Tuesday, May 5, 2015

அக்னி சாட்சி - அத்தியாயம் - 25

டீம் டின்னரில் ...

ஆனந்த், "சுகுமார், முக்கால் வாசி மாட்யூல்ஸ் ஸக்ஸஸ்ஃபுல்லா முடிச்சுட்டீங்க. ப்ராஜக்ட் எப்போ முடிப்பதா இருக்கீங்க?"

சுகுமார், "ஒரிஜினல் டார்கெட் டேட் மார்ச் கடைசிலதான். ஆனா விக்ரம் ஷா இந்த மாசக் கடைசில முடிச்சு ஆகணும்ன்னு சொல்லி இருக்கார்"

ஆனந்த், "ஏன் எதாவுது வேற புதுப் ப்ராஜெக்ட் வரப் போகுதா?"

சுகுமார், "தெரியலை ஆனந்த். என்னோடது புசுசா டெவலப் செய்யற ப்ராஜெக்ட். வேற ஒரு மேனேஜரோட ஆன்-கோயிங்க் (தொடர்ந்து மென்பொருளை சரி பார்த்து தேவையான சிறு சிறு மாற்றங்கள் செய்து கொடுக்கும்) மெயின்டெனன்ஸ் ப்ராஜெக்ட். அதுவும் இந்த மாசக் கடைசில முடியப் போகுதுன்னு அவன் சொல்றான். என்ன நடக்குதுன்னே தெரியலை ஆனந்த்"

ஆனந்த், "அப்படின்னா டீம் மெம்பர்ஸ்ஸுக்கு எல்லாம் அடுத்த மாசம் வேலை இருக்காதா?"



சுகுமார், "இல்லை. வேற ஒரு பெரிய ஐ.டி கம்பெனிகூட எதோ பேச்சு வார்த்தை நடந்துட்டு இருக்கற மாதிரி தெரியுது. மொத்த டீமையும் ஃபெஸிலிடீஸோட சேர்த்து அந்தக் கம்பெனிக்கு விக்க பேச்சு வார்த்தை நடந்துட்டு இருக்கற மாதிரி தெரியுது ஆனந்த். நான் சொன்னேன்னு யார்கிட்டேயும் சொல்லிடாதீங்க"

ப்ரீதி, "இதுவரைக்கும் அதைப் பத்தி என் கிட்டே பேசவே இல்லை சுகுமார்"

சுகுமார், "நம்ம கிட்டே எதுக்குப் பேசணும் ப்ரீதி?"

ப்ரீதியின் முகத்தில் தோன்றிய கலவரத்தை மறைக்க ஆனந்த் அவள் கையைப் பற்றி அழுத்தினான். தொடர்ந்து, "சரி, என்னை எப்போ ரிலீவ் பண்ணப் போறீங்க?"

சுகுமார், "அடுத்த வாரக் கடைசில" என்றவன் ஆனந்தின் முகத்தில் தோன்றிய வியப்பைப் பார்த்து, "விக்ரம் ஷா உங்ககிட்டே அதைப் பத்தி பேசலையா?"

ஆனந்த், "ம்ம்ஹூம் ... பரவால்லை விடுங்க. எப்படியும் எனக்கு கொஞ்சம் சொந்த வேலை இருக்கு. அது அவருக்கும் தெரியும். விட்டாப் போதும்ன்னு இருப்பேன்னு நினைச்சுட்டு இருப்பார்" என்று சிரிக்க வைத்த படி மற்றவர் நின்று கொண்டு இருந்த பகுதிக்கு அவன் நகர ப்ரீதி அவனை பின் தொடர்ந்தாள்.

ப்ரீதி, "என்ன நடக்கறது ஆனந்த்" என தன் காதைக் கடித்த காதலியிடம் சுவாதீனமாக புன்னகைத்த படி ஆனந்த், "எங்க அப்பன் குதுறுக்கு உள்ளே இல்லைன்னு சொல்லற மாதிரி மூஞ்சியை வெச்சுட்டு இருக்காதே. இங்கே இருக்கறவங்களில் யாராவுது விக்ரம் ஷாகிட்டே போட்டுக் கொடுக்கப் போறாங்க"

....

