனித்தான் ..

 சில நிமிடங்களுக்கு பிறகு அவள் முகத்தை கைகளால் ஏந்தி, "ஏய் இங்க பாரு .. இப்ப என்ன செய்யறதுன்னு யோசிக்கலாம் " என்றவனிடம் .. "அதான் ஒண்ணும் பண்ண முடியாதுன்னுட்டாங்களே" என்றவாறு நிறுத்தாமல் தேம்பித் தேம்பி அழுகையை தொடர்ந்தாள் .. அந்த நோய்க்கு சென்னையில் அதைவிட பெரிய மருத்துவமனை இல்லையென்று உணர்ந்து .. வேறு டாக்டரை அணுகலாம் என்ற எண்ணத்தையும் கைவிட்டான் ..

பிறகு ஏதோ தோன்றியவனாக ரேவதியை அருகிலிருந்த முனியம்மாவின் அரவணைப்பில் விட்டு திரும்பவும் டாக்டரின் கேபினுக்குள் நுழைந்தான் "இன்னும் எவ்வளவு நாள் அவங்க இப்ப இருக்கற நிலமையில இருப்பாங்க டாக்டர்" என்றவனிடம் .. "சொல்ல முடியாது நாலஞ்சு நாள் தாங்கலாம் .. சொல்லறதுக்கு இல்ல அதுக்கு முன்னாலயும் சிங்க் ஆகலாம் ... ஆனா ஒரு வாரத்தை தாண்ட மாட்டாங்க .." என்றவ்ரிடம் "டாக்டர் நான் ஒண்ணு கேட்டா தப்பா எடுத்துக் மாட்டீங்களே?" என்று பூடகமாக தொடங்கி

"கொஞ்ச நேரமாவுது அவங்கள சுய நிலைக்கு கொண்டு வர முடியுமா?" என்றான். "நானும் நெனைச்சேன் .. we can try .. its an expensive proposition .. by temporarily stabilizing her liver and kidney with strong steroids .. and completely ignoring the ruptures or cancer allowing both her ailment and the steroids to hasten her demise" "In that case how soon will her demise be?" "She may not survive beyond 72 hours" இதை எப்படி விவரிப்பது? "பாதிக்கப் பட்ட ஈரலையும் சிறுநீரகத்தையும் மட்டும் மிக வலிமை வாய்ந்த மிக விலையுயர்ந்த ஸ்டிராயிட் மருந்துகளால் சிறிது குணப்படுத்தினால் அவருக்கு நினைவு திரும்பும் ஆனால் ஏற்கனவே இருக்கும் புற்று நோய் மற்றும் குடல் புண்களுடன் கூட அந்த மருந்துகளும் சேந்து அவர் முடிவை துரிதப்படுத்தும்" என்றார் ..

எவ்வளவு துரிதமாக என்று அருண் கேட்டதற்கு டாக்டர் அம்மருந்துகளைக் கொடுத்தால் 72 மணி நேரத்தை தாண்டாது என்றார். திரும்பவும் டாக்டரிடம் வெளியே சென்று சில நிமிடங்கள் வருவதாகக் கூறி ரேவதியைக் அவள் கூப்பிடு தூரத்தைக் கடந்து தனது மொபைல் ஃபோனில் யாரிடமோ சில நிமிடங்கள் பேசிவிட்டு டாக்டரின் கேபினுக்கு திரும்பினான். "I think both the mother and daughter deserve that .. can you please make the necessary arrangements for the medication ... never mind the expenses?" உயிர் பிரியுமுன் சுய நினைவுடன் இருக்கும் தாயுடன் ரேவதி சிறிது நேரமாவது கழிக்க வேண்டும், அதற்காகும் செலவை பொருட்படுத்தாமல் அம்மருந்துகளை டாக்டரிடம் கொடுக்கச் சொன்னான்.

 "சரி, ஸ்டார்ட் பண்ணச் சொல்றேன், அந்த மெடிஸின் வேலை செய்ய ஆரம்பிச்சு அவங்க நினைவு திரும்ப இன்னும் ஒரு 24 மணி நேரமாவுது ஆகும் .. நினைவு திரும்பி எவ்வளவு நேரம் நினைவோட இருப்பாங்கன்னு சொல்ல முடியாது. பை த வே, நீங்க யாரு?" என்றவரிடம் "ரேவதியோட ஃப்ரெண்ட், ஒரு வெல் விஷர்" என்றதும், "இவ்வளவு நாள் உங்களை நான் பாக்கலையே"
"நான் யூ.எஸ்ல இருக்கேன் .. ரெண்டு நாளைக்கு முன்னாலதான் இண்டியா வந்தேன்" என்று தனக்கும் ரேவதிக்கும் பல வருடப் பழக்கம் இருப்பது போல் விவரித்தான்.

