Monday, May 4, 2015

அக்னி சாட்சி - அத்தியாயம் - 22

ஆனந்த் - ப்ரீதி

Monday, 15 February 2010 - திங்கள், 15 ஃபிப்ரவரி 2010

காலை ஆறு மணியளவில் ....

ஆழ்ந்த தூக்கம் கலைந்து எழுந்து இருக்க மனம் இல்லாமல் புரண்டு படுத்த ஆனந்த் அருகே ப்ரீதி இல்லாதைதை கவனித்தான் .. கண் விழித்து சுற்றும் முற்றும் பார்க்க ப்ரீதி சமையல் அறையில் இருக்கும் அரவம் கேட்டது. 'இவ்வளவு சீக்கரம் எழுந்திருச்சு என்ன செஞ்சுட்டு இருக்கா?' என்று சற்று எரிச்சல் அடைந்த பிறகு, 'God! She is so innocent and pure. நான் நிஜமாவே லக்கி' என்று எண்ணியவாறு எழுந்து சமையல் அறைக்குச் சென்றான்

அங்கு குளித்து தலையில் ஒரு டவலைக் கட்டியபடி உள் பாவாடையும் அவனது டீ-ஷர்ட் ஒன்றையும் மட்டும் அணிந்தபடி சமையலில் ஈடுபட்டு இருந்தாள்.

வாசலில் சாய்ந்து நின்று கை கட்டியபடி அவளைப் பொய்க் கோபத்துடன் முறைத்துக் கொண்டு இருந்த ஆனந்தைப் பார்த்த ப்ரீதி, "நீ எதுக்கு இவ்வளவு சீக்கரம் எழுந்துட்டே?"


ஆனந்த், "ம்ம்ம் ... யாரோ நைட்டு எல்லாம் என் தோள்ல தலை வெச்சுட்டு படுத்துட்டு இருந்தாங்க. என்னடா தீடீர்ன்னு காணாமப் போயிட்டாங்களேன்னு எந்திரிச்சேன்"

ப்ரீதி, "அதுக்கு ஏன் இப்படி கோவமா பாத்துண்டு இருக்கே?"

ஆனந்த், "ம்ம்ம் ... I had an early morning erection ... அதை சமாளிக்க நீ பக்கத்தில் இல்லை"

ப்ரீதி, "சீ! ஏன்தான் இப்படி பச்சை பச்சையா பேசுவையோ!! போய் பல் தேச்சுட்டு வா. சூடா காஃபி போட்டுத் தரேன்"

ஆனந்த், "உன் காஃபி ஒண்ணும் வேண்டாம். நீ வா"

ப்ரீதி, "நோ சான்ஸ் மை டியர் வுட் பி! நேத்து சொன்னேனோல்லியோ? காலைல அஞ்சு மணிக்கு வந்துடுத்து"

முகத்தில் கரிசனம் பொங்க, "கிறுக்கு! அப்பறம் எதுக்கு இப்போ கிச்சனில் இருக்கே"

ப்ரீதி, "ஏன் நீயும் எங்க அம்மாவை மாதிரி பீரியட்ஸ் இருந்தா தளிகை அறையில் வரக்கூடாதுன்னு கண்டிஷன் போடறியா?"

ஆனந்த், "சே! Why should I say so? எதுக்கு இப்படி இழுத்துப் போட்டுட்டு சமையல் செஞ்சுட்டு இருக்கே? இன்னும் டயர்டர்ட் ஆகறதுக்கான்னு கேட்டேன்?" பிறகு அவள் சமையல் அறையைக் குறிப்பிடுகிறாள் என்று உணர்ந்த பிறகு உணர்ந்த ஆனந்த், "சரி, அதுக்கும் கிச்சனுக்குள்ளே வர்றதுக்கும் என்ன சம்மந்தம்?"

ப்ரீதி, "ம்ம்ம் ... She thinks it is un-clean ... அபசாரம்ன்னு சொல்லுவா ... More like un-holy ... "

ஆனந்த், "Thank God my mom went to US for higher studies. But hey! எனக்குத் தெரிஞ்சு பாட்டி அந்த மாதிரி எல்லாம் கண்டிஷன் போட மாட்டாளே?"

