Thursday, July 31, 2014

சங்கீதா - இடை அழகி 69


“ஹலோ அக்கா, நல்ல ரெஸ்ட் எடுத்தீங்களா?” “நான் எடுக்குறது இருக்கட்டும், நீதான் முக்கியமா எடுக்கணும். நீ எப்போ வருவேன்னு காத்திட்டு இருக்குது இதுங்க ரெண்டும். கொஞ்சம் நேரம் இதுங்களுடன் விளையாடிட்டு படுத்து ரெஸ்ட் எடும்மா. உனக்கும் உள்ள சூடா காபி போட்டு வெச்சி இருக்கேன்.”
“thanks அக்கா, இன்னைக்கி வர கொஞ்சம் லேட் ஆகிடுச்சி. நீங்க ஏதாவது சாப்டீங்களா?” “இப்போ எதுவும் வேணாம்டா, நீ பார்த்துக்கோ, நான் இப்போ கிளம்புறேன். கொஞ்சம் வீட்டுலயும் வேலை இருக்கு.” – என்று சொல்லிவிட்டு கிளம்பினாள் நிர்மலா. “என்னங்கடா பண்ணீங்க ரெண்டு பேரும் இன்னைக்கி?” – என்று பேசிக் கொண்டே சங்கீதா சமையல் அறைக்கு செல்ல பின்னாடியே ஸ்நேஹா மெதுவாக வந்தாள். “என்னடா கண்ணா?” – என்றாள் சங்கீதா.. “அம்மா, நேத்து கேட்கனும் னு இருந்தேன், அன்னிக்கி என்னையும் ரஞ்சித்தயும் ஸ்கூல் ல இருந்து ஒரு நாள் கூட்டிட்டு வந்தாரே ராகவ் மாமா, அந்த மாமா தானே அன்னிக்கி function ல stage மேல இருந்தாரு?” “ஹா ஹா, ஆமாம், ஏண்டா கேட்குற?” – ராகவ் பத்தி கேட்டவுடன் சங்கீதாவுக்கும் மனதில் ஒரு வித சந்தோஷம். “ஒன்னும் இல்லைமா, எனக்கு அந்த மாமவ ரொம்ப பிடிச்சி இருக்கு, திரும்பவும் பார்க்க முடியுமா மா?” “எதுக்கு? இன்னொரு talking barbie doll வாங்கிக்கவா? ஹா ஹா..” “அது இல்லைமா, வேற ஏதாவது புதுசா பொம்மை வாங்கிக்கலாமே னு கேட்டேன்..அதான்.” – பால்வடியும் முகத்துடன், வெளிப்படையாக பேசினாள் ஸ்நேஹா. “எப்போ நினைச்சாலும் பார்க்கலாம், அம்மா நாளைக்கு அவரை தான் பார்க்க போறேன்”. – தன் மகளிடம் இதை சொல்லும்போது சங்கீதாவின் முகத்தில் அப்படி ஒரு சந்தோஷ சிரிப்பு. பேசிக் கொண்டிருக்கும்போது phone பீப் பீப் என்று சத்தம் குடுக்க, உற்சாகமாய் மொபைலை எடுத்தாள். அதில் “I wont come home today also, I will stay with my friend tonight” என்று குமார் sms அனுப்பியதைப் பார்த்துவிட்டு சற்று சலிப்புடன் “ஹ்ம்ம்…. இன்னைக்கி night ஒருத்தருக்கு குறைச்சி சமைக்கணும்” என்று மட்டுமே எண்ணினாள் சங்கீதா. டிக் டிக் என்று கடிகாரத்தில் பெரிய முள் சுழன்று சுழன்று சிறு முள்லை கிட்டத்தட்ட 10 நோக்கி அழைத்து சென்றது. நீண்ட நேரம் pogo, மற்றும் chutti tv என குழந்தைகள் இருவரும் மாறி மாறி பார்த்துக் கொண்டு சங்கீதா குடுத்த உணவை சமத்தாக சாப்பிட்ட பிறகு தூக்கம் அவர்களது இமைகளை இழுக்க அவர்கள் இருவரையும் படுக்கையில் படுக்க வைத்துவிட்டு, வீட்டு வேலைகள் அனைத்தையும் முடித்து விட்டு தனிமையில் சற்று ஹாலில் வந்து வழக்கமாக கண்ணாடியின் முன் fanனின் கீழ் அமர்ந்தாள். இப்போது ராகவ் குடுத்த கவரை ப் பிரிப்பதற்கு முன் அதில் என்ன எழுதி இருக்கிறதென்று பிரித்துப் பார்த்தாள் “newly designed saree for working women” என்று எழுதி இருந்தது. I am honouring the saree by giving the first piece to my தேவதை சரா – என்று எழுதி ராகவ் சிக்னேச்சர் போட்டிருந்தான். புடவைப் பார்ப்பதற்கு நைசாகவும் அதே சமயம் கனம் கம்மியாகவும், உடுத்தினால் transparent ஆக இல்லாத விதமாகவும், கூல் effect குடுப்பது போல் இருக்கும் என்று அந்த புடவையின் தன்மையைப் பற்றி அந்த கவரில் படித்து தெரிந்து கொண்டாள். உற்சாகமாய் பிரித்துப் பார்த்தாள், வானத்தின் நீல நிறம் காட்டிலும் சற்று dark ஆக இருந்தது புடவையின் நிறம். அதில் அழகாக சிறிய பளபளக்கும் கல் வைத்து design செய்யப்பட்டிருந்தது, இன்னும் ஏராளமான புதிய விஷயங்கள் அந்த புடவைக்கு சிறப்பம்சம் சேர்த்தது. சங்கீதாவுக்கு தனது குழந்தைகள் தூங்கும் அறைக்கு சென்று night lamp on செய்து அங்குள்ள கண்ணாடியின் முன்பு இந்த புடவையை கட்டிப் பார்க்க வேண்டுமென்று தோன்றியது.
