Saturday, December 20, 2014

கண்ணாமூச்சி ரே ரே - தமிழில் ஒரு திரில் தொடர் - பாகம் - 20


மயக்கம் தெளிந்து ஆதிரா இமைகளை மெல்ல பிரித்தாள்.. மார்பிள் பதிக்கப்பட்ட தரையில் வீழ்ந்து கிடப்பதை, உடனடியாக அவளால் உணர முடிந்தது.. உடலுக்குள் ஏற்கனவே ஜில்லென்று ஒரு குளிர்ச்சி ஊடுருவியிருந்தது..!! அவளது கைகள் பின்புறமாக முறுக்கப்பட்டு.. அட்டைப்பெட்டிகளை ஒட்டுகிற அகலமான செல்லோடேப்பால் இறுக்கமாக பிணைக்கப்பட்டிருந்தன..!! கால்களையும் அசையவிடாமல் ஒன்றிணைத்து, அதே செல்லோடேப் கற்றையாக சுற்றியிருந்தது..!! கத்தரிக்கப்பட்ட ஒரு துண்டு செல்லோடேப் அவளது வாயில் ஒட்டப்பட்டிருக்க.. அவளால் உதடுகளைக்கூட பிரிக்க முடியவில்லை..!!
அவளது மாராப்பு எங்கோ தனியாக கிடந்தது.. மார்புகள் ரவிக்கைக்குள் விம்மிக்கொண்டிருந்தன..!! கூந்தல்க்கற்றைகள் பிரிந்து முகத்தில் புரண்டிருந்தன.. குங்குமப்பொட்டு நெற்றி வியர்வையில் கசகசத்திருந்தது..!! மிரட்சியும் பீதியும் டன் டன்னாய் வழிகிற விழிகளோடு.. ஆதிரா தலையை சற்றே உயர்த்தி பார்த்தாள்..!! அது ஒரு சமையலறை என்று புரிந்தது.. டைனிங் டேபிளும் அதைச்சுற்றிய நான்கு நாற்காலிகளும் பார்வைக்கு வந்தன..!! அதில் ஒரு நாற்காலியின் மேல் அவை இரண்டும் விசிறப்பட்டிருந்தன.. சிவப்புநிற அங்கியும், போலி மயிர்க்கூந்தலும்..!! அதற்கு அந்தப்புறமாக பனியன் அணிந்த ஒரு ஆணுடைய முதுகுப்புறம் தெரிந்தது.. எரிகிற ஸ்டவ் பக்கமாக திரும்பி ஏதோ வேலை செய்வது போல தோன்றியது..!! அந்த ஆண் யாரென்று ஆதிராவால் ஒரேநொடியில் புரிந்து கொள்ள முடிந்தது..!! "ம்ம்ம்ம்க்க்க்க்ம்ம்ம்ம்..!!" வாயடைக்கப்பட்டிருந்த ஆதிரா உடலை முறுக்கி நெளிக்க.. அதில் எழுந்த சப்தத்தால்.. அந்தப்பக்கம் திரும்பியிருந்த அந்த ஆள் இப்போது ஆதிராவை திரும்பி பார்த்தார்.. அது.. அந்த ஆள்.. மணிமாறன்...!!!!
"அதுக்குள்ள முழிச்சாச்சா.. ஒரு நிமிஷம்.. வந்துட்டேன்..!!" ஒரு விஷமப் புன்னகையுடன் சொல்லிவிட்டு, மீண்டும் அந்தப்பக்கமே மெல்ல திரும்பிக்கொண்டார். "ம்ம்க்க்க்ம்ம்.. ம்ம்க்க்க்ம்ம்.. ம்ம்க்க்க்ம்ம்..!!" பயத்தில் பதறித்துடிக்கிற இருதயத்துடன்.. தன்னை பிணைத்திருந்த செல்லோடேப்பின் பிடியில் இருந்து விடுபட முயன்றாள் ஆதிரா.. அப்படியும் இப்படியுமாய் கிடந்து துள்ளினாள்.. ஒரு பலனும் இல்லை.. ஓரடி கூட அவளால் நகர முடியவில்லை..!! "தப்பிக்கலாம் முடியாது.. தேவையில்லாம ஸ்ட்ரெயின் பண்ணிக்காத..!!" திரும்பிப் பார்க்காமலே சொன்னார் மணிமாறன். ஆதிரா தனது முயற்சியை கைவிடாமல் உடலை முறுக்கி துள்ளிக் கொண்டேதான் கிடந்தாள்.. அடைக்கப்பட்ட வாயுடன் 'ம்ம்ம்ம்.. ம்ம்ம்ம்.. ம்ம்ம்ம்..' என்று தொண்டை நரம்புகள் புடைக்க, ஈனஸ்வரத்தில் முனகினாள்..!! நடக்கவிருக்கிற விபரீதத்தை எண்ணி அவளது நெஞ்சுக்குழி பதற.. தரையில் கிடந்து நெளிந்தாள்.. உருண்டாள்.. புரண்டாள்..!! நீரிலிருந்து நிலத்தில் வந்து விழுந்த மீன்குஞ்சு.. சுவாசத்துக்கும், உயிருக்கும் போராடி துடிதுடிக்குமே.. அந்த மாதிரி..!! ஆதிராவின் போராட்டத்தை மணிமாறன் கண்டுகொள்ளவே இல்லை.. அவளது துடிதுடிப்பை சட்டை செய்யாமல், சமையலில் மிக கவனமாக இருந்தார்..!! ஓரிரு நிமிடங்கள் கழித்தே இவள்பக்கமாக திரும்பினார்.. அவருடையை கையில் இப்போது ஒரு பிளாஸ்டிக் பவ்ல்..!! ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டவர்.. தரையில் புரள்கிற ஆதிராவை பார்த்தவாறு அமர்ந்துகொண்டார்..!! அவர் கையிலிருந்த பவ்லில் பச்சை நிற உணவு.. காய்கறிகளை நறுக்கி, வேகவைத்து, உப்பு மிளகு சேர்த்து.. க்ரீன் ஸாலட் மாதிரி எதையோ சமைத்திருந்தார்..!! அதை இப்போது முள்கரண்டியால் அள்ளி, வாயில் திணித்து அசைபோட்டுக் கொண்டே.. மெலிதான குரலில் ஆதிராவிடம் பேச ஆரம்பித்தார்..!! "ஒரே பசிம்மா.. ஒரு மணிக்கு சாப்பிட்டது..!!" "ம்ம்க்க்க்ம்ம்.. ம்ம்க்க்க்ம்ம்.. ம்ம்க்க்க்ம்ம்..!!" - தரையில் கிடந்த ஆதிரா எதோ பேச முயன்றாள். "நீ சாப்டியா..??" ஆதிராவால் பதில் சொல்ல முடியாது என்று தெரிந்துகொண்டே இளிப்பாக கேட்டவர்.. பற்களால் அரைத்ததை விழுங்குவதற்கு ஓரிரு வினாடிகள் எடுத்துக்கொண்டு, பிறகு சொன்னார்.. "எங்க.. அந்தப்புள்ளையை பத்திரமா வீட்டுக்கு கூட்டிட்டு போய், அப்புறமா நிம்மதியா உக்காந்து சாப்பிடலாம்னு இருந்திருப்ப.. உன் கெட்டநேரம் எங்கிட்ட வந்து மாட்டிக்கிட்ட..!!" "........................................." ஆதிரா அவரையே மிரட்சியாக பார்க்க, அவர் இப்போது இதழில் ஒரு குரூரப் புன்னகையுடன்.. "இனிமே உனக்கு சாப்பாடு அடுத்த ஜென்மத்துலதான்.. தெரியுமா..??" என்றார். அவர் சொன்னதைக் கேட்டதும், ஆதிராவின் கண்களில் அப்பட்டமான