Monday, May 4, 2015

அக்னி சாட்சி - அத்தியாயம் - 23

ஆன்ந்த், “ஹெல்லோ சொல்லுங்க சிவா”

துணுக்குற்ற ப்ரீதி புருவத்தை உயர்த்தி என்னவென்று மௌனமாக தன் ஆவலை வெளிப் படுத்த ஆனந்த் ஸ்பீகர் ஃபோனை இயக்கினான்...

மறுமுனையில் சிவா, "வெள்ளிக் கிழமை காலைல நீங்க ஃப்ரீயா ஆனந்த்?"

ஆனந்த், "ம்ம்ம் .. ஸ்பெஸிஃபிக்கா எந்த அப்பாயிண்ட்மெண்டும் இல்லை. எதுக்குக் கேட்டீங்க?"

சிவா, "என் கூட ஒருத்தரை மீட் பண்ணறதுக்கு போகணும்"

ஆனந்த், "அதுக்கென்ன? நிச்சயம் வர்றேன். யாரை மீட் பண்ணறதுக்கு?"

சிவா, "அன்னைக்கு ஒருத்தனை நீங்க அடிச்சுப் போட்டீங்களே? அவனை மீட் பண்ணறதுக்கு"

ஆனந்த், "யாரு? அந்த நந்தகுமாரோட இருந்தவனா? அவன் யாருன்னு கண்டு பிடிச்சுட்டீங்களா?"

சிவா, "ம்ம்ம் ... ஆக்சுவலா அவனும் உங்க கம்பெனியில் தான் ஏதோ வேலைல இருக்கானாம்."



ஆனந்த், "ஓ! அவனும் நந்தகுமார்கூட அமெரிக்கா போயிருந்தானா?"

சிவா, "தெரியலை ஆனந்த். வேலை விஷயமா அமெரிக்கா போற அளவுக்கு அவனுக்கு மண்டைல மசாலா இருக்குமாங்கறது என் டவுட்டு. டிகிரிகூட முடிக்காம சும்மா ஊர் சுத்திகினு இருந்தான்னு அவனோட அப்பா சொன்னார். அவருக்கு உங்க கம்பெனி ஓனரைத் தெரியும். அவர்தான் உங்க கம்பெனி ஓனர்கிட்டே பேசி அவனை உங்க கம்பெனியில் வேலைக்கு சேத்தி விட்டதா சொன்னார்."

ப்ரீதி, "அவன் பேர் என்ன சிவா?"

சிவா, "பிரபாகர்"

ப்ரீதி அது யாராக இருக்கும் என யோசித்த வாறு இருந்தாள்.

ஆனந்த், "எப்படி இந்த மீட்டிங்க் ஃபிக்ஸ் ஆச்சு? உங்க கிட்டே எதாவுது டீல் போடப் பார்க்கறானா?"

சிவா, "ம்ம்ஹூம். நாம் அவனை மீட் பண்ணப் போறோம்ன்னு அவனுக்குத் தெரியாது. அவன் இப்போ ஊரில் இல்லை. வியாழக் கிழமை நைட்டுதான் ஊர் திரும்பறான். அவனோட அப்பா எனக்கு ஹெல்ப் பண்ணறதா ப்ராமிஸ் பண்ணி இருக்கார். வெள்ளிக் கிழமை காலைல என்னை அங்கே வரச் சொல்லி இருக்கார். இந்த விஷயத்தில் உங்களுக்கு என்னை விட நல்லா தெரிஞ்சு இருக்கும்ன்னு உங்களை கூப்படறேன்"

ஆனந்த், "வாவ் சிவா. நிச்சயம் அவனுக்கு அந்த வீடியோ மேட்டர் தெரிஞ்சு இருக்கும். அனேகமா அவனும் நந்தகுமாரும் ஷேர் பண்ணிட்டு இருப்பாங்க. அவங்க அப்பா சொன்னா நமக்கு அவன் உதவுவானா?"

சிவா, "அவர் ரொம்பப் பெரிய ஆள் ஆனந்த். நிச்சயம் அவருக்கு அவன் பயப் படுவான்னு நினைக்கறேன்"

ஆனந்த், "யார் அவர்?"

சிவா, "P.K.ரெட்டி. ரியல் எஸ்டேட் பிஸினஸில் கொஞ்சம் செல்வாக்கான பேர்வழி. உங்க கம்பெனி ஓனருக்கும் அவர் எதோ ரியல் எஸ்டேட் டீல் முடிச்சுக் கொடுத்தாராம்"

ஆனந்த், "திஸ் இஸ் ரியலி இன்டெரெஸ்டிங்க். சிவா, நானும் ப்ரீதியும் மாட்டிட்டு இருக்கும் சிக்கலைப் பத்தி சொன்னேன் ஞாபகம் இருக்கா?"

சிவா, "முழுசா புரியலை ஆனந்த். ஆனா ப்ரீதி மேடத்தை பினாமியா யூஸ் பண்ணி அந்த தில்லு முல்லு பண்ணி இருக்கான்னு மட்டும் புரிஞ்சுது"

ஆனந்த், "ஆமா. அந்த சிக்கலுக்கும் சில தகவல்கள் தேவைப் படுது. அதுக்கு அவர் உதவி செய்வாரா?"

சிவா, "என்ன மாதிரி ஹெல்ப் ஆனந்த்?"

ஆனந்த், "விக்ரம் ஷா. அதான் எங்க கம்பெனி ஓனர். அவருக்கு முடிச்சுக் கொடுத்த ரியல் எஸ்டேட் டீல் விஷயமா எதாவுது தகவல் கேட்டா கொடுப்பாரா?"

சிவா, "நான் கேட்டா நிச்சயம் கொடுப்பார்ன்னு நினைக்கறேன். நீங்க என்ன என்ன டீடெயில்ஸ் எல்லாம் வேணும்ன்னு நோட் பண்ணிட்டு வாங்க"

ஆன்ந்த், “ஓ! தாங்க்ஸ் அ லாட் சிவா!! வியாழக் கிழமை சாயந்தரமா ஃபோன் பண்ணறேன். எங்கே வரணும்ன்னு டீடெயில்ஸ் கொடுங்க. ஓ.கே?"

சிவா, "ஓ.கே ஆனந்த்" என்று இணைப்பைத் துண்டித்தான்.


சாப்பிட்டு முடித்த இருவரும் ஆனந்தின் ஸ்கார்பியோவில் ...

ஆனந்த், "Are you sure you want to go to your PG accomodation?"

புன்னகைத்த ப்ரீதி தன் குரலை சிறுது உயர்த்தி, "ஆமாம். ஒரு தரம் சொன்னேனோல்லியோ"

ஆனந்த், "சொன்னே. But there is no harm trying you know? சும்மா கல்லு வீசி எறிஞ்சு பாத்தேன்"

ப்ரீதி, "உன் கல்லுக்கு ஒரு மாங்காவும் விழலை. வண்டியை எடு"

ஆனந்த், "பட் ஐ வில் மிஸ் யூ ஹனி"

முகம் மலர்ந்து காதலுடன் பார்த்த ப்ரீதி, "ஐஸ் வெக்கறையா? இல்லை நிஜமாவே அடிக்கடி என்னை அப்படி கூப்படணும்ன்னு தோணித்தா?"

