Saturday, November 22, 2014

ரேவதி பாகம் 14


"சும்மா பேச்சுக்கு சொல்லாதீங்க அருண் .. யோசிச்சுப் பாருங்க" "ம்ம்ம் .. ஒரு உம்மா குடு நல்ல தெம்பா யோசிச்சுப் பாத்து சொல்றேன்" "ஓண்ணும் வேண்டாம் .. இருக்கற தெம்புலயே யோசியிங்க .. " "ம்ம்ம் .. க்ர்ர்ர் .. பிசாசு! சுதந்திரம் அடிமைத்தனம் இது ரெண்டுக்கும் நடுவுல இங்க்லீஷ்ல இன்டெர்-டிபெண்டென்ட் (inter-dependant) அப்படீன்னு ஒண்ணு சொல்லுவாங்க அப்படீன்னா என்ன தெரியுமா .. நாம் கல்யாணம் பண்ணிக்கறதுங்கறது நம்ம வாழ்க்கைல ஒரு பகுதியை ஷேர் பண்ணிக்கறதுக்காக .. நம்ம சுதந்திரத்தை பறிகொடுக்கறதுக்காக இல்லை .. சம்பந்தம் இல்லாத விஷயங்கள்ல நம்ம ரெண்டு பேரும் தனி தனியா முடிவெடுப்போம் ..

நம்ம ரெண்டு பேருக்கும் சம்மந்தப் பட்ட விஷயங்களை சேந்துதான் முடிவெடுப்போம் .. "
"இதல்லாம் பேச நல்லா இருக்கும் .. ப்ராக்டிகலா யோசிச்சு பாருங்களேன் .. " "யோசிக்க இதுல இன்னும் என்னடா இருக்கு?" "ம்ம்ம் ... உங்க நிலமைல என்னை கல்யாணம் பண்ணிக்கறதே பெருசு .. அதுக்கும் மேல எனக்கு சுதந்திரம் கொடுக்கறது .. யாரும் ஒத்துக்க மாட்டாங்க" "நீ இந்த மாதிரி நடந்துக்க கூடாது அந்த மாதிர் யோசிக்க கூடாதுன்னு சொல்ற ஆதிவாசி நான் இல்லைடா .. நான் அப்படி சொல்லணும்னு மத்தவங்க எதிர்பாத்தாங்கன்னா அதைப் பத்தி எனக்கு ஒரு கவலையும் இல்லை .. சரியா?" முகத்தில் சந்தோஷ ரேகை படிய ஆனந்தக் கண்ணீருடன் ரேவதி "ம்ம்ம் .. நிஜமா சொல்றீங்களா?" "You want me to give it in writing? " அவள் கேட்டதில் அவன் வருத்தமடைந்தான் என்பதை உணர்ந்து "ப்ளீஸ் .. சாரி ... நான் அந்த அர்த்ததுல கேக்கலெ ..

நான் இவ்வளவு லக்கின்னு என்னாலயே நம்ப முடியல .. ஐ லவ் யூ" என்று அவனை இறுக அணைத்து அவன் மார்பில் முகம் புதைத்தாள். கதையை தொடர இங்கு க்ளிக் செய்யவும் அருண் ரேவதியின் பெட்டிகளை அறைக்குள் வைத்தவனுக்கு டிப்ஸ் கொடுத்து அவனை வழியனுப்பி கதவைச் சாத்தியபின் அறைக்குள் வந்தான். கண் மூடி அமர்ந்திருந்த ரேவதியின் அருகே வந்தவன் ஒரு கையால் அவள் முகவாயைப் பிடித்து தூக்க கண் விழித்து மேல் நோக்கி அவனை பார்த்தவளிடம் "ம்ம்ம்? " என்க .. ஒன்றுமில்லை என்பதை தலையசைப்பில் சொன்னாள். "ஃப்ளைட்டுல நல்லா தூங்கிட்டு வந்தியா இல்ல இருக்கற இன்ஃப்ளைட் டி.வீ சானல் ஒவ்வொண்ணா பாத்துட்டு வந்தியா?" "அங்க கிளம்பினதுல இருந்து யூ.எஸ் டைம்படி தூங்கி எந்திருச்சுட்டு இருந்தேன் .. ஒவ்வொரு சமயம் நான் தூங்கிட்டு இருக்கும் போது சாப்பாடு கொண்டு வந்தாங்க .. அதுக்காக எழுந்திரிக்க வேண்டியதாயிடுச்சு .. "

 "ஏன் .. " "நீங்க இருக்கப் போறதே ரெண்டு நாள் .. அதுல நீங்க முழிச்சுட்டு இருக்கறப்ப நான் ஜெட் லாக்ன்னு தூங்க வேண்டாம்னுதான்" எப்படியும் மாலை எட்டு மணிக்கு மேல் தூங்காமல் இருக்க முடியாது என்று அறிந்திருந்தாலும் அவளது உற்சாகத்தைக் கெடுக்க விரும்பாமல் "எப்பவும் ஈஸ்ட்ல இருந்து வெஸ்ட் ட்ராவல் பண்ணும் போது ஜெட் லாக் கொஞ்சம் கம்மியாத்தான் இருக்கும் ... " என்றவாறு அவள் வலதுபுறம் அமர்ந்தான். தன் இடதுகையை அவள் தோளில் போட்டு வலதுகையால் அவள் முகத்தை ஏந்தினான். அவன் பார்வையை தாங்க முடியாமல் குனிந்து அவன் தோளில் தலை சாய்க்கப் போனவளை தடுத்து "ஏன் எங்கிட்ட இவ்வளவு நாளா சொல்லலே" "என்ன சொல்லலே?" "மேடம் என்னை லவ் பண்ணறதை. எப்ப என்னை லவ் பண்ண ஆரமிச்சீங்க?" "ம்ம்ம் ... உங்களை நேரில பாக்கறதுக்கு முன்னாடில இருந்து ..." "ஏய், என்ன சொல்ற நீ ... வினிதா நீ என்னை காதலனா கற்பனைதான் பண்ணிட்டு இருந்தேன்னா"

