Friday, August 1, 2014

சங்கீதா - இடை அழகி 72


“குமார் தனது மொபைல் எடுத்து சங்கீதாவுக்கு “I wont come home today also, I will stay with my friend tonight” என்று sms அனுப்பினான். sms அனுப்பிவிட்டு, குமார் மனதுக்குள் மெதுவாக எண்ணினான் “என்னுடைய ரகசியங்களை தெரிந்திருக்கிறாய், கூடவே கடவுள் பதில் போட்டதாக சொல்லி என்னை ஏமாற்றி இருக்கிறாய், கூடவே என் மனைவியுடன் வாழ வக்கில்லாதவன் என்றும் சொல்லி இருக்கிறாய்… உன்னை சத்தியமாக கொள்வதில் தப்பில்லை டா.. ஆனா எங்க வெச்சி கொள்ளுறது?…. office… ச்ச.. ச்ச… பிரச்சினை ஆயிடும். ஏதாவது வெளியூர்? அப்புறம் நான் உன் கூட பிரயாணம் வேற செய்யணும், அதுவும் ரிஸ்க்….” நீண்ட சிந்தனைக்கு பிறகு…” என் வீடுதான் கரெக்ட், yes உன்னை நான் அங்கேதான் கொல்ல போறேன்.” “நவீன்…” “என்னடா..”
நாளைக்கு சாயும்காலம் ஒரு 5 மணிக்கு என் வீட்டுக்கு வாயேன். நீ என் வீட்டுக்கு வந்து ரொம்ப நாள் ஆகுது. “கண்டிப்பா வரேண்டா…. நீ என்கூட இப்போ சகஜமா பேசுறதே மனசுக்கு சந்தோஷமா இருக்குடா” “ஹ்ம்ம் thanks டா..” – சற்று மென்மையாக முறைத்துக் கொண்டு மனதில் எண்ணினான் “உனக்கு என் கையாலதான் சாவுடா..” என்று மனதில் எண்ணிக்கொண்டு படுத்துவிட்டான். “என்னைப் பற்றி இப்படி எல்லா உண்மைகளையும் தெரிஞ்ச ஒருத்தனை இன்னைக்கி நான் perfect plan போட்டு கொல்ல போறேன். அதுக்கப்புறம் யாராவது என்னை பிடிச்சா கூட சாட்சி இருக்காது.” “இப்போ சொல்லுங்க.. என் பொண்டாட்டி வெச்ச பூவுல அழகா தெரியுற கடவுள்களே நான் எடுத்த முடிவுல என்ன தப்பு? இன்னைக்கி நவீன் வருவான், அவனை நான் கண்டிப்பா போட்டு தள்ளுவேன். அதுக்கு அப்புறம் என்னை பற்றியும் என் ரகசியங்கள் பற்றியும் தெரிந்த அந்த ஒரு bastard இன்னியோட போய் சேர்ந்துடுவான். அதுக்கப்புறம் நான் என் குடும்பத்தோட “happily lived ever after னு கதை புத்தகத்துல வரா மாதிரி board மாட்டிக்குவேன்… ஹா ஹா ஹாஹ் ஹா..” சத்தமாக சிரித்தான் குமார். “டேய் குமார்….” – நவீன் அழைத்தான். கடவுளைப் பார்த்து “வந்துட்டான், நான் அவனை கொல்ல போகுறதுக்கு நீங்க மட்டும்தான் இந்த உலகத்துல சாட்சி.. ஹா ஹா.. ” என்று குரூரமாக சிரித்தான் குமார். “வாடா நவீன்..” “என்னடா வீடு முழுக்க இருட்டா இருக்கு, மணி சாயந்தரம் 5, door எல்லாம் துறந்து கொஞ்சம் லைட் போடலாம் இல்ல.. “correct போடணும் டா. அதுக்கு முன்னாடி கொஞ்சம் கதவை சாத்திட்டு வரேன் இரு..” – கதவை இப்போது சாத்தி தாழ்பாள் போட்டான் குமார். வீட்டில் அனைத்து