Friday, August 8, 2014

சங்கீதா - இடை அழகி 94


சில நிமிடங்கள் கழித்து நான்கு இளைஞர்கள் வேறு அறைக்கு சென்றார்கள். அமர்ந்திருந்த மீதி இளசுகளில் கூர்மையான கண்களும், நீளமான வழு வழு முடியும் கொண்டு திமிரான பார்வையில் ஒரு பெண் சஞ்சனாவிடம் எதோ வாக்குவாதம் நடத்துவது தெரிந்தது… அப்போது சஞ்சனா எதேர்ச்சையாக திரும்பவும் அவளைப் பார்த்து “வந்துட்டேன்” என்று சிக்னல் குடுத்தான் கார்த்திக்.. “ஹேய் கார்த்தி.. அவ்வளோ சீக்கிரம் வந்துட்ட?.. என்ன பண்ற இங்க?..” – உள்ளே இருப்பவர்களிடம் எக்ஸ்யூஸ் கேட்டு கார்திக்கை பார்த்தவுடன் எதோ ஒரு பரவசத்தில் வெளியே வந்து பேசினாள் சஞ்சனா..
“ரூம்ல போர் அடிச்சுது, கூடவே நீயும் இன்னிக்கி உனக்கு கொஞ்சம் வேலை கம்மின்னு சொல்லி இருந்த இல்ல, அதான் என்ன பண்ணுறதுன்னு தெரியாம உன் பாய் ஃபிரன்டுக்கு ஃபோன் பண்ணி என்னை இங்க கூட்டிட்டு வர சொன்னேன்..” என்றான் நக்கலாக.. அவன் பாய் ஃபிரன்டு என்று சொன்னவுடன் எதோ சிந்தனையில் சஞ்சனா லேசாக குழம்பினாள்.. பின் அவனுக்கு பின்னால் நிற்கும் டிரைவர் தாத்தாவைப் பார்த்துவிட்டு மென்மையாக சிரித்தாள்.. “அடங்கவே மாட்ட டா நீ..” – என்னதான் சிரித்த முகமாக பேசினாலும் அவள் முகத்தில் ஒரு டென்ஷன் இருப்பதை உணர்ந்தான் கார்த்திக்.. “ஆமா என்ன நடக்குது உள்ள.. சூடா வாக்கு வாதம் நடக்குறா மாதிரி தெரியுது.. ஏதாவது பிரச்சினையா?” “ச்சே ச்சே.. அதெல்லாம் ஒன்னும் இல்லடா.. உள்ள இருக்குறவங்க பெரிய பெரிய ஃபேஷன் ஸ்கூல்ல இருந்து IOFI ல சேருரதுக்கு இன்டெர்வியூக்கு வந்திருக்காங்க.. ராகவ் எப்போவுமே இந்த மாதிரி புதுசா வர்றவங்களுக்கு பேசுற திறமை எப்படி இருக்குன்னு பார்க்க குரூப் டிஸ்கஷன் வெக்க சொல்லுவான்.. அவன பொறுத்த வரைக்கும் என்னதான் திறமை இருந்தாலும் வாய் ரொம்ப முக்கியம்னு சொல்லுவான் அதுக்குதான் இந்த செஷன்.. “ஹ்ம்ம்.. வாயிலேயே வடசுட்டு CEO ஆனவனாச்சே..!! இல்லன்னா அந்த எனிமி எப்படி இந்த பொசிஷன்ல இருக்க முடியும்..?” “ஹஹா.. நல்லா பேசுறடா லூசு கிறுக்கா, கொஞ்சம் வெயிட் பண்ணு உள்ள கொஞ்சம் டிஸ்கஷன் முடிச்சிட்டு வந்துடுறேன்..” – என்று சஞ்சனா சிரிக்கையில் அவளது சிரிப்பை அப்பட்டமாக அவளுக்கு தெரியும் விதம் வாய் அகல விரிய பார்த்து