 "ஓ, இந்த நேரத்தில நீங்க வந்தது ரொம்ப நல்லது .. பாவம் அந்த பொண்ணுக்கு யாரும் இல்லைன்னு நினைக்கறேன்.." என்றவாறு விடை கொடுத்தார். வெளியில் வந்து விசும்பிக் கொண்டிருந்த ரேவதியிடம் .. இன்னும் 24 மணி நேரத்துல மறுபடியும் நினைவு திரும்பும் என்றான் .. "எப்படி?" என்றவளிடம் "சில மருந்துகளுக்கு ஏற்பாடு பண்ணியிருக்கேன்" என்று மேற்கொண்டு ஏதும் விவரிக்காமல் "ஐ.ஸீ.யு கிட்ட போய் வெய்ட் பணணலாம் வா.." என்று அவளை அழைத்துச் சென்றான்.

 ஐ.ஸீ.யு அருகே சென்றபோது ஒருவர் அவர்களிடம் வந்து "என்னம்மா ரேவதி .. என்ன சொல்றார் டாக்டர் .." என்றவரைப் பாத்து ரேவதி, "வாங்க பாய், டாக்டர் மொதல்ல கைவிரிச்சுட்டாரு .. அப்பறம் ஏதோ மருந்து கொடுத்து நினைவு திரும்ப வைக்கறதா சொல்லியிருக்காரு .. ஆனா அம்மா என்னை விட்டு போயிடுவாங்களாம் .. " என்றாள் பீரிட்ட அழுகையுடன் .. அவளை சமாதானப் படுத்தி அவளது அழுகை சற்று அடங்கியபின் முனியம்மாவையும் அவளருகே அமர்த்தி அருண் அவரை வெளியில் வரும்படி சைகை செய்தான்.

 வெளியே வந்த அவரிடம், "நீங்க யாரு?" "என் பேரு அன்வர் சார். நான் அவங்க பக்கத்து வீட்டுல இருக்கேன் சார் .. டாக்ஸி ஓட்டறேன் .. நீங்க .." என்று இழுத்தவரிடம் நேரடியாக பதிலளிக்காமல் "சாயங்காலத்துல இருந்துதான் ரேவதியை எனக்கு தெரியும் .. " என்றான் ..அவர் "கஸ்டமரா சார்.. " என்றதற்கு அருண் தலையசைக்க அவனை ஆச்சரியத்துடன் பார்த்து "ஃபுல் நைட் இல்லாத நாள்ல நான்தான் சார் வெயிட் பண்ணி அதை வீட்டுக்கு கூட்டிட்டு போவேன். இப்ப வீட்டுக்கு போற வழில முருகேசு சொன்னான் இப்படி சீரியஸ்னு ..அதான் வந்தேன்.

நீங்க ஏதோ நல்லவரு மாதிரி இருக்கு இல்ல்ன்னா அந்த பொண்ணு கூட்டிட்டு போன பார்ட்டிகிட்ட இருந்து பாதில வரதுக்கு என்ன கஷ்டப் பட்டுருக்குமோ." அவன் மௌனம் சாதித்திருக்க அவராகவே, "பாவம் சார் அந்த பொண்ணு .. ரொம்ப நல்லா படிக்கற பொண்ணு, அம்மாவுக்காக சைடுல தொழில் பண்ண ஆரம்பிச்சுது ..." என்றதும் யாரோ அவன் தலையில் சம்மட்டியால் தாக்கியதுபோல் உணர்ந்தான் ...

