Tuesday, May 5, 2015

அக்னி சாட்சி - அத்தியாயம் - 24

Thursday, 20 February 2010 - வியாழன், ஃபிப்ரவரி 20, 2010

காலை பத்து மணியளவில் ...

P.K.ரெட்டியின் வீட்டுக்கு எதிர் சாலையோரத்தில் ..

சிவா, "சாரி ஆனந்த். லேட் ஆயிடுச்சா?"

ஆனந்த், "நோ நோ! நீங்க சரியான நேரத்துக்குத்தான் வந்து இருக்கீங்க. நீங்க சொன்ன அட்ரெஸ்ஸை தேடி கண்டுபிடிக்க நேரமாகும்ன்னு நான் கொஞ்சம் சீக்கரம் வந்தேன்"

சிவா, "உங்களுக்குத் தேவையான விவரங்கள் என்ன என்னன்னு குறிச்சுட்டு வந்து இருக்கீங்களா?"

ஆனந்த், "ஓ யெஸ்! முதல்ல செல்வி விஷயத்தில் அவங்க என்ன செஞ்சு இருக்காங்க. என்ன ஆதாரங்கள் அவங்ககிட்டே இருக்குன்னு பார்ப்போம். அதுக்குப் பிறகு எனக்குத் தேவையான விவரங்களை கேட்கறேன்"


சிவா, "அனேகமா அவன் அப்பா முன்னாடி செல்வி விஷயத்தில் என்ன நடந்ததுன்னு சொல்லுவானான்னு தெரியலை. அவரோட பர்மிஷனோட அவனை தனியா கூட்டிட்டுப் போய் பேச வேண்டி இருக்கும். அப்படி இருந்தா உங்களுக்குத் தேவையான விவரத்தை அவர்கிட்டே கேட்டு வாங்கிட்டு அவன் கூட பேசலாம்"

ஆனந்த், "ம்ம்ம் .. பார்க்கலாம். என்னதான் பையன் தப்பு செஞ்சு இருந்தாலும் மூணாவுது மனுஷங்ககிட்டே விட்டுக் கொடுக்க மாட்டாங்க. இல்லையா. அதான் எனக்கு கொஞ்சம் சந்தேகமா இருக்கு. எப்படி நிச்சயம் நமக்கு ஹெல்ப் பண்ணுவார்ன்னு நீங்க சொல்லறீங்க?"

சில கணங்கள் அமைதி காத்த சிவா பெருமூச்சுடன் தன் கதையைச் சொன்னான். பிறகு P.K.ரெட்டி தன் தாய்க்கு கொடுத்த வாக்கை சொன்னான்.

சிவாவின் கதையைக் கேட்டதும் ஆனந்துக்குக் கல்லூரியில் தன் உடன் படித்த ஜாஷ்வா எட்வர்ட்ஸ் நினைவுக்கு வந்தான் ...

ஆனந்த், "சிவா, இத்தனை எதிர்ப்பையும் மீறி நீங்க இந்த அளவுக்கு முன்னுக்கு வந்து இருக்கீங்க. I really admire you. உங்களுக்கு ஒரு ஃப்ரெண்டா இருக்க நான் ரொம்ப பெருமைப் படறேன்" என்றபடி சிவாவை தன் தோளோடு அணைத்தான்.

அவனது விகல்பமில்லாத பாராட்டு சிவாவை சில கணங்கள் நிலை குலைய வைத்தது.

கண்கள் பனிக்க சிவா, "வாங்க ஆனந்த் உள்ளே போகலாம்"

வீட்டுக்குள் நுழைந்ததும் சிவா சற்றும் எதிர்பாராத விதமாக P.K.ரெட்டியின் மனைவி சாரதா, "வா சிவா! அப்பா பூஜை ரூமில் இருக்கார். உக்காரு இப்போ வந்துடுவார்" என்றபடி ஆனந்தைப் பார்க்க ..

சில கணங்கள் தன் கண்களையும் காதையும் நம்பமுடியாமல் திணறிய சிவா, "இது என்னோட ஃப்ரெண்டு ... அன்னைக்கு செல்வியை இவர்தான் காப்பாத்தினார்"

சாரதா, "பிரபாகர் பண்ணினத்துக்கு முதல்ல நான் உன் கிட்டே மன்னிப்பு கேட்டுக்கறேன் சிவா. நான் தான் அவனை செல்லம் கொடுத்துக் கெடுத்துட்டேன்."

சிவா, "பிரபாகர் ஊர்ல இருந்து வந்தாச்சா? நீங்க ... எல்லாம் .. அவன் கூட பேசினீங்களா?"

