Wednesday, May 6, 2015

அக்னி சாட்சி - அத்தியாயம் - 29

இடம்: ப்ரொஃபெஸ்ஸர் மனோகரியின் இல்லம், ஈரோடு
நேரம்: காலை 8:45

ப்ரொஃபெஸ்ஸர் மனோகரி, "என்னடா எல்லாம் எடுத்து வெச்சுட்டீங்களா?"

சக்தி, "ஓ எஸ்"

அவன் நெத்தியில் இடுவதற்கு கையில் விபூதியை எடுத்து வந்த மனோகரி, "கொஞ்சம் குனிடா" என்றவாறு அவனுக்கு இட்டுவிட்டு வந்தனாவுக்கும் நெத்தியில் ஒரு சின்னக் கீற்றாக விபூதி இட்டாள்.

சக்தி, "I don't like this partiality. எனக்கு மட்டும் சாமியார் கணக்கா வெச்சுட்டு அவளுக்கு ஸ்டைலா வெச்சு இருக்கீங்க"

மனோகரி, "ஆமாண்டா. ஒரு ஐ.பி.எஸ் ஆஃபீஸர் தன் மதத்தை தம்பட்டம் அடிச்சுக்கக் கூடாது"

வந்தனா தன் மாமியார் அவளது அறிவாற்றலால் தன்னை வியப்பில் ஆழ்த்துவதை ஒரு வழக்காமாகக் கொண்டு இருப்பதை எண்ணி ஒரு பெருமிதப் புன்னகை உதிர்க்க,

மனோகரி தொடர்ந்து, "அதுவும் இல்லாம இப்படி வெச்சாத்தான் அவ முகத்துக்கு அழகா இருக்கு"

சக்தி, "ஓ! அப்படின்னா என் மூஞ்சிக்கு இது போதும். ம்ம்ம் ... நான் என் மதத்தை தம்பட்டம் அடிச்சுட்டா பரவால்லை. அப்படித்தானே?"

மனோகரி, "நீ ஆம்பளை. உன் முகத்துக்கு என்ன?. Besides, உனக்கு அவளை மாதிரி பொறுப்பு இல்லை. அதான் உனக்கு எப்பவும் நான் வெச்சு விடற மாதிரி வெச்சு விட்டேன்"



வந்தனா, "இனி தினமும் காலைல ஆஃபீஸ் கிளம்பும்போது இதே மாதிரி அவருக்கு வெச்சு விடறேன் அத்தை"

சக்திவேலில் முறைப்புக்கு மகளிர் மூவரின் சிரிப்பே அவனுக்கு பதிலாகக் கிடைத்தது.

டைனிங்க் டேபிளில் நால்வரும் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தபோது .. வாசலில் ஹாரன் ஒலிக்க எழுந்து சென்று வாசலை நோக்கிய சாந்தி தன் குறலை சற்றி உயர்த்தி, "அண்ணா, அண்ணி உங்க கார் வந்தாச்சு ... "

மனோகரி, "ம்ம்ம் .. வண்டி வந்துருச்சு. புறப்படுங்க"

கணவன் மனைவி இருவரும் அவள் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றபிறகு ...

மனோகரி, "வந்தனா, பெங்களூரில் அந்த அரெஸ்ட் வேலை முடிஞ்சதும் ஃபோன் பண்ணு"

சக்தி, "நைட்டு கூப்படறேம்மா. நித்தினும் தீபாவும் கூட இருப்பாங்க நீங்க எல்லாரோடையும் பேசலாம்"

மனோகரி, "நைட்டு வரைக்கும் என்னை காக்க வைக்காதே"

வந்தனா, "அத்தை. பயப் படற மாதிரி ஒண்ணும் இல்லை. கூட உங்க மகனும் இருக்கப் போறார்"

சக்தி, "ஏம்மா இப்படி பயப் படறீங்க?" என அலுத்துக் கொள்ள ...

மனோகரி, "நீ என்ன வேணும்ன்னாலும் சொல்லிக்கோ. இன்னும் மூணு மாசம் கழிச்சு இவளை கௌரி கையில் ஒப்படைக்கறவரைக்கும் எந்த ஒரு சின்ன விஷயமா இருந்தாலும் நான் பயப்படத்தான் செய்வேன். நீயும் அப்படித்தான் அவளை கவனிச்சுக்கணும்"

சக்தி, "சரி. அங்கே வேலை முடிஞ்சதும் ஃபோன் பண்ணறோம். ஓ.கே?"

