Wednesday, August 6, 2014

சங்கீதா - இடை அழகி 87


ஐ அம் நாட் ஜோக்கிங் ஹியர் ஜென்டில்மேன்….. உங்க ரெண்டு பேரையுமே ஒரே சமயத்துல விளையாடி நான் ஜெயிச்சி காமிச்சா நீங்க உங்க பதவிய விட்டு விலகிடனும்…. தோத்துட்டா நான் என் பதவியில இருந்து நீங்கிடுறேன்…. சவாலுக்கு நீங்க தயாரா? – என்று ராகவ் ஓப்பனாக கேட்க….. வில்லியம்ஸ் சிரிப்பை நிறுத்திவிட்டு “காளிதாஸ்” என்று சத்தமாக கத்த அந்த முதியவர் உடனே அந்த இரு பெருசுகளின் அரிதான இரண்டு செஸ் போர்டுகளை எடுத்து வந்து வைத்தார்…. என்னதான் அறுவது வயதை தாண்டினாலும் வில்லியம்ஸ் கொஞ்சம் வாட்ட சாட்டமான மனிதர்தான், ராகவின் அருகே வந்து நிற்கும்போது முகத்துக்கு முகம் பார்க்கும் உயரம் இருந்தது அவருக்கு. ராகவின் எதிரே வந்து நின்று “கணேஷ்” என்று கத்தினார்… கணேஷும் வந்து நின்றார்…. “ராகவ்… ஐ அப்ரிஷ்யேட் யுவர் கட்ஸ்…. ஒன்னு எங்கள ஜெய்ச்சி காமி அப்படியும் இல்லைன்னா மேட்ச் ட்ரா பண்ணு.. ஆனா தோத்துட்டா… நீ சொன்ன வார்தைகள நியாபகம் வெச்சிக்கோ.. அதாவது…” என்று வில்லியம்ஸ் முடிப்பதற்குள் ராகவ் பேசினான்..
தோத்துட்டா இன்னிக்கே என்னோட பதவிய நான் ராஜினாமா பண்ண தயார்.. அதுக்கு சாட்சி காளிதாஸ்… என்று சொல்லி காளிதாசை திரும்பி பார்த்தான் ராகவ்.. வில்லியம்ஸும் கணேஷும் கூட காளிதாசைப் பார்த்தார்கள். காளிதாஸ் மூவரையும் பார்த்து “ஹச்…. நான் எல்லாருக்கும் ஒரே மாதிரிதான்…. ஆரம்பிக்கலாமா?” என்றார்.. “ஹ்ம்ம்.. போச்சு…. கிழவன் தும்பிட்டான்…. நல்ல சகுனம்…. இனி ஜெயிச்சா மாதிரிதான்..” – என்று கார்த்திக் முனு முணுத்துக் கொண்டான்…. சஞ்சனாவும் சங்கீதாவும் ராகவைப் பார்த்து ஆல் த பெஸ்ட் என்று கட்டை விரலை உயர்த்தி செய்கையால் சொல்லிவிட்டு அமர்ந்தார்கள். இரண்டு காபின் இருந்தது…. ஒரு ஒரு காபின் உள்ளேயும் வில்லியம்ஸும் கணேஷும் அமர்ந்திருந்தனர்…. கண்ணாடியால் செய்யப்பட்ட அந்த உயர் ரக செஸ் போர்டில் க்லவுஸ் அணிந்து ப்ரோஃபஷ்னலாக காளிதாஸ் காயின்ஸ் அடுக்கி வைக்க… இரு பெருசுகளும் ஹவர் கிளாஸ் கவுத்து வைத்து நேரத்தைக்குறித்துக் கொண்டார்கள். நடுநிலையாக டைம் கவனிக்க காளிதாசையே முன்நிறுத்தினார்கள்…. இப்போது அனைத்தும் தயார்…. வில்லியம்ஸ் ராகவை நோக்கி “ராகவ்…. ஆர் யூ ஷூவர் யூ வான்ட் டு ப்ளே திஸ் கேம்?…. தோத்துட்டா இன்னியோட உன் மொத்த ஆட்டமும் காலி…. இந்த விளையாட்டோட முடிவுல இருக்குற சீரியஸ்னஸ் உனக்கு புரியுது இல்ல….? தோத்ததுக்கு அப்புறம் திரும்பி வந்து கெஞ்ச கூடாது…. “ஹஹ்ஹாஹா…. இந்த விதி முறை உங்களுக்கும்தானே?