கதவுகளும் சாத்தி இருந்தது. அதை மறு முறை ஊர்ஜிதப் படுத்திக் கொண்டான் குமார். குழந்தைகள் பள்ளியில் வந்த பிறகு வீடு பூட்டி தான் இருக்கிறதென்று எண்ணி நிர்மலாவின் வீட்டிற்கு சென்றிருக்கிறார்கள். அங்கே நிர்மலா குடுத்த பாலை க் குடித்துக் கொண்டிருக்கிறார்கள். வெளியில் சங்கீதாவின் வீட்டு முனையில் ராமு என்று ஒரு இஸ்திரி பையன் இருப்பான். ஒவ்வொரு தாய்மார்களும் தங்களின் குழந்தைகளுக்கு “தத்தி சோம்பேறி” என்கிற வார்த்தைக்கு அர்த்தம் கற்பிக்க அந்த இஸ்திரி போடும் பையனைத் தான் கூறுவார்கள். அவ்வளவு சோம்பேறி. ஆனால் அன்று அவன் காலை முதல் மாலை வரை தூங்கி விட்டு சங்கீதாவின் வீட்டின் முன் துணி கேட்பதற்காக மாலை 5 மணிக்கு வந்திருக்கிறான். “அவனுக்கு, உள்ளே மெதுவான சத்தம் கேட்டது..” “நானும் விடிய விடிய யோசிச்சிட்டேண்டா, என் மனசுக்கு ஒரு விதத்துல நிம்மதி கிடைக்க போகுது.. ஆமாம் உறுதியா கிடைக்க போகுது….” “அப்போ டாக்டர் கிட்ட சிகிச்சை எடுத்துக்க போறியா?” “இல்ல வேற வழியில எனக்கு நிம்மதி கிடைக்க போகுது டா..” “என்ன சொல்லுற?” “ஆமாம்… உன்னை கொள்ளுறதுதான் டா எனக்கு ஒரே வழி you blody bastard.” “டேய் குமார் என்ன பேசுற?. எனக்கு பயமா இருக்குடா, இந்த மாதிரி எல்லாம் பேசாத..” – நவீன் உடனே வாசல் கதவை நோக்கி விரைந்தான் அப்போது தான் தெரிந்தது கதவு உள் பக்கம் பூட்டி இருக்கிறதென்று… “ஹா ஹாஹ்.. ஓடாதடா நாயே, இன்னைக்கி உன் உயிர் உன்னை விட்டு பிரிய போகுது உன் இஷ்ட தெய்வம் ஏதாவது இருந்தா உன் கடைசி பிரார்த்தனையை பண்ணிக்கோ, உனக்கு சொர்க்கம் கிடைக்கணும் னு வேண்டிக்கோ.” குமார் நவீனை இறுக பிடித்துக் கொண்டான், “டேய் விடு டா என்னால முடியல டா நான் உன் friend டா, நான் வேணும்னா உன்னை பத்தியும் துறையைப் பத்தியும் வெளியே சொல்லாம இருக்கேண்டா. கொஞ்சம் யோசி டா பொறுமையா இருடா கொலை கார பாவி.” “ஆங்… நான் கொலை கார பாவி தான் ஆனா இன்னைக்கி ஒரு நாள் மட்டும்தான் என் வாழ்க்கைல கொலை செய்ய போறேன். நாளைல இருந்து நான் ரொம்பவும் சுத்தமான ஆளா இருப்பேன்.” சொல்லிக் கொண்டே கையில் ஒரு கத்தியை எடுத்தான் குமார். “வேணாம்டா வேணாம்டா,,ப்ளீஸ் டா என்னால உன் பிடியில இருந்து விலக முடியல டா பாவி… என்னை கோ கோ…. கொல்லாத டா நான் புள்ளகுட்டி காரண்டா… படு பாவி வேணாம்டா டேய் வேணாம் டா…. எனக்கு பயமா இருக்கு டா வேண்டாம் டா ப்ளீஸ் டா வேண்டாம் டா.” – நவீன் கெஞ்சினான், கதறினான், குமாரின் கையில் இருந்து விலக முயற்சி செய்யும்போது கத்தி தவறி கீழே விழ, ஈவு இறக்கம் இன்றி நவீனின் கழுத்தை பிடித்து அருகில் உள்ள சுவரில் மிகவும் பலமாக ஒரே இடி இடிக்க நெத்தியில் இருந்து ரத்தம் வழிந்தது.. “அடப்பாவி என்னையும் சேர்த்து இடிச்சிட்டியே டா… பரவாயில்ல என் உயிர் போனாலும் சரி, உன் உயிர் போகணும் டா bastard… உன் ….