Tuesday, May 5, 2015

அக்னி சாட்சி - அத்தியாயம் - 27

Monday, 22 February 2010 - திங்கள், ஃபிப்ரவரி 22

திங்கள் காலை ஒன்பது மணிக்கே அலுவலகத்தை அடைந்த ஆனந்த் அடிக்கடி விக்ரம் ஷாவின் கேபினுக்கு வந்து அவரது காரியதரிசியிடம் அவர் வந்து விட்டாரா என விசாரித்த படி இருந்தான்.

பத்தரை மணியளவில் அவரது அறையில் ஆள் நடமாட்டத்தைக் கண்டவன் காரியதரியைக் கேட்காமல் கதவைத் திறக்க, உள்ளே அமர்ந்து இருந்த அவன் இதற்கு முன் பார்த்திராத இரு நபர்களில் ஒருவர், "ஏஸ், கேன் ஐ ஹெல்ப் யூ"

ஆனந்த், "ஐ அம் லுக்கிங்க் ஃபார் மிஸ்டர் ஷா"

அந்த நபர், "நாங்களும் அவருக்குத்தான் வெய்ட் பண்ணிட்டு இருக்கோம்"

ஆனந்த், "ஓ சாரி ஃபார் டிஸ்டர்பிங்க்" என்ற படி வெளியில் வந்த காரியதரிசியிடம், "சாரி, உன் கிட்டே கேட்காம உள்ளே போயிட்டேன். எனக்கு அவசரமா விக்ரம் ஷாவைப் பார்க்கணும் அதனாலதான்"



காரியதரிசி, "இன்னும் ஹாஃப் அவர்ல வரதா சொல்லி இருக்கார்"

ஆனந்த், "உள்ளே இருக்கறது யாரு?"

காரியதரிசி ஒரு பிரபலமான ஆடிட்டிங்க் நிருவனத்தின் பெயரைச் சொல்லி அதில் இருந்து அவர்கள் வந்து இருப்பதாக சொன்னாள். ராம்பத்ர ராவ் சொன்னது சரி என ஆனந்த் உணர்ந்தான். சற்று நேரத்துக்குப் பிறகு சிவா அவனை ஸெல்ஃபோனில் அழைத்தான்.

சிவா, "ஆனந்த், விக்ரம் ராவ் நந்தகுமார் ரெண்டு பேரும் ஆஃபீஸுக்கு வந்து இருக்காங்களா?"

ஆனந்த், "இல்லை சிவா. உங்க அப்பாவோட ஆளுங்க தேடிட்டு இருக்காங்கன்னு சொன்னீங்களே?"

சிவா, "உங்க பில்டிங்குக்கு வெளியில் நின்னு நோட்டம் விட்டுட்டு இருக்காங்க. ஆனா அவங்க கண்ணுக்கு இதுவரைக்கு அகப் படலை"

ஆனந்த், "வந்தார்ன்னா சொல்லறேன்" என பொய் சொல்லி விடைபெற்றான்

சற்று நேரத்தில் விக்ரம் ராவ் அலுவலகத்தின் பின் புறத்தில் இருந்து தன் கேபினைக் கடந்து அவரது அறையை நோக்கிச் செல்வதைக் கண்டான். சில கணங்களில் ப்ரீதி அவனை இன்டர்காமில் அழைத்தாள்

ப்ரீதி, "ஆனந்த், இவ்வளவு நாளும் பூட்டி இருந்துச்சே அந்த கான்ஃபரன்ஸ் ரூம்? அதுக்கு உள்ளே இருந்து விக்ரம் ஷா வந்தார். பார்த்தியா?"

ஆனந்த், "அவர் அந்த ரூமில் இருந்து வர்றதைப் பார்க்கலை. பட் என் கேபினை தாண்டிப் போறதைப் பார்த்தேன்"

ப்ரீதி, "நெட்டில் கனெக்ட் பண்ணறாரான்னு பார்க்கறையா?"

