Saturday, August 2, 2014

சங்கீதா - இடை அழகி 78


“செய்யலைனா நாலு பேரு தப்பா பேசுவாங்கடா..” “அந்த நாலு பேரு யாரு?…” “செப்பா.. ஏண்டா புரிஞ்சிக்க மாட்டேங்குற?..” – ஒவ்வொரு முறையும் இப்படி ஏதாவது ராகவின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாத நிலைக்கு சங்கீதா தள்ளப்படுவாள், அப்போது அவனை ஒன்றும் சொல்ல முடியாமல் அவள் தவிக்கும் தவிப்பு அவளுக்கு மட்டும்தான் தெரியும். இருப்பினும் அவளின் ஆழ் மனதில் அவன் காமிக்கும் அக்கறையை எண்ணி மௌன சந்தோஷம் அடைவாள்…. “எனக்கு உடனே எதுவும் சொல்ல முடியல, கொஞ்ச டைம் வேணுன்டா.”
எவ்வளவு டைம் வேணுன்னாலும் எடுத்துக்கோ, உன்னை அமைதி படுத்திக்குற விஷயங்களைப் பத்தி மட்டும் யோசி. கூடவே நீ கொஞ்ச நாளைக்கு உன் வீட்டுல தனியா இருக்க வேணாம், என் கூட IOFI காம்பஸ் உள்ளேயே தங்கிக்கோ.” – ராகவ் பேசும்போது குறுக்கிட்டாள் சங்கீதா.. “வேணாம் ராகவ், நான் யாருக்கும் பயப்படல. நான் என் வீட்டிலேயே தங்கிக்குறேன். அங்கே இருந்தே வேலைக்கு போய்டு வரேன். பசங்களை ஸ்கூலுக்கும் அனுப்புவேன். நீ இன்ஸ்பெக்டர் கிட்ட பேசி எனக்கு பாதுகாப்புக்கு ஏற்பாடு பண்ணு. அது போதும். மத்தபடி….” – சில நொடிகள் எதுவும் பேசாமல் இருந்தாள் சங்கீதா. “ஹ்ம்ம்…ஏன் நிறுத்திட்ட? சொல்லு.. மத்தபடி…” “மத்தபடி எனக்கு ஏதாவது ஒண்ணுன்னா நீ எப்போவுமே இருக்கியேடா… அதுக்கு மேல எனக்கு வேற என்ன வேணும்?” – இதை சொல்லும்போது கண்களை இருக்கி மூடி கண்ணீர் வழிய அவன் தோள்களில் சாய்ந்தாள்…. அவனுடைய சராவாக. எந்த ஒரு மண வலிக்கும் இயற்கையான மருந்து நேரம்தான். காயமான நேரங்கள் நாட்களை கடந்து மெல்ல மறைந்தது. நாட்கள் வாரங்களாகியது. கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்குப் பிறகு வேலையிலும் வாழ்க்கையிலும் ஓரளவுக்கு பழைய பக்குவம் அடைந்த நிலைக்கு வந்தாள் சங்கீதா. ஒவ்வொரு நாளும் காலை வேலைக்கு கிளம்பும்போது ராகவ் சடங்கு சம்பிரதாயங்களுக்கு குடுத்த விளக்கத்தை எண்ணி அவனை வியப்பாள். அவனுடைய ப்பிராக்டிகலான பேச்சு அவளுக்கு பிடித்திருந்தது. ஒவ்வொரு நாளும் அவள் நேரத்துக்கு சாப்பிடுகிறாளா, நன்றாக தூங்குகிறாளா, குழந்தைகளுடன் பத்திரமாக இருக்கிறாளா என்று பத்து இருவது முறையாவது ஃபோன் செய்து கேட்டு விடுவான் ராகவ். இருவரும் ஒருவருக்கொருவர் ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு முறையாவது பேசிக் கொள்ளாமல் அவர்களது கண்கள் உறங்காது. இடையிடையே சங்கீதாவுக்கு ஆறுதலாய் அமைந்தது அலுவலகத்தில் ரம்யாவின் தோழமையான பேச்சும், நிர்மலாவின் சகோதரி பாசமும், சஞ்சனாவின் அன்பும் அரவனைப்பும்தான். அதிலும் சஞ்சனா, சம்பவம் நடந்த நாட்களில் உண்மையாகவே உடன் பிறந்த அக்காவாக எண்ணி சங்கீதாவுடன் அவளது வீட்டில் தங்கி இருந்து குழந்தைகளுடன் விளையாடி அவளுக்கும் ஒரு துணையாக இருந்து வந்தாள். ஒரு வாரக் கடைசியில் மாலை நேரம் மிகவும் அழகாக இருந்தது. சங்கீதா வீட்டின் காலிங் பெல் சிணுங்க யாரென்று பார்த்தால் சஞ்சனா நின்றிருந்தாள்.
