Friday, August 8, 2014

சங்கீதா - இடை அழகி 99


“ஹக்.. க்ர்ஹ்ம்…. ஸோ….” – என்று கார்த்திக் அமைதியை உடைக்க…. “ஸோ….?” – ஓரக்கண்ணால் பார்த்தாள்.. “ஸோ…. ஏதாவது பேசு… ஏன் ஒன்னும் பேச மாட்டேங்குற?” – மெதுவான குரலில் கேட்டான் கார்த்தி.. அவளிடமிருந்து மௌனம்…. “பிடிக்கலையா?” – கஷ்ட்டப்பட்டு பேசுனதெல்லாம் வீனாப்போயிடுமோ என்றசின்ன பதட்டத்துடன் கேட்டான் கார்த்திக்..
“அப்டியெல்லாம் இல்ல” என்று மெளனமாக தலையசைத்தாள்.. “பின்ன ராங் டைமா?…. இப்ப பேச பிடிக்கலையா?….” – மெல்ல கதவை நோக்கி நகர்ந்தான் கார்த்திக்.. அதை கவனித்த சஞ்சு நிற்குமிடத்தில் இருந்து சற்று நிமிர்ந்தாள்.. இறங்குவதற்கு முன் “என்ன…. பிடிக்கலையா சஞ்சு..?” – குரல் லேசாக தழுதழுத்தது கார்த்திக்கு.. “உன்ன பிடிக்கலன்னு நான் சொன்னா நீ நம்பிடுவியா….” கூர்மையாக கேட்டாள் சஞ்சனா.. “அப்போ என்ன ஏத்துக்குறதுல ஏதாவது குழப்பமா?..” என்று கேட்டுஅவன் முகம் வாடுவதை கவனித்தாள் “அப்டியில்ல..” என்று மீண்டும் பேசாமல் மௌனமாய் தலையசைத்து பதில் சொன்னாள்.. “ஓகே உனக்கு யோசிக்க இன்னும் டைம் வேணும்ன்னு நெனைக்குறேன்.. ஷ்ஷ்ஹ்ம்ம்ம்….” என்று லேசாக மூச்சுவிட்டபடி மீண்டும் கதவை நோக்கி படி இறங்க நகர்ந்தான்.. அப்போது அவசரமாக ஓடிப்போய் அவன் முன் நின்றபடி தன் முதுகால் திறந்திருந்த கதவின் மீது சாய்ந்து “படார்” என்று சத்தம் கேக்கும்விதம் கதவடைத்தாள் சஞ்சு.. “போகாத…” – முகத்தில் ஒரு ஏக்கமும், கண்களின் ஓரத்தில் சந்தோஷத்தால் சிறிய கண்ணீர் துளிகளுடனும் கார்த்தியை பார்த்தாள்.. நம் கார்த்தியின் மனதில் சந்தோஷமும் குழப்பமும் கலந்து அவளை நம்ப முடியாமல் பார்த்தான்… “இல்லடா…. நீ என்ன சொல்லுவியோ ஏது சொல்லுவியோன்னு நெனச்சி நெனச்சி ஒண்ணுமே எறங்கலடா…. அஅவ்வ்வ்வ்”….. என்று பேசி முடிக்கையில் ஒரு பெரும் ஏப்பம் வந்த சத்தம் கேட்டு அவன் முகத்தை குழப்பத்துடன் நிமிர்ந்து பார்த்தாள் சஞ்சு…. “எப்படி புளுகுது பாரு ஃப்ராடு… ஃப்ராடு…” என்று சாய்ந்தபடி அவன் நெஞ்சில் சஞ்சு சற்று நன்றாகவே குத்த… “அய்யோ……அம்மா……. வலிக்குதுடி… இரு இரு சொல்லுறேன்….” என்று கார்த்திக் சிரித்தபடி சிணுங்க சற்று அமைதியானாள் சஞ்சு.. “இது வேற ஒண்ணுமில்ல…. ரெண்டுமணி நேரத்துக்கு முன்னாடி வயிறு சுண்டி இழுக்குதேன்னு