Saturday, May 2, 2015

அக்னி சாட்சி - அத்தியாயம் - 20

மதியம் இரண்டு மணியளவில் இருவரும் ஷா ஸிஸ்டத்தின் அலுவலகத்துக்குள் நுழைந்தனர். வரவேற்பு அறையைக் கடந்து காரிடோரில் ஆனந்துக்கு கொடுக்கப் பட்டு இருந்த கேபினை நோக்கி நடந்து கொண்டு இருக்கையில் வழியில் விக்ரம் ஷாவின் கேபின் திறந்து இருப்பதைக் கண்டனர்.

ஆனந்த், "ஸர்ப்ரைஸ்! விக்ரம் ஷாவும் இன்னைக்கு ஆஃபீஸ் வந்து இருக்கார்"

ப்ரீதி, "லீவ் நாள்ல நிறைய தரம் அவரைப் பாத்து இருக்கேன்"

காரிடோரைக் கடக்குமுன் விக்ரம் ஷா தன் அறையை நோக்கி அவர்கள் எதிரில் வந்தார்

விக்ரம் ஷா, "ஹாய் ஆனந்த்! என்ன சண்டே அன்னைக்கு அதிசயமா இங்கே? வீட்டில் இருந்தே லாகின் செய்யற மாதிரி ப்ரொவிஷன் வேணும்ன்னு கேட்டு வாங்கி இருந்தியே?"



ஆனந்த், "எல்லாம் அந்த ப்ராஜெக்ட் விஷயமாத்தான் சார். ப்ரீதி டீம் டெவலப் பண்ணின ஒரு மாட்யூலை வீட்டில் இருந்து என் லாப் டாப் மூலம் லாகின் பண்ணி ரிவ்யூ பண்ணிட்டு இருந்தேன். வொர்க் பண்ணலை. இவளுக்கு ஃபோன் பண்ணி சொன்னப்ப இங்கே இருக்கும் டெஸ்க் டாப்பில் அதே மாட்யூல் வொர்க் பண்ணறதா தலையில் அடிச்சு சத்தியம் பண்ணறா. சரி என்னன்னு பாக்கலாம்ன்னு என் லாப்டாப்பையும் தூக்கிட்டு வந்து இருக்கேன். சண்டேவும் அதுவுமா இப்படி படுத்தறயேன்னு வழி நெடுக என்னை வசை பாடிட்டு வந்தா" என்று நீளமாக ஒரு சமயோசிதப் பொய்யைச் சொன்னான்.

ப்ரீதி எதற்கு ஆனந்த் அப்படிச் சொல்கிறான் என்று தன் முகத்தில் தோன்றிய சந்தேக ரேகைகளை சாதுர்யமாக சிரித்து மறைத்தாள்.

சிரித்த படி விக்ரம் ஷா, "ஆனந்த், ப்ரீதி எங்க ரைஸிங்க் ஸ்டார். சண்டேஸ் மட்டும்தான் லீவ் எடுத்துப்பா. அதனாலதான் அப்படி சொல்லி இருப்பா. எனிவே ஐ ஆம் ஹாப்பி. யூ நோ? இந்த ப்ராஜெக்டில் கலந்துக்கணும்ன்னு நீ கேட்டப்ப நான் ரொம்ப சந்தோஷப் பட்டேன்! நீ இன்வால்வ் ஆனா இந்த ப்ராஜெக்ட் ஃபெயில் ஆகச் சான்ஸே இல்லை. மத்தபடி உனக்கு இண்டியால ஏதோ கமிட்மெண்ட்ஸ் இருக்ககுன்னு சொல்லி இருந்தியே? அது எப்படி போயிட்டு இருக்கு?"

ஆனந்த் மனதுக்குள், 'என் லைஃப் லாங்க் கமிட்மெண்ட் என் பக்கத்திலயே நின்னுட்டு இருக்குடா மடையா' என்றாலும் ப்ரீதியை ஓரக்கண்ணால் பார்த்தபடி, "அது ஒழுங்கா போயிட்டு இருக்கு சார். ஒரு பெரிய ப்ராப்பர்டி அக்விஸிஷன். முதலில் நான் ப்ரிலிமினரி சர்வே, நெகோஸியேஷன், அக்ரிமெண்ட், லீகல் க்ளியரன்ஸ் எல்லாம் முடிச்சுட்டு நான் ஓ.கே சொன்னதும் ரெஜிஸ்ட்ரேஷனுக்கு அம்மா வர்றதா சொல்லி இருக்காங்க"

விக்ரம் ஷா, "ஓ! இப்ப எந்த ஸ்டேஜில் இருக்கு?"