மனோகரி, "சரி, பத்திரமா போயிட்டு வாங்க. லேட் ஆகுது. ஃப்ளைட்டை மிஸ் பண்ணிடப் போறீங்க"

வந்தனா, "டைம் இருக்கு அத்தை எப்படியும் டெலி செக்-இன்னுக்கு ஏற்பாடு செய்யச் சொல்லி இருக்கோம். நேரா போய் போர்டிங்க் பாஸ் வாங்கிட்டு ஃப்ளைட் ஏற வேண்டியதுதான்"

மனோகரி, "சஞ்சனா பிரசவத்துக்குப் போய் இருந்துட்டு திரும்பி வந்தப்ப இப்படித்தான் ஜாஷ்வா சொன்னான். நாங்களும் கூலா மெதுவா வீட்டில் இருந்து கிளம்பினோம். நாஸ்ஸோ ஏர்போர்டில் டெலி செக்-இன் செஞ்சவுங்களுக்கான கவுன்டர் எதுன்னு கண்டு பிடிக்க ரொம்ப நேரம் ஆயிடுச்சு. ஃப்ளைட்டை எங்கே மிஸ் பண்ணிடுவோமோன்னு ஆயிடுச்சு. ஒரு வழியா தேடிப் பிடிச்சு லக்கேஜ் செக்-இன் பண்ணிட்டு புறப்படற சமயத்தில் ஜாஷ்வா 'தயவு செஞ்சு இப்படி ப்ராப்ளம் ஆனதை சஞ்சனாவுக்கு சொல்லிடாதீங்க. எக்கச் சக்கமா எனக்கு திட்டு விழும்'ன்னு சொல்லி எங்களை வழி அனுப்பி வெச்சான்"

ஜாஷ்வா எட்வர்ட்ஸ் ஒரு புகழ் பெற்ற ஹாக்கர். மாங்க்ஸ் பாட் நெட்டின் இயக்கத்தில் இந்திய நண்பர்கள் இருவருடன் பங்கேற்றவன். நியூ யார்க்கின் பிறந்து வளர்ந்துவன். இப்போது அவனும் அவனது அன்பு மனைவி சஞ்சனா எட்வர்ட்ஸும் பஹாமாஸ் தீவின் தலை நகரான நாஸ்ஸோ நகரத்தில் குடியிருக்கிறார்கள். சஞ்சனா சக்திவேலுக்கு உடன் பிறவா சகோதரி. மனோகரிக்கு அவள் இன்னும் ஒரு மகளை போல. அவளது பிரசவத்துக்கு உதவ மனோகரி மகள் சாந்தியுடன் அங்கு சென்று இருந்தாள்.

நால்வரும் சிரித்த படி இருக்க சக்தி, "தெரியும். அப்படியும் அவனுக்கு திட்டு விழுந்தது. ஜாஷ்வா எங்ககிட்டே சொன்னதை தீபா சஞ்சனாகிட்டே போட்டுக் கொடுத்துட்டா"

மனோகரி, "அடப் பாவமே!"

கார் புறப்பட்ட பிறகு சற்று நேரம் இருவரும் மௌனமாக வெளியில் பார்த்தபடி இருந்தனர். இருவரின் கண்களும் பனித்து இருந்தன.

வந்தனா, "சக்தி, குட்டிப் பாப்பா பிறந்ததுக்கு அப்பறம் நான் வேலையை ரிஸைன் பண்ணப் போறேன்"

சக்தி, "பண்ணிட்டு?"

வந்தனா, "நான் வீட்டில் இருக்கப் போறேன். ஆண்டி, சாந்தி எல்லாம் நம்ம கூட வந்து இருக்கட்டும். We are not in need of money. எங்க அப்பா சேத்து வெச்சுருக்கறதை விட நீயும் உன் மாங்க்ஸ் பாட் நெட் மூலம் சம்பாதிச்சு வெச்சு இருக்கே"

சக்தி, "ம்ம்ம் .. நீ ரிஸைன் பண்ணறதா இருந்தா என்னை எதுக்கு மூணு வருஷ கான்ட்ராக்டில் உங்க R&AWவில் மாட்டி விட்டே?"

வந்தனா, "எனக்கு உன்கூட வொர்க் பண்ணனும்ன்னு இருந்தது. நீ வேண்டாம்ன்னு சொல்லி இருக்கலாம் இல்லை?"