சாரதா, "ம்ம்ம்.. நேத்துக் காலைல ஊர்ல இருந்து வந்தான். அப்பா ரொம்ப கோவத்தில் இருந்தார். அவர் அப்படி கோவப் பட்டு நாங்க யாரும் இதுவரைக்குப் பார்த்தது இல்லை. என் தம்பியையும் வரச் சொல்லி இருந்தார். எங்க எல்லார் முன்னாடி அவனை என்ன காரியம் செஞ்சேன்னு கேட்டார். பயந்து பயந்து நடந்தது எல்லாம் சொன்னான். அவன் செஞ்ச காரியம் எங்க எல்லாருக்கும் ரொம்ப அவமானமா இருக்குப்பா. வெளில தெரிஞ்சா உங்க அப்பாவுக்கு ரொம்ப அவமானம் சிவா"

முகம் இறுகிய சிவா, "அவரோட அவமானத்தை மட்டும் தான் பார்க்கறீங்க .. என் செல்வி உயிரையே விட்டுடுவேன்னு இருக்கா" அப்போது அந்த ஹாலுக்கு வந்த ரெட்டி, "தெரியும் சிவா, என் வருங்கால மருமகளுக்கு அந்த நிலைமை அவ மச்சினனால ஆயிடுச்சேன்னுதான் நான் அவமானப் படறேன்" என்றபடி அவனருகே அமர்ந்தவர் ஆனந்தைப் பார்த்து, "நீங்க ..."

ஆனந்த், "நான் சிவாவோட ஃப்ரெண்ட். ஆக்சுவலா செல்விக்கு ... அந்த சம்பவம் நடந்ததுக்கு அப்பறம்தான் ஃப்ரெண்ட் ஆனார்"

ரெட்டி தன் மனைவியைப் பார்த்து, "எங்கே உன் சீமந்தப் புத்திரன்? வர்றானா?"

சாரதா, "வரச் சொன்னேன்" என்றபடி சுவற்றோரம் தலை குனிந்து நின்றாள்

சற்று நேரத்தில் பிரபாகர் அங்கு வந்தான். ஆனந்தைப் பார்த்ததும் அவன் முகம் பேயறைந்தார் போல ஆனது.

பிரபாகர், "சாரி சிவா. அந்த நந்தகுமார்தான் ... " என்று தான் அந்தச் சம்பவத்துக்கு முதல் காரணம் இல்லை என்று தன்னை விடுவித்துக் கொள்ளப் பார்த்தான்.

ஆனந்த், "பட், நீங்க அவனை தடுக்கலை இல்லையா? தடுக்க வந்த என்னைத்தானே தடுக்கப் பாத்தீங்க?" என்றதும் பிரபாகர் தலை குனிந்து நின்றான்.

ரெட்டி, "சிவா, அவன் பண்ணினதுக்கு நான் உன்கிட்டே மன்னிப்புக் கேட்டுக்கறேன். அவனும் செல்விகிட்டே மன்னிப்புக் கேப்பான். இனி இந்த மாதிரி சமாசாரம் எதுக்கும் போக மாட்டேன்னு எங்க எல்லாருக்கும் சத்தியம் பண்ணிக் கொடுத்து இருக்கான்"


சிவா, "பிரபாகர், அன்னைக்கு நடந்ததை ஃபோட்டோ இல்லாங்காட்டி வீடியோ எடுத்தீங்களா?"

பிரபாகர், "அந்த ரூமில் இருந்த ஒரு கேமராவை மட்டும் ஆன் பண்ணி ரெக்கார்ட் பண்ணி இருந்தோம்"

சிவா, "அந்த வீடியோ இப்போ எங்கே இருக்கு?"

பிரபாகர், "ஆஃபீஸ்ல ஒரு ஸிஸ்டத்தில் இருக்கும் ஹார்ட் டிஸ்கில் ஸ்டோர் ஆகி இருக்கு"

சிவா, "நந்தகுமார்கிட்டே அந்த வீடியோ இருக்கா?"

பிரபாகர், "அவங்கிட்டே இருந்த காப்பி கர்ரப்ட் ஆகி இருக்காம். அதனால மறுபடி ஸிஸ்டத்தில் இருந்து எஸ்.டி கார்டில் காப்பி பண்ணிக்கப் போறதா சொன்னான். இன்னும் காப்பி பண்ணி இருக்க மாட்டான்"

சிவா, "எப்படியாவுது ஹெல்ப் பண்ணு பிரபாகர் ப்ளீஸ். இது என் வாழ்க்கைப் பிரச்சனை"

ரெட்டி, "சிவா, எதுக்கு இப்படி கெஞ்சிட்டு இருக்கே! ஹெல்ப் பண்ண வேண்டியது அவன் கடமை. செஞ்ச தப்புக்கு அதுக்கு மேலயும் செய்யணும்"

பிரபாகர், "நான் அந்த ஸிஸ்டத்தில் இருக்கறதை டிலீட் பண்ணிடறேன். அப்பறம் அவனால உன்னை மிறட்ட முடியாது"

சிவா, "எப்போ டிலீட் பண்ணப் போறே பிரபாகர்? அவன் ஆஸ்பத்திரில இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வர்றதுக்கு முன்னாடி பண்ண முடியுமா?"

பிரபாகர், "ஹாஸ்பிடலில் இருந்து அவன் டிஸ்சார்ஜ் ஆயாச்சு. கோலார்ல இருக்க அவங்க அக்கா வீட்டுக்குப் போயிருக்கான். ஸண்டே காலைலதான் வரப் போறான். நான் நாளைக்கு நைட்டு போய் டிலீட் பண்ணறேன்"

சிவா, "ஏன் பிரபாகர் இன்னைக்கு போக முடியாதா?"

