Wednesday, August 6, 2014

சங்கீதா - இடை அழகி 88


“அதை விட நீ ரம்யா கிட்ட உன் ராஜினாமா கடிதத்தை குடுப்பன்னு நான் நினைச்சி கூட பார்க்கல சரா..” “நான் ஏற்கனவே முடிவு பண்ண விஷயம்தான் டா அது.. Mr.வசந்தனுக்கும் என் நிலைமை நல்லாவே தெரியும். அவரும் ஒத்துக்குட்டார்.. அதோட இனிமே எனக்கு எதுக்கு பேங்க் எல்லாம்..?.. எனக்கு என் உலகமே இந்த பொருக்கிதான்.. அந்த அழகு பிசாசோட கம்பெனிக்குத்தான் நான் இனிமேற்கொண்டு ஃபைனான்ஸ் மேனேஜர்..” – ராகவ் மீது சாய்ந்து அவன் கன்னங்களின் மீது தன் கன்னம் உரச சந்தோஷமாய் பேசினாள் சரா..
“நம்ம பசங்களை அவங்க ரெண்டு தாத்தா பாட்டிகளும் போட்டி போட்டு பார்த்துக்குறேன்னு சொல்லி நம்மள வழி அனுப்பி வெச்சுட்டாங்க…இருந்தாலும் பசங்க ஞாபகமாவே இருக்குடா…” என்றாள் சரா.. “ஹேய் சரா…. குழந்தைங்க ரொம்ப நாளா ஏங்கிக்கிட்டு இருந்த பாசம் அவங்களுக்கு கிடைச்சு இருக்கு…அவங்க சந்தோஷமா இருப்பாங்கடா… கீழ லேண்ட் ஆனதும் போன் பண்ணி பேசலாம் சரியா…”என்றான் அன்பாக அவள் தலையை தடவியபடி… அப்போது முன் சீட்டில் ஓரு குழந்தை எக்கி பிடித்துக்கொண்டு.. கையில் உருட்டி வைத்த வெண்ணை உருண்டை போன்ற தலையுடன் வாயில் ஜொள்ளு விழ தன் சிறிய பொக்கை வாயை காட்டி “ஹேஹ்ஹே” என்று அழகாய் சிரித்தது.. “ஹா ஹா.. அந்த வெள்ளகார குழந்தை “பேபீஸ் டே அவுட்” படத்துல வர்றா மாதிரியே க்யூட்டா இல்ல?…” – ஆசையாய் அந்த குழந்தையின் பூ போன்ற கன்னத்தை தடவி பார்த்தாள் சரா…. “நமக்கு பொறக்க போற குழந்தை கூட இப்படிதான் இருக்கும், உன்ன மாதிரியே அமுல் பேபி மாதிரி…… ஹா ஹா..” “ஏற்கனவே என்ன மாதிரி ஒரு பையனும், உன்ன மாதிரி ஒரு பொன்னும் இருக்குதுங்க… வேணும்னா கார்த்திக் மாதிரி ஒரு சமத்து பையனை பெத்துகலாம்… ஹா ஹா..” என்று சிரித்தாள்.. “ஹாஹ்ஹா… ஹா..ஹா..” – கார்த்திக் பற்றி சரா பேசும்போது ராகவ் அவனை எண்ணி சிரித்துக்கொண்டிருந்தான்.