உன் உயி…..போ…bas..d….” மயக்கத்தில் ரத்தத்துடன் கீழே விழுந்தார்கள். கொஞ்ச நேரத்துக்கெல்லாம் போலீஸ் siren சத்தம் கேட்டு அக்கம் பக்கம் வீட்டின் உள்ளே இருந்தவர்கள் எழுந்து சத்தம் கேட்டு வெளியே வந்தார்கள். இஸ்திரி போடும் பையன் பத்து நிமிடத்துக்கு முன்பாக புகார் கொடுத்ததின் பெயரில் போலீஸ் விரைந்தது. அதற்க்கு முன் கூட்டம் கூடி இருந்தது. நிர்மலா சங்கீதாவின் பசங்களை கூட்டிக் கொண்டு ஓடி வந்தாள். தள்ளுங்கயா… தள்ளுங்க… – head constable உள்ளே வந்தார். யாருக்காவது ஏதாவது தெரியுமா? இவங்களுக்கு தெரிஞ்சவங்க யாராவது இருக்கீங்களா? கூட்டத்துடன் கூட்டமாக நின்றிருந்த நிர்மலா பதறி அடித்து உடனே சங்கீதாவின் நம்பரை க் குடுத்து அழைத்து விஷயத்தை சொல்ல சொன்னாள்.. “ஹலோ..” – constable அழைத்தார்.
“எம்மா, யாரும்மா சந்கீதாவா?” “ஆமாம் சொல்லுங்க, நீங்க யாரு?” “நான் உங்க தெரு முனை police station ல இருக்குற ஏட்டு மா.. எனக்கு அதிகம் பேச முடியாது, inspector நிறைய வேலை சொல்லி இருக்காரு, சீக்கிரமா கிளம்பி உங்க வீட்டுக்கு வாங்க, இங்கே ஒரு பெரிய அசம்பாவிதம் நடந்து இருக்கு. நேருல வாங்க உங்க கிட்ட பேசணும். “ஹலோ என்ன அசம்பாவிதம், சொல்லுங்க ப்ளீஸ் சொல்லுங்க என்ன அசம்பாவிதம் நடந்துது… சொல்லுங்க ப்ளீஸ்…. – பதறினாள் சங்கீதா.” “கி… கி… கி… கி………” – constable phone கட் செய்து விட்டார். சற்று நேரத்தில் ராகவின் BMW வந்து நின்றது. சங்கீதா என்னமோ ஏதோ என்று பதறி அடித்து ஓடினாள். “அய்யோ அம்மா..” என்று. அதற்குள் ஆம்புலன்ஸ் வந்திருந்தது. அதில் குமார் எற்றப்பட்டான்.. “என்ன ஆச்சு என்ன ஆச்சு இவருக்கு…” “ஒன்னும் இல்ல பதறாதீங்க. காப்பதிடலாம்.. ” – ambulance டிரைவர் கூறினார். ராகவ் சங்கீதாவின் தோளுக்கு பக்கத்தில் உறுதுணையாய் நின்றான். inspector ஜீப்பில் விறைப்பாய் வந்து இறங்கினார். “ஒத்து ஒத்து.. ஹ்ம்ம் ஒத்து” – குரல் பலமாக லட்டியுடன் ஒலித்துக் கொண்டே வருவது தெரிந்து கூட்டம் வழி விட்டது. “you are sangeetha right?” – சத்தமாக கேட்டார் inspector. “ஆமாம் சார்..” – இன்னும் அழுகை நிற்க வில்லை. “அவர் யாருமா?” “என் கணவர்..” “யோவ் constable, எண்ணத்த புடிங்கிக்குட்டு இருக்க?