Wednesday, June 25, 2014

சங்கீதா - இடை அழகி 18


Raghav, சஞ்சனா, சங்கீதா, மூவரும் அறையில் அமர்ந்து இருக்கையில், Raghav சஞ்சனவிடம் “நீங்க இப்போதிக்கு இங்கே இருக்க வேண்டாம், நம்முடைய Garments க்கு போக வேண்டிய டெலிவரி details எல்லாம் கொஞ்சம் செக் பண்ணுங்க, இப்போ இங்கே நானும் சங்கீதா மேடம் மும் பேசப்போவது யாருக்கும் தெரியக்கூடாது, அதனால கொஞ்சம் கதவை மூடிவிட்டு போங்க” என்பது போல் வாயால் சொல்லாமல் ஜாடை காமிக்க, சரி என்பது போல தலை மட்டும் அசைத்து விட்டு “c u later sangeetha madam” என்று புன்னகைத்து கதவை சாத்தி விட்டு சென்றாள் சஞ்சனா…. சஞ்சனா கதவை சாத்துகையில். Raghav சங்கீதாவை ப் பார்த்து “Hope you dont mind…this is confidential and secret, thats why I asked her to close the door…” என்று தாழ்மையுடன் கேட்க…”I have no issues Raghav” என்று மென்மையாக புன்னகைத்தாள் சங்கீதா …. “ஏதோ problamatic puzzle னு நேத்து ராத்திரி sms அனுப்பி இருந்தீங்களே, என்னது அது?”– என்று கேட்டாள் சங்கீதா….
எங்க கம்பெனி ல ஒரு விசித்திரமான காரியம் நடக்குது மேடம், அதுக்கு பின்னாடி என்ன விஷயம் இருக்கு, என்ன சதி நடக்குது, எதனால? என்னனு நானும் கண்டுபிடிக்க கொஞ்சம் நிறையவே முயற்சி செஞ்சி பார்த்தேன், ஆனா ஒரு clue கூட கிடைக்கல….”– என்று சற்று விரக்தியாகவே சொல்ல…. “For every issue there will be a solution”– என்று தன் hand bag ஐ மேஜையின் மீது வைத்து chair ஐ இழுத்துக்கொண்டு ஆர்வமாக சற்று அருகில் வந்து கைகளை மேஜையின் மீது ஊனி கன்னத்தில் கை வைத்தவாறு raghav வின் கண்களை பார்த்து சொன்னாள் சங்கீதா…. சங்கீதாவின் ஆர்வம் Raghav மனதில் ஒரு நம்பிக்கையும் தைரியத்தையும் குடுத்தது…. “See this….”– என்று Raghav ஒரு சின்ன மரத்துண்டை சங்கீதாவிடம் காண்பித்தான். ஆச்சர்யமாக பார்த்தாள் சங்கீதா…. “என்னது இது?”– ஒன்றும் புரியதவாறு கேட்டாள் சங்கீதா.. “அதுதான் எனக்கும் தெரியல… அனால் இந்த பொருளுக்கு நிறைய மதிப்பு இருக்கு, இதை வெச்சி இங்க இருக்குற workers என்னமோ பண்றாங்க, என் கிட்ட கூட சொல்லாம ஏதோ தில்லுமுல்லு நடக்குது, ஆனா என்னன்னுதான் தெரியல…. சங்கீதா சற்று ஆர்வமாக திரும்பி அந்த மரத்துண்டை ப் பார்த்தாள்…. –“மரத்துண்டு தான் ஆனாலும், ரொம்ப hard ஆக இருக்கு” என்று முணுமுணுத்துக்கொண்டே பார்த்தாள்.. உங்களுக்கு இது எப்படி கிடைச்சிது? – என்றாள் சங்கீதா.. அது ஒரு பெரிய கதை, எங்க IOFI வளாகத்துள இருக்குற பேப்பர் manufacturing ஏரியா வில் நாடு இரவு யாரும் இல்லாத போது தனியாக போயி எடுத்துகுட்டு வந்தேன்… இது ஒரு முக்கியமான பொருள் னு எப்படி சொல்லுறீங்க? – என்று சங்கீதா கேட்டாள்.. தினமும் இதுபோல raw materials import பண்ணுற லாரி வரும்போது கொஞ்சம் கொஞ்சம் இந்த பொருளும் சேர்ந்து வருது…. யாரு அனுப்புறாங்கனு தெரியாது.. ஆனா ரகசியமா நடக்குற ஒரு காரியத்துக்கு இந்த பொருள் தான் மூலதனம்.. அது மட்டும் தெளிவா தெரியுது…. – என்று ராகவ் சொல்ல, அந்த பொருளை மீண்டும் நன்றாக உற்று பார்த்து “interesting….” endru manadhil நினைத்துக்கொண்டாள்…. சரி இந்த விஷயத்துக்கும் எனக்கும் என்ன சம்மந்தம் இருக்கு? என் கிட்ட என் இதை சொல்லுறீங்க? என்று புரியாமல் அவள் கேட்க்க
