Wednesday, July 30, 2014

சங்கீதா - இடை அழகி 63


சத்தங்கள் பலவிதம் என் காதில் வந்து விழுந்தாலும்…… ங்கணம் இயற்கை ரசிகர்கள் அனைவரும்…… கீதங்களை ஆயிரக்கணக்கில் தினமும் அதிகாலையில்…… தாராளமாய் சொத்து வைத்திருப்பவர்களும், பொருள் வசதி…… எழுத்துகளைக் கூட்டி பார்த்து வந்த பெயரைப் படித்ததும் மூச்சு பேச்சிலாமல் ஒரு நிமிடம் உறைந்திருந்தாள் சங்கீதா.. ஆடிட்டோரியம் வாசலில் IOFI Benz Executive car நின்றுகொண்டிருக்க அதில் நிர்மலாவும், ரம்யாவும், அவர்களுடன் சஞ்சனவும் குழந்தைகள் ரஞ்சித்தும், ஸ்நேஹாவும் நின்று கொண்டிருக்க, “நான் கார் விட்டு இறங்கினா எல்லாரும் என்ன ஆச்சு எதாசுன்னு விசாரிப்பாங்க, நீங்க கிளம்புங்க, நாம நாளைக்கு பேசிக்கலாம் என்று சொல்லிவிட்டு சங்கீதாவை இறக்கி விட்டு ராகவ் ஆடிட்டோரியம் entrance நோக்கி தனது காரை ஓட்டிச் சென்றான்.”
காரின் உள்ளே அனைவரும் அமர்ந்து கொண்டிருக்க டிரைவர் தாத்தா “உங்க dance super madam” – என்று ஜொள்ளு விட.. அதற்கு ஒரு reaction ம் காமிக்காமல் சில நிமிடங்களுக்கு முன்பு பூகம்பம் வெடித்தது போல அப்படியே சிலை மாதிரி இருந்தாள் சங்கீதா. பூகம்பத்துக்குக் காரணம் gopi கூட இல்லை, ராகவின் காதல்தான். ஓடும் வண்டியில் “அம்மா, தூக்கம் வருதும்மா” – என்று சொல்லி குழந்தைகள் இருவரும் சங்கீதாவின் நெஞ்சில் சாய, குழந்தைகளை தூங்க வைத்து சுத்தமாக தன் தூக்கத்தை தொலைத்து கண்கள் விழித்து அமர்ந்திருந்தாள் சங்கீதா.காரில் சங்கீதா மட்டும் அமைதியாய் அமர்ந்திருக்க, ரம்யாவும், நிர்மலாவும் நடந்து முடிந்த நிகழ்ச்சியைப் பற்றி மிகவும் சிலாகித்துக் கொண்டிருந்தனர். குழந்தைகள் சங்கீதாவின் மார்பினில் சாய்ந்து உறங்கிக்கொண்டிருந்தன. ஒரு புறம் டிரைவர் தாத்தா வண்டியை ஸ்டார்ட் செய்து புறப்பட, சங்கீதாவின் மனமோ கார் சாவியால் நெஞ்சில் ரத்தம் வரும்விதம் கீறிக்கொண்ட ராகவுக்கு காயம் அதிகம் ஆகி இருக்குமோ என்ற பயம் இருந்தது. சங்கீதா படபடப்புடன் ராகவை அழைத்து நிகழ்ச்சி முடிந்ததும் வெளியே அவசரமாக அந்த உருவத்தை நோக்கி ஓடியது நிர்மலாவுக்கு தெரியாது. அந்த சமயத்தில் சங்கீதாவுடன் இருந்தது ரம்யாதான். “சங்கீதா, என்னால நம்பவே முடியலடி, ஒரு நிமிஷம் எல்லாமே கணவு மாதிரி இருக்கு, உன் கிட்ட சொல்லி எப்படியாவது வந்திருந்த cine stars எல்லார் கிட்டயும் autograph வாங்கலாம்னு நினைச்சேன், ஆனா திடீர்னு நீ எங்கே போன என்ன ஆன னு ஒண்ணுமே தெரியல, அப்போ ரம்யாதான் நீ ஏதோ urgent phone call attend பண்ண வெளியே போய் இருக்கேன்னு சொன்னா, ஏதாவது பிரச்சினையா?” என்று நிர்மலா கேட்க்கும்போது கூட பேச்சு குடுக்காமல் கார் கண்ணாடியின் வழியே விரித்து வைத்த கண்களால் தெருவையே பார்த்துக் கொண்டிருந்தாள் சங்கீதா. தன்னையும் அறியாமல் அவளது கைகள் தானாகவே