Saturday, November 22, 2014

ரேவதி பாகம் 13


தூங்காமல் கையில் கொண்டு வந்திருந்த புத்தகத்தைப் படிக்க தொடங்கினாள். வழி நெடுக முடிந்த வரை அமெரிக்க நேரப்படி தூங்கி எழுந்தாள். சென்னையிலிருந்து ஃப்ராங்க்ஃபர்ட் செல்வதிலும் பிறகு அங்கிருந்து வேறு விமானம் நியூ யார்க்கிற்கு புறப்படுவதிலும் கால தாமதமாகி நியூ யார்க்கிற்கு மதியம் ஒரு மணியளவிற்கே சென்றடைய முடியும் என்ற அறிவிப்பை கேட்டதும் அவளுக்கு கோபம், கூடவே அதை முன் கூட்டியே அருணுக்கு தெரிவிக்க முடியாதே என்ற ஆதங்கம் .. 'பாவம் மனுஷன் காலைலயே வந்து இறங்கியிருப்பார்.

ஒரு ஹோட்டல்ல செக்-இன் பண்ணிட்டு நேரா JFK ஏர்போர்ட் வரதுக்கு நேரம் சரியா இருக்கும்னு சொல்லி இருந்தார்.. நீ வந்தப்பறம் ஒண்ணா போயி ப்ரன்ச் சாப்படலாம்னார். இப்ப என்னால காலைல இருந்து மத்தியானம் வரைக்கும் அந்த பாழா போன காஃபியை மட்டும் குடிச்சுட்டு பட்டினியா உக்காந்துட்டு இருப்பார்' "Your kind attention please .. we will be landing at the New York John F Kennedy International Airport in the next few minutes" என்ற அறிவிப்பை கேட்கும்போது அவள் எதிர்பார்த்த படி அவளது தோழிகள் இருவரையும் விட புத்துணர்ச்சியுடன் இருந்தாள். மனதுக்குள் அவள் அருணை பார்ததும் என்ன சொல்லப் போகிறோம் என்று ஒத்திகை பார்த்தாள்.
'என்னவோ தன்னம்பிக்கை வரட்டும் அப்பறம் சொல்றேன்னு இருந்ததா சொன்னார் இல்ல? பாத்ததும் "ஐ அம் ரேவதி பீ.ஈ, எம்.டெக், ஸாஃப்ட்வேர் எஞ்சினியர்" அப்படீன்னு சொல்லி கை குலுக்கீட்டு அப்பறமா அவரை பாத்து ஐ லவ் யூன்னு சொல்லி கட்ட்ட்டி புடிச்சுக்க போறேன் .. ' அவன் மனத்திரையில் ஓடிய படம் முடியும்போது கையிலிருந்த காஃபி ஆறிப் போயிருந்து.

 அரைவல்ஸ் லௌஞ்சிற்கு சென்று ரேவதியின் வருகைக்காக காத்திருந்தான். விமானத்திற்கு வெளியே வந்த ரேவதி ஒரு இயந்திரம் போல் கொண்டு வந்திருந்த பெட்டிகளை பாக்கேஜ் கரூஸலில் இருந்து எடுத்து ஒரு ட்ராலியில் போட்டு, கஸ்டம்ஸ் மற்றும் இம்மிக்ரேஷன் பரிசோதனைகளை முடித்து தோழிகள் இருவரும் பின்னே இருக்க அரைவல்ஸ் லௌஞ்சிற்கு விரைந்தாள் .. ட்ராலியை தள்ளிக் கொண்டு சுற்று முற்றும் பார்த்தவாறு நடக்கத் தொடங்கினாள். சில கணங்களில் அருண் வெளியில் செல்லும் வழியின் பாதியில் நின்றவாறு கையை மேலே தூக்கி அசைப்பதைக் கண்டாள். ... அவள் கால்கள் அவனை நோக்கி நடக்க கண்கள் பனிக்கத் தொடங்கின .. அவனை நெருங்கியதும் தள்ளிக் கொண்டு வந்த ட்ராலியை அப்படியெ விட்டு விட்டு அவன்ருகே சென்று நின்றாள் .. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி சில கணங்கள் நின்றிருந்தனர் ..

அருணின் கண்களும் பனித்து இருந்தன .. ரேவதியின் கண்களிலோ தாரை தாரையாக கண்ணீர் வழிந்தோடியது .. அருண் அணிந்திருந்த கோட் பாக்கெட்டில் விட்டிருந்த இரு கைகளையும் எடுத்து அவளை நோக்கி நீட்ட அதற்காகவே காத்திருந்தவள் உதடுகள் பிதுங்கப் பொங்கி வந்த அழுகையுடன் அவன் கைகளுக்குள் தஞ்சம் புகுந்து அவன் மார்பில் முகம் புதைத்து அழுகையை தொடர்ந்தாள் ..குலுங்கியவளை ஒரு கையால் இறுக அணைத்தபடி அவள் மற்றவ்ர் நடக்கும் வழியில் விட்டிருந்த ட்ராலியை அப்பாதையின் ஓரத்திற்கு இழுத்தான்.

பிறகு இருகைகளாலும் அவளை அணைத்து உதட்டருகே உரசிய அவள் பட்டுக் கூந்தலில் முகம் புதைத்தான் .. வெகு நேரம் இருவரும் அப்படியே நின்று இருந்தார்கள் பிறகு அவள் முகத்தை இருகைகளில் ஏந்தி, "என்னங்க மேடம் வந்ததும் வராததுமா அழுகாச்சி?" ஒரு கன்னத்தில் இருந்த கையை இன்னும் அருகில் இழுத்து அவன் கோட்டின் கைப்பகுதிலேயே கண்களைத் துடைத்தவள் .. "நான் அழல . " என்றவாறு முத்துப் பற்கள் தெரியும்படி கன்னத்தில் குழிவிழ புன்னகைத்தவளை அருண் மறுபடி இறுக்கி அணைத்தான் .. சித்ராவும் அனுபமாவும் அவர்கள் அருகே வந்து ஒரு க்யூரியஸான சிரிப்புடன் அவர்களை பார்த்துக் கொண்டிருந்ததை கவனித்த அருண் குனிந்து அவள் நெற்றிப் பொட்டில் கன்னத்தை உரசி அவர்களுக்கும் கேட்கும்படி, "ஏய், கூட வந்தவங்களை இன்ட்ரொட்யூஸ் பண்ணற பழக்கமெல்லாம் இல்லையா?" என்றான். அவனிடமிருந்து சற்று நகர்ந்தவள் திரும்பி இடது கையால் தன் இடையைச் சுற்றிய அருணின் கைகளை அங்கேயே இருக்குமாறு பிடித்தபடி .. அவர்களை நோக்கி சற்று திரும்பி அவ்விருவரையும் பார்த்து "Sorry ... சித்ரா, அனுபமா .. this is Arun, Product Architect" என்று தொடர்ந்து அவன் பணிபுரியும் மென்பொருள் நிறுவனத்தின் பெயரைக் கூற அனுபமா, "வாவ் .. உங்க கம்பெனில இருந்து வர்ற நிறைய ஸாஃப்ட்வேர் யூஸ் பண்ணி இருக்கேன் ..