ஆனந்த், "இல்லை. அவர் கொஞ்சம் செட்டில் ஆகட்டும். நான் கொஞ்ச அந்த கான்ஃபரென்ஸ் ரூமை செக் பண்ணறேன். என்னைப் பார்த்தாலும் நீ கண்டுக்காம இரு"

ப்ரீதி, "ஆனந்த், ஜாக்கரதை .. நேக்கு பயமா இருக்கு"

ஆனந்த், "டோண்ட் வொர்ரி ஹனி. நான் உன்னை அப்பறமா கூப்படறேன்"

ஆனந்த் யாரும் கவனிக்காத வண்ணம் அந்த கான்ஃபரென்ஸ் ரூமை அடைந்து அதன் கதவைத் திறக்க முயன்றான். அது மறுபடி பூட்டப் படாமல் இருக்க உள்ளே நுழைந்தான். சுவற்றில் முன்பு பொருத்தி இருந்த வீடியோ கேமராக்கள் அகற்றப் பட்டு ஆங்காங்கே சுவற்றில் ஓட்டைகள் இருந்தன. ஒரு மூலையில் இன்னும் ஒரு கதவு இருந்தது. அந்தக் கதவைத் திறந்து பார்க்க அந்த அலுவலகத்துக்கு பின் புறம் இருந்த ஒரு காரிடோரில் தான் இருப்பதை உணர்ந்தான். அருகே பின் புறம் இருந்த லிஃப்ட் வாசல் இருந்தது. அந்த காரிடோரின் இரு மூலைகளில் ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத இரு அலுவலகங்கள் இருந்தன. எங்கு இருந்து விக்ரம் ஷா வந்து இருக்க முடியும் என யோசித்தபடி மறுபடி வந்த வழியே திரும்பச் சென்று தன் இருக்கையை அடைந்தான். அவனது இன் டர்காம் சிணுங்கிக் கொண்டு இருப்பதைக் கண்டான்.

எடுத்து "ஆனந்த் ஹியர்" என பதிலளிக்க ..

விக்ரம் ஷா, "என்ன ஆனந்த்? என் கேபினுக்கு வந்து இருந்தியாமே?"

ஆனந்த், "ஆமா சார். வெள்ளிக் கிழமை டீம் டின்னரப்போ சுகுமார் என் அசைன்மெண்ட் முடியப் போகுதுன்னு சொன்னார். அதைப் பத்தி கேட்கலாம்ன்னு வந்தேன்"

விக்ரம் ஷா, "என்ன ஆனந்த்? நீ லாஸ்ட் டைம் என் கிட்டே எப்படா முடியும்ன்னு இருக்குன்னு சொன்னே?"

ஆனந்த், "ஆமா சார். என்னைக்கு ரிலீவ் பண்ணுவீங்கன்னு தெரிஞ்சா .. "

விக்ரம் ஷா, "நான் இன்னும் மெயிலை செக் பண்ணலை. ஆக்சுவலா உன்னை அனுப்பிய கம்பெனிக்கு அதைப் பத்தி மெயில் பண்ணி இருந்தேன். வந்ததில் இருந்து விசிட்டர்ஸ் கூட இருந்தேன். கொஞ்சம் டைம் கொடு மெயில் செக் பண்ணிட்டு சொல்லறேன்"

ஆனந்த், "மெயில் பண்ணுங்க சார் போதும்"

விக்ரம் ஷா, "டன்" என விடைபெற்றார்

அவர் நெட்வொர்க்கில் தன் லாப்டாப்பை இணைக்கப் போகிறார் என்பதை உணர்ந்தான். சற்று நேரத்தில் அவன் எதிர்பார்த்த படி விக்ரம் ஷா நெட்வொர்க்கில் இணைந்ததை அவனது மெஸ்ஸஞ்சர் மென்பொருள் அறிவித்தது. முதலில் அவரது ஐ.பி அட்ரெஸ்ஸை சரி பார்த்தான். அவர் அதில் மாற்றம் எதுவும் செய்து இருக்கவில்லை. உடனே ஸெல்ஃபோன் மூலம் ராம்பத்ர ராவுக்கு அதை தெரிவித்தான்.


அடுத்த அரை மணி நேரத்தில் ரிஸப்ஷனில் இருந்து அவனுக்கு இன்டர்காம் மூலம் அழைப்பு வந்தது

ரிஸப்ஷனிஸ்ட், "ஆனந்த், உங்களுக்கு ஒரு விசிட்டர். இங்கே வர்றீங்களா?"

ஆனந்த், "ரீடா, அவரை உள்ளே அனுப்பறையா?"