சக்தி, "விடு. இப்போ ஏன் திடீர்ன்னு"

வந்தனா, "திடீர்ன்னு இல்லை. ஒன்ஸ் ப்ரெக்னெண்ட் ஆனதுக்கு அப்பறம்தான் அத்தையை, எங்க அம்மாவை எல்லாம் க்ளோஸா வாட்ச் பண்ண ஆரம்பிச்சேன். ஒரு அம்மாவா இருக்கறதை விட வேற எதுவும் முக்கியம் இல்லைன்னு தெரிஞ்சுது .. and I want to enjoy my motherhood to the hilt"

சக்தி, "பட் ... வீட்டில் சும்மா உக்காந்தேன்னா மூளை துருப்பிடுச்சுப் போயிடும்"

வந்தனா, "இல்லையே என் கூட குட்டிப் பாப்பா இருப்பாளே?"

சக்தி, "எவ்வளவு நாள் அவ குட்டிப் பாப்பாவாவே இருக்கப் போறா?"

வந்தனா முகத்தில் குறும்பு தவழ, "அவ ஸ்கூலுக்குப் போக ஆரம்பிக்கும் போது அடுத்த குழந்தைக்கு நீ என்னை தயார் பண்ணு"

வாய்விட்டுச் சிரித்த சக்தி, "மேடம் எத்தனை குழந்தைகள் பெத்துக்கறதா உத்தேசம்?"

வந்தனா, "சஞ்சனா ஜாஷ்வாகிட்ட சொன்ன மாதிரித்தான். நீ டையர்ட் ஆகற வரைக்கும். இல்லைன்னா அதுக்கு மேல் என்னால் பெத்துக்க முடியாதுன்னு ஆகற வரைக்கும்"

சற்று வயதான கார் ட்ரைவர் ஓரக்கண்ணால் பார்த்துச் சிரிப்பதை பொருட்படுத்தாமல் அவன் தோளில் சாய்ந்தாள்.

சக்தி, "சரி, அதை அப்பறமா யோசிப்போம்" என்றவன் தொடர்ந்து, "இப்போ இந்த கேஸை பத்தி கொஞ்சம் விளக்கமா சொல்லறையா?"

வந்தனா, "எல்லா டீடெயிலும் ஒரு மெயிலில் அனுப்பி இருக்கார்"

சக்தி, "சரி, உன் லாப்டாப்பை எடு பார்க்கலாம்"

வந்தனா தன் மடிக் கணிணியைத் இயக்க அவன் நகர்ந்து அவள் தோளில் கை போட்டபடி படிக்கத் தொடங்கினான்.


இடம்: தேசிய நெடுஞ்சாலை NH-47 கோவையை நோக்கிச் செல்லும் வழியில்
நேரம்: காலை 9:15

பல நிமிடங்களுக்குப் பிறகு சக்தி, "ஸோ! விக்ரம் ஷாதான் அந்தத் தகவல்களைத் திருடி இருக்கான். அதுக்கு முக்கிய ஆதாரம் அவன் லாப்டாப் ஹார்ட் டிஸ்க் ... கொஞ்சம் ரிஸ்கிதான்"

வந்தனா, "ஏன்?"

சக்தி, "நான் அவன் இடத்தில் இருந்தேன்னா நீ அரெஸ்ட் வாரண்டை நீட்டின அடுத்த நிமிஷம் லாப்டாப் ஹார்ட் டிஸ்கை க்ரேஷ் பண்ணிடுவேன்"

குறும்புச் சிரிப்புடன் வந்தனா, "அதான் உன்னை வெளியே விடாமே R&AWவில் வேலைக்கு சேத்தி விட்டு இருக்கேன்"

சக்தி, "You know very well that I won't involve myself in such petty stuff. சரி, நான் சொன்னதுக்கு என்ன பதில்?"

வந்தனா, "இது வரைக்கும் அவன் அப்படி செய்யலை. தவிற, அந்த லாப்டாப்பில் அவனுக்குத் தேவையான பல முக்கிய விவரங்களை ஸ்டோர் செஞ்சு வெச்சு இருக்கானாம். அந்த லாப்டாப்பை அழிச்சா அவனுக்குத்தான் பிரச்சனைன்னு நம்பறாங்க"

சக்தி, "ம்ம்ம்ஹூம் ... நிச்சயம் பேக்-அப் எடுத்து வெச்சு இருப்பான். ஸ்டில் .. சுத்த மடையனா இருப்பான் போல இருக்கு. எப்படி திருடணும்ன்னு தெரியாம திருடி இருக்கான்"