சொல்லி ரூமுக்கு போயி ஃபிரிட்ஜ்ல இருந்து ஃ”மைக்ரோ வேவ்” ல சூடு பண்ணி உள்ள தள்ளின ரெண்டு போண்டாவோட எஃபக்ட் டி… கடைசியா டீய சூடு பண்ணி எடுத்துட்டு வந்து உன் வீட்டுக்கு கீழ உட்கார்ந்து குடிக்க ஆரம்பிக்கும்போதுதான் உன் ஃபோன் கால் வந்துச்சி.. உன் கால் பார்த்த சந்தோஷத்துல அந்த டீய குடிக்காம அப்படியே மேல ஓடி வந்துட்டேன்…. இதுதான் நடந்துச்சி…. ஆவ்வ்வ்வ்… ச்சே.. கரக்டா நீ சாப்டியான்னு கேள்வி கேக்கும்போது இந்த ஏப்பம் வந்து தொலயிதுபாறு..!! – என்று சமாளித்து பாவமாய் அவளை பார்த்தான் கார்த்திக்.. சொன்ன வார்த்தைகளுக்கு லேசாக சிரித்துவிட்டு அவன் கண்ணத்தில் மெதுவாக அறைந்து “ஆளப்பாரு…. நடு ராத்திரி போண்டா தின்னுருக்கு.. ஹும்…” என்று சொல்லிக்கொண்டே கிச்சனுக்கு சென்று அவனுக்கு டீ போட தயாரானாள்…. நேற்றைய மதியம் புடவையில் அவளின் உடல்வாகை கிச்சனில் ரசித்ததை கார்த்திக் மறக்கவில்லை.. ஆனால் இன்று ஸ்கர்ட் மற்றும் அழுத்தமான டாப்ஸ் அணிந்து கூடவே ஷாலில் விரித்த கூந்தலுடன் நிற்கையில் அவளது நேர்த்தியான வளைவுகளை கொண்ட பின்னழகு அவனது பார்வையை ஏகத்துக்கும் ஈர்த்தது.. டீ க்லாசுடன் வந்து ஹாலில் கார்த்தியின் அருகில் நெருங்கி அமர்ந்து “இந்தா… குடி..” என்றாள் சஞ்சு.. அவளின் நெருக்கத்தை சுகமாய் உணர்ந்தான் கார்த்திக்.. டீயை வாங்கி குடிக்க ஆரம்பித்ததிலிருந்து அவளையே பார்த்துக்கொண்டிருந்தான்.. என்னடா அப்படி பாக்குற?…. - “இல்ல… ரொம்ப சந்தோஷமா இருக்கு.. எனக்கு இவ்வளோ அழகா கூடவே நல்ல மனசோட ஒரு பொண்ணு கிடைப்பான்னு என் வாழ்க்கைல நான் எதிர்பார்க்கல.. நிஜமாவே நீ எனக்கு கிடைக்க போறியா சஞ்சு? கிள்ளி பார்த்துக்கணும் போல இருக்கு..” என்றான்.. மிகவும் நெருக்கத்தில் அமர்ந்து அவன் கேட்கும் இந்த கேள்வியை அவன் கண்களைப் பார்த்து அமைதியாய் ரசித்தாள் சஞ்சு.. காரணம் அவன் வாய் திறந்து கேட்டுவிட்டான்.. ஆனால் அதே கேள்வியை அவள் மனதுக்குள் இவனை எண்ணி ரகசியமாக அந்த சந்தோஷத்தை ரசித்துக்கொண்டிருந்தாள்…. நீ என்ன அப்படி யோசிச்சிட்டு இருக்க?.. என்றான் “ஒண்ணுமில்ல டா…” “ஹ்ம்ம்.. உண்மையாவே நீ எனக்கு கிடைக்க போறியா சஞ்சு?