Saturday, August 2, 2014

சங்கீதா - இடை அழகி 80


“யு ஆர் மை இன்ஸ்பிரேஷன்கா.. உங்களை ஒரு ஒரு தடவையும் பார்க்கும்போது மனசுல தைரியத்துக்கு வெத போடுறா மாதிரி இருக்குது. அன்னிக்கி ராத்திரி நான்தான் மித்துன் கிட்ட அவ்வளோ தைரியமா நடந்துகுட்டேனானு யோசிச்சி பார்த்தா நம்பவே முடியலகா…. you are the fuel for my guts” – சஞ்சனாவின் பேச்சுக்கு சங்கீதாவின் முகத்தினில் ஒரு புன்னகை மட்டுமே பதிலாக வந்தது. “நான் ஒன்னு கேட்டா தப்பா நினைக்க கூடாது.. சரியா?…” “ஹ்ம்ம்… சொல்லு…” “அதான் ரெண்டு பேரும் லவ் பன்றீங்களே, ஏன் கல்யாணம் பன்னிக்க கூடாது?”
“ஸ்ஹா..” மெளனமாக ஒரு பெருமூச்சு விட்டாள் சங்கீதா.. சில வினாடிகளுக்கு பிறகு பேச தொடங்கினாள்.. “ஐ லவ் ராகவ் லைக் எனி திங்…. அவன் என் வாழ்க்கைல கிடைச்சா அவனை விட நான்தான் பாக்யசாலி, ஏன்னா அவன் என்னை அவளோ லவ் பண்ணுறான், நானும் என் வாழ்க்கைல நிறைய ஆம்பளைங்கள பார்த்திருக்கேன், ஆனா ராகவ் மாதிரி என்னை லவ் பண்ணுற ஒருத்தனை நான் பார்த்ததில்ல, இனிமேலையும் பார்க்கபோரதில்ல.. நிச்சயம் அவனை கல்யாணம் பண்ணிப்பேன் பட் கொஞ்சம் நாள் ஆகட்டும்னு நினைக்கிறேன்..” “ஏன்?.. குமார் விஷயத்தை நினைச்சி சொல்லுறீங்களா?” என்று சஞ்சனா கேட்டதுக்கு மெதுவாக தலை ஆட்டினாள் சங்கீதா.. “எல்லாம் சரி ஆகிடும்கா…” – சங்கீதாவின் தோள்களில் சாய்ந்தவாறு கூறினாள் சஞ்சனா. கார் ராகவின் இடத்தை வந்தடைந்தது.. இருவரும் உள்ளே சென்றார்கள்… தினமும் நாம் வெளியில் செல்லும்போது பலரைப் பார்க்கிறோம், அதில் பார்த்தவுடனேயே பளிச் என்று இருக்கும் ஒரு கலையான முகம், சராசரி உயரம், ஒரு நிமிடம் யோசிக்க வைக்கும் விதமாக சிகப்பு சட்டையும் அதற்கு கொஞ்சம்கூட (கொஞ்சமாக) மேட்ச்சிங் இல்லாத பச்சை நிற பேன்ட் அணிந்து ஹாலில் அமர்ந்திருந்தான் ரகாவின் நண்பன் கார்த்திக். இவர்கள் இருவரையும் பார்த்து சிரித்தான், ஏன் எதற்கு என்று தெரியவில்லை ஆனால் சஞ்சனாவுக்கு அவனைப் பார்த்ததும் ஒரு விதமான சிரிப்புதான் வந்தது.. கிட்டத்தட்ட சென்னை28 படத்தில் வரும் சிவா போல இருந்தான் கார்த்திக். சங்கீதா சஞ்சனாவின் அருகில் சென்று அவள் காதில் “இதுக்குதான் காலைல ட்ரெஸ்ஸிங் டேபிள் முன்னாடி சுத்தி சுத்தி பார்த்து டிரஸ் பண்ணியோ?..” என்று கேட்க.. பரிதாபமாய் ஒரு பார்வையைக் குடுத்தாள் சஞ்சனா.. “ஹாய்.. நீங்கதான் சங்கீதா அண்ட் சஞ்சனாவா? என் எனிமி.. அதாங்க ராகவ் நீங்க வருவீங்கன்னு சொன்னான்..” – பற்கள் தெரிய சிரித்து வரவேற்றான் கார்த்திக். “யேஸ்… நீங்க கார்த்திக்கா?” – என்று சங்கீதா சொல்ல “வாவ்… எப்படிங்க கண்டுபுடிச்சீங்க…” என்று மீண்டும் வசீகரமாக (பற்கள் தெரிய) சிரித்தான். “ஆமா ரொம்ப கஷ்டமான காரியம்பா…” என்று மனதுக்குள் மெளனமாக முனு