ரசித்தான் கார்த்திக். “டேய் வாத்து.. மவுத் க்ளோஸ் பண்ணு.. ஈ உள்ள போய்ட போவுது.. ஹஹா..” – என்று கார்த்திக் தன்னைப் பார்த்து ஊத்துவதை உணர்ந்து நக்கலடித்தாள்.. “ச்சே.. ச்சே.. அதெல்லாம் ஒன்னும் இல்லையே.. ந…நான் எதோ உன்ன பார்த்து ஜொள்ளு விடுறேன்னு தப்பா நினைச்சிகாத..” என்று சமாளித்தான்.. “நான் அப்படி எதுவும் சொல்லவே இல்லையே..” – ஓரக்கண்ணால் பார்த்து சிரித்தாள் சஞ்சனா…. “நீ சொல்லலதான்.. இருந்தாலும் அப்படி ஒரு எண்ணம் உனக்கு வந்துட கூடாதுன்னு முன் கூட்டியே நான் உனக்கு சொல்லிட்டேன்.” – என்னதான் கார்த்திக் உதடுகள் மெனக்கெட்டு பேசினாலும் அவன் கண்கள் சொல்வது என்னவென்று புரிந்து மெளனமாக அவனை பார்த்து சிரித்துவிட்டு உள்ளே சென்றாள் சஞ்சனா.. சில நிமிடங்கள் கழித்து மூடிய கண்ணாடி அறையை தாண்டியும் சத்தம் சற்று வெளியே கேக்கும்விதம் இருந்தது கார்த்திக்கின் காதுகளுக்கு. “எக்ஸ்கியூஸ் மீ சஞ்சனா.. எதாவது பிரச்சினையா?” – கதவை லேசாக திறந்து கேட்டான் கார்த்திக்.. “ஒன்னும் இல்ல கார்த்திக் கொஞ்சம் வெளியே வெயிட் பண்ணு.. நான் வரேன்..” – என்று சஞ்சனா சொல்வதைக் கேட்டு கார்த்திக் கதவை சாத்துவதற்குள் மீண்டும் அந்த பெண் சற்று குரலை உயர்த்தினாள்.. அதைக் கேட்ட பிறகு அங்கிருந்து செல்ல மனமில்லாமல் உரிமையுடன் மீண்டும் அந்த அறையின் உள்ளேயே வந்து சஞ்சனாவிடம் “என்ன பிரச்சினை சஞ்சனா” என்றான்.. கார்த்திக்கின் அருகே வந்து மெதுவாக பேசினால் சஞ்சனா.. “நடந்த குரூப் டிஸ்கஷன்ல இவங்கள நான் ரிஜக்ட் பண்ணிட்டேன்.. அந்த வெறுப்புல உனக்கு மட்டும் ரிசஷன் டாபிக் பத்தி என்ன பேச தெரியும்?… சும்மா கண் துடைப்புக்கு குரூப் டிஸ்கஷன்னு ஒன்னுத்த வெச்சி யார் யாரை ஏற்கனவே செலக்ட் பண்ணணுமோ அவங்கள மட்டும் செலக்ட் பண்ணிட்டு இந்த ரவுண்ட்ல எங்கள எலிமினேட் பண்ணுறதுதான உங்க பிளான்.. அப்படி.. இப்படின்னு அவ பாட்டுக்கு இஷ்டத்துக்கு கத்திட்டே போறா.. நான் இதுக்கெல்லாம் பதில் பேசினா, IOFI பேருதான் கெடும்….” “அதுக்காக நீ எதுவும் பேச கூடாதுன்னு அர்த்தம் இல்லையே?” – அந்த பெண்ணை நக்கலாக பார்த்தபடி கார்த்திக் சஞ்சனாவிடம் இதை சொல்ல.. “ஹலோ.. மிஸ்டர்.. வாட் இஸ் யுவர் ப்ராப்லம்?….” என்று கார்த்திக்கையும் நோக்கி பாய்ந்தாள் அந்த பெண்…. “பொறுமை.. பொறுமை.. மிஸ்.