ரீடா, "இல்லை ஆனந்த். நோ விசிட்டர்ஸ் அலவ்ட்ன்னு பாஸ் சொல்லி இருக்கார்"

ஆனந்த், "சரி, நான் அங்கே வரேன்" என்ற பிறகு எழுந்து விக்ரம் ஷாவின் அறைக்குச் சென்றான். அறை வாசலில் இருந்த காரியதரிசியிடம், "ஒரே ஒரு நிமிஷம் அவர்கிட்டே ஒண்ணு கேட்கணும்"

காரியதரிசி, "தெரியலை ஆனந்த். யாரும் டிஸ்டர்ப் பண்ணாக்கூடாதுன்னு சொன்னார்"

ஆனந்த், "Hey come on! என்னை அவருக்கு ரொம்பப் பிடிக்கும். ஒண்ணும் சொல்ல மாட்டார். ஒண்ணு செய். நீ ரெண்டு நிமிஷம் பாத்ரூமுக்குப் போயிட்டு வா. நீ உன் சீட்டில் இல்லாதப்ப நான் உள்ளே போறேன். உன்னை ஒண்ணும் சொல்ல முடியாது. Please dear" எனக் கொஞ்சினான்

முன் முப்பதுகளில் இருந்த அந்தக் காரியதரிசி நாணப் புன்முறுவலுடன் தன் முந்தானையை ஒதுக்கியபடி, "நீ என்னை வம்பில் மாட்டி விடப் போறே" என்றபடி எழுந்து சென்றாள். அவள் சென்றபிறகு அறைக்கதவை இரு முறை விரலால் தட்டிய பிறகு உள்ளே தலையை மட்டும் நுழைத்தான்.

ஆழ்ந்த உரையாடலில் இருந்த விக்ரம் ஷா எறிச்சலுடன் தலை நிமிர்த்த ஆனந்த், "வெரி சாரி மிஸ்டர் ஷா. உங்க செக்கரட்டரி சீட்டில் இல்லை அதான் பர்மிஷன் இல்லாம கதவைத் தட்டினேன். சாரி. என் அப்பாவோட ஃப்ரெண்ட் ஒருத்தர். ரொம்ப பெரிய மனுஷர். ரிடையர்ட் ஜட்ஜ். சில டாக்யுமெண்ட்ஸில் அவர்கிட்டே எங்க அப்பா சைன் வாங்கச் சொன்னார். நான் அவரைப் பார்க்கப் போயிருந்தப்போ அவர் ஊரில் இல்லை. மறுபடி வெளியூர் போறதா இருக்கார். இந்தப் பக்கம் வந்து இருப்பதால அவரே வந்து சைன் போட்டுட்டு போறதா சொன்னார். ரிஸப்ஷனில் உக்கார வெச்சுப் பேசிட்டு அனுப்பினா எங்க அப்பாகிட்டே இருந்து எனக்கு ஒதை விழும். நீங்க நோ விஸிட்டர்ஸ் அலவ்டுன்னு சொன்னீங்களாம். ப்ளீஸ் நான் அவரை என் கேபினுக்குக் கூட்டிட்டுப் போய் கொஞ்ச நேரத்தில் அனுப்பிடறேன். அலவ் பண்ணறீங்களா?" என்று அவரை தர்மசங்கடத்தில் ஆழ்த்தினான்.

விக்ரம் ஷா, "ஒரு முக்கியமான டிஸ்கஷன் நடந்துட்டு இருக்கு. வெளி நியூஸ் போகக் கூடாதுன்னுதான் அந்த ஏற்பாடு. உன் கேபினுக்குக் கூட்டிட்டுப் போய் சீக்கரம் பேசிட்டு அனுப்பிடு. நான் ரீடாவைக் கூப்பிட்டு சொல்லறேன்"

ஆனந்த், "தாங்கஸ் அ லாட் சார்" என விடைபெற்று ரிஸப்ஷனை அடைய ராம்பத்ர ராவ் விவரித்தது போல ஒரு முதியவர் அங்கு காத்து இருந்தார்

ஆனந்த், "ஹல்லோ அங்கிள். சாரி உங்களை வெய்ட் பண்ண வெச்சுட்டாங்க. உங்களை உள்ளே கூட்டிட்டுப் போறதுக்கு எம்.டி கிட்டே போய் பர்மிஷன் வாங்கிட்டு வந்தேன். அதான் கொஞ்சம் லேட்"

மூர்த்தி, "அதனால என்ன பரவால்லை ஆனந்த்"

ஆனந்த், "ரீடா, மிஸ்டர் ஷா உனக்கு சொல்லறேன்னு சொன்னார் .. " என இழுக்க

ரீடா, "சொன்னார் ஆனந்த், சீக்கரம் அவரை ... "

ஆனந்த, "நோ ப்ராப்ளம் ரீடா" என்ற படி அவரை அழைத்துக் கொண்டு தன் கேபினுக்குச் சென்றான். செல்லும் வழியிலேயே தன் இருக்கையில் ப்ரிண்டர் இல்லாததை உணர்ந்தான்.