முணுத்துக் கொண்டாள் சஞ்சனா.. “இதுல யாரு சஞ்சனா, யாரு சங்கீதா?” என்று காலர் ஃபிலாப் சரி செய்து கொண்டே கேட்டான்.. “ஹா ஹா.. நீங்களே சொல்லுங்களேன்…” – மென்மையாக சிரித்துக் கொண்டே கேட்டாள் சஞ்சனா.. “நீங்கதான் சஞ்சனாவா இருக்கணும்.. கரெக்ட்?” – என்று கேள்வி கேட்டவளிடம் உடனே முகம் பார்த்து சொல்ல “எப்படி கண்டு புடுச்சீங்க?” என்று சங்கீதா ஆச்சர்யமாக கேட்டாள்.. “யு சீ… சங்கீதா இஸ் பேங்க் மேனேஜர்னு ராகவ் சொல்லி இருக்கான்… பட் உங்க முகத்தைப் பார்க்கும்போது மேனேஜரா இருப்பீங்கன்னு தோணல அதான் ஈசியா சொல்லிட்டேன்.. ஹா ஹா….” – என்று சொஃபா இருக்கையின் நுனியில் வந்து அகண்ட சிரிப்புடன் கூறினான்.. இந்த கமெண்டுக்கு சங்கீதா சஞ்சனாவைப் பார்த்து சிரித்தாள்.. சஞ்சனாவுக்கு லேசாக முகம் கடுப்பாகியது.. சற்று நேரத்துக்கெல்லாம் ராகவ் இறங்கி வந்தான்.. ஒரு வெள்ளை நிற ஷர்ட் அணிந்து முதல் இரண்டு பட்டன்கள் போடாமல் கார்கோஸ் பேன்ட்டுடன் தலை முடியை வாராமல் அப்படியே கலைத்தவாறு மிகவும் காஷ்வலாக வந்தான். சங்கீதாவுக்கு உண்மையில் அவனது தோற்றம் ஈர்த்தது ஆனாலும் அவன் பார்க்கும்போது வேறெங்கோ பார்ப்பது போல திரும்பிக் கொண்டாள். சங்கீதாவின் ஆடையைப் பார்த்து ராகவ் ஒரு நிமிடம் அப்படியே அவளைப் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டுமென்று எண்ணினான், ஆனால் அருகே சஞ்சனாவும் கார்த்திக்கும் இருப்பதால் கொஞ்சம் தவிர்த்தான். “ஓகே ஃபிரண்ட்ஸ் லெட்ஸ் ஸ்டார்ட்…. என்று சொல்லிக்கொண்டே முந்தைய இரவு கண்ணாடி உடைந்த காரை விட்டுவிட்டு வேறொரு BMW காரை எடுத்தான்…. அதில் நால்வரும் அமர்ந்தார்கள். யாருக்கும் எங்கே செல்கிறோம் என்று சொல்லாமல் வண்டியை ஓட்டினான் ராகவ்.. ஒரு எக்ஸ்ஹிபிஷன் உள்ளே நுழைந்தது வண்டி. வண்டியை ஓட்டும்போது ரியர் வியூ மிரர் மூலமாக சங்கீதாவின் முகத்தை அடிக்கடி பார்த்தான் ராகவ்.. அந்த கண்ணாடியிலேயே “நேரா பார்த்து வண்டிய ஓட்டு” என்று விரலை நீட்டி சொல்லாமல் சொல்லி செல்லமாய் எச்சரித்தாள் அவனுடைய சரா.. வண்டியை ஒரு இடத்தில் நிறுத்திவிட்டு நுழைவு கட்டணம் கட்டி டிக்கெட் வாங்கிக் கொண்டு உள்ளே சென்றார்கள் நால்வரும். அமைதியாய் அனைவரும் நடக்க சஞ்சனா பேச்சை ஆரம்பித்தாள். “கார்த்திக்.. எனக்கு ஒரு கேள்வி…” “சொல்லுங்க சஞ்சனா..” “எதுக்கு ராகவை எனிமின்னு கூப்பிடுற?” “ஒண்ணா ரெண்டா எத்தினி விஷயத்துக்கு என்னை பகொடாவா யூஸ் பண்ணி இருக்கான் தெரியுமா?..” பேசிக்கொண்டே ஒரு ஃபாஸ்ட் புட் சென்டர் அருகே அமர்ந்தார்கள்.. “ஒரு நாள் குவிஸ் ப்ரோக்ராம் இருக்குன்னு சொல்லி என்னை கூட்டிட்டு போனான் பாருங்க..” – அவன் சொல்ல ஆரம்பிக்கும்போது ராகவ் சிரித்தான்.. “சிரிக்காதடா எனிமி… வலி எனக்குதான் தெரியும்…” என்றான் கார்த்திக்..