முகம் சிறுத்த ஆனந்த், "உனக்கு நம்பிக்கை இல்லைன்னா நான் என்ன செய்ய? You know I really really love you so much"

ப்ரீதி, "சாரிடா கண்ணா. நீ என்னை அப்படிக் கூப்பிட்டா நேக்கு உடம்பெல்லாம் ஜிவ்வுன்னு ஆயிடறது. கூடவே ஒரு வேளை கிண்டல் பண்ணறையோன்னு டவுட்டும் வந்தது. சாரி. இனிமேல் அப்படி பேச மாட்டேன்"

ஆனந்த், "நிஜமாவே நான் உன்னை மிஸ் பண்ணுவேன்"

ப்ரீதி, "தெரியும் ... வீக் எண்ட் மறுபடி உன் ஃப்ளாட்டுக்கு வர்றேன். ஓ.கே?"

ஆனந்த், "சரி"

ப்ரீதி, "பட் ஆனந்த், சிவா சொன்னாரே அந்த பிரபாகர்? அவன் ரொம்ப ரொம்ப சாது. சின்னப் பையன் போன வருஷம் தான் எம்.ஸி.ஏ முடிச்சுட்டு வேலைக்கு சேர்ந்தான். அவன் இந்த விஷயத்தில் இன்வால்வ் ஆகி இருப்பான்னு நேக்கு நம்பிக்கை இல்லை. அது மட்டும் இல்லை ஆனந்த். அவன் ஆன்சைட் போன மாதிரியும் நேக்கு ஞாபகம் இல்லை. அதுவும் நீங்க பேசிண்டு இருந்தமாதிரி ஒரு மாசத்துக்கு ஷார்ட் டெர்ம் ஆன்சைட் போறது? நோ சான்ஸ். நேக்குத் தெரிஞ்சு ஆன்சைட் போனவா எல்லாம் குறைஞ்சது ஒரு வருஷத்துக்கானும் லாங்க் டெர்ம் அசைன்மெண்டில்தான் போயிருக்கா. சுகுமார் அப்பறம் மத்த ரெண்டு ப்ராஜெக்ட் மேனேஜர் மட்டும்தான் ஷார்ட் டெர்ம்ல போவா"

ஆனந்த், "ஹே! அப்பறம் அந்த நந்தகுமார் எப்படிப் போனான்?"

ப்ரீதி, "தெரியலை. அவன் அடிக்கடி அப்படிப் போவான். டெஸ்டிங்க் டீமில் இருக்கான்னுதான் பேரு. பாதி நேரம் அவன் எந்தப் ப்ராஜெக்டில் இருக்கான்னே தெரியாது"

ஆனந்த், "நிச்சயம் நந்தகுமாரும் விக்ரம் ஷாவோட கோல் மாலில் இன்வால்வ் ஆயிருக்கணும்ன்னு நீ சொன்னியே அதுக்கு இதுவும் ஒரு ஆதாரம். இல்லையா?"

ப்ரீதி, "ம்ம்ம் ... நேக்கும் அப்படித்தான் தோணறது. பட் பிரபாகர்" என்று சற்று நேரம் யோசித்தவள், "ஹே ஆனந்த். நீ அவனைப் பார்த்து இருக்கே! அவனை ஒரு வாரத்துக்கு முன்னாடி ஒரு ரெஸ்டாரெண்டில் வாசலில் பார்த்தேன். நீ வெளில நின்னு ஸ்மோக் பண்ணிண்டு இருந்தே. நான் அங்கே இருந்த மேகஸீன்ஸ் பாத்துண்டு இருந்தப்ப அவன் வந்தான். செத்த நாழி பேசிண்டு இருந்தான். அவன் போனப்பறம் நீ வந்து யார் அதுன்னு கேட்டியே ஞாபகம் இல்லையா? நீ அவனை ரிகக்னைஸ் பண்ணலையா?"

ஆனந்த், "You mean that geek? அவனா சிவா சொல்லற பிரபாகர்? நோ வே! நான் அன்னைக்கு நந்தகுமாரோட பாத்த ஆள் வேற"

ப்ரீதி, "வேற யார் பிரபாகர் அதுவும் எங்க ஆஃபீஸில்? சரி நீ பாத்த ஆள் எப்படி இருப்பான்? சொல்லு"

ஆனந்த், "ம்ம்ம் .. கருப்பா கொஞ்சம் ... குண்டுன்னு சொல்ல முடியாது ஆனா இங்கிலீஷில் ஸ்டாக்கின்னு சொல்லுவாங்களே .. "

புன்சிரித்த ப்ரீதி, "தடியன்னு சொல்லு"

ஆனந்த், "யா! கருப்பு தடியன். கர்லி ஹேர் அப்பறம் ... அன்னைக்கு அவன் என் கிட்டே ரெண்டு ஸ்டெப்தான் நடந்து வந்தான். இருந்தாலும் I think he walks with a limp ... And .. நெத்தில ஒரு தழும்பு"

ப்ரீதி, "அவனா? அவன் ஸாஃப்ட்வேர் டீமில் இல்லை. அவனை எங்க வெப் சைட்டில் சேஞ்சஸ் பண்ண விக்ரம் ஷா கான்ட்ராக்டில் எடுத்தார். ஃபோட்டோஸ் அப்பறம் விடியோஸ் எல்லாம் ... " என்று நிறுத்தியவளின் முகம் திடீரென பிரகாசித்தது ..

ஆனந்த், "ம்ம்ம்ம் .. நான் சொல்றேன். அவன் டிஜிடல் இமேஜிங்க் வேலை எல்லாம் செய்வான் இல்லையா?"

ப்ரீதி, "ஆமா ஆனந்த். ஆனா எங்க வெப் சைட்டில் இருக்கும் ஃபோட்டோஸ் வீடியோஸ் எல்லாம் அப்டேட் பண்ணி ரொம்ப மாசம் ஆச்சு. ரீஸண்டா எந்த சேஞ்சும் பண்ணலை. ஆனாலும் அவனை அடிக்கடி பாத்து ஆஃபீஸில் பாத்து இருக்கேன். தட் ஈஸ் நீ அவனை பார்க்கறதுக்கு முன்னாடி வரைக்கும்."

ஆனந்த், "சோ அவன் கான்ட்ராக்டில் வேலை செய்யறவன். வெப் சைட் வேலையை தவிற விக்ரம் ஷா எதாவுது கொடுத்து இருப்பார்ன்னு நினைக்கறேன்"

சற்று தீவிரமாக யோசித்த ப்ரீதி, ஆனந்த், "இந்த கஸ்டமர் லிஸ்ட் திருடு போன கம்பெனியின் மேனேஜர்ஸ் வந்து இருந்தப்ப அவனை ஆஃபீஸில் பாத்து இருக்கேன்"

அதிர்ச்சியுற்ற ஆனந்த், "என்னது?"

