Friday, August 8, 2014

சங்கீதா - இடை அழகி 93


கூடவே கேரன் அவளது ஹான்ட் பாக் ஜிப் சற்று திறந்து வைத்திருந்தாள்…. வேண்டுமென்றே காட்டுகிறேன் என்ற அர்த்தத்தில் இல்லாமல் தான் ஒரு அஜாக்ரதையான பெண் என்பதுபோல தன் உடல்மொழி அவனுக்கு புரியும்விதம் நடந்துகொண்டாள்.. பாதியாய் திறந்த அவளது ஹான்ட் பாகினுள் கட்டு கட்டாக பணம் இருப்பது அவன் கண்ணுக்கு தெரியும் விதம் அவனருகில் வைத்திருந்தாள்…. “ஹாய்ய்..” – வசியமான குரலில் பேசினாள் கேரன்.. “ஹ்ம்ம்..” – சற்று பயத்தில் இறுக்கமாக பேசினான் சம்பத்.. “Are you from India?…” – நேராக பார்த்து மார்பழகு தெரியும்விதம் பேசினாள்.. “yes..” என்று சொல்லி சற்று அவளைப் பார்த்துவிட்டு திரும்பிக்கொண்டான்.. “My hubby is too bad.. he is an indian too..” என்றாள்..
“oh..” என்றான்.. “you know something?… but still I love indians.. they are good in everything..” “nice..” “oh,, my goodness.. pls have an eye on my bag I will get a candy and come quickly..” – என்று சொல்லி அருகில் உள்ள கடைக்கு சென்றாள் கேரன்.. சம்பத் அவளுடைய ஹான்ட் பாக் மீது ஒரு கண் வைத்திருந்தான், அந்த பாக் மீது கை வைக்க ஆரம்பத்தில் ரொம்பவே தயங்கினான்.. பின் சில நிமிடங்கள் கடந்தும் அவள் திரும்பி வராமல் இருப்பதைப் பார்த்து மெதுவாக அவளது ஹான்ட் பாக் திறந்து எவ்வளவு தேறுமென்று எண்ணினான்.. Candy shop வரை சென்று வருகிறேன் என்று சென்றவளை ஒரு முறை எட்டிப் பார்த்தான்.. இன்னும் அங்கேயே தான் இருந்தாள். அந்த கடையில் பரபரப்பாக எதோ பேரம் பேசி வாங்கிக் கொண்டிருந்தாள்.. அப்போது சற்று உஷாராக, மீண்டும் விட்ட இடத்திலிருந்து எவ்வளவு இருக்கிறதென்று அந்த பணத்தை எண்ணினான்.. அப்போது அந்த பணக்கட்டினுள் ஒரு சின்ன காகிதம் இருந்தது.. அதைப் படித்துப் பார்த்தவனுக்கு அதிர்ச்சி.. அதில்: “இந்த பணம் உனக்கு தான்.. ஆனா இதை எடுத்துக்குறதுக்கு முன்னாடி துரை உனக்கு ஒரு விஷயம் சொல்ல சொல்லிருக்கான்…. அதை தெரிஞ்சிக்க அந்த பாக் எடுத்துட்டு சைலண்டா நான் நிக்குற இடத்துக்கு வா..” என்று எழுதி இருந்தது.. அதைப் படித்தவுடன் அவனுக்குள் ஒரு படபடப்பு ஏற்பட்டது உடனே அவளை பார்க்க முயற்சித்தான்.. ஆனால் அந்த Candy shop அருகே அவளை காணவில்லை.. இருக்கும் குளுரிலும் அவனுக்கு இப்போது வியர்க்க தொடங்கியது.. மீண்டும் அவள் எங்கே இருக்கிறாள் என்று அங்கும் இங்கும் திரும்பி திரும்பி பார்த்தான்.. ஆனால் அவன் பார்வைக்கு அவள் தென்படவில்லை.. அவன் இருக்கும் இடத்தில் இருந்து அந்த candy shop இரண்டு நிமிடமாவது நடந்து செல்ல வேண்டுமென்ற தூரத்தில் இருந்தது.. அப்போது அவன் சூட்கேசுடன் அவளது ஹான்ட் பாகையும் எடுத்து மெதுவாக கூட்டத்துடன் கூட்டமாக நடக்க