Wednesday, May 6, 2015

அக்னி சாட்சி - அத்தியாயம் - 28

Tuesday, 23 February 2010 - செவ்வாய், ஃபெப்ரவரி 23, 2010

இடம்: ப்ரொஃபெஸ்ஸர் மனோகரியின் இல்லம், திரு நகர் காலனி, ஈரோடு
நேரம் : காலை 7:00

R&AWவின் ஸைபர் க்ரைமில் பணியாற்றும் வந்தனா ராத்தோட்-சக்திவேல் I.P.S வியர்த்து விருவிருக்க சைக்கிள் ஓட்டி வந்து கொண்டு இருக்க,

உலகத்தையே வியக்க வைத்த மாங்க்ஸ் பாட் நெட்டை கண்டுபிடித்த இருவரில் ஒருவனும், தன் மனைவியின் விருப்பத்தை ஏற்று அவள் பணி புரியும் அதே பிரிவில் கன்ஸல்டண்ட் ஸீனியர் அனலிஸ்ட்டாக பணி புரிபவனுமான சக்தி என்று அழைக்கப் படும் அவளது கணவன் சக்திவேல் முத்துசாமி கவுண்டர் உடன் ஓடி வந்து கொண்டு இருந்தான்

வீட்டை அடைந்ததும் வந்தனா இறங்கி நடக்க அவளிடம் இருந்து வாங்கிய சைக்கிளை தூக்கிக் கொண்டு அவளுடன் சக்தி வீட்டுக்குள் நுழைந்தான்.

கோபத்தில் இறுகிய முகத்துடன் சக்திவேலின் தாய் ப்ரொஃபெஸ்ஸர் மனோகரி வாசலில் நின்று இருக்க, அவளுக்கு சற்று பின்னால் முகத்தில் நமட்டுச் சிரிப்புடன் அவளது செல்ல மகளும் சக்திவேலின் தங்கையுமான சாந்தி நின்று கொண்டு இருந்தாள் ...

மனோகரி, "ஏம்மா, இந்த மடையனுக்குத்தான் அறிவு இல்லாம் கூட சைக்கிளில் வான்னு சொன்னா நீயும் இப்படி போறதா? ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆச்சுன்னா வீரு அண்ணனுக்கும் கௌரிக்கு யாரு பதில் சொல்லறது?"



மனோகரி வீரு அண்ணன் என்று அன்புடன் அழைத்தது வந்தனாவின் தந்தை வீரேந்தர் ராத்தோட். கௌரி அவரது அன்பு மனைவி. (இவர்கள் வரலாற்றை அறிய படியுங்கள் "செக்மேட்")

சக்தி, "அம்மா, இப்ப என்ன ஆயிடுச்சுன்னு இப்படி கோவப் படறீங்க. எங்க கல்யாணம் ஆன நாளில் இருந்து காலைல நான் ஜாகிங்க பண்ணும் போது இவ கூட சைக்கிள் ஓட்டிட்டு வருவான்னு உங்களுக்குத் தெரியாதா?"

வந்தனா முகத்தில் குற்ற உணர்வு ததும்ப பார்த்துக் கொண்டு இருக்க தாய்க்கும் மகனுக்கும் இடையே விவாதம் தொடர்ந்தது ...

மனோகரி, "டேய், பொறுப்பு இல்லாம பேசாதே. வாயும் வயிறுமா இருக்கறவளை இப்படித்தான் ரிஸ்க் எடுக்க வெப்பயா"

சக்தி, "அம்மா, ஒன்பதாவது மாசம் வரைக்கும் ஆக்டிவா இருக்கணும்ன்னு கோமதி ஆண்டி போன மாசம் ஹைதராபாத்தில் உங்க முன்னாடிதானே சொன்னாங்க? besides cycling is a non-impact excercise. அல்மோஸ்ட் ஸ்விம் பண்ணற மாதிரி"

மனோகரி, "வீட்டில் ஒரு எக்ஸர்ஸைஸ் பைக்கில் அவளை ஒரு மணி நேரம் செய்ய வெச்சு இருந்தா நான் ஒண்ணும் சொல்லி இருக்க மாட்டேன். இங்க ரோட் எல்லாம் உங்க டெல்லி டிஃபென்ஸ் காலனி மாதிரி அகலமான ப்ளாட்ஃபார்ம் இருக்கற மாதிரியா இருக்கு? போற வழியில் எவனாவுது குறுக்கே வந்து இடிச்சு கீழ விழுந்தா?"

