Monday, August 4, 2014

சங்கீதா - இடை அழகி 83


உள்ளே ஏறலாம் என்று மெல்ல நடந்து வந்தவன் சற்று அமைதியாய் அப்படியே ஸ்டில்லில் நிற்க.. மஃடியில் இருக்கும் மீதி இருவரும் ஒரு நிமிடம் அவனை அப்படியே கூர்ந்து கவனித்தனர்.. மூவரும் அப்படியே அங்கும் இங்கும் நகராமல் சற்று நிமிடங்கள் உறைந்து நின்றனர்…. நின்றனர்… நின்றனர்…. ஒருவருக்கொருவர் பார்த்தார்கள்…. மீதி இருவரும் லேசாக அசரும் வேலையில் உடனே அதிவேகமாக அங்கிருந்து வேகம் பிடித்து ஓட ஆரம்பித்தான் சம்பத்…. உடனே மீதி இருவரும் அவனை கூட்டத்தில் பின் தொடர்ந்து ஓடிப் பிடிக்க முயற்சித்தார்கள்.. கிட்டத்தட்ட நெருங்கி விட்டார்கள்.. ராஜேந்திரனுக்கு “ச்ச எவ்வளோ சொல்லியும் சொதப்பிட்டாங்களே..” என்று கடித்துக்கொண்டார்… சம்பத்தை அவனுக்கு பின்னாடி மிகவும் நெருங்கி ஓடி வந்து பிடிக்க முயற்சித்த இருவரை யாருமே எதிர்பார்க்காத வண்ணம் அவன் கையில் இருக்கும் கேமராவில் ஒரு பட்டனை அழுத்த…. லென்ஸ் இருக்கும் வழியே அந்த இருவரின் கால்களில் புல்லெட் பாய்ந்தது… அவன் சுடும் வரை அனைவருமே அது கேமரா என்றுதான் எண்ணி இருந்தார்கள்..
ஆனால் அது கேமராவை போல தோற்றம் கொண்ட துப்பாக்கி என்பது யாருக்கும் தெரியவில்லை…. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ராஜேந்திரன் உடனே அந்த சுவரை எகிறி குதித்துக் கொண்டு “யூ ஆல் பீ ஹியர் சேஃப்லி….” என்று கத்திக் கொண்டே சம்பத்தை நோக்கி ஓட…. ஸ்டேஷன் என்ட்ரன்ஸ் அருகே மஃடியில் நின்றிருந்த இரண்டு போலீஸ்காரர்கள் அவனை பிடிக்க நேரும்போது ஒருவனுடைய கையில் மட்டும் சம்பத் சிக்கினான்… ஆனால் பிடித்தவன் கையை தன் கேமரா போன்ற துப்பாக்கியை வைத்து பிடித்தவன் தோளில் ஓங்கி குத்தி அவன் பிடியில் இருந்து தப்பி எஸ்கேப் ஆகி விட்டான்… சில நேரம் கழித்து ராகவும் அவன் உடன் இருந்தவர்களும் ராஜேந்திரனை நோக்கி சென்று என்ன ஆனதென்று கேட்க…. “வெறி சாரி சார்…. ” என்று இன்ஸ்பெக்டர் சொல்ல “உக்கும் நான் தான் அப்போவே சொன்னேனே….” என்று கார்த்திக் முணுமுணுத்தான்.. “எப்படியும் முயற்சி பண்ணி திருப்பி அவனை பிடிக்கிறோம்….” என்று ராஜேந்திரன் சொல்ல…. ராகவ் ஒன்றுமே பேசாமல் சில நிமிடம் இன்ஸ்பெக்டரை தொடர்ந்து மெளனமாக பார்த்தான்.. “என்ன சார் யோசிக்குறீங்க?.. சொல்லுங்க” என்றார் ராஜேந்திரன்… மீண்டும் ஒன்றும் பேசாமல் அங்கிருந்து மெல்ல நகர்ந்தான்…. “மிஸ்டர் ராகவ்.. நீங்க ஏதோ சொல்ல வந்தீங்களே?