துவங்கினான்.. அவன் கிட்ட தட்ட மெதுவாக நடந்து அந்த கடை இருக்குமிடம் வறை சென்று விட்டான்.. அவள் எங்கே இருக்கிறாள் என்று அங்கே தேடுகையில் அவனுக்கு பின்னால் இருந்து உரத்த குரலில் ஒரு பெண் “That bastard has taken my hand bag and running away.. please catch him.. please.. he is stealing my bag..somebody please catch him please” என்று அலரி கத்துவது அவன் காதுகளுக்கு கேட்டு அங்கிருந்து ஓடுவதற்குள் டூரிஸ்ட் செக்யூரிட்டி ஆட்கள் அவனை மடக்கி பிடித்தார்கள்.. அப்போது ராகவ் அங்கே என்ன நடந்ததென்று தெரியாதது போல் வந்தான்.. அங்கே உள்ள செக்யூரிட்டி ஆபீசர்கள் இடையே சில நிமிடங்கள் தனியே சென்று சம்பத்தின் IOFI duplicate Identity card காண்பித்து தானும் யார் என்பதை விளக்கி, கேரன் அவனிடம் விளையாட்டாக எதோ செய்த விஷயம் என்றும், அவர்கள் அனைவரும் IOFI ஊழியர்கள்தான் என்று விளக்கி அங்கே சம்பத்தை அவர்களிடமிருந்து விடுவித்து அவனை தனியாக அழைத்து வந்தான்.. அருகே John சம்பத்தின் தோளில் அவனது இரும்பு கைகளை போட்டு அங்கிருக்கும் கூட்டத்துக்கு நண்பர்கள் நடந்துசெல்வதுபோல நடந்து அவன் எங்கும் ஓடாமலிருக்க அவனை ஒட்டி வந்தான். நால்வரும் அந்த அரண்மனை வீதியின் ஓரத்தில் இருக்கும் ஒரு பெரிய வேன் ஒன்றில் ஏறி.. அமர்ந்தார்கள்.. உள்ளே இவர்களின் பிடியில் இருக்கும் சம்பத் என்ன செய்வதென்று தெரியாமல் எப்படியாவது எதாவது ஒரு கதவை திறந்து ஓட முயற்சிக்கும்போது ஜான் அவன் முகத்தில் ஓங்கி ஒரு குத்து விட.. இன்னும் திமுறிக்கொண்டு தப்பிக்க முயற்சித்தான்.. ஆனால் பலன் இல்லை.. என்னதான் காட்டானாக இருந்தாலும், நம்மூர் காட்டான்களுக்கெல்லாம் ஜாம்பவான் போல இருக்கும் ஜானின் பிடியில் அவன் கைகள் பின்புறம் முறுக்கி மடக்கி வைக்கப்பட்டு இருந்தது.. அவன் எவ்வளவு முயற்சி செய்தும் ஒரு இன்ச் கூட அவனுடைய பிடியில் இருந்து நகர முடியவில்லை.. கருப்பு நிற கண்ணாடியை கொண்ட நான்கு கதவுகளும் மூடப்படிருந்ததில் உள்ளே என்ன நடக்கிறதென்று யாருக்கும் தெரியவில்லை.. சம்பத்தின் சத்தமான கூச்சலும் காரின் உள்ளேயே அடங்கியது.. “எதுக்கு என்ன கொல்ல வந்த?” – ராகவ் அவன் கண்களை உத்து பார்த்து கேள்வி எழுப்பினான்.. “அது எனக்கு துரை குடுத்த வேல… அவ்வளோதான்..” – வசமாக மாட்டி இருந்தாலும் மூர்கமான முகத்தோடு திமிரான குரலில்தான் பதில் வந்தது சம்பத்திடமிருந்து … “ஆஸ்பெத்ரியில குமார எதுக்கு துரை கொல்லனும்?…. அன்னிக்கி ராத்திரி அங்க ஒரு வார்டன் டிரஸ்ல காம்பவுண்ட் சுவர் ஏறி குதிச்சி ஓடினது நீதான?..” சம்பத்திடம் ஒரு நீண்ட மௌனம்… ராகவ் ஜானைப் பார்த்து மெதுவாக கண் அசைக்க.. சம்பத்தின் கைகளை கொஞ்சம் அழுத்தமாக முறுக்கினான் ஜான்.. “ஆஹ்ஹ்ஹ்ஹ..” வலியில் கதறினான் சம்பத்.. “சொல்லுறியா?.. இல்ல… உன் கைய முருக்கியே மொத்தமா எடுத்துட சொல்லவா?