டின்னர் முடிந்து காரில் ...

ப்ரீதி, "என்ன நடக்கறது ஆனந்த்?"

ஆனந்த், "அனேகமா விக்ரம் ஷா எதாவுது மோப்பம் பிடிச்சு இருப்பார்ன்னு நினைக்கறேன். அதான் ஆபரேஷனை வைண்ட் அப் பண்ணப் பாக்கறார்"

ப்ரீதி, "அப்போ என் கதி?"

ஆனந்த், "உன் கதிக்கு என்ன? மாமா திங்கள் கிழமை காலைல போலீஸலயும் இன்கம் டாக்ஸ் டிபார்ட்மெண்டிலும் நீ சைன் பண்ணின அஃபிடெவிட்டை ஆதரத்தோட தாக்கல் செய்யப் போறார். அதுக்கு அப்பறம் விசாரணை முடியறவரைக்கும் கொஞ்ச நாள் ஜாலியா பெங்களூர்ல இருந்துட்டு என்னோட வரப் போறே. அவ்வளவுதான்"

ப்ரீதி, "ஓ! வேணுங்கற ப்ரூஃப் எல்லாம் அந்த ரெட்டி தர்றதா சொல்லி இருக்காரா?"

ஆனந்த், "எஸ் மை டார்லிங்க்!"

ப்ரீதி, "இதை மொதல்லேயே சொல்லித் தொலைச்சு இருக்கலாம் இல்லை? எருமை மாடு! காலைல இருந்து I was on pins and needles"

சற்று நேரத்தில் ஆனந்த் தங்கி இருந்த ஃப்ளாட்டுக்குள் நுழைந்தனர்

ப்ரீதி, "ஸ்டில் .... ஆனந்த்? அந்த ஆதாரம் மட்டும் போறுமா?"

ஆனந்த், "கூட விக்ரம் ஷா லாப்டாப் ஹார்ட் டிஸ்கும் தேவைப் படும். ரெய்ட் வரும் போது அவங்க அதை சீஸ் பண்ணிடுவாங்க. இந்த டீல் விவரத்தோட கூட ஹார்ட் டிஸ்கும் இருந்தா உன் மேல ஒரு ஆக்ஷனும் எடுக்க முடியாது"

ப்ரீதி, "இப்போவே சொல்லிட்டேன். கோர்டில் பாத்துக்கலாம் அது இதுன்னு கல்யாணத்துக்கு ஒத்துக்கச் சொல்லாதே. என் மேல ஒரு சந்தேகமும் இல்லைன்னு ப்ரூவ் ஆகற வரைக்கும் நோ மேரேஜ்"

ஆனந்த் முகத்தில் எரிச்சலைக் காட்டி அவள் இடையை வளைத்து அணைத்து, "என்ன நீ? அங்கே உன் வருங்கால மாமியார் எப்போடா கல்யாணம்ன்னு குதிச்சுட்டு இருக்காங்க. இங்கே நீ என்னை மிறட்டறே. எவ்வளவு நாள்தான் நான் வெயிட் பண்ணறது?"

அவன் மார்பில் முகம் புதைத்த ப்ரீதி, "ஆமா! இவர் என்னவோ கல்யாணத்துக்கு வெயிட் பண்றா மாதிரி இல்லை பேசறார்? அதான் கல்யாணம் ஆகாமேயே எல்லாம் நடந்துண்டு இருக்கே?"

ஆனந்த், "தேங்க்ஸ் ஃபார் ரிமைண்டிங்க் மி. இரு Let us do something interesting"

சட்டென அவனிடம் இருந்து தள்ளி நின்ற ப்ரீதி, "ம்ம்ம் ... என்ன interesting?"

ஆனந்த், "புடவை கட்டறதும் சுவாரசியமான விஷயம். அதை கழட்டறதும் சுவாரசியமான விஷயம்" என்றபடி அவளை நெருங்கினான்.