"என்னது? படிச்சுட்டு இருக்காளா? என்ன படிக்கறா?" "பீ.ஈ கம்ப்யூடர் சயன்ஸ் சார் .. மூணு வருஷம் முடிச்சு இப்ப நாலாவுது வருஷம் தொடங்கியிருக்கு ... இந்த வியாதி ஒரு வருஷம் கழிச்சு வந்திருந்துச்சுன்னா நல்ல வேலைல சேந்துட்டு அம்மாவ நல்லா பாத்திட்டு இருப்பேன் எல்லாம் தன் தலவிதின்னு சொல்லி எங்கிட்ட சொல்லி அழுதிச்சு சார் ... அந்த முருகேசு சொல்லித்தான் தொழில்ல எறங்கிருக்கு சார் .. மொதல்ல தெரிஞ்சு இருந்துனா நான் இதல்லாம் வேணாம்னு இருப்பேன் .. எல்லாம் நம்ம கைல என்ன சார் இருக்கு .. இப்ப பாருங்க வாழ்கையையும் பாழடிச்சுட்டு அம்மாவும் சாவப் போறா .." என்று அன்வர் சொல்லி முடிக்க முடிக்க அவன் அவ்விடத்தைவிட்டு வேகமாக நகர்ந்து தனிமையை நாடி காருக்குள் சென்று ஸ்டீரிங்க் வீலுக்குள் முகம் புதைத்துக் குலுங்கி அழுதான் ...

 மறுநாள் இரவுவரை அருண் ஐ.ஸீ.யுவுக்கு எதிரே இருந்த நாற்காலிகளில் ரேவதியுடன் கழித்தான் .. சாப்பாடு மற்றும் சிற்றுண்டி நேரத்தில் அவளை வலுக்கட்டாயமாக சென்று அருகே இருக்கும் உணவு விடுதிக்கு அழைத்துச் சென்று தன்னுடன் அவளை சாப்பிட வைத்தான். அருணின் கோரிக்கைக்கு இணங்கி அகிலாவை ஐ.ஸீ.யு பிரிவுக்குள் இருக்கும் ஒரு தனியறைக்கு மாற்றியிருந்தார்கள் ..

அதற்கான பணத்தை செலுத்த கைப்பையை நாடிய ரேவதியை தடுத்து அருண் அப்பணத்தை கட்டினான் ... பிரமை பிடித்தவள் போல் பேசா மடந்தையாக அவ்வப்போது அருணின் தோளில் சாய்ந்தவாறு ரேவதி அமர்ந்திருந்தாள். முந்தைய இரவு அகிலாவின் உடல் நிலையைப் பற்றியும் அவளுக்கு கொடுக்கப்போகும் ஸ்டிராய்ட் மருந்தைப் பற்றியும் அவன் ஆலோசனை கேட்ட ஒரு பிரபல கைனகாலஜிஸ்ட்டான அவனது அத்தை அவனை ஃபோனில் அழைத்து "டேய் அருண், ராத்திரியே நான் உங்கிட்ட பேசணும்னு சொன்னேன் இல்ல, எப்ப வர்றே வீட்டுக்கு?" என்று கேட்டதற்கு "இன்னும் ரெண்டு நாள் கழிச்சு வர்றேன் அத்தே...பை" என்று கட் செய்தான்.

 முன்னிரவில் ரேவதியை அழைத்துச் சென்று உணவருந்திய பின் "வா .. உங்கிட்ட கொஞ்சம் பேசணும் .. " என்றவாறு அவளை அழைத்துக் கொண்டு நிலவொளியில் நடந்து அருகிலிருந்த ஒரு சிறு பூங்காவை அடைந்து அங்கிருந்த இருக்கையில் அவளை அமர்த்தி அருகில் அமர்ந்தான் .. 'என்ன பேசப் போற்ர்ரு.. என்னப் பத்திக் கேக்கப் போறாரா .. இல்ல அவருக்கு வேற வேல இருக்கு போகணும்னு சொல்லப் போறாரா .. ' என்று எண்ணியவாறு அவன் முகத்தை நோக்கிய ரேவதியை அவன் சொற்கள் நெகிழ வைத்தன ...

 "இங்க பாரு, எப்படியும் இன்னும் கொஞ்ச் நேரத்துல அவங்களுக்கு நினைவு வந்துடும். அதுக்கப்பறம் எவ்வளவு நேரம் நினைவோட இருப்பாங்கன்னு சொல்ல முடியாது. ஒன்ஸ், நினைவு போச்சுன்னா திரும்ப நினைவு வருமாங்கறது சந்தேகம் .. சோ, ஆயுசுல கடைசியா உங்கிட்ட பேசப் போறாங்க .. அதை அவங்களுக்கு தெரியப் படுத்தக் கூடாது .. சிரிச்ச் முகத்தோட பேசணும் .. உன்னப் பாத்து சந்தோஷப்பட்டு அவங்க ரொம்ப நேரம் கூட நினைவு தவறாம இருக்கலாம் .. டாக்டர் சொன்ன மாதிரி மிராக்குலஸ்ஸா ரிகவர்கூட ஆகலாம். அதனால எக்காரணத்தைக் கொண்டும் நீ அவுங்க முன்னால அழக் கூடாது .. " முருகேசனிடம் ஃபோனில் பேசிய அக்கணத்திற்கு முன்னர்

