Thursday, July 31, 2014

சங்கீதா - இடை அழகி 67


என் காதலி எப்படி இருக்கணும் னு யோசிச்சேன் தெரியுமா? எப்படி? – சற்று பணித்த கண்களுடன் குனிந்து அவனது பதிலை மிகவும் ஆர்வமாக எதிர்நோக்கினாள். “என் மனசுல இடம் பிடிக்குறவ எனக்கு வெறும் காதலியா இருக்கக்கூடாது, அக்கறை காமிக்குறதுளையும் அண்பு செலுத்துறதுலயும் அவ எனக்கு இன்னொரு அம்மாவா இருக்கணும் னு தான். அந்த உணர்வு எனக்கு உன் கிட்ட கிடைச்சுது சங்கீ..” இப்போது அவனை நிமிர்ந்து பார்த்தாள், இந்த வார்த்தைகளைக் கேட்டபோது ஒரு நிமிடம் தன்னையும் அறியாது சங்கீதாவின் கண்களின் ஓரம் லேசாக நீர் வர, உடனே சந்கோஜத்தில் திரும்பிக் கொண்டு சுண்டு விரலால் துடைத்துக் கொண்டாள். அதை ராகவ் கவனித்தான்.
என்னாச்சு சங்கீதா? ஒன்னும் இல்ல ராகவ்.. நான் உண்மையா இங்கே வந்ததுக்கு கார…காரணம்.. – உள்ளுக்குள் எழும் மனக் குமுறல்களை அடக்கியதில் குரல் உடைய தொடங்கியது சங்கீதாவுக்கு.. காரணம் நீ என்னை விட வயசுல சின்னவன், உனக்கு கொஞ்சம் எடுத்து சொல்லி புரிய வைக்கலாம் னு நினைச்சேன். என்னை விடு, நான் எப்பவோ என் பல கனவுகளை வாழ்க்கைல தொலைச்சவ, ஆனா உனக்கு நிறைய வயசு இருக்கு, உன் மனசுல ஆசைய உண்டாக்கி உன் வாழ்கைய பாழாக்க விரும்பல, அது எனக்கு ஒரு குற்ற உணர்சிய உண்டாக்கும் டா. அதான் சொல்லிட்டு போக வந்தேன்.. முடிஞ்ச வரைக்கும் உன் மனசை மாத்திக்கோ டா ப்ளீஸ்.. நேத்து ராத்திரி அழுதீங்களா? நான் என்ன பேசுறேன் நீ என்ன பேசுறா? சப்… கேட்ட கேள்விக்கு பதில் வேணும்…. “ஆமாம்.. என் கண்ணு லேசா வீங்கி இருக்குரதைப் பார்த்து கேட்க்குரியாக்கும்? இஷ்ம்ம்” – லேசாக கண்ணீர் வந்ததில் விசும்பி மூக்கை உறிஞ்தாள் சங்கீதா. “ஹா ஹா confirmed” – என்று சிரித்துக் கொண்டே சொன்னான் ராகவ். “என்ன confirmed? குதர்க்கமா பேசாத” – கண்ணைத் துடைத்துக் கொண்டு பேசினாள் சங்கீதா.. “மனசளவுல உங்களால என்னை மறக்க முடியாது, அதுக்கான ஆதாரம்தான் நேத்து ராத்திரி நீங்க அழுத அழுகை.” ஒன்றும் பதில் பேசவில்லை சங்கீதா…. “சங்கீதா…. வாழ்க்கை ல கலாச்சாரம் முக்கியம்தான், ஆனா பாவம் மணசு என்ன செய்துச்சி. ஒவ்வொரு தடவையும் அதை அடக்கி அடக்கி அதோட ஆசைகள் எல்லாத்தையும் மண்ணோட மன்னா புதைச்சி வெச்சி நாம நம்மளையும் சேர்த்துதானே மன்னாக்கிகுறோம். இந்த நிமிஷம், இந்த ஒரு நொடி உங்க மனசுல கை வெச்சி கண்ணை மூடி சத்தியமா நிஜம் என்ன, உண்மை என்ன னு யோசிச்சி பாருங்க. உங்க கண்ணை மூடி என்னை ரெண்டு நிமிஷமாவது மறக்க முடிஞ்சி வெறும் உங்க குடும்பம், புருஷன், பசங்க ன்னு உங்களால நினைக்க முடியுதான்னு எனக்கு சொல்லுங்க…. I will wait sangeethaa…. – என்று ராகவ் சொல்ல இவன் காதலை ஒப்புக்கொள்ளவேண்டும் என்று அவள் ஆழ் மனது கதற ஆரம்பித்தது அதே சமயம் மறு பக்கம் வாழ்க்கை இந்த உலகில் ஒரு முறைதான், ஏற்கனவே நான் இழந்ததை கடவுள் எனக்கு திரும்பவும் வேறு ஒரு ரூபத்துல குடுக்குறார், அதை நான் இப்போவும் நிராகரிக்குறதா? இல்லை என் சந்தோஷத்துக்காகவும் நிம்மதிக்காகவும் இதை நான் ஏற்க்கனுமா?