வந்தனா, "எஃப்.பி.ஐ அனுப்பின அந்த ஆனந்த் டெய்லி செக் பண்ணிட்டுத்தான் இருக்கான். லாப்டாப் இன்னும் உபயோகத்தில்தான் இருக்கு. அதே ஹார்ட் டிஸ்க்தான் அதில் இன்னும் இருக்கு"

சக்தி, "இந்த ஆனந்த் படு ஸ்மார்ட்டா இருப்பான் போல இருக்கு"

வந்தனா, "That's my opinion too. And you know something? ஆனந்துக்கு ஜாஷ்வாவை தெரியுமாம். காலேஜில் ஜாஷுக்கு அவன் ஜூனியர். அவனும் எம்.ஐ.டில படிச்சுட்டு பெரிய கம்பெனி எதிலும் சேராம சொந்த கன்ஸல்டிங்க் சர்வீஸ் கம்பெனி ஸ்டார்ட் பண்ணி கான்ட்ராக்ட் வொர்க் எடுத்து பண்ணிட்டு இருக்கானாம். யூ.எஸ்ல ஜாஷ் வொர்க் பண்ணிட்டு இருந்த பேங்கிலும் அவன் கொஞ்சம் கான்ட்ராக்ட் வொர்க் பண்ணி இருக்கானாம்"

சக்தி, "வாவ்! இதெல்லாம் உனக்கு எப்படி தெரியவந்தது?"

வந்தனா, "நீ R&AWவுக்கு கன்ஸல்டண்ட்டா இருக்கற மாதிரி ஜாஷ்வா எஃப்.பி.ஐக்கு கன்ஸல்டண்ட். மறந்துடுச்சா?"

சக்தி, "ஸோ, ஜாஷ் சிபாரிசு செஞ்சுதான் ஆனந்த் இந்தக் கேஸில் இன்வால்வ் ஆகி இருக்கானா?"

வந்தனா, "இல்லை. எஃப்.பி.ஐயின் தகவல் திருட்டுக் கேஸில் ஆனந்தும் ஒரு அக்யூஸ்ட். தகவல் திருட்டுப் போன கம்பெனியில் ஆனந்த் ஒரு கான்ட்ராக்ட் எடுத்து விக்ரம் ஷாவுக்கு சப்-கான்ட்ராக்ட் கொடுத்து இருக்கான். ஆனந்துக்கு கொடுக்கப் பட்ட லாகின் ஐ.டி மூலம்தான் விக்ரம் ஷா தகவல்களை திருடி இருக்கான். ஆனா எஃப்.பி.ஐக்கு விக்ரம் ஷாதான் திருடி இருக்கான்னு ஆதார பூர்வமா தெரியலை. லாகின் ஐ.டி கொடுக்கப் பட்டது ஆனந்துக்கு என்பதால ஆனந்தை அரெஸ்ட் பண்ணி இருக்காங்க. ஆனந்தோட அப்பா ரொம்ப பெரிய ஆளாம். அவர்கிட்டே இருந்தும் அவருக்கு தெரிஞ்ச முக்கிய நபர்கள்கிட்டே இருந்தும் ஆனந்தை விடுவிக்க சிபாரிசு வந்து இருக்கு. ஆனந்த்தின் ரெஸ்யூமெவைப் பாத்துட்டு ஜாஷ்வாகிட்டே அவனைப் பத்தி விசாரிச்சு இருக்காங்க. ஜாஷ்வாவும் அவனைப் பத்தி நல்ல விதமா சொன்னதால ஆனந்தை தற்காலிகமா 
விடுவிச்சு மேலும் ஆதாரம் சேகரிச்சுக் கொடுக்க இந்தியாவுக்கு அனுப்பி இருக்காங்க"

சக்தி, "Its really a small world. சரி, இன்னொரு டவுட். ஏன் இந்த அரெஸ்ட்டும் இன்கம்டாக்ஸ் டிபார்ட்மெண்ட் ரெய்டும் ஒரே சமயத்தில் நடக்கணும்?"

வந்தனா, "விக்ரம் ஷா தன் எம்ப்ளாயி ஒருத்தியை பினாமியா உபயோகிச்சு ஏதோ தில்லு முல்லு பண்ணி இருக்கார். அந்த எம்ப்ளாயி தனக்கும் அந்தத் தில்லு முல்லுகளுக்கும் எந்த விதமான சம்மந்தமும் இல்லைன்னு போலீஸில் புகார் கொடுத்து இருக்கா. கூடவே இன்கம்டாக்ஸ் டிபார்ட்மெண்டுக்கும் தகவல் சேகரிச்சுக் கொடுத்து இருக்கா. அதிலும் அவளுக்கு ஆனந்த் ஹெல்ப் பண்ணி இருக்கான். ஆக்சுவலா லோகல் போலீஸும் இன்கம்டாக்ஸ் டிபார்ட்மெண்ட் ரெய்ட் செய்யும் சமயத்தில் அங்கே போறதா இருந்தாங்க. முரளி சார் லோகல் போலீஸைப் போக வேண்டாம்ன்னு சொல்லி இருக்கார்"

சக்தி, "நான் ஒண்ணு கேக்கறேன். பதில் சொல்லு"

வந்தனா, "என்ன?