“ஹா ஹா.. அப்படி என்ன ஆச்சு… சொல்லுங்க கேட்கலாம்..” – ஸ்வாராஸ்யமாக கேட்டாள் சங்கீதா.. “டி.என்.சேஷன் சீஃப் கெஸ்டா வந்தாருங்க.. நேர்ல பார்க்கும்போது இன்னும் உர்ருன்னு இருந்தாரு. அவருக்கு பக்கத்துலதான் எங்க பெஞ்ச்… அந்த ஆளு கூட ஒரு பொன்னும் வந்துச்சி. அவருக்கு கொஸ்டீன்ஸ் எடுத்துக் குடுக்க!.. முதல் ரவுண்டு முழுக்க சைன்ஸ் பத்தி இருந்துச்சி.. ஒரு கேள்விக்கு எங்க ரெண்டு பேருக்கும் பதில் தெரியும்.. ஆனா உஷாரா உடனே என்கிட்டே இருந்து மைக் வாங்கி ரொம்ப ஸ்டைலா ஆன்சர் பண்ணிட்டான். கீழ கிட்டத்தட்ட ரெண்டாயிரம் பேர் ஆடியன்ஸ் இருந்தாங்க.. எல்லாரும் ரொம்ப பலமா கைத் தட்டினாங்க.. அப்போ நான் இவனை கூப்டு அடுத்த கேள்விக்கு பதில் தெரிஞ்சா நான்தான் சொல்லுவேன்னு சொன்னேன்.. இவனும் சரின்னு சொன்னான்.. அதுக்கப்புறம் ரெண்டாவது ரவுண்டு.. மூணாவது ரவுண்டுன்னு கிட்டத்தட்ட இருவது கேள்வி இருக்கும்… எல்லாத்துக்கும் மைக்ல நானேதான் சொனேன்.. “வாவ்.. எல்லாத்துக்கும் நீங்களேதான் பதில் சொன்னீங்களா?” – சங்கீதா சாப்பிடுவதை நிறுத்தி ஆச்சர்யமாக கேட்டாள்.. “அந்த கன்றாவிய ஏங்க கேட்க்குறீங்க? எல்லா கேள்விக்கும் நான் ஒருத்தனே “பாஸ்” ன்னு சொன்னேங்க.. பாவிப்பய அதுக்கு மட்டும் என் கிட்ட மைக் குடுத்துட்டு அவன் கால் மேல கால் போட்டு ஸ்டைலா கூட்டத்துக்கு போஸ் குடுத்துக்குட்டு இருந்தான்.” சஞ்சனாவும் சங்கீதாவும் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு சிரிக்க ஆரம்பித்து விட்டார்கள்….
