Friday, January 29, 2016

தீர்க்க சுமங்கலி மான்சி - அத்தியாயம் - 17

பள்ளிக்கூட திண்ணைக்கு வந்து காமாட்சிப் பாட்டி குழந்தையை வைத்துக்கொள்ள மான்சி அடுப்பு மூட்டினாள்... " கண்ணு காசு இருந்தா குடும்மா ஏதாவது காய்கறி வாங்கிட்டு வர்றேன்... மூனு வேளையும் கஞ்சியே குடிச்சா ரத்தம் செத்துப் போய் வேலை வெட்டி செய்ய முடியாது" என்று பாட்டி சொல்ல...

மான்சிக்கும் பாட்டி சொல்வது சரியென்றுதான் பட்டது.. உடலில் உரமிருந்தால் தான் உழைக்க முடியும் .... காய்கறி வாங்கிவர காசு கொடுத்தனுப்பினாள்

சமையலை முடித்தவள் ... பக்கத்தில் நெருப்பு உலையில் எஃகு உளிகளுக்கு கூர் அடித்துக்கொண்டிருந்த கல் உடைப்பவர்களிடம் சென்று.. " எனக்கு ஆயிரம் சக்கை கல்லு வேணும்... எவ்வளவு காசு ஆகும்?" என்று கேட்க....

அந்த குடியானவன் நிமிர்ந்து பார்த்து ஒரு கல்லு அஞ்சு ரூவா தாயி... ஆனா காண்ட்ராக்டருக்கு உடைக்க தான் எங்களுக்கு நேரம் சரியா இருக்கு... உனக்கு எங்கருந்து கல் ஒடைச்சு தரமுடியும் என்று சொல்ல.... அவருக்கு பக்கத்தில் இருந்த அவர் மனைவி அவர்களின் மொழியில் ஏதோ சொல்ல... தலையசைத்தவர் மீண்டும் நிமிர்ந்து " பாவம் கைப்புள்ளையோட நிர்கதியா நிக்கிது... நாமலும் ரெண்டு பொண்ணு வச்சிருக்கோம் ... அதுகளுக்கு புண்ணியமா இருக்கும்....கல்லு ஒடச்சு குடுனு என் பொஞ்சாதி சொல்லுதும்மா... இன்னும் ரெண்டு நாள்ல கல்லை கொண்டு வந்து இறக்குறோம் .. நீ கல்லுக்கு நாலு ரூவா குடு தாயி போதும்" என்று சொல்ல

இது போன்ற நல்லவர்களால் தான் பூமி பந்து இன்னும் தனது சுழற்சியை நிறுத்தாமல் இருக்கிறது என்று எண்ணிய மான்சி கையெடுத்துக் கும்பிட்டுவிட்டு முந்தானையில் இருந்த பணத்தில் நாலாயிரம் எடுத்து அந்த பெண்ணிடம் கொடுத்தாள் ....

அன்று இரவு உறங்கும் போது அவளின் காவல் தெய்வம் பெட்சீட்டால் முக்காடு போட்டுக்கொண்டு அங்கே வந்து ...அந்த நீளமான திண்ணையின் மறுபுறம் வந்து யாருமறியாமல் படுத்துக்கொண்டது.... சத்யனுக்கு பயம்... அந்த கிராமத்தில் நல்லவர்கள் நாலு பேர் இருந்தால் ஊர் பெயரை கெடுக்கவென்று ஊதாரிகள் எட்டு பேர் இருந்தார்கள்... அவர்களின் விஷமத்திலிருந்து மான்சியை காக்க வேண்டுமே என்ற பயம்... கழனிக்குப் போய் படுத்துக் கொள்வதாக சொல்லிவிட்டு நன்றாக இருட்டியதும் இங்கே வந்து படுத்துக் கொண்டான்....

நடு இரவில் குழந்தை அழுததும் மான்சி எழுந்து அமர்ந்து குழந்தைக்குப் பால் கொடுக்க ... இவனும் எழுந்து கொண்டான் ... பெட்சீட்டால் மூடிக்கொண்டு சுற்றிலும் பார்வையை ஓடவிட்டான்.... அவன் நினைத்தது போல் எதுவுமில்லை.... ஒட்டர் இன மக்களின் கூர் தீட்டிய எஃகு உளிகளுக்குப் பயந்து யாரும் அந்த பக்கமே வரவில்லை.....

இரண்டாம் நாள் அதிகாலையே மான்சி அறியா வண்ணம் எழுந்து கழனிக்குப் போய் விட்டான் சத்யன்...... மான்சி சமையல் முடித்து சாப்பாட்டை எடுத்துக்கொண்டு கடப்பாரை இன்னும் மற்றப் பொருட்களை தலையில் வைத்துக் கொண்டு குழந்தையை இடுப்பில் சுமந்தபடி தனது மனைக்கு வந்தாள்...

நேற்று போலவே குழந்தையை தொட்டில் கட்டிப் போட்டுவிட்டு..... களத்தில் இறங்கினாள்... கடப்பாரையை தோளில் சாய்த்து கொண்டு மலைமேல் இருந்த கன்னிமார் தெய்வத்தைப் பார்த்து கும்பிட்டுக் கொண்டாள்... சனிமூலைக்கு வந்து முந்தானையில் இருந்த காலனா கர்பூரத்தை எடுத்து தரையில் வைத்து தீப்பொட்டியை உரசிப் பற்ற வைத்து கர்ப்பூரத்தை ஏற்றினாள்.. கர்ப்பூர தீபத்தை தொட்டு கண்களில் ஒற்றிக்கொண்டு கடப்பாரையை தலைக்குமேல் உயர்த்தி அதே வேகத்தில் தரையில் குத்தி தோண்ட ஆரம்பித்தாள்...

அவளின் உறுதியும் .. உழைப்பின் வேகமும் சேர்ந்து நம்பிக்கையை விதைக்க ,, மண் உமியைப் போல பொது பொதுவென வந்தது... சிறிது நோண்டுவதும் பிறகு அந்த மண்ணை அள்ளி பக்கத்தில் போடுவதுமாக அவளே இரண்டு வேலையும் செய்ததால் நேரம் போனதே தவிர பள்ளம் ஆழமாகவில்லை....

மதியத்துக்கெல்லாம் சோர்ந்து போனாள் மான்சி.... எழுந்து வந்து சோற்றை பிசைந்து அள்ளி விழுங்கும் போது கண்ணீரையும் சேர்த்து விழுங்கினாள்.. சாப்பிட்டு முடித்து குழந்தையைத் தூக்கி மடியில் கிடத்தி பால் கொடுக்க ஆரம்பித்தவளின் முன்னால் மான்சியின் அப்பாவும் அம்மாவும் நின்றனர்...

என்ன? என்பதுபோல் மான்சி நிமிர்ந்துப் பார்க்க.... " இதெல்லாம் என்னத்துக்குடி? உன் அண்ணிகாரி புத்தி தெரிஞ்சதுதான் .. ஒரு வார்த்தை மன்னிப்பு கேட்டுட்டு வீட்டுக்கு வா மான்சி" என்று அவள் அம்மா அழைக்க....

அவர்களை ஏளனமாகப் பார்த்த மான்சி " உன் மக மன்னிப்பு கேட்பா... ஆனா நான் கோபாலுக்குப் பொண்டாட்டி.... கோபால் பொஞ்சாதி யார்ட்டயும் மன்னிப்பு கேட்க மாட்டா.... கையாலாக உன் புள்ளைய கட்டிகிட்ட அவளுக்கே அவ்வளவு வீராப்புன்னா.... நல்லவனுக்கு முந்தி விரிச்சு சிங்கக்குட்டி மாதிரி புள்ளையப் பெத்த எனக்கு எம்புட்டு இருக்கும்?.... இனி செத்தாலும் அந்த வீட்டு வாசப்படி மிதிக்க மாட்டேன்... நீங்கப் போய் சேருங்க...இல்லேன்னா நாளைக்கு நீங்க செத்தா கொள்ளி கூட போடமாட்டேன்னு சொல்லிடுவான் உங்கப் புள்ளை" என்று நக்கலாக மொழிந்தாள் மான்சி....

அவளை பெற்றவர்கள் எவ்வளவோ எடுத்து சொல்லியும் மான்சி சமாதானம் ஆகவில்லை என்றதும் விதியை நொந்தபடி வீட்டுக்கு கிளம்பினார்கள் மான்சியைப் பெற்றவர்கள்.....

அவர்கள் போனதும் குழந்தையை தொட்டிலில் போட்டு உறங்க வைத்துவிட்டு பள்ளத்தில் இறங்கி நெற்றி வியர்வையை வழித்து எரிந்துவிட்டு வீம்புடன் மீண்டும் தோண்ட ஆரம்பித்தாள்.....

மான்சியின் நிலையை காண சகிக்காமல் அவள் பெற்றோரிடம் பேசி மான்சி பார்க்க அழைத்து வந்த சத்யனின் காதுகளில் மான்சி கூறிய ஒவ்வொரு வார்த்தைகளும் குயிலின் இசையாய் ஒலித்தது.... அவளின் உறுதியும் வீராப்பும் இவனுக்கும் உற்சாகத்தை கொடுத்தது... ஏன்தான் அவர்களை அழைத்து வந்தோமோ என்று தன்னையே நொந்து கொண்டான்...

ஆனாலும் உதவிக்கு இன்னொரு ஆள் இல்லாமல் கடக்கால் பள்ளம் எடுக்க முடியாது.... மீண்டும் ஏழுமலையைத் தேடி ஓடினான் சத்யன்.....

அன்று முழுவதும் 16க்கு 16 சுற்றில் ஒரு அடி ஆழமே தோண்ட முடிந்தது மான்சியால்..... மாலை ஆறு மணிக்கு பள்ளிக்கூட திண்ணைக்கு வந்தாள்... தனது கணக்குப்படி ஒரு வாரத்தில் குடிசை கட்ட முடியாது போலிருக்கே என்ற கவலை வந்தது... என்ன செய்யலாம்... JCP இயந்திரத்தை வைத்து எடுக்கலாம்... ஒரு மணி நேரத்தில் வேலை முடியும்... ஆனால் மணிக்கு இரண்டாயிரம் கேட்பான்.... வேறு வழியில்லை என்று தோன்றியது....

அன்று இரவு உறங்கும் முன்பு மான்சியை காண வந்த ஏழுமலையிடம் " தம்பி பக்கத்து ஊர்ல ஜேசிபி இருக்குள்ள... அதை நாளைக்கு எடுத்துட்டு வர சொல்லுபா... மலைப் பாறையா இருக்குறதால கடப்பாரைக்கு அசையலடா தம்பி" என்று மான்சி சொன்னதும் ...

ஏழுமலை வியப்பின் உச்சிக்கேப் போய்விட்டான்.... ஏனென்றால் சத்யனும் அதே யோசனையைத்தான் சொல்லி அனுப்பியிருந்தான்...

மூன்றாம்நாள் காலை வழக்கம் போல் விடிவதற்கு முன்பு குளத்தில் இறங்கி குளித்த மான்சிக்கு மறு பக்கம் மறைவாக அமர்ந்து காவலிருந்தான் சத்யன்

சரியாக எட்டு மணிக்கு ஜேசிபி இயந்திரம் எடுத்துவரப் பட்டு ஒரு மணி நேரத்தில் பள்ளம் எடுக்கப்பட்டது..... நான்கடி ஆழத்தில்.. இரண்டடி அகலத்தில் பள்ளம் எடுத்தனர்... மான்சி அவர்களுக்குப் பணத்தை கொடுத்தனுப்பிவிட்டு... மலையின் அடிவாரத்தில் உருண்டு வந்து விழுந்து கிடக்கும் கற்களை தலையில் சுமந்து வந்து பள்ளத்துல் போட்டு கடக்கால் துர்க்க ஆரம்பித்தாள்... இயந்திரம் தோண்டி கொட்டிய மண் பக்கத்தில் இருக்க... ஒரு வரிசை கல் ஒரு வரிசை மண் என்று பள்ளத்தில் போட்டு ஐந்து அடுக்குகளாக கற்களை அடுக்கி கடக்கால் வேலையை முடித்தாள்...

அன்று மாலை ஏழுமணி வரை கற்களை பொறுக்கி வந்து பள்ளத்தில் போட்டாள்... தோண்டிய பள்ளம் தரை மட்டத்துக்கு வந்தது... இயந்திரம் தோண்டிய மண் மொத்தமும் மீண்டும் பள்ளத்தில் அள்ளி கொட்டினாள்...

அன்று இரவு உறங்கக்கூட முடியாத அளவுக்கு உடல் வலித்தது.... புரண்டு புரண்டு படுத்து அவள் படும் துன்பத்தை கண்டு இதயம் வலிக்க கையாலாகாது தூரத்தில் படுத்திருந்தான் சத்யன்......

நான்காம்நாள் காலை மலையின் மறுபக்கம் இருந்த மழைநீர் குட்டையிலிருந்து குடத்தில் தண்ணீர் மொண்டு வந்து கடக்காலில் ஊற்றினாள்.... மதியத்தோடு அந்த வேலை முடிய... சுற்று சுவர் வைக்க மண் அள்ளி வரவேண்டும் ... காட்டின் ஒரு பகுதியில் செம்மண் கிடைக்கும்.... அந்த மண்ணால் கட்டிய வீடுகளுக்கு மேல் தளமே போடலாம் அந்தளவுக்கு உறுதி வாய்ந்த மண்...

மான்சி குழந்தையை மடியில் வைத்து இறுக்கமாக கட்டி அந்த துணியை தோளின் குறுக்காக தூளிபோல் போட்டுக்கொண்டாள்..... இரும்பு கூடையையும் மண்வெட்டியும் எடுத்து தலையில் வைத்துக்கொண்டு காட்டுக்குள் சென்று மண் அள்ளி வந்து கொட்டினாள்.... இரவு ஏழு மணி ஆகிவிட்டது.... நிலவின் வெளிச்சத்தை விட அவளது வைராக்கியம் வெளிச்சமாக இருந்தது...

கழனியிலிருந்து நேரே அங்கே வந்தவன்... சோர்ந்த நடையுடன் மான்சி போவதைப் பார்த்துவிட்டு தனது வீட்டுக்கு கிளம்பினான் சத்யன் ...

ஐந்தாம் நாள் காலை கருங்கற்கள் உடைத்து தயாராகிவிட .. அவர்களே மலையின் மீதிருந்து எடுத்து வந்து மான்சியின் மனையில் போட்டனர்... மான்சி இன்னும் கொஞ்சம் மண் அள்ளி வந்து கொட்டி விட்டு அதில் தண்ணீர் ஊற்றி காலால் மிதித்து சேறாக மண்ணை குழைத்தாள்....

அன்று கூலி வேலைக்குப் போகாமல் காமாட்சிப் பாட்டி குழந்தையைப் பார்த்துக்கொள்ள... மான்சி சதுரமாக இருந்த கற்களை அடுக்கி மண்ணால் பூசி சுவர் எழுப்ப ஆரம்பித்தாள்.... கல் உடைப்பவர்கள் உதவிக்கு வர ,, சரி அவர்களுக்கான கூலியை கொடுத்துவிடலாம் என்ற முடிவோடு கடகடவென சுவர் வைக்க ஆரம்பித்தாள் மான்சி... பொழுது சாய சாய மூன்றுபக்க சுவர் முடிந்தது காமாட்சிப்பாட்டியின் வீட்டிலிருந்து லாந்தர் விளக்கை எடுத்து வந்து நான்கு பக்க சுவரும் வைத்து முடிக்கும் போது இரவு மணி எட்டு ஆகிவிட்டது....

மான்சி வந்து சோறு செய்து சாப்பிட்டுப் படுக்கும் போது மணி பத்து ஆகிவிட்டது.... இவளை காக்கும் பொருப்பில் ஒரு ஜீவன் உண்ணவும் முடியாமல் உறங்கவும் முடியாமல் தவித்து விழித்திருப்பதை உணராமலேயே உறங்கினாள் மான்சி.....

நடு சாமத்தில் குழந்தையின் அழுகுரல் கூட மான்சியை அசைக்கவில்லை.... குழந்தை அழுததும் சத்யன் சட்டென்று எழுந்து அமர்ந்தான்... அவ்வளவு அலுப்பில் உறங்கினாள் மான்சி..... இயந்திரம் போல் தூக்கத்தில் குழந்தையை இழுத்து மார்போடு அணைத்து ரவிக்கையை உயர்த்தியதும் குழந்தை பால் குடிக்க ஆரம்பித்தது... குடித்து முடித்து மழலையில் பேசியபடி கைகாலை ஆட்டி விளையாடிய மகனை ரசிக்கக்கூட முடியாமல் உறங்கியவளை பரிதாபத்துடன் பார்த்தான் சத்யன் ....

ஏதோவெரு அசட்டுத் துணிச்சல் கைகொடுக்க மெல்ல எழுந்து பூனைநடையாக நடந்து மான்சியின் அருகே வந்து பார்த்தான்... நிலவின் வெளிச்சத்தில் குழந்தை அழகாக சிரித்தபடி விளையாடியது.... குழந்தையின் சிரிப்பைப் பார்த்ததும் கொஞ்ச நஞ்சம் இருந்த பயமும் போய்விட ... சத்யன் குனிந்து குழந்தையை தூக்கினான்... பால் கொடுத்தபடி உறங்கிப் போன மான்சியின் தனங்களை ஒரு தாயின் அன்போடு ... மனதில் கலங்கமின்றி அவள் போர்த்தியிருந்த பழம் புடவையால் இழுத்து மூடினான் .... குழந்தையை தோளில் போட்டுக்கொண்டு வெளிச்சமான இடத்துக்கு வந்தான்....

முதன்முறையாக மான்சியின் குழந்தையை தனது தோளில் சுமக்கும் பாக்கியத்தைத் தந்த கடவுளுக்கு நன்றி சொன்னது சத்யனின் மனம்.... குழந்தை அவன் முகம்பார்த்து சிரிக்க... சத்யனுக்கு அழுகையும் சிரிப்பும் கலந்து வந்தது... அவன் கையில் இருக்கும் குழந்தை,, மான்சியின் வயிற்றில் இருக்கும் போது கழனியில் படுத்துக்கொண்டு பலமுறை சத்யன் கனவில் வருடிக் கொடுத்த குழந்தை தானே? ஆசை தீர குழந்தையின் முகமெல்லாம் முத்தமிட்டான்...

சத்யனுக்கு சந்தோஷத்தில் கண்ணீர் மட்டுமே வந்தது.... " என்னாடா செல்லம் உன்னை என்னப் பேர் சொல்லி கூப்பிடுறது? உன் அம்மா இன்னும் உனக்கு பேர் வைக்காம சின்னு னு கூப்பிடுறாளே... என் தங்கப் பிள்ளைக்கு என்ன பேர் வைக்கிறதுடா செல்லம்" என்று குழந்தையின் காதில் பேசினான்...

சத்யனின் கொஞ்சலில் குழைந்து போனான் மான்சியின் மகன்... இதமாய் சத்யனின் தோளில் படுத்துக் கொண்டவனை மெல்ல வருடி உறங்க வைத்தான் சத்யன்.... குழந்தை நன்றாக உறங்கியதும் தூக்கி வந்து உறங்கும் மான்சியின் பக்கத்தில் படுக்க வைத்துவிட்டு துணியால் மூடினான்.... சற்று நேரம் வரை மான்சியின் முகத்தை வெகுநாள் கழித்து அருகில் பார்த்தான்.....

காதிலும் கழுத்திலும் எதுவுமில்லை... பிறை நெற்றியில் பொட்டில்லை.... கலைந்து போய் காற்றில் பறக்கும் செம்பட்டை படிந்த கூந்தல்.... வெயிலில் உழைத்ததின் அடையாளமாக மங்கிய அவளின் பொன்னிற மேனி.... இன்னும் ஒரு வாரம் உடுத்தினால் கந்தலாகிவிடக் கூடிய புடவை.... இத்தனைக்கும் மத்தியில் சிறிதும் குன்றாத மங்காத அழகுடன் அவன் தேவதை..... பார்க்கப் பார்க்க பிடிக்கக் கூடிய அழகு மான்சியின் அழகு.... அவள் பாதங்களையாவதுத் தொட்டுப் பார்க்கத் துடித்த விரல்களை அடக்கி கையை இழுத்துக்கொண்டு என்றுமில்லாத உற்சாகமான மனநிலையில் சத்யன் தனது இடத்துக்குப் போய்ப் படுத்துக்கொண்டான்....

ஆறாவது நாள் காலை,, வைத்த சுவர் நன்றாக காயவேண்டும் என்பதால் அன்று குடிசைக்கு தேவையான கொம்புகளும் பனை ஓலையும் வாங்குவதற்காக அலைந்தாள் மான்சி... பாட்டியும் அவளுடன் வந்திருந்தாள்... கூரை வீட்டை பிரித்து சிமிண்ட் வீடு கட்டிக்கொண்ட ஒருவரிடம் போய் பழைய கொம்புகளை விலை பேசி வாங்கினார்கள்.... அதேபோல் ஒரு பழைய கதவையும் வாங்கினாள்

ஆனால் ஓலை மட்டும் கிடைக்கவில்லை... ஓலை கிடைத்தாலும் மரத்திலிருந்து வெட்டி அதை படிய வைத்து அதன்பின் கூரை வேய்ந்து கொள்ள கிட்டத்தட்ட ஒரு மாத காலம் ஆகும்... அது சரியாக வராது என்று எண்ணிய மான்சிக்கு வேறு ஒரு யோசனை தோன்றியது...