ஆனந்த், "இன்னைக்கு காலைல தான் இஸ்கான் கோவிலில் வெச்சு அக்ரிமெண்ட் முடிச்சு இருக்கேன் சார்"

விக்ரம் ஷா, "அக்ரிமெண்ட் போட எதுக்கு இஸ்கான் கோவில்?"

ஆனந்த், "கொஞ்சம் ரிலிஜியஸ்ஸான பார்ட்டி சார். பெருமாள் முன்னாடிதான் அக்ரிமெண்ட் போடணும்ன்னு இன்ஸிஸ்ட் பண்ணினாங்க"

வாய் விட்டுச் சிரிக்காமல் முகத்தை எதார்த்தமாக வைத்துக் கொள்ள ப்ரீதி மிகவும் முயற்சித்து அதில் ஓரளவு வெற்றி பெற்றாள்.

விக்ரம் ஷா, "எனக்கு தெரிஞ்ச லாயர் இருக்கார். லீகல் க்ளியரன்ஸுக்கு உனக்கு எதானும் ஹெல்ப் வேணும்ன்னா சொல்லு"

ஆனந்த், "எங்க மாமா இங்கே இருக்கா அவர் அரேஞ்ச் பண்ணறதா சொல்லி இருக்கா. அப்படி எதாவுது பிரச்சனைன்னா நிச்சயம் உங்ககிட்டே ஹெல்ப் கேக்கறேன்"

விக்ரம் ஷா, "ஆல் தி பெஸ்ட்" என்றபடி விடை பெற்றுச் சென்றார்.

இருவரும் வயிறு குலுங்கச் சிரித்தபடி காரிடோரைக் கடந்தனர்.

ப்ரீதி, "ம்ம்ம்? நான் உனக்கு ப்ராப்பர்டியா?"

ஆனந்த், "பின்னே ப்ராப்பர்டி இல்லாமே? என் பர்ஸனல் ப்ராப்பர்டி" என்றபடி அவள் இடையை வளைக்க எத்தனித்தான்.

ப்ரீதி, "ம்ம்ம் .. வேண்டாம். இது ஆஃபீஸ்" என்று சிணுங்கியபடி அவனிடம் இருந்து விலகி வேகமாக நடந்தாள்.

ஆனந்தின் கேபினில் அமர்ந்ததும் ..

ப்ரீதி, "ஆமா? எதுக்கு லாப் டாப் அது இதுன்னு மொதல்ல ஒரு டூப் விட்டே?"

ஆனந்த், "எல்லாம் ஒரு காரியமாத்தான். சீக்கரமா உன் ப்ராஜெக்டின் எதாவுது ஒரு மாட்யூல் டெஸ்டிங்க் சர்வரில் உப்லோட் பண்ணி இருக்கும் யூ.ஆர்.எல் ஒண்ணு சொல்லு" என்றபடி தன் லாப் டாப்பை இயக்கினான்.

ப்ரீதி, "இரு என் ஸீட்டுக்குப் போய் பாத்துட்டு அங்கே இருந்தே மெஸெஞ்சரில் அனுப்பறேன். பட் எதுக்குக் கேக்கறே?"

ஆனந்த், "மெஸ்ஸெஞ்சரில் அனுப்பாதே. ஒரு பேப்பரில் எழுதி எடுத்துட்டு வா. அப்படியே லாப் டாப் யூஸ் பண்ணற வேற யாராவுது இப்போ ஆஃபீஸ்ல இருக்காங்களான்னு ஒரு நோட்டம் விட்டுட்டு வா. அப்பறமா எதுக்குன்னு எக்ஸ்ப்ளெயின் பண்ணறேன்"

பல நிமிடங்கள் கழித்து கையில் ஒரு துண்டுக் காகிதத்துடன் வந்த ப்ரீதி, "லாப் டாப் யூஸ் பண்ணறவா யாரும் இப்போ ஆஃபீஸ்ல இல்லை"

