Friday, August 8, 2014

சங்கீதா - இடை அழகி 98


கதவைத் திறந்து ஒரு கண நொடி கார்த்திக்கை நேருக்கு நேர் பார்த்த சஞ்சனா.. பின்வேகமாக தன் தலையை கீழே தாழ்த்தினாள்.. அங்கிருந்த கதவில் அவள் கன்னங்கள் அழுந்திக்கொண்டிருந்தது.. அந்த இருள் சூழ்ந்த விடிகாலை நேரத்தில் இருவருக்கும் சந்தோஷம் கலந்த படபப்பில் அவர்களின் மூச்சு காற்றின் சப்தம் கூட தெளிவாக கேட்டது.. “நீ….” – என்று இருவரும் ஒரே நேரத்தில் ஒருவருக்கொருவர் பார்த்து எதோ கேள்வி எழுப்ப, சில நிமிடங்கள் ஒழிந்திருந்த வெட்க சிரிப்பு இப்போது இருவருடைய முகத்திலும் ஒரு வித சந்தோஷத்தை பொங்கி வழிய செய்தது..
“நீ இன்னும் அதே டிரஸ்ல இருக்க?…. நேத்து மதியத்துல இருந்து வீட்டுக்கு போகவே இல்லையா?” – முகம் குனிந்திருந்தாலும் சஞ்சனாவின் கண்கள் மட்டும் மேல்நோக்கி கார்த்திக்கை புன்முறுவலுடன் ஒரு பார்வை பார்த்தது.. “ஹஹ்ஹா…” – பதில் சொல்வதற்கு பதிலாக கார்த்திக்கிடமிருந்து ஒரு சிரிப்பு மட்டுமே வந்தது.. “எதுக்கு சிரிக்குற?” அவன் சிரிப்பை ரசித்துக்கொண்டே கேட்டாள்.. “நீ நேத்து மதியத்துல இருந்து தூங்கவே இல்லையா?” – என்றான்.. “உஹூம்….” – வெட்கத்தில் அவள் பார்வை மீண்டும் தரையை நோக்கியது…. “உஹூம் னா….?” – சஞ்சுவை சற்று நெருங்கினான் கார்த்திக். “நீ முதல்ல என் கேள்விக்கு பதில் சொல்லு?” – கதவின் ஓரத்தில் சஞ்சனாவின் விரல் நுனிகள் அழகாய் சுரண்டிக் கொண்டிருந்தது.. “ஹ்ம்ம்.. அது வந்து சஞ்சு…நேத்து மதியம் ரூமுக்கு போனேனா.. டிவி பார்க்கலாம்னு உட்கார்ந்தா பார்க்க பிடிக்கல.. அப்புறம் என்னமோ தெரியல, ரூம் உள்ள இருக்க சுத்தமா பிடிக்கல.. இன்னொரு பக்கம் மனசுல நடந்ததெல்லாம் ஒரு கணவான்னு நினைச்சி யோசிச்சிட்டு இருந்தேன்.. அப்புறம் கேலண்டர்ல இன்னைக்கிஒருவேல ஏப்ரல் ஒன்னான்னு கன்ஃபார்ம் பண்ணிகிட்டேன்….” “ஏன்?” என்று கேட்டு அவன் உளறலை மௌனமாய் ரசித்து கதவோரமாய் சிரித்தபடி அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள் சஞ்சு.. அவளை நிமிர்ந்து பார்த்தவன்…. “அது ஒண்ணுமில்ல சஞ்சு நான் இவ்வளோ தைரியமா இந்த விஷயத்தை உன் கிட்ட எப்படி சொன்னேன்னு நினைச்சா எனக்கே ஆச்சர்யமா இருந்துச்சி.. அத விடவும் அதுக்கு நீ என்ன பதில் சொல்ல போறியோன்னு நெனச்சி நெனச்சி எந்த காரியமும் செய்ய முடியாம இங்கயும் அங்கயுமா ஒரு சின்ன டென்ஷனோட..” என்று நிறுத்தினான்.. “என்னாச்சு..” – மெதுவாய் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.. “சின்ன