 "அதெல்லாம் உங்ககிட்ட சொன்னாங்களா?" என்றவளின் முகம் தன் அந்தரங்கம் பகிரங்கப் படுத்தப் பட்டதினால் ஏற்பட்ட வலியை காட்டியது. அதை உணர்ந்த அருண் "நீ என்னெல்லாம் வினி கிட்ட சொன்னேன்னு எனக்கு தெரியாது .. க்ளினிக்குல உன்னோட ட்ரீட்மென்டுக்கு அப்பறம் உன்னை என் ஃப்ளாட்டுக்கு கூட்டிட்டு போறதைப் பத்தி பேசும் போது நான் உன்னை காதலிக்கறதா சொன்னேன் .. " சொல்ல சொல்ல அவள் முகம் பிரகாசிப்பதை கவனித்தபடி "I think she didn't expect it .. நான் உன்மேல பரிதாபப் பட்டு ஹெல்ப் பண்ணறதா நினைச்சுட்டு இருந்திருக்கா .. அப்பத்தான் இதை சொன்னா .." "ம்ம்ம் .. சரியான ஆளு ... அப்பவே என்னை லவ் பண்ண ஆரமிச்சுட்டு நீங்க ஏன் எங்கிட்ட சொல்லலே?" "அது ஒரு பெரிய கதை .. " என்று தொடங்கி தண்டபாணிக்கு தான் கொடுத்த வாக்கைப் பற்றி கூறினான், "அதனாலதான் நான் கேக்காமலே எங்கிட்ட நீங்க எனக்கு ஒரு ஃப்ரெண்டுன்னு அடிக்கடி சொன்னீங்களா?" "ம்ம்ம் ... " "அதுக்கப்பறம் நான் உங்களை ஒரு ஃப்ரெண்டா மட்டும் பாத்துட்டு வேற யாரயாவுது லவ் பண்ணி இருந்தா என்ன பண்ணிருப்பீங்க?"

 "நான் உன்னை லவ் பண்ணாம வேற யாரையாவுது லவ் பண்ணி இருந்தா நீ என்ன பண்ணிருப்பயோ அதைத்தான் நானும் பண்ணி இருப்பேன்" அவன் தோளில் முழுவதுமாக சாய்ந்து சிறிது மௌனம் காத்தவள் தலையை நிமிர்த்தாமல் "அருண் .. நான் உங்ககிட்ட ஒண்ணு சொல்லணும் .. " "என்ன ..." "நான் கல்யாணம் பண்ணிக்க போறதில்ல ... " ஒரு நிமிடம் அவள் முகத்தை நிமிர்த்தி அவளை பார்த்தவன் "ஓ, ரெண்டு பேரும் எப்பவும் லவர்ஸாவே இருக்கலாம்னு சொல்றயா? ... எனக்கொண்ணும் அதில ஆட்சேபணை இல்லயே .. " "இல்ல நீங்க கல்யாணம் பண்ணிக்கணும் .. " அவள் என்ன சொல்ல் வருகிறாள் என்று தெரிந்தும் தெரியாதது போல் "என்ன குழப்பற? கல்யாணங்கறது நம்ம ரெண்டு பேரும் சேந்துதான பண்ணிக்கணும் .. நீ பண்ணிக்காம நான் எப்படி பண்ணிக்கறது?" "நீங்க வேற யாரையாவுது ..." "உன்னை லவ் பண்ணிட்டு வேற யாரையாவுது கல்யாணம் பண்ணிக்கணும்னு சொல்றயா? நீங்க என்ன பண்ணப் போறதா உத்தேசம்?" "I love you .. I will always love you .. " "ஆனா .. கல்யாணம் பண்ணிக்க மாட்டே .. அப்படித்தானெ?" என்று குரலை சற்று உயர்த்தினான் ரேவதி மௌனம் காக்க அருண் தொடர்ந்து, "இப்ப நான் கொஞ்ச நாள் உங்கூட ஜாலியா இருந்துட்டு வேற கல்யாணம் பண்ணிட்டு உன்னை மறந்துடணும் .. அப்படித்தானெ?" கண்களில் நீர் ததும்ப

 "அது உங்க இஷ்டம் .. சொல்லப் போனா உங்களுக்கு வரப் போற வொய்ஃபும் அதைத் தான் எதிர்பாப்பா ... " "சரி அதைவிடு .. முதல்ல ஏன் கல்யாணம் பண்ணிக்கறதுல உனக்கு இஷ்டமில்லைன்னு சொல்லு" "என்னை கல்யாணம் பண்ணீட்டா நிறைய பிரச்சனை வரும் அருண் .. வேண்டாம்" சிறிது மௌனம் காத்த அருண், "நிறைய பிரச்சனைங்கள எங்கிட்ட சொல்லி அப்படி வந்தா எப்படிடா ஃபேஸ் பண்ணுவேன்னு ஏற்கனவே மாமா என்னை சாலஞ்ச் பண்ணி இருக்கார் .. அவர் சொன்னதுக்கும் மேல ஒரு படி மேல வரக்கூடிய பிரச்சனைங்களை ஃபேஸ் பண்ண்ற மனப்பக்குவம் எனக்கு இருக்குடா .. அனேகமா நீ எதையும் புதுசா சொல்லப் போறதில்லை .. any how .. " என்றவாறு எழுந்து நின்று அவளை இழுத்து எழுந்து நிற்க வைத்து அவளது இடையை வளைத்து அணைத்தான்.. பிறகு, "இப்ப போய் நல்லா ஒரு குளியல் போட்டுட்டு கம்ஃபர்டபிளா ஒரு ட்ரெஸ போட்டுட்டு வா .. குளிக்கும்போதே என்னென்ன பிரச்சனைன்னு நல்லா யோசி .. you need time to think and organize your thoughts .. " என்றவாறு அவளை குளியலறைக்கு அனுப்பினான்.