ஆனந்த், "குட், விக்ரம் ஷா வீட்டுக்கு கிளம்பறதுக்கு முன்னாடி அவர் கேபினுக்குப் போகணும்" என்றபடி அவளை அழைத்துக் கொண்டு விக்ரம் ஷாவின் அறையை நோக்கி நடக்கத் தொடங்கினான்

ப்ரீதி, "எதுக்கு ஆனந்த்? நேக்கு புரியலை"

ஆனந்த், "பேசாமே வா நான் அப்பறம் சொல்லறேன்" என்று கிசு கிசுத்தபடி விக்ரம் ஷாவின் அறைக்கதவை லேசாகத் தட்டினான். உள்ளிருந்து விக்ரம் ஷாவின் "கம் இன்" என்ற அழைப்பு வந்ததும் இருவரும் உள்ளே நுழைந்தனர்.

ஆனந்த், "சாரி டு பாதர் யூ சார். இவ சொல்லற மாதிரி டெஸ்க் டாப்பில் அந்த மாட்யூல் வொர்க் பண்ணுது ஆனா என் லாப் டாப்பில் வொர்க் பண்ண மாட்டேங்குது. இஃப் யூ டோண்ட் மைண்ட் உங்க லாப் டாப் மூலம் வொர்க் பண்ணுதான்னு பாக்கட்டுமா. ஒரு அஞ்சு நிமிஷம் ப்ளீஸ்" என்று கெஞ்சினான்

விக்ரம் ஷா, "நோ ப்ராப்ளம். பட் இதில் அந்த மாட்யூல் லோட் பண்ணி இருக்காதே எப்படி வெரிஃபை பண்ணுவே"

ஆனந்த், "தேவை இல்லை சார் அது ஒரு வெப் பேஸ்ட் மாட்யூல். ப்ரவுஸர் மூலம் வெரிஃபை பண்ண முடியும்"

விக்ரம் ஷா, "ஓ! அப்படியா? எந்த ப்ரவுஸர்?"

ஆனந்த், "இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்"

விக்ரம் ஷா தன் லாப் டாப்பில் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரை திறந்த பிறகு ஆனந்துக்கு இடம் கொடுத்து தன் நாற்காலியை நகற்றி அமர்ந்தார்.

ப்ரீதி எழுதிக் கொண்டு வந்த வலை தள விலாசத்தை விக்ரம் ஷாவின் லாப்டாப்பில் ப்ரவுஸர் மூலம் திறந்தான். ஒழுங்காக அந்த மென் பொருள் திரைக்கு வந்தது.

ஆனந்த், "ப்ரீதி! என்னது இது இவர் லாப் டாப்பில் வொர்க் பண்ணுதே" என்றபடி விக்ரம் ஷாவிடம், "சார், இன்னும் ஒரு நிமிஷம் சார். உங்க லாப் டாப்பில் என்ன நெட்வொர்க் செட்டிங்க்ஸ் இருக்குன்னு பாத்துக்கறேன்" என்றபடி அவர் பதிலுக்கு காத்திராமல் அந்த கணிணியின் இணைய விலாசம் மற்றும் கேட் வே இவைகளை அறிவிக்கும் ஒரு மென் பொருளை இயக்கினான்.

ஆனந்த், "ப்ரீதி, கேட்வே அட்ரெஸ் 156ன்னு முடிஞ்சு இருக்கு. ஆனா சுகுமார் எனக்கு 168இல் முடியற ஒரு அட்ரெஸ் கொடுத்து இருந்தானே?"

ப்ரீதி அவனது யுத்தியை புரிந்து கொண்டு, "அது வேற ஒரு ப்ராஜெக்டுக்கு யூஸ் பண்ணற கேட்வே ஆனந்த்"

ஆனந்த், "ஓ! அப்ப என் லாப் டாப்பில் இருக்கும் செட்டிங்க்ஸ்லதான் ப்ராப்ளம்" என்ற பிறகு அவன் இயக்கிய மென்பொருளை நிறுத்தியபடி விக்ரம் ஷாவிடம், "ரொம்ப தேங்க்ஸ் சார். சாரி, உங்க நேரத்தை வீணாக்கிட்டேன்"

விக்ரம் ஷா, "நோ ப்ராப்ளம் ஆனந்த். ஆஃப்டர் ஆல் எங்க கம்பெனி ப்ராஜெக்ட்டுக்காகத்தானே?" என்றபடி விடை கொடுத்தார்

திரும்ப தன் அறைக்கு வந்ததும் தன் இருக்கையில் அமர்ந்தபடி அவசரமாக ஆனந்த் ஒரு நோட் பேட்டில் ஒரு இணைய விலாசத்தை எழுதினான்.