அவள் மனம் முழுதும் நிறைந்து இருந்தவன் அவளது தாயின் நிலைமை அறிந்ததும் அவனைப் பற்றி துளியும் நினைக்காதிருந்த மனதில் மறுபடி ஒரு கணிசமான இடத்தை நிரப்பத் தொடங்கியிருந்தான். தாயின் நிலைமையை பற்றிய துக்கம் மட்டும் இல்லாமலிருந்தால் அவள் இன்னேரம் அவன் மடிமேல் ஏறி அமர்ந்து இருப்பாள். "ம்ம்ம் ..சரி" என்று தழ தழத்த தொண்டையில் ஒப்புதல் அளித்தவளிடம் தொடர்ந்து, "இப்ப நான் உங்கிட்ட ஒண்ணு கேக்கணும் .. வாழ்க்கையில உன்னோட லட்சியம் என்ன .. இல்ல, உங்க அம்மாவுக்கு ஒடம்பு சரியில்லாம போறதுக்கு முன்னால் .. என்ன அச்சீவ் பண்ணனும்னு நீ இருந்தெ? என்ன பண்ணப் போறதா உங்க அம்மாகிட்ட சொல்லியிருந்தே?" என்றவனிடம் கண்களை விரித்து அக்கண்களாலே மேலும் வரும் கண்ணீரை விழுங்கியவாறு "பீ.ஈ முடிச்சதும் ஏதாவது ஒரு நல்ல கம்பெனில சேந்து அப்ராட்ல அம்மா கூட செட்டிலாகலாம்னு இருந்தேன்"

என்ற பிறகு தொடர்ந்து "இப்ப அந்த நம்பிக்கையெல்லாம் எனக்கு இல்ல" என்றாள். "ஏன் இல்ல?" "ஆறாவுது செமஸ்டர்ல மூணு அரியர்ஸ் ...அரியர்ஸ் இருக்கறவங்களை கேம்பஸ் ரெக்ரூட்மென்ட் வர்ற கம்பெனி எல்லாம் எடுக்க மாட்டாங்க .. எங்க காலேஜ்லயே சீ.வீ ஃபார்வர்ட் பண்ண மாட்டாங்க ..." "அதனால என்ன, வெளியில இருந்து ட்ரை பண்ணலாம்" "காம்பஸ்ல எடுத்தாதான் நல்ல பொஸிஷன் சீக்கரம் ஆன்-சைட் அசைன்மென்ட் எல்லாம் கெடைக்கும் .. இல்லாட்டி மொதல்ல கால் செண்டர்ல இல்ல எதாவுது சப்போர்ட் சென்டர்ல தான் போடுவாங்க .."

 "சரி அத அப்பறம் பாக்கலாம் .. நீ இப்ப நினைவு வந்ததும் உங்க அம்மாகிட்ட உன்னோட லட்சியப் படியே எல்லாம் நடக்கும்னு நம்பிக்கை கொடுக்கணும் ..போகும்போது அவங்க மகளுக்கு ஒரு நல்ல வாழ்வு அமையப்போகுதுன்னு நெனைச்சுட்டு போகணும் .. அப்ப தான் அவங்களுக்கு ஓரளவாவுது மன நிம்மதி கிடைக்கும் .. it will help her pass away in peace .." என்று அவன் சொல்ல சொல்ல ரேவதி உதட்டைக் பிதுக்கி அவன் மடிமேல் முகம் புதைத்துக் குலுங்கி அழுதாள் ... அவளை எழுப்பி நெஞ்சோடு சேர்த்தணைத்தவாறு "என்னம்மா இது, இப்பத் தான சொன்னேன் ..

