Friday, July 11, 2014

சங்கீதா - இடை அழகி 48


வழக்கமாக என்றைக்காவது முக்கியமான நாளாக இருந்தால் செண்டிமெண்ட் காரணமாக அந்த நாள் நன்றாக அமையவேண்டும் என்பதற்கு அவளது மஞ்சள் நீராட்டு விழாவின்போது அவளது அம்மா வாங்கிக்குடுத்த மஞ்சள் நிறத்தில் மிதமான சிகப்பு நிற border வைத்த பட்டுப்புடவையை தான் கட்டுவாள். சில வருடங்களாக dry clean செய்து எடுக்காமல் பத்திரமாக வைத்திருந்த அந்த புடவையை அன்று காலை அவளது bureau வினுள் இருந்து எடுத்து வெளிச்சத்தில் பார்த்தாள். இப்போது மணி ஏழு இருக்கும், சூரிய வெளிச்சத்தில் அவளது புடவை அவள் நினைவில் “அந்த” வயதுக்கு வந்த புரியாத புதிர் காலத்தை சில நொடிகள் நியாபகப்படுத்திவிட்டு சென்றது. தனக்குத்தானே சிரித்துக்கொண்டு அந்த புடவையை கண்ணாடியின் முன் கட்ட ஆரம்பித்தாள் சங்கீதா. அதற்கு matching ஆக maroon நிற sleeveless silk blouse அணிந்த பிறகு வளையல், கொலுசு மூக்குத்தி என பெண்ணின் சகல சாதனமும் அவளது மேனியில் ஏறிக்கொண்டு தன் எஜமானிக்கு அழகு சேர்ப்பதில் கவனமாக இருந்தன.
கண்ணாடியின் முன் மும்முரமாக கூந்தலை பின்னிக் கொண்டிருன்தவள் சில நொடி break குடுத்து தனது mobile phone ல் ரம்யாவுக்கு call செய்தாள். ஹலோ டி… சங்கீதா here… ஹலோ mam.. good morning – என்று தூக்கம் களைந்த குரலில் பேசினாள் ரம்யா. ஏய்ய் ரம்யா, கவனமா கேளு, இப்போ நான் முழுசா சொல்லுறதுக்கு நேரம் இல்ல, நீ சீக்கிரமா குளிச்சிட்டு கிளம்பி என் வீட்டுக்கு வந்துடு. இன்னைக்கு நாம IOFI award functionக்கு போறோம். wow… nice mam ஆனால் இன்னைக்கு bank க்கு leave apply பண்ணலையே? – என்றாள் பாவமாக.. நீ leave apply பண்ணா அதுக்கு approve பன்னுறவளே நான்தான் டி லூசு… நானே சொல்லுறேன், அப்புறம் என்ன சீன் போடுற? சீக்கிரமா கிளம்பி வா. அதுவும் இல்லாம இன்னைக்கு நிறைய பேர் சீக்கிரம் கிளம்பிடுவாங்கன்னு நேத்து Mr.Vasanthan என் கிட்ட சொன்னாரு. அப்போ நம்ம வேலை எல்லாம் யாரு செய்யுறது mam? public dealings க்கும் நமக்கும் சம்மந்தம் இல்லைடி, அவங்க bank ல இருப்பாங்க, நாம நம்முடைய வேலைய கொஞ்சம் pending வெச்சாலும் monday morning வந்து முடிச்சிக்கலாம். இப்போ நீ இந்த மாதிரி நிறைய கேள்வி கேட்க போறன்னா உனக்கு leave கிடையாது. இல்ல இல்ல…. நான் அப்படி சொல்லல, நாளைக்கு என் சங்கீதா மேடம் க்கு எந்த கேள்வியும் வந்துடக் கூடாதுன்னு நினைச்சி கேட்டேன்.. – என்று கிண்டலாக சொல்லி ரம்யா சிரிக்க… போதும் அடங்குடி வாலு… சீக்கிரமா கிளம்பி வா, நாம என் வீட்டுல இருந்து 9 மணிக்கு கிளம்பனும். சீக்கிரம் வந்தால் உனக்கு ஒரு surprise சொல்லுறேன். – என்றாள் சங்கீதா சிரித்துக்கொண்டே. என்ன surprise சங்கீதா சொல்லுங்க please – என்றாள் ரம்யா, excitement அடங்காமல். நான்தான் இன்னைக்கு அங்கே நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போறேன். raghav requested sincerely டி. கூடவே எனக்கும் கொஞ்சம் ஆர்வம இருந்துச்சி. அதான் ஒத்துகுட்டேன். – இதை சொன்ன உடன் ரம்யா ஏகத்துக்கும் excite ஆனாள்..