தூங்கிக்கொண்டிருக்கும் ரஞ்சித், ஸ்நேஹாவின் தலையை தன் நெஞ்சின் மீது வருடிக்கொண்டே இருந்தது. அசதியில் இருப்பாள் போல என்று எண்ணி நிர்மலா மேலும் தொடராமல் அமைதி ஆனாள். ரம்யா சங்கீதாவின் அருகே அமர்ந்திருந்ததால் அவளிடம் மெதுவாக காதருகே சாய்ந்து பேசினாள். மேடம் நீங்க திரும்பி வர்றதுக்குள்ள மடியில நெருப்பை கட்டிகுட்டு இருக்குறா மாதிரி இருந்துச்சி. என்னாச்சு? யாரந்த ராஸ்கல்? mithun தானே? – காற்று கலந்த குரலில் பக்கத்தில் நிர்மலாவுக்கு கேட்க்காத வண்ணம் மெதுவாக பேசினாள் ரம்யா, நிர்மலாவுக்கு அவர்கள் இருவரும் ஏதோ தனிப்பட்டு பேசுகிறார்கள் என்று எண்ணி நாகரீகம் காத்து குறுக்கிடாமல் அமைதியாகவே இருந்தாள். ரம்யா பேசும்போதும் சங்கீதாவின் முகத்தினில் மாற்றங்கள் தெரியவில்லை. அப்படியே முகம் வெறிச்சோடி இருந்தது. ஒரு விதமான பயம் கலந்த அதிர்ச்சியில் உடல் லேசாக உஷ்ணமாக இருந்தது, அதோடு அவளது கன்னங்கள் சிவந்திருந்தது. மெதுவாக தோள்களைப் பிடித்து உலுக்கினாள் ரம்யா.. “ஆங்….” (சில வினாடிகள் ரம்யாவை அப்படியே பார்த்துக் கொண்டிருந்தவள் பிறகு) ஸ்ஹாஹா – சற்று பெருமூச்சுவிட்டு குனிந்தவாறு குழந்தைகளின் தலையைப் பார்த்துக் கொண்டே ரம்யாவிடம் பேசினாள்.. “இவ்வளோ நாலா நம்ம கூடவே இருந்திருக்கான் டி….” “கூடவேவா? யாரு மேடம்? – அதிர்ச்சியாய் கேட்டாள் ரம்யா….” “பியூன் கோபி தாண் டி அந்த unknown number”. “என்னது கோபியா?” – கொஞ்சம் சத்தமாக அதிர்ச்சியில் மெதுவாக கத்தினாள் ரம்யா. “என்னாச்சு?” – நிர்மலா சற்று எட்டி பார்த்து கேட்டாள். “ஒன்னும் இல்ல சங்கீதாவுக்கு கொஞ்சம் அசதியா இருக்கு, நான்தான் தேவை இல்லாம பேச்சு குடுத்துக்குட்டு இருக்கேன்.” – மென்மையாக சிரித்தாள் ரம்யா.
“ஒஹ்.. சரி சரி..” “அவன் எனக்கு நல்லது செய்யத் தான் மெசேஜ் அனுப்பி இருக்கான். என்னை இந்த விஷயத்துல தலை இட வேண்டாம்னு சொல்ல நேரடியா வழி தெரியாம இப்படி மெசேஜ் அனுப்பினா கொஞ்சம் பயந்து விலகிடுவேன்னு நினைச்சி இருக்கான். அவனுடைய தம்பி தங்கச்சி படிப்புக்கும் குடும்ப வறுமைக்கும் வாரா வாரம் நான் குடுக்குற கொஞ்ச காசுக்கு மனசுல நன்றி உணர்ச்சியோட எனக்கு நல்லது பண்ண முயற்சி செஞ்சிருக்கான். அவனைப் பத்தி எனக்கு நல்லா தெரியும்டி அவன் எந்த தப்புலையும் ஈடு பட்டிருக்க மாட்டான். இப்போ கூட அவனுக்கு எதுவும் ஆகி இருக்கக் கூடாதுன்னு மணசு படபடக்குது. அது தவிர.. – ஏதோ சொல்ல வந்து நிறுத்தினாள் சங்கீதா… ராகவ் அவனுடைய காதலைத் தெரிவிச்சதை சொல்லலாமா என்று எண்ணி வேண்டாம் என்று ஒரு நொடி அவளுடைய ஆழ் மனது சொல்ல அப்படியே மௌனம் ஆனாள். “என்னாச்சு மேடம் சொல்லுங்க. ஏன் நிறுத்திட்டீங்க?” “ஒன்னும் இல்லைடி ராகவ்….” – வார்த்தைகள் உதடுகளின் விளிம்பில் நின்றது, சொல்லலாமா வேண்டாமா என்று. “ரகாவ்க்கு என்ன ஆச்சு? சொல்லுங்க?”
