Wednesday, July 30, 2014

சங்கீதா - இடை அழகி 62


இப்போது நாம் கௌரவிக்கும் அந்த மனிதர் இந்திய திரை உலகம் மட்டும் அல்ல, ஆசிய கண்டமே அண்ணார்ந்து பார்க்கும் BOSS – என்று சங்கீதா சொல்லி முடிப்பதற்குள் யாரென்று கூட்டத்துக்கு தெரிந்ததால் மீண்டும் அதிர்வுகள் காற்றில் பாயும் வண்ணம் கைகள் வலிக்க வலிக்க கைதட்டி ஆரவாரம் செய்தனர். கூச்சலும் விசிலும் தரும் சத்தம் ஆடிட்டோரியம் கதவுகளை உடைத்து விடுமோ என்று எண்ணத் தோன்றும் அளவுக்கு இருந்தது ரசிகர்களின் அதிர்வுகள்.. “None other than the one and only Super star RAJINIKANTH” என்று சங்கீதா சொன்னவுடன் glitters காற்றில் பறந்தது. கலர் paperகள் தூவப்பட்டன.. “தலைவா….” என்று ஒவ்வொரு ரசிகனும் தன் ஆழ் மனதிலிருந்து அன்பை வெறித்தனமாக வெளிப்படுத்தினார்கள், நண்பர் கமல் ரஜினியை கீழே கட்டி அனைத்துவிட்டு மேடைக்கு அனுப்பி வைத்தார்!!.. IOFI cine Legend award டினை நண்பர் BigB யிடம் இருந்து பெற்றார் ரஜினி.
மெதுவாக பேச ஆரம்பித்தார் ரஜினி: விழாவுக்கு வந்திருக்கும் ரசிகர்களே, பத்திரிகை நண்பர்களே, … (இன்னும் பலர்…), கடைசியாய் “என்னை வாழ வைத்த தெய்வங்களான தமிழக மக்களே” என்ற வார்த்தையை சொல்லும்போது உண்மையாகவே கைதட்டலில் அரங்கம் அதிர்ந்தது. அதிகம் பேச நேரம் இல்லை, எனவே சொல்ல வேண்டிய கருத்தை சீக்கிரம் சொல்லிடுறேன். Mr.Mahesh Yadhav is a good man. kind hearted man.. எப்டி எப்டி இவளோ பெரிய success அவருக்கு கிடைசுதுன்னு பார்த்தா… அதுக்கு காரணம் அவருடைய தன்னடக்கம். சாதாரண தையல் காரனா இருந்தவரு இன்னைக்கி ஒரு மிகப்பெரிய லக்ஷ்மிகரமான IOFI நிறுவனத்தை உருவாக்கி இருகாருன்னா அது சாதாரண விஷயம் இல்லை நண்பர்களே.. மிகுந்த தன்னடக்கம் வேண்டும். அதைப்பற்றி ஒரு சின்ன குட்டி கதை ஒன்றை இன்றைய தலைமுறைக்கு சொல்லிக்குறேன் சொல்லிகுறேன்: ஒரு நாள் midnight ஒரு இளைஞன் நல்லா தண்ணி அடிச்சிட்டு மொட்டை மாடியில் போய் உட்காருறான். அப்போ மேல அண்ணார்ந்து பார்க்கும்போது அவனுக்கு நிலா தெரியுது. அதுவும் நல்ல வெளிச்சமா தெரியுது. அவன் மனசுக்குள்ள சில விரக்தி. திறமை அதிகம் இருந்தும் கொஞ்சம் வாய் ஜாஸ்தி அவனுக்கு. அவன் மேலதிகாரிங்க கிட்ட ஒத்து போக மணசு இல்லாம வீராப்பு தான் பெருச்சுன்னு வேலைய விட்டுட்டு வந்து நிலாவ பார்த்து சொல்லுறான் …. “ஏய்ய் எதுக்கு இப்போ உன் மிதமான வெளிச்சத்தை காமிச்சி நீ ரொம்ப அழகுன்னு தெரியப் படுத்திக்குற? வேற வேலை இல்ல உனக்கு? அதான் கவிஞன் முதல் காதலர்கள் வரை உன்னை புகழ்ந்து தள்ளுரான்களே, என்னை மாதிரியா உன் நிலைமை.? வேற எங்கயாவது போ என் முன்னாடி வராத போ போ” னு அவன் ரொம்ப feel பண்ணி நிலாவிடம் பேசுறான்….