சிரிச்சுட்டு இருக்கணும்னு .. இங்க ஒக்காந்து அழுதுட்டு ஐ.ஸீ.யுல கூப்பிட்ட ஒடனே சிரிப்ப வரவெச்சுட்டு போனேன்னா ஒரு செகண்டுல உங்க அம்மா கண்டுபிடிச்சுடுவாங்க .. அவங்களும் சேந்து அழுவாங்க .. கம் ஆன் ... கன்டரோல் யுவர்ஸேல்ஃப் .." அவன் மார்பில் புதைந்து சிறிது நேரம் விசும்பிய பின் ரேவதி முகத்தை நிமித்தி நன்றியுடன் அவனைப் பார்த்து கண்களை அழுத்தித் துடைத்து "சரி .. " என்ற பின் மனதுக்குள் அருண் சொன்னது போல் அதிர்ஷ்டவசமாகவேனும் தன் தாய் குணமாக வேண்டும் என்று கடவுளை வேண்டினாள். இருவரும் திரும்பவும் ஐ.ஸீ.யுவுக்கு வரும்போது அகிலாவுக்கு நினைவு திரும்பத் தொடங்கியிருந்தது .. பெரிய டாக்டரிடம் தகவல் தெரிவிக்க அவர் தான் வருவதாகவும் அதற்கு முன்னரே ரேவதியையும் அருணையும் அகிலாவைப் பார்க்க ஏற்பாடுகள் செய்யச் சொன்னார் ..

நர்ஸ் வந்து அழைத்ததும் ரேவதியிடம் எழுந்து உள்ளே செல்லச் சொன்ன அருணின் கையைப் பற்றி "நீங்களும் வறீங்களா ?" என்றவளை ஆறுதலுடன் பார்த்து ஒரு கணம் யோசித்து "சரி, நான் யாருன்னு கேட்டா, உன்னோட காலேஜ்ல படிச்ச சீனியர் இப்ப அமெரிக்காவுல இருக்கேன் .. உனக்கு அங்க வேலைக்கு ஏற்பாடு பண்ணப் போறேன்னு சொல்லணும் என்ன?" என்றவாறு எழுந்து அவளுடன் ஐ.ஸீ.யுவுக்குள் நுழைந்தான்.
மகளைப் பார்த்ததும் அகிலாவின் கண்கள் பனித்தன.

அவள் உடல மரணத்தின் வசற்படிகளில் வேகமாக ஏறத் தொடங்கியிருந்தாலும் கொடுக்கப் பட்ட ஸ்டிராய்ட்ஸ் மருந்துகளினால் ஈரலும் சிறுநீரகமும் சிறிது விழித்துக் கொண்டு செயல் பட, அவை சுத்திகரித்த ரத்தத்துடன் ஸ்டிராய்ட்ஸுடன் செலுத்தப் பட்ட மூளைக்கு சக்தி கொடுக்கும் மருந்தும் கலந்து மூளைக்குள் பரவ அகிலாவின் முகத்தில் ஒரு அதீத தெளிவு இருந்தது .. இன்னும் ஒரு நாளுக்குள் தன்னடி சேரவிருக்கும் அவளுக்கு அந்த இறைவன் அளித்ததோ?

 "அம்மா, இப்ப எப்படிம்மா இருக்கு? ராத்திரி உனக்கு வாந்தி வந்ததும் பெரிய டாக்டர்தான் இந்த வார்டுல இருந்தா சீக்கரம் குணமாவேன்னு இங்க மாத்திட்டாரு" என்று ஒரு பொய்யுடன் தன் உரையாடலைத் தொடங்கினாள் தெளிவுடன் இருந்த அகிலாவோ, "ஃபுல் நைட்டுக்கு தான போனே? எப்படி திரும்பி வரமுடிஞ்சுது?" என்று கிசு கிசுத்ததற்கு "இல்லம்மா அந்த பார்டி வரலைன்னு வேற ஒரு பார்டிகிட்ட ஒரு மணிவரைக்கும் போனேன்" என்று மெல்லில குரலில் பொய் சொன்னவாறு அருணைக் காண்பித்து

"இவர் பேர் அருண். என்னோட காலேஜ்ல சீனியர். இப்ப அமெரிக்காவுல ஒரு பெரிய கம்ப்யூடர் கம்பெனில பெரிய வேலைல இருக்கார். காலைல பாத்தேன். அவருகிட்ட பேசிட்டு இருந்தப்போ பீ.ஈ முடிச்சதும் எனக்கு அவர் கம்பெனிலியே வேலைக்கு ஏற்பாடு பண்ணறதா சொல்லியிருக்கார்" என்று அவன் சற்றுமுன் கூறியதை அவள் முழுமனதாக உண்மை என நம்பி விளம்பினாள்.



No comments:

Post a Comment