Tuesday, May 5, 2015

அக்னி சாட்சி - அத்தியாயம் - 26

மாலை சுதர்சனத்தின் இல்லத்தில் ..

சுதர்சனம், "வாடா தடியா. வாம்மா ப்ரீதி" என வரவேற்றார்.

உடன் நின்று வரவேற்ற சுதர்சனத்தின் மனைவி சித்ரா, "ஏன்னா, இனி இந்த மாதிரி உரிமை எடுத்துக்கப் படாது. பாருங்கோ நீங்க தடியான்னு சொன்னதும் ப்ரீதி முகத்துல எள்ளும் கொள்ளும் வெடிக்கறதை" எனக் கிண்டலடிக்க ப்ரீதி வெட்கத்தில் முகம் சிவக்க அவள் எதுவும் சொல்வதற்கு முன் ...

ஆனந்த், "கவலையே படாதீங்கோ மாமா. நீங்க என்னை என்ன வேணும்ன்னாலும் சொல்லிக் கூப்படலாம். நேத்துத்தான் அவளே என்னை எருமை மாடுன்னு கூப்பிட்டா. அட்லீஸ்ட் நீங்க என்னை மனுஷனாவாவுது பார்க்கறேளே"

சித்ரா போலியாக ப்ரீதியைப் பார்த்து, "என்னம்மா இது?"

பிரபாகரின் மரணத்தை எண்ணி முகம் வாடி இருந்த ப்ரீதி மேலும் முகம் சிறுக்க, "ஆனந்த், I didn't mean to hurt you" எனப் பரிதாபமாகப் பார்க்க

ஆனந்த், "I know my dear சும்மா ஒரு கிண்டலுக்கு சொன்னா இப்படி முகம் சுருங்கிடுது?"



சித்ரா, "கூப்படறோத நிறுத்தி இருக்கியேன்னுதான் நான் ஆச்சர்யப் பட்டேன்"

ஆனந்த், "ஏன்? மேல என்ன செஞ்சு இருக்கணும்"

சித்ரா, "உன்னை ஒழுங்கா மிறட்டி வெக்கலை. இல்லைன்னா இந்த மாதிரி இப்படி சபைல அவ சொன்னதை சொல்லுவியா? உங்க மாமாவைப் பாரு எப்படி பேசாம இருக்கார்"

சுதர்சனம், "டேய், இந்தப் பொம்மனாட்டிக சாவகாசமே ரொம்ப டேஞ்சரானது. ஆமா, ப்ரீதி முகம் ஏன் இப்படி வாடி இருக்கு?"

ஆனந்த், "something sad happened ...P.K.Reddy's son Prabhakar has been murdered. கார்த்தாலே அங்கேதான் போயிருந்தோம்"

சுதர்சனம், "ஓ மை காட்! எப்படி? Don't tell me Vikram Shah has something to do with it"

ஆனந்த், "விக்ரம் ஷாவோட ரைட் ஹாண்ட் மேன். நந்தகுமார்ன்னு பேர் அவன் நிச்சயம் இன்வால்வ் ஆகி இருக்கான். விக்ரம் ஷாவோட சப்போர்ட் இல்லாம அவன் இதை செஞ்சு இருக்க முடியாது. ஸோ! விக்ரம் ஷாவும் இதுக்கு உடந்தை"

சுதர்சனம், "போலீஸ் கிட்டே அதைச் சொன்னாங்களா?"

ஆனந்த், "ம்ம்ஹூம். Mister Reddy wants to settle the score differently"

சுதர்சனம், "ம்ம்ம் .. நினைச்சேன். முடிச்சுட்டாரா?"

ஆனந்த், "இல்லை அவரோட ஆளுங்க தேடிட்டு இருக்காங்க. ரெண்டு பேரும் தலை மறைவா இருக்காங்க. பட் இன்னும் ஒரு ட்ரப்ளிங்க் நியூஸ். எந்த அளவுக்கு அது ப்ரீதி விஷயத்தில் நம்மை பாதிக்கும்ன்னு தெரியலை"

சுதர்சனம், "என்ன?"

ஆனந்த், "இட் ஸீம்ஸ். விக்ரம் ஷா தன் ஃபேமிலியை அல்ரெடி ஊரை விட்டு அனுப்பிட்டாராம். இன்னும் ரெண்டு நாளில் அவரும் நாட்டை விட்டு போயிடுவார் போல இருக்கு"

சுதர்சனம், "எப்படி இவ்வளவு ஷுயரா சொல்லறே?"