“ஏய்.. எதுக்கு இப்போ சிரிச்ச?.. அந்த குழந்தைய பார்த்தா?..” -குழப்பத்தில் கேட்டாள் சரா.. “அது ஒன்னுமில்ல…. தாலி கட்டி முடிச்ச பிறகு கார்த்தி உன் கிட்ட சொன்னத நினைச்சி சிரிச்சேன்..” “ஹா ஹா.. அவன் ஒரு அராத்து…. அதுலயும் சொல்லும்போது முகத்தை சீரியஸ்ஸா தொங்க போட்டு ஏதோ சொன்னான்…. ஆமா அவன் என்ன சொன்னான்..? மறந்துடேன்டா.. ஹா ஹா – என்று சங்கீதா சிரிக்கும்போது ராகவ் “வாவ் ஹணி…. க்ளாசிக் ஸ்மைல்டி.. திருப்பி அதே மாதிரி சிரி… ப்ளீஸ் ப்ளீஸ்… வின்டோ வெளிச்சத்துல சைடு ஃபேஸ்ல உன் சிரிப்பு அவ்வளோ நெச்சுரலா ரொம்ப அழகா இருந்துச்சிடி… நான் ஒரு ஃபோட்டோ எடுக்குறேன்டி… சிரி சிரி….” என்று ராகவ் தனது சிறிய டிஜிட்டல் கேமராவை எடுக்கும்போது….. “ஹைய்யோ… போடா… வர வர சும்மா இதே வேலையா போச்சு உனக்கு.. க்ஹ்ம்…” கிளிக்.. கிளிக்… என்று சங்கீதா வெட்கப்படும்போது ராகவ் அவளது சிவந்த கன்னங்களுடன் கூடிய சிரிப்பை கிளிக் செய்து கொண்டான்… “ஏய்.. சரி… முதல்ல கேட்டதுக்கு பதில் சொல்லு…. அவன் ஏதோ சொன்னானேடா… என்ன சொன்னான்..” “அது ஒண்ணுமில்ல “உங்கள மாதிரி நாலஞ்சு அழகான பொண்ணுங்களுக்கு என் அக்கா தங்கையா இருக்குற பாக்கியம் கிடைச்சி இருக்கு.. ஆனா… உங்களுக்கு அந்த பாக்கியம் கிடைக்கல” அப்படின்னு சொல்லிட்டு அமைதியா இருந்தான்…. நான் கூட எதுக்கு இவன் இவளோ ஃபீல் பண்ணி பேசுறான்னு யோசிச்சேன், அப்புறும் மெதுவா நெஞ்சுல கை வெச்சி “கன்ஃஃப்யூஸ் ஆகாதீங்க.. நீங்க அதை விடவும் உயர்ந்த அண்ணி ஸ்தானத்துக்கு போய்டீங்கன்னு சொல்ல வந்தேன்னு சைலன்டா சொல்லிட்டு சஞ்சனா கிட்ட போய் ஏதோ கடல வருத்துகுட்டு இருந்தான்….” “ஹா ஹா….” – ராகவ் சொன்னதை கேட்டு சங்கீதா எதேச்சையாக சிரிக்க மீண்டும் கிளிக்…. கிளிக்…. கிளிக்….என்று ராகவ் கேமரா அவளின் அழகான சிரிப்பை விழுங்கிக்கொண்டது… “அச்ஹோ.. போதுன்டா…” “வீ கைன்ட்லி ரெக்வஸ்ட் ஆல் தீ பாசன்ஜர்ஸ் டூ ஃபாஸ்டன் யுவர் சீட் பெல்ட்ஸ் ப்ளீஸ்… வீ ஆர் நியரிங் ஹீத்றோ ஏர்போர்ட்” என்று சிறிய போனி டைல் போட்டு குட்டை பாவாடை அணிந்து ராகவுக்கு ரெட் ஒயின் குடுத்த அதே அழகான விமான பணிப்பெண் மைக்கில் ஆங்கிலத்தில் உச்சரிக்க அனைவரும் அவர்களது சீட் பெல்டை அட்ஜஸ்ட் செய்து கொண்டனர்…. விமானம் தரையை நெருங்க நெருங்க சங்கீதாவின் எக்சைட்மென்ட் அதிகம் ஆனது.. அவள் வாழ்வில் இதுதான் முதல் அயல்நாட்டு பிரயாணம்.. முதல் முதலில் பார்க்கும் பிரிட்டிஷ் வெள்ளைகாரர்கள், ஒய்யாரமான ஆங்கில பெண்கள், அவர்களின் கொலேக்கியல் ஆங்கில உச்சரிப்பு.. (அதாவது…மூச்சு விடாம சரசரசரன்னு தொடர்ந்து இங்கிலீஷ் படத்துல