உங்களோட Analytical + Logical thinking எனக்கு மிகவும் பிடிச்சி இருந்துச்சி, அதுல உங்க கிட்ட நிறைய stuff இருக்குன்னு நேத்து என்னோட profitability increment presentation காமிச்சப்போவே நான் புரிஞ்சிகுட்டேன். அதான் இதை உங்க கிட்ட இன்னிக்கி டிஸ்கஸ் பண்ணுறேன். அதை நீங்க யாருக்கும் காமிக்காம உங்க hand bag ல வெச்சிக்கொங்க, யார் கண்ணுலயும் பட வேண்டாம்…. என்று Raghav கேட்டுக்கொள்ள அவன் சொன்னபடியே செய்தாள் சங்கீதா…. “சரி இந்த விஷயத்தை இப்போதிக்கு விடுவோம், அப்படியே மெதுவா வாங்க, இன்னும் சில இடங்கள் நேத்து சஞ்சனா உங்களுக்கு காமிச்சி இருக்க மாட்டாள், ஒரு சின்ன walk போகலாம், நம்ம factory உள்ள….” என்று Raghav சங்கீதாவை அழைக்க உற்சாகமாக சென்றாள் அவனுடன்…. சற்று தூரம் நடந்து செல்கையில் Raghav வின் நடை உடை பாவனை எல்லாம் கிட்டத்தட்ட சங்கீதாவுக்கு அவளுடைய பழைய காதலனை நியாபகப்படுதியது…. “how is life going madam” என்று அவன் கேட்க.. “கடவுள் புண்ணியத்தில் ஏதோ போகுது….உங்களுக்கு எப்படி போகுது ராகவ்” என்று அவளும் பதில் அளித்தாள்…. “ஹ்ம்ம் போகுது….”– தோள்களை உலுக்கிகொண்டே சிரித்துக்கொண்டு சொன்னான்… சற்று தூரம் நகர்கையில், இடது புறத்தில் “Natural Light spot” என்று ஒரு போர்டு இருந்தது… அங்கே camera, lights, settings, மற்றும் பல வயதுக்கு வந்த பெண்கள் சிறிதாக tent கட்டி அதில் make-up போட்டுக்கொண்டு modelling session கு தயார் ஆனார்கள், அனைத்தையும் கவனித்தாள் சங்கீதா…. Raghav அருகில் சஞ்சனா ஏதோ இரண்டு files கொண்டு வந்து குடுக்கையில், அருகில் உள்ள staff ரூமுக்குள் சென்று அதில் sign போடுவதற்கு முன் ஒரு முறை படித்துக்கொண்டிருந்தான்…
அந்த சமயம், சராசரி உயரம், மிருதுவான கருப்பு நிறம் கொண்டு லேசான மீசை வைத்து, safari டிரஸ் அணிந்துகொண்டு லேசான தொந்தி தெரிய, வேலை செய்பவர்கள், மற்றும் auditon க்கு வந்திருக்கும் பெண்கள் அனைவரையும் வார்த்தையால் வருத்துக்கொண்டிருந்தான் அங்குள்ள சீனியர் supervisor சம்பத்.. அப்போது Raghav staff ரூமுக்குள் இருப்பதை அவன் கவனிக்கவில்லை, சங்கீதா அவளது கழுத்தினில் Visitor tag போடவில்லை, அவள் அருகே வந்து பின்னாடி தொடக்கூடாத இடத்தில் தட்டி “போ..போ…. தனியா வெத்திலை பாக்கு வெச்சி சொல்லனுமா, வந்த வேலைய கவனிக்காம என்ன பராக்கு பார்க்குற?