ஆனந்த், "Based on two things. முந்தாநேத்து டீம் டின்னரும் போது கேள்விப் பட்ட காஸிப். Looks like Vikram Shah is talking to someone for selling the company. அப்படி இருந்தா நிச்சயம் எனக்கு நாளைக்குத் தெரிய வரும். இன்னொரு லீட் என்னன்னா அந்த நந்தகுமார்கிட்டே இருந்து ஒரு மிறட்டல் ஃபோன் கால் செல்விக்கு வந்தது. இன்னைக்கு காலைல. இன்னும் ரெண்டு நாளில் ஹாங்க் காங்க் போறதாவும் அங்கே போனதும் அவளோட வீடியோவை நெட்டில் போடப் போறதா சொல்லி இருக்கான். It seems he knows that Prabakar was sent to erase their recording"

சுதர்சனம், "எது அந்த விக்ரம் ஷா எடுத்து இருப்பான்னு நீ நினைச்ச வீடியோவை எல்லாமா?"

ஆனந்த், "இல்லை. அந்த செல்வியை எடுத்த வீடியோ. விக்ரம் ஷா ரெக்கார்ட் செஞ்ச வீடியோ எல்லாம் நம்ம கைக்கு வந்தாச்சு."

சுதர்சனம், "எப்படி?"

ஆனந்த், "பிரபாகர் எங்கிட்டே அவங்க இன்டென்நெட்டில் ஸ்டோர் செய்யும் சர்வரை எப்படி ஆக்ஸஸ் பண்ணறதுன்னு சொல்லி இருந்தான். நான் வெள்ளிக் கிழமை அன்னைக்கே அந்த சர்வரில் இருந்ததை எல்லாம் டவுன் லோட் செஞ்சுட்டேன்"

சுதர்சனம், "குட். சோ உன் ரூட் இப்போ completely cleared இல்லையா?"

ஆனந்த், "Looks like. Nevertheless அன்னைக்கு என்னால என்னோட எஃப்.பி.ஐ காண்டாக்ட்கூட பேச முடியலை. உங்க லாயர் ஃப்ரெண்ட்கிட்டே அந்த விஷயத்தைப் பத்தியும் ஒரு டவுட் கேட்கணும். எப்போ வரப் போறார்?"

சுதர்சனம், "He will be here any moment ... அதுக்கு முன்னாடி நீ கொண்டு வந்து இருக்கும் டாக்யூமென்ட்ஸைக் கொடு. பார்க்கலாம். எப்படியும் டின்னருக்கு இன்னும் நாழி இருக்கு. என்ன சாப்படறே?"

ஆனந்த், "உங்க ஆத்தல வேற என்னத்தைக் கேட்க முடியும். காஃபி கொடுங்கோ மாமி?"

சித்ரா, "ஆனந்த், உங்க மாமாவை என் மாமனார் மாதிரின்னு நினைச்சியா?"

ஆனந்த், "தெரியும் மாமி. உங்க முன்னாடி அவர் எதுவும் செய்ய மாட்டார்"

சுதர்சனம், "டேய் படவா. என் தயவு நோக்கு இன்னும் தேவையா இருக்கு. மறந்துடாதே"

ஆனந்த், "அதுவும் தெரியும் மாமா. இந்த பிரச்சனை எல்லாம் முடிஞ்சதும் உங்களை தனியா அழைச்சுண்டு போய் ஸ்பெஷலா ட்ரீட் கொடுக்கலாம்ன்னு இருந்தேன். இப்போ மாமி முன்னாடியே சொல்ல வெச்சுட்டேளே?" என்றதும் சித்ரா முறைக்க

சுதர்சனம், "அம்மா ப்ரீதி, இந்தப் பயலுக்கு நீ கொஞ்சம் கடிவாளம் போட்டு வெக்கணும். விட்டா நேக்கு டைவர்ஸ் வாங்கிக் கொடுத்துடுவான்"

கல கலப்பு அடங்கியதும் ஆடவர் இருவரும் ஹாலில் அமர ப்ரீதி அவர்களுடன் அமராமல் சித்ராவுடன் செல்ல எத்தனிக்க சித்ரா, "உன் விஷயமாத்தானே பேசப் போறா? நீ என்னோட வர்றே?"

ப்ரீதி, "இல்லை. உங்களுக்கு ஒத்தாசையா" என்று இழுக்க

சித்ரா, "அதெல்லாம் நான் பாத்துக்கறேன். நீ அவாளோட உக்காரு"

ஆனந்த் கொடுத்தவற்றை வாங்கிப் பார்த்து முடித்த சுதர்சனம், "சூப்பர்டா கண்ணா. ப்ரீதி, இதெல்லாம் மட்டுமே போறும். உன்னை யாரும் ஒண்ணும் அசைச்சுக்க முடியாது. Anyway let my friend also take a look at it" என்று அவர் சொல்லிக் கொண்டு இருக்கும் போது வழக்கறிஞர் ராம்பத்ர ராவ் அங்கு வந்து சேர்ந்தார்.