ப்ரீதி, "ஆமா ஆனந்த். அந்த ரெண்டு மேனேஜர்ஸும் எங்க ஆஃபீஸுக்கு வந்து இருந்தா. ஸீனியர்ஸ் எல்லாருக்கும் விக்ரம் ஷா இன்ட்ரொட்யூஸ் பண்ணி வெச்சார். அப்பறம் அன்னைக்கு நைட் டின்னர் இருந்தது. அப்போ அவன் வீடியோ எடுத்துண்டு இருந்தான். அதுக்கு அடுத்த நாள் விக்ரம் ஷா அந்த ரெண்டு மேனேஜர்ஸோட டிஸ்கஷன் இருந்தது. என்னண்டே சில டீடெயில்ஸ் கேட்டு இருந்தார். நான் அந்த கான்ஃபெரன்ஸ் ரூமுக்குப் போய் எக்ஸ்ப்ளெயின் பண்ணிட்டு வந்தேன். அப்போ அவன் வெளியில் அந்த ரூமுக்குப் பக்கத்தில் இருக்கும் க்யூபிகிள்ல உக்காந்துண்டு இருந்தான்"

ஆனந்த், "This is really really getting interesting. வந்து இருந்த மேனேஜர்ஸ் பேர் உனக்குத் தெரியுமா?"

தெரியாது என்பதை ப்ரீதி உதட்டைப் பிதுக்கியபடி, "ஞாபகம் இல்லை. அது நடந்து ஒரு வருஷமே இருக்கும்"

ஆனந்த், "அதாவது நான் அந்த டெஸ்டிங்க் கான்ட்ராக்ட் எடுத்துக் கொடுக்கறதுக்கு முன்னாடி. இல்லையா?"

ப்ரீதி, "ஆமா. அவா வந்து இருந்தது வேற ஒரு கான்ட்ராக்ட் விஷயமா. அந்தக் காண்ட்ராக்ட் ஆறு மாசத்துக்கு முன்னாடிதான் ஃபைனலைஸ் ஆச்சு"

ஆனந்த், "இருந்தாலும் அந்த டெஸ்டிங்க் கான்ட்ராக்ட் நான் ப்ரோபோஸல் கொடுத்தா நிச்சயம் கிடைக்கும்ன்னு ரொம்ப கான்ஃபிடெண்டா சொன்னார். அவருக்கு முன்னாடியே தெரிஞ்சு இருக்கு. ராஸ்கல் ப்ளான் பண்ணி மாட்டி விட்டு இருக்கான்"

ப்ரீதி, "உன்னை மாட்டி விடணும்ன்னு அவருக்கு என்ன?"

ஆனந்த், "ம்ம்ஹூம் ... அவனுக்கு ஒரு பலி ஆடு தேவையா இருந்தது. ஒரு டீகாய். நான் அந்த சமயத்தில் அங்கே இருந்தேன். என் போறாத காலம் எஃப்.பி.ஐ இன்வெஸ்டிகேஷன் அந்த சமயத்தில் வந்தது. பரவால்லை விடு. நான் நேரடியா எஃப்.பி.ஐ மூலம் யார் வந்து இருந்தான்னு தெரிஞ்சுக்கறேன். ஆனா இது ஒரு சாலிட் லீட்."

ப்ரீதி, "எப்படி சொல்லறே?"

ஆனந்த், "மத்தவங்க உதவி இல்லாம அந்த கஸ்டமர் லிஸ்டை விக்ரம் ஷா திருடி இருக்க முடியாதுன்னு எஃப்.பி.ஐ சந்தேகப் படுதுன்னு சொன்னேன் இல்லையா?"

ப்ரீதி, "ஆமா. அந்த மேனேஜர்ஸ் ரெண்டு பேரும் எங்க கம்பெனியை அஸெஸ் பண்ண வந்தா. பெரிய கான்ட்ராக்ட் எடுத்து செய்ய எங்க கம்பெனினால முடியுமான்னு செக் பண்ண வந்தா. அவா விக்ரம் ஷாவுக்கு எதுக்கு ஹெல்ப் பண்ணனும்? இல்லை ஆனந்த் அப்படி திருட உதவறவா இப்படி வெளிப்படையா விக்ரம் ஷாகூட தொடர்பு இருப்பதை காமிச்சுக்க மாட்டா இல்லையா?"

ஆனந்த், "அவருக்கும் இதில் லாபம் இருந்தா காமிச்சுக்க மாட்டார்"

ப்ரீதி, "அப்பறம் எதுக்கு விக்ரம் ஷாவுக்கு உதவணும்?"

ஆனந்த், "வேற வழி இல்லைன்னா"

ப்ரீதி, "என்ன சொல்லறே?"

ஆனந்த், "எதோ ஒரு விதத்தில் விக்ரம் ஷாவுக்கு கடமைப் பட்டு இருந்தா. அல்லது எதோ ஒரு விதத்தில் விக்ரம் ஷா அவரை மிரட்டி இருந்தா. இந்த லைனில் யோசிச்சுப் பாரு"

ப்ரீதி, "யூ.எஸ்ல இருக்கற ஒரு டாப் எக்ஸிகியூடிவ் பெங்களூர்ல இருக்கும் இத்துனூண்டு ஐ.டி கம்பெனி ஓனருக்கு எதுக்கு பயப் படணும்?"

ஆனந்த், "அது அனேகமா நமக்கு இந்த வெள்ளிக் கிழமை தெரிய வரும்"


Wednesday, 18 February 2010 - புதன், 18 ஃபிப்ரவரி 2010

மாலை ஆறு மணியளவில் 
ப்ரீதி ஆனந்தின் இருக்கையை அடைந்த அவன் தீவிரமான யோசனையுடன் தன் கணிணித் திரையைப் பார்த்துக் கொண்டு இருந்தான். ப்ரீதி வந்ததை ஓரக்கண்ணால் பார்த்தாலும் அவளைப் பொருட் படுத்தாமல் தன் பணியைத் தொடர்ந்தவாறு இருந்தான். அவன் நாற்காலிக்குப் பின்னால் சென்று நின்ற ப்ரீதி அவன் தோளில் கை வைத்தபடி ... "என்ன சார் ரொம்ப மும்முறமா விண்டோஸ் எக்ஸ்ப்ளோரர்ல ரிஸர்ச் பண்ணிண்டு இருக்கார்?"

ஆனந்த், "என்னன்னு தோணுது?"

ப்ரீதி, "ம்ம்ம் ... இரு ..ஹேய்! எந்த நெட்வொர்க் இது? நெட்வர்க் நெய்பர்ஹூடில் என்னவோ பேர் எல்லாம் இருக்கு?"

ஆனந்த், "ஹா ஹா" என்றபடி தகவல் திருட்டுப் போன கம்பெனியின் பெயரைச் சொன்ன பிறகு, "எனக்கு அவங்க முன்னே கொடுத்த அதே லாகின் ஐடி!"

ப்ரீதி, "ஏன் மறுபடி உன்னை அவா சந்தேகப் படறதுக்கா? எதுக்கு இந்த விளையாட்டு?"

ஆனந்த், "கூல் ஹனி! எப்படி அந்த லிஸ்ட் திருட்டுப் போயிருக்கும்ன்னு பிடிபடமாட்டேங்குது. அதை நேத்து டெலிகான்ல சொன்னேன். எஃப்.பி.ஐ காரங்க வாங்கிக் கொடுத்தாங்க. ஆனா, நான் இந்த ஐடியை உபயோகிச்சு செய்யும் ஒவ்வொரு காரியத்தையும் அவங்க மானிடர் பண்ணிட்டு இருப்பாங்க. கவலையே படாதே"

ப்ரீதி, "சரி, எதாவுது தெரிஞ்சுதா?"