….” என்று ராகவ் பதிலுக்கு கூலாக கேள்வி எழுப்ப…. ஒரு வில்லத்தனமான புன்னகை மட்டுமே வில்லியம்ஸ் முகத்தில் தவழ்ந்தது.. வில்லியம்ஸ், கணேஷ், காளிதாஸ், ராகவ்… அனைவரும் நேரத்தைப் பார்த்துக் கொண்டனர்… காளிதாஸ் “லெட்ஸ் ஸ்டார்ட்” என்று சொல்ல… இப்போது ஆட்டம் தொடங்கியது… வில்லியம்ஸ் போர்டில் அவர் பக்கம் இருந்தது வெள்ளை நிற காயின்ஸ்…. ராகவ்கு கருப்பு.. கணேஷின் போர்டில் கணேஷுக்கு இருந்தது கருப்பு நிற காயின்ஸ்…. ராகவ்கு வெள்ளை… விதி முறைகளின் படி முதலில் வில்லியம்ஸ் வெள்ளை காயின்ஸ் வைத்திருப்பதால் அவர் போர்டில் அவர்தான் முதல் மூவ் வைக்க வேண்டும்… வைத்தார்…. அதன் பின் ராகவ்.. இப்போது ராகவ் அதே விதி முறைகளின் படி கணேஷின் போர்டில் அவனுக்கு வெள்ளை நிற காயின்ஸ் இருப்பதால் அவன்தான் முதல் மூவ் வைக்க வேண்டும்…. வைத்தான்… அதன் பின் கணேஷ்… ஆட்டம் ஆரம்பித்து முதல் பத்து நிமிடங்கள் நன்றாக சூடு பிடித்தது.. ஆளாளுக்கு இரு பெருசுகளும் அதி புத்திசாலித்தனமாக மூவ்ஸ் வைத்து ஜெயிப்பதற்காக வைத்திருந்த முக்கிய திட்டங்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக தவிடுபொடியானது…. நேரம் முப்பது நிமிடங்கள் முடிந்திருந்தது…. இப்போது கிட்டத்தட்ட சம நிலையில் காயின்ஸ் வைத்து இன்னும் ஆழ்ந்து சிந்தித்து விளையாடிக் கொண்டிருந்தார்கள்… மற்றொரு புறம் பதவி பறிபோகும் பயமும் அந்த இரு பெருசுகளின் சிந்தனைக்கு முட்டுக் கட்டையாக அமைந்தது…. நாற்பது நிமிடங்கள் முடிந்தது…. இப்போது உண்மையில்… உண்மையில்…. உண்மையில்…. அந்த இரு பெருசுகளும் நம்ப முடியாத விதத்தில் உடல் வியர்க்க… கைகள் உதற…. அவர்கள் அதிர்ச்சி அடையும் விதம் அதிருப்தியாக ஆட்டம் ட்ராவில் முடிந்தது…. காளிதாஸ் அதிகார பூர்வமாக அதைப் பார்த்து ஊர்ஜிதப் படுத்தினார். வில்லியம்ஸ் தன் இருக்கையில் இருந்து எழுந்து ராகவிடம் கை கூட குலுக்காமல் “திஸ் இஸ் மை லாஸ்ட் விசிட் டு IOFI” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி விறுவிறுவென கிளம்பினார்… வில்லியம்ஸாவது பரவாயில்லை…. கணேஷ் ரகாவின் முகத்தைக் கூட பார்க்காமல் ஆட்டத்தில் தோத்ததை என்னமோ அவரை மானபங்கப் படுத்திவிட்டது போல எண்ணி மிகவும் இறுகிய முகத்துடன் ஆத்திரத்தில் மேஜையின் மீதிருந்த போர்டினை கைகளால் காயின்ஸ் சிதரும்விதம் தள்ளிவிட்டு கோவமாக அங்கிருந்து கிளம்பினார்.