சக்தி, "ஏம்மா அவ்வளவு கேர்லஸ்ஸா இருப்பேனா?" என்று பரிதாபமாகக் கேட்க ..

அவர்கள் சென்ற வழி நெடுக, 'நீ இந்தப் பக்கம் வா நான் அந்தப் பக்கமா ஓடி வரேன்', 'ஸ்லோ டவுன், இந்த க்ராஸில் நான் கொஞ்சம் முன்னாடி போறேன் நீ பின்னாடி வா' என்றெல்லாம் சொல்லிக் கொண்டு வந்ததும், ஒரு இடத்தில் அவள் 'சக்தி அந்தப் பஸ் அவ்வளவு தூரத்தில் வந்துட்டு இருக்கு அது வரதுக்குள்ள நாம் மூணு தடவை க்ராஸ் பண்ணிடலாம்' என்று தான் அலுத்துக் கொண்டதற்கு 'சும்மா இரு. This is not like Delhi. The traffic is rather un-ruly here' என்று அவன் கடிந்து கொண்டதும் வந்தனாவுக்கு நினைவு வர சற்றே தலை குனிந்து தன் நாத்தனாருடன் நமட்டுச் சிரிப்பை பகிர்ந்து கொண்டபடி கணவன் தாயிடம் திட்டு வாங்குவதை சற்று நேரம் ரசித்த பிறகு .. .

வந்தனா, "இல்லை அத்தை. கொஞ்ச தூரம் தான் ட்ராஃபிக் இருக்கும் ரோடில் போனோம். அதுக்கு அப்பறம் ஒரு பார்க்கை சுத்திட்டு இருந்தோம். யூஷுவலா போற தூரத்தில் இன்னைக்கு பாதி தூரம் தான் போயிருப்போம்" என தன் கணவனுக்கு வக்காலத்து வாங்கினாள்.

மனோகரி, "சரி, சரி, போய் குளிச்சுட்டு வாங்க"

இருவரும் உள்ளே செல்ல எத்தனித்த போது மனோகரி, "வந்தனா, காலைல போறதுக்கு முன்னாடி எதாவுது சாப்பிட்டுட்டுப் போனியா?"

வந்தனா குற்ற உணர்வு முகத்தில் வடிய, "இல்லை ... " என்று இழுக்க

மனோகரி, "டேய், வாயும் வயிறுமா இருக்கறவளை கூட்டிட்டுப் போறதுதான் போறே எதாவுது அவளுக்கு சாப்பிடக் கொடுத்து கூட்டிட்டுப் போயிருக்கணும் இல்லை?" என்றபடி சமையல் அறைக்குச் சென்றாள்

சக்தி, "நான் சொன்னேம்மா அவதான் வயித்தைக் கொமட்டும் வேண்டாம்னா"

மனோகரி, "போடா போய் குளிச்சுட்டு வா. வந்தனா, வெறும் பாலில் டீ போட்டு வெச்சு இருக்கேன். குடிச்சுட்டுப் போய் குளி. காலைல ரொம்ப நேரம் வெறும் வயித்தில் இருக்கக் கூடாதுன்னு எத்தனை தடவை சொல்லி இருக்கேன்"

உள்ளே வந்த பிறகு சக்திவேல் குளிக்கச் செல்ல கையில் டீக் கோப்பையுடன் மாமியாரின் அருகே அமர்ந்த வந்தனா, "அத்தை, எங்க ப்ரோக்ராமில் ஒரு சின்ன சேஞ்ச். மத்தியானத்துக்கு பதிலா காலையிலேயே புறப்படணும்"

மனோகரி, "ஏன் என்ன விஷயம்?"

வந்தனா, "பெங்களூரில் ஒரு இன்டர்நேஷனல் ஸைபர் க்ரைம் க்ரிமினலை அரெஸ்ட் பண்ணனும். இது எஃப்.பி.ஐயோட கேஸ். எங்க உதவியை கேட்டு இருக்காங்க. ஒரு ரெண்டு மணி நேர வேலை"

மனோகரி, "ஏம்மா, இதுக்கெல்லாம் பெங்களூரில் இருக்கும் போலீஸ் ஃபோர்ஸை R&AW யூஸ் பண்ணாதா?"