அப்போது நிலா அவனுக்கு அழகாக பதில் சொன்னது.. “அடேய் அற்ப மானிடா, நீ இருக்குற பூமியில பகல் நேரத்துல சுட்டு எரிக்குற சூரியனைத்தான் டா நானும் தினமும் வணங்குறேன். என் கிட்ட ஒரு மிதமான வெளிச்சம் வருதுன்னு சொல்லி அதை வர்னிச்சி இன்றைக்கு கவினர்களும் காதலர்களும் என்னை பாரட்டுராங்கன்ன நான் அந்த சூரியனை வணங்கி அவன் குடுக்குற வெளிச்சத்தை உள் வாங்கித்தான் உனக்கு இந்த மிதமான வெளிச்சத்தை குடுக்குறேன். அந்த தன்னடக்கம் எனக்கு சூரியன் கிட்ட இருக்கு, அது போல உன் கிட்ட நிறைய திறமை இருக்கு, ஆனா தன்னடக்கம் இல்ல, நான் தான் எல்லாரையும் விட பெரியவன் ன்னு நினைச்சி அகந்தையில உன்னை நீயே தொலைச்சிக்குற. தன்னடக்கதுடன் உன் வேலையை நாளை காலை தொடங்கு, அப்புறம் பார் உன்னை மற்றவர்கள் எப்படி தலையில் தூக்கி வைப்பார்கள்” என்று நிலா அன்று இரவு பேசியதில் இருந்து அந்த மனிதனுக்கு ஒரு ஞானோதயம் வந்தது, மிகுந்த தன்னடக்கத்துடன் வேளைகளில் ஈடுபட்டார், பல வெற்றிகளைக் கண்டார். என் நிஜ வாழ்க்கையில் ஒரு நண்பர் இப்படி நான் வளர்ந்து வருவதைப் பார்த்து இருக்கிறேன் நண்பர்களே. (சில நொடிகள் மௌனம்…பிறகு கண்களை மூடி தொடர்ந்தார்…) Yes… yes…. அந்த குணாதிசயத்தை நன் அவருடைய மகன் Raghav கிட்டயும் எந்திரன் படத்துல பணி புரியும்போது பார்த்திருக்கிறேன். definately… definately IOFI இன்னும் மேல போகும் னு சொல்லி இறைவனை பிரார்த்தனைப் பண்ணிகுறேன். நன்றி வணக்கம். – என்று பேசி முடித்து தனக்கே உரிய மின்னல் வேக நடையில் மேடையை விட்டு கீழே இறங்கினார் தலைவர் ரஜினி. – அப்போது ரஜினியின் தீவிர ரசிகயான சங்கீதா மேடையிலேயே ரஜினியிடம் autograph வாங்கி பத்திரமாக வைத்துக்கொண்டாள். அப்போது ரஜினி சங்கீதாவிடம் கூறிய வார்த்தைகள்.. “you did a fantastic job.. ஆ…ஹா ஹா ஹா..” என்று தனக்கே உரிய அந்த மந்திர சிரிப்பைக் குடுத்துவிட்டு மேடையில் இருந்து நொடிகளில் மறைந்தார் ரஜினி. Thank you Dear Super Star ரஜினி. இப்போது ஆடிட்டோரியம் இருக்கைகளில் இருந்து மக்கள் அனைவரும் எழுந்து அங்கும் இங்கும் நடமாடிக் கொண்டிருந்தார்கள். Dear audience, இப்போ விழா நிறைவுக்கு வருகிறது. அமைதி காத்து விழாவை ரசித்த அனைவருக்கும் எனது அன்பான வணக்கங்கள் மற்றும் நன்றிகள். என்று கூறி விழாவை நிறைவு செய்துவிட்டு, பின்னாடி சஞ்சனா இருக்கும் இடத்தில் யாரோ சங்கீதாவை முகத்தை மூடி உத்து பார்த்து ஒரு சிறிய காகிதத்தில் ஏதோ எழுதுவது போல தெரிந்தது. என்ன வென்று பார்க்க மெதுவாக அங்கே சங்கீதா செல்லும்போது வெடுக்கென அங்கிருந்து ஓடினான் ஒருவன். உடனே பதறிப்போய் ரகாவ்க்கு mobile phone ல் கால் செய்து “Raghav I need you immediately, please come here” என்று urgent ஆக அழைக்க ராகவ் மேடையின் பின் புற வாசலுக்கு விரைந்தான். சங்கீதா ராகவுக்கு ஒரு துண்டு காகிதத்தில் ஓடினவன் எழுதியதைக் காட்டினாள். அதில் “I am that un known number..I wanted to conv…” ஓடுவதற்கு முன்பு பாதி எழுதியது அப்படியே இருந்தது.
எந்தப் பக்கம் ஓடினான் – என்றான் ராகவ் படபடப்புடன். இந்த பக்கம்…. lets go.. sanjana, please take care of the guests here please – என்று அவசரமாக கூறி விட்டு ராகவ் சங்கீதாவை பிடித்து இழுத்துக்கொண்டு. ஓடினவன் திசையை நோக்கி செல்லும்போது வழியில் உள்ள தனது BMW காரை திறந்து சந்கீதவையும் அதனுள் அமரச் செய்து, தானே ஓட்டி சென்றான்.. உடனே தனது personal security guards க்கு அழைப்பு விடுத்தான், main gate அனைத்தையும் மூட சொன்னான். எப்படியும் வேகமா அவன் ஓடினா க் கூட மெயின் gate கிட்ட அவனைப் பிடிச்சிடலாம்… – என்று அனைத்து கூட்டமும் உள்ளே இருக்க இருட்டில் head light போட்டு IOFI வளாகத்துக்குள்ளேயே ஒடுபவனை துரத்தினான் ராகவ். அதோ… தெரியுதே கருப்பு பர்தாவுல ஒருத்தன் ஓடுறான் – என்று காரின் head light வெளிச்சத்தில் தெரியும் உருவத்தைப் பார்த்து, உடல் வியர்க்க பட படத்து கை காமித்து பேசினாள் சங்கீதா. good catch sangeetha…. – என்று ராகவ் சொல்லிக்கொண்டே காரின் வேகத்தை இன்னும் அசுர வேகத்துக்கு accelaretor ஐ அழுத்தி பறந்தான். லேசாக ஒடுபவனின் உடலின் மீது இடித்து விட்டு அவன் கீழே விழும் வண்ணம் செய்து அவனருகே சென்றான் ராகவ். அப்போது சங்கீதாவுக்கு பயம் உச்சத்துக்கு சென்றது.. Raghav dont go alone pleaseeee – கத்தி கதறினாள் சங்கீதா. ராகவ் எதற்கும் அஞ்சாமல் தில்லாக அந்த உருவம் அருகே சென்று அவன் கழுத்தை பிடித்து சுவரின் மீது தள்ள அந்த உருவம் முடிந்த வரை ராகவ் மீது ஒரு குத்து விட்டது. சும்மா சொள்ளக்கூடாது, நிஜமாவே நல்ல குத்துதான், ஆனால் ராகவ் பலத்துக்கு ஈடு இல்லை, தன் கை புறம் சட்டையை மடித்துக் கொண்டு விழும் அடிகளை துல்லியமாக தடுத்து gap கிடைத்த கண நேரத்தில் ஓங்கி தனது முஷ்டியை மடக்கி தனது கணமான bracelet டை இழுத்து வைத்து அந்த உருவத்தின் முகத்தில் சரமாரியாக குத்தினான், ஒரு கட்டத்தில் அவன் கரங்களில் லேசான ரத்தம் தெரிந்தது, அடி வாங்கிய உருவத்துக்கு ராகவை எதிர்க்கும் சக்தி இல்லை. மயங்கி தரையில் விழுந்தவன் முகத்தினில் இருக்கும் கருப்பு துணியை ராகவ் எடுக்கையில் அவனது முகம் பார்த்து சங்கீதா பதரிப்போனாள்…. அ..