காளிதாஸிடம் ராகவ் “அடுத்து என்னென்ன மாற்றங்கள் அதிகார பூர்வமா செய்யணுமோ அதையெல்லாம் செய்யுங்க….” என்று சொல்லி முடித்ததும் சங்கீதா, சஞ்சனா, மற்றும் கார்த்திக் ஆகிய மூவரும் ஆச்சர்யமாக ராகவிடம் வந்தார்கள்.. “டேய் மச்சி… உனக்கு செஸ் என்ன ரேஞ்சுல தெரியும்ன்னு எனக்குதான் தெரியும்…. சத்தியமா சொல்லு எப்படி ஜெயிச்ச?….” என்று கேள்வி கேட்க ராகவ் காளிதாஸ் இவர்கள் அனைவரையும் கவனிப்பதைப் பார்த்தான்… “சார் உங்களுக்கு ஆட்சேபனை இல்லைன்னா நாங்க கொஞ்சம் தனியா பேசிக்கலாமா?…” என்று சொல்ல…. “ஹச்… ஓகே ஓகே…” என்று சொல்லி அங்கிருந்து கிளம்பினார் பெரியவர்… இந்த கிழவன் தும்பியும் நீ ஜெயிச்சி இருக்க…. மவனே மரியாதையா சொல்லு எப்படி ஜெயிச்ச? – என்று கார்த்திக் புலம்ப.. மச்சி… எப்பேர்ப்பட்ட அதி புத்திசாலியையும் ஏதாவது ஒரு சின்ன சில்லித்தானாம விஷயத்த வெச்சி முட்டாள் ஆக்குறது ரொம்ப சுலபம்.. கொஞ்சம் சிம்பிளா ரெண்டு பேரையும் ஏமாத்தினேன் அவ்வளோதான்…. என்ன பண்ணி ஏமாத்தினடா என்று சஞ்சனா ஆர்வமாக கேட்க…. வில்லியம்ஸ் போர்டுல அவர்தான் முதல் மூவ் வெக்கனும்… ஏன்னா அவர்தான் ஒயிட் காயின் வெச்சிருந்தார்…. முதல்ல அவர் எனக்கு வெச்ச மூவ் என்னன்னு பார்த்துட்டேன்… அதுக்கு பதில் மூவ் வேக்குறதுக்கு முன்னாடி கணேஷோட போர்டுல நான்தான் ஃபர்ஸ்ட் மூவ் வெக்கணும்… ஏன்னா நான் அவர் போர்டுல ஒயிட் காயின்ஸ் வெச்சிருந்தேன்.. அப்போ நான் கணேஷுக்கு வெச்ச முதல் மூவ் என்ன தெரியுமா? வில்லியம்ஸ் உனக்கு வெச்ச மூவ்…. – என்றாள் சங்கீதா உடனடியாக…. “கரெக்ட்… சோ சிம்பிள் யூ சீ…. ஹா ஹா…. அதுக்கப்புறம் கணேஷ் எனக்கு என்ன பதில் மூவ் வெச்சாரோ அதை நான் வில்லியம்ஸுக்கு வெச்சேன்….. சோ…. ஆக மொத்தத்துல விளையாட்டு ரெண்டு கிழவனுங்களுக்குள்ள தான் நடந்து இருக்கு… வெறும் காய் நகர்த்தி வெச்சதுதான் நான்…. ஆனா இவங்க ரெண்டு பேரும் என் கிட்ட விட்ட சவால்ல சீரியஸா விளையாடும்போது நான் செஞ்ச இந்த சின்ன விளையாட்ட கவனிக்கல….” என்று சொல்லி சிரிக்கும்போது மூவருமே ராகவை “கேடி… ஃப்ராடு” என்று குறும்பாக திட்டிக்கொண்டு இருக்க மீண்டும் காளிதாஸ் உள்ளே வந்தார்… “சார்… முக்கியமான இன்விடேஷன்… இந்தாங்க..” என்று குடுக்கையில் அதை வாங்கி பிரித்து பார்த்தான் ராகவ். அதில்…. “Considering you as an highly esteemed guest, we take pleasure in inviting you for the International fashion meet to be held at Croydon city London. RSVP” (தமிழில்: உலக அளவில் நடக்க இருக்கும் நவ நாகரீக ஆடை அலங்கார கண்காட்சிக்கு உங்களின் வருகை எங்களுக்கு கௌரவத்தை சேர்க்கும் என்கிற எண்ணத்துடன் உங்களை அழைப்பதில் பெருமை கொள்கிறோம்..) என்று எழுதி இருந்தது. இதைப் பார்த்துவிட்டு ராகவ் காளிதாஸிடம் “இந்த தடவ ஒரு டிக்கெட் இல்ல சார்…. ரெண்டு டிக்கெட்….