மாடர்ன் நீலாம்பரி..” – மீண்டும் அதே நக்கல் சிரிப்புடன் பார்த்தான் கார்த்திக்.. “வாட் தி ஹெல் யூ திங்க் ஆஃப் யூவர்செல்ஃப்?.. ஹொவ் டேர் யூ வில் கால் மீ லைக் தட்?….” – இன்னும் சீறினாள்.. “ஷ்ஷ்ஷ்.. கார்த்திக்.. முட்டாள் மாதிரி அவ கூட கூட பேசாத.. கொஞ்சம் வெளியே இரு.. இவங்கெல்லாம் இன்னைக்கி ஒரு நாள்தான் உள்ளே இருக்க போறாங்க.. இவங்க கிட்டெல்லாம் பேச்சு வெச்சிகிட்டா வெளியே போயி பேர கேடுப்பாங்க.. ஏன் புரிஞ்சிக்காம அவள வம்பிழுக்குற?.. ராகவ் ஊருல இல்லாத வரைக்கும் நான்தான் டா எல்லாத்தையும் இங்க பார்த்துக்கணும்.. அந்த பொறுப்பு எனக்கு இருக்கு.. ப்ளீஸ் புரிஞ்சிக்கோ..” – கார்த்திக்கின் கைகளை மெதுவாய் பிடித்து சொன்னால் சஞ்சனா..
“ஹ்ம்ம்.. அந்த பருப்பு ஊற சுத்திகிட்டு உனக்கு பொறுப்பு குடுத்துட்டு போவான்.. அப்போ இந்த மாதிரியான சம்பவங்கள் நடந்தா எனக்கு வெறுப்பு மட்டும் வந்துட கூடாது… இல்ல?..” சற்று சுதாரித்துக்கொண்டு அந்த பெண்ணை நோக்கி “மிஸ்.. உங்களுக்கு அப்ஜக்ஷன் இல்லன்னா அதே ரிசஷன் பத்தி நான் சுருக்கமா சொல்லி காட்டவா?” என்றான்.. அந்த பெண் எதுவும் பேசாமல் சலிப்பு கலந்த பார்வையுடன் கார்த்திக் சஞ்சனா இருவரையும் பார்த்தாள்.. அப்போது கார்த்திக் தொடர்ந்தான்.. “ஒரு பெரிய ஸ்டார் ஹோட்டலுக்கு ஒரு பணக்காரன் தங்குறதுக்கு வந்திருக்கான்.. அப்போ அவன் பர்ஸ்ல இருந்து ஒரு 100 டாலர் பணம் கீழ விழுந்திருக்கு…“ “அந்த ஹோட்டல் மேனேஜர் ஆபத்துக்கு பாவம் இல்லைன்னு சொல்லிட்டு அவன் டிரைவர் கிட்ட வெச்சி இருக்குற 100 டாலர் கடனை குடுத்துடுறான்..” “அதே 100 டாலரை அந்த டிரைவர் ஒரு விலை மாது கிட்ட குடுத்து அவன் கடனை செட்டில் பண்ணிட்டான்..” “அந்த விலை மாது அதே 100 டாலரை ஒரு ப்ரோவிஷன் ஷாப்ல குடுத்து அந்த வாரத்துக்கு தேவையான வீட்டு சாமான்களை வாங்கிட்டா.” “அந்த ப்ரோவிஷன் ஷாப் முதலாளி அவருடைய சப்ளையர் கிட்ட அதே 100 டாலரை குடுத்து அவன் கடன் தீர்த்துட்டான்…” “அந்த சப்ளையர் கடைசியா அந்த ஹோட்டல் மேனேஜர் கிட்ட அதே 100 டாலர் குடுத்து அவர் கிட்ட இருந்த கடனை தீர்த்துட்டான்.” “இப்போ அந்த பணக்காரன் ஹோட்டலுக்கு இரவு நேரம் உள்ள வரும்போது அந்த மேனேஜர் “இது உங்க காசுதான்” னு