 சோஃபாவில் அமர்ந்து தலையை பின்புறம் சாய்த்து சில நிமிடங்கள் கண்மூடி யோசனையில் ஆழ்ந்திருந்தான். பிறகு ரேவதிக்காக காத்திருக்கும் சிறிது நேரத்தில் தன் அலுவலக வேலைகளில் கவனம் செலுத்த எண்ணி தன் லாப்டாப்பில் மூழ்கினான். குளிக்கும் போது ரேவதி வரக்கூடிய இடுக்குகளை ஒவ்வொன்றாக மனதில் கணக்கிட்டாள் .. அவளுக்கு சென்னையில் ஷண்முகத்துடன் நேர்ந்த சந்திப்பும் அதை அருண் கையாண்ட விதமும் மனதுக்கு வர .. 'மனுஷன் அந்த மாதிரி பிரச்சனைகளை எல்லாம் நிச்சயம் யோசிச்சு வெச்சு இருப்பார் ... மனசுக்குள்ள கொஞ்சம் கஷ்டப் பட்டாலும் வெளிய காட்டாம எனக்கு ஆறுதல் சொல்லுவார் .. ' 'என்னோட பழைய கஸ்டமர் யாரையாவுது நேரில் பாத்தாலும் அவர் ரியாக்க்ஷன் அப்படித் தான் இருக்கும் .. ' 'ஆனா, வெளி ஆளுங்கனால வரக்கூடியதை மட்டும் தான் யோசிச்சு இருப்பார் .. எனக்கும் அவருக்கும் நடுவுல வரக்கூடியதை நிச்சயம் யோசிச்சு இருக்க மாட்டார் ..

' குளித்து முடித்த ரேவதி அவள் சென்னையில் இருக்கும்போது போட்டிருந்ததைப் போன்ற ஒரு ஹவுஸ் கோட்டில் வர தன் லாப்டாப்பிலிருந்து கண் எடுத்து "ஏய், குளிரல? இந்த ஹவுஸ் கோட் தாங்குதா?" "உள்ள நீங்க சொல்லி வாங்கின தெர்மல் போட்டு இருக்கேன் .. " "அப்ப அதை மட்டும் போட்டுட்டு வந்துருக்கலாம் இல்ல ?" "ம்ம்ம் ... ஆசை" என்றவாறு அவனருகில் சோஃபாவில் அமர்ந்தாள். அவள் தோளில் கைபோட்டு இன்னும் பக்கத்தில் இழுத்தவாறு "ஏன்?" என்றவனை மிக அருகில் பார்த்த ரேவதி "கூச்சமா இருக்கும் ..." என்றவள் அவன் கண்களை பார்த்து "முன்ன மாதிரியெல்லாம் என்னால உங்க முன்னால கூட இருக்க முடியுமான்னு தெரியல .. ஒரு மாதிரியா இருக்கு ..." என்றவாறு அவன் தோளில் தலை சாய்த்தாள் .. 

"ஏய், நான் விளையாட்டா சொன்னேன்டா ..." தலையை நிமிர்த்திய ரேவதி "நீங்க வேலையை கண்டின்யூ பண்ணுங்க .. " என்றபடி எழ முயற்சித்தாள். "ம்ம்ம் ... சும்மா கிடைச்ச பத்து நிமிஷத்துல சில மெயில் ரிப்ளை பண்ணினேன் ... இனி அப்பறம் நேரம் கிடைக்கும் போது பாத்துக்கறேன். நாளைக்கு கொஞ்ச நேரம் வந்துருக்கற எல்லா மெயிலையும் டௌன்லோட் பண்ணிட்டா ... அப்பறம் திரும்பி போகற ஆறு மணி நேர ஃப்ளைட்டுல உக்காந்து பாக்கி ரிப்ளை எல்லாம் முடிச்சுடுவேன். வீட்டுக்கு போனதும் சும்மா கனக்ட் பண்ணி விட்டுட்டு படுத்தா எல்லாருக்கும் மன்டே மார்னிங்க் அவங்க சீட்டுக்கு வரும் போது என் ரிப்ளை காத்துட்டு இருக்கும்" என்றவாறு தன் லாப்டாப்பை மேஜையின் மேல் வைத்தான். அடுத்த கணம் அவள் தோளில் இருந்த கையை இடைக்கு இறக்கி சற்று அவள் பக்கம் திரும்பி இன்னொரு கையை அவள் தொடைகளுக்கு கீழ் கொண்டு சென்று பக்கத்தில் அமர்ந்திருந்த அவளை எடுத்து "ம்ம்ம் .. என்னது ..." என்ற அவளது சிறு கூச்சலை பொருட்படுத்தாது அவளை மடிமேல் அமர்த்தி முன்பு தரையிலிருந்த அவள் கால்களை சொஃபாவில் படர விட்டான்.

அவள் பின் புறம் சரிந்து விழாமல் இருக்க அருண் அவள் இடையை வளைத்து இருந்த கையை இன்னும் இறுக்கி மறுகையால் அவள் முகவாயை ஏந்தி "ம்ம்ம் .. இபப் சொல்லு ...என்னென்ன பிரச்ச்னை வரும்னு ..." அவனை அளவுகடந்த காதலுடன் பார்த்துக் கொண்டு இருந்தவள் அவன் இரு கன்னங்களிலும் அழுந்த முத்தமிட்டாள்.. பிறகு, "மத்தவங்களால என்ன பிரச்சனை வந்தாலும் நீங்க அதை ஃபேஸ் பண்ணுவீங்கன்னு எனக்கு தெரியும் .. " "மத்தவங்கன்னா?" "அன்னைக்கு ஷண்முகத்தைப் பாத்தமே அந்த மாதிரி .. என்னை அப்படி தெரிஞ்ச வேற யார் வந்தாலும் நீங்க சமாளிச்சுடுவீங்கன்னு தெரியும் .. அவமானம் ஒண்ணும் இல்லென்னு எங்கிட்ட சொல்லுவீங்க .. மனசுக்குள்ள கொஞ்சம் வலிச்சாலும் எங்கிட்ட காமிச்சுக்க மாட்டீங்க .. " "அதான் பிரச்சனையா .. " "அதெல்லாம் பிரச்சனை இல்லைன்னு சொன்னேன் .. எனக்கு தெரியும் போகப் போக அதெல்லாம் சரியாயிடும்" "அப்பறம் வேற என்ன?" அவன் முகத்தை தன் பக்கம் திருப்பி இரு கைகளால் அவன் கன்னங்களை ஏந்தி "நான் உங்களை என் உயிரா லவ் பண்ணறேன் அருண் ..