ஏன்னா நான் என் பொண்டாட்டியோட சேர்ந்து லண்டன் போகணும்….” என்று சொல்லி ராகவ் இருக்கும் இடத்தை கூட மறந்து அவன் சாராவை இழுத்து அணைக்க…. “நாம கொஞ்சம் டீசன்ட்டா கழண்டுக்கலாம்….” என்று கார்த்திக் முனு முன்னுக்க…. “கரெக்டா சொன்னடா… வா போலாம்…” என்று சஞ்சனாவும் கூறினாள்.. அதைத் தொடர்ந்து அனைவரும் வெளியே வந்த பிறகு ராகவையும் சந்கீதவையும் தனியே அனுப்பிவிட்டு இவர்கள் இருவரும் வேறு பக்கம் சென்றார்கள்…. காளிதாஸும் அங்கிருந்து அடுத்த வேலைகளை கவனிக்க சென்றார்…. கடைசியாக மூடி இருந்த ராகவ் காபின் உள்ளே காளிதாஸ் அவரின் செல்ஃபோனை அங்கேயே மறந்து வைத்து சென்றுவிட்டார்.. ராகவ் ஏதோ முக்கியமாக பேச காளிதாசை அழைக்க அவர் செல்ஃபோனில் ராகவ் காபின் உள்ளே கணீரென ஒலித்தது இந்த பாடல்.. “உன்னை அறிந்தால்…. நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்…. உயர்ந்தாலும்… தாழ்ந்தாலும்.. தலை வணங்காமல் நீ வாழலாம்… ஹோ ஹ் ஹோ ஹோ ஹோ ஹோ…லா ல லா ல லா…..” (மீண்டும் லண்டனில் சந்திப்போம்….)“சொல்லுடா தங்கம்….” – ராகவ் சங்கீதாவின் கண்களைப் பார்த்து கொஞ்சினான்…. “என்னத்த சொல்லனும் அய்யாவுக்கு?…” – சிரித்துக்கொண்டே பதில் சொல்லாமல் ஜன்னல் அருகே முகம் திரும்பிக்கொண்டு விமானத்தின் ஜன்னல் வழியே தெரியும் மேகங்களை ரசித்துக்கொண்டிருந்தாள் சங்கீதா…. வெண்ணிலா ஐஸ் க்ரீம் நிறத்தில் ஒரு லாங் ஸ்கர்ட் அணிந்து, பாதாம் பால் மஞ்சள் நிறத்தில் இடுப்பின் வளைவுகள் வறை சற்று இருக்கமாய் வரும் லெனின் டாப்ஸ் அணிந்து, சுருட்டி கசக்கி விரித்துப் பார்த்தால் எப்படி இருக்குமோ அப்படி ஒரு நீளமான ஆரஞ் துணியில் இரு முனைகளிலும் சிறிய குண்டு மணிகள் ஒன்றோடொன்று உரசி சத்தம் குடுக்கும் துணியை கழுத்து பகுதியில் ஒரு சுத்து சுத்தி தொங்க விட்டிருந்தாள். அவளது தலையின் மேல் தூக்கி விடப்பட்ட கூலிங் கிளாஸ் விமானத்தின் கூரையைப் பார்த்துக்கொண்டிருந்தது.. இப்போது சிறிய ஜன்னலின் வழியே வரும் வெளிச்சத்தில் அவளுடைய முகத்தழகை ரசித்துக்கொண்டிருந்தான் ராகவ்…