சொல்லி திருப்பி குடுத்துடுறான்.” “ஒரு சில மணி நேரத்துல ஒருத்தருக்கு ஒருத்தர் கடன் வெச்சி இருந்த பல பேரோட பண பிரச்சினை தீர்ந்துடுச்சி.. ஆனா நடந்ததெல்லாம் என்னென்னா ஒரு 100 டாலர் அந்த பணக்காரன் பர்ஸ்ல இருந்து வெளியேறி மேனேஜர், டிரைவர், விலை மாது, ப்ரோவிஷன் ஷாப் முதலாளி, சப்ளையர்னு சுத்தி கடைசியா அந்த மேனேஜர் கைக்கு வந்து அந்த பணக்காரன் பர்ஸ் உள்ளயே போய் அம்சமா உட்கார்ந்துடுச்சி..” “இதுல நடுவுல யாராவது ஒருத்தர் கிட்ட அந்த பணம் அடுத்த கட்டத்துக்கு போகாம இருந்திருந்தா அங்க பண வீக்கம் எட்டி பார்த்திருக்கும்.. கரெக்டா?.. என்று சொல்லிவிட்டு சஞ்சனாவை பார்த்து கண் அடித்தான் கார்த்திக்..” “அவன் சொன்னதைக் கேட்டு ஒரு நிமிடம் ஒன்றும் பேசாமல் அவனையே கவனித்தாள் அந்த பெண்..” “ஆர் யூ கண்வின்ஸ்ட் மிஸ்..?” – என்று அந்த பெண்னை பார்த்து சிரித்தபடி சொல்லிவிட்டு சஞ்சனாவின் காதுகளில் மெதுவாக “யோசிக்குறாங்கலாம்….ஹிஹி..” என்று அந்த பெண் எதிரிலேயே நக்கலாக சிரித்துவிட்டு வெளியே சென்று அமர்ந்தான் கார்த்திக்.. அவன் முகம் கூட பார்க்காமல் தனது ஹான்ட் பாக் எடுத்துக்கொண்டு அருகில் உள்ள பெண்ணிடம் “இவளுக்கு பேச தெரியுமான்னு கேட்டா எவனோ ஒருத்தன் வந்து பேசறான்….ச்சே” “ஹேய் யூ?….” – என்று சஞ்சனாவை நோக்கி விடை பெறுவதற்கு முன் எதோ விறைப்பாக சொல்ல அருகில் வந்தாள் அந்த பெண்.. “மை நேம் இஸ் சஞ்சனா..” – பெயர் தெரியாதவளுக்கு சிறிதும் பின் வாங்காமல் நேருக்கு நேர் அவள் கண்களைப் பார்த்து தன் பேரை சொன்னாள் சஞ்சனா…. “என்ன நெனச்சிட்டு இருக்க?.. எங்கள ரிஜக்ட் பண்ணதுக்கு உன்னதான பேசி காமிக்க சொன்னோம்…? உன்னால முடியலைனா உனக்கும் நல்ல கம்யூனிகேஷன் திறமை இல்லன்னுதான் அர்த்தம்… ஆனா நீ உள்ள இருக்க.. நாங்க இல்ல.. அவ்வளோதான் வித்யாசம்..” – என்று அந்த பெண் சற்று உறும, அவள் அருகில் அவளைப்போலவே டென்ஷனாக இருக்கும் மற்றொரு ஜீவன் “விடுடி… அவ ஆளா இருப்பான்.. அதான் திடீர்னு உள்ள பூந்து பேசிட்டு போறான்… ஃபேஷன் கம்பெனில ஜாயின் பண்றதுக்கு IT கம்பெனி மாதிரி குரூப் டிஸ்கஷன் வெக்குறாங்க.. ச்சே” என்று சஞ்சனா காது பட அவர்கள் முணுமுணுத்துக்கொண்டே வெளியேறும்போது சஞ்சனாவின் இயல்புக்கு அவர்கள் சொன்ன