ஒரு பயத்தை காணமுடிந்தது.. உடம்பை ஒருமாதிரி 'விழுக் விழுக்'கென்று வெட்டிக் கொண்டாள்..!! "ம்ம்க்க்க்ம்ம்.. ம்ம்க்க்க்ம்ம்.. ம்ம்க்க்க்ம்ம்..!!" மணிமாறன் இப்போது சற்றே குனிந்து.. ஆதிராவின் மார்புத்திமிறலை ஒருகணம் வெறித்துவிட்டு.. ஒருகையை நீட்டி அவளது கன்னத்தை மென்மையாக தடவினார்.. அவளுடைய முகத்தில் வழிந்திருந்த கூந்தலை ஒழுங்குபடுத்தியவாறே, மிக மிக கூலாக சொன்னார்..!! "பயப்படாத.. இன்னைக்கே நீ சாகவேணாம்..!! இன்னும் ரெண்டு நாள் இங்கயே இருந்து.. நான் பண்ற சித்திரவதைலாம் நல்லா அனுபவிச்சுட்டு.. அப்புறமா செத்துப்போ..!! நானே உன்னை நல்லவிதமா அனுப்பி வைக்கிறேன்.. சரியா..??" ஆதிராவின் விழிகள் இப்போது மிரட்சியில் இன்னும் அதிகமாக விரிந்து கொண்டன.. உடலில் ஒருவித நடுக்கம் உற்பத்தியாகி, வெடவெடக்க ஆரம்பித்திருந்தது..!! ஒரு மனநிலை பிறழ்ந்தவனிடம் வகையாக மாட்டிக்கொண்டோம் என்ற நினைவே அவளை சில்லிட்டுப்போக வைத்தது..!! "ம்ம்ம்... உண்மையை சொல்லனும்னா.. கல்யாணம் ஆகாத கன்னிப்பொண்ணுகளைத்தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்.. ஒரு தனிப்ரியம்னு வச்சுக்கயேன்..!! பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்கை பிடிச்சுட்டான்னு சொல்வாங்க.. ஹாஹா.. என் விஷயத்துல அவ்வளவு மோசம் இல்ல..!! கன்னிப்பொண்ணுகளை பிடிக்கப்போய், கடைசில கல்யாணம் ஆன உன்னை புடிச்சுட்டு வர்ற மாதிரி ஆய்டுச்சு..!! பரவால.. அவசரத்துக்கு எதோ ஒன்னு..!!" "......................................" "ஹ்ம்ம்ம்ம்.. நாலஞ்சு மாசம் ஆகிப்போச்சா.. கைலாம் அப்படியே பரபரன்னு இருக்குதும்மா..!!" மணிமாறன் ஸாலடை சுவைத்துக்கொண்டே.. மிக இயல்பாக, மிக மிருதுவான குரலில் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தார்.. அந்த மென்மையான குரலில் ஒலித்த வார்த்தைகளில் மட்டும் அப்படியொரு குரூரம்..!! "அந்தப்பொண்ணு பேரு தென்றல்தான..?? உன் வீட்டுல வேலை செய்ற பொண்ணுல..??" "......................................" ஆதிரா உடம்பை திமிறி துடித்துக்கொண்டே.. அவர் சொல்வதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்தாள்..!! "ஹ்ம்ம்ம்ம்... நீ கெடக்கவெண்டிய எடத்துல அவ கெடக்கவேண்டியது.. ஜஸ்ட் மிஸ்..!! எட்டிப் புடிக்கிறதுக்குள்ள தபதபன்னு கீழ எறங்கிட்டா.. எதிர்பாக்கவே இல்ல நான்..!! சரி நம்மளும் எறங்கிறலாம்னு பாத்தா.. ஒரே வழுக்குப்பாறைம்மா.. ஸ்லிப் ஆனா அப்டியே தலை செதறிடும்..!! வயசாகிப்போச்சுல.. தைரியமா எறங்க மனசுல தெம்பு இல்ல..!! சரி எப்படியும் மேலதான வந்தாகனும்னு.. அங்கேயேதான் மரத்துக்கு பின்னாடி நின்னுட்டு இருந்தேன்.. கரெக்டா நீ வந்து மாட்டுன..!! வெளையாடுறதுக்கு எனக்கு ஒரு பொண்ணு கெடைச்சிடுச்சு.. திருப்தியா, சந்தோஷமா இருக்கு..!!" "ம்ம்க்க்க்ம்ம்.. ம்ம்க்க்க்ம்ம்.. ம்ம்க்க்க்ம்ம்..!!" மணிமாறன் பேசுவதை கேட்டுக்கொண்டே, அவ்வப்போது உதடுகளை பிரிக்க முடியாமல் முனகினாள் ஆதிரா..!! "என்னடா.. பாக்குறதுக்கு டீசண்டா இருக்கான்.. பக்கா சைக்கோ மாதிரி பேசுறான்னு நெனைக்கிறியா..?? தெரியலம்மா.. நான் இப்படித்தான்.. எனக்கு இந்த வெளையாட்டு ரொம்ப பிடிச்சிருக்கு.. என்ஜாய் பண்ணி செஞ்சிட்டு இருக்குறேன்..!!" "......................................" மணிமாறன் இப்போது வாய்நிறைய ஸாலடை அள்ளி திணித்துக் கொண்டார்.. அள்ளி திணித்ததை அசைபோட்டு குதப்பிக்கொண்டே, சற்றே குழறலாக பேசினார்..!! "எல்லாம் ஒரு அஞ்சு வருஷம் முன்னாடி ஆரம்பிச்சதுமா..!! என் ஸ்டூடன்ட் ஒருத்தி.. தளதளன்னு தக்காளி மாதிரி இருப்பா.. தாமரைன்னு பேரு..!! தனியா ஒருதடவை சிக்கினா.. எதோ ஒரு தைரியத்துல கையை வச்சுட்டேன்..!! இல்லாத வீட்டுப் பொண்ணு.. பணத்தை குடுத்து அவங்க குடும்பத்தைலாம் எப்படியோ சமாளிச்சுட்டேன்.. என் பொண்டாட்டியைத்தான் சமாளிக்க முடியல..!! மேட்டரை எப்படியோ தெரிஞ்சுக்கிட்டு.. 'நான் செஞ்ச தப்புக்கு தண்டனை வாங்கி தந்தே ஆவேன்.. போலீஸ்ல என்னை போட்டுக் குடுக்கப் போறேன்..'