அந்த மலை குன்றுகளில் ஏராளமாக கிடைக்கும் மஞ்சி எனும் பில் கொண்டுதான் முன்பெல்லாம் வீடு கட்டுவார்கள்.... ஆளுயரத்துக்கு வளரக்கூடிய இந்த புல் வகை நீரை ஊடுருவ விடாது... ஒரு முறை கட்டினால் கிட்டத்தட்ட பத்து வருடம் வரை அந்த கூரை பயன்படும்... காய்ந்து பழுப்பு நிறத்தில் இருக்கு மஞ்சிப் புல்லை பெரியப் பெரிய கத்தைகளாக கட்டி ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கி நார் கொண்டு கட்டி கூரை வேய்ந்து முகப்பில் தொங்கும் புல்களை அருவாள் கொண்டு சமமாக அறுத்துவிட்டால் அழகான குடிசை வீடு தயார்.... ஆதி கால முனிவர்களின் குடில்கள் கூட இப்படித்தான் உருவாக்கினார்கள்....

மான்சி குழந்தையை மார்போடு கட்டிக்கொண்டு அருவாளுடன் மலையேறினாள்..... விளைந்து பழுத்துக் கிடந்த மஞ்சி புல்களை கடகடவென அறுத்துத் தள்ளினாள்... பெரிய பாறையில் அள்ளிப் போட்டு பெரியப் பெரிய சுமைகளாக கட்டி பாறையின் கீழே வந்து சுமையை உருட்டி தலையில் தூக்கிக்கொண்டு கீழே எடுத்து வந்தாள்...

நான்காவது சுமைக்கு பாட்டி வந்து குழந்தையை வாங்கிக் கொள்ள ... மான்சிக்கு வேலை கொஞ்சம் சுலபமானது... புல் கட்டுகள் வேகமாக அடிவாரம் வந்து சேர்ந்தன..... சுமார் நாற்பது முறை மலையில் ஏறி இறங்கினாள் மான்சி .... சில நேரம் மான்சியின் கால்கள் பலமிலந்து நடுங்கின... அதற்கு ஓய்வு கொடுக்க மனமின்றி வீம்புடன் வேலை செய்தாள் ..... சிறு சிறு வெடிப்புகள் விழுந்து காலை தரையில் ஊன்றுவதற்கு கஷ்டமாக இருக்க... பழைய துணியை நனைத்து இரண்டு காலிலும் கட்டிக்கொண்டு மலையில் ஏறிச் சென்று சுமையைத் தூக்கி வந்தாள் மான்சி....

அன்று இரவு ஏழு மணிக்கு காமாட்சிப் பாட்டியை துணைக்கு அழைத்துக்கொண்டு பக்கத்து ஊர் சென்று மஞ்சி குடிசை கட்டும் ஆட்களுக்கு சொல்லிவிட்டு வந்தாள் மான்சி....

அன்றும் அலுப்புடன் உறங்கியவளின் பக்கத்தில் சிரித்து விளையாடிய குழந்தையை சத்தமின்றி வந்து தூக்கிக்கொண்டான் சத்யன்... மூக்கால் உரசி குழந்தையை அவன் கொஞ்ச... தனது இரு கையாளும் சத்யனின் தாடையைப் பற்றிக்கொண்டு சிரித்தது குழந்தை...

குழந்தையை தூங்க வைத்து மான்சியின் அருகில் படுக்க வைத்தவன் அப்போதுதான் மான்சியின் பாதங்களைப் பார்த்தான்.... வெடிப்புகளில் கசிந்த உதிரம் உறைந்து போயிருந்தது... கதறியது சத்யனின் மனம்... காதல் துணிச்சலைத் தர மான்சியின் பாதங்களை மெல்ல மெல்ல எடுத்து தனது கைகளில் ஏந்தி முகத்தை அந்த சொரசொரப்பான பாதத்தில் பதித்தான்.....

அவனையும் அறியாமல் வழிந்த கண்ணீர் அவள் பாதத்தில் இருந்த புண்களில் வழிந்தது.... பச்சை ரணத்தில் உப்புநீர் பட்டதும் .சுர்ரென்று எரிச்சல் எடுக்க... தூக்கக் கலக்கத்தில் தன் பாதங்களை வேகமாக இழுத்த மான்சி... கால்களை யாரோப் பற்றியிருப்பதை உணர்ந்து பட்டென்று கண்விழித்தாள்.....

அவள் கண்ணெதிரே கண்ணீருடன் சத்யன் ... இவளின் கால்களை தன் கைகளில் தாங்கியபடி.... வேறு சமயமாக இருந்திருந்தால் ஆவேசமாக கத்தி அவனை அறைந்திருப்பாள்... ஆனால் சத்யனின் கண்களில் வழிந்த கண்ணீர் அவளை தடுத்து நிறுத்த .. கால்களை மட்டும் உதறி விடுவித்துக் கொண்டாள்....

அவன் முகத்தைப் பார்க்கவும் கூசியவளாக தலை குனிந்து அவனை நோக்கி கையெடுத்துக் கும்பிட்டபடி வேண்டாம் என்பது போல் தலையை அசைக்க ... குனிந்திருந்தாலும் அந்த காட்சி அவளின் பார்வை வட்டத்துக்குள் தெளிவாக விழுந்தது... சத்யன் தனது நெஞ்சில் அறைந்து கொண்ட காட்சி தெளிவாக தெரிய சட்டென்று நிமிர்ந்தாள் மான்சி.... இவ்வளவு நேரம் அமைதியாக இருந்தவளின் விழிகள் இப்போது நெருப்புத் துண்டென ஜொலித்தன.....

" யாரோட பரிதாபமும் எனக்கு வேண்டாம்..... எல்லாரும் என்னை வேசி மாதிரினு தான் சொன்னாங்க... இந்த நேரத்துல என்கிட்ட வந்த நீ என்னைய உண்மையாவே வேசியா ஆக்கிடாத?.... நான் விதவை தானே தவிர வேசி இல்லை..... தயவுசெஞ்சு என்னை வாழ விடு" என்று மெல்லிய குரலில் ஆனால் அழுத்தமாக மான்சி கூற....

சத்யனுக்கு சவுக்கடி போல் வந்து விழுந்து இதயத்தை கிழித்தன மான்சியின் வார்த்தைகள்.... அவளையே சிறிது நேரம் பார்த்தவன் " என்னால உனக்கு எந்த கலங்கமும் வராது.... குழந்தை அழுதுச்சு தூக்கிட்டுப் போய் தூங்க வச்சு கொண்டு வந்து படுக்க வச்சேன்..." என்றவன் எழுந்து சென்று தனது இடத்தில் படுத்துக் கொள்ள...

மான்சி அதிர்ந்து போய் அமர்ந்திருந்தாள்.... அப்படின்னா இத்தனை நாளா அந்த இடத்துல போர்த்திகிட்டு படுத்திருந்தது இவன் தானா?..... குழந்தையை இன்னைக்கு மட்டும் தான் தூக்கி போய் தூங்க வச்சானா... இல்லை தினமுமா? இந்த இரு கேள்விகளும் பூதகரமாய் எழுந்து நின்று மான்சிப் பார்த்து ஏளனமாய் சிரிக்க.... மான்சி ரொம்பவும் இழிந்து போனது போல் உணர்ந்தாள்....

தீர்க்க சுமங்கலி மான்சி - அத்தியாயம் - 16

மறுநாள் காலை நான்கு மணிக்கே எழுந்து சாப்பாடு செய்து கொண்டிருந்தனர் கல் உடைக்கும் ஒட்டர் எனப்படும் பழங்குடி இன மக்கள் .... இரவெல்லாம் சிந்தனையின் பிடியில் சிக்கி தூக்கத்தை பழி கொடுத்த மான்சி அதிகாலை புதிய தெளிவுடன் எழுந்தாள்.... கீழே கிடந்த செங்கல் துண்டை எடுத்து தூளாக்கி பல் தேய்த்து பள்ளிக்கூட குழாயில் தண்ணீர் பிடித்து முகம் கை கால் கழுவினாள்...

குழந்தையை தூக்கி தோளில் போட்டுக்கொண்டு காமாட்சிப் பாட்டியின் வீட்டுக்குப் போய் திண்ணையில் கிடந்த இவளுடைய பாத்திரங்களில் இருந்து கஞ்சி வைக்க ஒரு பாத்திரமும் கஞ்சியை ஊற்றி எடுத்து செல்ல ஒரு தூக்குவாளியையும் எடுத்துக்கொண்டாள்... பாட்டி கண் விழித்துப் பார்த்து " என்னா கண்ணு?" என்று கேட்க...

" கஞ்சி காய்ச்ச ஏனம் எடுத்துட்டுப் போக வந்தேன் ஆயா" என்றாள் மான்சி ...

" அரிசி வச்சிருக்கியா கண்ணு?" என்று பாட்டி கேட்டதும் ..... " இல்ல ஆயா... யாராவது ரேஷன் அரிசி வித்தாங்கன்னா வாங்கி வச்சுக்கனும்... இப்ப கடையில தான் வாங்கனும் ஆயா... நேத்து வேலை செஞ்ச கூலி இருக்கு " என்றாள்

" இந்த மாசம் வாங்குன அரிசி என்கிட்ட அப்புடியேதான் இருக்கும்மா... வேனும்னா வாங்கிக்க" என்று காமாட்சிப் பாட்டி வழி சென்னதும்... மான்சிக்கு சற்று நிம்மதியாக இருந்தது... இல்லேன்னா காலை ஆறு மணிவரை காத்திருந்து கடைக்குப் போய் வாங்கிருக்கனும்...

பாட்டி வைத்திருந்த பத்து கிலோ ரேஷன் அரிசியை ஐம்பது ரூபாய் கொடுத்து வாங்கிய மான்சி அன்றைய தேவைக்கு மட்டும் கொஞ்சம் எடுத்துக்கொண்டு மீதியை மூட்டையாக கட்டி பாட்டி வீட்டு திண்ணையிலேயே வைத்து விட்டு மீண்டும் குழந்தையுடன் பள்ளிக் கூடத்துக்கு வந்தாள்...

பள்ளிக்கூடத்தின் பின்புறம் மூன்று கற்களை வைத்து பக்கத்தில் பொங்கிய பழங்குடி இனப் பெண்ணிடம் நெருப்பு வாங்கி அடுப்பு மூட்டினாள் .... சுற்றிலும் கிடந்த சருகுகளும் சுள்ளிகளையும் பொருக்கி வந்து அடுப்பில்ப் போட்டு கஞ்சி வைத்தாள்....

பழங்குடிப் பெண் உப்பு கொடுக்க அதை கஞ்சியில் போட்டு கலந்து பாதியை தூக்கில் ஊற்றி வைத்து விட்டு மீதியை பாத்திரத்தோடு அப்படியே குடித்தாள்... அவ்வளவு காலையில் பசியோடு பாத்திரத்தில் இருக்கும் கஞ்சியை மான்சி குடிப்பதை ஒரு ஜோடி விழிகள் கண்ணீருடன் கண்டது...

பள்ளிக்கூட காம்பவுண்ட் சுவரை ஒட்டி நின்று மான்சி சாப்பிடுவதை கசங்கிய இதயத்தோடு சத்யன் பார்த்துக் கொண்டிருந்தான்.... அதிகாலை டீ கடைக்குப் போனவனின் காதில் முதலில் விழுந்த செய்தியே மான்சி வீட்டிலிருந்து துரத்தப் பட்டு நடுத் தெருவில் கிடந்ததும்.. பிறகு அடைக்கலம் தேடி பள்ளிக்கூடம் சென்றதும் தான்... காசு கொடுத்து வாங்கிய டீ விஷம்போல் தெரிய குடிக்காமல் அப்படியே வைத்துவிட்டு பள்ளிக்கூடத்துக்கு வந்தவன் மறைவில் நின்று மான்சியைப் பார்த்தான்....

முதல்நாள் பட்டினியால் தான் இவ்வளவு காலையில் கஞ்சி குடிக்கிறாள் என்று சத்யனுக்குப் புரிய கண்கள் கசிந்தன... என் மான்சிக்கு மட்டும் ஏனிந்த நிலைமை? விடை தெரியா கேள்வியை கடவுளின் முன் வைத்துவிட்டு சுவற்றில் சாய்ந்து நின்றான் சத்யன்

மான்சிக்கு எந்த விதத்திலும் உதவ முடியாத தனது ஈன நிலையை எண்ணி இதயமும் சேர்ந்து கண்ணீர் விட்டது... இப்போது இருக்கும் நிலையில் அவளுக்கு உதவ நினைத்தால் நிச்சயம்,ஏற்கமாட்டாள் என்பதோடு அல்லாமல் இவன் முன்பு இழிந்து விட்டோமே என்று நொந்து போவாள் என்றும் சத்யனுக்குப் புரிந்தது....

ஆனாலும் எதாவது செய்யனும்... மான்சி இருக்க இடமாவது தேடிக் கொடுக்கனும்.... மலையில் கல் உடைக்க வந்த மக்கள் வேலை முடிந்து போய்விட்டால் பிறகு மான்சி தனியாக இங்கே இருக்க முடியாது.... அதற்குள் ஏதாவது மாற்று ஏற்பாடு செய்யவேண்டும்... ஆனால் நான் நெருங்கினாலே நெருப்பாகி விடுவாள்... என்ன செய்வது?

சத்யனின் மனதில் சட்டென்று ஏழுமலையின் ஞாபகம் தான் வந்தது ... அவன் மட்டும் தான் மான்சிடம் சகஜமாக பேசுவான்.... தூரத்து உறவில் மான்சிக்கு தம்பி முறை உள்ளவன்.... அது மட்டுமல்ல மான்சி சத்யன் இருவரின் கடந்த காலத்தைப் பற்றி ஓரளவுக்குத் தெரிந்த ஒரே நபர்... காய்சல் காலத்தில் இவர்களுடன் அவனும்தான் மாடுகள் மேய்க்க வருவான்... மவுனமாக இவர்கள் வந்தாலும் இவர்களின் மனது ஆயிரம் கதைகள் பேசிக்கொள்வதை யூகித்தவன் ஏழுமலை... டவுன் ஸ்வீட் ஸ்டாலுக்கு வேலைக்குப் போய் விட்டதால் இப்போதெல்லாம் அதிகமாகப் பார்க்க முடிவதில்லை....

சத்யன் அவசரமாக ஏழுமலையின் வீட்டை நோக்கி ஓடினான்.... ஏழுமலையின் அம்மா தெருவுக்கு சாணி தெளித்துக் கொண்டிருந்தாள்... சத்யனை கண்டதும் " என்னா மருமகனே இம்பூட்டு காலையிலயே வந்திருக்க? யார பாக்கனும்?" என்று கேட்க...

" சும்மா ஏழுமலைய பாக்கலாம்னு வந்தேன் அத்தை... இன்னும் தூங்குறானா?" என்றபடி குனிந்து வீட்டுக்குள் நுழைந்தவன் ஏழுமலை பல் தேய்ப்பதை பார்த்ததும் அவனை நெருங்கி ... "ஏழுமலை கொஞ்சம் பேசனும்டா வெளிய போகலாமா?" என்று மெல்லிய குரலில் கேட்டான்...

அவனை அவ்வளவு காலையில் எதிர்பார்க்காத ஏழுமலை " இரு மாமா இதோ வர்றேன்" என்று முகத்தை துடைத்துக் கொண்டு வந்தான்...

இருவரும் மலையின் அடிவாரத்தில் ஓரமாக நடந்தபடி " ஏழுமலை எனக்கு வேற வழி தெரியலை... இதைப் பத்தி யார்கிட்டயும் பேசவும் பயமாருக்கு... யாரும் மான்சியை தப்பா நினைச்சிட கூடாதேனு தான் உன்னைய தேடி வந்தேன்" என்று சத்யன் ஆரம்பிக்கும் போதே ...

"நடந்தது எனக்கும் தெரியும் மாமா.... நைட் பஸ்விட்டு இறங்குறப்பவே ரோட்ல பேசிகிட்டாங்க.... இப்ப அக்காவ பார்க்க போகலாம்னு தான் சீக்கிரமா எழுந்திரிச்சேன்" என்றான் ஏழுமலை...

நெஞ்சு வேதனையில் அடைக்க தலை குனிந்த சத்யன் " அன்னைக்கு நான் சுயநலமா யோசிச்சதால தான் இன்னைக்கு மான்சிக்கு இந்த நிலைமை.... எப்புடி வாழ வேண்டியவளுக்கு இன்னைக்கு வீதியில சோறு பொங்க வேண்டிய நிலை.... இப்பல்லாம் என்னையப் பாத்தாலே நெருப்பு மாதிரி ஆயிடுறா.... என்னால அவகிட்ட கூட நிக்க முடியலை ஏழுமலை... ஆனா பள்ளிக் கூடத்துல இருக்குறவங்க போய்ட்டா மான்சி அங்க தனியா இருக்க முடியாது... அதுக்குள்ள எங்கயாவது குடிசை கட்டிகிட்டு போயிடனும்... அவ நெனப்புல என்ன இருக்குனு தெரியலை... நீ போய் என்ன ஏதுனு விசாரி ஏழுமலை நான் போய் அவ அப்பனைப் பார்த்து பேசிப் பாக்குறேன்" என சத்யன் சொல்ல...

" சரி மாமா நான் போய் பேசுறேன்" என்று நகர்ந்தவனை " ஏழுமலை கொஞ்சம் இரு" என்று கூறி அருகில் வந்த சத்யன் .... " அஞ்சாறு வருஷத்துக்கு முன்னாடி பெரிய மலை அடிவாரத்துல எல்லாரும் புரம்போக்கு மனை மடக்குனாங்க.... அங்க மான்சியும் கூட ஒரு இடம் புடிச்சு கல்லு நட்டு வச்சிட்டு வந்தா.... எங்க ரெண்டு பேர் மனையும் பக்கத்து பக்கத்துலதான்.... இப்ப அங்க நாலஞ்சு பேர் வீடு கட்டி இருக்காங்க... மான்சியையும் அந்த இடத்துல குடிசை போட சொல்லு.... பணம் அவ கிட்ட இருக்காது.... நான் ஒரு பத்தாயிரம் தர்றேன் நீ உன் ஓனர் கிட்ட கடன் வாங்கினதா குடுத்து குடிசை கட்ட சொல்லு ஏழுமலை, நான்உன்னைப் பாத்து பேசினது அவளுக்குத் தெரிய கூடாது... நீயா யோசனை சொல்லு ஏழுமலை... மான்சி என்ன சொல்றானு கண்டுகிட்டு வா... நான் பஸ் ஸ்டாப்பு பக்கத்துல வாராபதில உட்கார்ந்திருக்கேன்" என்ற சத்யன் சோர்ந்த நடையுடன் செல்ல.... அவனையேப் பார்த்த ஏழுமலையின் கண்கள் கூட கலங்கியது... ரெண்டு பேரும் சேர்ந்திருந்தா இந்த மனுஷன் மான்சி அக்காவை உள்ளங்கையில வச்சு தாங்கிருப்பாரு... ஆனா ரெண்டு பேருமே குடும்பத்தை மட்டும் நெனைச்சதால இன்னைக்கு ஆளுக்கோரு திசையில நிக்கிறாங்களே? வேதனையுடன் மான்சித் தேடி சென்றான் ஏழுமலை...

கஞ்சி செய்த பாத்திரத்தை கழுவி வைத்து விட்டு மறைவாக திரும்பி குழந்தைக்கு பால் கொடுத்தக் கொண்டிருந்த மான்சி ஏழுமலை வருவதை பக்கவாட்டில் பார்த்து விட்டு முந்தானையை இழுத்து முழுவதுமாக மூடிக்கொண்டு " என்னா ஏழுமலை நான் இங்க இருக்குறேன்னு யாரு சென்னா?" என்று சிறு புன்னகையுடன் கேட்க...

திண்ணையில் ஏறி அமர்ந்த ஏழுமலை " ஆமா பெரிய சிதம்பர ரகசியம்... தெரியாமப் போறதுக்கு? அதான் ஊரே பேசி சிரிக்குதே உன் அண்ணன் வகுசிய,, மனுசனா அவன்லாம்? இந்த மாதிரி பொண்டாட்டிக்குப் பயந்தவனை நான் எங்கயுமே பாக்கலை?" என்ற ஏழுமலை வாய்க்கு வந்தபடி பன்னீரையும் மஞ்சுளாவையும் திட்டித் தீர்த்தான்...