ப்ரீதியை செல்ஃபோனில் அழைத்தான்

ஆனந்த், "ப்ரீதி, உனக்குத் தனிப் பிரிண்டர் இருக்கா?"

ப்ரீதி, "ஓ காட்! நேத்து அதைப் பத்தி யோசிக்கவே இல்லை. இந்த ஆஃபீஸில் தனி ப்ரிண்டர் விக்ரம் ஷாவுக்கு மட்டும்தான். எல்லாரும் நெட்வொர்கில் கனெக்ட் ஆயிருக்கும் பெரிய ப்ரிண்டரைத்தான் யூஸ் பண்ணனும்"

ஆனந்த், "சரி, இன்னும் ரெண்டு நிமிஷத்தில் நான் ப்ரிண்ட் கமாண்ட் கொடுப்பேன். நீ ப்ரிண்டருக்குப் பக்கத்திலேயே வெய்ட் பண்ணிட்டு இருக்கு. ப்ரிண்ட் ஆன உடனே என் கேபினுக்கு எடுத்துட்டு வா. இன்னொரு விஷயம் நான் ரெண்டு காப்பி ப்ரிண்ட் பண்ண கமாண்ட் கொடுக்கப் போறேன். ரெண்டையும் எடுத்துட்டு வா"

உடன் அவனது இருக்கையை அடைந்த மூர்த்தி, "எனி ப்ராப்ளம்?" என கிசு கிசுத்தார்

ஆனந்த், "இல்லை சார். ரெண்டு நிமிஷம்" என்ற படி தேவையான் ஆணைகளைப் பிறப்பித்தான் ...

ஆனந்த், "சாரி சார். இதை நான் முன்னாடியே எதிர்பார்த்து இருக்கணும்"

மூர்த்தி, "இட்ஸ் ஆல்ரைட். பயப்படாதே. நிதானமா செய்வோம்"

ஆனந்த், "மிஸ்டர் ராவ் உங்களுக்கு எங்க விஷயத்தைப் பத்தி ... "

மூர்த்தி, "எல்லாம் விவரமா சொல்லி இருக்கார். மேற்கொண்டு எதுவும் பேச வேண்டாம்"

சில நிமிடங்களில் ப்ரீதி ஒரு ப்ரிண்ட் அவுட் உடன் வந்தாள்.

ஆனந்த், "சார், இது என் ஃபியான்ஸே ப்ரீதி. ப்ரீதி திஸ் இஸ் மிஸ்டர் மூர்த்தி"

அறிமுகங்களுக்குப் பிறகு நேரம் கடத்தாமல் மிஸ்டர் மூர்த்தி ப்ரீதி கொண்டு வந்து இருந்த ப்ரிண்ட் அவுட் இரண்டிலும் ராம்பத்ர ராவ் சொன்னது போல் தன் கைப்பட எழுதி கையொப்பம் இட்டார். உடன் கொண்டு வந்து இருந்த தனது ரப்பர் ஸ்டாம்ப் முத்திரையை பதித்தார். இரு நகல்களில் ஒன்றை எடுத்து மடித்து தன்னுடன் எடுத்துக் கொண்டு எழுந்தார் ...

மூர்த்தி, "ஒரு காப்பி நான் எடுத்துட்டுப் போறேன். ராம் கொண்டு வரச் சொன்னார்"

ஆனந்த், "ஓகே சார். ரொம்ப தேங்க்ஸ்"

மூர்த்தி, "ஓ ப்ளீஸ் டோண்ட் பாதர். ப்ரீதி மாதிரி ஒரு நல்ல பொண்ணுக்கு ஹெல்ப் பண்ணறதில் எனக்கு ரொம்ப சந்தோஷம். பை ப்ரீதி" என அவளிடம் இருந்து விடைபெற்றார்.

