Thursday, July 31, 2014

சங்கீதா - இடை அழகி 70


ராகவ் ஒரு நொடி எழுந்து நின்று அனைவரையும் பார்த்து “Gentlemen I am glad to introduce sangeethaa to you all, a true banking expert, since this is our finance related meeting, I requested her to join with us all” என்று சொல்ல ஹலோ, வெல்கம், ஹாய் என்று பலதரப்பட்ட வார்த்தைகள் கதம்பமாக வந்து விழுந்தது சங்கீதாவின் காதில். ராகவ் தன் இருக்கைக்கு அருகே வந்து அமருமாறு முக பாவனை செய்ய, அடக்கமாக சென்று ராகவின் பக்கத்தில் அமர்ந்தாள் சங்கீதா. மீண்டும் பேச்சுகள் தொடர்ந்தன. பேச்சுகளுக்கு இடையே ராகவ் ஒரு நொடி ஏதோ காகிதத்தில் பேனாவால் எழுதி கசக்கி சங்கீதாவின் காலருகே போட, அதை அவள் எடுத்து பிரித்து பார்த்தாள். அதில் “Sara, you are so gorgeous” என்று எழுதியதைப் பார்த்து சிரிக்காமல் மிக அழகாக வெறும் கண்களால் கூட வெட்கப் பட முடியும் என்று ராகவ்க்கு காண்பித்தாள் சரா.
மீட்டிங் முடியும் நேரம் நெருங்கியது, அனைவருக்கும் கை குலுக்கிவிட்டு ராகவ் சங்கீதாவை தனது BMW காரில் அமரவைத்து நீண்ட நாட்களுக்குப் பிறகு பக்கத்தில் உள்ள coffee day கடைக்கு கூட்டி சென்று இரு cold coffee ஆர்டர் செய்தான். ராகவின் கண்கள் சங்கீதாவின் கண்களை ஊடுருவியது. இருவரும் இதற்கு முன்பு முதல் முதலாக ஒருவருக்கொருவர் சந்தித்துக் கொள்ளும்போது இந்த இடத்தில் அமர்ந்ததை எண்ணி மகிழ்ந்தார்கள். “ஏய்…. என்ன அப்படி பார்க்குற?” ‘என் தேவதைய நான் பார்க்குறேன்.” “தொடர்ந்து அப்படி உத்து பார்க்காத ராகவ், ஒரு மாதிரி இருக்கு.” “சார், ரென்டு cold coffee” – ஆர்டர் செய்த ஐடம் வந்தது. ராகவ் அவனது coffeeயை குனிந்து குடிக்கும்போது சங்கீதா ராகவைப் பார்ப்பதும், அவள் coffeeயைக் குடிக்கும்போது ராகவ் விடாமல் அவளுடைய தலை முடி, வளையல், புடவை ஆகியவற்றை கவனிப்பதும் தொடர்ந்து இருவருடைய coffee முடியும்வரை நடந்தது. ஒரு கட்டத்தில் இருவரும் ஒருவருக்கொருவர் கண்ணும் கண்ணும் வைத்து பார்க்க, அப்படியே சில நொடிகள் திரும்பாமல் பார்த்துக் கொண்டே இருந்தார்கள். ஒரு கட்டத்துக்கு மேல் சந்கீதாவால் முடியாமல் குனிந்துவிட்டாள். “நீ ரொம்ப மோசம் ராகவ்.” “நான் என்ன செஞ்சேன்?” “உக்கும்…. ஒன்னும் செய்யல.. என்னதான் இவ்வளோ நாள் உன்னைப் பார்த்தாலும் இப்போ உன்னை நேருக்கு நேர் இப்படி பார்க்கும்போது கொஞ்சம் கூச்சமா இருந்துச்சி, அதான் சொன்னேன்.” – லேசாக வெட்கத்தில் சிரித்தாள் சங்கீதா. “மீண்டும் ஒன்றும் பேசாமல் அப்படியே சங்கீதா பேசுவதை பார்த்துக் கொண்டே இருந்தான் ராகவ்.” “சரி, இப்படி உத்து பார்க்குற அளவுக்கு என்னதான் காணாதத கண்டுட்ட இன்னைக்கி என் கிட்ட?” “ஒன்னும் இல்ல உன் முடியைப் பார்த்தேன் அதுல கொஞ்சம் மயங்கிட்டேன், அப்போ ஒரு சின்ன காதல் கதை நியாபகம் வந்துச்சி.” “என்ன காதல் கதை?..” – கைகளை கோத்து தனது வாயின் கீழ் வைத்து மேஜையின் முன் வந்து புருவங்களை உயர்த்தி உற்சாகமாய் க் கேட்டாள் சங்கீதா.
“ஒரு சின்ன ஏழ்மையான குடும்பம். காதலனுக்கு கையில் ஒரு கை கடிகாரம் இருக்கும் ஆனால் அதில் ஒரு மணி வாங்கி கோக்கணும் னு ஆசை படுவான், ஆனால் காசு இருக்காது. அவனுடைய காதலிக்கு உன்னை போல ரொம்ப அழகான முடி இருக்கும். ஆனால் வாருவதர்க்கு நல்ல சீப்பு இருக்காது. ஒரு நாள் காதலர் தினம் வரும். அப்போ ரெண்டு பேரும் அவங்கவங்க ஆசை பட்ட பொருளை பரிசா குடுக்கலாம் னு எண்ணி குடுப்பாங்க. காதலன் அவனுடைய கை கடிகாரத்தை வித்து அவளுடைய தலை முடி வாருவதர்க்கு உயர் ரக சீப்பு வாங்கி இருப்பன். காதலியோ, தனது முடிகளை வெட்டி அதை விற்று தன் காதலனுக்கு அவனுடைய கை கடிகாரத்தில் கோக்கும் மணியை வாங்கி இருப்பாள். ” “ஹேய்… so sweet da….” – பலருக்கு இந்த கதை தெரிந்திருந்தாலும் சங்கீதாவுக்கு இந்த கதை தெரியாது. அதுவும் தன் காதலன் சொல்லி இதை அவள் கேட்க்கும்போது மிகவும் ரசித்தாள். “இருவரும் ஒருவருக்கொருவர் குடுத்த பரிசுகளை உபயோகிக்க முடியாத நிலையில் இருந்தாலும் தன்னை காதலிக்கும் ஜீவன் நமக்காக எவ்வளவு தூரம் சென்றிருக்கிறதென்று உணரும்போது இருவரும் கட்டி அனைத்து அவர்களுடைய காதலை உணர்வார்கள். என் மனசுக்கு அந்த விஷயம் நியாபகம் வந்துச்சி உன் தலை முடியைப் பார்த்தப்போ.” – என்று ராகவ் சொல்ல.. “சும்மா இரு நீ இன்னும் உன் surprise என்னன்னு எனக்கு காமிக்கவே இல்ல. I am excited to see what that is” – அழகான புன்னகை சிரிப்புடன் கூறினாள் சங்கீதா. “ஹா ஹா பார்க்கத் தானே போற…. lets go..” ராகவ் தனது வண்டியை அவனது personal vip visitor room முன்பு நிறுத்தினான். சங்கீதாவை உள்ளே அழைத்து சென்றதும் அவள் அந்த இடத்தின் ரம்யமான தோற்றத்தில் கொஞ்சம் அசந்தாள். முழுக்க முழுக்க நாளா புறமும் வெள்ளை நிற சுவர்கள், நடுவினில் கண்ணாடியில் செய்த மேஜையும், இரு நாற்காலியும் மட்டும் இருந்தது. சுவர் அருகே ஒரு படம் silk துணியால் போர்த்தி மூடி வைக்கப் பட்டு இருந்தது. ரூமின் மூலையில் கண்ணைப் பறிக்கும் விதம் artificial fountain வைக்கப் பட்டிருந்தது. அதில் இருந்து கொட்டும் செயற்கை நீர் வீழ்ச்சியின் சத்தம் கேட்பதற்கு இனிமையாக இருந்தது. chair இருந்தும் இருவரும் அமரவில்லை. மேஜையின் இரு பக்கம் நின்று ஒருவருக்கொருவர் மீண்டும் பார்த்து சிரித்துக் கொண்டார்கள். “ஏய்..” “சொல்லுடா..” “ரொம்ப அழகா இருக்கே டி..” “இஸ்ஹ்ம்ம்..” ( தலையை குனிந்து மென்மையான சிரிப்புடன் பெரு மூச்சு விட்டாள் சரா…. நேராக பார்க்க முடியாமல்.) “உன்னோட surprise பத்தி சொல்ல மாட்டியா?” “சொல்லாம எப்படி இருக்க முடியும் சரா, I am excited to say, அதனாலதான் இங்கே கூட்டிட்டு வந்தேன்.” “உன்னோடய surprise பத்தி சொல்லேன்” – ராகவ் சற்று நெருங்கி வந்து கேட்டான். “நான்தானே முதல்ல கேட்டேன்?” “சரி சரி, ladies first ஒகவா? ப்ளீஸ்….” “நீ கண்ணை மூடு..” “எதுக்கு?” “சப்.. மூடுன்னா மூடு…” “சரி சரி.. மூடிட்டேன்… ” ராகவின் காதுகளில் சரா தனது கைகளை லேசாக உயர்த்துகிறாள் என்பதை அவளின் வளையல் ஓசை தெரிவித்தது. “கண்ணைத் திற.. என்றாள் அவனின் தேவதை.” திறந்தான், பார்த்து வியந்தான். “wow..so beautiful. எப்படி சரா?” – அவளது இரு கைகளின் உள்ளங்கையில் ராகவ் என்று பெயரை எழுதி அதை சுத்தி பூக்கள் போன்ற designs வரைந்து அந்த பெயரே தெரியாத வண்ணம் மருதாணி வைத்திருந்தாள். இருந்தும் ராகவ் அதை கண்டு பிடித்துவிட்டான். “பிடிச்சி இருக்கா?” – ராகவின் முகத்தை நேராக பார்த்து கேட்காமல் தனது கரங்களை மட்டுமே வெட்கத்துடன் பார்த்து கேட்டாள் சங்கீதா. ராகவின் கண்ணில் அவள் மீதிருக்கும் காதல் அப்பட்டமாக தெரிந்தது. பாராட்ட வார்த்தைகள் வரவில்லை அவன் வாயில் இருந்து. நேராக அவளது உள்ளங்கையில் அவனது பெயரின் மீது மென்மையாக ஒரு முத்தம் குடுத்தான். அவனது மீசை அவளது உள்ளங்கையில் உரச, டக்கென முகத்தை வேறு பக்கம் திருப்பி உததுகளை உள்ளே இழுத்து பற்களால் கடித்து கண்களை மூடி வெட்கத்தில் மிக அழகாக மென்மையாக சிரித்தாள் ராகவின் தேவதை சரா. “north ல பொம்பளைங்க அவங்க மணசு விரும்பின ஆம்பளைங்களோட பெயரை இப்படிதான்..” – சங்கீதா முடிப்பதற்குள் ராகவ் குறுக்கிட்டு “தெரியும் சரா…. நான் அவ்வளோ மக்கு இல்ல..” – என்று சொல்ல இருவரும் ஒருவருக்கொருவர் பார்த்து சிரித்தார்கள் – அவர்களின் சிரிப்பு சத்தம் இருவருடைய காதுகளுக்கும் இனிமையான சங்கீதமாக இருந்தது.
“என்னோட surprise என்ன தெரியுமா?” என்றான் ராகவ் “waiting to listen… சீக்கிரம் சொல்லுடா ப்ளீஸ்.” ராகவ் அருகினில் வந்தான். அவனுடைய ஒரு ஒரு அடியும் முன்னுக்கு வர சாராவின் பாதங்கள் ஒவ்வொரு அடியாக பின் நோக்கி நகர்ந்தது. கடைசியாய் ஒரு கட்டத்தில் சுவரில் சாய்ந்தாள். ராகவ் அவளுக்கு முன்பாக நெருங்கி நின்று அவளது கண்களைப் பார்த்தான். சந்கீதாவே நல்ல உயரம், ஆனால் அவளே நிமிர்ந்து பார்க்கும் விதம் ஆண்மையுடன் கம்பீரமாக அவள் முன் நின்றான். மனதில் சற்று தைரியம் வர வைத்து சங்கீதாவும் ராகவின் பார்வையைப் பார்க்க முயன்றாள். ஆனால் ஏனோ தெரியவில்லை சில நொடிகளுக்கு மேல் அவனுடைய ஊடுருவும் அந்த பார்வையை அவளாள் பார்க்க முடியவில்லை. என்னதான் அவன் கண்கள் இவளது கண்களை மட்டுமே பார்த்தாலும் தலை முதல் பாதம் வரை கிறங்க வைக்கும் powerful மன்மதனின் பார்வை அது. “ஹாஹ் ஹா.” – என்று கண்களை மூடி வெட்கத்தில் சிரித்து வாயில் கை வைத்து மூடி வேறு பக்கம் திரும்பிக் கொண்டாள். “என்னோட surprise ல நான் உனக்கு ஒரு விஷயம் சொல்ல போறேன்.” – என்று கேசாக குனிந்து சங்கீதாவின் காதருகே சொன்னான் ராகவ். “என்ன?” – காற்று கலந்த குரலில் அழகாக கேட்டாள் சரா. “எனக்கு வாழ்க்கைல இனிமே என்ன காயம் ஏற்பட்டாலும் அதோட வலி எனக்கு தெரியாது.” “ஏன்?” – தலை திரும்பி இருந்தாலும் ஓரக்கண்ணால் ராகவை பார்த்து சிரித்து கேட்டாள் சரா. ராகவ் தனது சட்டை மேல் button ஒன்றை கழட்ட “ராகவ் ப்ளீஸ், என்ன பண்ணுற?” – சந்கோஜத்தில் நெளிந்தாள் சரா. “ஒரு நிமிஷம் இரு… ஹ்ம்ம் இப்போ என் சட்டையை நெஞ்சின் பக்கம் லேசா தள்ளிட்டு பாரு” என்றான். “தனது மென்மையான கரங்களால் அவனது சட்டையை நெஞ்சின் ஓரம் லேசாக விளக்கி பார்த்தாள் சங்கீதா.. சாவியால் கீறி ஏற்பட்ட தழும்பின் மீது “சரா” என்று பச்சை குத்தி இருந்தான் ராகவ்.” பார்த்த அடுத்த கணமே சங்கீதாவின் கண்களில் கண்ணீர் வர ஆரம்பித்தது. “இதுக்குதான் நேத்து நீ உன் நெஞ்சுல பிளாஸ்டர் போட்டு இருந்தியா?” “இல்ல.. இல்ல, என் நெஞ்சுல உன் பேருக்கு ஏற்கனவே கார் சாவியால underline போட்டுட்டேன், சோ அந்த லைன் மேல உன் பேரை பச்சை குத்திகுட்டேன். ஏன்னா என்னதான் வலிகள் என் வாழ்க்கைல வந்து என்னை கீறினாலும் அதுக்கு மேல என் சரா இருக்கா னு நான் ஒரு ஒரு தடவையும் கண்ணாடியில பார்த்துப்பேன். அது எனக்கு எந்த காயத்தையும் மனசளவுல நெருங்க விடாது..” – என்று ராகவ் சொல்லும்போது எந்த தயக்கமும் இல்லாமல் எதையும் யோசிக்காமல் ஒரு நொடி கூட காத்திராமல் அப்படியே ராகவை தன் நெஞ்சோடு இறுக்கி கட்டி அணைத்தாள் அவனுடைய சரா. சற்று நேரம் ஒன்றும் பேசாமல் அமைதியாய் இருவரும் ஒருவருக்கொருவர் அவர்களது இதய துடிப்பை உணர்ந்தார்கள். அந்த நிசப்தமான மௌன சந்தோஷத்தை அழகு படுத்தும் விதம் சுவரில் உள்ள கடிகாரம் மாலை 5 மணியை நெருங்க கடிகாரத்தின் உள்ளே இரண்டு ஹார்ட்டின் வடிவம் கொண்ட பொம்மைகள் ஒன்றோடொன்று உரசிக்கொண்டது. அப்போது கடிகாரத்தின் ஓசை இவர்களின் மனதை வருடியது. சரா அதை ரசித்துப் பார்த்தாள். ராகவ் சாராவின் காதில் “மனசும் மனசும் எவ்வளவு அழகா உரசுது பார்த்தியா?” என்று காற்று கலந்த husky குரலில் காதலுடன் கூறினான். சங்கீதா அதைக் கேட்டபோது அவளின் கரங்கள் ராகவின் தோள்களை இன்னும் சற்று இறுகி பிடித்தது. மீண்டும் சங்கீதாவின் காதோரம் ராகவின் காற்று கலந்த குரலின் சங்கீதம் தொடர்ந்தது.. ” நீ மருதாநியால என் பேரை எழுதி இருக்கே நான் மெடிசின் மூலமா எழுதி இருக்கேன் அவ்லோதான் வித்யாசம். நம்முடைய காதலை தெரிவிச்சதுக்கு அப்புறம் நாம சந்திக்குற முதல் சந்திப்பு இது. எவ்வளவு இனிமையா கவிதையா அமைஞ்சி இருக்கு பார்த்தியா?” “I love you my one and only sara, I love you….. I love you so much.” – சங்கீதாவின் கண்களை உத்து பார்த்து கூறினான். அவனது பார்வையை நேருக்கு நேர் பார்க்க தயங்கி நின்ற சரா இப்போது அவனது அந்த காந்த பார்வையின் ஆழத்தில் விழுந்து கிடக்க ஏங்கி, வைத்த கண் வாங்காமல் ராகவின் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தாள். “எ….என் மொத்த வாழ்க்கைலையே இந்த ஒரு நிமிஷம், இந்த ஒரு நொடியை நான் அனுபவிக்குறதுக்காகவே பிறந்திருக்கேன் னு தோணுது டா.” – அளவு மிகுதியான சந்தோஷத்தில் கண்களில் பொங்கும் கண்ணீரை க் கட்டுப் படுத்த முடியாமல் அழுது கொண்டே பேசினாள் சரா. சங்கீதாவின் தலையை தன் பரந்த நெஞ்சோடு அனைத்து அவளது தலையில் முத்தம் குடுத்து, “நான் உனக்கு ஒன்னு தரப் போறேன், சாதாரணமான பொருள் தான் ஆனால் அதுல உனக்கு ரொம்ப பெரிய சந்தோஷம் கிடைக்கும்.” என்று சொல்லி ஒரு கவரைக் குடுத்தான் ராகவ். சரா அதைப் பிரித்துப் பார்த்தாள், அதில் IOFI function நடக்கும்போது மேடையில் சங்கீதா award வாங்கியபோது ராகவின் அருகில் நெருங்கி நிற்கும் புகைப்படம் ஒன்றை பெரியதாய் develop செய்து அதில் கீழே “for my one and only sweet heart” என்று எழுதி கை எழுத்து போட்டிருந்தான். உண்மையில் அதை பார்த்த ஒரு நிமிடம் சங்கீதாவுக்கு தன் கழுத்தில் தொங்கும் தாலிக்கு இணையாக மதிப்பு குடுத்து அதை பதிரமாக தன் handbag உள்ளே மடியாமல் கசங்காமல் வைத்துக் கொண்டாள். “உண்மையிலேயே இது எனக்கு ரொம்ப பெரிய பொக்கிஷம் டா” என்று ராகவின் முகம் பார்த்து சிரித்து சொல்லிக்கொண்டே உள்ளே வைத்தாள். “நான் உனக்கு குடுக்க ஒண்ணுமே செய்யலடா… சாரி” – என்று ஏக்கத்தில் சங்கீதா பேசும்போது குறுக்கிட்டு “நீ ஏற்கனவே எனக்கு குடுத்துட்ட சரா….” என்று சொல்லி சுவரின் மேல போர்த்தப் பட்டிருக்கும் silk துணியை சடாரென உருவினான் ராகவ், அதில் சங்கீதா ராகவ்க்கு தன் காதலை எழுதி தெரிவித்த கடிதத்தை மிக பிரம்மாண்டமாக பெரிய frame போட்டு நடுவினில் சிறியதாக இருக்கும் அவன் தேவதையின் கடிதத்தை க் காட்டினான். ” எப்போவுமே காலைல எழுந்த உடனே என் வீட்டுல சாமி படத்தைப் பார்க்க சொல்லுவாங்க, ஆனான் நான் கண் விழிச்ச்சதும் பார்க்குற படம் இதுதான். இதைப் பார்த்துட்டு அந்த நாளை தொடங்கினா எனக்கு எந்த பிரச்சினையும் வராது. அப்படியே வந்தாலும் என் நெஞ்சுல இருக்குற சாராவை ஒரு தடவ தடவி பார்த்துக்குவேன், அதுக்கு அப்புறம் ரொம்ப சுலபமா எந்த காரியத்தையும் சாதிச்சிடுவேன்.” சங்கீதாவிடம் பேச வார்த்தைகள் இல்லாமல் மெளனமாக நிற்க ராகவ் அவளது மணசு சந்தோஷத்தில் கனத்து இருப்பதை உணர்ந்தான். அப்போது அவனுடைய சாராவும் அவனும் ஒருவருக்கொருவர் லேசாக நெருங்கினார்கள். இன்னும் நெருங்கினார்கள். ஒருவருக்கொருவர் உச்சகட்ட அன்பின் அடையாளமாக தங்களின் காதல் முத்தத்தை ஒருவர் மற்றொருவருடைய இதழ்களில் பதிக்க இருவருமே ஒரு நிமிடம் இவ்வுலகில் தங்களின் சகலத்தையும் மறந்தார்கள். ராகவின் கரங்கள் சங்கீதாவின் கரங்களைப் பற்றியது. மென்மையான இருவருடைய உதடுகளும் ஒன்றோடொன்று உரசி அறிமுகப் படுத்திக் கொண்டது. அழகாக முத்தத்துடன் நிறுத்தி இணைந்த இதழ்கள் பிரிந்து ஒருவருக்கொருவர் தங்களின் முகத்தைப் பார்த்து மென்மையாக சிரிக்கும்போது அலறியது சங்கீதாவின் மொபைல்.. “டிரிங்…டிரிங்…” ஹலோ.. எம்மா, யாரும்மா சந்கீதாவா? – பேசும் குரலுக்கு அருகே நிறைய கூட்டம் சத்தம் போடுவது கேட்டது. police siren சத்தம் கேட்டது. “ஆமாம் சொல்லுங்க, நீங்க யாரு?” – பதறி பேசினாள் சங்கீதா. “நான் உங்க தெரு முனை police station ல இருக்குற ஏட்டு மா.. எனக்கு அதிகம் பேச முடியாது, inspector நிறைய வேலை சொல்லி இருக்காரு, சீக்கிரமா கிளம்பி உங்க வீட்டுக்கு வாங்க, இங்கே ஒரு பெரிய அசம்பாவிதம் நடந்து இருக்கு. நேருல வாங்க உங்க கிட்ட பேசணும்.” “ஹலோ என்ன அசம்பாவிதம், சொல்லுங்க ப்ளீஸ் சொல்லுங்க என்ன அசம்பாவிதம் நடந்துது… சொல்லுங்க ப்ளீஸ்….” – பதறினாள் சங்கீதா. “கி… கி… கி… கி………” – constable phone கட் செய்யப் பட்டது. “சங்கீதா என்ன ஆச்சு?” “உடனே என் வீட்டுக்கு போகணும் ராகவ்” – பயத்தில் அழுதாள் சங்கீதா.. மனதில் பல கலவரம், பசங்களுக்கு என்ன ஆச்சோ? குமார் ஏதாவது ஆத்திரத்துல வீட்டுக்கு வந்த பசங்கள ஏதாவது செஞ்சிடானா?.. ஒன்றும் விளங்க வில்லை சங்கீதாவுக்கு. அவளுக்கு இப்போதிக்கு பலமாய் இருந்தது ராகவின் தோள்கள் மட்டுமே.
“dont worry, இப்போவே போகலாம் சரா, கவல படாத.. – என்று சொல்லி ராகவ் தனது BMW காரை அசுர வேகத்தில் start செய்தான். கார் வேகம் என்று வந்தால் அதில் ராகவை முந்துவதற்கு ஒருவன் பிறந்து வர வேண்டும். அப்படி ஒரு வேகத்தில் ராகவ் சங்கீதாவின் வீட்டை நோக்கி ஜெட் வேகத்தில் பறந்தான். இதே நாள், காலை நேரம் 10:00 மணி அளவில் சங்கீதா வீட்டை விட்டு கிளம்பியதும் குமார் வீட்டின் உள்ளே நுழைந்தான். எப்படி ஒரு புறம் தனது மணம் விரும்பிய காதலனின் காதலை உணர்ந்து அவளது வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு இனிமையான நினைவு ஏற்பட்டதோ அதற்கு இணையாக மற்றொரு அதிர்ச்சி அவளுக்கு அன்று மாலை நடக்க போகிறதென்று எண்ணி இருக்க மாட்டாள். நடந்தது என்ன என்று சற்று நேரத்தைப் பின் நோக்கி அன்று காலை அவளது வீட்டில் என்ன நடந்ததென்று பார்ப்போம்.