சுதர்சனம், "ஹல்லோ ராம், திஸ் இஸ் ஆனந்த் மை நெஃப்யூ. திஸ் இஸ் ஹிஸ் ஃபியான்ஸே"

ராம்பத்ர ராவ், "ஹெல்லோ ஆனந்த். ஹெல்லோ ப்ரீதி" என்றவாறு அவரும் அவர்களுடன் அமர்ந்தார்.

அடுத்து ஆங்கிலத்தில் தொடர்ந்த அவர்களது உரையாடலின் தமிழாக்கம் ...

சுதர்சனம், "ராம் நமக்கு ஒரு ரொம்ப நல்ல ஆதாரம் கிடைச்சு இருக்குன்னு நினைக்கறேன். அதுக்கு முன்னாடி, நான் இதுவரைக்கும் உங்களுக்கு கொடுத்த டீடெயில்ஸை வெச்சுண்டு நீங்க பார்த்தவரை உங்க ஒப்பீனியன் என்ன?"

ராம்பத்ர ராவ், "க்ளோஸா பார்த்தாத்தான் ப்ரீதியை ஒரு டம்மியா அவன் உபயோகிச்சு இருக்கான்னு சொல்ல முடியும். ஆனா விக்ரம் ஷா மேல போலீஸ் அல்லது இன்கம் டாக்ஸ் டிபார்ட்மெண்ட் ஆக்ஷன் எடுத்தா நிச்சயம் அவங்க ப்ரீதியையும் விக்ரம் ஷாவுக்கு உடந்தைன்னு சொல்லுவாங்க. அப்படி அவ பேரை இன்க்ளூட் பண்ணினப்பறம் கோர்டில் ஈஸியா ப்ரீதியை நிரபராதின்னு நிரூபிச்சுட முடியும். ஆனா, அவ பேர் போலீஸ் அண்ட் இன்கம் டாக்ஸ் ரெக்கார்ட்ஸில் வரும். கேஸ்ன்னு வந்தப்பறம் கொஞ்சம் நாள் இழுக்கும். கேஸ் முடியற வரைக்கும் அவ ஊரை விட்டு போக முடியாது. யூ.எஸ் விசா கிடைப்பதிலும் சில சிரமங்கள் இருக்கலாம்"

ப்ரீதியின் முகம் பேயறைந்தது போல் ஆக ஆனந்த் முகத்தில் கவலை ரேகைகள் படரத் தொடங்கின ...

ராம்பத்ர ராவ், "நான் இன்னும் முடிக்கலை ஆனந்த். நான் என்ன சொல்ல வந்தேன்னா, அப்படி போலீஸ் ஆக்ஷன் எடுக்கும் போது அல்லது அதுக்கு எடுக்கறதுக்கு முன்னாடி நாம் தகுந்த ஆதாரத்தோட அவங்களை அப்ரோச் பண்ணணும். அதுக்கு இப்போ இருக்கும் ஆதாரங்கள் போதாது"

சுதர்சனம், "இந்த டாக்யூமென்ட்ஸை பாருங்கோ" என்றவர் "அதுக்கு முன்னாடி. இன்னும் ஒரு நியூ டெவலப்மெண்ட் ... " எனத் தொடங்கி பிரபாகரின் மரணத்தைப் பற்றியும் ஆனந்த் கேள்விப் பட்டவைகளையும் சொல்லி முடித்தார்.

ராம்பத்ர ராவ், "யூ.எஸ்ல இருக்கறவங்க யாராவுது மூலம் எஃப்.பி.ஐக்கு தன் மேல சந்தேகம் வந்து இருக்குன்னு அவருக்கு நிச்சயம் இந்நேரம் தெரிஞ்சு இருக்கும். அதனாலதான் அவர் ஊரைவிட்டு புறப்பட தயாராகி இருக்கார்"

சுதர்சனம், "ஐ.டி ரெய்டைப் பத்தி அவருக்கு யாராவுது லீக் அவுட் பண்ணி இருப்பாங்களா?"