னு கெடந்து குதிச்சா..!! கோவத்துல பட்டுன்னு அறைஞ்சேன்.. பொட்டுன்னு போய்ட்டா..!!" "......................................" ஆதிரா இமைகளை விரித்து மணிமாறனை மிரட்சியாக பார்த்தாள். "இதே எடத்துலதான் அவளும் பொணமா கெடந்தா.. தலையை சுத்தி கசகசன்னு ஒரே ரத்தம்..!! எனக்கு கொஞ்ச நேரம் எதுவும் ஓடல.. அப்டியே படபடன்னு வந்துருச்சு..!! கட்டுன பொண்டாட்டியையே ஆத்திரத்துல கொலை பண்ணிட்டேன்.. ஜெயிலுக்கு போறதுக்கு சுத்தமா இஷ்டம் இல்ல.. கொலையை மறைச்சாகனும்.. என்ன பண்ணலாம்னு ஒரே யோசனை..!!" "ம்ம்க்க்க்ம்ம்.. ம்ம்க்க்க்ம்ம்.. ம்ம்க்க்க்ம்ம்..!!" "அப்பத்தான் லட்டு மாதிரி ஒரு ஐடியா வந்துச்சு.. இந்த ஊர்க்காரனுக குறிஞ்சியை பத்தி கட்டுக்கதை கட்டி விடுறதெல்லாம் ஞாபகம் வந்துச்சு.. அதை யூஸ் பண்ணிக்கலாம்னு தோணுச்சு..!! அப்புறம் என்ன.. பொணத்தை கொண்டுபோய் தோட்டத்துல பொதைச்சுட்டு.. காரை கொண்டுபோய் காட்டுக்குள்ள விட்டுட்டு.. என் பொண்டாட்டி காணாம போய்ட்டான்னு கெடந்து ஒப்பாரி வச்சேன்.. குறிஞ்சியா இருக்கலாமோன்னு நானே சந்தேகத்தை கெளப்பி விட்டேன்..!!" "......................................" "சும்மா சொல்லக்கூடாது.. இந்த ஊர்க்காரனுக என்னை விட ரொம்ப ஃபாஸ்டா இருந்தானுக.. குறிஞ்சியாத்தான் இருக்கும்னு அடிச்சு சத்தியம் பண்ணுனானுக.. இருவது வருஷமா சும்மா கெடந்த குறிஞ்சி திரும்ப ஆரம்பிச்சுட்டான்னு மெரண்டு போய் பொரணி பேசுனானுக..!! பத்தாக்கொறைக்கு.. எல்லாத்துக்கும் காரணம் உன் தங்கச்சி தகட்டை எடுத்ததுதான்னு வேற ஊருக்குள்ள ஒரு நம்பிக்கை..!! ஹாஹாஹாஹா.. முட்டாப்பசங்க..!! என் வேலை ரொம்ப ஈசியா போய்டுச்சுமா.. இன்னைக்கு வரை எல்லார்ட்டயும் அதே கதைதான்..!!" ஆதிராவின் இருதயம் இப்போது 'படக்.. படக்'கென தாறுமாறாக அடித்துக் கொண்டது.. மார்புகள் ரெண்டும் 'சரக் சரக்'கென விம்மி விரிந்தன.. சுவாசம் சீரற்றுப்போய் 'தஸ்.. புஸ்..' என்று மூச்சிரைத்தாள்.. பீதி நிறைந்திட்ட விழிகளோடு மணிமாறனையே இமைக்காமல் பார்த்தாள்..!! அவர் அருகிலிருந்த ஜாடியை எடுத்து நீர் பருகிவிட்டு.. ஸாலட் மென்றவாறு தொடர்ந்து மென்மையான குரலில் பேசினார்..!! "ஹ்ம்ம்.. அதுக்கப்புறம்.. நான் ரொம்ப மாறிட்டேன்னுதான் சொல்லணும்.. மனசுக்குள்ள என்னன்னவோ யோசனை.. ஆசை..!! 'ஒரு கொலையையும் பண்ணிட்டு.. இவ்வளவு சர்வசாதாரணமா தப்பிச்சுட்டமே'ன்னு நெனைக்க நெனைக்க.. எனக்கு எப்படி இருந்துச்சு தெரியுமா..?? ரொம்பவே தைரியம் வந்துருச்சு.. 'என்னவேணா செய்யலாம்.. குறிஞ்சி பேரை யூஸ் பண்ணி கரெக்டா செஞ்சோம்னா.. மாட்டிக்க சான்ஸே இல்லை'ன்னு தோணுச்சு..!!" "......................................" "அதுமில்லாம.. என் பொண்டாட்டியை கொலை செஞ்சப்போ.. அப்படியே அவ ரத்த வெள்ளத்துல கெடந்ததை பாத்தப்போ.. எனக்கு கெடைச்ச அந்த கிக்.. அந்த த்ரில்.. ச்சே.. சான்ஸே இல்லம்மா..!! எனக்கு அந்த கிக் திரும்ப திரும்ப வேணும்னு தோணுச்சு.. குறிஞ்சின்ற போர்வைல என் ஆசையைலாம் நிறைவேத்திக்க ஆரம்பிச்சேன்..!! அப்பப்போ.. எனக்கு ஆசை வர்றப்போலாம்.. ஊருக்குள்ள போய் எவளையாவது தூக்கிட்டு வந்துருவேன்.. ரெண்டு மூணு நாள் வச்சு ஜாலி பண்ணிட்டு.. அப்புறம் காலி பண்ணிருவேன்.. ஹாஹா..!!" மணிமாறன் கனைக்க, "......................................" உடம்பில் ஜிவ்வென்று ஏறிய பீதியுடன், ஆதிரா பதறித் துடித்தாள். "ஐஞ்சு வருஷம் ஆச்சும்மா..!! போலீஸால இதுவரை ஒன்னும் புடுங்க முடியல..!!" முன்பொருமுறை சொன்ன டயலாக்கையே, மணிமாறன் இப்போது வேறொரு எகத்தாளமான டோனில் சொன்னார். "......................................" ஆதிரா அவரையே விழிகள் விரித்து, திகிலாக பார்த்தாள். "ஹ்ம்ம்... சரி இதையெல்லாம் எதுக்கு உன்கிட்ட சொல்லிட்டு இருக்கேன்னு பாக்குறியா..?? என்ன பண்றது.. என்னோட அருமை பெருமைலாம் அப்புறம் வேற யார்ட்டபோய் நான் சொல்றது..?? இங்க தூக்கிட்டு வர்ற பொண்ணுகட்டதான சொல்லமுடியும்..?? அவங்கதான கேட்டுட்டு என் கையாலேயே செத்துப் போயிருவாங்க..?? ஹாஹாஹாஹா..!!!!" மணிமாறன் சொல்லிவிட்டு ஒரு குரூர சிரிப்பை உதிர்க்க, "ம்ம்க்க்க்ம்ம்.. ம்ம்க்க்க்ம்ம்.. ம்ம்க்க்க்ம்ம்..!!" ஆதிரா நெஞ்சுப்பந்துகள் விம்ம, உடலை முறுக்கினாள். பேசிக்கொண்டே சாப்பிட்டு முடித்திருந்தார் மணிமாறன்.. கையைக்கழுவி கைக்குட்டையால் உதடுகள் ஒற்றிக் கொண்டார்.. டைனிங் டேபிளில் கிடந்த சட்டையை எடுத்து மாட்டிக்கொண்டார்..!! தரையில் புழுவாக துடித்துக் கொண்டிருந்த ஆதிராவின் அருகே வந்து நின்றார்.. எக்கச்சக்க பீதியுடன் தன்னை ஏறிட்டவளை பார்த்து, விஷமப் புன்னகையுடன் கேட்டார்..!! "என்ன.. வெளையாட்டை ஆரம்பிக்கலாமா..??" "ம்ம்க்க்க்ம்ம்.. ம்ம்க்க்க்ம்ம்.. ம்ம்க்க்க்ம்ம்..!!" 