Saturday, January 31, 2015

செக்மேட் - சைபர் கிரைம் திரில் தொடர் - பாகம் - 23


சக்தி, "ஹாய் ஹனி! சாப்டாச்சா இல்லை சாப்பிடப் போறயா?" வந்தனா, "இனிமேல் தான் போகணும்" சக்தி, "டாண்ணு ஒன்றரை மணிக்கு சாப்பிட உக்காந்துடுவே. இன்னைக்கு என்ன ஆச்சு? ரொம்ப பிஸியா?" வந்தனா, "ஹெல்லோ! லாஸ்ட் மந்த் 8ம் தேதியில் இருந்து உங்க ஊரில் டே லைட் ஸேவிங்க் டைம் (Daylight Saving Time) ஆரம்பிச்சு இருக்குன்னு நீதானே சொன்னே? நீ உன் கடிகாரத்தை ஒரு மணி நேரம் முன்னாடி திருப்பி வெச்சுட்டா நான் சீக்கரம் சாப்பிடணுமா?" சக்தி, "ஓ யா, மறந்துடுச்சு"
வந்தனா, "சரி நீ என்ன பண்ணிட்டு இருக்கே இந்த நேரத்தில்?" சக்தி ஏதோ நினைவில், "ஒரு ரெஸ்டாரண்டில் தனியா உக்காந்துட்டு இருக்கேன்" வந்தனா, "எதுக்கு?" தன் தவறை உணர்ந்து சட்டென்று என்ன சொல்வது என யோசித்தபின், "இந்த ஏரியாவுக்கு டின்னருக்கு ஃப்ரெண்டோட வந்து இருந்தேன். ஆஃபீஸ்ல சில டாக்யூமெண்ட்ஸ் விட்டுட்டு போயிருந்தேன். ஆஃபீஸுக்கு போய் எடுத்துட்டு வீட்டுக்கு போறதுக்கு முன்னாடி இங்கே காஃபி சாப்பிட வந்தேன்" என்று தன் அலுவலக செக்யூரிட்டியிடம் சொன்னதை சொன்னான். வந்தனா, "ஏன் தான் இவ்வளவு காஃபி குடிப்பியோ? வீட்டுக்கு போய் தூங்கத்தானே போறே? கல்யாணத்துக்கு அப்பறம் உனக்கு காஃபி ரேஷன் பண்ணப் போறேன்" சக்தி, "நீ பகல் நேரத்தில் காஃபியை கட் பண்ணினா ஆஃபீஸில் தூங்கி வழிவேன். நைட் சாப்பிட்டதுக்கு அப்பறம் கட் பண்ணினா உனக்குத்தான் நஷ்டம்" வந்தனா, "ஏன்?" சக்தி, "தூங்கி வழிவேன். அப்பறம் சம்திங்க் சம்திங்க் கிடைக்காது" வந்தனா, "சீ .. கிடைக்கலைன்னா பரவால்லை" சக்தி, "ஆர் யூ ஷ்யூர்?" வந்தனா, "போதும் சும்மா பேசி இப்ப என் மூடை கெடுக்காதே" சக்தி, "மூடை கெடுக்கறேனா? என்ன சொல்றே?" வந்தனா, "பின்னே? வேற மாதிரி மூட் வந்தா வொர்க் பண்ணற மூட் கெட்டுப் போகாதா?" சக்தி, "வேற மாதிரி மூடுன்னா?" வந்தனா, "தெரியாத மாதிரி கேக்காதே" சக்தி, "என்னன்னு சொல்லேன் ப்ளீஸ்?" வந்தனா, "ம்ம்ம் ஒண்ணும் இல்லை போ" சக்தி, "ஐ நீட் யூ ரைட் நவ்" வந்தனா, "மீ டூ! ... " என்றவள் சிறிது நேர மௌனத்திற்கு பிறகு, "யூ ராஸ்கல், என்னை எப்படி கர்ரப்ட் பண்ணிட்டே. ஆஃபீஸ்ல உக்காந்துட்டு நான் இந்த மாதிரி எல்லாம் பேசுவேன்னு கனவில் கூட நினைச்சது இல்லை" சக்தி, "ஹா ஹா! சரி போய் சாப்பிடு. நான் நாளைக்கு கூப்பிடறேன்" வந்தனா, "நீயும் போய் தூங்கு" நித்தின் இந்நேரம் முடித்து இருப்பான் என்று அவனும் வீட்டுக்கு புறப்பட்டான். 2 மணியளவில் மூவரும் சக்தியின் ஃப்ளாட்டுக்கு திரும்பினர். ஜாஷ்வா, "எல்லா ஆணைகளும் கொடுத்தாச்சு இல்லையா?" சக்தி, "எஸ்! இப்ப அந்த வைரஸ்ஸை கரெக்ட் செஞ்சு மறுபடி மென்பொருள் மூலம் இந்த 34 உடன் இன்னும் ஒரு நூறு கணிணிகளுக்கு புகுத்தறேன்" ஜாஷ்வா, "ஹே, நாளைக்கு .... சாரி .... இன்னைக்கு உங்களுக்கு ஆஃபீஸ் இல்லையா?" சக்தி, "கொஞ்சம் லேட்டா போயிட்டு சீக்கரம் வந்துடறோம். ஒண்ணும் சொல்ல மாட்டாங்க" ஜாஷ்வா, "சரி நான் அப்ப புறப்படறேன்" நித்தின், "ரொம்ப தேங்க்ஸ் ஜாஷ்" ஜாஷ்வா, "ஹேய், இது என்னோட பிரச்சனையும்தான். மறந்துடாதே" என்றவாறு ஜாஷ்வா விடைபெற்றான். சக்தியும் நித்தினும் வைரஸ்ஸில் மாற்றம் செய்த பிறகு அதிகாலை 4 மணியளவில் மென்பொருளை இயக்கிவிட்டு தூங்கச் சென்றனர். அடுத்த நாளில் இருந்து மாங்க்ஸ் பாட் நெட்டில் புதிய வைரஸ்ஸான மாங்க்ஸ்-2 பரவத் தொடங்கியது.Thursday, 9 April 2009 5:00 PM Make-shift Test Lab, R&AW, New Delhi வியாழன், ஏப்ரல் 2 2009 மாலை 5:00 R&AW தற்காலிக ஆராய்ச்சிக் கூடம், புது தில்லி வந்தனா மதியம் சக்தியுடன் பேசிய திளைப்பில் இருந்து இன்னமும் மீளாமல் இருந்தாள். ப்ரூட் ஃபோர்ஸ் பாட்டர்ன் மாட்சிங்க் சுற்றுகள் நடந்த வண்ணம் இருந்தது. அவர்கள் அதுவரை 87 சுற்றுக்களை முடித்து இருந்தனர். இரவுகளில் எஃப்.பி.ஐ மூலம் தரவைத்த கணிணியில் ப்ரூட் ஃபோர்ஸ் பாட்டர்ன் மாட்சிங்க் மென்பொருள் இயக்கப் படும். ஒவ்வொரு நாளும் காலையில் முந்தைய இரவின் இயக்கத்தின் வெளிப்பாடுகளை ஆராய்ந்து பிறகு அடுத்த சுற்றுக்கான ஆயத்தங்களில் ஈடுபடுவதை வழமையாக கொண்டு இருந்தனர். பல வேலைகளையும் வந்தனாவின் மேற்பார்வையில் ப்ரொஃபெஸ்ஸர் சாரியின் குழுவே செய்தது. காலை வேளை ஆய்வுகளில் தீபா பங்கு கொள்வாள். வந்தனாவின் மேற்பார்வை சம்மந்தப் பட்ட வேலைகளில் காலையில் சில மணி நேரங்களும் பிறகு மாலை வீடு திரும்புமுன் அரை மணி நேரமும் செலவழிந்தது. இவைகளை தவிர தோழிகள் இருவரும் மாங்க்ஸ் பாட் நெட்டின் மெஸ்ஸேஜ்களையும் அதில் இணைக்கப பட்ட தங்களது நூறு கணிணிகளின் நடவடிக்கைகளையும் ஆராய்வதில் ஈடுபட்டு இருந்தனர். முதன் முதலில் மாங்க்ஸ் பாட் நெட்டில் எந்த கணிணியையும் சர்வர் நேரடியாக தொடர்பு கொள்வது இல்லை என்று கண்டு அறிந்தனர். செல்ஃப் டிஸ்ட்ரக்ட் மெஸ்ஸேஜ்களைப் போல ஒரு குறிப்பிட்ட கணிணிக்கென வரும் மெஸ்ஸேஜ்களும் பல கணிணிகளின் வாயிலாக வருவதால், இணையத்தின் மாங்க்ஸ் பாட் நெட்டின் தகவல் போக்கு வரத்து மூலம் அவர்களது சர்வரை கண்டு அறிய முடியாது என்றும் அறிந்தனர். இருப்பினும், AKBOT வேட்டையின் போது அதிகமாக பயன்பட்டதால், இணைய தகவல் போக்குவரத்தை கண்காணித்து பட்டியலிடும் மென்பொருளை அந்த நூறு கணிணிகளிலும் புகுத்தி இருந்தனர். அந்த நூறு கணிணிகளிலும் மாங்க்ஸ் பாட் நெட்டின் மெஸ்ஸேஜ்களுடன் அந்த கணிணியில் நடைபெறும் எல்லா இணையத் தகவல் போக்குவரத்துகளும் பட்டியலிட்டபடி இருந்தன. ஏதாவது எதிர்பாராத போக்கு வரத்தோ அல்லது அவர்கள் இதுவரை பார்த்திராத வகையான மாங்க்ஸ் மெஸ்ஸேஜ்ஜோ அப்பட்டியலகளில் புதிதாக வந்து இருக்கிறதா என்று பரிசீலனை செய்வதற்காக தோழிகள் ஒரு மென்பொருளை எழுதி இருந்தனர். அந்த மென்பொருளை அந்த நூறு கணிணிகளை தவிர வேறு ஒரு கணிணியில் புகுத்தி இருந்தனர். ஒவ்வொரு நாளும் மாலை 4:45க்கு அந்த மென்பொருள் தானாக இயங்கத் தொடங்கும்படி அமைத்து இருந்தனர். அந்த மென்பொருள் மற்ற நூறு கணிணிகளில் இருக்கும் பட்டியல்களை தான் இருக்கும் கணிணிக்குள் ஒன்று சேர்த்து புதிதாக ஏதாவது தென்பட்டால் அறிவிக்கும். அப்படி அறிவிக்க அந்த மென்பொருள் தன் குரலிலேயே "யூரேகா" என்ற வார்த்தையை ஒலி எழுப்புமாறு தீபா அமைத்து இருந்தாள். மேலும் மாங்க்ஸ் பாட் நெட்டின் மெஸ்ஸேஜ்களை தவிர வேறு ஏதாவது இணையத் தகவல் பரிமாற்றம் ஏற்பட்டால் "யாஹூ" என்ற வார்த்தையை ஒலிக்குமாறும் அமைத்து இருந்தாள். அன்று மாலை அடுத்த சுற்றுக்கான ஆயத்தங்களை மேற்பார்வை செய்தபிறகு ப்ரொஃபெஸ்ஸர் சாரியின் குழு அமர்ந்து இருந்த அறையில் இருந்து தங்களது நூறு கணிணிகள் கொண்ட லாப்பிற்குள் வந்தனா வந்தாள். தீபாவின் இருக்கைக்குச் சென்று பார்க்க அவள் சுவாரஸ்ஸியமாக இணையத்தில் கேம் விளையாடிக் கொண்டு இருந்தாள். வந்தனா, "எப்படி போச்சு ப்ரொஃபெஸ்ஸரோட உன் மீட்டிங்க்? எதுக்கு கூப்பிட்டு இருந்தார்? எப்ப திரும்பி வந்தே" என்று கேட்ட வாறு அவள் எதிரே அமர்ந்தாள். தீபா, "போன வாரம் அவர் வெளியூருக்கு போயிருந்தார் இல்லையா? போன வாரம் ரிவ்யூ பண்ணிதை இன்னொரு தடவை ரிவ்யூ செய்யறதுக்கு என்னை கூப்பிட்டு இருந்தார். இட் வாஸ் ரீயலி ரீயலி போரிங்க்!! முடிச்சுட்டு அங்கேயே லஞ்ச் சாப்பிட்டுட்டு வரும் போது மணி ரெண்டரை" வந்தனா, "யூ நோ சம்திங்க்? காலையில் இருந்து எனக்கும் போர் அடிச்சுட்டு இருந்துது. சக்தி ஃபோனில் கூப்பிட்டான்" தீபா, "ஏன் காலையில் கூப்பிடலையா?"
வந்தனா, "காலையிலும் கூப்பிட்டு இருந்தான். அவனுக்கு எதோ வேலை இருந்து இருக்கு. நைட் ஒரு மணிக்கு ஆஃபீஸுக்கு வந்துட்டு வீட்டுக்கு போறதுக்கு முன்னாடி கூப்பிட்டான்" தீபா, "எனிதிங்க் ஸ்பெஷல்" வந்தனா, "நத்திங்க் .. சும்மா" தீபா, "சோ அதுக்கு அப்பறம் தெம்பா வொர்க் பண்ணினேயாக்கும்?" வந்தனா, "ஆமா. இப்ப என் வேலை எல்லாம் முடிஞ்சுது. இன்னைக்கு மனீஷ் அண்ணா வர்றான். சீக்கிரம் வீட்டுக்கு போலாம் புறப்படு" தீபா, "ஹேய், எப்பவும் வெள்ளிக் கிழமை நைட்டுதானே வருவார்?" வந்தனா, "நாளைக்கு எதோ மீட்டிங்க் இருக்காம். அதனால் இன்னைக்கே வர்றான்" தீபா, "ஹப்பா, வா போலாம் அட்லீஸ்ட் வீட்டிலாவது கொஞ்சம் கலகலப்பா இருக்கும். இரு ரெஸ்ட்ரூம் போயிட்டு வர்றேன். கிளம்பலாம்" என்றவாறு தன் தோள்பையை வந்தனாவிடம் கொடுத்துச் சென்றாள்.நூறு கணிணிகள் கொண்ட லாப்பின் நடுவே இருக்கும் நடைபாதையில் நின்று கொண்டு தீபாவின் வரவுக்காக காத்து இருக்கும் போது, தீபா சென்ற திசைக்கு எதிர் திசையில் தீபாவின் குரலில், "யூரேகா" என்று மூன்று முறையும் தொடர்ந்து "யாஹூ" என்று மூன்று முறையும் ஒலித்ததைக் கேட்டாள். சில கணங்களில் அந்த குரலின் பின் விளைவுகளை உணர்ந்தவள் பட்டியல்களை ஒன்று சேர்த்து ஆராயும் கணிணிக்கு அருகே செல்ல, அதன் திரையில் கீழ்கண்டவாறு ஒரு அறிவிப்பு விண்டோ தெரிந்தது சில கணங்கள் அதைப் பார்த்தவாறு அமர்ந்து இருந்த வந்தனா உடனே தன் கைபேசியில் ஷான் ஹென்றியை அழைத்தாள். ஷான், "Vanthana, you better have some good reason to wake me up" வந்தனா, "ஷான், மாங்க்ஸ் பாட் நெட்டில் ஒரு கணிணிக்கு IRC சேனல் மூலம் தகவல் பரிமாற்றம் நடந்து இருக்கு" ஷான், "வாட்? எப்போ?" வந்தனா, "எங்க நேரப்படி இன்னைக்கு ஒரு மணி ரெண்டு நிமிஷத்தில்" அப்போது தீபா அருகே வந்து என்னவென்று ஜாடையில் கேட்க, பேசியவண்ணம் அந்த கணிணியின் திரையை காடினாள். திரையை சில கணங்கள் பார்தத தீபா கணிணி எண் 68க்கு சென்று அமர்ந்தாள். ஷான், "உங்க நேரப் படியா?" வந்தனா, "ஆமா ஷான். தகவல் பரிமாற்றம் நடந்த பாட் எங்க லாப்பில் இருக்கு" ஷான், "மை காட்! எங்கே இருந்து? ஐ.பி.அட்ரெஸ் இருக்கா?" வந்தனா, "இருக்கு உடனே டெக்ஸ்ட் செய்யறேன்" ஷான், "எவ்வளவு நேரம் தகவல் பரிமாற்றம் நடந்து இருக்கு. எத்தனை தகவல்கள்?" வந்தனா, "ரெண்டே ரெண்டு. முதலில் ஒரு மணி ரெண்டு நிமிஷத்தில் 192.168.1.53 என்கிற ஐ.பி அட்ரெஸ்ஸில் இருந்து 66.206.84.151 என்கிற கேட்வே வழியா ஒரு சாட் மெஸ்ஸேஜ் வந்து இருக்கு. அப்பறம் இந்த கணிணி ஒரு மணி மூணூ நிமிஷத்தில் அதே ஐ.பி அட்ரெஸ்ஸுக்கு ஒரு சாட் மெஸ்ஸேஜ் அனுப்பி இருக்கு. அவ்வளவுதான்" ஷான், "என்னவா இருக்கும்?" வந்தனா, "அதை நாங்க அனலைஸ் பண்ணறோம். நீங்க அந்த ஐ.பி.அட்ரெஸ் யாருதுன்னு உடனே கண்டு பிடியுங்க" ஷான், "ஓ.கே. நான் உடனே க்ரிஸ்ஸுக்கு .. " வந்தனா, "ஷான், ஷான், ... திட்ட வட்டமா தெரிஞ்சதுக்கு அப்பறம் பெரிய தலைகளுக்கு சொல்லலாம். உங்களுக்கு என்ன விவரம் தெரிஞ்சாலும் உடனே எனக்கு சொல்லுங்க. ப்ளீஸ்" ஷான் சிரித்தபடி, "Oh! I forgot you know bureaucracy as well as I do!" என்றவாறு விடைபெற்றார்.தீபா அமர்ந்து இருந்த கணிணி எண் 68க்கு அருகே சேன்ற வந்தனா, "என்ன தீபா? என்ன நடந்து இருக்கு?" தீபா, "அமேஸிங்க்" வந்தனா, "என்னன்னு சொல்லு" தீபா, "அவங்க முதலில் அனுப்பி இருந்த மாங்க்ஸ் மெஸ்ஸேஜ்கள் எல்லாம் வைரஸ்ஸை அப்க்ரேட் செய்யும் மெஸ்ஸேஜ்கள் என்பது என் அனுமானம்." வந்தனா, "எப்படி சொல்றே?" தீபா, "வைரஸ் உருமாறி இருக்கு" வந்தனா, "வாட்? எப்படி?" தீபா, "அதன் அளவு அதிகமாகி இருக்கு" வந்தனா, "முதல் முறையா மாங்க்ஸ் பாட் நெட்டில் இந்த மாதிரி ஒரு நடவடிக்கையை பார்க்கறோம். இல்லையா?" தீபா, "ஆமா. இங்கே பாரு 9:38இல் இருந்து 9:47வரைக்கும் அந்த மாதிரி மெஸ்ஸேஜ்கள் வந்து இருக்கு. மொத்தம் சுமார் 1.2MB. அதுக்கு அப்பறம் வைரஸ்ஸின் அளவு 238KBஇல் இருந்து 312KBஆ மாறி இருக்கு" வந்தனா, "பாக்கி அந்த விண்டோஸ் வால் பேப்பரில் இருக்கா?" தீபா, "அதில் இல்லை. அதே மாதிரி வேறு எதாவது ஒரு ஜேபெக் ஃபைலுக்குள் இருக்கும். ஒவ்வொண்ணா தேடிப் பாத்தா கண்டு பிடிச்சுடலாம்" வந்தனா, "ஹேய், அதுக்கு அப்பறம் இந்த கணிணி அதே மாதிரி மெஸ்ஸேஜ்களை அனுப்பி இருக்கு பாரு" தீபா, "பார்த்தேன். க்ரூப் க்ரூப்பா இது வரைக்கும் சரியா 28 மெஸ்ஸேஜ் செட் அனுப்பி இருக்கு. சர்வரில் இருந்து வரும் ஈமெயில் மெஸ்ஸேஜ்களை மத்த கணிணிகளோட பகிர்ந்துக்கற மாதிரி இந்த மெஸ்ஸேஜ்களையும் மத்த கணிணிகளுக்கு அனுப்பி இருக்கு" வந்தனா, "இல்லை தீபா! ஈமெயில் அனுப்பும் ஆணைகள் இந்த மெஸ்ஸேஜ்களுக்கு நடுவில் வேறு கணிணிகளுக்கு போயிட்டே இருந்து இருக்கு. இந்த வகையான மெஸ்ஸேஜ்கள் மட்டும் அஞ்சு ஆறு நிமிஷத்துக்கு ஒரு முறை சில கணிணிகளுக்கு மட்டும் அனுப்பி இருக்கு" என்று சுட்டிக் காட்டினாள். தீபா மலைத்துப் போய் அமர்ந்து இருந்தாள், "எஸ்! என்னவா இருக்கும்?" என்றபடி மற்றொரு லாக் ஃபைலை திறந்து பார்த்தாள். பிறகு திடீரென தீபா, "வந்தனா, ஓ மை காட்! இங்கே பாரு. IRC சேனல் மூலம் தொடர்பு எத்தனை மணிக்கு தொடர்பு வந்து இருக்குன்னு" வந்தனா, "தெரியும் மதியம் 1:02க்கு"
தீபா, "இப்ப இந்த மெஸ்ஸேஜ் லாக் ஃபைலைப் பார். 1:03க்கு அப்பறம் ஒரு மெஸ்ஸேஜ்ஜும் இந்த கணிணியில் இருந்து போகலை. அந்த நிமிடத்தில் இருந்து இந்த வைரஸ் ஸ்தம்பிச்சுப் போய் நின்னு இருக்கு. As though it has been suspended" வந்தனா, "என்னவா இருக்கும். முதலில் வைரஸ்ஸை அப்க்ரேட் செஞ்சு இருக்காங்க. அப்பறம் நேரடியா தொடர்பு கொண்டு அதன் இயக்கத்தை நிறுத்தி இருக்காங்க"Friday, 3 April 2009 9:00 AM Conference room in R&AW Headquarters, CGO Complex, New Delhi வெள்ளி, ஏப்ரல் 3, 2009 காலை 9:00 R&AW தலைமை அலுவலகத்தில் இருக்கும் கலந்தாய்வுக் கூடம், CGO காம்ப்ளெக்ஸ், புது தில்லி அனைவரும் அமர்ந்து இருந்தனர். வந்தனாவும் தீபாவும் நேற்றைய தினத்தின் பரபரப்பான கண்டு பிடுப்புகளை விளக்கினர். ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "வாவ், இந்த ப்ரூட் ஃபோர்ஸ் பாட்டர்ன் மாட்சிங்க் இழுத்துட்டே இருக்கேன்னு எதாவுது ஒரு ப்ரேக் கிடைக்காதான்னு கொஞ்ச நாளைக்கு முன்னாடிதான் நான் ப்ரே பண்ண ஆரம்பிச்சேன்" முரளீதரன், "சக்தியும் நித்தினும் திரும்பி வரதுக்குள்ள இந்த அசைன்மெண்டை முடிக்கணும்ன்னு தீபாவும் வந்தனாவும் ப்ரே பண்ணறதை விட நீங்க அதிகமா பண்ணி இருக்க முடியாது. என்ன வந்தனா? நான் சொல்றது சரிதானே?" அந்த சூழலில் இருந்த பரபரப்பையும் மீறி வந்தனா வெட்கத்தில் முகம் சிவந்து தலை குனிந்தாள். தீபா, 'டேய் பிசாசே, என்னை ஏன் இப்படி ஆக்கிட்டே? வேலையில் ஒரு முக்கியமான திருப்புமுனை. அந்த சமயத்தில்கூட உன் பேரைக் கேட்டதும் எனக்கு உன்னை உடனே பாக்கணும்போல இருக்கு' என்று மனதுக்குள் நித்தினை சபித்தாள். ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "எப்படியோ இந்த அசைன்மெண்ட் முடியறதுக்கு ஒரு வாய்ப்பு அமைஞ்சு இருக்கு. ஷான் கிட்ட இருந்து அப்டேட் வந்துதா?" முரளீதரன், "இப்ப அவர்கூட டெலிகான்ஃபெரன்ஸில் பேசப் போறோம்" ஷான்னும் சான்ட்ராவும் அவர்களுடன் டெலிகான்ஃப்ரென்ஸ் மூலம் கலந்து கொண்டனர். நகத்தை கடித்தவாறு இருந்த தீபா மறுமுனையில் ஷான் வந்தவுடன் பொறுமை இழந்து, "ஷான், கண்டு பிடிச்சுட்டீங்களா?" ஷான், "நோ தீபா. கண்டு பிடிக்க முடியுமான்னும் தெரியலை" வந்தனா, "என்ன சொல்றீங்க ஷான்?" ஷான், "வந்தனா, நீ கொடுத்த ஐ.பி அட்ரெஸ்ஸ் ப்ளூ ஃபின் அப்படின்னு ப்ராட்வேயில் (Broadway - ஒரு பிரபலமான வீதி) இருக்கும் ஒரு ரெஸ்டாரண்ட்டோடது" தீபா, "அந்த ரெஸ்டாரண்ட் ஓனரை விசாரிச்சீங்களா?" ஷான், "அவசியமே இல்லை. அந்த ஐ.பி அட்ரெஸ் அந்த ரெஸ்டாரண்ட்டோட வை-ஃபை ஃஜோனின் கேட்வே (Wi-fi zone gateway). ரெஸ்டாரண்டுக்கு சாப்பிட வாருபவர்கள் இலவசமா உபயோகிப்பதற்காக அந்த ரெஸ்டாரண்ட் அதை அமைச்சு இருக்கு. இதனாலேயே அந்த ரெஸ்டாரண்டில் சாலை ஓரம் இருக்கும் பகுதியில் எப்பவும் கூட்டம் இருக்கும். எல்லாரும் லாப்டாப் அல்லது வை-ஃபை எனேபிள்ட் ஸ்மார்ட் ஃபோன் (Wi-fi enabled smartphone) மூலம் ப்ரௌஸ் பண்ணிட்டு இருப்பாங்க. இன் ஃபாக்ட் அந்த வை-ஃபை ஃஜோனை உபயோகிக்க ரெஸ்டாரண்ட்டுக்குள் போக வேண்டிய அவசியமே இல்லை. அந்த ரோட்டில் ரெஸ்டாரண்ட் இருக்கும் சைட் முழுக்க பார்க்கிங்க் அனுமதிக்கப் பட்டு இருக்கு. ரெஸ்டாரண்ட் வாசலில் காரை நிறுத்தி காருக்கு உள்ளே இருந்துகூட வை-ஃபை ஃஜோனை உபயோகிச்சு இருக்க முடியும்" தீபா, "ஷான் நைன்-இலவனுக்கு பிறகு நியூ யார்க்கில் எல்லா இடத்திலும் சர்வேய்லன்ஸ் கேமரா இருக்குன்னு நீங்களே சொன்னீங்க இல்லையா? ஒவ்வொரு கேமராவில் ரெக்கார்ட் ஆனதை வெச்சு யாருன்னு கண்டு பிடிக்க முடியாதா?" முரளீதரன், "ஹெய், நீ எப்படி போலீஸ் மாதிரி யோசிக்க ஆரம்பிச்சே?" ஷான், "முரளீ, கடைசியில் தீபா சொன்னத்தான் செய்யப் போறோம். ஆனா அது அவ்வளவு சுலபமான வேலை இல்லை. அந்த நேரத்தில் ரெஸ்டாரண்டில் மற்றும் ரோட் ஓரத்தில் இருந்தவங்களோட முகத்தை வெச்சு அவங்களோட விலாசத்தை கண்டு பிடிச்சு அங்கே போய் விசாரிக்கணும். அதுவும் ரொம்ப நாசூக்கா செய்யணும்" வந்தனா, "ஏன்? இதில் நாசூக்கு எதுக்கு? கூப்பிட்டு விசாரிக்கத்தானே போறோம்? அரெஸ்ட் பண்ணப் போறது இல்லையே?" ஷான், "வந்தனா, இது இண்டியா இல்லை புரிஞ்சுக்கோ. சர்வேய்லன்ஸ் கேமரா எல்லா இடத்திலும் வெச்சதுக்கே பல மனித உரிமைவாதிகள் எதிர்ப்பு தெரிவிச்சாங்க. நாம் விசாரிக்கப் போறவங்களில் அந்த மாதிரி ஆளுங்க யாராவது இருந்தா Invasion of Privacyன்னு கேஸ் போட்டுடுவாங்க" முரளீதரன், "சோ, ஒவ்வொருத்தரையா யாருன்னு அடையாளம் கண்டு பிடிச்சு போய் விசாரிக்கப் போறீங்களா?" ஷான், "எஸ் முரளீ, முதலில் என்.எஸ்.ஏவின் உதவியோட அங்கே இருந்தவங்களை அடையாளம் கண்டு பிடிக்கணும். அப்பறம் ஒவ்வொருத்தரையா அணுகி விசாரிக்கணும். இந்த ஸர்ச்சுக்கு தீவிரவாதம் முக்கியத்துவம் இல்லை. அதனால் என்.எஸ்.ஏ உடனுக்கு உடன் செய்ய மாட்டாங்க. உடனுக்கு உடன் செய்யவும் முடியாது ஏன்னா நூறு பேருக்கு மேல் அந்த சமயத்தில் ரெஸ்டாரண்டுக்குள்ளும் சுற்று வட்டாரத்திலும் இருந்து இருக்காங்க. ரொம்ப நாள் ஆகும்"
ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "அப்ப நாங்க இப்ப செஞ்சுட்டு இருக்கும் வேலை .. " என்று இழுக்க முரளீதரன், "ப்ரொஃபெஸ்ஸர், அதன் மூலம் நமக்கு சர்வர் ஐ.பி.அட்ரெஸ் கிடைச்சா அதுதான் அசைக்க முடியாத ஆதாரம். ப்ளீஸ் அதை நிறுத்தணும்ன்னு கனவிலும் நினைக்க வேண்டாம். உங்க வேலை தொடரட்டும். ஷான் அவங்க வேலையை செய்யட்டும். அவங்களுக்கு எந்த விதத்திலாவுது ப்ரேக் த்ரூ கிடைச்சா உடனே தெரிவிப்பாங்க. நீ என்ன சொல்றே ஷான்?" ஷான், "முரளி சொல்றதை நான் முழுவதும் ஆமோதிக்கறேன். பட், தீபா, வந்தனா, நீங்க மேலும் உங்க மாங்க்ச் பாட் நெட் கண்காணிப்பை தொடருங்க. அதிலும் எதாவுது க்ளூ கிடைக்கலாம்" முரளீதரன், "அஃப்கோர்ஸ் ஷான்" எல்லோரும் விடைபெற்றனர்.