குழந்தைக்கு பால் கொடுத்து முடித்த மான்சி " விடு ஏழுமலை... இத்தனை நாளா அவங்களுக்கு உழைச்சிப் போட்டேன்.. இனி என் புள்ளைய காப்பாத்த உழைக்கப் போறேன்... எங்காத்தாப்பனுக்கு தவமிருந்து பெத்த ஒத்தப் புள்ளைய விட்டுட்டு எனக்குப் பரிஞ்சி பேச பயம் ... நாளைக்கு அதுக செத்தா கொள்ளிப் போடப்போறது அவன் தான? பொட்டச்சி நானு ஒப்பாரி வைக்கிறதோட முடியப்போகுது... யார் யாரு எப்புடினு தெரிஞ்சுக்க ஆண்டவன் எனக்கு ஒரு சந்தர்ப்பம் குடுத்துருக்கான் அவ்வளவுதான் ஏழுமலை" என்று மான்சி இலகுவாக பேசினாள்

இரவு முழுவதும் பசியோடு கூடிய சிந்தனை வாழும் வேகத்தையும் வாழ்க்கையின் மிச்சத்தையும் அவளுக்குத் தெளிவுப் படுத்தியிருந்தது...

நிமிர்வுடன் பேசிய மான்சியை வியப்புடன் பார்த்த ஏழுமலை " சரிக்கா,, இங்கயே எத்தனை நாளைக்கு இருக்க முடியும்?.... உனக்குனு தங்க ஒரு இடம் வேனுமே அக்கா?" என்று மெதுவாக ஆரம்பிக்க...

" அதுக்குதான் சித்த முந்தி உன்னையப் பாக்க வரலாம்னு இருந்தேன் ஏழுமலை" என்று மான்சி கூறியதும் ..... ஏழுமலைக்கு திக்கென்றது.... நல்லவேளை வந்திருந்தா மாமாவையும் என்னையும் சேர்த்து பார்த்துட்டு திரும்பிருக்கும்,, என்று எண்ணியபடி " சொல்லுக்கா நான் என்ன செய்யனும்?" என்று கேட்டான்....

" ஏழுமலை பெரிய மலை அடிவாரத்துல நாமெல்லாம் இடம் மடக்குனமே? அங்க எனக்கும் ஒரு இடம் இருக்கு..... அந்த இடத்துல ஒரு குடிசைப் போட்டுகிட்டு அங்கப் போயிடலாம்னு இருக்கேன் ... அது விஷயமா தான் உன்னையப் பாக்க வந்தேன் ஏழுமலை" என்று மான்சி கூற ...

சத்யன் கூறிய அதே விஷயத்தை மான்சியும் கூற... இதுபோல் ஒத்த சிந்தனையுடைய இவங்க ரெண்டு பேரையும் ஏன் பிரிச்சி வச்ச ஆண்டவா? என்று கடவுளையே சபித்தான் ஏழுமலை...

" சரிக்கா நல்ல யோசனைதான்... அங்கயும் இப்ப நாலஞ்சு வீடுக வந்துருச்சு.... அந்த பிசாசு கூட இனி எப்பவுமே ஒரே வீட்டுல வாழ முடியாதுக்கா.. நீ ரெடி பண்ணு ... நான் என் ஓனர் கிட்ட கடனா கொஞ்சம் பணம் வாங்கித் தர்றேன் ... அதுல வீட்டைக் கட்டு... அப்புறமா கூலிக்கு செஞ்சு கடனை கொஞ்சம் கொஞ்சமா திருப்பி குடுத்துடு அக்கா" என்று சத்யன் சொல்லச் சொன்ன பொய்யை பக்குவமாக சொன்னான் ஏழுமலை...

அவனையே உற்றுப் பார்த்த மான்சி " ஏன் தம்பி அந்த அண்ணிகாரி ஏற்கனவே என்மேல இல்லாத பழி எல்லாம் சொல்லிருக்கா.... இப்ப உன் ஓனர்கிட்ட எனக்கு பணம் வாங்கி குடுத்தேன்னு வை... அவரையும் எனக்கு புருஷன் சொல்லுவா.... என்னால அந்த நல்ல மனுஷனுக்கு ஏன்டா கெட்ட பேரு ... யார்கிட்டயும் பத்து பைசா கையேந்த வேணாம் " என்றவள் தனது உழைப்பில் வாங்கி காதில் போட்டிருந்த தோடுகளை கழட்டினாள்... பிறகு கோபால் தன் மகனுக்கு வாங்கிப் போட்டிருந்த குழந்தையின் இடுப்பில் இருந்த வெள்ளிக் கொடியையும் கால் கொலுசையும் கழட்டினாள் ... எல்லாவற்றையும் சேர்த்து ஏழுமலையிடம் நீட்டி " என் தோடு கால் பவுன் ... வித்தா அஞ்சாயிரம் தேறும்... பிள்ளையோட கொடியும் கொலுசும் வித்தா அஞ்சாயிரம் தேறும்... குடிசை கட்ட அது பாத்தாதுதான்.. ஆனா கூலிக்கு ஆள் வைக்காம நானே ராவும் பகலும் கஷ்டப் பட்டா இந்த பணம் போதும் ... நீ இதையெல்லாம் வித்து பணமாக்கி.... பக்கத்து ஊர் சந்தையில ஒரு கடப்பாரையும். மம்டியும்.. மண் அள்ள ரெண்டு இரும்பு கூடையும் மட்டும் வாங்கிட்டு வந்து குடு.. குழந்தைய வச்சுகிட்டு என்னால அலைய முடியாது... நீ பஸ்க்கு சாப்பாட்டுக்கு இதுலருந்து காசு எடுத்துக்க ஏழுமலை" என்று மான்சி சொல்லி முடிக்க...

ஏழுமலைக்கு அழுகையை அடக்குவது கஷ்டமாக இருந்தது.... குடிசையாக இருந்தாலும் அதுக்கும் கடக்கால் தோண்டனும் ... தோண்டிய பள்ளத்தில் கருங்கற்களைப் போட்டு துர்க்கனும் ... அதெல்லாம் ஒரு பெண்ணால் முடியுமா? ...... முடியும் மான்சியால் முடியும்....

ஏழுமலை மான்சி கொடுத்தப் பொருட்களை வாங்கி பத்திரப் படுத்திக்கொண்டு .... " சரிக்கா நான் என் ஓனரை வச்சு முடிஞ்ச வரை அதிக தொகைக்கு வித்துட்டு பணத்தோட வர்றேன்" என்று கூறிவிட்டு சென்றான்...

வீட்டுக்குப் போய் குளித்து சாப்பிட்டு விட்டு வெளியே வந்தவன் சத்யன் சொன்ன இடத்துக்கு செல்ல.... கழனிக்கு கூட போகாமல் ஏழுமலைக்காக காத்திருந்தான் சத்யன் ... அவன் அருகில் சென்று அமர்ந்த ஏழுமலை மான்சியை பார்த்து நடந்தவற்றை எல்லாம் ஒன்று விடாமல் சொன்னான் ...

சத்யன் அமைதியாக இருந்தான்.... மான்சி கூறியதில் தவறேதும் இல்லை.... வெளியூரில் இருக்கும் ஏழுமலையின் ஓனருக்கே இந்த சொல் என்றால்? இங்கேயே இருக்கும் நான்தான் உதவினேன் என்று தெரிந்தால் மஞ்சுளா பேசுவதற்கு முன்பே மான்சி தன்னையே கூட அழித்துக் கொள்வாள் என்று தோன்றியது சத்யனுக்கு....

இயலாமை கொடுத்த நீண்ட பெருமூச்சுடன் எழுந்த சத்யன் " சரி ஏழுமலை நானும் வர்றேன்... எனக்குத் தெரிஞ்ச நகைக் கடைக்குப் போய் நல்ல விலைக்கு விக்குதானு பார்க்கலாம்" என்று கூற... இருவரும் பஸ்ஸில் ஏறினார்கள்....

டவுனில் நான்கைந்து கடைகள் அலைந்து மான்சி கொடுத்தப் பொருட்களை பனிரெண்டாயிரம் வரை விற்றான் சத்யன்... ஆனால் மான்சியின் தோடுகளை விற்றதை விட .... குழந்தைக்கு கோபால் முதல்முதலாக வாங்கிப் போட்ட பொருட்களை விற்க சத்யனுக்கு மனசே வரவில்லை....

ஏழுமலையின் எதிரில் விற்று பணத்தைக் கொடுத்து அனுப்பி விட்டு ... அவன் சென்றதும் அந்த கடைக்கு ஓடி குழந்தையின் பொருட்களுக்குப் பதிலாக மச்சான் மோதிரமாக சண்முகம் தனது திருமணத்தின் போது சத்யனுக்குப் போட்ட மோதிரத்தை விற்று குழந்தையின் பொருட்களை வாங்கி பத்திரப்படுத்திக்கொண்டான்....

ஏழுமலை சந்தைக்குப் போயிருப்பான் என்று தெரிந்து சத்யனும் போய் மான்சி கேட்டப் பொருட்களை வாங்கி கொடுத்து ஏழுமலையை முதல் பஸ்ஸில் ஊருக்கு அனுப்பிவிட்டு அடுத்த பஸ்ஸில் வந்தான் சத்யன்...

ஏழுமலையை அனுப்பி விட்டு மான்சி குழந்தையையும் சாப்பாடு தூக்கையும் கூடவே காமாட்சிப் பாட்டியிடம் ஒரு அருவாளையும் வாங்கி எடுத்துக்கொண்டு பெரிய மலையின் அடிவாரத்துக்கு வந்தாள்... காடாய் வளர்ந்து கிடந்த காட்டுச் செடிகளை கண்டு அஞ்சாமல் குழந்தையை ஒரு மரத்தில் தொட்டில் கட்டி போட்டுவிட்டு அருவாளோடு அவளது மனையில் இறங்கினாள்....

சிறியதாய் இருந்த செடிகளை கையால் பிடுங்கியபடி பெரிய செடிகளை அருவாள் கொண்டு வெட்டி வீசினாள்..... ஏழுமலை வரும் வேளைக்கு பாதி செடிகளை அப்புறப்படுத்தியிருந்தாள்....

ஏழுமலை கொடுத்தப் பணத்தை வாங்கி முந்தானையில் முடிந்தவள் ,, " பரவாயில்லையே சாமர்த்தியமா நல்ல விலைக்கு வித்திருக்க" என்றபடி ஒரு நூறு ரூபாய் நோட்டை ஏழுமலையின் சட்டைப் பையில் வைத்தாள் ...

அந்தப் பணத்தை எடுத்து கீழே வீசிவிட்டு குமுறியவன் " என்ன கமிஷன் குடுக்குறியா? நான் ஒன்னும் பன்னீர் இல்ல.... மான்சிய என் சொந்த அக்காவா நினைக்குற ஏழுமலை " என்றபடி கண்களை துடைத்துக் கொண்டான்....

மான்சி எதுவும் பேசாமல் செடிகளை வெட்ட ஆரம்பித்தாள்... ஏழுமலை அவளுக்கு உதவும் நோக்கில் வெட்டிய கிளைகளை இழுத்துச்சென்று பாறையின் மீது போட .... பட்டென்று நிமிர்ந்துப் பார்த்த மான்சி " ஏழுமலை தப்பா நினைக்காதடா.... நான் சொந்தமா உழைச்சு இந்த வீட்டை கட்டனும்னு நினைக்கிறேன்.... யாரோட உதவியும் வேணாம்டா தம்பி... கூடப் பொறந்தவனே ஆனாலும் தப்பா பேசுற உலகம்டா இது.... நான் நிறைய அனுபவிச்சிட்டேன்... அதான் சொல்றேன்... நீ வீட்டுக்குப் போ... எனக்கு எதாவது உதவி வேணும்னா என் சின்னம்மா... அதான் உன் அம்மா எதிர்ல வந்து கேட்குறேன்" என்று குரலை உயர்த்தி பிடிவாதமாக சொல்ல.... ஏழுமலை வந்த கோபத்தை கட்டுப்படுத்திக்கொண்டு செடிகளை வீசிவிட்டு வீட்டுக்கு கிளம்பினான்....
கொண்டு வந்த கஞ்சியை ஊறுகாய் கூட இல்லாமல் குடித்துவிட்டு மீண்டும் வேலையை தொடங்கினாள் மான்சி.... முள் செடிகளை முரட்டுத்தனமாக வெட்டி இழுத்துப் போட்டதில் கையில் ஏராளமான இடங்களில் குத்தி ரத்தம் வந்தது.... ஆனாலும் அவளுக்குள் இருந்த வெறி வலியை உணரவிடாமல் வேலையை செய்ய வைத்தது... ...

மாலை ஆறு மணியாகி இருள் கவிழத் தொடங்க.... மான்சி இன்னும் வேலை செய்து கொண்டிருந்தாள்.... செடிகளை அள்ளி வீசிய பாறைக்குப் பின்னால் அமர்ந்து நெஞ்சில் உதிரம் வழிய " அய்யோ பொழுது போச்சே இன்னும் இங்கயே இருக்காளே என்று தவித்துக் கொண்டிருந்தான் சத்யன்.... அதைவிட தொட்டிலில் கத்திக்கொண்டிருந்த குழந்தையின் அழுகுரல் அவனை இன்னும் வதைத்தது...

" போதும் மான்சி ,, பொழுது போச்சு " என்று சொல்லக் கூட சத்யனுக்கு உரிமையில்லையே?

அப்போது தெய்வம் போல் வந்த காமாட்சிப் பாட்டி தொட்டிலில் கிடந்து அழுது கொண்டிருந்த குழந்தையை தூக்கிக்கொண்டு " கண்ணு பொழுது போச்சு ... சீர் பண்ணது போதும் மிச்சத்தை நாளைக்குப் பார்த்துக்கலாம் ... வா கண்ணு" என்று அழைக்க...

நிமிர்ந்துப் பார்த்த மான்சி " முடிஞ்சது ஆயா,, நாளைக்கு கடக்கால் தோண்ட வேண்டியது தான்" என்றபடி அருவாளை எடுத்துக்கொண்டு வந்தாள்....

அவள் கூறியதை கேட்ட சத்யனுக்கு திக்கென்றது.... இவளே கடக்கால் தோண்டப் போறாளா? அய்யோ ஆம்பளையாலயே முடியாதே? எல்லாம் என்னாலதான் என்று தலையில் அடித்துக் கொண்டான்.... இப்போது மான்சியை தடுக்கவும் முடியாது தள்ளி நின்று பார்க்கவும் முடியாது.... மான்சி கிளம்பியதும் பாறையின் மறைவிலிருந்து வெளியே வந்தவன் சுத்தப்படுத்தப்பட்ட மான்சியின் மனையை பார்த்தான்... ஒரு புல் கூட இல்லாமல் சுத்தமாக இருந்தது... மான்சியின் உழைப்பை எண்ணி நெஞ்சு விம்மிற்று.. இங்கே குடிசை போட்டு மான்சி வாழப்போகிறாள்... புதிதாக ஏதோவொரு உணர்வு இதயத்தை ஊடுருவ ... மண்டியிட்டு அமர்ந்து குனிந்து பூமித்தாயை முத்தமிட்டு நிமிர்ந்து மலைமேல் இருந்த ஏழு கன்னிமார் கோயிலை கையெடுத்துக் கும்பிட்டு " அம்மா நாகக்கன்னி,, இனிமேல் என் மான்சியை பத்திரமா பாத்துக்கனும் அடுத்த வருஷ ஆடித் திருவிழாவுக்கு உன் காவலுக்கு குதிரை சிலை செய்து வைக்கிறேன்ம்மா" என்று வாய்விட்டு சத்தமாக வேண்டிக்கொண்டு அங்கிருந்து கிளம்பினான்...

பள்ளிக்கூட திண்ணைக்கு வந்து காமாட்சிப் பாட்டி குழந்தையை வைத்துக்கொள்ள மான்சி அடுப்பு மூட்டினாள்... " கண்ணு காசு இருந்தா குடும்மா ஏதாவது காய்கறி வாங்கிட்டு வர்றேன்... மூனு வேளையும் கஞ்சியே குடிச்சா ரத்தம் செத்துப் போய் வேலை வெட்டி செய்ய முடியாது" என்று பாட்டி சொல்ல...

மான்சிக்கும் பாட்டி சொல்வது சரியென்றுதான் பட்டது.. உடலில் உரமிருந்தால் தான் உழைக்க முடியும் .... காய்கறி வாங்கிவர காசு கொடுத்தனுப்பினாள்

சமையலை முடித்தவள் ... பக்கத்தில் நெருப்பு உலையில் எஃகு உளிகளுக்கு கூர் அடித்துக்கொண்டிருந்த கல் உடைப்பவர்களிடம் சென்று.. " எனக்கு ஆயிரம் சக்கை கல்லு வேணும்... எவ்வளவு காசு ஆகும்?" என்று கேட்க....

அந்த குடியானவன் நிமிர்ந்து பார்த்து ஒரு கல்லு அஞ்சு ரூவா தாயி... ஆனா காண்ட்ராக்டருக்கு உடைக்க தான் எங்களுக்கு நேரம் சரியா இருக்கு... உனக்கு எங்கருந்து கல் ஒடைச்சு தரமுடியும் என்று சொல்ல.... அவருக்கு பக்கத்தில் இருந்த அவர் மனைவி அவர்களின் மொழியில் ஏதோ சொல்ல... தலையசைத்தவர் மீண்டும் நிமிர்ந்து " பாவம் கைப்புள்ளையோட நிர்கதியா நிக்கிது... நாமலும் ரெண்டு பொண்ணு வச்சிருக்கோம் ... அதுகளுக்கு புண்ணியமா இருக்கும்....கல்லு ஒடச்சு குடுனு என் பொஞ்சாதி சொல்லுதும்மா... இன்னும் ரெண்டு நாள்ல கல்லை கொண்டு வந்து இறக்குறோம் .. நீ கல்லுக்கு நாலு ரூவா குடு தாயி போதும்" என்று சொல்ல

இது போன்ற நல்லவர்களால் தான் பூமி பந்து இன்னும் தனது சுழற்சியை நிறுத்தாமல் இருக்கிறது என்று எண்ணிய மான்சி கையெடுத்துக் கும்பிட்டுவிட்டு முந்தானையில் இருந்த பணத்தில் நாலாயிரம் எடுத்து அந்த பெண்ணிடம் கொடுத்தாள் ....

அன்று இரவு உறங்கும் போது அவளின் காவல் தெய்வம் பெட்சீட்டால் முக்காடு போட்டுக்கொண்டு அங்கே வந்து ...அந்த நீளமான திண்ணையின் மறுபுறம் வந்து யாருமறியாமல் படுத்துக்கொண்டது.... சத்யனுக்கு பயம்... அந்த கிராமத்தில் நல்லவர்கள் நாலு பேர் இருந்தால் ஊர் பெயரை கெடுக்கவென்று ஊதாரிகள் எட்டு பேர் இருந்தார்கள்... அவர்களின் விஷமத்திலிருந்து மான்சியை காக்க வேண்டுமே என்ற பயம்... கழனிக்குப் போய் படுத்துக் கொள்வதாக சொல்லிவிட்டு நன்றாக இருட்டியதும் இங்கே வந்து படுத்துக் கொண்டான்....

நடு இரவில் குழந்தை அழுததும் மான்சி எழுந்து அமர்ந்து குழந்தைக்குப் பால் கொடுக்க ... இவனும் எழுந்து கொண்டான் ... பெட்சீட்டால் மூடிக்கொண்டு சுற்றிலும் பார்வையை ஓடவிட்டான்.... அவன் நினைத்தது போல் எதுவுமில்லை.... ஒட்டர் இன மக்களின் கூர் தீட்டிய எஃகு உளிகளுக்குப் பயந்து யாரும் அந்த பக்கமே வரவில்லை.....

Thursday, January 28, 2016

தீர்க்க சுமங்கலி மான்சி - அத்தியாயம் - 15

மறுநாள் காலை நான்கு மணிக்கே எழுந்து சாப்பாடு செய்து கொண்டிருந்தனர் கல் உடைக்கும் ஒட்டர் எனப்படும் பழங்குடி இன மக்கள் .... இரவெல்லாம் சிந்தனையின் பிடியில் சிக்கி தூக்கத்தை பழி கொடுத்த மான்சி அதிகாலை புதிய தெளிவுடன் எழுந்தாள்.... கீழே கிடந்த செங்கல் துண்டை எடுத்து தூளாக்கி பல் தேய்த்து பள்ளிக்கூட குழாயில் தண்ணீர் பிடித்து முகம் கை கால் கழுவினாள்...

குழந்தையை தூக்கி தோளில் போட்டுக்கொண்டு காமாட்சிப் பாட்டியின் வீட்டுக்குப் போய் திண்ணையில் கிடந்த இவளுடைய பாத்திரங்களில் இருந்து கஞ்சி வைக்க ஒரு பாத்திரமும் கஞ்சியை ஊற்றி எடுத்து செல்ல ஒரு தூக்குவாளியையும் எடுத்துக்கொண்டாள்... பாட்டி கண் விழித்துப் பார்த்து " என்னா கண்ணு?" என்று கேட்க...