சங்கீதா - இடை அழகி 69


“ஹலோ அக்கா, நல்ல ரெஸ்ட் எடுத்தீங்களா?” “நான் எடுக்குறது இருக்கட்டும், நீதான் முக்கியமா எடுக்கணும். நீ எப்போ வருவேன்னு காத்திட்டு இருக்குது இதுங்க ரெண்டும். கொஞ்சம் நேரம் இதுங்களுடன் விளையாடிட்டு படுத்து ரெஸ்ட் எடும்மா. உனக்கும் உள்ள சூடா காபி போட்டு வெச்சி இருக்கேன்.”
“thanks அக்கா, இன்னைக்கி வர கொஞ்சம் லேட் ஆகிடுச்சி. நீங்க ஏதாவது சாப்டீங்களா?” “இப்போ எதுவும் வேணாம்டா, நீ பார்த்துக்கோ, நான் இப்போ கிளம்புறேன். கொஞ்சம் வீட்டுலயும் வேலை இருக்கு.” – என்று சொல்லிவிட்டு கிளம்பினாள் நிர்மலா. “என்னங்கடா பண்ணீங்க ரெண்டு பேரும் இன்னைக்கி?” – என்று பேசிக் கொண்டே சங்கீதா சமையல் அறைக்கு செல்ல பின்னாடியே ஸ்நேஹா மெதுவாக வந்தாள். “என்னடா கண்ணா?” – என்றாள் சங்கீதா.. “அம்மா, நேத்து கேட்கனும் னு இருந்தேன், அன்னிக்கி என்னையும் ரஞ்சித்தயும் ஸ்கூல் ல இருந்து ஒரு நாள் கூட்டிட்டு வந்தாரே ராகவ் மாமா, அந்த மாமா தானே அன்னிக்கி function ல stage மேல இருந்தாரு?” “ஹா ஹா, ஆமாம், ஏண்டா கேட்குற?” – ராகவ் பத்தி கேட்டவுடன் சங்கீதாவுக்கும் மனதில் ஒரு வித சந்தோஷம். “ஒன்னும் இல்லைமா, எனக்கு அந்த மாமவ ரொம்ப பிடிச்சி இருக்கு, திரும்பவும் பார்க்க முடியுமா மா?” “எதுக்கு? இன்னொரு talking barbie doll வாங்கிக்கவா? ஹா ஹா..” “அது இல்லைமா, வேற ஏதாவது புதுசா பொம்மை வாங்கிக்கலாமே னு கேட்டேன்..அதான்.” – பால்வடியும் முகத்துடன், வெளிப்படையாக பேசினாள் ஸ்நேஹா. “எப்போ நினைச்சாலும் பார்க்கலாம், அம்மா நாளைக்கு அவரை தான் பார்க்க போறேன்”. – தன் மகளிடம் இதை சொல்லும்போது சங்கீதாவின் முகத்தில் அப்படி ஒரு சந்தோஷ சிரிப்பு. பேசிக் கொண்டிருக்கும்போது phone பீப் பீப் என்று சத்தம் குடுக்க, உற்சாகமாய் மொபைலை எடுத்தாள். அதில் “I wont come home today also, I will stay with my friend tonight” என்று குமார் sms அனுப்பியதைப் பார்த்துவிட்டு சற்று சலிப்புடன் “ஹ்ம்ம்…. இன்னைக்கி night ஒருத்தருக்கு குறைச்சி சமைக்கணும்” என்று மட்டுமே எண்ணினாள் சங்கீதா. டிக் டிக் என்று கடிகாரத்தில் பெரிய முள் சுழன்று சுழன்று சிறு முள்லை கிட்டத்தட்ட 10 நோக்கி அழைத்து சென்றது. நீண்ட நேரம் pogo, மற்றும் chutti tv என குழந்தைகள் இருவரும் மாறி மாறி பார்த்துக் கொண்டு சங்கீதா குடுத்த உணவை சமத்தாக சாப்பிட்ட பிறகு தூக்கம் அவர்களது இமைகளை இழுக்க அவர்கள் இருவரையும் படுக்கையில் படுக்க வைத்துவிட்டு, வீட்டு வேலைகள் அனைத்தையும் முடித்து விட்டு தனிமையில் சற்று ஹாலில் வந்து வழக்கமாக கண்ணாடியின் முன் fanனின் கீழ் அமர்ந்தாள். இப்போது ராகவ் குடுத்த கவரை ப் பிரிப்பதற்கு முன் அதில் என்ன எழுதி இருக்கிறதென்று பிரித்துப் பார்த்தாள் “newly designed saree for working women” என்று எழுதி இருந்தது. I am honouring the saree by giving the first piece to my தேவதை சரா – என்று எழுதி ராகவ் சிக்னேச்சர் போட்டிருந்தான். புடவைப் பார்ப்பதற்கு நைசாகவும் அதே சமயம் கனம் கம்மியாகவும், உடுத்தினால் transparent ஆக இல்லாத விதமாகவும், கூல் effect குடுப்பது போல் இருக்கும் என்று அந்த புடவையின் தன்மையைப் பற்றி அந்த கவரில் படித்து தெரிந்து கொண்டாள். உற்சாகமாய் பிரித்துப் பார்த்தாள், வானத்தின் நீல நிறம் காட்டிலும் சற்று dark ஆக இருந்தது புடவையின் நிறம். அதில் அழகாக சிறிய பளபளக்கும் கல் வைத்து design செய்யப்பட்டிருந்தது, இன்னும் ஏராளமான புதிய விஷயங்கள் அந்த புடவைக்கு சிறப்பம்சம் சேர்த்தது. சங்கீதாவுக்கு தனது குழந்தைகள் தூங்கும் அறைக்கு சென்று night lamp on செய்து அங்குள்ள கண்ணாடியின் முன்பு இந்த புடவையை கட்டிப் பார்க்க வேண்டுமென்று தோன்றியது.
அப்போது பீப் பீப் என்று sms வர எடுத்துப் பார்த்தாள் “message from SH” என்று இருந்தது.. அதில்.. “Is it right time to talk honey?” என்று இருந்தது.. “நீ எதையும் permission கேட்டு செய்யுற ஆளோ?” – என்று reply செய்தாள். சில நொடிகளுக்கு பிறகு “என் மேல் விழுந்த மழைத் துளியே” என்று சங்கீதாவின் மொபைல் சிணுங்க கண்ணாடியின் முன் வேகமாக ஒரு சுத்து சுத்தி கூந்தல் காற்றில் ஆட தன் தேவனின் குரல் கேட்க ஆவலுடன் phone attend செய்தாள். ஹலோ ஸ்வீட் ஹார்ட்” – தனக்கே உரிய அந்த வசீகர குரலில் பேசினான். “ஹலோ ஹணி” “என்ன செய்யுற இப்போ?” “நீ குடுத்த புடவைய பார்த்துட்டு இருக்கேன்.” “சும்மா பார்த்துட்டு மட்டும்தான் இருக்கியா?” “கட்டி பார்த்துக்குட்டு இருக்கேன் டா…” “ஒஹ்ஹ் சாரி அப்போ நான் ரூம் விட்டு வெளியே போயிடுறேன்….” “ஏய் naughty… நீ phone ல தான் இருக்கே, ரூம்குள்ள கிடையாது. இங்கே மட்டும் இருந்திருந்தால் நானே புடிச்சி வெளியே தள்ளி இருப்பேன். ஹா ஹா..” “ஹா ஹா.. சரி சரி கட்டி பார்த்தாச்சா?” “ஹ்ம்ம்.. பார்துக்குட்டே இருக்கேன்….” – இந்த புடவையை அணிந்தால் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில் சற்று அவசரமாகவே கட்டினாள். இன்றுவரை எத்தினையோ புடவைகள் கட்டினாலும் இப்போது கட்டிப் பார்க்கும் போது கண்ணாடியில் சாராவின் முகத்தினில் ஒரு விதமான அழகிய வெட்கம் தெரிந்தது. காரணம் ஒரு புறம் தன் மணம் விரும்பும் காதலன் பேசிக்கொண்டிருக்க அதே சமயம் மற்றொரு புறம் புடவையைக் கட்டிகொண்டிருப்பது இந்த தேவதைக்கு சற்று கூச்சத்தை ஏற்படுத்தியது. டக்கென ஒரு நிமிடம் “ஹாஹ்” என்று குறைவான சத்தத்தில் கூச்ச சிரிப்பைக் குடுத்தாள். “என்ன ஆச்சு? எதுக்கு சிரிப்பு?. புடவை சரியா இல்லையா?” “No no, I just love the saree, நான் வேற எதுக்கோ சிரிச்சேன் டா..” “ஹா ஹா.. கவல படாத சரா, நான்தான் சொன்னேனே ரூம் விட்டு வெளியே போயிடுறேன்னு. அதையே நினைச்சிட்டு இருந்தா உனக்கு சிரிப்புதான் வரும்.” “ஹையோ…., ஐயாவுக்கு மனசுல ரொம்பதான் நினைப்பு. நான் ஒன்னும் அதெல்லாம் நினைக்கல.” – இப்படி பேசிவிட்டு வாயை மூடி ராகவின் reaction எப்படி இருக்கும் என்று எண்ணி சத்தம் இல்லாமல் வயிறு குலுங்க சிரித்தாள் சரா.
“சரி சரி… என்னை ஒட்டினது போதும், நாளைக்கு எனக்கு ஏதோ surprise தரேன்னு சொன்னியே? என்னது அது?” “ஹலோ Mr.Sweet CEO. பொம்பளைங்க வாய் பொதுவா ஒட்ட வாய்தான் ஆன நான் அப்படி இல்ல, நீ எப்படி உன் surprise சொல்ல மாட்டியோ அதே மாதிரி நானும் சொல்ல மாட்டேன்.” – ( surprise எல்லாம் குடுக்க நிஜம்மா என் கிட்ட ஒன்னும் இல்லடா.. என்னை இன்னும் நம்பிக்குட்டு இருக்கியேடா லூசு?” என்று கண்ணாடியின் முன் மனதுக்குள் எண்ணி வாயில் விரலைக் கடித்து சிரித்துக் கொண்டாள்.) “நீ கொஞ்சம் அடம் பிடிக்குற டைப் டி ச்ச..?” “ஹா ஹா…. ரொம்ப ரொம்ப அடம் பிடிப்பேன்….” “cool…. எனக்கு அடங்காத குதிரைதான் ரொம்ப பிடிக்கும்.” “ஹா ஹா….. ஹேய், dont get naughty….” – பேசிக் கொண்டிருக்கும்போது மதியம் ரம்யா குடுத்த மருதாணி சங்கீதாவின் handbag ல் இருந்து வெளியே தன் தலையை நீட்டி அவள் கண்ணில் பட, சட்டென ஒரு நொடி தீப்பொறி போல் மனதில் ராகவ்க்கு ஒரு புது surprise குடுக்கும் எண்ணம் தோன்றியது சங்கீதாவுக்கு. “actually உனக்கு நான் ஒரு surprise தரத்தான் போறேன்..” “அதான் ரொம்ப நேரமா சொல்லுறியே… அது என்னன்னு சொல்லேன்?” “Wait till tomorrow my sweet heart. சரி நான் இப்போ phone வைக்குறேன். நாளைக்கு காலைல sharp அ 10 மணிக்கு எனக்கு வண்டி அனுப்பிடு..சரியா?” “நான் வேணும்னா 9 மணிக்கு அனுப்பவா?” “ஹேய்… எனக்கு வீட்டுலயும் வேலை இருக்குடா.. சில விஷயங்கள முடிசிட்டுதான் உன் IOFI consultation வேலைய பார்க்க முடியும்.” “consultationக்கு மட்டுமே full டைம் ஒதுக்கிடாதே, கொஞ்சம் இந்த மக்கு ராகவ்க்கும் டைம் ஒதுக்கு.” “உனக்காக டைம் ஒதுக்குன்னு சொல்லு ஒத்துக்குறேன், ஆனா உன்னை மக்குன்னு சொல்லாத, உன் மூலைய வெச்சி உலகத்துல முடியாதது எதெல்லாம் இருக்குன்னு லிஸ்ட் போட்டு குடுத்தா ஒன்னு ஒன்னுத்தயும் என்னால மட்டும்தான் முடியும்னு சாதிச்சி காட்டிடுவடா மை ஸ்வீட் ராஸ்கல்.” “ஹா ஹா… board meetting ல என்னை மத்தவங்க புகழுறதை விடவும் நீ குடுத்த இந்த பாராட்டு செம நச்சுன்னு இருக்கு சரா.. இதுக்காகவே நான் அந்த surprise என்னன்னு உனக்கு சொல்ல ஆசைப் படுகிறேன்….” – உணர்ச்சி வசப் பட்டு வாய் வரை வார்த்தைகள் வந்தது ராகவ்க்கு.. “ஹ்ம்ம்…. சொல்லு சொல்லு சொல்லு….” – சங்கீதா அடக்க முடியாத ஆர்வத்தில் கேட்டாள்…. “ஹ்ம்ம்.. அது வந்து… வேணாம், நேர்லயே வந்து பார்த்துக்கோ… சொல்ல மாட்டேன்.” “சப்.. போடா..” “ஹா ஹா… சரி நான் இப்போ வைக்குறேன், ரெஸ்ட் எடுத்துட்டு காலைல 10 மணிக்கு வண்டி வரும், கிளம்பி வா. மத்ததெல்லாம் நேர்ல பேசிக்கலாம்… good night honey.” “good night sweet heart, I love you so much. ummaahh…” “my god….நம்ப முடியல… இன்னொரு தடவ அந்த ummaahh கிடைக்குமா? ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்….” “ஹா ஹா…. ச்சீ போடா…. நாளைக்கு பார்க்கலாம். வைக்குறேன்.” சுத்தமாக மணம் இன்றி இருவருடைய விரல்களும் அவரவர் phone ல் உள்ள cancel பட்டனை அழுத்தியது. ராகவ் குடுத்த புடவையை அடுத்த நாள் காலை IOFI க்கு கிளம்பும்போது கட்டிக் கொண்டிருந்தாள் சங்கீதா. அதற்கு பொருத்தமான blouse அணிந்து வழக்கம் போல இல்லாமல் தலை முடியை freeயாக விட்டு நடுவில் வகிடு எடுப்பதற்கு பதிலாக பக்கவாட்டில் வகிடு எடுத்து கொஞ்சம் hair dryer உதவியால் முடியின் நுனியில் curly ஸ்டைல் செய்து கொஞ்சம் வித்யாசமான designer வகை வளையல்களை அணிந்திருந்தாள். தன் காதலனுக்கு காண்பிக்கப் போகும் surprise எண்ணி மகிழ்ந்தாள். நேரம்: காலை 10:00 மணி. டிங் டிங்…. – calling bell சத்தம் கேட்டு விரைந்தாள். வெளியே நின்றது டிரைவர் தாத்தா அல்ல, குமார். “வாங்க.. ராத்திரி எங்கே தங்கி” – சங்கீதா பேசி முடிப்பதற்குள் குறுக்கிட்டான். “எங்கயோ தங்கினேன், தயவு செய்து என்னை எதுவும் கேட்க்காத. நீ உன் வேலைய பாரு” – சங்கீதா அவன் முகம் கொஞ்சம் அதிகம் வேர்த்திருப்பதை கவனித்தாள். குமாரிடம் மீண்டும் ஏதோ கேட்க முனையும்போது மீண்டும் “டிங் டிங்” சத்தம்… “என்ன மேடம்.. ரெடியா?” – என்று டிரைவர் தாத்தா வாசலில் நின்று கேட்க.. “இருங்க வந்துடுறேன்.” – என்று சொல்லிவிட்டு குமாரை ஒருமுறைப் பார்த்தாள். அவன் தன் அறைக்கு சென்று கதவை “டமால்” என்று பலமாக சத்தம் வரும்விதம் சாத்திக் கொண்டான். “எதுவும் சொல்லாமல் சங்கீதாவும் அங்கிருந்து கிளம்பினாள்.” IOFI Benz கார் ராகவ் cabin அருகே சென்று நின்றது. சந்கீதாவைப் பார்த்ததும் sheila ki jawani பாடலுக்கு மேடையில் சங்கீதா ஆடியதைப் போல குறும்பாக இடுப்பை ஆட்டி பாவனை செய்து “ஹாய் சங்கீ” என்று முக மலர்ச்சியுடன் சிரித்து வரவேற்றாள் சஞ்சனா. “ஹா ஹா… போதும் நிறுத்துடி, எங்கே ராகவ்?” “வர வர IOFI உள்ள வந்தாலே எடுத்தவுடன் ராகவ் ராகவ் ராகவ், ஏன் எங்க முகம் எல்லாம் உங்க கண்ணுக்கு தெரியலையா?”
“ஹேய்…. அப்படி இல்லடி இன்னைக்கி consultation இருக்கு, அதான்..” “சரி சரி புரியுது, அய்யா மீட்டிங் ல இருக்காரு, கொஞ்சம் இருங்க….” – மீண்டும் குறும்பாக சிரித்து சொல்லிவிட்டு சென்றாள். சஞ்சனா ராகவின் meeting அறையை விட்டு வெளியே வந்து சங்கீதாவை உள்ளே அழைத்தாள். “நல்ல ஜில்லென்று AC காற்றும், மேல்தரத்து மஞ்சள் விளக்கு வெளிச்சம் கொண்ட அதி நவீன மர வேலை பாடுகள் கொண்ட மேஜைகளும், நாற்காலிகளும் இருந்த அந்த அறைக்குள் சங்கீதா நடந்து வருகையில் ராகவின் கண்களுக்கு உண்மையில் ஒரு தேவதை நடந்து வருவது போல தான் உணர்ந்தான். சங்கீதா உள்ளே சென்றதும் கோட் சூட் உடையில் அமர்ந்திருக்கும் மரியாதை நிமித்தமான மனிதர்கள் அனைவரும் ஒரு முறை தங்களது கழுத்தை நிமிர்த்தி, புருவங்களை உயர்த்தி ஒரு முறைப் பார்த்தால் பத்தாது என்று அவர்களின் கண்கள் கெஞ்சும் விதம் மீண்டும் சிறிது சங்கோஜத்துடன் குனிந்து ஒருவருக்கொருவர் தெரியாத வண்ணம் சரா தேவதையை அவ்வப்பொழுது நோட்டம் விட்டார்கள்.