'வெடுக் வெடுக்'கென வெட்டிக்கொண்டு கிடந்த ஆதிராவின் புஜத்தை பற்றி.. அப்படியே அவளை கொத்தாக மேலே தூக்கினார் மணிமாறன்..!! சற்றுமுன் தான் அமர்ந்திருந்த நாற்காலியிலேயே அவளை விசிறித்தள்ளினார்.. கை, கால்கள் கட்டுண்ட ஆதிரா அந்த நாற்காலிக்குள் வசதியாக அடங்கிப் போனாள்..!! மணிமாறன் அவளது முதுகுப்புறமாக நகர்ந்தார்.. நாற்காலியின் பின்னாலிருந்த கைப்பிடியை பற்றி, அப்படியே 45 டிக்ரீக்கு அந்த நாற்காலியை சாய்த்தார்..!! நாற்காலியின் இரண்டு கால்கள் தளத்திலிருந்து உயர்ந்து.. மற்ற இரண்டு கால்கள் மட்டும் மார்பிள் தரையில் உராய்ந்து.. "ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...!!!!" என காதுகளுக்கு ஒவ்வாத ஒரு இரைச்சலை எழுப்ப.. அந்த நாற்காலியோடு சேர்த்து ஆதிராவை எங்கோ இழுத்து சென்றார்..!! சமையலறையை விட்டு வெளியேறி அந்த காரிடாரை அடைந்தார்.. இரண்டுபக்கமும் அறைகள் அணிவகுத்திருக்கிற, இடையே ஐந்தாறு அடி இடைவெளியோடு காணப்பட்ட, மிக நீளமான காரிடார்..!! ஆதிராவை நாற்காலியில் இட்டு, அந்த காரிடாரில் இழுத்து சென்றார் மணிமாறன்.. ஏதோ வேண்டாதபொருளை குப்பைவண்டியில் போட்டு இழுத்து செல்வது போல, கூலாக இழுத்து சென்றார்.. உதடுகளை குவித்து ஒரு பழைய ஹிந்திப் பாடலை விசிலடித்து ஹம் செய்தவாறே..!! ஆதிராவோ ஒரு உச்சபட்ச பீதியில் பதறிக் கொண்டிருந்தாள்.. சாய்வாக நகர்ந்த நாற்காலியில் இருந்து எழ முயன்றாள்.. முடியவில்லை..!! அவளது தொண்டை நரம்புகள் எல்லாம் வெடித்துவிடுவதுபோல புடைத்துக்கொண்டு காட்சியளித்தன.. கழுத்திலும், நெற்றியிலும் வியர்வை பெருக்கெடுத்து வழிந்தது.. வாய்விட்டு அலறி உதவி கேட்கிற உந்துதல் எழுந்தாலும், உதடுகளை பிரிக்கமுடியாதபடி செல்லோடேப்.. மாராப்பு விலகிய மார்புப்பந்துகள் மட்டும் 'ஜிவ்.. ஜிவ்..'வென விம்மித் துடித்தன..!! காரிடாரின் அடுத்த மூலையில், சுவற்றோடு அறையப்பட்டிருந்தது அந்த ஓவியம்.. ஆறடி உயரத்தில் சற்றே பிரம்மாண்டமான ஓவியம்.. கழுத்தை குறுக்கி, மரக்கிளையில் ஓய்வெடுக்கிற ஒரு வல்லூறின் ஓவியம்..!! மணிமாறன் அந்த ஓவியத்தின் பக்கவாட்டில் கைவிட்டு, சுவற்றில் எதையோ அழுத்தி தடவ.. அந்த ஓவியம் இப்போது சரக்கென விலகிக்கொண்டது..!! ஓவியத்திற்கு பின்புறமாக மறைந்திருந்த அந்த மரக்கதவுகள் பார்வைக்கு வந்தன.. வெளிப்பார்வைக்கு எட்டாத, சுவற்றோடு பொருந்தியிருந்த மரக்கதவுகள்..!! "க்க்க்க்க்கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்க்க்க்க்க்க்க்...!!!!" மணிமாறன் கதவில் கைவைத்து உள்ளே தள்ளவும்.. வீட்டுக்குள்ளேயே இருந்த அந்த ரகசிய அறை, மெல்ல திறந்து கொண்டது..!! அறைக்குள் சுத்தமாக வெளிச்சம் இல்லை.. அடர்த்தியாக இருள் படிந்திருந்தது..!! கதவை திறந்ததுமே.. முகத்தை சுளிக்க வைக்கிற மாதிரியான ஒரு துர்நாற்றம்..!! அறை வாசலில் இருந்து கீழே இறங்குகிற ஏழெட்டு படிக்கட்டுகள்.. மணிமாறன் நாற்காலியை மீண்டும் சாய்த்து, அந்த படிக்கட்டுகளில் ஆதிராவை இழுத்து சென்றார்..!! "ட்ட்டக்க்.. ட்ட்டக்க்.. ட்ட்டக்க்.. ட்ட்டக்க்.. ட்ட்டக்க்....!!!!" ஒவ்வொரு படிக்கட்டாக நாற்காலி கீழிறங்க, அதன் கால்கள் படிக்கட்டில் மோதி பெரிதாக சப்தம் கிளப்பின.. ஒவ்வொருமுறை அந்த சப்தம் கேட்டபோதிலும், நாற்காலியில் வீழ்ந்து கிடந்த ஆதிராவின் இருதயம் 'குபுக்.. குபுக்..' என அதிர்ந்துபோய் துடித்தது.. அப்படியே நெஞ்சுக்கூட்டுக்குள் இருந்து வெளியே வந்து விழுந்துவிடுவது போல..!! கடைசி படிக்கட்டில் இறங்கியதும்.. கையில் பிடித்திருந்த நாற்காலியை 'சர்ர்ர்ர்ர்ர்'ரென அறைக்குள் விசிறியெறிந்தார் மணிமாறன்..!! 'தடதட'வென்ற சப்தத்துடன் நாற்காலி எங்கோ புரண்டோட.. தரையில் விழுந்த ஆதிரா 'கடகட'வென கீழே உருண்டாள்..!! உருண்டவேகத்தில்.. இருட்டுக்குள் இருந்த ஒரு மரஅலமாரியில் சென்று மோதினாள்..!! அலமாரியின் உயரத்தில் வைக்கப்பட்டிருந்த ஏதோ ஒன்று நழுவி.. ஆதிராவின் தலையில் இப்போது 'சடசட'வென்று கொட்டியது..!! ஏதோ காகித அட்டைகள் என்று உணர்ந்துகொள்ள முடிந்தது..!! "ஸ்ஸ்ஸர்ர்ர்ர்ரக்..!!!!" - தீக்குச்சி உரசப்படுகிற சப்தம். அந்த ஹிந்திப் பாடலை மீண்டும் விசிலடித்து ஹம் செய்தவாறே.. அறைக்குள் ஆங்காங்கே தோன்றிய மெழுகுவர்த்திகளுக்கு நெருப்பு வைத்தார் மணிமாறன்..!! ஏற்றப்பட்ட மெழுகுவர்த்திகள் போதிய அளவு வெளிச்சத்தால் அறையை நனைத்தன.. கழிவுப் பொருட்களை அடைத்துவைக்கிற ஒரு குடவுன் மாதிரி காட்சியளித்தது அந்த அறை..!! கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில்.. ஆதிரா சற்று கஷ்டப்பட்டே எழுந்து, அந்த மரஅலமாரியில் சாய்ந்து அமர்ந்தாள்..!! கதவை சாத்துவதற்காக மணிமாறன் படிக்கட்டு ஏறிக்கொண்டிருக்க.. கண்களில் பீதியோடு அவரது முதுகையே மிரட்சியாக பார்த்தாள்..!! சற்றுமுன் அவளது தலையில் கொட்டி, இப்போது அவளைச்சுற்றி சிதறிக்கிடந்த அந்த காகித அட்டைகளின் மீது.. எதேச்சையாக அவளது பார்வை விழுந்தது..!! அனைத்துமே ஒரே அச்சில் பதிக்கப்பட்ட திருமண அழைப்பிதழ்கள்.. "மணமகன்: அதியமான்.. மணமகள்: அகல்விழி..!!"