திரும்ப அவரை அழைத்துக் கொண்டு அலுவலக வாசல் வரை வந்து வழியனுப்பி விட்டு தன் இருக்கையை அடைய இன்னும் ப்ரீதி அங்கேயே இருப்பதைக் கண்டான். அவன் இருக்கைக்கு எதிரில் இருந்த நாற்காலியில் அவன் அறையில் நுழையும் போது அவனுக்கு முதுகு காட்டி அமர்ந்து இருந்த ப்ரீதியை பின் புறம் வந்து இருந்து அவள் தோள்களைப் பற்றிய ஆனந்த் குனிந்து அவள் கன்னத்தில் முத்தமிட்டான் ...

பதட்டத்தில் எழ முயன்று தோற்ற ப்ரீதி, "ஏய் என்னது இது ஆஃபீஸ்ல .. "

ஆனந்த், "சாரி ஹனி. உன்னை நான் ரொம்ப ஹர்ட் பண்ணிட்டேன் இல்லை?"

ப்ரீதி, "ம்ம்ம் ... பரவால்லை. நானும் உன்னண்டே அப்படி கோச்சுண்டு இருக்கக் கூடாது. சரி, நமக்குத் தேவையான் .." என்றவளை சைகை காட்டி

ஆனந்த், "இட்ஸ் ஓகே ஹனி. சரி உன் சீட்டுக்குப் போ. லஞ்ச் டைமில் பேசலாம்"

அலுவகலத்தில் இருவரும் சேர்ந்து இருப்பதை ஆனந்த் தவிற்ப்பதை உணர்ந்த ப்ரீதி அவனுக்கு பதிலுக்குத் தலையசைத்த படி விடைபெற்றுச் சென்றாள்




மதிய உணவுக்கு அவளை முதன் முதலில் அழைத்துச் சென்ற உணவகத்துக்கு அழைத்துச் சென்றான் ..

ஆனந்த், "இந்த ரெஸ்டாரண்ட் ஞாபகம் இருக்கா?"

ப்ரீதி, "ம்ம்ம் ... அன்னைக்குத் தானே நீ நேக்கு பர்ஸனல் ஃபன் அட்வைஸரா அப்பாயிண்ட் ஆனே?"

ஆனந்த், "Did I do a satisfactory job?"

ப்ரீதி, "பேசாதே. எப்படி ஜாலியா இருக்கறதுன்னு சொல்லித் தரேன்னுட்டு என்னல்லாம் பண்ண வெச்சுட்டே"

ஆனந்த், "பட், ஜாலியா இருந்தியா இல்லையா?"

ப்ரீதி, "ஜாலியாத்தான் இருந்துச்சு. ஆனா மனசை உறுத்தறது ஆனந்த்"

ஆனந்த், "டியர், I understand completely. நேத்து நைட்டு உன்னை ட்ராப் பண்ணிட்டு என் ஃப்ளாட்டுக்குப் போனதுக்கு அப்பறம் ரொம்ப நேரம் தூக்கம் வரலை. யோசிச்சுட்டு இருந்தேன். எனக்காக நீ உன் வேல்யூஸ்ஸை விட்டுக் கொடுத்ததை நினைச்சேன். உண்மையை சொல்லறேன் டியர். எனக்கே ரொம்ப வெக்கமா இருந்தது"

ப்ரீதி, "பரவால்லை. நானும் சேந்துதானே என்ஜாய் பண்ணினேன். அதுக்காக நீ கவலைப் பட்டுண்டு இருக்காதே. பட், ஆனந்த் நம்ம அப்படி இருந்த விஷயம் உங்க அப்பா அம்மாவுக்குத் தெரிஞ்சா என்னை தப்பா நினைக்க மாட்டாளா?"

ஆனந்த், "கவலையே படாதே. இன்னேரம் எங்க அப்பா கெஸ் பண்ணி இருப்பார். தெரிஞ்சாலும் அம்மாவுக்கு சொல்ல மாட்டார். அப்படி தெரிய வந்தா அம்மா நிச்சயம் சந்தோஷப் பட மாட்டாங்க. ஆனா ரொம்ப வருத்தப் படவும் மாட்டாங்கன்னு நம்பறேன். என்னை அவங்களுக்கு நல்லா தெரியும். If at all they come to know I will take the complete blame. Ok?"

ப்ரீதி, "ஐ லவ் யூ ஆனந்த்"

ஆனந்த், "ஐ லவ் யூ மச் மோர் ஹனி"

உணவு அருந்தும் போது ...

ப்ரீதி, "ஆனந்த், அந்த கான்ஃபெரன்ஸ் ரூமுக்குப் போனியே என்ன பாத்தே?"