இப்பதான் அந்த கம்பெனில இருக்கற ஒரு Product Architectஐ மீட் பண்ணறேன். நீங்க வொர்க் பண்ணறது எந்த ப்ராடக்ட்?" என்றதற்கு அருண் தான் உருவாக்கும் மென்பொருளின் பெயரைக்கூற மறுபடியும் "வாவ" என்றபின் தொடர்ந்து, "ஐ அம் அனுபமா .. இவங்க ரெண்டு பேருக்கும் ரெண்டு வருஷம் சீனியர் .. இங்க தான் ஆன்-சைட் கோஆர்டினேட்டரா ஒரு வருஷமா இருக்கேன் .. ஒரு மாசம் லீவ்ல இண்டியா போய்ட்டு திரும்பறேன் ." என்று கிடைத்த வாய்ப்பில் முடிந்த வரை விரிவாக தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டாள். சித்ரா சுருக்கமாக, "ஐ அம் சித்ரா .. ரேவதியோட எம்.டெக் க்லாஸ்மேட். அவ கூடத்தான் நானும் ஜாயின் பண்ணினேன் .. " என்று தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டாள் " நீங்க எல்லாம் ஒரே ப்ராஜெக்டா இல்ல .. " என்றவன் முடிக்குமுன் ரேவதி "இல்ல வேற வேற .. அனுபமா இங்கயே கண்டின்யூ பண்ணுவாங்க .. நானும் சித்ராவும் மூணு மாசம் மட்டும்" என்றாள் "அவர்கள் இருவரையும் பார்த்து .. உங்களுக்கு ஜெர்ஸி ஸிடில சர்வீஸ்டு அப்பார்ட்மென்ட் குடுத்து இருக்காங்கன்னு ரேவதி சொன்னா .. மூணு பேரும் ஒரே அப்பார்ட்மென்டதானே?"

 "ஒரே அப்பார்ட்மென்ட்தான் ... வேற வேற ரூம்ஸ் .. அந்த அப்பார்ட்மென்ட் கொஞ்சம் பெரிசு .. மொத்தம் ஆறு ரூம்ஸ் வித் காமன் ஃபெஸிலிடீஸ் .. மத்த மூணு ரூம்ல இன்னும் ஒரு பொண்ணும் ரெண்டு பசங்களும் ஆல்ரெடி தங்கிட்டு இருக்காங்க" என்று அனுபமா விளக்கினாள் "சரி, நான் ஒரு பெரிய எஸ்.யூ.வி கொண்டு வந்து இருக்கேன் .. உங்க எல்லாரோட லக்கேஜும் அதுல பிடிக்கும் .. அதுலயே போயிடலாம் ... போற வழியில நல்ல இண்டியன் ஃபூட் கிடைக்கற ஒரு ரெஸ்டரான்ட்ல சாப்பிட்டுட்டு ஜெர்ஸி ஸிடி போலாம் .. I think you all can hit the sack by five to clear your jet lag" என்று அவர்கள் ஐந்து மணியளவில் ஜெட் லாக் விலக தூங்கப் போகலாம் என்றபடி ரேவதியின் ட்ராலியை தள்ளிக் கொண்டு நடக்க ஆரம்பித்தான் .. அவன் கையைப் பற்றி இழுத்த ரேவதியை திரும்பி பார்க்க 'நான் ஸ்கூலுக்கு போமாட்டேன்' என்று அடம்பிடிக்கும் குழந்தையைப் போல் முகத்தை வைத்துக் கொண்டு .. "நான் இப்ப அங்க போல .. உங்க கூட இருக்கேன் .. நீங்க நாளன்னைக்கு திரும்பி போறதுக்கு முன்னாடி என்னை கொண்டு போய் அங்க விடுங்க .." ரேவதியின் உணர்வுகளை அறிந்து கொண்ட அனுபமா,

"ஆக்சுவலி அருண், நாங்க மேனேஜ் பண்ணிப்போம் .. யூ கேன் கேரி ஆன்" என்றவள் குறும்புடன் "அந்த ரெஸ்டரான்ட் எதுன்னு மட்டும் சொன்னீங்கன்னா போதும் .. போற வழில நாங்களே அங்க சாப்பிட்டுக்குவோம்" என்றாள் ஒவ்வொரு நிமிடமும் அவளுடனே இருக்க நினைத்தாலும் அவள் தோழிகள் தவறாக நினைப்பதை விரும்பாமல் ரேவதியிடம், "ஏய், நீ போய் படுத்தேன்னா காலைல தான் எந்திரிப்பே .. .. எப்படியும் உனக்கு தேவையான ட்ரெஸ்ஸஸ் வாங்க வேண்டி இருக்கில்ல .. நாளைக்கு காலைல எட்டு மணிக்கெல்லாம் வந்து நான் கூட்டிட்டு போறேன் .. " என்றவனிடம் ரேவதி ஏமாற்றத்தையும் கோபத்தையும் முகத்தில் காட்ட ... அனுபமா, "ஓ, அருண் .. எங்களுக்கு புரியுது .. பாவம் இவ எவ்வளவு நாளா உங்களை பாக்காம வெய்ட் பண்ணிட்டு இருந்தாளோ .. எங்களைப் பத்தி கவலைப் படவேண்டாம் .. நாங்க தப்பாவும் எடுத்துக்க மாட்டோம் .. :" என்று அவனுக்கு நம்பிக்கையூட்ட "ஓண்ணு பண்ணுவோம் ..