அப்போது பீப் பீப் என்று sms வர எடுத்துப் பார்த்தாள் “message from SH” என்று இருந்தது.. அதில்.. “Is it right time to talk honey?” என்று இருந்தது.. “நீ எதையும் permission கேட்டு செய்யுற ஆளோ?” – என்று reply செய்தாள். சில நொடிகளுக்கு பிறகு “என் மேல் விழுந்த மழைத் துளியே” என்று சங்கீதாவின் மொபைல் சிணுங்க கண்ணாடியின் முன் வேகமாக ஒரு சுத்து சுத்தி கூந்தல் காற்றில் ஆட தன் தேவனின் குரல் கேட்க ஆவலுடன் phone attend செய்தாள். ஹலோ ஸ்வீட் ஹார்ட்” – தனக்கே உரிய அந்த வசீகர குரலில் பேசினான். “ஹலோ ஹணி” “என்ன செய்யுற இப்போ?” “நீ குடுத்த புடவைய பார்த்துட்டு இருக்கேன்.” “சும்மா பார்த்துட்டு மட்டும்தான் இருக்கியா?” “கட்டி பார்த்துக்குட்டு இருக்கேன் டா…” “ஒஹ்ஹ் சாரி அப்போ நான் ரூம் விட்டு வெளியே போயிடுறேன்….” “ஏய் naughty… நீ phone ல தான் இருக்கே, ரூம்குள்ள கிடையாது. இங்கே மட்டும் இருந்திருந்தால் நானே புடிச்சி வெளியே தள்ளி இருப்பேன். ஹா ஹா..” “ஹா ஹா.. சரி சரி கட்டி பார்த்தாச்சா?” “ஹ்ம்ம்.. பார்துக்குட்டே இருக்கேன்….” – இந்த புடவையை அணிந்தால் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில் சற்று அவசரமாகவே கட்டினாள். இன்றுவரை எத்தினையோ புடவைகள் கட்டினாலும் இப்போது கட்டிப் பார்க்கும் போது கண்ணாடியில் சாராவின் முகத்தினில் ஒரு விதமான அழகிய வெட்கம் தெரிந்தது. காரணம் ஒரு புறம் தன் மணம் விரும்பும் காதலன் பேசிக்கொண்டிருக்க அதே சமயம் மற்றொரு புறம் புடவையைக் கட்டிகொண்டிருப்பது இந்த தேவதைக்கு சற்று கூச்சத்தை ஏற்படுத்தியது. டக்கென ஒரு நிமிடம் “ஹாஹ்” என்று குறைவான சத்தத்தில் கூச்ச சிரிப்பைக் குடுத்தாள். “என்ன ஆச்சு? எதுக்கு சிரிப்பு?. புடவை சரியா இல்லையா?” “No no, I just love the saree, நான் வேற எதுக்கோ சிரிச்சேன் டா..” “ஹா ஹா.. கவல படாத சரா, நான்தான் சொன்னேனே ரூம் விட்டு வெளியே போயிடுறேன்னு. அதையே நினைச்சிட்டு இருந்தா உனக்கு சிரிப்புதான் வரும்.” “ஹையோ…., ஐயாவுக்கு மனசுல ரொம்பதான் நினைப்பு. நான் ஒன்னும் அதெல்லாம் நினைக்கல.” – இப்படி பேசிவிட்டு வாயை மூடி ராகவின் reaction எப்படி இருக்கும் என்று எண்ணி சத்தம் இல்லாமல் வயிறு குலுங்க சிரித்தாள் சரா.