" கஞ்சி காய்ச்ச ஏனம் எடுத்துட்டுப் போக வந்தேன் ஆயா" என்றாள் மான்சி ...

" அரிசி வச்சிருக்கியா கண்ணு?" என்று பாட்டி கேட்டதும் ..... " இல்ல ஆயா... யாராவது ரேஷன் அரிசி வித்தாங்கன்னா வாங்கி வச்சுக்கனும்... இப்ப கடையில தான் வாங்கனும் ஆயா... நேத்து வேலை செஞ்ச கூலி இருக்கு " என்றாள்

" இந்த மாசம் வாங்குன அரிசி என்கிட்ட அப்புடியேதான் இருக்கும்மா... வேனும்னா வாங்கிக்க" என்று காமாட்சிப் பாட்டி வழி சென்னதும்... மான்சிக்கு சற்று நிம்மதியாக இருந்தது... இல்லேன்னா காலை ஆறு மணிவரை காத்திருந்து கடைக்குப் போய் வாங்கிருக்கனும்...

பாட்டி வைத்திருந்த பத்து கிலோ ரேஷன் அரிசியை ஐம்பது ரூபாய் கொடுத்து வாங்கிய மான்சி அன்றைய தேவைக்கு மட்டும் கொஞ்சம் எடுத்துக்கொண்டு மீதியை மூட்டையாக கட்டி பாட்டி வீட்டு திண்ணையிலேயே வைத்து விட்டு மீண்டும் குழந்தையுடன் பள்ளிக் கூடத்துக்கு வந்தாள்...

பள்ளிக்கூடத்தின் பின்புறம் மூன்று கற்களை வைத்து பக்கத்தில் பொங்கிய பழங்குடி இனப் பெண்ணிடம் நெருப்பு வாங்கி அடுப்பு மூட்டினாள் .... சுற்றிலும் கிடந்த சருகுகளும் சுள்ளிகளையும் பொருக்கி வந்து அடுப்பில்ப் போட்டு கஞ்சி வைத்தாள்....

பழங்குடிப் பெண் உப்பு கொடுக்க அதை கஞ்சியில் போட்டு கலந்து பாதியை தூக்கில் ஊற்றி வைத்து விட்டு மீதியை பாத்திரத்தோடு அப்படியே குடித்தாள்... அவ்வளவு காலையில் பசியோடு பாத்திரத்தில் இருக்கும் கஞ்சியை மான்சி குடிப்பதை ஒரு ஜோடி விழிகள் கண்ணீருடன் கண்டது...

பள்ளிக்கூட காம்பவுண்ட் சுவரை ஒட்டி நின்று மான்சி சாப்பிடுவதை கசங்கிய இதயத்தோடு சத்யன் பார்த்துக் கொண்டிருந்தான்.... அதிகாலை டீ கடைக்குப் போனவனின் காதில் முதலில் விழுந்த செய்தியே மான்சி வீட்டிலிருந்து துரத்தப் பட்டு நடுத் தெருவில் கிடந்ததும்.. பிறகு அடைக்கலம் தேடி பள்ளிக்கூடம் சென்றதும் தான்... காசு கொடுத்து வாங்கிய டீ விஷம்போல் தெரிய குடிக்காமல் அப்படியே வைத்துவிட்டு பள்ளிக்கூடத்துக்கு வந்தவன் மறைவில் நின்று மான்சியைப் பார்த்தான்....

முதல்நாள் பட்டினியால் தான் இவ்வளவு காலையில் கஞ்சி குடிக்கிறாள் என்று சத்யனுக்குப் புரிய கண்கள் கசிந்தன... என் மான்சிக்கு மட்டும் ஏனிந்த நிலைமை? விடை தெரியா கேள்வியை கடவுளின் முன் வைத்துவிட்டு சுவற்றில் சாய்ந்து நின்றான் சத்யன்

மான்சிக்கு எந்த விதத்திலும் உதவ முடியாத தனது ஈன நிலையை எண்ணி இதயமும் சேர்ந்து கண்ணீர் விட்டது... இப்போது இருக்கும் நிலையில் அவளுக்கு உதவ நினைத்தால் நிச்சயம்,ஏற்கமாட்டாள் என்பதோடு அல்லாமல் இவன் முன்பு இழிந்து விட்டோமே என்று நொந்து போவாள் என்றும் சத்யனுக்குப் புரிந்தது....

ஆனாலும் எதாவது செய்யனும்... மான்சி இருக்க இடமாவது தேடிக் கொடுக்கனும்.... மலையில் கல் உடைக்க வந்த மக்கள் வேலை முடிந்து போய்விட்டால் பிறகு மான்சி தனியாக இங்கே இருக்க முடியாது.... அதற்குள் ஏதாவது மாற்று ஏற்பாடு செய்யவேண்டும்... ஆனால் நான் நெருங்கினாலே நெருப்பாகி விடுவாள்... என்ன செய்வது?

சத்யனின் மனதில் சட்டென்று ஏழுமலையின் ஞாபகம் தான் வந்தது ... அவன் மட்டும் தான் மான்சிடம் சகஜமாக பேசுவான்.... தூரத்து உறவில் மான்சிக்கு தம்பி முறை உள்ளவன்.... அது மட்டுமல்ல மான்சி சத்யன் இருவரின் கடந்த காலத்தைப் பற்றி ஓரளவுக்குத் தெரிந்த ஒரே நபர்... காய்சல் காலத்தில் இவர்களுடன் அவனும்தான் மாடுகள் மேய்க்க வருவான்... மவுனமாக இவர்கள் வந்தாலும் இவர்களின் மனது ஆயிரம் கதைகள் பேசிக்கொள்வதை யூகித்தவன் ஏழுமலை... டவுன் ஸ்வீட் ஸ்டாலுக்கு வேலைக்குப் போய் விட்டதால் இப்போதெல்லாம் அதிகமாகப் பார்க்க முடிவதில்லை....

சத்யன் அவசரமாக ஏழுமலையின் வீட்டை நோக்கி ஓடினான்.... ஏழுமலையின் அம்மா தெருவுக்கு சாணி தெளித்துக் கொண்டிருந்தாள்... சத்யனை கண்டதும் " என்னா மருமகனே இம்பூட்டு காலையிலயே வந்திருக்க? யார பாக்கனும்?" என்று கேட்க...

" சும்மா ஏழுமலைய பாக்கலாம்னு வந்தேன் அத்தை... இன்னும் தூங்குறானா?" என்றபடி குனிந்து வீட்டுக்குள் நுழைந்தவன் ஏழுமலை பல் தேய்ப்பதை பார்த்ததும் அவனை நெருங்கி ... "ஏழுமலை கொஞ்சம் பேசனும்டா வெளிய போகலாமா?" என்று மெல்லிய குரலில் கேட்டான்...

அவனை அவ்வளவு காலையில் எதிர்பார்க்காத ஏழுமலை " இரு மாமா இதோ வர்றேன்" என்று முகத்தை துடைத்துக் கொண்டு வந்தான்...

இருவரும் மலையின் அடிவாரத்தில் ஓரமாக நடந்தபடி " ஏழுமலை எனக்கு வேற வழி தெரியலை... இதைப் பத்தி யார்கிட்டயும் பேசவும் பயமாருக்கு... யாரும் மான்சியை தப்பா நினைச்சிட கூடாதேனு தான் உன்னைய தேடி வந்தேன்" என்று சத்யன் ஆரம்பிக்கும் போதே ...

"நடந்தது எனக்கும் தெரியும் மாமா.... நைட் பஸ்விட்டு இறங்குறப்பவே ரோட்ல பேசிகிட்டாங்க.... இப்ப அக்காவ பார்க்க போகலாம்னு தான் சீக்கிரமா எழுந்திரிச்சேன்" என்றான் ஏழுமலை...

நெஞ்சு வேதனையில் அடைக்க தலை குனிந்த சத்யன் " அன்னைக்கு நான் சுயநலமா யோசிச்சதால தான் இன்னைக்கு மான்சிக்கு இந்த நிலைமை.... எப்புடி வாழ வேண்டியவளுக்கு இன்னைக்கு வீதியில சோறு பொங்க வேண்டிய நிலை.... இப்பல்லாம் என்னையப் பாத்தாலே நெருப்பு மாதிரி ஆயிடுறா.... என்னால அவகிட்ட கூட நிக்க முடியலை ஏழுமலை... ஆனா பள்ளிக் கூடத்துல இருக்குறவங்க போய்ட்டா மான்சி அங்க தனியா இருக்க முடியாது... அதுக்குள்ள எங்கயாவது குடிசை கட்டிகிட்டு போயிடனும்... அவ நெனப்புல என்ன இருக்குனு தெரியலை... நீ போய் என்ன ஏதுனு விசாரி ஏழுமலை நான் போய் அவ அப்பனைப் பார்த்து பேசிப் பாக்குறேன்" என சத்யன் சொல்ல...

" சரி மாமா நான் போய் பேசுறேன்" என்று நகர்ந்தவனை " ஏழுமலை கொஞ்சம் இரு" என்று கூறி அருகில் வந்த சத்யன் .... " அஞ்சாறு வருஷத்துக்கு முன்னாடி பெரிய மலை அடிவாரத்துல எல்லாரும் புரம்போக்கு மனை மடக்குனாங்க.... அங்க மான்சியும் கூட ஒரு இடம் புடிச்சு கல்லு நட்டு வச்சிட்டு வந்தா.... எங்க ரெண்டு பேர் மனையும் பக்கத்து பக்கத்துலதான்.... இப்ப அங்க நாலஞ்சு பேர் வீடு கட்டி இருக்காங்க... மான்சியையும் அந்த இடத்துல குடிசை போட சொல்லு.... பணம் அவ கிட்ட இருக்காது.... நான் ஒரு பத்தாயிரம் தர்றேன் நீ உன் ஓனர் கிட்ட கடன் வாங்கினதா குடுத்து குடிசை கட்ட சொல்லு ஏழுமலை, நான்உன்னைப் பாத்து பேசினது அவளுக்குத் தெரிய கூடாது... நீயா யோசனை சொல்லு ஏழுமலை... மான்சி என்ன சொல்றானு கண்டுகிட்டு வா... நான் பஸ் ஸ்டாப்பு பக்கத்துல வாராபதில உட்கார்ந்திருக்கேன்" என்ற சத்யன் சோர்ந்த நடையுடன் செல்ல.... அவனையேப் பார்த்த ஏழுமலையின் கண்கள் கூட கலங்கியது... ரெண்டு பேரும் சேர்ந்திருந்தா இந்த மனுஷன் மான்சி அக்காவை உள்ளங்கையில வச்சு தாங்கிருப்பாரு... ஆனா ரெண்டு பேருமே குடும்பத்தை மட்டும் நெனைச்சதால இன்னைக்கு ஆளுக்கோரு திசையில நிக்கிறாங்களே? வேதனையுடன் மான்சித் தேடி சென்றான் ஏழுமலை...

கஞ்சி செய்த பாத்திரத்தை கழுவி வைத்து விட்டு மறைவாக திரும்பி குழந்தைக்கு பால் கொடுத்தக் கொண்டிருந்த மான்சி ஏழுமலை வருவதை பக்கவாட்டில் பார்த்து விட்டு முந்தானையை இழுத்து முழுவதுமாக மூடிக்கொண்டு " என்னா ஏழுமலை நான் இங்க இருக்குறேன்னு யாரு சென்னா?" என்று சிறு புன்னகையுடன் கேட்க...

திண்ணையில் ஏறி அமர்ந்த ஏழுமலை " ஆமா பெரிய சிதம்பர ரகசியம்... தெரியாமப் போறதுக்கு? அதான் ஊரே பேசி சிரிக்குதே உன் அண்ணன் வகுசிய,, மனுசனா அவன்லாம்? இந்த மாதிரி பொண்டாட்டிக்குப் பயந்தவனை நான் எங்கயுமே பாக்கலை?" என்ற ஏழுமலை வாய்க்கு வந்தபடி பன்னீரையும் மஞ்சுளாவையும் திட்டித் தீர்த்தான்...

குழந்தைக்கு பால் கொடுத்து முடித்த மான்சி " விடு ஏழுமலை... இத்தனை நாளா அவங்களுக்கு உழைச்சிப் போட்டேன்.. இனி என் புள்ளைய காப்பாத்த உழைக்கப் போறேன்... எங்காத்தாப்பனுக்கு தவமிருந்து பெத்த ஒத்தப் புள்ளைய விட்டுட்டு எனக்குப் பரிஞ்சி பேச பயம் ... நாளைக்கு அதுக செத்தா கொள்ளிப் போடப்போறது அவன் தான? பொட்டச்சி நானு ஒப்பாரி வைக்கிறதோட முடியப்போகுது... யார் யாரு எப்புடினு தெரிஞ்சுக்க ஆண்டவன் எனக்கு ஒரு சந்தர்ப்பம் குடுத்துருக்கான் அவ்வளவுதான் ஏழுமலை" என்று மான்சி இலகுவாக பேசினாள்

இரவு முழுவதும் பசியோடு கூடிய சிந்தனை வாழும் வேகத்தையும் வாழ்க்கையின் மிச்சத்தையும் அவளுக்குத் தெளிவுப் படுத்தியிருந்தது...

நிமிர்வுடன் பேசிய மான்சியை வியப்புடன் பார்த்த ஏழுமலை " சரிக்கா,, இங்கயே எத்தனை நாளைக்கு இருக்க முடியும்?.... உனக்குனு தங்க ஒரு இடம் வேனுமே அக்கா?" என்று மெதுவாக ஆரம்பிக்க...

" அதுக்குதான் சித்த முந்தி உன்னையப் பாக்க வரலாம்னு இருந்தேன் ஏழுமலை" என்று மான்சி கூறியதும் ..... ஏழுமலைக்கு திக்கென்றது.... நல்லவேளை வந்திருந்தா மாமாவையும் என்னையும் சேர்த்து பார்த்துட்டு திரும்பிருக்கும்,, என்று எண்ணியபடி " சொல்லுக்கா நான் என்ன செய்யனும்?" என்று கேட்டான்....

" ஏழுமலை பெரிய மலை அடிவாரத்துல நாமெல்லாம் இடம் மடக்குனமே? அங்க எனக்கும் ஒரு இடம் இருக்கு..... அந்த இடத்துல ஒரு குடிசைப் போட்டுகிட்டு அங்கப் போயிடலாம்னு இருக்கேன் ... அது விஷயமா தான் உன்னையப் பாக்க வந்தேன் ஏழுமலை" என்று மான்சி கூற ...

சத்யன் கூறிய அதே விஷயத்தை மான்சியும் கூற... இதுபோல் ஒத்த சிந்தனையுடைய இவங்க ரெண்டு பேரையும் ஏன் பிரிச்சி வச்ச ஆண்டவா? என்று கடவுளையே சபித்தான் ஏழுமலை...

" சரிக்கா நல்ல யோசனைதான்... அங்கயும் இப்ப நாலஞ்சு வீடுக வந்துருச்சு.... அந்த பிசாசு கூட இனி எப்பவுமே ஒரே வீட்டுல வாழ முடியாதுக்கா.. நீ ரெடி பண்ணு ... நான் என் ஓனர் கிட்ட கடனா கொஞ்சம் பணம் வாங்கித் தர்றேன் ... அதுல வீட்டைக் கட்டு... அப்புறமா கூலிக்கு செஞ்சு கடனை கொஞ்சம் கொஞ்சமா திருப்பி குடுத்துடு அக்கா" என்று சத்யன் சொல்லச் சொன்ன பொய்யை பக்குவமாக சொன்னான் ஏழுமலை...

அவனையே உற்றுப் பார்த்த மான்சி " ஏன் தம்பி அந்த அண்ணிகாரி ஏற்கனவே என்மேல இல்லாத பழி எல்லாம் சொல்லிருக்கா.... இப்ப உன் ஓனர்கிட்ட எனக்கு பணம் வாங்கி குடுத்தேன்னு வை... அவரையும் எனக்கு புருஷன் சொல்லுவா.... என்னால அந்த நல்ல மனுஷனுக்கு ஏன்டா கெட்ட பேரு ... யார்கிட்டயும் பத்து பைசா கையேந்த வேணாம் " என்றவள் தனது உழைப்பில் வாங்கி காதில் போட்டிருந்த தோடுகளை கழட்டினாள்... பிறகு கோபால் தன் மகனுக்கு வாங்கிப் போட்டிருந்த குழந்தையின் இடுப்பில் இருந்த வெள்ளிக் கொடியையும் கால் கொலுசையும் கழட்டினாள் ... எல்லாவற்றையும் சேர்த்து ஏழுமலையிடம் நீட்டி " என் தோடு கால் பவுன் ... வித்தா அஞ்சாயிரம் தேறும்... பிள்ளையோட கொடியும் கொலுசும் வித்தா அஞ்சாயிரம் தேறும்... குடிசை கட்ட அது பாத்தாதுதான்.. ஆனா கூலிக்கு ஆள் வைக்காம நானே ராவும் பகலும் கஷ்டப் பட்டா இந்த பணம் போதும் ... நீ இதையெல்லாம் வித்து பணமாக்கி.... பக்கத்து ஊர் சந்தையில ஒரு கடப்பாரையும். மம்டியும்.. மண் அள்ள ரெண்டு இரும்பு கூடையும் மட்டும் வாங்கிட்டு வந்து குடு.. குழந்தைய வச்சுகிட்டு என்னால அலைய முடியாது... நீ பஸ்க்கு சாப்பாட்டுக்கு இதுலருந்து காசு எடுத்துக்க ஏழுமலை" என்று மான்சி சொல்லி முடிக்க...

ஏழுமலைக்கு அழுகையை அடக்குவது கஷ்டமாக இருந்தது.... குடிசையாக இருந்தாலும் அதுக்கும் கடக்கால் தோண்டனும் ... தோண்டிய பள்ளத்தில் கருங்கற்களைப் போட்டு துர்க்கனும் ... அதெல்லாம் ஒரு பெண்ணால் முடியுமா? ...... முடியும் மான்சியால் முடியும்....

ஏழுமலை மான்சி கொடுத்தப் பொருட்களை வாங்கி பத்திரப் படுத்திக்கொண்டு .... " சரிக்கா நான் என் ஓனரை வச்சு முடிஞ்ச வரை அதிக தொகைக்கு வித்துட்டு பணத்தோட வர்றேன்" என்று கூறிவிட்டு சென்றான்...

வீட்டுக்குப் போய் குளித்து சாப்பிட்டு விட்டு வெளியே வந்தவன் சத்யன் சொன்ன இடத்துக்கு செல்ல.... கழனிக்கு கூட போகாமல் ஏழுமலைக்காக காத்திருந்தான் சத்யன் ... அவன் அருகில் சென்று அமர்ந்த ஏழுமலை மான்சியை பார்த்து நடந்தவற்றை எல்லாம் ஒன்று விடாமல் சொன்னான் ...

சத்யன் அமைதியாக இருந்தான்.... மான்சி கூறியதில் தவறேதும் இல்லை.... வெளியூரில் இருக்கும் ஏழுமலையின் ஓனருக்கே இந்த சொல் என்றால்? இங்கேயே இருக்கும் நான்தான் உதவினேன் என்று தெரிந்தால் மஞ்சுளா பேசுவதற்கு முன்பே மான்சி தன்னையே கூட அழித்துக் கொள்வாள் என்று தோன்றியது சத்யனுக்கு....

இயலாமை கொடுத்த நீண்ட பெருமூச்சுடன் எழுந்த சத்யன் " சரி ஏழுமலை நானும் வர்றேன்... எனக்குத் தெரிஞ்ச நகைக் கடைக்குப் போய் நல்ல விலைக்கு விக்குதானு பார்க்கலாம்" என்று கூற... இருவரும் பஸ்ஸில் ஏறினார்கள்....

டவுனில் நான்கைந்து கடைகள் அலைந்து மான்சி கொடுத்தப் பொருட்களை பனிரெண்டாயிரம் வரை விற்றான் சத்யன்... ஆனால் மான்சியின் தோடுகளை விற்றதை விட .... குழந்தைக்கு கோபால் முதல்முதலாக வாங்கிப் போட்ட பொருட்களை விற்க சத்யனுக்கு மனசே வரவில்லை....

ஏழுமலையின் எதிரில் விற்று பணத்தைக் கொடுத்து அனுப்பி விட்டு ... அவன் சென்றதும் அந்த கடைக்கு ஓடி குழந்தையின் பொருட்களுக்குப் பதிலாக மச்சான் மோதிரமாக சண்முகம் தனது திருமணத்தின் போது சத்யனுக்குப் போட்ட மோதிரத்தை விற்று குழந்தையின் பொருட்களை வாங்கி பத்திரப்படுத்திக்கொண்டான்....

ஏழுமலை சந்தைக்குப் போயிருப்பான் என்று தெரிந்து சத்யனும் போய் மான்சி கேட்டப் பொருட்களை வாங்கி கொடுத்து ஏழுமலையை முதல் பஸ்ஸில் ஊருக்கு அனுப்பிவிட்டு அடுத்த பஸ்ஸில் வந்தான் சத்யன்...