…” என்று மீண்டும் இன்ஸ்பெக்டர் கேட்க ஒரு நொடி யோசித்துவிட்டு “இல்ல.. ஒண்ணுமில்ல…” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து மெதுவாக விலகி சென்றான் ராகவ். அப்போது “சார்…” என்று கார்த்திக் போலீஸ் அருகே சென்று மெதுவாக அழைக்க… “என்ன?..” என்று வாயால் கேட்காமல் பார்வையால் பார்த்து கேட்டார் இன்ஸ்பெக்டர்…. “என்னோட சேர்ந்து சொல்லுங்க…. ஆல் இஸ் வெல்…. ஆல் இஸ் வெல்….” என்று அவரின் நெஞ்சில் கை வைத்து கார்த்திக் சொல்ல.. கடுப்பின் உச்சத்துக்கு சென்று “ஷட் அப்….” என்று கத்தினார்.. அப்போது “அடுத்த தடவ உங்க கிட்ட மோப்பம் பிடிக்குற நாய்ங்க ரெண்டு மூணு இருந்தா கூட்டிட்டு வாங்க சார்.. மஃப்டில இருக்குறவங்களை விட அது உங்களுக்கு அதிகமா உதவி செய்யும் சார்….” என்று சொல்லிக்கொண்டே அங்கிருந்து மெதுவாக இன்ஸ்பெக்டரின் முறைப்புக்கு பயந்து ஓடினான்…. “கய்ங்….கய்ங்….” என்று சதம் குடுத்துக் கொண்டே கார் கதவுகள் திறக்கப்பட்டன.. விரக்தியுடன் உள்ளே ஏறினான் ராகவ்.. நால்வரும் காரில் IOFI அலுவலகத்துக்குள் இருக்கும் வி.ஐ.பி லாஞ் செல்வதற்கு பதிலாக நேரத்தையும், தூரத்தையும் மனதில் கொண்டு அருகில் உள்ள தனது IOFI நிறுவனத்தின் வெளிநாட்டு விருந்தாளிகளுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட ஐந்து நட்சதிர ஹோட்டல் வசதிகளைக் கொண்ட கெஸ்ட்ஹவுஸுக்கு சென்றார்கள். ராகவின் கோட்டா படி அவனுக்கு எப்பொழுதும் அவனுடைய சிறப்பு விருந்தாளிகளுக்கு என்று மூன்று அறை ஒதுக்கப் பட்டிருக்கும்… “ஹலோ சார், ஹவ் ஆர் யூ?…. யூ நீட் த கீஸ்?” என்று அந்த இடத்தை கண்காணிக்கும் சீனியர் மேலாளர் ராஜேஷ் ராகவிடம் முகமலர்ந்து சிரித்து கை குலுக்கி வரவேற்றார்.. அப்போது “எஸ்… ப்ளீஸ்…” என்று சொல்லி சாவியைப் பெற்றுக் பெற்றுக்கொண்டான். “டேய் மச்சி…. சாவிய ஸ்டைலா வாங்கிட்டு நீ பாட்டுக்கு போகாதடா…. பசிக்குதுடா…. முதல்ல அதுக்கு வழி பண்ணு” – என்றான் கார்த்திக்.. “ஆங்.. ராஜேஷ்… எங்களுக்கு சாப்பிட… ” என்று ராகவ் கேட்க.. “உங்க ரூமுக்கு அனுப்பிடவா சார்…” – என்றார் ராஜேஷ் “இல்ல இல்ல… புஃப்பே (buffet) இன்னும் இருக்குல்ல?” “ஒஹ் எஸ் இருக்கு….” “அது போதும் நாங்க