இங்க இருந்து ஒண்ணா கிளம்பி ரெஸ்டரான்ட் போலாம் .. அங்கெ இருந்து உங்களுக்கு வேற டாக்ஸி அரேஞ்ச் பண்ணறேன் .. ஓ.கே?" என்று முடிவெடுத்தான் .. அவ்விருவரும் தத்தம் ட்ராலியை தள்ளிக் கொண்டு நடக்க அருண் ரேவதியின் ட்ராலியை தள்ளிக் கொண்டு நடந்தான் . .அவன் புஜங்களைப் பற்றியபடி அவனை ஒட்டியவாறு ரேவதி நடந்தாள். வெளியில் அவன் கொண்டு வந்திருந்த நமது இந்திய ஊர்திகளுடன் ஒப்பிட்டு பார்த்தால் பூதாகரமாகத் தோன்றும் GMC S.U.V யை நோக்கி நடந்து கொண்டு இருக்கையில் ரேவதி சற்று முன்னே சென்றாள். அருண் அவளை அழைத்து பதட்டத்துடன், "ஏய், என்ன முடியை வெட்டீட்டியா?" என்க ரேவதி "ம்ம்ம் கொஞ்சம் ஷார்ட் பண்ணி இருக்கேன் .." "இல்ல ரொம்ப ஷார்டா தெரியுது" என்றவாறு அருண் தன் பங்குக்கு ஏமாற்றம் கலந்த கோபத்தை முகத்தில் காட்டினான். சற்றும் யோசிக்காமல் ரேவதி அவனிடம், "ரொம்ப எல்லாம் ஷார்ட் பண்ணலப்பா?" என்றவாறு தலையை சிலிர்ப்பி தன் ஜடையை தோள் வழியே முன்னுக்கு கொண்டு வந்து அது அவள் வயிறு வரை படருவதை காட்டினாள்.


 அடுத்த கணம் எதற்கு கோபப்படுகிறான் என்று அவன் சொல்லுமுன் தான் அவர்களின் முதன்முதல் சந்தித்த இரவின் அவன் சேட்டைகளை எண்ணி அப்படி செய்ததை நினைத்து முகம் சிவந்து தலை குனிந்தவாறு "இதுக்காக தானே ரொம்ப ஷார்டுன்னு சொன்னீங்க ..." என்றாள் முகத்தில் குறும்பு தவழ "இப்படி எல்லாம் எனக்கு தெரியாது .. ப்ராக்டிகலா பாக்கும்போதுதான் எவ்வளவு ஷார்டாயிருக்குன்னு தெரியும்" என்று அவனது வேட்கையை அவளுக்கு தெரிவித்தான். பிறகு தொடர்ந்து, "ஏய், கல்யாணம் வரைக்கும் என்னால வெய்ட் பண்ண முடியாது ... இப்பவே சொல்லீட்டேன்" என்று அவள் காதில் முணுமுணுத்தான். இருவரது பேச்சையும் ஒட்டுக்கேட்ட சித்ரா அனுபமாவிடம் ஏதோ குசுகுசுத்ததை கண்டு மேலும் முகம் சிவந்த ரேவதி அவனை விட்டு சற்று விலகி திரும்பி அவனை பார்த்து உதட்டை சுழித்து பழிப்புப் காட்டியபடி சித்ராவுடன் நடக்கத் தொடங்கினாள்.

 ரெஸ்டாரண்டில் உணவருந்தியபின் அருண் அழைத்துக் கொடுத்து இருந்த டாக்ஸியில் சித்ராவும அனுபமாவும் ஜெர்ஸி ஸிடி செல்ல அருணும் ரேவதியும் அன்று காலை அருண் செக்-இன் செய்திருந்த ஹோட்டலை நோக்கிச் சென்றனர். காரில் போகும்போது அவள் மனதில் அவன் கல்யாணம் என்று சொன்னதை நினைவு கூர்ந்து ... 'எப்ப சொல்றது? .. சொன்னா மனுஷனோட உற்சாகம் எல்லாம் போயிடும் ... ஆனா சொல்லாம இருக்க கூடாது .. முடிஞ்சா இவர் எதாவுது ஆரமிக்கறதுக்கு முன்னாலயே சொல்லிடணும்' என்று மனதுக்குள் முடிவெடுத்தாள். ஹோட்டலை அடைந்ததும் வாலேயிடம் கார் சாவியை ஒப்படைத்த அருண் லாபியிலிருந்த பெல்-காப்டனிடம் காரிலிருக்கும் ரேவதியின் பெட்டிகளை தான் தங்கியிருக்கும் அறைக்கு கொண்டு வரும்படிக் கூறினான். இருவரும் தங்களின் முதல் சந்திப்பு மனத்தில் வர லிஃப்டில் ஏறியதிலிருந்து மௌனம் காத்தபடி அவனது அறையை அடைந்தனர். உள்ளே நுழைந்ததும் கதவை காலால் சாத்திய அருண் ரேவதியின் இடையை பற்றி அருகில் இருந்த சுவற்றில் அவளை சாய்த்து அவளது உதடுகளை தன் உதடுகளால் கைப்பற்றினான். அவனது திடீர் தாக்குதலில் சிறிது அதிர்ந்த ரேவதி அடுத்த கணம் கைகளை மாலையாக்கி அவன் கழுத்தில் அணிவித்து அவனை இன்னும் தன்னுடன் இழுத்து எதிர் தாக்குதல் நடத்தினாள். நான்கு உதடுகளும் இரு நாக்குகளும் கலந்து கொண்ட போர் இருதரப்பிற்கும் வெற்றியின்றி நடந்து கொண்டிருந்தது. ரேவதியின் பெட்டிகளைக் கொண்டு வந்த பெல் பாய் அறையின் காலிங்க் பெல்லை அழுத்த இருவரும் மூச்சு வாங்க விலகினர் ..