அவன் அருகில் வந்து நின்ற ப்ரீதி, "சோ, விக்ரம் ஷாவோட லாப் டாப் ஐ.பி அட்ரெஸ்ஸை தெரிஞ்சுக்கத்தான் இந்த ட்ராமா எல்லாமா?"

ஆனந்த், "எஸ். " என்றபடி தன் லாப்டாப்பை திறந்தான். எதிரில் இருந்த ஒரு நாற்காலியை அவனுக்கு அருகே இழுத்து ப்ரீதி அதில் அமர்ந்தாள். ஆனந்த் ஒரு எக்ஸெல் ஸ்ப்ரெட் ஷீட்டைத் திறந்த பிறகு லாப் டாப்பை ப்ரீதியும் பார்க்கும் படி திருப்பினான்.

ஆனந்த், "இந்த லிஸ்ட்டைப் பாரு அனேகமா நான் க்ரீன் கலர்ல ஹைலைட் பண்ணி இருப்பது எல்லாம் உங்க டெஸ்டிங்க் டீம்காரங்க லாகின் பண்ணினது. ஹைலைட் பண்ணாம பன்னெண்டு லைன் இருக்கு. அதில எட்டு ஒரே ஐ.பி அட்ரெஸ் அது விக்ரம் ஷாவுதுன்னு இப்போ நமக்கு தெரிஞ்சுடுச்சு. மத்த நாலு லைனும் அனேகமா சுகுமாரோட லாப் டாப்பாத்தான் இருக்கும். சோ, விக்ரம் ஷா அந்த கம்பெனியில் இருந்து தகவல் திருடினான் அப்படின்னு ஒரு அளவுக்கு நிச்சயமா சொல்ல முடியும்"

முகம் மலர்ந்து கண்கள் பிரகாசிக்க ப்ரீதி, "இல்லை ஆனந்த். நிச்சயமா சொல்ல முடியும்"

ஆனந்த், "இல்லையே வேற யாராவுது அவர் லாப் டாப்பை உபயோகிச்சு இருந்தா?"

புன்னகையுடன் தலையசைத்த படி ப்ரீதி, "I thought you are very intelligent. அந்த லாப் டாப்பை நீ ஒழுங்கா கவனிக்கலை"

ஆனந்த், "ஏய், என்ன காலை வாரறே? என்ன கவனிக்கலை?"

ப்ரீதி, "அவர் லாப் டாப்பை அவரைத் தவிற வேற யாரும் உபயோகிக்க முடியாது"

ஆனந்த், "எப்படி சொல்லறே?"

ப்ரீதி, "அவர் லாப் டாப்பில் கீ போர்டுக்கு கீழே வலது பக்கம் என்ன இருந்ததுன்னு கவனிச்சியா?"

சில கணங்கள் யோசித்த ஆனந்த், "ஆமா, ஸ்கோயரா ... யெஸ்! நௌ ஐ கெட் இட். அது ஒரு ஃபிங்கர் ப்ரிண்ட் ரீடர்!! வாவ், ப்ரீதி யூ ஆர் க்ரேட். எங்க பாட்டி செலக்ஷன் பரவால்லை"

ப்ரீதி, "என்ன உங்க பாட்டி செலெக்ஷன்?"

ஆனந்த், "நீதான்"

ப்ரீதி, "ம்ம்ம் ... அப்ப உன் செலெக்ஷன் இல்லையா?"