பார்த்துக்குறோம்….” அவ்வளவாக பசி ஏதும் இன்றி வெறுமென ஒரு ஜூஸ் குடித்துவிட்டு தன் அறைக்கு சென்றான் ராகவ்.. அப்போது அவன் முகத்தில் உள்ள விரக்தியையும் பசி இல்லாமல் ஏதோ அவன் மனதை வாட்டுவதையும் கவனிக்க தவறவில்லை சங்கீதா.. மற்றொரு புறம் கார்த்திக்கும் சஞ்சனாவும் சாப்பிட தயாரானார்கள்…. கார்த்திக் சிட்டி பையன் கிடையாது. அவனுக்கு இந்த மேல்தட்டு பழக்க வழக்கங்கள் பற்றிய அறிவு சற்று கம்மிதான் என்றாலும் புஃப்பே என்றால் தானாகவே தட்டில் எது வேண்டுமோ அதை எடுத்து வைத்து சாப்பிடவேண்டுமென்ற விஷயம் அவனுக்கு தெரியும். வெளி நாட்டு விருந்தாளிகளுக்கு அவர்களின் ருசிக்கு ஏற்ப இந்திய உணவு மற்றும் சைணிஸ் வகை உணவுகளும் அங்கே வைக்கப் பட்டிருந்தன. “சாப்பாட்டுக்கு ஒரு வழி பன்னுடானா என்னை இப்படி பல வகையான சாப்பாடுக்கு மத்தில நிக்க வெச்சிட்டு ஒரு வழி பண்ணிட்டு போய்டானே…. எனிமி..எனிமி….” என்று எண்ணி ராகவை ககடிந்து கொண்டான். அவன் அருகே சஞ்சனா நின்றிருந்தாள். கொஞ்ச நேரம் அவள் எந்த உணவெல்லாம் அவளது தட்டில் எடுத்து வைக்கிறாள் என்று பார்த்து அதை எல்லாம் தானும் அப்படியே எடுத்து வைக்கலாம் என்று எண்ணி அப்படியே அவள் பின்னால் நின்றான். ஆரம்பத்தில் அவள் ஒரு சிறிய கப்பில் லெமன் கோரியாண்டர் சூப் எடுத்தாள். அவனும் அதையே எடுத்தான். கொதிக்க கொதிக்க இருந்த அந்த சூப்பில் ஒரு ஸ்பூன் சிப் செய்து அவள் குடிப்பதை கவனித்தான். இருவரும் ஒரு சிறிய மேஜையில் இருவர் மட்டும் அமரும் இருக்கையில் அமர்ந்தார்கள். உள்ளே இருந்த இன்டீரியர் டிசைன்கள் கண்களை கொள்ளை கொண்டது… மெதுவாக சத்தம் கேட்கும் பியானோ இசை காதுகளுக்கு இதமாக இசைத்துக் கொண்டிருந்தது. மேஜையில் அவனுக்கு எதிரில் சஞ்சனா வந்தமர்ந்தாள். இருவரின் தலைக்கும் மேலே ஒரு சிறிய மஞ்சள் நிற வெளிச்சம் தரும் விளக்கு எறிந்து கொண்டிருந்தது. டார்க் பிரவுன் நிற பளபளக்கும் மர மேஜையின் மீது சஞ்சனாவின் கைகள் மிக அழகாக தெரிந்தது. மெல்லிய சில்வர் காப்பு, சிறிதளவும் ரோமம் இல்லாத பளபளப்பான கைகள். காலையில் இருந்து மாலை ஸ்டேஷனில் இருந்து கிளம்பும்வரை அவளின் முகத்தை அவன் பெரியதாய் கவனிக்கவில்லை. சங்கீதா அளவுக்கு உயரமோ நிறமோ அவளிடம் கிடையாது. இருந்தாலும் அவளைப் பார்த்தால் “ஏ ப்ரிட்டி வுமன்” என்று யாருமே சொல்லக் கூடிய தோற்றம் அவளுடையது.