பேசுறாங்களே.. அதான்..) தரை இறங்கியபின் விமான நிலையத்துக்குள் இருக்கும் உயர்ரக அலங்காரங்கள் ஆகியவற்றை பார்த்துக்கொண்டே இம்மிக்ரேஷனில் அவளது பாஸ்போர்ட் வீசா விவரங்களை சரி பார்க்கும் பணிப்பெண் முதல், தனது சூட்கேசை கன்வேயர் பெல்டில் இருந்து எடுக்கயில் வெண்மையான வழுவழுப்பான முகத்தில் பிரவுன் நிற புருவங்களை அம்பு போல் வைத்து அழகான ஸ்கர்ட் அணிந்த டீன் ஏஜ் பெண்களையும், சற்றே வயது முதிர்ந்த பெண்கள் மெதுவாக நடக்காமல் வேகமாக சுறு சுறுப்பாய் ஓடுவதையும், ராகவ்தான் உயரம் என்று எண்ணியவளுக்கு அங்கிருக்கும் பணியாளர்கள் ஒவ்வொருவரும் ராகவைக் காட்டிலும் ஓரடி உயரமாக இருப்பதையும் கண்டு ஆச்சர்யமானாள்.. விமான நிலையத்தை விட்டு வெளியே வந்ததும் பொன் நிற வெளிச்சத்தில் மாலை நேரம் கொஞ்சம் கொஞ்சமாய் மிக அழகாக டாட்டா சொல்லிக்கொண்டிருந்தது… அப்போது அடித்த ஜில்லென்ற காற்று அவளுடைய கண்ணன்களை கொஞ்சம் இறுக செய்தது உடல் முழுக்க சிலிர்க்க வைத்தது.. அந்த சிலிர்ப்பை ராகவின் கைகளை இருக்கி அணைத்தபடி ரசித்துக்கொண்டிருந்தாள் சரா.. அந்த ஏழு நட்சத்திர ஓட்டலின் வண்டி வருவதற்கு சற்று தாமதம் ஆனதால் ராகவ் ஏர்போர்ட் உள்ளேயே ஒரு வண்டியைப் பார்த்து அழைக்க, திடீரென ஆஞ்சநேயர் வாயை போல மிகவும் பெரிய பானட்டுடன் வந்த கம்பீரமான கருப்பு நிற டாக்ஸியில் இருவரும் ஏறினார்கள். “குட் ஈவினிங் மேம்…. சார்…. டூ யூ ஹாவ் தீ அட்ரஸ் வித் யூ?” என்று டாக்ஸ்ஸி டிரைவர் சொல்வது வண்டியின் உள்ளுக்குள் இருக்கும் தடிமனான தடுப்பு கண்ணாடியை தாண்டி ராகவ் சங்கீதா அமர்ந்திருக்கும் இருக்கைக்கு பக்கத்தில் உள்ள ஸ்பீக்கரில் கேட்டது…. உடனே ராகவ் தனது வாலட்டில் இருந்து அந்த ஏழு நட்சத்திர ஓட்டலின் பெயரை காண்பித்ததும் டிரைவர் உதடுகளின் இரு முனைகளும் கீழிறங்கி மறு நொடி புருவங்கள் இரண்டும் நன்றாகவே உயர்ந்து…. போகும் சாலை யாவிலும் இரு புறமும் உள்ள வீடுகளின் வெளிப்புற சுவர்கள் செங்கர்களால் அடுக்கி வைக்கப் பட்டதுபோல வடிவம் கொண்டிருப்பதையும், ஒவ்வொரு வீடுகளும் ஒரே அமைப்பின் படி வரிசையாய் இருப்பதையும், ஆங்காங்கே பிசியாக வண்டிகள் ஓடும் சாலைகளில் கூட ட்ராம் ஓடுவதையும், கூடவே சிகப்பு நிறத்தில் டபுள் டெக்கர் பஸ்கள் ஓடுவதையும், மாலைப்பொழுதில் ஸ்டார்பக்ஸ் (STARBUCKS) காஃபி நிலையத்தில் வீடு திரும்பும் எக்ஸிக்யூட்டீவ்ஸ் கழுத்தில் பாதியாய் தளர்த்திய டையுடன் ஒரு கையில் தங்களின் கோட் தொங்கிக்கொண்டிருக்க மற்றொரு கையில் காஃபியை வாங்கிக்கொண்டு ட்ரெயின் பிடிக்க ஓடுவதையும் சற்றும் குனியாமல் நிமிர்ந்தவாறு அனைத்தையும் பார்த்துகொண்டிருந்தாள் சரா….