… வந்து சொல்லுற பதிலை நோட் பன்னுயா.. constable பதறி அடித்து ஓடி வந்தார். “சார் வீட்டுக்குள்ள ஒருத்தர் தான் இருந்திருக்காரு” “கணவர் பெரு என்னமா?” “குமார்..” “முழு பெரு என்னமா?” நவீன்குமார்! Inspector அனைவரையும் கொஞ்சம் கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தார். கூடி இருந்த கூட்டங்கள் மெதுவாக கலைய ஆரம்பித்தன. கூட்டம் கலையும் தருணத்தில் பல விதமான குரல்கள் எழுந்தன.. “என்ன மனுஷனோயா…… சரியான ஆளு….. எப்போவுமே ஒரு மார்கமாதான்யா திரிவான்….. வெட்டி பய….” என்று கொஞ்சம் கொஞ்சமாக முணுமுணுத்துக் கொண்டே கூட்டம் கலைய, இஸ்திரி பையன் ராமு அங்கேயே நின்றுகொண்டிருந்தான். “ஏய்.. என்னடா பார்க்குற?” – Inspector விறைப்பாக கேட்டார். “அவன்தான் சார் கம்ப்ளைன்ட் குடுத்தான்” – constable பவ்யமாக பேசினார். “என்னடா பார்த்த..” – Inspector முறைத்துக் கேட்டார். “வெளியிலதான் சார் நின்னுகிட்டு இருந்தேன், உள்ளே போய் எதுவும் பார்கல. நிறைய சத்தம் கேட்டுது.” – பயந்து பேசினான். “என்னென்ன கேட்ட?” – கையில் லட்டி சுழன்று கொண்டே இருந்தது. “ஒருத்தருக்கொருத்தர் ரொம்ப கத்தினாங்க சார், ஒருத்தன் இன்னொருத்தனை கொல்ல போறேன்னு கத்தினான், ஒருத்தன் உயிர் பயத்துல விட்டுடு விட்டுடு ன்னு கெஞ்சினான்.. சாமானை தூக்கி எறிஞ்ஜாங்க, கத்தி எடுத்து வீசுன சத்தம் கூட கேட்டுது சார்.” “சப்…. ரெண்டுமே ஒருத்தந்தாண்டா.. வேற ஏதாவது கேட்டுச்சா?” – inspector சலித்துக் கொண்டே கூறினார். “அதுக்கப்புறம் ஏதோ துரைன்னு சொன்னான் சார்..” இன்ஸ்பெக்டர் இப்போது கொஞ்சம் உஷாராகி அவனை கூர்ந்து கவனித்தார். “என்ன துரை?” இவர்கள் பேசிக்கொண்டிருக்கையில், வீட்டினுள் மற்ற constables குமாருக்கு சம்மந்தமான பொருட்களை எடுக்கும்போது அவனது ஆபீஸ் id card எடுத்தார்கள். அதைக் கூட்டத்தில் நின்றுகொண்டிருந்த ராகவ் கவனிக்க தவறவில்லை. சற்று வீட்டினுள் சென்று நெருங்கி எட்டிப் பார்த்தான். IOFI employee id card தான் அது. “நீயும் துறையும் சேர்ந்து செய்யுற தப்பை நான் வேணும்னா வெளியே சொல்லாம இருக்கேன்டா என்னை விட்டுடு விட்டுடு ன்னு கெஞ்சினான் சார்.” – ராமு போலீசிடம் பயந்து கூரிக் கொண்டிருந்தான். “ராகவ் இந்த வார்த்தைகளை கேட்டு இஸ்திரி பையன் ராமுவிடம் நெருங்கி வந்தான்.” “நீங்க யாரு சார்? உங்களுக்கு என்ன வேணும்?” – ராகவைப் பார்த்து inspector பேசினார். “நான் ராகவ், IOFI