ஆனந்த், "ம்ம்ம் .. இல்லை. எனக்கு ஒரு விஷயம் தெரியணும். நீ அந்த டெஸ்டிங்க் ப்ராஜெக்ட் டாக்யுமெண்ட்ஸ் எல்லாம் நீ பாத்தேதானே?"

ப்ரீதி, "ஆமா"

ஆனந்த், "அதில் சப்ளையர் லிஸ்ட் ஆப்ஷன் கொடுத்தா லிஸ்ட் ஸ்க்ரீனில் வருது. முதல்ல கொஞ்சம் நேரம் எடுத்துக்குது. ஆனா ஒன்ஸ் முதல் பேஜ் ஸ்க்ரீனுக்கு வந்ததுக்கு அப்பறம் அடுத்த அடுத்த பேஜ் எல்லாம் வர்றதுக்கு ஒரு செகண்டுக்கு உள்ள வருது. எப்படி இவங்க டிஸைன் பண்ணி இருக்காங்கன்னு தெரியுமா?"

ப்ரீதி, "ம்ம்ம் .. அந்தக் கம்பெனியின் ஐ.டி பாலிஸி அது. ஸ்க்ரீனுக்கு வரும் எல்லா ஔட்புட்டும் முதல்ல ஒரு கேஷ் (CACHE) ஏரியாவில் ஸ்டோட் ஆகும். அப்படி ஸ்டோர் ஆனதுக்கு அப்பறம் ஔட்புட் ஸ்க்ரீனில் அப்பியர் ஆகும். அந்த கம்பெனியில் இருக்கும் எல்லா அப்ளிகேஷனும் அப்படித்தான் வொர்க் ஆகுது"

ஆனந்த், "எது அந்த கேஷ் ஏரியான்னு தெரியுமா?"

ப்ரீதி, "அந்த டாக்யுமெண்டில் கேஷ் ஏரியா ஹெச் ட்ரைவ்க்கு (H-Drive) மேப் ஆகி இருக்கும்ன்னு பார்த்த ஞாபகம்"

ஆனந்த், "ஹெச் ட்ரைவ்? ம்ம்ம் ... " என்றபடி விண்டோஸ் எக்ஸ்ப்ளோரரில் ஹெச் ட்ரைவ்வை திறந்தான். அதில் பல ஃபோல்டர்கள் இருந்தன. அவைகளுள் பர்சேஸ், ஃபிக்ஸட் அஸ்ஸெட்ஸ், சேல்ஸ் போன்ற பெயர்களும் தென்பட்டன. பர்சேஸ் என்ற பெயருடைய ஃபோல்டரை திறந்தான். சில நிமிடங்கள் ரெஃப்ரெஷ் செய்த படி இருந்தான். அந்த ஃபோல்டரில் கோப்புகள் புதிதாகத் தோன்றியவாறும் முன்பு இருந்தவை மறைந்தவாறும் இருந்தன.

ஆனந்த், "ஹே! இந்த கேஷிங்க் மெக்கனிஸம் எப்படி வொர்க் பண்ணுது?"

ப்ரீதி, "ஒவ்வொரு ஔட்புட்டும் ஸ்க்ரீனுக்கு போறதுக்கு முன்னாடி கேஷ் ஃபோல்டரில் ஸேவ் ஆறது. யூஸர் ஸ்க்ரீனில் பாத்து முடிஞ்சதும் அது டிலீட் ஆயிடறது."

ஆனந்த், "சோ! ஒரு யூஸர் ஒரு லிஸ்ட்டை ஸ்க்ரீனில் திறந்து வெச்சு இருக்கும் வரை அது கேஷ் ஏரியாவில் இருக்கும் இல்லையா?"

ப்ரீதி, "ஆமா"

மறுபடி மேலே இருக்கு ரூட் ஃபோல்டருக்குச் சென்று பிறகு சேல்ஸ் என்ற பெயருடைய ஃபோல்டரை ஆனந்த் க்ளிக் செய்தான். அது திறந்தது.

ஆனந்த், "எது இந்த ஃபோல்டர்?"

ப்ரீதி, "பேரைப் பார்த்தாலே தெரியறதே. சேல்ஸ் மாட்யூல் உபயோகிக்கும் கேஷ் ஃபோல்டர். ... "

ஆனந்த், "ஹே! என் லாகின் ஐடிக்கும் இந்த ஃபோல்டரை திறக்கும் உரிமை கொடுத்து இருக்காங்க"

முன்பு போல அந்த ஃபோல்டரிலும் பல கோப்புக்கள் இருந்தன். அதில் புதிதாக கோப்புகள் தோன்றியவாறு இருந்தன. அதே சமயம் சில நிமிடங்களுக்கு ஒரு முறை பழைய கோப்புக்கள் நீக்கப் பட்ட வாறும் இருந்தன.

ஆனந்த், "அந்த டெஸ்டிங்க் ப்ராஜெக்ட் பர்சேஸ் மாட்யூல் சம்மந்தப் பட்டதுதானே? எப்படி என்னால் சேல்ஸ் மாட்யூலின் கேஷ் ஃபோல்டரை ஓபன் செய்ய முடியுது?"

அடுத்த கணம் ஆயிரம் வாட் விளக்கொளி போல பிரகாசித்த முகத்துடன் ப்ரீதி "எஸ் ஆனந்த். You have cracked it. அவங்க உன்னோட லாகின் ஐடிக்கு சேல்ஸ் மாட்யூலை ஆபரேட் பண்ண ரைட்ஸ் கொடுக்கலை. ஆனா மொந்த கேஷ் ஏரியாவையும் ஆக்ஸஸ் பண்ண உன் லாகின் ஐடிக்கு ரைட்ஸ் இருக்கு"

ஆனந்த், "எஸ்! சோ? மேல சொல்லு .. "

ப்ரீதி, "சோ ..... வேறெ யாராவுது சேல்ஸ் மாட்யூலில் கஸ்டமர் லிஸ்ட் ஜெனெரேட் பண்ணினா அதை அந்த யூஸர் ஸ்க்ரீனை க்ளோஸ் பண்ணாம இருக்கறவரைக்கும் உனக்கு கொடுத்த லாகின் ஐடியை உபயோகிச்சு கேஷ் ஏரியாவில் பார்க்க முடியும். அதை வேற ஃபோல்டருக்கு காப்பி பண்ணவும் முடியும்"

ஆனந்த், "எஸ்! சோ, அந்த மேனேஜர்களில் ஒருத்தன் சேல்ஸ் மாட்யூலில் கஸ்டமர் லிஸ்ட் ஆப்ஷன் செலக்ட் பண்ணி இருக்கான். அந்த லிஸ்ட் ஸ்க்ரீன்ல அப்பியர் ஆகறதுக்கு முன்னாடி இந்த ஃபோல்டரில் ஸேவ் ஆகி இருக்கு. விக்ரம் ஷா எனக்குக் கொடுத்த ஐடி யூஸ் பண்ணி அந்த லிஸ்டை தூக்கி இருக்கான். அது வரைக்கும் அந்த மேனேஜர் ஸ்க்ரீனை க்ளோஸ் பண்ணாமே இருந்து இருக்கான்"

ப்ரீதி, "ஹப்பா! ஒரு வழியா எப்படி அந்த லிஸ்ட் திருடு போயிருக்கும்ன்னும் கண்டு பிடிச்சாச்சு"

ஆனந்த், "ஹே, இவ்வளவு சர்கஸ் பண்ணறதுக்கு பதிலா அந்த மேனேஜரே கேஷ் ஏரியாவில் இருந்து அந்த லிஸ்டை காப்பி செஞ்சு இருக்கலாமே?"