அவளுக்கே தெரியாமல் அவளின் முகத்தை சற்று நேரம் அயர்ந்து பார்த்துக் கொண்டு கொதிக்கும் சூப்பை அப்படியே கவனிக்காமல் வாயில் ஒரு சிப் வைத்தான். “அய்யோ..” என்று ஒரு சிறிய சத்தம் குடுத்து ஸ்பூனை மேஜை மீது தொப்பென்று போட…. “ஹா ஹா…” என்று மெதுவாக சிரித்து அவனை பார்த்தாள் சஞ்சனா.. “இல்ல கொதிக்குறதை கவனிக்கல.. அதான்.. இல்லனா…” என்று இழுத்தவனை நோக்கி “கார்த்திக் நீ என்னை இன்னும் உன் ஃபிரெண்டா பார்க்கலைன்னு நினைக்குறேன்…” என்று சொல்ல “ச்ச…. ச்ச…. அப்படியெல்லாம் இல்ல.. ஏன் அப்படி கேக்குறீங்க…” “ஃபர்ஸ்ட்… இந்த நீங்க வாங்க போங்க வேணாம்…. ஓகே?….” என்று அளவை சிரித்து சொன்னாள் சஞ்சனா…. “ஹ்ம்ம் ஓகே..” – சந்தோஷமாய் ரிப்ளை குடுத்தான் கார்த்திக்.. “நீ இதுக்கு முன்னாடி புஃப்பே ல சாப்டதில்லையா?” – இஷ் என்று சூப்பை உறிந்து கொண்டே கேட்டாள் சஞ்சனா.. “……” சில நொடிகள் மெளனமாக இருந்தான்… இல்லை என்று சொன்னால் தனக்கு ஒன்றும் தெரியவில்லை என்று எண்ணி விடுவாளோ என்கிற யோசனை ஒருபுறமிருக்க…. ஹ்ம்ம் பரவயில்ல.. உண்மையா இதெல்லாம் தெரியாதுன்னு சொல்லிடலாமா…. என்று அமைதியாய் எண்ணிக் கொண்டிருக்க… “ஹலோ கார்த்திக்…. நான் உன் கிட்டதான் பேசுறேன்..” என்றாள் சஞ்சனா. “ஆக்ச்சுவல்லி…அது வந்து… ” ஆரம்பத்தில் சற்று தயங்கி..”எனக்கு இது புதுசு.. இதுக்கு முன்னாடி இப்படி சாப்டதில்ல…” என்று கார்த்திக் மெதுவாய் உண்மையை சொல்ல…. சூப் ஸ்பூனை மேஜையின் ஓரத்தில் வைத்துவிட்டு கைகளை கட்டி கார்த்திக்கின் கண்களை சில நொடிகள் கூர்ந்து பார்த்தாள் சஞ்சனா… “சரி…. இன்னில இருந்து என்னையும் உன் நல்ல ஃபிரெண்டா ஏத்துக்கோ…. மனசுல எது பட்டாலும் ஓப்பனா பேசு… என் கிட்ட உனக்கு எந்த தயக்கமும் தேவ இல்ல? சரியா?….” என்று அவள் பேசுவதை கேட்கையில் ஒரு விதமான சந்தோஷத்தை உணர்ந்தான் கார்த்திக்…. அப்போது பதில் ஏதும் பேசாமல் அவளின் பார்வையைப் பார்த்தவன் அதில் அப்படியே பதில் ஏதும் சொல்ல முடியாமல் அமைதியாய் இருந்தான்… இதை கவனித்த சஞ்சனா மென்மையாக அவனைப் பார்த்து சிரித்து கைகளை அசைத்து மீண்டும் “ஹல்ல்லோ.. ஹால்லல்லோ” என்று தலை அசைத்து மென்மையாக சிரித்து புருவங்கள் உயர்த்தி பாட்டு பாடும் விதத்தில் சொல்ல “ஆங்… சொல்லுங்க.. சொல்லுங்க..” என்று எதுவும் பெரிதாய் கவனிக்காதவன் போல ஒரு சிறிய ஆக்ட் குடுத்தான் கார்த்திக்…. “ஹா ஹா… ஆளப்பாரு….” என்று சிரித்துக் கொண்டே “நான் உங்கிட்ட இன்னில இருந்து என்னையும் உன் நல்ல க்ளோஸ் ஃபிரெண்டா ஏத்துக்கோ…. என் கிட்ட உனக்கு எந்த தயக்கமும் தேவ இல்ல?.. அப்படின்னு சொன்னேன்.. சரியா?….” “ஹ்ம்ம்.. கண்டிப்பா…. நீங்க ரொம்பவே குடுத்து வெச்சவங்க….எங்கம்மா அடிக்கடி சொல்லும்… உன் கூட ஃபிரெண்டா இருக்குறவங்க உண்மையாவே குடுத்து வச்சவங்கடா…. உன்னை மாதிரி அவங்களுக்கு ஒரு ஆள் கிடைக்காதுன்னு….”