ப்ரீதி தன் கண்களை மூடியபடி திரும்பி அவனுக்கு முதுக்கு காட்டி நிற்க ...

ஆனந்த், "எஸ்! பரவால்லியே சொல்லாமலே உனக்கு தெரியறதே" என்றபடி அவளை நெருங்கினான்

ப்ரீதி, "என்ன சொல்லாமலே?"

ஆனந்த், "எங்கே இருந்து ஆரம்பிக்கணும்ன்னு" என்றபடி சேலை மறைக்காமல் இருந்து இடைப் பகுதியில் தன் கைகளை செலுத்தியபடி குனிந்து அவள் ரவிக்கை மறைக்காத முதுகுப் பகுதியில் முத்தமிடத் தொடங்கினான்.

ப்ரீதி, "ஐய்யோ போதும் நான் போய் செஞ்ச் பண்ணிண்டு வர்றேன்" என்றபடி அவனிடம் இருந்து விலகப் பார்த்தாள்.

நிமிர்ந்து அவள் காது மடல்களை தன் உதடுகளால் மெல்லக் கவ்வியபடி ஆனந்த் தன் பிடியை இறுக்கினான். ப்ரீதி தன்னை மறந்து அவன் மேல் சாய ஆனந்தின் கைகள் இடையில் இருந்து மேல் நோக்கி நகர்ந்து அவள் கொங்கைகளைப் பற்ற .. ப்ரீதி மெலிதாக அலறினாள் ... பிறகு அவளை தன் பக்கம் திருப்ப ப்ரீதி அவன் கண்களைத் தவிற்க அவனை இறுக்கி அணைத்தாள்.

ஆனந்த், "ஹே! நான் ரொம்ப நாளா கனவு கண்டுட்டு இருக்கற ஒரு விஷயம். நீ இப்படி கட்டிப் பிடிச்சதும் ஞாபகத்துக்கு வந்தது"

ப்ரீதி, "என்ன?"

ஆனந்த், "ரெமி உனக்கு என்னென்ன ஸ்லோ டான்ஸ் நம்பர்ஸ் சொல்லிக் கொடுத்தா?"

ப்ரீதி, "ரெண்டு மூணுதான்"

ஆனந்த், "I Love the way you love me அப்படிங்கற பாட்டு சொல்லிக் கொடுத்தாளா?"

ப்ரீதி, "ம்ம்ம்ம்... எப்படி அந்தப் பாட்டு இருக்கும் பாடிக் காட்டு?"

ஆனந்த் அந்தப் பாடலில் முதல் இரு வரிகளை பாடிக் காட்ட கண்கள் பிரகாசித்த ப்ரீதி, "ம்ம்ம் ... சொல்லிக் கொடுத்தா. அன்னைக்கு நல்ல வேளையா அந்த பாட்டு வரலைன்னு நினைச்சுண்டு இருந்தேன்"

ஆனந்த், "ஏன்?"

ப்ரீதி லேசாக முகம் சிவக்க "ரொம்ப இண்டிமேட்டா மூவ் பண்ணணும்ன்னு சொல்லிக் கொடுத்து இருந்தா. அப்படி ஆட நேக்கு ரொம்ப வெக்கமா இருந்தது"

ஆனந்த், "எப்படி ஆட?"

ப்ரீதி அவன் சொல்ல வந்ததை புரிந்து கொண்டு, "இப்போ இருக்கற மாதிரி கட்டிப் பிடிச்சுண்டு ஆட"

ஆனந்த், "இப்பவும் அந்த மாதிரி வெக்கமா இருக்கா?"

ப்ரீதி, "மத்தவா முன்னாடி வெக்கமாத்தான் இருக்கும்"

ஆனந்த், "இங்கே நாம் ரெண்டு பேர் மட்டும் இருக்கச்சே?"