அப்போது.. “ஸர் திஸ் இஸ் வாட் யூ ஆஸ்க்டு ரைட்?….” என்று விமானப்பணிப்பென் அழகாய் சிரித்துக்கொண்டே நுனிநாவில் ஆங்கிலம் தவழ ராகவுக்கு ஒரு ரெட் ஒயினை குடுத்துவிட்டு செல்லும்போது, சங்கீதா ராகவ் பக்கம் திரும்பி “இது எத்தினாவது?” என்று லேசாக முறைத்து கேள்வி எழுப்ப.. “ஷ்ஷ்… இதாம்மா முதல்….” என்று ராகவ் பனிவாக தன் மனைவி சராவிடம் பதில் சொல்ல…. “ஹ்ம்ம்…. உன்ன நம்ப முடியாதுடா…”.. என்று சொல்லிவிட்டு அவள் திரும்பும்போது அவளது சீட்டின் முன் உள்ள ஹோல்டரில் அந்த ரெட் ஒய்ன் பாட்டிலை வைத்துவிட்டு.. “இனிமே தொட மாட்டேன்… சரியா?…. ஆனா எப்படி நடக்கனும்ன்னு சொல்லு.. கல்யாணம் ஆகி ஒரு மாசம் ஆச்சு, இப்போதான் நாம ஃபர்ஸ்ட் நைட் கொண்டாட போறோம்… அதுவும் லண்டன்ல… இப்போ என்னோட விருப்பமெல்லாம் அது உன் விருப்பப்படி நடக்கணும்…. அதான் கேக்குறேன்… நீயே சொல்லு.. ப்ளீஸ் ப்ளீஸ்..?” – என்று எப்போதும் ராகவின் கண்களை டெம்ப்ட் செய்யும் சங்கீதாவின் கன்னங்களை தேவைக்கும் அதிகமாக தன் கை விரல்களால் தடவி தன் பக்கம் திருப்பினான் ராகவ்.. “ஹ்ம்ம்.. உனக்கு என் கன்னத்தை தடவனும்னா தாராளமா தடவிக்கோ, நான் உன் பொண்டாட்டிடா… என்னை திருப்பி பார்க்க வெக்குறேன்னு சாக்கு வெச்சி தடவனுமா நீ?” – ராகவின் கைக்குள் தன் கையை கோர்த்து வைத்து செல்லமாய் கடித்து பேச ஆரம்பித்தாள் சங்கீதா.. “சரி சொல்லுறேன் கேளு….. நடக்க போற இடம் ஃபாரீன் நாடா இருந்தாலும், நடக்குற விதம் நம்ம கலாச்சாரம் படி நடந்தா எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கும்…. அதுக்கு ஏத்தா மாதிரி நீ எல்லா ஏற்பாடும் பண்ணு…” என்று டிவியில் உள்ள தொகுப்பாளினிகள் போல கழுத்தை ஆட்டி ஆட்டி, தலை முடி நெத்தியில் விழ, குரலை உயர்த்தியும் தாழ்த்தியும் கொஞ்சி கொஞ்சி ராகவிடம் பேசினாள் சங்கீதா…. “ப்ச் ப்ச்…. உனக்கு ஒன்னு தெரியுமா?….” – சங்கீதாவின் கைகளில் மென்மையாக முத்தம் குடுத்து சொன்னான் ராகவ்…. “என்ன?..” அவன் முத்தம் குடுக்கும் அழகை ரசித்துக்கொண்டே கேட்டாள் சங்கீதா.. “நான் ஏற்கனவே உன் காஸ்ட்யூம், ஜுவல்ஸ்னு எல்லாமே ச்சூஸ் செய்து அரேஞ் பண்ணிட்டேன்… கூடவே உனக்கு பிடிச்ச பாட்டு கூட அந்த நேரம் நீ கேக்குறா மாதிரி பண்ணிட்டேன்..” என்று ராகவ் சொன்னதை கேட்டு.. “ஒரு நிமிஷம் கிட்ட வா….” – ராகவின் கண்களை நேராக பார்த்து மென்மையாக புன்னகைத்து அழைத்தாள் சங்கீதா…. “ஹ்ம்ம்.. சொல்லு சொல்லு…” என்று அருகே வந்தவனின் உதட்டில் “ப்ச்….” என்று அவன் எதிர்பார்க்காத நேரம் ஒரு அழுத்தமான முத்தம் குடுத்தாள் சங்கீதா…. சிறு வயதில் பள்ளியில் நாம் படித்த நான்-டீடையில் புத்தகங்கள் மற்றும் ஃபைரி டேல் புத்தகத்திலும் வருவது போல பச்சை பசேல் என்று போர்வை போர்த்தியது போல இரு புறமும், ஈரத்தில் நனைந்த புல்வெளி ஃபிரஷ்ஷாக படர்ந்து இருந்தது. வீடுகள் அனைத்தும் ஒரே வரிசையில் சிகப்பு நிற செங்கற்களால் ஆன சுவர்களால் கட்டப்பட்டிருந்தது. ஹீத்றோ (HEATHROW, LONDON) ஏர்போர்ட் வந்தடைவதற்கு