செக்மேட் - சைபர் கிரைம் திரில் தொடர் - பாகம் - 22


தீபா, "ஹே நித்தின். எங்களோட அசைன்மெண்டில் ஒரு ரொம்ப சாலஞ்சிங்க்கான வேலை இருக்கு. நீ ஒரு மூணு மாசம் வந்து ஹெல்ப் பண்ண முடியுமா? என்னால மேற்கொண்டு விவரம் கொடுக்க முடியாது. ஆனா, நான் உன்னை ஃபோர்ஸ் பண்ணவும் மாட்டேன். எதுவும் கேட்கமாட்டேன். Can you? Just give me a short answer" நித்தின், "No" தீபா, "Long answer?" நித்தின், "Noooooooooooooooooooooooooooooooooooo" தீபா, "நாயே, பேயே, பன்னி ... எனக்கென்ன? உன் கல்யாணம்தான் டிலே ஆகப் போகுது" நித்தின், "உன் கல்யாணம் நடக்கறப்ப என் கல்யாணம் நடந்தா போதும்" என்றபடி நித்தின் லாக் ஆஃப் செய்தான்.அடுத்த நாளில் இருந்து அவர்களது மூன்றாவது கட்ட வேலைகளை தொடங்கினர். குழுவில் இருந்தவர் அனைவரையும் ஊக்குவித்து ஒவ்வொரு நாளிலும் ஒரு சுற்றை முடித்தே ஆகவேண்டும் என்பதை குறிக்கோளாக வைத்து வந்தனா செயல் பட்டாள். தீபா, ஒன்று இரண்டு மணி நேரம் அவர்களுடன் செலவிட்ட பிறகு மேலும் மாங்க்ஸ் பாட் நெட்டை ஆராயத் தொடங்கினாள். நூறு கணிணிகளில் இருந்த வைரஸ்களும் தங்களை தானே அழித்துக் கொண்டு இருந்தன. அழி படுவதற்கு முன் ஒரு கணிணியில் மொத்த ஹார்ட் டிஸ்க்கையும் ஒரு பிம்பமாக எடுத்து ஸ்டோர் செய்து வைத்து இருந்தாள். வைரஸ் அழிபட்ட பிறகு என்னன்ன மாற்றங்கள் நடந்து இருக்கின்றன என்று ஸ்டோர் செய்து வைத்து இருந்த பிம்பத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தாள்.
தீபா, "யூரேகா! வந்தனா, இங்க வா ஒண்ணு காமிக்கறேன்" வந்தனா, "என்ன?" தீபா, "அவங்க வைரஸ்ஸில் ஹோமோஃபோனிக் சைஃபர் உபயோகிச்சு இருக்கறது உறுதியாயிடுச்சு" வந்தனா, "எப்படி?" தீபா, "இங்கே பார் இது வைரஸ் அழிபடறதுக்கு முன் எடுத்த டிஸ்க் இமேஜ். இதில் இந்த ஜெபெக் ஃபைலின் (JPG File)ஐ அளவைப் பார். 436 KB! இப்ப இதைப் பார் வைரஸ் தன்னை தானே அழிச்சதுக்கு அப்பறம். அதோட அளவு வெறும் 56KB. என்னோட லாப்டாப்பில் வைரஸ் இல்லை. அதிலும் 56KB தான்" வந்தனா, "அதனால?" தீபா, "வைரஸ்ஸின் ஒரு பகுதி இந்த ஃபைலுக்குள் ஸ்டோர் ஆகி இருக்கு. வைரஸ் இயங்கும் போது அதை எடுத்துக்குது" வந்தனா, "ஹே அது விண்டோஸ் எக்ஸ் பி (Windows XP) வால் பேப்பர் இல்லையா? ஒழுங்கா டிஸ்ப்ளே ஆகுதா?" தீபா, "அதெல்லாம் பர்ஃபெக்டா டிஸ்ப்ளே ஆகுது. அந்த படத்துக்கு ஒண்ணும் ஆகறது இல்லை. இவங்க அதிகப் படியா ஸ்டோர் செஞ்சு இருப்பதை படத்தில் இருக்கும் வெற்று இடம்ன்னு நினைச்சுட்டு விண்டோஸ் அதை காண்பிக்கறது இல்லை. இந்த முறையில் ஸ்டோர் செய்யறதை Steganography அப்படிம்பாங்க. ஆனா, அதை மங்க்ஸ் வைரஸ்ஸுடன் உபயோகிச்சு இருக்கும் முறை நிஜமா அமேஸிங்க். இது தெரிஞ்சா யாருமே கண்டு பிடிக்க முடியாத மாதிரி தகவல்களை அனுப்பலாம். பார்க்கறவங்களுக்கு ஒரு ஃபோட்டோதான் தெரியும். தகுந்த மென்பொருளை வெச்சு அதில் இருக்கும் தகவலை தெரிஞ்சுக்கலாம்" வந்தனா, "மை காட். இவனுக சரியான கில்லாடிகளா இருப்பாங்க மாதிரி இருக்கு. ஆனா தீபா, இதை யார்கிட்டயும் சொல்லாதே. தெரிஞ்சா, க்ரிஸ் இன்னும் சீக்கரம் மாங்க்ஸ் பாட் நெட்டை கைப் பற்றணும்ன்னு மேலயும் கீழயும் குதிப்பான். கடைசியில் சொல்லலாம்" " தீபா, "உண்மையில் அவங்க எப்படி இருப்பாங்கன்னு தெரிஞ்சுக்க ரொம்ப ரொம்ப ஆர்வமா இருக்கு" வந்தனா, "யாரு?" தீபா, "ஹார்ஷ்7, கில்9, மோர்லா அந்த மூணு பேரும்"Friday, 27 March 2009, 8:30 PM வெள்ளி, மார்ச் 27, 2009, மாலை 8:30 கடந்த வாரம் முழுவதும் ஜாஷ்வா விடுமுறை எடுத்து பஹாமாஸ்ஸுக்கு சஞ்சனாவுடன் சென்று இருந்தான். அடுத்த நாளில் இருந்து ஒரு ட்ரான்ஸ்ஃபர் ஆபரேஷன் நடக்கவிருந்தது. நண்பர்கள் மூவரும் சஞ்சனாவுடன் டின்னருக்கு சென்று இருந்தனர். சக்தி, "என்ன சஞ்சனா? எப்படி இருந்துது பஹாமாஸ்?" சஞ்சனா, "அண்ணா, இவர் சொன்னப்ப கூட நான் நினைச்சுப் பாக்கவே இல்லை. ரொம்ப நல்லா இருக்குண்ணா. ஆனா, ஒண்ணு சொல்றேன். இந்த மனுஷனுக்கு எங்கயோ மச்சம்! போன வேலை எல்லாம் நாங்க நினைச்சதை விட நல்லா முடிஞ்சுது" நித்தின், "வாவ் ஜாஷ்வா. All things settled?" ஜாஷ்வா, "ஏறக்குறைய எல்லாம் முடிவாகிடுச்சு. எனக்கு மூணு மாசம் நோட்டீஸ் பீரியட். நான் கூட இந்த ஒண்ணந்தேதி அன்னைக்கு ரெஸிக்னேஷன் கொடுக்கும் போது கொஞ்சம் யோசிச்சேன். ஆனா இப்ப ரொம்ப நிம்மதியா இருக்கு" சக்தி, "Stop talking cryptic! ஒரு ஃபுல் அப்டேட் கொடு" ஜாஷ்வா, "கொடுக்கறேன். ஆனா அதுக்கு முன்னாடி sorry for digressing, since you mentioned cryptic, உங்க சர்வர்லெஸ் பாட் நெட் வேலை அப்பறம் அந்த என்க்ரிப்ஷனை மாத்தறது எல்லாம் முடிஞ்சுதா" நித்தின், "கோடிங்க் டெஸ்டிங்க் எல்லாம் முடிஞ்சுது. ஏப்ரல் ஒண்ணில் இருந்து பரவ விடப் போறோம்" ஜாஷ்வா, "ஹே, அப்ப அடுத்த மாச ட்ரான்ஸ்ஃபரை அது பாதிக்காது இல்ல? நான் ஏற்கனவே ஆண்டர்ஸன் கிட்டயும் ஹாஃப்மன் கிட்டயும் சொல்லி ஆச்சு. அவங்க அடுத்த மாசம் ஒரு பெரிய ட்ரான்ஸ்ஃபர் இருக்கும்ன்னு சொல்லி இருக்காங்க" சக்தி, "கவலையே படாதே. ஒரு பிரச்சனையும் இருக்காது" சஞ்சனா, "எப்படியும் அடுத்த ரெண்டு மூணு நாள் நீங்க மூணு பேரும் ட்ரான்ஸ்ஃபர் ஆபரேஷன் அப்ப பேசிட்டுத் தானே இருக்கப் போறீங்க. இங்க வந்தும் என்ன?" என்று சிணுங்கினாள் ஜாஷ்வா, "சாரி ஹனி. நீ அவங்களுக்கு நம் ட்ரிப்பைப் பத்தி அப்டேட் கொடு" சஞ்சனா, "இங்கே இருந்து நஸ்ஸௌக்கு (Nassau, Capital of Bahamas - பஹாமாஸ்ஸின் தலை நகரம்) போனோம். அங்கே இவருக்கு அன்னைக்கு முழுவதும் இன்டர்வியூ இருந்துது." சக்தி, "எந்த பாங்க் ஜாஷ்" ஜாஷ்வா தான் நேர்முகத் தேர்வுக்கு சென்ற வங்கிகளின் பெயர்களை சொல்ல, சக்தி, "ஹேய், எல்லாம் கேள்விப் படாத பேர்களா இருக்கு?" ஜாஷ்வா, "ஆமா, ஆனா ஒவ்வொண்ணிலும் எக்கச்சக்க டெபாசிட் பணம் இருக்கு. எல்லாம் ஒரு காலத்தில் பஹாமாஸ் ஒரு டாக்ஸ் ஹேவனா (tax haven) இருந்தப்ப பல நாடுகளிலும் இருந்து வந்த கருப்புப் பணம். இப்ப சர்வதேச சட்டங்கள் வந்ததுக்கு அப்பறம் அந்த பேங்க் எல்லாம் மத்த பாங்க்ஸ் மாதிரி இயங்கணும்ன்னு ரொம்ப வேகமா செயல் பட்டுட்டு இருக்காங்க. நான் இன்டர்வியூ அட்டெண்ட் பண்ணின மூணு வங்கிகளிலும் எனக்கு ஆஃபர் கொடுத்து இருக்காங்க" நித்தின், "நீ எதில் சேரலாம்ன்னு இருக்கே?" ஜாஷ்வா ஒரு வங்கியின் பெயரை சொல்லி, "அதில் நான் இப்ப பாத்துட்டு இருக்கும் டேட்டா பேஸ் அட்மின் வேலை இல்லை. அவங்களோட இணையம் சம்மந்தப் பட்ட புது டெவலப்மென்ட்ஸ் எல்லாத்தையும் பொறுப்பு ஏத்துக்க சொல்லி இருக்காங்க. நானும் இப்ப பண்ணிட்டு இருக்கும் வேலையில் இருந்து ஒரு சேஞ்ச் இருக்கும்ன்னு அதுக்கு ஓ.கே சொல்லிட்டேன். ஆனா, அதுக்கு ஓ.கே சொன்னதுக்கு அது மட்டும் காரணம் இல்லை" சக்தி, "வேறு என்ன காரணம்?" சஞ்சனா, "இப்ப நான் சொல்றேன். அதுக்கு அடுத்த நாள் நாங்க தங்கறதுக்கு அப்பறம் என்னோட ரெஸ்டாரண்ட் ஆரம்பிக்கும் வெஞ்சருக்கு இடம் பாக்க சுத்த ஆரம்பிச்சோம். கூட இவரோட கஸினோட கஸினோட கஸினோட ... " ஜாஷ்வாவைப் பார்த்து "அவ்வளவுதானேப்பா?" என்றதும் ஜாஷ்வா முறைத்தான் நித்தின், "சரி விடு ஆஃப்ரிக்காவில் கப்பலில் ஒண்ணா வந்தவரோட வம்சாவழி .. மேல சொல்லு" சஞ்சனா, "இல்லை நித்தின் போற இடத்தில் எல்லாம் என் கஸின் என் கஸின் அப்படின்னு அறிமுகப் படுத்தி வெச்சா கடுப்பா இருக்காதா சொல்லு. அதான் எப்படி கஸின்னு கேட்டேன். ஒரு மைல் நீளத்துக்கு எப்படி உறவுன்னு சொன்னார்" சக்தி, "ஹேய், போதும் மேல சொல்லு" சஞ்சனா, "ஆங்கே, இவரோட கஸின் ஒருத்தர் எங்களை முதலில் ஒண்ணு ரெண்டு இடம் காண்பிச்சார். எங்களுக்கு பிடிக்கலை. அப்பறம் எந்த மாதிரி இடம் வேணும் நீங்க என்ன செய்யறதா இருக்கீங்கன்னு கேட்டார். நாங்க விளக்கினப்பறம் ஒரு இடத்தை காண்பிச்சார். எங்க ரெண்டு பேருக்கும் பாத்த உடனே பிடிச்சுடுச்சு." நித்தின், "எங்கே அந்த இடம். எதாவுது ஒரு சின்ன தீவிலா?" ஜாஷ்வா, "ம்ம்ஹூம் ... .. நியூ ப்ராவிடன்ஸ் தீவிலேயே (New Providence) நாஸ்ஸௌ நகர மையத்தில் இருந்து 20 கிலோமீட்டருக்குள் ... நஸ்ஸௌ இன்டர்நேஷனல் ஏர்போர்டில் இருந்து அஞ்சு கிலோமீட்டர் தூரத்தில் கடற்கரை ஓரத்தில்" சக்தி, "வாவ், என்ன மாதிரி இடம்?" சஞ்சனா, "முன்னாடி ஏற்கனவே ரெஸ்டாரண்ட் அங்கே ரன்னாகிட்டு இருந்து இருக்கு. அதை ஒட்டினாப்படி ஓரளவுக்கு பெரிய வீடு. கொஞ்சம் பழசு. அதன் ஓனருக்கு அதை ரினவேட் பண்ணி கண்டின்யூ பண்ணப் பிடிக்கலை. அவருக்கு வேறு பிஸினஸ் இருக்கு. அதனால் விக்கறார். அந்த பக்கத்தில் வரிசையா ரெஸ்டாரண்ட்ஸ் ஆனா இன்டியன் ரெஸ்டாரண்ட் ஒண்ணு கூட இல்லை!" நித்தின், "வாவ், சோ சஞ்சனா உன் கனவு நினைவாகப் போகுது" சஞ்சனா, "பின்னே? எத்தனை நாளைக்கு இந்த ஆளுக்கு மட்டும் சமைச்சுப் போடறது? மத்தவங்களுக்கு சேர்த்து சமைச்சா கொஞ்சம் காசு சம்பாதிக்கலாம்" சக்தி, "ஏன் உன் கிட்ட காசு இல்லையா?" சஞ்சனா, "அப்படி இல்லைண்ணா. எனக்கு ரொம்ப நாள் ஆசை அது" ஜாஷ்வா, "அது அவனுக்கும் தெரியும். சும்மா நோண்டறான்" நித்தின், "சரி ஜாஷ். அதுக்கும் நீ செலக்ட் பண்ணின வேலைக்கும் என்ன சம்மந்தம்?" ஜாஷ்வா, "வாரத்தில் மூணு அல்லது நாலு நாள் வொர்க் அட் ஹோம் பண்ணிக்கலாம். இவளுக்கும் உதவியா இருக்கும்! அதனால்" சக்தி, "க்ரேட். அப்ப நான் ஹனிமூனுக்கு வந்துடறேன்" சஞ்சனா, "உன் ஹனிமூனுக்குள்ள வீடு ரெஸ்டாரண்ட் எல்லாம் தயாராகுமான்னு தெரியலை. ஆனா நீ ஹனிமூனுக்கு பஹாமாஸ்ஸுக்கு வந்தா உனக்கு எல்லா ஏற்பாடும் நாங்க பண்ணிடுவோம். இல்லை அடுத்த வருஷம் ஒர் செகண்ட் ஹனிமூன் ப்ளான் பண்ணிட்டு வா எங்க வீட்டிலேயே தங்கி எங்க ரெஸ்டாரண்டில் சாப்பிடலாம்" சக்தி, "அப்ப கூட ஒரு குட்டிப் பாப்பாவும் இருக்கும். இல்லையா?" என்றதும் சஞ்சனா முகம் சிவந்து ஜாஷ்வாவைப் பார்த்து, "இவங்க ரெண்டு பேர் பரவால்லை. இன்னும் யாருக்கெல்லாம் சொல்லி வெச்சு இருக்கே?" ஜாஷ்வா, "இவங்க ரெண்டு பேர்கிட்ட மட்டும்தான்" நித்தின், "ஹே, இதுவரைக்கு ப்ரோக்ரேஸ் என்ன?" சஞ்சனா, "ஒண்ணும் இல்லை நித்தின். I am still on pills. அடுத்த வாரத்தில் இருந்துதான் மாத்திரை சாப்பிடறதை நிறுத்தப் போறேன். சரி, நீங்க ரெண்டு பேரும் யார்கிட்ட எல்லாம் சொல்லி இருக்கீங்க?"