“இதை விட மோசமா இன்னொரு விஷயம் அன்னிக்கி மேடைல நடந்துச்சிங்க..” “ஹா ஹா… என்ன அது?..” – சங்கீதா சிரித்துக்கொண்டே கேட்டாள்.. “நாலாவது ரவுண்டுல முதல் கேள்வி கேட்டாங்க.. அப்போ இவங்கிட்ட காதுல மெதுவா ஒரு விஷயம் சொல்லலாம்னு வந்தேங்க.. நான் என்னமோ பதில் சொல்ல வரேன்னு நினைச்சி இவனும் சுறுசுறுப்பா என் கைல இருந்த மைக் புடிச்சிகிட்டான். அப்போ….” -சொல்ல வந்து நிறுத்தினான்… “அப்போ… என்ன ஆச்சு சொல்லு..சொல்லு..” – சஞ்சனா மிகவும் ஆர்வமாக கேட்டாள். “லாஸ்ட் மூணு ரவுண்டுக்கும் நாந்தான் ‘பாஸ்’ சொன்னேன்… இந்த ரவுண்டு ஃபுல்லா நீதான் பாஸ் சொல்லணும்னு மெதுவா அவன் காதுல சொன்னேங்க… இந்த பாவிப் பய என் வாய் கிட்ட மைக் வெச்சி இருக்கான்னு எனக்கு தெரியல.. நான் சொன்னது ஸ்பீக்கர்ல கேட்டுடுச்சி… கீழ இருந்த ரெண்டாயிரம் பேரும் எழுந்து நின்னு கை தட்டி எங்களை அசிங்கப் படுத்திட்டாங்க…” – சொல்லி முடித்தவுடன் அவன் முகத்தில் ஒரு விதமான சோகமும் மென்மையான சிரிப்பும் கலந்து சொன்னதில் சஞ்சனவுக்கும் சங்கீதாவுக்கும் குபீரென்று சிரிப்பு வந்து விட்டது… “அந்த ரவுண்டுலேயே அடுத்து ஒரு கேள்விய கேட்டாங்க.. கொஞ்சம் கஷ்டமான கேள்விதான்.. அதுக்கு எல்லா டீமும் பாஸ் சொல்லிட்டாங்க… எங்க மேஜைக்கு மைக் வரும்போது நாங்கதான் நியாயமா பாஸ் சொல்லணும்… அதுக்கு பதிலா வந்த கூட்டமே கோரஸ்ஸா சேர்ந்து சத்தமா ‘பாஸ்’ னு கத்தி க்லாப் பண்ணாங்க….” “ஹைய்யோ.. முடியல கா” என்று சங்கீதாவின் தோள்களில் சாய்ந்து சிரித்தாள் சஞ்சனா.. “சேஷன் கூட உங்கள மாதிரிதான் சிரிச்சிட்டாருங்க… அப்புறம் அவர் கூட இருந்த பொண்ணு ஒரு நிமிஷம் கூட்டத்தை அமைதி படுத்தி.. எங்களை மதிச்சி “உங்களுக்கு ஏதாவது பதில் சொல்லன்னுமா”ன்னு கேட்டுச்சி, கூட்டமும் கொஞ்சம் நாங்க ஏதோ சொல்ல போறோம்ன்னு நினைச்சி அமைதியாச்சு…. “க்லெடியேட்டர் நடு க்ரவுண்ட்ல நின்னுகுட்டு க்லைமாக்ஸ்ல கூட்டத்தை ஒரு நிமிஷம் பார்ப்பான்.. அந்த மாதிரி ஒரு நிமிஷம் அமைதியான அந்த கூட்டத்தை பார்த்துட்டு…. மனசுல வீரத்தை வர வெச்சிகுட்டு லேசா கண்ணுல தண்ணியோட இந்த துரோகி ராகவை சைடுல பார்த்தேன்…. திரும்பவும் நானே …. நானே….. கட்டபொம்மன் கைல வாள் எடுக்குறா மாதிரி அந்த மைக் எடுத்து….” “ஹா ஹா.. ‘பாஸ்’னு சொன்னீங்களா? ….