….” – இன்னும் அவனுக்குள் ஆச்சர்யம் அடங்கவில்லை.. “ப்ச்..” என்று சற்றும் எதிர்பார்காத விதம் கார்த்தியின் கண்ணத்தில் சஞ்சு முத்தமிட்டாள்.. முத்தத்தை வாங்கியவன் மொத்தமாக ஆஃப் ஆகி விட்டான்.. “இந்த நிமிஷத்துல இருந்து நான் உனக்கு சொந்தமானவ கார்த்தி..” என்று சொல்லிக்கொண்டே அவன் தலையை வருடினாள்…. அவளுடைய பதிலும், முத்தமும் அவனுக்கு மிகவும் சந்தோஷம் குடுத்தது.. இருந்தும் அவன் கண்களில் எதோ ஒரு ஏக்கமும் தயக்கமும் இருப்பதை கவனித்தாள் சஞ்சு.. என்னடா யோசிக்குற? இல்ல… ஒண்ணுமில்ல… ஏய்ய் வாத்து… எனக்கு உன்ன பத்தி நல்லாவே தெரியும்.. நீ இல்லன்னு சொன்னாலும் உன் கண்ணு ஏதோ இருக்குன்னு சொல்லுதே ஹ்ம்ம்.. சொல்லு சொல்லு….. இல்ல சஞ்சுநீ எனக்கு குடுத்துட்ட… ஆனா நான்தான் இன்னும் உனக்குஒண்ணுமேகுடுக்கல.. – என்று சொன்னபடி சஞ்சு முத்தம் குடுத்த பகுதியை கன்னத்தில் தடவிப் பார்த்தான்.. ஹேய் கார்த்தி.. நீதான சொல்லி இருக்க காதலிக்குறேன்னு சொல்லுறது கேள்வி இல்லை ஆனா எல்லோரும் பதிலை எதிர் பாக்குறாங்கன்னு…. அது மாதிரி தான் முத்தம் வாங்குற சந்தோஷம் குடுக்குறதுலையும் இருக்கு… நான் உனக்கு முத்தம் குடுத்து சந்தோஷத்தை அடைஞ்சுட்டேன் …..உனக்கு எப்போ என்கிட்டே தயக்கம் போயி நான் உன்னுடையவனு மனசார நினைக்குறையோ எனக்கு நீ அப்போ குடுத்தா போதும்” என்று படபடவென்று பேசிவிட்டு தலையை சாய்த்து சிரித்தவளை கண்கொட்டாமல் பார்த்து ரசித்தான் கார்த்திக்…. இப்போ இருக்குற சந்தோஷத்துக்கு எனக்கு உன்ன இறுக்கி கட்டிக்கிட்டு முத்தம் குடுக்கனும்னு ஆசைதான் சஞ்சு….. ஆனா.. என்ன ஆனா..? ஆமா பின்ன இவ்வளோ நேரம் உருகி உருகி காதலிக்குறேன்னு சொல்லிட்டு கடைசியா எப்படா சான்ஸ் கிடைக்கும்.. மேல கை வெக்க வரானேனு ஒரு செகண்ட் கூட நீ தப்பா நினச்சா என்னால தாங்க முடியாது சஞ்சு?.. நீ ஒரு வேல அப்படி நெனச்சிடுவியோன்னு – என்று கார்த்திக் இழுப்பதை பார்த்து சஞ்சுவுக்கு ஒரு நொடி பேச்சு வரவில்லை… “ஹாய்” என்று ஒரு வார்த்தை சொன்னாலே அந்த ஒரு வார்த்தையை அடுத்து பல வார்த்தைகளை மணிக்கணக்கில் பேசி, தோளில் கை போட்டு படுக்கை வரை வசியம் செய்ய முயற்சிக்கும் ஆண்களுக்கு நடுவில் கார்த்திக் அவள் கண்களுக்கு ரொம்பவும் அபூர்வமாக தெரிந்தான் என்ன யோசிக்குற சஞ்சு? ஒன்றும் பேசாமல் அவனையே மெளனமாக சற்று பார்த்துக்கொண்டிருந்தவள்…. சில நொடிகள் கழித்து ஏதோ யோசித்து அவன் கையைப் பிடித்தாள்..