சங்கீதா - இடை அழகி 68


சரி சொல்லுங்க, காலைல எங்கே போய் இருந்தீங்க மேடம். ராகவ் பார்க்க போய் இருந்தேன்.. – வியர்வைப் பனித் துளிகளை தனது கைக்குட்டையால் நெற்றியில் துடைத்துக் கொண்டே பேசினாள் இந்த தேவதை. “ஒஹ்ஹ்….” – கொஞ்சம் ஓரக்கண்ணால் பார்த்து கிண்டலாய் சிரித்தாள் ரம்யா.. “சப்”… இதோ பார்.. நீ இப்படி எல்லாம் சிரிச்சா நான் அப்புறம் பேசவே மாட்டேன் போ..
“ஹா ஹா.. சரி சரி சொல்லுங்க..” “கொஞ்சம் ஆழமா கீறல் ஏற்பட்டிருக்கு, அவன் நெஞ்சுல மருந்து வெச்சி பிளாஸ்டர் போட்டு இருகாங்காடி. கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சி.” “ஹ்ம்ம்.. ஆமாமாம் உங்களாலதானே ஆச்சு….” – ரம்யாவுக்கு ஏதோ சங்கீதாவை வெருப்பேத்துவதில் சின்ன சுகம்.. இதைக் கேட்டவுடன் கோவத்தில் சங்கீதா அப்படியே சாப்பிட்ட கையுடன் எழுந்து தட்டை எடுத்துக் கொண்டு நடக்க…. “அய்யோ ஒரு நிமிஷம் இருங்க, ஐஅம் சாரி, ஐஅம் சாரி….” – சற்று பாடுபட்டு சங்கீதாவின் கையைப் பிடித்து மீண்டும் அமரவைத்தாள் ரம்யா. கண்னங்கள் சிவந்திருந்தது, நெற்றி இன்னும் வேர்த்து இருந்தது இந்த தேவதைக்கு. “நானா போய் அவன சாவி எடுத்து நெஞ்சுல குத்திக்க சொல்லி சொன்னேன். கொஞ்சமாவது அறிவு இருக்கணும், அந்த கோபிய சும்மா ஓட சொல்லி இருந்தா கூட போதும், பெரிய இவனாட்டம் சாவிய எடுத்து குத்திக்குட்டான் ராஸ்கல்.” – ராகவ் மீது இருக்கும் காதல் காரணமாக கொண்ட கோவத்தில் சகஜமாக பேசிவிட்டாள் சங்கீதா. சில நொடிகளுக்கு பிறகு ஏன் இப்படி பேசினோம் என்றெண்ணி ரம்யாவின் முகம் பார்ப்பதைத் தவிர்த்து மெளனமாக சாப்பிட ஆரம்பித்தாள். உள்ளே வரும்போது இருந்த முகத்தின் பிரகாசத்தையும், ராகவ் பத்தி பேசும்போது சங்கீதாவின் முகத்தில் மாறுபடும் உணர்வுகளையும் ரம்யா கவனிக்க தவறவில்லை. பட படவென ராகவ் பத்தி பேசிய பின்பு ரம்யா ஒன்றும் பேசாமல் இருப்பதைக் கண்டு சற்று சங்கோஜமானது சங்கீதாவுக்கு.. என்னடி? பேசு ஏதாவது, நான் ஏதாவது தேவை இல்லாம கோவப் பட்டிருந்தா சாரி – என்றாள் சங்கீதா.. ச்ச…. ச்ச…. என்ன மேடம் என் கிட்ட போய் formal அ பேசுறீங்க. free யா விடுங்க. உங்களுக்கு மனசளவுல கொஞ்சம் relaxation வேணும். நான் சொன்னா மாதிரி வேணும்னா 2 நாள் லீவ் எடுங்க – ரம்யா பேசும்போது சங்கீதா குறுக்கிட்டாள். எனக்கு relaxation வேலையிலையும் என் மனசுக்கு பிடிச்சவங்க கூட பேசுறதுலையும்தான். வீட்டுல இல்ல. அப்படியே இருந்தாலும் அது என் பசங்களோட மட்டும்தான். actually நான் இன்னைக்கி காலைல அவனை பார்க்குற idea ல இல்ல, ஆனா… ஆனா..? என்ன சொல்லுங்க மேடம்.. காலைல கொஞ்சம் மணசு சரி இல்ல. அதான் நேரா வேலைக்கு வர்ரத விட கொஞ்சம் ராகவ் கிட்ட பேசிட்டு வரலாம் னு தோணுச்சி. ஒஹ், ஏன் எங்க கிட்ட எல்லாம் பேசக் கூடாதா? இதற்கு சங்கீதாவிடம் இருந்து மௌனம்.. மீண்டும் ஏதோ கொஞ்சம் தவறாக கேட்டு விட்டோமோ என்று எண்ணி ரம்யா பேச்சை மாற்றினாள். “சரி சரி விடுங்க மேடம்.. இப்போ கொஞ்சம் relaxed இருக்கீங்களா?” “ஹ்ம்ம்..” – சாப்டுக்கொண்டே தலையை மெதுவாக ஆட்டினாள். இப்போது ஏனோ திடீரென மனதில் ராகவிடம் கூறிய காதலை எண்ணினாள் சங்கீதா, அப்போது…. “என்னைப் பத்தி நீ என்ன நினைக்குற ரம்யா?” ஹா ஹா என்ன இது திடீர்னு புது கேள்வி? சப்.. சொல்லுடி.. – சத்தமே இல்லாமல் ஒரு பெருமூச்சு அவளிடம். “ஹ்ம்ம்… எந்த ஒரு விஷயத்தையும் ஒரு தடவைக்கு ரெண்டு தடவ யோசிப்பீங்க. எதையும் டக்குன்னு செய்ய மாட்டீங்க? நல்லா ஆழ்ந்து சிந்திச்சி முடிவு எடுப்பீங்க. ஆனா அதையும் சீக்கிரமாவே எடுப்பீங்க. கடைசியில எடுக்குற முடிவு உங்க மனசாட்சிக்கு விரோதமா இருக்காது. முக்கியமா இன்னொன்னு சொல்லணும். என்னது? – பார்வையில் ஆச்சர்யகுரியுடன் கேட்டாள் சங்கீதா. உங்க முடிவு முழுக்க முழுக்க உங்க மனசளவுல யோசிச்சி எடுக்குற முடிவா அமையும். யாருடைய தேவை இல்லாத advice ம் காதுல வாங்கிக்காம எப்போவும் சொந்தமாதான் முடிவு எடுப்பீங்க. அதே சமயம் அது தப்பான முடிவாவும் இருந்ததில்லை. ஹ்ம்ம்… வேறென்ன விட்டுட்டேன்.. (சில நொடிகளுக்குப் பிறகு தொடர்ந்தாள்).. ஆங்.. முடிவு எடுத்த பிறகு வீணா மனசை போட்டு குழப்பிக்க மாட்டீங்க. எதையும் தைரியமா ஒரு கை பார்ப்பீங்க. you will take the perfect decision at the end.” – என்று ரம்யா கூறியதும் சங்கீதாவின் முகத்தில் ஒரு மௌனமான புன்னகை தோன்றியது. “சரி ஏன் இதை கேட்டீங்கன்னு சொல்ல முடியுமா? – என்றாள் ரம்யா..” “ஒன்னும் இல்ல, சும்மா திடீர்னு கேட்கணும்னு தோணுச்சி. என்னைப் பத்தி மத்தவங்க என்ன நினைக்குறாங்கன்னு சொல்லி கேட்கனும் போல இருந்துச்சி. அதான்.”
“ஹலோ…. நான் உங்க friend, என்னை ஏன் மதவங்கன்னு சொல்லி ஒதுக்குறீங்க?” “தெரியும் டி, அதான் உன் கிட்ட மட்டும் வெளிப்படையா நானே கேட்டு தெரிஞ்சிகுட்டேன். இல்லைனா இப்படி வாய் பேசுற ஜென்மமா நான். ஹா ஹா – தன்னைத் தானே கிண்டல் அடித்துக் கொண்டாள் சங்கீதா.” ரம்யா பேசியது அனைத்தையும் கேட்டு முடித்தவுடன் சாப்பாடு தட்டை wash areaவில் போட்டுவிட்டு தன் இருக்கைக்கு செல்வதற்கு முன் ரம்யாவிடம் இருந்து தனியே விலகி வந்து ராகவ்க்கு தன் mobile எடுத்து “I Love You so much sweetheart” என்று sms அனுப்பினாள் ராகவின் தேவதை. (beep beep) message from SH (sweet heart) – “SH” என்று சங்கீதா, ராகவின் பெயரை மொபைலில் store செய்திருந்தாள். அதில் இருந்த message: “I born in this world only for you sara” என்றிருந்ததைப் பார்த்து ஒரு நொடி சந்தோஷத்தின் உச்சத்தில் லேசாக கண்களின் ஓரத்தில் நீர்த்துளிகள் போங்க அதை யாருக்கும் தெரியாமல் முந்தானை நுனியால் லேசாக துடைத்துக் கொண்டு மனதில் சொல்லிக் கொண்டாள் “you are crazy about me da…. my sweet rascal”.
மீண்டும் பீப் பீப் என்று சத்தம் கேட்க phone எடுத்து ப் பார்த்தாள். “No reply honey?” என்று இருந்தது.. அதற்கு சங்கீதா “little busy da kanna, I will call you after going home” என்று message அனுப்பினாள். சற்று நிமிடம் கழித்து “என் மேல் விழுந்த மழைத் துளியே” என்று மெதுவான சத்தத்தில் சங்கீதாவின் phone சிணுங்க உடனே அதை எடுத்து attend செய்தாள். காரில் டிரைவர் தாத்தா ஓட்டி வரும்போது ராகவ் நம்பருக்கு மட்டும் அவள் வைத்த ரிங்டோன் அது. உற்சாகமாய் எடுத்து அட்டென்ட் செய்தாள்.. “ஹலோ..” – இருக்குமிடம் bank என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டு அடக்க முடியாத சந்தோஷமாகவே இருந்தாலும் கொஞ்சம் அடக்கமாக சிரித்தாள் சங்கீதா. “ஹ்ம்ம்.. பேசுறது என்னோட சரா வா?” – கட்டிலில் ஆயாசமாக சாய்ந்து பேசினான் ராகவ். “ஹ்ம்ம்…. ஆமாம்…” – சங்கீதாவின் வாய் அருகில் mike வைத்தால் கூட கேட்காது. அவ்வளவு மெலிதான குரலில் பேசினாள் தனது தேவனுடன். “இப்போ என்ன பண்ணுற சரா?” – காதலில் விழும் அனைவரும் கேட்க்கும் அழகான முட்டாள்தனமான கேள்வி இது. ராகவ் மட்டும் விதிவிளக்கா என்ன? “ஹ்ம்ம்…. வேலை பார்க்குறேண்டா கண்ணா….” – வேறு யாராவது (நண்பர்கள் உட்பட) இதைக் கேட்டால் “எனக்கு தெரிஞ்சி இப்போதிக்கு உங்கள போல வெட்டியா இல்லைன்னு நினைக்குறேன்.. do you have anything important to say” என்று கூறும் தேவதை தன் தேவனுக்கு கண்ணும் கருத்துமாக கொஞ்சி அக்கறையாக பதில் கூறினாள். – உலகில் காதலுக்கே உரிய தனி power அது. “சரி, நாளைக்கு உன்னோட scehdule IOFI ல இருக்கு தெரியும் இல்ல?” “ஒஹ்ஹ்… ஆமா நியாபகம் இருக்கு” – சொல்லும்போது தனது dairy எடுத்து check பண்ணி பார்த்தாள். full day IOFI schedule என்று இருந்தது. அதைப் பார்த்து மென்மையாக புன்னகைத்துக் கொண்டாள். “நாளைக்கு உனக்கு நான் ஒரு surprise வெச்சி இருக்கேன்” என்றான் ராகவ். “என்னது?” “வந்து பாரு சொல்ல மாட்டேன்.” “ஏன்டா இப்படி கொல்ற, சொல்லேண்டா?” “ஹா ஹா….” “சிரிக்காத டா சொல்லு….” “ராகவிடம் இருந்து மௌனம்….” “நானும் உனக்கு ஒரு surprise வெச்சி இருக்கேன், சொல்லவா?” என்றாள் சங்கீதா. “ஹா ஹா.. இப்படி சொல்லி பழி வாங்கலாம் னு நினைக்காத, கண்டிப்பா நான் என்ன surprise னு கேட்க மாட்டேன், அதுக்காக காத்து இருக்குறதுல கிடைக்குற சந்தோஷம் ரொம்ப ரொம்ப சுகம்.. அதை அனுபவி சரா, நாளைக்கே ரெண்டு பேரும் நம்ம surprise என்னன்னு தெரிஞ்சிக்கலாம். ஒகவா?….” (உண்மையில் சங்கீதாவிடம் ராகவ் க்கு surprise தர ஒன்னும் இல்லை, அவனுடைய வாயில் இருந்து பதில் வாங்கவே வெறுமென போட்டு வாங்க பார்த்தாள் ஆனால் ராகவ் கவிழவில்லை. “சப்” என்று உச்சுக் கொட்டிக் கொண்டாள் சரா..) மெளனமாக இருக்கவே “என்ன ஒகவா?” என்று மீண்டும் கேட்டான் ராகவ்.. “ஹ்ம்ம்..” – சற்று சந்தோஷமும், ஏமாற்றமும் கலந்து பேசினாள் சங்கீதா…. “சரி அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம், நம்ம டிரைவர் கிட்ட உனக்கு ஒரு கவர் குடுக்கணும் னு சொல்லி இருந்தேனே, கொடுத்தாரா?” “ஆமா குடுத்தார்.” “சரி சரி வீட்டுக்கு போய் பொறுமையா பாரு. carry on with your work. I Love You honey.” “Love you too da sweet heart.” – இருவரும் மணம் இல்லாமல் phone கட் செய்தார்கள். கையில் ஒரு sweet box உடன் சங்கீதாவின் இருக்கைக்கு வந்தார் Mr.Vasanthan. “ஹலோ Sir” – என்றாள் சங்கீதா…. (அகண்ட சிரிப்புடன்….) ஹலோ.. seriously நீங்க தான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போறீங்கன்னு தெரிஞ்சதும் surprising அ இருந்துச்சி. fantastic speech sangeetha. என்னோட wife கூட உங்கள ரொம்ப பாராட்டினாங்க, நேத்து எங்க வீட்டுல அவ தேங்கா பர்பி செஞ்சி இருந்தா, இன்னைக்கி காலைல கண்டிப்பா உனக்கும் நான் ஒரு பாக்ஸ் குடுக்கணும் னு சொல்லி இருந்தா. இந்தாமா வாங்கிக்க.” என்றார்.
“மேடம் க்கு நான் மனசார நன்றி சொன்னதா சொல்லுங்க சார்.” “இன்னொரு நல்ல விஷயம் சொல்ல போறேன்.” “நல்ல விஷயம்னா சீக்கிரம் சொல்லுங்க சார், தாமதிகாதீங்க.. ப்ளீஸ்..” “உங்களுக்கு அடுத்த மாசத்துல இருந்து 40% சம்பளம் அதிகரிக்குறதுக்கு மேலதிகாரிங்க ஒத்துக்கிட்டாங்க. congradulations.” “இதை கேட்டவுடன் மனதுக்குள் சங்கீதாவுக்கு மிதமான சந்தோஷம் தான். காரணம் சம்பளத்தை விடவும் செய்யும் தொழிலில் மண நிம்மதியை தேடுபவள் சங்கீதா.” “உங்க நல்ல மனசுக்கு நன்றி Mr.Vasanthan.” – என்று சுருக்கமாக மரியாதையுடன் சொல்லி அமர்ந்தாள் சங்கீதா. “மாலை நேரம் கிளம்பும் வேலையில் ரம்யா அவளது things அனைத்தும் pack செய்யும் போது அவளது handbag ல் இருந்து ஒரு cone மருதாணியை எடுத்து வந்து சங்கீதாவிடம் குடுத்தாள்.” “இன்னைக்கி காலைல வீட்டுக்கு பக்கத்து கடைல கிளம்பும்போது வாங்கினேன், அப்படியே உங்களுக்கும் சேர்த்து ஒன்னு வாங்கினேன். வச்சிக்கோங்க மேடம். நாளைக்கு பார்க்கலாம் bye.” “thanks டி” – உற்சாகமாய் சொன்னாள் சங்கீதா, மருதாணி என்றால் அவளுக்கு உயிர். அதை பத்திரமாக வைத்துக் கொண்டாள். “ஏய், கோபியை பார்த்தியா டி?” என்றாள் சங்கீதா “இல்லை, ஆளே காணும்” என்றாள் ரம்யா. Mr.unknown number என்று store செய்த நம்பரை டயல் செய்து பார்த்தாள் சங்கீதா. அதற்க்கு “நீங்கள் அழைக்கும் நம்பர் switch off செய்யப் பட்டுள்ளது” என்று மெசேஜ் வர ஒன்றும் புரியாமல் கடவுளிடம் கோபி நன்றாக இருக்க வேண்டுமென்று வேண்டிவிட்டு கிளம்பினாள். மாலை traffic ஐ சமாளித்து ஒரு வழியாக வீட்டை சென்றடைந்தாள் சங்கீதா. ரஞ்சித்தும் ஸ்னேஹாவும் அமைதியாய் விளையாடிக் கொண்டிருந்தார்கள். வழக்கம் போல சங்கீதா வர தாமதம் ஆகும் தருவாயில் நிர்மலா இவர்களுக்கு வீட்டை திறந்து விட்டு குடிக்க ஒரு டம்ளர் பால் குடுப்பது வழக்கம். இந்த முறையும் அப்படியே செய்திருந்தாள் நிர்மலா.