…. மீண்டும் மணப் போராட்டம்….. சில நிமிடங்கள் அப்படியே அமர்ந்தவாறு யோசித்தாள். என்னதான் யோசித்தாலும், முயற்சி செய்தாலும் அவள் மனதில் இருந்தும் கண்களில் இருந்தும் ராகவை நீக்குவதேன்பது அவளாள் சத்தியமாக முடியாத காரியம் என்று அவள் மனது தெளிவாக கூறியது. “என்னாச்சு சங்கீதா…” – என்று ராகவ் கேட்க, தனது டைரியில் பேனாவால் எழுத தொடங்கினாள். ஒரு ஐந்து நிமிடம் சிந்தித்து ஏதோ ஒன்றை எழுதினாள் ராகவ் அவள் எழுதும் வரைக் காத்திருந்தான். சங்கீதா எழுதி முடித்த கடிதத்தை டைரியில் இருந்து கிழித்து மடித்து ராகவின் சட்டை பாக்கெட் உள்ளே வைத்தாள் – அப்போது இருவரும் ஒருவருக்கொருவர் மௌனமான சிரிப்பில் கண்களால் ஆயிரம் வார்த்தைகளைப் பரிமாறிக் கொண்டார்கள். கடிதத்துக்கு பதில் வாயில இருந்து வரும்னு பார்த்தேன், கடிதத்துலையே வருதே? – என்று சொல்லி சிரித்தான் ராகவ். சரி, நான் எழுதின கடிதத்தைப் பத்தி ஒண்ணுமே சொல்லலையே? – என்று ராகவ் கேட்க சங்கீதா அந்த கடிதத்தை அருகில் உள்ள தனது handbag ல் இருந்து எடுத்து பிரித்து அவன் எதிரில் அவன் எழுதிய வார்த்தைகள் மீது ஒரு முத்தம் குடுத்து அவனை ஒரு நொடி மட்டுமே நேரில் பார்த்து மேற்கொண்டு பார்க்க முடியாமல் வெட்கத்தில் கீழே பார்த்து சிரித்தாள். ராகவால் இதை நம்ப முடியவில்லை. மகிழ்ச்சியின் உச்சத்துக்கு சென்றான் இப்போது TV யில் ஒரு (Click)காட்சி ஓடிக்கொண்டிருந்தது, அந்த காட்சியில் வரும் அழகான முதிர்ச்சியான மங்கை ஒரு வாலிபனின் திறமையைக் கண்டு வியந்து பாரட்டுகிறாள் -அமைதியாய் இருந்த இருவரும் ஒரு நிமிடம் ஒருவரை ஒருவர் பார்த்து மென்மையாக சத்தம் இன்றி சிரித்தார்கள். “பாராட்டு வெறும் கடிதத்துக்கு தானா? அதை எழுதினவனுக்கு இல்லையா? – என்று ராகவ் அந்த காட்சியில் வரும் வாலிபனைப் போல கேட்க, சங்கீதா மெல்ல அருகே வந்து அவனின் தலையில் மென்மையாக ஒரு முத்தம் குடுத்தாள். அப்போது ராகவ்க்கு ஒரு நொடி உடல் முழுதும் புல்லரித்தது.நான் சொல்ல நினைச்சதெல்லாம் உன் பாக்கெட் ல இருக்குற கடிதத்துல எழுதி இருக்கேன் டா.. நான் இங்கே இருந்து கிளம்பினதுக்கு அப்புறம் படி ப்ளீஸ். என்று சொல்லிவிட்டு கிளம்பும்போது கதவின் அருகே சென்றவள் ஒரு நிமிடம் நின்று ராகவின் முகத்தைத் திரும்பிப் பார்த்து சிரித்தாள். ராகவும் அவனுடைய தேவதையின் சிரிப்பை தரிசித்தான். அவள் குடுத்த கடிதத்தை தனிமையில் பிரித்து உற்சாகமாய் படிக்க தொடங்கினான்..