ப்ரீதி, "ம்ம்ஹூம் .... டெஸ்டிங்க் செய்யறவாளுக்கு மட்டும்தான் கேஷ் ஏரியாவை ஆக்ஸஸ் செய்யும் உரிமை கொடுப்பா. மத்த யூஸர்ஸ் எல்லாருக்கும் ஃபோல்டருக்கு உள்ளே போக ரைட்ஸ் இருக்காது"

ஆனந்த், "ஹனி! எக்ஸெலெண்ட்! ப்ரீதி யூ ஆர் ரியலி க்ரேட்!! கல்யாணத்துக்கு அப்பறம் என் பிஸினஸ் ரொம்ப நல்லா இம்ப்ரூவ் ஆகப் போகுது"

ப்ரீதி, "எப்படி?"

ஆனந்த், "ப்ரீதி ஆனந்த் அப்படின்னு ஒரு புது பார்ட்னர் சேருவாங்க அதனால"

ப்ரீதி, "சான்ஸே இல்லை. I am just going to be a house-wife"



ஆனந்த், "நிஜமா?"

ப்ரீதி, "ஆமா"

ஆனந்த், "ஏன் ப்ரீதி?"

ப்ரீதி, "பணத்துக்காகவே வேலைக்கு சேந்து. பணத்துக்காகவே இத்தனை நாளும் உழைச்சு அலுத்துப் போச்சு ஆனந்த். கொஞ்ச நாள் ஜாலியா இருக்கப் போறேன். உனக்கு ஓ.கேவா?"

ஆனந்த், "எனக்கு ஓ.கே. எங்க அம்மாவுக்கு டபுள் ஓ.கே! எங்க அம்மா உன்னை தலை மேல தூக்கி கொண்டாடுவாங்க."

ப்ரீதி, "ஏன்?"

ஆனந்த், "அம்மா எப்பவும் அவங்க வேலையை ஸீரியஸ்ஸா எடுத்துட்டது இல்லை. நான் பிறக்கறதுக்கு மூணு மாசம் முன்னாடியே வேலையை ரிஸைன் பண்ணிட்டாங்க. திரும்ப நான் ஸ்கூலுக்கு போக ஆரம்பிச்சதுக்கு அப்பறம்தான் வேலைக்கு போக ஆரம்பிச்சாங்க. ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி ஃபுல் டைம் வேலையை விட்டுட்டு பார்ட் டைம் கன்ஸல்டிங்க் மட்டும் செஞ்சுட்டு இருக்காங்க. அதையும் விட்டுடணும்ன்னு இருக்காங்க. வீட்டில் உக்காந்தா போரடிக்குமேங்கற ஒரே காரணத்துக்காக போயிட்டு இருக்காங்க. நீ கம்பெனி கொடுக்கப் போறேன்னு தெரிஞ்சா ரொம்ப குஷியாயிடுவாங்க"

ப்ரீதி, "அப்போ கல்யாணத்துக்கு அப்பறம் நாம் உங்க அப்பா அம்மாவோடதான் இருப்போமா? தனிக் குடித்தனம் வெச்சுத் தரமாட்டாளா?"

ஆனந்த், "நோ சான்ஸ்! உனக்கு தனிக் குடித்தனம் போகணும்ன்னு இருக்கா?"

ப்ரீதி, "ம்ம்ஹூம் .. " என்றவள் இம்முறை அலுவலகம் என்றும் பாராமல் அவன் கழுத்தை வளைத்து அவன் கன்னத்தில் முத்தமிட்டு "ஐ லவ் யூ சோ மச். What took you so long to come into my life?"

ஆனந்த், "Well! A broken engagement and an arrest by F fucking BI" என்றபடி சிரித்தான்.

ப்ரீதி, "சீ! பேசற பேச்சைப் பாரு!! சுதர்சனம் அங்கிள் எதாவுது கண்டு பிடிச்சு இருப்பரா? நேக்கு ரொம்ப பயமா இருக்கு ஆனந்த்"

ஆனந்த், "ஓ! சொல்ல மறந்துட்டேனே? நாளைக்கு சாயங்காலம் வரச் சொன்னார்"

ப்ரீதி, "என்ன ஏதாவுது விவரம் சொன்னாரா?"

ஆனந்த், "ம்ம்ஹூம் .. He sounded very excited .. இன்னைக்கு உன் விஷயமா யாரையோ பார்க்கப் போறதா சொன்னார். நாளைக்கு சாயங்காலமா வரச் சொன்னார்"

ப்ரீதி, "நான் தினமும் ஸ்ரீராமஜெயம் எழுதிண்டு இருக்கேன் தெரியுமா?"

ஆனந்த், "அத்தோட உன் வேலை எல்லாத்தையும் முடி"

ப்ரீதி, "இந்த ப்ராஜெக்ட் முடியப் போறது. என் டீம் டெஸ்ட் பண்ணிண்டு இருக்கு. நெக்ஸ்ட் மாட்யூல் நீ ஸ்பெக்ஸ் கொடுத்தாத்தான்"

ஆனந்த், "இன்னும் எவ்வளவு நாள் நமக்குத் தேவைப் படும்ன்னு தெரிஞ்சாத்தான் நான் கொடுப்பேன். நம் வேலை முடியப் போறதுன்னா நான் கழண்டுக்குவேன்"

ப்ரீதி, "அப்போ என் கதி?"

ஆனந்த், "யாருக்கோ அடிக்கடி ரி-அஷ்யூரன்ஸ் கொடுத்துட்டே இருக்க வேண்டி இருக்கு. அது சரி! I want to ask you something"

ப்ரீதி, "என்ன?"

ஆனந்த், "உனக்கு தடபுடலா கல்யாணம் செஞ்சுக்கணும்ன்னு இருக்கா?"