கதவை நோக்கி அருண் செல்ல வேகமாக ரேவதி தன் சிவந்த முகத்தையும் அதில் படர்ந்த வெட்கத்தையும் மறைக்க அறைக்குள் சென்றாள். அந்த அறையில் இருந்த பெரிய படுக்கைக்கு அருகே எதிரெதிரிலிருக்குமாறு இரட்டை இருக்கை அமைந்த சோஃபாக்கள் நடுவில் ஒரு சிறு சாப்பாட்டு மேசையுடன் போடப் பட்டிருந்தன. அதில் ஒன்றில் அமர்ந்து , 'சே, அவர் தான் காஞ்சு போன மாதிரி நடந்துக்கறார் .. உனக்கு என்ன அப்படி ஒரு வெறி' என்று கேட்ட உள்மனதுக்கு பதிலளிக்கத் தெரியாமல் ரேவதி வெட்கத்தால் கண்களை மூடியபடி இருந்தாள். வாசகர்களே, அடுத்து வரும் நான்கு இடுகைகளில் நான் எழுதி இருந்தது ரேவதியின் மன நிலையை சரியாக சித்தரிக்கவில்லை. அவளது தன்மானத்தையும் தன்னம்பிக்கையையும் பறைசாட்ட நான் எழுதிய வரிகளில் சில வாசகர்கள் ரேவதி திமிருடன் பேசுவது போல் உணர்ந்தார்கள். இந்த அளவுக்கு உதவிய அருணிடம் எப்படி அவள் அப்படி பேசலாம் என்று விவாதித்தனர்.

ஆனால் அதே பகுதிகளை வேறு சில வாசகர்கள் பாராட்டியும் இருக்கிறார்கள். எதிர்த்தவர்கள் வாதத்தை ஏற்று அப்பகுதிகளை மாற்றி எழுதி இருக்கிறேன். அவைகளை படிக்க இங்கு க்ளிக் செய்யவும். அருண் ரேவதியின் பெட்டிகளை அறைக்குள் வைத்தவனுக்கு டிப்ஸ் கொடுத்து அவனை வழியனுப்பி கதவைச் சாத்தியபின் அறைக்குள் வந்தான். கண் மூடி அமர்ந்திருந்த ரேவதியின் அருகே வந்தவன் ஒரு கையால் அவள் முகவாயைப் பிடித்து தூக்க கண் விழித்து மேல் நோக்கி அவனை பார்த்தவளிடம் "ம்ம்ம்? " என்க .. ஒன்றுமில்லை என்பதை தலையசைப்பில் சொன்னாள். "ஃப்ளைட்டுல நல்லா தூங்கிட்டு வந்தியா இல்ல இருக்கற இன்ஃப்ளைட் டி.வீ சானல் ஒவ்வொண்ணா பாத்துட்டு வந்தியா?" "அங்க கிளம்பினதுல இருந்து யூ.எஸ் டைம்படி தூங்கி எந்திருச்சுட்டு இருந்தேன் .. ஒவ்வொரு சமயம் நான் தூங்கிட்டு இருக்கும் போது சாப்பாடு கொண்டு வந்தாங்க .. அதுக்காக எழுந்திரிக்க வேண்டியதாயிடுச்சு .. " "ஏன் .. " "நீங்க இருக்கப் போறதே ரெண்டு நாள் .. அதுல நீங்க முழிச்சுட்டு இருக்கறப்ப நான் ஜெட் லாக்ன்னு தூங்க வேண்டாம்னுதான்" எப்படியும் மாலை எட்டு மணிக்கு மேல் தூங்காமல் இருக்க முடியாது என்று அறிந்திருந்தாலும் அவளது உற்சாகத்தைக் கெடுக்க விரும்பாமல் "எப்பவும் ஈஸ்ட்ல இருந்து வெஸ்ட் ட்ராவல் பண்ணும் போது ஜெட் லாக் கொஞ்சம் கம்மியாத்தான் இருக்கும் ... " என்றவாறு அவள் வலதுபுறம் அமர்ந்தான்.


 தன் இடதுகையை அவள் தோளில் போட்டு வலதுகையால் அவள் முகத்தை ஏந்தினான். அவன் பார்வையை தாங்க முடியாமல் குனிந்து அவன் தோளில் தலை சாய்க்கப் போனவளை தடுத்து "ஏன் எங்கிட்ட இவ்வளவு நாளா சொல்லலே" "என்ன சொல்லலே?" "மேடம் என்னை லவ் பண்ணறதை. எப்ப என்னை லவ் பண்ண ஆரமிச்சீங்க?" "ம்ம்ம் ... உங்களை நேரில பாக்கறதுக்கு முன்னாடில இருந்து ..." "ஏய், என்ன சொல்ற நீ ... வினிதா நீ என்னை காதலனா கற்பனைதான் பண்ணிட்டு இருந்தேன்னா" "அதெல்லாம் உங்ககிட்ட சொன்னாங்களா?" என்றவளின் முகம் தன் அந்தரங்கம் பகிரங்கப் படுத்தப் பட்டதினால் ஏற்பட்ட வலியை காட்டியது. அதை உணர்ந்த அருண் "நீ என்னெல்லாம் வினி கிட்ட சொன்னேன்னு எனக்கு தெரியாது .. க்ளினிக்குல உன்னோட ட்ரீட்மென்டுக்கு அப்பறம் உன்னை என் ஃப்ளாட்டுக்கு கூட்டிட்டு போறதைப் பத்தி பேசும் போது நான் உன்னை காதலிக்கறதா சொன்னேன் .. " சொல்ல சொல்ல அவள் முகம் பிரகாசிப்பதை கவனித்தபடி "I think she didn't expect it .. நான் உன்மேல பரிதாபப் பட்டு ஹெல்ப் பண்ணறதா நினைச்சுட்டு இருந்திருக்கா .. அப்பத்தான் இதை சொன்னா .."
"ம்ம்ம் .. சரியான ஆளு ... அப்பவே என்னை லவ் பண்ண ஆரமிச்சுட்டு நீங்க ஏன் எங்கிட்ட சொல்லலே?" "அது ஒரு பெரிய கதை .. " என்று தொடங்கி தண்டபாணிக்கு தான் கொடுத்த வாக்கைப் பற்றி கூறினான், "அப்ப எல்லார்கிட்டயும் சொல்லி இருக்கீங்க எங்கிட்ட மட்டும் சொல்லலே?" "ம்ம்ம் ... " "நான் உங்களை ஒரு ஃப்ரெண்டா மட்டும் பாத்துட்டு வேற யாரயாவுது லவ் பண்ணி இருந்தா என்ன பண்ணிருப்பீங்க?" "நான் உன்னை லவ் பண்ணாம வேற யாரையாவுது லவ் பண்ணி இருந்தா நீ என்ன பண்ணிருப்பயோ அதைத்தான் நானும் பண்ணி இருப்பேன்" என்றவன் தொடர்ந்து "But you know something? நீ என்னை லவ் பண்ணலேன்னுதான் அவங்க எல்லாம் நினைச்சுட்டு இருந்தாங்க. வினிக்கே அது ஒரு பெரிய ஸர்ப்ரைஸ். ஆனா நான் உங்கிட்ட ப்ரொபோஸ் பண்ணினா என்னை கல்யாணம் பண்ணிக்க ஒத்துக்குவேன்னும் நம்பினாங்க" அவன் தோளில் முழுவதுமாக சாய்ந்து சிறிது மௌனம் காத்தவள் தலையை நிமிர்த்தாமல்

