Friday, August 8, 2014

சங்கீதா - இடை அழகி 96


“ஹலோ.. என்ன சொல்லிட்டு இப்போ நீ மட்டும் ஒரைஞ்சி போயி உட்கார்ந்திருக்க?… ஏதாவது பேசு…” – என்றான் கார்த்திக்.. “இல்லடா.. கஷ்டம் எதுவும் இல்ல.. உள்ள இருக்குறதை கொட்டுறதால மனசு லேசாகுது.. நீதான் பாவம் என் கிட்ட மாட்டிக்கிட்டு இதெல்லாம் கேட்டுட்டு இருக்க..” என்று லேசாக நொந்துக்கொண்டாள்.. “ச்சே.. ச்சே.. அப்படியெல்லாம் சொல்லாத.. உன் கூட பேசுறது எனக்கும் ரொம்ப பிடிக்கும்..” – என்று கார்த்திக் மெலிதாய் சிரித்து சொல்ல, சஞ்சனாவிடம் இருந்து வார்த்தைகள் எதுவும் இல்லை.. ஒரு மௌனமான சந்தோஷத்தைத் தவிர..
“நானும் எனக்குள்ள சில விஷயங்கள வெச்சிருக்கேன்… ஆனா அதெல்லாம் நீ எழுதினா மாதிரி வாக்கியங்கள் கிடையாது..” – என்றான் கார்த்திக்.. “வாக்கியங்கள் இல்லன்னா வேறென்னது அது?…” – ஆச்சர்யமாக கேட்டாள் சஞ்சனா.. “கேள்விகள்..” “ஒஹ்..” “ஆனா அந்த கேள்விக்கு யாருமே சரியான பதில் சொன்னதில்ல..” “அப்படி என்ன கேள்வி அதெல்லாம்.. ஹ்ம்ம்.. கேளு கேளு பார்க்கலாம்..? என்று கார்த்திக் அருகே முகத்தை நீட்டி அவனருகில் வந்து சுவாரஸ்யமாக கேட்டாள் சஞ்சனா..” “ஒரு ஆணுக்கு எது பெஸ்ட் மோதிரம்னு சொல்ல முடியுமா?” – சிரித்துக்கொண்டே புருவங்கள் உயர்த்தி கேள்வி எழுப்பினான் கார்த்திக்.. “ஹ்ம்ம்.. பிளாட்டினம், தங்கம், கல்லு வெச்ச மோதிரம், ராசிக்கல் வெச்ச மோதிரம்”.. என்று அவளும் ஒன்று ஒன்றாக சொல்லிக்கொண்டே போனாள்…. ஒன்றும் தென்படவில்லை.. கடைசியாக ஒருவழியாக அவனிடம் சரணடைந்து “நீயே சொல்லிடுடா.. ப்ளீஸ் தெரிஞ்சிக்கலைனா, தலை வெடிச்சிடும்..” என்றாள்.. அவள் கண்களை நேராகப் பார்த்து சொல்ல தொடங்கினான்.. “காதலிச்சி கல்யாணம் பண்ண மனைவியோட கால் மெட்டிய விட ஒரு சிறந்த மோதிரம் இருக்க முடியுமா ஆணுக்கு?” – என்றான்.. கார்த்திக் இதை சொன்னவுடன் முகத்தின் கீழ் கை வைத்து குனிந்து கேட்டுக் கொண்டிருந்தவள் சற்று மெதுவாக நிமிர்ந்து உட்கார்ந்து ஒரு ஆச்சர்ய சிரிப்புடன் அவனைப் பார்த்தள்…. “இன்னொன்னு சொல்லுறேன்..” “ஹ்ம்ம்..” எதுவும் பேசாமல் அவன் கண்களையே கூர்ந்து கவனித்து தொண்டையில் இருந்து ஒரு மெல்லிய சத்தம் மட்டும் குடுத்தாள்.. “ஐ லவ் யூ….” – என்று கார்த்திக் ஆரம்பித்தான்.. அதற்குள் சஞ்சனா உடனே ஒரு அதிர்ச்சி பார்வையை குடுத்தாள்.. “ஹஹாஹ்.. பொறு பொறு.. நான் இன்னும் முடிக்கல.. பயப்படாத..” – என்று அவள் பார்வையைக் கண்டு சிரித்தான் கார்த்திக்.. “ஐ லவ் யூ” ங்கறது கேள்வியே கிடையாது…. ஆனாலும் உலகம் முழுக்க இருக்குற காதலர்கள் எல்லாருமே ஒருத்தருக்கு ஒருத்தர் இந்த வார்த்தைய இன்னொருத்தர் கிட்ட சொல்லிட்டு ஏன் பதில் எதிர் பார்க்குறாங்க?..” “ஹ்ம்ம்..” ஒன்றும் பேசாமல் மௌனமாய் தலை அசைத்தாள்…. “பரவாயில்லையே… உணகுள்ளையும் எதோ இருக்குன்னு சொல்ல வர்ற.. சரி உன் கிட்ட ஒரு கேள்வி… காதல் பத்தி என்ன நினைக்குற?