ப்ரீதி, "பொம்மனாட்டிகளுக்கு உள்ளே நடக்கறது எல்லாம் நோக்கு சொல்லிண்டா இருப்பா? நோக்கு இதெல்லாம் தெரிஞ்சு இருக்க சான்ஸே இல்லை?"

ஆனந்த், "ஹல்லோ! என் முன்னாடியே அம்மா அவங்களுக்கு பீரியட்ஸ்ன்னு பாட்டிகிட்டே சொல்லி இருக்காங்க. பாட்டியும் கூலா அப்படியா ரெஸ்ட் எடுத்துக்கோடீன்னு சொல்லி இருக்காங்க. என் காதால கேட்டு இருக்கேன். என்ன இருந்தாலும் மை பாட்டி இஸ் க்ரேட்"

ப்ரீதி, "ஆமா கோமளா மாமி எங்க அம்மா மாதிரி கட்டு பட்டி இல்லை. ரொம்ப அட்வான்ஸ்ட். போறுமா?"

அவளது குரலில் தெரிந்த எரிச்சலைப் புரிந்த ஆனந்த், "ஹே! ஹே! கூல். எதுக்கு இப்படி கோவப் படறே?"

ப்ரீதி, "பின்னே? எதுக்கு எடுத்தாலும் பாட்டி புராணம்"

அவனுக்கு முதுகு காட்டி நின்று இருந்த ப்ரீதியின் அருகே வந்த ஆனந்த் அவள் இடுப்பை தன் கைகளால் வளைத்து அவள் கழுத்தில் இதழ் பதித்து, "சாரிடா, பொண்டாட்டிகிட்ட புருஷன் வேற ஒரு பொண்ணைப் பத்தி உசத்தியா பேசினா பொறாமைப் படுவான்னு கேள்விப் பட்டு இருக்கேன். I never thought that jealousy will cross generations!"

திரும்பிய ப்ரீதியின் கண்கள் பனித்து இருந்தன. அவனை இறுக அணைத்து அவன் மார்பில் முகம் புதைத்து சற்று நேரத்துக்குப் பிறகு நிமிர்ந்தவள் அவனை கூர்ந்து நோக்கி, "I want to be your first woman"

ஆனந்த், "அதில உனக்கு என்னடா சந்தேகம்?" என்றபடி அவள் கன்னத்தில் முத்தமிட்டான்.

ப்ரீதி, "ஏற்கனவே உங்க ஆத்துக்கு ஏத்த மாட்டுப் பொண்ணா இருப்பேனான்னு நேக்கு ரொம்ப இன்ஸெக்யூர்டா இருக்கு ஆனந்த்"

ஆனந்த், "போதாக் குறைக்கு நானும் அடிக்கடி உன்னைக் கிண்டல் அடிக்கறேன். இல்லையா?"

ப்ரீதி, "ம்ம்ம் ... தெரிஞ்சா சரி"

ஆனந்த், "கவலையே படாதே. நீ எங்க வீட்டுக்கு வந்தப்பறம் இந்த மாதிரி அப்பா அம்மா முன்னாடி கிண்டல் அடிச்சா ரெண்டு பேரும் என்னை பின்னி எடுத்துடுவாங்க. You still don't know much about my mom and dad"

ப்ரீதி, "சரி. சீக்கரம் ரெடி ஆயிண்டு வா. என் ப்ராஜெக்ட் வேலையே நேக்கு நிறைய இருக்கு. நடுவில் நம்ம ஷெர்லாக் ஹோம்ஸ் வேலையும் செய்யணும்"

ஆனந்த், "Let us organize our findings and thoughts. முதல்ல ஒரு காஃபி போட்டுத்தா. நான் ப்ரெஷ் பண்ணிட்டு வர்றேன்"

சிறிது நேரத்துக்குப் பிறகு காஃபிக் கோப்பையுடன் இருவரும் அமர்ந்தனர் ..

ப்ரீதி, "என்ன செய்யணும் சொல்லு"

ஆனந்த், "இதுவரைக்கும் நமக்கு என்ன தெரிஞ்சு இருக்கு? இதில லிஸ்ட் பண்ணறேன் சொல்லு" என்றவாறு தன் ஆர்கனைஸரில் ஒரு வெத்துப் பக்கத்தைத் திறந்து அந்த புத்தகத்தில் அட்டைக்கு பின்னால் செருகப் பட்டு இருந்த பேனாவை எடுத்து எழுதத் தொடங்கினான்.