“ஹாய் அக்கா” – பிரகாசமாய் சிரித்தாள் சஞ்சனா.. “ஏய்.. வா… வா… உள்ள வா…” – உற்சாகமாய் வரவேற்றாள் சங்கீதா.. “இன்னிக்கி உங்க கிட்டயும் ராகவ் கிட்டயும் முக்கியமா ஒரு விஷயம் பேசணும்னு வந்திருக்கேன். ரகாவ்கும் ஃபோன் பண்ணி வர சொல்லி இருக்கேன். வந்தானா இல்லையா?” – handbag கழட்டி வைத்து தலை முடியை இருபுறமும் சரி செய்தபடியே பேசினாள்…. “இல்லையே அவன் எதுவும் வரேன்னு என் கிட்ட சொல்லல, என்ன விஷயம் டி…” “அதெல்லாம் இருக்கட்டும்.. முதல்ல நீங்க எப்படி இருக்கீங்க? அதை சொல்லுங்க..” “இப்போ கொஞ்சம் பரவாயில்ல, சீக்கிரமே பழைய சந்கீதாவா மாறிடுவேன். ஹா ஹா.. நீ எப்படி இருக்கே?” “எனக்கென்ன குறைச்சல், மகாராணி மாதிரி இருக்கேன்.” “எப்படி வந்த?” “என் பாய் ஃபிரண்ட் ட்ராப் பண்ணார்கா..” “பாய் ஃபிரண்டா?” – குறும்பாய் சிரித்து கேட்டாள் சங்கீதா. ‘வேற யாரு நம்ம அர்னால்ட்தான்” – என்று சொல்ல.. “அம்மா நான் கிளம்புறேன்மா….” – என்று ஜகா வாங்கிக் கொண்டு வேகமாய் கிளம்பினார் டிரைவர் தாத்தா.. “ஹா ஹா.. பாவம் டி, அந்த மனுஷனை ஏண்டி இப்படி படுத்தி எடுக்குற?” “இதெல்லாம் ஒன்னும் இல்லக்கா, கொஞ்ச நாளைக்கி முன்னாடி ஒருத்தன் கிட்ட ராத்திரி விளையாடினேன் பாருங்க ஒரு விளையாட்டு. பயபுள்ள அழுதுட்டான்.” – சின்ன குழந்தை அழுவது போல முகபாவனை செய்து பேசினாள் சஞ்சனா.“ஹ்ம்ம்.. என்னடி செஞ்ச? யாரு அவன்?” – மென்மையாக சிரித்துக்கொண்டே சமையலறையில் டீ தூள் தேடினாள் சங்கீதா.. “சொல்லுறேன் அதுக்குத்தானே வந்திருக்கேன், அவன் கிட்ட வாங்கின சில முக்கியமான டீடேய்ல்ஸ் பத்தி உங்க கிட்டயும் ராகவ் கிட்டயும் சொல்லணும்…. இதுக்கு முன்னாடியே சொல்லி இருப்பேன், ஆனா அதுக்கான நேரம் இப்போதான் வந்திருக்கு.”….சஞ்சனா பேசிக்கொண்டிருக்க வெளியில் கார் நிற்கும் சத்தம் கேட்டது.. ராகவ் அலுவலகத்தில் இருந்து கழுத்தில் கட்டின டை கூட கழட்டாமல் அப்படியே அங்கே வந்தடைந்தான். சஞ்சனாவையும் ராகவையும் பார்த்ததில் குழந்தைகளுக்கு மகிழ்ச்சி. மாடியில் மஞ்சள் வெயிலில் குழந்தைகள் விளையாட மூவரும் சூடாக டீ அருந்தி கொண்டே ஜில்லென்ற காற்றில் பேச தொடங்கினார்கள். சஞ்சனா மித்துனிடம் கறந்த விஷயங்களை