வந்தனா, "லோகல் போலீஸ் ஃபோர்ஸை உபயோகிக்கணும்ன்னா அதிகார பூர்வமான ஆணை எங்க மேலிடத்தில் இருந்து கர்நாடகா போலீஸுக்கு கொடுக்கணும். அதுக்கு அப்பறம் தான் அவங்க ஆக்ஷன் எடுப்பாங்க. அதுக்கெல்லாம் ரெண்டு மூணு நாள் ஆகலாம். உடனே அரெஸ்ட் பண்ணலைன்னா அவன் வேற நாட்டுக்கு தப்பிச்சுப் போக வாய்ப்பு இருக்கு"

மனோகரி, "இப்படிப் பட்ட க்ரூஷியலான தருணம் வரைக்கும் எஃப்.பி.ஐ உங்களுக்கு ஏன் தெரியப் படுத்தலை?"

வந்தனா, "இது வரைக்கும் இந்தக் கேஸ்ஸை நாங்க ஹாண்டில் பண்ணவே இல்லை. வெளி ஆளுங்களை உபயோகிச்சா அந்த க்ரிமினல் சந்தேகப் பட்டு தடயத்தை அழிச்சுடுவான்னு அவனோட கம்பெனிக்கு உள்ளேயே ஒரு ஆளை வெச்சு எஃப்.பி.ஐ இன்வெஸ்டிகேட் பண்ணிட்டு இருந்து இருக்கு. இப்போ தேவையான ஆதாரங்கள் அவங்களுக்கு கிடைச்சாச்சாம்"

மனோகரி, "நீ மட்டும் தனியாவா போய் அரெஸ்ட் பண்ணப் போறே?"

சாந்தி, "அதான் பாடி கார்ட் மாதிரி கூட அண்ணன் இருக்கு இல்லைம்மா?" என்று சிரிக்க ..

மனோகரி, "ஏய், நீ சும்மா இருடீ"

வந்தனா, "இல்லை அத்தை. பெங்களூர் CRPF யூனிட்டில் இருந்து ஒரு சின்ன டீம் எங்க கூட வரும். R&AWவின் பிரதிநிதியா ஒரு போலீஸ் ஆஃபீஸர்தான் இந்த அரெஸ்ட்டை செய்யணும். நாங்க எல்லாம் இன்னும் ரெண்டு நாள் பெங்களூரில் இருக்கறதா ப்ளான் பண்ணி இருந்ததை முரளி சார்கிட்டே சொல்லி இருந்தேன். அதனால்தான் முரளி சார் இந்த வேலையை செய்யறையான்னு ரிக்வஸ்ட் பண்ணினார்"

மனோகரி, "நித்தினும் தீபாவும் எப்போ வரப் போறாங்க"

நித்தின் தேஷ்பாண்டே சக்திவேலின் உயிர் நண்பன். மாங்க்ஸ் பாட் நெட்டை உருவாக்கியவர்களில் ஒருவன். தீபா தேஷ்பாண்டே அவனது மனைவி. வந்தனாவின் உயிர்த்தோழி. நித்தினின் மனைவி. நித்தினும் தீபாவும் தீபாவின் சொந்த ஊரான ஹைதராபாத்துக்குச் சென்று இருந்தனர். அங்கு இருந்து அவர்களும் சக்தியும் நித்தினும் முன்பு பணியாற்றிய பெங்களூருக்கு வந்து புது தில்லி திரும்புமுன் சில நாட்கள் கொட்டம் அடிக்கத் திட்டமிட்டு இருந்தனர்.

வந்தனா, "அவங்க ரெண்டு பேரும் இன்னைக்கு சாயங்காலம் தான் பெங்களூர் வருவாங்க. அதுக்குள்ளே எங்க வேலை முடிஞ்சுடும்"

மனோகரி, "இதில் சக்தி என்ன செய்யப் போறான்?"