“சரி சரி… என்னை ஒட்டினது போதும், நாளைக்கு எனக்கு ஏதோ surprise தரேன்னு சொன்னியே? என்னது அது?” “ஹலோ Mr.Sweet CEO. பொம்பளைங்க வாய் பொதுவா ஒட்ட வாய்தான் ஆன நான் அப்படி இல்ல, நீ எப்படி உன் surprise சொல்ல மாட்டியோ அதே மாதிரி நானும் சொல்ல மாட்டேன்.” – ( surprise எல்லாம் குடுக்க நிஜம்மா என் கிட்ட ஒன்னும் இல்லடா.. என்னை இன்னும் நம்பிக்குட்டு இருக்கியேடா லூசு?” என்று கண்ணாடியின் முன் மனதுக்குள் எண்ணி வாயில் விரலைக் கடித்து சிரித்துக் கொண்டாள்.) “நீ கொஞ்சம் அடம் பிடிக்குற டைப் டி ச்ச..?” “ஹா ஹா…. ரொம்ப ரொம்ப அடம் பிடிப்பேன்….” “cool…. எனக்கு அடங்காத குதிரைதான் ரொம்ப பிடிக்கும்.” “ஹா ஹா….. ஹேய், dont get naughty….” – பேசிக் கொண்டிருக்கும்போது மதியம் ரம்யா குடுத்த மருதாணி சங்கீதாவின் handbag ல் இருந்து வெளியே தன் தலையை நீட்டி அவள் கண்ணில் பட, சட்டென ஒரு நொடி தீப்பொறி போல் மனதில் ராகவ்க்கு ஒரு புது surprise குடுக்கும் எண்ணம் தோன்றியது சங்கீதாவுக்கு. “actually உனக்கு நான் ஒரு surprise தரத்தான் போறேன்..” “அதான் ரொம்ப நேரமா சொல்லுறியே… அது என்னன்னு சொல்லேன்?” “Wait till tomorrow my sweet heart. சரி நான் இப்போ phone வைக்குறேன். நாளைக்கு காலைல sharp அ 10 மணிக்கு எனக்கு வண்டி அனுப்பிடு..சரியா?” “நான் வேணும்னா 9 மணிக்கு அனுப்பவா?” “ஹேய்… எனக்கு வீட்டுலயும் வேலை இருக்குடா.. சில விஷயங்கள முடிசிட்டுதான் உன் IOFI consultation வேலைய பார்க்க முடியும்.” “consultationக்கு மட்டுமே full டைம் ஒதுக்கிடாதே, கொஞ்சம் இந்த மக்கு ராகவ்க்கும் டைம் ஒதுக்கு.” “உனக்காக டைம் ஒதுக்குன்னு சொல்லு ஒத்துக்குறேன், ஆனா உன்னை மக்குன்னு சொல்லாத, உன் மூலைய வெச்சி உலகத்துல முடியாதது எதெல்லாம் இருக்குன்னு லிஸ்ட் போட்டு குடுத்தா ஒன்னு ஒன்னுத்தயும் என்னால மட்டும்தான் முடியும்னு சாதிச்சி காட்டிடுவடா மை ஸ்வீட் ராஸ்கல்.” “ஹா ஹா… board meetting ல என்னை மத்தவங்க புகழுறதை விடவும் நீ குடுத்த இந்த பாராட்டு செம நச்சுன்னு இருக்கு சரா.. இதுக்காகவே நான் அந்த surprise என்னன்னு உனக்கு சொல்ல ஆசைப் படுகிறேன்….” – உணர்ச்சி வசப் பட்டு வாய் வரை வார்த்தைகள் வந்தது ராகவ்க்கு.. “ஹ்ம்ம்…. சொல்லு சொல்லு சொல்லு….” – சங்கீதா அடக்க முடியாத ஆர்வத்தில் கேட்டாள்…. “ஹ்ம்ம்.. அது வந்து… வேணாம், நேர்லயே வந்து பார்த்துக்கோ… சொல்ல மாட்டேன்.” “சப்.. போடா..” “ஹா ஹா… சரி நான் இப்போ வைக்குறேன், ரெஸ்ட் எடுத்துட்டு காலைல 10 மணிக்கு வண்டி வரும், கிளம்பி வா. மத்ததெல்லாம் நேர்ல பேசிக்கலாம்… good night honey.” “good night sweet heart, I love you so much. ummaahh…” “my god….நம்ப முடியல… இன்னொரு தடவ அந்த ummaahh கிடைக்குமா? ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்….” “ஹா ஹா…. ச்சீ போடா…. நாளைக்கு பார்க்கலாம். வைக்குறேன்.” சுத்தமாக மணம் இன்றி இருவருடைய விரல்களும் அவரவர் phone ல் உள்ள cancel பட்டனை அழுத்தியது. ராகவ் குடுத்த புடவையை அடுத்த நாள் காலை IOFI க்கு கிளம்பும்போது கட்டிக் கொண்டிருந்தாள் சங்கீதா. அதற்கு பொருத்தமான blouse அணிந்து வழக்கம் போல இல்லாமல் தலை முடியை freeயாக விட்டு நடுவில் வகிடு எடுப்பதற்கு பதிலாக பக்கவாட்டில் வகிடு எடுத்து கொஞ்சம் hair dryer உதவியால் முடியின் நுனியில் curly ஸ்டைல் செய்து கொஞ்சம் வித்யாசமான designer வகை வளையல்களை அணிந்திருந்தாள். தன் காதலனுக்கு காண்பிக்கப் போகும் surprise எண்ணி மகிழ்ந்தாள். நேரம்: காலை 10:00 மணி. டிங் டிங்…. – calling bell சத்தம் கேட்டு விரைந்தாள். வெளியே நின்றது டிரைவர் தாத்தா அல்ல, குமார். “வாங்க.. ராத்திரி எங்கே தங்கி” – சங்கீதா பேசி முடிப்பதற்குள் குறுக்கிட்டான். “எங்கயோ தங்கினேன், தயவு செய்து என்னை எதுவும் கேட்க்காத. நீ உன் வேலைய பாரு” – சங்கீதா அவன் முகம் கொஞ்சம் அதிகம் வேர்த்திருப்பதை கவனித்தாள். குமாரிடம் மீண்டும் ஏதோ கேட்க முனையும்போது மீண்டும் “டிங் டிங்” சத்தம்… “என்ன மேடம்.. ரெடியா?” – என்று டிரைவர் தாத்தா வாசலில் நின்று கேட்க.. “இருங்க வந்துடுறேன்.” – என்று சொல்லிவிட்டு குமாரை ஒருமுறைப் பார்த்தாள். அவன் தன் அறைக்கு சென்று கதவை “டமால்” என்று பலமாக சத்தம் வரும்விதம் சாத்திக் கொண்டான். “எதுவும் சொல்லாமல் சங்கீதாவும் அங்கிருந்து கிளம்பினாள்.” IOFI Benz கார் ராகவ் cabin அருகே சென்று நின்றது. சந்கீதாவைப் பார்த்ததும் sheila ki jawani பாடலுக்கு மேடையில் சங்கீதா ஆடியதைப் போல குறும்பாக இடுப்பை ஆட்டி பாவனை செய்து “ஹாய் சங்கீ” என்று முக மலர்ச்சியுடன் சிரித்து வரவேற்றாள் சஞ்சனா. “ஹா ஹா… போதும் நிறுத்துடி, எங்கே ராகவ்?” “வர வர IOFI உள்ள வந்தாலே எடுத்தவுடன் ராகவ் ராகவ் ராகவ், ஏன் எங்க முகம் எல்லாம் உங்க கண்ணுக்கு தெரியலையா?”
“ஹேய்…. அப்படி இல்லடி இன்னைக்கி consultation இருக்கு, அதான்..” “சரி சரி புரியுது, அய்யா மீட்டிங் ல இருக்காரு, கொஞ்சம் இருங்க….” – மீண்டும் குறும்பாக சிரித்து சொல்லிவிட்டு சென்றாள். சஞ்சனா ராகவின் meeting அறையை விட்டு வெளியே வந்து சங்கீதாவை உள்ளே அழைத்தாள். “நல்ல ஜில்லென்று AC காற்றும், மேல்தரத்து மஞ்சள் விளக்கு வெளிச்சம் கொண்ட அதி நவீன மர வேலை பாடுகள் கொண்ட மேஜைகளும், நாற்காலிகளும் இருந்த அந்த அறைக்குள் சங்கீதா நடந்து வருகையில் ராகவின் கண்களுக்கு உண்மையில் ஒரு தேவதை நடந்து வருவது போல தான் உணர்ந்தான். சங்கீதா உள்ளே சென்றதும் கோட் சூட் உடையில் அமர்ந்திருக்கும் மரியாதை நிமித்தமான மனிதர்கள் அனைவரும் ஒரு முறை தங்களது கழுத்தை நிமிர்த்தி, புருவங்களை உயர்த்தி ஒரு முறைப் பார்த்தால் பத்தாது என்று அவர்களின் கண்கள் கெஞ்சும் விதம் மீண்டும் சிறிது சங்கோஜத்துடன் குனிந்து ஒருவருக்கொருவர் தெரியாத வண்ணம் சரா தேவதையை அவ்வப்பொழுது நோட்டம் விட்டார்கள்.

No comments:

Post a Comment