ராகவிடமும் சந்கீதாவிடமும் பகிர்ந்து கொண்டாள். அதாவது.. அலுவலகத்துக்குள்ளேயே, குமார் ஃபாக்ட்ரி கழிவுகளில் இருந்து சில வஸ்துக்களை மூட்டை கட்டி ஒரு லாரியில் தினமும் இரவு துரையோட லெபாரேட்ரிக்கு அனுப்பி வைப்பதும், அதற்கு அடுத்த நாள் காலை அங்கிருந்து IOFI வளாகத்துக்குள் அதே லாரியில் ஃபாக்ட்ரிக்கு தேவையான சாமானுடன் லெபாரேட்ரியில் ப்ராசஸ் செய்யப்பட்ட சில பொருட்கள் வருவதற்கு க்லியரன்ஸ் வாங்கித் தருவது மித்துனின் வேலை என்று ஒவ்வொன்றும் விலாவரியாக எடுத்து சொன்னாள். சற்று கண்களை மூடி ஆழமாக யோசித்து “எப்படி அவன் துரைக்கு வேலை செய்ய ஆரம்பிச்சான்? எப்படி அவனுக்கு துரை கான்டாக்ட் கிடைச்சிது? என்றான் ராகவ்.. “அதை… நா…. வந்து… அது…” – சஞ்சனா தயங்கினாள்.. “என்ன வந்து போயி.. சொல்லு..” – கேட்க்கும்போதே ராகவின் முகம் கொஞ்சம் சிவந்தது. அது சஞ்சனாவுக்கு லேசான பயத்தை உண்டாக்கியது. “நான் சொல்லுவேண்டா, ஆனா நீ கோவப்படக் கூடாது.. பொறுமையா கேட்கனும். சரியா? இந்த நிமிஷம் உனக்கு பொறுமை ரொம்ப முக்கியமா தேவைப் படும்… அப்போதான் அடுத்து என்ன செய்யலாம்னு யோசிக்க முடியும். புரிஞ்சிக்கோடா.. நீ பார்க்குற பார்வைய பார்த்தா எனக்கு சொல்ல பயமா இருக்கு….. அக்கா..” – என்று சொல்லி சந்கீதாவைப் பார்த்தாள் சஞ்சனா.. “நான் கோவப்படுற அளவுக்கு அப்படி என்ன இருக்குது?” – கண்களை இருக்கியவாறு கூர்ந்து பார்த்து கேட்டான் ராகவ். அப்போது சங்கீதா குறுக்கிட்டாள். “நீ சொல்லுமா, யாரும் ஒன்னும் கோவப்பட மாட்டாங்க….” – சற்று அழுத்தமாக சொல்லி, ராகவை நோக்கி ஓரக்கண்ணால் லேசாக முறைத்து “பேசாமல் இரு” என்று சொல்லாமல் சொன்னாள் சங்கீதா. அந்த பார்வைக்கு உண்மையில் கொஞ்சம் அடங்கினான் ராகவ். “அவனுக்கு துரை யாருன்னு தெரியாது, ஆனா அவன் கிட்ட இருந்து நிறைய மிரட்டல் கடிதாசி வரும்னு சொல்லி இருக்கான். ஒரு நாள் அவன் ஒரு நைட் க்லப்பில் நல்ல போதையில் சீட்டு விளையாடிட்டு இருக்கும்போது யாரோ உன்னை சம்மந்த படுத்தி அவன் கிட்ட பேசும்போது அவன் உன்னுடைய லாப கணக்குல வர பணம் அப்போ அப்போ உனக்கே தெரியாம திருடுறதும்.. அது உனக்கு தெரியாதுன்னும் சொல்லி இருக்கான்.. அப்புறம்… – மேலே சொல்ல தயங்கினாள் சஞ்சனா..