ப்ரீதி, "நாம் ரெண்டு பேர் மட்டும் இருக்கச்சே ஐய்யா என்னென்னவோ பண்ண வெச்சுட்டார். இப்படி டான்ஸ் ஆட வெக்கமா இருக்காது"

ஆனந்த், "ஓ.கே!" என்ற படி அருகில் மேசையில் அவனது ஐபாட் செருகப் பட்டு இருந்த ட்ராவல் ம்யூஸிக் ஸிஸ்டத்தை இயக்கினான். அவன் சொன்ன பாடல் வந்ததும் ப்ரீதி அவனை அணைத்த படி அவனுடன் சேர்ந்து ஆடத் தொடங்கினாள். இடைஇடையே முத்தங்களுடன் அணைப்பில் இருந்து அவளை விடுவிக்காமல் படுக்கை அறைக்கு அவளை நடத்திச் சென்றான்.

ஆடியபடி அவனது கை அவளது தோளில் அவளது முந்தானை பிளவுஸுடன் சேர்த்து இணைக்கப் பட்டு இருந்த பின்னை கழட்ட ...

ப்ரீதி, "ம்ம்ம் ... என்ன பண்ணறே?"

ஆனந்த், "You keep dancing baby"

அடுத்த வரியின் போது ப்ரீதியின் முந்தானை சரிந்து இருந்தது ...

ப்ரீதி, "ம்ம்ம் ... கால் தடுக்கப் போறது .. ."

ஆனந்த், "ஆமா .. சோ!" என்றபடி அடுத்த வரியின் உச்ச ஸ்தாயின் போது அவளை பம்பரமாக சுழற்றி அவளது புடவைக்கு விடை கொடுத்தான். நகர்ந்து நின்று மார்பின் குறுக்கே கைகளை கட்டியவளை மறுபடி இழுத்து அணைத்தபடி நடனத்தைத் தொடர்ந்தான்.

ப்ரீதி, "சீ! இதை எல்லாம் கனவு கண்டு வெச்சு இருந்தியாக்கும்"

ஆனந்த், "ம்ம்ம் .. இன்னும் இருக்கு"

ப்ரீதி, "இன்னும் என்ன?"

ஆனந்த், "இந்த பாட்டு முடியும் போது You will be fully naked"

ப்ரீதி, "சீ!" என்று அலறி அவனிடம் இருந்து விலகப் போனவளின் இடையை இறுக்கி

ஆனந்த், "வேற எதுக்கு உன்னை பெட் ரூமுக்கு கூட்டிட்டு வந்தேனாம்?"

ப்ரீதி, "நீ இப்படி ஃபுல்லா ட்ரெஸ் பண்ணிண்டு இருப்பே. நான் மட்டும் அம்மணமா நிக்கணுமாக்கும்?"

ஆனந்த், "வேணும்ன்னா நீயும் என் ட்ரெஸ்ஸை கழட்டு" என அவன் வாய் சொன்னாலும் அவனது ஒரு கை இருவருக்கும் இடையே புகுந்து அவளது ப்ளவுஸ் கொக்கிகளை அகற்றி விட்டு இருந்தது

ப்ரீதி, "நேக்கு அதெல்லாம் தெரியாது"

ஆனந்த், "எதெல்லாம்?" என்றபடி அவனது கை ப்ராவின் மேலாக அவளது இடது கொங்கை மேல் தவழ ப்ரீதியின் அதிர்ந்து சிலிர்த்தபடி, "உன் ட்ரெஸ்ஸைக் கழட்டறது எல்லாம்"

மறுபடி அவளை முன்னும் பின்னும் சுழற்றி இடுப்புக்கு மேல் அவளை பிறந்த மேனியாக்கினான்.

ப்ரீதி, "போரும் ஆனந்த். பெட்டுக்குப் போலாம்"

ஆனந்த், "இன்னும் பாட்டு முடியலையே"

அந்த நடனம் படுக்கையில் முடிந்த போது இருவரும் பிறந்த மேனியாக பின்னிப் பிணைந்தனர்


ஞாயிற்றுக் கிழமை காலை பத்து மணியளவில் ...

மரகதம், "என்னாடா சிவா வேலைக்கு போறியா?"