பிரபாகர், "விக்ரம் ஷா ஆஃபீஸ்ல இருப்பார். பொதுவா வெள்ளிக் கிழமை நைட் ரொம்ப நேரம் வரைக்கும் எதாவுது கான் கால் இல்லைன்னா விடியோ கான்ஃபரென்ஸில் பேசிட்டு ஆஃபீஸ்ல இருப்பார். நாளைக்கு சாயங்காலத்துக்கு மேல யாரும் இருக்க மாட்டாங்க. எனக்கு ஸ்பெஷல் ஆக்ஸஸ் கார்ட் இருக்கு. நான் நிறைய தடவை சனிக் கிழமை நைட்டில் ஆஃபீஸ்ல தனியா வொர்க் பண்ணிட்டு இருந்து இருக்கேன். செக்யூரிட்டி யாரும் சந்தேகப் படமாட்டாங்க"

சிவா, "சரி"

ஆனந்த், "பிரபாகர், எனக்கு கொஞ்ச விவரங்கள் தெரிஞ்சாகணும்.
 அந்த ரூமில் எத்தனை கேமரா ஃபிக்ஸ் பண்ணி இருந்தது?"

பிரபாகர், "மொத்தம் ஆறு கேமரா"

ஆனந்த், "வெவ்வேற கேமராவில் இருந்து வெவ்வேற வீடியோ ரெக்கார்ட் ஆகுமா?"

பிரபாகர், "
எல்லாத்தையும் ஆன் செஞ்சா முதல்ல தனி தனி வீடியோவாத்தான் ரெக்கார்ட் ஆகும். அதுக்கு அப்பறம் எல்லா வீடியோவில் இருந்தும் தேவையான பகுதியை மிக்ஸ் பண்ண ஒரு ஸாஃப்ட் வேர் இருக்கு. அதுக்கு எல்லாம் டைம் இருக்காதுன்னு அன்னைக்கு நந்தகுமார் ஒரு கேமராவை மட்டும் ஆன் பண்ணச் சொன்னான்"

ஆனந்த், "ஸோ! கேமராவை ஆன் செஞ்சா 
அந்த ரூமில் நடக்கறது எல்லாம் வீடியோவில் ரெக்கார்ட் ஆயிடுமா?"

பிரபாகர், "இல்லை அந்த ஸிஸ்டத்தில் ஆபரேட் பண்ணினாத்தான் ரெக்கார்ட் ஆகும்"

ஆனந்த், "சோ! கான்ஃப்ரென்ஸ் ரூமில் எதாவுது மீட்டிங்க் நடந்தா அதை ரெக்கார்ட் பண்ணுவாங்களா?"

ரெட்டி, "தம்பி, எதை எதையோ எல்லாம் ரெக்கார்ட் பண்ணி வெச்சு இருக்காங்க" என்ற பிறகு பிரபாகரைப் பார்த்து, "சொல்லுடா ..." என்றார்

பிரபாகர், "அந்த கான்ஃபெரென்ஸ் ரூமில் என்னென்னவோ நடக்கும். ஃபாரின் கம்பெனி மேனேஜர்ஸ் வரும் போது அவங்களை விக்ரம் ஷா எங்கேயாவுது டின்னர் கூட்டிட்டுப் போவார். கூட விக்ரம் ஷாவோட வைஃப் அப்பறம் வேற யாராவுது பொம்பளைங்களும் போவாங்க. டின்னர் முடிச்சுட்டு அவங்களை இங்கே கூட்டிட்டு வருவார். அந்த பொம்பளைங்ககூட அந்த மேனேஜர்ஸ்ஸை ஜாலியா இருக்கச் சொல்லிட்டு வெளியே வந்துட்டு அங்கே நடக்கறதை ரெக்கார்ட் பண்ணச் சொல்லுவார்"

ஆனந்த், "அந்த வீடியோவெல்லாம் என்ன செய்வார்?"

ரெட்டி, "என்னப்பா தெரியாத மாதிரி கேக்கறே? அவங்களை மிறட்டறதுக்கு அது போதாதா? வேணுங்கற விலைக்கு ஆர்டர் வாங்கி இருப்பான்"

ஆனந்த், "அது எனக்குத் தெரியும் சார். அந்த ஸிஸ்டத்தில் ரெக்கார்ட் ஆன வீடியோவை அவர் என்ன செய்வார் ... அந்த ஸிஸ்டத்திலேயே இருக்குமா இல்லை வேற எங்கேயாவுது காப்பி பண்ணி வைப்பாரான்னு கேட்க வந்தேன். சரியா கேக்கலை"

பிரபாகர், "அந்த மாதிரி வீடியோவை எல்லாம் உடனே எம்.பெக் (MPEG) ஃபைலா மாத்தி இன்டர்நெட்டில் இருக்கும் ஒரு சர்வரில் காப்பி பண்ணுவேன். கூடவே அவர் லேப் டாப்பிலும் ஒரு காப்பி எடுத்து சேவ் பண்ணிப்பார். அதுக்கு அப்பறம் ஸிஸ்டத்தில் இருந்து டிலீட் பண்ணிடுவேன்"

ஆனந்த், "செல்வியை வெச்சு எடுத்த வீடியோவை அந்த இன்டர்நெட் சர்வரில் ஸ்டோர் பண்ணினீங்களா?"