"காலேசுல படிச்ச புள்ளைகள கல்யாணத்துக்கு அழைக்க போறேன்னு.. பத்திரிக்கையை அள்ளிக்கிட்டு பாவிமக கெளம்பிப்போனா..!! போனவ போனவதான்.. பொழுது சாஞ்சும் வீடு வரல..!!" அகல்விழியின் அம்மா அழுதபடியே உதிர்த்த வார்த்தைகள், ஆதிராவின் காதுகளுக்குள் இப்போது மீண்டும் ஒலித்தன.. அகல்விழிக்கு என்ன நேர்ந்திருக்கும் என்பது இப்போது தெளிவாக புரிய, ஆதிராவுக்கு உடம்பெல்லாம் ஜிவ்வென்று ஒரு பயசிலிர்ப்பு.. அவளது மூச்சிரைப்பு இன்னும் அதிகமாகிப்போய், மார்புகள் ரெண்டும் 'சர்.. சர்..'ரென மேலும் கீழும் ஏறியிறங்கின.. !! கதவை சாத்திவிட்டு படிக்கட்டு இறங்கி கீழே வந்தார் மணிமாறன்.. சரிந்து கிடந்த நாற்காலியை நேராக நிமிர்த்தி வைத்தார்..!! அதற்கருகே, அறையின் மையமாக இருந்த அந்த மரமேஜையின் பக்கமாக திரும்பினார்.. கப்போர்ட் திறந்து உள்ளிருந்த எதையோ வெளியே எடுத்தார்..!! பயத்தில் முகம் வெளிறிப்போய் ஆதிரா அவரையே பரிதாபமாக பார்த்துக் கொண்டிருக்க.. அவரோ உதட்டில் ஒரு புன்னகையுடன் ஆதிராவை ஓரக்கண்ணால் பார்த்தவாறே, கைகளுக்கு கையுறை அணிந்துகொண்டார்..!! மடித்து வைக்கப்பட்டிருந்த ஒரு துணியை உதறி, தன்மீது போர்த்திக் கொண்டார்.. அந்தத்துணியின் மேல்ப்பகுதியில் இருந்த இரண்டு நாடாக்களை, தனது கழுத்தை சுற்றிப்போட்டு முடிச்சிட்டுக் கொண்டார்..!! நீல நிறத்தில் இருந்த அந்தத்துணியின் மேற்பரப்பில்.. ஆங்காங்கே.. கருஞ்சிவப்பு நிறத்தில் ரத்தத்திட்டுக்கள்..!! ஆதிராவை நோக்கி மெல்ல அடியெடுத்து வைத்தார்.. அவள் இப்போது மிரண்டுபோய் சப்தம் எழுப்பினாள்.. உடலை நெளித்து நகர முயன்றாள்..!! "ம்ம்க்க்க்ம்ம்.. ம்ம்க்க்க்ம்ம்.. ம்ம்க்க்க்ம்ம்..!!" ஆதிராவை நெருங்கிய மணிமாறன் சற்றே குனிந்து, விரவிக்கிடந்த திருமண அழைப்பிதழ்களில் ஒன்றை கையில் எடுத்தார்.. ஒரு ஏளனப் புன்னகையை உதிர்த்தவர், எள்ளலான குரலில் ஆதிராவிடம் கேட்டார்..!! "ஹ்ம்ம்ம்ம்.. அகல்விழி..!!!! யார்ன்னு தெரியுதா..??" ".........................................." "என் ஸ்டூடண்ட்.. உன் தங்கச்சியோட ஃப்ரண்டு..!!" ".........................................." "இதுவரை எல்லா பொண்ணுகளையும் நானா போய்த்தான் தூக்கிட்டு வந்திருக்கேன்.. செவப்பு ட்ரஸ், விக்லாம் போட்டுக்கிட்டு.. அலைஞ்சு திரிஞ்சு கஷ்டப்பட்டு..!! இந்த அகல்விழி ஒருத்திதான் தானா வந்து தனியா எங்கிட்ட மாட்டுனவ..!! பாவம்.. கல்யாணம்னு சொல்லிட்டு சந்தோஷமா வந்தா.. இங்க கருமாதி நடக்கப் போறது தெரியாம..!! ஹாஹாஹாஹா..!!" ".........................................." "ஆனா சும்மா சொல்லக்கூடாது.. எனக்கு நாலஞ்சு நாள் செம கம்பனி குடுத்தா..!! வாழணும்னு அவ்வளவு ஆசை.. உசுரை விட்டுடாம அஞ்சுநாள் இழுத்துட்டு கெடந்தா..!! ஹாஹா..!!" மணிமாறனின் வார்த்தைகளில் புதைந்திருந்த குரூரம், ஆதிராவை வெடவெடக்க வைத்தது.. அவளது இதயத்துடிப்பின் வேகம், இப்போது எக்கச்சக்கமாய் ஏறிப்போயிருந்தது..!! "பாக்கலாம்.. நீ எத்தனை நாள் தாக்குப்பிடிக்கிறன்னு..!!" இளிப்புடன் சொல்லிக்கொண்டே, ஆதிராவின் புஜத்தை பற்றி தூக்கினார். "ம்ம்க்க்க்ம்ம்.. ம்ம்க்க்க்ம்ம்.. ம்ம்க்க்க்ம்ம்..!!" மிரண்டுபோய் சப்தம் எழுப்பிக்கொண்டே, விழுக்கென்று துள்ளி, அவரது பிடியில் இருந்து நழுவினாள் ஆதிரா.. மணிமாறனின் முகத்தில் எந்தவித சலனமும் இல்லை.. உதட்டில் ஒரு மிருதுவான புன்னகையை கசியவிட்டவாறே, புறங்கையை வீசி, ஆதிராவின் கன்னத்தில் 'ரப்ப்ப்..'பென்று ஒரு அறைவிட்டார்..!! அவ்வளவுதான்.. ஆதிரா சுருண்டுபோய் தரையில் வீழ்ந்தாள்..!! வீழ்ந்தவளை அள்ளி நாற்காலியில் விசிறினார்.. அவளது எதிர்ப்பு இப்போது வெகுவாக குறைந்து போயிருந்தது.. உடலின் சக்தி உறிஞ்சப்பட்டவளாய் சோர்ந்துபோய் காட்சியளித்தாள்.. மயக்கம் வருவதுபோல அவளுக்குள் ஒரு உணர்வு..!! நிலைகொள்ளாமல் தள்ளாடிய தலையை திருப்பி.. அருகில் நின்ற மணிமாறன் என்ன செய்கிறார் என்று பார்த்தாள்..!! அந்த மரமேஜையின் மீது இரண்டு ட்ரேக்கள் இருந்தன.. அந்த இரண்டு ட்ரேக்கள் நிறையவும் கூர்தீட்டப்பட்ட சில கருவிகள்.. ஆணிகள், ஊசிகள், உளி, குறடு, கத்தி, சுத்தியல், அரம், திருப்புளி..!! எதைத் தேர்வு செய்யலாம் என்பது போல எல்லாவற்றையும் தடவிப்பார்த்த மணிமாறன்.. பிறகு அந்த உளியை கையில் எடுத்துக்கொண்டு, ஆதிராவின் பக்கமாக திரும்பினார்..!! அவளுக்கோ முதுகுத்தண்டில் ஜிவ்வென்று ஒரு சிலிர்ப்பு..!! "ம்ம்க்க்க்ம்ம்.. ம்ம்க்க்க்ம்ம்.. ம்ம்க்க்க்ம்ம்..!!" பதறியடித்து துள்ளினாள். மணிமாறன் அவளுடைய கழுத்தை கொத்தாகப் பற்றினார்.. நாற்காலியோடு சேர்த்து அவளை அழுத்தி பிடித்தார்.. நகரமுயன்ற அவளது கால்களை, தனது காலால் மிதித்து நசுக்கினார்..!! ஆதிரா குலைநடுங்கிப் போனாள்.. அவளது இமைகள் மிரண்டுபோய் விரிந்துகொண்டன.. அவளது மார்புகள் ரெண்டும் 'சர்ர் சர்ர்ர்'ரென்று விம்மி பதறின..!! "என்ன இது.. சின்னப்புள்ள மாதிரி.. எங்க ஓடிறலாம்னு நெனைக்கிற..?? ம்ம்..??" மணிமாறன் சொல்லிக்கொண்டே அந்த உளியை அவளது கண்ணுக்கருகே கொண்டுசெல்ல.. ஆதிரா படக்கென இமைகளை இறுக்கி மூடிக்கொண்டாள்.. 