சிவா, "ஆமாம்மா இன்னைக்கு வேலை தலைக்கு மேல இருக்கு"

மரகதம், "அப்பறம் எப்படி மத்தியானம் நம்மளை ரெட்டி சார் சாப்பாட்டுக்குக் கூப்பிட்டு இருக்கார். போவணும்ன்னு சொன்னே?"

சிவா, "காலைல போயிட்டு ஒரு மணி வாக்கில வந்துடறேன். செல்வியும் கணக்கு எழுதற வேலை இன்னும் கொஞ்சம் பாக்கி இருக்குன்னு சொன்னா. அவளையும் கூட்டிட்டு நேரா அங்கே வர்றேன். நீ விஜயா ஆண்டியைக் கூட்டிட்டு ஆட்டோல போ"

மரகதம், "டேய் சிவா, விஜயா வரலைன்னு சொன்னா"

சிவா, "ஏன்?"

மரகதம், "அங்கே யாராவுது எடக்கு முடக்கா பேசினா உனக்கு அவமானமா இருக்கும்ன்னு சொன்னா"

சிவா, "யாரும் எதுவும் பேச மாட்டாங்க. ரெண்டு பேரும் கிளம்பி வர்றீங்க. இன்னா?" என்றவன், "எங்கே இவளை இன்னியும் காணோம்?"

மரகதம், "நீ அங்கே இருந்து நேரா ரெட்டி சார் வீட்டுக்குப் போவணும்ன்னு சொல்லி இருப்பே. அதான் கொஞ்சம் நல்லா ட்ரெஸ் பண்ணிட்டு இருப்பா."

சிவா, "ம்ம்ஹூம்ம் .. போய் பாக்கறேன்" என்று வெளியில் செல்ல திரும்ப வாசலை செல்வியும் விஜயாவும் அடைத்து நின்று இருந்தனர்.

செல்வியின் கண்களில் கண்ணீருடன் கலவரம் தாண்டவம் ஆடியது.

சிவா, "இன்னா ஆச்சு செல்வி?"

செல்வி, "அந்த நந்தகுமார் ஃபோன் பண்ணினான்"

சிவா, "இன்னான்னான்?"

செல்வி, "முதல்ல 'ஸிஸ்டத்தில் இருக்கற வீடியோவை டிலீட் பண்ண ஆளை விட்டு அனுப்பறையாடி' அப்படின்னு கத்தினான் அப்பறம், அந்த வீடியோ அவன் செல்ஃபோனில் பத்திரமா இருக்குதாம். அவன் தான் அது கர்ரப்ட் ஆயிடுச்சுன்னு நினைச்சுட்டானாம். இன்னும் மூணு நாளில் ஹாங்க் காங்க்குக்கு போவப் போறானாம். அங்கே போனதும் அந்த வீடியோவை இன்டெர்நெட்டில் போட்டு அவமானப் படுத்தப் போறேன்னு மிறட்டிட்டு ஃபோனை வெச்சுட்டான். குடிச்சு இருந்து இருப்பான் மாதிரி இருக்கு. யாரோ அவனுக்கு பக்கத்தில் வந்து அவன் கிட்டே யாருக்கு ஃபோன் பண்ணறேன்னு கேட்ட மாதிரி இருந்துச்சு. அதுக்கு அப்பறம் லைன் கட்டாயிடுச்சு. எனக்கு பயம்மா இருக்கு சிவா" என்றபடி விசும்பினாள்

சிவா, "இரு மொதல்லே பிரபாகருக்கு ஃபோன் பண்ணி அவன் போன விஷயம் இன்னா ஆச்சுன்னு கேக்கலாம்" என்றபடி P.K.ரெட்டியின் இல்லத் தொலைபேசியை அழைக்க ...

எதிர்முனையில் பதிலளித்த சாரதா, "ஐய்யோ சிவா! என் மவன் என்னை விட்டுட்டுப் போயிட்டான் சிவா" என்று அலறினாள்.