ப்ரீதி, "நீ ப்ராஜெக்ட் எடுத்த யூ.எஸ் கம்பெனியில் இருந்து ஒரு கஸ்டமர் லிஸ்ட் திருடப் பட்டு இருக்கு" என்று சொல்லி நிறுத்தினாள்.

ஆனந்த், "ம்ம்ம் நீ ஒவ்வொண்ணா சொல்லிட்டே வா ... " என்று ஊக்குவித்தான் ..

ப்ரீதி, "நெக்ஸ்ட், சைனாவில் இருக்கும் ஒரு கம்பெனிக்கு அது விக்கப் பட்டு இருக்கு"

ஆனந்த், "ம்ம்ம்"

ப்ரீதி, "உனக்கு அவா கொடுத்த லாகின் ஐடி மூலம் அந்த திருட்டு நடந்து இருக்குன்னு அவா சந்தேகப் படறா"

ஆனந்த், "ம்ம்ம்"

ப்ரீதி, "தோராயமா அந்த லிஸ்ட் திருட்டுப் போன சமயத்தில் உன் ஐடியை உபயோகிச்சு அந்த சர்வரில் விக்ரம் ஷாவின் லாப்டாமப் மூலம் யாரோ லாகின் பண்ணி இருக்கா"

ஆனந்த், "ம்ம்ம்"

ப்ரீதி, "விக்ரம் ஷாவோட லாப் டாப்பில் ஃபிங்கர் ப்ரிண்ட் ரீடர் இருக்கு. கை ரேகை ஏற்கனவே பதிவாகாத யாரும் அந்த லாப் டாப்பை உபயோகிக்க முடியாது"

ஆனந்த், "ம்ம்ம்"

ப்ரீதி, "சோ, அனேகமா விக்ரம் ஷாதான் அப்படி லாகின் பண்ணி இருக்கார்ன்னு நம்பலாம்."

ஆனந்த், "எக்ஸலெண்ட் ... இப்படித்தான் யோசிக்கணும். சரி. இப்போ நாம் கண்டு பிடிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?"

ப்ரீதி, "உன் விஷயத்திலா என் விஷயத்திலா?"

ஆனந்த், "இப்போதைக்கு உன் விஷயத்தில் நாம் மாமாவை நம்பி இருக்கோம். அவர் என்ன தெரிஞ்சுக்கறார் அப்படிங்கறதைப் பொறுத்துத் தான் நாம் களத்தில் இறங்கணும். சோ, என் விஷயத்துக்கு வருவோம். சரியா?"

ப்ரீதி, "சரி. நாம் அடுத்து கண்டு பிடிக்க வேண்டிய விஷயங்கள் ரெண்டே ரெண்டு தான். ஒண்ணு, உன் லாகின் ஐடியை உபயோகிச்சு எப்படி அந்த லிஸ்ட் திருடப் பட்டு இருக்கு என்பது. அடுத்தது, மேனேஜர்களில் யாராவுது அதுக்கு உதவியா இருந்து இருக்காங்களா, அப்படி உதவி இருந்தா, அந்த மேனேஜருக்கும் விக்ரம் ஷாவுக்கும் என்ன சம்மந்தம் அப்படிங்கறது"

ஆனந்த், "உன் சமையல் முடிஞ்சுதா?"

ப்ரீதி, "பெரிசா ஒண்ணும் செய்யலை. பொங்கல், தேங்காய் சட்னி மட்டும் தான். சட்னிக்கு தாளிச்சுக் கொட்டினா முடிஞ்சுது. இன்னும் அஞ்சு நிமிஷம் ஆகும்"

ஆனந்த், "அப்படின்னா நீயும் ரெடியானதுக்கு அப்பறம் அந்த முதல் ஐட்டத்தைப் பத்தி மட்டும் எப்படி அப்ரோச் பண்ணலாம்ன்னு யோசி. அதுக்குள்ளே நான் குளிச்சுட்டு ரெடியாகி வந்துடறேன்" என்றவாறு குளியலறைக்குச் சென்றான்

ஆனந்த் குளித்து உடை மாற்றி வந்தபோது ப்ரீதி புடவை உடுத்தி சாப்பாட்டு மேசையின் ஒரு மூலையில் நின்று கொண்டு ஏதோ யோசித்த வண்ணம் ஒரு நோட்டுப் புத்தகத்தில் எழுதிக் கொண்டு இருந்தாள். அவன் வந்த அரவம் கேட்டாலும் தன் கவனத்தை சிதரவிடாமல் தன் பணியை தொடர்ந்து கொண்டு இருந்தாள்.