….”“அது ஒரு சுகமான உணர்வு.. வந்தா சந்தோஷமா இருக்கும்… வரலன்ன இன்னும் ரொம்ப சந்தோஷமா இருக்கும்.. ஹஹ்ஹா..” என்று சிரித்தான்.. “ஹஹ்ஹா.. ஒரு விதத்துல நீ சொல்லுறது கரெக்ட் தான்… ஏன் நீ யாரையும் காதலிக்கலையா?” என்றாள்.. “சீரியஸான காதல் எனக்கு இன்னும் யார் மேலயும் வந்ததில்ல.. கூடவே என் இயல்புக்கு அது வருமான்னு தெரியல.. தானா அமையுற விஷயம்தான..!! தீவிரவாதி மாதிரி என்னிக்காவது வந்து தாக்கும்.. அப்போ பார்த்துக்கலாம்.. ஹஹா..”- என்று சிரித்தான் கார்த்திக்…. “ஏன் அப்படி சொல்லுற?.. உன் கிட்ட கண்டிப்பா எந்த ஒரு பொண்ணாவது வந்து ப்ரோப்போஸ் பண்ணி இருப்பாங்களே?..” என்றாள்.. “உஹும்…” – சந்தோஷமாக சிரித்துக்கொண்டே சொன்னான் கார்த்திக்…. “பால்கனியோரம் நின்றுகொண்டு அவளுக்கு பதிலளிக்கும்போது அடிக்கும் காற்றில் அவனுடைய துணி லேசாக ஆடும்போது அதை கவனித்த சஞ்சனாவுக்கு எதோ நியாபகம் வர “கார்த்திக்.. அந்த பாக் எடுத்து குடேன்.. நான் உணக்கொன்னு தரப்போறேன்” என்றாள்.. அந்த பாக் திறந்து அவன் கையில் ஒரு காஸ்ட்லியான பிராண்டட் ஷர்ட்டும், பாண்டும் குடுத்து “இதை ஒரு தடவ போட்டு ட்ரை பண்ணி பாரேன்?..” – என்று ஒரு அண்பு வேண்டுகோள் விடுத்தாள்.. ஒன்றும் புரியாமல் முழித்தான் கார்த்திக்.. “என்ன யோசிக்குற?..” என்றாள். “எதுக்கு எனக்கு இது?..” அவள் தருவதை உடனடியாக வாங்க கூச்சப்பட்டான்.. “போன வாரம் ஒரு கடைக்கு போய் இருந்தேன்.. அப்போ இந்த ஷர்ட்டும், பாண்டும் உனக்கு போட்டா நல்லா இருக்கும்ன்னு தோணுச்சி.. பொதுவா எனக்கு க்ளோஸா இருக்குறவங்களுக்கு நான் இதை செய்வேன்.. அதான் உனக்கு வாங்கினேன்.. ஒரு தடவ போட்டு பாரேன்..” – ஆர்வமாய் கேட்டாள் சஞ்சனா.. அவள் அன்பாக குடுப்பதை அவனுக்கு வேண்டாம் என்றுசொல்ல மனமில்லை, அதே சமயம் அதெல்லாம் இவனுக்கு சரி வருமா என்றும் ஒரு குழப்பத்தில் இருந்தான்.. இருந்தாலும் அவள் குடுத்ததை எடுத்துக்கொண்டு பக்கத்தில் உள்ள அறையினுள் சென்று அவற்றை மாட்டிக்கொண்டு கண்ணாடியில் பார்த்தான்.. பார்த்தவனுக்கு ஒரு நிமிடம் சட்டென அவன் பார்வையே அவனை ஈர்த்தது.. கச்சிதமாய் எந்த ஒரு லூசான ஃபிட்டிங்கும் இல்லாமல் தெளிவாக ஸ்லிம் ஃபிட்டாக