நான் சொல்றதை என்னடா இவ பெரிய கொம்பாட்டம் பேசறாளேன்னு தப்பா எடுத்துக்க கூடாது .. " "ஹெல்லோ!! knock knock" என்றவாறு அவள் நெற்றியை ஒரு விரலால் கதவைத் தட்டுவதைப் போல் செய்து .. "enough of preamble .." அடுத்த கணம் தனது கற்கும் ஆர்வத்தை "preambleன்னா என்ன?" என்றவாறு காட்டினாள் போலியான கடுகடுப்பை முகத்தில் காட்டி, " ம்ம்ம் .. அதை அப்பறமா நம்ம டீச்சிங்க் செஷன்ல சொல்றேன் .. நீ முதல்ல சொல்ல வந்ததை சொல்லு" சிரித்தவாறு எழுந்ததற்கு அருண், "ஏன் என் மடில உக்காந்துட்டு சொல்ல மாட்டீங்களா?" என்றான். "ம்ம்ம் .. நான் சொல்லப் போறது கொஞ்சம் சீரியஸான விஷயம் .. அப்படி உக்காந்துட்டு இருந்தா உங்க கை சும்மா இருக்காது .. ." என்றவாறு எதிரே இருந்த சோஃபாவில் அமர்ந்தாள் "ம்ம்ம் சரிங்க மேடம் ..:" என்ற வாறு தன் கைகளைக் கட்டிக் கொண்டு "இப்ப சொல்லுங்க .. " "எல்லா விஷயத்துலயும் புருஷனுக்கு பிடிச்ச மாதிரி அவர் சொன்ன மாதிரி நடந்து கிட்டு சுயமா ஒண்ணுமே யோசிக்காத ஒரு அடிமையா என்னால இருக்க முடியாது .. " என்று ஆரம்பித்தவளை வழி மறித்து ..

 "இரு, இரு, புருஷன்னு சொன்னது என்னைத்தானே?" "இல்லை .. ரோட்ல போறவனை சொன்னேன். .. முழுசா சொல்ல விடுங்க" என்றவாறு சிணுங்கினாள். "ஓ.கே, ஓ.கே .. கேரி ஆன் மை லவ்.. " "எந்த விஷ்யத்துலயாவுது நான் உங்களுக்கு பிடிக்காத மாதிரி நடந்துகிட்டா முதல்ல உங்க மனசுல என்ன நினைப்பு வரும் 'சே, சாக்கடைல கெடந்தவளை வீட்டுக்கு கூட்டீட்டு வந்து இவ்வளவு பண்ணியும் இப்படி நடந்துக்க்றாளே'ன்னுதானே .. அப்பறம் நமக்குள்ள சண்டை வரும் .. அதுக்காக எல்லா விஷயத்துலயும் நான் ரொம்ப இண்டிபெண்டென்டா சுதந்தரமாத்தான் இருப்பேன்னு சொல்லல ... ஆனா நான் யாரையும் முழுசா டிபெண்ட் ஆகி இருக்க விரும்பல .. " முகம் மலர அருண் "ம்ம்ம் .. ம்ம்ம் கோ ஆன்" என்றான்
"அப்பறம், நமக்குள்ள எவ்வளவோ difference of opinion வரலாம் அது ஒண்ணொண்ணுக்கும் இவர்னாலதான் நான் இந்த நிலைமைக்கு வந்துருக்கேன் .. அதனால அவர் சொன்னதுதான் சரின்னு இருக்க என்னால முடியாது ... " என்று அவள் சொல்லச் சொல்ல அருண் தன் கைகளை தட்ட ஆரம்பித்து இருந்தான்.

மேலும் எதுவும் சொல்லாமல் "என்ன? .." என்றவளிடம் "ஓண்ணுமில்லை நீ சொன்னது எனக்கு ரொம்ப புடிச்சு இருந்துது .. I applauded you .. நீ மத்த என்னெல்லாம் பிரச்சனைன்னு சொல்லி முடி .. அப்பறமா நான் சொல்றேன்" "மத்தபடி நான் வாழ்க்கையில எதையாவுது சாதிக்கணும்னு இருக்கேன் .. உங்க அளவுக்கு இல்லேன்னாலும் ஓரளவுக்காவுது ஒரு நல்ல பொசிஷனுக்கு வரணும் ... எந்த விததிலும் நான் என் கெரியரை விட்டுக் கொடுக்க மாட்டேன். இது ஒரு சாதாரண பொண்ணு சொன்னாலே அவளை கல்யாணம் பண்ணிக்க யோசிப்பாங்க .. அதை நான் சொன்னா எல்லாரும் என்னை பைத்தியம்பாங்க. அதுவும் எனக்கு தெரியும் ..