பிரபாகர், "அன்னைக்கு அதுக்கெல்லாம் டைம் இல்லை ... நீங்க வந்துட்டீங்க ... நந்தகுமார் ஓடிட்டான். நான் மயக்கம் தெளிஞ்சு பாத்தப்போ அவனைக் காணோம். எங்கே நீங்க மறுபடி வந்துடுவீங்களோன்னு நான் வெளியே வந்துட்டேன்"

ரெட்டி, "மயக்கமா?"

ஆனந்த் சங்கோஜத்துடன் நெளிய சிவா, "அன்னைக்கு இவர் பிரபாகரை அடிச்சுப் போட்டுட்டு செல்வியை அவ வீட்டுக்குக் கூட்டிட்டு போய் விட்டார்"

ரெட்டி, "ம்ம்ம் .. பரவால்ல பார்க்க ஐ.டில வேலை செய்யறவன் மாதிரி இருக்கே. அந்த மாதிரி வேலையும் தெரியுமா?" என்று சிலாகித்தார்.

ஆனந்த், "சார், நான் அமெரிக்காவில் இருக்கேன். நான் கல்யாணம் பண்ணிக்கப் போற பொண்ணு விக்ரம் ஷாவோட கம்பெனியில் வேலை செய்யறா. எங்க ரெண்டு பேரையும் பாதிக்கற மாதிரி ஒரு வேலை விக்ரம் ஷா செஞ்சு இருக்கார். அமெரிக்காவில் இருக்கும் ஒரு கம்பெனியின் தகவல்களை இவர் திருடி வித்து இருக்கார். அந்த விஷயமா அங்கே போலீஸ் என் மேல சந்தேகப் படுது. இங்கே வந்து பாத்தா, அவர் பண்ணின கோல் மால் எல்லாம் நான் கல்யாணம் பண்ணிக்கப் போற பொண்ணை பினாமியா உபயோகிச்சு விக்ரம் ஷா ஆரம்பிச்ச கம்பெனி மூலம் பண்ணி இருக்கார். இதனால் அவ மேல கூடிய சீக்கரம் போலீஸ் ஆக்ஷன் எடுக்கப் போகுது. விக்ரம் ஷா தகவல் திருடறதுக்கு அந்த மேனேஜர்ஸ்ஸும் உடந்தையா இருந்து இருக்காங்க. அவர் எடுத்த வீடியோவைக் காட்டி மிறட்டி அவங்களை ஒத்துக்க வெச்சு இருக்கார். இந்த ஆதாரம் எனக்குக் கிடைச்சுதுன்னா நானும் என் ஃபியான்ஸேவும் போலீஸ் பிடியில் இருந்து தப்பிக்க முடியும்"

ரெட்டி, "தகவல் திருட்டுன்னா என்ன?"

மறுபடி ஆனந்த் சுதர்சனத்துக்குக் கொடுத்த விளக்கத்தைச் சொல்ல ரெட்டி, "இவன் இந்த மாதிரி வேலையெல்லாம் செய்வான்னு எனக்குத் தெரியாது"

ஆனந்த், "இன்னொரு விஷயம் சார். என்னோட ஃபியான்ஸே பேரில் தொடங்கிய கம்பெனி மூலம் அவர் ரியல் ஏஸ்டேட் வாங்கி வாங்கின விலையை விட குறைவான விலைக்கு வித்து இருக்கார். அந்த டீலில் யாருக்கு வித்தார் என்கிற விவரம் கிடைச்சா என் ஃபியான்ஸே போலீஸில் இருந்து தப்ப முடியும். அதுக்கு நீங்க உதவி செய்ய முடியுமா?"

ரெட்டி, "என்ன உதவி?"

ஆனந்த், "எப்படியும் அந்த டீலில் எப்படி யார்கிட்டே இருந்து எப்படி அவருக்கு கைமாறுச்சுங்கற விவரம் வேணும்"

ரெட்டி, "தம்பி, அவன் தில்லு முல்லு செஞ்சு இருக்கலாம். ஆனா இந்த பிஸினஸில் இன்னைக்கு ரியல் எஸ்டேட்டில் கோடிக்கணக்கில் இன்வெஸ்ட் பண்ணற ஒவ்வொருத்தனும் இந்த மாதிரி திருடனுகதான். என்னைப் பொறுத்த மட்டில் அவன் எந்த விதத்திலும் என்னை ஏமாத்தலை. அந்த விவரங்களை உனக்கு சேகரிச்சுக் கொடுத்தா என் தொழில் தர்மத்தை மீறற மாதிரி. வெளியில் தெரிஞ்சா என்னை நாளைக்கு தொழிலில் யாரும் மதிக்க மாட்டாங்க."