….” “சொல்றேன் சொல்றேன்..” என்று வலி தாங்காமல் மேலும் தொடர்ந்தான்.. “துரைக்கு ஆஸ்பெத்ரியில குமாரை கொல்லுறதுக்கு நான் தான் எல்லா ஏற்பாடும் பண்ணி குடுத்தேன்.. ஆனா அவன் எதுக்கு குமாரை கொல்லணும்னு எனக்கு தெரியாது..” “ஒரு நாள் நடு ராத்திரி என் கார் பின் புற கண்ணாடியில கல் எறிந்சதும் நீதான?..” என்றான் ராகவ்.. “ஆமா.. எதையுமே நான் செய்யல.. என்னை செய்ய வெச்சாங்க..” “ராகவிடம் ஒரு மௌனம்.. எதோ ஆழ்ந்த சிந்தனையில் இருந்தான்.. சில வினாடிகள் கழித்து.. “எதுக்கு துரை ராத்திரி நேரத்துல குமார கொல்லுறதை நீ ஒழிஞ்சி இருந்து வீடியோ எடுத்து வெச்சிருக்க?” சம்பத்திடம் ஒரு அதிர்ச்சி.. அந்த வீடியோ பற்றி எப்படி ராகவுக்கு தெரியுமென்று எண்ணி அவன் முகம் வேர்த்தது.. “அதெப்படி உனக்கு தெரியும்?.. எந்த வீடியோ பத்தி பேசுற?..” – என்று மீண்டும் எகிறினான் சம்பத்.. “உன் கைய திரும்பவும் முறிக்க வெக்காத…. சீக்கிரம் சொல்லு..” – என்று ஜானைப் பார்த்து ராகவ் மீண்டும் கண் அசைக்க.. ஜான் ஏதும் செய்வதற்குள் சொல்லிவிடலாம் என்று பேச ஆரம்பித்தான் சம்பத்.. “நான் துரை சொன்ன எந்த ஒரு விஷயத்துக்கும் மாட்டேன்னு சொன்னதில்ல.. ஆனா எனக்கு சரியான கூலி தர்றதா சொல்லி ஏமாத்திட்டான்.. அவன் கிட்ட இருந்து எனக்கு வர வேண்டிய பணத்தை வாங்குறது எப்படின்னு புரியல.. அப்போ அவனை மிரட்டுறதுக்கு எனக்கு ஏதாவது ஒரு விஷயம் தேவைப் பட்டுது.. அதுக்காக எடுத்து வெச்ச வீடியோதான் அது..” “இன்ட்ரஸ்டிங்.. ஹ்ம்ம்..” – மீண்டும் சற்று ஆழ்ந்து யோசித்தான் ராகவ்.. “அந்த மரத்துன்டு பத்தி உனக்கு எதாவது தெரியுமா?..” – இந்த கேள்விக்கு ரொம்ப ஆர்வமாக சம்பத்திடம் இருந்து பதிலை எதிர்பார்த்தான் ராகவ்.. “அது…” – என்று சம்பத் சொல்ல ஆரம்பிப்பதற்குள் ராகவின் செல்ஃபோன் சிணுங்கியது.. சங்கீதா நீண்ட நேரம் ஆகியும் ராகவ் எங்கிருக்கிறான் என்று தெரிந்துகொள்ள அழைத்திருக்கிறாள்.. “oh.. my goodness.. John.. my wife is coming towards this place.. I dont want her to see me.. so please have this bastard under your custody, I want to take him alive to India soon.. he is very important to me.. got it?” – என்று அவசரமாக சொல்லிவிட்டு ஜானின் கையில் ஒரு தொகையை குடுத்துவிட்டு அங்கிருந்து நழுவி வேறொரு பக்கமாக சென்று சங்கீதாவின் பின்னால் வந்து நின்றான் ராகவ்..“எங்கடா போயிட்ட பொற்கி.. எவ்வளோ நேரமா தேடிட்டு இருக்கேன்..?.. உனக்கு அக்கறையே இல்ல என் மேல.. போ..” என்று அவள் சிணுங்க.. அப்படியே அவள் உதடில் தன் உதடை பதித்து ப்ச் ப்ச் ப்ச் என்று லிப் கிஸ் செய்து பேசிக்கொண்டே இருந்த அவளது லிப்பை லாக் செய்தான் ராகவ்..