சற்று நேரம் கழித்து…… உலகில் உள்ள அனைத்து நாடுகளில் இருந்தும் ஒரு சில முக்கிய புள்ளிகளான ஃபேஷன் ஜாம்பவான்கள் வந்திறங்கிய இங்கிலாந்தின் மாபெரும் நட்சத்திர ஓட்டலான க்ரோவேனார் ஹவுஸ் முன்பு ராகவ் சங்கீதாவை அழைத்துவந்த ஹோட்டலின் டாக்ஸி கம்பீரமாய் வந்து நிற்க, வெள்ளை நிற க்ளவுஸ் அணிந்து ஓட்டலின் செக்யூரிட்டி உடனடியாக வந்து கதவை திறந்து வரவேற்றார். உள்ளே சென்றவுடன் ரிசப்ஷன் லாஞ்சில் தனது IOFI உதவியாளரை ஒரு நொடி ராகவ் தேட.. பின்னாடியிலிருந்து “வெல்கம் பாஸ்…. ஹாய் மேம்” என்றழைத்தபடி பளீரென வந்து நின்றான் ஸ்டீவ்.. முப்பதை நெருங்கிக்கொண்டிருக்கும் இந்த இளைஞன் IOFI யின் லண்டன் பிராஞ்ச் இன்சார்ஜ்.. “ஹேய் ஸ்டீவ்.. ஹவ் இஸ் எவரிதிங்?” – உற்சாகமாய் கை குலுக்கி பேச ஆரம்பித்தான் ராகவ்.. வெளிநாட்டு வியாபாரங்களை பொருத்தவரை மற்ற நாடுகளில் உள்ள IOFI சீனியர் மேனேஜர்களைக் காட்டிலும் ஸ்டீவ் என்றுமே அவன் மார்கெட்டிங் புத்திசாலித்தனத்தால் ராகவின் மனதை அதிகம் கொள்ளை கொண்டவன்..“க்ரேட் சார்.. நம்ம காஸ்ட்யூம்ஸுக்கு நாலு நல்ல யுரோப்பியன் மாடல்ஸ் ஸ்கிரீன் டெஸ்ட் பன்னி ச்சூஸ் பண்ணி இருக்கேன்.. ஒவ்வொருத்தரும் நல்ல உயரம், ஃபேஸ் கட், உடல் வாகு உள்ளவங்க.. ரொம்பவும் ஹைலி பேய்ட் காஸ்ட்லி மாடல்ஸ் பாஸ். அதுலயும் “கேரன் வில்லட்” ரொம்பவும் டிமாண்ட் உள்ள மாடல்… அவளைத்தான் நாம யூரோப்பின் IOFI பிரான்ட் துணிகளுக்கு முக்கிய மாடலிங் செய்ய ஒப்பந்தம் செய்யணும் பாஸ்.. இவளுக்கு கொஞ்சம் மர்லின் மன்றோ சாயல் அதிகம்… அதான் அவளுடைய ஸ்பெஷல்…” என்று ஸ்டீவ் சொல்லும்போது அனைத்தையும் கவனமாய் கேட்டுக்கொண்டான் ராகவ்.. இவங்க நாலு பேரையும் நம்ம IOFI பிராண்ட் டிரஸ் போட்டு கேட் வாக் பண்ண வெக்குறதுக்கு அடிச்சி புடிச்சி புக் பன்னி இருக்கேன். ஷோ முடிஞ்சதும் இவங்களுக்கு ஸ்பாட் பேமன்ட் ச்செக்ல குடுத்துடனும். ப்ரோக்ராம் லிஸ்ட் இதுதான்..” என்று அந்த விழாவில் டிசைனர்களின் வரிசையை காண்பித்தான் ஸ்டீவ்.. “ஏன் நம்ம பிராண்ட் கடைசியா வருது..?” – குழப்பத்தில் கேட்டான் ராகவ்.. “பாஸ்.. ஒன்னு.. எல்லாத்துக்கும் முன்னாடி முதல் ஷோவா இருக்கணும்.. இல்லைன்னா கடைசியா இருக்கணும்.. நடுவுல வர்றத அவ்வளோவா பலரும் கண்டுக்க மாட்டாங்க…. நானேதான் இந்த ஸ்லாட் வேணும்னு இந்த ப்ரோக்றாம் ஆர்கனைசர் கிட்ட கேட்டு வாங்கினேன்.. கூடவே கொஞ்சம் லைட்டிங் எப்ஃபக்ட்ஸ் இருக்கணும்ன்னு எக்ஸ்ட்ரா பேமன்ட் கூட பன்னி இருக்கேன்.. யூரோப் பொருத்தவரைக்கும் பெண்களுக்கு