என்னது தொகுத்து வழங்க போறீங்களா? என்ன சொல்லுறீங்க? – நம்ப முடியாமல் கேட்டாள் ரம்யா. அது பெரிய கதைடி, வா பேசலாம், but நான் ஒத்துக்குட்டேன். “woww..mam… இந்த பூனையும் பால் குடிக்குமானு பார்த்தா cocktail ளே குடிக்குதே.. சூப்பர்… சூப்பர்… ஆனா…” – என்று இழுத்தாள் ரம்யா.. ஹஹ்ஹா… என்னடி ஆனா?… நீங்க உங்க புருஷன் கிட்ட சொல்லிடீன்களா? ஏதாவது சரியா புரிஞ்சிக்காம பேசப்போறாறு mam, சமாளிக்க முடியுமா? – என்று ரம்யா கேட்க உடனடியாக சந்கீதாவால் பதில் ஏதும் கூற முடியவில்லை. சில நொடிகளுக்கு பிறகு மௌனம் களைந்து கொஞ்சம் அழுத்தமாக ஒரு வார்த்தை சொன்னாள் சங்கீதா.. “முடியும்..”. உங்களால எதுவும் முடியும் மேடம்.. all the best.. சரி சரி நான் போயி என் வீட்டுக்காரரை எழுப்புறேன், அவர்தான் என்னை drop பண்ணனும், விட்டா மத்தியானம் வரைக்கும் தூங்குவாறு, அவரை எழுப்பிவிட்டு நானும் கிளம்புறேன் மேடம், உங்க வீட்டுல பார்க்கலாம் bye – என்று பரபரப்பாக பேசி phone கட் செய்தாள் ரம்யா. ரம்யா phone கட் செய்தவுடன், நிர்மலாவுக்கு phone செய்தாள் சங்கீதா.. என்னமா சங்கீதா?… – நிர்மலா எதிர்முனையில் பேசினாள். ஒன்னும் இல்லைக்கா, இன்னைக்கு என் கணவர் வேலை பார்க்குற company ல ஒரு award function இருக்கு, நீங்களும் என்னோட சேர்ந்து வரணும் னு ஆசை பட்டேன்க்கா அதான் phone பண்ணேன். ஹ்ம்ம்… (சற்று யோசித்து விட்டு பேச ஆரம்பித்தாள் நிர்மலா..) ஒன்னும் பிரச்சினை இல்லமா, வீட்டுக்கு இன்னைக்கு யாரும் வர மாட்டங்க, ரோஹித்தும் excursion போய் இருக்கான். வீட்டுல சும்மா இருக்குறதுக்கு நான் உன் கூட வரேன்மா.. – என்று நிர்மலா சொல்ல சங்கீதாவின் முகத்தில் அவ்வளவு சந்தோஷம். thanks க்கா, ஒரு 9 மணிக்கு என் வீட்டுக்கு வந்துடுங்க, இங்கிருந்து நாம வண்டியில கிளம்பலாம். நீங்க வந்த பிறகு நான் ஒரு surprise சொல்லுறேன் வாங்க surprise அ, என்னமா surprise? – என்று நிர்மலா சிரித்துக்கொண்டே கேட்க… நீங்க வாங்க அப்புறம் சொல்லுறேன் – என்று சிறு குழந்தை சினிமாவுக்கு தயார் ஆகும்போது பரவசப்படுவது போல சிரித்து சொல்லிவிட்டு phone கட் செய்தாள் சங்கீதா. ஸ்நேஹா எழுந்த பிறகு ஹாலில் ஆதித்யா நகைச்சுவை சேனல் வைத்து ப் பார்த்துக்கொண்டிருந்தாள். ரஞ்சித், நேற்று மதியம் ராகவ் வாங்கிக்கொடுத்த remote control car வைத்து விளையாடிக்கொண்டிருந்தான். இதைப் பார்த்த சங்கீதா…. “ஒரு 30 minutes TV பார்த்துட்டு குளிச்சி ரெடி ஆயிடுங்க, அம்மா அப்புறம் இன்னைக்கு ஒரு function க்கு கூட்டிட்டு போறேன் சரியா?” என்று சொல்லிவிட்டு பாதியில் கூந்தலை பின்னிகொண்டிருப்பதை