சிவா இறுகிய முகத்துடன் மனதுக்குள், 'பண்ணறது கட்டப் பஞ்சாயத்து இதுல தொழில் தர்மம் இன்னா மயிறு' என்று தன் தந்தையை கடிந்தபடி, "அப்பா இல்லாத பொண்ணு. இத்தனை நாளும் தம்பி தங்கச்சிங்களுக்கு சம்பாதிச்சுப் போட்டுட்டு இருந்தாங்க. இப்போதான் இவர் மூலம் அவங்களுக்கு விடிவு காலம் வந்து இருக்கு. இந்த சமயத்தில் போலீஸ் கேஸு அப்படின்னா அவங்க வாழ்க்கையே பாழாயிடும். அதுக்கு அப்பறம் என்னால இவர் மூஞ்சில முழிக்க முடியாது"

ரெட்டி, "ஏன் சிவா யாரோகிட்டே பேசற மாதிரி பேசறே? சின்ன வயசில கூப்பிட்ட மாதிரி வாய் நிறைய அப்பான்னு சொல்ல மாட்டே. நான் செஞ்ச பாவம். போவட்டும் விடு. இப்போ இன்னா உன் ஃப்ரெண்டுக்கு தேவையான விவரம் விசாரிச்சுக் கொடுக்கணும் அவ்வளவுதானே?" என்றவர் ஆனந்தை நோக்கி, "தம்பி அந்த டீலை நான் முடிச்சுக் கொடுத்தேன். அந்த இடத்தை அவர்கிட்டே இருந்து நான் வாங்கலை. வாங்கின பார்ட்டிகிட்டே இருந்து நீ கேட்ட விவரங்களை வாங்கிக் கொடுக்கறேன். ஆனா நாளைக்கு விசாரணைன்னு வந்தா அந்தப் பார்ட்டி கையை கழுவிடுவான். இப்போவே சொல்லிடறேன்." என்றவர் சிவாவைப் பார்த்து, "சிவா, தம்பி கேட்ட தகவல் எல்லாம் விசாரிச்சு வைக்கறேன். அம்மா, செல்வி எல்லாத்தையும் கூட்டிட்டு ஞாயித்துக் கிழமை மத்தியானம் சாப்பிடவா. பிரபாகர் ஊருக்குப் போறதுக்கு முன்னாடி எல்லாருமா உக்காந்து சாப்பிடலாம். சாப்பிட்டுட்டு போவச்சே மறக்காம அந்த டாக்யுமெண்ட்ஸ் எல்லாத்தையும் வாங்கிட்டுப் போ"

ஆனந்த், "என்னென்ன டாக்யுமென்ட்ஸ் கிடைக்கும்?"

ரெட்டி, "அந்த டீலோட ஃபுல் டாக்யுமெண்ட்ஸ் எல்லாத்தோட காப்பியும் இருக்கும். கருப்பு, வெள்ளை எல்லா ட்ரான்ஸாக்ஷனுக்கும். போதுமா?"

ஆனந்த், "ரொம்ப தேங்க்ஸ் சார்"

ரெட்டி, "அந்த வீடியோ சமாசாரத்திலும் பிரபாகர் உங்களுக்குத் தேவையான உதவி எதுவா இருந்தாலும் செய்வான்" என்றவர் பிரபாகரை நோக்கி, "என்னடா? நான் சொன்னது காதில் விழுந்துதா?"

பிரபாகர், "சரிப்பா"


ஆனந்த்,"பிரபாகர், அந்த கம்பெனி மேனேஜர்ஸ்ஸை இருக்கும் வீடியோவின் காப்பி எனக்கு வேணும் அதுக்கு நீங்க உதவி செய்யணும்"

பிரபாகர், "கொஞ்சம் இருங்க" என்று தன் அறைக்குச் சென்று ஒரு பென் ட்ரைவுடன் திரும்பினான்



பிரபாகர், "இன்டர்நெட்டில் இருக்கும் சர்வரில் ஸ்டோர் பண்ணவும் அந்த சர்வரில் இருந்து எடுக்கவும் ஒரு வீ.பி.என் ஸாஃப்ட்வேர் (VPN Software) தேவை. அந்த சாஃப்ட்வேர் அந்த கான்ஃபெரென்ஸ் ரூமுக்கு முன்னாடி இருக்கும் ஸிஸ்டத்திலும் விக்ரம் ஷாவின் லாப் டாப்பிலும் மட்டும்தான் இருக்கு. அந்த ஸிஸ்டத்தை கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஃபார்மேட் (Format) பண்ண வேண்டி இருந்தது. அப்போ விக்ரம் ஷா அந்த சாஃப்ட்வேர் செட்-அப் ப்ரோக்ராம் (Software Set-Up) எனக்குக் கொடுத்தார். எதுக்கும் இருக்கட்டும்ன்னு அதை இந்த பென் ட்ரைவில் காப்பி செஞ்சு வெச்சேன். நீங்க இந்த சாஃப்ட்வேரை உங்க ஸிஸ்டத்தில் இன்ஸ்டால் (Install) செஞ்சு அதன் மூலம் இன்டர்நெட் சர்வரில் இருக்கும் வீடியோ எல்லாத்தையும் எடுக்கலாம். ஆனா ஆஃபீஸுக்கு உள்ளே இருந்து மட்டும்தான் அதை ஆக்ஸஸ் செய்ய முடியும். ஆஃபீஸுக்கு வெளியே விக்ரம் ஷா லாப் டாப் மூலம் மட்டும்தான் அதை ஆக்ஸஸ் செய்ய முடியும்"

ஆனந்த், "அந்த சாஃப்ட்வார் இருந்தா போதுமா? அந்த சாஃப்ட்வேர் லாகின் ஐடி பாஸ்வர்ட் எதுவும் கேட்காதா?"