ஒரு ஷர்ட்டும், கால்களை எங்கு ஒட்டி பிடிக்க வேண்டுமோ அங்கு ஒட்டிப்பிடித்து எங்கு தார்ந்து இருக்க வேண்டுமோ அங்கு தளர்ந்து இருந்ததை எல்லாம் சுத்தி சுத்தி கண்ணாடியில் அவனை அவனே ஆச்சர்யமாக பார்த்து ரசித்தான்…. சில நிமிடங்கள் கழித்து வெளியே வந்து சஞ்சனாவின் முன் நின்றான்.. “வாவ்… செமையா இருக்க டா… கார்த்தியா நீ? எங்க ஒழிச்சி வெச்சி இருந்த இவ்வளோ ஸ்மார்டான ஒருத்தன இத்தன நாளா? நான் நினைச்சது 100% கரெக்ட்.. இதைப் பார்கும்போதே நினைச்சேன் உனக்கு சூப்பரா இருக்கும்னு. அதே மாதிரி சூப்பர் ஃபிட்டிங் டா….” – சஞ்சனா தொடர்ந்து பேசிக்கொண்டிருக்க கார்த்திக் எதுவும் பேசாமல் அமைதியாய் அவளுடைய உற்சாகத்தையும், சந்தோஷத்தையும் பார்த்தான்.. “அவளுக்கு பிடித்த விதத்தில் அவனைப் பார்க்கணும்னு எண்ணி அவனுக்கு டிரஸ் வாங்கி குடுத்து, அதை அவன் போட்டுப்பார்கையில் கண்ணாடியின் முன் தெரியும் அனைத்தும் அவனது பார்வையையும் கவர்ந்த பொழுது, சஞ்சனா மீது காதிக்குக்கு ஒரு இனம் புரியாத அன்பு ஏற்பட்டது…. “டேய்.. அப்பப்போ ஏண்டா ஆஃப் ஆயிடுற?…. ஏதாவது பேசு டா.. என்ன ஆச்சு?… கொஞ்சம் கூட பிடிக்கலையா?” – லேசான கவலையுடன் கேட்டாள் சஞ்சனா.. “கொஞ்சம் இல்ல சஞ்சு… ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு..” என்று கொஞ்சம் எமோஷனலாக கார்த்திக் சொல்வதை அவன் உதடுகள் மறைத்தாலும் கண்கள் சஞ்சனாவுக்கு காட்டிக்குடுத்தது.. “அப்படியே இந்த டிரஸ்லையே கொஞ்ச நேரம் இரு.. இதுலதான் நீ பார்க்க நல்லா இருக்க.. என்றாள் சஞ்சனா.. அப்போது பொறுமையாக வந்து ஒரு ச்சாரில் அமர்ந்தான் கார்த்திக்.. அவனுக்குள் ஏற்பட்ட உணர்வை வெளிப்படுத்த தெரியாமல் ஒரு புறம் அவன் அமைதியாய் அமர்ந்திருக்க.. மற்றொரு புறம் அவள் செய்த விஷயம் அவனுக்கு பிடித்திருக்கிறதென்று சஞ்சனாவுக்கும் புரிந்திருக்க ஒருவருக்கொருவர் கண்களால் பார்த்துக்கொண்டு ஏதும் பேசாமல் அப்படியே அமைதியாய் அமர்ந்திருந்தனர்.. “அந்த சைலன்ஸை உடைக்க கார்த்திக் தன் தொண்டையை “உக்..ஹ்ம்..” என்று கரகரத்துக்கொண்டு ஆரம்பித்தான்.. “காதல் பத்தி நீ என்ன நினைக்குறன்னு சொல்லு.. நான் தெரிஞ்சிக்குறேன்..” என்றான் ஆர்வமாக.. “நீ சொன்ன மாதிரியே அது ரொம்பவும் அழகான ஒரு உணர்வு… ஆனா அதே சமயம் நீ சொன்ன மாதிரி அந்த உணர்வு வராம இருந்தா ரொம்ப சந்தோஷமா இருக்கும்னு எல்லாம் என்னால சொல்ல முடியல.. காரணம் எனக்கு என் சின்ன வயசுல ஏற்பட்ட ஒரு நாடகத்தோட உணர்வுதான் அது..” என்றாள்.. “என்ன நாடகம்..?..” மீண்டும் அதே ஆர்வம் அவனிடம்..