ராம்பத்ர ராவ், "அதுக்கு வாய்ப்பு இல்லை. ஐ.டி டிபார்மெண்டின் சந்தேக லிஸ்டில் விக்ரம் ஷாவின் பேர் இல்லை. நாம் தயாரிச்சுக் கொடுக்கும் ஆதாரங்களை வெச்சுத்தான் கமிஷனர் ஆணை பிறப்பிப்பார். நம்ம ஃப்ரெண்ட் நம்மிடம் இருந்து தேவையான ஆதாரங்களுக்காக காத்துட்டு இருக்கார். அவர் ஒருத்தரைத் தவிற டிபார்ட்மெண்டில் யாருக்கும் தெரிஞ்சு இருக்க வாய்ப்பு இல்லை. ஏன்னா இன்னும் விக்ரம் ஷாவின் கேஸ் ஃபைலுக்கான ரிக்வெஸ்ட் அவர் அனுப்பலை. ரிக்வெஸ்ட் அனுப்பும் போதுதான் எதுக்கு கேஸ் ஃபைலைக் கேட்கறீங்கன்னு கேள்வி வரும். அவர் பதில் சொல்ல வேண்டி இருக்கும் அவர் இன்னும் கேட்காம இருக்கார்"

சுதர்சனம், "சரி, நீங்க டாக்யுமெண்ட்ஸைப் பாருங்க"

சுதர்சனம் கொடுத்தவற்றில் சில நிமிடங்கள் செலவிட்ட பிறகு அவர் தொடர்ந்து, "ம்ம்ம் .. இது அடிஷனல் எவிடன்ஸ். ஆனா இந்த டீல்ஸ் முழுக்க ப்ரீதியின் இன்ஸ்ட்ரக்ஷனில் விக்ரம் ஷா செஞ்சான்னும் சொல்லக் கூடும் இல்லையா? விக்ரம் ஷாவுக்கு தேவையான பவர் ஆஃப் அட்டார்னி ப்ரீதி கொடுத்து இருக்கா. கம்பெனியை உபயோகிச்சு என்ன திருட்டுத்தனம் செஞ்சு இருந்தாலும் ப்ரீதியையும் அதுக்கு உடந்தைன்னுதான் அர்த்தம். ஏன்னா ப்ரீதி P.S.V Systemsஓட எம்.டி. ஒரு எம்.டி தன் கம்பெனியின் நடவடிக்கைகளில் தனக்கு சம்மந்தம் இல்லைன்னு சொல்ல முடியாது"

ஆனந்த், "அவ பேர்ல எந்த விதமான கம்ப்ளெயிண்டும் வராம எப்படி தடுக்கறது?"

ராம்பத்ர ராவ், "We need that final piece of evidence that will pin Vikram Shah down. இந்தக் கம்பெனியின் எல்லா கொடுக்கல் வாங்கல்களையும் அவர்தான் செஞ்சார் அப்படிங்கறதுக்கான ஆதாரம் வேணும்"

ஆனந்த், "அப்படின்னா, பேங்க் ஸ்டேட்மெண்ட் எல்லாம் அவர் லாப்டாப்பில் இருந்துதான் எடுக்கப் பட்டதுன்னு நிரூபிச்சா போதும் இல்லையா?"

ராம்பத்ர ராவ், "அதை எப்படி நிரூபிக்கப் போறே?"

ஆனந்த், "HDFC பேங்கில் மாமாவுக்கு தெரிஞ்சவர் மூலம் எந்த ஐ.பி அட்ரெஸ்ல (இணைய விலாசத்தில்) இருந்து பேங்க் ஸ்டேட்மெண்ட் எடுக்கப் பட்டு இருக்குன்னு ஒரு லிஸ்ட் வாங்கப் போறார். அந்த லிஸ்டில் இருக்கும் ஐ.பி அட்ரெஸ் விக்ரம் ஷாவின் லாப்டாப்போடது"

ராம்பத்ர ராவ், "ரெய்ட் செய்யும் சமயத்தில் அவன் தன் லாப்டாப்பின் ஐ.பி அட்ரெஸ்ஸை மாத்தி இருந்தான்னா?" என தன் கணிப்பொறியியல் ஞானத்தால் ஆனந்தை வியக்க வைத்தார்.

சற்று மலைத்து வாயடைத்துப் போன ஆனந்த், "பட், அந்த லாப் டாப்பில் ஃபிங்கர் ப்ரிண்ட் வெரிஃபிகேஷன் இருக்கே. அவரால மட்டும் தானே அதை ஆபரேட் பண்ண முடியும்?"

ராம்பத்ர ராவ், "சோ?"

ஆனந்த், "அந்த லாப் டாப்பில் அந்த பேங்க் ஸ்டேட்மெண்ட்ஸ் இருந்தா அந்த ஸ்டேட்மென்ட்ஸ்ஸை விக்ரம் ஷாதான் எடுத்தார்ன்னு நிரூபிக்கலாம் இல்லையா?"

ராம்பத்ர ராவ், "லாப் டாப்பின் ஐ.பி அட்ரெஸ்ஸை மாத்தறவன் அந்த ஸ்டேட்மெண்டை எல்லாம் விட்டு வெச்சு இருப்பானா?" என்று அனைவரையும் அதிர வைத்தார்




ஆனந்த் ஆழ்ந்த யோசனையில் இருக்க ...