still my career is very important to me" என்று முடித்தாள். "அப்பறம்? எதோ பிரச்சனை வரும்னே .. என்ன பிரச்சனைன்னு சொல்லவே இல்லையே.." "இந்த கிண்டல்தானே வேண்டாம் .." "சரி, நீ சொன்ன முதல் விஷயத்துக்கு வருவோம் .. ஓ,கே?" "சொந்தமா யோசிக்காம எல்லா விஷயத்துலயும் புருஷனை நம்பி இருந்தா எனக்கு சுத்தமா பிடிக்காது ... உனக்கும் அது தெரிஞ்சு இருக்கும்னு நெனைச்சேன் .. நீ மட்டும் அப்படி இருந்தியோ .. பட்டை பட்டைய கெளப்பிடுவேன் ..." என்று போலியாக மிரட்டினான். "சும்மா பேச்சுக்கு சொல்லாதீங்க அருண் .. யோசிச்சுப் பாருங்க" "ஏய், இங்க வாயேன் .. அப்படி தூரத்துல உக்காந்துட்டு இந்த மாதிரி ஒரு விஷயத்துக்கு விளக்கம் கேட்டா எப்ப்டி?" "ஓண்ணும் வேண்டாம் .. அங்கிருந்தே சொல்லுங்க .. " "ம்ம்ம் .. க்ர்ர்ர் .. பிசாசு! சுதந்திரம் அடிமைத்தனம் இது ரெண்டுக்கும் நடுவுல இங்க்லீஷ்ல இன்டெர்-டிபெண்டென்ட் (inter-dependant) அப்படீன்னு ஒண்ணு சொல்லுவாங்க அப்படீன்னா என்ன தெரியுமா .. நாம் கல்யாணம் பண்ணிக்கறதுங்கறது நம்ம வாழ்க்கைல ஒரு பகுதியை ஷேர் பண்ணிக்கறதுக்காக ..

நம்ம சுதந்திரத்தை பறிகொடுக்கறதுக்காக இல்லை .. சம்பந்தம் இல்லாத விஷயங்கள்ல நம்ம ரெண்டு பேரும் தனி தனியா முடிவெடுப்போம் .. நம்ம ரெண்டு பேருக்கும் சம்மந்தப் பட்ட விஷயங்களை சேந்துதான் முடிவெடுப்போம் .. " "இதல்லாம் பேச நல்லா இருக்கும் .. ப்ராக்டிகலா யோசிச்சு பாருங்களேன் .. " "யோசிக்க இதுல இன்னும் என்னடா இருக்கு?" "ம்ம்ம் ... உங்க நிலமைல என்னை கல்யாணம் பண்ணிக்கறதே ஒரு பெரிய தியாகம் மாதிரி .. அதுக்கும் மேல எனக்கு சுதந்திரம் கொடுக்கறது .. யாரும் ஒத்துக்க மாட்டாங்க" "ஃப்ளைட்டுல வந்தா சிலருக்கு தலை சுத்தும்பாங்க .. உனக்கு எதோ நட்டு லூஸான மாதிரியில்ல இருக்கு?

நான் உன்னை காதலிக்கறதுல கல்யாணம் பண்ணிக்க ஆசை படறதுல எல்லாம் தியாகம்ன்னு ஒரு மசுரும் இல்ல. தியாகம் அப்படீங்கற வார்த்தையே எனக்கு புடிக்காது .. நான் உன்னை லவ் பண்ணறேன் அவ்வளவுதான் .. நீ இந்த மாதிரி நடந்துக்க கூடாது அந்த மாதிர் யோசிக்க கூடாதுன்னு சொல்ற ஆதிவாசி நான் இல்லை .. நான் அப்படி சொல்லணும்னு மத்தவங்க எதிர்பாத்தாங்கன்னா அதைப் பத்தி எனக்கு ஒரு கவலையும் இல்லை .. சரியா?

" முகத்தில் சந்தோஷ ரேகை படிய ரேவதி "ம்ம்ம் .. நிஜமா சொல்றீங்களா?" "இங்க பக்கத்துல இருந்தா இப்ப சொன்னதைவிட நிஜமா சொல்லி இருப்பேன் .. சரி, இனி அடுத்ததுக்கு வருவோம் ..that is your concern about your career .. ஏன்டா உன் கெரியர்ல எனக்கு இன்டரெஸ்ட் இல்லேன்னா நான் எதுக்கு உன்னை எம்.டெக் படிக்க சொல்லணும்? நீ சொன்ன மாதிரி பி.ஈ முடிச்சதும் கிடைக்கற வேலைல சேந்துக்கோன்னு சொல்லி இருப்பேன் இல்லயா?" "தெரியும் அருண் . ஃப்யூச்சர்ல எதாவுது ஒரு விஷயத்துல நான் என் கெரியரை விட்டுக் குடுக்கணூம்னு வந்தா ... " "அப்படி என்ன விஷயம் இருக்கப் போகுது? இவ்வளவு நாளா லவ் பண்ணிட்டு ஒருத்தருக்கு ஒருத்தர் சொல்லாம இருந்ததுனாலதான் உனக்கு இந்த மாதிரி டௌட் எல்லாம் வருது .. நீ என்னை இன்னும் சரியா புரிஞ்சுக்கல .. I was born with a silver spoon .. கெரியர்ல நான் சக்ஸீட் ஆகறதை விட நீ சக்ஸீட் ஆனா நமக்கும் நாம உருவாக்கப் போற குடும்பத்துக்கும் பெருமை இல்லையா? அப்படி இருக்கும்போது உன்னை எதுக்காகவாவுது விட்டுக் குடுக்கச் சொல்லுவனா?

சரி, அதை விடு நீ அத்தையையும் மாமாவையும் பாத்ததில்லையா .. என்ன விட்டுக் கொடுக்கறாங்க ரெண்டு பேரும்?" "இல்லை, நாளைக்கு குழந்தைன்னு வரும்போது .. " "குழந்தைன்னு வரும் போது .. it's a very good point ...முதல்ல இதை சொல்லு உனக்கு குழந்தை பெத்துக்கணும்னு நல்லா வளக்கணும்னு ஆசை இருக்கா?" "உங்களுக்கு இல்லையா?" "நிச்சயம் இருக்கு முதல்ல நீ பதில் சொல்லு .. " "எனக்கு ஒரு குட்டி அருண் வெணும் .. " என்றாள் சற்று நிறுத்தி "நீங்க என்னை கல்யாணம் பண்ணிக்கலேன்னாலும்" என்று அழுத்தமாக முடித்தாள். அவளை முறைத்து "கிறுக்குத்தனமா பேசாம கன்டின்யூ பண்ணலாமா?" என்றவன் தொடந்து "உனக்கு குழந்தை வேணும்னு சொன்னே .. பெத்துக்கணும்னு ஆசை இருக்கா?"