"அருண் .. நான் உங்ககிட்ட ஒண்ணு சொல்லணும் .. " "என்ன ..." "நீங்க என்னை கல்யாணம் பண்ணிக்கலேன்னா பரவால்லை ... என்னைக் கேட்டா நம்ம கல்யாணம் பண்ணிக்க வேண்டாம்னு சொல்லுவேன் ..." ஒரு நிமிடம் அவள் முகத்தை நிமிர்த்தி அவளை பார்த்தவன் "ஓ, ரெண்டு பேரும் எப்பவும் லவர்ஸாவே இருக்கலாம்னு சொல்றயா? ... எனக்கொண்ணும் அதில ஆட்சேபணை இல்லயே .. " "இல்ல நீங்க வேற யாரையாவுது கல்யாணம் பண்ணிக்கணும் .. " "உன்னை லவ் பண்ணிட்டு வேற யாரையாவுது கல்யாணம் பண்ணிக்கணும்னு சொல்றயா? நீங்க என்ன பண்ணப் போறதா உத்தேசம்?" "I love you .. I will always love you .. எப்ப நான் அந்த தொழில்ல இறங்கினனோ அப்பவே நான் கல்யாணம் பண்ணிக்கப் போறதில்லைன்னு முடிவு பண்ணி இருந்தேன் ... " "ஏன் பண்ணிக்க மாட்டேன்னு முடிவெடுத்தே? ஆனா தயவு செஞ்சு எச்சிலான உடம்பு, புனிதம் போயிருச்சுன்னு அப்படீன்னு சினிமா டயலாக் அடிக்காதே." என்று ஏளனமாகச் சொன்ன அருணை அவன் தோளில் சாய்ந்திருந்தவள் எழுந்து அமர்ந்து அவனை கூர்ந்து நோக்கினாள்.

 "மாட்டேன். எங்க அம்மாவை காப்பாத்த எனக்கு வேற வழி தெரியல ... I had to do it .. கேவலமான தொழில்தான் பண்ணிட்டு இருந்தேன் .. ஆனா நான் என்னை கேவலமா எப்பவும் நான் நினைக்கல ... கண்டவன் எச்சில் பட்ட உடம்புதான் ஒத்துக்கறேன் ஆனா என் மனசுக்குள்ள இருக்கற புனிதம் இன்னும் அப்படியேதான் இருக்கு .." லேசாக இறுகிய அவள் முகத்தில் அவளது தன்னம்பிக்கையும் தன்மானமும் தாண்டவாடின. "Then why?" "ஆனா மத்தவங்க கண்ணுல நான் கேவலமான பொண்ணுதானே? தியாகம் பண்ணறதா நினைச்சுட்டு என்னை யாரும் கல்யாணம் பண்ணிக்க வேண்டாம்ன்னுதான் அப்படி முடிவெடுத்தேன் ... " "ஓ! நான் தியாகம் பண்ணறேன்னு சொல்லறயா?

இந்த தியாகத்துல எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை .. ஐ லவ் யூ ... பீரியட்" "தெரியும் .." "அப்பறம் என்னடா?" "நீங்க தியாகம்னு நினைக்காம இருக்கலாம். சுத்தி இருக்கறவங்க அப்படித்தானே நினைப்பாங்க? வேண்டாம் அருண் ..." "சோ, இப்ப நான் கொஞ்ச நாள் உங்கூட ஜாலியா இருந்துட்டு வேற கல்யாணம் பண்ணிட்டு உன்னை மறந்துடணும் .. அப்படித்தானெ?" கண்களில் நீர் ததும்ப "அது உங்க இஷ்டம் .. சொல்லப் போனா உங்களுக்கு வரப் போற வொய்ஃபும் அதைத் தான் எதிர்பாப்பா ... " "என்னை புரிஞ்சுக்காதவங்க என்ன நினைக்கறாங்கன்னு எனக்கு கவலை இல்லை" "அது மட்டும் இல்லை அருண் என்னை கல்யாணம் பண்ணிகிட்டா நிறைய பிரச்சனை வரும் .. வேண்டாம்" சிறிது மௌனம் காத்த அருண்,

"நிறைய பிரச்சனைங்கள எங்கிட்ட சொல்லி அப்படி வந்தா எப்படிடா ஃபேஸ் பண்ணுவேன்னு ஏற்கனவே மாமா என்னை சாலஞ்ச் பண்ணி இருக்கார் .. அவர் சொன்னதுக்கும் அதிகமா வரக்கூடிய பிரச்சனைங்களை ஃபேஸ் பண்ண்ற மனப்பக்குவம் எனக்கு இருக்குடா .. அனேகமா நீ எதையும் புதுசா சொல்லப் போறதில்லை .. any how .. " என்றவாறு எழுந்து நின்று அவளை இழுத்து எழுந்து நிற்க வைத்து அவளது இடையை வளைத்து அணைத்தான்.. பிறகு, "இப்ப போய் நல்லா ஒரு குளியல் போட்டுட்டு கம்ஃபர்டபிளா ஒரு ட்ரெஸ போட்டுட்டு வா .. குளிக்கும்போதே என்னென்ன பிரச்சனைன்னு நல்லா யோசி .. you need time to think and organize your thoughts .. " என்றவாறு அவளை குளியலறைக்கு அனுப்பினான். சோஃபாவில் அமர்ந்து தலையை பின்புறம் சாய்த்து சில நிமிடங்கள் கண்மூடி யோசனையில் ஆழ்ந்திருந்தான். பிறகு ரேவதிக்காக காத்திருக்கும் சிறிது நேரத்தில் தன் அலுவலக வேலைகளில் கவனம் செலுத்த எண்ணி தன் லாப்டாப்பில் மூழ்கினான். குளிக்கும் போது ரேவதி வரக்கூடிய இடுக்குகளை ஒவ்வொன்றாக மனதில் கணக்கிட்டாள் ..