சக்தி, "இந்த மாதிரி இன்டர்நேஷனல் லெவலில் தகவல் திருட்டு நடத்தினவனுக்கு லோகல் இன்கம்டாக்ஸ் டிபார்ட்மெண்டிலும் காண்டாக்ட் இருக்காதா"

வந்தனா, "நிச்சயமா இருக்கும்"

சக்தி, "ஐ.டி ரெய்ட் வரப் போறாங்கன்னு தெரிஞ்ச அடுத்த நிமிஷம் அவன் ஆதாரங்களை அழிக்கத் தொடங்குவான். Including his laptop hard disk"

வந்தனா, "ஹார்ட் டிஸ்கில் இருப்பதை அழிக்கப் பார்க்கலாம். ஆனா அந்த ஹார்ட் டிஸ்க் ஒழுங்க வொர்க் பண்ணினா போதும்ன்னு எதுக்கு முரளி சார் சொன்னார்?"

சக்தி, "அந்த லாப்டாப்பில் ஃபிங்கர் ப்ரிண்ட் செக்யூரிட்டி எனேபிள் ஆகி இருக்கு. விக்ரம் ஷாவும் அவருக்கு ரொம்ப க்ளோஸா இருப்பவங்களும் மட்டும்தான் அதை யூஸ் பண்ண முடியும். அவரோட ஃபிங்கர் ப்ரிண்ட்டின் டிஜிடல் இமேஜ் அந்த ஹார்ட் டிஸ்கில் ஸ்டோர் ஆகி இருக்கும். அவர் செஞ்ச திருட்டு அந்த லாப்டாப் மூலம் தான் செய்யப் பட்டு இருக்குன்னு சொல்றதுக்கு ஆதாரம் அதோட ஐ.பி அட்ரெஸ் அப்பறம் மேக் அட்ரெஸ். இதெல்லாம் உபயோகிக்கறவங்க அழிக்க முடியாத வகையில் விண்டோஸ் ஸ்டோர் பண்ணி வெச்சு இருக்கும். அதே லாப்டாப்பில் அந்த ஹார்ட் டிஸ்க்கை மறுபடி ஃபார்மேட் செஞ்சாலும் மேக் அட்ரெஸ் அப்படியே தான் இருக்கும். அதனால் தான் அப்படி சொல்லி இருப்பார்"

வந்தனா, "ஓ! பட் அவர் லாப்டாப்பையே போட்டு உடைச்சார்ன்னா இல்லை ஹார்ட் டிஸ்க்கை ஃபிஸிகலா டேமேஜ் பண்ணினா ப்ராப்ளம் இல்லையா?"



சக்தி, "அவனுக்கு இவ்வளவு நுணுக்கங்கள் தெரிஞ்சு இருக்குமான்னு தெரியலை. அப்படி தெரிஞ்சு இருந்தா இவ்வளவு ஈஸியா கண்டு பிடிக்கற மாதிரி திருடி இருக்க மாட்டான். இருந்தாலும் ரிஸ்கிதான்"

வந்தனா, "ஆமா. என்ன செய்யலாம்?"

சக்தி, "அவனுக்கு இந்த ரெய்ட் விஷயம் தெரியறதுக்கு முன்னாடி நாம் போனா என்ன? அல்லது ஐ.டி டிபார்ட்மெண்டை எந்த ஆக்ஷனும் எடுக்க வேண்டாம்ன்னு சொல்லிட்டு நாம் முதலில் போய் அந்த லாப்டாப்பை ஸீஸ் பண்ணினா?"