“ஒன்னும் இல்லை நாளைக்கு காலைல பேசலாம். ப்ளீஸ்” – என்று சொல்லி மெதுவாக தலையை பின் பக்கம் சாய்த்தாள் சங்கீதா. அனைவரும் வண்டிக்குள் சத்தம் இன்றி அமைதியாக இருந்தனர். நிர்மலாவுக்கு கண்கள் லேசாக சொக்கியது. ரம்யா, சங்கீதா சொன்ன விஷயங்களைக் கேட்டு அமைதியாய் ஏதோ யோசித்துக் கொண்டிருந்தாள் பிறகு அவள் கணவனுக்கு சங்கீதாவின் வீட்டுக்கு இன்னும் 30 நிமிடத்தில் வந்து அவளை அழைத்து செல்வதற்கு text message அனுப்பிக் கொண்டிருந்தாள். டிரைவர் தாத்தா stereo on செய்ய “ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது” என்ற இளமை ஊஞ்சலாடுகிறது படத்தின் மெலடி பாடல் மெதுவாக ஓடிக்கொண்டிருக்க, traffic அதிகம் இல்லாத தெருவை ஜன்னல் வழியே பார்த்தாள், சில்லென்று முகத்துக்கு நேராக காரின் AC காற்று மெதுவாக வீச, அந்த காற்றின் சுகத்தில் கொஞ்சம் லேசாக கண்களை மூடி சற்று ஆயாசமாக சாய்த்தாள் சங்கீதா. கண்களை மூடியபடியே சாய்ந்திருக்க அந்த ஒரு கனம் சங்கீதாவின் மணம் முழுதும் ராகவ் முகம்தான் நிறைந்திருந்தது. வேறெந்த மண உணர்வும் அவனது முகம் அவள் மனதில் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை. text message அனுப்பி வைத்துவிட்டு, சந்கீதாவைப் பார்த்து அமைதியாய் ஏதோ யோசனை செய்து கொண்டிருந்த ரம்யாவுக்கு மனதில் என்ன தோன்றியதோ தெரியவில்லை, சங்கீதாவை மெதுவாக அழைத்து “recent time ல நீங்க ரொம்பவே மாறி இருக்கீங்க மேடம்.” என்றாள். “ஏண்டி அப்படி சொல்லுற?” – கண்களை மூடியபடியே மெதுவாக கேட்டாள் சங்கீதா. மனதில் இப்போது எதுவும் அவளுக்கு ஒடவில்லை. “இப்போ எல்லாம் நீங்க உங்க மனசுக்கு பிடிச்ச காரியத்தை செய்ய அதிக தயக்கம் காமிக்குறதில்லை. மனசுக்கு எது சரின்னு படுதோ அதை ச் செய்யுறீங்க. முன்ன மாதிரி உங்கள நீங்களே சின்ன சின்ன காரியத்துக்கு எல்லாம் அதிகம் வருத்திக்குறதில்லை, முகத்துல தெளிவான சந்தோஷம் தெரியுது, இன்னும் கூட தெளிவா சொல்லனும்னா….. – என்று கொஞ்சம் இழுத்தாள் ரம்யா.. உம்…. சொல்லுடி ஏன் நிறுத்திட்ட? – அதே கண்களை மூடி சாய்ந்த போஸில் கேட்டாள் சங்கீதா. “என் மனசுக்கு பட்டதை சொல்லுறேன் மேடம், இன்னும் கூட தெளிவா சொல்லனும்னா நீங்க ராகவ் மீட் பண்ணதுல இருந்தே கொஞ்சம் சந்தோஷமா இருக்கீங்க” – என்று சாதாரணமாக தான் சொன்னாள் ரம்யா, ஆனால் இந்த சந்தர்பத்தில் சொன்னது சங்கீதாவுக்கு திக்கென கண்களை திறக்க வைத்து ரம்யாவைப் பார்க்க வைத்தன, அவள் பேசிய வார்த்தைகள். “என்ன ஆச்சு மேடம்?, எதுவும் தப்பா சொல்லி இருந்தா sorry” – சற்று சங்கோஜத்துடன் சொன்னாள் ரம்யா. “ஒன்னும் இல்லை” என்பதை வாயால் சொல்லாமல் மெளனமாக தலையை இருபுறமும் அசைத்து சொன்னாள். – மனதில் ஏற்கனவே