நித்தின், "நோபடி, ஒன்லி தீபா" சக்தி, "சேம் ஹியர். வந்தனா. ... அப்பறம் அம்மாகிட்டயும் சொல்லி இருக்கேன். அம்மாகூட ஏழாம் மாசத்தப்ப எங்கேடா இருப்பான்னு கேட்டாங்க" சஞ்சனாவின் கண்கள் பனித்தன. ஜாஷ்வா, "எதற்கு?" பெருமூச்சுடன் சக்தி வளைகாப்பு சீமந்தத்தைப் பற்றி விளக்கத் தொடங்கினான்.From 1 April 2009 9 PM ஏப்ரல் 1 2009 இரவு 9 மணி ஏப்ரல் ஒன்றாம் தேதி இரவில் இருந்து சக்தியும் நித்தினும் மாங்க்ஸ் பாட் நெட்டை சர்வர் இல்லாமல் இயங்கும் ஒரு பாட் நெட்டாக (Server-less bot net) மாற்றும் வேலையில் இறங்கினர். மாங்க்ஸ் பாட் நெட்டின் கணிணிகளில் இருக்கும் வைரஸ்ஸுக்கு பதிலாக புதிதாக எழுதப்பட்டு இருந்த மாங்க்ஸ்-2 வைரஸ்ஸை நூறு கணிணிகளுக்கு புகுத்தினால் மற்ற கணிணிகளுக்கு பரப்பும் வேலையை மாங்க்ஸ்-2 வைரஸ்ஸே செய்து விடும்படி அமைத்து இருந்தனர். இதற்கு முன்னாலும் ஒவ்வொரு முறை தங்களது வைரஸ்ஸில் மாற்றங்களை செய்தபோதும் இவ்வாறே பரப்புவது வழமை. அதனால் அவர்களுக்கு அதிக அளவுக்கு ஆயத்த வேலைகள் இருக்கவில்லை. வரிசை முறையின்றி (random - ராண்டமாக) தேர்ந்து எடுத்து அவைகளில் புதிய வைரஸ்ஸை புகுத்தும் வேலைக்கும் அவர்கள் ஒரு மென்பொருள் எழுதி இருந்தனர். அந்த மென்பொருளை இயக்கியபின் அது நூறு கணிணிகளில் புதிய வைரஸ் வெற்றிகரமாக புகுந்ததை அந்த மென்பொருள் அறிவிக்கும் வரை காத்து இருப்பதே அவர்கள் வேலை. நூறு கணிணிகளை அந்த மென்பொருள் சுமார் ஐந்து மணி நேரம் எடுக்கலாம் என்று கணித்து மாலை 9 மணியளவில் அந்த மென்பொருளை இயக்கினர். முன் தினம் மாலை சக்தி தன் லாப்டாப்பில் மாங்க்ஸ்-2 வைரஸ்ஸின் நிரற்தொடரை (code-கோட்ஐ) கடைசியாக ஒரு முறை சரி பார்த்துக் கொண்டு இருந்து இருந்தான். பிறகு இரவு அப்படியே சாப்பாட்டு மேசை மேல் விட்டு விட்டு தூங்கச் சென்று இருந்தான். இரவு சுமார் பத்தரை மணியளவில் ஆர்டர் செய்து தரவைத்து இருந்த பீட்ஸாவை சாப்பிட்டுக் கொண்டு இருக்கையில் எதிரில் இருந்த லாப்டாப்பை இயக்க திரையில் அவன் சரி பார்த்துக் கொண்டு இருந்த நிரற்தொடர் தோன்றியது. திடீரென பொறி தட்டிய சக்தி, "ஓ மை காட் நித்தின்! இந்த ரிமோட் கமாண்ட் மெஸ்ஸேஜ் ஸ்ட்ரக்சரை பாத்தியா. We have missed out something." நித்தின், "வாட், " என்று அவனும் அதைப் பார்த்தபின் "ஓ காட், ப்ளடி ஷிட் ... இதனால, நம் லாப்டாப்பில் இருந்து அனுப்பும் ஆணையை இது புரிஞ்சுக்காது" அதற்குள் எழுந்து சென்ற சக்தி சர்வரில் இயங்கிக் கொண்டு இருந்த மென்பொருளின் இயக்கத்தை நிறுத்தினான். பேயறைந்த முகத்துடன் இருவரும் சில நிமிடங்கள் அமர்ந்து இருந்தனர். நித்தின், "எத்தனை பாட்ஸ் அப்க்ரேட் ஆகி இருக்கு (எத்தனை கணிணிகளில் புதிய வைரஸ் புகுந்து இருக்கிறது)?" சக்தி, "34 கணிணிகளில்" நித்தின், "இதனால் ப்ராப்ளம் ஒண்னும் இல்லை. வைரஸ் கோட்இல் இருக்கும் தப்பை திருத்திட்டு வேறு ஒரு நூறு கணிணிகளை தேர்ந்து எடுத்து மறுபடி வேலையை தொடங்குவோம்" சக்தி, "செய்யலாம். ஆனா இப்ப இந்த பக் இருக்கும் வைரஸ் புகுந்த கணிணிகள் மத்த கணிணிகளுக்கு அந்த பக் இருக்கும் வைரஸ்ஸை புகுத்திகிட்டே இருக்கும். இதனால் பக் இருக்கும் வைரஸ் பரவும்" நித்தின், "நாளைக்குள்ள எத்தனை கணிணிகளுக்கு பக் இருக்கும் வைரஸ் பரவும்?" சக்தி, "நூறு கணிணிகளில் புகுத்தினால் மாங்க்ஸ் பாட் நெட்டில் இருக்கும் நாலரை லட்சம் கணிணிகளில் பரவ பத்து நாள் ஆகும்ன்னு கண்க்கு பண்ணினோம் இல்லையா?" நித்தின், "ம்ம்ம் நீ என்ன சொல்ல வரேன்னு தெரியுது. முப்பத்து நாலு கணிணிகள் அதே பத்து நாளில் மூணில் ஒரு பங்கு கணிணிகளுக்கு பரப்பும். ஒரு நாளில் பதினைந்து ஆயிரம் கணிணிகளில் பரவும். "அந்த பதினைந்து ஆயிரத்தையும் இப்போதைக்கு மறந்துட வேண்டியதுதான்" சக்தி, "அதாவது இந்த முப்பத்து நாலு கணிணிகளில் இருக்கும் வைரஸ்ஸை நிறுத்தினா" நித்தின், "ஆமா" சக்தி, "எப்படிடா நிறுத்துவே?" நித்தின், "ஓ மை காட்! இந்த பக் இருப்பதனால நாம் லாப்டாப்பில் இருந்து மெஸ்ஸேஜ் மூலம் ஆணை கொடுத்தா அது ஏத்துக்காது! பரப்பறதை நிறுத்த முடியாது" சக்தி, "என்ன பண்ணாலாம்?" நித்தின், "ஹே, IRC சானல் நாம் இன்னும் ஓபனாத்தான் விட்டு இருக்கோம். இந்த பக்கினால் TCP மெஸ்ஸேஜ்கள் மூலம் வரும் ஆணைகள்தான் புறக்கணிக்கப் படும். நேரடியா IRC சானல் மூலம் ஹாக் பண்ணி நிறுத்தலாம்" IRC சானல் என்பது INTERNET RELAY CHAT .. நாம் சாட் செய்வது இதன் மூலமே. இதற்காக கணிணிகளில் ஒரு வாயில் (port) இருக்கும். மாங்க்ஸ் வைரஸ் அந்த வாயிலின் மூலம் வரும் ஆணைகளையும் எதிர் நோக்கியபடி அமைத்து இருந்தனர். அவசரத் தேவைக்கு உதவும் என்று இப்படி அமைத்து இருந்தனர். ஆனால் அந்த வாயிலின் மூலம் கணிணியை அணுகுகையில் அந்த கணிணியின் நடவடிக்கைகளை யாராவது மேற்பார்வை செய்து கொண்டு இருப்பின், எந்த இணைய விலாசத்தில் (ஐ.பி.அட்ரெஸ்ஸில்) இருந்து கணிணி அணுகப் பட்டது என்பதை எளிதில் கண்டு பிடிக்கக் கூடிய அபாயம் இருந்தது. சக்தி, "ஆனா, யாரவுது இந்த முப்பத்து நாலு கணிணிகளில் ஒண்ணையாவுது மானிடர் பண்ணிட்டு இருந்தாங்கன்னா நாம் எங்கே இருந்து அதை அணுகறோம்ன்னு தெரிஞ்சுடும்" நித்தின், "எப்படியாவுது அந்த முப்பத்து மூணு கணிணிகளில் இருக்கும் பக் இருக்கும் வைரஸ்ஸை நிப்பாட்டணும். இல்லைன்னா ஒன்றரை லட்சம் கணிணிகளை மறந்துடனும்."Wednesday, 1, April 2009 11:30 PM Shakthivel's Flat, New York புதன், ஏப்ரல் 1 2009 இரவு 11:30 சக்திவேலின் ஃப்ளாட், நியூ யார்க் இரவென்றும் பார்க்காமல் சக்தி ஜாஷ்வாவை கைபேசியில் அழைத்து நடந்தவற்றைச் சொன்னான். ஜாஷ்வா அடுத்த அரை மணி நேரத்தில் அங்கு வந்து சேர்ந்தான். ஜாஷ்வா, "மை காட்! முழுசா டெஸ்ட் பண்ணி இருக்குன்னு சொன்னீங்களே?" சக்தி, "சொன்னோம் ஜாஷ்வா, இந்த பகுதியை சரியா டெஸ்ட் பண்ணலைன்னு தோணுது. இப்ப என்ன பண்ணலாம்?" ஜாஷ்வா, "எத்தனை கணிணியில் பக் இருக்கும் வைரஸ் புகுந்து இருக்கு?" சக்தி, "நாங்க புகுத்தி இருப்பது 34 கணிணிகளில். அந்த கணிணிகளில் இருந்து நாளைக்கு ராத்திரிக்குள்ள 15000 கணிணிகளுக்கு அது பரவிடும். நாளைக்கு உள்ள அதை நிறுத்தாமல் விட்டால் ஒன்றரை லட்சம் கணிணிகளுக்கு பரவும்" ஜாஷ்வா, "எப்படி நிறுத்த முடியும்? நீங்க அந்த 34 கணிணிகளில் பக் இல்லாத வைரஸ்ஸை புகுத்தினாலும், அந்த 34 கணிணிகளில் இருக்கும் பக் உள்ள வைரஸ் மத்த கணிணிகளுக்கு மேலும் பரவியபடி இருக்குமே?" சக்தி, "இல்லை. வைரஸ் கணிணியில் புகுந்த உடனே தன் வேலையை தொடங்குவதற்கு முன்னால் சர்வருக்கு தான் இருப்பதை அறிவிக்க ஒரு மெஸ்ஸேஜ் அனுப்பும். அதுக்கு சரியான பதில் வரலைன்னா அடுத்த நாளில் இருந்து ஒண்ணும் செய்யாமல் சர்வரிடம் இருந்து பதில் வரும்வரை காத்து இருக்கும். ஒரு நாளில், அதாவது நாளைக்கு ராத்திரிக்குள் இந்த 34 கணிணிகள் சுமார் 250 கணிணிகளுக்கு பரப்பும். அந்த 250 கணிணிகளும் சுமார் 1750 கணிணிகளுக்கு பரப்பும் அந்த 1750 கணிணிகள் இன்னும் 15000 கணிணிகளுக்கு பரப்பும். அடுத்த நாள் சர்வரிடம் இருந்து பதில் வரலைன்னா தொடர்ந்து வேலை செய்யாது" ஜாஷ்வா, "இப்பத்தான் சர்வரே இல்லையே?"
நித்தின், "அந்த 15000 கணிணிகளுக்கு அதுக்கு அனுப்பின 1750 கணிணிகள் சர்வர். அதே மாதிரி அந்த 1750க்கும் அதுக்கு அனுப்பிய 250ம் சர்வர். ஆக இந்த 34 கணிணிகள்தான் அதுக்கு கீழ இருக்கும் 15000 கணிணிகளுக்கும் சர்வர். இந்த 34ஐயும் நாம் இப்ப நிறுத்தினால். அந்த 15000 கணிணிகளும் ரெண்டு நாள் வெய்ட்டிங்க்ல இருக்கும். அதுக்குள்ள புது பக் இல்லாத வைரஸ்ஸை இந்த 34 கணிணிகளுக்குள் புகுத்தினால், இந்த 34 கணிணிகளும் மேலும் ஒரு புதிய மாற்றம் வந்து இருக்குன்னு அதை பரப்பத் தொடங்கிடும். நாலஞ்சு நாளில் எல்லாத்திலும் புது வெர்ஷன் புகுந்துடும்" ஜாஷ்வா, "ஓ, Cascading updates and authorization? சரி, இந்த 34ஐயும் நிறுத்த என்ன வழி இருக்கு?" சக்தி, "IRC சானல் ஓபனா இருக்கு. நேரடியா அந்த சானல் மூலம் சஸ்பெண்ட் ஆகி நிக்கறதுக்கு ஒரு ஆணை கொடுக்கலாம். இந்த 34ம் சஸ்பெண்டட் ஸ்டேட்டில் (ஸ்தம்பிச்ச மாதிரி) இருக்கும். அதுக்கு அப்பறம் பழைய படி மென்பொருள் மூலம் புது வெர்ஷனை புகுத்தலாம்" ஜாஷ்வா, "IRC சானல் மூலம் அணுகினா சுலபமா ட்ரேஸ் அவுட் பண்ணிடுவாங்க இல்லையா?" நித்தின், "யாராவுது இந்த 34 கணிணிகளை. இல்லை. இந்த 34 கணிணிகளின் ஒண்ணை மானிட்டர் பண்ணிட்டு இருந்தாலும் நாம் எங்கே இருந்து அணுகறோம்ன்னு தெரிஞ்சுடும்" ஜாஷ்வா, "சக்தி, உன் சஜ்ஜஸ்ஷன் என்ன?" சக்தி, "IRC சானல் மூலம் ஆணை அனுப்பறதைத் தவிர வேறு வழி இல்லை" ஜாஷ்வா, "ஆணை கொடுத்து அது ஏற்றுக் கொள்ளப் பட்டதான்னு தெரிஞ்சுக்க ஒரு கணிணிக்கு சுமார் எவ்வளவு நேரம் ஆகும்?" நித்தின், "ரொம்ப நேரம் ஆகாது. Both ways traffic included 3 அல்லது 4 நிமிஷம் ஆகும்"ஜாஷ்வா, "சரி, ஒண்ணு செய்வோம். மூணு பேரும் ஆளுக்கு சுமார் 11 கணிணிகளுக்கு வெவ்வேறு இடத்தில் இருந்து ஆணை கொடுப்போம்" சக்தி, "வெவ்வேறு இடத்தில் இருந்துன்னா?" ஜாஷ்வா, "இலவச வை-ஃபை ஃஜோன் (Wi-fi Zone) இருக்கும் காஃபி ஷாப்புகளும் ரெஸ்டாரண்ட்களும் நிறைய இருக்கு. எல்லாம் நைட்டு ஒன்றரை மணி வரை திறந்து இருக்கும். இப்ப புறப்பட்டு மூணு பேரும் தனித்தனியா அடுத்தடுத்து நாலு காஃபி ஷாப்புக்கு போய் உட்கார்ந்து இந்த வேலையை முடிச்சுடலாம்" நித்தின், "யாராவுது ட்ரேஸ் அவுட் பண்ணினா?" ஜாஷ்வா, "ரியல் டைமில் யாரும் ட்ரேஸ் அவுட் பண்ண மாட்டாங்கன்னு நினைக்கிறேன். அப்படியும் நாம் ஆணை கொடுக்கும் போது அவங்களுக்கு தெரிஞ்சாலும். அந்த இடத்தின் இணைய விலாசத்தை வெச்சுட்டு நிஜ விலாசத்தை கண்டு பிடிச்சு வர அவங்களுக்கு குறைஞ்சது ஒரு மணி நேரம் ஆகும். நாம் எந்த இடத்திலும் 15 நிமிடத்துக்கு மேல் இருக்கக் கூடாது" சக்தி, "அந்த இடத்தில் அவங்க விசாரிச்சாங்கன்னா?" ஜாஷ்வா, "நம்மை யாருக்கும் அடையாளம் தெரியக் கூடாதுன்னு கடவுளை வேண்டிக்கலாம். வேறு வழி இல்லை." நித்தின், "சரி, நேரத்தை கடத்த வேண்டாம் புறப்படுவோம்" ஜாஷ்வா, "சக்தி உன் கிட்ட ஒரு ஸ்பேர் லாப்டாப் இருக்கு இல்லையா? எனக்கு அதை கொடு. வரும் அவசரத்தில் நான் என் லாப்டாப்பை எடுத்துட்டு வரல" சக்தி, "சரி, முதலில் கொடுக்க வேண்டிய ஆணையையும் கொடுக்கப்பட வேண்டிய கணிணிகளின் ஐ.பி.அட்ரெஸ்ஸையும் மூணு டெக்ஸ்ட் ஃபைலில் எழுதிக்கலாம். ஆளுக்கு ஒரு டெக்ஸ்ட் ஃபைலை லாப்டாப்பில் காப்பி செஞ்சுட்டு புறப்படலாம்" என்ற படி காரியத்தில் இறங்கினான் ஜாஷ்வா, "ஒரு சின்ன மாற்றம். ஆணை கொடுத்து பதில் வந்தப்பறம் எந்த இடத்தில் இருந்து எந்த கணிணிக்கு ஆணை கொடுத்தோம்ன்னு நோட் பண்ணி வெச்சுக்கலாம்" நித்தின், "எதுக்கு?" ஜாஷ்வா, "ஒரு வேளை ட்ரேஸ் அவுட் பண்ணி விசாரிக்க அங்கே யாராவுது வந்தா எந்த கணிணி அவங்க வசம் இருக்குன்னு நமக்கு தெரியும்" சக்தி, "அவங்க விசாரிக்க வந்தாங்கன்னு நமக்கு எப்படி தெரியப் போகுது. யாராவுது ஹாக்கர்ஸ் புல்லட்டின்போர்டில் போடுவாங்கன்னு நம்பறயா?" ஜாஷ்வா, "நல்ல ஹாக்கர்கள் நிச்சயம் போடுவாங்க" மூவரும் சக்தியின் ஃப்ளாட்டை விட்டு நள்ளிரவைத் தாண்டிய சில நிமிடங்களில் வெவ்வேறு திசைகளில் புறப்பட்டனர். வை-ஃபை ஃஜோன் (Wi-fi zone) இருக்கும் காஃபி ஷாப் அல்லது ரெஸ்டாரண்ட் அல்லது மால் என குறிவைத்து சென்றனர். ஜாஷ்வா சொன்னது போல் ஒவ்வொரு இடத்திலும் கணிணிகளுக்கு ஆணை கொடுத்து அவைகளின் பதிலைப் பெற்றபின் அவ்விடத்தை விட்டு அகன்று அடுத்த இடத்துக்கு செல்ல திட்டமிட்டு இருந்தனர்
டைம் ஸ்கொயர் பக்கம் சென்ற சக்திக்கு முதல் இரண்டு இலவச வை-ஃபை ஃஜோன்களை சுலபமாக கண்டு பிடித்து 6 கணிணிகளுக்கு ஆணை பிறப்பிக்கும் வேலையை முடித்தான். பிறகு பல வீதிகளில் சுற்றியும் இலவச வை-ஃபை ஃஜோன்கள் இருக்கும் காஃபி ஷாபோ ரெஸ்டாரண்டோ அவன் கண்ணுக்கு தென்படவில்லை. அவனது அலுவலகத்துக்கு அருகே வந்தவன், அங்கு வை-ஃபை ஃஜோன் இருப்பது நினைவுக்கு வந்தது. இலவசமானது இல்லை என்றாலும், அந்த வை-ஃபை நெட்வொர்க்கை உபயோகிக்க தேவையான பாஸ்வர்ட் அவனுக்கு தெரிந்து இருந்தது. உடனே காரை அலுவலகத்துக்கு எதிரே பார்க் செய்து. அலுவலகத்துள் நுழைந்தான். வாசலில் கேட்ட செக்யூரிட்டியிடம் எதையோ விட்டுச் சென்றதாகவும் அந்த பகுதிக்கு வந்ததால் எடுத்துச் செல்ல வந்ததாகவும் பொய் சொல்லி தனது இருக்கைக்கு சென்றான். அங்கு அமர்ந்தவாறு பதினைந்து நிமிடங்கள் இன்னும் 3 கணிணிகளுக்கு ஆணை பிறப்பித்தான். அதற்கு மேலும் அங்கு இருந்தவாறே செய்யலாம் என்றாலும் ஜாஷ்வா சொன்னதை மனதில் கூர்ந்து அலுவலகத்தை விட்டு வெளியே வந்து காரில் அமர்ந்தான். அப்போதுதான் அவனது அலுவலகத்துக்கு அருகே ப்ராட்வே சாலையில் இருக்கும் ப்ளூ ஃபின் ரெஸ்டாரண்ட் ஞாபகத்துக்கு வந்தது.ப்ளூ ஃபின் ரெஸ்டாரன்டை அடைந்தவன் ஒரு டேபிளில் அமர்ந்து ஒரு காஃபி மட்டும் ஆர்டர் செய்து லாப்டாப்பை திறந்தான். பாக்கி தான் ஆணை கொடுக்க வேண்டி இருந்த 3 கணிணிகளுக்கான ஆணைகளை கொடுத்து முடித்தான். மணி 1:30. அவன் எவ்வளவு முடித்து இருக்கிறான் என்று கேட்க நித்தினை கைபேசியில் அழைத்தான். நித்தின் அப்போதுதான் இறுதியாக ஆணை கொடுக்க வேண்டிய கணிணிகளுக்கு ஆணை கொடுக்கத் தொடங்கப் போவதாக கூறினான். நித்தின் அங்கு இருந்து புறப்பட எப்படியும் இன்னும் பதினைந்து நிமிடங்களாவது ஆகும் என்று நினைத்தவன் வந்தனாவிடம் சிறிது நேரம் பேசலாமென்று அவளை கைபேசியில் அழைத்தான்.

செக்மேட் - சைபர் கிரைம் திரில் தொடர் - பாகம் - 21


ஜாஷவா, "நீங்க திரும்பிப் போகும் சமயத்தில் அவங்க கண்டு பிடிக்க வாய்ப்பு இருக்கு" நித்தின், "ஜாஷ், நாளைக்கே எங்க ரெண்டு பேர் வீட்டிலும் இருக்கும் சர்வரின் இணைய விலாசத்தை மாத்திடலாமா?" ஜாஷ்வா, "இப்ப மாத்தி ஒரு பிரயோஜனமும் இல்லை. எப்படியும் அவங்க கண்டு பிடிக்கும் இணைய விலாசம் யாருக்கு கொடுக்கப் பட்டு இருக்குன்னு பார்ப்பாங்க. நான் உங்களுக்கு அமைச்சு கொடுத்து இருக்கும் இணைய விலாசம் என் கஸின் பேரில் இருக்கும் ஒரு பினாமி கம்பெனிக்கு வழங்கப் பட்ட விலாசம். அதை கண்டு பிடிக்க ரொம்ப நாள் ஆகாது" சக்தி, "அப்படியும் உன்னை அடையாளம் எப்படி கண்டு பிடிப்பாங்க?" ஜாஷ்வா, "எஃப்.பி.ஐயை அவ்வளவு லேசா எடை போடாதே. தவிர என் கஸின்ஸ் யாருக்கும் என்னால் எந்த துன்பமும் வரக்கூடாதுன்னு பார்க்கறேன். அப்படி அவங்க என் கஸினைக் கேள்வி கேட்டா என் பக்கம் கை காட்ட சொல்லிடுவேன்" நித்தின், "அப்ப எங்களுக்கு பதிலா நீ மாட்டிக்கப் போறயா?" சக்தி, "மாட்டிக்க மாட்டாண்டா! அவங்களை பொறுத்த மட்டில் நாம் எந்த சட்ட விரோத செயலிலும் ஈடு படலையே? ஐ.ஆர்.எஸ் ஜாஷ்வாவிடம் மாங்க்ஸ் பாட் நெட் மூலம் எவ்வளவு வருமானம் வந்து இருக்கு. அதுக்கு ஏன் வருமான வட்டி கட்டலைன்னு மட்டும் கேட்க முடியும். அவ்வளவுதான்"