டென்ஷன் இல்ல.. ரொம்பவே டென்ஷனோட ரவுண்ட் அடிச்சிட்டிருந்தேன்.. நீ ஒரு வேல எனக்கு ஆமானு சொன்னாலும் நான் முட்டாலாயிட கூடாதில்ல…அதான்….” “ஹஹ்ஹா.. ஏப்ரல் மாசமெல்லாம் எப்பவோ மலயேரிடுச்சி” “ஹ்ம்ம்.. கரெக்ட் தான்….” சற்று அசடு வழிய தொடர்ந்தான்.. “பொறுமையா உன் பதிலுக்கு காத்திட்டு இருக்கலாம்னு எனக்குள்ள என்னதான் நானே சமாதானம் சொன்னாலும் மனசு அடங்காம அவசர பட்டுட்டே இருந்துச்சி சஞ்சு… ஹஹா.. இப்போதான் புரியுது….” என்று கார்த்தி நிறுத்த.. “என்ன புரியுது?” – இன்னும் கூட தரைதான் சஞ்சுவின் வெட்கத்தை ரசிக்கிறது..!! “காதல் சுகமான சுமைன்னு புரியுது….. கல்லைக்கூட சிர்ப்பமா மாத்துற பவர் இருக்கு காதலுக்கு.. அட…. நான் இப்படியெல்லாம் இதுக்கு முன்னாடி பேசினது இல்ல சஞ்சு.. ஹாஹ்ஹா…. எனக்கே இதெல்லாம் புதுசா இருக்கு..!!” – ஒரு வினோதமான சந்தோஷத்தை உள்ளுக்குள் உணர்ந்தான் கார்த்திக்…. கார்த்திக் பேசும் வார்த்தைகளை கேட்க கேட்க சஞ்சுவின் அடிவயிற்றில் இருந்து சந்தோஷம் பீறிட்டது, ஆனாலும் அவன் எதிரில் அவை அளவான வெட்க சிரிப்பாகவே வெளிப்பட்டது.. அதை கார்த்திக் ரசிக்க தவறவில்லை.. இன்னும் சொல்லப்போனால் சஞ்சுவின் சிரிப்பு அவனுக்கு மேலும் தொடர்வதற்கு தைரியம் குடுத்தது.. கார்த்தி தன் கையில் ஒரு சிறிய காகிதத்தை பார்த்து சிரித்தபடி மீண்டும் அதை அவன் பாக்கெட்டில் வைத்தான்…. “என்னதது?” “ஒண்ணுமில்ல சஞ்சு.. ரூம்ல உன்ன ரொம்பவே நெனச்சிட்டு இருந்தேன்.. சந்தோஷமோ துக்கமோ.. எப்போவுமே எல்லாத்தையும் என் அம்மா கிட்ட கொட்டிருவேன்.. இன்னொரு பக்கம் நீ எப்போவும் என் மனசு காயப்படுறா மாதிரியான பதில் சொல்ல மாட்டன்னு தெரியும்…. இருந்தாலும் அத கன்ஃபார்ம் பன்னிக்க பெட்டில இருக்குற என் அம்மா முன்னாடி நீ என்ன சொல்லுவனு தெரிஞ்சுக்க துண்டு சீட்டுல எழுதி போட்டு பார்த்தேன்…. அம்மா எல்லாம் நல்ல படியா நடக்கும்னு சொல்லிட்டாங்க…. இனி உன் பதில் கிடைச்சா போதும் சஞ்சு…. நான் இப்படி உங்கிட்ட பேசுவேன்னு எனக்கே தெரியாதுடா…. பேசும்போது நிச்சயமா ஒளறபோறேன்னுதான் நெனச்சேன்…. ஆனா உன்ன பார்த்த பெறகு கொஞ்சம் தெளிவாதான் பேசுறேன் ஹாஹ்ஹா…. “சரி எப்படியும் காலைல நீ கிளம்பி வெளிய வருவியே.. அப்போ வழியிலேயே நிக்க வெச்சி உன் கிட்ட வெட்டு ஒன்னு துண்டு ரெண்டுன்னு டெரரா கேட்டுகலாம்னு நெனச்சேன்…. ஆனா…” என்று நிறுத்தினான்.. “ஹஹ்ஹா ஹா…” சற்று பிஞ்சு முகத்தை வைத்து நம் கார்த்தி டெரர் என்று சொன்னதை எண்ணி கொஞ்சம் சத்தமாகவே சிரித்துவிட்டாள்…. “ஆனா?