'ம்ம்ம்ம்ம்.. ம்ம்ம்ம்ம்.. ம்ம்ம்ம்ம்..' என்று முனகினாள்.. மூச்சிரைத்தாள்.. துடித்தாள்..!! மணிமாறன் இரண்டு விரல்களால் ஆதிராவின் இமைகளை விரித்து பிடித்தார்.. வேறு வழியில்லாமல் திறந்துகொண்ட அவளது விழிக்கருகே உளியை நீட்டினார்.. நெருக்கமாக கொண்டு சென்றார்..!! பீதி நிறைந்திட்ட ஆதிராவின் கருவிழி.. கூர் தீட்டப்பட்ட பளபளப்புடன் அந்த சிறுஉளி.. இரண்டுக்கும் இடையே சில மில்லி மீட்டர்களே இடைவெளி..!! "உனக்கும் தாமிராவுக்கும் ஒரே மாதிரியான கண்ணு.. நல்லா பெருசா.. அழகா.. கோலிகுண்டு மாதிரி..!!" கருவிழிக்கு வெகுஅருகே நீட்டப்பட்டிருந்த உளியை, ஆதிரா மிரட்சியாக பார்த்துக் கொண்டிருந்தபோதுதான்.. அவளது நாசிக்கருகே சட்டென அந்த வாசனை மாற்றத்தை உணர்ந்தாள்.. அத்தனை நேரம் அந்த அறையை நிறைத்திருந்த துர்நாற்றம் நீங்கி, சரசரவென ஒரு இனிய நறுமணம் அங்கே பரவுவதை, உடனடியாக அவளால் உணர்ந்துகொள்ள முடிந்தது.. அது.. அந்த வாசனை.. மனதை மயக்குகிற மகிழம்பூவின் வாசனை..!! மணிமாறனோ அந்த வாசனை மாற்றத்தை கண்டுகொள்ளாமல் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தார்..!! "ஆங்.. வந்ததுல இருந்தே உன்கிட்ட ஒன்னு சொல்லனும்னு நெனச்சுட்டு இருந்தேன்..!! உன் தங்கச்சி தாமிரா இருக்காள்ல.. அவ.." அவர் சொல்லிக்கொண்டிருக்கையிலேயே, அவரது பேச்சை தடைசெய்கிற வகையில்.. "க்க்க்கர்ர்ர்ர்ர்.. க்க்க்ககர்ர்ர்ர்ர்..!!!!!" அறைக்கு வெளியே இருந்து அந்த சப்தம்.. ஏதோ காட்டுவிலங்கின் உறுமல் மாதிரி..!! மணிமாறன் சற்றே நிதானித்தார்.. ஆதிராவை பிடித்திருந்த பிடியை கொஞ்சம் தளர்த்தியவர், காதுகளை கூர்மையாக்கி அந்த சப்தத்தை கவனித்தார்..!! "க்க்க்கர்ர்ர்ர்ர்.. க்க்க்ககர்ர்ர்ர்ர்..!!!!!" அந்த சப்தம் இப்போது இன்னுமே தெளிவாக கேட்டது.. ஆனால் அது என்ன சப்தம் என்று மணிமாறனுக்கு பிடிபடவில்லை..!! தொடர்ந்து அந்த சப்தம் கேட்டுக்கொண்டே இருக்க.. ஓரிரு வினாடிகள் யோசித்த மணிமாறன், பிறகு கையிலிருந்த உளியை பட்டென ட்ரேயில் போட்டார்..!! கையுறைகளையும், கழுத்தில் கட்டியிருந்த துணியையும் அவிழ்த்து மேஜையில் விசிறினார்.. மெல்ல நடந்து சென்று படிக்கட்டு ஏறினார்.. கதவை திறந்து வெளியில் பார்வையை வீசினார்..!! அவ்வாறு பார்வையை வீசிய அடுத்தநொடியே.. வெளியே அவர் கண்ட காட்சியில் அப்படியே பக்கென அதிர்ந்து போனார்..!! அந்த கதவிலிருந்து நீண்டிருந்த நீளமான காரிடாரில்.. அங்கிருந்து சற்றே தூரமாக.. காரிடாருக்கு குறுக்குவாட்டில் படுத்திருந்தது அந்த காட்டுப்புலி..!! அந்த புலிக்கருகே.. காரிடாரின் மையமாக.. தலையை குனிந்தவாறு நின்றிருந்தது, சிவப்பு அங்கி போர்த்திய அந்த உருவம்..!! அசைவெதுவும் இல்லாமல் அந்த உருவம் அப்படியே உறைந்துபோய் நின்றிருக்க.. அதன் காலடியில் படுத்திருந்த புலிதான் வாயை அகலமாக திறந்து உறுமிக் கொண்டிருந்தது..!! "க்க்க்கர்ர்ர்ர்ர்.. க்க்க்ககர்ர்ர்ர்ர்..!!!!!" கண்ணால் காண்பதை மணிமாறனால் நம்பவே முடியவில்லை.. அதிர்ச்சியில் திக்கித்துப்போய் அசையாமல் நின்றிருந்தார்..!! அந்த புலி இப்போது எழுந்தது.. தலையை சுழற்றி "க்க்க்கர்ர்ர்ர்ர்.." என்று ஒருமுறை கர்ஜித்தது.. வரிவரியாய் இருந்த உடம்பை ஒருமுறை குலுக்கிவிட்டுக்கொண்டது.. இவரை நோக்கி மெல்ல அடி எடுத்து வைத்தது..!! மணிமாறன் இப்போது சற்றே சுதாரித்துக் கொண்டார்.. ஏதோ விபரீதம் என்று உணர்ந்துகொண்ட அவரது மூளை பட்டென சுறுசுறுப்பானது.. அறைக்கதவை சாத்திவிட சொல்லி அவருக்கு ஆணையிட்டது..!! அதேநேரத்தில்.. நடந்து வந்துகொண்டிருந்த வரிப்புலி கொஞ்சம் கொஞ்சமாய் வேகமெடுத்து.. அறையை நோக்கி ஓடிவர ஆரம்பித்தது..!! சட்டென தரையில் இருந்து எழும்பி, சரக்கென ஒரே பாய்ச்சலாய் பாயவும்.. மணிமாறன் கதவுகளை படக்கென சாத்தவும் சரியாக இருந்தது..!! கதவுகள் மூடிக்கொள்வதற்கு முன்பாக.. அந்த புலியின் ஒற்றைக்கால் மட்டும் உள்ளே நீண்டு.. அதன் கூரிய நகங்கள் மணிமாறனின் முகத்தை பிறாண்டியன..!! "ஆஆஆஆஆஆ...!!" கதவை மூடிய மணிமாறன், தடுமாறிப்போய் கீழே சரிந்தார்.. படிக்கட்டில் கடகடவென உருண்டு தளத்தில் வந்து விழுந்தார்..!! ஆதிராவுக்கு எதுவும் புரியவில்லை.. உள்ளே வந்து விழுந்த மணிமாறனை குழப்பமும், திகைப்புமாக பார்த்தாள்..!! "த்த்தட்ட்டார்ர்ர்.. த்த்தட்ட்டார்ர்ர்.. த்த்தட்ட்டார்ர்ர்..!!!" அந்த புலி சற்றும் சளைக்காமல்.. அறைக்கதவின் மீது திரும்ப திரும்ப பலமாக மோதிக்கொண்டே இருந்தது.. முட்டி முட்டியே கதவை திறந்துவிட முயன்றது..!! வலுவற்ற அந்த கதவும் எந்த நேரமும் திறந்துகொள்வது போல.. தளர்ந்துகொண்டே சென்றது..!! அத்தனை நேரம் மிக நிதானமாக இயங்கிக்கொண்டிருந்த மணிமாறன் இப்போது படக்கென சுறுசுறுப்பானார்.. அவசரம் தொற்றிக் கொண்டவராய் எழுந்து ஓடிவந்தார்.. மரமேஜையின் ட்ராவை இழுத்தார்.. உள்ளிருந்து அந்த கைத்துப்பாக்கியை எடுத்தார்.. பதற்றத்தில் நடுங்குகிற விரல்களோடு தோட்டாக்களை நிரப்பினார்..!! ஒருசில தோட்டாக்கள் அவரது கையிலிருந்து நழுவி.. தரையில் விழுந்து 'டங்.. டணார்ர்ர்..!!' என்று சப்தம் எழுப்பின..!! ஆதிரா எல்லாவற்றையும் அதிர்ச்சியாக, மிரட்சியாக பார்த்துக் கொண்டிருந்தாள்..!! "ப்பட்டாடார்ர்ர்ர்...!!!!!" கதவு திறந்துகொண்டது.. கைத்துப்பாக்கியுடன் மணிமாறன் திரும்பினார்.. வாசலில் தோன்றிய புலி, அங்கிருந்தே 'சர்ர்ர்ர்'ரென இவர் மீது பாய்ந்தது..!! புலியோடு சேர்ந்து தரையில் சரிந்தார் மணிமாறன்..!! "ம்ம்க்க்க்ம்ம்.. ம்ம்க்க்க்ம்ம்.. ம்ம்க்க்க்ம்ம்..!!" புலியை பார்த்த அதிர்ச்சியில், ஆதிரா மிரண்டுபோய் சப்தம் எழுப்பும்போதே.. பதட்டத்துடன் துப்பாக்கியின் விசையை இழுத்தார் மணிமாறன்..!! "ட்ட்டுமீல்..!!!"