ஜாஷ்வா, "நிச்சயம் நான் தான் மாங்க்ஸ் பாட் நெட்டின் சூத்திரதாரின்னு அவங்க நம்ப் மாட்டாங்க. தவிர, வந்தனாவும் தீபாவும் உங்க ரெண்டு பேரையும் சந்தேகப் படவும் வாய்ப்பு இருக்கு. சோ, எஃப்.பி.ஐ என்னை அணுகும் அதே சமயத்தில் R&AW உங்க ரெண்டு பேரையும் அணுகும்." நித்தின், "மே மாசக் கடைசிக்கு முன்னாடி அவங்க கண்டு பிடிக்க எந்த விததிலாவுது வாய்ப்பு இருக்கா?" சக்தி, "எப்ப அவங்க நூறு மெஸ்ஸேஜ் ஒரே நாளில் சேகரிச்சாங்களோ அவங்களோட அணுகு முறை தெரிஞ்சு போச்சு. அந்த அணுகு முறைப்படி அதை விட சீக்கிரம் கண்டு பிடிக்க வாய்ப்பே இல்லை" ஜாஷ்வா, "எதுக்கும் இன்னும் ஒரு மாசம் முன்னாடியே அவங்க கண்டு பிடிக்கக் கூடும்ன்னு நாம் செயல் படுவோம். ஓ.கே?" சக்தி, "அவசியம் இல்லை. பட் ஓ.கே" ஜாஷ்வா, "சோ, ஏப்ரல் கடைசிக்கு அப்பறம் கொஞ்ச நாளைக்கு மனி ட்ரான்ஸ்ஃபர் பண்ண மாட்டோம்ன்னு இப்பவே ஆண்டர்ஸன் கிட்ட சொல்லிடறேன்" நித்தின், "ஏன் கொஞ்ச நாளைக்குன்னு சொல்லப் போறே" ஜாஷ்வா, "அதுக்கு அப்பறம் பண்ணவே போறது இல்லைன்னா அவன் எதாவுது சந்தேகப் படுவான். கார்டல் காரங்களே எதாவுது செய்யறதுக்கு வாய்ப்பு இருக்கு. சோ, ஒன்ஸ் நாம் மூட்டை கட்டினதுக்கு அப்பறம் சாரி, இனிமேல் எங்களால முடியாதுன்னு சின்னதா ஒரு ஈமெயில் அனுப்புவோம்" சக்தி, "நீ இங்கே தானே இருக்கப் போறே?" ஜாஷ்வா, "இல்லை சக்தி. இந்த நியூ யார்க் க்ளைமேட் சஞ்சனாவுக்கு ஒத்துக்கறதே இல்லை. தவிர, குடும்பத்தை பெரிசு படுத்தணும்ன்னு ப்ளான் பண்ணிட்டு இருக்கோம். நான் பிறந்து வளந்தேன்னு சொல்லிக்கறதை தவிர எனக்கு நியூ யார்க்கில் ஒண்ணும் இல்லை. நேரடியா யாருக்கெல்லாம் உதவணும்ன்னு நினைச்சேனோ அவங்களுக்கு எல்லாம் உதவியும் ஆச்சு. சோ, நாங்க பஹாமாஸ் போய் செட்டில் ஆகலாம்ன்னு இருக்கோம்." நித்தின், "ஹே, தட்ஸ் நைஸ்! பட் நீ அங்கே என்ன பண்ணப் போறே?" ஜாஷ்வா, "அந்த ஊரில் இருக்கும் ஒரு பாங்கில் எல்லாம் என்னை மாதிரி குவாலிஃபைட் ஆளுங்க கம்மி. நிச்சயம் இந்த மாதிரி ஒரு வேலை கிடைக்கும். கூட இருக்கவே இருக்கு நான் முன்னாடி செஞ்சுட்டு இருந்தது! பட், அவளுக்கு அந்த மாதிரி க்ளைமேட் ரொம்ப சூட் ஆகும் அப்படிங்கறதுதான் என் முடிவுக்கு முக்கிய காரணம்" நித்தின், "சோ, இப்போதைக்கு என்ன செய்யலாம்?" மூன்று பேரும் மௌனமாக ஒருவரை ஒருவர் பாத்தபடி அமர்ந்து இருந்தனர்.சக்தி, "காலைல நான் கொஞ்சம் பயந்துட்டேன். ஆன இப்ப ஒரு பயமும் இல்லை. ஒண்ணும் செய்ய வேண்டாம்." என்றவன் குறும்புடன் நித்தினைப் பார்த்து சிரித்த படி தொடர்ந்து, "ஆனா இன்னும் கொஞ்சம் விளையாடலாம்ன்னு தோணுது!" ஜாஷ்வா, "என்ன விளையாட்டு?" நித்தின், "என்னடா அந்த சர்வர்லெஸ் பாட் நெட்டா (server-less bot net) மாத்தறதைப் பத்தி சொல்றயா?" சர்வர்லெஸ் பாட் நெட் எனப்படுவது, இன்னும் நுணுக்கமான ஒன்று. அதில் சர்வர் என்ற ஒரு கணிணியே இருக்காது! ஒவ்வொரு வைரஸ் புகுந்த கணிணியும் தன்னை சுற்றி இருக்கும் கணிணிகளில் இருக்கும் வைரஸ்கள் சரியாக வேலை செய்கின்றனவா என்று சர்வரைப் போல்கண்காணிக்கும். ஆணைகள் கொடுக்கும் முறையை தெரிந்தவர் எவரும் எந்த கணிணியில் இருந்தும் அதை இயக்கலாம்! மற்றபடி மாங்க்ஸ் பாட் நெட் ஒரு தானியங்கியைப் போல இயங்கிக் கொண்டு இருக்கும். ஜாஷ்வா, "ஹே, நீங்க சர்வர்லெஸ் பாட் நெட் பத்தி யோசிச்சு வெச்சு இருக்கீங்களா?" சக்தி, "ரொம்ப நாளைக்கு முன்னாடியே யோசிச்சோம். ஆனா இம்ப்ளிமெண்ட் பண்ணலை. அப்படி செய்யணும்ன்னா ரொமப நாள் ஆகாது" நித்தின், "ஆனா அவங்க டீகோட் பண்ணினதுக்கு அப்பறம் அந்த மாற்றத்தை கண்டு பிடிக்க ரொம்ப நாள் ஆகாது" சக்தி, "நம் சைஃபரையும் மாத்துவோம். தேவையான கோட் எழுதறதுக்கு ரெண்டு மாசம் ஆகும்" ஜாஷ்வா, "சர்வர்லெஸ்ஸா மாத்தினா எப்படி நீங்க அதுக்கு ஆணைகள் கொடுக்கலாம்ன்னு ப்ளான் பண்ணி இருந்தீங்க?" நித்தின், "வைரஸ் இருக்கும் எந்த கணிணியில் இருந்தும் ஆணை கொடுக்கறமாதிரி ஒரு தனி மென்பொருள் எழுதலாம்ன்னு இருக்கோம்" சக்தி, "அந்த ஆணை கொடுக்கும் மென்பொருள் நம் மூணு பேர் லாப்டாப்பில் மட்டும் இருக்கும்" ஜாஷ்வா, "சரி. மாங்க்ஸ் பாட் நெட்டில் இருக்கும் எல்லா கணிணியிலும் அந்த மாற்றத்தை புகுத்த எத்தனை நாள் ஆகும்?" சக்தி, "பத்து நாளில் செஞ்சுட முடியும்" ஜாஷ்வா, "ஓ, வைரஸ் மூலமே அது பரவும் அந்த மாதிரியா?" சக்தி, "ஆமா, நோடல் பாட்ஸ் (நுனிகளில் இருக்கும் கணிணிகள்) மட்டும் நாம் அப்டேட் பண்ணினா போதும். அதுவே பரவிடும்" ஜாஷ்வா, "சரி, அப்ப இன்னும் நாலு மாசத்தில் அந்த மாற்றத்தை தொடங்கலாம். அதாவது மே மாதத் தொடக்கத்தில் இருந்து. நீங்க புறப்பட்டு போனதுக்கு பிறகு சர்வர் அப்படின்னு ஒண்ணு மாங்க்ஸ் பாட் நெட்டில் இருக்காது!" நித்தின், "அதுக்குள்ள நம் ட்ரான்ஸ்ஃபர் ஆபரேஷனும் முடிஞ்சு இருக்கும். இல்லையா?" ஜாஷ்வா, "எஸ்" நித்தின், "ஜாஷ், சக்தி, அதுக்குள்ள உங்களுக்கு தேவையான பணம் சம்பாதிச்சு இருப்பீங்களா? எனக்கு அந்த பணம் வெறும் ஆடம்பரச் செலவுக்குத்தான். நாம் பங்கு போடற விகிதத்தை மாத்திக்கலாமா. என்னுதை 10% ஆக மாத்திக்கலாம். நீங்க ரெண்டு பேரும் 40% எடுத்துக்குங்க" ஜாஷ்வா, "நீ முன்வந்ததுக்கு ரொம்ப தாங்க்ஸ் நித்தின். எனக்கு தேவையான பணம் சம்பாதிச்சுட்டேன். அதுக்கு மேல இந்த ஆபரேஷனில் ஒரு த்ரில். இப்ப இது ரெண்டுக்கும் மேல எனக்கு அருமையான ஃப்ரெண்ட்ஸ் கிடைச்சு இருக்காங்க. I can't ask for more!" சக்தி, "டேய் நித்தின், சும்மா உளறாம இரு"ஜாஷ்வா, "எஃப்.பி.ஐ, R&AW பிடிக்கறது இருக்கட்டும். உங்க ரெண்டு காதலிகளுக்கு நீங்க என்ன பதில் சொல்லப் போறீங்க? அட் லீஸ்ட் அஃபீஷியலா அவங்க அணுகறதுக்கு முன்னாடி உங்க காதலிகள்கிட்ட நீங்கதான் மாங்க்ஸ் பாட் நெட்டை உருவாக்கினவங்கன்னு சொல்லிடுங்க" சக்தி, "கவலையே படாதே. நான் ஒரு ஹாக்கர் அப்படிங்கறதை அவகிட்ட இருந்து மறைச்சு இருக்கேன் உண்மைதான். தீபா அவளுக்கு ஒரு ஹாக்கரோட மெண்டாலிடி எப்படி இருக்கும்ன்னு சொல்லி இருப்பா. தவிர, வந்தனா என் கிட்ட அவ என்ன வேலை செய்யறான்னு சொல்லலை. சோ, அவ கேட்கும் போது நீ சொல்லி இருந்தா ஒரு வேளை நான் சொல்லி இருப்பேன்னு சொல்லுவேன்" நித்தின், "பட் சக்தி, நாம் இங்கே இருந்து புறப்படறதுக்கு முன்னால் எங்க அப்பாகிட்ட சொல்லணும். நம்மை இந்திய வருமான வரித் துறை அணுகறதுக்கு முன்னாடி நம் வருமானத்தை கணக்கிட்டு வரி கட்ட அவர்கிட்ட ஏற்பாடு செய்யச் சொல்லிடலாம்" சக்தி, "ஆமாண்டா. அவங்க வீட்டில் ஒரே போலீஸ் கும்பல். அதுவும் வந்தனா சொல்றதை வெச்சுப் பாத்தா எல்லாம் வால்டர் வெற்றிவேல் மாதிரி நேர்மையான போலீஸ். கருப்புப் பணம் வெச்சுட்டு இருக்கேன்னு பொண்ணு கொடுக்காம இருந்தாலும் இருக்கலாம். அவங்க ஏன், எங்க அம்மாவே எனக்கு டின்னு கட்டிடுவாங்க" ஜாஷ்வா, "கொலம்பியன் ட்ரக் கார்டல் காரங்களுக்கு பணம் ட்ரான்ஸ்ஃபர் செஞ்சீங்கன்னு தெரிஞ்சா?" சக்தி, "அந்த விஷயம் தெரியப் போறது இல்லை" ஜாஷ்வா, "ஹேய், நீ அவளை கல்யணம் பண்ணிட்டு வாழ்நாள் முழுவதும் அவகூட இருக்கப் போறே. உன்னோட லைஃப் பார்ட்னர்கிட்ட மறைக்கக் கூடாது" சக்தி, "நானும் அதை யோசிச்சு இருக்கேன் ஜாஷ். மெதுவா, கொஞ்ச நாள் கழிச்சு சொல்லப் போறேன். நித்தின், நீ என்னடா சொல்றே" நித்தின், "சேம் ஹியர்" ஜாஷ்வா, "அந்த சமயத்தில் என்ன சொல்லி அவளை சமாதானப் படுத்துவே?" சக்தி, "இப்படி யோசிச்சுப் பாரு. நமக்கு வரும் ஈமெயில் விளம்பர ஆர்டர்களில் முக்கால் வாசிக்கு மேல் மருந்துக் கடைகளில் விற்கக் கூடிய ஆனா விளம்பரப் படுத்த முடியாத மருந்துகள். சிகரெட், லிக்கர் மாதிரி. வித்தா தப்பு இல்லை ஆனா விளம்பரம் செய்யக் கூடாது. அப்படிப் பட்ட ஒரு கம்பெனி ஒரு ஆட் ஏஜன்ஸியை அணுகி ஒரு நியூஸ் பேப்பரில் விளம்பரம் கொடுத்தா அரசாங்கம் யாரை பிடிக்கும்? கம்பெனியை, ஆட் ஏஜன்ஸியை அல்ல. அதனால நாம் ஈமெயில் விளம்பரம் கொடுப்பது சட்ட விரோதச் செயல் இல்லை. சரியா?" ஜாஷ்வா, "சரி ... " சக்தி, "ஆனா என்னைக் கேட்டா அதுவும் சட்ட விரோதச் செயல்ன்னு தான் சொல்லுவேன். ஆக, அது ஒரு விவாதிக்கக் கூடிய விஷயம். என்னைப் பொறுத்த மட்டில் அதே மாதிரி தான் அந்த மனி ட்ரான்ஸ்ஃபரும்" ஜாஷ்வா, "பரவால்லை. நான் உனக்கு முதல் முதலில் சொன்னதை கொஞ்சம் மாத்தி என் கிட்டயே சொல்றே. தேறிட்டே" நித்தினும் கூட சேர்ந்து சிரித்தான். சக்தி, "ஆமாண்டா. உனக்கென்ன? நீ கொலைக் கைதியா இருந்தாகூட தீபா அவளோட அப்பாவை வெச்சு வாதாடி உன்னை வெளியே கொண்டு வந்து கட்டிக்குவா. என் நிலமையில் இந்த மாதிரி எதாவுது லாஜிக் சொன்னாத்தான் தப்பிக்க முடியும்" நித்தின், "கவலையே படாதே எங்க அப்பா என்னை ஜெயிலுக்கு போக விட்டாலும் உன்னை போக விடமாட்டார்" சக்தி, "சரி ஜாஷ், நீ புறப்பட்டு சஞ்சனாவுக்கு போய் கொஞ்சம் ஹெல்ப் பண்ணு. அப்பறம் பார்ட்டிக்கும் போகணும்" ஜாஷ்வா, "என்னை வேலை வாங்கறதில் உனக்கு என்ன சந்தோஷம்?" சக்தி, "என் சந்தோஷம் உன்னை வேலை வாங்கறதில் இல்லை. என் தங்கையின் வேலையை குறைப்பதில்" ஜாஷ்வா புறப்பட்டுச் சென்றான். உடன் நித்தினும் மாலை சந்திப்பதாக விடைபெற்றான். அவர்களது அலுவலகத்தின் நியூ இயர் பார்ட்டியில் கலந்து கொள்ளத் தயாரானான்.மாலை ஏழரை மணி அளவில் சார்ஜ் தீர்ந்ததால் ஸ்விட்ச் ஆஃப் ஆகி இருந்த கைபேசியை சார்ஜரில் இருந்து எடுத்து ஆன் செய்யும் போதே அவன் அம்மாவுக்கும் வ்ந்தனாவுக்கும் புத்தாண்டு வாழ்த்து சொல்லாதது மனதை உறுத்தியது. அம்மாவை அழைத்தான் சக்தி, "ஹல்லோ அம்மா. ஹாப்பி நியூ இயர்" மனோகரி, "ஹாப்பி நியூ இயர்டா கண்ணா. இரு ஸ்பீக்கர் ஃபோனில் போடறேன். சாந்தியும் இருக்கா" சாந்தி, "அண்ணா உனக்கு ஹாப்பி நியூ இயர்க்கு இன்னும் அஞ்சு மணி நேரம் இருக்கா?" சக்தி, "ஆமா எங்க ஆஃபீஸ் நியூ இயர் பார்ட்டிக்கு போயிட்டு இருக்கேன்" மனோகரி, "நைட் கூப்பிட்டோம். உன் ஃபோன் ஸ்விட்ச் ஆஃப் ஆயிருந்துது" சக்தி, "ஆமா சாரிம்மா. ஒரு அவசர ஆஃபீஸ் வேலை வந்துடுச்சு. ஃபோன் டெட்டா இருந்துது சார்ஜ் போட மறந்துட்டேன்" மனோகரி, "இன்னைக்கு உனக்கு லீவுன்னு சொன்னே? ஆஃபீஸுக்கு போனியா?" சக்தி, "இல்லைம்மா ஆஃபீஸுக்கு போகலை இங்கே இருந்தே கனெக்ட் பண்ணி வொர்க் பண்ணினேன்" மனோகரி, "நீ கூப்பிடுவேன்னு ரொம்ப எதிர்பார்த்தேன்" சாந்தி, "ஆமாண்ணா. எல்லாரும் எதிர்பார்த்தாங்க" மனோகரி, "எல்லாரையும் விட என் வருங்கால மருமக எதிர்பார்த்தா. நைட்டு ரொம்ப நேரம் வெயிட் பண்ணிட்டு இருந்து இருப்பா" சக்தி சிறிது நேர மௌனத்துக்கு பிறகு, "நான் உங்ககிட்ட சொல்லலாம்ன்னு தான் இருந்தேன். அவதான் .. " மனோகரி, "தெரியும்டா. " சக்தி, "அவளை உங்களுக்கு பிடிச்சு இருக்கம்மா? ப்ளீஸ் எனக்காக சொல்லாதீங்க. உண்மையா சொல்லுங்க" மனோகரி, "ரொம்ப பிடிச்சு இருக்குடா. அவ உனக்கு மனைவியா வரதுக்கு நீ கொடுத்து வெச்சு இருக்கணும்" சக்தி, "ஹல்லோ! இதெல்லாம் கொஞ்சம் ஓவரு" வாய்விட்டு சிரித்த மனோகரி, "ஆமாண்டா. முன்னாடியே தெரிஞ்சு இருந்தா டெல்லியில் அவங்க பெரியப்பா வீட்டுக்குள் நுழைஞ்ச அடுத்த நிமிஷம் பொண்ணு கேட்டு இருப்பேன். அவர் பாவம் நானும் சேர்ந்து நாடகம் ஆடறனோன்னு நினைச்சு இருப்பார்" சக்தி, "சாரிம்மா. உங்களை தப்ப நினைச்சு இருந்தார்ன்னா நான் அவர்கிட்ட பேசறேன்" மனோகரி, "சே, சே நல்ல வேளை அவர் அப்படி நினைக்கலை. நீங்க ரெண்டு பேரும் எங்க யார்கிட்டயும் சொல்லாம இருக்கீங்கன்னு தான் அவங்களா கெஸ் பண்ணி வந்தனாவோட் அப்பாவே ப்ரொபோஸ் பண்ணினார்" சக்தி, "வாவ், அவங்க வீட்டில் அவ மேல அவ்வளவு பிரியமா?" சாந்தி, "பின்ன என்ன அண்ணா? அவங்க மூணு பேர் வீட்டுக்கும் சேர்த்து ஒரே பொண்ணு. அண்ணி சொன்னாங்கன்னா அதுக்கு மறு வார்த்தை இல்லை. ஆனா அண்ணியும் அவங்க எல்லார் மேலயும் அவ்வளவு பிரியமா இருக்காங்க" சக்தி, "ஹே, உனக்கு பிடிச்சு இருக்கா" சாந்தி, "நீ எப்பத்தான் உருப்படப்போறயோ? பிடிக்காமயா வாய்க்கு வாய் அண்ணின்னு சொல்லுவேன்" மனோகரி, "சரி, பாவம் உன் ஃபோன் காலுக்காக வெயிட் பண்ணிட்டு இருப்பா. அவளை கூப்பிட்டு பேசு. அப்படியே அவளோட அப்பா சித்தப்பா எல்லாருக்கும் விஷ் பண்ணு" சக்தி, "சரிம்மா"வந்தனாவை அழைத்தான். சக்தி, "ஹாய் ஹனீ! ஹாப்பி நியூ இயர்!!" வந்தனா, "ஹாய் மை வுட் பீ! ஹாப்பி நியூ இயர்!!" சக்தி, "என்ன அஃபீஷியலா ஆன மாதிரி சொல்றே. எங்க அம்மா உனக்கு ஓ.கே சொல்லிட்டாங்களா?" வந்தனா, "உங்க அம்மா எனக்கு ஓ.கே சொல்றதுக்கு முன்னாடி எங்க வீட்டில் எல்லாம் உனக்கு ஓ.கே சொல்லி எங்க அப்பாவே ஆண்டிகிட்ட ப்ரொபோஸ் பண்ணினார்" சக்தி, "வாவ்!" வந்தனா, "இதெல்லாம் தெரியாத மாதிரி பேசி நடிக்காதே. என்னை கூப்பிடறதுக்கு முன்னாடி ஆண்டி கிட்ட பேசி இருப்பேன்னு எனக்கு தெரியும்" சக்தி, "ஹேய், அதுக்குள்ள மாமியார் மேல பொறாமையா?"
வந்தனா, "சீ! ஏன் இப்படி கேக்கறே? நானும் நீ செஞ்சதைத்தான் செஞ்சு இருப்பேன்னு உனக்கு தெரியாதா?" சக்தி, "தெரியும் ஹனீ. சும்மா சீண்டினேன்" வந்தனா, "பேசாதே போ. நைட்டு எவ்வளவு நேரம் ட்ரை பண்ணினேன் தெரியுமா? பார்ட்டி எல்லாம் முடிஞ்சு ஆண்டியும் சாந்தியும் தூங்கப் போனதுக்கு அப்பறம் நான், அப்பா, சித்தப்பா எல்லாம் பேசிட்டு இருந்தோம் அப்பக் கூட ட்ரை பண்ணினேன். எங்க சித்தப்பாகூட அவர் மொபைலில் இருந்து ட்ரை பண்ணினார்" சக்தி, "ஓ அதுதானா அந்த இன்னொரு மிஸ்ட் கால் நம்பர்?" வந்தனா, "இப்ப எனக்கு உன்னை பாக்கணும்ன்னு இருக்கு" சக்தி, "வெப் கேம் இருக்கா?" வந்தனா, "ஹே, யோசிக்கவே இல்லை பாரு! இரு கனெக்ட் பண்ணறேன். அப்படியே நீ எல்லோரோடையும் பேசிக்கலாம்" சக்தி, "சரி, சரி சீக்கிரம் கனெக்ட் பண்ணு" வந்தனா, "ஏன் அவசரம்?" சக்தி, "எங்க ஆஃபீஸ் பார்ட்டிக்கு போகணும். நித்தின் இன்னும் அரை மணியில் வந்துடுவான்" சற்று நேரத்தில் தனது லாப்டாப்பை இயக்கி ஸ்கைப்மூலம் அழைத்தான். வந்தனாவின் முகம் திரைக்கு வந்தது. ஒருவரை ஒருவர் பாத்தபடி சில கணங்கள் கழிந்தன. சக்தி, "ஐ லவ் யூ ஹனீ" வந்தனா, "ஐ லவ் யூ ஷக்தி. யூ நோ சம்திங்க்? உங்க அம்மா உன்னைப் பத்தி நீ என் கிட்ட சொல்லாதது எல்லாம் சொன்னாங்க" சக்தி, "ஓ மை காட்! " வந்தனா, "கவலைப் படாதே. ஐ ஸ்டில் லவ் யூ. இன் ஃபாக்ட் ஐ லவ் யூ மோர்" சக்தி, "தெரியும் ஹனீ" வந்தனா, "இரு இரு நான் லாப்டாப்பை டைனிங்க் ஹாலுக்கு எடுத்துட்டு போறேன். அங்கே எல்லோரும் இருக்காங்க" சற்று நேரத்தில் வந்தனாவின் குடும்பத்தினர் ஒவ்வொருவராக திரைக்கு வந்து அவனை வாழ்த்தினர். ஒவ்வொருவருடனும் சிறிது நேரம் பேசினான்.Monday, 5 January 2009 9:00 AM Conference room in R&AW Headquarters, CGO Complex, New Delhi திங்கள், ஜனவரி 5 2009 காலை 9 மணி R&AW தலைமை அலுவலகத்தில் இருக்கும் கலந்தாய்வுக் கூடம், CGO காம்ப்ளெக்ஸ், புது தில்லி எல்லோரும் அங்கு அமர்ந்து இருந்தனர். ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "ஹாப்பி நியூ இயர் எவ்ரிபடி" தீபா, "ஹாப்பி நியூ இயர் சார். வாரா வாரம் எங்களை என்ன ப்ரோக்ரெஸ் என்ன ப்ரோக்ரெஸ்ஸுன்னு துளைச்சு எடுப்பீங்க. இந்த ரெண்டு வாரமா உங்க சைடில் என்ன ப்ரோக்ரெஸ் சார்?" எல்லோரும் சிரித்து முடித்த பின் ப்ரொஃபெஸ்ஸர் சாரி தொடர்ந்தார் , முன் எச்சரிக்கை: அடுத்து நிறம் மாற்றி எழுதப் பட்டு இருக்கும் வரிகள் ... டெக்னிகல் ... "அந்த மெஸ்ஸேஜ்களை டிக்ரிப்ட் (குறியீட்டை மொழி பெயற்பது?) செய்யறதுக்கு நீங்க ரெண்டு பேரும் சஜ்ஜஸ்ட் பண்ணின மாதிரி ப்ரூட் ஃபோர்ஸ் பாட்டர்ன் மாட்சிங்க் மெத்தட்தான் (Brute Force Pattern Matching Method) உபயோகிக்கணும். ஆனால் நீங்க கவனிக்காத ஒரு விஷயம் இருக்கு. உங்களுக்கு அது தெரிஞ்சு இருக்கணும்ன்னு நான் சொல்லலை" வந்தனா, "என்ன விஷயம் சார் அது?" ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "எந்த வகையான குறியீட்டு முறை உபயோகிக்கப் பட்டு இருக்குன்னு முன்கூட்டியே தெரிஞ்சா இந்த மெத்தட ரொம்ப எஃப்ஃபெக்டிவ். அப்படி தெரியாத பட்சத்தில் தேடல் வழிமுறையை (Search Algorithm) மாத்தி மாத்தி முயற்சி செய்ய வேண்டி இருக்கும். இதனால் நேரம் வீணாகும். சமீப காலத்தில், அதாவது கடந்த ஒண்ணு ரெண்டு வருஷங்களில் சில தோராயமான தேடல் வழிமுறைகள் (Probablistic Decipherement Approach) கண்டு பிடிக்கப் பட்டு இருக்கு. இந்த தோராயமான வழிமுறைகள் மூலம் குறியீட்டை துல்லியமா கண்டு பிடிக்க முடியாது. ஆனால் குறியீட்டின் வெவ்வேறு அம்சங்களை கண்டு பிடிக்க முடியும். ஆக்சுவலா, எனக்கு கீழ இப்போ இருக்கும் ரீஸர்ச் ஸ்டூடண்ட்ஸ் அவ்வளவு ப்ரைட் இல்லை. சோ, இன்னும் சில பேரை சேர்க்க வேண்டியதா இருந்தது. அதுக்கும் நேரம் தேவைப் பட்டது. ஃபுல் டீம் கூடறவரைக்கும் எதுக்கு நாட்களை வீணாக்கறதுன்னு இருக்கற ரீஸர்ச் ஸ்டூடண்ட்ஸை ஒரு தோராயமான வழிமுறையை உபயோகிச்சு ஆராயச் சொன்னேன். பல சுவாரஸ்யமான விஷயங்களை தெரிஞ்சுக்க முடிஞ்சுது. மேற்கொண்டு எப்படி ப்ரொஸீட் பண்ணலாம்ன்னும் க்ளூ கிடைச்சு இருக்கு." வந்தனா, "என்ன விஷயங்கள் தெரிய வந்தது ப்ரொஃபெஸ்ஸர்?" ப்ரொஃபெஸ்ஸர் சாரி "ஒவ்வொண்ணா விவரிக்கறேன். முதலாவதாக, நாம் நினைச்சது போல் மாங்க்ஸ் பாட் நெட் ஒரே ஒரு சர்வர் மூலம் இயங்கல. ரெண்டு சர்வர் இருக்கு" தீபா, "வாட்? ரெண்டு சர்வரா? அது எப்படி சாத்தியம்?" ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "ரெண்டு சர்வரும் ஒரே சமயத்தில் இயங்கறது இல்லை. அடுத்தடுத்த நாள் மாறி மாறி இயக்கப் படுது" ஜாஷ்வா-சக்தி-நித்தின் டீம் அவர்களது ட்ரான்ஸ்ஃபர் ஆபரேஷன் செய்யும் போது. விளம்பர ஈமெயில்களுக்கான ஆணைகளை நிறுத்தி வைத்ததால் ப்ரொஃபெஸ்ஸர் சாரி இரண்டே சர்வர்க்ள் என யூகித்து இருந்தார். வந்தனா, "எப்படி இதை கண்டு பிடிச்சீங்க?" ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "ஈமெயில் விளம்பரத்துக்கான மெஸ்ஸேஜ்களில் ஒரு குறிப்பிட்ட அம்சம் சரிபாதி மெஸ்ஸேஜ்களில் மாறி இருந்தது. அந்த அம்சம் ஒரு பாதி மெஸ்ஸேஜ்களில் இருப்பது போலவே செல்ஃப் டிஸ்ட்ரக்ட் மெஸ்ஸேஜ்களிலும் இருந்தது. பாதி ஈமெயில் மெஸ்ஸேஜ்கள் அப்படீங்கறது எப்படின்னா, ஒரு நாளில் வந்த மெஸ்ஸேஜ்களில் அந்த அம்சம் ஒரு மாதிரியும் அடுத்த நாளில் வந்த மெஸ்ஸேஜ்களில் வேறு மாதிரியும் இருந்தது. செல்ஃப் டிஸ்ட்ரக்ட் மெஸ்ஸேஜ்கள் அனைத்தும் ஒரே நாளில் வந்தவை. செல்ஃப் டிஸ்ட்ரக்ட் ஆணைகள் வந்த மெஸ்ஸேஜக்ளிலும் அதே நாளில் வந்த ஈமெயில் மெஸ்ஸேஜ்களிலும் இந்த அம்சம் ஒரே மாதிரி இருந்தது. இதை வெச்சுத்தான் நான் ரெண்டு சர்வர்களை அடுத்தடுத்த நாட்களில் உபயோகிக்கறாங்கன்னு கணிச்சேன்" தீபா, "சரி, நாம் எப்படி மேற்கொண்டு ப்ரொஸீட் பண்ணப் போறோம்?" ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "நாம் செல்ஃப் டிஸ்ட்ரக்ட் மெஸ்ஸேஜ்களுக்கு பொருந்தும் ஈமெயில் மெஸ்ஸேஜ்களை மட்டும் எடுத்துட்டு மேற்கொண்டு ப்ரொஸீட் பண்ணப் போறோம். இதன் மூலம் செல்ஃப் டிஸ்ட்ரக்ட் மெஸ்ஸேஜ்கள் வந்த அன்னைக்கு இயங்கின சர்வரை கண்டு ப்டிக்க முடியும்" வந்தனா, "இதனால் சாம்பிள் சைஸ் குறைஞ்சுடும். ப்ரூட் ஃபோர்ஸ் பாட்டர்ன் மாட்சிங்க் சுற்றுக்கள் அதிகமாகுமே?"ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "ஒரு அளவுக்கு குறையும் தான். ஆனா நீங்க எனக்கு ஐநூறுக்கும் மேல ஈமெயில் விளம்பர ஆணைகள் கொண்ட மெஸ்ஸேஜ்களை கொடுத்து இருக்கீங்க. அதில் பாதின்னாலும் இருநூற்று ஐம்பது ஈமெயில் விளம்பர ஆணைகள் கொண்ட மெஸ்ஸேஜ்கள் இருக்கும். அதை வெச்சுட்டு சமாளிச்சுடலாம்?" தீபாவும் வந்தனாவும் தங்களது விளம்பரங்கள் போக மற்ற விளம்பரங்களுக்கான ஈமெயில் ஆணை கொடுக்கும் மெஸ்ஸேஜ்களையும் சேகரித்து இருந்தனர். இதை யூகிக்க தவறிய ஜாஷ்வாவும் சக்தியும் முந்நூறு ஈமெயில் விளம்பர ஆணை மெஸ்ஸேஜ்கள் மட்டுமே அவர்களுக்கு கிடைத்து இருக்கும் என்று தவறாக கணித்து இருந்தனர். தோழியர் முகத்தில் தோன்றிய நிம்மதியை பார்த்த ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "வெயிட். வெயிட். Sorry to dampen your spirits. வேறு ஒரு காரணத்தினால் நிச்சயம் நமக்கு அதிக சுற்றுக்கள் தேவைப் படப் போகுது" தீபா, "ஏன்?" ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "நீங்க எல்லாம் நினைச்ச மாதிரி அவங்க சிம்பிள் சைஃபர் உபயோகிச்சு இருக்கலை. பாலிஃபோனிக் காம்ப்ளெக்ஸ் சைஃபர் (Polyphonic Complex Cipher - இந்த வகையான குறியீட்டு முறைகளை முறிப்பது மிகக் கடினம்) உபயோகிச்சு இருக்காங்க" தீபா, "நோ வே. அத்துனூண்டு வைரஸ்ஸுக்குள் பாலிஃபோனிக் சைஃபர் கோட்? சார், மாங்க்ஸ் வைரஸ்ஸின் மொத்த சைஸே இருநூற்று எண்பது கிலோபைட்தான் (280 KB). பாலிஃபோனிக் சைஃபர் உபயோகிச்சு என்க்ரிப்ஷன் (encryption), டிக்ரிப்ஷன் (decryption), இதை ரெண்டும் செய்ய ஒரு கோட் எழுதினா அந்த பகுதி மட்டும் குறைஞ்சது நானூறு கிலோபைட் (400 KB) வரும்சார்." பைட் என்பது கணிணியில் மிகக் குறைந்த இடஅளவை குறிப்பது. ஒரு பைட் என்பதில் பூஜ்ஜியத்தில் இருந்து 255 வரை உள்ள ஒரு எண்ணை ஸ்டோர் செய்யலாம். பைனரி முறையில் எழுதினால் 00000000 இல் இருந்து 11111111 வரை அதாவது 2^0 வில் இருந்து 2^8 வரை. 1024 பைட்டுகளை கொண்ட அளவு ஒரு கிலோபைட்(KB). 1024 கிலோபைட்களை கொண்ட அளவு ஒரு மெகாபைட் (MB). ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "அது எப்படின்னு எனக்கு தெரியலை. ஆனா, நிச்சயம் அவங்க பாலிஃபோனிக் சைஃபர்தான் உபயோகிச்சு இருக்காங்க" வந்தனா, "சோ, அதனால் சுற்றுக்கள் ரெண்டு மடங்காகும். இல்லையா?" ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "அது மட்டும் இல்லை ஒவ்வொரு சுற்றுக்கும் அதிக நேரம் எடுக்கும். நீங்க நினைச்ச மாதிரி ஒரு நாளுக்கு ரெண்டு ரன் முடியாது. கோடை மாத்தி டெஸ்ட் பண்ணி ரன் பண்ணும்போது ஒரு நாளில் ஒரு சுற்றுக்கு மேல் முடியாது" தீபா, "எஃப்.பி.ஐ மூலம் வாங்கின கணிணியிலும் அவ்வளவு நேரம் ஆகுமா?" ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "அதில்தான் அவ்வளவு நேரம் ஆகும். மத்ததில் இன்னும் நேரம் அதிகம் ஆகும்" தீபா, "அதை விட வேகமா செய்யணும்ன்னா?" ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "வானிலை ஆராய்ச்சி மையத்தில் இருக்கும் சூப்பர் கம்ப்யூட்டர் மூலம் செஞ்சாத்தான் அதை விட வேகமா முடியும்." முரளீதரன், "அது முடியுமான்னு தெரியலை. நான் விசாரிச்சு சொல்றேன்" ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "நீங்க விசாரிங்க முரளி, ஆனா, அந்த கணிணியை உபயோகிக்கணும்ன்னா மென்பொருளை ரொம்பவே மாத்தி எழுதணும். சில விஷயத்துக்கு புதுசா மென்பொருள் எழுத வேண்டி இருக்கும். இப்போதைக்கு நம்மிடம் இருக்கும் கணிணியை வைத்து ஒரு நாளைக்கு ஒரு ரன் அப்படின்னு வேலையை தொடங்கலாம்" வந்தனா, "அப்படின்னா அதிகபட்சம் 256 நாட்கள், அதாவது செப்டெம்பர் கடைசி வரைக்கும் ஆகுமா?" ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "குறைந்த பட்சம் 128 நாட்கள். அதிக பட்சம் 256 நாட்கள். நமக்கு அதிர்ஷ்டம் இருந்தா மே மாதத்துக்கு நடுவிலேயே முடியலாம். நமக்கு அதிர்ஷ்டமே இல்லைன்னா செப்டம்பர் கடைசி வரைக்கும் ஆகலாம். இது ரெண்டுக்கும் நடுவில் இருக்கும் ஒரு தேதியை குறிவெச்சுக்கறது நல்லது"
தீபா, "அப்படியும் ஜூலை கடைசி வரைக்கும் ஆகும்!" வந்தனா, "வேறு எந்த வழியிலாவுது இன்னும் சீக்கிரம் கண்டு பிடிக்க முடியுமா சார்? இப்பவே அவங்களுக்கு நூறு செல்ஃப் டிஸ்ட்ரக்ட் மெஸ்ஸேஜ்கள் ஒரே நாளில் வெளியே போயிருக்குன்னு தெரிஞ்சு இருக்கும். நாம் கண்டு பிடிக்கும் போது அவங்க சர்வரை மாத்திடாங்கனா?" முரளீதரன், "இல்லை வந்தனா. ஒரு இணைய விலாசம் இருந்தா போதும். அது யாருக்கு வழங்கப் பட்டு இருக்குன்னு கண்டு பிடிச்சுடலாம்"வந்தனா, "சார், இப்ப தொடங்கலாம். இன்னும் சீக்கிரம் கண்டு பிடிக்க வேறு வழி எதாவுது இருக்கானு தொடர்ந்து பார்த்துட்டே இருக்கலாம். ஓ.கேவா?" ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "தொடங்கலாம். ஆனா, இன்னும் ஒரே ஒரு விஷயம் என் மனசை உறுத்திட்டு இருக்கு" வந்தனா, "என்ன?" ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "என்க்ரிப்ட் செய்து (குறியீட்டு முறையில் மாற்றி அமைத்து) இருக்கும் மெஸ்ஸேஜ்களின் நீளம்" தீபா, "அதுக்கு என்ன?" ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "ஒரு ஈமெயிலில் மெயில் சப்ஜெக்டும் மெயில் பாடியும் சேர்த்து 400 எழுத்துக்கள் இருக்குன்னா கணிணியில் எவ்வளவு இடம் பிடிக்கும்?" தீபா, "அது டெக்ஸ்ட் மேட்டர், சோ alpha-numeric string, சோ, 400 பைட் இடம் பிடிக்கும்" ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "ஈமெயில் விளம்பரம் கொடுப்பதற்கான மெஸ்ஸேஜ்களில் 400 எழுத்துக்கள் கொண்ட ஈமெயிலுக்கான மெஸ்ஸேஜ் ஏறக்குறைய 900 பைட்கள் இடம் பிடிச்சு இருக்கு. ஒவ்வொரு மெஸ்ஸேஜ்களிலும் ஈமெயில் சப்ஜெக்ட்டையும் மெயில் பாடியையும் தவிர மத்த விவரங்களுக்கு ஒரு நூறு பைட் ஒதுக்கப் பட்டு இருக்குன்னு வெச்சுட்டாலும் 800 பைட் ஈமெயில் மேட்டருக்கு ஒதுக்கப் பட்டு இருக்கு. பொதுவா என்க்ரிப்ட் செய்யும் போது அதே நீளம் இருக்கும் அல்லது நீளம் குறையும். ஆனா இந்த மெஸ்ஸேஜ்களில் Plain or Decrypted Textஐ (குறியிடப்படாத அல்லது குறியீட்டை முறித்து எழுதப் பட்ட வரிகளை) விட Encrypted Text (என்க்ரிப்டட் செய்யப் பட்ட - குறியிடப்பட்ட வரிகள்) ரெண்டு மடங்கு நீளம் அதிகமாகி இருக்கு". தீபா, "எப்படி சாத்தியம்?" ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "அதைத் தான் நானும் யோசிச்சுட்டு இருக்கேன்" முரளீதரன், "ப்ரொஃபெஸ்ஸர், ஒரு அடிப்படையான கேள்வி. எனக்கு தெரியாததால் கேட்கிறேன். ஒரு ஈமெயிலில் 400 எழுத்துக்கள் இருந்தா அது அதே 400 பைட்தான் இடம் பிடிக்கும்ன்னு எப்படி சொல்றீங்க?" தீபா, "ஒவ்வொரு எழுத்தும் ASCII Notationஇல் ஸ்டோர் ஆகி இருக்கும். அதன் படி ஒரு எழுத்துக்கு ஒரு பைட்" முரளீதரன், "ASCII நொடேஷன் அப்படிங்கறது ஒவ்வொரு எழுத்தை குறிப்பிடறதுக்கும் ஒரு எண் இருக்கும் அதுதான் இல்லையா?" தீபா, "ஆமா சார், பூஜ்ஜியத்தில் இருந்து 127 வரைக்கும் இருக்கும் சார்" முரளீதரன், "ஹே, எனக்கு தெரிஞ்சு ஒரு பைட் அப்படிங்கறதில் 255 வரை பிடிக்குமே?" தீபா, "ஆமா, ஆனா ASCII முறையில் ஒரு பிட்டை (Bit - துகள்) விட்டுட்டு மத்ததை மட்டும் எடுத்துக்குவாங்க அதனால் 0 இல் இருந்து 127 வரைக்கும்தான் ஸ்டோர் பண்ண முடியும். அந்த பிட்டை பாரிட்டி பிட் (Parity bit) அப்படிம்பாங்க. அந்த பைட்டில் இருக்கும் எண் இரண்டால வகுபடக்கூடியதா இல்லையா அப்படிங்கறதை அந்த பிட் காமிக்கும். இதன் மூலம் ஒரு வேளை கணிணியில் எதாவது கோளாறு இருந்ததுன்னா கணிணியே அதை கண்டு பிடிக்கறதுக்காக அப்படி அமைச்சு இருக்காங்க" முரளீதரன், "வெறும் 127 எழுத்துக்கள்தானா இருக்கு?" தீபா, "ஆங்கிலத்தில் மட்டும் எழுதினா அதுவே தேவைக்கும் அதிகம். காண்பிக்கறேன் பாருங்க" என்றபடி தன் கணிணியில் இருக்கும் ASCII முறைப்படி ஒவ்வொரு எழுத்துக்கும் ஒதுக்கப் பட்டு இருக்கும் எண்கள் கொண்ட பட்டியலை (ASCII Character Set Chart) முரளீதரனுக்கு காட்டினாள். முரளீதரன், "எனக்கு ஒரு சந்தேகம். இதை வெச்சுட்டு ஆங்கிலத்தில் எழுதினதை மட்டும்தானே ஸ்டோர் பண்ண முடியும்? இப்ப உலகத்தில் இருக்கும் எல்லா மொழிகளிலும் எழுதினதை ஸ்டோர் செய்யறாங்களே எப்படி?" தீபாவின் முகத்தில் தீடீர் பிரகாசம்! தீபா, "எஸ்!" என்று கத்தியபடி, "ப்ரொஃபெஸ்ஸர், அவங்க யூனிகோடில் ஸ்டோர் செஞ்சு இருக்காங்க. ஒவ்வொரு எழுத்துக்கும் ரெண்டு பைட்" ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "You mean polysyllabic? நானும் அந்த கோணத்தில் யோசிச்சேன் தீபா. ஈமெயில் மேட்டரைத் தவிர மத்தது எல்லாம் அனேகமா எண்களா தான் இருக்கு. அதெல்லாம் Integerஆகவோ அல்லது Floating Pointஆகவோ பைனரியில் ஸ்டோர் பண்ணி இருப்பாங்க ASCII ஸ்ட்ரிங்க்கையும் பைனரி டேட்டாவையும் ஒண்ணா சேர்த்து ஸ்டோர் பண்ணறது சுலபம். பைனரி டேட்டாவை யூனிகோட் டேட்டாகூட சேர்த்து ஸ்டோர் பண்ணறதில் நிறைய சிக்கல் இருக்கும்!" வந்தனா, "நீங்க சொன்னதுக்கு அப்பறம்தான் நானும் நோட்டீஸ் பண்ணினேன். இந்த செல்ஃப் டிஸ்ட்ரக்ட் மெஸ்ஸேஜ்களை பாத்தீங்களா சார்? ஒரு குறிப்பிட்ட வேலையை செய்யச் சொல்லும் ஆணை அது. அனேகமா அவங்க ஒவ்வொரு வகையான ஆணைக்கும் ஒரு குறியீட்டு முறை வெச்சு இருப்பாங்க. நிச்சயம் ஆணையை ஆங்கிலத்தில் ஒரு வாக்கியமா எழுத மாட்டாங்க. அதுக்கு பதில ஒரு குறிப்பிட்ட எண் இருக்கும் இல்லையா?" தீபா, "ஆமா நீ என்ன சொல்ல வரே?" வந்தனா, "ஒரு செல்ஃப் டிஸ்ட்ரக்ட் மெஸ்ஸேஜில் அதிக பட்சம் எத்தனை விவரங்கள் இருக்க முடியும்? சர்வரின் ஐ.பி.அட்ரெஸ் (இணைய விலாசம்), செல்ஃப் டிஸ்ட்ரக்ட் செஞ்சுக்க வேண்டிய கணிணியின் ஐ.பி.அட்ரெஸ், செல்ஃப் டிஸ்ட்ரக்ட் ஆணைக்கான குறிப்பிட்ட எண் அவ்வளவுதானே?" தீபா, "ஆமா" வந்தனா, "அப்பறம் ஏன் ஒவ்வொரு செல்ஃப் டிஸ்ட்ரக்ட் மெஸ்ஸேஜ்ஜும் இவ்வளவு நீளம் இருக்கு?" தீபா, "எஸ்! சார், நீங்க சொன்னதுக்கு நான் இப்ப விளக்கம் கொடுக்கறேன். அவங்க எண்கள் கொண்ட பகுதியையும் யூனிகோட் ஸ்ட்ரிங்க்காக மாத்தி மெஸ்ஸேஜுக்குள் எழுதறாங்க. அதான் அவங்க மெஸ்ஸேஜ்கள் எல்லாம் இவ்வளவு நீளம் இருக்கு"ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "ம்ம்ஹூம் ... என்னால ஜீரணிக்க முடியலை. கம்யூனிகேஷன் ரொம்ப ஸ்லோவா இருக்கும். பொதுவா இணையத்தில் எப்படி வேகமா மெஸ்ஸேஜ்களை அனுப்பறதுன்னுதான் பார்ப்பாங்க" தீபா, "சார், எப்படியும் ப்ரூட் ஃபோர்ஸ் பாட்டர்ன் மாட்சிங்க்கில் ASCII ஸ்ட்ரிங்க்ஸ் வெச்சு ஒப்பிட்டு பாக்கப் போறோம். அதே சுற்றில் யூனிகோட் ஸ்ட்ரிங்க்கையும் ஒப்பிட்டு பார்த்தா என்ன சார்" ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "கணிணி ஒவ்வொரு சுற்றும் எடுத்துக்கும் நேரம் இன்னும் அதிகமாகும்" உடனே வந்தனா, "என்ன? எட்டு மணி நேரம் அப்படிங்கறது பத்து மணி நேரம் ஆகப் போகுது. ஆகட்டுமே சார். அப்படியும் ஒரு நாளைக்கு ஒரு சுற்று முடிக்கலாம் இல்லையா? நாம் அவங்க ASCII முறைப்படிதான் ஸ்டோர் பண்ணி இருக்காங்கன்னு சில நாட்களை செலவு செஞ்சதுக்கு அப்பறம் தெரியவந்தா. அவ்வளவு நட்கள் செஞ்ச வேலையும் வேஸ்ட்தானே" தீபா, "ஆமா சார், வந்தனா சொல்றதுதான் சரி" ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "எனக்கு நம்பிக்கை இல்லை. இருந்தாலும் நீங்க சொல்றபடியே செய்யலாம்" முரளீதரன், "சரி, நாம் முதலில் ப்ளான் பண்ணினதை விட ரெண்ட் மாசம் அதிகமாகும், அதாவது ஜூலை கடைசி வரை. இல்லையா? I don't think Chris is going to like it. க்ரிஸ்கிட்டயும் ஷான்கிட்டயும் பேசறேன். அதுக்காக நீங்க வெய்ட் பண்ண வேண்டாம் ப்ரொஃபெஸ்ஸர். நீங்க நாளையில் இருந்து தொடங்குங்க" ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "சரி, தீபாவுக்கும் வந்தனாவுக்கு ப்ரீஃப் பண்ணறேன். கோட் மாத்தி ரன் பண்ணற வேலையை என் டீமில் இருக்கறவங்க செய்வாங்க. தீபாவும் வந்தனாவும் மானிடர் பண்ணினா போதும்" முரளீதரன், "ஒன் மோர் திங்க் ப்ரொஃபெஸ்ஸர். இப்ப உங்களுக்கு தேவையான ஆட்கள் கிடைச்சாச்சா? அல்லது, க்ரிஸ்கிட்ட பேசி யூ.எஸ்ஸில் இருந்து யாரையாவுது வரவழைக்கலாமா?" ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "இல்லை முரளீதரன். தேவை இல்லை. ஆனா. ஒரு ஏமாற்றமான விஷயம் என்னன்னா, ஐடியல் காண்டிடேட்ஸ் சிலர் கிடைக்கல" முரளீதரன், "யார் அந்த ஐடியல் காண்டிடேட்ஸ்?" ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "சென்னை ஐ.ஐ.டியில் இருக்கும் ஒரு ப்ரொஃபெஸ்ஸருக்கு மெயில் அனுப்பி விசாரிச்ச போது அவர்கிட்ட படிச்ச பையன் ஒருத்தன் அதுக்கு ஐடியலான ஆள். அந்த மாதிரி ஒருத்தன் இருந்தா நீங்க வேலையை பாதி நாள்ல முடிக்க முடியும்ன்னு எழுதி இருந்தார். ஆனா அந்த பையன் இப்ப யூ.எஸ்ஸில், வேறு ஒரு அசைன்மெண்டில் இருக்கான்." முகம் மலர்ந்த வந்தனா, "அந்த பையன் பேர் என்ன?" ப்ரொஃபெஸ்ஸர் சாரி தன் கணிணியில் இருந்த ஒரு ஈமெயிலை திறந்து பார்த்து, "சக்திவேல் முத்துசாமி. " முகம் மலர்ந்த முரளீதரன், "வந்தனா, இது அதே சக்தியா?" வந்தனா பெருமிதத்துடன் ஆமென்று தலையசைக்க தீபா, "அந்த மாதிரி ஒரு பேரை வெச்சுட்டு அந்த மாதிரி மூளையோட ரெண்டு பேர் இருக்க முடியாது" முரளீதரன், "வாவ் வந்தனா? ஷக்தியை நமக்கு ஹெல்ப் பண்ணச் சொல்லி கேக்கலாமா?" வந்தனா, "இல்லை சார். எனக்கு கேட்க விருப்பம் இல்லை" முரளீதரன், "ஏன்?" வந்தனா, "தங்கை கல்யாணத்துக்கு பணம் சேர்க்கறதுக்காகவே இந்த அசைன்மெண்டில் யூ.எஸ் போய் இருக்கான். அதை பாதியில் விட்டா அவன் கம்பெனியில் என்ன பிரச்சனை வரும்ன்னு தெரியலை" ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "உனக்கு அந்த பையனை தெரியுமா?" முரளீதரன், "He is her fiance. " ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "வாவ்" வந்தனாவும் தீபாவும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர். வந்தனா, "தீபா, நீ நித்தின் கிட்ட கேக்கறயா?"
தீபா, "கேக்கறேன். ஆனா அவன் சக்தியை விட்டுட்டு தனியா வரமாட்டான்" ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "யார் அந்த நித்தின்?" தீபா, "சக்தியோட ட்வின் ப்ரதர். அவன் மும்பை ஐ.ஐ.டியில் படிச்சான். ஆனா மும்பை ஐ.ஐ.டி ப்ரொஃபெஸ்ஸர் யாரும் அவனை ரெகமெண்ட் செய்ய மாட்டாங்க" முரளீதரன், "தீபா ஏன் அப்படி சொல்றே?" தீபா, "எல்லாரையும் கிண்டல் அடிச்சு இருப்பான். எல்லாரும் அவன் மேல கடுப்பா இருப்பாங்க" ப்ரொஃபெஸ் சாரி, "என்ன சொல்றே. ஒரே குழப்பமா இருக்கே?" தீபாவும் வந்தனாவும் சக்தி-நித்தின் பற்றி விவரித்தனர். ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "நிஜமா ரொம்ப இன்ட்ரெஸ்டிங்க். தீபா, எதுக்கும் நீ நித்தின் கிட்ட கேட்டு பாரு. இப்போதைக்கு நம்மிடம் இருக்கும் டீமை வெச்சுட்டு ப்ரொஸீட் பண்ணலாம்" முரளீதரன், "பட் தீபா, டீடெயில்ஸ் எதுவும் கொடுக்காதே" தீபா, "தெரியும் சார்" மீட்டிங்க் முடியும்போது மணி பதினொன்றைக் கடந்து இருந்தது. நித்தின் நிச்சயம் ஆன்லைனில் இருப்பான் என்று தீபா அவனை ஸ்கைப்பில் அழைத்தாள், அங்கு அமர்ந்து ஆடியோ மற்றும் வெப்கேம் உபயோகிக்க விரும்பாமல் சாட் விண்டோவைம் மட்டும் திறந்தாள்.

Friday, January 30, 2015

செக்மேட் - சைபர் கிரைம் திரில் தொடர் - பாகம் - 20


Wedneday, 31 December 2008, 7:00 PM I.G.P Yogeshwar Rathod's Residence புதன் டிசம்பர் 31 2008, மாலை 7 மணி ஐ.ஜி.பி யோகேஷ்வர் ராத்தோடின் இல்லம் கடந்த இரண்டு நாட்களும் புது தில்லியில் தொடங்கி, மதுரா, ஆக்ரா மற்றும் ஃபதேபூர் சிக்ரி எல்லாம் சுற்றிப் பார்த்த பிறகு ஜெய்ப்பூருக்கு வந்து சேர்ந்தனர். யோகேஷ்வர் ராத்தோடின் வீட்டு காம்பௌண்டுக்குள் நுழையும் போதே லானில் இருந்த மின் விளக்கு தோரணங்களும் அங்கு செய்யப் பட்ட விருந்துக்கான ஏற்பாடுகளையும் கண்டனர். வந்தனா, "ஆண்டி. போய் ஃப்ரெஷன் அப் பண்ணிட்டு சேஞ்ச் பண்ணிட்டு வரலாம். எங்க சித்தப்பா வீட்டில் நியூ இயர்ஸ் ஈவ் பார்ட்டி எப்பவும் ரொம்ப நல்லா இருக்கும்" என்ற போதே மனோகரிக்கு அங்கு இருந்த ஏற்பாடுகளுக்கான காரணம் புரிந்தது. வாசலில் தன் மனைவி சகிதம் நின்று அவர்களை வரவேற்ற யோகேஷ்வர், "வெல்கம் டு ஜெய்ப்பூர் ப்ரோஃபெஸ்ஸர். வெல்கம் ஷாந்தி. ஹாய் தீபா. ஐ யம் யோகேஷ்வர் திஸ் இஸ் மை வைஃப் பரதீபா" என்று மனோகரிக்கு அறிமுகப் படுத்திக்கொண்டார்.