வார்த்தைகளால் இயற்கையாக கோவம்தான் வர வேண்டும்.. மாறாக “அவ ஆளா இருப்பான்” என்று மற்றொரு பெண் கார்த்திக்கை குறி வைத்து சொன்னது அவள் மனதுக்குள் எழுந்த கோவத்தையெல்லாம் அணைத்துவிட்டு ஒரு இனம் புரியா சந்தோஷத்தை எட்டிப் பார்க்க வைத்தது…. “ஹலோ..” – கதவை மீண்டும் மெதுவாக திறந்து அந்த இரு ஓய்யாரிகளும் போய்டாங்களா என்று எட்டிப் பார்த்தான் கார்த்திக்.. “ஆங்.. சொல்லுடா..” – கார்த்திக் உள்ளே வந்து சஞ்சனாவை சற்று உலுக்க, எதோ ஒரு இன்ப மயக்கத்தில் இருந்தவள் சுதாரித்துக்கொண்டாள்…. “என்ன ஆச்சு? அப்படியே நிக்குற? திரும்பி எதாவது சொன்னாளா?.. கூப்டு கலாய்கவா?..” “ஹேய்.. ஒன்னும் சொல்லல டா நீ பேசாம வா..” – உதடில் ஒரு மெல்லிய சிரிப்புடன் சொன்னாள் சஞ்சனா.. இருவரும் IOFI வளாகத்தில் சஞ்சனாவின் வீட்டை நோக்கி நெடும் பாதையில் எதிர் திசையில் ஜில்லென்ற காற்றடிக்க மரங்கள் தரும் நிழலில் நடந்தார்கள்…. அப்போது அவனை ஒரு நிமிடம் உற்று கவனித்தவள் “கார்த்தி, ஒரு நிமிஷம் இரு..” என்று சொல்லிவிட்டு தன் காபினுக்கு சென்றாள்… சற்று நேரம் கழித்து மீண்டும் தனது முதுகில் மாட்டிக்கொள்ளும் பாக் உள்ளே ஏதோ ஒன்றை வைத்து ஜிப் போட்டு மூடியபடி நடந்து வந்தாள்… அடிக்கும் காத்துக்கு முடிகளை தன் கைகளால் கோதிவிட்டு காலரை சற்று கேஷுவலாக தூக்கி விட்டபடி அவள் வருவதைப் பார்த்துக்கொண்டிருக்கும் கார்த்திக்கிடம் ரொம்பவும் பெரிய அளவிலான பர்சனாலிட்டி இல்லையென்றாலும் பார்த்தவுடன் பளிச்சென தென்படும் ஒரு வசீகரத்தை ரசிக்க தவறவில்லை சஞ்சனா.. “என்ன ஆச்சு? ஏதாவது மறந்து வெச்சிட்டு வந்துட்டியா?..” என்றான். “அதெல்லாம் ஒன்னும் இல்லடா.. வா நடக்கலாம்..” – சஞ்சனாவின் முகத்திலும் ஒரு சந்தோஷம் தெரிவதை கவனிக்க தவறவில்லை கார்த்திக்.. “லாஸ்ட் ஒரு மாசமா நானும் உன்ன வந்து பார்க்கணும் பார்க்கணும்னு நினைப்பேன்.. ஆனா ஃபோன்ல மட்டும்தான் டெய்லி பேச முடிஞ்சிது….” என்றான்.. “ஹ்ம்ம்.. நானும் இந்த ஒரு மாசமா ராகவ் செய்ய வேண்டிய வேலை எல்லாத்தையும் செய்யுறதால இங்க அங்க கூட நகர முடியல டா.. செப்பா அவன் வேலைங்க இருக்கே…..” லேசாக சலித்துக்கொண்டு மேலும் தொடர்ந்தாள்.. “நமக்குன்னு ஒரு வேலை குடுத்து முடிச்சிட்டு போக சொல்லும்போது நிம்மதியா காலைல வந்துட்டு சாயந்திரம் ஜூட் விட்டுடலாம்.. ஆனா இப்படி மத்தவங்கள வெச்சி மேய்ச்சி வேலை வாங்குறதிருக்கே…. அவன்தான் டா அதுக்கு லாயிக்கி.. என்ன சொல்லுற?” என்று சஞ்சனா கார்த்திக்கை பார்த்து சொல்லும்போது.. “இன்னைக்கி காத்து நல்லா அடிக்குதில்ல?