ஏழுமலையை அனுப்பி விட்டு மான்சி குழந்தையையும் சாப்பாடு தூக்கையும் கூடவே காமாட்சிப் பாட்டியிடம் ஒரு அருவாளையும் வாங்கி எடுத்துக்கொண்டு பெரிய மலையின் அடிவாரத்துக்கு வந்தாள்... காடாய் வளர்ந்து கிடந்த காட்டுச் செடிகளை கண்டு அஞ்சாமல் குழந்தையை ஒரு மரத்தில் தொட்டில் கட்டி போட்டுவிட்டு அருவாளோடு அவளது மனையில் இறங்கினாள்....

சிறியதாய் இருந்த செடிகளை கையால் பிடுங்கியபடி பெரிய செடிகளை அருவாள் கொண்டு வெட்டி வீசினாள்..... ஏழுமலை வரும் வேளைக்கு பாதி செடிகளை அப்புறப்படுத்தியிருந்தாள்....

ஏழுமலை கொடுத்தப் பணத்தை வாங்கி முந்தானையில் முடிந்தவள் ,, " பரவாயில்லையே சாமர்த்தியமா நல்ல விலைக்கு வித்திருக்க" என்றபடி ஒரு நூறு ரூபாய் நோட்டை ஏழுமலையின் சட்டைப் பையில் வைத்தாள் ...

அந்தப் பணத்தை எடுத்து கீழே வீசிவிட்டு குமுறியவன் " என்ன கமிஷன் குடுக்குறியா? நான் ஒன்னும் பன்னீர் இல்ல.... மான்சிய என் சொந்த அக்காவா நினைக்குற ஏழுமலை " என்றபடி கண்களை துடைத்துக் கொண்டான்....

மான்சி எதுவும் பேசாமல் செடிகளை வெட்ட ஆரம்பித்தாள்... ஏழுமலை அவளுக்கு உதவும் நோக்கில் வெட்டிய கிளைகளை இழுத்துச்சென்று பாறையின் மீது போட .... பட்டென்று நிமிர்ந்துப் பார்த்த மான்சி " ஏழுமலை தப்பா நினைக்காதடா.... நான் சொந்தமா உழைச்சு இந்த வீட்டை கட்டனும்னு நினைக்கிறேன்.... யாரோட உதவியும் வேணாம்டா தம்பி... கூடப் பொறந்தவனே ஆனாலும் தப்பா பேசுற உலகம்டா இது.... நான் நிறைய அனுபவிச்சிட்டேன்... அதான் சொல்றேன்... நீ வீட்டுக்குப் போ... எனக்கு எதாவது உதவி வேணும்னா என் சின்னம்மா... அதான் உன் அம்மா எதிர்ல வந்து கேட்குறேன்" என்று குரலை உயர்த்தி பிடிவாதமாக சொல்ல.... ஏழுமலை வந்த கோபத்தை கட்டுப்படுத்திக்கொண்டு செடிகளை வீசிவிட்டு வீட்டுக்கு கிளம்பினான்....
கொண்டு வந்த கஞ்சியை ஊறுகாய் கூட இல்லாமல் குடித்துவிட்டு மீண்டும் வேலையை தொடங்கினாள் மான்சி.... முள் செடிகளை முரட்டுத்தனமாக வெட்டி இழுத்துப் போட்டதில் கையில் ஏராளமான இடங்களில் குத்தி ரத்தம் வந்தது.... ஆனாலும் அவளுக்குள் இருந்த வெறி வலியை உணரவிடாமல் வேலையை செய்ய வைத்தது... ...

மாலை ஆறு மணியாகி இருள் கவிழத் தொடங்க.... மான்சி இன்னும் வேலை செய்து கொண்டிருந்தாள்.... செடிகளை அள்ளி வீசிய பாறைக்குப் பின்னால் அமர்ந்து நெஞ்சில் உதிரம் வழிய " அய்யோ பொழுது போச்சே இன்னும் இங்கயே இருக்காளே என்று தவித்துக் கொண்டிருந்தான் சத்யன்.... அதைவிட தொட்டிலில் கத்திக்கொண்டிருந்த குழந்தையின் அழுகுரல் அவனை இன்னும் வதைத்தது...

" போதும் மான்சி ,, பொழுது போச்சு " என்று சொல்லக் கூட சத்யனுக்கு உரிமையில்லையே?

அப்போது தெய்வம் போல் வந்த காமாட்சிப் பாட்டி தொட்டிலில் கிடந்து அழுது கொண்டிருந்த குழந்தையை தூக்கிக்கொண்டு " கண்ணு பொழுது போச்சு ... சீர் பண்ணது போதும் மிச்சத்தை நாளைக்குப் பார்த்துக்கலாம் ... வா கண்ணு" என்று அழைக்க...

நிமிர்ந்துப் பார்த்த மான்சி " முடிஞ்சது ஆயா,, நாளைக்கு கடக்கால் தோண்ட வேண்டியது தான்" என்றபடி அருவாளை எடுத்துக்கொண்டு வந்தாள்....

அவள் கூறியதை கேட்ட சத்யனுக்கு திக்கென்றது.... இவளே கடக்கால் தோண்டப் போறாளா? அய்யோ ஆம்பளையாலயே முடியாதே? எல்லாம் என்னாலதான் என்று தலையில் அடித்துக் கொண்டான்.... இப்போது மான்சியை தடுக்கவும் முடியாது தள்ளி நின்று பார்க்கவும் முடியாது.... மான்சி கிளம்பியதும் பாறையின் மறைவிலிருந்து வெளியே வந்தவன் சுத்தப்படுத்தப்பட்ட மான்சியின் மனையை பார்த்தான்... ஒரு புல் கூட இல்லாமல் சுத்தமாக இருந்தது... மான்சியின் உழைப்பை எண்ணி நெஞ்சு விம்மிற்று.. இங்கே குடிசை போட்டு மான்சி வாழப்போகிறாள்... புதிதாக ஏதோவொரு உணர்வு இதயத்தை ஊடுருவ ... மண்டியிட்டு அமர்ந்து குனிந்து பூமித்தாயை முத்தமிட்டு நிமிர்ந்து மலைமேல் இருந்த ஏழு கன்னிமார் கோயிலை கையெடுத்துக் கும்பிட்டு " அம்மா நாகக்கன்னி,, இனிமேல் என் மான்சியை பத்திரமா பாத்துக்கனும் அடுத்த வருஷ ஆடித் திருவிழாவுக்கு உன் காவலுக்கு குதிரை சிலை செய்து வைக்கிறேன்ம்மா" என்று வாய்விட்டு சத்தமாக வேண்டிக்கொண்டு அங்கிருந்து கிளம்பினான்...

பள்ளிக்கூட திண்ணைக்கு வந்து காமாட்சிப் பாட்டி குழந்தையை வைத்துக்கொள்ள மான்சி அடுப்பு மூட்டினாள்... " கண்ணு காசு இருந்தா குடும்மா ஏதாவது காய்கறி வாங்கிட்டு வர்றேன்... மூனு வேளையும் கஞ்சியே குடிச்சா ரத்தம் செத்துப் போய் வேலை வெட்டி செய்ய முடியாது" என்று பாட்டி சொல்ல...

மான்சிக்கும் பாட்டி சொல்வது சரியென்றுதான் பட்டது.. உடலில் உரமிருந்தால் தான் உழைக்க முடியும் .... காய்கறி வாங்கிவர காசு கொடுத்தனுப்பினாள்

சமையலை முடித்தவள் ... பக்கத்தில் நெருப்பு உலையில் எஃகு உளிகளுக்கு கூர் அடித்துக்கொண்டிருந்த கல் உடைப்பவர்களிடம் சென்று.. " எனக்கு ஆயிரம் சக்கை கல்லு வேணும்... எவ்வளவு காசு ஆகும்?" என்று கேட்க....

அந்த குடியானவன் நிமிர்ந்து பார்த்து ஒரு கல்லு அஞ்சு ரூவா தாயி... ஆனா காண்ட்ராக்டருக்கு உடைக்க தான் எங்களுக்கு நேரம் சரியா இருக்கு... உனக்கு எங்கருந்து கல் ஒடைச்சு தரமுடியும் என்று சொல்ல.... அவருக்கு பக்கத்தில் இருந்த அவர் மனைவி அவர்களின் மொழியில் ஏதோ சொல்ல... தலையசைத்தவர் மீண்டும் நிமிர்ந்து " பாவம் கைப்புள்ளையோட நிர்கதியா நிக்கிது... நாமலும் ரெண்டு பொண்ணு வச்சிருக்கோம் ... அதுகளுக்கு புண்ணியமா இருக்கும்....கல்லு ஒடச்சு குடுனு என் பொஞ்சாதி சொல்லுதும்மா... இன்னும் ரெண்டு நாள்ல கல்லை கொண்டு வந்து இறக்குறோம் .. நீ கல்லுக்கு நாலு ரூவா குடு தாயி போதும்" என்று சொல்ல

இது போன்ற நல்லவர்களால் தான் பூமி பந்து இன்னும் தனது சுழற்சியை நிறுத்தாமல் இருக்கிறது என்று எண்ணிய மான்சி கையெடுத்துக் கும்பிட்டுவிட்டு முந்தானையில் இருந்த பணத்தில் நாலாயிரம் எடுத்து அந்த பெண்ணிடம் கொடுத்தாள் ....

அன்று இரவு உறங்கும் போது அவளின் காவல் தெய்வம் பெட்சீட்டால் முக்காடு போட்டுக்கொண்டு அங்கே வந்து ...அந்த நீளமான திண்ணையின் மறுபுறம் வந்து யாருமறியாமல் படுத்துக்கொண்டது.... சத்யனுக்கு பயம்... அந்த கிராமத்தில் நல்லவர்கள் நாலு பேர் இருந்தால் ஊர் பெயரை கெடுக்கவென்று ஊதாரிகள் எட்டு பேர் இருந்தார்கள்... அவர்களின் விஷமத்திலிருந்து மான்சியை காக்க வேண்டுமே என்ற பயம்... கழனிக்குப் போய் படுத்துக் கொள்வதாக சொல்லிவிட்டு நன்றாக இருட்டியதும் இங்கே வந்து படுத்துக் கொண்டான்....

நடு இரவில் குழந்தை அழுததும் மான்சி எழுந்து அமர்ந்து குழந்தைக்குப் பால் கொடுக்க ... இவனும் எழுந்து கொண்டான் ... பெட்சீட்டால் மூடிக்கொண்டு சுற்றிலும் பார்வையை ஓடவிட்டான்.... அவன் நினைத்தது போல் எதுவுமில்லை.... ஒட்டர் இன மக்களின் கூர் தீட்டிய எஃகு உளிகளுக்குப் பயந்து யாரும் அந்த பக்கமே வரவில்லை.....

இரண்டாம் நாள் அதிகாலையே மான்சி அறியா வண்ணம் எழுந்து கழனிக்குப் போய் விட்டான் சத்யன்...... மான்சி சமையல் முடித்து சாப்பாட்டை எடுத்துக்கொண்டு கடப்பாரை இன்னும் மற்றப் பொருட்களை தலையில் வைத்துக் கொண்டு குழந்தையை இடுப்பில் சுமந்தபடி தனது மனைக்கு வந்தாள்...

நேற்று போலவே குழந்தையை தொட்டில் கட்டிப் போட்டுவிட்டு..... களத்தில் இறங்கினாள்... கடப்பாரையை தோளில் சாய்த்து கொண்டு மலைமேல் இருந்த கன்னிமார் தெய்வத்தைப் பார்த்து கும்பிட்டுக் கொண்டாள்... சனிமூலைக்கு வந்து முந்தானையில் இருந்த காலனா கர்பூரத்தை எடுத்து தரையில் வைத்து தீப்பொட்டியை உரசிப் பற்ற வைத்து கர்ப்பூரத்தை ஏற்றினாள்.. கர்ப்பூர தீபத்தை தொட்டு கண்களில் ஒற்றிக்கொண்டு கடப்பாரையை தலைக்குமேல் உயர்த்தி அதே வேகத்தில் தரையில் குத்தி தோண்ட ஆரம்பித்தாள்...

அவளின் உறுதியும் .. உழைப்பின் வேகமும் சேர்ந்து நம்பிக்கையை விதைக்க ,, மண் உமியைப் போல பொது பொதுவென வந்தது... சிறிது நோண்டுவதும் பிறகு அந்த மண்ணை அள்ளி பக்கத்தில் போடுவதுமாக அவளே இரண்டு வேலையும் செய்ததால் நேரம் போனதே தவிர பள்ளம் ஆழமாகவில்லை....

மதியத்துக்கெல்லாம் சோர்ந்து போனாள் மான்சி.... எழுந்து வந்து சோற்றை பிசைந்து அள்ளி விழுங்கும் போது கண்ணீரையும் சேர்த்து விழுங்கினாள்.. சாப்பிட்டு முடித்து குழந்தையைத் தூக்கி மடியில் கிடத்தி பால் கொடுக்க ஆரம்பித்தவளின் முன்னால் மான்சியின் அப்பாவும் அம்மாவும் நின்றனர்...

என்ன? என்பதுபோல் மான்சி நிமிர்ந்துப் பார்க்க.... " இதெல்லாம் என்னத்துக்குடி? உன் அண்ணிகாரி புத்தி தெரிஞ்சதுதான் .. ஒரு வார்த்தை மன்னிப்பு கேட்டுட்டு வீட்டுக்கு வா மான்சி" என்று அவள் அம்மா அழைக்க....

அவர்களை ஏளனமாகப் பார்த்த மான்சி " உன் மக மன்னிப்பு கேட்பா... ஆனா நான் கோபாலுக்குப் பொண்டாட்டி.... கோபால் பொஞ்சாதி யார்ட்டயும் மன்னிப்பு கேட்க மாட்டா.... கையாலாக உன் புள்ளைய கட்டிகிட்ட அவளுக்கே அவ்வளவு வீராப்புன்னா.... நல்லவனுக்கு முந்தி விரிச்சு சிங்கக்குட்டி மாதிரி புள்ளையப் பெத்த எனக்கு எம்புட்டு இருக்கும்?.... இனி செத்தாலும் அந்த வீட்டு வாசப்படி மிதிக்க மாட்டேன்... நீங்கப் போய் சேருங்க...இல்லேன்னா நாளைக்கு நீங்க செத்தா கொள்ளி கூட போடமாட்டேன்னு சொல்லிடுவான் உங்கப் புள்ளை" என்று நக்கலாக மொழிந்தாள் மான்சி....

அவளை பெற்றவர்கள் எவ்வளவோ எடுத்து சொல்லியும் மான்சி சமாதானம் ஆகவில்லை என்றதும் விதியை நொந்தபடி வீட்டுக்கு கிளம்பினார்கள் மான்சியைப் பெற்றவர்கள்.....

அவர்கள் போனதும் குழந்தையை தொட்டிலில் போட்டு உறங்க வைத்துவிட்டு பள்ளத்தில் இறங்கி நெற்றி வியர்வையை வழித்து எரிந்துவிட்டு வீம்புடன் மீண்டும் தோண்ட ஆரம்பித்தாள்.....

மான்சியின் நிலையை காண சகிக்காமல் அவள் பெற்றோரிடம் பேசி மான்சி பார்க்க அழைத்து வந்த சத்யனின் காதுகளில் மான்சி கூறிய ஒவ்வொரு வார்த்தைகளும் குயிலின் இசையாய் ஒலித்தது.... அவளின் உறுதியும் வீராப்பும் இவனுக்கும் உற்சாகத்தை கொடுத்தது... ஏன்தான் அவர்களை அழைத்து வந்தோமோ என்று தன்னையே நொந்து கொண்டான்...

ஆனாலும் உதவிக்கு இன்னொரு ஆள் இல்லாமல் கடக்கால் பள்ளம் எடுக்க முடியாது.... மீண்டும் ஏழுமலையைத் தேடி ஓடினான் சத்யன்.....

அன்று முழுவதும் 16க்கு 16 சுற்றில் ஒரு அடி ஆழமே தோண்ட முடிந்தது மான்சியால்..... மாலை ஆறு மணிக்கு பள்ளிக்கூட திண்ணைக்கு வந்தாள்... தனது கணக்குப்படி ஒரு வாரத்தில் குடிசை கட்ட முடியாது போலிருக்கே என்ற கவலை வந்தது... என்ன செய்யலாம்... JCP இயந்திரத்தை வைத்து எடுக்கலாம்... ஒரு மணி நேரத்தில் வேலை முடியும்... ஆனால் மணிக்கு இரண்டாயிரம் கேட்பான்.... வேறு வழியில்லை என்று தோன்றியது....

அன்று இரவு உறங்கும் முன்பு மான்சியை காண வந்த ஏழுமலையிடம் " தம்பி பக்கத்து ஊர்ல ஜேசிபி இருக்குள்ள... அதை நாளைக்கு எடுத்துட்டு வர சொல்லுபா... மலைப் பாறையா இருக்குறதால கடப்பாரைக்கு அசையலடா தம்பி" என்று மான்சி சொன்னதும் ...

ஏழுமலை வியப்பின் உச்சிக்கேப் போய்விட்டான்.... ஏனென்றால் சத்யனும் அதே யோசனையைத்தான் சொல்லி அனுப்பியிருந்தான்...

மூன்றாம்நாள் காலை வழக்கம் போல் விடிவதற்கு முன்பு குளத்தில் இறங்கி குளித்த மான்சிக்கு மறு பக்கம் மறைவாக அமர்ந்து காவலிருந்தான் சத்யன்

சரியாக எட்டு மணிக்கு ஜேசிபி இயந்திரம் எடுத்துவரப் பட்டு ஒரு மணி நேரத்தில் பள்ளம் எடுக்கப்பட்டது..... நான்கடி ஆழத்தில்.. இரண்டடி அகலத்தில் பள்ளம் எடுத்தனர்... மான்சி அவர்களுக்குப் பணத்தை கொடுத்தனுப்பிவிட்டு... மலையின் அடிவாரத்தில் உருண்டு வந்து விழுந்து கிடக்கும் கற்களை தலையில் சுமந்து வந்து பள்ளத்துல் போட்டு கடக்கால் துர்க்க ஆரம்பித்தாள்... இயந்திரம் தோண்டி கொட்டிய மண் பக்கத்தில் இருக்க... ஒரு வரிசை கல் ஒரு வரிசை மண் என்று பள்ளத்தில் போட்டு ஐந்து அடுக்குகளாக கற்களை அடுக்கி கடக்கால் வேலையை முடித்தாள்...

தீர்க்க சுமங்கலி மான்சி - அத்தியாயம் - 14

அந்த இடத்திலிருந்து சத்யனை தமிழரசியின் வீட்டுக்கு அழைத்து போவதற்குள் சண்முகத்திற்கு போதும் போதுமென்று ஆகிவிட்டது ....

வீட்டுக்குப் போனதும் கலங்கிப் போய் அமர்ந்திருந்த சத்யனின் அருகில் போய் அமர்ந்த சண்முகம் " மச்சான்,, நடந்ததை கேட்டு எனக்கே வயிறு எரியுது,, உன் மனசு எப்புடி கொதிக்கும்னு எனக்கு தெரியும் மச்சான் .... ஆனா அந்த கிழ நாயோட சுயரூபம் தெரிஞ்சு மான்சி இப்பவே வெளியே வந்தது நல்லது.... இல்லேன்னா அவன் மறுபடியும் எதுவும் செய்றதுக்கு முன்னாடி மான்சி விபரீதமா எதாவது முடிவு செய்துட்டுருப்பா..." என்று சண்முகம் சொல்லிக் கொண்டிருக்க....

சத்யன் முகம் அனலாக வார்த்தை கனலாக கொதிக்க. " இல்ல மாப்ள அவனை அடையாளமே தெரியாத மாதிரி வகுந்துடனும்..... புதைக்க எலும்பு கூட கிடைக்காம செய்யனும் " என ஆக்ரோஷமாக கத்தினான்...

சண்முகம் பதட்டமாக சத்யனின் கைப்பற்றி " மச்சான் அதைதான் இப்ப செய்யக்கூடாது .... அந்த நாய் மேல நம்ம விரல் பட்டாலும் அதுக்கு காரணம் மான்சிதான்னு அவ மேல தான் பழி விழும்.... பொறுமையா இரு மச்சான்... அதுக்கு நேரம் வரும்போது நாம யாருனு காட்டுவோம்" என்று சண்முகம் சத்யனை அமைதிப்படுத்த முயன்றான்....

சண்முகம் சொல்வது சரிதான் என்றாலும் சத்யனின் மனம் அமைதியடைய மறுத்தது ,, மான்சி அந்த சமயத்தில் எப்படி கதறியிருப்பாள்?... காவல் நிலையத்திலும் நீதி கிடைக்காமல் அவள் மனம் எப்படி தவித்திருக்கும்? இதையே நினைத்து நினைத்து சத்யனின் மனம் தன் காதலிக்காக கதறியது ... மனதால் கூட வரம்பு மீறக் கூடாது என நான் இருக்க ..... எவனோ ஒரு கிழவன் என் காதலி தொடமுயன்றானா? சத்யனின் கொதிப்பு அதிகமாகிக்கொண்டே போனது....