நம்முடைய உள்ளாடைகள் (Lingerie), ஸ்கார்ட்ஸ், பார்ட்டி வேர் லாங் கவுன் அப்புறம் நைட் வேர்.. இது நாலும் நம்முடைய IOFI பிராண்ட் பொருத்த வரைக்கும் நல்ல அங்கீகாரத்துல இருக்கு. கூடவே முக்கியமான நாலு சிட்டி.. அதாவது க்லாஸ்கோவ், பர்மிங்ஹம், எடின்பறா, லண்டன் போன்ற இடத்துல இதோட சேல்ஸ் ரொம்ப அதிகம். மேடைல மாடல்ஸ் நடந்து வந்த பிறகு கடைசியா நீங்க அவங்க நாலு பேர் கூடவும் சேர்ந்து கூட்டத்தை பார்த்துட்டு போய்டணும். வழக்கமா எல்லா பிராண்ட் ஒனர்களும் கடைசியா மேடையில செய்யுற கலாச்சாரம் தான் இது.. ஒன்னும் புதுசு கிடையாது… அப்போ நீங்க போட்டுக்க வேண்டிய கிராண்ட் ப்லாக் சூட்டும் தயார் பண்ணிட்டேன். கூடவே இந்த விழாவோட ஸ்பெஷால் என்னன்னா Micheal Adams வந்திருக்கார்.. FTV னுடைய ப்ரோப்பரேடர். அது மட்டுமில்லாம அவர் சேனல்ல நம்ம IOFI பிராண்டுக்கு ஒரு ஸ்பெஷால் வீடியோ கவரேஜ் கூட இன்னிக்கி இருக்கு…. ஸ்டீவ் எடுத்துக்கொண்ட சிரமங்களுக்கு வார்த்தைகளால் பாராட்டாமல் ஒரு அழுத்தமான கைகுக்ளுக்களையும் வசீகரமான சிரிப்பையும் பதிலாய் குடுத்தான் ராகவ்.. “ப்ளீஸ் கம் ராகவ்,,, ரொம்ப சாரி நான் இங்கயே நிக்க வெச்சி உங்களுக்கு எல்லாத்தையும் விளக்கிட்டேன்.. ப்ளீஸ் கம் மிஸ்??..” – பெயர் தெரியாமல் ஸ்டீவ் நிற்க.. “ஷி இஸ் மை ஒய்ஃப் மிசஸ். சங்கீதா ராகவ்.. – என்று சராவை அணைத்தபடி ஸ்டீவுக்கு அறிமுகப்படுத்தி புன்னகைத்தான் ராகவ்.. “யுவர் ப்ரசன்ஸ் இஸ் அவர் ஹானர் மேடம்.” – என்றான் ஸ்டீவ்.. ராகவ், ஸ்டீவுக்கு சங்கீதாவை அறிமுகப்படுத்தும்போது “மிசஸ்.சங்கீதா ராகவ்” என்று அவன் சொன்னதை கேட்கையில் சங்கீதாவின் மனதுக்குள் ஒரு இனம் புரியாத சந்தோஷம். அது அவளின் முகத்தில் வெளிப்படும் சிரிப்பில் தெரிந்தது. ஸ்டீவ் வேகமாக நடக்கையில் ராகவ் உடனே அவனை அழைத்து அவன் காதில் ஏதோ சொல்ல.. ஸ்டீவ் “ஓகே.. ஓகே.. சாரி.. இந்த பக்கம் வாங்க..” என்று சிரித்துக்கொண்டே ஒரு டீலக்ஸ் ரூமுக்கு அவர்களை அழைத்துசெல்லும்போது சங்கீதா ராகவின் கைகளை அழுத்தி கோத்தபடி நின்றிருந்தாள், அப்போது யாருக்கும் தெரியாமல் மெதுவாக ராகவை கிள்ளினாள்.. அவுச்… வலிக்குதுடி… ஏன் கில்லுற?.. – ராகவ் காற்று கலந்த குரலில் மெதுவாக கேட்க… “அவன் கிட்ட என்ன சொன்ன?