மனோகரி, "தாங்க் யூ மிஸஸ் அண்ட் மிஸ்டர் ராத்தோட்" யோகேஷ்வர், "ப்ரொஃபெஸ்ஸர் நான் வயசில் நிச்சயம் உங்களை விட சின்னவன்தான். என்னோட அண்ணிகள் மாதிரி நீங்களும் என்னை யோகின்னு கூப்பிட்டா நான் சந்தோஷப் படுவேன். என் மனைவியும் அதைத்தான் விரும்புவா" அவர் சக்தியின் குடும்பத்தைப் பற்றி சகல விவரமும் இப்போது அறிந்து இருந்தார். வந்தனாவுக்கு அவன் எல்லா விதத்திலும் ஏற்றவனே என்று அவரும் மனீஷும் மஞ்சுநாத், வீரேந்தர் இருவருடனும் பேசி அவர்களையும் அதை ஏற்க வைத்து இருந்தார்கள். அது மட்டும் அல்லாது வந்தனா சக்தியை விரும்புவது வேறு ஒரு வழியில் தெரிய வந்து இருந்தது. அவர் காட்டிய பாசத்தில் முகம் மலர்ந்த மனோகரி, "ஓ.கே யோகி அண்ட் ப்ரதீபா" தீபா, "என்ன அங்கிள்? அவங்களுக்கு வெல்கம் எனக்கு வெறும் ஹாய்யா?" யோகேஷ்வர், "உன்னை அடிக்கடி பார்ப்பதால நீயும் முதல் முதலா இங்க வந்து இருப்பது மறந்துடுச்சு. வார்ம் வெல்கம் டு யூ. ஆனா, உனக்குன்னு நான் ஒரு ஏற்பாடு பண்ணி இருக்கேன்" என்றபடி அருகில் இருந்த ஆர்டர்லியின் காதில் கிசுகிசுத்தார். தீபா, "என்ன ஏற்பாடு?" யோகேஷ்வர், "எங்க அண்ணன் வீட்டிலேயே நீ அவ்வளவு கொட்டம் அடிப்பே. உன்னை கொஞ்சம் கன்ட்ரோல் பண்ணறதுக்காக டெல்லி இருந்து ஒரு ஆளை வர வெச்சு இருக்கேன்" என்று அவர் சொல்லி முடிக்கவும் முரளீதரன் தன் மனைவியுடன் லானில் இருந்து அங்கு வந்தார். தோழிகள் இருவரின் வியப்புக்கும் அளவில்லை. தீபா, "சார்! இட்ஸ் சோ நைஸ் டு ஸீ யூ ஹியர்" வந்தனா, "ஹல்லோ சார். நீங்க எப்படி இங்கே?" யோகேஷ்வர் மனோகரியிடம், "ப்ரொஃபெஸ்ஸர் மீட் ஜே.சி.பி முரளீதரன் என்னோட ஐ.பி.எஸ் பாட்ச்மேட். இவங்க ரெண்டு பேரோட பாஸ். இது அவரோட அன்பு மனைவி பத்மினி முரளீதரன்" முரளீதரன், "ஹல்லோ ப்ரொஃபெஸ்ஸர்" என்றவர் தொடர்ந்து தமிழில் "நான் உங்க பையன் சக்தியை பார்த்து இருக்கேன்" என்றார். சக்தி என்ற பெயரைக் கேட்டதும் கூர்ந்து கவனித்துக் கொண்டு இருந்த வந்தனாவை மேலும் வெறுப்பேற்ற ஆங்கிலத்தில் மேலும் விவரமாக யோகேஷ்வரிடம், "யூ.எஸ்ஸில் இருந்து திரும்பி வரும்போது ஏர்ப்போர்ட்டில் நாங்க மூணு பேரும் க்யூவில் நின்னுட்டு இருந்தோம். அப்ப செண்ட ஆஃப் கொடுக்க சக்தியும் நித்தினும் வந்து இருந்தாங்க. சரி, ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் என் முன்னால பேச கூச்சப் படுவாங்களேன்னு நீங்க எல்லாம் கொஞ்ச நேரம் போய் பேசிட்டு வாங்க நான நிக்கறேன்னேன். அடுத்த நொடி சக்தியும் வந்தனாவும் ஒரு பக்கம். நித்தினும் தீபாவும் இன்னொரு பக்கமா போனாங்க. ஒரு பத்து பதினைஞ்சு நிமிஷம் கழிச்சு வந்தாங்க" தீபா, "உங்களுக்கு எப்படி தெரியும் அவங்க சக்தி, நித்தின்னு?" முரளீதரன் யோகேஷவரை பார்த்து அர்த்தமுடன் சிரித்தபடி, "தீபா, இதை வந்தனா கேட்கலை பாத்தியா? நாங்க எல்லாம் போலீஸ்ம்மா" மனோகரியும் சற்று குழம்பியதைப் பார்த்த யோகேஷ்வர், "நீங்க போய் சேஞ்ச் பண்ணிட்டு வாங்க ப்ரொஃபெஸ்ஸர் நிதானமா பேசலாம். முரளீதரனும் அவர் வைஃப்ஃபும் அடுத்த மூணு நாள் உங்ககூட ஜெய்ப்பூர் சுத்திப் பாக்க வர்றாங்க. வந்தனா, தீபா, ஷாந்தி நீங்களும் போய் சேஞ்ச் பண்ணிட்டு சீக்கரம் வந்து ஹெல்ப் பண்ணுங்க" என்று உரிமையுடன் மூவரையும் துரத்தினார். பிரயாணக் களைப்பு நீங்க குளித்து உடைமாற்றி தோழிகள் மூவரும் தயரானதும். தீபாவையும் சாந்தியையும் கீழே சென்று உதவச் சொல்லி மனோகரியை அழைத்துச் செல்ல வந்தனா காத்து இருந்தாள். வந்தனாவின் மனதில் தன் சித்தப்பாவுக்கு ஏதோ தெரிந்து இருக்கிறது. 'சே, மனீஷ் அண்ணன் மூலம் நியூஸை ப்ரேக் பண்ணினா நல்லா இருக்கும்ன்னு அவன் கிட்ட முதல்ல சொல்லலாம்ன்னு இருந்தேன்' என்று எண்ணினாள், 'எப்படியோ. முதலில் மனோகரி ஆண்டியிடம் தான் சொல்லப் போகிறேன் அவரது எண்ணத்தை அறிந்து கொண்ட பிறகே என் வீட்டில் சொல்லப் போகிறேன். அதுவரை எப்படியாவுது மழுப்பணும்' என்று முடிவெடுத்தாள். குளித்துத் தயாராகிக் கொண்டு இருந்த மனோகரிக்கு வந்தனா சக்தியை விரும்புகிறாள் என்பதில் எந்த விதமான அய்யமும் இல்லை. கடைசியாக ஃபதேபூர் சிக்ரிக்கு அருகே ஒரு ரெஸ்டாரண்டுக்கு சென்ற போது மனோகரியை தடுத்து அவள் சாப்பிட்டதற்கு பணம் கொடுக்க அவளது வாலட்டை திறந்த போது அதில் அவள் கண்ட புகைப் படம் அதை ஊர்ஜிதப் படுத்தி இருந்தது. இருந்தும் தன் மகனும் அவளும் ஏன் இப்படி கண்ணாமூச்சி ஆடுகிறார்கள் என்று அறிந்து கொள்ள விரும்பினாள். அவளது வீட்டில் இருப்பவர்களும் தன்னைப் போலவே யூகித்துக் கொண்டு இருக்கிறார்கள் என்பதையும் உணர்ந்தாள். 'முரளீதரன் அடுத்த மூணு நாள் நம்ம கூடத்தான் இருக்கப் போறார். ஒரு தமிழ்காரர் என்கிற முறையில் அவரிடம் வந்தனாவைப் பத்தியும் அவங்க குடும்பத்தைப் பத்தியும் இன்னும் விவரம் கேட்டு தெரிஞ்சுக்கலாம்' என்று எண்ணியபடி வந்தனாவுடன் பார்ட்டி அமைத்து இருந்த லானுக்கு சென்றாள் கீழே லானில் வந்தனாவுக்கும் மனோகரிக்கும் இன்னும் ஒரு ஆச்சர்யம் காத்து இருந்தது.உதைப்பூரில் இருந்து வந்த விமானம் சற்று தாமதமானதால் அப்போதுதான் வீரேந்தர் ராத்தோடும் கௌரியும் வந்து சேர்ந்தனர். ஓடி வந்து அவர்களை அணைத்த வந்தனா, "டாட், மாம். நீங்க எங்கே இங்கே. நானே இன்னும் நாலு நாளில் அங்கே வர்றதா இருந்தேனே?" வீரேந்தர், "நான் என் தம்பிகூட நியூ இயரைக் கொண்டாட வந்தேன்" என்று கிண்டலடித்தார். பிறகு தொடர்ந்து "யோகிட்ட நேத்து பேசிட்டு இருந்தப்ப அவன் ஒரு நாள் வந்துட்டு போகச் சொன்னான். நாங்க ரெண்டு பேர் மட்டும் அங்கே தனியா இருப்பதற்கு பதிலா இங்கே கொண்டாடிட்டு நாளைக்கு மதியம் திரும்பிப் போறோம். நீ அங்கே வரதுக்குள்ள் எல்லா ஏற்பாடும் சரியா இருக்கும் கவலைப் படாதே" அருகில் வந்த மனோகரியைப் பார்த்தவர், "ஹல்லோ ப்ரோஃபெஸ்ஸர். ஐ யம் வீரேந்தர் ராத்தோட். திஸ் இஸ் மை வைஃப் கௌரி. உங்களை சந்திச்சதில் ரொம்ப சந்தோஷம்" மனோகரி, "வணக்கம் மிஸஸ் அண்ட் மிஸ்டர் ராத்தோட். என்னால் உங்க பொண்ணுக்கும் உங்க எல்லோருக்கும் ரொம்ப சிரமம். உங்களுக்கு நன்றி சொல்லக் கடமைப் பட்டு இருக்கேன்" வீரேந்தர், "நோ நோ. ஒரு சிரமமும் இல்லை. எப்படியும் தீபாவை கூட்டிட்டு தனியா போறதா இருந்தா. நீங்க பெரியவங்க அவங்க கூட போறதில் நான் தான் உங்களுக்கு நன்றி சொல்லணும்" என்று ஒரு தந்தையின் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். மனோகரி, "என்ன மிஸ்டர் ராத்தோட். அவ ஒரு ஐ.பி.எஸ் ஆஃபீஸர் எதோ சின்னப் பொண்ணை தனியா அனுப்பற மாதிரி பேசறீங்க?" கௌரி, "அவ என்னவா இருந்தாலும் எங்களுக்கு சின்னப் பொண்ணுதானே. எவ்வளவு வருஷம் ஆனாலும் உங்களுக்கு சக்தி சின்னப் பையன் தானே. வாங்க டின்னர் சாப்பிட்டுட்டே பேசலாம்" டின்னர் முடித்து எல்லோரும் பாட்டும் கும்மாளமுகாக புது வருடத்தின் வரவை எதிர் நோக்கிக் காத்து இருந்தனர். மணி பனிரெண்டை நெருங்கியதும் "ஹாப்பி நியூ இயர்" என்ற கோஷமும் வாண வேடிக்கைகளும் இரவைப் பகலாக்கின. எழுந்து நின்ற யோகேஷ்வர், "ஃப்ரெண்ட்ஸ் இந்த வருஷம் நாம் எல்லோருக்கும் விசேஷமானதா இருக்கணும்ன்னு எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கறேன்" என்று பொதுவான ஒரு டோஸ்ட் கொடுத்தார் பிறகு வீரேந்தரை அழைத்தார். வீரேந்தர், "நான் என் தம்பி சொன்னதை வழி மொழிகிறேன்" என்று தொடங்கினார். பிறகு தொடர்ந்து "நான் மேற் கொண்டு சொல்வதை சில நாட்கள் கழித்து பேசலாம்ன்னு இருந்தேன். பிறகு இது இந்த புது வருஷத் தொடக்கத்தில் இருக்கட்டும் என்று நாங்க எல்லாம் சேர்ந்து முடிவெடுத்தோம்" என்று பீடிகை போட்டார். "வரும் 2009 ப்ரொஃபெஸ்ஸர் மனோகரியின் குடும்பத்துக்கு விசேஷமானதா இருக்கணும்ன்னு நான் இறைவனை வேண்டிக்கறேன்" என்ற பிறகு அவர் மனோகரியைப் பார்த்து "ப்ரொஃபெஸ்ஸர் என் மகள் உங்க மகனை மனசார விருமபுறா. இதை எங்ககிட்ட கூட இன்னும் சொல்லாமல் முதலில் நீங்க அவளை ஏத்துக்கணும்ன்னு காத்துட்டு இருக்கா. உங்க மகன் என் மகளுக்கு எல்லா விதத்திலும் ஒரு நல்ல கணவனா இருப்பான்னு எங்க எல்லோருக்கும் நம்பிக்கை இருக்கு. என் மகளுடன் சேர்ந்து நாங்களும் உங்க விருப்பத்தை தெரிஞ்சுக்க ஆவலா இருக்கோம்" என்று முடித்தார். கண் கலங்கிய வந்தனா எழுந்து ஓடி தன் தந்தையை அணைத்துக் கொண்டாள். மனோகரி எழுந்து அவள் அருகே சென்றாள். தந்தையிடம் இருந்து திரும்பிய வந்தனா, "ஆண்டி .. சக்தி உங்க கிட்ட முதல்லயே சொல்றேன்னு சொன்னான். நான்தான் உங்களுக்கு என்னை பிடிக்குதான்னு பாத்த பிறகு சொல்லலாம்ன்னு சொன்னேன்." மனோகரி, "Oh! Not an issue Vanthana" குனிந்து தன் பாதத்தை தொட்ட வந்தனாவின் முகத்தை ஏந்தி (சற்று குனிய செய்து!) நெற்றியில் முத்தமிட்டு அணைத்தாள். பிறகு, "உங்களை மாதிரி என் மகனின் பேச்சில் இருந்தும் வந்தனாவின் ந்டவடிக்கையில் இருந்தும் எனக்கும் ஏற்கனவே தெரிஞ்ச விஷயம் தான். நான் உங்க சம்மதத்தை எப்படி கேட்கலாம்ன்னு நினைச்சுட்டு இருந்தேன். வந்தனா எனக்கு மருமகளா வருவதில் எனக்கு ரொம்ப சந்தோஷம். பெருமையும் கூட" என்றாள். நட்பு என்ற எல்லையை ஒரு கணத்தில் கடந்து ராத்தோட் குடும்பத்தினர் காட்டிய அன்னியோன்னியத்தில் மனோகரி திக்கு முக்காடினாள். அவர்கள் அத்தனை பேரும் வந்தனா மேல் வைத்து இருக்கும் பாசத்துக்கு தானும் தன் மகனும் ஈடு கொடுக்க வேண்டும் என்று கடவுளை வேண்டினாள். யோகேஷ்வா, "சோ, தீபா இப்ப உன்னை மாதிரியே உன் ஃப்ரெண்டுக்கும் லைன் க்ளியர். சந்தோஷம்தானே" தீபா, "என்ன சொல்றீங்க?" முரளீதரன், "ஒண்ணும் இல்லை. ரெண்டு நாளைக்கு முன்னாடி டெல்லி கால்ஃப் க்ளப்பில் இருக்கும் பாரில் லாயர் சுந்தர் தேஷ்பாண்டேவை உன் அப்பாகூட பாத்தேன். அவங்க ரெண்டு பேரும் சீரியஸா கல்யாணத்தை பத்தி பேசிட்டு இருந்தாங்க" என்றதும் தீபா முகம் சிவந்தாள். மனோகரி தீபாவின் அருகே வந்து, "அவளைப் பத்தியாவுது எனக்கு கொஞ்சம் சந்தேகம் இருந்துது. உன்னை பாத்த அன்னைக்கே எனக்கு தெரியும்" என்றவாறு அவளையும் அணைத்து உச்சி முகர்ந்தாள். பிறகு, "என் மகனுக்கு எப்படி வந்தனா சரியான ஜோடியோ அதே மாதிரி நித்தினுக்கு இவ" என்று அறிவித்தாள். சக்தி தொலைபேசியில் அழைப்பான் என்று நினைத்து இருந்த மனோகரியும் வந்தனாவும் ஏமாற்றம் அடைந்தனர். வந்தனா அவனை கைபேசியில் அழைக்க அது ஸ்விட்ச் ஆஃப் ஆகி இருந்தது. துணுக்குற்ற தீபா நித்தினை அழைக்க அதுவும் ஸ்விட்ச் ஆஃப் ஆகி இருந்தது. மனோகரி ஜாஷ்வாவின் இல்லத்தை அழைக்க பதிலளித்த சஞ்சனா, "மூணு பேரும் ரெண்டு நாளா ரொம்ப பிஸியா இருக்காங்க சித்தி. ஏதோ வருட இறுதிக் கணக்கு சம்மந்தப் பட்ட சிக்கல்ன்னு நினைக்கறேன்". ஆனால் முற்றிலும் வேறு பட்ட ஒரு சிக்கலில் அவர்கள் மூழ்கி இருந்தனர்.Wednesday, 31 December 2008 8:00 AM Shakthivel's Flat, New York புதன், டிசம்பர் 31 2008 காலை 8:00 சக்திவேலின் ஃப்ளாட், நியூ யார்க் அன்றும் அதற்கு அடுத்த நாளும் சக்திக்கு விடுமுறை. பழக்க தோஷம், அவனால் வெகு நேரம் தூங்க முடியவில்லை. அதிகாலையில் எழுந்து ஒரு மணி நேரம் ஜாக்கிங்க் செய்து வந்து இருந்தான். குளியலறையில் ஷவரை திறந்தவன் அதில் இருந்து இதமான சூட்டில் ஆனால் அதிவேகமாக குற்றால அருவியில் இருந்து வருவது போல் விழுந்த நீருக்கடியில் நின்றான். 'இந்த மாதிரி ஒரு ஷவர் ஈரோட் வீட்டில் போடணும். இந்த கட்டிடத்தில் பத்து ஃப்ளோருக்கு மேல் இருக்கும் டாங்கில் இருந்து தண்ணி வருது. அதனால நல்ல ஃபோர்ஸா வருது. நம்ம ஊரில் இந்த மாதிரி ஃபோர்ஸ் வராது. ஒரு ப்ரெஷர் பம்ப் ஓவர் ஹெட் டாங்க்குக்கு பக்கத்தில் ஃபிக்ஸ் பண்ணனும். லோகலா கிடைக்கலைன்னா வெளிநாட்டில் இருந்து இம்போர்ட் பண்ணனும். ஈரோடு வீட்டில் இருக்கும் வாட்டர் பைப்பிங்க் எல்லாம் அந்த ப்ரெஷரை தாங்குமான்னு தெரியலை. தாங்கலைன்னா எல்லாத்தையும் மாத்தணும். மாத்தி முடிக்கற வரைக்கும் எதுக்குடா எதுக்குடான்னு அம்மா திட்டுவாங்க. எல்லாம் ஃபிக்ஸ் பண்ணினதுக்கப்பறம் ஷவருக்கு அடியில் ஒரு தடவை நின்னு குளிச்சாங்கன்னா அப்பறம் ஊரெல்லாம் போய் ஆஹா ஓஹோன்னு சொல்லி சந்தோஷப் படுவாங்க' என்று எண்ணிய வாறு குளித்து முடித்தான். நிதானமாக டோஸ்டரில் இரண்டு சீஸ் சாண்ட்விச்கள் செய்து, ஹாட் ப்ளேட்டில் முட்டைகளை உடைத்து இரண்டு புல்ஸ் ஐ போட்டு எடுத்துக் கொண்டு சாப்பிடத் தொடங்கினான். நித்தினை அழைத்து சிறிது நேரம் மொக்கை போடலாமா என்று நினைத்தவன், நித்தினின் தூக்கப் பழக்கத்தை நினைத்து சிரித்த படி அந்த எண்ணத்தை கை விட்டான். அவர்கள் ஒன்றாக தங்கி இருந்த போது நித்தினை அதிகாலையில் எழுப்ப வேண்டிய அவசியம் நேர்ந்தால் அவன் கை கால் எட்டும் தூரத்துக்கு தள்ளி நின்று (அவனது உதைகளில் இருந்து நன்றாக பாதுகாத்துக் கொண்டு) அவனது திட்டல்களுக்கு மனதை தயார் செய்து கொண்ட பிறகே எழுப்புவான். முன்பு ஒரு முறை ஜாஷ்வா 'காலையில், அதுவும் விடுமுறை தினங்களில் நான் கொஞ்சம் பிஸியா இருப்பேன்' என்று சொன்னபடி சஞ்சனாவைப் பார்த்ததையும், அப்போது வெட்கத்தால் முகம் சிவந்த சஞ்சனா வேகமாக அவ்விடத்தை விட்டு நகர்ந்ததையும் மனதில் கொண்டு ஜாஷ்வாவையோ சஞ்சனாவையோ தொலைபேசியில் அழைத்துப் பேசும் எண்ணத்தையும் விடுத்தான். அதன் பிறகே முந்தைய தினம் மாலை அம்மாவுடனும் வந்தனாவுடம் சார்ஜ் தீரும்வரை கை பேசியில் பேசிக் கொண்டு இருந்ததை உணர்ந்தான். மறுபடி பகல் பனிரெண்டு மணி அளவில் அவர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து சொல்வதாக கூறி இருந்ததும் நினைவுக்கு வந்தது. பத்து மணி வரை டீ.வியில் கழித்தான். பிறகு தனது சர்வரின் 25ம் தேதியின் நடவடிக்கைகளை அவன் இன்னும் பரிசீலனை செய்யவில்லை என்று நினைவுக்கு வந்ததும் காலையுணவை முடித்ததும் சர்வர் இணைத்து இருக்கும் அறைக்கு கையில் ஒரு காஃபிக் கோப்பையுடன் சென்று அமர்ந்தான். மாங்க்ஸ் பாட் நெட் ஒரே ஒரு சர்வரால் இயக்கப் படுகிறது என்ற எஃப்.பி.ஐ - R&AW குழுக்களின் யூகத்துக்கு மாறாக மூன்று சர்வர்கள் அமைத்து இருந்தனர். நண்பர்கள் ஒவ்வொருவரின் வீட்டிலும் ஒரு சர்வர். ட்ரான்ஸ்ஃபர் ஆபரேஷன் நடக்கும் போது மட்டும் ஜாஷ்வாவின் வீட்டில் இருக்கும் சர்வர் இயக்கப் படும். மற்ற நாட்களில் முதல் நாள் இரவு பனிரெண்டிலிருந்து அடுத்த இரவு பனிரெண்டுவரை சக்தியின் ஃப்ளாட்டில் இருக்கும் சர்வர், அதற்கு அடுத்த நாள் அதே போல் நித்தின் ஃப்ளாட்டில் இருக்கும் சர்வர், என அடுத்தடுத்த நாட்களில் மாறி மாறி இயங்கும்படி அமைத்து இருந்தனர். ஈமெயில் விளம்பரங்கள் சம்மந்தப் பட்ட வேலைகளை ஜாஷ்வா கவனித்துக் கொள்வான். சர்வரில் இருந்து போகும் ஆணைகளை பரிசீலனை செய்வதை சரி சமமாக சக்தியும் நித்தினும் பகிர்ந்து கொண்டனர். சக்தியும் நித்தினும் முந்தைய தினம் இறுதி இரண்டு மணி நேரங்களில் போகும் செல்ஃப் டிஸ்ட்ரக்ட் ஆணைகள் உட்பட தங்களது சர்வரில் நடைபெற்ற நடவடிக்கைகள் அனைத்தையும் அடுத்த நாள் மாலை பரிசீலனை செய்வதை வழமையாக கொண்டு இருந்தனர். 26ம் தேதியன்று தொடங்கி தொடர்ந்து நான்கு நாட்களில் ஒரு மிகப் பெரிய ட்ரான்ஸ்ஃபர் ஆபரேஷனை வெற்றிகரமாக முடித்து இருந்தனர். அறுபது கிளைகளில் கேஷாக டெப்பாசிட் செய்யப் பட்ட நானூற்று அறுபது மில்லியன் டாலர்களை ஒரு பந்நாட்டு வியாபார நிறுவனத்தின் கணிணிகள் மூலம் சாவ் பாலோ நகரதில் இருந்த ஒரு ப்ரேஸில் நாட்டு வங்கியின் கண்க்குக்கு ட்ரான்ஸ்ஃபர் செய்து இருந்தனர். பொதுவாக இரண்டு மூன்று நாட்களில் முடிக்கக் கூடிய வேலை சில சிக்கல்களால் நான்கு நாட்களை விழுங்கிவிட்டது.