…. audition அங்கே நடக்குது இங்கே இல்ல….” என்று கோவமும் எரிச்சலும் கலந்து கொஞ்சம் கூட மதிப்பு குடுக்காமல் பேசினது சங்கீதாவின் முகத்தை சிவக்க செய்தது… லேசாக முறைத்தாள்.. “அய்ய…என்ன லுக் இது… என் கிட்ட இதெல்லாம் வேண்டாம்… போ…” சங்கீதா அவனை மீண்டும் கூர்ந்து பார்த்தாள்… “என்ன, திரும்பி திரும்பி பார்க்குற…சொன்னது காதுல விழல?….போ”– விரலை சொடக்கு போட்டு பேசினான்… மீண்டும் சுட்டெரிக்கும் பார்வையில் சங்கீதா அவனை கூர்ந்து பார்த்தாள்…. “திரும்பி திரும்பி சொல்றேன், என்ன நினைச்…..” பேசி முடிப்பதற்குள் பளார் என்று ஒரு சத்தம் பலமாக கேட்டு அனைவரும் சில வினாடிகள் அப்படியே உறைந்து நின்றார்கள்…. அனைத்து மூளை முடுக்கிலும் ஒரு நொடி நிசப்தம்…..Raghav staff ரூமை விட்டு வெளியே வருகையில் அந்த காட்சியை பார்த்தான்…. அறை வாங்கிய கண்ணத்தை கையால் மூடியபடி supervisor சங்கீதாவை முறைத்துக்கொண்டிருந்தான்…. சிலர் முகத்தில் சந்தோஷமும் குதூகலமும் இருந்தது…. பலர் லேசான குரலில் “வாங்குனாண்டா தடியன், நாக்கை புடிங்கிக்கலாம் இதுக்கு” கூறி சிரிப்பதும் அந்த நிசப்தத்தில் சிலரது காதுகளுக்கு எட்டியது…. supervisor க்கும் அது கேட்டது. இன்னும் சிலர் அந்த காட்சியை cell phoneல் போட்டோ எடுத்து வைத்துக்கொண்டார்கள். Raghav உடனடியாக அங்கே விரைந்து, “Hey bloody fool, avanga நம்ம கம்பெனிக்கு visitor டா மடையா…. She is a manager in citibank” என்று கூறி “Extremely sorry sangeetha madam, அவன் சார்புல நான் மன்னிப்பு கேட்டுக்குறேன்” என்று கூற.. “சாரி மேடம், நீங்க யாருன்னு தெரியாம பேசிட்டேன்….” என்று சம்பத் ம் சொல்ல “பரவாயில்லை, ஆனா பொம்பளைங்களை கேவலமா நினைக்காதீங்க, வார்தைகள பார்த்து பேசுங்க….” என்று சங்கீதா கூற அங்குள்ள பெண்கள் அனைவரும் கை தட்டினார்கள் எங்கிருந்தோ ஒரு விசில் சதமும் கூட கேட்டது…. அங்கிருந்து Raghav, சங்கீதா இருவரும் மெல்ல நகர்ந்தார்கள்….
“மேடம்…. ஒரு நிமிஷம் நான் அப்படியே ஆடிப்போய்டேன், உங்களுக்கு இவளோ கோவம் வருமா னு” “ஏன் Raghav, என்ன சொன்னாலும் சும்மா கேட்டுகுட்டு நிக்க சொல்லுறீங்களா?” இல்லை இல்லை… actually I am impressed by your action, public place ல் பொம்பளைங்க இப்படிப்பட்ட ஆம்பளைங்க கிட்ட அப்படித்தான் இருக்கணும், உண்மையில் சொல்லனும்னா எனக்கே அந்த ஆளை பிடிக்காது, என் மாமா recommendation ல இங்கே வேலைக்கு சேர்ந்தான். ஏற்கனவே நிறைய complaints இருக்கு அவன் மேல, action எடுக்க ஒரு நிமிஷம் கூட ஆகாது, ஆனால் அப்பாவுக்கும் மாமாவுக்கும் problem வரக்கூடாது னு டெய்லி பொருத்துக்குட்டு போறேன் நான் staff ரூம்ல இருக்கேன்னு தெரிஞ்சி இருந்தா பூனை மாதிரி அடங்கி இருந்திருப்பான்…ஆனா நல்லதா போச்சு இல்லேன்னா உங்க கிட்ட அறை வாங்குற பாக்கியம் கிடைச்சி இருக்குமா அவனுக்கு?..– வெறும் வார்த்தையாக சொல்லாமல் உண்மையாக மனதார சந்தோஷப்பட்டு சொன்னான் ராகவ்…. இந்த சம்பவம் சங்கீதாவை நிஜத்தில் அவன் மனதில் ஒரு சிறந்த இடத்தில் வைக்க தோணியது அவனுக்கு….

No comments:

Post a Comment