வந்தனா, "என்னதான் ஆதாரம் இருப்பதா சொன்னாலும் அதை எல்லாம் வெரிஃபை பண்ணாம ஒரு இந்தியக் குடிமகனை எஃப்.பி.ஐ சொல்றதுக்காக அரெஸ்ட் பண்ண முடியாது. ஆதாரங்களை சரி பார்க்கணும். எல்லாம் ஸைபர் க்ரைம் சம்மந்தப் பட்ட ஆதாரங்கள். என்னை விட சக்திக்கு இந்த மாதிரி கேஸைப் பத்தி நிறைய தெரியும். சீக்கிரம் வெரிஃபை பண்ணிடுவார். அரெஸ்டுக்கான பேப்பர் வொர்க் மட்டும் நான் செஞ்சேன்னா வேலை சீக்கிரம் முடியும்"

மனோகரி, "ரிஸ்க் எதுவும் இருக்காது தானே?"

வந்தனா, "ஒரு ரிஸ்கும் இருக்காது அத்தே. அப்படி ரிஸ்க் இருந்து இருந்தா முரளி சார் என்னை செய்யச் சொல்லி இருக்க மாட்டார்"

மனோகரி, "சரி, எப்ப கிளம்பணும்"

வந்தனா, "கோவைல பதினோறு மணிக்கு ஃப்ளைட். ஒன்பது மணிக்கு இங்கே பிக் அப் பண்ணறதுக்கு ஒரு கார் வரும்"

மனோகரி, "சரி, சீக்கிரம் நீயும் போய் குளிச்சு ரெடி ஆயிட்டு வா. உனக்குப் பிடிச்ச ஆப்பம் பண்ணப் போறேன். நிதானமா சாப்பிட்டுட்டு புறப்படுங்க"


இடம்: ஷா ஸிஸ்டம்ஸ் அலுவலகம் இருந்த கட்டிடத்தில் பின் பகுதியில் இருந்த அப்பார்ட்மெண்ட்களில் ஒன்று
நேரம்: காலை 7:30

தூக்கக் கலக்கத்துடன் நந்தகுமார் ஒரு அறையில் இருந்து வந்தான். ஹாலில் விக்ரம் ஷா பேப்பர் படித்துக் கொண்டு இருந்தார்.

நந்தகுமார், "குட் மார்னிங்க் பாஸ். சுகுமார் எங்கே? வாக்கிங்க் போயிருக்கானா?"

விக்ரம் ஷா, "எனக்கு பணிவிடை செய்யறேன்னு நின்னான். நான்தான் வற்புறுத்தி அனுப்பி வெச்சேன். நம்ம பேசணும்"

நந்தகுமார், "சொல்லுங்க பாஸ். எல்லாம் ப்ளான் பண்ணினபடி தானே? எதாவுது சேஞ்ச் இருக்கா?"

விக்ரம் ஷா, "ஒரே ஒரு சேஞ்ச். ப்ரீதியையும் ஆனந்தையும் ஆஃபீஸில் இருந்து இங்கே கூட்டிட்டு வர நம்ம அடியாளுங்களை யூஸ் பண்ணக் கூடாது"

நந்தகுமார், "அப்பறம் எப்படி பாஸ்? அவன் கொஞ்சம் ஸ்ட்ராங்கான பேர்வழி. கராத்தே குங்க்ஃபூ மாதிரி எதாவுது தெரிஞ்சு வெச்சு இருப்பான் போல இருக்கு. நம்ம ரெண்டு பேரும் எப்படி சமாளிக்கப் போறோம்?"

விக்ரம் ஷா, "நாம் என்ன சொல்லப் போறோம்? உன் ப்ராஜெக்ட் முடிஞ்சுது. நானும் கம்பெனியை விக்கப் போறேன். ஒரு சின்ன ட்ரீட் அப்படின்னுதானே கூட்டிட்டு வரப் போறோம்? அப்படி அவன் மொடங்கு பண்ணினா சமாளிக்க இன்னும் ஒரு கன்னுக்கு ஏற்பாடு பண்ணி இருக்கேன். அமெரிக்காவில் பொறந்து வளந்த எவனும் துப்பாக்கியை காமிச்சா அடங்கிடுவாங்க. முக்கியமா நான் ப்ரீதியை கன் பாயிண்டில் நிறுத்தினா அவன் ஒண்ணும் செய்ய மாட்டான்"
நந்தகுமார், "அப்ப சுகுமார்?"