வந்தனா, "நோ வே! இன்னைக்கு மத்தியானம் நாலு மணிக்கு ரெய்ட் செய்யப் போறாங்கன்னா காலையிலே அதுக்கான ஆர்டர் தயாரிக்க ஆரம்பிச்சுடுவாங்க. விக்ரம் ஷாவுக்கு ரெய்ட் வருவதை முன்கூட்டியே தெரிவிக்கக் கூடியவங்க ஐ.டி டிபார்ட்மெண்டில் இருந்தா ஆர்டர் கொடுத்த அடுத்த சில நிமிஷங்களில் அவனுக்கு சொல்லிடுவாங்க. இப்போ அல்ரெடி ஒன்பதரை ஆகப் போகுது. We don't have time. We only have to assume Vikram Shah will not destroy his hard disk. ஐ.டி ரெய்ட் வருதுங்கற காரணத்துக்காக அவர் ஹார்ட் டிஸ்கை அழிக்க மாட்டார்"

சக்தி, "ஹனி, நமக்கு இருக்கும் முக்கிய ஆதாரம் அந்த லாப்டாப் ஹார்ட் டிஸ்க். அதை வெச்சுத்தான் அவனை அரெஸ்ட் பண்ண முடியும். அப்படி இருக்கும் போது அதிகக் கூட்டம் இருக்கக் கூடாது. இது என் அபிப்பராயம். அரெஸ்ட் பண்ண R&AW வந்து இருக்குன்னு தெரிஞ்ச உடனே .. He will try to cover his tracks ... லாப்டாப்பை தூக்கி ஜன்னலில் வீசினாலும் வீசலாம் இல்லையா? அப்பறம் எதை வெச்சு அரெஸ்ட் பண்ணுவே?"

வந்தனா, "நீ சொல்றதும் சரிதான். என்ன செய்யலாம்?"

சக்தி, "அவன் லாப்டாப் இன்னும் உபயோகத்தில் இருக்கான்னு நமக்கு தெரிஞ்சாகணும். உடனே அந்த ஆனந்தை காண்டாக்ட் பண்ணனும். முடிஞ்சா ரெய்ட் நடப்பதற்கு முன்னால் அவனை நேரில் மீட் பண்ணனும்"

வந்தனா, "நாம் அவனை மீட் பண்ணறது விக்ரம் ஷாவுக்கு தெரிஞ்சா? ரிஸ்க் இல்லையா?"

சக்தி, "உள்ளே என்ன நடக்குதுன்னு தெரியாம கூட்டமா விக்ரம் ஷாவைப் போய் பார்க்கறதை விட இது ரிஸ்க் கம்மி"

வந்தனா, "ம்ம்ம் ... நீ சொல்றதும் சரி. நான் நேரடியா ஷானைக் கூப்பிட்டுக் கேட்கறேன்"

சக்தி, "யாரு ஷான் ஹென்ரியா? அவர் எங்கே இதில?"

வந்தனா, "எஃப்.பி.ஐயில் அவர் தான் இந்தக் கேஸை ஹாண்டில் செஞ்சுட்டு இருக்கார்" என்றபடி ஷானின் கைபேசியில் அழைத்தாள், "ஹெல்லோ ஷான். நான் கூப்பிட்டது ரொம்ப லேட் இல்லையே? எப்படி இருக்கீங்க?"

....

வாய்விட்டுச் சிரித்த வந்தனா, "ம்ம்ம் ... பக்கத்தில் தான் இருக்கார். இவரோட நேடிவ் டவுனுக்கு வந்து இருந்தோம். டெல்லிக்கு திரும்பறதுக்கு முன்னாடி பெங்களூரில் ரெண்டு நாள் ஜாலியா இருக்க ப்ளான் பண்ணி இருந்தோம். முரளி சார் கூப்பிட்டு அந்த அரெஸ்டை ஹாண்டில் பண்ணச் சொன்னார். சோ முதலில் அந்தக் காரியத்தை செய்யப் போயிட்டு இருக்கோம்"

...

வந்தனா, "பின்னே? நான் தீபா இல்லாம இருந்தாலும் இவர் நித்தின் இல்லாம இருக்க மாட்டார். அவளும் நித்தினும் ஹைதராபாத்தில் இருந்து இன்னைக்கு சாயங்காலம் பெங்களூர் வராங்க"

.......

மறுபடியும் சிரித்து சிறிது முகம் சிவந்த வந்தனா, "Don't worry. I am quite careful ... ம்ம்ம் .. இப்போ நாலாவுது மாசம். ஒரு பிரச்சனையும் இல்லை. Anyhow, once I am back in Delhi I will be fully grounded by my boss, my hubby, my folks and his mom"

....

வந்தனா, "உங்ககிட்டே ஒரு விஷயம் கேட்கணும்ன்னு ஃபோன் பண்ணினேன். அரெஸ்ட்டைப் பத்தி தெரிய வந்தா விக்ரம் ஷா லாப்டாப்பை டெஸ்ட்ராய் பண்ண வாய்ப்பு இருக்கு இல்லையா?"