“ஹா ஹா… ராகவ் லக்கிதான் அதான் அவனுக்காக எல்லா உதையையும் நீயே வாங்கிக்குறியே” என்று சஞ்சனா சிரிக்க கார்த்திக் பாவமாக அமைதியானான்.. “சரி என் கூட வா…. நான் ஸ்வாரஸ்யமான சிலதெல்லாம் உனக்கு சொல்லுறேன்…” உண்மையில் சஞ்சனாவின் கண்களில் ஒரு உற்சாகம் தெரிவதை கவனித்தான் கார்த்திக்.. அது அவனுக்குள் ஒரு உற்சாகத்தைக் குடுத்தது.. “எப்போவுமே புஃப்பேல முதல்ல சூப் வெச்சி இருந்தா அதை எடுத்துக்கணும்.. காரணம் எதுக்குன்னா முதல்ல ஆற அமர எல்லாரும் சூப்பை ஊதி குடிச்சி முடிச்ச பிறகு பசி நல்லா எடுக்கும்னு சொல்லித்தான் இந்த பழக்கம் இருக்கு..” “குடிக்கலைனா கூட எனக்கு நல்லாவே பசி எடுக்குமே….” என்று கார்த்திக் பதில் சொல்ல.. “சப்…. என்ன பேசி முடிக்க விடுடா வாத்து..” என்று மெதுவான கடுப்பில் ஒரு நிமிடம் லேசாக கடித்துக் கொள்ள… கார்த்திக் பாவமாக அவளைப் பார்த்து கொஞ்சம் உரிமையுடன் லேசாக முறைத்தான்.. “சரி சரி… ஐ அம் சாரி…. ஐ அம் சாரி… ஏதோ நினைப்புல சொல்லிட்டேன்… கோச்சிகாத சரியா…. ஹா ஹா… சோ ச்வீட்… இப்போ உன் மூஞ்சிய பார்க்க செம காமெடியா இருக்குடா….” “போதும் போதும் மேல சொல்லு…. சாப்புட வர்றதே பசி எடுக்குறதாலதான்…அங்க வேற வந்து சூப்பை குடிச்சி எக்ஸ்ட்ரா பசி வர வெச்சிப்பாங்கலாம்…. நல்ல கூத்து டா” என்று முணுமுணுத்தான் கார்த்திக்.. அவனிடம் புஃப்பே எதார்த்தங்களை எடுத்துக் கூறுவதை கூட ஒரு நிமிடம் மறந்து அவன் வெகுளியாக பேசும் விதத்தை அவளது ஆழ் மனதில் ரசித்தாள் சஞ்சனா… கடந்த சில ஆண்டுகளாக அவளிடம் போலியாக பேசியவர்கள் அதிகம்…. ஆனால் இப்படி யாரும் அவளிடம் மனம் விட்டு உண்மையாய் பேசியதில்லை…. அதை கார்த்திக்கிடம் உணர்ந்து ரசித்தாள் சஞ்சனா..“வித விதமா நிறைய சாப்பிடுற வரைடீஸ் வெச்சி இருப்பாங்க…. நமக்கு எது வேணுமோ அதை கொஞ்சகொஞ்சமா எடுத்து வெச்சி சாப்டுக்கலாம்…. இன்னொரு விஷயம் சொல்லவா?