சங்கீதா - இடை அழகி 67


என் காதலி எப்படி இருக்கணும் னு யோசிச்சேன் தெரியுமா? எப்படி? – சற்று பணித்த கண்களுடன் குனிந்து அவனது பதிலை மிகவும் ஆர்வமாக எதிர்நோக்கினாள். “என் மனசுல இடம் பிடிக்குறவ எனக்கு வெறும் காதலியா இருக்கக்கூடாது, அக்கறை காமிக்குறதுளையும் அண்பு செலுத்துறதுலயும் அவ எனக்கு இன்னொரு அம்மாவா இருக்கணும் னு தான். அந்த உணர்வு எனக்கு உன் கிட்ட கிடைச்சுது சங்கீ..” இப்போது அவனை நிமிர்ந்து பார்த்தாள், இந்த வார்த்தைகளைக் கேட்டபோது ஒரு நிமிடம் தன்னையும் அறியாது சங்கீதாவின் கண்களின் ஓரம் லேசாக நீர் வர, உடனே சந்கோஜத்தில் திரும்பிக் கொண்டு சுண்டு விரலால் துடைத்துக் கொண்டாள். அதை ராகவ் கவனித்தான்.
என்னாச்சு சங்கீதா? ஒன்னும் இல்ல ராகவ்.. நான் உண்மையா இங்கே வந்ததுக்கு கார…காரணம்.. – உள்ளுக்குள் எழும் மனக் குமுறல்களை அடக்கியதில் குரல் உடைய தொடங்கியது சங்கீதாவுக்கு.. காரணம் நீ என்னை விட வயசுல சின்னவன், உனக்கு கொஞ்சம் எடுத்து சொல்லி புரிய வைக்கலாம் னு நினைச்சேன். என்னை விடு, நான் எப்பவோ என் பல கனவுகளை வாழ்க்கைல தொலைச்சவ, ஆனா உனக்கு நிறைய வயசு இருக்கு, உன் மனசுல ஆசைய உண்டாக்கி உன் வாழ்கைய பாழாக்க விரும்பல, அது எனக்கு ஒரு குற்ற உணர்சிய உண்டாக்கும் டா. அதான் சொல்லிட்டு போக வந்தேன்.. முடிஞ்ச வரைக்கும் உன் மனசை மாத்திக்கோ டா ப்ளீஸ்.. நேத்து ராத்திரி அழுதீங்களா? நான் என்ன பேசுறேன் நீ என்ன பேசுறா? சப்… கேட்ட கேள்விக்கு பதில் வேணும்…. “ஆமாம்.. என் கண்ணு லேசா வீங்கி இருக்குரதைப் பார்த்து கேட்க்குரியாக்கும்? இஷ்ம்ம்” – லேசாக கண்ணீர் வந்ததில் விசும்பி மூக்கை உறிஞ்தாள் சங்கீதா. “ஹா ஹா confirmed” – என்று சிரித்துக் கொண்டே சொன்னான் ராகவ். “என்ன confirmed? குதர்க்கமா பேசாத” – கண்ணைத் துடைத்துக் கொண்டு பேசினாள் சங்கீதா.. “மனசளவுல உங்களால என்னை மறக்க முடியாது, அதுக்கான ஆதாரம்தான் நேத்து ராத்திரி நீங்க அழுத அழுகை.” ஒன்றும் பதில் பேசவில்லை சங்கீதா…. “சங்கீதா…. வாழ்க்கை ல கலாச்சாரம் முக்கியம்தான், ஆனா பாவம் மணசு என்ன செய்துச்சி. ஒவ்வொரு தடவையும் அதை அடக்கி அடக்கி அதோட ஆசைகள் எல்லாத்தையும் மண்ணோட மன்னா புதைச்சி வெச்சி நாம நம்மளையும் சேர்த்துதானே மன்னாக்கிகுறோம். இந்த நிமிஷம், இந்த ஒரு நொடி உங்க மனசுல கை வெச்சி கண்ணை மூடி சத்தியமா நிஜம் என்ன, உண்மை என்ன னு யோசிச்சி பாருங்க. உங்க கண்ணை மூடி என்னை ரெண்டு நிமிஷமாவது மறக்க முடிஞ்சி வெறும் உங்க குடும்பம், புருஷன், பசங்க ன்னு உங்களால நினைக்க முடியுதான்னு எனக்கு சொல்லுங்க…. I will wait sangeethaa…. – என்று ராகவ் சொல்ல இவன் காதலை ஒப்புக்கொள்ளவேண்டும் என்று அவள் ஆழ் மனது கதற ஆரம்பித்தது அதே சமயம் மறு பக்கம் வாழ்க்கை இந்த உலகில் ஒரு முறைதான், ஏற்கனவே நான் இழந்ததை கடவுள் எனக்கு திரும்பவும் வேறு ஒரு ரூபத்துல குடுக்குறார், அதை நான் இப்போவும் நிராகரிக்குறதா? இல்லை என் சந்தோஷத்துக்காகவும் நிம்மதிக்காகவும் இதை நான் ஏற்க்கனுமா?…. மீண்டும் மணப் போராட்டம்….. சில நிமிடங்கள் அப்படியே அமர்ந்தவாறு யோசித்தாள். என்னதான் யோசித்தாலும், முயற்சி செய்தாலும் அவள் மனதில் இருந்தும் கண்களில் இருந்தும் ராகவை நீக்குவதேன்பது அவளாள் சத்தியமாக முடியாத காரியம் என்று அவள் மனது தெளிவாக கூறியது. “என்னாச்சு சங்கீதா…” – என்று ராகவ் கேட்க, தனது டைரியில் பேனாவால் எழுத தொடங்கினாள். ஒரு ஐந்து நிமிடம் சிந்தித்து ஏதோ ஒன்றை எழுதினாள் ராகவ் அவள் எழுதும் வரைக் காத்திருந்தான். சங்கீதா எழுதி முடித்த கடிதத்தை டைரியில் இருந்து கிழித்து மடித்து ராகவின் சட்டை பாக்கெட் உள்ளே வைத்தாள் – அப்போது இருவரும் ஒருவருக்கொருவர் மௌனமான சிரிப்பில் கண்களால் ஆயிரம் வார்த்தைகளைப் பரிமாறிக் கொண்டார்கள். கடிதத்துக்கு பதில் வாயில இருந்து வரும்னு பார்த்தேன், கடிதத்துலையே வருதே? – என்று சொல்லி சிரித்தான் ராகவ். சரி, நான் எழுதின கடிதத்தைப் பத்தி ஒண்ணுமே சொல்லலையே? – என்று ராகவ் கேட்க சங்கீதா அந்த கடிதத்தை அருகில் உள்ள தனது handbag ல் இருந்து எடுத்து பிரித்து அவன் எதிரில் அவன் எழுதிய வார்த்தைகள் மீது ஒரு முத்தம் குடுத்து அவனை ஒரு நொடி மட்டுமே நேரில் பார்த்து மேற்கொண்டு பார்க்க முடியாமல் வெட்கத்தில் கீழே பார்த்து சிரித்தாள். ராகவால் இதை நம்ப முடியவில்லை. மகிழ்ச்சியின் உச்சத்துக்கு சென்றான் இப்போது TV யில் ஒரு (Click)காட்சி ஓடிக்கொண்டிருந்தது, அந்த காட்சியில் வரும் அழகான முதிர்ச்சியான மங்கை ஒரு வாலிபனின் திறமையைக் கண்டு வியந்து பாரட்டுகிறாள் -அமைதியாய் இருந்த இருவரும் ஒரு நிமிடம் ஒருவரை ஒருவர் பார்த்து மென்மையாக சத்தம் இன்றி சிரித்தார்கள். “பாராட்டு வெறும் கடிதத்துக்கு தானா? அதை எழுதினவனுக்கு இல்லையா? – என்று ராகவ் அந்த காட்சியில் வரும் வாலிபனைப் போல கேட்க, சங்கீதா மெல்ல அருகே வந்து அவனின் தலையில் மென்மையாக ஒரு முத்தம் குடுத்தாள். அப்போது ராகவ்க்கு ஒரு நொடி உடல் முழுதும் புல்லரித்தது.நான் சொல்ல நினைச்சதெல்லாம் உன் பாக்கெட் ல இருக்குற கடிதத்துல எழுதி இருக்கேன் டா.. நான் இங்கே இருந்து கிளம்பினதுக்கு அப்புறம் படி ப்ளீஸ். என்று சொல்லிவிட்டு கிளம்பும்போது கதவின் அருகே சென்றவள் ஒரு நிமிடம் நின்று ராகவின் முகத்தைத் திரும்பிப் பார்த்து சிரித்தாள். ராகவும் அவனுடைய தேவதையின் சிரிப்பை தரிசித்தான். அவள் குடுத்த கடிதத்தை தனிமையில் பிரித்து உற்சாகமாய் படிக்க தொடங்கினான்..
அதில்….. என்னை முழுதாய் திருடியவனே…. உன்னைப் போல எனக்கு வர்னிச்சி எழுத வராது டா.. ஆனா மனசுல உள்ள உண்மைய சொல்லுறேன்…. வாழ்க்கையில் நான் தொலைத்த இன்பங்கள், தேடும் சந்தோஷங்கள், வேண்டிய நிம்மதி, விரும்பும் அமைதி… இவை அனைத்தும் எனக்கு உன்னிடம் இருந்துதான் கிடைக்குது. எவ்வளவோ முயற்சி பண்ணாலும் என்னதான் எனக்கு நானே விளக்கங்கள் குடுத்தாலும் என்னால் உன்னை மறக்க முடியாது. நீ சொன்ன மாதிரி உன் உணர்வுகளும் அன்பும் என் மனசை உரசுறதை நானும் நிறைய நேரங்களில் மௌனமாய் அனுபவித்திருக்கிறேன். அந்த ரகசிய சந்தோஷத்தை இன்று தான் முதலில் உனக்கு தெரியப் படுத்துகிறேன். மனசார சொல்லுறேண்டா….. உன் காதல ஏத்துக்க பெருமை படுகிறேன். Yes….. I am in Love with you with immense proud. (தமிழில்: ஆம், நானும் உன்னை காதலிக்கிறேன்… உன் காதலை ஏற்றுக் கொள்ள நான் அளவிலா பெருமை படுகிறேன்.) -இப்படிக்கு உன் சரா.. இந்த கடிதத்தைப் படித்து முடித்துவிட்டு கட்டிலில் இருந்து எழுந்து hooohooo bingo yes yes yes…. ummmmaaahhhhh ummmaaahhhhh ummmaahhhhhh என்று அவளின் கடிதத்துக்கு முத்தங்கள் குடுத்து துள்ளி குதித்தான் ராகவ். இப்போது அவளிடம் இருந்து ராகவ்க்கு sms வந்தது. பார்த்தான்..
(beep beep) message from sangee: “படிச்சிட்டியா டா? …..” (beep beep) message from raghav: “hmm…. படிச்சேன் ஆனா எனக்கு ஒன்னு மட்டும் புரியல”.. (beep beep) message from sangee: “டேய் மண்டு, அதுல என்னடா உனக்கு புரியல” (beep beep) message from raghav: “அதென்னது சரா?” (beep beep) message from sangee: “சொல்ல மாட்டேன்” (beep beep) message from raghav: “தயவுசெய்து சொல்லு சங்கீ ப்ளீளீளீளீளீளீளீளீளீளீளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்….” (beep beep) message from sangee: “நீயெல்லாம் எப்படிடா CEO ஆன மக்கு மக்கு….” (beep beep) message from raghav: “ஆமாம் நான் ஒரு மக்குதான் என் தேவதை தான் எனக்கு எல்லாம் சொல்லித் தரனும்…. சொல்லு….” (beep beep) message from sangee: “ச்சே என் வாயாலேயே சொல்ல வைக்கிறானே….., சங்கீதா + ராகவ் = சரா…. போதுமா…. ச்சீ.. வெட்கமா இருக்குடா, இதுக்கு மேல எதுவும் புரியலைன்னு கேட்காத என் கிட்ட….” அடுத்த மெசேஜ் எதிர் நோக்கி phoneஐ மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தாள். கொஞ்ச நேரம் sms எதுவும் வராமல் இருந்தது ராகவிடம் இருந்து.. அமைதியாய் உள்ளுக்குள் தவித்தாள் சங்கீதா (beep beep) என்று சத்தம் கேட்டவுடன் ஒரு நிமிடம் கார் சீட்டின் நுனிக்கு வந்து உடனே மெசேஜ் பார்த்தாள்.. message from raaghav: “என் தேவதை சராவுக்கு இந்த மக்கு ராகவ் குடுக்கும் இதழோடு இதழ் பதித்த ஆயிரம் முத்தங்கள்….” படித்து முடித்த பிறகு, அப்படியே கத்தி சிரிக்க வேண்டுமென்று இருந்தது சங்கீதாவுக்கு, ஆனால் காரில் செய்ய முடியாததால் அப்படியே கண்களை இறுக்கி மூடி பின்னாடி சாய்ந்து அவளது நினைவில் ராகவை கட்டி அனைத்து அவன் குடுத்த இதழ் முத்தங்களை அவனுடன் பகிர்ந்து கொண்டாள். முகத்தில் அப்படி ஒரு சிரிப்பு. வயிற்றினில் உண்மையாகவே யாருடைய விரலும் இல்லாமல் அப்படி ஒரு கிச்சி கிச்சி உணர்வு வந்தது சங்கீதாவுக்கு. “என்னம்மா ஆச்சு ஏதாவது வயிறு பிரச்னையா soda வாங்கட்டுமா? சீட்டுல முன்னுக்கும் பின்னுக்கும் வந்து போறீங்க?” – என்று டிரைவர் தாத்தா அக்கறையாக கேட்க…. ஒரு நொடி சத்தமாகவே “ஹா ஹா ஹா” என்று சிரித்தாள். “தாத்தா….” “சொல்லுமா….” நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்… கொஞ்சம் ரேடியோ போடுங்க ப்ளீஸ்… – என்று இந்த தேவதை கட்டளை இட்டதும் தாத்தா அடித்து புடித்து ரேடியோவை on செய்தார். அப்போது அதில் வந்த (Click)பாடலைக் கேட்ட போது உண்மையாகவே மனதில் ரொம்பி வழியும் சந்தோஷத்தோடு தனது பருவ உணர்வுகளை தாங்கிய வயதை பின் நோக்கி பயணித்தாள் இந்த தேவதை…. மேடம் bank போகனுமா? இல்லை வீட்டுக்கு போகனுமா? bank க்கு போங்க தாத்தா. தாத்தா ஓட்டும் மிதமான வேகத்தில் ஒரு மணி நேரம் பயணம் செய்திருந்தாலும், ஏதோ பத்து நொடிகளில் bank வந்தது போல் இருந்தது சங்கீதாவுக்கு. மனதுக்குள் காதல் உருவெடுத்து இருக்கும் தாக்கம்!! சங்கீதா இறங்குகையில் டிரைவர் தாத்தா சங்கீதாவை அழைத்தார். “மேடம்..” “என்ன தாத்தா?” “இந்தாங்கம்மா..” “என்னது இது?” “காலைல வண்டி எடுக்கும்போதே நீங்க திரும்பி போகும்போது குடுக்க சொல்லி உத்தரவு. என்னன்னு எனக்கு தெரியாது மா..” ஒரு brown sealed கவரில் IOFI என்று அச்சிடப்பட்டு இருந்தது. கீழே ஏதோ எழுதி ராகவ் என்று கையெழுத்து இருந்தது. அதை தனிமையில் சென்று படிப்போம் என்று எண்ணி தாத்தாவை அனுப்பி வைத்துவிட்டாள் சங்கீதா. “மன்னவன் பெயரை சொல்லி மந்திரம் பாடி வந்தேன்….” – வண்டியில் கேட்ட பாடலை முனு முணுத்துக் கொண்டே முகத்தினில் அதே சிரிப்புடனும் சந்தோஷத்துடனும் உள்ளே சென்றாள்.
உள்ளே வந்தவள் ரம்யாவின் இருக்கையில் அவளுடைய handbag இருப்பதைப் பார்த்தாள். சாப்பாடு நேரம் நெருங்கி இருந்தது. இருப்பினும் ஒரு மணி நேரம் அவளது மேஜையில் அவளுக்கென இருக்கும் வேலைகள் என்னென்ன என்று பார்த்துவிட்டு ரம்யாவுக்கு phone செய்தாள். ரம்யாவின் phone ரிங்டோன் அருகில் கேட்பது தெரிந்து நிமிர்ந்து பார்த்தபோது “ஹாய் மேடம்….” என்று சிரித்துக்கொண்டே உள்ளே வந்தாள். ஏய் லூசு, எங்கடி போய் தொலைஞ்ச? last one hour நான் உனக்காக waiting. ஹா ஹா…. சரி சரி வாங்க போகலாம். இருவரும் கான்டீன் சென்று அவர்களுடைய வழக்கமான ஜன்னல் ஓர இருக்கையில் சாப்பிட அமர்ந்தார்கள்.

சங்கீதா - இடை அழகி 66


(தமிழில்: (hereafter I will live my life like how I want to lead it & will never allow it in other’s hand & I dont bother about what others think) – என் வாழ்கையை இனி என் விருப்பப்படிதான் வழி நடத்திக் கொள்வேன், யாருக்கும் அதில் குறிக்கிட இனி உரிமை கிடையாது. மற்றவர்களைப் பற்றி எனக்கு கவலையும் கிடையாது.) டிரைவர் தாத்தா மிதமான வேகத்தில் Benz காரை ஒட்டிச்செல்லும்போது பின் இருக்கையில் கண்களை மூடி சாய்ந்து யோசித்துக் கொண்டிருந்தாள். வாய் நிறைய தோழிகளும், கூட்டமும் அவளது நடனத்தை பாராட்டியதை நினைத்து மகிழ்ந்தாள், தொகுத்து வழங்கும்போது ஆங்கிலத்தில் பேசிய உச்சரிப்பை ரொம்பவும் கச்சிதமாக இருந்தது என்று பலரும் பாராட்டியதை எண்ணி சிலிர்த்தாள். பிரபலங்கள் பலர் அவள் கண் முன் நின்று பாராட்டியது அவளுக்கு வாழ்வில் என்றும் மறக்க முடியாத சந்தோஷ பதிவுகள். சிறு வயதில் இருந்து ஒரு முறையாவது நேரில் பார்க்க முடியுமா என்று ஏங்கிய ரஜினியை பக்கத்தில் பார்த்துப் பாராட்டு பெற்றதை எல்லாம் நினைத்து கண்களை மூடி சந்தோஷத்தில் மெளனமாக சிரித்துக் கொண்டாள். இவைகள் அனைத்தையும் எண்ணிக் கொண்டிருந்தவளுக்கு “இதுக்கெல்லாம் காரணம் நீதாண்டா, எனக்குள்ள இருக்குற இன்னொருத்திய எனக்கு காமிச்சிட்டடா, you are simply great da….” என்று அவள் உதடுகள் மெளனமாக ராகவைப் பாராட்டி உச்சரித்துக் கொண்டிருந்தது.
கார் நேற்றைய அலங்காரங்கள் முழுவதுமாய் கலைக்காமல் இருந்த IOFI வளாகத்துக்குள் சென்றது. ராகவின் cabin entrance முன்பு நிறுத்தப் பட்டிருந்த வண்டியின் கதவை சஞ்சனா திறந்து. “வாங்க சங்கீ…. என்ன.. நல்ல தூக்கமா நேத்து….” “ஹ்ம்ம்…. தூக்கம் இல்லை, முழுக்க முழுக்க துக்கம் தான்” – என்றாள் சங்கீதா “ஏன் என்னாச்சு?” “ஒன்னும் இல்ல personal….” – என்று சங்கீதா சொல்ல, நாகரீகமாக மேலும் தொடராமல் நிறுத்திக்கொண்டாள் சஞ்சனா. “ராகவ் பார்க்கணும், எங்கே இருக்கான்?” – ஆர்வமாக அவனது cabin நோக்கி பார்த்தாள் சங்கீதா. அவன் clinic ல இருக்கான்.. – என்று சஞ்சனா சொன்னதும் “clinic அ என்னாச்சு?” – ராகவ் பேசும்போது இதை நம்ம கிட்ட சொல்லவே இல்லையே என்று லேசாக குழம்பினாள். நெஞ்சுல ஏதோ கல்லு கொஞ்சம் குத்திடுச்சாம், சரி நேத்து ராத்திரி படபடக்க ராகவ் என் கிட்ட audiences & celebrities (தமிழில்: பார்வையாளர்கள் மற்றும் பிரபலங்கள்) பார்த்துக்கோ நான் இதோ வந்துடுறேன் ன்னு சொல்லிட்டு அவசர அவசரமா ஓடினான், என்ன விஷயம் மேடம்? – என்று கேட்க.. “அது ஒன்னும் இல்லை சஞ்சு…. சமயம் வரும்போது சொல்லுறேன். இப்போ ராகவ் எங்கே?” “சரி சரி இந்தப்பக்கம் வாங்க” – என்று சொல்லி IOFI வளாகத்துக்குள் இருக்கும் executives personalized clinic உள்ளே அழைத்து சென்றாள். (தமிழில்: executives personalized clinic: உயரதிகாரிகளின் தனிப்பட்ட மருத்துவமனை.)
கதவைத் திறந்ததும் சங்கீதாவுக்கு லேசான மனக் கஷ்டம், காரணம் ராகவின் நெஞ்சில் கெட்டியான பஞ்சு வைத்து மார்பில் பிளாஸ்டர் போடப் பட்டிருந்தது. தலை முடியை free யாக விட்டு hair band போட்டிருந்தாள் சங்கீதா, வழக்கமான குண்டு மல்லியுடன், dark maroon சேலையில் பளிச்சென இருந்தாள். சஞ்சனவுடன் உள்ளே சென்று ராகவ் அருகே அமர்ந்தாள். “ஹாய்… வாங்க சங்கீதா..” – உற்சாகமாய் சொன்னான் ராகவ். “சஞ்சனா we want to have some private time, hope you understand, please” – என்று ராகவ் சொல்ல சஞ்சனா அங்கிருந்து விடைப் பெற்றாள். (தமிழில்: we want to have some private time, hope you understand, please- எங்க ரெண்டு பேருக்கும் கொஞ்சம் தனிமை வேணும் ப்ளீஸ்..) சங்கீதாவின் இடுப்பருகே அவள் சேலை கட்டிய புதிய விதத்தை ராகவ் பார்க்க தவறவில்லை. வழக்கத்துக்கு மாறாக அவள் style இருப்பதைப் பார்க்கையில அவன் காதலை அவள் ஒப்புக் கொள்ள வாய்ப்பிருக்கிறது என்று நம்பிக்கை தந்தது ராகவ்க்கு. அவனது special ரூம் உள்ளே ஒரு சிறிய TV ஒன்று ஓடிக்கொண்டிருந்தது. இருவரும் ஒருவருக்கொருவர் சில நேரம் என்ன பேச ஆரம்பிப்பது என்று தெரியாமல் அமர்ந்திருக்க ராகவ் லேசாக தொண்டையை “க்ஹம்” என்று கரகரத்தான்.. இப்போது சங்கீதாவே ஆரம்பித்தாள். “சொல்லு ராகவ், எது வெச்சி என்னை உன் மனசுல எனக்கு அந்த இடம் குடுத்த?” – வீட்டில் இருந்து கிளம்பும்போது எதில் விட்டாளோ அதில் இருந்து துல்லியமாக ஆரம்பித்தாள் சங்கீதா. “அட…. correct ஆ எங்கே phone ல விட்டீங்களோ அதுல இருந்து ஆரம்பிக்கிரீங்களே? ஹா ஹா” – ராகவ் பேசுகையில் சங்கீதா தன் தலையை குனிந்து வைத்திருந்தாள் நேருக்கு நேர் பார்க்க முடியவில்லை அவளாள். “சப்.. கேள்விக்கு பதில் சொல்லு ராகவ்.” – மீண்டும் முந்தானை நுனியை எடுத்து திருக, அதை ராகவ் கவனிக்கிறான் என்று தெரிந்து அதை கீழே விட்டாள். “ஹ்ம்ம்.. சொல்லுறேன்…. என் வாழ்க்கைல இன்னிக்கி வரைக்கும் எல்லாமே எனக்கு நான் மட்டுமே தான் செஞ்சிக்கிட்டேன். படிப்பாகட்டும், வேலைல முன்னேருறதாகட்டும், என் எதிரிங்க கிட்ட என்னை காப்பதிக்குறதாகட்டும், என் போட்டியாளர்களை சமாளிக்குறதாகட்டும், என் சந்தோஷம், என் தனிமை, என் விருப்பு, வெறுப்புகள், என் ரசனைகள் எல்லாமே ரொம்ப ரொம்ப வித்யாசமானது. எல்லார்கிட்டயும் நட்பா பழகுவேன் ஏன்னா அது என்னோட பதவிக்காக, ஆனா மனசார சொல்லனும்னா என் குணத்தை சரியா புரிஞ்சி நடந்துக்குற பெண் யாரும் என் வாழ்க்கைல இன்னிக்கி வரைக்கும் வரல. “ஆனா உனக்கு இன்னும் வயசு இருக்கு ராகவ்..” – இப்போது ராகவின் முகத்தை நேரில் பார்த்து பேசினாள். ஆனால் அந்த கண்களை மட்டும் அவளாள் முடியாது, அப்படி ஊடுருவிப் பார்த்து மனதின் ஆழத்துக்கு செல்லும் சக்தியுடையது அவன் கண்கள். “வயசு கம்மியா இருக்கட்டும், ஆனா என் கிட்ட ஒரு குணம் இருக்கு, ஒரு விஷயம் புடிச்சி போறா மாதிரி இருந்தா அதை ப் பத்தி நிறைய யோசிச்சி யோசிச்சி பார்ப்பேன், ஒரு தடவைக்கு பத்து தடவ யோசிப்பேன். கடைசியா என்னால அந்த பெண் இல்லாம வாழவே முடியாதுன்னு என்னை உள்ளுக்குள்ள ஏதோ ஒன்னு தள்ளி விடுற அளவுக்கு என் மணசு எப்போ என்னை கட்டாயப் படுத்துதோ அப்போதான் நான் என் காதலை உணரனும் னு யோசிச்சி இருந்தேன். உங்களுக்காக சொல்லல சத்தியமா இன்னிக்கி வரைக்கும் யார் கிட்டயும் எனக்கு இப்படி தோணல. (சில நொடிகள் மௌனத்துக்கு பிறகு….) உங்களைத் தவிர…..” – என்று முடித்தான் ராகவ். சங்கீதாவிடம் ஆழ்ந்த மௌனம்… மனசளவுல நீங்க உங்களுக்கு ஏதாவது குழப்பம் இருந்தா என் கிட்ட பேசி கொட்டிக்குறேன்னு சொன்னீங்க, ஆனா நிஜத்துல நானும் உங்க கிட்ட பேசும்போதுதான் அப்படி feel பண்ணுறேன். யார் கிட்டயும் அந்த wooden piece மேட்டர் நான் சொன்னதில்லை. ஆனா உங்க வேலைல நீங்க காமிக்குற கெட்டிக் காரத்தனம் என்னை வியக்க வெச்சது. அதுதான் உங்க மேல நம்பிக்கை வெச்சி இந்த விஷயத்தை உங்க கிட்ட சொல்லலாம்னு தோன வெச்சது. ஆரம்பத்துல இது உங்களால முடியாதுன்னுதான் நானும் நினைச்சேன் ஆனா அதுக்கான checmical composition கண்டு புடிக்குற அளவுக்கு முயற்சி எடுத்து இருக்கீங்க.
“ஆனா அதெல்லாம் நான் என்னோட சொந்த விருப்பதுல உனக்காக உதவ செஞ்சது ராகவ்… அதுக்காகவா என்னை நீ காதலிக்குற?” – அவனுடைய வயதை மனதில் வைத்து ஏன் இந்த காதலில் அவன் விழ வேண்டுமென்ற எண்ணத்தில் சொன்னாள் சங்கீதா…. “இல்லை…. என்னைக் கொஞ்சம் பேசி முடிக்க விடுறீங்களா? ப்ளீஸ்” “இஸ்ஹ்ம்ம் (கொஞ்சம் பெருமூச்சுவிட்டு) சரி சொல்லு…” – என்றாள். “ஒரு உண்மைய சொன்னா ஒத்துகுவீன்களா?” மௌனமாய் கேள்விக்குறியுடன் ராகவின் முகத்தைப் பார்த்தாள் சங்கீதா.. “what?.. கேட்கவா?” “ஹ்ம்ம் கேளு..” “உங்க கிட்ட நான் மணிக்கணக்குல பேசும்போது எல்லாம் நீங்க என் பேச்சை மட்டும் ரசிச்சா மாதிரி எனக்கு தெரியல.. ஏதோ ஒன்னு உங்களை என் பக்கம் கவனமா பார்க்க வெச்சி இருக்கு அது என்னென்னு எனக்கு தெரியாது, but I could feel it. இது மட்டும் எனக்கு நிச்சயமா புரிஞ்சிக்க முடிஞ்சிது. கரெக்ட் தானே?” (உள் மனதில் பழைய மறக்க முடியாத ரமேஷ் காதல் தான் அதற்கு காரணம் என்று சங்கீதாவுக்கு echo ஒலித்தது, ஆனால் வாய் திறந்து சொல்லவில்லை) அது உண்மையா இல்லையா? ராகவின் கேள்விக்கு ஆழமான மௌனம் இருந்தது அவளிடம். “வெளிப்படையா பேசலாம் ப்ளீஸ்… ஹானஸ்ட் பதில் வேணும்.” – ராகவ் தொடர்ந்தான் மீண்டும் மௌனமாகவே இருக்க ராகவ் “இந்த மௌனத்தை நான் ஆமாம் னு எடுத்துக்கவா?” இதற்கும் சங்கீதாவிடம் மௌனம்… சரி அப்போ நான் சொன்னது உங்களை பொருத்த வரைக்கும் correct… இப்போ என்னோட பதிலை சொல்லுறேன். உங்க மனசுல எந்த ஆம்பளைங்க கூடவும் நீங்க இப்படி மணிக் கணக்குல பேசினது இல்ல, அது மட்டும் இல்லாம இந்த function க்கு compering பண்ண உங்க அந்தஸ்துல இருக்குற பெண் யாரா இருந்தாலும் யோசிப்பாங்க. ஆனா நீங்க எனக்காக ஒத்துக்கிட்டீங்க. இதெல்லாம் வெச்சிப் பார்க்கும்போது உண்மையிலேயே உங்களுக்கு என் மனசுல ஒரு உன்னதமான இடம் இருக்குன்னு தெரிஞ்சுது. உலகத்துல கோடிக் கணக்குல சம்பாதிக்கிறது, ஒரு உயர் பதவிக்கு கிடு கிடுன்னு முன்னேருறதெல்லாம் எனக்கு பெரிய காரியமே இல்லை. ஆனால் பொறந்ததுல இருந்து இப்போ வரைக்கும் மனசளவுல நான் அண்பு விஷயத்துல ரொம்பவே காயப் பட்டு நொந்திருக்கேன். உண்மையாவே உலகத்துல சாதனை படைக்கிற விஷயம் எதுன்னு என்னை கேட்டால் அது ஒரு நல்ல குணாதிசயங்கள் உள்ள குறிக்கோள்கள் உடைய, சமுதாயத்துல எடுத்துக் காட்டா இருக்குற ஒரு மரியாதை வாய்ந்த பெண்ணோட இதயத்துல இடம் பிடிக்குறதுலதான் இருக்கு. அப்படி நான் இடம் பிடிச்சி இருக்கேனா னு எனக்கு தெரியாது. ஆனா நான் சொல்ல விரும்பினதை சொல்லிட்டேன். சத்தியமா நீங்க எனக்குன்னு வெச்சி இருக்குற அன்பை நான் இழக்க விரும்பல. “நான் கேட்க்குறேன்னு தப்பா நினைக்காத ராகவ், உன் காதல் என் வெளித் தோற்றத்தைப் பார்த்து வந்திருக்கலாம் இல்ல? ஏன்னா உன் வயசு அப்படி டா, என்னை தப்பா நினைக்காத உன் மேல இருக்குற அக்கறையில்தான் கேட்க்குறேன்.” “ஹா ஹா… எல்லாத்தையும் logic படி யோசிக்குற நீங்க எப்படி இதை மட்டும் தப்பா யோசிக்குறீங்க சங்கீ, எனக்கு இருக்குற காசுக்கும் அந்தஸ்துக்கும் காம சுகம் மட்டும் தான் வேணும்னா நான் தினமும் ஒரு சினிமா நடிகை கூட இருக்க முடியும். ஆனா இது உடல் உரசுர சந்தோஷம் இல்ல, மணசு உரசுர சந்தோஷம். என் மனசுல உங்க நினைவுகளும் உணர்வுகளும் உரசுரது எனக்கு எந்த விஷயத்துலயும் கிடைக்காத சந்தோஷம். “என்.. எனக்கு.. (பேச தயங்கினால் சங்கீதா.) ஆனா நான் ஏற்கனவே கல்யாணம் ஆணவ, ரெண்டு பசங்களுக்கு தாய், அதையும் தாண்டி தான் யோசிச்சியா?”
“ஹ்ம்ம்… வாழ்க்கைல நான் இன்னைக்கி வரைக்கும் வரை முறைப் படி தான் வாழனும் னு வாழ்ந்திருந்தா ஒரு மண்ணாங்கட்டியும் சாதிச்சி இருக்க முடியாது. என் வேலை உட்பட. அதுக்காக குறுக்கு வழியைத் தேர்ந்தேடுப்பவன்னு தப்பா நினைக்க வேண்டாம், மனசுக்கு ஒரு விஷயம் பிடிச்சி அதுவும் நம் கண்ணு முன்னாடி இருக்குறப்போ அதை எடுத்துக்குறதும் எடுத்துகாததும் நம்ம விருப்பம். எந்த விஷயத்தையும் அடைய ஒரு protocol (வழிமுறை) இருக்கு, அந்த வகையில ரொம்ப ஆழ்ந்த சிந்தனைக்கு அப்புறம் தான் என் காதலை உங்க கிட்ட ஒரு கடிதம் மூலமா சொன்னேன்…… தடைகளை எல்லாம் தாண்டிதான் என் முடிவை நான் எடுத்தேன். அதாவது நான் என் காதலைப் பொருத்த வரை என்னை விட முதிர்ச்சி அடைஞ்ச பெண், இரண்டு குழந்தைக்கு அம்மா, அப்படின்னு எல்லாம் யோசிக்கல, என்னைப் பொருத்த வரை உங்களை நான் மனசார விரும்புறேன். ஒரு ஒரு தடவையும் உங்க கூட பேசும்போது என் மனசுல ஏற்படுற சந்தோஷம் நான் சம்பாதிச்சி இருக்குற அத்தனை காசையும் எங்கயாவது கொண்டு போய் கொட்டினாலும் கிடைக்காது. எனக்குன்னு இன்னைக்கு ஒருத்தரை நான் நம்பி எல்லாத்தையும் பகிர்ந்துக்க முடியும்னா அது நீங்க ஒருத்தர் மட்டும்தான். infact ஒரு விஷயம் சொல்லவா? சொல்லு.. – நிமிராமல் குனிந்துகொண்டே கேட்டாள்.