பின் புறம் இருந்து ஆடை மறைக்காமல் இருந்த அவள் இடுப்புப் பகுதியில் இருபுறமும் தன் கைகளைச் செலுத்தி அவளை அருகில் இழுத்து அணைத்தான். ஆனந்த், "வாவ், ப்ரீதி! புடவையில் அட்டகாசமா இருக்கே"

ப்ரீதி, "ஐய்யோ, என்னது இது ஆனந்த் என்னை கான்ஸென்ட்ரேட் பண்ண விடாமே?" என்று சிணுங்கினாள்

ஆனந்த், "பி.எஸ்.வி ஸிஸ்டம்ஸ் எம்.டி மேடம் என்ன கான்ஸென்ட்ரேட் பண்ணிட்டு இருக்காங்கன்னு தெரிஞ்சுக்கலாமா?"

ப்ரீதி, "எந்த எந்த விதத்தில் எல்லாம் அந்த கஸ்டமர் லிஸ்ட் எடுத்து இருக்க முடியும்ன்னு அனலைஸ் பண்ணிண்டு இருந்தேன். ஒண்ணும் பிடிபடலை"



ஆனந்த், "என்ன ஒண்ணும் பிடிபலை?"

ப்ரீதி, "விக்ரம் ஷா திருடின கஸ்டமர் லிஸ்ட்டுக்கும் அவா உனக்குக் கொடுத்த அந்த டெஸ்டிங்க் ப்ராஜெக்டுக்கும் ஒரு சம்மந்தமும் இல்லை அதாவுது, அந்த டெஸ்டிங்க் ப்ராஜெக்ட் அவாளோட பர்சேஸ ப்ராஸஸிங்க் மாட்யூலில் செஞ்ச சில மாற்றங்களை சரி பார்க்கறதுக்காக கொடுத்தா. அதுக்கும் கஸ்டமர்ஸுக்கும் ஒரு சம்மந்தமும் இல்லை. உனக்குக் கொடுத்த லாகின் ஐடிக்கு கஸ்டமர் லிஸ்ட் ஜெனரேட் பண்ணும் உரிமை நிச்சயம் அவா கொடுத்து இருக்க மாட்டா"

ஆனந்த், "ஓ மை காட்! நான் ஏன் இந்த லைனில் யோசிக்கலை? ஆனா, டெஸ்டிங்க் ப்ராஜெக்டுக்கும் கஸ்டமர்ஸ் சம்மந்தப் பட்ட தகவல்களுக்கும் ஒரு சம்மந்தமும் இல்லைன்னு உனக்கு நிச்சயமா தெரியுமா?"

ப்ரீதி, "100% அந்த ப்ராஜெக்டோட ரிகுயர்மெண்ட் ஸ்பெஸிஃபிகேஷனைத்தான் நேத்து முதலில் நான் பாத்தேன்" (பி.கு: ஒரு மென் பொருள் ப்ராஜெக்டில் என்னவெல்லாம் செய்யவேண்டும் என்பதை அந்த ப்ராஜெக்ட் தொடங்குவதற்கு முன் இத்தகைய கோப்பில் பதிவு செய்யப் படும்)

ஆனந்த், "சோ! அந்த பர்சேஸ் மாட்யூலுக்கும் கஸ்டமர் லிஸ்ட் இருக்கும் ஸேல்ஸ் மாட்யூலுக்கும் எந்த விதத்திலாவுது ஒரு பொதுவான அமைப்பு இருக்கான்னு பார்க்கணும்"

ப்ரீதி, "ம்ம்ம்.. நீ சொல்றது ஒரு அளவுக்கு சரி. ஆனா, அப்படி ஒரு அமைப்பு இருந்தாலும் எப்படி அவரால லிஸ்டை திருடி இருக்க முடியும்?"