சண்முகமும் சத்யனும் ரயிலில் கிளம்பி சென்னை வந்து அங்கிருந்து பஸ்ஸில் ஊருக்கு வரும் போது சண்முகம் நிறைய சொல்லித்தான் அழைத்து வந்தான் .. ஏதாவது முயற்சி செய்து மான்சியை சந்திக்க முயன்றால் ....... இப்போதைய சூழ்நிலைக்கு அது அவளுக்கு அவப் பெயரையே ஏற்படுத்தும் என்று விளக்கமாக கூறித்தான் அழைத்து வந்தான்.....

சண்முகம் சொல்வது உண்மை எனப் புரிந்தது ,, மான்சி இருக்கும் ஊருக்குள் கால் வைக்கிறோம் என்ற சந்தோஷத்தை கூட அனுபவிக்காமல் மான்சிக்கு நடந்த கொடுமை சத்யனின் நெஞ்சை வதைத்தது .....

அடுத்த தெருவில் மான்சி அன்றாடம் வேதனைப்பட்டுக்கொண்டிருக்க... அவளைப் பார்க்கக்கூட முடியாமல் சத்யன் நெஞ்சை கல்லாக்கிக் கொண்டு கிடந்தான்.... தன்னால் மான்சிக்கு எந்த கெட்டப் பெயரும் வரக்கூடாது என்பதில் கவனமாக இருந்தான் ..

நிர்கதியாய் தாய் வீட்டுக்கு வந்த மான்சியை ஆறுதலுக்காக கூட அணைத்து துக்கம் போக்கவில்லை யாரும் , பன்னீருக்கு வழக்கம் போல மனைவி சொல்லே வேத மந்திரமாக இருக்க.... தாலியறுத்த தங்கையை பார்ப்பதே தோஷம் என்பது போல் ஒதுங்கினான்.... மஞ்சுளாவின் நாக்கு முன் எப்போதும் இல்லாதளவுக்கு முள் பதித்த சாட்டையாய் சுழன்றது..... மான்சியை பெற்றோர்களுக்கு கண்ணீர் சிந்துவதை தவிர வேறு எதுவும் தோன்றவில்லை ....

மான்சியின் மூத்த சகோதரிகள் இருவரும் வந்து தங்கையை கட்டிக்கொண்டு அழுதனர் ... பெரியவளின் கணவன் குடிகாரன் என்பதால் அவள் தனது தங்கையை தன்னுடன் அழைக்கவில்லை... ஆனால் இளைய சகோதரி பிடிவாதமாக மான்சியை தன்னுடன் வந்து விடும்படி அழைத்தாள் ...

மான்சியோ " வேண்டாம்க்கா ... நான் யாருக்கும் பாரமா இருக்க விரும்பலை,, அப்பா அம்மா இருக்குற வரைக்கும் அவங்களை விட்டு நான் எங்கேயும் வரலைக்கா" என்று மறுத்து விட்டாள் ...

ஆனால் அந்த வீட்டில் இருப்பது எவ்வளவு சவாலான விஷயம் என்பதை போகப் போகத்தான் புரிந்துகொள்ள முடிந்தது..... ஏற்கனவே மான்சியை அவளுக்குப் பிடிக்காது இப்போதோ மான்சி போலீஸ் ஸ்டேசன் வரை வந்து தனது பெரியப்பா குடும்பத்தை அவமானப்படுத்தி விட்டாள் என்ற ஆத்திரமே மான்சியை கொடுமை செய்ய போதுமான ஆயுதமாக இருந்தது .....

பச்சைப் பிள்ளைக்காரி என்று கூட யோசிக்காமல் மான்சியை கடுமையாக வேலை வாங்கினாள் மஞ்சுளா...... பன்னீருக்கு மான்சி என்ற ஒரு தங்கை இருப்பதே மறந்து போய் தன் மனைவியின் பணியாளாக மான்சியை எண்ணினான்....

அவனைச் சொல்லி குற்றமில்லை ... அவனக்கு போதிக்கப்பட்ட மந்திரம் அப்படி... தங்கை என்றால் அது எப்பேர்ப்பட்ட உறவு என்று அவனுக்கு அறிவுருத்த ஆளில்லை...... சோத்துக்கே இல்லேன்னா கூட பரவாயில்லை நீ என்னுடன் படுத்தே கிடந்தால் போதும் என்ற மனைவி அவனுக்கு தெய்வமாக தெரிந்தாள்..... வெறும் அங்கங்களாலேயே அவனை கட்டி வைத்திருந்தாள் மஞ்சுளா...

நாளுக்கு நாள் மஞ்சுளாவின் சித்ரவதைகள் அதிகமானது.... மான்சியால் முடியாத நேரத்தில் மஞ்சுளாவின் நாக்கு சாட்டையாக மாறி மான்சியை வேலை வாங்கும்... " உன்னைய வேலை செய்ய விடாம என் அண்ணன்காரன் வச்சிருந்ததாலதான் உடம்பு தினவெடுத்து வயசானவனாலும் பரவாயில்லைனு என் பெரியப்பனையே வளைச்சுப் போட பார்த்திருக்க...." என்று சத்தமில்லாமல் சம்மட்டியால் அடித்து மான்சியின் இதயத்தை காயப்படுத்தினாள்

அன்றும் அப்படித்தான்,, மஞ்சுளா பன்னீருடன் டவுன் சினிமா தியேட்டருக்கு ஈவினிங் ஷோ போய்விட்டாள்.... மான்சி தனது அம்மா அப்பாவுடன் குழந்தையையும் தூக்கிக்கொண்டு கரும்பு நடவு செய்யும் வேலைக்குப் போய்விட்டாள்...

அன்று மாலை வேலை முடிந்து வீட்டுக்கு வர தாமதமாகிவிட... வந்தது குழந்தைக்கு பால் கொடுத்து தூங்க வைத்துவிட்டு அவசரமாக இரவுக்கான சமையலை ஆரம்பித்தாள் மான்சி .... அவள் பெற்றோர் மாட்டுகளுக்கு தீனி வைத்து பால் கறக்க போய்விட்டனர்.....

மான்சி வேக வேகமாக சமையல் செய்யும் போதே மஞ்சுளா வந்துவிட்டாள்... சினிமா முடிந்து பஸ் நெரிசலில் சிக்கி களைத்துப் போய் பசியோடு வந்தவளுக்கு மான்சி அப்போதுதான் சமையல் செய்வதைப் பார்த்ததும் ஆத்திரமாய் வர " ஏன்டி முண்டச்சி,, இவ்வளவு நேரமா எவன்கூட ஊர் மேஞ்சிட்டு வந்து இப்பதான் சோத்தை பொங்குற?" என்று கேட்க...

அன்று முழுவதும் ஓய்வின்றி உழைத்த களைப்பும் ... எடுத்து சென்ற உணவு போதாமல் வயிற்றை பசி வாட்ட... மான்சிக்கு முதன் முதலாய் ரோஷம் தலைத்தூக்கியது " அண்ணி வார்த்தையை அளந்து பேசுங்க? ... நான் ஒன்னும் சினிமாவுக்குப் போய்ட்டு ஊரை சுத்திட்டு வரலை.... காலையிலருந்து கல்லும் மண்ணும் சுமந்து நாயாட்டம் கஸ்டப்பட்டுட்டு வர்றேன் " என சுருக்கென்று சொல்ல...

மான்சியின் எதிர் வாதம் பிடிக்காமல் போனது மஞ்சுளாவுக்கு ... " என்னடி ஓடுகாலி வாய் நீளுது?... பெரிய உத்தம பத்தினியாட்டம் ரோஷம் வருது? சொத்துக்காக வயசான என் பெரியப்பனை மடக்கிப் போடப் பாத்த உன் கதைதான் ஊருக்கே தெரியுமே? அடங்கி பதில் சொல்றதான இரு இல்லேன்னா வீட்டை விட்டு போடி வெளிய" என்று மஞ்சுளா நாக்கில் ஈரமின்றி வார்த்தைகளை வாறியிரைக்க ...

மான்சியின் கோபம் அதிகமானது " வீட்டுக்கு வந்த மருமகளை கையைப் பிடிச்சு இழுக்குற நாரப் பரம்பரம்பரையில இருந்து வந்தவங்க தான நீங்க ? உங்ககிட்ட போய் நல்ல வார்த்தையை எதிர்பார்த்தது என் தப்புதான்... அதோட நான் ஏன் வீட்டை விட்டு போகனும்... இது என் அப்பன் சம்பாதிச்ச வீடு... இங்க இருக்க எனக்கும் உரிமையிருக்கு... அதனால என்னை வெளிய பேக சொல்லாதீங்க" மான்சி சூடாக பதில் தந்தாள்...

பெண்கள் சண்டையில் நான் தலையிடலை என்பது போல் தோட்டத்தில் ஆய் போய்விட்டு வந்த மகனுக்கு கழுவிக்கொண்டிருந்தான் பன்னீர்... அப்போதுதான் வீட்டுக்குள் நுழைந்த பெற்றவர்கள் மருமகளின் குணம் அறிந்து .. மான்சியின் அருகில் சென்று மகளை அடக்கினர்...
ஆனால் மஞ்சுளாவின் கோபம் வெறியாக மாறியது... " அடிப்பாவி சண்டாளி.... நீ ஊர்மேஞ்ச கதையை மறைச்சு என் குடும்பத்து மேலயே பழி போடுறியா?" என்றவள் மான்சி இந்த வீட்டில் இருக்க உரிமையிருக்கு என்று கூறியதை அப்படியே மாற்றி " அப்போ இந்த வீட்டுலயும் இருக்குற காணி நிலத்துலயும் உனக்கும் பங்கிருக்குனு சொல்றியாடி?.... அடிப்பாவி ,, சொத்துல பங்கு வேணும்னு நினைக்கிறவளுக அதுக்கு ஏன்டி இன்னொருத்தன் வீட்டுப் பொண்ணை உன் அண்ணனுக்கு கட்டி வைக்கனும்,, நீங்க மூனுபேருமே கட்டிகிட்டு இந்த வீட்டுலயே குடும்பம் நடத்த வேண்டியது தானே?" என்று தகாத வார்த்தைகளை அள்ளி வீசினாள்

அந்த அமில வார்த்தைகள் கொடுத்த அதிர்ச்சியில் இருந்து மீளமுடியாமல் மான்சி அப்படியே நிற்க .... மஞ்சுளாவின் ஆத்திரம் வேறு மாதிரியாக திரும்பியது....

அப்போது தான் வந்த பன்னீரின் அருகில் சென்றவள் அவன் சட்டை காலரைப் பிடித்து " அடப்பாவி மனுஷா அவ பேசுறதை எல்லாம் கேட்டுகிட்டு குத்துக் கல்லு மாதிரி நிக்கிறயே? நீயெல்லாம் ஆம்பளையா? ஆனா எனக்கு ரோஷம் இருக்கு... இனிமே நானும் என் புள்ளைகளும் ஒரு நிமிஷம் கூட இந்த வீட்டுல இருக்க மாட்டேன் ... இந்த வீட்டுல ஒன்னு நான் வாழனும் இல்ல அந்த வேசி முண்ட வாழனும் " என்று சவாலாக உரைத்தவள் வேகமாக உள் அறைக்கு சென்று தனது துணிகளை அள்ளி மூட்டையாக கட்டினாள்...

ஏற்கனவே மான்சி வீட்டில் உரிமை கொண்டாடி பேசியதால் எரிச்சலைடைந்திருந்த பன்னீர் ... மஞ்சுளாவின் இந்த நாடகத்தில் மதி மயங்கி மான்சியின் கூந்தலைப் பற்றியிழுத்துக்கொண்டு வாசற்படி வரை தள்ளிக்கொண்டு வந்தவன் " என்னடி சொன்ன ? இந்த வீட்டுல உனக்கும் உரிமையிருக்கா? அதையும் பார்க்கலாம்.... போலீஸ் ஸ்டேஷன்ல குடும்ப மானத்தை நாரடிச்சப்பவே உன்னை வெஷம் வச்சு கொன்னுருக்கனும்... அய்யோப் பாவம் கூடப்பிறந்த பாவத்துக்கு வீட்டுக்கு கூட்டிட்டு வந்தேன்... ஆனா இனி உனக்கு இந்த வீட்டுல இடமில்லை ... வெளியே போடி" என்று மான்சியைப் பிடித்து இழுத்து தெருவில் தள்ளினான்....

மான்சி நடுத் தெருவில் வந்து விழ... அக்கம் பக்கம் இருந்தவர்கள் பறிதாபத்துடன் மான்சியை நெருங்கி தூக்க முயன்றனர்..... ஆவேசமாக தெருவில் இறங்கிய பன்னீர் " யாராவது அவளுக்கு சப்போர்ட் பண்ணீங்க அவ்வளவுதான்... இது எங்க குடும்ப பிரச்சனை... எவனும் இதுல தலையிடக் கூடாது" என்று கத்தியதும் வந்தவர்கள் அனைவரும் ஒதுங்கிப் போயினர்

தன் கையை ஊன்றி மான்சி எழுந்து நின்றாள் .... சகோதரனை ஒருப் புழுவைப் போல பார்த்தவள் .... " நான் ஒரு ஆண்பளைப் பொண்ணாப் பொறந்து இன்னொரு ஆம்பளைக்கு முந்தி விரிச்சவ ..... உன்னை விட பல மடங்கு மானஸ்தி நான் .... இனி செத்தாலும் உன் வாசப்படி ஏற மாட்டேன்" என்று அடித் தொண்டையில் கத்தியவள் அவளது குழந்தையை தோளில் போட்டுக்கொண்டு மகனின் வார்த்தையை மீறி மகளை நெருங்க முடியாமல் அழுது கொண்டிருந்த தனது தாயை நெருங்கியவள் " ஆத்தா ,, இனி உனக்கு ரெண்டு மக ஒரு மகன்தான்... ஒருத்தி செத்துட்டதா நெனைச்சுக்க.... இனி நீங்க செத்தாலும் நான் வரலை ... நான் செத்தாலும் நீங்க வராதீங்க" என்றவள் குழந்தையை வாங்கி தனது தோளில் போட்டுக்கொண்டு நிமிர்வுடன் தெருவில் இறங்கினாள் ...

தனது பெரியப்பனை அவமானப்படுத்திய மான்சியை வெளியேற்றிய சந்தோஷத்தில் உள்ளுக்குள் குதித்துக் கொண்டிருந்த மஞ்சுளா.... இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று அவசர அவசரமாக மான்சியின் உடமைகள் மற்றும் உடைகளை அள்ளி வந்து தெருவில் வீசினாள்.... பொருட்கள் தெருவில் வீசப்பட்டதும் பன்னீர் தனது பெற்றோரை பிடித்து வீட்டுக்குள் தள்ளிவிட்டு கதவை அறைந்து மூடினான் ...

இரவு சரியாக மணி எட்டரை ஆகியிருந்தது ... தெருவில் வீசப்பட்ட பொருட்கள் சிதறிக் கிடந்தது .... அத்தனையும் சென்னையில் மான்சிக்காக கோபால் வாங்கியவைதான்... போன வாரம் தான் சுகுனா அந்த வீட்டை காலி செய்து அந்தப் பொருட்களை கொண்டு வந்து மான்சியிடம் கொடுத்துவிட்டுப் போயிருந்தாள்....

மான்சி தன் மகனை ஒரு துணியில் சுருட்டி தெருவில் படுக்க வைத்துவிட்டு தனது பொருட்களை சேகரிக்க ... சில ஈரமுள்ள நெஞ்சங்கள் ஓடி வந்து உதவினார்கள்... பாத்திரங்கள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு ஒரு மூட்டையாக கட்டினார்கள்

பன்னீரின் வீட்டுக்கு நாலு வீடு தள்ளியிருந்த காமாட்சியம்மாள் என்ற வயதான முதியவள் மான்சியை நெருங்கி " கண்ணு நான் தனிக்கட்டை தான்.... நீயும் உன் மவனும் என் கூட வந்து என் வீட்டுல தங்கிக்கங்க கண்ணு" என்று கண்கலங்க அழைத்தாள்....

மான்சி தலையசைத்து மறுத்தாள் " வேணாம் ஆயா... என் அண்ணிகாரி உன்னையும் சேர்த்து பேசுவா,, என் கஸ்டம் என்னோட போகட்டும்... இந்த சாமானுங்களை வைக்க மட்டும் கொஞ்சம் இடம் குடுங்க ,, ஒரு வாரத்துல மலைப் பக்கமா ஒரு குடிசையைப் போட்டுகிட்டு சாமானுங்களை எல்லாம் எடுத்துகிட்டுப் போயிடுறேன்" என்று கண்ணீருடன் கெஞ்சுதலாய் கேட்க ...

" சரிம்மா கொண்டு வந்து வைச்சுக்க,, ஆனா இந்த ராவுல கைக் குழந்தைய வச்சுகிட்டு நீ எங்கம்மா போவ?" என்று காமாட்சிப் பாட்டி கேட்க...

" பள்ளிக் கூடத்து தின்னையில மலையில கல்லு உடைக்க வெளியூர்லருந்து வந்தவங்கல்லாம் குடும்பத்தோடப் படுத்திருக்காங்க... அவங்கக் கூடப் போய் நானும் இருந்துக்கிறேன் ஆயா" என்றவள் அக்கம் பக்கத்தவரின் உதவியுடன் தனது பொருட்களை காமாட்சிப் பாட்டியின் வீட்டில் வைத்து விட்டு இரண்டு பழைய புடவைகளை மட்டும் எடுத்துக்கொண்டு பள்ளிக்கூடத்திற்கு சென்றாள்...

பள்ளிக்கூட வராண்டாவில் கல் உடைக்க வந்த வெளியூர் குடும்பத்தினர் எல்லோரும் படுத்திருக்க.. ஓரமாய் இருந்த இடத்தில் புடவையை விரித்து குழந்தை அதில் கிடத்தி விட்டு பக்கத்தில் இவளும் படுத்துக் கொண்டாள் ...

அன்று முழுவதும் அரை வயிறு கூட உண்ணாமல் உழைத்ததால் குழந்தையின் பசியாற்றுவதற்கு பால் கூட சுரக்கவில்லை மான்சியின் மார்புகளில் .. .. இரவு முழுவதும் பசியால் அழும் குழந்தைக்கு பள்ளிக் கூடத்து குழாயில் தண்ணீர் பிடித்து குடிக்கக் கொடுத்துவிட்டு இவளு பச்சைத் தண்ணீரால் தனது வயிற்றை நிரப்பிக் கொண்டு படுத்துக் கொண்டாள்

ஆனால் மான்சியின் கண்கள் சொட்டுக் கூட நீரை வடிக்கவில்லை .... நெஞ்சு முழுவதும் வைராக்கியம் விஷம் போல் பரவி உறுதிக்கு வலு சேர்த்தது ... இதே ஊர்ல வாழ்வேன்..... என் பிள்ளைக்காக வாழ்வேன் .... என்னை ஏசியவர்கள் முன்பு தலை நிமிர்ந்து வாழ்வேன்.... எனக்கு வேசிப் பட்டம் கொடுத்தவர்களின் நினைப்பு மண்ணாக்கி விட்டு அதன் மேல் கோபுரம் கட்டிக்கொண்டு வாழத்தான் போகிறேன் ......

ஆதி என்பது தொட்டிலிலே..
வரும் அந்தம் என்பது கட்டிலிலே...

நீதி என்பது மனிதனிடம்
அவன் நிற்கும் இடமோ இறைவனிடம்..

அத்தை மாமன் கனவுகளும்
உடன் அண்ணன் தம்பி உறவுகளும்..
சொத்துக் கிடைத்தால் வருவதுண்டு..
அது வற்றும் பொழுது மறைவதுண்டு..

அது வற்றும் பொழுது மறைவதுண்டு..

ஆதி என்பது தொட்டிலிலே..
வரும் அந்தம் என்பது கட்டிலிலே...

பந்து ஜனங்கள் பரிவாரம்..
பெரும் பதவி மோக அதிகாரம்..
இந்த உலகின் அலங்கோலம்..
இதில் எந்த உறவும் சிலகாலம்..

எந்த உறவும் சிலகாலம்

ஆதி என்பது தொட்டிலிலே..
வரும் அந்தம் என்பது கட்டிலிலே...

வெள்ளிக்கிழமை வருமென்று
ஒன்று திங்கட்கிழமை விளக்கேற்றி..
கண்ணை விழித்து காத்ததம்மா
தினமும் எண்ணெய் விடத்தான் மறந்ததம்மா
எண்ணெய் விடத்தான் மறந்ததம்மா.....

எண்ணெய் விடத்தான் மறந்ததம்மா.....

ஆதி என்பது தொட்டிலிலே..
வரும் அந்தம் என்பது கட்டிலிலே...