…. நல்லா கொட்டிகனும்னு வர்றவங்க ஒரு ஜாதி… அது கூட பரவாயில்ல.. என்ன சாப்பிடுரதுன்னே தெரியாம பேந்த பேந்த முழிச்சி கடைசியா ஏதாவது புடிச்ச்சதை சாப்டுட்டு மீதிய தட்டுல வெச்சிட்டு வேஸ்ட் பண்ணுறது இன்னொரு ஜாதி….” – இதை அவள் சொல்லும்போது கார்த்திக் ஒரு திருட்டு முழி முழித்தான்.. அதை கவனித்த சஞ்சனா.. “ஹா ஹா… ச்சீ லூசு நான் உன்னை சொல்லல…. அதான் நான் உங்கூட இருக்கேன்ல எது எது என்னன்னு உனக்கு நான் சொல்லாமலையா போய்டுவேன்….? முதல்ல நான் சொன்ன ரெண்டு தரப்பினர விடவும் எல்லாத்தையும் கொஞ்சகொஞ்சமா ஒரு ருசி பார்த்துட்டு எது ரொம்ப பிடிச்சி இருக்கோ அதை கடைசியா கொஞ்சம் தட்டுல அதிகம் வெச்சி திருப்தியா சாப்டுட்டு போறவங்களுக்குதான் இந்த புஃப்பே கரெக்ட்டா இருக்கும்….” என்றாள்…. “சரி உனக்கு எது பிடிச்சி இருக்குன்னு சொல்லு..” என்றாள் சஞ்சனா.. “ஹ்ம்ம்…. நமக்கெல்லாம் நாக்குல எது பட்டாலும் உடனே ஜிவ்வுன்னு காரமா இருக்கிறதுதான் வேணும்…. என்று கார்த்திக் சொல்ல “ஹா ஹா…. நீயும் என் ஜாதிதான்… வா..” என்று சொல்லி ஸ்பைசி சில்லி க்ரேவியும் மெத்தென்று இருக்கும் ருமாலி ரொட்டியையும் வைத்து லேசாக மூக்கிலும் கண்களிலும் தண்ணி வரும்விதம் சாப்பிடுவதைப் பார்த்து இருவரும் ஒருவருக்கொருவர் மெதுவாக சிரித்துக் கொண்டார்கள்…. சாப்பிடும்போது ஆரம்பத்தில் கார்த்திக் எப்படி சஞ்சனாவின் தோற்றத்தை ரகசியமாக ரசித்தானோ அதே போல இப்போது சாப்பாட்டில் ஆழ்திருக்கும் அவனை அவனுக்கே தெரியாமல் சஞ்சனா அவன் முகத்தில் தெரியும் ஒரு விதமான வெகுளித்தனத்தயும் வசீகரத்தையும் ரகசியமாக கவனித்து ரசித்தாள். நடுவில் அவனுக்கு சற்று பொரை ஏற…. உடனே அவளது இருக்கையில் இருந்து எழுந்து அவன் பக்கம் வந்து நின்று தலையில் தட்டும்போது அவனை நெருங்கி நின்றாள். அப்போது அவனது முகம் லேசாக அவளது இடுப்பில் உரசியது.. அந்த ஒரு நொடி ஏற்பட்டபட்ட உணர்வு என்ன உணர்வு என்று அவனாலேயே புரிந்துகொள்ள முடியவில்லை..ஆனால் அவளுடைய இந்த பரிவும், நட்பும், அரவணைப்பும் அவன் மனதில் ஒரு விதமான சந்தோஷத்தைக் குடுத்தது…. அவளின் கையை தன் தலை மீது பிடித்து “போதும்” என்று சொல்லவந்து அவளுடைய மென்மையான ஸ்பரிசத்தை தொட்டபோது சில நொடிகளில் பொறை தானாகவே நின்றது அவனுக்கு.. அவன் கைகள் தன் கை மீது பட்டபோது அவளும் செயலற்று நின்றாள். இருவரும் ஒருவருக்கொருவர் ஒன்றும் பேசாமல் சில நொடிகள் பார்த்துக்கொண்டிருக்க “ஹஹா.. ஆன்னு வாய