சிவா, "செல்வி, எதோ நடக்கக் கூடாதது நடந்து இருக்கு. நீ ஆண்டியை கூட்டிட்டு ஆட்டோல வா" என்றவன் மரகதத்திடம், "அம்மா வா போவலாம்"

மரகதம், "இன்னாடா?"

சிவா, "பிரபாகர் செத்துட்டானாம் .. "

மரகதா, "ஐய்யோ கடவுளே!"

சிவா பதிலேதும் பேசாமல் இறுகிய முகத்துடன் தன் தாயை அழைத்துக் கொண்டு ஸ்கூட்டரில் ரெட்டியின் வீட்டுக்குப் புறப்பட்டான்





ப்ரீதியை தன் மடியில் அமர்த்தி அவளுக்கு ஊட்டிக் கொண்டு இருக்கையில் ஆனந்த்தின் செல் ஃபோன் சிணுங்கியது ...

ஆனந்த், "ம்ம்ம் .. சொல்லுங்க சிவா"

....

ஆனந்த், "வாட்! மை காட்!! நான் உடனே புறப்பட்டு வர்றேன்"

ப்ரீதி, "என்ன ஆச்சு ஆனந்த்?"

ஆனந்த், "அந்த பிரபாகரை யாரோ கத்தியால குத்திக் கொன்னு ரோட் ஓரத்தில் போட்டுட்டுப் போயிருக்காங்க. சிவா இப்போ அங்கே இருக்கார். நீ இரு நான் போயிட்டு வர்றேன்"

ப்ரீதி, "இல்லை நானும் வர்றேன்"

ஆனந்த், "நீ எதுக்கு? உன்னை யாருன்னே அவங்களுக்கு தெரியாது"

ப்ரீதி, "ஆனந்த், ஒருத்தர் போயிட்டர்ன்னா அவா ஆத்தில எல்லாம் இடிஞ்சு போய் உக்காந்துண்டு இருப்பா. யார் வேணும்ன்னா ஆறுதல் சொல்லலாம். ஆறுதல் சொல்லறதுக்கு மட்டும் இல்லை. கூட மாட ஒத்தாசையாவும் இருக்க முடியும்" என்றபடி புறப்பட்டாள்.

ரெட்டியின் வீட்டை நோக்கி மௌனமாக இருவரும் பயணித்துக் கொண்டு இருந்தாலும் ப்ரீதீ சொன்ன வார்த்தைகளை நினைவு கூர்ந்த ஆனந்த் அவளை மனைவியாக அடைய தான் கொடுத்து வைத்து இருக்க வேண்டும் என்று மனதுக்குள் இறைவனுக்கு நன்றி சொன்னான். 


ரெட்டியின் இல்லத்தை அடைந்த போது சிவா அவர்களுக்காக காத்து இருந்தான் ...

ஆனந்த், "சிவா, எப்படி ஆச்சு? நம்ம விஷயத்தினாலயா?"

சிவா, "நான் முதல்ல அப்படித்தான் நினைச்சேன். ஆனா விஷயம் வேற மாதிரி இருக்கு. நம்ம விஷயமும் அவன் சாவறதுக்கு ... அதுக்கு ஒரு காரணமாயிடுச்சு"

ஆனந்த், "என்ன சொல்லறீங்க புரியலை?"

சிவா, "காலைல நந்தகுமார் செல்விக்கு ஃபோன் பண்ணி மிறட்டி இருக்கான். குடிச்சுட்டு போதைல பேசின மாதிரி இருந்துச்சாம். வீடியோவை டிலீட் பண்ண ஆளை அனுப்பறையாடின்னு கத்தினானாம். அப்பறம் அவன் ஸெல் ஃபோன்ல அந்த வீடியோ பத்தரமா இருக்கு. இன்னும் ரெண்டு நாளில் ஹாங்க் காங்க் போறேன். அங்கே போனதும் இன்டர்நெட்டில் அந்த வீடியோவைப் போட்டு உன் மானத்தை வாங்கறேன்னு கத்தி இருக்கான். அதுக்குள்ளே பின்னாடி இருந்து யாரோ அவனை அதட்டி இருக்காங்க. காலை கட் பண்ணிட்டான். அதுக்கு அப்பறம் இங்கே கூப்பிட்டா சித்தி பிரபாகர் போயிட்டான்னு அழுதாங்க. என்னால அவன் செத்துட்டான்னு நினைச்சுட்டு வந்தேன். இங்கே வந்தப்பறம்தான் அதனால இல்லைன்னு தெரிஞ்சுது"

சிவா தொடர்வதற்கு முன்னால் ஆவலை அடக்க முடியாத ஆனந்த், "எப்படித் தெரிஞ்சுது?"