முகம் பிரகாசித்த ப்ரீதி, "சார், நேக்கு என்னமோ அவர் இன்னும் தன் லாப்டாப்பின் ஐ.பி அட்ரெஸ்ஸை இன்னும் மாத்தி இருக்க மாட்டார்ன்னு தோணறது. நெக்ஸ் டைம் ஆஃபீஸ் வரச்சே விக்ரம் ஷா ஆஃபீஸ் நெட்வொர்க்கில் கனெக்ட் செஞ்சார்ன்னா அந்த ஐ.பி அட்ரெஸ் அவரோட கம்பியூட்டரோடதுன்னு சொல்றதுக்கான ஆதாரத்தை எடுத்தடலாம்"

ஆனந்த், "எப்படி சொல்றே?"

ப்ரீதி, "அவர் கனெக்ட் பண்ணி இருக்கச்சே நம் ஸிஸ்டத்தில் இருந்து அட்ரெஸ் ரெஸல்யூஷன் கமாண்ட் (MSDOS ARP Command) கொடுத்தா அவரோட லாப்டாப்பின் நெட்வொர்க் கார்ட் ஃபிஸிகல் அட்ரெஸ் கிடைக்கும்"

ஆனந்த், "வாவ், ஹனி! பிச்சுட்டே"

ராம்பத்ர ராவ், "அது என்ன் ஃபிஸிகல் அட்ரெஸ்"

ஆனந்த், "சார், பி.ஸில நெட்வொர்க் கார்ட் அப்படின்னு ஒண்ணு இருக்கு. இதும்மூலமே ஒரு பி.ஸி நெட்டில் கனெக்ட் ஆகுது. ஒவ்வொரு நெட்வொர்க் கார்டுக்கும் ஒரு யுனீக் ஐ.டி (Unique ID) இருக்கும். இது நெட்வொர்க் கார்ட் தயாரிக்கும் போது ஃபேக்டரில அதன் மெமரில அழிக்க முடியாத மாதிரி ஸ்டோர் பண்ணுவாங்க. இதை நெட்வொர்க் ஃபிஸிகல் அட்ரெஸ் அல்லது மேக் அட்ரெஸ் (MAC Address) அப்படின்னு சொல்லுவாங்க. இது ஒரு நெட்வொர்க்கில் இருக்கும் கம்பியூட்டரின் கை ரேகைன்னு எடுத்துக்கலாம்"

ராம்பத்ர ராவ், "ஓ! இஸ் இட்? எனக்குத் தெரியாது. எப்படி அந்த கமாண்ட் வொர்க் பண்ணும் சொல்லு?"

ப்ரீதி, "அவர் லாப்டாப் ஆஃபீஸ் நெட்வொர்கில் கனெக்ட் ஆகி இருக்கச்சே நெட்வொர்க்கில் இருக்கும் பி.ஸி எதில் இருந்தாவுது கமாண்ட் ப்ராம்ப்ட் விண்டோவை ஓபன் பண்ணி பிங்க் (ping) கமாண்டை அவரோட ஐ.பி அட்ரெஸ்ஸை சேத்து கொடுத்தா அவரோட லாப்டாப்பின் ஃபிஸிகல் அட்ரெஸ் நம் பி.ஸில ஸ்டோர் ஆயிடும். அதுக்கு அப்பறம் ARP -a அப்படிங்கற கமாண்டை கொடுத்தா பி.ஸில ஸ்டோர் ஆன ஐ.பி அட்ரெஸ்ஸஸ் எல்லத்தையும் அதோட ஃபிஸிகல் அட்ரெஸ்ஸையும் சேத்து லிஸ்ட் பண்ணும். ஃபிஸிகல் அட்ரெஸ் ஒரு ஃபிங்கர் ப்ரிண்ட் மாதிரி. ரெய்ட் வரச்சே அவர் லாப்டாப்பை அவா ஸீஸ் பண்ணும் போது வெரிஃபை பண்ணிக்கலாம்."

ராம்பத்ர ராவ், "அவர் ஆஃபீஸ் நெட்வொர்க்கில் கனெக்ட் பண்ணும் போது அந்த கமாண்டை நாம் இங்கே இருந்து கொடுத்தா வொர்க் ஆகுமா?"

ப்ரீதி, "ம்ம்ஹூம். அவர் கனெக்ட் செய்யும் லோகல் ஏரியா நெட்வொர்க்கில் கனெக்ட் ஆனாத்தான் வொர்க் ஆகும்"

ஆனந்த், "அதாவுது அந்த ஆஃபீஸ் லான் (LAN)இல் இருக்கும் வேற ஒரு கம்பியூட்டர்ல இருந்து மட்டும்தான் வொர்க் ஆகும்" என்று மேலும் விவரித்தான்.