 அவளுக்கு சென்னையில் ஷண்முகத்துடன் நேர்ந்த சந்திப்பும் அதை அருண் கையாண்ட விதமும் மனதுக்கு வர .. 'மனுஷன் அந்த மாதிரி பிரச்சனைகளை எல்லாம் நிச்சயம் யோசிச்சு வெச்சு இருப்பார் ... மனசுக்குள்ள கொஞ்சம் கஷ்டப் பட்டாலும் வெளிய காட்டாம எனக்கு ஆறுதல் சொல்லுவார் .. ' 'என்னோட பழைய கஸ்டமர் யாரையாவுது நேரில் பாத்தாலும் அவர் ரியாக்க்ஷன் அப்படித் தான் இருக்கும் .. ' 'ஆனா, வெளி ஆளுங்கனால வரக்கூடியதை மட்டும் தான் யோசிச்சு இருப்பார் .. எனக்கும் அவருக்கும் நடுவுல வரக்கூடியதை நிச்சயம் யோசிச்சு இருக்க மாட்டார் .. ' குளித்து முடித்த ரேவதி அவள் சென்னையில் இருக்கும்போது போட்டிருந்ததைப் போன்ற ஒரு ஹவுஸ் கோட்டில் வர தன் லாப்டாப்பிலிருந்து கண் எடுத்து "ஏய், குளிரல? இந்த ஹவுஸ் கோட் தாங்குதா?"
"உள்ள நீங்க சொல்லி வாங்கின தெர்மல் போட்டு இருக்கேன் .. " "அப்ப அதை மட்டும் போட்டுட்டு வந்துருக்கலாம் இல்ல ?" "ம்ம்ம் ... ஆசை" என்றவாறு அவனருகில் சோஃபாவில் அமர்ந்தாள்.

 அவள் தோளில் கைபோட்டு இன்னும் பக்கத்தில் இழுத்தவாறு "ஏன்?" என்றவனை மிக அருகில் பார்த்த ரேவதி "கூச்சமா இருக்கும் ..." என்றவள் அவன் கண்களை பார்த்து "முன்ன மாதிரியெல்லாம் என்னால உங்க முன்னால கூட இருக்க முடியுமான்னு தெரியல .. ஒரு மாதிரியா இருக்கு ..." என்றவாறு அவன் தோளில் தலை சாய்த்தாள் .. "ஏய், நான் விளையாட்டா சொன்னேன்டா ..." தலையை நிமிர்த்திய ரேவதி "நீங்க வேலையை கண்டின்யூ பண்ணுங்க .. " என்றபடி எழ முயற்சித்தாள். "ம்ம்ம் ... சும்மா கிடைச்ச பத்து நிமிஷத்துல சில மெயில் ரிப்ளை பண்ணினேன் ... இனி அப்பறம் நேரம் கிடைக்கும் போது பாத்துக்கறேன். நாளைக்கு கொஞ்ச நேரம் வந்துருக்கற எல்லா மெயிலையும் டௌன்லோட் பண்ணிட்டா ... அப்பறம் திரும்பி போகற ஆறு மணி நேர ஃப்ளைட்டுல உக்காந்து பாக்கி ரிப்ளை எல்லாம் முடிச்சுடுவேன். வீட்டுக்கு போனதும் சும்மா கனக்ட் பண்ணி விட்டுட்டு படுத்தா எல்லாருக்கும் மன்டே மார்னிங்க் அவங்க சீட்டுக்கு வரும் போது என் ரிப்ளை காத்துட்டு இருக்கும்" என்றவாறு தன் லாப்டாப்பை மேஜையின் மேல் வைத்தான்.

 அடுத்த கணம் அவள் தோளில் இருந்த கையை இடைக்கு இறக்கி சற்று அவள் பக்கம் திரும்பி இன்னொரு கையை அவள் தொடைகளுக்கு கீழ் கொண்டு சென்று பக்கத்தில் அமர்ந்திருந்த அவளை எடுத்து "ம்ம்ம் .. என்னது ..." என்ற அவளது சிறு கூச்சலை பொருட்படுத்தாது அவளை மடிமேல் அமர்த்தி முன்பு தரையிலிருந்த அவள் கால்களை சோஃபாவில் படர விட்டான். அவள் பின் புறம் சரிந்து விழாமல் இருக்க அருண் அவள் இடையை வளைத்து இருந்த கையை இன்னும் இறுக்கி மறுகையால் அவள் முகவாயை ஏந்தி "ம்ம்ம் .. இபப் சொல்லு ...என்னென்ன பிரச்ச்னை வரும்னு ..." அவனை அளவுகடந்த காதலுடன் பார்த்துக் கொண்டு இருந்தவள் அவன் இரு கன்னங்களிலும் அழுந்த முத்தமிட்டாள்.. பிறகு, "மத்தவங்களால என்ன பிரச்சனை வந்தாலும் நீங்க அதை ஃபேஸ் பண்ணுவீங்கன்னு எனக்கு தெரியும். ... " "மத்தவங்கன்னா?" "அன்னைக்கு ஷண்முகத்தைப் பாத்தமே அந்த மாதிரி .. என்னை அப்படி தெரிஞ்ச வேற யார் வந்தாலும் நீங்க சமாளிச்சுடுவீங்கன்னு தெரியும் .. அவமானம் ஒண்ணும் இல்லென்னு எங்கிட்ட சொல்லுவீங்க ..