…. ஹ்ம்ம் சொல்லு.. ஏன் நிறுத்திட்ட?” – அவள் புரியாமல் கேக்கும்போது கதவோரம் சாய்ந்து நிற்கும் அழகை ரசிக்க தவறவில்லை கார்த்திக்.. “இப்ப எதுக்கு சிரிச்ச?…” – ஏதாவது தேவல்லாத பிட்ட போட்டுட்டோமோ? என்று குழம்பினான்.. “ஹஹ்ஹா… ஒண்ணுமில்ல எதுக்கோ சிரிச்சேன்.. நீ சொல்லு..” “ஹ்ம்ம்.. எப்டி எப்டியோ உங்கிட்ட பேசனும்னு நெனச்சி வந்தேன்.. ஆனா இப்படி டவுன் ஆகி மண்டி போட்டுட்டேன்…. வாட் கேன் ஐ டூ சஞ்சு….” “ஹஹ்ஹா…. உள்ள வா.. ரொம்ப நேரமா வெளியவே நிக்குற….” – அவனுடைய கேள்விக்குறியான முகத்தைப் பார்த்தபடி சிரித்துக்கொண்டே உள்ளே அழைத்தாள். சஞ்சனா ஒரு சிவப்பு நிற ஸ்லீவ்லஸ் ஸ்லிப் அணிந்து, நீல நிறத்தில் ஒரு சிறிய ஷால் ஒன்றை தன் கழுத்தில் தொங்க விட்டிருந்தாள்.. இடுப்பிலிருந்து முட்டிவறை வரக்கூடிய ஜீன்ஸ் ஃப்ராக் அணிந்திருந்தாள். அதில் அவளது முழங்காலின் அழகை மட்டுமல்ல, கதவை திறந்ததில் இருந்து அவள் குடுக்கும் புன்னகையில் ஒரு நம்பிக்கை கிடைத்த சந்தோஷத்தில், அவள் சிரிப்பு, அவள் கண்கள், அவள் பேச்சு, மற்றும் கதவோரம் சாய்ந்து அவள் காட்டிய வெட்கம், என்று அவளிடம் தென்படும் அனைத்திலும் கார்த்தியின் மனம் ஒரு மௌன நிலையை அடைந்திருந்தது.. சஞ்சனா ஹாலில் உள்ள டைனிங் டேபிள் அருகே நின்று கீழே பார்த்தபடி அமைதியாய் நின்றுகொண்டிருந்தாள்…. கார்த்தி என்ன பேசுவதென்று தெரியாமல் மற்றொரு புறம் அமைதியாய் நின்றிருந்தான்.. வீடு முழுவதும் ஒரு மிதமான மஞ்சள் வெளிச்சம் பரவியிருந்தது….
மெதுவாக கார்த்தியை சஞ்சு நெருங்கி வர, கார்த்தியின் மனம் சற்று அதிகமாகவே படபடத்தது.. அவள் மெதுவாக நெருங்க நெருங்க ஒரு கட்டத்தில் சற்று வேகமாக அவனருகில் வந்து நின்றபடி அவனுடைய முகத்தை ஒரு முறை நேருக்கு நேர் பார்த்தாள்.. அப்போது கார்த்தி தன் விரலால் அவள் கண்களின் ஓரம் தென்படும் லேசான கண்ணீரை துடைக்க கை உயர்த்தியபோது அவன் கையை தட்டிவிட்டு அடுத்த நொடி அங்கிருந்த சேரில் தொப்பென்று அமர்ந்தாள்… கார்த்திக் சற்று தள்ளி இருந்த சேரில் அமர்ந்து அவளை குழப்பத்துடன் பார்த்து “என்ன சஞ்சு?…. என்னதான் உன் பிரச்சனை?…. ப்ளீஸ்…. மனசு விட்டு பேசுடா”என்று முடிப்பதற்குள் சட்டென்று எழுந்து அவனை சேரோடு சேர்த்து இருக்கி கட்டி பிடித்து அவன் மேல் அழுத்தி சாய்ந்துகொண்டாள்…. “நீதாண்டா என் பிரச்சனை….