முத்தத்தில் ஆழ்ந்திருக்கும்போது சங்கீதாவின் பின் பக்கம் அந்த வேன் மெல்ல நகர்ந்து செல்வதைப் பார்த்தான்… அப்போது ராகவின் செல்லில் ஒரு எஸ்.எம்.எஸ் வந்தது.. “Dont worry, I will have him with me, come and take him whenever you can – John” என்ற மெசேஜ் பார்த்து சற்று தெம்படைந்து மீண்டும் தன் காதல் மகாராணி சராவுடன் இங்கிலாந்து மகாராணியின் அரண்மனையை சுத்தி பார்க்க பக்கிங்ஹம் பாலஸ் உள்ளே குஷியாக சென்றான் ராகவ்…. (இப்போது அதே நாள்…. லண்டனில் இருந்து நம் தாயகத்துக்கு வருவோம்.. இங்கே நம் வாத்தும் சஞ்சனாவும் என்ன செய்கிறார்களென்று பாப்போம்..) காலையில் எழுந்த போதிருந்தே கார்த்திக்கின் மனமும் உடலும் பரபரப்பாய் இயங்கியது. மனதில் ஓடிய இளைய ராஜாவின் பாடலை ஹம் செய்து கொண்டே தன் லூசான உடைகளை அணிந்து கண்ணாடியில் பெருமை பொங்க தன் அழகை ரசித்தான். வெளியில் கார் ஹாரன் சத்தம் ஒலிக்க, அவசரமாய் கண்ணாடியை பார்த்து தலை வாரிக்கொண்டு, முகத்தை அங்கும் இங்குமாய் திருப்பிப் பார்த்துவிட்டு கடைசியாய் தன்னைப் பார்த்து தானே கண் அடித்து “செமையா இருக்க டா மாப்ள..” என்று கார்த்திக் தன்னைப் பார்த்து சொல்லிக்கொள்ளும் போது ஒரு வேலை அந்த கண்ணாடிக்கு உயிர் இருந்திருந்தால் தன் கண்களை இறுக்க மூடி கூச்சப்படிருக்கும்..!! தான் அணிந்திருக்கும் பான்டுக்கு பெல்ட் போட்டு, ஷூவுக்குள் இரு கால்களையும் ஏனோ தானோ என்று சொருகிக்கொண்டு அவசரமாய் வண்டியில் ஏறினான்.. கார்த்திக் காரில் ஏறியபோது “பொன் மாலைப் பொழுது… இது ஒரு பொன் மாலைப் பொழுது.. வான மகள் நானுகிறாள், வேறு உடை பூணுகிறாள்..” – என்று IOFI Benz வண்டியில் உள்ள ஸ்பீக்கர்களில் நிழல்கள் பாட்டு ரம்யமாக ஒலிக்க, அதற்கு ஏற்ப விரல்களால் தாளம் போட்டுக்கொண்டே ஒரு புது உற்சாகத்துடன் சஞ்சனாவைப் பார்க்க சென்றுகொண்டிருந்தான் கார்த்திக். இன்று கார்த்திக் இவ்வளவு உற்சாகமாக இருப்பதற்கு காரணம் அவன் எனிமி ஊரில் இல்லாத போது சஞ்சனாவுடன் அதிக நேரம் நிம்மதியாய் கடல போடலாமே என்ற சந்தோஷம்தான் வேறென்ன. “ஏன் தம்பி, கேக்குறேன்னு தப்பா நினைக்க கூடாது.. இந்த சைனீஸ் படங்கள்ல வரா மாதிரி லூசா பான்ட் ஷர்ட் போடுறீங்களே? இது உங்க ஊருல ஃபேஷனா?.. இல்ல நீங்க ஏதாவது ப்ரூஸ்லி ரசிகரா? ஹா ஹா..” – ட்ரைவர் தாத்தா கார்த்திக்கை ரியர் வியூ கண்ணாடியில் பார்த்து கிண்டலாய் கேள்வி எழுப்பினார்.. “நீங்க கூட அப்பப்போ சஞ்சனா கிட்ட மொக்கையா கடல போடுறீங்கன்னு கேள்வி பட்டிருக்கேன்.. அது உங்க வாலிப வயசுக்கேத்த கோளாறா Mr.