மனசுக்குள்ள கொஞ்சம் வலிச்சாலும் எங்கிட்ட காமிச்சுக்க மாட்டீங்க .. " "அதான் பிரச்சனையா .. " "அதெல்லாம் பிரச்சனை இல்லைன்னு சொன்னேன் .. எனக்கு தெரியும் போகப் போக அதெல்லாம் சரியாயிடும்" "அப்பறம் வேற என்ன?" அவன் முகத்தை தன் பக்கம் திருப்பி இரு கைகளால் அவன் கன்னங்களை ஏந்தி "நான் உங்களை என் உயிரா லவ் பண்ணறேன் அருண் .. நான் சொல்றதை என்னடா இவ பெரிய கொம்பாட்டம் பேசறாளேன்னு தப்பா எடுத்துக்க கூடாது .. " "ஹெல்லோ!! knock knock" என்றவாறு அவள் நெற்றியை ஒரு விரலால் கதவைத் தட்டுவதைப் போல் செய்து .. "enough of preamble .." அடுத்த கணம் தனது கற்கும் ஆர்வத்தை "preambleன்னா என்ன?" என்றவாறு காட்டினாள் போலியான கடுகடுப்பை முகத்தில் காட்டி, " ம்ம்ம் .. அதை அப்பறமா நம்ம டீச்சிங்க் செஷன்ல சொல்றேன் .. நீ முதல்ல சொல்ல வந்ததை சொல்லு" சிரித்தவாறு எழுந்ததற்கு அருண், "ஏன் என் மடில உக்காந்துட்டு சொல்ல மாட்டீங்களா?" என்றான். "ம்ம்ம் .. நான் சொல்லப் போறது கொஞ்சம் சீரியஸான விஷயம் .. அப்படி உக்காந்துட்டு இருந்தா உங்க கை சும்மா இருக்காது .. ." என்றவாறு எதிரே இருந்த சோஃபாவில் அமர்ந்தாள்

 "ம்ம்ம் சரிங்க மேடம் ..:" என்ற வாறு தன் கைகளைக் கட்டிக் கொண்டு "இப்ப சொல்லுங்க .. " "நம்ம ரெண்டு பேருக்குள்ள நிறைய பிரெச்சனை வரும் ... ""நம்ம ரெண்டு பேருக்கு நடுவல பிரச்சனைன்னா வாட் யூ மீன்?" "Could be difference of opinion or likes and dislikes" என்று கருத்து வேறுபாடுகளையும் விருப்பு வெறுப்புக்களையும் குறிப்பிட்டாள், தொடர்ந்து, "அப்பறம் நான் வேலைக்கு போறதைப் பத்திகூட பிரச்சனை வரலாம்" "நீ வேலைக்கு போறதைப் பத்தி என்ன பிரச்சனை வரப்போகுது. ஏன்டா உன் கெரியர்ல எனக்கு இன்டரெஸ்ட் இல்லேன்னா நான் எதுக்கு உன்னை எம்.டெக் படிக்க சொல்லணும்? நீ சொன்ன மாதிரி பி.ஈ முடிச்சதும் கிடைக்கற வேலைல சேந்துக்கோன்னு சொல்லி இருப்பேன் இல்லயா?" "தெரியும் அருண். நானும் வாழ்க்கையில எதையாவுது சாதிக்கணும்னு இருக்கேன் .. உங்க அளவுக்கு இல்லேன்னாலும் ஓரளவுக்காவுது ஒரு நல்ல பொசிஷனுக்கு வரணும்ன்னு இருக்கேன்" என்று முடித்தாள். "என் அளவுக்கு என்ன? அதைவிட நீ நிறைய சாதிக்கணும்டா. I was born with a silver spoon .. நான் சாதிச்சது ஒண்ணும் பெரிய விஷயம் இல்லை. கெரியர்ல நான் சக்ஸீட் ஆகறதை விட நீ சக்ஸீட் ஆனா நமக்கும் நாம உருவாக்கப் போற குடும்பத்துக்கும்தானே பெருமை? இதுல பிரச்சனை என்ன வரப்போகுது?" "இல்லை, நாளைக்கு குழந்தைன்னு வரும்போது .. " "குழந்தைன்னு வரும் போது .. it's a very good point ...முதல்ல இதை சொல்லு உனக்கு குழந்தை பெத்துக்கணும்னு நல்லா வளக்கணும்னு ஆசை இருக்கா?" "உங்களுக்கு இல்லையா?" 

"நிச்சயம் இருக்கு முதல்ல நீ பதில் சொல்லு .. " "எனக்கு ஒரு குட்டி அருண் வெணும் .. " என்றாள் சற்று நிறுத்தி "நான் என்ன நினைக்சுட்டு இருந்தேன் தெரியுமா? வேலைக்கு வந்ததும் முதல்ல நீங்க சொன்ன மாதிரி படிக்க பணம் இல்லாம கஷ்டப் படறவங்க யாருக்காவுது அவங்க படிப்பு முழுசும் ஸ்பான்ஸர் பண்ணனும். அதுக்கப்பறம் ஒரு குழந்தையை தத்து எடுத்து வளக்கணும்னு இருந்தேன். தத்து எடுக்கறதுக்கு பதிலா அது உங்க குழந்தைன்னா நீங்க என்னை கல்யாணம் பண்ணிக்கலேன்னாலும் ரொம்ப சந்தோஷமா அதை என் வயித்துல சுமந்து பெத்துக்குவேன். " என்று அழுத்தமாக முடித்தாள். "ஃப்ளைட்டுல வந்தா சிலருக்கு தலை சுத்தும்பாங்க .. உனக்கு எதோ நட்டு லூஸான மாதிரியில்ல இருக்கு? குழந்தை பொறந்த உடனே நீ வேலையை விடுன்னு சொல்லுவேன்னு நினைக்கறயா?" அதற்கு ரேவதி மௌனம் காக்க அருண் தொடர்ந்தான்

 "பிறந்ததுக்கு அப்பறம் அம்மாவோட அரவணைப்பு எந்த அளவுக்கு ஒரு குழந்தைக்கு தேவைன்னு உனக்கே தெரியும் .. அந்த அரவணைப்புக்காக உன் கெரியர்ல சின்ன ப்ரேக் வரலாம் ... இன்னும் ரெண்டு மூணு வருஷ்த்துக்குள்ளயே அந்த ப்ரேக் வரலாம். அதை நீ வேலை செஞ்ச ரெண்டு மூணு வருஷத்தோட கம்பேர் பண்ணினா .. கெரியர்ல ஒரு பெரிய gap (இடைவெளி) இருக்கற மாதிரி தெரியும் .. உன் கெரியர்ல நீ ரிடையர் ஆகற வரைக்கும்னு பாத்தா முப்பது வருஷத்துக்கும் மேல இருக்கு .. அந்த முபப்து வருஷத்தோட கம்பேர் பண்ணினா அந்த இடைவெளி ரொம்ப சின்னதுடா ... அப்படி யோசிச்சு பாரு. ஒண்ணு நிச்சயமா சொல்றேன் .. நமக்கு பொறக்க போற குழந்தைக்காக நான் எந்த விதத்திலாவுது என் கெரியரை விட்டுக் கொடுக்கணும்னா நிச்சயம் விட்டுக் குடுப்பேன்.