இங்க வா…. என்றாள் எங்க சஞ்சு? சும்மா வாடா…. மரியாதையா கூப்பிட்டா வரமாட்டியா… என்று அழைத்து (இழுத்து) தன் வீட்டின் ஹாலில் உள்ள ஒரு மிகச்சிறிய கதவுகளைக்கொண்ட குட்டி பூஜை அறையின் முன் நிற்க வைத்தாள்.. அதனுள் அவளுடைய அம்மாவின் படத்தைத் தவிர வேறு எந்த சாமியின் படங்களும் இல்லை…. ஒரு சிறிய அணையா விளக்கின் ஒளியில் ஜொலித்த அந்தபடத்தின் அருகே உள்ள சிறிய குங்கும டப்பாவை எடுத்து கார்த்தியின் கையில் குடுத்து “என் மேற்புற நெத்தியில நடுவுல வெய்.” என்றாள்.. என்ன சொல்லுற சஞ்சு..? தாலி கட்டினாதான இப்படி வெச்சிபாங்க?…நமக்கு இன்னு…. “ஷ்ஷ்….” என்று சொல்லி அவனது வாயில் தன் கை வைத்து மூடினாள்.. “என்ன பொருத்த வரைக்கும் என் வாழ்க்கைல நான் சாமியா நினைக்குறது என் அம்மா மட்டும்தான்டா… இன்னைக்கி வரைக்கும் நான் என் மனசார விரும்பி செய்யுற காரியங்க எதையுமே அவங்க முன்னாடிதான் செஞ்சி இருக்கேன்… என்னதான் நாளைக்கு ரிஜிஸ்டர் கல்யாணம் செஞ்சாலும், மாலை மாத்தி தாலி கட்டினாலும், இப்போ என் அம்மா முன்னாடி நீ என் நெத்தியில பொட்டு வெச்சா என்ன பொருத்தவரைக்கும் உனக்கும் எனக்கும் கல்யாணம் நடந்துடுச்சின்னு அர்த்தம்..” கார்த்தி ஒரு நிமிடம் யோசித்தான்.. “ராகவ் கிட்ட ஒரு வார்த்த..” என்று அவன் இழுக்கையில்.. “ஹேய் வாத்து பையா, திடீர்னு நல்லவன் ஆகாத… லவ் சொல்லும்போது அவனை மறந்துட்டு இப்போ சமாளிக்குறியா… தடியா… உன்னவிட எனக்கு ராகவ் பத்தி நல்லாவே தெரியும்…. எனக்கு இப்படி ஒரு விஷயம் என் வாழ்க்கைல நடக்க போகுதுன்னு தெரிஞ்சா…. அதுவும் அந்த வாழ்க்கை உன் மூலமா எனக்கு நடக்க போகுத்துன்னா அவன விட அதிகமா சந்தோஷ படக்கூடிய ஆள் வேற யாரும் இருக்க முடியாது.. சஞ்சு சொல்வதைக்கேட்ட பின்பு கார்த்திக் ஒரு விதமான மயக்கத்தில் மெதுவாக குங்குமம் எடுத்து அவள் நெத்தியின் நடுவில் வைத்துவிட்டு அவளைப் பார்த்தான்… அவன் கண்களுக்கு அதிகாலை இருளில் அறையில் சூழ்ந்திருக்கும் மிதமான மஞ்சள் வெளிச்சத்தில் சஞ்சுவின் முகத்தை அவளது வெட்கம் இன்னும் அழகாக காட்டியது …. கூடவே “இவள் இனி எனக்கு மட்டுமே சொந்தம்” என்கிற எண்ணம் அவனுக்கு ஒரு விதமான உச்சகட்ட சந்தோஷத்தைக் குடுத்தது.. அந்த எண்ணத்துடனேயே அவள் நெத்தியின் மீதுள்ள முடி ஒன்றை எடுத்து தலையின் ஓரமாய் நீக்கி விட்டு மெதுவாக அவளது கன்னத்தை தடவி முகத்தை நிமிர்தியபடி அவள் கண்களைப் பார்த்தான்.. இப்போது அவள் கண்களை சற்று இருக மூடி இருந்தாள்…. “ஏய்…. பார்க்க மாட்டியா?” என்றான்.. “உஹும் மாட்டேன்….” கண்கள் மூடி தலையசைத்தாள்.. “ஏன் பாக்க மாட்ட…..?” “முடியாது..” “சஞ்சு……” “ம் ….” “ஒரு தடவ பாருடி ப்ளீஸ்….” கண்கள் மூடி இருந்தாலும் ஒரு விதமான எக்சைட்மென்ட் அவள் முகத்தில் தெரிவதை கவனித்தான் கார்த்திக்.. “ஹேய் என்னடி ஆச்சு?… என்ன பார்க்க மாட்டியா?.. என்று அவன் கேட்டு முடித்த அடுத்த நொடி அவனை இருக்கி கட்டி அனைத்து அவனது கன்னங்கள் இரு புறமும் ப்ச்..ப்ச்..ப்ச்.. என்று முத்த மழை பொழிந்தாள்..

No comments:

Post a Comment