CEO” – தனது visitiing card குடுத்து, இன்ஸ்பெக்டரிடம் கண்ணியமாக கை குலுக்கினான். கூடவே தனது சித்தப்பா IG யாக இருப்பதையும் விளக்கினான். இன்ஸ்பெக்டர் இப்போது ராகவிடம் எழுந்து நின்று பேச ஆரம்பித்தார். “சொல்லுங்க சார் உங்களுக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம்?” – மென்மையாக சிரித்து தன்மையாக பேசினார். “சம்மந்தம் இல்லை, ஆனா என் கம்பெனி IOFI சம்மந்தம் ஆகி இருக்கு. இந்த குமார் என் கம்பனியில் வேலை செய்றவன். இந்த பையன் ராமு சொல்லுறதை வெச்சி பார்க்கும்போது யாரோ துரைன்னு ஒருத்தன் இவன் கூட சேர்ந்து, ஏதோ என் கம்பெனில தப்பு பண்ணி இருக்கான். (சில நொடி மௌனத்துக்கு பிறகு ராகவ் inspector தோளில் கை போட்டு மெதுவாக பேச ஆரம்பித்தான்) இந்த விஷயம் வெளியில மீடியா க்கு தெரியக் கூடாது. இது என்னுடைய personal request. ஆனா அதே சமயம் நீங்க உங்க விசாரணைய சத்தம் இல்லாம மெதுவா செய்யுங்க, ஏதாவது துரை பத்தின விஷயம் தெரிய வந்தா உடனடியா சொல்லுங்க. I hope you understand my position in this issue” – என்று சொல்லி inspectorஐ கூர்ந்து பார்த்தான். “எனக்கு புரியுது சார், நான் பார்த்துக்குறேன். நீங்க போயிட்டு வாங்க. ( சில நொடி மௌனத்துக்கு பிறகு) சார் இது என்னோட கார்டு.. உங்க சித்தப்பா கிட்ட குடுத்து வையுங்க.. ஹா ஹா..” – என்று கழுத்தில் செயின் மினுக்க கொஞ்சம் போலியாக சிரித்தார். ராகவ், ஒன்றுமே புரியாமல் நிற்கும் சங்கீதாவை, குமார் அட்மிட் ஆகி இருக்கும் hospital லில் இறக்கி விட அழைத்து செல்லும்போது நிர்மலா அவளது பசங்களை தன் வீட்டினில் தங்க வைத்துக் கொண்டாள். அக்கம் பக்கம் இருந்தவர்கள் யாவரும் கலைந்து சென்றுவிட்டார்கள். ராகவ் inspector ரிடம் எடுத்து கூறி சங்கீதாவின் வீட்டிற்கு ஒரு constable ஐ காவலாக போடுமாறு தெரிவித்திருந்தான். hospital வராந்தாவில் emergency unit முன்பாக சங்கீதா ஈர விழிகளுடன் நின்று கொண்டிருந்தாள். ராகவ் அவள் அருகினில் சென்றான். “ராகவ்… ஸ்ஹாஆ” – என்று வாயில் கை வைத்து அழுது கொண்டே ராகவின் தோள்களில் ஆறுதலைத் தேடி சாய்ந்தாள் சங்கீதா. “சரி…. சரி…. come on, என்னது இது, சின்ன குழந்தை மாதிரி.. ஒன்னும் ஆகல, எல்லாம் சரி ஆகிடும், கவலைப் படாத சரா.” – என்று ராகவின் குரலில் இந்த வார்த்தைகளைக் கேட்கும்போது அவளுக்கு உண்மையில் மனதுக்கு பலம் தென்பட்டது. “உன்னைப் பார்க்க பார்க்க தான் எனக்குள்ள கொஞ்சம் தெம்பு வருது ராகவ்.” – இன்னும் அழுத குரலில் பேசினாள்.