ஹம்மா…”- சிரிப்புக்கு நடுவே சஞ்சனா பேச முயற்சித்தாள்.. ‘ஆமாம்….” – தலையை தொங்க வைத்து பெரும் தியாகம் செய்தது போல சொல்லி முடித்தான் கார்த்திக்.. “ஹா ஹா… கா..கார்த்திக்.. ப்ளீஸ்… கொஞ்சம் பிரேக் குடுங்க ப்ளீஸ்.. ஹம்மா..” – சங்கீதாவால் முடியவில்லை… “இதெல்லாம் கூட பரவாயில்லங்க…. அந்த கூடத்துல என்னை லவ் பண்ண பொன்னும் வந்திருந்தா… அவ எதிர்க்க என் இமேஜ் மொத்தமா டேமேஜ் ஆயிடுச்சிங்க.. அவ என் கிட்ட ஒரு நாலு நாள் பேசவே இல்ல…” – மிகவும் நொந்து சொன்னான் கார்த்திக்.. “ஒஹ் னோ….சோ சேட்..” – என்றாள் சஞ்சனா.. “அப்போ இவன் எனக்கு ஹெல்ப் பண்ணுறேன்னு சொல்லி அந்த பொண்ணு கிட்ட ராத்திரி ஒரு நாலு மணி நேரம் ஃபோன் பண்ணி என்னவோ பேசி இருக்கான்…. காதல்னா என்ன, எப்படிப் பட்டவனை காதலிக்கணும், எப்படி எல்லாம் கஷ்டத்தைப் புரிஞ்சிக்கனும்னு ரொம்ப நேரமா அவ கிட்ட பேசி இருக்கான்… அடுத்த நாள் அவ என் கிட்ட வந்து… “வந்து…” – அவன் சொல்வதற்கு முன்பே சிரிக்க தொடங்கி விட்டாள் சஞ்சனா..“சொல்ல போனா இன்னிக்கி காலைல நானே உன் கிட்ட வந்து ஃபீல் பண்ணாத, ‘நடந்ததை மறந்துடு நான் உனக்கு இருக்கேன்’னு சொல்லலாம்னு நினைச்சேன்டா…. பட் நேத்து ராத்திரி ராகவ் என் கிட்ட பேசினதுல இருந்து எனக்கு உன் மேல இருக்கிறது லவ் இல்ல, வெறும் இன்ஃபாக்சுவேஷன் தான்னு தோணுச்சி… சாரி டா உன் மனசுல தேவை இல்லாம ஆசையா வளர்துட்டேன்… மன்னிச்சிடுடானு சொல்லிட்டா…. அது கூட பரவாயில்ல.. அதுக்கப்புறம் என் கிட்ட ஒரு லெட்டர் குடுத்து அதை இந்த துரோகி கிட்ட குடுக்க சொன்னா… நான் அவ அனுமதி இல்லாமலேயே அதை பிரிச்சி பார்த்தேன்… அதுல அந்த க்ராதாகி இவனை லவ் பண்ணுறேன்னு எழுதி இருந்தா… அதைப் பார்த்து என் பிஞ்சு மணசு எவ்வளோ கஷ்டப் பட்டிருக்கும்? – கவுண்டமணி போல அழுது புலம்பினான் கார்த்திக்.. “ஆக மொத்தத்துல பப்ளிக்கா குவிஸ் ப்ரோக்ராம்ல மானம் போக வெச்சி… காதலியை சேர்த்து வேக்குறேன்னு சொல்லி அவளை கழட்டிவிட்டுடன் இந்த எனிமி…” “ஹா ஹா… ரொம்பவே பாவம்ங்க உங்க நிலைமை.. ஹா ஹா..” – பரிதாபப்பட்டாலும் சிரித்துக்கொண்டே இருந்தாள் சங்கீதா.. “இதெல்லாம் கூட பரவாயில்ல.. ஒரு முக்கியமான எக்ஸாம்.. எப்படியோ கஷ்டப் பட்டு பிட் அடிச்சி பாஸ் பண்ணிடலாம்னு இருந்தேன்… வெற்றிகரமா காப்பி அடிச்சி எழுதியும் முடிச்சிட்டேன்.. ஆனால் நடந்த இந்த ரெண்டு சம்பவத்தையும் நினைச்சி நினைச்சி…”.. நிறுத்தினான்.. “என்ன ஆச்சு சொல்லுங்க…” என்றாள் சங்கீதா..