பிரபாகர், "லாகின் ஐடியும் பாஸ்வர்டும் இந்த பென் ட்ரைவில் ஒரு டெக்ஸ்ட் ஃபைலில் ஸ்டோர் செஞ்சு வெச்சு இருக்கேன்"

ஆனந்த், "அந்த ஸிஸ்டத்தில் லாகின் ஐடி பாஸ்வர்ட்?"

பிரபாகர், "அந்த ஸிஸ்டத்திலும் ஃபிங்கர் ப்ரிண்ட் செக்யூரிட்டி இருக்கு. என்னைத் தவிற விக்ரம் ஷா மட்டும்தான் அந்த ஸிஸ்டத்தில் லாகின் செய்ய முடியும். அதனால தான் கான்ஃபிடெண்டா அந்த செல்வி வீடியோவை நந்தகுமாரால எடுக்க முடியாதுன்னு சொன்னேன். அவன் கோலாரில் இருந்து வர்றதுக்கு முன்னாடி நான் நாளைக்கு நைட் போய் டிலீட் பண்ணப் போறேன்"

ஆனந்த், "பிரபாகர், இன்னொரு விஷயம். விக்ரம் ஷாவுக்கு செல்வி விஷயம் தெரியுமா?"

பிரபாகர், "யார்ன்னு தெரிஞ்சு இருக்காது சார். ஆனா நந்தகுமார் இந்த மாதிரி வேலை செய்வான்னு அவருக்குத் தெரியும். என்னை வேலைக்கு எடுக்கறதுக்கு முன்னாடி வேற ஒருத்தனோட சேர்ந்து ரெண்டு மூணு பொண்ணுகளை அனுபவிச்சதா நந்தகுமார் என் கிட்டே சொல்லி இருக்கான். இன்னும் அதில் ஒரு பொண்ணு அவன் கூப்பிட்டப்ப எல்லாம் வரும்ன்னு சொன்னான்."

ஆனந்த், "இதுல எல்லாம் விக்ரம் ஷாவும் உடந்தையா?"

பிரபாகர், "இல்லை. ஆனா விக்ரம் ஷா அவன் என்ன செஞ்சாலும் கண்டுக்க மாட்டார். அது எனக்குத் தெரியும்"

ஆனந்த், "ஏன் கண்டுக்க மாட்டார்?"

பிரபாகர், "அவரோட ரகஸியம் எல்லாம் அவனுக்குத் தெரியுமாம். அவன் நினைச்சா விக்ரம் ஷாவை கம்பி எண்ண வைக்க முடியும்ன்னு சொன்னான். ஆனா அவரால அவனை ஒண்ணும் பண்ண முடியாதாம்"

ஆனந்த், "சரி பிரபாகர். ஆல் தி பெஸ்ட்"

சிவா, "பிரபாகர், இதை நீ செஞ்சேன்னு தெரிஞ்சா விக்ரம் ஷா உன் மேல சந்தேகப் படலாம் இல்லையா? கொஞ்ச நாள் நீ வேற எங்கேயாவுது போய் இருக்கறது நல்லதுன்னு தோணுது"

இடைமறித்த P.K.ரெட்டி தன் மனைவியை நோக்கி, "பாத்தியா சாரதா? இதுதான் பாசம்ங்கறது" என்ற பிறகு, "சிவா, அவனை இந்த மாதிரி வேலை எல்லாம் இனி செய்யக் கூடாதுன்னு சொல்லி இருக்கேன். இனிமேல் அவன் செய்ய மாட்டான்னு தெரிஞ்சாலே அவன் சந்தேகப் பட சான்ஸ் இருக்கு. அதனாலதான் சன்டே சாயங்காலம் இவன் என் மச்சினன் கூட நெல்லூருக்குப் போவப் போறான். கொஞ்ச நாள் அங்கே இருந்து எங்க பண்ணையைப் பாத்துக்க சொல்லி இருக்கேன்"

சிவா, "அது தான் சரி. பிரபாகர் நீ அந்த வேலையை முடிச்சதுக்கு அப்பறம் எனக்கு தகவல் கொடு. செல்விக்கு சொல்லணும்"

பிரபாகர், "நிச்சயம் சொல்லறேன் சிவா"

ஆனந்த், சிவா இருவரும் விடைபெற்றுச் சென்றனர்.

அவ்வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு ...

ஆனந்த், "சிவா, Prabakar seems genuine. நிச்சயமா அவன் சொன்ன விஷயத்தை செய்வானா?"

சிவா, "இவ்வளவு நடந்ததுக்கு அப்பறம் அவன் செய்யலைன்னா அவங்க அப்பா அவனை தொலைச்சுப்புடுவாரு. அது அவனுக்கு நல்லாவே தெரியும்"



அலுவலகத்தை அடைந்ததும் ப்ரீதி அவன் இருக்கைக்கு வந்தாள் ...

ப்ரீதி, "போன விஷயம் என்ன ஆச்சு?"

ஆனந்த், "அப்பறமா சொல்றேன். ஆஃபீஸ்ல எதுவும் பேச வேண்டாம். ஓ.கே?"