 "ஆமா ... வேற எப்படி குட்டி அருண் வருவானாம்?" "சரி அப்பறம் ஏன் குழந்தைன்னு வரும்போது அப்படீன்னே? குழந்தை பொறந்த உடனே நீ வேலையை விடுன்னு சொல்லுவேன்னு நினைக்கறயா?" அதற்கு ரேவதி மௌனம் காக்க அருண் தொடர்ந்தான் "பிறந்ததுக்கு அப்பறம் அம்மாவோட அரவணைப்பு எந்த அளவுக்கு ஒரு குழந்தைக்கு தேவைன்னு உனக்கே தெரியும் .. அந்த அரவணைப்புக்காக உன் கெரியர்ல சின்ன ப்ரேக் வரலாம் ... இன்னும் ரெண்டு மூணு வருஷ்த்துக்குள்ளயே அந்த ப்ரேக் வரலாம்.

அதை நீ வேலை செஞ்ச ரெண்டு மூணு வருஷத்தோட கம்பேர் பண்ணினா .. கெரியர்ல ஒரு பெரிய gap (இடைவெளி) இருக்கற மாதிரி தெரியும் .. உன் கெரியர்ல நீ ரிடையர் ஆகற வரைக்கும்னு பாத்தா முப்பது வருஷத்துக்கும் மேல இருக்கு .. அந்த முபப்து வருஷத்தோட கம்பேர் பண்ணினா அந்த இடைவெளி ரொம்ப சின்னதுடா ... அப்படி யோசிச்சு பாரு. ஒண்ணு நிச்சயமா சொல்றேன் .. நமக்கு பொறக்க போற குழந்தைக்காக நான் எந்த விதத்திலாவுது என் கெரியரை விட்டுக் கொடுக்கணும்னா நிச்சயம் விட்டுக் குடுப்பேன். இன் ஃபாக்ட் எங்க கம்பெனில மட்டேர்னிடி லீவ் மாதிரி பட்டேர்னிடி லீவ் உண்டு தெரியுமா? நீ வேலைக்கு போக ஆரம்பிக்கும் போது நான் கொஞ்ச நாள் வீட்டுல இருந்து குழந்தையை பாத்துக்குவேன் .. " என்று அருண் சொல்லி முடிக்க முடிக்க எழுந்து வந்து அவன் மடியில் அமர்ந்த ரேவதி "நிஜமா?" என்றாள்.

 "You want me to give it in writing? " அவள் கேட்டதில் அவன் வருத்தமடைந்தான் என்பதை உணர்ந்து "ப்ளீஸ் .. சாரி ... நான் அந்த அர்த்ததுல கேக்கலெ .. என்னால நம்ப முடியல .. ஐ லவ் யூ" என்று அவனை இறுக அணைத்தாள். "சரி, முதல்ல நீ கொண்டு வந்திருக்கற பெட்டி ரெண்டையும் திற .. என்னென்ன ட்ரெஸஸ் இருக்கு என்னென்ன வாங்கணும்னு பாக்கலாம் . " "அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம் .. நீங்க இங்க வாங்கிக்கலாம்னு சொன்னதை மட்டும் வாங்கினா போதும் .. "

 "ஏன் நான் பாக்கக் கூடாதா .. " "நீங்க பாத்தா பாதி ட்ரெஸஸ் பழசுன்னு வேற வாங்க சொல்லுவீங்க .. " அப்போது அவள் தோளில் எட்டிப் பார்த்த சிறிது நைந்து போன ப்ராவின் ஸ்ட்ராப்பை ஒரு விரல் விட்டு இழுத்தபடி "இந்த மாதிரி இருக்கறதை எல்லாம் புதுசுன்னா சொல்லுவாங்க .." "சீ .. அதுவும் வாங்கணும்தான் ... வினிக்கா இங்க கரெக்ட் சைஸ் கிடைக்கும்ன்னு சொன்னாங்க" "அப்படியா அப்ப இப்பவே கெளம்பு அதை மட்டும் ட்ரையல் எல்லாம் பாத்து வாங்கிட்டு வரலாம்" மனம் விட்டு சிரித்தவள் அவன் மூக்கைப் பிடித்து அவன் முகத்தை ஆட்டி .. "யாரோ ரொம்பவே ஜொள்ளு விடறாங்கப்பா"

 "ம்ம்ம் ... ஜொள்ளெல்லாம் விடல .. இவ்வளவு நாளும் உன்னைப் பத்தி கனவு கண்டுட்டு ...காஞ்சுகிட்டு இருக்கேன் .. ஆக்சுவலா .. என் கனவுல உன்னை கல்யாணம் பண்ணி ரெண்டு குழந்தை கூட பெத்தாச்சு" "ஏன்.. உங்க concensual sex தீனி கிடைக்கலயா?"
"ம்ம்ம் .. இன்னும் நான் அப்ப சொன்னதை நினைச்சுட்டு இருக்கியா? நீ அப்ப ஃபர்ஸ்ட் டைமான்னு கேட்டே இல்ல? உடனே ஒரு வீராப்புல அதுக்கு முன்னால ரெண்டு தடவை எம்.எஸ் படிச்சுட்டு இருக்கும் போது என் க்ளாஸ்மேட் ஒருத்திகூட தண்ணியடிச்சுட்டு மப்புல பண்ணினதை சொன்னேன் .. வேலைக்கு வந்ததுக்கு அப்பறம் பேரு நாறி போயிரும்னு ஓண்ணும் பண்ணல .. "