தீர்க்க சுமங்கலி மான்சி - அத்தியாயம் - 13

பஞ்சாப் அமர்தசரஸ் பொற்கோவிலின் அழகை ஜொலிக்கும் இரவு விளக்கின் அலங்காரத்தில் பார்த்துக்கொண்டிருந்தனர் சண்முகமும் சத்யனும்,,, அவர்களுக்கு சற்று தள்ளி தமிழரசியும் அவள் கணவனும் கோயிலின் அழகைக் கூட ரசிக்காமல் தங்களுக்குள் எதையோ பேசிச் சிரித்தபடி இருந்தனர்....

தமிழரசிக்கு திருமணம் ஆகி பத்து நாட்கள் மறுவீடு விருந்து அது இதுவென்று முடிந்துவிட..... மிலிட்ரியில் வேலை செய்த மாப்பிள்ளைக்கு லீவும் முடிந்தது.... மாப்பிள்ளை வேலை செய்யும் பஞ்சாப்பில் ஏற்கனவே மிலிட்ரி குவாட்ரஸில் வீடு கொடுத்திருந்ததால் தமிழரசியையும் அழைத்துக்கொண்டு கிளம்பினான்...

புதிதாக குடித்தனம் செல்லும் பெண்ணின் தாய்வீடு சார்பாக இருவர் வந்து புதுக்குடித்தனம் வைத்துவிட்டு போகுமாறு சம்மந்தி வீட்டில் அழைத்தார்கள்.... தெரியாத ஊர், புரியாத பாஷை, புது இடத்தில் தமிழரசி மிரண்டு விடாமல் இருக்க உடன் யாராவது போவதுதான் முறை என்று எல்லோரும் சொல்லிவிட அன்பரசியும் சண்முகமும் போவது என்ற முடிவு அன்பரசி கர்ப்பிணி என்பதால் உடனே மாற்றப்பட்டு சத்யனும் சண்முகமும் தம்பதிகளுடன் கிளம்பி பஞ்சாப் வந்தனர்....

முடிந்த வரை ரயிலில் கொண்டு வந்த பொருட்களை எல்லாம் புதிய வீட்டில் வைத்துவிட்டு ... இன்னும் வாங்கவேண்டிய சிலவற்றை அங்கேயே வாங்கி கொடுத்தான் சத்யன்.... ஒருவழியாக குடும்பத்தை செட்டில் செய்துவிட்டு பஞ்சாப்பை சுற்றிப்பார்க்க கிளம்பி இதோ இன்றோடு இருபது நாட்கள் ஆகிவிட்டது..... ஆனால் சுற்றிப் பார்க்க ஏராளமான இடங்கள் இருந்தபடியால் இருபது நாட்களும் இருபது நிமிடம் போல் ஓடிவிட்டிருந்தது...

பார்க்க பார்க்க அலுக்காத பஞ்சாப் மாகாணம்.... நிறைய பழைமையும் கொஞ்சம் புதுமையும் கலந்த கட்டிடங்கள்..... சுட்ட சுண்ணாம்பால் கட்டப்பட்ட கிராமத்து வீடுகள்.... கிராமத்துப் பெண்களின் கை வளையல்களும்... காதணிகளையும் கண்டு இவ்வளவு பொருட்களை எப்படி சுமக்கிறார்கள் என்று வியந்து போனான் சத்யன்....

அனலில் வாட்டிய சாப்பாத்தியும் பருப்பினால் செய்யப்பட்ட உணவுமே மூன்று வேலையும் கூட சாப்பிட்டார்கள் ... சத்யனுக்கும் சண்முகத்துக்கும் எப்படா ஊர் போய் சேருவோம் என்றிருந்தது.... இன்னும் ஆறுநாட்கள் கழித்து ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்து கொடுத்திருந்தான் தமிழரசியின் கணவன்

சத்யனால் பொற்கோயிலின் அழகை சிறிது நேரம் தான் ரசிக்க முடிந்தது ,, அதன்பின் வழக்கம் போல மான்சியின் ஞாபகங்கள் வந்து நெஞ்சுக்குள் குடைய சத்யன் பார்வை வேதனையுடன் நிலையின்றி எதையோ வெறித்தது ....

யார் பேச்சையும் கேட்காமல் அவளைப் போய் பார்த்துவிட்டே வந்திருக்கலாமோ? என்று மனம் அதே பழைய கேள்வியை கேட்க ,, பதில் சொல்லமுடியாமல் வேதனையுடன் கண்மூடினான்......

அன்று தமிழரசியின் திருமணம் முடிந்து மற்ற சம்பிரதாயங்கள் முடிந்து மணமக்களோடு வீடு வந்து சேர்ந்த போது மாலை ஆறுமணியாகிவிட்டது,, மணமக்களை வீட்டுக்குள் விட்டுவிட்டு சண்முகமும் சத்யனும் டீ குடிபதற்கென எட்டரை மணி வாக்கில் ரோட்டுக்கு வந்தபோதுதான் டீக்கடையில் பேசிக்கொண்டதை வைத்து மான்சியின் கணவன் இறந்து போன விஷயமே சத்யனுக்கு தெரியவந்தது....

அதிர்ச்சியில் நெஞ்சு குலுங்கிப் போய் நின்றிருந்தவனை சண்முகம் தான் புரிந்துகொண்டு ஓரமாக இருந்த வாராபதிக்கு தள்ளிக்கொண்டு வந்தான்... வராபதியின் மேல் அமர்ந்து முகத்தை மூடிக்கொண்டு குமுறியவனை எப்படி தேற்றுவது என்று புரியாமல் தவிப்புடன் சத்யன் அருகில் அமர்ந்தான் சண்முகம்...

" அவ மட்டும் என்ன பாவம் செஞ்சான்னு தெரியலையே? அவ வாழ்க்கை மட்டும் ஏன் இப்புடி சீரழியுது? எல்லாம் என்னாலதான்" என்று நெற்றியில் அறைந்து கொண்டு அழுத சத்யனின் தோளில் ஆறுதலாக தட்டிய சண்முகம்... " நீ என்ன மச்சான் செய்த? எல்லாம் அவ விதி" என்றான்
" இல்ல மாப்ள விதியில்ல,,, எல்லாத்துக்கும் நான்தான் காரணம்.... அன்னைக்கு நைட்டு அவ என்னைய தேடி வந்தப்பவே கூட்டிப் போய் ஊர் கோயில்ல வச்சு தாலிய கட்டி என் வீட்டுக்கு கூட்டிவந்திருக்கனும்..... அவளும் நானும் சேர்ந்தே அன்புக்கும் தமிழுக்கும் மாப்பிள்ளை தேடி கல்யாணம் பண்ணிருக்கனும்.... அம்மாக்கு செய்த சத்தியம் ஒரு பக்கம்... என்னோட கோழைத்தனம் மறுபக்கம்னு என் கையை கட்டிப் போட்டிருச்சு... இப்ப அவ வாழ்க்கையும் இப்புடி சீரழிஞ்சு போச்சு.... அவ நெனைப்புல நானும் ஒவ்வொரு நாளும் செத்துக்கிட்டு இருக்கேன்... பாவம் மாப்ள அவ... இனிமே என்ன செய்வாளோ தெரியலை? " மனதில் இருந்தவற்றை கொட்டிவிட்டு சத்யன் வேதனையுடன் கண்ணீர் விட்டான்....

இத்தனை நாட்களில் சண்முகத்துக்கு எல்லாமே தெரியும் ,, அன்பரசி ஓரளவுக்கு சொல்லியிருந்தாலும்.... சத்யன் சண்முகத்தின் மீது கொண்ட நட்பால் மிச்சத்தை சொல்லியிருந்தான் ,, சத்யனின் மனதில் மான்சி எவ்வளவும் ஆழமாக வேரோடிப் போயிருக்கிறாள் என்று தெரியும்....

" சத்யா அழுது பிரயோசனமில்ல ... அவ புருஷனுக்கு விதி அவ்வளவுதான்.... மான்சி இப்புடித்தான் வாழனும்னு ஆண்டவன் எழுதிட்டான்... அதை நாமளால மாத்த முடியுமா? தங்கச்சிக்கு கல்யாணத்தைப் பண்ணிட்டு நீ இப்புடி உட்காந்து அழுதா பார்க்குறவங்க என்ன நினைப்பாங்க? தயவுசெஞ்சு உள்ளுக்குள்ளயே எல்லாத்தையும் போட்டு புதைச்சுட்டு எழுந்து வா மச்சான்...ஆகவேண்டியத பார்போம்" என்று ஆறுதல் கூறி சத்யனை அழைத்து சென்றான்...

மறுநாள் காலை மான்சியைப் பார்த்து ஆறுதலுக்காகவேனும் துக்கம் விசாரித்து வரலாம் என்று சத்யன் கிளம்பிய போது ... பூமாத்தாளுக்கு மான்சியின் கணவன் இறந்த விஷயம் தெரியும் என்பதால்... மகனின் முகம் பார்த்து ஓரளவுக்கு விஷயத்தை யூகித்திருந்தாள்.... கிளம்பிய மகனை தடுத்து " நீ இப்ப எங்கப் போறனு தெரியும்டா மவனை... ஆனா கல்யாணத்துக்குப் போட்ட பந்தல் கூட பிரிக்கலை அதுக்குள்ள எவ வீட்டுக்கு எலவு விசாரிக்கப் போறியே? கல்யாணம் ஆன என் மக வாழ்க்கை நல்லாருக்கனுமா? இல்லை நாசமாப் போகனுமா? நீயே முடிவு பண்ணிக்க" என்று கத்தினாள்...

அதற்குள் சத்யனின் சித்தப்பா வந்து " டேய் சத்யா ஒறவு முறைல எலவு விழுந்தா கூட கல்யாண வீட்டுலருந்து போய் விசாரிக்க கூடாதுடா... மூனு மாசம் ஆனதும் தான் போய் கேட்கனும்" என்று தடுத்தனர்...

இரவு போல சத்யனை வெளியே தள்ளிக்கொண்டு வந்து கழனிக்கு கிளம்பினான் சண்முகம் .... வருப்பில் போய் அமர்ந்தவுடன் " மச்சான் உன் மனசு எனக்குப் புரியுது... ஆனா அந்தப்புள்ள இப்ப இருக்குறது அதோட மாமியார் வீட்டுல... அங்கபோய் நீ என்னன்னு கேட்ப? அதுவும் கிராமம் தான் மச்சான்... அந்த பொண்ணுக்கு வீன்பழி வர்ற மாதிரி நாமளே நடந்துக்க கூடாது.... அதுமட்டுமில்ல.. இப்ப அந்தபுள்ள இருக்குற நிலைமையில நீ போய் துக்கம் கேட்டா ..... இவன் முன்னாடி நம்மா இந்த கதில நிக்கிறமோனு அந்த பொண்ணுக்கு வேதனை தான் அதிகமாகும் .... அதைவிட நீ போய் விசாரிக்காம இருக்குறது தான் நல்லது மச்சான்" என்று தெளிவாக சத்யனுக்கு எடுத்துரைத்தான்....

சண்முகம் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை என்பது சத்யனின் அறிவுக்குப் புரிந்தது... ஆனால் தான் நேசிப்பவள் துக்கத்தில் இருக்கும்போது அவளுக்கு ஆறுதல் கூட சொல்லமுடியாத சத்யனின் மனது கிடந்து துடியாய் துடித்தது.....

சத்யன் மவுனமாக கலங்கிய கண்களை துடைத்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.... அப்போது பக்கத்து கழனிக்காரர் வந்து நேற்று மான்சியின் கணவனின் இறுதி சடங்கில் கலந்து கொண்டதையும் ... மான்சியின் கதறல் கண்டு ஊரே அழுததைப் பற்றியும் விரிவாக அவர்கள் இருவரிடமும் சொல்ல... தன் கணவனை இவ்வளவு நேசித்தாளா மான்சி? இந்த ஒரு வருடத்தில் என் நினைவு ஒரு துளிகூட அவளை பாதிக்கவில்லையா? என்றுதான் எண்ணத் தோன்றியது சத்யனால்

பக்கத்து கழனிக்காரர் சற்றுநேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு போய் விட.... " ஏன் மச்சான் ... இவரு சொல்றதைப் பார்த்தா அந்த பொண்ணு தன் புருஷன் கூட நல்லாத்தான் வாழ்ந்திருக்கும் போலருக்கு,, நீதான் அவ நெனப்புல இங்க செத்துகிட்டு இருக்க... ஆனா அவ உன்னை மறந்து வருஷக்கணக்கா ஆகிடுச்சுனு நினைக்கிறேன்" என்று சண்முகம் சற்று சலிப்புடன் சொல்ல ...

சத்யன் அவனுக்கு பதிலேதும் சொல்லாமல் தலை கவிழ்ந்தான்... அவனுக்கும் இப்போது தானே தெரிந்தது மான்சி தன் கணவனை இவ்வளவு நேசித்தாள் என்பது... அப்படினா அன்னைக்கு ராத்திரி என்னை கல்யாணம் பண்ணிக்கனு கேட்டு நான் மறுத்தவுடனேயே தன் மனசை மாத்திக் கிட்டாளா? அதெப்படி முடியும்? என் மனசு இன்று வரை மாறவே இல்லையே? சத்யனுக்கு யோசனையில் மூளை குழம்பியது....

சண்முகம் அவன் மனதை படித்தவன் போல் " பொண்ணுங்களால எப்புடி நிமிஷத்துல மனசை மாத்திக்க முடியுதுனு நெனைக்கிறயா மச்சான்? அதான் கணவனே கண்கண்ட தெய்வம் பாலிஸி,, அவங்கல்லாம் அப்படி இருக்குறதால தான் ஆண்கள் தலை நிமிர்ந்து நடமாட முடியுது... நெஞ்சுல ஒருத்தனையும் நிஜத்துல ஒருத்தனையும் நினைச்சு வாழுறது கிட்டத்தட்ட வேசித்தனம் மாதிரி மச்சான்,, நெனைச்சவன் கிடைக்கலைனா கிடைச்சவனை நெனைக்குறது தான் நம்ம தமிழர் பண்பாடு.... நல்லாருக்கும் போதே தாலி கட்டின புருஷனுக்கு துரோகம் செய்யுற இந்த காலத்துல உசுரா நேசிச்ச நீ வேணாம்னு சொன்னதும் எப்படிப்பட்டவனா இருந்தாலும் என் புருஷன் தான் உசத்தினு அவனுக்காக வாழ்ந்து அறுத்த மான்சி தான்யா நெசத்துல பத்தினி... ரொம்ப ஒசத்தி மச்சான் உன் மான்சி....ஆனா இனிமேலும் அவளை நீ நினைச்சு வாழுறது தப்புனு தான் சொல்வேன்... ஏன்னா இப்படிப்பட்ட பொண்ணு புருஷன் செத்தப் பிறகும் கூட அவன் நெனப்புல வாழனும்னு தான் முடிவு பண்ணுவா.... நீ அந்த முடிவை உடைக்கனும்னு நினைச்சா நீதான் உடைஞ்சு போவ மச்சான்" சண்முகம் மிகத் தெளிவாகப் பேசினான் ,,

அவன் மான்சியைப் பற்றி பெருமையாகவும் உயர்வாகவும் சொன்னது சத்யனுக்கு சந்தோஷமாக இருந்தாலும் .... மான்சியின் சகாப்த்தத்தில் சத்யனின் அத்யாயம் இருக்காது என்பது போல் சண்முகம் சொன்னது வேதனையாகத்தான் இருந்தது ... என்றாவது ஒருநாள் என் காதல் அவள் மனதை மாற்றாமலா போய்விடும்? அந்த நாளுக்காக காத்திருப்பின் மரணம் வந்து எனை மடியேந்தும் வரை... உறுதி உரமாக மாற காதல் கனலாக எரிந்தது சத்யனுக்குள்.....

அப்போதைக்கு மான்சி சம்மந்தப்பட்ட சம்பவங்களை மறக்க வைப்பது போல் மறு வீடு விருந்தெல்லாம் முடிந்து தமிழரசியை பஞ்சாப்பில் தனிக்குடித்தனம் வைக்கும் வேலை வந்தது.... மான்சியின் துக்கத்தை தனது துக்கமாக கருதி வேதனையுடன் புறப்பட்டு வந்தான் சத்யன் ...

பாரம்பரியம் மிக்க பஞ்சாப்பின் இயற்கை காட்சிகள் கூட ஆழப்பதியாமல் போனது சத்யனுக்கு..... இன்றும் அப்படித்தான் அசிரத்தையாக வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தான் சத்யன்

அப்போது சண்முகத்தின் மொபைல் போன் ஒலிக்க... எடுத்து பேசிய சண்முகம் சத்யன் பக்கம் திரும்பி " உன் தங்கச்சி தான் மச்சான்" என்றான் சிரித்தபடி... சத்யனும் புன்னகைத்து ம் பேசு என்பது போல் தலையசைத்துவிட்டு நாகரீகத்துடன் சற்றுத் தள்ளிப் போய் நின்று மீண்டும் மனதில் பதியாத காட்சிகளை வேடிக்கைப் பார்த்தான்

மனைவியுடன் பேசிக்கொண்டிருந்த சண்முகம் திடீரென்று கோபமாக " அந்தத் ***** மவன சும்மாவா விட்டாங்க உன் ஊர் ஆளுங்க... நானாயிருந்தா ஆறு கூறா அந்த நாதாரிப் பயலை வகுந்திருப்பேன் ... அவ அண்ணன் அந்த பொட்டைப் பயலுக்கு கூடவா ரோஷம் வரலை?" என்று கத்தியதும் சத்யன் பயந்து போய் வேகமாக ஓடி வந்தான்...

சண்முகத்தின் தோள் தொட்டு " என்ன மாப்ள பிரச்சனை? வீட்டுல எதுவும் தகராறா? யாருக்கு என்னாச்சு?"என்று பதட்டமாக கேட்க...

கோபத்தில் கத்திவிட்டதை அப்போதுதான் உணர்ந்த சண்முகம் " அன்பு நான் அப்புறமா பேசுறேன்" என்று இணைப்பை துண்டித்து விட்டு சத்யனிடம் திரும்பி " யாருக்கும் ஒன்னுமில்லை மச்சான்... இது வேறப் பிரச்சனை" என்று சமாளித்தான்.....

இது சமாளிப்பு என்று புரிய " இல்ல எதையோ மறைக்கிறீங்க மாப்ள... உங்களுக்கு அவ்வளவு சீக்கிரமா கோபம் வராதே.... சொல்லுங்க யாருக்கு என்னாச்சு?" சத்யன் வற்புற்த்தி கேட்டதும்..... சங்கடமாய் அவனைப் பார்த்தான் சண்முகம்... சத்யனுக்குள் ஏதோவொரு மின்னலடிக்க " மான்சிக்கு தான மாப்ள? மான்சிக்கு என்னாச்சு?" என கேட்க....

இனி மறைக்க முடியாது என புரிய " மான்சிக்குதான் மாப்ள... அவ மாமனார் அந்த கேப்மாரிப் பய மான்சிகிட்ட சில்மிஷம் பண்ணிருக்கான் ... இந்த பொண்ணு எதுத்து கேட்டதும் நைட்டு பூராவும் ரூமுக்குள்ள போட்டு அடைச்சு வச்சிருக்கான் போல... காலையில தப்பிச்சு டவுன் மகளிர் காவல்ல போய் புகார் குடுத்திருக்கு மான்சி... அவளுகளும் விசாரிக்கிறேன்னு சொல்லிட்டு அந்த கிழட்டு நாய கூட்டி வந்து பணத்தை வாங்கிகிட்டு விட்டுட்டாங்களாம்... பணம் வாங்குனது மட்டுமில்ல பழியை மான்சி மேலயே திருப்பிருக்காளுங்க" என சொல்லிவிட்டு சண்முகம் தயங்க.....

அடைத்த நெஞ்சை பெருவிரலால் அழுத்தியபடி " என்ன பழி போட்டாங்க?" என்று சிறுத்துபோன குரலில் கேட்டான் சத்யன்....

" அது..... சொத்துக்கு ஆசைப்பட்டு மான்சிதான் அதோட மாமனாரை கூப்பிட்டுச்சுனு கேஸையே திருப்பிருக்காங்க... அவ அண்ணன் அண்ணி ரெண்டு பேருமே இதுக்கு உடந்தை போலருக்கு.... கடைசில கண்ணீரோட கைக்குழந்தையை தூக்கிகிட்டு அம்மா அப்பாக் கூட வந்துருச்சாம் மான்சி" என்று அன்பரசி கூறிய தகவல் எல்லாவற்றையும் கூறி முடித்தான் சண்முகம்....

சத்யனின் உலகமே இருண்டு போனது.... தேவதையாக தன் மனதில் வாழும் மான்சிக்கா வேசிப் பட்டம்? சத்யனின் உயிரே ஒடுங்கிப் போனது போல் " அய்யோ மான்சி உனக்கா இந்த கதி?" என்றபடி தலையில் அடித்துக்கொண்டு தரையில் சரிந்தான் சத்யன்

" இன்னும் என்ன செய்ய ?