ஆனந்த், "சீக்கரம் சாப்பிடு. போய் ஒரு விஷயம் வெரிஃபை பண்ணனு்ம்"

சாப்பிட்டு முடித்து அலுவலகத்துக்குச் சென்ற போது ...

ஆனந்த், "ப்ரீதி, நீ விக்ரம் ஷா கேபினில் இருக்காரா. லஞ்சுக்குப் போயிருக்காரான்னு பாத்துட்டு வா. நான் வெளியில் நிக்கறேன்"

சில நிமிடங்களுக்குப் பிறகு வந்த ப்ரீதி, "அவர் இன்னும் கேபினில் தான் இருக்கார். வெளியில் இருந்து லஞ்ச் கொண்டு வந்து இருக்காங்க. அவர் கேபில் இருக்கும் கான்ஃபரென்ஸ் டேபிளில் அவரும் அந்த ரெண்டு விஸிட்டர்ஸும் சாப்பிட்டுட்டு இருக்காங்க. இன்னொரு விஷயம். இட் ஸீம்ஸ் நந்தகுமார் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வந்தானாம். அவனும் அவங்ககூடத்தான் இருக்கான்"

ஆனந்த், "குட். என் கூட வா" என்று அவளை அழைத்துக் கொண்டு அந்தத் தளத்தின் அவர்களது அலுவலகத்துக்குப் பின் புறம் இருக்கும் காரிடோரை அடைந்தான். அந்த காரிடோரை அடைய முன்பு கான்ஃபரென்ஸ் ரூமில் இருக்கும் கதவுக்கு அருகே வந்த பிறகு ...

ஆனந்த், "This door directly leads to that conference room"

ப்ரீதி, "அப்படின்னா பின்னாடி இருந்து எங்க ஆஃபீஸுக்கு உள்ளே வரதுக்கு வழி இருக்கா? எதுக்கு?"

ஆனந்த், "எதுக்குன்னு அப்பறம் பார்க்கலாம். இன்னைக்கு காலைல விக்ரம் ஷா எப்படி ஆஃபீஸுக்கு உள்ளே வந்தார்ன்னு முதல்ல பார்க்கலாம்"

ப்ரீதி, "It is obvious இந்த வழியா வந்து இருப்பார்"

ஆனந்த், "What is not obvious is ... ஆஃபீஸ் வாசலை மிஸ்டர் ரெட்டியின் ஆளுங்க தொடர்ந்து நோட்டம் விட்டுட்டு இருக்காங்க. அவர் ஆஃபீஸ் முன் வாசல் வழியா வரலை. ஸோ எப்படி வந்து இருப்பார்?"

இருவரும் அந்தக் காரிடோரின் ஒரு கோடியில் இருந்து மறு கோடி வரை நடந்த சென்று பார்த்தனர். அந்தக் காரிடோரில் இருந்து கட்டிடத்தின் முன் பகுதியில் இருந்து அங்கு வருவதற்க்கான வழிகள் மட்டுமே அவர்களுக்குப் புலப்பட்டன.

ப்ரீதி, "ஒரு வழியா இந்த லிஃப்டில் வந்து இருப்பாரோ?"

ஆனந்த், "நிச்சயம் லிஃப்டில் தான் வந்து இருக்கணும். அவர் கால்நடையா ஆறு மாடி ஏறி வந்து இருக்க மாட்டார். பட் மை டியர். க்ரவுண்ட் ஃப்ளோரில் இந்த லிஃப்டுக்கு வரதுக்கும் பில்டிங்க் வாசல் வழியாத்தான வரணும். இல்லையா?"

ப்ரீதி, "நான் அதைச் சொல்லலை. அவர் மேல் ஃப்ளோரில் இருந்து வந்து இருந்தா?"

ஆனந்த், "என்ன சொல்லறே?"