ராகவின் எண்ணங்கள் அலைமோதிக் கொண்டிருக்க ரம்யாவின் வார்த்தைகள் சுனாமியைப் போல் தாக்கியது. இப்போது சங்கீதாவின் cell phone சினுங்கியது. எடுத்து பார்த்தாள் “Tonight I wont come home & will stay in my friend’s place” என்று கூறி இருந்ததே தவிர எந்த நண்பனின் வீட்டில் தங்க போகிறேன் என்று சொல்லவில்லை குமாரிடம் இருந்து வந்த மெசேஜ். இதை ப் படித்துவிட்டு “as expected” (நான் எதிர்பார்த்ததுதான்) என்று மனதில் எண்ணிக்கொண்டாள். “மேடம் வீடு வந்துடுச்சி” – என்றார் டிரைவர் தாத்தா வழக்கமான வழியும் சிரிப்புடன். நிர்மலா சங்கீதாவின் தோளில் இருக்கும் குழந்தைகளை வாங்கி அவள் இறங்குவதற்கு உதவி செய்துவிட்டு, “வரேன்மா பார்த்துக்கோ” என்று சொல்லி விடை பெற்றாள். ரம்யா அவளது கணவன் வாசலில் நிற்பதைப் பார்த்து அவனை நோக்கி நடந்தாள். டிரைவர் தாத்தா மென்மையாக வழிந்துகொண்டே அங்கிருந்து விடை பெற்றார். ரம்யா கிளம்பும்போது “function முடிஞ்சதுல இருந்தே சொல்லனும்னு இருந்தேன், I have seen an entirely different & bold sangeetha today” (தமிழில்: முற்றிலும் வித்யாசமான தைரியமான சந்கீதவைப் பார்த்தேன்) என்றாள். – இதற்கும் சங்கீதாவிடம் இருந்து ஒரு மௌனமான மெல்லிய சிரிப்புதான் வெளிப்பட்டது. “take care ரம்யா இன்னைக்கி நீ என் கூட இருந்ததுல எனக்கு ரொம்பவே moral support இருந்துச்சி, thanks டி” – என்று சொல்லி அவளது கணவனுடன் வழி அனுப்பிவிட்டு வீட்டிற்குள் வந்தாள். “படுத்து தூங்கும்மா நாளைக்கு பேசுவோம்” – என்று சொல்லிவிட்டு குழந்தைகளை சங்கீதாவிடம் ஒப்படைத்துவிட்டு தன் வீட்டிற்கு சென்றாள் நிர்மலா. தோளில் தூங்கும் குழந்தைகளை படுக்கையில் படுக்க வைத்துவிட்டு போட்டிருக்கும் உடைகளை கழற்றி விட்டு, உள்ளாடைகளையும் அகற்றினாள் அந்த தேவதை. நைட்டி எதுவும் இல்லாததால் ஒரு காட்டன் blouse அணிந்து, காட்டன் புடவை ஒன்றை உடுத்தினாள். புடவை கொசுரை மெதுவாக அவளது கைகள் மடிக்க, மனதில் எண்ணங்கள் மீண்டும் அவளை ஆக்ரமித்தது. கொஞ்சநேரம் எண்ணங்களால் உறைந்து நின்றவள் மீண்டும் சுதாரித்துக் கொண்டு கொசுரை இடுப்பில் சொருகி முந்தானையை பேருக்கு ஏதோ மேலே போட்டுக் கொண்டு தூக்கம் வராததால் hall க்கு வந்து அமர்ந்திருந்தாள். மனதில் பல விதமான எண்ணங்கள் பல விதத்தில் வந்து தாக்கியது. வேகமாக பறக்கும் பட்டாம்பூச்சியின் முதுகில் ஒரு சிறிய கூழாங்கல்லை வைத்தால் எப்படி பளு தாங்க முடியாமல் பறக்காமல் இருக்குமோ அதைப் போல காலையில் நடந்த விழாவைப் பற்றி யோசிக்கமுடியாமல், விழாவுக்கு வந்த பிரபலங்கள் பாராட்டியதை யோசிக்க முடியாமல், இவ்வளவு ஏன், கடைசியாக கிளம்புவதற்கு முன்பு அவளுடைய