விக்ரம் ஷா, "அதுக்கு முன்னாடியே அவனை இங்கே வந்து சில டாக்யுமெண்ட்ஸை எடுத்துட்டு வரச் சொல்லப் போறேன். அவனுக்காக இங்கே நம்ம ஆளுங்க வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க"
நந்தகுமார், "நாம் ப்ரீதியையும் ஆனந்தையும் இங்கே கூட்டிட்டு வந்ததுக்கு அப்பறம் ப்ரீதையையும் ஆனந்தையும் ஷூட் பண்ணிட்டு கன்னில் சுகுமார் கைரேகை படிய வெச்சுட்டு. அவனை தூக்கு மாட்டி விடப் போறோம். இல்லையா?"

விக்ரம் ஷா, "ஆமா. காலைல போன உடனே செய்ய வேண்டிய வேலைங்க என்ன சொன்னேன் ஞாபகம் இருக்கா?"
நந்தகுமார், "இருக்கு சார். காலைல அந்த சைனா கம்பெனியில் இருந்து அவங்க பேரில் இருக்கும் கம்பெனிகளுக்கு ரெண்டு ரெண்டு குட்டி மனி ட்ரான்ஸ்ஃபர் வரும். நீங்க டிஸ்கஷனில் இருக்கும் போதே அவங்க லாகின் ஐடி உபயோகிச்சு அவங்க செஞ்ச மாதிரி அந்த பணத்தை அவங்களோட சொந்த அக்கௌண்டுக்கு ட்ரான்ஸ்ஃபர் பண்ணனும். அவ்வளவுதானே?"

விக்ரம் ஷா, "ஆமா. சொதப்பிடாதே"
நந்தகுமார், "நோ ப்ராப்ளம் சார். அந்த ப்ரீதி மேட்டர் .... நம்ம ஆளுங்களும் கேட்டாங்க .. " என இழுக்க

விக்ரம் ஷா, "டேய்! உனக்கு என்ன சொன்னேன்? போலீஸ் இன்வெஸ்டிகேஷன் வரும் போது ஷூட் பண்ணறதுக்கு முன்னாடி ப்ரீதி ரேப் செய்யப் பட்டு இருந்தான்னு தெரிஞ்சா ரொம்ப பிரச்சனை வரும். வேண்டாம். ஹாங்க் காங்க் போனதும் உனக்கு தேவையான குட்டிங்க வகை வகையா கிடைப்பாளுங்க"
நந்தகுமார், "சே! என்ன பாஸ் அவளை மாதிரி கிடைக்க மாட்டாளுங்க. சரி ... என்ன செய்யறது விடுங்க. ஆளுங்ககிட்டே சொல்லிடறேன்"

காலிங்க் பெல் ஒலித்தது ...

விக்ரம் ஷா, "சரி, சரி, சுகுமார் வர்றான். குளிச்சுட்டுப் புறப்படு"




இடம்: ஆனந்த் தங்கி இருந்த ஃப்ளாட்
நேரம்: காலை 8:00

ஆனந்தின் கைபேசி ஒலித்தது ...

ஆனந்த், "ஹெல்லோ மாமா. நான் ஆஃபீஸுக்கு கிளம்பிட்டு இருக்கேன். சொல்லுங்க"

எதிர்முனையில் சுதர்சனம், "ஐ.டி டிபார்ட்மெண்டில் விக்ரம் ஷாவுக்கு தெரிஞ்சவங்க நிச்சயமா இருப்பாங்கன்னு லாயர் நினைக்கறார். கமிஷனர் ஆஃபீஸில் காசு வாங்கிட்டு ரெய்ட் வர்றதுக்கு முன்னாடியே சொல்றதுக்குன்னே நாலஞ்சு பேர் வெவ்வேற பிரிவுகளில் இருக்காங்களாம். முக்கியமா ஆர்டர் கொடுக்கும் கமிஷனர் ஆஃபீஸிலேயே ஒருத்தன் இருக்கானாம். விக்ரம் ஷா இவங்களில் யாருக்காவுது நிச்சயம் பணம் கொடுத்து வெச்சு இருப்பார். முன்கூட்டியே தெரியலைன்னாலும் கமிஷனர் ரெய்டுக்கான ஆர்டர் சைன் பண்ணி ரிலீஸ் பண்ணின உடனே விக்ரம் ஷாவுக்கு தெரிஞ்சுடும் போல இருக்கு. ராமின் ஃப்ரெண்ட் ஒன்பது மணிக்கு ஆர்டர் தயாரிக்க ரிக்வெஸ்ட் கொடுக்கப் போறார். அனேகமா மத்தியானம் ரெண்டு மணியளவில் கமிஷனர் ஆர்டரில் சைன் பண்ணி ரிலீஸ் பண்ணுவார். நாலு, நாலரை மணி வாக்கில் ரெய்ட் நடக்கும்"

ஆனந்த், "அவ்வளவு லேட் ஆகுமா?"