ஆனந்த், "அதைத் தான் ஆஃபீஸில் கண்டு பிடிக்கப் போறேன். இன்னைக்கு நீ உன் வேலையைப் பாரு. சாயங்காலம் கொஞ்சம் சீக்கரமா வைண்ட் அப் பண்ணிட்டு மாமா ஆஃபீஸுக்குப் போய் அங்கே என்ன ப்ராக்ரெஸ்ன்னு பாக்கலாம். ஓ.கே"

ப்ரீதி, "சரி. உக்காரு சாப்பிடலாம்"


Monday, 15 February 2010 - திங்கள், 14 ஃபிப்ரவரி 2010

மாலை இருவரும் வெளியில் சென்று திரும்பும் வழியில் ஒரு பார்க்கில் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தனர்.

செல்வி, "சிவா, ஏன் சிவா அவரை அப்படி வெறுக்கறே?"

சிவா, "யாரை?"

செல்வி, "உங்க அப்பாவை"

சிறிது நேரம் மௌனத்துக்குப் பிறகு சிவா, "உனக்குத் தெரியாது செல்வி. நான் பத்து வயசில இருக்கும் போது நானும் அம்மாவும் ஒரு தனி வீட்டில் இருந்தோம். அந்த ஆளு அடிக்கடி வீட்டுக்கு வருவாரு. பகல் நேரத்தில் நான் ஸ்கூலுக்குப் போயிடுவேன். ஒவ்வொரு சமயம் சாயங்காலமா வருவாரு. அம்மா வெளியில போய் விளையாடிட்டு வாடான்னு அனுப்பிட்டு வீட்டை தாழ் போட்டுக்குவாங்க. எனக்கு எதாவுது வாங்கிட்டு வந்து இருப்பாரு. அம்மா தருவாங்க. எனக்கு ஒரு அளவுக்கு இன்னா விஷயம்ன்னு தெரியும். திடீர்ன்னு ஒரு நாள் அவரோட மொத சம்சாரம். அதான் காலைல நாம் அவங்க வூட்டுக்குள்ளே போவச்சே மொறைச்சுனு நின்னுனு இருந்துச்சே? அதுவும் அவங்க அண்ணன் தம்பி எல்லாம் வந்து அம்மாவையும் என்னையும் நாங்க இருந்த வீட்டை விட்டு தொரத்துனாங்க. சேரில அம்மாவுக்கு தெரிஞ்சவங்க வீட்டுக்குப் போனோம். அங்கே அம்மாவை இன்னாடி மினுக்கிகுனு போனே திரும்ப சேரிக்கே வந்துட்டியான்னு கேலி பண்ணுனாங்க. நாங்க இன்னா ஆனோம்ன்னு கூட பாக்கறதுக்கு அந்த ஆள் வரலை. யார் மூலமோ துட்டு கொடுத்து அனுப்பி இருந்தான். அந்த ஆள் துட்டு வேணான்னு அம்மா திருப்பி அனுப்பிட்டாங்க"

அவன் சொல்லி முடித்த போது சிவாவின் கண்கள் சிவந்து குளமாகி இருந்தன செல்வி அவன் கண்களைத் துடைத்தவாறு விசும்பினாள்.

சிவா, "அப்போ முடிவு பண்ணினேன் செல்வி. இனி எந்த பேமானியையும் நம்பி இருக்கக் கூடாதுன்னு"

செல்வி, "அனா சிவா, இப்போ அவரைப் பாக்கும் போது கொஞ்சம் பாவமா இருக்கு சிவா"

சிவா, "ஏன்?"

செல்வி, "பாரேன். அவரு செல்லமா வளத்த அவரு பொண்ணை கட்டிக் கொடுத்துட்டாங்க. பிரபாகரும் தருதலையா சுத்திட்டு இருக்கான். உன்னை அவர் பாக்கும் போது அவரு மூஞ்சில ஏக்கம் தெரிஞ்சுது சிவா. அந்த அம்மா மட்டும் அப்படி பண்ணாமே இருந்தா நீ இன்னேரம் அவரோட ரியல் எஸ்டேட் பிஸினஸ்ஸில் பெரிய ஆளாயிருப்பே"

பெருமூச்சு விட்ட சிவா, "தெரியலை செல்வி. ஏன், உனக்கு நான் அப்படி ஆயிருக்கணும்ன்னு இருக்கா?"