“patient க்கு நீங்க என்ன வேணும்?” – டாக்டர் வெளியே வந்து கேட்டார். “நான் அவரோட மனைவிங்க, My name is Sangeetha.” “தலைல பலமா அடி, உள்காயம் கொஞ்சம் அதிகம் ஆகி இருக்கு, operation பண்ண வேண்டிய நிர்பந்தம் இருக்கு, கொஞ்சம் நிறைய செலவு ஆகும்.” – என்று தன் மூக்கு கண்ணாடியை சரி செய்து கொண்டு இயந்திரமாக பேசினார் டாக்டர். “எவ்வளவு ஆனாலும் சரி, குணப் படுத்த முடிஞ்சா போதும், காசைப் பத்தி கவல படாதீங்க” – என்று சற்றும் யோசிக்காமல் கூறினான் ராகவ். “Alright, அப்போ நான் நாளைக்கே அவருக்கு treatment ஆரம்பிச்சிடுறேன் & அடுத்த 48 மணி நேரம் நீங்க மட்டும் வேணும்னா அவர் கூட இருக்கலாம். மத்தவங்க allowed கிடையாது.” – என்று டாக்டர் சந்கீதாவைப் பார்த்து கூறிவிட்டு அங்கிருந்து விலகினார். “நீ ஏன் இந்த காசு விஷயத்துல commit ஆகுற? நான் கேட்டேனா?” “நீ ஏன் இவ்வளோ நாளா என் கிட்ட ஒரு விஷயத்தை மறைச்ச?” “எது டா?” “குமார் IOFI ல வேலை பார்க்குறார்னு சொல்லி இருக்கலாம் இல்ல?” சங்கீதாவிடம் இருந்து மௌனம்…. “நிஜத்தை சொல்லனும்னா எனக்கு இப்போதான் உன் மேல அவ்வளோ மரியாதையும் அதிகமான காதலும் வருது. நீ நினைச்சி இருந்தா என் கிட்ட இருக்குற நெருக்கத்தை பயன் படுத்தி, குமாருக்கு இன்னும் கொஞ்சம் பெரிய பதவி குடுக்க சொல்லி சம்பளத்தை ஏத்த சொல்லி, இன்னும் என்னென்னவோ கேட்டிருக்கலாம். ஆனா அதெல்லாம் ஒண்ணுமே செய்யல, you are a highly self esteemed women, உன்னை நினைச்சா ரொம்ப பெருமையா இருக்கு” – அவளின் கரங்களைப் பிடித்து சொன்னான் ராகவ். என்ன பேசுவதென்று தெரியாமல் ஈர விழிகளுடன் குனிந்து மௌனமாய் தன் மருதாணி கரங்களில் ராகவின் பெயரைப் பார்த்துக் கொண்டிருந்தாள் சங்கீதா. “எவ்வளோ professional அ நடந்துகிட்ட. உன்னை காதலிக்குறதை நினைச்சி பெருமை படுகிறேன் சரா.” – ராகவ் இதைக் கூறியதும் ஒரு நிமிஷம் நிமிர்ந்து பார்த்தாள் சங்கீதா.
“I am sorry, எந்த இடத்துல என்ன பேசுறதுன்னு தெரியாம பேசிட்டேன். I am sorry sangeetha….” “its okay da….” “டாக்டர் கிட்ட காசு விஷயத்துல நீ கேட்டுதான் நான் பதில் சொல்லனுமா? உன் கஷ்டம் என்னன்னு தெரிஞ்சி நானே முன் வந்து உதவ எனக்கு உரிமை இல்லையா?” – சங்கீதாவிடம் உரிமையுடன் கேட்டான் ராகவ். என்ன சொல்வதென்று தெரியாமல் சில நொடிகளுக்கு பிறகு “ஏன்டா இப்படி இருக்கே?” – என்று அவனை திட்டவும் முடியாமல் திட்டாமல் இருக்கவும் முடியாமல் தவித்து பேசினாள். “சரா, நான் இப்போ உன்னை இந்த நிலைமைல இங்கே தனியா விட்டுட்டு போக விரும்பல, நான் வேணும்னா….” – ராகவ் பேசி முடிப்பதற்குள் குறுக்கிட்டாள் சங்கீதா.

No comments:

Post a Comment