சிவா, "அவன் உங்க ஆஃபீஸ்ல இருக்கும் போது யாரோ அங்கே வந்து வந்து இவனை பிடிச்சு இருக்காங்க. யாருன்னு தெரியாது. அவங்க மிறட்ட ஆரம்பிச்சப்போ பிரபாகர் ஸெல் ஃபோனில் அவனோட மாமாவை கூப்பிட்டு இருக்கான். ஆனா பதில் எதுவும் சொல்லலை. அவங்க பேசறது எல்லாம் அவருக்குக் கேட்டு இருக்கு. அவர் புறப்பட்டு அங்கே போறதுக்குள்ளே அவனை கத்தியால குத்தி பில்டிங்க் வாசலில் போட்டுட்டு போயிருக்காங்க"

"போலீஸ்ல சொல்லி ஆச்சா?" என ஆனந்த் கேட்டுக் கொண்டு இருக்கும் போது ரெட்டி அங்கு வந்தார்

ரெட்டி, "இந்த ரெட்டியை யாருன்னு தெரியாம விளையாடிட்டான். அவன் கணக்கை வேற மாதிரி செட்டில் பண்ணப் போறேன். இந்தா நீ கேட்ட விவரம் எல்லாம் இதில இருக்கு" என்றபடி ஒரு கவரை கொடுத்தார் பிறகு தொடர்ந்து, "போலீஸுக்கு எல்லாம் போயிட்டு இருக்காதே. உன் வருங்கால மனைவியை காப்பாத்தற வழியை மட்டும் பாரு. என் பொண்ணு அமெரிக்காவில் இருந்து செவ்வாய் கிழமை காலைல வர்றா. அன்னைக்கு சாயங்காலம்தான் என் மகன் உடம்பை மசாணத்துக்கு எடுத்துட்டுப் போவேன். அவன் உடம்பு சாம்பலாவறதுக்கு முன்னாடி விக்ரம் ஷாவும் நந்தகுமாரும் நரகத்தில இருப்பாங்க"

மதியம் வரை அங்கு இருந்தபின் ஆனந்தும் ப்ரீதியும் அங்கு இருந்து புறப்பட்டனர் ...

அவர்களை வழியனுப்பிய சிவாவிடம் ஆனந்த், "இப்போ விக்ரம் ஷாவும் நந்தகுமாரும் எங்கே இருக்காங்கன்னு தெரியுமா?"

சிவா, "ஆளுங்க தேடிட்டு இருக்காங்க. ரெண்டு பேரும் வீட்டைக் காலி பண்ணிட்டு இருக்காங்க. விக்ரம் ஷாவோட வொய்ஃப் குழந்தைங்க எல்லாம் ரெண்டு நாளைக்கு முன்னாடியோ கிளம்பி போயிட்டு இருக்காங்க. எதோ ஒரு விஷயத்துக்காக இவனுக ரெண்டு பேரும் இன்னும் பெங்களூர்ல இருக்கற மாதிரி இருக்கு"


காரில் ஏறியதும் ..

ப்ரீதி, "மொதல்ல ஆத்துக்குப் போ"

ஆனந்த், "ஆத்துக்குன்னா?"