திறந்துகிட்டு இருக்காத… ஈ போய்ட போது.. ஃபர்ஸ்ட் வாய க்ளோஸ் பண்ணு…” என்று லேசாக வெட்கத்தில் சிரித்து கண்களை நேராக அவனை பார்ப்பதை தவிர்த்து கீழே பார்த்து அவளது இருக்கைக்கு சென்று அமர்ந்தாள்..” அவளது சிரிப்பை சந்தோஷமாக வைத்த கண் வாங்காமல் பார்த்து வாயை மெதுவாக அசை போட்டுக்கொண்டு இருந்தான் கார்த்திக்…. சற்று நேரத்திருக்கு பின் “சரி வா டெஸர்ட்க்கு போலாம்..” என்று அவள் சொல்ல ஒன்றும் புரியாமல் முழித்தான்.. அதைப் பார்த்து “ஹா ஹா… டெஸர்ட்னா சாப்டு முடிச்ச பிறகு ஜூஸ் இல்லைனா ஐஸ்க்ரீம் போல எடுத்துக்குற வஸ்த்துங்க.. வேணாமா உனக்கு?” என்று சிரித்து கேட்க.. உடனே மடக் மடக் என்று தண்ணியை குடித்துவிட்டு “ஐ கம் யூ குய்க்லி” என்று ஏதோ இங்லீஷ்ல உளற “நீ என்ன சொல்ல வந்த….” என்று புரியாமல் சஞ்சனா கேட்க… “அய்யோ உடனே உன் கூட வரேன்னு சொன்னேன்….
கொஞ்சம் இங்லீஷ் பேசிடக்கூடாதே” என்று வாயில் துணியை வைத்துத் துடைத்துக் கொண்டே அவளுடன் ஐஸ்க்ரீம் பக்கம் சென்றான். வேண்டிய அளவுக்கு இருவரும் ஒன்றிரண்டு ஸ்கூப் வைத்துக் கொண்டு அதை ருசித்துக் கொண்டே அமரலாம் என்று மேஜைக்கு செல்லும்போது “கார்த்திக்… இங்கேயே வேணாம்.. வெளியே லான் நல்லா இருக்கும்.. அங்க போலாம் வா..” என்று சொல்லி ஒரு மிதமான வெளிச்சம் இருக்கும் இடத்தில் நல்ல ஜில்லென்ற காற்று அளவாக அடித்துக்கொண்டிருக்கும் இடத்தில் இருவரும் அருகருகே அமர்ந்தார்கள். “கார்த்திக்…. உனக்கு எப்படி ராகவ் க்ளோஸ் ஆனான்….” “அது பெரிய கதை….” “சும்மா சொல்லேன்..” அவன் பக்கம் தலை சாய்ந்து சிரித்து கேட்கையில் அவளுடைய சிரிப்பும் கண்களும் காதில் மின்னும் சிறிய அழகான கம்பல்களும் அவனை ஈர்த்தது…. “ஹலோ.. அப்போ அப்போ நீ திடீர்னு ஆஃப் ஆயிடுற.. நான் உன்னை ஆன் செஞ்சி பேச வேண்டியதா இருக்கு…போ….” – என்று சொல்லி செல்லமாய் அவனுடைய தோளில் உரிமையாய் குத்தினாள்…. அவள் நெருக்கத்தில் இருக்கும்போது அவள் மீதிருக்கும் ஒரு விதமான நறுமணம் கார்த்திக்கு பிடித்திருந்தது… “எனக்கு அவன் மணசு ரொம்ப பிடிக்கும்….” என்று சஞ்சனாவை ரகசியமாக ரசித்துக் கொண்டே பேச தொடங்கினான்….

No comments:

Post a Comment