முகத்தில் ஏமாற்றம் ததும்ப உதட்டை சுழித்த ப்ரீதி, "சரி. அப்பறம் இன்னைக்கு டீம் டின்னருக்கு சுகுமார் ஏற்பாடு பண்ணி இருக்கான். நாம் வெளில போக முடியாது"

ஆனந்த், "சரி" என்றபடி மும்முறமாக தன் லாப்டாப்பைத் திறந்தான்.

ப்ரீதி, "என்னாச்சு? கட்டிப் போறவளோட பேசக் கூட பிடிக்கலையா?"

ஆனந்த், "ப்ரீதி, I need to do something urgently"

ப்ரீதி, "சரி. நான் டின்னருக்கு என் ஸ்கூட்டரில் வந்துட்டு என் பி.ஜிக்கு திரும்பிப் போகப் போறேன்" என்றபடி வேகமாக அவ்விடத்தை விட்டு அகன்றாள்.

ஆனந்த் பிரபாகர் கொடுத்த பென் ட்ரைவை தல் லாப் டாப்பில் செருகி அதில் இருந்த மென்பொருளை தன் லாப்டாப்பில் இன்ஸ்டால் செய்து அதனை இயக்கினான். பிரபாகர் கொடுத்த லாகின் ஐடி மற்றும் பாஸ்வர்ட் கொடுத்த பிறகு அந்த மென்பொருள் இயங்கியது. இணையத்தில் இருந்த சர்வரில் வெவ்வேறு வீடியோப் படங்கள் ஸேவ் செய்த்து வைக்கப் பட்டு இருந்தன. அத்தனையும் தன் லாப்டாப்பில் காப்பி செய்ய ஆணை கொடுத்தான். மொத்த வீடியோக்களையும் காப்பி செய்ய பல மணி நேரங்களுக்கும் மேல் தேவைப் பட்டது. பின்னணியில் காப்பி செய்து கொண்டு இருக்க தன் வேலையை தொடர்ந்தான்.

மதியம் சுகுமார் அவன் இருக்கைக்கு வந்து, "ஆனந்த், டீம் டின்னருக்கு ஏற்பாடு பண்ணி இருக்கேன். நீயும் வரணும்"

ஆனந்த், "எங்கே போறோம்?"

சுகுமார், "இங்கேதான் பக்கத்தில பார்பெக்யூ நேஷன்."

ஆனந்த், "ஓ. தட்ஸ் நைஸ். என்ன திடீர்ன்னு?"

சுகுமார், "முக்கால் வாசி மாட்யூல்ஸ் ஸக்ஸஸ்ஃபுல்லா முடிச்சதுக்கு"

ஆனந்த், "ஓ.கே. ஐ வில் பி தேர்"

மாலை வரை தொடந்து தன் வேலைகளை, முக்கியமாக, இன்னும் சில நாட்களில் தான் விடைபெற்று செல்ல வேண்டி இருப்பதால் தான் செய்து கொண்டு இருக்கும் பணிகளில் மிச்சம் இருப்பதை முடிக்கத் தொடங்கினான். மதிய உணவு நேரத்தில் ப்ரீதியின் இருக்கைக்குச் செல்ல அங்கு ப்ரீதி இல்லை. அருகில் இருந்தவரிடம் கேட்க அவள் தன் குழுவில் இருப்பவளுடன் கேஃபட்டேரியாவுக்கு சென்று இருப்பதை அறிந்தான். கேஃபட்டேரியாவை அடைந்த போது சாப்பிட்டு முடித்து இருந்த ப்ரீதி அவனை முறைத்த படி எதிரில் வந்தாள். ஆனந்த் அவளை குறும்புடன் பார்த்த படி சாப்பிடச் சென்றான். ப்ரீதி திரும்பி அவனைப் பார்த்து முகத்தை சுழித்து பழிப்புக் காட்டிய வெளியேறினாள்.

மாலை ஆறு மணி அளவில் ப்ரீதி தன் பி.ஜி இல்லத்தில் இருந்து வெளியில் வந்து கொண்டு இருந்தாள். ரெமியும் அவளுடன் இருந்தாள். வாசலில் ஆனந்த் நின்று கொண்டு இருந்தான்.

சால்மன் பிங்க் வண்ண மைசூர் சில்க் புடவையை லோ ஹிப்பாக அழகாக உடுத்தி இருந்தாள். அவள் உடுத்தி இருந்த விதம் அவள் உடலமைப்பையும் அங்க வடிவங்களையும் அழகாகப் பறைசாற்றியது. இரண்டு நாட்களுக்குத் தேவையான ஆடைகளை ஒரு டஃப்ஃபெல் பேக்கில் (duffel bag) போட்டு உடன் எடுத்து வந்து இருந்தாள். சில கணங்கள் அவள் அழகில் சொக்கிப் போய் பார்த்துக் கொண்டு இருந்த ஆனந்த் அருகில் வந்து அவனை முறைத்த தன் வருங்கால மனைவியைப் பார்த்து ..

ஆனந்த், "ஹே ப்ரீதி ...My God!"

ரெமி, "என்ன ஆனந்த். நான் ஒருத்தியும் இங்கே இருக்கறது உங்க கண்ணுக்குத் தெரியலையா?"