முன்பு, ராகவும் சங்கீதாவும் அமர்ந்திருக்கும் ஃப்லைட் ஒரு சில நிமிடங்கள் தரை இறங்காமல் காற்றில் மிதந்தது (இதற்கு Loitering என்று சொல்வார்கள்). அதிகமான உயரத்தில் இல்லாமல் கிட்டத்தட்ட தீப்பெட்டி அளவுக்கு கட்டடங்கள் கண்ணில் தெரியும் விதத்தில் பறந்து கொண்டிருந்தது…. அப்போது விமானத்தின் ஜன்னல் வழியே பார்க்கும்போது, இங்கிலாந்து ராணியின் பக்கிங்ஃஹம் கோட்டை, கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகளை கடந்த டவர் ஆஃப் லண்டன், மற்றும் அதன் அருகே தேம்ஸ் நதியின் மீது இரண்டு கால்களையும் ஊன்றி கம்பீரமாய் நின்றுகொண்டிருக்கும் லண்டன் பிரிட்ஜ் ஆகியவை ஒன்றோடொன்று போட்டி போட்டுக்கொண்டு நான்தான் அழகு என்று புதிதாய் வருபவர்களை கண்கவரும் விதம் வரவேற்றுக்கொண்டிருந்தது. சங்கீதாவுக்கு இதுதான் முதல் விமானப் பயணம். அதிகமான சந்தோஷத்தில் ராகவின் கைகளை இறுக்கி கட்டிக்கொண்டு அவனை தன் இருக்கையின் ஜன்னல் அருகே இழுத்து, “ஏய்.. இங்க பாரு… இது என்னதுன்னு சொல்லு…” என்று மேலிருந்து காணும் போது தன் பார்வைக்கு எதெல்லாம் ஆச்சர்யமான விஷயமாக படுகிறதோ அவற்றையெல்லாம் காட்டி அவனிடம் கேள்வி எழுப்பிக்கொண்டிருந்தாள் அவனது சரா.. அவள் ஆச்சர்யமாக கேட்கும் ஒவ்வொரு கேள்விக்கும் பதில் சொல்லும்போது அவளின் நெத்தியிலும் கன்னத்திலும், இதழ்களிலும் மாறி மாறி முத்தம் குடுத்துக்கொண்டே பதில் சொன்னான் ராகவ். “இப்போ நீ பாக்குறதெல்லாம் மேலிருந்துதான்… ஒவ்வொன்னுதுக்கு முன்னாடியும் போய் நின்னா அததோட விஸ்வரூப சைஸ் பர்த்து மயங்கிடுவ… எப்படி நீ என்ன பார்த்து மயங்கி போனியோ அது மாதிரி… ஹா ஹா..” என்று சொல்லிக்கொண்டே சங்கீதாவின் கழுத்து பகுதியில் மென்மையாக “ப்ச்” என்று ஒரு முத்தம் குடுத்தான் ராகவ்…. பார்த்துக்கொண்டிருக்கும் காட்சிகள் யாவும் கண்களுக்கு ஆச்சர்யம் அளிக்கும்விதம் அமைய, ராகவின் அன்பு முத்தங்கள் சங்கீதாவுக்கு இன்னும் சந்தோஷத்தை அதிகரித்தது. ராகவை தன் அருகே இன்னும் இறுக்கமாக அணைத்து அவன் தோள்களில் சாய்ந்து “எப்படிதான் கடந்த ஒரு மாசம் ஓடுச்சோ தெரியலடா….” – நெற்றியில் அழகாய் சுருள் முடி விழ அதை சரி செய்துகொண்டே சொன்னாள் சங்கீதா.. “ஹ்ம்ம்…” – அவள் பேசுவதை கூட அறியாமல் அவளது கண்களையும் அதன் மீது விழும் அவளது முடி அழகையும் ரசித்துக்கொண்டிருந்தான் ராகவ். “என்ன ஹ்ம்ம்.. நான் என்ன சொன்னேன்னு சொல்லு?…” – தன் கேள்விக்கு பதில் சொல்வதை விட அவள் முகத்தையே பார்த்துக்கொண்டிருப்பதை கவனித்தாள் சங்கீதா.. “ஏய்ய்.. என்னடா ஆச்சு உனக்கு?