அட…( வார்த்தைகள் வரவில்லை அவளுக்கு…. ) அடப்பாவி ( கண்களில் கண்ணீர் வழிந்தது சங்கீதாவுக்கு) நீயா? நீயா இதுல சம்மந்த பட்டிருக்க?… என்று மணம் நொந்து அவன் அருகே சென்று முகம் பார்த்து பேச, ராகவ் அமைதியாய் சங்கீதாவிடம் “யார் இவன்?” என்று கேட்க இவன் … இவன் என் bank ல வேலை பார்க்குற puen Gopi. – என்று சொன்னதும் ரகாவ்கும் மனது ஒரு நிமிடம் உலுக்கியது…. அமைதியாய் இருந்தான். இப்போது puen gopi பேசினான்.. மேடம்… – (மூச்சு வாங்கியது gopi க்கு…. ரகாவின் அடிகள் ஒவ்வொன்றும் எலும்பை முறிக்கும் அடிகள்) “என்ன சொல்லுடா”… – சங்கீதா அழுதாள், காரணம் அவனைப் பற்றி அவளுக்கு நன்றாக தெரியும். இவன் தவறான வழியில் செல்பவன் அல்ல. மேடம், நீங்க involve ஆகி fake money பத்தி கண்டுபுடிக்குற விஷயத்துல நிறைய பெரிய ஆளுங்க பின்னாடி இருகாங்க, அவங்களால உங்களுக்கு எந்த கஷ்டமும் வந்துடக்கூடாதுன்னு தான் நான் இந்த மாதிரி மெசேஜ் அனுப்பி உங்களை பயபடுத்தி விலக வெச்சிடலாம்னு நினைச்சேன். ஆனா நீங்க விடாம வந்து என்னை துரத்தி பிடிச்சிடீங்க. யார் அவங்க? – சங்கீதா படபடப்புடன் கேட்டாள். ராகவும் சங்கீதாவுக்கு உதவியாக அவனிடம் வந்து யாரா இருந்தாலும் சொல்லு, நான் பார்த்துக்குறேன். – என்று ராகவ் சொல்லும்போது gopi பேசினான். sir, உங்களுக்கும் இதுல பிறர்ச்சினை அதிகம் வரும் சார், கண்டுக்காம விட்டுடுங்க நான் சொன்னா கேளுங்க ப்ளீஸ்.. பின்னாடி ராகவின் personal guards வந்து இறங்க gopi அவசரமாக ஒரு விஷயத்தை சொன்னான். sir, இப்போ நான் உங்க கிட்ட இப்படி பேசிட்டு இருக்குரதைப் பார்த்தாலே என்னை தீர்த்துடுவாங்க sir, தயவு செய்து என்னைக் காப்பாத்துங்க.. என்னை கண்காணிக்குரவங்க யார் வேணும்னாலும் இருக்கலாம், பின்னாடி வர உங்க security ல கூட ஒருத்தனா இருக்கலாம். please என்னைக் காப்பாத்துங்க.. என்று கதற சங்கீதா ராகவை ப் பார்த்து ஏதாவது செய் ராகவ் என்றாள் -அழுதுகொண்டே.. ராகவ் உடனே தனது கார் சாவியை எடுத்து தனது நெஞ்சில் சற்றும் யோசிக்காமல் குத்தி கீரிக்கொண்டான், லேசாக ரத்தம் ஒரு கோடு போல வந்தது, உடனே gopi யிடம் “சுவரை குதிச்சி ஓடிடு..