பெரும் சப்தத்துடன் துப்பாக்கி வெடித்தது.. வெளிப்பட்ட தோட்டா புலியை தாக்காமல், சுவரை பெயர்த்தது..!! "க்க்க்கர்ர்ர்ர்ர்.." கோபமாக உறுமிய புலி தனது வலுவான காலை தூக்கி மணிமாறனை ஓங்கி அறைந்தது.. அறைந்த வேகத்தில் ஐந்தடி தூரத்தில் போய் விழுந்தார் மணிமாறன்.. அவரது கையிலிருந்த துப்பாக்கி எங்கோ பறந்தது..!! வெலவெலத்துப்போன மணிமாறன் சரக்கென எழுந்தார்.. படிக்கட்டில் அவசரமாய் ஏறி தடதடவென வெளியே ஓடினார்..!! நடந்ததை பார்த்த ஆதிரா திக்கித்துப்போய் அமர்ந்திருந்தாள்.. கத்தக்கூட தோன்றாமல் வாயடைத்துப்போய் உறைந்திருந்தாள்..!! அந்த புலி இப்போது மெல்ல ஆதிராவின் பக்கம் திரும்பியது.. கூர்மையான பற்களை வெளிக்காட்டி "க்க்க்கர்ர்ர்ர்ர்.." என்று ஒரு கர்ஜனை செய்தது..!! பிறகு.. அவளை கண்டுகொள்ளாமல் திரும்பி, மெதுவாக படியேறியது.. வாசலை அடைந்ததும் கொஞ்சம் கொஞ்சமாய் வேகமெடுத்து ஓடியது.. சற்று தொலைவில் ஓடுகிற மணிமாறனை நாலுகால் பாய்ச்சலில் விரட்ட ஆரம்பித்தது..!! நீளமான வராண்டா.. முகத்தில் பீதியுடன் ஓடுகிற மணிமாறன்.. அவரை வெறியுடன் விரட்டுகிற காட்டுப்புலி.. இருவரையும் ஓடவிட்டு அவர்களுக்கு பின்னால், காற்றில் படபடக்கிற சிவப்பு அங்கியுடன் நிதானமாக நடந்துசெல்கிற அந்த உருவம்..!! அறைக்குள் இருந்த ஆதிராவுக்கு ஐந்தாறு வினாடிகள் கழித்தே மூச்சு வந்தது.. கடைசி ஓரிரு நிமிடங்கள் நடந்த சம்பவங்களை கிரஹித்துக் கொள்ளவே அவளுக்கு சிறிது நேரம் பிடித்தது.. காட்டுப்புலி ஒன்று வீட்டுக்குள்ளேயே நுழைந்து தாக்குதல் நடத்துவதை, நம்புவதற்கே மிக கடினமாக இருந்தது..!! அவளுடைய மூளை இப்போது சற்றே சுறுசுறுப்பாகவும்.. அடுத்து என்ன செய்யலாம் என்று அவசரமாக யோசித்தாள்.. அந்த கயவனிடம் இருந்து தப்பிக்க இதை ஒரு வாய்ப்பாக கருதினாள்..!! அப்போதுதான் அவளுடைய பார்வையில் அது பட்டது.. அறைக்குள்ளேயே வந்து புலி செய்த அட்டகாசத்தில், அலமாரி மீது ஏற்றப்பட்டிருந்த ஒரு மெழுகுவர்த்தி, இப்போது தரையில் வீழ்ந்து சுடர்விட்டுக் கொண்டிருந்தது..!! உடம்பை முறுக்கி ஒரு துள்ளு துள்ளி, நாற்காலியை விட்டு தரையில் விழுந்தாள் ஆதிரா.. கை கால்களை உதறி உதறி, அந்த மெழுகுவர்த்தியின் அருகே நகர்ந்தாள்..!! தனது பின்புற கைக்கட்டை எரிகிற தீச்சுடரில் காட்டினாள்.. செல்லோடேப் இளக ஆரம்பித்தது.. ஆதிராவின் கையும் நெருப்பில் பொசுங்கியது.. வாய்விட்டு அலறவேண்டும் போல இருந்தது.. முடியவில்லை.. வேதனையை பொறுத்துக்கொண்டு கையை நெருப்பில் வாட்டினாள்..!! கைகளுக்கு சுதந்திரம் கிடைத்ததுமே, வாயில் ஒட்டியிருந்த செல்லோடேப்பை அவசரமாய் பிய்த்து எடுத்தாள்.. அத்தனை நேரம் அடக்கி வைத்த வலியையும், கிலியையும் வெளிப்படுத்துகிற மாதிரி.. "ஆஆஆஆஆஆஆஆ..!!!!!!" என்று அண்ணாந்து பார்த்து வாய்விட்டு அலறினாள். ஒருசில விநாடிகள்தான்.. பிறகு மீண்டும் ஒரு பரபரப்பு வந்து அவளை தொற்றிக்கொண்டது..!! கால்க்கட்டை கைகளாலேயே சரசரவென பிரித்தாள்.. படிக்கட்டை அடைந்து தபதபவென மேலேறினாள்.. காரிடாரில் வெளிப்பட்டு தடதடவென ஓடினாள்..!! வீட்டைவிட்டு வெளியேறுகிற வழி எதுவென்று தெரியவில்லை.. புடவையை ஒருகையால் உயர்த்தி பிடித்துக்கொண்டு, உத்தேசமாக அந்தவழியில் ஓடினாள்..!! காரிடாரை விட்டு வெளியேவந்து இடப்புறமாக திரும்ப.. "ஆஆஆஆஆஆஆஆ..!!!!"
எங்கிருந்தோ பறந்து வந்து, இவள் காலடியில் விழுந்தார் மணிமாறன்.. அவருடைய முகம், உடம்பெல்லாம் ரத்த விளாறுகள்.. அவரை தொடர்ந்து பாய்ந்து, அவர் மீதே வந்து விழுந்தது அந்த புலி..!! "ஆஆஆஆஆஆஆஆ..!!!!" - மிரண்டுபோய் புறங்கையால் வாய்பொத்தி அலறினாள் ஆதிரா. புலியை உதறித்தள்ளி, கடகடவென தரையில் உருண்டார் மணிமாறன்.. "க்க்க்கர்ர்ர்ர்ர்.." என்று புலி ஆவேசமாக சிலிர்க்க, அவர் தடுமாற்றமாக எழுந்தார்.. ஒற்றைக்காலை இழுத்து இழுத்து வேறுதிசையில் ஓடினார்.. புலி இப்போது நிதானமாக அவரை பின்தொடர்ந்தது..!! எத்தனையோ உயிர்களை, புன்னகை தவழ்கிற முகத்துடன், கொஞ்சம் கொஞ்சமாய் பறித்தவர்.. இப்போது தனது உயிரை காப்பாற்றிக்கொள்கிற உத்வேகத்தில், கிலிபிடித்த முகத்துடன் அங்கும் இங்கும் ஓடித்திரிந்தார்..!! ஆதிராவுக்கு உடம்பெல்லாம் ஒரு வெடவெடப்பு..!! வீட்டின் பிரதான கதவு சற்று தொலைவில் தெரிந்தது.. அந்தக்கதவை நோக்கி வேகமாக ஓடினாள்..!! அவள் அவ்வாறு ஓடும்போதே.. அவ்வப்போது 'சர்ர்ர் சர்ர்ர்'என இடையில் புகுந்து ஓடினார் மணிமாறன்.. அவர்பின்னால் உறுமிக்கொண்டே பாய்ந்தது வரிப்புலி..!! ஆதிரா 'ஆஆ.. ஆஆ..' என்று அவ்வப்போது பதறியடித்து கத்திக்கொண்டே.. புலியின் பாய்ச்சலுக்கு விலகி, ஏதாவது சோபா அலமாரி என்று பதுங்கி பதுங்கியேதான் அந்தக்கதவை சென்றடைய முடிந்தது..!! பிரதான கதவு தாழிடப்பட்டிருந்தது.. ஆதிராவால் திறக்க முடியவில்லை..!! கைகள் ரெண்டையும் அகலவிரித்து, 'படார்ர்ர் படார்ர்ர்' என கதவை ஓங்கி தட்டினாள்..!! "ஹெல்ப்ப்ப்.. ஹெல்ப்ப்ப்..!!!! யாராவது ஹெல்ப் பண்ணுங்க ப்ளீஸ்..!!!" என்று அழுகையோடு அலறினாள். வீடு இப்போது ரணகளம் ஆகியிருந்தது.. அழகாக அடுக்கி வைத்திருந்த