ஆனந்த், "என் செலெக்ஷன் ஆகறதுக்கு முன்னாடி நான் என் பழைய கர்ள் ஃப்ரெண்டோட எக்ஸ்ளூஸிவ் ரிலேஷன்ஷிபில் இருந்தேன். அட் லீஸ்ட் நான் அப்படி நினைச்சுட்டு இருந்தேன். அவ எல்லோரோடயும் படுக்கறது தெரிஞ்சதுக்கு அப்பறம் அவகிட்டே ஏன்னு கேட்டப்போ, கல்யாணம் வரைக்கும் கண்டுக்காதே, அதுக்கப்பறம் நான் உனக்கு மட்டும்தான்ன்னு சொன்னா. அப்பா அம்மாகிட்டே சொல்லி எங்கேஜ்மெண்டை கேன்ஸல் பண்ணிட்டு அப்பறம் ஒரு நாள் நான் மனசொடிஞ்சுபோய் எங்க தாத்தாகூட உக்காந்து தண்ணி அடிச்சுட்டு இருந்தேன். அப்போ அவர் ஞாபகப் படுத்தினார். கோமளா செலெக்ஷன் எப்பவும் கரெக்டா இருக்கும்ன்னு சொன்னார். அதுக்கு தகுந்தா மாதிரி அடுத்த ரெண்டு நாளில் நீ உன் பழைய கம்பெனியில் இருந்து என்கூட கான்காலில் பேசினே"

ப்ரீதி, "கடவுள் நாம் ரெண்டு பேரும் சேரணும்ன்னு நினைச்சு இருக்கார்"

ஆனந்த், "ம்ம்ஹூம் ... எங்க பாட்டியோட வேலையாத்தான் இருக்கும்"

ப்ரீதி, "எப்படி?"

ஆனந்த், "எங்க தாத்தா ஒரு நாளைக்கு அஞ்சு சிகரெட்டுக்கு மேல குடிக்க மாட்டார். அதே மாதிரி தண்ணி அடிக்கும் போது மோஸ்ட்லி ரெண்டு லார்ஜோட நிறுத்திப்பார். ஏன்னு கேட்டா அதிகமா குடிச்சுட்டுப் படுத்தா நைட்டு கோமளா கனவில் வந்து மிரட்டுவா அப்படின்னார்"

வயிறு குலுங்கச் சிரித்த ப்ரீதி, "நல்ல பாட்டி-தாத்தா நல்ல பேரன்"

ஆனந்த் கண்கள் லேசாக பனிக்க, "யூ நோ ஐ மிஸ் ஹர் அ லாட்"

ப்ரீதி தன் விழிகளில் பாசம் பொங்க அவனை தன் பக்கம் இழுத்து அவன் கன்னத்தில் முத்தமிட்டு, "நேக்கு புரியறது. இனிமேல் ஐ வில் மேக் அப் ஃபார் இட்"

ஆனந்த், "ஏய்! என்ன சொல்லறே? எனக்கு பாட்டியா இருக்கப் போறியா? ஹல்லோ! நான் இந்தியா வந்தது எனக்கு ஆள் செலக்ட் பண்ண. என் தாத்தாவுக்கு இல்லை"

ப்ரீதி, "சீ! விளையாட்டுக்குக்கூட அந்த மாதிரி எல்லாம் பேசாதே ஆனந்த். ஐ டோண்ட் லைக் இட்"

ஆனந்த், "ஓ.கே. கூல்! சாரி!! நம்ம மேட்டருக்கு வருவோம். லாப் டாப் ஃபிங்கர் ப்ரிண்ட் ரீடர் இருப்பதால ஏற்கனவே கை ரேகை பதிவான ஆளுங்க மட்டும்தான் விக்ரம் ஷாவின் லாப் டாப்பை உபயோகிக்க முடியும். அந்த லாப் டாப்பை அல்லது அதில் இருக்கும் மெயின் ஹார்ட் டிஸ்க்கை குடைஞ்சு பாக்காம வேற யாருக்கும் அவர் அதை கொடுக்கலைன்னு சொல்ல முடியாது"

ப்ரீதி, "நேக்குத் தெரிஞ்சு தலை போற காரியமா இருந்தாக் கூட அவர் யாருக்கும் தன் லாப் டாப்பை தரமாட்டார். அது எனக்கு நிச்சயமா தெரியும்"

ஆனந்த், "அப்படிப் பட்டவர் வேற யாரையாவுது லாப் டாப்பை உபயோகிக்க அனுமதிச்சு இருந்தா நிச்சயம் அவருக்கு தகவல் திருட்டைப் பத்தி தெரிஞ்சு இருக்கும்ன்னு ஆர்க்யூ பண்ணலாம். சரி, இப்போதைக்கு அவரோட கை ரேகை மட்டும்தான் அந்த லாப் டாப்பில் பதிவாகி இருக்குன்னு அஸ்யூம் பண்ணிட்டு ப்ரோஸீட் பண்ணலாம். ஓ.கே?"