Wednesday, July 30, 2014

சங்கீதா - இடை அழகி 65


வாழ்கையில் குழந்தையாய் பிறந்தது முதல் பள்ளி, கல்லூரி, நண்பர்கள், தோழிகள், மெத்த படித்தவர்களுடன் மேற்படிப்பு படித்த நாட்கள், வேலை செய்யும் அலுவலகத்தில் அவளது சக ஊழியர்கள், மற்றும் மேலதிகாரிகள் முதற்கொண்டு “சங்கீதா” என்றாலே தலை நிமிர்ந்து பார்க்க வைக்கும் மரியாதை உள்ளவள். அவளது கல்யாண வாழ்க்கையில் கடந்த ஏழு வருடம் என்னதான் பல மனக் குத்தல்களுக்கு ஆளானாலும், இந்த நாள் இந்த ஒரு கனம் அவள் குமாரின் எதிரில் வாங்கிக் கொண்டிருக்கும் வார்த்தைகள் அளவுக்கு அதிகமாகவே அவளது சுய கௌரவத்தை நசுக்கியது, அவனுடைய வார்த்தைகள் இவளுடைய மென்மையான குணாதிசயங்களை கூச வைத்தது.
புருஷனாகவே இருந்தாலும் பேசக் கூடாத வார்த்தைகள் பேசினாள் கேட்க வேண்டிய அவசியம் கிடையாது என்று அழுத்தமாக அவள் மனது சொன்னது. இருப்பினும் அவனது வார்த்தைகளால் வந்த வலிகளை தாங்க இயலவில்லை அவளாள். அதற்கு ஆதாரமாக அவளது விழியன் ஓரம் தேங்கி நின்ற கண்ணீர் தான் சாட்சி. “ஆடுடி, எவ்வளோ நேரம் சொல்லுறேன் ஆடு,” என்று குமார் கூறிய வார்த்தைகளை கேட்க்கும்போது மெதுவாக திரும்பி ஈர விழிகளுடன் ஸ்நேஹாவை மென்மையாக சிரித்து ப் பார்த்தாள் சங்கீதா.. சற்றும் குமாரின் கோவத்துக்கு அசராமல் சரிந்த முந்தானையை எடுத்து மீண்டும் மேலே போட்டாள். “ஒன்னும் இல்லைடா” என்பது போல் தன் பயந்த குழந்தையை நோக்கி தலை அசைத்தாள். அவளின் கண்ணீரைக் கண்டு கதவின் ஓரமாக இருந்த ஸ்நேஹா வெடுக்கென ஓடி வந்து அவளது அம்மாவின் கால்களை கட்டிப் பிடித்துக் கொண்டாள். எந்த குழந்தையாய் இருந்தாலும் தாய் அவமானப் படுவதையோ அதிகம் திட்டு வாங்குவதையோ பார்க்கையில் பயம் கொள்ளாமல் பாதுகாக்க ஓடி வரும். “தள்ளி போடி நானும் உன் அம்மாவும் பேசிக்கிட்டு இருக்கோம் இல்ல போ… உள்ள போ” – என்று அதட்டி கத்தினான் குமார். “பிரச்சினை நமக்குள்ளதான் குழந்தையை ஏதாவது ….” – என்று அவள் முடிப்பதற்குள் “என்னடி செய்வ….. என்னடி செய்வ….” என்று ஸ்நேஹா மீது கை ஒங்க வந்த குமாரின் கைகளை தடுக்க முயன்ற சங்கீதாவின் கைகளில் குமாரின் கரங்கள் பட அவளது கண்ணாடி வளையல்கள் உடைந்து பொல பொலவென தரையில் விழுந்தது. அப்போது நிமிர்ந்து குமாரைப் பார்த்தபோது குமாருக்கு சங்கீதாவின் முகம் ஒரு காளியின் முகத்துக்கு இணையாக தெரிந்தது.
கண்களை இறுக்கி மூடி பயத்தின் உச்சத்தில் தன் முகத்தை சங்கீதாவின் கால்களில் அழுத்தி கட்டிப் பிடித்துக் கொண்டிருந்தாள் ஸ்நேஹா. சில நிமிடங்கள் ஹாலில் நிசப்தம், யாரும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளவில்லை. சங்கீதா ஸ்நேஹாவை தூக்கி அவளது கண்களைத் துடைத்தாள், பதிலுக்கு குழந்தையின் கரங்கள் தாயின் கண்ணீரைத் துடைத்தது. தயவுசெய்து உங்க வேலைய நீங்க பாருங்க…. உங்க கிட்ட பேச எனக்கு வேற எதுவும் இல்ல. எனக்கும் ஒன்னும் இல்லடி, மனுஷன் பேசுவானா உன் கிட்ட? – என்று குமார் அவனுடைய கையாலாகதனத்தை அலுத்துக்கொண்டு வெளிப் படுத்த “இந்த வார்த்தையை நான் சொல்லணும்” என்று மனதில் எண்ணிக்கொண்டாள் சங்கீதா. வீடாகவே இருந்தாலும் வெறுமையாக தோன்றியது சங்கீதாவுக்கு. எப்போதுடா வீட்டை விட்டு தொலைவான் என்றிருந்தது சிறுமி ஸ்நேஹாவுக்கு. குழந்தைகளுக்கும் கணவனுக்கும் சமைத்துவிட்டு, வங்கிக்கு புறப்பட்டுக் கொண்டிருந்தாள் சங்கீதா. அவளிடம் சொல்லாமல் கொள்ளாமல் ரோஷம் என்றால் என்னவென்று கொஞ்சம் கூட அறியாது அவள் செய்து கட்டி வைத்த உணவை எடுத்துக் கொண்டு வழக்கம் போல வீட்டை விட்டு கிளம்பினான் குமார். அவன் கிளம்பும்போது பெட்ரூமில் இருந்து ஜன்னல் வழியாக பார்த்தாள் சங்கீதா “disgusting object” என்று முனுமுனுத்துகொண்டாள். (disgusting தமிழில்: அருவருப்பான ஒன்று). அங்கும் இங்கும் கையில் சிக்காமல் திறிந்த ரஞ்சித்தையும், சமத்தாக அம்மாவுக்கு உதவியாய் அனைத்தையும் செய்து குடுக்கும் ஸ்நேஹாவையும் அவர்களது ஸ்கூல் வேனில் ஏற்றி அனுப்பிவிட்டு வீட்டில் யாரும் இல்லாமல் கொஞ்சம் அமைதியாய் ஹாலில் மீண்டும் அமர்ந்தாள். சற்று முன்பு நடந்த விஷயங்களை நினைக்க விரும்பவில்லை, எனவே தனது mobile phone எடுத்தாள், அதில் “message from Raghav” என்று இருந்தது. பரவசமாய்ப் பார்த்தாள் “did you reached home safely?” என்று நேற்று இரவு இரண்டு மணி அளவில் அனுப்பி இருந்தான். பதிலுக்கு மெசேஜ் அனுப்புவதற்கு மாறாக ராகவ்க்கு கால் செய்தால் சங்கீதா.. “ஹலோ….” – திருவிழா கூட்டத்தில் தொலைந்த குழந்தை தாயைத் தேடுவது போல எப்போது அவன் குரலைக் கேட்க முடியும் என்று தவித்தது சங்கீதாவின் மனது. “ஹலோ சங்கீதா” – களைப்பான குரலில் பேசினான். இதுநாள் வரை இல்லாது இப்போது அவன் குரல் கேட்க்கையில் கன்னத்திலும், கைகளிலும் ஊசி முடிகள் எழுந்து நின்றது. மகிழ்ச்சியில் கண்கள் சிறிதளவில் அகலமானது, இதழ்கள் அதன் பங்குக்கு இரு புறமும் அழகாய் விரிந்தது இந்த தேவதைக்கு அவள் தேவனின் குரல் கேட்டது.
“sorry என்னால நேத்து ராத்திரி phone பண்ண முடியல அதான் மெசேஜ் அனுப்பினேன். ராத்திரி ஒன்னும் problem இல்லைல? – என்றான் ராகவ். “அதெல்லாம் ஒன்னும் இல்லைடா, முதல்ல உனக்கு காயம் எப்படி இருக்குன்னு சொல்லு?” “இதெல்லாம் சின்ன விஷயம்தான் ஒன்னும் இல்லைன்னு சொல்லிட்டாங்க, சாவியால கீரினதால எதுவும் septic ஆகப் போறதில்ல, இருந்தாலும் ஆயிடக் கூடாதுன்னு கொஞ்சம் மருந்து குடுத்து இருக்காங்க. “பைத்தியமாடா நீ? அவனைத் தப்பிக்க வைக்க வேற வழி தெரியாதா என்ன? சும்மாவே ஓட விட்டிருக்கலாம் இல்ல, மனசுல பெரிய கமல்னு நெனைப்பா? ரொம்பவே ஓவர் ஆக்டிங் பண்ணுற!.. அங்கேயே உன்னை காலர் புடிச்சி ஒரு அறை அறைஞ்சிட்டு வந்திருக்கணும். தப்பு பண்ணிட்டேன். மௌனமாய் எதுவும் பேசாமல் சங்கீதாவின் அண்பு கலந்த அக்கறையான வார்த்தைகளை ரசித்தான் ராகவ். அவள் பேச பேச அது அவனுக்கு கீறல் விழுந்த நெஞ்சுக்கு மருந்தாய் இருந்தது “ராகவ்…” “உம்..” இஸ்ஹ்ம்ம் (ஒன்றும் பேசாமல் கொஞ்சம் பேரு மூச்சு விட்டாள் சங்கீதா..) “என்ன சொல்லுங்க…” “ஒன்னும் இல்ல, (சில நிமிடங்கள் மௌனம்..) நான் உன் கிட்ட கொஞ்சம் பேசணும் டா. வண்டி அனுப்பி வைக்க முடியுமா? I want to see you டா.. please” – எப்படியாவது பார்க்க வேண்டுமென்று அவள் மனது கேட்பதை ராகவ் உணர்ந்தான். “என்ன கேள்வி இது சங்கீதா, one minute please” – என்று சொல்லிவிட்டு பக்கத்தில் உள்ள intercom phone ல் சஞ்சனாவை அழைத்து “சங்கீதா வீட்டுக்கு உடனே நம்ம company வண்டிய அனுப்புங்க please” என்றான். அவன் பேசுவதை phone ல் கவனித்து “thanks டா..” – என்றாள் சங்கீதா. “என்ன விஷயமா சங்கீதா பார்க்கணும்?” – என்றான் ராகவ் ஒன்றும் தெரியாதவனாய் . “உம்…. பஜ்ஜி மாவு பத்தியும் வடை மாவு பத்தியும் பேசுறதுக்கு டா” – என்று பொய்யான கோவத்தில் சிரித்து பேசினாள் சங்கீதா. “ஹா ஹா ஹா, சரி சரி சொல்லுங்க..” “கொஞ்சம் மணசு சரி இல்லைடா…..(சில நொடி மௌனங்களுக்கு பிறகு தொடர்ந்தாள்) நீ ஏண்டா இப்படி எனக்கு ஒரு லெட்டர் குடுத்த?” – வார்த்தைகளை முடிக்கும்போது லேசாக அழ ஆரம்பிக்கும் குரல் கேட்டது ராகவ்க்கு. சங்கீதா ப்ளீஸ்… என்னாச்சு? நான் சொன்னது தப்புன்னு தொனுச்சின்னா விட்டுடுங்க. நீங்க உங்க வேலை குடும்பம்னு கவனிங்க – என்று ராகவ் அக்கறையாக பேசிக்கொண்டிருக்கும்போது நடுவில் குறுக்கிட்டு நிறுத்தினாள் சங்கீதா. “என்னுடைய தனிப்பட்ட இறுதி முடிவை நாந்தான் எடுக்கணும், அதைப் பத்தி சொல்லுறதுக்கு நீ யாருடா?” – அமர்ந்திருக்கும் chair நுனிக்கு நிமிர்ந்து வந்து எதிரில் உள்ள கண்ணாடியின் முன் முறைத்துக் கொண்டு சத்தமாக உரிமையுடன் கொஞ்சம் கோவமாக கத்தினாள். ஏதோ தன்னிடம் இருந்து பறிக்கப் படுவது போல. “இல்ல அது வந்து…” – ராகவ் க்கு ஒரு நொடி ஏன் இப்படி பேசினோம் என்றிருந்தது. இன்று வரை சங்கீதா இப்படி கோவத்தில் கத்தி அவன் கேட்டதில்லை. “Will you just shut up?” – மீண்டும் குரல் உச்சத்துக்கு போனது சங்கீதாவுக்கு… கண்ணாடியில் கண்கள் முறைத்தன. “நீ கொட்ட வேண்டியத எல்லாம் கொட்டிட்ட நான் என்ன சொல்லணும் னு நினைக்கிறேனோ அதை நான் தான் சொல்லணும், அதுக்கும் நீயே பதில் சொல்லிகிட்டா அப்புறம் நான் நடுவுல உப்புச்சப்பானா?” correct… correct னா?, அப்போ நான் உப்புச்சப்பானா? அய்யோ…. இல்ல இல்ல உங்க முடிவு உங்கள் கையில் னு நீங்க சொன்னது correct னு சொன்னேன். (சில நொடிகளுக்குப் பிறகு தொடர்ந்தான்) ஹ்ம்ம்.. என் கடிதத்துல ஒரு விஷயம் எழுத மறந்துட்டேன். என்னது? – சங்கீதாவின் முகத்தில் ஒரு மெல்லிய சிரிப்பு இருப்பதை அவள் முன்பு இருக்கும் கண்ணாடி மட்டும் அறிந்தது. ஆனால் அவனுடன் பேசும்போது வாயின் மீது கை வைத்து மூடி அந்த சிரிப்பின் சத்தத்தை மறைத்தாள் இந்த தேவதை. “வெடிக்கும் எரிமலையிடம் என் தேவதையின் கோவத்தைப் பார்த்தால் நீ கூட அமைதியாய் அடங்கி விடுவாய்” னு எப்படி? correct தானே?” – என்று ராகவ் சொல்ல…. அதற்கு பாதி கோவமும், பாதி சிரிப்பும் கலந்து என்ன பேசுவதென்றே தெரியாமல் அமைதியாய் இருந்தாள் சங்கீதா. “ஹலோ என்ன ஆச்சு?” – என்றான் ராகவ். “ஒன்னும் இல்ல.” – மெதுவாக முந்தானையின் நுனியை பிடித்து திருகிக் கொண்டே சத்தமில்லாமல் முணுமுணுத்தாள் . – இது அப்படியே ஒரு காலத்தில் ரமேஷ் அவளது வாழ்க்கையில் இருக்கும்போது சங்கீதாவுக்கே உரிய அக்மார்க் குணம்….. ஏன் பல பெண்களுக்கே உரிய குணமும் கூட. “ஒன்னும் கேட்கல, திருப்பி சொல்லுங்க please” – என்றான் ராகவ். “ஒன்னும் இல்ல னு சொன்னேன்..” – சத்தமாக கத்தி கூறினாள்.. “நான் ஒன்னு கேட்டா தப்பா நினைசிகாதீங்க ப்ளீஸ்..” “நீ கேட்க்குறதை ப் பொறுத்துதான் அது இருக்கு.. கேளு’” – என்றாள் “சரி, ஆரம்பத்துல நல்லாதானே பேச ஆரம்பிச்சீங்க? ஏன் போக போக என் கிட்ட கோவத்துல கத்துறீங்க?” “கோவமா..? கோவம் இல்லையே…. எதுக்கு நான் உன் கிட்ட கோவப்ப்படனும்?” “ஒஹ்ஹ்… அப்போ அதுக்கு பேரு கோவம் இல்லையா?” “இல்ல….” – கண்களை மூடி மென்மையாக சிரித்து பேசினாள். “நிஜம்மா?” சங்கீதாவிடம் மௌனம்…. “ஹலோ ஹலோ ஹலோ….” மீண்டும் சங்கீதாவிடம் மௌனம்…. “சரி line கட் ஆயிடுச்சி போல இருக்கு….” – என்று சொல்லி ராகவ் mobile cut செய்யும் போது… “ஹலோ….” – என்றாள் மெதுவாக. “ஹ்ம்ம்… line cut பண்ணுறேன்னு சொன்னாதான் சத்தமே வருது..” “அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல நான் பேசிட்டுதான் இருந்தேன் உனக்கு கேட்கல.. காது செவிடாகிடுச்சி போல இருக்கு” – மீண்டும் அவளின் முந்தானையின் நுனி அவளிடம் மாட்டிக்கொண்டு “யாராவது காப்பாத்துங்க” என்று தவித்தது.
நீங்க மனசுக்குல்லையே பேசிக்கிட்டா எனக்கு எப்படி கேட்க்கும்? ஹா ஹா…” “சப்.. போடா…” – இப்போது காற்று அதிகம் + குரல் கம்மி சங்கீதாவிடம். “ஹா ஹா ஹா….” – சங்கீதாவின் மனதை திருடிய அதே வசீகர சிரிப்பு ராகவிடம். “உன் மனசுல ஏன் என்னைப் பத்தி அப்படி ஒரு எண்ணம் ராகவ்?” “என்ன எண்ணம்?” “உனக்கு தெரியும்? பதில் சொல்லு..” “ஹ்ம்ம்…. நிறைய காரணம் உண்டு..” “என்னென்ன சொல்லு, எனக்கு தெரிஞ்சிக்கணும். மணசு குழப்பத்துல இருக்கு.. உன்னைப் பத்தின விஷயத்தை உன் கிட்டேயே பேச வேண்டியதா இருக்கு.” “ஏன்?” என்ன ஒரு confusion இருந்தாலும் உன் கிட்டதான் மணசு விட்டு பேசுவேன், நீ சொல்லுற பதில்ல அர்த்தம் இருக்கும், convincing ஆ இருக்கும். அதாண்டா… இதைப் பத்தி நான் ரம்யா கிட்ட கூட பேசல. கூடவே மத்தவங்க கிட்ட நான் இதைப் பத்தி பேசவும் கூடாது…. (சில வினாடிகள் மௌனம்) ப்ளீஸ் பேசு ராகவ்.” “எனக்கு மனசுல…” – ராகவ் பேச ஆரம்பித்தான்.. “டிங்…. டிங்….” – calling bell அடித்தது. சரி வண்டி வந்திருக்கும்னு நினைக்குறேன். வந்து பேசுறேன் – என்றாள். “ஒஹ் சரி சரி வாங்க, I will be waiting for you..” – ராகவ், சங்கீதா இருவருமே ஒருவருக்கொருவர் எப்போது தங்களது முகங்களைப் பார்த்துக் கொள்வோம் என்று அடி வயற்றில் கிச்சி கிச்சி ஏற்படும் வண்ணம் பரவசம் அடைந்தனர். கதவைத் திறந்தாள் சங்கீதா. டிரைவர் தாத்தா “வணக்கம் மா, எப்படி இருக்கீங்க?” – என்று வழக்கமாக வழிய “இருங்க ஒரு நிமிஷம் வந்துடுறேன்” என்றாள். உள்ளே சென்று அவளுடைய டைரியும் பேனாவையும் எடுத்துக் கொண்டு சேலையை கண்ணாடியின் முன்பு எப்படி இருக்கிறது என்று பார்த்தாள். வலது புறம், இடது புறம் என்று திரும்பி பார்த்துவிட்டு ஏதோ ஒரு நொடி யோசித்தாள். பிறகு லேசாக கொசுரை தொப்புளுக்கு கீழ் கொஞ்சமாக இறக்கி இடுப்பின் இரு புறமும் V வடிவில் கொண்டு சென்று பின்புறம் இடுப்புக்கும் முதுகுக்கும் இடையே இருக்கும் சதைப் பகுதியை மறைத்து பக்கவாட்டிலும் மறைத்தவாறு கட்டி இருந்தாள். – இந்த வகையில் கட்ட வேண்டும் என்பது அவளுடைய பிரத்யேக விருப்பம். அதை அட்ஜ்ஸ்ட் செய்து கட்டிக்கொண்டு கண்ணாடியை ப் பார்த்து “hereafter I will live my life like how I want to lead it & will never allow it in other’s hand & I dont bother about what others think” என்று தனக்குத் தானே சொல்லிக்கொண்டு பக்கத்தில் உள்ள புது குண்டுமள்ளியை தலையில் வைத்துக் கொண்டு கிளம்பினாள்.