...

வந்தனா, "ம்ம்ம் .. சரி, அந்த அரெஸ்ட்டுக்கு முன்னாடி நாங்க ஆனந்த் கிட்டே பேசணும். ஓ.கேவா?"

...

வந்தனா, "சரி, அவன் ஸெல் நம்பரை டெக்ஸ்ட் பண்ணறீங்களா?" என்றபடி இணைப்பைத் துண்டித்த பிறகு சக்தியிடம், "அவருக்கும் அதே பயம்தான். ஆனந்த்கிட்டே என்ன பேசப் போறோம்?"

சக்தி, "இன்னும் விக்ரம் ஷாவின் லாப்டாப் உபயோகத்தில் இருக்கான்னு தெரிஞ்சுக்கப் போறோம். மாக் அட்ரெஸ்ஸை அவரால மாத்த முடியாது. இருந்தாலும் அதையும் வெரிஃபை பண்ணிக்கப் போறோம்"

வந்தனா, "எனக்கு என்னமோ லாப்டாப் இன்னும் உபயோகத்தில் தான் இருக்கும்ன்னு தோணுது. ரெய்ட் வரப் போகுதுன்னு தெரிஞ்சதுக்கு அப்பறம்தான் எதாவுது செய்வார். அதை எப்படி தடுப்பது"

சக்தி, "அந்த லாப்டாப்பை மட்டும் யாரையாவுது அனுப்பி உடனடியா கைப்பற்றிட்டா?"

வந்தனா, "என்ன சொல்லி கைப் பற்ற முடியும் சக்தி? என்னதான் R&AWவுக்கு ஃபுல் பவர் இருக்குன்னாலும் ஆதாரம் இல்லாம ஒரு இந்தியக் குடிமகனின் தனி வாழ்வில் குறுக்கிடக் கூடாது. அதுக்கு யாருக்கும் அதிகாரம் இல்லை. அதிகாரபூர்வமா ஒண்ணும் செய்ய முடியாது"

சக்தி குறும்புச் சிரிப்புடன், "அப்ப அந்த லாப்டாப்பை திருடறதை தவிற வேற வழி இல்லை"

வந்தனா முகத்தில் கேள்விக் குறியுடன் பார்த்துக் கொண்டு இருக்க, சக்தி தன் கைபேசியில் ஒரு ஸ்பீட் டயல் எண்ணை அழைத்தான் ..

சக்தி, "டேய் நித்தின், லாஸ்ட் ரிலீஸ் இன்னும் அதே சர்வரில் தானே இருக்கு?"

...

சக்தி, "நீ டெஸ்ட் பண்ணினப்ப எல்லாம் சரியா இருந்ததா?"

...

சக்தி, "நீ வேற எந்த சேஞ்சஸும் பண்ணலையே?"

...

சக்தி, "அப்ப அந்த வெர்ஷனை லைவ் யூஸ்ஸுக்கு அனுப்பலாமா?"

...

சக்தி, "ரிலீஸ் ப்ளானில் எந்த சேஞ்சும் இல்லை. இது வேற ஒரு பர்பஸ்ஸுக்கு. நான் அப்பறமா சொல்லறேன்"

வந்தனாவின் கைபேசியில் ஒரு குறுஞ்செய்தி மூலம் ஷான் அனுப்பிய ஆனந்த்தின் கைபேசி எண் வந்தது ..

வந்தனா, "என்ன? எனக்கு ஒண்ணும் புரியலை"

சக்தி, "நான் அப்பறமா விளக்கிச் சொல்லறேன். முதலில் ஆனந்தை உன் ஸெல்லில் கூப்பிடு. கூப்பிட்டதுக்கு அப்பறம் என்னையும் கான்ஃபரென்ஸில் கனெக்ட் பண்ணு"

வந்தனா ஆனந்தின் கைபேசியை அழைத்தாள் ... 


இடம்: ஷா ஸிஸ்டம்ஸ் அலுவகலகம்
நேரம்: காலை 9:30 மணி

அலுவலகத்துக்குள் நுழைந்த ஆனந்த் தன் கேபினுக்குச் செல்லுமுன் விக்ரம் ஷாவின் அறைக்குச் செல்கிறான். அந்த அறை வாசலுக்கு அருகே இருந்த இருக்கையில் அமர்ந்து இருந்த விக்ரம் ஷாவின் காரியதரிசியைப் பார்த்து ...