ஆனந்த், "ஹாய் ரெமி" என்ற மறுகணம் ப்ரீதியை நோக்கி, "ப்ரீதி, You are killing me baby"

ரெமி, "என்னடி நான் என்ன சொன்னேன்? ஆனந்த், இது முழுக்க என் பிரபரேஷன். ரெண்டு வாரமா நான்தான் அவளுக்கு காஸ்ட்யூமர் கம் மேக்கப் வுமன். உங்க அப்ரிஸியேஷனில் கொஞ்சம் எனக்கும் கொடுங்க"

ஆனந்த், "ரெமி, ஃபிலிப் உன்னை துபாய்க்கு கூட்டிட்டு போறானா? பேசாம நீ அவனைக் கூட்டிட்டு யூ.எஸ் வந்துடேன். வருங்காலத்தில் எனக்கு உதவியா இருக்கும். I tell you ... you have done a wonderful job on my woman"

ப்ரீதி, "ம்ம்ம் .. உன் appreciation ஒண்ணும் வேணாம். Neither am I your woman. வழியை விடு நான் டீம் டின்னருக்குப் போகணும்"

ஆனந்த், "நானும் அங்கே தான் போயிட்டு இருக்கேன். வா போலாம்"

ப்ரீதி, "ஒண்ணும் வேண்டாம். நீ உன் ஸ்கார்ப்பியோல வா நான் என் ஸ்கூட்டர்ல வர்றேன். டின்னர் முடிஞ்சதும் திரும்பி பி.ஜிக்கு திரும்ப வரப் போறேன்"

சட்டென ஆனந்த் அவள் முன்னர் மண்டியிட்டு "அம்மா தாயே. காலைல இருந்து உன்னோட பேசாம இருந்ததுக்கு மன்னிச்சுக்கம்மா" என்று கேஞ்ச தோழிகள் இருவரும் சிரித்தனர்

ப்ரீதி, "பொழைச்சுப் போ. இந்த தரம் போனாப் போறதுன்னு விடறேன். இனிமேல் ஆத்துக்காரிக்கு மரியாதை கொடுக்க கத்துக்கோ"

எழுந்து நின்று அவள் இடையை வளைத்த ஆனந்த், "சரிங்க மேடம். மாமியாருக்கு ஏத்த மருமக .. ம்ம்ம் .. போலாம் வா"

ப்ரீதி, "Bye ரெமி" என்றபடி அவனுடன் காருக்கு வந்தாள்.

பின் இருக்கையில் அவள் கையில் வைத்து இருந்த பையை வைத்து விட்டு அவனுக்கு அருகே அமர்ந்தவளிடம் ஆனந்த் குறும்புச் சிரிப்புடன், "மேடம் டின்னர் முடிஞ்சதும் பி.ஜிக்கு போறீங்களா?"



அவன் பையைப் பார்த்து விட்டான் என்பதை உணர்ந்த ப்ரீதி நாணப் புன்னகையுடன், "ஆமாம்"

ஆனந்த், "அப்பறம் இது எதுக்கு?"

ப்ரீதி, "எதுக்கோ. நோக்கு என்னாச்சு?"

ஆனந்த் அவளை இழுத்து முத்தமிட, ப்ரீதி, "ஐய்யோ. என்னது இது ரோட்ல. பாரு ரெமி அங்கே நின்னுண்டு பார்த்துண்டு இருக்கா. நேக்கு வெக்கம் பிடுங்கி திங்கறது" என்றபடி முகம் சிவந்தாள்.

ஆனந்த், "அவளுக்குத் தெரியாதா"

ப்ரீதி, "என்ன?"

ஆனந்த், "போன வீக் எண்ட் நடந்தது எல்லாம்"

ப்ரீதி, "நோண்டி நோண்டி கேட்டு எல்லாத்தையும் தெரிஞ்சுண்டா" என்ற படி புன்னகைத்தாள்.

ஆனந்த், "எல்லாத்தையும்ன்னா?"

ப்ரீதி, "ஐய்யோ, நீ அவளுக்கு மேல! எல்லாத்தையும்ன்னா எல்லாத்தையும். காரை எடு"

ஆனந்த், "என்ன மேடம் இன்னைக்கு புடவைல?"

ப்ரீதி, "அன்னைக்கு என்னை புடவையில் பார்த்துட்டு யாரோ ரொம்ப வழிஞ்சா. சரி, போனா போறது. பாவமேன்னு புடவைல வந்தேன்"

ஆனந்த் பதில் சொல்லாமல் ஸ்டியரிங்க் வீலில் கையை ஊன்றி முகவாயை ஆள்காட்டி விரலால் தட்டிய படி யோசித்துக் கொண்டு இருந்தான்.

ப்ரீதி, "Penny for the thoughts! என்ன பெரிய யோசனை திடீர்ன்னு"

ஆனந்த், "வீக் எண்டைப் பத்தி யோசிச்சுட்டு இருந்தேன்"

ப்ரீதி, "போன வீக் எண்டை ரிவ்யூ பண்ணிண்டு இருக்கியாக்கும்"

ஆனந்த், "ம்ம்ஹூம் ... நான் இன்னைக்கு நைட்டைப் பத்தி ப்ளான் பண்ணிண்டு இருந்தேன்"

ப்ரீதி, "சீ! போதும் ப்ளான் பண்ணினது. வண்டியை எடு"



No comments:

Post a Comment