நிறுத்திய சங்கீதா மீதி பாதியை பின்ன தொடங்கினாள். அப்போது சற்றும் எதிர்பாராத வண்ணம் எதிர் முனையில் குமார் அவனது bedroom கதவை திறந்து வெளியே வரும்போது safari அணிந்து முழுவதுமாக ரெடி ஆகி வந்து நின்றான். சங்கீதா காலையிலேயே தயார் ஆவதை கண்டு ஒன்றும் புரியாமல் பார்த்தான். சங்கீதாவுக்கும் சட்டென்று பார்த்ததும் என்ன சொல்வதென்றே தெரியவில்லை.. ஹக் ஹ்ம்ம் – என்று லேசாக அடித் தொண்டையை கரகத்து சங்கீதாவை கேள்விக்குறி மற்றும் ஆச்சர்யக்குறி கலந்த பார்வையில் பார்த்தான் குமார். சொல்லுங்க… சீக்கிரமாவே கிளம்பிட்டீங்களே award functionக்கு? – என்று சங்கீதா கேட்டவுடன் இவளுக்கு எப்படி தெரியும் என்று யோசித்தான் குமார். நான்தான் இப்போ உனக்கு சொல்லலாம்னு இருந்தான் அதுக்கு முன்னாடி எப்படி உனக்கு இந்த விஷயம் தெரியும்? – புருவத்தை இறக்கி க் கேட்டான் குமார். “தெரியும்…” – கூந்தலை வாரிக்கொண்டு கண்ணாடியை ப் பார்த்துப் பேசினாள் சங்கீதா…. “அதான் எப்படின்னு கேட்டேன்…”.- தலையை சாய்த்து கண்களை மட்டும் உயர்த்தி கேட்டான் குமார். “I got invitation” – கூந்தலை பின்னி முடித்து clip மாட்டிக்கொண்டு கண்ணாடியில் குமாரின் முகத்தை ப் பார்த்து பேசினாள் சங்கீதா. “யார் குடுத்தா?” – ஆச்சர்யமாக கேட்டான் குமார். ஒரு வேலை வீட்டிற்கு post ல் வந்திருக்குமோ என்றும் எண்ணினான். காரணம் IOFI கம்பனியில் பணி புரியும் அனைவருக்கும் invitation குடுக்க மாட்டார்கள். முக்கால்வாசி அழைப்பு அட்டைகள் executives க்கு தான் வழங்கப்படும். மற்றபடி ஊழியர்கள் அனைவருக்கும் e-mail மூலம் விழாவை ப் பற்றி தெரிவித்துவிடுவார்கள். எனவே குமாருக்கு சங்கீதா இன்று நடக்கும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போகிறாள் என்பது தெரியாது. யார் குடுத்தா? என்று குமார் கேட்டதற்கு “உங்க கம்பெனி employee ஒருத்தர் என் மேனேஜர் Mr.Vasanthan க்கும் எனக்கும் குடுத்தார்….” என்று கூலாக பதில் அளித்தாள். “அப்படியா?.. குடுத்தவன் யாரு?” – கை கடிகாரத்தை சரி செய்துகொண்டு அலட்சியமாக கேட்டான் குமார். ஹ்ம்ம்…. – சங்கீதா, குமாரின் அலட்சியத்தை கண்டு பாவமாக க் கருதி மெதுவாக சத்தமின்றி சிரித்தாள். நான் யாருன்னு கேட்டதுக்கு இன்னும் பதில் வரல…. – என்று மீண்டும் தனது watch பார்த்து குரல் உயர்த்தி க் கேட்டான். “ஹ்ம்ம்… உங்க bossக்கும் bossக்கும் Boss அவன்” – என்று அழுத்தமாக சொல்லும்போது சங்கீதா லூசாக இருக்கும் புடவை கொசுரை வெளியே எடுத்து மீண்டும் சரி செய்து இடுப்பின் நடுவில் தொப்புள் அருகே உள்ளே சொருகி tight ஆக்கிக்கொண்டு பேசினாள்.