ப்ரீதி, "அப்படின்னா உன் விஷயத்தில் நீ கண்டுபிடிக்க வேண்டியதை கண்டு பிடிச்சாச்சு இல்லையா?"

ஆனந்த், "இல்லை. லாகின் பண்ணினார்ன்னு தெரியும். ஆனா தகவலை எப்படி திருடினார்ன்னு தெரியாது. ஏன்னா அந்த லாகின் ஐடிக்கு அவர் திருடிய கஸ்டமர் லிஸ்டை ஜெனெரேட் பண்ணும் உரிமை கிடையாது. இருந்தாலும் எப்படி கஸ்டமர் லிஸ்ட் திருடப் பட்டு இருக்குன்னு கண்டு பிடிக்கணும்"

ப்ரீதி, "ஆனந்த், அந்த கம்பெனியில் இருக்கும் மேனேஜர்களில் ஒருத்தரே திருடி இருக்கலாம் இல்லையா?"

ஆனந்த், "அதுக்கு சான்ஸ் ரொம்ப ரொம்ப கம்மின்னு எஃப்.பி.ஐ நம்புது. அந்த கஸ்டமர் லிஸ்ட் அந்த கம்பெனியின் ஆஃபீஸில் இருக்கும் டெஸ்க் டாப் மெஷின்களில் இருந்து மட்டும்தான் ஜெனரேட் பண்ண முடியும். அங்கே இருக்கும் டெஸ்ட் டாப் எதிலயும் ஈமெயில் வசதி இருக்காது. ஆல்ஸோ, அந்த டெஸ்க் டாப் மெஷின் எல்லாத்திலும் யூ.எஸ்.பி போர்ட் டிஸேபிள் செய்யப் பட்டு இருக்கும். பென் ட்ரைவ் உபயோகிக்க முடியாது"

ப்ரீதி, "சோ எப்படி அந்த கஸ்டமர் லிஸ்ட் வெளியே போயிருக்கும்?"

ஆனந்த், "அதைத் தான் நாம் கண்டு பிடிக்கணும். ஒரு மணி நேரத்தில் இந்த அளவுக்கு நாம் கண்டு பிடிப்போம்ன்னு நான் நினைக்கவே இல்லை. ஸ்டில் வி ஹாவ் ஸம் லக்"

ப்ரீதி, "சரி. நீ எதையாவுது நோண்டிட்டு இரு நான் என் ஸீட்டுக்குப் போய் அந்த பழைய டெஸ்டிங்க் ப்ராஜெக் சம்மந்தப் பட்ட டாக்யூமெண்ட்ஸ் எல்லாத்தையும் பார்க்கறேன். அதில் இருந்து நமக்கு எதாவுது க்ளூ கிடைக்கலாம்"

ஆனந்த், "குட் ஐடியா. எதிலையாவுது உனக்கு லூப் ஹோல் இருக்கும்ன்னு தோணுச்சுன்னா அந்த டாக்யூமெண்டை எனக்கு ஃபார்வர்ட் பண்ணு"

ப்ரீதி, "சரி" என்றபடி எழுந்தாள். தன் இருக்கையில் அமர்ந்தபடி அவளை இழுத்து தன் மடி மேல் அமர்த்தினான். அவன் கழுத்தை வளைத்தபடி ப்ரீதி, "ஏய், என்னது இது. இது ஆஃபீஸ்"

ஆனந்த், "தெரியும். இவ்வளவு கண்டு பிடிச்சதுக்கு ஒரு சின்ன கிஃப்ட்" என்றபடி அவள் முகத்தை தன் கைகளில் ஏந்தியபடி அவள் இதழ்களை கவ்வினான். சில நிமிடங்களுக்குப் பிறகு அவன் முத்தத்தில் இருந்த விடுபட்ட ப்ரீதி முகம் சிவக்க தன் இருக்கைக்குச் சென்றாள்.

இருவரும் மாலை ஏழு மணிவரை பல்வேறு கோப்புக்களை ஆராந்தபடி இருந்தனர்.