அதில்….. என்னை முழுதாய் திருடியவனே…. உன்னைப் போல எனக்கு வர்னிச்சி எழுத வராது டா.. ஆனா மனசுல உள்ள உண்மைய சொல்லுறேன்…. வாழ்க்கையில் நான் தொலைத்த இன்பங்கள், தேடும் சந்தோஷங்கள், வேண்டிய நிம்மதி, விரும்பும் அமைதி… இவை அனைத்தும் எனக்கு உன்னிடம் இருந்துதான் கிடைக்குது. எவ்வளவோ முயற்சி பண்ணாலும் என்னதான் எனக்கு நானே விளக்கங்கள் குடுத்தாலும் என்னால் உன்னை மறக்க முடியாது. நீ சொன்ன மாதிரி உன் உணர்வுகளும் அன்பும் என் மனசை உரசுறதை நானும் நிறைய நேரங்களில் மௌனமாய் அனுபவித்திருக்கிறேன். அந்த ரகசிய சந்தோஷத்தை இன்று தான் முதலில் உனக்கு தெரியப் படுத்துகிறேன். மனசார சொல்லுறேண்டா….. உன் காதல ஏத்துக்க பெருமை படுகிறேன். Yes….. I am in Love with you with immense proud. (தமிழில்: ஆம், நானும் உன்னை காதலிக்கிறேன்… உன் காதலை ஏற்றுக் கொள்ள நான் அளவிலா பெருமை படுகிறேன்.) -இப்படிக்கு உன் சரா.. இந்த கடிதத்தைப் படித்து முடித்துவிட்டு கட்டிலில் இருந்து எழுந்து hooohooo bingo yes yes yes…. ummmmaaahhhhh ummmaaahhhhh ummmaahhhhhh என்று அவளின் கடிதத்துக்கு முத்தங்கள் குடுத்து துள்ளி குதித்தான் ராகவ். இப்போது அவளிடம் இருந்து ராகவ்க்கு sms வந்தது. பார்த்தான்..
(beep beep) message from sangee: “படிச்சிட்டியா டா? …..” (beep beep) message from raghav: “hmm…. படிச்சேன் ஆனா எனக்கு ஒன்னு மட்டும் புரியல”.. (beep beep) message from sangee: “டேய் மண்டு, அதுல என்னடா உனக்கு புரியல” (beep beep) message from raghav: “அதென்னது சரா?” (beep beep) message from sangee: “சொல்ல மாட்டேன்” (beep beep) message from raghav: “தயவுசெய்து சொல்லு சங்கீ ப்ளீளீளீளீளீளீளீளீளீளீளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்….” (beep beep) message from sangee: “நீயெல்லாம் எப்படிடா CEO ஆன மக்கு மக்கு….” (beep beep) message from raghav: “ஆமாம் நான் ஒரு மக்குதான் என் தேவதை தான் எனக்கு எல்லாம் சொல்லித் தரனும்…. சொல்லு….” (beep beep) message from sangee: “ச்சே என் வாயாலேயே சொல்ல வைக்கிறானே….., சங்கீதா + ராகவ் = சரா…. போதுமா…. ச்சீ.. வெட்கமா இருக்குடா, இதுக்கு மேல எதுவும் புரியலைன்னு கேட்காத என் கிட்ட….” அடுத்த மெசேஜ் எதிர் நோக்கி phoneஐ மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தாள். கொஞ்ச நேரம் sms எதுவும் வராமல் இருந்தது ராகவிடம் இருந்து.. அமைதியாய் உள்ளுக்குள் தவித்தாள் சங்கீதா (beep beep) என்று சத்தம் கேட்டவுடன் ஒரு நிமிடம் கார் சீட்டின் நுனிக்கு வந்து உடனே மெசேஜ் பார்த்தாள்.. message from raaghav: “என் தேவதை சராவுக்கு இந்த மக்கு ராகவ் குடுக்கும் இதழோடு இதழ் பதித்த ஆயிரம் முத்தங்கள்….” படித்து முடித்த பிறகு, அப்படியே