சுதர்சனம், "டேய், ஆர்டர் ரிலீஸ் பண்ணின ரெண்டு மணி நேரத்தில் ரெய்ட் நடக்கறது அபூர்வம். ராம் இன்ஃப்லுவன்ஸ் பண்ணினதால இவ்வளவு சீக்கரம் நடக்கப் போறது. ரெய்டுக்குத் தேவையான ஆட்களை எல்லாம் திறட்டிட்டு மத்த ஏற்பாடுகளை செஞ்சுட்டு வர கொஞ்சம் டைம் ஆகும். நீ எஃப்.பி.ஐ காரங்களை மூவ் பண்ணச் சொன்னது என்ன ஆச்சு?"

ஆனந்த், "என் எஃப்.பி.ஐ காண்டாக்ட் ஷான் ஹென்ரி கூட நைட்டு பேசினேன். இண்டியாவில் சர்வதேச சைபர் க்ரைம் எல்லாம் ஹாண்டில் செய்ய R&AWவில் சைபர் க்ரைம் ஸெல் (Cyber Crime Cell) அப்படின்னு ஒரு ஸெல் இருக்கு. என் எஃப்.பி.ஐ காண்டாக்ட் ஷான் ஹென்ரிக்கு அந்த ஸெல்லின் சீஃப் ஜே.சி.பி முரளீதரனை நல்லா தெரியுமாம். நைட்டுன்னும் பாக்காம அவரை காண்டாக்ட் செஞ்சார். அவருக்கு கீழே வொர்க் செய்யும் ஆஃபீஸர்ஸ்களில் ஒருத்தர், ஒரு லேடி ஐ.பி.எஸ் ஆஃபீஸர் வந்தனா ராத்தோட்-சக்திவேல், CRPFஇல் இருந்து ஒரு போலீஸ் டீமை கூட்டிட்டு ஐ.டி ரெய்ட் செய்யும் அதே நேரத்தில் அங்கு வந்துடுவாங்கன்னு சொன்னாங்க"

சுதர்சனம், "ஏன் CRPF? R&AWவுக்கு ஆள் பலம் இல்லையா?"

ஆனந்த், "அது ஒரு சூப்பர் பவர் மாதிரி அவங்க கேட்டா இந்தியாவில் இருக்கும் எந்த போலீஸ் ஃபோர்ஸும் அவங்களுக்குத் தேவையான ஆள் பலத்தை கொடுப்பாங்களாம். தவிற அவங்களுக்குன்னு தனியா போலீஸ் படை எதுவும் இருக்காதாம். Besides, லோகல் போலீஸ்ஸை வர வேண்டாம்ன்னு முரளீதரன் சொல்லிட்டாராம். ப்ரீதி கொடுத்த போலீஸ் கம்ப்ளெயிண்டையும் R&AWவே ஹாண்டில் பண்ணும்ன்னு சொன்னாராம்"

சுதர்சனம், "சோ! ப்ரீதிக்கு விடுதலை கிடைக்கும் அதே சமயத்தில் நோக்கும் கிடைக்கப் போறது. சாயங்காலம் ஆத்துக்கு ரெண்டு பேரும் வாங்கோ"

ஆனந்த், "ம்ம்ம் .. எங்கேயும் போலைன்னா வரோம்"

சுதர்சனம், "டேய், காரியம் ஆன உடனே கழட்டி விடப் பாக்கறையா?"

ஆனந்த், "ஐய்யோ! மாமா!! ப்ரீதி என்னை எதாவுது கோவிலுக்குக் கூட்டிட்டுப் போகச் சொல்லுவா"

சுதர்சனம், "நோக்கு அந்த மாதிரி ஒருத்தி தேவைதான். குட் லக். அப்பறமா அப்டேட் கொடு" என விடை பெற்றார்






No comments:

Post a Comment