ஐ லஃவ் யூ ஸோ மச் டா…. ஐ அம் ஸோ லக்கி…. வெரி மச் லக்கி…. உம்மனசுல நீ எனக்கு இப்படி ஒரு எடம் குடுப்பன்னு நெனைக்கல டா…. ரொம்ப நாளாவே நான் உனக்கு தகுதியானவளான்னு என் மனசுக்குள்ள ஒரு போராட்டம் இருந்துச்சி.. ஆனா நீ இவ்வளோ தூரம் என்ன நேசிக்குறத பார்க்கும்போது என்னால இனி உன்ன விட முடியாதுடா….” – அடிவயித்தில் சந்தோஷத்தின் உச்சத்தால் ஏற்படும் கிச்சுகிச்சு உணர்வுடன் சஞ்சுவின் அதீத இறுக்கத்தையும் தாண்டி எப்படியோ ஒரு வழியாக வாழைப்பழம் போல் அகல வாயுடன் சிரித்தபடி அவளை தன் கைகளாலும் கட்டி அணைத்தான் நம் வாத்து…. “இனி என்னிக்கும் என்ன விட்டுட மாட்டல்ல?….” – லேசான ஈர விழிகளுடன் கார்தியைப் பார்த்து கேட்டாள்.. “நீயே கழுத்த பிடிச்சி தள்ளினாலும் நான் இங்கயே தான் சுத்திட்டு இருப்பேன்….” – என்று சொல்லி விட்டு “இவ்வளோ எமொஷ்னலா பேசிட்டு பின்னாடி நீங்க எங்கள விட்டுடாம இருந்தா சரி..” என்று கார்த்தி மெதுவான குரலில் முணுமுணுக்க.. “என்னது?….” கார்த்தியின் கண்களைப் பார்த்து கேட்டாள் சஞ்சு.. “இல்ல..ஒண்ணுமில்ல….” என்று சமாளித்தான்.. “இல்ல.. நீ என்னமோ சொன்ன… சொல்லித்தான் ஆகணும் சொல்லு” என்றாள்.. “இல்ல.. நீயும் என்ன என்னிக்கும் விட்டுட மாட்டால்ல?” என்று சஞ்சுவை பார்த்து இளித்தான்.. ஹேய்…. என்னிக்கும் ஒரே நிலையில குணம் இல்லாத ஆம்பளைங்க கிட்டதான் பொண்ணுங்களுக்கு கஷ்டம்…. ஆனா அப்படி ஒரு நெலம எனக்கு உன் கிட்ட வர்றதுக்கு வாய்ப்பில்ல.. அப்படி ஒரு நெலம வந்தாலும் நான் உன்ன விட்டுட்டெல்லாம் போக மாட்டேன்டா… “அது.. அது… அதுதான் என் சஞ்சு.. ஹஹ்ஹா.. ஹஹஹா…” என்று அவளை அனைக்கும்போது…. “விட்டுட்டெல்லாம் போக மாட்டேன்டா செல்லம்…. ஒருவேல உன் குணம் மாறினா, சாப்பாட்டுல கொஞ்சம் வெஷம் வெச்சி உன்ன முதல்ல கொன்னுட்டு, செத்து போய்ட்டியான்னு கன்ஃபார்ம் பண்ண பெறகு நானும் ரெண்டு வாய் சாப்டு உன் கூடவே செத்துடுவேன்….” – என்று சஞ்சனா சிரித்துக்கொண்டே சொல்லிவிட்டு அவன் நெஞ்சில் முத்தமிடும்போது நம் வாத்துக்கு தொண்டையில் எச்சில் வேகமாய் உள்ளே இறங்கியது..!! “என்ன விட்டுடுவியா டா….?” என்று பாவமாக அவனைப் பார்த்து கேட்டள் அவன் சஞ்சு.. “ச்சே ச்சே…. கடைசி வரைக்கும் எனக்கு நீதான்…. உனக்கு நான்தான்….” என்று அவளுடைய தலையை தடவி மீண்டும் தன் நெஞ்சுடன் அணைத்துக்கொண்டான்…. “நேத்துலிருந்து எதாவது சாப்ட்டியா?..” அவன் நெஞ்சில் அழுத்தி தலை வைத்து கேட்டாள்….

No comments:

Post a Comment