ப்ரீதியின் இருக்கையை அடைந்த ஆனந்த், "ப்ரீதி, இன்னைக்கு போதும் போலாம் வா"

ப்ரீதி, "இன்னும் கொஞ்சம் பாத்துட்டுப் போலாமே ஆனந்த். வீக் டேஸ்ல இந்த மாதிரி ஃப்ரீயா தேட முடியுமான்னு தெரியலை"

ஆனந்த், "முடியுண்டா. இப்ப எனக்கு இதுக்கு மேல மூளை வேலை செய்யாது. Let's go and relax somewhere"

ப்ரீதி, "ம்ம்ம் ... சரி. போலாம் வா" என்றபடி தன் கணிணியை நிறுத்திவிட்டுப் புறப்பட்டாள்.

வெளியில் வந்த பிறகு ப்ரீதி, "என்னை என் பி.ஜில கொண்டு விட்டுடறயா?"

ஆனந்த், "ஏன்? மேடத்துக்கு அதுக்குள்ளே அலுத்துப் போச்சா?"

ப்ரீதி, "சொன்னா கேளு ஆனந்த். ஏற்கனவே நேக்கு கில்டியா இருக்கு. அதுமட்டும் இல்லை. நாளைக்கு நேக்கு ட்யூ. ஒவ்வொரு சமயம் ராத்திரிலயே வந்தாலும் வந்துடும்"

ஆனந்த், "சோ! அதனால என்ன? நோ செக்ஸ் அவ்வளவுதானே?"

ப்ரீதி பதிலேதும் சொல்லத் தெரியாமல் அவனை மலைப்புடன் பார்த்துக் கொண்டு இருந்தாள்.

அவள் தோளை அணைத்தபடி ஆனந்த், "ஏ கிறுக்கு. நாளைக்கு கல்யாணம் ஆனப்பறம் மாசம் மூணு நாள் வீட்டை விட்டு எங்கேயாவுது போய் இருக்கப் போறியா? அன்னியோன்னியம்ன்னா என்னடா? வெறும் செக்ஸ் மட்டும்தானா? Living together is not just about sex"

ப்ரீதி கண்கள் பனிக்க, "சரி, மொதல்ல என் பி.ஜிக்குப் போய் கொஞ்சம் ட்ரெஸ்ஸஸ் எடுத்துண்டு அப்பறம் கொஞ்சம் பர்சேஸஸ் முடிச்சுட்டு நம்ம ஃப்ளாட்டுக்கு போலாம்."

ஆனந்த், "என்ன பர்சேஸஸ்? சானிடரி நாப்கினா?"



ப்ரீதி, "சீ! ஒவ்வொண்ணுத்தையும் நோக்கு சொல்லிண்டு இருக்க முடியாது"

ஆனந்த், "இதில என்ன இருக்கு? Its a natural process. இதுக்கு ஏன் இப்படி வெட்கப் படறே?"

ப்ரீதி, "ம்ம்ம் .. உன்னை மாதிரி ஓபனா டிஸ்கஸ் பண்ண நான் ஒண்ணும் உன்னை மாதிரி அமெரிக்காவில் பொறந்து வளறலை"

ஆனந்த், "ம்ம்ஹூம் .. நிறைய விஷயத்தில் உன்னை தேத்தணும். I need to work on you a lot"

ப்ரீதி, "என்னமோ பண்ணு. ஆத்துக்குப் போய் குக் பண்ண டைம் இருக்காது. வழில எதானும் வாங்கிண்டு போயிடலாமா?"

ஆனந்த், "இந்த குக்கிங்க் வேலை வாரத்துக்கு ஒரு தரம் செஞ்சா போதும். அந்த நேரத்தை நம்ம காரியத்தில் ஸ்பெண்ட் பண்ணனும்"

குறும்புச் சிரிப்புடன் ப்ரீதி, "நம்ம காரியம்ன்னா?"

ஆனந்த், "ஃப்ரைடே சாயந்தரத்தில் இருந்து இப்போ வரைக்கும் செஞ்ச எல்லாம்தான். என்ன டவுட்?"

ப்ரீதி, "ம்ம்ம் .. ஒண்ணும் இல்லை வா"



No comments:

Post a Comment