ப்ரீதி, "ம்ம்ஹூம் .. வேண்டாம்ப்பா! I am sick and tired of தட புடல் கல்யாணம். Waste of money. அது மட்டும் இல்லை ஆனந்த். உண்மையா நம்மை வாழ்த்த வர்றவா ரொம்ப கம்மியா இருப்பா. எல்லாம் ஒரு ஷோ தெரியுமா? எங்க அம்மா அப்பறம் உங்க அம்மா அப்பா இவா முன்னாடி மட்டும் நீ என் கழுத்தில் தாலி கட்டினா போறும்"

ஆனந்த், "சோ! ஒன் மோர் ப்ராப்ளம் சால்வ்ட். எங்க அப்பா அம்மாவுக்கும் ஆடம்பரமா கல்யாணம் செஞ்சு வெக்கறதில் இன்டரெஸ்ட் இல்லை. அந்தப் பணத்தை எதானும் ஒரு அனாதை ஆசிரமத்துக்குக் கொடுக்கலாம்ன்னு இருக்காங்க. சோ! கமிங்க் டு மை கழண்டுக்கறது .. நான் ஓ.கே சொன்ன ரெண்டு நாளில் அப்பா அம்மா குன்னூருக்கு வருவாங்க. நாம் ரெண்டு பேரும் அங்கே போறோம். அங்கேயே ஒரு கோவிலில் நீ சொன்னா மாதிரி உன் கழுத்தில் தாலியைக் கட்டறேன். அடுத்த நாள் சென்னைக்குப் போய் உன் விசாவை வாங்கறோம். எங்க அப்பா அம்மா நம்மை ஹனிமூனுக்கு அனுப்பிட்டு யூ.எஸ் திரும்புவா. ஹனிமூன் முடிச்சுட்டு நாம் நேரா யூ.எஸ் போவோம்"

முகம் சிவந்த ப்ரீதி, "வேண்டாம். நேரா உங்க ஆத்துக்குப் போலாம்"

ஆனந்த், "ம்ம்ஹூம் ... நத்திங்க் டூயிங்க்"


Thursday, 19 February 2010 - வியாழன், 19 ஃபிப்ரவரி 2010

மாலை ஆறு மணியளவில் சுதர்சனத்தில் அலுவலகத்தில் ...

ஆனந்த், "சோ! மாமா!! என்ன க்ரேட் ந்யூஸ்?"

சுதர்சனம், "பாங்க் ஸ்டேட்மெண்ட்ஸை டவுன்லோட் பண்ணிட்டு அதை பாலன்ஸ் ஷீட் அப்பறம் ப்ராஃபிட் அண்ட் லாஸ் அக்கௌண்ட்ஸ் கூட சேத்தி அனலைஸ் பண்ணினோம். அந்த விவரத்தை சொல்றதுக்கு முன்னாடி இன்னோரு சின்ன விவரம் உனக்கு எந்த அளவுக்கு உதவும்ன்னு தெரியலை ..."

ஆனந்த், "என்ன?"

சுதர்சனம், "பாங்க்கில் நேக்கு தெரிஞ்சவாகிட்டே விசாரிச்சேன். ஒவ்வொரு தரம் ஒருத்தர் நெட் பாங்கிங்கில் லாகின் பண்ணும் போது அவா எந்த ஊரில் இருந்து அப்பறம் எந்தக் கம்பியூட்டர்ல இருந்து லாகின் பண்ணினா அப்படிங்கற விவரம் பேங்கில் சர்வரில் ஸ்டோர் அகி இருக்குமாம். பி.எஸ்.வி ஸிஸ்டம்ஸ் அக்கௌண்டில் நெட் பாங்கிங்க் உபயோகம் அத்தனைக்கும் ஒரு லிஸ்ட் எடுத்துத் தர்றதா சொல்லி இருக்கார். அந்த லிஸ்டில் நான் சொன்ன அந்த விவரம் எல்லாம் இருக்குமாம். அனேகமா திங்கள் கிழமை கிடைச்சுடும். வந்த உடனே அதை நான் உனக்கு ஈ-மெயில் பண்ணறேன்"

ஆனந்த், "மாமா, விக்ரம் ஷாவின் லாப் டாப்பில் பேங்க் ஸ்டேட்மெண்ட் ஸ்டோர் ஆகி இருக்கான்னு பார்க்க முடியுமான்னு நீங்க திங்கள் கிழமை கேட்டீங்களே? அதுக்குத் தேவையே இல்லை. விக்ரம் ஷா லாப் டாப்பின் ஐ.பி அட்ரெஸ் எங்களுக்குத் தெரியும் அந்த லிஸ்டில் அவர் லாப் டாப் ஐ.பி அட்ரெஸ் இருந்தா போதும். அதை வெச்சே அவர்தான் உபயோகிச்சார்ன்னு நிரூபிக்க முடியும்"

சுதர்சனம், "எக்ஸெலண்ட் .. "

ப்ரீதி, "அனா அங்கிள் என் பெயரை உபயோகிச்சு என்னெல்லாம் கோல் மால் பண்ணி இருக்கார்ன்னு தெரிஞ்சுண்டு நாமே போலீஸில் சொல்லலாம்ன்னு சொன்னேளே?"

சுதர்சனம், "ஐய்யோ, அதுக்குத்தானே இந்த ஸ்டேட்மெண்ட் எல்லாம் வாங்கி இருக்கேன். நாங்க அனலைஸ் பண்ணினதில் கண்டு பிடிச்சதை இப்போ சொல்லறேன்." என்ற பீடிகையுடன் தொங்கி, "பி.எஸ்.வி ஸிஸ்டம்ஸ் இது வரைக்கும் லாபமே சம்பாதிக்கலை. முதல் வருஷத்தில் இருந்து வந்த கான்ட்ராக்ட் எல்லாத்தையும் ஷா ஸிஸ்டம்ஸ்க்கு சப்-கான்ட்ராக்ட் கொடுத்த மாதிரி இருக்கு. ஆனா கஸ்டமர்கிட்டே இருந்து பத்து டாலருக்கு கான்ட்ராக்ட் வந்து இருந்தா அதை ஷா ஸிஸ்டம்ஸ் ஒரு டாலருக்கு செஞ்சு கொடுக்கற மாதிரி இருக்கு"

ஆனந்த், "அப்படின்னா எக்கச்சக்க லாபம் வந்து இருக்குமே? எப்படி லாபமே சம்பாதிக்கலைன்னு சொல்லறீங்க"

சுதர்சனம், "இருடா. கொஞ்சம் ட்ராமிடிக்கா பில்ட்-அப் கொடுக்க விடு"

ஆனந்த், "ப்ரீதி, மாமாவை பாத்தா ரொம்ப ஜாலி மூடில் இருக்கற மாதிரி இருக்கு. அனேகமா உன் பிரச்சனையை சால்வ் பண்ணிட்டார்ன்னு நினைக்கறேன். நான் சொல்றது சரியா மாமா?"

சுதர்சனம், "பின்னே? சுதர்சனமா கொக்கா! முதல்ல நான் சொல்ல ஆரம்பிச்சதை சொல்லி முடிக்கறேன்" என்றபடி தொடர்ந்தார், "எப்படி லாபமே சம்பாதிக்கலைன்னா, வந்த காசை எல்லாம் ரியல் எஸ்டேட்டில் சில மோசமான இன்வெஸ்ட்மென்டில் போட்ட மாதிரியும் அதில் நஷ்டம் அடைஞ்ச மாதிரி கணக்கு எழுதி இருக்கான்"

ஆனந்த், "எப்படி?"

சுதர்சனம், "பி.எஸ்.வி ஸிஸ்டம்ஸ் இதுவரைக்கும் மூணு பெரிய பராப்பர்டீஸ் வாங்கி இருக்கு. மூணையும் வாங்கின விலையை விட குறைவான விலைக்கு வித்ததால நஷ்டம் அடைஞ்சு இருக்கு"

ஆனந்த், "யார்கிட்டே இருந்து வாங்கி இருக்கு அப்பறம் யாருக்கு வித்து இருக்குன்னு தெரியுமா?"