செல்வி, "சீ, இன்னா பேச்சு பேசறே? நீ குக்கா இருக்கறதைப் பத்தி நான் பெருமைப் படறேன். ஒரு நாளும் நான் கேவலமா நினைச்சது இல்லை"

சிவா, "அப்பறம் இன்னா. வுடு"

மௌனம் காத்த செல்வி அவன் தோளில் தலை சாய்த்தாள்.

சிவா, "செல்வி, நாம் பிரபாகரை பார்க்கப் போறதை ஆனந்த் சார்கிட்டே சொல்லணும்"

செல்வி, "எதுக்கு?"

சிவா, "உன்னையும் என்னையும் விட அவருக்கு இந்த விஷயத்தைப் பத்தி நல்லா தெரிஞ்சு இருக்கும் இல்லையா? பிரபாகரை பார்க்கப் போறப்ப ஆனந்த் சாரும் வந்தா அவன் ஒழுங்கா உண்மையை சொல்லுவான்னு தோணுது"

செல்வி, "ஆமா. நீ சொல்றது சரி. இன்னைக்கே ஃபோனில் கூப்பிட்டு சொல்லிடு"

சிவா, "சரி"


அதே மாலை ...

இருவரும் புறப்பட்டு சுதர்சனத்தின் அலுவலகம் நோக்கிப் பயணித்துக் கொண்டு இருந்தனர்.

ப்ரீதி, "என்ன ஆனந்த்? எதாவுது பிடிபட்டுச்சா?"

ஆனந்த், "ம்ம்ஹூம். ஒண்ணும் புலப்பட மாட்டேங்குது. சில டீடெயில்ஸ் அந்த கம்பெனியின் ஐ.டி டிபார்ட்மென்ட்கிட்டே கேட்டு இருக்கேன். இன்னைக்கு நைட்டு ஒரு கான்ஃபெரென்ஸ் கால் இருக்கு. ஏற்கனவே உன்னைப் பத்தி அவங்ககிட்டே சொல்லி இருக்கேன். நீயும் கலந்துக்கோ"

ப்ரீதி, "ம்ம்ம் ... நான் என் பி.ஜிக்குப் போகணும்"

ஆனந்த், "ஏய், கல்யாணம் வரைக்கும் என் கூடத்தான் இருக்கணும்ன்னு நான் சொன்னேனே மறந்துடுச்சா?"

ப்ரீதி, "ம்ம்ஹூம் ... வேண்டாம் ஆனந்த். வீக் எண்டில் ஒண்ணா சுத்தறது மட்டும் போதும். சொன்னா கேளு"

அதற்குப் பிறகு ஆனந்த் எதுவும் பேசாமல் வழி நெடுக முகத்தை இறுக்கிக் கொண்டு வந்ததை ப்ரீதி பார்த்து சிரித்தபடி இருந்தாள்.

சுதர்சனத்தின் அலுவலகம் ...

சுதர்சனம், "வாடா, வாம்மா ப்ரீதி" என்றவர் இம்முறையும் தன் செக்ரடரியிடம் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று கூறியபடி டிஸ்கஷன் ரூமுக்கு அழைத்துச் சென்றார்

சுதர்சனம், "என்னடா? எனி ப்ரேக் த்ரூ?"

ஆனந்த், "நிறைய .. " என்று தொடங்கி அதுவரை கண்டறிந்ததைச் சொன்னான்.

சுதர்சனம், "விக்ரம் ஷாவோட லாப் டாப்பை அவரைத் தவிற வேற யாரும் யூஸ் பண்ண முடியாதா? ரொம்ப சுவாரசியமான் விஷயம்டா அது! அனேகமா ப்ரீதி விஷயத்திலும் அது உதவும்ன்னு தோணுது. அந்த லாப் டாப்பில் இருக்கறதை பார்க்க முடியுமா?"

ஆனந்த், "ஏன்? என்ன சொல்றீங்க?"

சுதர்சனம், "அவன் பி.எஸ்.வி ஸிஸ்டம்ஸ் பேங்க் பணப் போக்கு வரத்து நிறைய நெட் பாங்கிங்க் உபயோகிச்சுப் பண்ணி இருக்கான் இல்லையா?"