சங்கீதா - இடை அழகி 64


“ஏன்டா எப்போவும் கண்ணை மூடினாள் இப்படி நீயே வர..” – கண்களை மூடி சாய்ந்தவாறு லேசாக அழும் விதம் பேசிக்கொண்டாள். இப்படி அவனுடைய சிந்தனைகளிலேயே மூழ்கி இருக்கிறோம்… இது சரியா?… கேள்விகள் கொந்தளித்து எழுந்து கொண்டிருந்தது அவளுக்குள், இப்போது அதன் விளைவு குழப்பம். குழப்பத்தின் உச்சத்துக்கு சென்றாள். அவளது பத்து விரல்களில் கிட்டத்தட்ட ஒன்பது விரல்களில் நகங்கள் கடிக்கப் பட்டு தரையில் சிறு சிறு துண்டுகளாக இருந்தது, நகங்கள் இழப்பதற்கு காரணம் ராகவ் பற்றிய அவளது சிந்தனைகள் செய்த வேலை. உடல் முழுதும் ரத்த ஓட்டம் அதிகரித்தது, சற்றே உடலும் வேர்த்தது. இப்போது அவளுடைய ஆழ் மனது அவளுக்கு ஒரு கேள்வி எழுப்பியது, அந்த கேள்வி அவளை சற்று உலுக்கி நிமிர்ந்து உட்கார வைத்தது. அந்த கேள்வி “உன்னையும் அறியாமல் நீ ராகவ் மீது அடங்காத காதலில் இருக்கிறாயா?” என்பதுதான்.
முக்கால்வாசி பதில் மெளனமாக “ஆமாம்” என்றும் சொற்பமான பதில் “இல்லை” என்றும் அவள் மணம் உள்ளுக்குள் போராடிக்கொண்டிருந்தது. மீண்டும் கண்களை மூடினாள்…. ஆமாம்…, இல்லை…., ஆமாம்….. ஆமாம்…., ஆமாம்…., இல்லை…. இல்லை, ….. இந்த ஆமாம் இல்லை என்ற வார்த்தைகள் அவளது மனதை குடைந்தது. சட்டென்று chair ல் இருந்து எழுந்து நின்று கண்ணாடியைப் பார்த்தாள், “இல்லை” என்று எண்ணும் போழுது அவள் முகம் பொய் பேசுகிறது என்று அவள் கண்கள் அவளுக்கே திருப்பி காண்பித்தது. ஒன்று மட்டும் அவளுக்கு தெளிவாக தெரிந்திருந்தது. ராகவின் எண்ணங்கள் வேர் முளைத்து அவளின் மனதில் நன்றாக ஊனி இருக்கிறதென்று. ஹாலில் ஒரே இடத்தில் அமர பிடிக்கவில்லை, அங்கும் இங்கும் வளாத்தினாள். ஒரு கட்டத்தில் உள்ளுக்குள் இல்லை இல்லை என்று ஜீரணிக்க முடியாத பதிலை சொல்லி ஏமாற்ற முயற்சி செய்கையில் மணம் வெம்பியது…. சிறிது நேரத்திற்கு பிறகு மெதுவாக பாத்ரூம் சென்று கதவை சாத்தினாள். கொஞ்ச நேரம் சத்தம் இல்லை….. உள்ளே மஞ்சள் வெளிச்சத்தில் கண்ணாடியின் முன் நின்றிருந்தாள். washbasin முன்பாக சாய்ந்து நின்றுகொண்டிருக்கும்போது முந்தானை சரிந்து இருந்தது. எந்த உணர்ச்சிகளும் இல்லாமல் குனிந்த தலையோடு நிற்கையில் கீழ் நோக்கி பார்க்கும்போது அவளது கழுத்தினில் தாலி தொங்கியது. அதை ஒரு நிமிடம் கைகளில் பிடித்து உத்துப் பார்த்தாள்.. பார்த்தாள்…., மீண்டும் பார்த்தாள்…. சில நிமிடங்கள் பார்த்துக் கொண்டே இருந்தாள். “வெறும் ஒரு மஞ்சள் கயிறு என் வாழ்கையில் எத்தனையோ ஆசைகளுக்கும், விருப்பங்களுக்கும் தடை போட்டுடுச்சி. பத்துப் பேரை கட்டிப் போடுற இரும்பு சங்கிலிக்கு கூட இவ்வளவு சக்தி இருக்காது ஆனால் இந்த கயிறு ஒரு பொம்பளையோட வாழ்க்கையையே புரட்டி ப் போடுதே. ஒரு பெண்ணுக்குரிய தனிப்பட்ட ஆசைகளையும், விருப்பு வெறுப்புகளையும் உட்பட” என்று எண்ணிக் கொண்டிருக்கையில் கண்களில் இருந்து ஒரு சொட்டு கண்ணீர் தாலியின் மீது விழுந்தது. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணி நேரமும், ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு நொடியும் தன்னை ராகவிடம் இழந்து கொண்டிருக்கிறோம் என்ற உண்மை கண்ணாடியில் தெரியும் சங்கீதாவின் கண்கள் அவளுக்கு வெளிச்சம் போட்டு காட்டியது. அம்மாவைத் தேடி ஸ்நேஹா படுக்கையில் இருந்து எழுந்து வெளியே வந்தாள், “அம்மா….அம்மா எங்கம்மா இருக்கே, வாமா?” என்று அழைத்த அந்த சிறுமி பாத்ரூமை கடந்து செல்லும்போது கதவின் கீழ் மஞ்சள் வெளிச்சம் எரிவதைப் பார்த்தாள் ஸ்நேஹா, அம்மா…. அழைத்ததுக்கு சத்தம் இல்லை… அம்மா இருக்கியா மா.. சங்கீதா லேசாக விசும்பும் சத்தம் கேட்டது ஸ்நேஹாவுக்கு…. அம்… – முழுதாக “மா” என்று ஸ்நேஹா முடிப்பதற்குள் உள்ளுக்குள் இருந்து சங்கீதா “ஹம்மாஆஆ” என்று கதறி அழும் சத்தம் கேட்டது. “அம்மா….” – ஸ்நேஹா பயந்தாள். “அம்மா என்னம்மா ஆச்சு? ஏன்மா அழுவுற? வாமா வெளியே..” – என்று சற்று பயத்தில் சொன்னாள் “சங்கீதா தன்னை சுதாரித்துக் கொண்டு “ஒன்னும் இல்லடா செல்லம், “இஸ்ஸ்.. இஸ்ஸ்..” (மூக்கை உறிந்தால்) நீ போய் படுத்துக்கோ நான் வரேன்.” கண்களை சரிந்த முந்தானை நுனியால் எடுத்து துடைத்துக் கொண்டு கண்ணாடியைப் பார்த்தாள். கண்களில் மை அழிந்திருந்தது. அதையும் முந்தானையால் துடைத்தாள்.
“ப்ராமிஸ்ஸா சீக்கிரம் வரணும்?” – என்றாள் ஸ்நேஹா “ப்ராமிஸ் டா என் செல்லம், நீ… நீ போயி படுத்துக்கோ…நா” – கண்ணீர் எந்த தடைகளுமின்றி வந்துகொண்டிருந்தது. வந்த அழுகையால் முழுதாய் பேசி முடிக்க முடியவில்லை. என்னாச்சும்மா? பேசுமா… இஸ்ஸ்….. நீ போயி படுத்துக்கோ….. அம்மா வரேன், சரியா.. – அழுதுகொண்டே பேசினாள். சரிமா… – ஒன்றும் விளங்காதவளாய் ஸ்நேஹா மீண்டும் அறைக்கு சென்று படுத்தாள். பாத்ரூம் உள்ளே உள்ள கண்ணாடியில் அழுது சிவந்த கன்னங்களை பார்த்து தண்ணீரால் கழுவினால். மனதில் உள்ள எண்ணங்களை கழுவ முடியவில்லை அவளாள். முந்தானையை சரி செய்து, பெட்ரூமுக்கு சென்று குழந்தைகளுடன் படுத்து உறங்க முயற்ச்சி செய்தவளுக்கு தூக்கம் வரவில்லை. ஸ்நேஹா வை தன் நெஞ்சுடன் அனைத்து தலையில் தடவி தூங்க வைக்க…. இப்போது அவளுக்கும் கண்கள் சற்று லேசாக அயர்ந்தது சிறிய கண்ணீர் துளியுடன். கடைசியாய் ஏதாவது ஒரு முடிவை எடுக்கலாம் என்றவளுக்கு தூக்கம் குறுக்கிட்டது. நல்ல தூக்கம் தூங்கினாள். அடுத்த நாள் காலை…. படுக்கையில் எழுந்து அமைதியாய் அமர்ந்திருந்தாள். இரவு நேரம் அழுதது கொஞ்சம் கண்களை லேசாக வீங்கச் செய்திருந்தது. அமைதியாய் சில நிமிடங்கள் அப்படியே இருந்தவள் இப்போது ராகவின் கடிதத்தைப் பார்த்தாள். அதில் உள்ள வார்த்தைகளை பொறுமையாக படித்து எப்படி எல்லாம் தன்னை வர்னிச்சி இருக்கான் என்று வியந்தாள். இரவு நேரம் முழுதும் அவளது எண்ணங்களை அதிகாரம் செய்த ராகவின் சிந்தனைகள் அதிகாலை எழுந்த பிறகும் கூட இறக்கம் இல்லாமல் அவளின் சிந்தனைகளை தனது கட்டுக்குள் வைத்திருந்தது. மனதில் ஒரு புறம் பயம் இருந்தாலும் அவள் அதில் ஒரு ரகசிய இன்பம் கண்டாள். டிங்..டிங். – என்று calling bell சத்தம் கேட்டு கடிதத்தை தனது handbag உள்ளே வைத்தாள். உள்ளே வந்தது குமார். கண்கள் சற்று சோர்வாக இருந்தது, கூடவே போதிய தூக்கம் இல்லை என்று சங்கீதாவுக்கு குமாரைப் பார்க்கும்போது நன்றாக தெரிந்தது. எப்படியும் மீண்டும் ஒரு வாக்கு வாதம் தொடரலாம் என்று மனதில் எண்ணி இருந்தாள் சங்கீதா. குமார் சங்கீதாவை நேரடியாக பார்க்காமல் தனது ஷர்ட்டை கழட்டிவிட்டு நேராக படுக்கை அறையை நோக்கி நடக்க சங்கீதா பேச ஆரம்பித்தாள்.
“ராத்திரி எங்கே தங்கி இருந்தீங்க?” “உனக்கு எதுக்குடி சொல்லணும்?” “சொல்ல விருப்பம் இருந்தா சொல்லுங்க இல்லைனா வேணாம். நான் கட்டாய படுத்தல.” “நீ மட்டும் எல்லாத்தையும் சொல்லிட்டு செய்ரியாடி?” – முறைத்து பேசினான் குமார். கண்கள் லேசாக சிவந்திருந்தது. சற்றே அருகினில் நிற்க அவனது கோலம் முந்தைய இரவு கொஞ்சம் குடித்திருக்கிறான் என்று தெரிய வைத்தது. “ஹ்ம்ம்.. again asusual I expected this kumar” – சலித்துக் கொண்டே பேசினாள். வாயில் ஏதோ கோவமாக முணுமுணுத்துக் கொண்டே இருந்தான் குமார். அதைக் கேட்டு சங்கீதா ஏதுவா இருந்தாலும் சத்தமா சொல்லுங்க என்றாள். “ஆங்… நல்லா ஆடுனியே மேடைல “ஷீலா கி ஜவாணி” பாட்டுக்கு, அந்த மாதிரி நாலு பார் ல ஆடினா கூட இன்னும் நிறைய காசு குடுப்பாங்க.” – கையில் watch அவிழுத்து அருகில் உள்ள மேஜையில் விசிறி அடித்தான். “என்ன சொன்னீங்க?” – முன்புறம் இருந்த முடியை கைகளால் எடுத்து பின்னாடி போட்டு அவன் அருகில் வந்து கோவமான கண்களால் கேட்டாள் சங்கீதா. “நல்ல்ல்லா நாலு இடத்துல இப்படியே ஆடுடி, ஏற்கனவே அவனவன் என்னை இளக்காரமா பார்க்குறான், இன்னும் நல்லா கேவலமா பார்ப்பான்.” – இதைச் சொல்லும்போது குமாரின் முகம் ஆரோக்கியமற்ற உணர்ச்சிகளின் அவல உச்சிக்கு சென்றது. வார்த்தையைப் பார்த்து பேசுங்க குமார், நான் ஒன்னும் நாலு இடத்துல ஆடி போழைக்குரவ இல்ல.. – சங்கீதாவுக்கும் கண்கள் சிவந்தது. நான் வெறும் ஒரு 4 நிமிஷம் ஒரு சின்ன stage dance ஆடினேன்.. அது தப்பா?” “ஆங்… பேசுடி, பேசு, இன்னும் நல்லா பேசு, கூட கூட பேசு, பொத்திக்குட்டு கேட்ப்போம் னு தோணல இல்ல?” “எதுக்கு நான் ஒண்ணுமே சொல்லாம வாய் மூடிக்குட்டு இருக்கணும் னு எதிர்பார்க்குறீங்க? என் பக்கம் இருக்குற நியாயத்தை எடுத்து சொல்லுறேன்..” “ஒஹ்ஹ்….. நியாயம் பேசுறியா என் கிட்ட?…. நான் ஒன்னு சொன்னா அதை நீ சும்மா கேட்டுக்குட்டு அப்படியே நிக்குரதுல என்னடி தப்பு? பொண்டாட்டிதானே நீ.” “நானும் அதையேதான் உங்களுக்கு நியாபகப் படுத்துறேன், நான் பொண்டாட்டிதான், ஆனா அடிமை கிடையாது.” “இருக்கனும்டி, எனக்கு அப்படிதான் நீ இருக்கணும், எனக்கு உன்னால கெளரவம் குறையுதுடி…. ஆமாம்…. இந்த நாலு சுவருக்குள்ள உன் கிட்ட இதை சொல்லுரதுல எனக்கு ஒன்னும் அசிங்கம் இல்லைடி” – குமாரின் குரல் அதிகரித்தது. அந்த சத்தத்தில் ஸ்நேஹா படுக்கை அறையில் இருந்து என்னமோ ஏதோ என்று பயந்து எழுந்தாள்.. “நா….” – பேச ஆரம்பித்தவளை பேச விடாமல் தடுத்து மீண்டும் தொடர்ந்தான் குமார். பேசக் கூடாதுடி, என்னடி கூட கூட பேசுற…., நீ பேசுவ…. காரணம் எனக்கு நீதான் இந்த வேலைய வாங்கிக் குடுத்த, எப்படி வாங்கிக் குடுத்த? அந்த ராகவ் கிட்ட ஈசி ஈசி வாங்கிக் குடுத்த அப்படிதானேடி?” – இதைச் சொல்லும்போது குமாரின் முறைக்கும் பார்வை சங்கீதாவை அதிகம் எரிச்சலடயசெய்தது.உண்மையில் குமாருக்கு IOFI ல் application எழுதி போட்டதைத் தவிர சங்கீதா செய்தது ஒன்றும் இல்லை, அப்போது ராகவ் என்பவன் யாரென்ரு கூட அவளுக்கு தெரியாது. குமாரின் இந்த அருவருப்பான கேள்விக்கு “நீங்க நினைக்கிறது தப்புங்க” என்று அடி பணிந்து பதில் சொல்ல சங்கீதாவின் மணம் ஒத்து போகவில்லை. தாலி கட்டினவன் என்கிற அந்த ஒரு காரணத்துக்காக எவ்வளவோ வார்த்தைகளையும் சகிக்க முடியாத குணங்களையும், புருஷ லட்சணமே இல்லாத குணாதிசயங்களையும் கடந்த ஏழு ஆண்டுகளாக கடந்து வந்த பிறகு இன்றைக்கு தன் மணசு விருப்பபட்டு செய்த சில காரியங்களையும் அவனது மனக் கண்களால் அசிங்கமான பார்வையில் பார்த்து பேசியதைக் கண்டு அவனுக்கு விளக்கம் தர வேண்டிய அவசியம் இல்லை என்று அவளது ஆழ் மணம் கூறியது. பேச வேண்டிய வார்த்தைகள் எதுவாக இருந்தாலும் பேசட்டும் என்று எண்ணி அப்படியே மெளனமாக நின்றாள். இப்போ பேசுடி, ஏன் பேச மாட்டியா? பேசு பேசு…- கிட்டே நெருங்கினான். கைகளை உயர்த்தி கண்களை மூடி “போதும்” என்பது போல காமித்து “எல்லாமே உங்க கண் பார்வைல இருக்கு, நான் எதுவும் விளக்கி சொல்லணும் னு தோணல”
ஒஹ் நான் சொல்லுறது எதையும் செய்ய கூடாது இல்ல அப்படிதானே? “எது நீங்க சொல்லுறத நான் செய்யல? என்னத்துக்கு இப்போ போலம்புறீங்க?” – சத்தம் இல்லாமல் அமைதியாகவே கூறினாள் “இதைக் கேட்டு ஒரு நிமிடம் பயித்தியம் பிடித்தவனைப் போல ஹாலில் இங்கும் அங்கும் நடந்துகொண்டே இருந்தவன் சட்டென ஒரு நிமிடம் திரும்பி சங்கீதாவை தலை முதல் கால் வரைப் பார்த்தான். அவள் அருகில் வந்து அவளின் தோளில் கை வைத்து முந்தானையை தரையில் இழுத்து விட்டு உச்ச குரலில் “உம்ம்…. come on ஆடு…. ஆடுடி… நான் பாடுறேன்.. எனக்கு இப்போ special அ ஆடி காமி எனக்கு “ஷீலா ஷீலா கிய ஜானி” (உலரும்போது குமாருக்கு பாட்டு வார்த்தைகள் கூட சரியாக வரவில்லை) ஆஆஆடுடி ஆடு ஆடு.. ஊருக்கு ஆடுனியே எனக்கு ஆட மாட்டியா?” – குமாரின் குரல் கூரையை கிழித்தது. பெட்ரூம் கதவருகே ஒழிந்து கொண்டு மெதுவாக தலை மட்டும் தெரியும் வண்ணம் ஸ்நேஹா பயந்து எட்டிப் பார்த்தாள்.