unknown number குழப்பத்துக்கு பதில் கிடைத்தும் அதைப் பற்றி கூட அதிகம் யோசிக்க முடியாமல் அவளது மனதை அதிகமாக ஆக்கிரமித்தது ராகவின் காதல்தான். இந்த நினைவு மீண்டும் ஒரு முறை ரமேஷ் அவளது வாழ்வில் எட்டிப் பார்ப்பது போல் இருந்தாலும் “சப்” என்று உச்சுக் கொட்டி மீண்டும் ராகவின் எண்ணங்கள் ஓடின. hall ல் உள்ள chair ல் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் ஒன்றும் செய்யாமல் அப்படியே அமர்ந்திருந்தாள். ‘ஓய்ங்.. ஓய்ங்..’ என்று மெதுவான சந்கீதத்துடன் fan மேலே சுத்திக்கொண்டிருருந்தது. தன் முன் இருக்கும் கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்து க் கொண்டே இருந்தாள் சங்கீதா. அலுவலகத்தில் அவள் femina புத்தகத்தில் படித்தது நியாபகம் வந்தது.
குடும்ப பெண்களுக்கு வரக் கூடிய மண அழுத்தம் பற்றி கூறியது, சுய கெளரவம் பற்றி விவாதித்தது, மனதுக்கு ஏற்ப சந்தோஷங்களில் ஈடுபடுத்திக் கொள்ளவேண்டுமென்று படித்தது அனைத்தையும் சிந்தித்தாள். அதில் இருந்த மற்றொரு கேள்வியில் வேலைக்கு செல்லும் ஒரு பெண் தன் கருத்துகளுக்கு ஒத்து போகும் ஒரு நபரிடம் காதல் ஏற்படுகிறது என்று கூறி இருந்ததும், அதற்க்கு அந்த புத்தகத்தில் ஒரு பெண் ஆலோசகர் அது ஒன்றும் பெரிய கொலைக் குத்தம் இல்லை என்று பதில் அளித்ததும் இன்றைய நவ நாகரீக உலகில் discreet relationship (ரகசிய உறவு) வைத்தாலும் அதையும் பெண்களால் balance செய்து குடும்பத்தை நடத்த முடியும் என்றும், அவ்வாறு செய்வதின் மூலம் பல மண அழுத்தங்களுக்கு அது தீர்வு குடுக்கும் என்று படித்தது அனைத்தும் அவளது மனதில் ஓடின. இன்னும் பலவிதமான சிந்தனைகள் மனதை ஆட்கொண்டன…. “சப்” என்று உச்சு கொட்டி மெதுவாக கண்களை மூடி சாய்ந்தாள் – மூடிய இமைகளுக்குள் அவளுடன் ராகவ் சிரிக்கிறான், phone ல் பேசுகிறான், அவளுக்கு எந்த உடை நன்றாக இருக்கும் என்று சொல்லுகிறான், கிண்டல் பண்ணுகிறான், மணிக் கணக்கில் அவளுடன் நேரம் போவது தெரியாமல் பேசி சிரிக்க வைக்கிறான். அணு அணுவாய் அவளது உணர்வுகளை மதிக்கிறான், அவளது பெண்மையை ரசிக்கிறான். அவள் மணம் ஒத்து போகும் விதம் அவளுடன் IOFI வளாகத்துக்குள் அவளைப் பார்த்து அன்புடன் வாய் நிறைய வர்ணித்து அழைக்கிறான், ராகவ்…. ராகவ்…. ராகவ்….ராகவ்…. ராகவ்…. மூச்சு விட்டால் ராகவ், கண்களை மூடினால் ராகவ், தூங்கும்போதும் கனவில் ராகவ். ராகவ் பத்தி பேசும்போது அவள் குழந்தைகள் கூட குதூகலிக்கின்றன. முழுக்க முழுக்க அவளுடைய சிந்தனைகள் அனைத்தும் ராகவ் என்பவனுக்கு அடிமை ஆகி இருப்பதை இப்போதுதான் பூதக் கண்ணாடி வைத்து தன் ஆழ் மனதை பார்த்து தெரிந்துகொண்டாள் சங்கீதா.

No comments:

Post a Comment