கத்தி சிரிக்க வேண்டுமென்று இருந்தது சங்கீதாவுக்கு, ஆனால் காரில் செய்ய முடியாததால் அப்படியே கண்களை இறுக்கி மூடி பின்னாடி சாய்ந்து அவளது நினைவில் ராகவை கட்டி அனைத்து அவன் குடுத்த இதழ் முத்தங்களை அவனுடன் பகிர்ந்து கொண்டாள். முகத்தில் அப்படி ஒரு சிரிப்பு. வயிற்றினில் உண்மையாகவே யாருடைய விரலும் இல்லாமல் அப்படி ஒரு கிச்சி கிச்சி உணர்வு வந்தது சங்கீதாவுக்கு. “என்னம்மா ஆச்சு ஏதாவது வயிறு பிரச்னையா soda வாங்கட்டுமா? சீட்டுல முன்னுக்கும் பின்னுக்கும் வந்து போறீங்க?” – என்று டிரைவர் தாத்தா அக்கறையாக கேட்க…. ஒரு நொடி சத்தமாகவே “ஹா ஹா ஹா” என்று சிரித்தாள். “தாத்தா….” “சொல்லுமா….” நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்… கொஞ்சம் ரேடியோ போடுங்க ப்ளீஸ்… – என்று இந்த தேவதை கட்டளை இட்டதும் தாத்தா அடித்து புடித்து ரேடியோவை on செய்தார். அப்போது அதில் வந்த (Click)பாடலைக் கேட்ட போது உண்மையாகவே மனதில் ரொம்பி வழியும் சந்தோஷத்தோடு தனது பருவ உணர்வுகளை தாங்கிய வயதை பின் நோக்கி பயணித்தாள் இந்த தேவதை…. மேடம் bank போகனுமா? இல்லை வீட்டுக்கு போகனுமா? bank க்கு போங்க தாத்தா. தாத்தா ஓட்டும் மிதமான வேகத்தில் ஒரு மணி நேரம் பயணம் செய்திருந்தாலும், ஏதோ பத்து நொடிகளில் bank வந்தது போல் இருந்தது சங்கீதாவுக்கு. மனதுக்குள் காதல் உருவெடுத்து இருக்கும் தாக்கம்!! சங்கீதா இறங்குகையில் டிரைவர் தாத்தா சங்கீதாவை அழைத்தார். “மேடம்..” “என்ன தாத்தா?” “இந்தாங்கம்மா..” “என்னது இது?” “காலைல வண்டி எடுக்கும்போதே நீங்க திரும்பி போகும்போது குடுக்க சொல்லி உத்தரவு. என்னன்னு எனக்கு தெரியாது மா..” ஒரு brown sealed கவரில் IOFI என்று அச்சிடப்பட்டு இருந்தது. கீழே ஏதோ எழுதி ராகவ் என்று கையெழுத்து இருந்தது. அதை தனிமையில் சென்று படிப்போம் என்று எண்ணி தாத்தாவை அனுப்பி வைத்துவிட்டாள் சங்கீதா. “மன்னவன் பெயரை சொல்லி மந்திரம் பாடி வந்தேன்….” – வண்டியில் கேட்ட பாடலை முனு முணுத்துக் கொண்டே முகத்தினில் அதே சிரிப்புடனும் சந்தோஷத்துடனும் உள்ளே சென்றாள்.
உள்ளே வந்தவள் ரம்யாவின் இருக்கையில் அவளுடைய handbag இருப்பதைப் பார்த்தாள். சாப்பாடு நேரம் நெருங்கி இருந்தது. இருப்பினும் ஒரு மணி நேரம் அவளது மேஜையில் அவளுக்கென இருக்கும் வேலைகள் என்னென்ன என்று பார்த்துவிட்டு ரம்யாவுக்கு phone செய்தாள். ரம்யாவின் phone ரிங்டோன் அருகில் கேட்பது தெரிந்து நிமிர்ந்து பார்த்தபோது “ஹாய் மேடம்….” என்று சிரித்துக்கொண்டே உள்ளே வந்தாள். ஏய் லூசு, எங்கடி போய் தொலைஞ்ச? last one hour நான் உனக்காக waiting. ஹா ஹா…. சரி சரி வாங்க போகலாம். இருவரும் கான்டீன் சென்று அவர்களுடைய வழக்கமான ஜன்னல் ஓர இருக்கையில் சாப்பிட அமர்ந்தார்கள்.

No comments:

Post a Comment