ஆனந்த், "ஹாய், உன் ஆத்துக்காரர் ஆஃபீஸுக்கு போனப்பறம் நீ ட்ரெஸ் பண்ணிண்டு புறப்பட்டு வந்தியா?"

காரியதரிசி, "ஆமா. ஏன் கேட்கறே?"

ஆனந்த், "இந்த புடவையில் உன்னைப் பார்த்து இருந்தார்ன்னா ஆஃபீஸுக்குப் போக விட்டு இருக்க மாட்டார்"

காரியதரிசி, "ஏன்? நன்னா இல்லையா?"

ஆனந்த், "ஐய்யோ, ரொம்ப நன்னா இருக்கு. உன் ஆத்துக்காரர் பார்த்து இருந்தா நேரா பெட் ரூமுக்குக் அழைச்சுண்டு போயிருப்பார்ன்னு சொல்ல வந்தேன்"

காரியதரிசி, "சே! நீ ரொம்ப மோசம்" என்றபடி அவனை ஏக்கத்துடன் பார்த்துப் பெருமூச்செரிய ...

ஆனந்த், "விக்ரம் ஷா வந்தாச்சா?"

காரியதரிசி, "ம்ம்ம் ... அஞ்சு நிமிஷத்துக்கு முன்னாடிதான் வந்தார். நேத்து வந்தாளே அந்த ஆடிட்டர்ஸ்? அவாளோடதான் டிஸ்கஸ் பண்ணிண்டு இருக்கார்"

ஆனந்த், "ம்ம்ம் ... குட் .. அவா போனப்பறம் நேக்கு சொல்லறியா?"



காரியதரிசி, "ம்ம்ம் .. சொல்லறேன். எதாவுது டிஸ்கஸ் பண்ணனுமா?"

ஆனந்த், "ஆமா. என் ரிலீவலைப் பத்தி"

காரியதரிசி, "சரி. சொல்லறேன். உன் கேபின்ல தானே இருப்பே?"

ஆனந்த், "ஆமா ... சீ யூ" என்று திரும்ப,

எதிரில் ப்ரீதி முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க நின்று கொண்டு இருந்தாள்

ஆனந்த் அவளது கோபத்தின் காரணத்தைப் புரிந்து கொண்டு எதுவும் பேசாமல் அவள் கையைப் பிடித்துக் தன் அறைக்கு அழைத்துச் சென்றான். அறைக்குள் நுழைந்த மறுகணம் கதவைச் சாத்தியபடி அவனிடம் இருந்து திமிறி நகர முற்பட்டவளை அணைத்து முத்தமிட்டான்.

ப்ரீதி, "ம்ம்ம் ... ஒண்ணும் வேணாம் போ ... இதெல்லாம் அந்த செக்ரட்டரிட்டே வெச்சுக்கோ"

ஆனந்த், "அசடே! நமக்கு அவகிட்டே கொஞ்சம் காரியம் ஆகணும். மிட்டில் ஏஜ் பொம்மனாட்டிங்களை அவாளோட ஹஸ்பண்ட்ஸ் they take them for granted. அதிகமா கண்டுக்க மாட்டா. அவாளுக்கு ஹஸ்பண்ட்ஸ்கிட்டே கிடைக்காத அப்ரிஸியேஷன் வேற யார் கொடுத்தாலும் அப்படி அப்ரிஷியேட் பண்ணறவாளுக்கு எது வேணும்னாலும் செய்வா. இதனாலயே யூ.எஸ்ல நிறைய டைவர்ஸ் கேஸஸ்."

ப்ரீதி, "ம்ம்ம் .. அதுக்காக அப்படி வழியறே?"

ஆனந்த், "அதான் சொன்னேனோல்லியோ? நமக்கு காரியம் ஆகணும். இன்னை சாயங்காலம் நாலறை மணி வாக்கில் ரெய்ட் நடக்கப் போறது. விக்ரம் ஷாவின் மூவ்மெண்ட்ஸை தொடர்ந்து கவனிக்கறதுக்கு அவளை விட்டா வேற யார் இருக்கா?"

ப்ரீதி, "என்னவோ போ. இன்னைக்கு நிச்சயம் வரப் போறாதானே?"

ஆனந்த், "எஸ் மை டார்லிங்க். Everything is going on as planned"

ப்ரீதி, "சரி. நேக்கு வேலை இருக்கு அப்பறம் பார்க்கலாம்" என விடைபெற்றுச் சென்றாள்.



No comments:

Post a Comment