ப்ரீதி, "படுத்தாதே ஆனந்த். உன் ஃப்ளாட்டுக்குத்தான்"

ஆனந்த், "ஏய், இந்த டாக்யூமெண்ட்ஸ் எல்லாத்தையும் மாமாட்ட கொடுக்கணும்"

ப்ரீதி, "தெரியும். ஆத்துக்குப் போய் ஸ்நானம் பண்ணணும்"

ஆனந்த், "ஓ! மறந்தே போச்சு... லஞ்சுக்கு மாமா வீட்டுக்குப் போயிடலாம்ன்னு நினைச்சேன். ஃப்ளாட்டுக்குப் போய் குளிச்சுட்டு கிளம்ப நேரம் ஆயிடும்" என்றவாறு ஸெல் ஃபோனில் சுதர்சனத்தை அழைத்தான், "மாமா. நாங்க லஞ்சுக்கு உங்க ஆத்துக்கு வர முடியாது. டின்னருக்கு வரோம்"

....

ஆனந்த், "ஒரு சீரியஸ் டெவலப்மெண்ட். அதனாலதான்"

...

ஆனந்த், "அந்த டீலோட கம்ப்ளீட் டாக்யுமெண்ட் செட் காப்பி என் கையில் இருக்கு. உங்களை நேர்ல பாக்கச்சே விவரமா சொல்லறேன். ஒண்ணு செய்யறேளா? உங்க லாயர் ஃப்ரெண்டை சாயங்காலம் நாம் மீட் பண்ணலாமா?"

....

ஆனந்த், "ஓ! தாட் வுட் பி க்ரேட்! சீ யூ மாமா" என்ற பிறகு ப்ரீதியிடம், "மாமா சாயங்காலம் அஞ்சு மணி வாக்கில அவரோட லாயர் ஃப்ரெண்ட்டை வரச் சொல்லி இருக்கார். நம்மட்டே இருக்கும் டாக்யூமென்ட்ஸைப் பாத்துட்டு அடுத்து என்ன நடவடிக்கை எடுக்கணும்ன்னு இன்னைக்கே டிஸ்கஸ் பண்ணி முடிவு எடுத்துடலாம்ன்னு சொன்னார்"



ப்ரீதி, "ஆனந்த. விக்ரம் ஷா ஊரை விட்டுப் போகப் போறார்ன்னு சிவா சொன்னாரே? அவர் போயிட்டர்ன்னா நான் மாட்டிப்பேனா?"

ஆனந்த், "சே சே! நீ எதுக்கு மாட்டிப்பே? என்ன? அந்த ஸைபர் தெஃப்ட் விஷயத்தில் உன் கம்பெனி இன்வால்வ் ஆகி இருந்தாலும் நீ அதில் இன்வால்வ் ஆகலை அப்படிங்கறதுக்கு நம்மட்டே இப்போதைக்கு ஆதாரம் இல்லை. பட் ரெய்ட் வரும் போது எப்படியும் அவரோட லாப்டாப்பை கான்ஃபிஸ்டிகேட் பண்ணப் போறாங்க. That is enough"

ப்ரீதி, "ரெய்ட் வரதுக்கு முன்னாடி அவர் போயிட்டர்ன்னா?"

ஆனந்த், "ஷா ஸிஸ்டம்ஸ் வேற கை மாறும் வரைக்கு போக மாட்டார்ன்னு நினைக்கறேன். அனேகமா பேச்சு வார்த்தை நடந்துட்டு இருக்கும். எப்போ கை மாறப் போகுதுங்கற விஷயத்தையும் மாமாவோட காண்டாக்ட்ஸ் மூலம் விசாரிக்கலாம். Don't worry honey. We are almost there"

ப்ரீதி, "அந்த பிரபாகர் உயிரை விட்ட விஷயம்தான் என் மனசை ரொம்ப உறுத்தறது ஆனந்த்"

ஆனந்த், "அது அவனா வர வெச்சுட்டது. சிவாவுக்கு உதவினதால அவன் உயிர் போகலை. உதவாம இருந்தாலும் அவனை தீத்துக் கட்டி இருப்பாங்க. ஏன்னா விக்ரம் ஷாவோட ரகஸியங்களை தெரிஞ்ச இன்னொரு ஆள் அவன்"




No comments:

Post a Comment