" என்னோடு உன்னை இருக்கச் செய்ய !

" கண்ணே என் கண்ணுக்குள் உன்னை சிறை வைத்து....

" இமைக் கதவை பூட்டி வைக்கட்டுமா?

" மீண்டும் மீண்டும் உயிர்த்தெழுகிறேன் !

" உன்னை அடைய வேண்டும் என்பதற்காகவே !

" நான் அலை அல்ல அன்பே,, கடல்!!

Wednesday, January 27, 2016

தீர்க்க சுமங்கலி மான்சி - அத்தியாயம் - 12

ஒருநாள் காலையில் வீட்டு வேலைகளை முடித்துவிட்டு குளிக்க செல்லும் மான்சி குளித்துக்கொண்டிருக்கும்போது யாரோ தன்னை உற்று நோக்குவது போலிருக்க .. பதட்டத்துடன் திரும்பி கதவைப் பார்த்தாள்... இத்துப் போன தகர கதவின் ஓட்டைகள் வழியாக ஒரு ஜோடி கண்கள் சட்டென்று மறைய .. மான்சி விதிர்த்துப் போனாள்... யாராயிருக்கும்? என்று அச்சத்துடன் அவசரமாக உடையை மாற்றிக்கொண்டு வீட்டுக்குள் வந்து பார்த்தபோது காலையில் கழனிக்குப் போவதாக சொல்லிவிட்டு சென்ற மாமனார்தான் கூடத்தில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தான்...

இவரா இப்படி? என்ற குழப்பத்துடனேயே மான்சி தனது அறைக்குள் போய்விட்டாள் .... அடுத்த இரண்டு நாட்கள் கழித்து அதே ஜோடி கண்கள் மான்சி குளிப்பதை வெறிக்க... மான்சி வெடுக்கென்று கதவை திறந்தாள்... வெளியே நின்றிருந்த கோபாலின் அப்பா " நீதான் குளிக்கிறயாம்மா? ஆளை காணோமேனு தேடி வந்தேன்" என்று இளித்தபடி வீட்டுக்குள் சென்றான்...

மான்சிக்கு ஒன்றும் புரியவில்லை....

வேலியே பயிரை மேயும் இந்த கேவலத்தை யாரிடம் சொல்வது.... ஊருக்கு பெரிய மனிதனாக இருப்பவனை சொன்னால் நம்புவார்களா? பலவாறாக குழம்பி தவித்து கண்ணீர் விட்டாள்... தன்னை நிற்கதியாக விட்டுச் சென்ற கோபாலை எண்ணி அழுதாள்...
மறுநாள் மதியம் மூன்று மணியளவில் அதிகாலை எழுந்ததால் உறக்கம் கண்களை சுழற்ற இவளுக்கு ஒதுக்கப்பட்ட அறையில் குழந்தையை தொட்டிலில் போட்டு தூங்க வைத்துவிட்டு தரையில் இவள் படுத்துக்கொண்டாள்.....

அதிகாலை எழுந்த களைப்பு உறக்கத்தை தர,, கண்மூடி உறங்கினாள்,, நல்ல உறக்கத்தில் யாரோ முழங்காலை வருடுவது போலிருக்க,,, உதறிக்கொண்டு எழுந்து அமர்ந்தவள் எதிரே இளித்தபடி அமர்ந்திருந்த மாமனாரை கண்டதும் கொதித்துப்போய் எழுந்தாள்....

விழிகள் அனலை கக்க,, “ ச்சீ நீயெல்லாம் ஒரு மனுஷனா? உன் பேத்தி வயசு இருக்குற என்னைப்போய் பெண்டாள நினைக்கிறயே சண்டாளா” என்றபடி தொட்டிலில் உறங்கிய குழந்தையை தூக்க முயன்றவளை இழுத்து கீழே தள்ளிய அந்த வெறி நாய் “ இதோபார் புள்ள,, உன் மாமியாக்காரியால என் கூட படுக்க முடியல,, வயசாகிப் போச்சு.. ஆனா எனக்கு வயசானாலும் ஆசை அடங்களை,, நீ சத்தமில்லாம ஒத்துழைச்சா.. இருக்குற சொத்து எல்லாத்தையும் உன் பேர்ல எழுதி உன்னை ராணி மாதிரி வச்சுக்கிறேன்” என்றவன் மான்சியை இழுத்து அணைக்க முயன்றான்..

“ டேய் விடுடா” என்று அலறியபடியே மான்சி அவனை உதறி விலக்கவும் கோபாலின் அம்மா வீட்டுக்குள் வரவும் சரியாக இருந்தது,, “ அத்தே” என்றபடி மான்சி ஓடிச்சென்று அவள் காலில் விழ,, கணவனின் கேவலமான நடத்தை பழகிப்போன அந்த பெண்மணி கணவனை புழுவைப் போல் பார்த்து “ அடப்பாவி மருமக மேலயே வைகைக்கிறயே நீ மனுஷனா” என்றபடி கீழே கிடந்த மருமகளை தூக்கினாள்....

இரண்டு பெண்களும் வந்து குழந்தையை தூக்கிக்கொண்டு வெளியே போக முயல,, கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத ஆத்திரத்தில் வேகமாக வந்து இருவரையும் இழுத்து வீட்டுக்குள் தள்ளி,, அசிங்கமான வார்த்தைகள் பேசி “ ரெண்டு பேரும் வெளிய போனீங்கன்னா அவ்வளவுதான்” என்று கூறி அறைக்குள் தள்ளி கதவை பூட்டினான்...

அன்று இரவு முழுவதும் மான்சியும் கோபாலின் அம்மாவும் அந்த அறையிலேயே இருந்தனர்... அதிகாலை நான்கு மணிக்கு வந்து கதவை திறந்த கிழ நாய் " ரெண்டு சிறுக்கிகளும் ஒழுங்கா வேலையைப் பாருங்க.. வெளிய போய் மூச்சு விட்டீங்க... சங்கை அறுத்துருவேன்" என்று மிரட்டிவிட்டு சென்றான்....

மான்சி வெளியே வந்தாள் புழக்கடை போய் முகம் கழுவிவிட்டு வந்தவள் கிழவன் மாடுகளை ஓட்டிக்கொண்டு போகும் வரை வேலைகள் செய்வது போல் காட்டிக்கொண்டு... அவன் போனதும் குழந்தையை தூக்கிக்கொண்டு தனது துணிகள் அடங்கிய பையையும் எடுத்துக்கொண்டு வெளியே வந்தாள்......

மாமியார்க்காரி வந்து தடுக்க முயன்றாள்... " வேணாம்மா கெழவன் பொல்லாதவன்... விசயம் வெளிய தெரிஞ்சா உன்னைய சும்மா விடமாட்டான்,, குடும்ப மானம் வெளிய வரக்கூடாதுமா,, அனுசரிச்சு போ கண்ணு " என்று மலுப்பலாக பேசினாள்...

மான்சி அடிபட்ட வேங்கையாக சீறினாள்... "என்ன உன் புருஷனுக்கு நீ பொண்டாட்டி நான் வைப்பாட்டியா வாழலாம்னு சொல்றியா? நீயும் என்னைப் போல ரெண்டு பொண்ணை பெத்தவள் தான... எப்புடி இந்த மாதிரி பேச மனசு வருது? நான் இந்த கிழவனை சும்மா விடமாட்டேன்... போலீஸ்ல சொல்லி இவனை உள்ளார தள்ளுனா தான் தெரியும்" என்று கத்திவிட்டு வெளியேறியவள் பஸ் நிறுத்தம் சென்று டவுனுக்கு செல்லும் பேருந்தில் ஏறினாள்....

டவுனுக்கு வரும்போது மணி ஆறாகியிருந்தது ... அனைத்து மகளிர் காவல் நிலையத்தின் கிளை பேருந்து நிலையத்தின் பக்கத்தில் இருக்க.... வேகமாக அங்கு சென்றாள்... இரவு பணியில் இருந்த பெண் போலீஸ் அதிகாரியும்,, காவளர்களும் அந்த காலையில் கையில் குழந்தையுடன் வந்த பெண்ணைப் பார்த்து அக்கரையுடன் விசாரித்தார்கள்...

மான்சி குமுறும் நெஞ்சுடன் கடகடவென நடந்தது அத்தனையும் கொட்டித் தீர்த்துவிட்டு கண்ணீருடன் அந்த அதிகாரியின் முன் கையேந்தி " நீங்கதான் மேடம் எனக்கு நல்லது செய்யனும்" என்று அழுதாள்....

அந்த பெண் எஸ்ஐ எழுந்து வந்து மான்சியின் தோளில் தட்டி " அந்த கிழட்டு நாய நாங்கப் பாத்துக்குறோம்... நீ பயப்படாதம்மா" என்று மான்சிக்கு டீயும் பிஸ்கட்டும் வரவழைத்துக் கொடுத்தாள்

பிறகு இரண்டு கான்ஸ்டபிள்களை அழைத்து " போய் அந்த கெழ பாடுவ கூட்டிட்டு வாங்க... ஊர் காரன் எவன் குறுக்க வந்தாலும் ஸ்டேஷ்சனுக்கு வந்து என்கிட்ட பேச சொல்லி சொல்லிட்டு வாங்க" என்று கூறி அனுப்பி வைத்தாள்...

மான்சிய்ன் மனதுக்கு ஆறுதலாக இருந்தது அந்த பெண் அதிகாரியின் பேச்சு.... டீயை குடித்து விட்டு ஒரு மூலையில் அமர்ந்து குழந்தைக்கு பால் கொடுக்க ஆரம்பித்தாள்...

ஆனால் வெகு நேரமாகியும் போன கான்ஸ்டபிள்கள் வரவில்லை.... சரியாக எட்டு மணிக்கு எஸ் ஐ யின் செல்லுக்கு போன் வந்தது... போன கான்ஸ்டபிள் பெண்ணில் ஒருத்தி தான் பேசினாள்.... பிறகு போன் வேறு ஒருவரிடம் கொடுக்கப்பட்டது போல... எஸ்ஐ யின் பேச்சு குழைந்தது.... மீண்டும் காரார் குரலில் " இல்ல சார் எதுவும் பண்ண முடியாது,, கிழவன் இங்க வந்தாதான்" என்ற எஸ்ஐ போனை வைத்துவிட்டாள்.....

சற்று நேரத்தில் பகல் டியூட்டி எஸ்ஐ வந்துவிட .. இரண்டு எஸ்ஐ யும் ஏதோ ரகசியமாக பேசிவிட்டு அங்கேயே இருந்தனர் .... மான்சிக்கு இட்லி வாங்கி வந்து கொடுக்க ... அதிகாரியானாலும் பெண் தானே? அவங்களுக்கும் நல்ல மனசிருக்கும் என்று எண்ணியபடி மான்சி சாப்பிட்டாள்

அடுத்து இரண்டு வழக்குகளை விசாரித்து சமரசம் பேசி அனுப்பிவிட்டு சமரசமாகத ஒரு கணவன் மனைவி சண்டை என வந்த கேஸை நாளை வரும்படி கூறி அனுப்பிவிட்டு மான்சியின் புகாரை விசாரிக்க காத்திருந்தனர்...

சரியாக பகல் பதினோரு மணிக்கு கிழவனை அழைத்து வந்தார்கள் ... ஆனால் கூடவே ஒரு வெள்ளை வேட்டி கூட்டமே வந்தது.... கிழவனின் மருமகன்கள் இருவரும் வந்திருந்தனர் ... வந்தவர்கள் எல்லோரும் உள்ளே வந்து பெஞ்சுகளில் அமர்ந்தனர்.... சலசலவென்று பேசும் குரல் மட்டும் மான்சியின் காதில் விழுந்தது... ஆனால் என்ன பேசினார்கள் என்று தெரியவில்லை.....

கொஞ்ச நேரத்தில் மான்சி இருந்த அறைக்குள் வந்த மஞ்சுளா " அடிப்பாவி உன்னை நல்லவனு நம்பி எங்கண்ணனுக்கு கட்டி வச்சேனே... கடைசில இப்புடி என் பெரியப்பா வீட்டு மானத்தை போலீஸ் ஸ்டேஷ்சன் வரைக்கும் கொண்டு வந்துட்டுடியே பாவி?" என்று மான்சியின் முதுகில் அறைய... ஓடி வந்த கான்டபிள் ஒருத்தி " ஏய் இதென்ன சந்தைக்கடையா? பஜாரி மாதிரி கத்தாத" என்று மஞ்சுளாவை அதட்டி வெளியே அழைத்து சென்றாள்

மஞ்சுளாவின் வார்த்தைகள் ஈட்டிபோல் நெஞ்சை கிழித்தது.... தப்பு நான் செய்தது போல் கத்திட்டு போகுதே இந்த அண்ணி?" என்று வேதனையுடன் அமர்ந்திருந்தவளை கான்ஸ்டபிள் வந்து வெளியே அழைத்தாள்

மான்சி நடுங்கும் கைகளால் குழந்தையை தூக்கிக் கொண்டு வெளியே வர... அங்கே கிழவனோ... அவனுடன் வந்த ஆட்களோ... மஞ்சுளாவோ ... யாருமேயில்லை... இரண்டு எஸ்ஐக்கள் மட்டும் அமர்ந்திருந்தனர்... மான்சியை எதிர் சீட்டில் உட்கார சொன்னார்கள்... மான்சி குழந்தையுடன் அமர்ந்தாள்...

சற்று அமைதிக்குப் பின் " உன் பேரு மான்சினு தான சொன்ன?" என்று இரவு இருந்த பெண் அதிகாரி கேட்டாள்

" ஆமாங்க மேடம்" என்றாள் மான்சி.....

" ம்ம்,, ...... ஏம்மா நீ சொன்னது எதுவுமே உண்மையில்லை போலருக்கே? வந்தவங்கல்லாம் வேற மாதிரி சொல்றாங்களே?" என்று கேட்க.....

மான்சியின் குலை கொந்தளித்தது.. கையிலிருந்த குழந்தையை நழுவாமல் பற்றிக்கொண்டு.... " என்னங்கம்மா சொல்றாங்க" என்றாள் நடுங்கும் குரலில்...

" சொத்துக்கு ஆசைப்பட்டு நீதான் உன் மாமனாரை கூப்பிட்டேன்னு எல்லாரும் சொல்றாங்க... கொஞ்ச நாளாவே உன் நடத்தை சரியில்லைனு உன் மாமியாரும் சொல்றாங்க.... சரி மாமியார் பொய் சொல்லலாம்னு உன் அண்ணிகிட்ட விசாரிச்சா அந்த பொண்ணும் உன்னைதான் குத்தம் சொல்லுது... உன் அண்ணனை கேட்டா வாயைத் தொறக்காம அமைதியா நிக்கிறான்.... வந்த ஆளுங்க மொத்த பேரும் நீதான் அந்த கிழவன் கிட்ட தப்பா நடந்துகிட்டதா சொல்றாங்க ... ஊர் பெரியவங்கள்லாம் உன்னை கூப்பிட்டு கண்டிச்சதால இந்த மாதிரி பொய் புகார் குடுத்ததா சொல்றாங்க... இப்ப நீ என்ன சொல்லப் போற ?" என்று கேட்க

மான்சிக்கு மயக்கம் வரும் போலிருந்தது... யாருக்குமே இந்த அபலை மேல இரக்கம் வரலையா?.... சற்றுமுன் தின்ற இட்லி நஞ்சாய் கசக்க... அந்த பெண் அதிகாரிகளை நோக்கி கையெடுத்துக் கும்பிட்டு " நான் அப்புடிப்பட்ட பொண்ணில்லம்மா... நான் சொன்னதெல்லாம் உண்மை.... நம்புங்கம்மா" என்று அழுதாள்....

" ஏம்மா இத்தனை பேர் சொல்றதை நம்புறதா... நீ ஒருத்தி சொல்றதை நம்புறதா? சொத்துக்காக கிழவன்னு பாக்காம அவனைப் போய் கூப்பிட்டுருக்கியே... ச்சே ச்சே வரவர உலகம் குட்டிச்சுவராப் போச்சு... உன்னை மாதிரி பொண்ணுங்களால தான் நல்ல பொண்ணுங்களுக்கும் கேவலம் " என அந்த எஸ்ஐ பெண் சரமாறியாக மான்சியை மட்டமாகப் பேச ... மான்சி அதிர்ந்து போய் அமர்ந்திருந்தாள்....

மகளிர் காவல் நிலையம் என்பது எதற்காக.... பெண்ணுக்கு பெண்ணாய் பெண்ணின் நிலை புரிந்து நியாயயம் பெற்று தருவார்கள் என்பதற்காகத்தான்... ஆனால் அவர்கள் பணத்திற்கு விலை போனால் நியாயத்தைத் தேடி பெண்கள் போகவேண்டிய இடம் எது????

பணம் கட்டுகளாக வழங்கப்பட்டிருக்க.... பணத்துக்கு தரவேண்டிய மரியாதையை தந்தார்கள் மகளிர் காவல் நிலையத்தார்கள்.... மான்சி அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்க .... எதையோ எழுதி மான்சியிடம் கையெழுத்து வாங்கினார்கள்..

கிழவனும் அவனுடன் வந்தவர்களும் சிரிப்புடன் அங்கிருந்து கிளம்ப ... மஞ்சுளா மான்சி இருக்கும் இடத்தைப் பார்த்து காறித்துப்பிவிட்டு ,, தயங்கி நின்ற கணவனை இழுத்துக்கொண்டு கிளம்பினாள்.....

மான்சி கைப்பிள்ளையும் கண்ணீருமாக காவல் நிலையத்தை விட்டு வெளியே வந்தாள்... யாருமற்று நின்றவளின் கண்களில் தூரத்தில் ஒரு மரத்தடியில் அழுது கொண்டிருந்த அவளைப் பெற்ற துரதிர்ஷ்டசாலிகள் தெரிய அவர்களை நோக்கி இயந்திரமாய் நடந்தாள்.....

எல்லாவற்றையும் தொலைத்துவிட்டு வந்து நின்ற மகளைப் பார்த்ததும் பெற்ற வயிறு பற்றி எரிய வாயிலும் வியிற்றிலும் அடித்துக்கொண்டு அழுதபடி மகளை அணைத்துக்கொண்டனர்

தாயின் தோளில் சாய்ந்த மான்சி " நான் ஒரு தப்பும் செய்யலைமா?" என்று கூற

" பாவி மகளே ,, உன்னையபத்தி எங்களுக்குத் தெரியாதா? அவனுங்க பணத்தை வச்சு விளையாடிட்டானுக... நாங்க பிச்சைகாரங்க மாதிரி வேடிக்கைப் பார்த்து கிட்டு நிக்கிறோம்" என்றாள் மான்சியின் தாய்....

தன் தாயாவது தன்னை புரிந்து கொண்டாளே என்ற சிறு நிம்மதியுடன் மஞ்சப்புத்தூர் செல்லும் பஸ்ஸில் ஏறி பெற்றோருடன் அமர்ந்தாள் .....

எவன் இருக்கும் ஊரில் தான் வசிக்க வேண்டியுள்ளதே என்று சலித்துக்கொண்டாளோ அவனிருக்கும் அதே ஊருக்கு நிரந்தரமாக வசிக்க வேண்டிய நிர்பந்தத்தில் கையில் குழந்தையுடன் கழுத்தில் தாலி இல்லாமல் விதவையாக வந்து இறங்கினாள் மான்சி ....

ஆண்டவன் யாரையும் விட்டதில்லை ..

வாழ்க்கையின் வட்டத்தில..

ஆசையை நெஞ்சுல வச்சுப்புட்டா..

சோதனை கொஞ்சமில்லை....

வேலியத்தான் போட்டுவைப்பான்..

வேடிக்கைதான் பார்த்து நிப்பான்..

வேலியையும் தாண்டிப்புட்டா..

வேதனையில் சிக்க வைப்பான்..

பொட்டுவச்ச காரணம் கேள்விக் குறியாச்சு...

கட்டி வச்ச மாலையோ வாடும் படி ஆச்சு..

சொந்தமும் பந்தமும் வந்ததே நேத்து..

வந்தத கொண்டுதான் போனதே காத்து..

எண்ணி எண்ணி பார்த்து பார்த்து..

ஏங்கிப் போகும் போது..

இந்தப் பொண்ணு பாடிடாத சோகம் ஏது?

புள்ளிவச்சு கோலம் தான் போட்டதுதந்த சாமி ..

கோலங்களை மீறித்தான் ஆடுதிந்த பூமி...

எல்லைதான் எதுக்கும் உள்ளது பாரு...

பூவெல்லாம் சாமிதான்.. நாமெல்லாம் நாரு...

பொண்ணு மனம் பூமி போல பொருமையாக வாழும்..

காலம்வந்து சேரும் போது கடலைப் போல சீறும்...

ஆண்டவன் யாரையும் விட்டதில்லை ..

வாழ்க்கையின் வட்டத்தில..

ஆசையை நெஞ்சுல வச்சுப்புட்டா..

சோதனை கொஞ்சமில்லை....