சங்கீதா - இடை அழகி 63


சத்தங்கள் பலவிதம் என் காதில் வந்து விழுந்தாலும்…… ங்கணம் இயற்கை ரசிகர்கள் அனைவரும்…… கீதங்களை ஆயிரக்கணக்கில் தினமும் அதிகாலையில்…… தாராளமாய் சொத்து வைத்திருப்பவர்களும், பொருள் வசதி…… எழுத்துகளைக் கூட்டி பார்த்து வந்த பெயரைப் படித்ததும் மூச்சு பேச்சிலாமல் ஒரு நிமிடம் உறைந்திருந்தாள் சங்கீதா.. ஆடிட்டோரியம் வாசலில் IOFI Benz Executive car நின்றுகொண்டிருக்க அதில் நிர்மலாவும், ரம்யாவும், அவர்களுடன் சஞ்சனவும் குழந்தைகள் ரஞ்சித்தும், ஸ்நேஹாவும் நின்று கொண்டிருக்க, “நான் கார் விட்டு இறங்கினா எல்லாரும் என்ன ஆச்சு எதாசுன்னு விசாரிப்பாங்க, நீங்க கிளம்புங்க, நாம நாளைக்கு பேசிக்கலாம் என்று சொல்லிவிட்டு சங்கீதாவை இறக்கி விட்டு ராகவ் ஆடிட்டோரியம் entrance நோக்கி தனது காரை ஓட்டிச் சென்றான்.”
காரின் உள்ளே அனைவரும் அமர்ந்து கொண்டிருக்க டிரைவர் தாத்தா “உங்க dance super madam” – என்று ஜொள்ளு விட.. அதற்கு ஒரு reaction ம் காமிக்காமல் சில நிமிடங்களுக்கு முன்பு பூகம்பம் வெடித்தது போல அப்படியே சிலை மாதிரி இருந்தாள் சங்கீதா. பூகம்பத்துக்குக் காரணம் gopi கூட இல்லை, ராகவின் காதல்தான். ஓடும் வண்டியில் “அம்மா, தூக்கம் வருதும்மா” – என்று சொல்லி குழந்தைகள் இருவரும் சங்கீதாவின் நெஞ்சில் சாய, குழந்தைகளை தூங்க வைத்து சுத்தமாக தன் தூக்கத்தை தொலைத்து கண்கள் விழித்து அமர்ந்திருந்தாள் சங்கீதா.காரில் சங்கீதா மட்டும் அமைதியாய் அமர்ந்திருக்க, ரம்யாவும், நிர்மலாவும் நடந்து முடிந்த நிகழ்ச்சியைப் பற்றி மிகவும் சிலாகித்துக் கொண்டிருந்தனர். குழந்தைகள் சங்கீதாவின் மார்பினில் சாய்ந்து உறங்கிக்கொண்டிருந்தன. ஒரு புறம் டிரைவர் தாத்தா வண்டியை ஸ்டார்ட் செய்து புறப்பட, சங்கீதாவின் மனமோ கார் சாவியால் நெஞ்சில் ரத்தம் வரும்விதம் கீறிக்கொண்ட ராகவுக்கு காயம் அதிகம் ஆகி இருக்குமோ என்ற பயம் இருந்தது. சங்கீதா படபடப்புடன் ராகவை அழைத்து நிகழ்ச்சி முடிந்ததும் வெளியே அவசரமாக அந்த உருவத்தை நோக்கி ஓடியது நிர்மலாவுக்கு தெரியாது. அந்த சமயத்தில் சங்கீதாவுடன் இருந்தது ரம்யாதான். “சங்கீதா, என்னால நம்பவே முடியலடி, ஒரு நிமிஷம் எல்லாமே கணவு மாதிரி இருக்கு, உன் கிட்ட சொல்லி எப்படியாவது வந்திருந்த cine stars எல்லார் கிட்டயும் autograph வாங்கலாம்னு நினைச்சேன், ஆனா திடீர்னு நீ எங்கே போன என்ன ஆன னு ஒண்ணுமே தெரியல, அப்போ ரம்யாதான் நீ ஏதோ urgent phone call attend பண்ண வெளியே போய் இருக்கேன்னு சொன்னா, ஏதாவது பிரச்சினையா?” என்று நிர்மலா கேட்க்கும்போது கூட பேச்சு குடுக்காமல் கார் கண்ணாடியின் வழியே விரித்து வைத்த கண்களால் தெருவையே பார்த்துக் கொண்டிருந்தாள் சங்கீதா. தன்னையும் அறியாமல் அவளது கைகள் தானாகவே தூங்கிக்கொண்டிருக்கும் ரஞ்சித், ஸ்நேஹாவின் தலையை தன் நெஞ்சின் மீது வருடிக்கொண்டே இருந்தது. அசதியில் இருப்பாள் போல என்று எண்ணி நிர்மலா மேலும் தொடராமல் அமைதி ஆனாள். ரம்யா சங்கீதாவின் அருகே அமர்ந்திருந்ததால் அவளிடம் மெதுவாக காதருகே சாய்ந்து பேசினாள். மேடம் நீங்க திரும்பி வர்றதுக்குள்ள மடியில நெருப்பை கட்டிகுட்டு இருக்குறா மாதிரி இருந்துச்சி. என்னாச்சு? யாரந்த ராஸ்கல்? mithun தானே? – காற்று கலந்த குரலில் பக்கத்தில் நிர்மலாவுக்கு கேட்க்காத வண்ணம் மெதுவாக பேசினாள் ரம்யா, நிர்மலாவுக்கு அவர்கள் இருவரும் ஏதோ தனிப்பட்டு பேசுகிறார்கள் என்று எண்ணி நாகரீகம் காத்து குறுக்கிடாமல் அமைதியாகவே இருந்தாள். ரம்யா பேசும்போதும் சங்கீதாவின் முகத்தினில் மாற்றங்கள் தெரியவில்லை. அப்படியே முகம் வெறிச்சோடி இருந்தது. ஒரு விதமான பயம் கலந்த அதிர்ச்சியில் உடல் லேசாக உஷ்ணமாக இருந்தது, அதோடு அவளது கன்னங்கள் சிவந்திருந்தது. மெதுவாக தோள்களைப் பிடித்து உலுக்கினாள் ரம்யா.. “ஆங்….” (சில வினாடிகள் ரம்யாவை அப்படியே பார்த்துக் கொண்டிருந்தவள் பிறகு) ஸ்ஹாஹா – சற்று பெருமூச்சுவிட்டு குனிந்தவாறு குழந்தைகளின் தலையைப் பார்த்துக் கொண்டே ரம்யாவிடம் பேசினாள்.. “இவ்வளோ நாலா நம்ம கூடவே இருந்திருக்கான் டி….” “கூடவேவா? யாரு மேடம்? – அதிர்ச்சியாய் கேட்டாள் ரம்யா….” “பியூன் கோபி தாண் டி அந்த unknown number”. “என்னது கோபியா?” – கொஞ்சம் சத்தமாக அதிர்ச்சியில் மெதுவாக கத்தினாள் ரம்யா. “என்னாச்சு?” – நிர்மலா சற்று எட்டி பார்த்து கேட்டாள். “ஒன்னும் இல்ல சங்கீதாவுக்கு கொஞ்சம் அசதியா இருக்கு, நான்தான் தேவை இல்லாம பேச்சு குடுத்துக்குட்டு இருக்கேன்.” – மென்மையாக சிரித்தாள் ரம்யா.
“ஒஹ்.. சரி சரி..” “அவன் எனக்கு நல்லது செய்யத் தான் மெசேஜ் அனுப்பி இருக்கான். என்னை இந்த விஷயத்துல தலை இட வேண்டாம்னு சொல்ல நேரடியா வழி தெரியாம இப்படி மெசேஜ் அனுப்பினா கொஞ்சம் பயந்து விலகிடுவேன்னு நினைச்சி இருக்கான். அவனுடைய தம்பி தங்கச்சி படிப்புக்கும் குடும்ப வறுமைக்கும் வாரா வாரம் நான் குடுக்குற கொஞ்ச காசுக்கு மனசுல நன்றி உணர்ச்சியோட எனக்கு நல்லது பண்ண முயற்சி செஞ்சிருக்கான். அவனைப் பத்தி எனக்கு நல்லா தெரியும்டி அவன் எந்த தப்புலையும் ஈடு பட்டிருக்க மாட்டான். இப்போ கூட அவனுக்கு எதுவும் ஆகி இருக்கக் கூடாதுன்னு மணசு படபடக்குது. அது தவிர.. – ஏதோ சொல்ல வந்து நிறுத்தினாள் சங்கீதா… ராகவ் அவனுடைய காதலைத் தெரிவிச்சதை சொல்லலாமா என்று எண்ணி வேண்டாம் என்று ஒரு நொடி அவளுடைய ஆழ் மனது சொல்ல அப்படியே மௌனம் ஆனாள். “என்னாச்சு மேடம் சொல்லுங்க. ஏன் நிறுத்திட்டீங்க?” “ஒன்னும் இல்லைடி ராகவ்….” – வார்த்தைகள் உதடுகளின் விளிம்பில் நின்றது, சொல்லலாமா வேண்டாமா என்று. “ரகாவ்க்கு என்ன ஆச்சு? சொல்லுங்க?”
“ஒன்னும் இல்லை நாளைக்கு காலைல பேசலாம். ப்ளீஸ்” – என்று சொல்லி மெதுவாக தலையை பின் பக்கம் சாய்த்தாள் சங்கீதா. அனைவரும் வண்டிக்குள் சத்தம் இன்றி அமைதியாக இருந்தனர். நிர்மலாவுக்கு கண்கள் லேசாக சொக்கியது. ரம்யா, சங்கீதா சொன்ன விஷயங்களைக் கேட்டு அமைதியாய் ஏதோ யோசித்துக் கொண்டிருந்தாள் பிறகு அவள் கணவனுக்கு சங்கீதாவின் வீட்டுக்கு இன்னும் 30 நிமிடத்தில் வந்து அவளை அழைத்து செல்வதற்கு text message அனுப்பிக் கொண்டிருந்தாள். டிரைவர் தாத்தா stereo on செய்ய “ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது” என்ற இளமை ஊஞ்சலாடுகிறது படத்தின் மெலடி பாடல் மெதுவாக ஓடிக்கொண்டிருக்க, traffic அதிகம் இல்லாத தெருவை ஜன்னல் வழியே பார்த்தாள், சில்லென்று முகத்துக்கு நேராக காரின் AC காற்று மெதுவாக வீச, அந்த காற்றின் சுகத்தில் கொஞ்சம் லேசாக கண்களை மூடி சற்று ஆயாசமாக சாய்த்தாள் சங்கீதா. கண்களை மூடியபடியே சாய்ந்திருக்க அந்த ஒரு கனம் சங்கீதாவின் மணம் முழுதும் ராகவ் முகம்தான் நிறைந்திருந்தது. வேறெந்த மண உணர்வும் அவனது முகம் அவள் மனதில் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை. text message அனுப்பி வைத்துவிட்டு, சந்கீதாவைப் பார்த்து அமைதியாய் ஏதோ யோசனை செய்து கொண்டிருந்த ரம்யாவுக்கு மனதில் என்ன தோன்றியதோ தெரியவில்லை, சங்கீதாவை மெதுவாக அழைத்து “recent time ல நீங்க ரொம்பவே மாறி இருக்கீங்க மேடம்.” என்றாள். “ஏண்டி அப்படி சொல்லுற?” – கண்களை மூடியபடியே மெதுவாக கேட்டாள் சங்கீதா. மனதில் இப்போது எதுவும் அவளுக்கு ஒடவில்லை. “இப்போ எல்லாம் நீங்க உங்க மனசுக்கு பிடிச்ச காரியத்தை செய்ய அதிக தயக்கம் காமிக்குறதில்லை. மனசுக்கு எது சரின்னு படுதோ அதை ச் செய்யுறீங்க. முன்ன மாதிரி உங்கள நீங்களே சின்ன சின்ன காரியத்துக்கு எல்லாம் அதிகம் வருத்திக்குறதில்லை, முகத்துல தெளிவான சந்தோஷம் தெரியுது, இன்னும் கூட தெளிவா சொல்லனும்னா….. – என்று கொஞ்சம் இழுத்தாள் ரம்யா.. உம்…. சொல்லுடி ஏன் நிறுத்திட்ட? – அதே கண்களை மூடி சாய்ந்த போஸில் கேட்டாள் சங்கீதா. “என் மனசுக்கு பட்டதை சொல்லுறேன் மேடம், இன்னும் கூட தெளிவா சொல்லனும்னா நீங்க ராகவ் மீட் பண்ணதுல இருந்தே கொஞ்சம் சந்தோஷமா இருக்கீங்க” – என்று சாதாரணமாக தான் சொன்னாள் ரம்யா, ஆனால் இந்த சந்தர்பத்தில் சொன்னது சங்கீதாவுக்கு திக்கென கண்களை திறக்க வைத்து ரம்யாவைப் பார்க்க வைத்தன, அவள் பேசிய வார்த்தைகள். “என்ன ஆச்சு மேடம்?, எதுவும் தப்பா சொல்லி இருந்தா sorry” – சற்று சங்கோஜத்துடன் சொன்னாள் ரம்யா. “ஒன்னும் இல்லை” என்பதை வாயால் சொல்லாமல் மெளனமாக தலையை இருபுறமும் அசைத்து சொன்னாள். – மனதில் ஏற்கனவே ராகவின் எண்ணங்கள் அலைமோதிக் கொண்டிருக்க ரம்யாவின் வார்த்தைகள் சுனாமியைப் போல் தாக்கியது. இப்போது சங்கீதாவின் cell phone சினுங்கியது. எடுத்து பார்த்தாள் “Tonight I wont come home & will stay in my friend’s place” என்று கூறி இருந்ததே தவிர எந்த நண்பனின் வீட்டில் தங்க போகிறேன் என்று சொல்லவில்லை குமாரிடம் இருந்து வந்த மெசேஜ். இதை ப் படித்துவிட்டு “as expected” (நான் எதிர்பார்த்ததுதான்) என்று மனதில் எண்ணிக்கொண்டாள். “மேடம் வீடு வந்துடுச்சி” – என்றார் டிரைவர் தாத்தா வழக்கமான வழியும் சிரிப்புடன். நிர்மலா சங்கீதாவின் தோளில் இருக்கும் குழந்தைகளை வாங்கி அவள் இறங்குவதற்கு உதவி செய்துவிட்டு, “வரேன்மா பார்த்துக்கோ” என்று சொல்லி விடை பெற்றாள். ரம்யா அவளது கணவன் வாசலில் நிற்பதைப் பார்த்து அவனை நோக்கி நடந்தாள். டிரைவர் தாத்தா மென்மையாக வழிந்துகொண்டே அங்கிருந்து விடை பெற்றார். ரம்யா கிளம்பும்போது “function முடிஞ்சதுல இருந்தே சொல்லனும்னு இருந்தேன், I have seen an entirely different & bold sangeetha today” (தமிழில்: முற்றிலும் வித்யாசமான தைரியமான சந்கீதவைப் பார்த்தேன்) என்றாள். – இதற்கும் சங்கீதாவிடம் இருந்து ஒரு மௌனமான மெல்லிய சிரிப்புதான் வெளிப்பட்டது. “take care ரம்யா இன்னைக்கி நீ என் கூட இருந்ததுல எனக்கு ரொம்பவே moral support இருந்துச்சி, thanks டி” – என்று சொல்லி அவளது கணவனுடன் வழி அனுப்பிவிட்டு வீட்டிற்குள் வந்தாள். “படுத்து தூங்கும்மா நாளைக்கு பேசுவோம்” – என்று சொல்லிவிட்டு குழந்தைகளை சங்கீதாவிடம் ஒப்படைத்துவிட்டு தன் வீட்டிற்கு சென்றாள் நிர்மலா. தோளில் தூங்கும் குழந்தைகளை படுக்கையில் படுக்க வைத்துவிட்டு போட்டிருக்கும் உடைகளை கழற்றி விட்டு, உள்ளாடைகளையும் அகற்றினாள் அந்த தேவதை. நைட்டி எதுவும் இல்லாததால் ஒரு காட்டன் blouse அணிந்து, காட்டன் புடவை ஒன்றை உடுத்தினாள். புடவை கொசுரை மெதுவாக அவளது கைகள் மடிக்க, மனதில் எண்ணங்கள் மீண்டும் அவளை ஆக்ரமித்தது. கொஞ்சநேரம் எண்ணங்களால் உறைந்து நின்றவள் மீண்டும் சுதாரித்துக் கொண்டு கொசுரை இடுப்பில் சொருகி முந்தானையை பேருக்கு ஏதோ மேலே போட்டுக் கொண்டு தூக்கம் வராததால் hall க்கு வந்து அமர்ந்திருந்தாள். மனதில் பல விதமான எண்ணங்கள் பல விதத்தில் வந்து தாக்கியது. வேகமாக பறக்கும் பட்டாம்பூச்சியின் முதுகில் ஒரு சிறிய கூழாங்கல்லை வைத்தால் எப்படி பளு தாங்க முடியாமல் பறக்காமல் இருக்குமோ அதைப் போல காலையில் நடந்த விழாவைப் பற்றி யோசிக்கமுடியாமல், விழாவுக்கு வந்த பிரபலங்கள் பாராட்டியதை யோசிக்க முடியாமல், இவ்வளவு ஏன், கடைசியாக கிளம்புவதற்கு முன்பு அவளுடைய unknown number குழப்பத்துக்கு பதில் கிடைத்தும் அதைப் பற்றி கூட அதிகம் யோசிக்க முடியாமல் அவளது மனதை அதிகமாக ஆக்கிரமித்தது ராகவின் காதல்தான். இந்த நினைவு மீண்டும் ஒரு முறை ரமேஷ் அவளது வாழ்வில் எட்டிப் பார்ப்பது போல் இருந்தாலும் “சப்” என்று உச்சுக் கொட்டி மீண்டும் ராகவின் எண்ணங்கள் ஓடின. hall ல் உள்ள chair ல் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் ஒன்றும் செய்யாமல் அப்படியே அமர்ந்திருந்தாள். ‘ஓய்ங்.. ஓய்ங்..’ என்று மெதுவான சந்கீதத்துடன் fan மேலே சுத்திக்கொண்டிருருந்தது. தன் முன் இருக்கும் கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்து க் கொண்டே இருந்தாள் சங்கீதா. அலுவலகத்தில் அவள் femina புத்தகத்தில் படித்தது நியாபகம் வந்தது.
குடும்ப பெண்களுக்கு வரக் கூடிய மண அழுத்தம் பற்றி கூறியது, சுய கெளரவம் பற்றி விவாதித்தது, மனதுக்கு ஏற்ப சந்தோஷங்களில் ஈடுபடுத்திக் கொள்ளவேண்டுமென்று படித்தது அனைத்தையும் சிந்தித்தாள். அதில் இருந்த மற்றொரு கேள்வியில் வேலைக்கு செல்லும் ஒரு பெண் தன் கருத்துகளுக்கு ஒத்து போகும் ஒரு நபரிடம் காதல் ஏற்படுகிறது என்று கூறி இருந்ததும், அதற்க்கு அந்த புத்தகத்தில் ஒரு பெண் ஆலோசகர் அது ஒன்றும் பெரிய கொலைக் குத்தம் இல்லை என்று பதில் அளித்ததும் இன்றைய நவ நாகரீக உலகில் discreet relationship (ரகசிய உறவு) வைத்தாலும் அதையும் பெண்களால் balance செய்து குடும்பத்தை நடத்த முடியும் என்றும், அவ்வாறு செய்வதின் மூலம் பல மண அழுத்தங்களுக்கு அது தீர்வு குடுக்கும் என்று படித்தது அனைத்தும் அவளது மனதில் ஓடின. இன்னும் பலவிதமான சிந்தனைகள் மனதை ஆட்கொண்டன…. “சப்” என்று உச்சு கொட்டி மெதுவாக கண்களை மூடி சாய்ந்தாள் – மூடிய இமைகளுக்குள் அவளுடன் ராகவ் சிரிக்கிறான், phone ல் பேசுகிறான், அவளுக்கு எந்த உடை நன்றாக இருக்கும் என்று சொல்லுகிறான், கிண்டல் பண்ணுகிறான், மணிக் கணக்கில் அவளுடன் நேரம் போவது தெரியாமல் பேசி சிரிக்க வைக்கிறான். அணு அணுவாய் அவளது உணர்வுகளை மதிக்கிறான், அவளது பெண்மையை ரசிக்கிறான். அவள் மணம் ஒத்து போகும் விதம் அவளுடன் IOFI வளாகத்துக்குள் அவளைப் பார்த்து அன்புடன் வாய் நிறைய வர்ணித்து அழைக்கிறான், ராகவ்…. ராகவ்…. ராகவ்….ராகவ்…. ராகவ்…. மூச்சு விட்டால் ராகவ், கண்களை மூடினால் ராகவ், தூங்கும்போதும் கனவில் ராகவ். ராகவ் பத்தி பேசும்போது அவள் குழந்தைகள் கூட குதூகலிக்கின்றன. முழுக்க முழுக்க அவளுடைய சிந்தனைகள் அனைத்தும் ராகவ் என்பவனுக்கு அடிமை ஆகி இருப்பதை இப்போதுதான் பூதக் கண்ணாடி வைத்து தன் ஆழ் மனதை பார்த்து தெரிந்துகொண்டாள் சங்கீதா.