ஆனந்த், "ஆமா"

சுதர்சனம், "அப்படின்னா நிச்சயம் பேங்க் ஸ்டேட்மெண்ட் டவுன் லோட் பண்ணி இருப்பான் இல்லையா?"

ஆனந்த், "ஆமா .. " என்று சொல்லிக் கொண்டு இருக்கையில் ப்ரீதி, "எஸ் அங்கிள்! நீங்க சொல்றது சரி. பாங்க் ஸ்டேட்மெண்ட் அவர் லாப் டாப்பில் இருந்தா அவர்தான் அந்த கம்பெனியின் வரவு செலவைப் பாத்துட்டு இருந்தார்ன்னு நிரூபிக்கலாம் இல்லையா?"

ஆனந்த், "எஸ்!"

ப்ரீதி, "பட் ஆனந்த்! மனுஷன் எப்பவும் அந்த லாப்டாப்பும் கையுமா இருப்பார். ஆம்படையாளைக்கூட அவ்வளவு சிரத்தையா யாரும் பாத்துக்க மாட்டா"

ஆனந்த், "ஏன் நான் பாத்துக்கலையா?" என்றதும் ப்ரீதி முகம் சிவந்தாள்.

சுதர்சனம், "டேய், உன் ரோமான்ஸை அப்பறம் வெச்சுக்கோ. முதல்ல அவ கம்பி எண்ணாம இருக்க வழியைப் பார்ப்போம்"

ஆனந்த், "சரி மாமா, உங்க சைடில் என்ன ப்ராக்ரெஸ். எதுக்கு வரச் சொன்னேள்?"

சுதர்சனம், "ஆர்.ஓ.ஸி, இன்கம் டாக்ஸ் டிபார்ட்மெண்ட் ரெண்டு இடத்தில் இருந்தும் அவன் சப்மிட் பண்ணின ஆன்யுவல் ரிடர்ன்ஸ் கூட பாலன்ஸ் ஷீட், ப்ராஃபிட் அண்ட் லாஸ் அக்கௌண்ட் எல்லாம் வந்துடுத்து. அதை அனலைஸ் பண்ணிண்டு இருக்கேன். உங்களை வரச் சொன்ன முக்கிய காரணம். ப்ரீதியோட சிக்னேசர் வேணும் அதுக்குத்தான்"



ஆனந்த், "எதுக்கு சிக்னேசர்?"

சுதர்சனம், "பி.எஸ்.வி ஸிஸ்டம்ஸின் லெட்டர் ஹெட் ரெடி பண்ணியாச்சு. பாங்குக்கு என்னை ஃபினான்ஸ் மேனேஜரா நியமிச்சு இருக்கறதாவும் எனக்கு நெட் பாங்கிங்க் வசதி கொடுக்கவும் ஒரு லெட்டர் கொடுக்கணும்ன்னு சொன்னேனே மறந்துடுத்தா?"

ஆனந்த், "ஓ, அதுக்குள்ளே லெட்டர் ஹெட் ரெடி பண்ணிட்டீங்களா? யூ ஆர் வெரி ரிஸோர்ஸ்ஃபுல் மாமா"

சுதர்சனம், "டேய், இருவது வருஷம் இந்த ஊரில் குப்பை கொட்டி இருக்கேன். மறந்துடாதே" என்றபடி ஏற்கனவே அந்த லெட்டர் ஹெட்டில் தயாரித்து வைத்த விண்ணப்ப மடல்களை ப்ரீதியிடம் நீட்டினார்.

ப்ரீதி அவைகளில் கையொப்பம் இட்ட பிறகு இருவரும் விடைபெற்றுச் சென்றனர்.

ஆனந்த், "ப்ரீதி, நிச்சயம் நீ பி.ஜிக்குப் போய்த்தான் ஆகணுமா?"

ப்ரீதி, "என் செல்லக் குட்டி இல்லை? சொன்னா கேளுப்பா"

ஆனந்த், "சரி, டின்னர் ஒண்ணா சாப்பிட்டுட்டு அப்பறமா ட்ராப் பண்ணறேன்"

ப்ரீதி, "சரி"

இருவரும் ஒரு உணவருந்திக் கொண்டு இருந்த போது ஆன்ந்தின் செல் ஃபோன் சிணுங்கியது


No comments:

Post a Comment