“வீட்டுக்கு வந்தேங்க… இந்த எனிமி ஃபோன் பன்னான்… ‘எப்படி மச்சி எழுதினன்னு கேட்டான்..’ இருடா கேள்வி எதுவும் நியாபகம் இல்ல.. கொஸ்டீன் பேப்பர் பார்த்து சொல்லுறேன்னு சொல்லி என் பையை திறந்தேன்.. அப்படியே அதிர்ச்சி ஆயிடுச்சிங்க… “ஏன்?..” – என்றாள் சஞ்சனா.. “எக்ஸாம் ஹால்ல இந்த எனிமி பண்ண துரோகத்தை நினைச்சி நினைச்சி டீச்சர் கிட்ட ஏதோ நினைப்புல கொஸ்டீன் பேப்பரை குடுத்துட்டு ஆன்சர் பேப்பரை வீட்டுக்கு எடுத்துட்டு வந்துட்டேன்… அந்த முக்கியமான எக்ஸாம்ல கஷ்டப்பட்டு பிட் அடிச்சும் கோட் அடிச்சிட்டேன்…” – கவலையாக இன்னமும் வலி குறையாதவிதம் பேசினான் கார்த்திக்.. “ஹாஹ்.. ஹம்மா ஹா..ஹா..” – சில நொடிகள் தொடர்ந்து சிரித்து முடித்துவிட்டு சஞ்சனா மெதுவாக அமைதியானாள். “எப்படி இப்படிப் பட்ட ஒரு ஆசாமிய நண்பனா வெச்சிக்குட்டு இருக்கீங்க? எனக்கென்னமோ அவன் ஆபீஸ்ல கூட இப்படி பலரை முட்டாளாக்கிதான் CEO ஆகி இருப்பான்னு தோணுது…” என்றாள் சங்கீதா.. “ஆஹா.. கரெக்டா சொன்னீங்க சங்கீதா.. கரெக்டா சொன்னீங்க…” “அப்படியா?…. சரி நான் ஏன் இவனை வாத்துன்னு கூப்பிடுறேன்னு உங்களுக்கு கேட்கவே தோணலையா? என்று ராகவ் சிரித்துக் கொண்டே சொல்ல.. “ஆஹா…. ஆரம்ச்சிட்டியாடா” என்று முணுமுணுத்துக்கொண்டே நொந்துகொண்டான் கார்த்திக்.. சஞ்சனா “ஏண்டா அவனை வாத்துன்னு கூப்பிடுற..” என்று உற்சாகமாய் கேட்க.. “அட அதை ஏங்க கேட்க்குறீங்க?… வேணாங்க… ஃப்ரீயா விடுங்க.” – நெத்தியில் முடி ஆட சீரியஸான பார்வையில் முகத்தை ஆட்டி ஆட்டி சொன்னான் கார்த்திக்.. “இன்னுமா நீ அதை கண்டு புடிக்கல” என்று ராகவ் கேட்டதுக்கு சஞ்சனா குழம்பினாள். “ஹா ஹா.. அவன் காலைப் பாரு..” என்று காமித்தான்.. காலின் ஹீல் பகுதியில் அவனுடைய ஷூ ஒரு அறை இன்ச்க்கு லூசாக இருந்தது. அதைப்பார்த்த உடனே வாயில் கை வைத்து மெதுவாக சிரித்தாள் சஞ்சனா.. “சின்ன வயசுல இருந்தே அவன் அம்மா அவனை அப்படி பழக்க படுத்திட்டாங்க.. எதுவுமே டைட்டா இல்லாம கொஞ்சம் லூசா இருக்கணும்னு சொல்லி சொல்லி ஷூ கூட லூசா தான் போடுவான்.” பேன்ட் ஷர்ட் கூட லூசா போடலாம்.. ஆனால் ஷூவ லூசா போடுற ஒரே ஆளு இவன்தான்.. இப்படி போட்டுட்டு நடக்கும்போது அவன் காலுக்கு கீழ வர சத்தமே செம காமெடியா இருக்கும்…. அதுலயும் இந்த ஷூ போட்டு அவன் மார்ச் பாஸ்ட் பண்னான் பாரு.. ஹா ஹா.. ஒரு இண்டிபெண்டன்ஸ் டே அன்னிக்கி இவனை சஸ்பென்ட் பண்ணிட்டாங்க… ஹா ஹா..” – ராகவ் சொன்ன உடனே சங்கீதா “ஷூவுக்காக சஸ்பென்டா?….” என்றாள்.. “ஷூக்காக சஸ்பென்ட் பண்ணல, அந்த ஷூ போட்டு அவன் செஞ்ச ஒரு காரியத்துக்குதான் சஸ்பென்ட் பண்ணாங்க..”.. அதற்க்கு சங்கீதா சிரித்துக்கொண்டே “ஹா ஹா…அப்படி என்ன செஞ்சிட்டான்..” – என்று ஆர்வமாய்க் கேட்டாள். “மச்சி.. அதை சொல்லியே ஆகணுமா?… மொத்தமா டாமேஜ் ஆயிடும்டா…வேணாண்டா…” என்று கொஞ்சலாக கெஞ்சினான்.. “ஏய்.. நீ இரு…இரு… ஹ்ம்ம் சொல்லு ராகவ்.. இட்ஸ் இன்ட்ரஸ்டிங்….” என்று சஞ்சனா கார்த்திக்கை வாயடைத்து ராகவை பேசச்சொல்ல.. ராகவ் “சொல்லிடவா மச்சீ…..” என்று நக்கலாய் மெதுவாக இழுத்து சொன்னான்..

No comments:

Post a Comment