ப்ரீதி, "ஐ மீன் மொட்டை மாடியில் இருந்து. இந்த பில்டிங்கின் முன்னாடி விங்க் எல்லாம் ஆஃபீஸ். பின்னாடி விங்கில் அப்பார்ட்மெண்ட்ஸ். பின்னாடி விங்கில் இருந்து இங்கே வரதுக்கு மொட்டை மாடியில் மட்டும்தான் வழி இருக்கு. இல்லைன்னா கீழே க்ரவுண்ட் ஃப்ளோர் போய் பில்டிங்கை சுத்திட்டு வரணும்"

ஆனந்த், "காட்! விக்ரம் ஷா பின்னாடி விங்கில் இருக்கும் ஒரு அப்பார்ட்மெண்டில் தங்கி இருக்கணும். அதான் அவர் ரெட்டியின் ஆளுங்க கண்ணில் படலை"

ப்ரீதி, "மொதல்ல மிஸ்டர் ராவ்கிட்டே ஃபோனில் சொல்லு. ரெய்ட் வரச்சே அவர் இந்த வழியா தப்பிப் போயிடப் போறார்"

ஆனந்த், "சொல்றேன். ஆனா, ரெய்ட் வரச்சே தப்பிப் போக மாட்டார். அப்படிப் போனா அவர் எந்த ஊருக்குப் போனாலும் மாட்டிப்பார். இந்தக் கம்பெனியை இன்னும் அவர் வித்து முடிக்கலை. எப்படியும் ஒண்ணு ரெண்டு மில்லியனாவுது எதிர்பார்த்துட்டு இருப்பார். அவ்வளவு பணத்தை விட்டுட்டுப் போக மாட்டார்"

~~~~~~~~~~~~~~
மாலை ....

ப்ரீதி, "என்ன இன்னும் பிஸியா வொர்க் பண்ணிண்டு இருக்கே?"

ஆனந்த், "ம்ம்ம் ... சொல்ல மறந்துட்டேனே. இன்னைக்கு காலைல விக்ரம் ஷாகிட்டே எப்போ ரிலீவ் பண்ணப் போறீங்கன்னு கேட்டேன். அவர் க்ளையண்டுக்கு மெயில் பண்ணி இருக்கேன் பதில் வந்தா சொல்லறதா சொன்னார். மனுஷன் சொன்ன மாதிரி அத்தனை வேலைக்கும் நடுவில் மெயில் அனுப்பி இருக்கார். நான் எப்போ ரிலீவ ஆனாலும் ஓ.கேன்னு க்ளையண்ட்கிட்டே இருந்து பதில் வந்து இருக்கு. இதுக்கு நடுவில் அந்த மெயில் இன்டர்ஸெப்ட் ஆகி எஃப்.பி.ஐக்கு ஆடோமேட்டிக்கா ஒரு காப்பி போயிருக்கு. என்னை இங்கே அனுப்ப ஏற்பாடு செஞ்ச எஃப்.பி.ஐ ஏஜண்ட் ஷான் ஹென்றி நட்ட நடு ராத்திரின்னும் பாக்காம உடனே என்னை ஃபோனில் கூப்பிட்டார். ஒரு சின்ன அப்டேட் கொடுத்தேன். நாளைக்கே எஃப்.பி.ஐயும் விக்ரம் ஷா மேல ஆக்ஷன் எடுக்கச் சொல்லி இண்டியன் கவர்ன்மெண்ட் ஏஜன்ஸியான RAWவை அணுகப் போறாங்களாம். அந்த ஏஜன்ஸியில் NTRO அப்படின்னு ஒரு பிரிவு இருக்காம். அந்த பிரிவும் அடுத்த ஒண்ணு ரெண்டு நாளில் விக்ரம் ஷாவைத் தேடி வரும்"

ப்ரீதி, "ஆனந்த், நேக்கு ரொம்ப பயம்மா இருக்கு"



ஆனந்த், "உனக்கு எதுக்கு பயம்?"

ப்ரீதி, "என்னவோ தெரியலை. I can't explain"

ஆனந்த், "ம்ம்ம் ... Woman's intuition .. "

ப்ரீதி, "கோவிலுக்குப் போலாமா?"

ஆனந்த், "சரி வா"

கோவிலுக்கு சென்று வந்த பிறகு ப்ரீதியை அவளது விடுதியில் விட்டு தன் ஃப்ளாட்டுக்குச் சென்றான்.

அடுத்த நாளை இருவரும் ஆதங்கத்துடனும் ஆவலுடனும் எதிர்பார்த்த படி இறவைக் கழித்தனர்.

அந்த நகரின் மற்ற ஒரு மூலையில் ரெட்டியின் வீட்டில் எல்லோரும் உறங்கி இருக்க ஒரு மூலையில் அமர்ந்து இருந்த 
செல்வி சிவா இருவர் மனத்திலும் ஆதங்கம் நிறைந்து இருந்தது .... 



No comments:

Post a Comment