… ஹாஹ்ஹா.. ஆபீஸ்ல உன் காபின் உள்ள முதல் முதல்ல வரும்போது எப்படி நோட்டம் விட்டியோ அந்த மாதிரி நோட்டம் விடுற?… ஹல்லோ..ஹல்லல்லோ…. மிஸ்டர் CEO…” – அவள் பேச பேச தான் ஒன்றும் பேசாமல் அவளது உதட்டழகை ரசித்துக்கொண்டிருந்தான் ராகவ்… “அடேய் பொருக்கி புருஷா…” கன்னத்தை மெதுவாக தட்டி அவனை உலுக்கினாள் சரா…. “ஆங்.. ஹ்ம்ம்.. சொல்லு….சொல்லு.. கொஞ்ச நேரம் உன் அழகுல அப்படியே ஃப்ரீஸ் ஆயிட்டேன்டி..” என்று வழிந்தான்…. “ஆமா… போ.. நான் பாட்டுக்கு பேசுவேன்.. இவரு வேடிக்க பார்ப்பாராம்..” அவன் சொன்னதை உள்ளுக்குள் ரசித்து பொய்யாக கோவித்து திரும்பிக்கொண்டாள்.. அவள் தோள்கள் மீது கை போட்டு தன் பக்கம் இருக்கி அணைத்தபடி அவள் மென்மையான கன்னத்தில் “ப்ச்” என்று முத்தம் குடுத்து…. “பொண்டாட்டிய இப்படி பக்கத்துல உட்கார வெச்சு அவளோட அழக இன்ச் இன்ச்சா ரசிக்குறதுல ஒரு தனி கிக் இருக்குடி என் செல்ல அம்முகுட்டி…. ப்ச்.. ப்ச்..” “சரி.. சரி சரி…. இன்னும் ஃப்லைட் இறங்கல.. நாம நம்ம இடத்துக்கும் போகல.. கொஞ்சம் அடக்கி வாசி….” சங்கீதா பேசியவுடன் லேசான விரக்தியுடன் அவள் மீது இருந்த கைகளை தளர்த்தி உடனே வேறு பக்கம் திரும்பி கொண்டான்.. “ஏய்..” அவன் முகத்தை திருப்ப முயற்சி செய்தாள் ஆனால் அவன் திரும்பவில்லை.. “ஏய்… கோவமா?… நான் எத விளையாட்டுக்கு சொல்லுவேன் எத சீரியஸ்ஸா சொல்லுவேன்னு உனக்கு வித்யாசம் தெரியாதா?.. இப்போ ஏன் கோச்சிகிட்ட…. எம்பக்கம் திரும்புடா.. கண்ணு இல்ல.. செல்லம் இல்ல… எனக்கு இப்போ உம்மா வேணும் தர மாட்டியா?.. திரும்ம்ம்புடா….” என்று கொஞ்சிய படி அவனது முகத்தை தன் பக்கம் திருப்பினாள்… எத்தனை முறை பார்த்தாலும் சராவின் அழகு ராகவுக்கு அலுக்காது.. சங்கீதாவின் அழகுக்கு முன்னால் ஓரளவுக்குத்தான் அவனால் ரோஷம் காமிக்க முடியும்… அவள் குடுத்த சிரிப்பை பார்த்து மீண்டும் வெடுக்கென அவள் தோள்களை பற்றி தன் பக்கம் இறுக்கி “ப்ச்.. ப்ச்.. ப்ச்..” என்று அவளது கன்னத்தில் இரண்டு முத்தமும்.. கடைசியாக அவளது இதழ்களில் அழுத்தி ஒரு முத்தமும் குடுத்தான்.. “வெவ்வ வெ…. இதுக்கெல்லாம் ஒன்னும் குறைச்சல் வெக்க மாட்டான் என் அழகு பொருக்கி புருஷன்….” – மெதுவாக அவன் காதருகே சொல்லி லேசாக கடித்தாள்.. ராகவின் தோள்களில் சாய்ந்தபடி கண்களை மூடி மயக்கம் கலந்த சந்தோஷத்தில் “நம்பவே முடியலடா…” என்றாள்.. “என்ன நம்ப முடியல….” குமாரோட அப்பாவே கூட இருந்து நிர்மலா அக்கா வீட்டுல நம்ம கல்யாணத்த நடத்தி வெச்சத என்னால இப்ப யோசிச்சாலும் நம்ப முடியலடா.. “ஹ்ம்ம்.. நானும் அதை எதிர்பார்கல சரா…. சொல்லாமலேயே இருந்தா தப்பாயிடும்னு நினைச்சிதான் நான் சமயம் பார்த்து