டாம் க்ரூஸ்?.. ஏன் நீங்க முறைப்படி உங்க மனைவி கிட்ட சொல்லி அவளை பொண்ணு கேக்க கூடாது?.. பாவம் அந்த புள்ளையும் தனியாதான சுத்திட்டு இருக்கு.. என்ன நான் சொல்லுறது கரெக்ட் தான..?” – என்று டிவியில் காம்பியரிங் பண்ணும் பெண்களைப் போல கழுத்தை ஆட்டி ஆட்டி நக்கலாய் பேசினான் கார்த்திக். தாத்தா என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் கார்த்திக்கைப் பார்த்து முழிக்க.. சிக்னல் போட்டுடாங்க, சீக்கிரம் வண்டி எடுங்க.. ஹ்ம்ம் ரைட் ரைட்.. என்றான் கார்த்திக்.. “அந்த பொன்னே பரவாயில்ல போல இருக்கே..” என்று முனு முனுத்துக்கொண்டார் தாத்தா.. ஆடிஷனுக்கு காத்திருக்கும் அறைகுறை மாடர்ன் உடை இளம் பெண்களை பார்த்து ரசித்தபடி IOFI வளாகத்துக்குள் நுழைந்தான் கார்த்திக்.. கொய்யால நம்ம தூக்கத்தை கெடுக்க ஒவ்வொன்னும் தனித்தனியா வித விதமா வளத்து உட்டுருக்கானுக என்று அந்த பெண்களை பெற்ற அப்பன் மார்களை திட்டிக்கொண்டே சஞ்சனா இருக்கும் மீட்டிங் ஹாலுக்கு சென்றான். வேர் ஆர் யு என்ற இவனின் எஸ்.எம்.எஸ் க்கு “நான் ஒரு முக்கியமான மீட்டிங்ல இருக்கேன், நீ கொஞ்சம் வெயிட் பண்ணு என்று எஸ்.எம்.எஸ். அனுப்பி இருந்தாள் சஞ்சனா.. அதைப் பார்த்து விட்டு மீட்டிங் நடக்கும் கண்ணாடி அறையின் வெளியே அவளைப் பார்த்தபடி அமர்ந்திருந்தான் கார்த்திக்.. அந்த அறையினுள், ஒரு பெரிய வெள்ளை போர்டில் உலக அளவிலான ரிசஷன் (Recession) என்ற தலைப்பு தெரிந்தது, கூடவே சுமார் இருவதில் இருந்து இருவத்தைந்து வயதுடைய ஸ்டைலீஷான பெண்களும் முன் புறம் உள்ள சொட்டையை சற்றே ஸ்பைக் ஸ்டைல் என்ற பெயருடன் மறைத்து நாகரீகமாக ஜொள்ளு விட்டுக்கொண்டிருக்கும் ஆண்களையும் பார்த்து தனக்குத் தானே சிரித்துக்கொண்டிருந்தான். ஆனாலும் அந்த பெண்களில் சஞ்சனா வித்தியாசமாக ஜொலிப்பதை அவனால் உணர முடிந்தது. ஒரு சில நிமிடங்களில் சஞ்சனா கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்துவிட்டு அனைவரையும் நோக்கி எதோ சொல்ல, ஒவ்வொருவரும் சூடான விவாதத்தில் இறங்கினார்கள்.

No comments:

Post a Comment