ராம்பத்ர ராவ், "இந்த கமாண்ட் அவுட்புட் எப்படி இருக்கும்?" என்று கேட்க ...

ஆனந்த், "இருங்க சார் டெமான்ஸ்ட்ரேட் பண்ணி காமிக்கறேன்" என்ற பிறகு தொடர்ந்து, "மாமா உங்க ஆத்தில் வொய்.ஃபை (WiFi) ஆன் ஆகி இருக்கா?"

சுதர்சனம், "அது 24 ஹவர்ஸ் ஆன்லதான் இருக்கும்"

ஆனந்த், "உங்க லாப்டாப்பை கனெக்ட் செய்யறேளா?"

சுதர்சனம் தன் அலுவலக அறையில் இருந்து லாப்டாப்பை எடுத்து வந்தார்

ஆனந்த், "ப்ரீதி, அவரோட ஐ.பி அட்ரெஸ் என்னன்னு பாத்து சொல்லு" என்றபடி தன் லாப்டாப்பை இயக்கினான்

ப்ரீதி அவரது லாப்டாப்பில் கமாண்ட் ப்ராம்ப்ட் விண்டோவை திறந்து IPCONFIG என்ற ஆணையைப் பிறப்பித்த பிறகு, "192.168.1.3" என்றாள்

ஆனந்த் தன் லாப்டாப்பில் கமாண்ட் ப்ராம்ப்ட் விண்டோவை திறந்து PING 192.168.1.3 என்ற ஆணையைப் பிறப்பிக்க கீழ்கண்டவாறு அந்த ஆணைக்கு பதில் வந்தது

Pinging 192.168.1.3 with 32 bytes of data:

Reply from 192.168.1.3: bytes=32 time=4ms TTL=128
Reply from 192.168.1.3: bytes=32 time=1ms TTL=128
Reply from 192.168.1.3: bytes=32 time=1ms TTL=128
Reply from 192.168.1.3: bytes=32 time=1ms TTL=128

Ping statistics for 192.168.1.3:
Packets: Sent = 4, Received = 4, Lost = 0 (0% loss),
Approximate round trip times in milli-seconds:
Minimum = 1ms, Maximum = 4ms, Average = 1ms

அடுத்து ARP -A என்ற ஆணையைக் கொடுக்க அதற்கு பதிலாக கீழ்கண்டவாறு திரையில் தோன்றியது

Interface: 192.168.1.51 --- 0x3
Internet Address Physical Address Type
192.168.1.3 00-19-d1-80-d4-a5 dynamic
192.168.1.1 00-1b-57-4f-92-de dynamic

ஆனந்த், "இதில 192.168.1.1 அப்படிங்கறது மாமாவோட wi-fi router. மாமாவின் லாப்டாப்பின் ஐ.பி அட்ரெஸ் 192.168.1.3 அதுக்கு பக்கத்தில் இருக்கறது அவரோட ஃபிஸிகல் அட்ரெஸ். அது மாறவே மாறாது." என்று விளக்கினான்.

ராம்பத்ர ராவ், "சரி, இந்த அவுட்புட்டை எப்படி ஆதாரமா காட்டப் போறே?"

ஆனந்த், "இந்த ஸ்க்ரீனை அப்படியே ஸேவ் பண்ணிடலாம். அல்லது ஒரு பிரிண்ட் பண்ணிடலாம்"

ராம்பத்ர ராவ், "இருந்தாலும் ஆனந்த், இந்த மாதிரி ஒரு அவுட்புட் அல்லது ப்ரிண்ட் அவுட் இந்த கமாண்ட் கொடுக்காமலே தயாரிக்க முடியாதா? எனக்கு என்னமோ இந்த கமாண்ட்டின் அவுட்புட் ஒரு ஈமெயில் மாதிரி டெக்ஸ்ட் ஃபைல் (Text File) வடிவத்தில் இருக்கற மாதிரி தோணுது"

ஆனந்த், "சார், நீங்க என்ன சொல்ல வரீங்கன்னு தெரியுது. அந்த மாதிரி ஒரு அவுட்புட்டை நோட் பாட் யூஸ் பண்ணியும் தயாரிக்க முடியும். அதை ஒரு ஆதாரமா உபயோகிக்க முடியாது. அப்படித்தானே?"

ராம்பத்ர ராவ், "ஆனந்த், நீயோ ப்ரீதியோ தனியா அந்த அவுட்புட் எடுத்துக் கொடுத்தா அதை ஆதாரமா உபயோகிக்க முடியாது"

ஆனந்த், "என்ன சொல்ல வர்றீங்க?"