 "அப்ப சென்னை வந்தப்ப மட்டும் என்ன திடீர்னு யாராவுது வேணும்னு இருந்துதாக்கும்" "அதுக்கு நான் பாஸ்கரை மனசுக்குள்ள தாங்க் பண்ணாத நாளே இல்லெ தெரியுமா .. ஆனா அவங்கிட்ட மட்டும் சொல்லிடாதே .. ஐய்யாவுக்கு ரொம்ப ஏறிடும்" "நானும்தான் .. " என்றவாறு மறுபடி அவளை இறுக அணைத்தாள் .. "சரி, அங்க கிடைக்காத சைஸ் அப்படி என்ன?" "ம்ம்ம் தெரிஞ்சுட்டு என்ன பண்ணப் போறீங்க?" "சும்மாடா .. its pure quest for knowledge .. " என்று தன் அறிவை வளர்க்கும் ஆர்வத்தைக் கூறினான். "இந்த knowledge எல்லாம் இல்லைன்னா பரவால்லை" "சொல்லுன்னா ஒரேயடியா பிகு பண்ணறே .. விடு அப்பறம் நானே பாத்துக்கறேன்" வெட்கத்தில் முகம் சிவந்தவள் "அங்க கிடைக்கற பாண்ட் சைஸ்ல என்னோட கப் சைஸ் கிடைக்கல .. " என்ற வாறு தனக்கு சரியாக பொருந்தும் ப்ரா சுற்றளவையும் கப் அளவையும் சொன்னாள்

 "ம்ம்ம் .. நினைச்சேன் .. இப்ப கொஞ்சம் குண்டாயிருக்கயா?" "ம்ம்ம் .. கொஞ்சம் .. " "அது ரெண்டும் கூட குண்டாயிருக்கா ?" "அது ரெண்டும் குண்டாகல .. அப்படியேதான் இருக்கு .." "எப்படி? மறந்துருச்சுடா .. " என்றவாறு அவன் கைகளை உயர்த்த .. சட்டென்று எழுந்து "அதெல்லாம் கல்யாணத்துக்கு அப்பறம் பாக்கலாம் .. இப்ப வாங்க கடைக்கு போலாம்" "ஏய், என்ன சொல்ற நீ? கல்யாணம் வரைக்கும் என்னால வெய்ட் பண்ண முடியாது .. " "ம்ம்ஹூம் .. நோ .. ஒன்லி ஆஃப்டர் மேரேஜ் .. அவசரம்னா என் கழுத்துல ஒரு தாலியை கட்டிட்டு என்ன வேணும்னாலும் பண்ணிக்குங்க .."

 "திஸ் இஸ் நாட் அட் ஆல் ஃபேர் !!! நான் அப்பவே சொன்னே இல்லெ? நீ பேசாம இருந்தே?" "அப்ப நான் உங்களை கல்யாணம் பண்ணிக்கறதா இல்லை .. நீங்கதான் என்னை கல்யாணம் பண்ணிக்கலாம்னு கன்வின்ஸ் பண்ணுனீங்க .. மறந்துருச்சா ஐய்யாவுக்கு?" "டேய், நான் கல்யாணம் பண்ணிக்கலாம்னுதாண்டா உன்னை கன்வின்ஸ் பண்ணுனேன் .. மத்ததை பண்ண வேண்டாம்ன்னு எப்ப சொன்னேன் .. " "கல்யாணம் பண்ணிக்கறதா இருந்தா மத்ததையும் கல்யாணத்துக்கு அப்பறமாவே பண்ணிக்கலாம்னு நான் தான் முடிவு பண்ணினேன்" "மறுபடியும் சொல்றேன் .. திஸ் இஸ் நாட் ஃபேர் .. கிஃப்ட் பாக்ஸை கொடுத்துட்டு பிரிச்சுப் பாக்கக் கூடாதுங்கற மாதிரி இருக்கு .. " "பரவால்லை .. கல்யாணத்துக்கு அப்பறம் பிரிச்சு பாத்துக்கலாம் .." முகத்தில் பெரும் ஏமாற்றம் தாண்டவமாட வேறு வழியின்றி அவளுடன் சென்றான். மாலை ஐந்துக்கும் மேல் ஆகியிருக்க ரேவதிக்கு சில உள்ளாடைகள் மட்டும் வாங்கி வரும் வழியில் உணவருந்திவிட்டு திரும்பினர் ..

 ரேவதி உடை மாற்றி வந்து சோஃபாவில் அமர்ந்து டீ.வியை பார்த்துக் கொண்டிருந்த அருணின் அருகே அமர்ந்தாள். அருண் எதிர்பார்த்ததுபோல் பேசப் பேச தூக்கம் அவள் கண்களை சுழற்றுவதைக் கண்டான் .. சிறிது நேரத்தில் அவன் தோளில் தலை சாய்த்து தூங்கியும் விட்டாள் .. அவளை எடுத்து கட்டிலில் படுக்கவைத்தபின் வெகு நெரம் லாப்டாப்பில் தன் பணியை தொடந்து பின் இரவின் தொடக்கத்தில் கட்டிலில் அவளருகே படுத்து அவள் முகத்தைப் பார்த்தவாறு இருந்தபின் உறங்கினான். அடுத்த நாள் நியூ யார்க்கின் சில இடங்களுக்கு அவளை அழைத்துக் கொண்டு சென்று காட்டினான்.