“யா..யாரது..” – ஒரு நிமிடம் குழம்பினான் குமார்.. படபடப்பு எட்டிப்பார்க்க ஆரம்பித்தது லேசாக.. “Mr.Raghav, உங்க கம்பெனி Chief executive Officer” – கேட்ட ஒரு நொடி குமாருக்கு தூக்கி வாரிப்போட்டது. எப்… எப்படி உனக்கு அவரை தெரியும்? – தயங்கி க் கேட்டான். இப்போது வரை சங்கீதா மீது படாத குமாரின் கண்கள், முழுவதுமாக அவளையே பார்த்து கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தது இப்போது. I have official work with him, எங்க bankகுக்கு அதிக பணம் deposit செய்த elite candidate ராகவ். So என்னோட manager அவருக்கு financial consultation தரச் சொல்லி சொன்னார். அப்படிதான் எனக்கு அவரை தெரியும். so ராகவ் எனக்கு இந்த இன்விடேஷன் குடுத்தார். “ஒஹ்ஹ்…” – இன்னும் அவனால் நம்ப முடியவில்லை. “நீ பொய் எதுவும் சொல்லலையே?” – சங்கீதா கண்களை ப் பார்த்து அவள் சொல்வது பொய் தான் என்று கூறுவாள் என எதிர்பார்த்தான். “do you want me to give him a call?” – என்று தன் mobile எடுத்து காமித்து கேட்டாள். – குமார் ஸ்தம்பித்து நின்றான். சாதாரணமாக யாரேனும் இருவர் பேசுகையில் ஒருவர் “நான் இன்னைக்கி microsoft office ல ஒருத்தரை பார்த்தேன்” என்று சொல்லும்போது இன்னொருவர் “யார பார்த்த?” என்று கேட்டால் அதற்க்கு “Bill Gates” என்று கேட்டவருக்கு இன்னொருவர் விடை குடுத்தால் எப்படி இருக்கும்? – அதைப்போலத்தான் ராகவ் என்ற பெயரை கேட்டவுடன் குமாரும் நம்பமுடியாமல் திகைத்தான். ஒரு நிமிடம் குமாரின் ஆதிக்க மணம் நெருப்பில் பொசுங்கி சாம்பல் ஆனதுபோல உணர்ந்தான். அவனது மனது ஆரோக்கியமான சிந்தனைகளை கொண்டதல்ல, எனவே தன் மனைவிக்கு ராகவை தெரியும் என்று அவள் வாயாலேயே கேட்ட பிறகு அவள் முன்பாக தன்னை மிகவும் சிறுமையாக (inferior) நினைத்தான் குமார் (அப்படி நினைக்க அவசியம் இல்லையென்றாலும் குமாரின் மனதுக்கு சங்கீதாவை விட நாம் மிகவும் சாதாரனமான ஆள் என தோன்றியது).

No comments:

Post a Comment