பொருட்கள் எல்லாம் தாறுமாறாக இறைந்து கிடந்தன.. உயிருக்கு போராடி அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தார் மணிமாறன்.. அவரை விரட்டி விரட்டி வேட்டையாடிக் கொண்டிருந்தது அந்த காட்டுவேங்கை..!! கதவை தட்டி தட்டி சோர்ந்துபோன ஆதிரா.. வேறென்ன செய்வதென்று எதுவும் புரியாமல்.. அந்தக்கதவில் சாய்ந்தவாறு அப்படியே தரையில் சரிந்தாள்..!! தனது நிலையை எண்ணி.. வாய்விட்டு 'ஓ'வென்று கத்தினாள்..!! அவள் அவ்வாறு கத்திக்கொண்டிருக்கும்போதே.. "ஆஆஆஆஆஆ..!!" என்று அலறியபடியே ஓடிவந்து கதவில் மோதி உருண்டார் மணிமாறன்.. ஆதிராவுக்கு மிக அருகேதான் விழுந்து கிடந்தார்..!! பத்தடி தூரத்தில்.. சோபாவில் விருட்டென ஏறிய புலி.. அப்படியே நாலுகால் பாய்ச்சலாக இவர்களை நோக்கி பாய்ந்தது..!! பதறிப்போன ஆதிரா இருகைகளாலும் முகத்தை பொத்திக்கொள்ள.. அந்த புலி சரியாக மணிமாறனின் கழுத்தை வந்து கவ்வியது.. அவரை அப்படியே அலாக்காக தூக்கி அந்தரத்தில் விசிறியெறிந்தது..!! "ச்ச்சலீர்ர்..!!!!!!" கண்ணாடி ஜன்னலை உடைத்துக்கொண்டு வீட்டுக்கு வெளியே போய் விழுந்தார் மணிமாறன்.. ஒருநொடி கூட தாமதிக்காமல் அவர் பின்னாலேயே பாய்ந்தது காட்டுப்புலி..!! ஆதிராவின் படபடப்பு குறைய சற்று நேரமானது..!! மார்புகள் சர்சர்ரென விம்மி பதற.. கொஞ்சம் கொஞ்சமாய் கைகளை விலக்கி கண்கள் திறந்து பார்த்தாள்..!! "ஆஆஆஆ.. ஆஆஆஆ..!!" வீட்டுக்கு வெளியே மணிமாறனின் அலறல்.. சன்னமாக தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தது..!! ஆதிரா மெல்ல எழுந்தாள்.. பொறுமையாக அடியெடுத்து வைத்தாள்.. உடைந்துபோன ஜன்னலின் வழியாக வெளியே பார்த்தாள்..!! இரவு நேரத்து மங்கலான வெளிச்சம்.. வீட்டை சுற்றி வளர்ந்திருந்த கோரைப்புற்கள்.. அந்தப்புற்களில் அங்குமிங்கும் சோர்வாக உருண்டோடிய மணிமாறனை.. பாய்ந்து பாய்ந்து குதறிக்கொண்டிருந்தது அந்த புலி..!! "க்க்க்கர்ர்ர்ர்ர்.. க்க்க்கர்ர்ர்ர்ர்.." என்று உறுமியது.. அவர்மேலே விழுந்து கால்களால் பிறாண்டியது.. வாயால் இறுகக்கவ்வி தூக்கி விசிறியது.. சற்று தள்ளிப்போய் விழுபவர் மீது, சர்ரென மீண்டும் பாய்ந்தது.. தலையை ஆட்டி ஆட்டி கடித்து குதறியது..!! ரத்தத்தை உறையவைக்கிற மாதிரியான கோரக்காட்சி.. ஆனால் அதைப்பார்த்த ஆதிராவிடம் அதற்குண்டான பதைபதைப்பு இப்போது இல்லை..!! அடுத்தடுத்து வரிசையாக நடந்த திகில் சம்பவங்களால்.. அவள் மிகவும் களைத்துப் போயிருந்தாள்..!! முகத்தில் எந்தவித பதற்றமும், சலனமும் காட்டாமல்.. மணிமாறன் அனுபவிக்கிற சித்திரவதைகளை இங்கிருந்து வெறித்து பார்த்தாள்..!! தீவிரமாக அவரை கடித்துக் குதறிக்கொண்டிருந்த புலி, இப்போது திடீரென அமைதியானது.. 'க்க்க்கர்ர்ர்ர்ர்..' என்று ஒரு உறுமலை மட்டும் வெளிப்படுத்திவிட்டு, கொஞ்சம் கொஞ்சமாய் பின்வாங்கியது..!! ரிவர்சில் நான்கைந்து ஸ்டெப்ஸ் எடுத்து வைத்து.. அப்படியே உடல் குறுகிப்போய் தரையில் படுத்துக்கொண்டது.. மிகவும் அப்பாவியான ஒரு பூனைக்குட்டியைப் போல..!! மணிமாறன் குற்றுயிரும் குலையுயிருமாக கிடந்தார்.. அவரிடம் உயிர் இன்னும் மிச்சமிருக்கிறது என்பது தெளிவாக தெரிந்தது.. அவரது தொண்டைக்குழி 'விழுக் விழுக்' என்று துடித்தது.. ஒரு கை மட்டும் 'வெடுக் வெடுக்' என வெட்டிக்கொண்டு கிடந்தது..!! ஆதிராவுக்கு ஒன்றுமே புரியவில்லை.. 'ஏன்.. என்னாச்சு அந்த புலிக்கு.. எதற்காக இப்படி செய்கிறது..?' என்பது மாதிரியாக அவளுக்குள் கேள்விகள்.. வித்தியாசமாக பார்த்தாள்..!! அவள் அவ்வாறு பார்த்துக் கொண்டிருக்கும்போதே.. மணிமாறனின் தலைக்கருகே வந்து நின்றது அந்த உருவம்.. முகத்தில் கூந்தல்க்கற்றையோடு, சிவப்பு அங்கி போர்த்திய அந்த உருவம்..!! அதைப்பார்த்ததுமே திக்கென்று இருந்தது ஆதிராவுக்கு.. நெஞ்சுக்குள் ஏதோ பந்து ஒன்று அடைத்துக்கொண்ட மாதிரியாக ஒரு உணர்வு..!! அதிர்ச்சியில் அவளது உதடுகள் 'ஓ'வென்று திறந்துகொள்ள.. வாய்விட்டு அலறக்கூட தோன்றாமல் உறைந்துபோய் நின்றிருந்தாள்..!!
அந்த உருவம் இப்போது குனிந்தது.. சாகாமல் துடிதுடித்துக் கொண்டிருந்த மணிமாறனை அள்ளி தோளில் போட்டுக்கொண்டது.. திறந்திருந்த காம்பவுண்ட் கேட் நோக்கி மெல்ல நடந்தது..!! படுத்திருந்த புலியும் இப்போது எழுந்துகொண்டது.. தலையை தொங்கப்போட்டவாறு அந்த உருவத்தின் பின்னால் நடந்தது.. மிகவும் விசுவாசனமான ஒரு வேலைக்காரனைப் போல..!! ஆதிரா நடப்பதை எல்லாம் நம்பமுடியாதவளாய்.. இமைகளை விரித்துவைத்து ஜன்னல் வழியே பார்த்துக்கொண்டிருந்தாள்..!! கேட்-க்கு அருகே சென்றதும் அந்த உருவம் சற்று நின்றது.. அப்படியே சரக்கென திரும்பி, ஆதிராவை கூர்மையாக ஒரு பார்வை பார்த்தது..!! ஆதிராவுக்கோ தண்டுவடத்தில் ஜிவ்வென்று ஒரு சிலிர்ப்பு.. பக்கென்று இருதயத்தை யாரோ இறுகப்பற்றியது போலொரு உணர்வு..!! ஓரிரு வினாடிகள்தான்..!! அந்த உருவம் மீண்டும் அந்தப்பக்கம் திரும்பியது.. தோளில் மணிமாறன், காலுக்கடியில் காட்டுப்புலி.. கேட்-க்கு வெளியே நடந்தது.. காட்டுக்குள் சென்று மறைந்தது..!!

No comments:

Post a Comment