… ஏன் அவன் சிரிக்கிறான்…?” – ராகவ் ஏதாவது தில்லுமுல்லு வேல செய்வான் என்ற எண்ணத்தில் சிரித்துக்கொண்டே கேட்டாள் சங்கீதா.. “அதெல்லாம் ஒன்னும் இல்ல நீ சும்மா வா…” – என்றான் ராகவ்…. உண்மையில் அவளுக்கு அன்று இரவு இவர்கள் தேன்நிலவு கொண்டாடும் முக்கியமான அறையை காமிகாமல் இருக்கத்தான் ராகவ் இவளை தற்போது வேறொரு சாதாரண ரிலாக்சிங் அறைக்கு அழைத்து சென்றான்…. நடந்து போகும் பாதை யாவிலும் மேற்புரம் அழகிய ஆர்ச் வடிவில் சுவர்கள் அலங்காரம் செய்யப்பட்டு சிறிய வடிவில் கண்ணாடி சான்ட்லியர் விளக்குகள் சீராக தொங்கப்பட்டிருந்தன. பாதை முழுக்க ஆங்கிலேயர்களின் பழைய காலத்து பாரம்பரிய வயலின் மற்றும் பியானோ இசை காதை வருடிக்கொண்டிருந்தது…. “ஹியர் யு கோ சார்….” என்று ஸ்டீவ் ராகவ்கு ஒரு அறையை திறந்து வைத்து அவர்களுடைய பெட்டிகளையும் உள்ளே தானாக வந்து அடுக்கி வைத்துவிட்டு சார் இன்னும் ரெண்டுமணி நேரத்துல தயாராகிடுங்க.. ஷோ ஆரம்பிச்சிடும். என்று சொல்லிவிட்டு அவசரமாக மற்ற வேலைகளை கவனிக்க ஓடினான் ஸ்டீவ்… அப்போது ஒரு நொடி நின்று “பாஸ்…” என்று ராகவை அழைத்தான். “எஸ் ஸ்டீவ்…” – சங்கீதாவுடன் சற்று நேரம் தனிமை கிடைக்கபோகும் சந்தோஷத்தில் சிரித்துக்கொண்டே உற்சாகமாய் இருந்தான் ராகவ்…. “எத்தினி பேர் இருந்தாலும் நம்ம ஷோ எல்லார் கண்ணையும் நிச்சயம் பறிக்கும்…. குட் லக் பாஸ்….” “ஹா ஹா.. கண்டிப்பா ஸ்டீவ்..” ஸ்டீவை வழி அனுப்பிவிட்டு உடனே கதவை சாத்தி விட்டு உற்சாகமாய் உள்ளே வந்தான் ராகவ்.. முகம் பார்க்கும் கண்ணாடியின் முன் தன் சராவை ஓடிப்போய் பின்னடியிருந்து அழுத்தி கட்டி அணைத்தான் ராகவ்… ஹேய்ய்…. அய்யா இதுக்குதான் ரொம்ப நேரமா காத்துட்டு இருந்தீங்க போல தெரியுது… – ராகவின் இறுக்கமான பிடிப்பில் சந்தோஷத்துடன் கண்ணாடியில் அவன் முகத்தைப் பார்த்து சிரித்தபடியே கேட்டாள் சங்கீதா.. பின்ன என்னவாம்?…. கல்யாணம் ஆகி ஒரு மாசம் ஆச்சு.. இன்னிக்கி வரைக்கும் உன்னை நான் கிஸ் மட்டும்தான் பண்ணி இருக்கேன்.. அதுவும் கன்னத்துல மட்டும்தான்…” “ஹா ஹா.. பார்வைய பாரு….” – ராகவின் கண்களில் அந்த விளையாட்டான சோக பார்வையை சிரித்துக்கொண்டே உணர்ந்தாள் சரா…. சராவின் இடுப்பை ராகவ் பின்பக்கமிருந்து நின்றவாறு அழுத்தமாய் கட்டி இருக்க, அவள் தன் கரங்களை எடுத்து கண்ணாடியைப் பார்த்துக்கொண்டே ராகவின் பின்புற தலை முடியை தடவி மெதுவாய் பேசினாள்.. “கொஞ்ச நாளா நான் அந்த விஷயத்துக்கு மனசளவுல தயாராகாம இருந்தேண்டா செல்லம்.. உனக்காக வரேன்னு சொல்லிட்டு உன் கூட கட்டில்ல இருந்தா நீ மட்டும்தான சந்தோஷமா இருப்ப?