25ம் தேதி நள்ளிரவு வரை சக்தியின் வீட்டில் இருந்த சர்வர் இயக்கப் பட்டு இருந்தது. 25ம் தேதி நள்ளிரவுக்குப் பிறகு 29ம் தேதி நள்ளிரவு வரை ட்ரான்ஸ்ஃபர் ஆபரேஷன் நடத்துவதற்காக ஜாஷ்வாவின் இல்லத்தில் இருந்த சர்வர் இயக்கப் பட்டது. ட்ரான்ஸ்ஃபரை முடித்த பிறகு 29ம் தேதி நள்ளிரவு தொடங்கி பழைய படி நாளுக்கு நாள் மாறி மாறி இயங்கும் படி செய்து இருந்தனர். 26ம் தேதி ட்ரான்ஸ்ஃபர் ஆபரேஷன் தொடங்கியதால், முந்தைய நள்ளிரவுவரை தன் சர்வரில் நடந்த நடவடிக்கைகளை பரிசீலனை செய்ய சக்திக்கு நேரம் கிடைத்து இருக்கவில்லை.மெலிதாக ஹம்மிக் கொண்டு இருந்த சர்வரின் அருகே அமர்ந்து 25ம் தேதியின் ஒவ்வொரு வகை நடவடிக்கைகளையும் பரிசீலனை செய்தான். ஒவ்வொரு வகை நடவடிக்கையிலும் ஸ்க்ரீனை முழுவதும் நிரப்பாத அளவுக்கே வரிகள் தோன்றின. "செல்ஃப் டிஸ்ட்ரக்ட் ஆணைகள்" என்ற வகைக்கு வந்ததும் அதிர்ந்தான். சர்வரில் இருந்து சென்று இருந்த ஆணைகள் ஸ்க்ரீனை நிரப்பி இருந்தது. அடுத்தடுத்த நான்கு ஸ்க்ரீனையும் நிரப்பி அதற்கு அடுத்த ஸ்க்ரீனுக்கும் வரிகள் வழிந்தன ... சில கணங்கள் திகைத்த பின், நிதானமாக அவைகளை பரிசீலனை செய்தான். அனைத்தும் நிஜமாகச் சென்ற செல்ஃப் டிஸ்ட்ரக்ட் ஆணைகளே என்று உறுதி செய்த பிறகு எத்தனை ஆணைகள் என்று கணக்கிட்டான். சரியாக நூறு கணிணிகளுக்கு அத்தகைய ஆணைகள் சென்று இருந்தன! சில நிமிடங்கள் மௌனமாக அமர்ந்த பின் நேரத்தை பொருட் படுத்தாமல் நித்தினையும் ஜாஷ்வாவையும் அழைக்க கைபேசியை எடுத்தான். இன்னமும் அதனை சார்ஜ் செய்ய மறந்து இருப்பதை கவனித்து வீட்டுத் தொலைபேசியில் அழைத்து கான்ஃப்ரன்ஸ் கால் அமைத்து நடந்ததை சொன்னான். நித்தின், "My God! " ... பிறகு "Damn, damn .. " என்றவாறு அவன் படுக்கையை குத்துவது கேட்டது. சக்தி, "டேய், சும்மா கோபப்பட்டு பிரயோஜனம் இல்லை. நாம் ரிஸ்க் எடுத்துட்டோம். ஆனா கவனக்குறைவாவும் இருந்துட்டோம்" நித்தின், "நம் மேல தாண்டா எனக்கு எரிச்சலா இருக்கு" பின்னணியில் சஞ்சனாவின் கிசுசிசுப்புக்கு பிறகு ஜாஷ்வா, "சரி, இப்போ நூறு செல்ஃப் டிஸ்ட்ரக்ட் மெஸ்ஸேஜ் போயிருக்கு. இதை வெச்சுட்டு அவங்க என்ன செய்யக் கூடும்?" சக்தி, "டீகோட் பண்ணி, சர்வரோட ஐ.பி அட்ரெஸ்ஸை கண்டு பிடிக்கப் பார்ப்பாங்க" ஜாஷ்வா, "டீகோட் பண்ண முடியுமா?" நித்தின், "அவ்வளவு சுலபமா முடியாது" சக்தி, "டேய், நாம் ஒண்ணு ரெண்டு பேர் முயற்சி செய்வதைப் பத்தி பேசலை. இரண்டு அரசாங்கங்கள் முயற்சி செய்யறதைப் பத்தி பேசிட்டு இருக்கோம். நிச்சயம் முடியும் ஆனா ரொம்ப விரிவான வேலை அது. நிறைய ஆள்பலமும் கணிணிகளும் இருந்தா நிச்சயம் முடியும்." நித்தின், "அப்படியும் நாள் ஆகும்" சக்தி, "ஜாஷ்வா, நீ அவங்க நிலைமையில் இருந்தா என்ன செய்வே? அதை சொல்லு" ஜஷ்வா, "ப்ரூட் ஃபோர்ஸ் பாட்டர்ன் மாட்சிங்க் மெத்தட் (Brute Force Method using Pattern Matching Method) உபயோகிப்பேன். நித்தின் சொன்ன மாதிரி நாள் ஆகலாம். ஆனா ஆள்பலமும் சக்தி வாய்ந்த கணிணியும் இருந்தா நிச்சயம் கண்டு பிடிச்சுட முடியும். " நித்தின், "Brute force method will be most effective only if you have a large sample of both plain and encrypted alpha-numeric text" (அந்த முறையை பயன் படுத்த அவங்களுக்கு நிறைய எழுத்துக்கள், வார்த்தைகள் கொண்ட சங்கேத முறைப் படி மாற்றி அமைக்கப் பட்ட வரிகளும். மாற்றுவதற்கு முன்னால் இருந்த வரிகளும் தேவை) ஜாஷ்வா, "ஆமா" நித்தின், "ஆனா செல்ஃப் டிஸ்ட்ரக்ட் மெஸ்ஸேஜ்களில் எல்லாம் வெறும் எண்கள் மட்டும் தானே இருக்கும். எழுத்துக்கள் இருக்காதே" ஜாஷ்வா, "விளம்பர் ஈமெயிலுக்கான மெஸ்ஸேஜ்கள் ... " என அவன் தொடங்கி பாதியில் நிறுத்தினான். பின்னணியில் சஞ்சனா நடந்து வரும் சத்தம். பிறகு "என்ன ஆச்சு?" என்று அவள் ஜாஷ்வாவைக் கேட்பது கேட்டது. சக்தி தலையில் கையை வைத்தான். நித்தின், "மை காட் ஜாஷ் நீ அன்னைக்கு சொன்ன அதிகப் படியான ஆர்டர்கள் ... " சக்தி, "எஸ் ... அவங்ககிட்ட இருந்துதான் வந்து இருக்கு" ஜாஷ்வா, "எஸ்! எஃப்.பி.ஐ நிஜக் கம்பெனிகளை உபயோகிச்சு ஆர்டர் கொடுத்து சர்வரிடம் இருந்து ஆணை வரவழைச்சு இருக்காங்க" நித்தின், "எப்ப இருந்து ஆர்டர்கள் அதிகரிச்சுது?" ஜாஷ்வா, "மூணு மாசத்துக்கு முன்னால் இருந்து. வாரத்துக்கு சராசரி ரெண்டு ஆர்டர்கள் அதிகமா வந்துது. அந்த ரெண்டும் அவங்க கொடுத்ததுன்னு எடுத்துட்டா. அவங்ககிட்ட இப்போ இருநூறு அல்லது முந்நூறு ஈமெயில் விளம்பரத்துக்கான ஆணை மெஸ்ஸேஜ்கள் இருக்கும்." மௌனமாக மூவரும் சில நிமிடங்கள் ஆழ்ந்த யோசனையில் இருந்தனர். ஜாஷ்வா, "ஐ யம் ரியலி சாரி கய்ஸ். நான் இன்னும் கொஞ்சம் கவனமா இருந்து இருக்கணும்" நித்தின், "கம் ஆன் ஜாஷ். இதில் நாம் மூணு பேரும் இருக்கோம். எங்க கிட்ட சாரி கேட்டு எங்களை பிரிச்சுப் பேசாதே" இன்னும் ஓரிரு நிமிடங்கள் அரவமின்றிக் கடந்தன .. பெரு மூச்சுடன் மௌனத்தைக் கலைத்த சக்தி, "கய்ஸ், நாம் லேக் ஜார்ஜ் ரிஸார்ட்டில் என்ன பேசிகிட்டோம்? ஞாபகம் இருக்கு இல்லை? அவங்க கண்ணில் நாம் எந்த விதமான சட்ட விரோதச் செயலிலும் ஈடு படவில்லை. சோ, பயப் படறதுக்கு ஒண்ணும் இல்லை. எந்த முடிவும் நாம் உடனே எடுக்க வேண்டாம். மெஸ்ஸேஜ்களில் இருந்து சர்வரின் ஐ.பி அட்ரெஸ்ஸை கண்டு பிடிக்க நிச்சயம் பல நாட்கள் ஆகலாம். ஆனா உடனடியா என்ன செய்யப் போறோம் அப்படிங்கறதை நாம் முடிவு செஞ்சாகணும். இப்ப மணி பனிரெண்டாகப் போகுது. நான் லஞ்ச் ஆர்டர் பண்ணறேன். நீங்க ரெண்டு பேரும் இங்க வந்துடுங்க. உட்கார்ந்து டிஸ்கஸ் பண்ணி முடிவெடுத்தாகணும்." நித்தின், "சரி. இன்னும் ஒரு மணி நேரத்தில் நான் அங்கே இருப்பேன்" என்றபடி அவன் இணைப்பைத் துண்டித்தான். ஜாஷ்வா, "சரி, நான் புறப்பட்டு வரேன் .. லைன்ல இரு உன் தங்கை பேசணுமாம்" சஞ்சனா, "என்னண்ணா? எதாவுது ப்ராப்ளமா? இந்த ஆள் மூஞ்சி வெளுத்தா அசிங்கமா தெரியுது!" வாய்விட்டு சிரித்த சக்தி, "ஒண்ணுமில்லை உங்க ரெண்டு பேரோட் மச்சினிகள் தொந்தரவுதான்" சஞ்சனா, "என்ன மோப்பம் பிடிச்சுட்டாளுகளா?" சக்தி, "இன்னும் இல்லை. ஆனா அதுக்கு வழிவகுக்க நாங்க மூணு பேரும் அசந்து போற மாதிரி ஒரு பெரிய வேலை செஞ்சு இருக்காளுக" சஞ்சனா, "ப்ரச்சினை ஒண்ணும் இல்லையே?" சக்தி, "கவலைப் படாதே. அப்பறம், நீயும் இங்கே லஞ்சுக்கு வரியா? நான் வெளியில் இருந்து ஆர்டர் பண்ணறேன்" சஞ்சனா, "எனக்கு வேண்டாம். ஜாஷ் ஆஃபீஸ் நியூ இயர் பார்ட்டி இருக்கு. வாங்கி ஒரே தடவை போட்ட ஒரு ட்ரெஸ்ஸை ஜாஷ் போட்டுட்டு வரச் சொல்லி இருக்கார். அந்த ட்ரெஸ் எந்த நிலையில் இருக்குன்னு பாக்கணும். ப்ளஸ், நாளைக்கு புது வருஷம். வீட்டை எல்லாம் இன்னைக்கு சுத்தம் பண்ணனும்ன்னு இருந்தேன். அந்த சோம்பேறிக்கு வசதியா நீ வரச் சொல்லிட்டே" சக்தி, "நான் வேணும்ன்னா அப்பறம் வந்து உனக்கு ஹெல்ப் பண்ணறேன்" சஞ்சனா, "நீங்க முதல்ல உங்க வேலைக்கு உலை வராம பாத்துக்குங்க. அப்பறம் நாளைக்கு லஞ்சுக்கு வீட்டுக்கு வா" சக்தி, "ஹேய், பார்ட்டில இருந்து வந்து தூங்க ரொம்ப நேரமாகும். எதுக்கு சிரமம்?" ஜாஷ்வா, "உனக்கு எங்க புத்தாண்டு தின ஸ்கெட்யூல் தெரியாது இல்லை?" சக்தி, "இல்லை. சொல்லு" சஞ்சனா, "நைட்டு எத்தனை மணிக்கு படுத்தாலும் அன்னைக்கு காலைல எட்டு மணிக்கு மேல் அவரை தூங்க விட மாட்டேன். காலையிலே சர்ச்சுக்கும் கோவிலுக்கும் போயிட்டு வருவோம். இதனாலயே நாங்க நியூ இயர் பார்ட்டியில் இருந்து நைட்டு சீக்கரம் கிளம்பிடுவோம். நாளைக்கு நீங்க ரெண்டு பேரும் கோவிலுக்கு வாங்க. அதுக்கு அப்பறம் வீட்டுக்கு" சக்தி, "ஏன் சர்ச்சுக்கு வரக் கூடாதா" சற்று மௌனத்துக்கு பிறகு, சஞ்சனா, "சாரிண்ணா! சர்ச்சுக்கும் கூட வா" சக்தி, "ஓ.கே. நாளைக்கு பாக்கலாம்" மதிய உணவுக்கு ஆர்டர் செய்தபின் கைபேசியை சார்ஜரில் மாட்டினான்.ஒன்று கூடிய மூவரும் தங்கள் இக்கட்டுநிலையை அலசிப் பார்க்கத் தொடங்கினர். ஜாஷ்வா, "சரி, மேற்கொண்டு என்ன செய்வாங்கன்னு யோசிக்கலாம்" முன்னெச்சரிக்கை: கீழே நிறம் மாற்றி எழுதப் பட்டு இருக்கும் பகுதிகளில் எதிரிகளுக்கு சர்வரின் ஐ.பி. அட்ரெஸ்ஸை கண்டு அறிய எத்தனை நாட்கள் தேவைப் படும் என்பதை விவாதித்து கண்டறிவது விளக்கப் பட்டு இருக்கிறது. கணிணிவியல் நுணுக்கங்கள் நிறைந்து இருக்கும் ... சக்தி, "நீ சொன்ன மாதிரி ப்ரூட் ஃபோர்ஸ் பாட்டர்ன் மாட்சிங்க் முறைதான் அவங்களோட ஒரே சாய்ஸ். ரெண்டு வகையான மெஸ்ஸேஜ்கள் இருந்தாலும் மொத்தம் முந்நூறு மெஸ்ஸேஜ்கள் தான் அவங்க கிட்ட இருக்கும். அதை மட்டும் வெச்சுகிட்டு அந்த முறையை உபயோகிக்கணும்ன்னா நம் மெஸ்ஸேஜ்களின் நீளத்தை வெச்சு பாக்கும் போது 128இல் இருந்து 256 (சுற்றுக்கள்) தேவைப் படும்" எப்படி சந்தேக முறைப் படி தகவலை மாற்றி எழுதுவது க்ரிப்டோக்ரஃபி (Cryptography) என அழைக்கப் படும் ஒரு விஞ்ஞானம் ஆகி விட்டதோ அதே போல் குறியீட்டு வடிவங்களில் இருக்கும் தகவல்களை ஆராய்ந்து கண்டறிவதற்கும் டீசைஃபர்மென்ட் (Decipherement) என அழைக்கப் படும் விஞ்ஞானம் இருக்கிறது. இவை இரண்டும் கணிதவியலின் கிளைகளே. குறியீட்டு வடிவத்தில் இருக்கும் ஒரு தகவலை கண்டு பிடிக்க பல வழிமுறைகள் உள்ளன. அவைகளில் கணிணிகளை கொண்டு செயல் படுத்தும் வழிமுறைகளில் ஒன்றே ப்ரூட் ஃபோர்ஸ் பாட்டர்ன் மாட்சிங்க் (Brute Force Pattern Matching) என்று அழைக்கப் படுவது. ஜாஷ்வா, "ஹேய், இதுவரைக்கும் நீங்க எப்படி என்க்ரிப்ட் (encrypt - குறியிட்டு எழுதுவது) செய்யறீங்கன்னு கேட்டதில்லை. அதை கொஞ்சம் விளக்கி சொல்லு" சக்தி, "ஈமெயிப் அனுப்ப கொடுக்கும் ஆணை மெஸ்ஸேஜ்களுக்குள் இருக்கும் மெயில் சப்ஜெக்ட் (Mail Subject) மற்றும் மெயில் பாடி (Mail body) ஏற்கனவே alpha-numeric string (எண்களும் எழுத்துக்களும் கொண்ட வரி) ஆகத்தான் இருக்கும். மத்த வெறும் எண்கள் கொண்ட பகுதிகளையும் நாங்க முதலில் alpha-numeric string (எண்ணெழுத்து வடிவம்) ஆக மாத்தறோம். சாதாரண ASCII alpha-numeric string இல்லை. யூனிகோட் டெக்ஸ்ட் ஸ்ட்ரிங்க் (Unicode Text String). சோ, மொத்த மெஸ்ஸேஜும் யூனிகோட் எழுத்து வடிவமா இருக்கும். பிறகு அதை எங்க சொந்த சந்தேக முறைப் படி encrypt செய்யறோம்." ஜாஷ்வா, "ஓ! முதல் முதலில் நான் மாங்க்ஸ் பாட் நெட்டை கொஞ்சம் நோண்டிப் பாத்த போது. உங்க மெஸ்ஸேஜ்கள் எல்லாம் இணையத்துக்குள் ஸ்லோவா போறதை கவனிச்சு இருக்கேன். நிறைய சமயம் பாதி மெஸ்ஸேஜ் தொலைந்து போய் தகவல் பறிமாற்றம் தடை பட்டு ரீ-செண்ட் ஆனதையும் பாத்து இருக்கேன். உங்க மாங்க்ஸ் பாட் நெட் ரொம்ப ஸ்லோவோன்னு நான் சந்தேகப் பட்டேன். ஆனா இப்பத்தான் விளங்குது. alpha-numeric string ஆக மாத்தினாலே ஒவ்வொரு மெஸ்ஸேஜில் இருக்கும் எண்கள் கொண்ட பகுதியும் குறைஞ்சது பத்து மடங்கு நீளம் அதிகம் ஆகும். யூனிகோட் ஸ்ட்ரிங்க்குன்னா இன்னும் நாலஞ்சு மடங்கு நீளம் அதிகரிக்கும். பாட்டர்ன் மாட்சிங்க் செஞ்சு கண்டு பிடிக்க நீ சொல்லற அவ்வளவு சுற்றுக்கள் தேவைப் படும். ஒவ்வொரு சுற்றுக்கும் அதிக நேரமும் தேவைப் படும். " நித்தின், "இன்னும் ஒரு விஷயம் ஜாஷ்வா, பாட்டர்ன் மாட்சிங்க் கணிணிமூலம்தான் செய்வாங்க. ஆங்கிலத்தில் மட்டும் தான் நாம் ஈமெயில் விளம்பரங்கள் அனுப்பறோம். அதனால் அதன் யூனிகோட் ஸ்ட்ரிங்க் (எழுத்து தொடர்) கூட ஒப்பிட்டுப் பார்க்கணும்ன்னு யோசிக்க மாட்டாங்க. ASCII string அப்படின்னு நினைச்சுகிட்டு முயற்சி செய்வாங்க" மற்ற மொழிகளில் கணிணியில் எழுதுவதற்காகவே யூனிகோட் (Unicode) கண்டு பிடிக்கப் பட்டது. ஆங்கிலம் மட்டும் என்றால் ASCIIஏ போதுமானது. ஜாஷ்வா, "சோ, முதலாவுது எண்களை நீங்க அப்படியே சங்கேத முறைப் படி மாத்தி இருப்பீங்கன்னு நினைப்பாங்க. இரண்டாவது யூனிகோட் உபயோகிச்ச்சு இருக்கீங்கன்னு அவங்க நினைக்க மாட்டாங்க. இந்த ரெண்டு தடுமாற்றங்களினாலும் நிறைய நாட்கள் வீணாகலாம். இருந்தாலும் இருநூற்று ஐம்பத்து ஆறு சுற்றுக்குள்ள கண்டு பிடிச்சுடுவாங்க இல்லையா?" நித்தின், "அப்பவும், சரியான ஃபாண்ட் அவங்க கணிணியில் இருந்து அந்த எழுத்துக்கள் என்னன்னு தெரிஞ்சாதான் உடனே கண்டு பிடிப்பாங்க" ஜாஷ்வா, "என்ன சொல்றே? புரியலை" சக்தி, "எண்களை எல்லாம் எழுத்து வடிவமா மாற்றி எழுதும் போது நாங்க அரபிக் நியூமரல்ஸ் உபயோகிக்கலை. தமிழ் நியூமரலும் மராட்டி மொழியில் எழுத உபயோகிக்கும் தேவணாகிரி நியூமரல்ஸ் உபயோகிச்சு இருக்கோம். உதாரணமா நம்பர் "124" அப்படிங்கறது "௧௨௩" அப்படின்னு வரும்"
நித்தின், "சில இடங்களில், அதாவது ஐம்பது சதவிகிதம் தமிழ் நியூமரலில் வரும் மற்ற இடங்களில் மராட்டி நியூமரலில் வரும்" வாய்விட்டு சிரித்த ஜாஷ்வா, "நீங்கதான் பாட் நெட் எழுதினீங்கன்னு தெரிஞ்சுக்க உங்க ஆளுங்க ரெண்டு பேருக்கும் இது ஒண்ணே போதும்"சக்தி, "அதாவது அவங்க அந்த அளவுக்கு வரும்போது .. " ஜாஷ்வா, "சக்தி, நிச்சயம் வருவாங்க. நாம் இப்ப நமக்கு எவ்வளவு நாட்கள் இருக்குன்னு யோசிக்கணும். சரி, ஒரு சுற்று ப்ரூட் ஃபோர்ஸ் பாட்டர்ன் மாட்சிங்க் ரன் பண்ண எவ்வளவு நேரம் ஆகும்?" நித்தின், "நேரம் இல்லை நாள் ஆகும்ன்னு கேளு" ஜாஷ்வா, "ரொம்ப பெருமை அடிச்சுக்காதே. நானும் ப்ரூட் ஃபோர்ஸ் பாட்டர்ன் மாட்சிங்க் செஞ்சு பாத்து இருக்கேன். என் கிட்ட சக்தி வாய்ந்த கணிணி இல்லை. இருந்து இருந்தா சில மணி நேரத்தில் ஒரு சுற்று முடிக்கலாம்" சக்தி, "அது சிம்பிள் சைஃபர் உபயோகிச்சு இருந்தா ஜாஷ். பாலிமோஹோனின் சைஃபர் (Polyphonic Cipher - இந்த வகை குறியீட்டு முறைகள் கண்டு பிடிப்பதற்கு மிக கடினமானவை) உபயோகிச்சு இருந்தா?" ஜாஷ்வா வியப்புடன், "டேய் மச்சா! You are really something!! ஆனா எனக்கு ஒரு சந்தேகம். பாலிஹோனிக் சைஃபருக்கான கோட் ரொம்ப பெருசா இருக்குமே? ஆனா உங்க வைரஸ் அத்துனூண்டா இருக்கு? எப்படி?" குறியீட்டு முறைப் படி தகவல்களை மாற்றும்/மொழி பெயற்கும் மென்பொருளின் அளவு (file size - விண்டோஸ் ஃபோல்டரில் ஃபைலகளின் அளவு) அந்த குறியீட்டு முறையின் கடினத்தைப் பொறுத்து பெரிதாகும். நித்தின், "வைரஸ்ஸோட அந்த பகுதிக்கான கோட் வைரஸ்ஸுக்கு உள்ளே இருக்காது. கணிணிக்குள்ள புகுந்த உடனே விண்டோஸ் டீஃபால்ட் டெஸ்க்டாப் வால் பேப்பருக்கான JPEG Image ஃபைலிலுக்குள் ஸ்டோர் பண்ணிடறோம். வைரஸ் ரன் ஆகும் போது அந்த கோடை எடுத்து உபயோகிச்சுக்கும்" ஜாஷ்வா, "Wow, you guys used stegenography also? ரியலி அமேஸிங்க்! சரி, இப்ப நான் நம்பறேன். ப்ரூட் ஃபோர்ஸ் பாட்டர் மாட்சிங்க் மெத்தடில் ஒவ்வொரு சுற்றுக்கும் நிறைய நேரம் எடுக்கும். ஆனால், சூப்பர் கம்ப்யூட்டர் இருந்தா ஒரு மணி நேரத்தில் முடிக்கலாம்." நித்தின் "இரு ஜாஷ், அந்த செல்ஃப் டிஸ்ட்ரக்ட் மெஸ்ஸேஜ்கள் எல்லாம் சக்தி வீட்டில் இருந்த சர்வரில் இருந்து போயிருக்கு. ஆனா ஈமெயில் விளம்பரத்துக்கான மெஸ்ஸேஜ்கள் எங்க ரெண்டு பேர் வீட்டில் இருந்த ரெண்டு சர்வர்களில் இருந்து போயிருக்கும். அவங்க ஒரே ஒரு சர்வர்ன்னு நினைச்சுட்டு கொஞ்சம் குழம்புவாங்க" ஜாஷ்வா, "நம் எதிரிகளை கம்மியா எடை போடாதே. உங்க ரெண்டு பேர் வீட்டிலும் சர்வர்கள் மாறி மாறி இயங்கி இருக்கு. பாதி ஈமெயில் மெஸ்ஸேஜ்களில் இருக்கும் சர்வர் ஐ.பி.அட்ரெஸ் வேறன்னு புரிஞ்சுக்க ரொம்ப நாள் ஆகாது. செல்ஃப் டிஸ்ட்ரக்ட் மெஸ்ஸேஜ்களோடு ஒப்பிடக் கூடிய ஈமெயில் விளம்பர மெஸ்ஸேஜ்களை மட்டும் எடுத்துட்டு கண்டின்யூ பண்ணுவாங்க" சக்தி, "அப்ப அவங்க ஒப்பிட்டுப் பாக்கக் கூடிய மெஸ்ஸேஜ்களின் எண்ணிக்கை குறையும் சுற்றுக்கள் அதிகரிக்கும்" ஜாஷ்வா, "குறைந்த பட்ச சுற்றுக்களான 128 அதிகம் ஆகலாம். ஆனா 256க்கு மேல போகாது" சக்தி, "ஓ.கே. சூப்பர் கம்ப்யூட்டர் எல்லாம் இதுக்கு உபயோகிப்பாங்களான்னு தெரியலை. மேலும் ஒவ்வொரு சுற்றுக்கும் கோட் மாத்தி டெஸ்ட் பண்ணிப் பார்க்க ஏழு எட்டு மணி நேரம் ஆகலாம். நான் அவங்க இடத்தில் இருந்தா ஒரு நாளைக்கு ஒரு சுற்றுன்னு டார்கெட் செய்வேன்" நித்தின், "ஏன் ஒரு சூப்பர் கம்ப்யூட்டருக்கு பதில பல சர்வர் மாதிரியான கணிணிகளை உபயோகிக்க கூடாது. ஒரே நாளில் ரெண்டு மூணு சுற்று முடிக்கலாமே. தீபாவும் அப்படித்தான் யோசிப்பான்னு தோணுது." சக்தி, "செய்யலாம். ஆனா கோ-ஆர்டினேட் (நிர்வாகிக்கறது?) பண்ணறது கஷ்டம். நான் பார்த்த வரைக்கு வந்தனா ரொம்ப மெத்தாடிகல் (methodical). எதுவும் அவ கன்ட்ரோலில் இருக்கணும்ன்னு பார்ப்பா. அதனால் அவ ஒத்துக்க மாட்டா. ஒவ்வொரு சுற்றும் கவனமா செய்யணும். தப்பு ஆச்சுன்னா அவங்க தேடல் திசை திரும்பிப் போக வாய்ப்பு இருக்கு" ஜாஷ்வா, "சோ, குறைஞ்ச பட்சம் 128 சுற்றுக்கள் தேவைப் படும் அதிக பட்சம் 256 சுற்றுக்கள். முதலிலும் கடைசியிலும் ஆகக்கூடிய சில தடுமாற்றங்களினால் முப்பது நாட்கள் வீணானாலும். 158 நாட்களில் இருந்து 286 நாட்களுக்குள் அவங்க சர்வர் ஐ.பி அட்ரெஸ்ஸை கண்டு பிடிச்சுடுவாங்க"
நித்தின், "அதாவது ஜூன் முதல் வார முடிவில் இருந்து செப்டம்பர் கடைசிக்குள் சக்தி வீட்டில் இருக்கும் சர்வரின் ஐ.பி அட்ரெஸ்ஸை கண்டு பிடிச்சுடுவாங்க"சக்தி, "அனேகமா அதிக பட்சம் டீகோட் செய்ய 128 நாளுன்னு வெச்சு இருக்காங்க. அதனால தான் வந்தனா நான் திரும்பிப் போகும்போது அவ அசைன்மெண்டும் முடிஞ்சுடும்ன்னு சொன்னா" நித்தின், "தீபாவும் அதே மாதிரித்தான் சொன்னா" இவ்வாறாக தாங்கள் வேடர்களாக இருந்தால் எத்தனை நாளில் அவர்கள் சர்வரின் இணைய விலாசத்தை கண்டு பிடிக்கப் முடியும் என்று கணக்கிட்டனர்.

செக்மேட் - சைபர் கிரைம் திரில் தொடர் - பாகம் - 19


சஞ்சனா, "ஓ நான் தப்பா புரிஞ்சுகிட்டேன்" நித்தின், "அப்பறம் பேசறேன் ஆண்டி" என்று விடைபெற்றுச் சென்றான். சஞ்சனாவிடம் சிறிது நேரம் பேசிக் கொண்டு இருந்தபிறகு சக்தி மறுபடி லைனுக்கு வந்தான் சக்தி, "என்னம்மா யோசிச்சீங்களா? நான் மத்த ஏற்பாடெல்லாம் பண்ணட்டுமா" இப்போது மனோகரிக்கு அந்த வந்தனாவை பார்த்தே ஆக வேண்டும் என்று இருந்தது. மனோகரி, "சரிடா கண்ணா. சாந்திகிட்டயும் கேட்டேன். அவளுக்கு ஒரே குஷி. நீ அரேஞ்ச் பண்ணு போயிட்டு வர்றோம்"சென்னையில் இருந்து வந்த பயணிகள் வெளியில் வரத் தொடங்கினர். சக்தி தன் தாய் மற்றும் தங்கையின் பல புகைப் படங்களை அவளுக்கு காட்டி இருந்தான். அடையாளம் கண்டு கொள்ள அவர்களது முதல் சந்திப்பின் போது எடுத்த வந்தனாவின் புகைப்படம் ஒன்றை தாய்க்கு அனுப்பி இருந்தான்.