… அவ்வளோவா வெயிலும் இல்ல.. நல்ல கிளைமேட்..” – என்று சம்மந்தமே இல்லாமல் அவன் பதில் சொல்லும்போது, நம்மள தவிர வேறெது பற்றியும் பேசுவதில் எனக்கு ஆர்வம் இல்லை என்று அவன் சொல்லாமல் சொல்வதை புரிந்துகொண்டு அவனைப் பார்த்து மெலிதாய் ஒரு புன்னகை தந்தால் சஞ்சனா.. இப்போது பேச்சை மாற்றினால்.. “நான் உன்ன என்னமோ நினைச்சேன் டா.. ஆனா இன்னிக்கி நீ சொன்ன அந்த ரிசஷன் கதை நல்லா இருந்துச்சி.. எதாவது எகனாமிக்ஸ் புக் படிச்சியா?” “ச்சே ச்சே.. அதையெல்லாம் விட சூப்பர் புக் அது..” “என்ன புக்.. சொல்லேன் நானும் படிக்குறேன்..” – ஆர்வமாய் கேட்டள் சஞ்சனா.. “ஹஹ்ஹா.. ரொம்பல்லாம் யோசிக்காத… வார கடைசில நியூஸ் பேப்பர் கூட போடுற இலவச இணைப்புல வர்ற குடும்ப மலர்ல படிச்சதுதான் இந்த குட்டி கதை..” “ஒஹ்… அதுலயா?..” ஆச்சர்யமாய் கேட்டாள் சஞ்சனா.. “என்ன ஒஹ்..?.. அந்த புஸ்தகத்துக்கு என்ன குறைச்சல்? படிக்கிற விஷயம் எங்கிருந்து வேணும்னாலும் இருக்கலாம்.. ஆனா சொல்ல வேண்டிய இடத்துல நச்சுனு சொல்லணும்.. கரெக்டா சஞ்சு?….”
ஏற்கனவே ஒருமுறை கார்த்திக் அவளை சஞ்சு என்றழைத்தது நியாபகம் வந்தது.. அவன் அவளை அப்படி அழைப்பதை உள்ளுக்குள் மிகவும் ரசித்தாள் சஞ்சனா.. “ஹலோ.. மேடம்.. உங்கிட்ட தான் பேசிட்டு இருக்கேன்… நான் சொன்னது கரெக்ட் தான..?..” “ஹ்ம்ம் கரெக்ட் தான்..” அவன் சொன்னது என்னவென்று கூட கவனிக்காமல் அவன் கண்களை கூர்ந்து கவனித்துக்கொண்டே பதிலளித்தாள் சஞ்சனா.. இருவரும் பேசிக்கொண்டே நடக்கையில் அலுவலகத்தில் இருந்து சஞ்சனாவின் வீட்டை அடைந்த தூரத்தை அவர்களுடைய கால்கள் அறியவில்லை.. “ஃபர்ஸ்ட் டைம்….” என்று சொல்லி கார்த்திக்கைப் பார்த்து அதிக மகிழ்ச்சியுடன் “வெல்கம் டூ மை லிட்டில் ஸ்வீட் ஹோம்..” என்று தன் இரு கைகளையும் வாசப்படியை நோக்கி காண்பித்து மனம் முழுக்க சந்தோஷத்துடன் சிரித்தபடி ஒரு எக்சைட்மென்டில் கார்த்தியை உள்ளே வரவேற்றாள் சஞ்சனா..

No comments:

Post a Comment