ராம்பத்ர ராவ், "அந்த அவுட்புட் எடுத்ததை நேர்ல பார்த்தவங்க சாட்சி சொன்னா அதை ஆதாரமா ஒத்துக்க முடியும்."

ஆனந்த், "அதாவது எனக்கோ ப்ரீதிக்கோ எந்த விதத்தில் சம்மந்தப் படாத ஒரு நபர் அந்த அவுட்புட் எடுப்பதை நேரில் பார்க்கணும். இல்லையா?"

"ஆமா" என்ற ராம்பத்ர ராவ் சில நிமிடங்கள் யோசித்த பிறகு தொடர்ந்து, "உங்க ஆஃபீஸ்ல வெளி ஆளுங்க யாராவுது வந்தா அவங்களை உள்ளே விடுவாங்களா?"

ஆனந்த், "ம்ம்ம் ... என்னைப் பார்க்க இதுக்கு முன்னாடி சிலர் வெளியில் இருந்து வந்து இருக்காங்க. அவங்களை என் கேபினுக்கு அனுப்பினாங்க"

ராம்பத்ர ராவ், "க்ரேட். அப்படின்னா நீங்க ரெண்டு பேரும் இது வரைக்கும் சம்மந்தப் படாத ஒரு நபர் முன்னாடி நீ இந்த ப்ரிண்ட் அவுட் எடுக்கணும்"

ஆனந்த், "அப்படின்னா நீங்க நாளைக்கு என் ஆஃபீஸுக்கு வாங்களேன். உங்க முன்னாடி இந்த அவுட்புட் எடுக்கறேன்"

ராம்பத்ர ராவ், "ம்ம்ஹூம் ... நான் உங்க லாயர் நான் சாட்சிக் கூண்டில் ஏறி நிக்க முடியாது." என்ற பிறகு சுதர்சனத்தைக் காட்டி, "Neither can your uncle do that. எங்க ரெண்டு பேரைத் தவிற வேற யாராவுது ஒருத்தர்"

சுதர்சனம், "சார், இந்த அளவுக்கு பிரபரேஷன் தேவையா? கொஞ்சம் பிரஷர் கொடுத்து நாளை சாயங்காலமே ரெய்டுக்கு ஏற்பாடு செஞ்சா என்ன?"

ராம்பத்ர ராவ், "நிச்சயம் விக்ரம் ராவுக்கு ஐ.டி டிபார்ட்மெண்டிலும் போலீஸிலும் ஆள் இருக்கும். ரெய்ட் வரப்போகுதுன்னு தெரிஞ்சதும் அதுக்கான ஆயத்தங்களை செய்ய ஆரம்பிச்சுடுவார். இந்த அளவுக்கு நாம் இந்த கேஸை பிரிபேர் பண்ணினப்பறம் ரிஸ்க் எடுக்கக் கூடாது. நாளைக்கே இந்த அவுட்புட் ஒரு மூணாம் நபர் முன்னாடி எடுத்தாகணும்"

ஆனந்த், "ஆனா விக்ரம் ஷா நாளைக்கு ஆஃபீஸுக்கு வரணுமே. சிவா அவர் தலை மறைவா இருக்கார்ன்னு சொன்னார்"

ராம்பத்ர ராவ், "நாளைக்கு விக்ரம் ஷா ஆஃபீஸுக்கு வருவார்ன்னு நினைக்கறேன். நிச்சயம் அவர் கம்பெனியை விக்கறார்ன்னா இப்போ டியூ டெலிஜென்ஸ் (due deligence - ஒரு நிருவனம் கைமாறுவதற்கு முன்னால் அதன் லாப நஷ்டங்களை பாரபட்சம் இன்றி நிர்ணயிக்கும் பணி) நடந்துட்டு இருக்கும். ரெட்டி அவரை சந்தேகப் படுவார்ன்னும் அவருக்கு தெரிஞ்சு இருக்கும். இருந்தாலும் யாரும் பார்க்காத மாதிரி ஆஃபீஸுக்கு வருவார்ன்னு நான் நினைக்கறேன். ஆனா ஐ.பி அட்ரெஸ்ஸை இதுவரைக்கும் மாத்தாம இருந்து இருக்கணும்."

ஆனந்த், "இல்லை சார். இதுவரைக்கும் விக்ரம் ஷாவுக்கு ப்ரீதி மேல சந்தேகம் வர வாய்ப்பு இல்லை. அனேகமா ஐ.பி அட்ரெஸ்ஸை மாத்தி இருக்க மாட்டார்ன்னு நிச்சயமா நம்பலாம்"

ராம்பத்ர ராவ், "சோ, சுதர்சனம் யாரை நாளைக்கு அனுப்பலாம்?"

