Thursday, June 5, 2014

உன்னருகே நானிருந்தால் - அத்தியாயம் 6


உன்னருகே நானிருந்தால் - அத்தியாயம் 5
தம் அடிக்கிற விஷயம் வீட்டுக்கு தெரியாதான்னு கேட்டான் .. ஆமா உங்க வீட்டுக்கு தெரியுமான்னு கேட்டேன் தெரியாதுன்னு சொன்னான் .. எப்பவுமே தம்மடிக்கிற ரெண்டு பெரும் சரி குடிகாரனுங்க ரெண்டு பெரும் சரி ரொம்ப சீக்கிரம் friend ஆகிடுவாங்க .. நாங்களும் அப்படிதான் .. அவன் பேரு மோகன் computer engineering போன வருஷம்தான் முடுச்சதா சொன்னான் .. Hcl la place ஆகிட்டேன் call letterkaaga wait பண்ணிட்டு இருக்கறதா சொன்னான் .. நானும் என்ன பத்தி சொன்னேன் .. அதுகபுரம் dailyum எங்க அப்பா அம்மா office போனப்புறம் திருட்டு தம் அடிக்க எங்க வீட்டுக்கு வருவான் .. நானும் எனக்கு ஒரு தம் freeya வாங்கி தரான்னு நெனச்சு நானும் அவன வீடுக்குள்ள விட்டேன் .. பாக்குறதுக்கு பண கார வீடு பையன் மாதிரி வெள்ளையா மீசை இல்லாம கொஞ்சம் அழகாவே இருப்பான் .. ஒரு வேல ப்ரியாவ அவன் கரெக்ட் பண்ணிடுவானொன்னு கூட தோணும் .. ஆனா இவன் அவல கண்டுக்கவே இல்ல .. என்கூட அவ பேசிகிட்டு இருக்கறத பாதா கூட அவன் கண்டுக்காம அவன் வேலைய பாத்து போய்டே இருப்பான் .. அப்பறம் கொஞ்ச நாள் கழிச்சுதான் சொன்னான் அவனோட collegela படிச்ச ஒரு பொண்ண லவ் பன்றதாகவும் அவளும் இவன லவ் பன்றதாவும் சொன்னான் .. அப்பாட எனக்கு பிரச்சனை இல்லன்னு நா சந்தோஷமா இருந்தேன் .. ஒரு நாள் என்னோட friendu birthday treatkaaga பார்க்கு போனோம் அப்ப மோகன் அங்க தண்ணி அடுச்சுட்டு வண்டிய எடுக்க முடியாம விழுந்து கடந்தான் .. நானும் என்னோட பிரிண்டுகளும் சேந்து என்னோட வீட்டுக்கு மோகன கொண்டு பொய் வச்சிருந்தோம் . .
தெளிஞ்சபுரம் என்ன ஆச்சு ஓவரா அடுசிடிங்க போலன்னு கேட்டேன் .. அவன் லவ் பண்ண பொண்ணுக்கு கல்யானமைடுசுனு solli அழுதான் .. கொஞ்ச நாளுகபுரம் normal ஆனான் ஆனா அவனால அவன் லவ் பண்ண பொண்ண மறக்க முடியல dailyum வந்து ஒரு தம் அடிச்சிட்டு என்கிட்ட பொலம்பிட்டு போவான் .. ஒரு நாள் நானும் அவனும் எங்க வீடுகிட்ட நின்னு தம் அடிக்க போலாமான்னு பேசிகிட்டு இருந்தோம் .. அப்ப ப்ரியா எங்கம்மாகிட அவங்க வீட்டு சாவிய வாங்க வந்தா .. என்கிட்டே ஏதோ புரியாத மொழில ஏதோ software இருக்கானு கேட்டா .. அவ என்ன கேட்டானே எனக்கு புரியல .. இல்லன்னு சொன்னேன் .. மோகன் என்கிட்ட இருக்கு நா தரேன்னு சொன்னான் .. Oh thanksnu சொன்னா .. Computer engineering படிகிரியானு கேட்டான் .. அவளும் ஆமான்னு சொன்னா .. நானும் Computer engineeringதான் last year தான் முடுச்செனு சொல்லிட்டு நிறுத்தாம, Hcl ல place ஆனதையும் சொன்னான் ..
நா அவங்க ரெண்டு பெரும் பேசிக்கிட்டு இருக்கும்போது மாறி மாறி அவங்க வாயவே பாத்துகிட்டு இருந்தேன் .. அவ எவ்ளோவ் cgp நு கேட்டா? இவன் 83nu சொன்னான் .. அவ நா இப்ப வரைக்கும் 85 வச்சிருக்கேன் ஆனா கோரஞ்சிடும்னு நேனைகிறேன்னு சொன்னா .. என்னோட cgp ya கேட்டுரவாங்கலோனு பயந்து கிட்டு இருந்தேன், எனக்கு அதா எப்டி calculate பன்றதுனே தெரியாது .. எனக்கு நிறைய doubt இருக்குனு சொல்லிடு ஏதோ linked லிஸ்ட், heap sortnu என்னனமோ பேச ஆரம்பிச்சாங்க .. நா அங்க எதுக்கு நிக்கிறேனே தெரியாம நின்னுகிட்டு இருந்தேன் .. அவன் கடைசியா அப்பறமா பாக்கலாம்டநு சொல்லிட்டு அவ கூடவே அவ வீட்டுக்கு போனான் .. அவனாச்சு பரவா இல்ல bye nu சொல்லிடு போனான் ஆனா இவ என்ன ஒரு மனுஷனா கூட மதிகள .. அதுக்கப்புறம் அவன் எங்க வீட்டுக்கு தம் அடிக்கவே வரல .. ஒரு நாள் மாடில இருந்து பாக்கும்போது அவளும் அவனும் அவ வீட்டுகிட்ட நின்னு பேசிட்டு இருந்தாங்க .. இப்பதான் அவனுக்கு லவ் failure ஆச்சு அவன் எப்படியும் அவல லவ் பண்ண மாட்டான்னு கொஞ்சம் நம்பிக்கை இருந்துச்சு .. இன்னொரு நாள் அவ அவன்கூட bikela எங்கயோ போனா .. இதுவரைக்கும் நா அவள மத்த பசங்க கூட பேசியே பாத்ததில்ல ஆனா இப்ப ... அப்ப கூட மனசுல ஒரு ஓரத்துல அவங்க ரெண்டு பெரும் friendsaadhaan இருப்பாங்கனு நெனச்சு மனச தேத்திகிட்டேன் .. ஆனா அன்னகி ஒரு நாள் அவளோட தங்கச்சி மூலமாதான் தெருஞ்சுகிட்டேன் அவங்க ரெண்டு பேரும் லவ் பன்றான்கனும் அவங்க ரெண்டு பேரு வீட்லயும் சம்மதுசுடாங்க ஆனா கல்யாணம் மட்டும் இன்னும் ரெண்டு வருஷம் கலுச்சு வச்சுக்கலாம்னு முடிவு பண்ணி இருக்கறதா சொன்னா ..

No comments:

Post a Comment