சங்கீதா - இடை அழகி 62


இப்போது நாம் கௌரவிக்கும் அந்த மனிதர் இந்திய திரை உலகம் மட்டும் அல்ல, ஆசிய கண்டமே அண்ணார்ந்து பார்க்கும் BOSS – என்று சங்கீதா சொல்லி முடிப்பதற்குள் யாரென்று கூட்டத்துக்கு தெரிந்ததால் மீண்டும் அதிர்வுகள் காற்றில் பாயும் வண்ணம் கைகள் வலிக்க வலிக்க கைதட்டி ஆரவாரம் செய்தனர். கூச்சலும் விசிலும் தரும் சத்தம் ஆடிட்டோரியம் கதவுகளை உடைத்து விடுமோ என்று எண்ணத் தோன்றும் அளவுக்கு இருந்தது ரசிகர்களின் அதிர்வுகள்.. “None other than the one and only Super star RAJINIKANTH” என்று சங்கீதா சொன்னவுடன் glitters காற்றில் பறந்தது. கலர் paperகள் தூவப்பட்டன.. “தலைவா….” என்று ஒவ்வொரு ரசிகனும் தன் ஆழ் மனதிலிருந்து அன்பை வெறித்தனமாக வெளிப்படுத்தினார்கள், நண்பர் கமல் ரஜினியை கீழே கட்டி அனைத்துவிட்டு மேடைக்கு அனுப்பி வைத்தார்!!.. IOFI cine Legend award டினை நண்பர் BigB யிடம் இருந்து பெற்றார் ரஜினி.
மெதுவாக பேச ஆரம்பித்தார் ரஜினி: விழாவுக்கு வந்திருக்கும் ரசிகர்களே, பத்திரிகை நண்பர்களே, … (இன்னும் பலர்…), கடைசியாய் “என்னை வாழ வைத்த தெய்வங்களான தமிழக மக்களே” என்ற வார்த்தையை சொல்லும்போது உண்மையாகவே கைதட்டலில் அரங்கம் அதிர்ந்தது. அதிகம் பேச நேரம் இல்லை, எனவே சொல்ல வேண்டிய கருத்தை சீக்கிரம் சொல்லிடுறேன். Mr.Mahesh Yadhav is a good man. kind hearted man.. எப்டி எப்டி இவளோ பெரிய success அவருக்கு கிடைசுதுன்னு பார்த்தா… அதுக்கு காரணம் அவருடைய தன்னடக்கம். சாதாரண தையல் காரனா இருந்தவரு இன்னைக்கி ஒரு மிகப்பெரிய லக்ஷ்மிகரமான IOFI நிறுவனத்தை உருவாக்கி இருகாருன்னா அது சாதாரண விஷயம் இல்லை நண்பர்களே.. மிகுந்த தன்னடக்கம் வேண்டும். அதைப்பற்றி ஒரு சின்ன குட்டி கதை ஒன்றை இன்றைய தலைமுறைக்கு சொல்லிக்குறேன் சொல்லிகுறேன்: ஒரு நாள் midnight ஒரு இளைஞன் நல்லா தண்ணி அடிச்சிட்டு மொட்டை மாடியில் போய் உட்காருறான். அப்போ மேல அண்ணார்ந்து பார்க்கும்போது அவனுக்கு நிலா தெரியுது. அதுவும் நல்ல வெளிச்சமா தெரியுது. அவன் மனசுக்குள்ள சில விரக்தி. திறமை அதிகம் இருந்தும் கொஞ்சம் வாய் ஜாஸ்தி அவனுக்கு. அவன் மேலதிகாரிங்க கிட்ட ஒத்து போக மணசு இல்லாம வீராப்பு தான் பெருச்சுன்னு வேலைய விட்டுட்டு வந்து நிலாவ பார்த்து சொல்லுறான் …. “ஏய்ய் எதுக்கு இப்போ உன் மிதமான வெளிச்சத்தை காமிச்சி நீ ரொம்ப அழகுன்னு தெரியப் படுத்திக்குற? வேற வேலை இல்ல உனக்கு? அதான் கவிஞன் முதல் காதலர்கள் வரை உன்னை புகழ்ந்து தள்ளுரான்களே, என்னை மாதிரியா உன் நிலைமை.? வேற எங்கயாவது போ என் முன்னாடி வராத போ போ” னு அவன் ரொம்ப feel பண்ணி நிலாவிடம் பேசுறான்….
அப்போது நிலா அவனுக்கு அழகாக பதில் சொன்னது.. “அடேய் அற்ப மானிடா, நீ இருக்குற பூமியில பகல் நேரத்துல சுட்டு எரிக்குற சூரியனைத்தான் டா நானும் தினமும் வணங்குறேன். என் கிட்ட ஒரு மிதமான வெளிச்சம் வருதுன்னு சொல்லி அதை வர்னிச்சி இன்றைக்கு கவினர்களும் காதலர்களும் என்னை பாரட்டுராங்கன்ன நான் அந்த சூரியனை வணங்கி அவன் குடுக்குற வெளிச்சத்தை உள் வாங்கித்தான் உனக்கு இந்த மிதமான வெளிச்சத்தை குடுக்குறேன். அந்த தன்னடக்கம் எனக்கு சூரியன் கிட்ட இருக்கு, அது போல உன் கிட்ட நிறைய திறமை இருக்கு, ஆனா தன்னடக்கம் இல்ல, நான் தான் எல்லாரையும் விட பெரியவன் ன்னு நினைச்சி அகந்தையில உன்னை நீயே தொலைச்சிக்குற. தன்னடக்கதுடன் உன் வேலையை நாளை காலை தொடங்கு, அப்புறம் பார் உன்னை மற்றவர்கள் எப்படி தலையில் தூக்கி வைப்பார்கள்” என்று நிலா அன்று இரவு பேசியதில் இருந்து அந்த மனிதனுக்கு ஒரு ஞானோதயம் வந்தது, மிகுந்த தன்னடக்கத்துடன் வேளைகளில் ஈடுபட்டார், பல வெற்றிகளைக் கண்டார். என் நிஜ வாழ்க்கையில் ஒரு நண்பர் இப்படி நான் வளர்ந்து வருவதைப் பார்த்து இருக்கிறேன் நண்பர்களே. (சில நொடிகள் மௌனம்…பிறகு கண்களை மூடி தொடர்ந்தார்…) Yes… yes…. அந்த குணாதிசயத்தை நன் அவருடைய மகன் Raghav கிட்டயும் எந்திரன் படத்துல பணி புரியும்போது பார்த்திருக்கிறேன். definately… definately IOFI இன்னும் மேல போகும் னு சொல்லி இறைவனை பிரார்த்தனைப் பண்ணிகுறேன். நன்றி வணக்கம். – என்று பேசி முடித்து தனக்கே உரிய மின்னல் வேக நடையில் மேடையை விட்டு கீழே இறங்கினார் தலைவர் ரஜினி. – அப்போது ரஜினியின் தீவிர ரசிகயான சங்கீதா மேடையிலேயே ரஜினியிடம் autograph வாங்கி பத்திரமாக வைத்துக்கொண்டாள். அப்போது ரஜினி சங்கீதாவிடம் கூறிய வார்த்தைகள்.. “you did a fantastic job.. ஆ…ஹா ஹா ஹா..” என்று தனக்கே உரிய அந்த மந்திர சிரிப்பைக் குடுத்துவிட்டு மேடையில் இருந்து நொடிகளில் மறைந்தார் ரஜினி. Thank you Dear Super Star ரஜினி. இப்போது ஆடிட்டோரியம் இருக்கைகளில் இருந்து மக்கள் அனைவரும் எழுந்து அங்கும் இங்கும் நடமாடிக் கொண்டிருந்தார்கள். Dear audience, இப்போ விழா நிறைவுக்கு வருகிறது. அமைதி காத்து விழாவை ரசித்த அனைவருக்கும் எனது அன்பான வணக்கங்கள் மற்றும் நன்றிகள். என்று கூறி விழாவை நிறைவு செய்துவிட்டு, பின்னாடி சஞ்சனா இருக்கும் இடத்தில் யாரோ சங்கீதாவை முகத்தை மூடி உத்து பார்த்து ஒரு சிறிய காகிதத்தில் ஏதோ எழுதுவது போல தெரிந்தது. என்ன வென்று பார்க்க மெதுவாக அங்கே சங்கீதா செல்லும்போது வெடுக்கென அங்கிருந்து ஓடினான் ஒருவன். உடனே பதறிப்போய் ரகாவ்க்கு mobile phone ல் கால் செய்து “Raghav I need you immediately, please come here” என்று urgent ஆக அழைக்க ராகவ் மேடையின் பின் புற வாசலுக்கு விரைந்தான். சங்கீதா ராகவுக்கு ஒரு துண்டு காகிதத்தில் ஓடினவன் எழுதியதைக் காட்டினாள். அதில் “I am that un known number..I wanted to conv…” ஓடுவதற்கு முன்பு பாதி எழுதியது அப்படியே இருந்தது.
எந்தப் பக்கம் ஓடினான் – என்றான் ராகவ் படபடப்புடன். இந்த பக்கம்…. lets go.. sanjana, please take care of the guests here please – என்று அவசரமாக கூறி விட்டு ராகவ் சங்கீதாவை பிடித்து இழுத்துக்கொண்டு. ஓடினவன் திசையை நோக்கி செல்லும்போது வழியில் உள்ள தனது BMW காரை திறந்து சந்கீதவையும் அதனுள் அமரச் செய்து, தானே ஓட்டி சென்றான்.. உடனே தனது personal security guards க்கு அழைப்பு விடுத்தான், main gate அனைத்தையும் மூட சொன்னான். எப்படியும் வேகமா அவன் ஓடினா க் கூட மெயின் gate கிட்ட அவனைப் பிடிச்சிடலாம்… – என்று அனைத்து கூட்டமும் உள்ளே இருக்க இருட்டில் head light போட்டு IOFI வளாகத்துக்குள்ளேயே ஒடுபவனை துரத்தினான் ராகவ். அதோ… தெரியுதே கருப்பு பர்தாவுல ஒருத்தன் ஓடுறான் – என்று காரின் head light வெளிச்சத்தில் தெரியும் உருவத்தைப் பார்த்து, உடல் வியர்க்க பட படத்து கை காமித்து பேசினாள் சங்கீதா. good catch sangeetha…. – என்று ராகவ் சொல்லிக்கொண்டே காரின் வேகத்தை இன்னும் அசுர வேகத்துக்கு accelaretor ஐ அழுத்தி பறந்தான். லேசாக ஒடுபவனின் உடலின் மீது இடித்து விட்டு அவன் கீழே விழும் வண்ணம் செய்து அவனருகே சென்றான் ராகவ். அப்போது சங்கீதாவுக்கு பயம் உச்சத்துக்கு சென்றது.. Raghav dont go alone pleaseeee – கத்தி கதறினாள் சங்கீதா. ராகவ் எதற்கும் அஞ்சாமல் தில்லாக அந்த உருவம் அருகே சென்று அவன் கழுத்தை பிடித்து சுவரின் மீது தள்ள அந்த உருவம் முடிந்த வரை ராகவ் மீது ஒரு குத்து விட்டது. சும்மா சொள்ளக்கூடாது, நிஜமாவே நல்ல குத்துதான், ஆனால் ராகவ் பலத்துக்கு ஈடு இல்லை, தன் கை புறம் சட்டையை மடித்துக் கொண்டு விழும் அடிகளை துல்லியமாக தடுத்து gap கிடைத்த கண நேரத்தில் ஓங்கி தனது முஷ்டியை மடக்கி தனது கணமான bracelet டை இழுத்து வைத்து அந்த உருவத்தின் முகத்தில் சரமாரியாக குத்தினான், ஒரு கட்டத்தில் அவன் கரங்களில் லேசான ரத்தம் தெரிந்தது, அடி வாங்கிய உருவத்துக்கு ராகவை எதிர்க்கும் சக்தி இல்லை. மயங்கி தரையில் விழுந்தவன் முகத்தினில் இருக்கும் கருப்பு துணியை ராகவ் எடுக்கையில் அவனது முகம் பார்த்து சங்கீதா பதரிப்போனாள்…. அ..அட…( வார்த்தைகள் வரவில்லை அவளுக்கு…. ) அடப்பாவி ( கண்களில் கண்ணீர் வழிந்தது சங்கீதாவுக்கு) நீயா? நீயா இதுல சம்மந்த பட்டிருக்க?… என்று மணம் நொந்து அவன் அருகே சென்று முகம் பார்த்து பேச, ராகவ் அமைதியாய் சங்கீதாவிடம் “யார் இவன்?” என்று கேட்க இவன் … இவன் என் bank ல வேலை பார்க்குற puen Gopi. – என்று சொன்னதும் ரகாவ்கும் மனது ஒரு நிமிடம் உலுக்கியது…. அமைதியாய் இருந்தான். இப்போது puen gopi பேசினான்.. மேடம்… – (மூச்சு வாங்கியது gopi க்கு…. ரகாவின் அடிகள் ஒவ்வொன்றும் எலும்பை முறிக்கும் அடிகள்) “என்ன சொல்லுடா”… – சங்கீதா அழுதாள், காரணம் அவனைப் பற்றி அவளுக்கு நன்றாக தெரியும். இவன் தவறான வழியில் செல்பவன் அல்ல. மேடம், நீங்க involve ஆகி fake money பத்தி கண்டுபுடிக்குற விஷயத்துல நிறைய பெரிய ஆளுங்க பின்னாடி இருகாங்க, அவங்களால உங்களுக்கு எந்த கஷ்டமும் வந்துடக்கூடாதுன்னு தான் நான் இந்த மாதிரி மெசேஜ் அனுப்பி உங்களை பயபடுத்தி விலக வெச்சிடலாம்னு நினைச்சேன். ஆனா நீங்க விடாம வந்து என்னை துரத்தி பிடிச்சிடீங்க. யார் அவங்க? – சங்கீதா படபடப்புடன் கேட்டாள். ராகவும் சங்கீதாவுக்கு உதவியாக அவனிடம் வந்து யாரா இருந்தாலும் சொல்லு, நான் பார்த்துக்குறேன். – என்று ராகவ் சொல்லும்போது gopi பேசினான். sir, உங்களுக்கும் இதுல பிறர்ச்சினை அதிகம் வரும் சார், கண்டுக்காம விட்டுடுங்க நான் சொன்னா கேளுங்க ப்ளீஸ்.. பின்னாடி ராகவின் personal guards வந்து இறங்க gopi அவசரமாக ஒரு விஷயத்தை சொன்னான். sir, இப்போ நான் உங்க கிட்ட இப்படி பேசிட்டு இருக்குரதைப் பார்த்தாலே என்னை தீர்த்துடுவாங்க sir, தயவு செய்து என்னைக் காப்பாத்துங்க.. என்னை கண்காணிக்குரவங்க யார் வேணும்னாலும் இருக்கலாம், பின்னாடி வர உங்க security ல கூட ஒருத்தனா இருக்கலாம். please என்னைக் காப்பாத்துங்க.. என்று கதற சங்கீதா ராகவை ப் பார்த்து ஏதாவது செய் ராகவ் என்றாள் -அழுதுகொண்டே.. ராகவ் உடனே தனது கார் சாவியை எடுத்து தனது நெஞ்சில் சற்றும் யோசிக்காமல் குத்தி கீரிக்கொண்டான், லேசாக ரத்தம் ஒரு கோடு போல வந்தது, உடனே gopi யிடம் “சுவரை குதிச்சி ஓடிடு..நீ எண்ணை தாக்கிட்டு ஓடிட்ட னு நான் மத்தவங்களுக்கு சொல்லிடுறேன்… ஓடு ஓடு” என்று செய்கை காமித்து தப்பிக்க வைத்து விடுகிறான். guards வந்த உடனே இஸ்ஆஆஆ… அம்மா… வலிக்குதே.. என்று நன்றாக நம்பும் படியாக துல்லியமாக நடித்து மற்றவர்களையும் நம்ப வைத்தான் ராகவ். என்ன சார் ஆச்சு, யார தேடிக்குட்டு வந்தீங்க, சொல்லுங்க நாங்க இருக்கோம் பிடிச்சிடுறோம் – என்று guards உடலை முருக்கினார்கள். நான் ஒருத்தனை பிடிக்க வந்தேன், தடுக்கி விழுந்ததுல கல்லு குத்திடுச்சி, leave it please, I will handle it – என்று சொல்லி சந்கீதாவை மீண்டும் தனது காரில் அமர வைத்து guards ஐ திருப்பி அனுப்பி விட்டான் ராகவ். ஒரு பக்கம் gopi யை விட்டது சரி இல்லை என்று அவனது மணம் கூறினாலும் மறு பக்கம் மற்ற பெரிய முதலைகளைப் பிடிக்க இவன்தான் Key என்று ஒரு குரல் அழுத்தமாக சொன்னது அவனுக்குள். இப்போது சங்கீதாவை தனது தோளில் உரிமையாய் சாய்த்து calm down செய்த ராகவ் மீது கை வைத்து சங்கீதாவும் சாய்தாள். சங்கீதா cool down… nothing is going to be problamatic. கண்டு பிடிக்கலாம். இதுக்கெல்லாம் அசருற பொம்பளைய நீங்க?.. என்று அவன் சொலும்போது “தயவு செய்து மார்புல கீரின இடத்துல மருந்து போடு ராகவ் ப்ளீஸ்….” என்று அழுது கொண்டே அக்கறையாக பேசினாள் சங்கீதா. போடலாம்…. ஆனா அதை என் தேவதைப் போட்டா நல்ல இருக்கும் னு யோசிச்சேன்…. – என்று ராகவ் சொல்லும்போது மேடையில் அவன் படித்த தேவதை கடிதம் நியாபகம் வந்து யார் அது?… எனக்கு இப்போ சொல்லணும். என் கிட்ட கூட சொல்ல க் கூடாதா?…. – என்று சங்கீதா உரிமையுடன் கேட்க்கும்போது மெளனமாக அவள் கண்களைப் பார்த்து சிரித்தான் ராகவ்.
என்ன சிரிப்பு வேண்டி கெடக்குது, சொல்ல போறியா இல்லையா? அந்த தேவதயோட பேரு அந்த கவிதைலையே ஒழிஞ்சி இருக்கே… உங்களுக்குக் கூடவா தெரியல? – என்று சொல்லி தனது pocket உள்ளே இருக்கும் அந்த கவிதை எழுதின காகிதத்தை சங்கீதாவின் கையில் குடுத்தான் ராகவ். ஒரு புறம் மனதில் பொறாமை அதிகமாக இருந்தாலும் யாரென்று தெரிந்து கொள்ள ஆவலுடன் காகிதத்தைப் பிரித்தாள் சங்கீதா.. இதுல என்னடா இருக்கு? பின்னாடி திருப்பிப் பாருங்க…. தேவதையின் பெயர் ஒவ்வொரு இயற்கைக்கும் குடுத்த விளக்கத்தின் முதல் எழுத்துகளை கூட்டினால் வரும் என்று எழுதியதைப் பார்த்து மீண்டும் காகிதத்தை திருப்பி கவிதையைப் படித்தாள் சங்கீதா…