இன் ஃபாக்ட் எங்க கம்பெனில மட்டேர்னிடி லீவ் மாதிரி பட்டேர்னிடி லீவ் உண்டு தெரியுமா? நீ வேலைக்கு போக ஆரம்பிக்கும் போது நான் கொஞ்ச நாள் வீட்டுல இருந்து குழந்தையை பாத்துக்குவேன் .. " என்று அருண் சொல்லி முடிக்க முடிக்க எழுந்து வந்து அவன் மடியில் அமர்ந்த ரேவதி "நிஜமா?" என்றாள். இறுக அணைத்த அருண், "This is better! சரி, இப்ப மத்த பிரச்சனை என்ன வரும்னு சொல்லு .. நீ என்னவோ difference of opinion or likes and dislikesன்னு ஆரம்பிச்சே?" அவன் கழுத்தில் கைகளைக் கோர்த்தவாறு "ஆமா .. " "அதான் என்னங்கறேன் .. " "இந்த மூணு வருஷமா நீங்க என்னோட ஒவ்வொரு விஷயத்துலயும் அக்கறை எடுத்துட்டு என்ன பண்ணறது எப்படி பண்ணறதுன்னு சொன்னீங்க. எல்லாம் நீங்க சொன்னபடி செஞ்சாலும் எனக்கும் சரின்னு பட்டதுனால தான் செஞ்சேன். எல்லா விஷயத்துலயும் உங்களுக்கு பிடிச்ச மாதிரி, நீங்க சொல்ற மாதிரியே எப்பவும் என்னால நடந்துக்க முடியுமான்னு தெரியல. ப்ளீஸ் இதை தப்பான அர்த்தத்துல எடுத்துக்காதீங்க இந்த மூணு வருஷத்துக்கு முன்னால என்னைப் பத்தியோ ஈவன் வீட்டைப் பத்தியோ என்ன முடிவெடுக்கறதுன்னாலும் அது நான் சுயமா யோசிச்சு எடுத்ததாத்தான் இருக்கும்.

அம்மா எனக்கு அந்த அளவுக்கு சுதந்திரம் கொடுத்து இருந்தாங்க" என்று ஆரம்பித்தவளை வழி மறித்து .. "வெய்ட், வெய்ட், அம்மணீ ! கல்யாணத்துக்கு அப்பறமும் இந்த மாதிரி என்ன பண்ணனும் எப்படி பண்ணனும்னு நான் சொல்லிக்குடுப்பேன்னு நினைச்சுட்டு இருந்தீங்கன்னா அதை இப்பவே மறந்துடுங்க"
"சரி, நான் அப்படி எதாவுது செஞ்சு நான் உங்களுக்கு பிடிக்கலைன்னா உங்களுக்கு கோவம் வராதா? கொஞ்ச நேரத்துல நீங்க அதை மறந்துடுவீன்னும் எனக்கு தெரியும். ஆனா எப்பவாவுது கோவத்துல 'சே, சாக்கடைல கெடந்தவளை வீட்டுக்கு கூட்டீட்டு வந்து இவ்வளவு பண்ணியும் இப்படி நடந்துக்கறயே'ன்னு ஒரு வார்த்தை சொன்னீங்கன்னா என்னால தாங்க முடியுமான்னு தெரியல அருண்.

ஒரு காலத்துல சாக்கடைல கிடந்தவதான் ஆனா நான் அப்படி இருந்தவங்கறதுக்காக வாழ் நாள் முழுக்க ஒவ்வொண்ணுக்கும் யோசிச்சு நடந்துக்க முடியுமான்னு தெரியல. நான் ஒரு சாதாரணப் பொண்ணா இருக்க ஆசைப் படறேன் அருண்" கடந்த இரண்டரை வருடங்களில் அவனிடம் ஏற்பட்ட மாற்றங்களை ரேவதி அறிந்து இருக்கவில்லை. இன்னமும் அவர்களது முதல் சேர்க்கையின் போது அவளது மனதைக் கொத்திக் குதறி ரணமாக்கிய அவனது வார்த்தைகள் எதிரொலித்துக் கொண்டிருந்தன. கண்களில் நீர் ததும்ப அவள் முகத்தை கைகளில் ஏந்தி, "நீ என்ன சொல்ல வர்றேன்னு தெரியுதுடா.

நான் உன்னை முதல் முதலா பாத்தப்ப நான் உன்னை ட்ரீட் பண்ணின விதத்தை இப்ப நினைச்சாலும் வெக்கப் படறேன். அந்த மாதிரி முன் கோவப் படற அருண் செத்துட்டாண்டா" அவள் கண்களும் கலங்க அவன் தோளில் சாய்ந்தவாறு, "நடந்தது நடந்துருச்சு இனி என்னோட கடந்த கால வாழ்க்கையைப் பத்தி யோசிக்கக்கூடாதுன்னு இருக்கேன் அருண். நமக்குள்ள எவ்வளவோ difference of opinion வரலாம் அது ஒண்ணொண்ணுக்கும் இவர்னாலதான் நான் இந்த நிலைமைக்கு வந்துருக்கேன் .. அதனால அவர் சொன்னதுதான் சரின்னு இருக்க என்னால முடியுமான்னு தெரியல ... " என்று அவள் சொல்லச் சொல்ல அருண் தன் மறு கையை அவளது இடையை சுற்றியிருந்த கைக்கருகே கொண்டு சென்று கை தட்ட ஆரம்பித்து இருந்தான்.

மேலும் எதுவும் சொல்லாமல் "என்ன? .." என்றவளிடம் "ஓண்ணுமில்லை நீ சொன்னது எனக்கு ரொம்ப புடிச்சு இருந்துது .. I applauded you .. " "இந்த கிண்டல்தானே வேண்டாம் .." "கிண்டல் பண்ணலடா...நிஜமா ... சொந்தமா யோசிக்காம எல்லா விஷயத்துலயும் புருஷனை நம்பி இருந்தா எனக்கு சுத்தமா பிடிக்காது ... உனக்கும் அது தெரிஞ்சு இருக்கும்னு நெனைச்சேன் .. நீ மட்டும் அப்படி இருந்தியோ .. பட்டை பட்டைய கெளப்பிடுவேன் ..." என்று போலியாக மிரட்டினான்.




No comments:

Post a Comment