அவளுக்கு தேவையான துணிகளையும் வாங்கினர். மாலை ஆறு மணியளவில் அறைக்கு திரும்பியதும் அருண் அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலின் மேல் மாடியிலிருக்கும் ரெஸ்டாரண்டில் அவர்களுக்கு இரவு உணவருந்த டேபிள் புக் செய்தான் .. "புக் பண்ணாம போக முடியாதா?" "இந்த roof-top restaurant கொஞ்சம் ஃபேமஸ் .. அதனால ரிஸர்வ் பண்ணிட்டா போன ஒடனே உக்கார இடம் கிடைக்கும் .. " "அப்ப நான் போய் குளிச்சுட்ட கிளம்பறேன் .. " "ஏய், அழுக்கு மூட்டெ, காலைல குளிக்கலையா .. " "நேத்து சாங்காலம்தான குளிச்சேன் .. அதனால காலைல அப்படியே அட்ஜஸ்ட் பண்ணீட்டேன் .. " "அது சரி, அத்தச்சோட்டு ஆனை தெனம் தெனமா குளிக்குது ..." என்று கொங்கு நாட்டுத் தமிழில் கிண்டலடித்தவன் .. "நல்ல ட்ரெஸ் எதாவுது போட்டுட்டு வா .. " "சாரி கட்டுனா பரவாயில்லையா?" "கட்டலாமே ..கூடவே மேல அந்த பஷ்மினா ஷாலைப் போத்திக்கோ .. கொஞ்சம் குளிரும் .. இரு இரு நீ உள்ள போறதுக்கு முன்னாடி நான் ஃப்ரெஷன்-அப் பண்ணிட்டு வந்துடறென்" குளியலறைக்குள் தனக்கு தேவையான துணிகள் மற்றும் வேனிடி கிட்டுடன் சென்றவள் வெளியில் வருவதற்குள் தயாராகி அவளுக்காக காத்திருந்தவன் கண்களை டீ.வியிலிருந்து எடுத்து "ம்ம்ம் .. போலாமா ?" என்றவளை திரும்பிப் பார்த்தான் ..

பார்த்தவாறு இருந்தான்... "என்ன? ஐய்யா என்ன அப்படியே பாத்துட்டு இருக்கீங்க? போலாமான்னேன்" வினிதாவின் திருமணத்தின்போது உடுத்தியிருந்த அதே ஸால்மன் பிங்க் மைசூர் சில்க் க்ரேப் புடவையில் இருந்தாள் .. அவன் அவளை முதல் முதல் பார்த்தது போல் கூந்தலை முடியாமல் முதுகில் ஃப்ரீ ஹெராக விட்டு, காதுகளுக்கருகே இருந்து சிறு கற்றை முடிகளை பின்னுக்கு கொண்டு சென்று அவைகளை ஒன்று சேர்த்து ஒரு க்ளிப் அணிந்து, மெல்லிய மேக்கப் அணிந்து இருந்தாள். கழுத்தில் ஒரு சன்னமான செயின் .. ஒரு கையில் தங்க வளையலும் மறு கையில் அருண் அவளுக்கு ஒரு பிறந்த நாள் பரிசாக வாங்கிக் கொடுத்த கடிகாரமும் அணிந்து இருந்தாள். தோளில் அருண் சொன்ன பஷ்மினா சால்வை கருஞ்சிவப்பில் அவள் முகத்தையும் உடுத்தி இருந்த சேலையையும் எடுத்துக் காட்டியது .. எழுந்து ஒரு கையால் அவள் இடையை வளைத்தபடி ""Honey, You look gorgeous .. ம்ம்ம் .. போலாம் வா" என்று அழைத்துச் சென்றான்.

 உணவருந்தியபின் சிறிது நேரம் தூங்கா நகரமான நியூ யார்க்கின் வீதிகளில் சிறிது நேரம் நடந்த பிறகு அறைக்குத் திரும்பினர். சோர்வுடன் சோஃபாவில் அமர்ந்து டீ.வி ரிமோட்டை கையில் ஏந்தியபடி "நீ போயி சேஞ்ச் பண்ணிட்டு வந்து படு .. நான் கொஞ்ச நேரம் டீ,வி பாத்துட்டு அப்பறம் படுக்கறேன்" சில நிமிடங்களுக்கு பிறகும் அவள் குளியல் அறை நோக்கிச் செல்லவில்லை என்று உணர்ந்தவன் கண்களை அவள் பக்கம் திருப்ப கட்டிலில் ஒயிலாக அமர்ந்திருங்கவளைப் பார்த்து "என்ன மேடம் தூக்கம் வரலயா?" என்றவனிடம் "ம்ம்ம் ... யாரோ ரொம்ப காஞ்சு போயிருக்கறதா சொன்னாங்க ..

அதான் யோசிச்சுட்டு இருக்கேன்"
முகத்தில் பல கோடி வாட்ஸ் பிரகாசம் மின்ன அருண் மறுபடி டீ.வியை பார்த்தபடி "ம்ம்ம் .. ஆசையா கேட்டவனை கல்யாணத்துக்கு அப்பறம்ன்னு சொல்லி கடுப்பேத்தி விட்டுட்டு இப்ப யோசிச்சு என்ன ப்ரயோஜனம்?" "அப்பறம் கேட்டதும் எடுத்துக்கோங்கன்னா சொல்லுவாங்க?" என்றபடி அவளது சேலை முந்தானையை பொருத்தி இருந்த ப்ரூச்சை கழற்றினாள் இருக்கையிலிருந்து எழுந்த அருண், "அட்லீஸ்ட் அப்பறம் கிடைக்கும்ன்னாவுது சொல்லீருக்கலாமில்ல?" என்றவாறு அருண் கட்டிலில் அவள் அருகில் அமர்ந்தான்

 "எப்ப கிடைக்கும்னு தெரிஞ்சா சஸ்பென்ஸ் போயிடுமே" என்றபடி சோம்பல் முறிப்பது போல் கையை உயர்த்தி ஹேர் க்ளிப்பை நீக்கினாள். தலையை ஆட்டி கூந்தலை முதுகெங்கும் படர விட்டாள். குறும்புப் புன்னகையுடன் என்ன என்பதுபோல் புருவத்தை உயர்த்தினாள். அருணை தன் கண்களால் கைது செய்தபடி நாக்கை நீட்டி தன் அதரங்களை ஈரப்படுத்தினாள்.



No comments:

Post a Comment