சுதர்சனம், "யார்கிட்டே இருந்து வாங்கினான்னு தெரியலை. ஆனா வித்தது விக்ரம் ஷாவின் பினாமிகளுக்கு அப்படிங்கறது என் அனுமானம். இன்னொரு விஷயம். பொதுவா ப்ராப்பர்ட்டி வாங்கும் போது நிச்சயம் கொஞ்சமாவுது கேஷ் (cash) அதாவுது ரொக்கமா கொடுக்க வேண்டி இருக்கும். கம்பெனிகளில் ரொக்கமா கொடுக்க வேண்டிய தொகையை எதாவுது செலவு ஆன மாதிரி காமிச்சு அதை கருப்புப் பணமா மாத்தறது வழக்கம். பி.எஸ்.வி ஸிஸ்டம்ஸ் அந்த மாதிரி செஞ்சதுக்கு ஒரு தடயமும் இல்லை. அவன் தன் சொந்த கருப்புப் பண்த்தை உபயோகிச்சு இருப்பான் போல இருக்கு. அவன் வாங்கி வித்தது எல்லாம் புறநகர் பகுதிகளில் பெரிய பெரிய நிலம். ஒவ்வொண்ணும் பத்து இருவது ஏக்கர் அளவில். எல்லாம் கோடிக்கணக்கில ப்ளாக் மனி புழங்கும் டீல்ஸ். அதை வெச்சுப் பார்க்கும் போது நிச்சயம் அவன் வெள்ளையா போட்ட தொகைக்கு சரி சமமா கருப்பிலும் கொடுத்து இருக்கணும்ன்னு தோணுது. அந்த அளவுக்குக் கருப்புப் பணம் அவனுக்கு எங்கே இருந்து வந்ததுன்னு தெரியலை. ஏன்னா ஐ.டி ஃபீல்டில் அதுவும் எக்ஸ்போர்ட் கம்பெனிகளுக்கு கருப்புப் பணம் வரறதுக்கு வாய்ப்பே இல்லை"

ஆனந்த், "தகவல் திருடி வித்தா நிச்சயம் வாய்ப்பு இருக்கு"

ப்ரீதி, "எஸ்! You got it Anand"

சுதர்சனம், "ஏண்டா? தகவலுக்கு அவ்வளவு பணம் வருமா என்ன?"

ஆனந்த், "மாமா, நீங்க ஒரு மேனுஃபாக்சரிங்க் பிஸினஸ்ல இருக்கேள். நீங்க பல ப்ராடெக்ட் தயாரிக்கறேள். உங்க போட்டிப் ப்ராடெக்டை யார் யார் எல்லாம் ரெகுலரா வாங்கறான்னு தெரிஞ்சுக்க உலகம் முழுக்க ஒரு மார்கெடிங்க் சர்வே செய்யணும்ன்னா எவ்வளவு பணம் செலவு செய்வேள். Assuming your market spans across the globe"

சுதர்சனம், "ம்ம்ம் ... அப்படி ஒரு சர்வே செய்யணும்ன்னா .. well it will run into many millions"

ஆனந்த், "உங்க போட்டிக் கம்பெனியின் ஒவ்வொரு ப்ராடெக்டையும் யார் யார் எல்லாம் ரெகுலரா உபயோகிக்கறான்னு நான் உங்களுக்கு ஒரு லிஸ்ட் கொடுத்தா அதுக்கு எவ்வளவு கொடுப்பேள்"

சுதர்சனம், "Now I clearly understand ... சரியான மொள்ளைமாறியா இருப்பான் போல இருக்கு"

முகத்தை சுழித்த ஆனந்த், "மொள்ளைமாறின்னா?"

சிரித்த சுதர்சனம் "ப்ரீதி. நீ அவனுக்கு மெதுவா என்னன்னு விளக்கமா சொல்லு. என்ன? சரி. தகவல் திருட்டுக்கும் ப்ளாக் மனிக்கும் உன்னால முடிச்சுப் போட முடியும்ன்னா ப்ரீதி கேஸை ரெண்டு விதத்தில் அட்டாக் செய்யலாம்"

ஆனந்த், "என்ன ரெண்டு விதத்தில்?"

சுதர்சனம், "நான் முதலில் சொன்ன வழி என்னன்னா, அந்த கம்பெனியின் பணப் போக்கு வரத்து எல்லாத்தையும் கண்டுபிடிச்சு அதுக்கும் தனக்கும் எந்த சம்மந்தமும் இல்லைன்னு ப்ரீதி ஒரு போலீஸ் கம்ப்ளெயிண்ட் கொடுப்பது. ஆனா, இந்த ரியல் எஸ்டேட் டீலிங்க் விவரம் தெரியவந்ததுக்கு அப்பறம் நேக்கு வேற ஒரு விதத்தில் அட்டாக் பண்ணலாம்ன்னு தோணித்து. இன்கம் டாக்ஸ் டிபார்ட்மெண்ட்டில் நெக்கு தெரிஞ்சவரண்டே பேசினேன். அவர்தான் நேத்து என்னை அவாளோட இன்டெலிஜென்ஸ் விங்க்ல இருப்பவர் ஒருத்தருக்கு அறிமுகம் செஞ்சு வெச்சார். அவரைத்தான் நேத்து பார்த்துப் பேசினேன். அவர் ஒரு இன்கம்டாக்ஸ் ரெய்டுக்கு ஏற்பாடு செஞ்சுண்டு இருக்கார். அதில விக்ரம் ஷா பிடிபட்டுடுவான்."

ஆனந்த், "பட், பி.எஸ்.வி ஸிஸ்டம்ஸ் எம்.டி ப்ரீதி இல்லையா? அவளையும் தானே அரெஸ்ட் பண்ணுவா?"

சுதர்சனம், "அதுக்கு முன்னாடி அவளுக்கும் இந்த ட்ரான்ஸாக்ஷன் எதுவுக்கும் சம்மந்தம் இல்லைன்னு நான் ஒரு அஃபிடவிட் தயாரிச்சு இருக்கேன். அதை கோட்டில் தாக்கல் செஞ்சு அவாகிட்டே சப்மிட் பண்ணிடுவேன்" என்றபடி அவர் தயாரித்து வைத்து இருந்த ஒரு பெரிய காகிகதக் கட்டை எடுத்து ப்ரீதியின் முன் வைத்து, "ப்ரீதி, உன் பேர் ப்ரிண்ட் பண்ணி இருக்கும் ஒவ்வொரு இடத்திலும் சைன் பண்ணும்மா"

ஆனந்த், "வாவ் மாமா. ரொம்ப ரொம்ப தாங்க்ஸ் மாமா"

சுதர்சனம், "டேய் படவா! எங்க அக்கா என்னைத் தொலைச்சுப் புடுவேன்னு தினம் தினம் மிறட்டிண்டு இருக்கா. உடனே அவ கழுத்தில் நீ ஒரு தாலியைக் கட்டணும்ன்னு குதிச்சுண்டு இருக்கா"

தன் பணியில் இருந்து தலை நிமிர்த்திய ப்ரீதி, "ம்ம்ஹூம் ... இந்த பிரச்சனை முடிஞ்சதுக்கு அப்பறம்தான் கல்யாணம் அங்கிள். இவர் ஆத்துக்கு போறச்சே I want to go with a clean slate"

சுதர்சனம், "உன்னைப் பத்தி நேக்குத் தெரியும்மா. அது மட்டும் இல்லை. இந்த பிரச்சனை இருக்கும் வரை நோக்கு விசா கிடைக்காது. ஆனா இந்தப் பய சீக்கிரம் திரும்பிப் போகணும். சோ! முடிச்சுடலாம். கவலைப் படாதே. பகவான் இருக்கார்." என்றவர் ஆனந்திடம், "டேய், நீ அந்த ப்ளாக் மனி ட்ரான்ஸாக்ஷனை எப்படி தகவல் திருட்டுக்கு முடிச்சுப் போடறதுன்னு பாரு ஓ.கே?"