முகம் மலர்ந்த சுதர்சனம், "ரிடையர்ட் ஜட்ஜ் மூர்த்தி சாரை உங்களுக்கு நல்லா தெரியும் இல்லையா? அவரை கேட்க முடியுமா?"

ராம்பத்ர ராவ், "ஓ எஸ்! இருங்க அவரை கூப்பிட்டுக் கேட்டுப் பார்க்கறேன்" என்ற பிறகு ஸெல்ஃபோனில் இயக்கியவாறு எழுந்து வெளியில் சென்றார்.

சில நிமிடங்களுக்குப் பிறகு வந்த ராம்பத்ர ராவ், "விக்ரம் ஷா ஆஃபீஸுக்கு வந்து உங்க நெட்வொர்கில் கனெக்ட் பண்ணின பிறகு என்னை ஸெல்லில் கூப்பிடு. நான் அவரை கூட்டிட்டு உன் ஆஃபீஸுக்கு வந்து அவரை மட்டும் உள்ளே அனுப்பறேன். உயரமா சிவப்பா ஒல்லியா, பார்க்க ரொம்ப டிக்னிஃபைடா இருப்பார். அவரை உன் கேபினுக்கு அழைச்சுட்டுப் போய் அவர் முன்னாடி அவுட்புட் ப்ரிண்ட் அவுட் எடு. அதில் அவர் தான் அந்த அவுட்புட் எடுத்ததை நேரில் பார்த்ததாகவும் தேவையா இருந்தால் கோர்டில் சாட்சி சொல்லவும் தயார்ன்னு எழுதி கையெழுத்துப் போடுவார். நாளைக்கு நீ இந்த வேலையை முடிச்சா. நாளன்னைக்கே ரெய்டுக்கு ஏற்பாடு செய்யறேன்"

ஆனந்த், "ஓ! தாங்க்ஸ் அ லாட் சார்"

ராம்பத்ர ராவ், "பட் ஆனந்த், உன் ஃப்ரெண்டுக்கு விக்ரம் ஷாவைப் பத்தி எதுவும் சொல்லாதே. அப்படி சொன்னா அவங்க ஆளை அனுப்பி விக்ரம் ஷாவின் கதையை முடிச்சுடுவாங்க. நம் கேஸ் இழுத்துட்டு இருக்கும்."

ஆனந்த், "சரி"

சுதர்சனத்தின் இல்லத்தில் இரவு உணவை முடித்தபின் ஆனந்த் ப்ரீதியை அழைத்துக் கொண்டு புறப்பட்டான்.



காரில் ...

ப்ரீதி, "நேக்கு பயம்மா இருக்கு ஆனந்த்"

ஆனந்த், "ஏய், என்னத்துக்கு பயம்?"

ப்ரீதி, "நமக்கு தேவையான சாட்சியம் அவா கேஸ் போடறதுக்கு முன்னாடியே கிடைக்கலைன்னா?"

ஆனந்த், "கிடைக்கலைன்னா என்ன? இன்னும் கொஞ்ச நாள் இந்தியாவில் இருக்கப் போறோம்"

ப்ரீதி, "பட், உங்க அம்மா உடனே கல்யாணம் பண்ணிக்கச் சொல்லிண்டு இருக்கா இல்லையா?"

ஆனந்த், "ஆமா. கல்யாணம்தானே பண்ணிக்கச் சொல்றா? உடனே யூ.எஸ்ஸுக்கு வான்னு சொல்லலையே?"

ப்ரீதி, "கல்யாணம் பண்ணினதும் நான் உங்க ஆத்துக்கு வரணும்"

ஆனந்த், "ஓ காட்! ப்ரீதி நீயும் சேந்து கண்டிஷன் போடாதே"

சில கணங்கள் வாயடைத்துப் போன ப்ரீதி, "சரி, இப்போ என்னை என் பி.ஜில கொண்டு விடு"

ஆனந்த், "ஏன்?"

ப்ரீதி, "சொன்னா கேளு. ப்ளீஸ்"

இருவரும் மௌனமாக ப்ரீதியின் பி.ஜி விடுதிக்குச் சென்றனர்.

காரில் இருந்து இறங்கு முன் அவள் கையைப் பற்றிய ஆனந்திடம் ப்ரீதி, "ஆனந்த், போரும். என்னால இனியும் உன் கைப் பொம்மையா இருக்க முடியாது. உனக்கு நான் வேணும்ன்னா அது உங்க ஆத்துக்கு நான் மாட்டுப் பொண்ணா வந்தப்பறம்தான்" என்ற பிறகு தன் விசும்பலை அடக்க முடியாமல் இறங்கி உள்ளே ஓடினாள்.



No comments:

Post a Comment