நீ எண்ணை தாக்கிட்டு ஓடிட்ட னு நான் மத்தவங்களுக்கு சொல்லிடுறேன்… ஓடு ஓடு” என்று செய்கை காமித்து தப்பிக்க வைத்து விடுகிறான். guards வந்த உடனே இஸ்ஆஆஆ… அம்மா… வலிக்குதே.. என்று நன்றாக நம்பும் படியாக துல்லியமாக நடித்து மற்றவர்களையும் நம்ப வைத்தான் ராகவ். என்ன சார் ஆச்சு, யார தேடிக்குட்டு வந்தீங்க, சொல்லுங்க நாங்க இருக்கோம் பிடிச்சிடுறோம் – என்று guards உடலை முருக்கினார்கள். நான் ஒருத்தனை பிடிக்க வந்தேன், தடுக்கி விழுந்ததுல கல்லு குத்திடுச்சி, leave it please, I will handle it – என்று சொல்லி சந்கீதாவை மீண்டும் தனது காரில் அமர வைத்து guards ஐ திருப்பி அனுப்பி விட்டான் ராகவ். ஒரு பக்கம் gopi யை விட்டது சரி இல்லை என்று அவனது மணம் கூறினாலும் மறு பக்கம் மற்ற பெரிய முதலைகளைப் பிடிக்க இவன்தான் Key என்று ஒரு குரல் அழுத்தமாக சொன்னது அவனுக்குள். இப்போது சங்கீதாவை தனது தோளில் உரிமையாய் சாய்த்து calm down செய்த ராகவ் மீது கை வைத்து சங்கீதாவும் சாய்தாள். சங்கீதா cool down… nothing is going to be problamatic. கண்டு பிடிக்கலாம். இதுக்கெல்லாம் அசருற பொம்பளைய நீங்க?.. என்று அவன் சொலும்போது “தயவு செய்து மார்புல கீரின இடத்துல மருந்து போடு ராகவ் ப்ளீஸ்….” என்று அழுது கொண்டே அக்கறையாக பேசினாள் சங்கீதா. போடலாம்…. ஆனா அதை என் தேவதைப் போட்டா நல்ல இருக்கும் னு யோசிச்சேன்…. – என்று ராகவ் சொல்லும்போது மேடையில் அவன் படித்த தேவதை கடிதம் நியாபகம் வந்து யார் அது?… எனக்கு இப்போ சொல்லணும். என் கிட்ட கூட சொல்ல க் கூடாதா?…. – என்று சங்கீதா உரிமையுடன் கேட்க்கும்போது மெளனமாக அவள் கண்களைப் பார்த்து சிரித்தான் ராகவ்.
என்ன சிரிப்பு வேண்டி கெடக்குது, சொல்ல போறியா இல்லையா? அந்த தேவதயோட பேரு அந்த கவிதைலையே ஒழிஞ்சி இருக்கே… உங்களுக்குக் கூடவா தெரியல? – என்று சொல்லி தனது pocket உள்ளே இருக்கும் அந்த கவிதை எழுதின காகிதத்தை சங்கீதாவின் கையில் குடுத்தான் ராகவ். ஒரு புறம் மனதில் பொறாமை அதிகமாக இருந்தாலும் யாரென்று தெரிந்து கொள்ள ஆவலுடன் காகிதத்தைப் பிரித்தாள் சங்கீதா.. இதுல என்னடா இருக்கு? பின்னாடி திருப்பிப் பாருங்க…. தேவதையின் பெயர் ஒவ்வொரு இயற்கைக்கும் குடுத்த விளக்கத்தின் முதல் எழுத்துகளை கூட்டினால் வரும் என்று எழுதியதைப் பார்த்து மீண்டும் காகிதத்தை திருப்பி கவிதையைப் படித்தாள் சங்கீதா…

No comments:

Post a Comment