“ஒரு நாட்டோட அரசன் யாராலையும் தோற்கடிக்க முடியாத ரொம்பவும் சக்தி வாய்ந்த வலிமையானவனா இருப்பான்.. அவன் மனசுல ஒரு பொண்ணு மேல காதல் பூக்கும்.. அவளும் அவனை உயிருக்குயிரா காதலிப்பா.. ரெண்டு பேரும் சந்தோஷமா கல்யாணம் செஞ்சிட்டு ஒரு புது வாழ்கைய தொடங்கலாம்னு நினைக்கும்போது அவனுக்கு கடைசியா அவன் வீரத்தை பரிசோதிக்க ஒரு போர் வரும்.. அப்போ அவன் காதல் மனைவி அவன் கிட்ட கெஞ்சுவா… எனக்காக இனிமேற்கொண்டு எந்த போறுக்கும் போகாத.. நீ இல்லன்னா நான் அந்த நாளே இறந்துடுவேன்னு சொல்லி கதறி அழுவா.. அவனுக்கு இவ அழுவுறதை பார்த்து தாங்க முடியாது.. அதே சமயம் அவ கிட்ட “என் வீரத்தை நான் இன்னைக்கி வரைக்கும் நான் யார் கிட்டயும் அடமானம் வெச்ச்சதில்ல.. இது எனக்கு வந்திருக்குற கடைசி சவால்.. ரெண்டுல ஒன்னு பார்த்துட்டு வந்துடுறேன்னு” சொல்லும்போது அவன் உணர்வுகளை புரிஞ்சிகிட்டு தன் முந்தானையால ஒரு சின்ன துண்டை கிழிச்சி அவன் கைல கட்டிட்டு “இந்த துணிய பார்க்கும்போதெல்லாம் நான் உன் கூட இருக்குறேன்னு நினைச்சிக்கோ” அப்படின்னு சொல்லி அவன் காதல் மனைவி அனுப்பி வெப்பா.. “ரொம்பவும் மன திடத்தோடதான் போருக்கு போவான் ஆனாலும் அன்னிக்கி விதி அவன் உயிரை பறிச்சிடும்.. அப்போ அவன் ஆத்மாவை மேல்லோகத்துக்கு எடுத்துட்டு போக ஏஞ்சல்ஸ் வரும்போது அவங்க கிட்ட இவன் ஒரு விஷயம் சொல்லி கெஞ்சுவான்..” – இங்கே சில நொடிகள் நிறுத்தினால் சஞ்சனா.. “என்னன்னு சொல்லி கெஞ்சுவான்..” “ஒரே ஒரு நாள்… ஒரு 24 மணி நேரம் எனக்கு உயிர் குடுங்க, நான் ஆசையா காதலிச்ச மனைவி நான் திரும்பி வருவேன்னு காத்திட்டு இருப்பா.. அவ கிட்ட நான் எவ்வளோ தூரம் அவளை காதலிக்குறேன்னு வெளிப்படுத்த ஒரே ஒரு நாள் குடுத்தா உங்களுக்காக நான் இன்னும் 1000 தடவ கூட சாகுறதுக்கு தயார்னு சொல்லி கெஞ்சுவான்..”
“அப்போ அந்த நாடகத்தை பார்க்கும்போது நினைப்பேன்.. காதல் அவ்வளோ பவர்ஃபுல் ஃபீலிங்கா ஒரு மனுஷனுக்கு இருக்குமான்னு.. அப்போ சின்ன வயசுல ஏங்கி இருக்கேன்.. எனக்கும் மனசளவுல அப்படி உயிருக்கு உயிரா நேசிக்குரதுக்கு யாராவது கிடைச்சா நல்ல இருக்கும்ன்னு..” – என்று சொல்லும்போது மீண்டும் லேசான கண்ணீர் துளி எட்டியது அவளின் கண்களில்.. “ஹ்ம்ம்.. ஆனா நான் நெனச்சது ஒன்னு.. எனக்கு நடந்தது ஒன்னு..” – என்று லேசாக சலித்துக்கொண்டாள்..

No comments:

Post a Comment