சக்கரம் அமைந்த பெட்டிகளை ஆளுக்கு ஒன்றாக இழுத்தவாறு வந்து கொண்டு இருந்த தாயையும் மகளையும் வந்தனா வாஞ்சையுடன் பார்த்தாள். வெளிர் நிறப் புடவையும் வெள்ளை ரவிக்கையுமாக கண்ணாடி அணிந்த மனோகரி; அவளுக்கு அருகே சுடிதாரில் தாயின் நிறம் கொண்ட சாந்தி. 'ஓ! நீ மட்டும்தான் உன் அப்பா கலரா' என்று மனதுக்குள் சக்தியிடம் பேசிக்கொண்டே சுற்றும் முற்றும் பாத்துக் கொண்டு இருந்தவர்களை நெருங்கினாள். சாந்தி வந்தனாவை முதலில் பார்த்தாள். சாந்தி, "அம்மா, அதோ அங்கே .. " அவர்க்ள் அருகே வந்த வந்தனா, "ஹெல்லோ ஆண்டி. ஹெல்லோ ஷாந்தி. ஐ யாம் வந்தனா" என்றவாறு மனோகரியிடம் கை நீட்டினாள் இருவரிடமும் கை குலுக்கியபின் மனோகரி ஏதும் சொல்வதற்கு முன்னால் அவள் இழுத்துக் கொண்டு வந்த பெரிய பெட்டியை வாங்கிக் கொண்டாள். அவளை தலை முதல் கால்வரை ஒரு முறை பார்த்த உடன் மனோகரிக்கு அவளை மிகவும் பிடித்துப் போனது. சிரித்த முகத்துடனும் அதே சமயம் மிடுக்குடனும், "ஹெல்லோ வந்தனா. சக்தி உன்னைப் பத்தி நிறைய சொல்லி இருக்கான். உண்மையை சொல்லு. எங்களை கூட்டிட்டு போய் காண்பிக்க உனக்கு சிரமம் இல்லையா?" வந்தனா, "நாட் அட் ஆல் ஆண்டி. நான் எப்படியும் ஜெய்ப்பூருக்கும் உதைப்பூருக்கும் போறதா இருந்தேன். என் கூட வேலை செய்யற தீபாவும் இந்த இடமெல்லாம் பாத்தது இல்லைன்னு சொன்னா. அவளை எப்படியும் கூட்டிட்டு போறதா இருந்தேன். அதான் சக்தி கிட்ட சொன்னேன்" அந்த விளக்கம் சக்தி முதலில் கொடுத்ததற்கு சற்று மாறுபட்டு இருந்தாலும் முழுமையாக நம்பும்படி இருக்க, மனோகரியின் மனத்தில் ஓரளவு தெளிவு பிறந்தது. சாந்தி, "நான் உங்களை எப்படி கூப்பிடணும்?" வந்தனா, "வந்தனான்னே கூப்பிடு. ஏன்?" சாந்தி, "No, you are my brother's friend. Must be same age. I don't call him by name. Always anna. That's why I asked (இல்லை, நீங்க அண்ணனோட் ஃப்ரெண்ட். அதே வயசா இருக்கும். அண்ணனை நான் பெயர் சொல்லி கூப்பிட மாட்டேன். அதான் கேட்டேன்)" வந்தனா, "உன் அண்ணனை விட நான் ஆறு மாசம் சின்னவதான்" என்று மனோகரிக்கும் சேர்த்து அறிவித்தாள். சாந்தி, "ஓ ரியலீ?" வந்தனா, "ஆண்டி, ஃப்ளைட் சௌகரியமா இருந்துதா" மனோகரி, "ரொம்ப சௌகரியமா இருந்தது டியர்" தன்னைப் பற்றிய முதல் அபிப்பிராயம் நல்லதாக இருப்பதை எண்ணி வந்தனாவின் மனம் குதூகலித்தது. வந்தனா, "ஈரோட்டில் இருந்து சென்னைக்கு ஓவர் நைட் வந்துட்டு காலையில் மறுபடி புறப்பட்டு வந்தது டையரிங்கா இருக்கும். இல்லை?" மனோகரி, "இல்லைம்மா. நேத்து மதியம் ஈரோட்டில் இருந்து புறப்பட்டோம். ரயிலில் சென்னைக்கு போனோம். என் ஃப்ரெண்ட் ஒருத்தி வீட்டில் நைட்டு தங்கிட்டு காலையில் ஃப்ளைட் பிடிச்சோம்" வந்தனா, "ஓ அப்படியா? சக்தி சரியா சொல்லலை. அதனால் உங்களுக்கு டையர்டா இருக்கும்ன்னு இன்னைக்கு மத்தியானம் வரைக்கு ஒரு ப்ரோக்ராமும் போடலையே" மனோகரி, "பரவால்லை வந்தனா. காலையில் சீக்கரமா எழுந்து வந்தது கொஞ்சம் டையர்டாத்தான் இருக்கு. நீ ப்ரோக்ராமை மாத்த வேண்டாம்" ஏர்ப்போர்ட்டில் இருந்து வீடு வரை வந்தனா தன்னைப் பற்றியும் தன் குடும்பத்தைப் பற்றியும் கூறினாள். "டெல்லியில் நீ எங்கே வேலை செய்யறே வந்தனா?" சிறிது நேர மௌனத்திற்கு பிறகு வந்தனா, "ஆண்டி, நான் ஒரு ஐ.பி.எஸ் ஆஃபீசர். R&AWவில் சைபர் க்ரைம் பிரிவில் வேலையில் இருக்கேன்" "ஓ, அப்படியா?" முதல் முதலாக தான் ஒரு ஐ.பி.எஸ் என்றபோது சக்தியிடம் கண்ட பாராட்டு மிக்க புன்சிரிப்பு மனோகரியின் முகத்தில் இருந்தது. பிறகு புருவங்கள் முடிச்சிட்ட மனோகரி, "அப்பறம் எப்படி சக்தியை மும்பை டெக் ஃபெஸ்டில் .. " வந்தனா, "ஆண்டி, நான் ஜெய்ப்பூர் என்.ஐ.டியில் பி.டெக் முடிச்சுட்டு ஐ.பி.எஸ் சேர்ந்தேன். ப்ரொபேஷன் முடிச்சு ஆறு மாசம்தான் ஆச்சு" மனோகரி, "உன் அஃபீஷியல் டெசிக்னேஷன் என்ன?" வந்தனா, "ஏ.எஸ்.பி" மனோகரி, "சென்ட்ரல் கவர்மெண்ட் ஏ.எஸ்.பி ஸ்டேட் கவர்மெண்ட் ஏ.எஸ்.பி ராங்கை விட அதிகம் இல்லையா?" வந்தனா, "ஆமா. ஸ்டேட் கவர்மெண்டில் இது எஸ்.பி அல்லது ஏ.சி.பி ராங்க்குக்கு சமம்" சாந்தி, "வாவ். யூ நோ வந்தனா? அண்ணா ஐ.ஐ.டி கிடைக்கலேன்னா ஐ.பி.எஸ் பண்ணனும்ன்னு இருந்தான். ஏம்மா, அண்ணாவும் வந்தனா மாதிரி பி.டெக் முடிச்சதும் ஐ.பி.எஸ் பண்ணி இருக்கலாம் இல்லை" வந்தனா, "பண்ணி இருக்கலாம் ஷாந்தி. ஆனா உன் அண்ணன் பி.டெக் முடிச்ச உடனே வேலைக்கு போகணும்ன்னு மேல எதுவும் படிக்கலை" என்று விளக்கவும் மனோகரி தன் மகனைப் பற்றி சிலர் மட்டும் அறிந்ததை சொன்னதைக் கண்டு அவர்களது இருவரது நட்பின் ஆழத்தை ஆராய்ந்தாள். மனோகரி, "உங்க வீடு முழுக்க ஐ.பி.எஸ், ஆர்மி ஆஃபீஸர்கள், நீயும் ஐ.பி.எஸ். Now I know how you could befriend my son so fast ..." வந்தனா மனதுக்குள் 'ஃப்ரெண்டா? ம்ம்ம்ஹூம் ... இப்ப தெரியுது. இப்படி தள்ளி இருந்து சித்தரவதை பண்ணறதை அவன் யார்கிட்ட கத்துகிட்டான்னு'. இன்னொன்றையும் கவனித்தாள். அவள் ப்ரொபேஷனில் தவுசாவில் இருந்த போது பொதுவாக அவளை முதல் முதலில் சந்திக்கும் குடும்பப் பெண்கள் காட்டும் பயம் கலந்த மரியாதையை மனோகரியின் பேச்சில் துளியும் காண முடியவில்லை. அவள் பேச்சில் இருந்து மனோகரியின் தன்னடக்கம் மிகுந்த தன்னம்பிக்கையையும் அதை அவள் தன் குழந்தைகளுக்கு ஊட்டி வளர்த்து இருந்ததையும் பார்த்த வந்தனாவின் மனதில் மனோகரியின் மேல் இருந்த மதிப்பும் மரியாதையும் பன்மடங்கானது. மனோகரி, "சக்திக்கு சைபர் க்ரைமைப் பத்தி எல்லாம் நிறைய தெரியும். எனக்கு மணிக்கணக்கா அதைப் பத்தி விவரிச்சு இருக்கான்" இப்போது வந்தனா துணுக்குற்றாள். 'இரு இரு உன்னை கவனிச்சுக்கறேன்' என்று சக்தியை கடிந்தவாறு மனதில் இருந்ததை அப்படியே மனோகரியிடம், "அப்படியா? என் கிட்ட எதுவும் சொன்னது இல்லை" மனோகரி, "எப்படி பேசுவான் வந்தனா. என் கிட்ட நீ உன் வேலையை பத்தி எதாவுது சொன்னா எனக்கு அதைப் பத்தி ஒண்ணும் தெரியாது. அதே அவன் கிட்ட நீ பகிர்ந்து கிட்டா உன் வேலையின் விதிமுறைகளை மீறுவது மாதிரி ஆயிடும் இல்லையா? அதான் நாகரீகமா அந்த பேச்சையே எடுத்து இருக்க மாட்டான்" ஒரு கணம் மனோகரியின் அறிவாற்றலில் வியந்த வந்தனா மனதுக்குள் 'ஆமா, நீங்கதான் உங்க மகனின் நாகரீகத்தை மெச்சிக்கணும். என்னால ஒண்ணும் சொல்ல முடியாதுன்னு தெரிஞ்சும் வேணும்ன்னே பேச்சை எடுத்து என்னை சீண்டி விட்டு வேடிக்கை பார்ப்பான்' என்றாலும் கூடவே, 'சக்தி, நீ என் கிட்ட எதையும் மறைக்கக் கூடாது. என் வேலை அதுக்கு தடையா இருக்கும்ன்னா எனக்கு இந்த வேலையே வேண்டாம்' என்று அவனிடம் மன்றாடினாள்.மஞ்சுநாத் ராத்தோட்டின் மனைவி சுலக்ஷணா ராத்தோட் அவர்களை அன்புடன் வரவேற்றார். முன்னமே ஆடவர் நால்வரும் இவ்வருகையைப் பற்றி பெண்டிருக்கு சொல்லி வந்தனா எதை மறைக்கிறாள் என்று கண்டறியக் கோரியிருந்தனர். வந்தனா, "பெரியம்மா, இது ப்ரொஃபெஸ்ஸர் மனோகரி முத்துஸ்வாமி. இது ஷாந்தி. ஆண்டி, என் பெரியம்மா சுலக்ஷணா ராத்தோட்" சுலக்ஷணா, "வெல்கம் டு டெல்லி. ராத்தோட் குடும்பத்தின் சார்பா உங்களை நான் வரவேற்கிறேன்" மனோகரி, "ரொம்ப நன்றி. வரும் வழியில் வந்தனா உங்க குடும்பத்தைப் பத்தி சொல்லிட்டு வந்தா. ஒவ்வொருவரையும் பார்க்க ஆவலா இருக்கு"
சுலக்ஷணா, "வந்தனா உங்க ப்ரோக்ராம் சொன்னா. எப்படியும் நீங்க திரும்பிப் போறதுக்குள்ள எல்லாரையும் பாத்துடுவீங்க" மனோகரி, "உண்மையில் அது என் ப்ரோக்ராம் இல்லை. என் மகன் சக்தியும் வந்தனாவும் போட்ட ப்ரோக்ராம். உங்களுக்கெல்லாம் சிரமம்" சுலக்ஷணா, "நோ நோ, எங்களுக்கு எந்த சிரமமும் இல்லை. வந்தனா எங்க மூணு வீட்டுக்கும் ஒரே பொண்ணு. நீங்க அவ ஃப்ரெண்டோட அம்மா தங்கைன்னா எங்களுக்கும் ஃப்ரெண்ட்ஸ்தான்" சாந்தி, "ரொம்ப தாங்க்ஸ் ஆண்டி" பேசிக்கொண்டு இருக்கையில் தீபா டீ-ஷர்ட் பெர்முடா சகிதம் குளித்து முடித்த ஈரத் தலையை உதறியவாறு வந்தாள். தீபா, "ஹல்லோ ஆண்டி. ஹல்லோ ஷாந்தி. ஐ ஆம் தீபா." மனோகரி, "ஹல்லோ தீபா. நீயும் வந்தனாவோட வொர்க் பண்ணறே இல்லையா? ஆனா உன்னைப் பாத்தா ஒரு ஐ.பி.எஸ் ஆஃபீஸர் மாதிரி தெரியலையே?" தீபா, "ஐ.பி.எஸ்ஸா? நானா?" என்றபடி வாய்விட்டு சிரித்தாள். சுலக்ஷணா, "இவளா ஐ.பி.எஸ்ஸா. இவளுக்கும் டிசிப்ளினுக்கும் ரொம்ப தூரம்" தீபா, "ஆமா, இவங்க எல்லாம் எனக்கு வெச்சு இருக்கும் பெயர் Anti-establishment Activist!" உடன் சேர்ந்து சிரித்த மனோகரி, "அப்பறம் எப்படி R&AWவில் சேர்ந்தே?" தீபா, "என் தலைவிதி ஆண்டி" என்றவள் வந்தனாவின் முறைப்பைப் பார்த்துக் குறும்பாக சிரித்தாள். பிறகு, "அப்பறம் விவரமா சொல்றேன் ஆண்டி. பை த வே, உங்களைப் பத்தி நித்தின் நிறைய சொல்லி இருக்கான்" சாந்தி, "Oh, you know Nithin Annaa?" தீபா, "Yes. I know your Nithin Anna very much" (I don't know how to express the phrase "smug reply" here!) மனோகரி, 'ம்ம்ம் .. அப்ப சக்தி உனக்கு சொல்லலை. நித்தின் சொல்லி இருக்கான்னா நிச்சயம் எதோ சுவாரஸ்யமான விஷயத்தை என் பையன் என் கிட்ட இருந்து மறைக்கறான்' எண்ணியவாறு வந்தனாவை மறுபடி ஒரு முறை தலைமுதல் கால்வரை எடை போட்டாள். சுலக்ஷணாவும் அதே போல் எண்ணிக் கொண்டு இருந்தாள். மனோகரி, "இன் ஃபாக்ட் நித்தின்தான் உன்னைப் பத்தி முதல்ல என் கிட்ட சொன்னான்" சுலக்ஷணா, "தீபா, யார் இந்த நித்தின்?" தீபா திரு திருவென விழித்து வந்தனாவைப் பார்த்தபடி, "என் ஃப்ரெண்ட் ஆண்டி. அவனும் ஷக்தியும் க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ். அவனை மும்பை ஐ.ஐ.டி டெக் ஃபெஸ்டில் முதலில் மீட் பண்ணினேன். அப்பறம் நாங்க யூ.எஸ்ல மறுபடி பார்த்தோம். ரெண்டு வாரம் அவங்கதான் எங்களை வெவ்வேற இடத்துக்கெல்லாம் கூட்டிட்டு போய் காண்பிச்சாங்க" என்று வந்தனா சொல்லி வைத்து இருந்த அளவுக்கு அதிகமாகவே உண்மை விளம்பினாள். மனோகரிக்கு சில புதிய ஓட்டைகள் புலப்பட்டன! சுலக்ஷணா, "ஓ, அப்ப நித்தின் உன் ஃப்ரெண்ட். ஷக்தி வந்தனாவின் ஃப்ரெண்டா" என்று உள் அர்த்தம் பொதிந்த கேள்வியை கேட்க மறுபடி தீபாவின் வாயை திறக்க விடாத வந்தனா, "அப்படி இல்ல பெரியம்மா. நாங்க நாலு பேரும் ஃப்ரெண்ட்ஸ்" தீபா, "இன் ஃபாக்ட் அவங்க ரெண்டு பேர் மூலம் ஜாஷ்வா சஞ்சனா அப்படின்னு இன்னும் ரெண்டு பேர்கூட ஃப்ரெட்ண்டானாங்க" மனோகரி, "ஓ, உங்க ரெண்டு பேருக்கும் ஜாஷ்வாவையும், சஞ்சனாவையும் தெரியுமா?" வந்தனா, "ஆமா ஆண்டி. சஞ்சனா உங்களை சித்தின்னு கூப்பிடுவான்னு ஷக்தி சொல்லி இருக்கான்" சுலக்ஷணா, "சரி. ப்ரொஃபெஸ்ஸர், நீங்களும் ஷாந்தியும் பிரயாணக் களைப்பில் இருப்பீங்க. கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துக்குங்க. லஞ்ச் டைமில் மறுபடி பேசலாம். வந்தனா, ஷாந்திக்கு தனி ரூம் வேணும்ன்னா மனீஷ் ரூமை அரேஞ்ச் பண்ணு ஓ.கே?" சாந்தி, "வேண்டாம் ஆண்டி. நாங்க ரெண்டு பேரும் ஒரே ரூமில் தங்கிக்கறோம்" வந்தனா அவர்களை மாடிக்கு அழைத்துச் செல்ல. தீபாவின் வாயை மேலும் கிளற சுலக்ஷணா கிச்சனுக்கு அழைத்துச் சென்றார். தோழிகள் இருவரும் கண்களால் பேசிக் கொண்டதை இரு தாய்களும் கவனித்தனர்.மதிய நேர சாப்பாட்டு வேளையின் போது மஞ்சுநாத் ராத்தோடும் வந்து இருந்தார். மஞ்சுநாத், "வெல்கம் ப்ரொஃபெஸ்ஸர். வெல்கம் ஷாந்தி" மனோகரி, "தாங்க் யூ ஜெனரல்" மஞ்சுநாத், "இது ரொம்ப சுவாரஸ்யமான விஷயம். பொதுவா நம் ஃப்ரெண்ட்ஸ் மூலம் நம் குழந்தைகளுக்கு ஃப்ரெண்ட்ஸ் கிடைப்பாங்க. இப்ப இவங்க ஃப்ரெண்ட்ஸ் மூலம் எங்களுக்கு நீங்க ஃப்ரெண்ட் ஆகி இருக்கீங்க. பை த வே ப்ரொஃபெஸ்ஸர் ஷக்தியைப் பத்தி எங்களுக்கு வந்தனா அவ்வளவா சொல்லலை. நீங்க சொல்லுங்க" வியப்புற்ற மனோகரி வந்தனாவைப் பார்க்க வந்தனா தலை குனிந்தாள். அந்த அழகில் லயித்த மனோகரி, "என் மகன் சக்திவேல் முத்துசாமி ... " என்று தொடங்கி அவனைப் பற்றி ஒரு தாயின் கர்வத்துடன் சொல்லி முடித்தாள். மஞ்சுநாத், "அவனுக்கு அமெரிக்காவிலேயே வேலை கிடைச்சு இருக்குமே. ஏன் போகலை?" மனோகரி, "அதில் அவனுக்கு சுத்தமா இஷ்டம் இல்லை ஜெனரல். இன் ஃபாக்ட் அவன் ஐ.ஐ.டிக்கு முயற்சி செய்யும்போதே என்.டி.ஏ (N.D.A - National Defense Academy) பரிட்சையும் எழுதினான். அதுவும் கிடைக்காமல் போனா ஐ.பி.எஸ் முயற்சி செய்யறேன்னு சொல்லிட்டு இருந்தான்" என்று தன் மகனின் தேசப் பற்றை பறைசாற்றினாள். மஞ்சுநாத், "என்.டி.ஏவில் கிடைச்சுதா" மனோகரி, "ஐ.ஐ.டி நுழைவுத் தேர்வில் நல்ல ராங்க் எடுத்து இருந்தான். நாங்க என்.டி.ஏ என்ட்ரன்ஸ் ரிஸல்டை செக் பண்ணவே இல்லை" மஞ்சுநாத், "நிச்சயம் கிடைச்சு இருக்கும். ஷக்தி மாதிரி பையன்கள் என்.டி.ஏவை முதல் ஆப்ஷனா வெச்சுக்கறது இல்லை" மனோகரி, "சக்தி விஷயத்தில் அதுக்கு முக்கிய காரணம் அவனுக்கு கணிதத்திலும் கணிப் பொறியியலிலும் இருந்த ஆர்வம்" மஞ்சுநாத், "இல்லை ப்ரொஃபெஸ்ஸர். இப்ப வந்தனா இல்லையா? அவளுக்கும் தான் ஆர்வம் இருந்தது" அந்த உரையாடலின் போக்கை மாற்ற வந்தனா, "பெரியப்பா, நீங்க என்னை ஷக்திகூட கம்பேர் பண்ணாதீங்க. அவன் தீபா மாதிரி" தீபா, "அங்கிள். என்னை மாதிரி இல்லை என்னை விட நூறு மடங்கு" வந்தனா, "மாதமாடிக்ஸ் ஒலிம்பியாடில் முதல் வந்தவன்" மஞ்சுநாத், "வாவ், கடைசியா ப்ரொஃபெஸ்ஸர் அவன் விளையாட்டில் எல்லாம் சாம்பியன் அப்படின்னு சொன்னதும் அவனை மாதிரி ஃபிஸிகல் ஃபிட்னஸ் இருப்பவர்கள் என்.டி.ஏ மாதிரி கல்லூரிகளில் சேருவதில்லை என்கிற ஆதங்கத்தில் சொன்னேன். சாரி ப்ரொஃபெஸ்ஸர். சோ, சக்தி ஒரு ஜீனியஸ்ன்னு சொல்லுங்க" தீபாவும் வ்ந்தனாவும் ஒன்றாக மனதுக்குள், 'ஆமா ஆனா இன்ஸ்யூரன்ஸ் கம்பெனிக்கு கோட் எழுதும் ஜீனியஸ்' என்று காதலர்களை கரித்துக் கொட்டினர். மனோகரி, "ஜீனியஸ்ஸான்னு தெரியலை. ஆனா எனக்கு தெரிஞ்சவரை கணக்கு அல்காரிதம் இதிலெல்லாம் அவனை மாதிரி ஒருத்தன்னா அது நித்தின் மட்டும்தான்" மஞ்சுநாத், "இதை நீங்க ஒரு ப்ரொஃபெஸ்ஸரா சொல்றீங்கன்னு தோணுது. இல்லைன்னா மகனுக்கு இணையா இன்னொருத்தனை சொல்லி இருக்க மாட்டீங்க" வாய்விட்டு சிரித்த மனோகரி, "நித்தினும் எனக்கு ஒரு மகன் மாதிரி தான்" தீபா மனதுக்குள், 'ஆண்டி, உங்களுக்கு அடுத்த டூர் ஹைதராபாத்துக்கு' என்று நினைத்தாள். மஞ்சுநாத், "Hey, girls! how do these guys look? You have photographs of them?" மனோகரி தன் வாலட்டில் இருந்த சக்தியின் புகைப் படத்தை எடுத்துக் காட்ட. வந்தனா எதுவும் சொல்வதற்கு முன்னர் தீபா தனக்கு நித்தின் புதிதாக வாங்கி கொடுத்து இருந்த ஐ-ஃபோனில் அவனது படத்தைக் காட்டினாள். வாங்கிப் பார்த்த மஞ்சுநாத் வந்தனாவிடம், "உன் ஃபோனில் ஷக்தியின் படம் இருக்கா வந்தனா?" என்று கேட்க கேட்க அவசரமாக கிச்சனுக்குச் சென்றாள். மஞ்சுநாத் மேலும் அவர்கள் குடும்பத்தைப் பற்றி மனோகரியிடம் கேட்டவாறு உரையாடலை தொடர்ந்தார். அன்று மாலை வந்தனா அவர்களை புது தில்லியின் சில இடங்களை சுற்றி காண்பித்தாள். வயதில் மூத்தவளானாலும் தீபாவிடம் சாந்திக்கு ஒரு அதீத ஒட்டுதல் இருவரும் எதை எதையோ பேசிக் கொண்டு இருந்ததைப் பார்த்து வந்தனாவே வியந்தாள். அதே சமயம் சாந்தி ஒரு தங்கையைப் போல தன்னிடம் பழகுவதை உணர்ந்தாள். இரவு உணவுக்கு சுலக்ஷணா வீட்டுக்கு அழைத்து இருந்தாலும், மேலும் எந்த விசாரணையிலும் மாட்டாமல் இருக்க வந்தனா அவர்கள் திரும்புவதற்கு வெகு நேரம் ஆகலாம் என்று சாக்கு சொல்லி அதை தவிர்த்து இருந்தாள். இரவு உணவை ஒரு KFC ரெஸ்டாரண்டில் முடித்து சாந்தியின் விருப்பத்துக்கு ஏற்ப அருகில் இருந்த பாஸ்கின் ராபின்ஸுக்கு சென்றனர். முகம் தோய்ந்து இருந்த மனோகரியைப் பார்த்து வந்தனா, "என்ன ஆண்டி டல்லா இருக்கீங்க?" மனோகரி, "எங்க ரெண்டு பேர் மொபைலையும் சார்ஜ் போட மறந்துட்டோம். இப்ப டெட்டா இருக்கு. சக்தி எப்படியும் கூப்பிடுவான். அதான் யோசிச்சுட்டு இருக்கேன்" அப்பொழுதுதான் வந்தனாவும் தன் மொபைலை சார்ஜ் செய்யாமல் விட்டு இருந்ததை எண்ணி அதை எடுத்துப் பார்க்க அதுவும் உயிரிழந்து இருந்தது. மூவர் மொபைலிலும் பதிலில்லாமல் மஞ்சுநாத் ராத்தோடின் வீட்டில் இருக்கும் லான்ட்-லைனில் சக்தி அழைத்தான். எடுத்துப் பேசிய மஞ்சுநாத் ராத்தோட் சக்தி தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டு சகஜமாக பேசியதில் அவர் மனதுக்குள் அவனைப் பற்றி ஒரு நல்ல அபிப்பராயம் உருவானது. அதனுடன், சக்தி வந்தனாவைப் பற்றி பேசுகையில் அவன் பேச்சில் இருந்து அவனுக்கு அவள் மேல் இருப்பது நட்புக்கும் பல படிகள் மேல் என்பதை உணர்ந்தார். இதை ப்ரொஃபெஸ்ஸர் மனோகரி நிச்சயம் உணர்ந்து இருக்க வேண்டும். இருப்பினும் தன் முன்னே மனோகரி வந்தனாவை எதுவும் கேட்காமல் இருந்ததை எண்ணி துணுக்குற்றார்.
ஒரு வேளை நம் குடும்பத்தை எடை போட இந்த சுற்றுலாப் பயணத்தை ப்ரொஃபெஸ்ஸர் மனோகரி பயன் படுத்துகிறாரோ என்ற ஒரு ராணுவ உயர் அதிகாரிக்கான சந்தேகமும் அவர் மனதில் வந்தது. எப்படி இருப்பினும் வந்தனாவுக்கு சக்தி ஏற்றவனா என்பதை முதலில் நன்கு கணிக்க வேண்டும் என்று கருதினார். மூன்று குடும்பத்துக்கும் ஒரே மகளை தம்பி வீருவின் ஒரே வாரிசை ஒரு தமிழனுக்கு கொடுப்பதில் பிற்காலத்தில் என்ன பிரச்சனைகள் வரக் கூடும் என்றும் கணக்கிட்டார். ஆனால் அந்த கடைசி விஷயத்தில் தன்னையும் வீருவையும் விட யோகியும் மனீஷும் முற்போக்காக சிந்திப்பவர்கள் என்று அறிந்து யோகேஷ்வரை தொலைபேசியில் அழைத்து தன் மனதுக்குப் பட்டவைகளை பகிர்ந்து கொண்டார். சக்தியைப் பற்றிய முழு விவரமும் அறிந்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். யோகேஷ்வர் அடுத்த இரண்டு நாட்களுக்குள் சக்தியைப் பற்றியும் அவன் குடும்பத்தைப் பற்றியும் எல்லா விவரங்களுடன் அழைப்பதாக கூறினார்.