…. ஒரு நாள் அது கூட எனக்கு பரவாயில்லன்னு நினைச்சி என் செல்லத்தோட சந்தோஷம்தான் முக்கியம்னு நான் வந்தப்போ எவ்வளவோ நான் சிரிச்சி சந்தோஷமா பேசியும் எனக்கு இன்னும் அந்த விஷயத்துல மணசு முழுசா ஒத்து போகலைன்னு என் கண்ண பார்த்தே கண்டு புடிச்சி உனக்கும் எப்போ என் கூட அந்த சுகம் அனுபவெக்கலாம்னு தோணுதோ அப்போவே நாம சேரலாம்னு சொன்ன ஸ்வீட் பொருக்கிடா நீ… இன்னிக்கி வரைக்கும் என் வாழ்கைல நான் அதிகம் நேசிச்சது என் குழந்தைகள தான்… அத விடவும் பைத்தியமா நான் இந்த உலகத்துல நேசிக்குற ஒரே விஷயம் இந்த பொருக்கி புருஷன தான்..” என்று அவன் கண்ணத்தில் செல்லமாக தட்டிவிட்டு “ப்ச் ப்ச் ப்ச்..” என்று அவன் காதினில் மென்மையாக முத்தம் குடுத்தாள்…. “இன்னைக்கு இந்த குழந்தைக்கு எல்லாத்தையும் ஒன்னு விடாம ஒரு குறையும் வெக்காம குடுக்கபோறேன்… ப்ச்.. ப்ச்.. ப்ச்..” – ராகவின் கண்ணத்தில் தன் இதழ்களால் அழுத்தி முத்தம் குடுக்கையில் அவனது உஷ்ணம் சற்று அதிகம் ஆனது.. உடனடியாக அவளின் இடுப்பை திருப்பி தன் பக்கம் பார்க்கவைத்து இன்னும் இறுக்கமாக அனைத்து அவளது கன்னங்களில் ப்ச்.. ப்ச்.. ப்ச்.. ப்ச்.. என்று முத்த மழை பொழிந்து அவளது இதழில் தன் இதழை அழுத்தி அவனுக்காகவே பிறந்த சராவின் உதட்டை சுவைக்கையில் ராகவின் திரண்ட தோள்களை அழுத்தி அவனது மிருதுவான மீசை முடி அவளது மென்மையான உதடுகளில் உரசுவதை ரசித்தபடி அவனது ஆண்மையை சற்று மெதுவாக மூச்சு வாங்க அனுபவிக்க ஆரம்பித்தாள் சரா..
“ஸ்ஸ்ஹ்ஹா… ராகவ்….” – ராகவின் தோள்களை அழுத்தி நேராக பார்த்து.. “இன்னிக்கி நானே கேக்குறேன்… எனக்கு எல்லாமே வேணும்.. உனக்காக சொல்லல.. மனசார ரொம்ப ஆச படுறேன்…. “ஐ லவ் யு டா…. என்ன மொத்தமா எடுத்துக்கோ.. ப்ச் ப்ச்…” மீண்டும் இரு இதழ்களும் விளையாட ஆரம்பிக்கையில் “கிர்ர்ர்” என்று அவர்கள் அறையில் சத்தம் கேட்டது.. “ச்ச..” என்று அலுத்துக்கொண்டே ராகவ் தன் அறை கதவை திறந்தான்.. “டிஸ்டர்ப் பன்னி இருந்தா ரொம்ப ரொம்ப சாரி சார்.. யூரோப் ஃபேஷன் மீடியா ஃபோட்டோக்ராஃபர்ஸ் எல்லாம் வந்துட்டாங்க.. அப்புறம் உங்க டேபிள் நம்பர் 71. டேபிள் மேல நேம் போர்ட் டிஸ்ப்ளே இருக்கும் சார்.. நீங்களும் உங்க மிஸ்சஸ்ஸும் கீழ ஃபங்ஷன் ஹாலுக்கு வரும்போது நான் உங்கள அழைச்சிட்டு போக வருவேன்.. அந்த என்ட்ரன்ஸ் வெறும் ஃபங்ஷன் வி.ஐ.பி யாரெல்லாம் இருக்காங்களோ அவங்களுக்கு மட்டும்தான்.. அதான் இப்போவே சொல்லிடலாம்னு வந்தேன்.. நானே இன்னொரு ஒரு மணி நேரத்துக்கெல்லாம் வந்து உங்கள கூட்டிட்டு போறேன் பாஸ்..” என்று புன்னகைத்து விடை பெற்றான் ஸ்டீவ்..

No comments:

Post a Comment