ஆனந்த், "ஓ.கே" என்றவன் சற்று யோசித்து, "நாளைக்கு எங்க ஃப்ரெண்ட் ஒருத்தர் மூலமா ரியல் எஸ்டேட் பிஸினஸ்ல ஒரு பெரிய ஆளை மீட் பண்ணப் போறேன். அவர் விக்ரம் ஷாவுக்கு எதோ ரியல் எஸ்டேட் டீலில் உதவினாராம். அவர் நிச்சயம் உதவுவார்ன்னு என் ஃப்ரெண்ட் சொன்னார்"

சுதர்சனம், "யார் அந்த பெரிய மனுஷன்?"

ஆனந்த், "அவர் பேர் P.K.ரெட்டி"

சுதர்சனம், "நிச்சயமா பெரிய ஆள்தான். அவருக்கு சொந்தமா நிறைய ரியல் எஸ்டேட் இருந்தது. அதுக்கும் மேல ஒரு இருவது வருஷத்துக்கு முன்னாடி ஈஸ்ட் பெங்களூரில் நூத்துக் கணக்கான ஏக்கர் நிலத்தை வளைச்சுப் போட்டார். நிறைய சம்பாதிச்சார் ... ஆனா இப்போ ஒரு ரெண்டு மூணு வருஷமா ரொம்ப ஆக்டிவ் இல்லை. ஸ்டில் அவர் ஒரு டான் மாதிரி. எந்த ப்ராப்பர்டி மேட்டரில் எந்த சிக்கல் இருந்தாலும் அவர் தீர்த்து வைப்பார்ன்னு கேள்விப் பட்டு இருக்கேன். அதே மாதிரி அவருக்கு கான்டாக்ட்ஸ் எக்கச் சக்கம்"

ஆனந்த், "சோ நமக்குத் தேவையான விவரங்களை அவர் மூலம் தெரிஞ்சுக்கலாம் இல்லையா?"

சுதர்சனம், "அவர் உனக்கு எதுக்கு உதவணும்?"

ஆனந்த், "நிச்சயம் உதவுவார்ன்னு என் ஃப்ரெண்ட் சொன்னார். என் ஃப்ரெண்டுக்கு ரொம்ப வேண்டப் பட்டவராம்"

சுதர்சனம், "சரி, A trial costs nothing .. " தன் லாப்டாப் திரையைப் பார்த்து மூன்று வரிகளில் ஒரு தேதி, அதற்கு அடுத்து ஒரு தொகை, அதை அடுத்து மற்றும் ஒரு தேதியும் அதனையடுத்து ஒரு தொகையும் ஒரு வெற்றுப் பேப்பரில் எழுதிக் கொடுத்து, "முதல்ல இருக்கும் தேதியில் அதுக்கு அடுத்து எழுதி இருக்கும் அமௌண்டுக்கு வாங்கப் பட்டு இருக்கு. ரெண்டாவதா எழுதி இருக்கும் தேதியில் அதுக்குப் பக்கதில் எழுதி இருக்கும் அமௌண்டு விக்கப் பட்டு இருக்கு" என்று விளக்கினார்.

அந்த பட்டியலில் கவனம் செலுத்திய ஆனந்த், "நிச்சயம் ப்ளாக் மனிக்கும் தகவல் திருட்டுக்கும் சம்மந்தம் இருக்கு. இதில் ஒரு டீல் நான் மாட்டிண்டு இருக்கும் கேஸில் திருட்டு நடந்த தேதிக்கு அப்பறம் கொஞ்ச நாளில் நடந்து இருக்கு. எங்கே இருந்து அந்தப் பணம் வந்ததுன்னு எப்படி தெரிஞ்சுக்கறது?"

சுதர்சனம், "நான் ஒரு க்ளூ கொடுக்கறேன். அவ்வளது பணம் ரொக்கமா கொடுக்கணும்ன்னா நாலஞ்சு ஸூட்கேஸ் பிடிக்கும். அதாவுது அத்தனையும் ஆயிரம் ரூபா நோட்டா கொடுத்தா. நேரடியா ரொக்கமா கொடுத்து இருக்க மாட்டா"

ஆனந்த், "அப்பறம் எப்படி?"



சுதர்சனம், "வாங்கறவன் துபாய் மாதிரி ஒரு நாட்டில் இருக்கும் ஒரு ஃபாரின் பேங்கில் டெபாசிட் பண்ணிட்டுவான். விக்கறவன் வேணுன்ற அப்போ ஹவாலா மூலம் தங்கமாவோ இல்லை டாலராவோ எடுத்துண்டு வருவான். அந்த P.K.ரெட்டி நினைச்சார்ன்ன நிச்சயம் அவரால அந்த விவரத்தை நோக்கு சேகரிச்சுக் கொடுக்க முடியும். Give it a try"

ப்ரீதி தன் கையொப்பம் இட வேண்டிய வேலையை முடித்து இருந்தாள்.

ஆனந்த், "சரி மாமா! ஆல் தி பெஸ்ட் அண்ட் விஷ் மி லக்"

சுதர்சனம் அவர்களுக்கு விடை கொடுத்தார்.

வெளியில் வந்ததும் ஆனந்த், "இப்போ பி.ஜிக்குப் போகணுமா?"

ப்ரீதி, "ஆமா. சீக்கரம் எதானும் டின்னர் வாங்கித்தா. நான் என் ஸ்கூட்டரில் வந்து இருக்கேன்னு மறந்துடுத்தா. பி.ஜி மூடறதுக்கு முன்னாடி நான் திரும்பப் போகணும்"

இருவரும் உணவருந்திய பிறகு ...

ஆனந்த், "நாளைக்கு?"

ப்ரீதி, "நாளைக்கு காலைல நீ சிவாகூட போய் உன் வேலையைப் பாரு நான் என் ப்ராஜெக்ட் வேலையைப் பார்த்துட்டு பி.ஜிக்கு திரும்பிப் போறேன்"

ஆனந்த், "ஹே! திஸ் இஸ் நாட் ஃபேர்!!"

நாணப் புன்னகை உதிர்த்த ப்ரீதி, "போன் வாரம் வந்து அழைச்சுண்டு போனியே அந்த மாதிரி சாயங்காலமா என் பி.ஜிக்கு வா"

ஆனந்த், "Now your talking my lingo" என்று பிறகு அவளுக்கு விடைகொடுத்தான்.



No comments:

Post a Comment