அவர IOFIக்கு வரவெச்சி நேர்ல பார்த்து நடந்தது எல்லாத்தையும் அவருக்கு எடுத்து சொன்னேன்.. குமார் செஞ்ச தப்பு, அவரோட ஆபத்தான ஸ்பிலிட் பர்சனாலிட்டி.. இதுக்கு நடுவுல அந்த வீட்டுல நீ பட்ட கஷ்டங்கள்…. நம்ம பசங்க பட்ட கஷ்டங்க எல்லாத்தையும் சொன்ன பிறகு அவர் சொன்ன வார்த்தைகள் இன்னும் எனக்கு ஆச்சரியமா இருக்கு… அவர் என்ன சொன்னார் தெரியுமா? “என் வாழ்க்கைல நான் செஞ்ச பெரிய தப்பு அவனை பெத்தது இல்ல தம்பி.. பெத்ததுக்கு அப்புறம் அவனை சரியா வளர்காததுதான்…சின்ன வயசுல எல்லாமே அவனுக்கு குடுத்து செல்லமா வளர்த்துட்டு அவனுக்கு விவரம் தெரிஞ்சப்புறம் அவனை ஓவரா கண்டிச்சு வளர்த்திட்டேன்…அதுவே அவனுக்கு மனசு இறுக்கமா மாற காரணம் ஆயிடுச்சு தம்பி” என் பையன் செஞ்ச தப்பான காரியங்க எல்லாம் ஒரு வேல நாளைக்கு வெளிய வந்தா நான்தான் அவன் அப்பான்னு தயவுசெய்து சொல்லிடாதீங்க…ஒரு கல்யாணத்தை பண்ணி வெச்சா எல்லாம் சரி ஆயிடும்னு நினைச்சி சங்கீதா வாழ்கைய பாழாக்கினதுதான் நாங்க செஞ்ச பெரிய தப்பு..’ அப்படின்னு அவர் சொன்னப்போ அவர் எதையும் சுயநலமா யோசிக்குற ஆள் மாதிரி தெரியல டா.. அவர் கூட பேசும்போது அவருக்கு இப்படி ஒரு பையனான்னு ஆச்சர்ய பட்டேன்…. ஆனா அதை விடவும் உன் அம்மா அப்பா வந்ததை பார்த்து நான் இன்னும் சந்தோஷ பட்டேன் டா” என்றான்…..
ஹ்ம்ம்.. முதல்ல என் அப்பா இதுக்கு சம்மதிக்காம இருந்தப்போ எங்கம்மா என்ன காரணம்னு கேட்டு… அதுக்கு நாளைக்கு என்னை நாலு பேர் தப்பா பேசுவாங்கன்னு எங்கப்பா சொல்லும்போது என் மனசும் ரொம்ப கஷ்ட பட்டுச்சுடா…அந்த நேரம் குமார் அப்பாவே எங்கப்பா கிட்ட இறங்கி வந்து “எனக்கொரு பொண்ணு இருந்து, அவளுக்கு இப்படி ஒரு நிலைமை வந்து இருந்தா இந்நேரம் தகப்பன் ஸ்தானத்துல சந்தோஷமா நானே அவளுக்கு இன்னொரு கல்யாணம் கட்டி வெப்பேன். நாலு பேர் பேசுறதுக்கு கெளரவம் பாக்காதீங்க சம்மந்தி, இவளோ நாளா உங்க பொண்ணு வாழ்ந்த வாழ்கைய யோசிச்சி பாருங்க.. வாழ்கை ஒரு தடவதான், அதுலயும் நாம இந்த உலகத்துல இருக்க போகுறது இன்னும் அதிக பட்சம் பத்துல இருந்து பதினைஞ்சு வருஷத்துக்கு தான், கடைசியா கண்ணை மூடினா கூட நாலு பேர் பேசினதை விட்டுட்டு உங்க மனசாட்சிக்கு விரோதமா நீங்க நடக்காம இருந்திருந்தா நிம்மதியா உயிர விடலாம்னு பொறுமையா எங்கப்பாவுக்கு எடுத்து சொல்லி நம்ம கல்யாணத்துக்கு சம்மதிக்க வெச்சத யோசிச்சா நடந்தது எல்லாம் ஒரு கனவு மாதிரி இருக்கு டா…. என்னால நம்பவே முடியலடா….” என்று ராகவின் தோள்களில் சாய்ந்துகொண்டே கண்களை மேல்நோக்கி ராகவைப் பார்த்துக்கொண்டே பேசினாள் சரா..

No comments:

Post a Comment