“அப்புறம்?….” – மீண்டும் ராகவின் முகம் அவளின் பதிலை கூர்ந்து கவனித்தது…. சற்று தயக்கத்துடன் பேச ஆரம்பித்தாள்.. “உன்னை பத்தியும் அக்காவைப் பத்தியும் தப்பா பேசி இருக்கான். அதை எப்படியோ துரை அவன் செல் ஃபோன்ல ரெக்கார்ட் பண்ணி அவனுக்கு அனுப்பி வெச்சி உன் கிட்ட அவனை போட்டு குடுத்துடுவேன்னு சொல்லி மிரட்டி இருக்கான், அந்த கோழையும் உனக்கு பயந்துதான் இந்த காரியத்துல இறங்கி இருக்கான்.” – என்று மூச்சு விடாமல் சீக்கிரமாக சொல்லி முடித்தாள் சஞ்சனா.. “என்ன தப்பா பேசினான்?” – ராகவின் முகம் உண்மையில் நன்றாகவே சிவந்தது. “அது.. வந்து.. இதை பாரு..” – என்று தனது செல் ஃபோனில் அன்று இரவு அவனுடய ஃபோனில் இருந்து காப்பி செய்த வீடியோவை காமித்தாள் சஞ்சனா… சங்கீதாவும் அதை ராகவுடன் சேர்ந்து பார்த்தாள். வீடியோவில் மித்துன் காமிக்கும் முகபாவனைகளும், பேச்சும் கேட்கும்போது ராகவ் அவனது இருக்கையின் கைப்பிடியை இறுகி பிடித்தான். தனது அக்கவுன்டில் இருந்து காசு திருடுவதற்கு கூட அவன் அதிகம் கோவப் படவில்லை… அதன் பிறகு அவன் சந்கீதாவைப் பற்றியும் சஞ்சனாவைப் பற்றியும் பேசிய வார்த்தைகளை கேட்க கேட்க உண்மையில் ரகாவ்கு பொருக்க முடியவில்லை.. உடனடியாக கை சட்டையை மடக்கிக் கொண்டு ஆவேசமாக எழுந்தான்.. அப்போது உடனடியாக சங்கீதா ராகவின் கைகளைப் பிடித்து நிறுத்தினாள். அவன் வாயலதானே என்னை மானபங்கம் பண்ணுவேன்னு சொல்லி இருக்கான்.. நிஜத்துல செய்துட்டானா? அப்படி ஒரு எண்ணத்தோட வந்தா அவனை நானே ரெண்டா வெட்டிடுவேன்.. யாருடைய உதவியும் எனக்கு தேவை படாது.. இப்போ நீ என்ன பண்ண போற? அவன கொல்ல போறியா?… அப்படியெல்லாம் பண்ணிட்டு ஜெயிலுக்கு போய் உட்காராத…. அப்புறம் என்னால உன்னை அங்க வந்து பார்க்க முடியாது.” – கோவத்தில் சீறினாள் சங்கீதா. “அக்கா.. அவன் அன்னிக்கி பேசின பேச்சுக்கு நான் ஏற்கனவே நிறைய குடுத்துட்டேன்கா” – மெதுவாக சஞ்சனா சங்கீதாவிடம் பேசியதைக் கேட்டுவிட்டு “என்ன குடுத்த?… எண்ணத்த குடுத்துட்ட?… சும்மா நாலு வார்த்தை திட்டிட்டு வந்திருப்ப.. அவளோதானே?.. அவனுக்கு அதெல்லாம் பத்தாது..” என்று ராகவ் கத்த.. அதற்கு மேல் வாய் மூடி இருந்த சஞ்சனா பொங்க ஆரம்பித்தாள். “போதும் நிறுத்துடா.. சும்மா பெரிய இவனாட்டம் கத்துற.. நான் ஒன்னும் அவளோ சொரணை கேட்ட ஜென்மன் இல்ல, உன்னால அவனுக்கு வெளி காயம் மட்டும்தான் குடுக்க முடியும், ஆனா நான் அன்னிக்கி அவனுக்கு வெளிக்காயம் மட்டும் இல்ல, உள்காயமும் குடுத்துட்டு வந்திருக்கேன். ஒரு ஆம்பளையா உன்னால குடுக்க முடியாத அளவுக்கு அன்னிக்கி நான் அவனுக்கு திருப்பி குடுத்து இருக்கேன். கிட்டத்தட்ட உரிச்ச கோழியாக்கி வேக வெச்சி அனுப்பி இருக்கேன். அவன் குணமாகி எழுந்திருக்கவே கொஞ்ச மாசமாகும்.” – சொல்லும்போது அன்று மெளனமாக உள்ளுக்குள் அனுபவித்த வேதனைகளை எண்ணி லேசாக கொஞ்சம் அழ ஆரம்பித்தாள் சஞ்சனா. “சங்கீதா மெதுவாக சஞ்சனாவின் கைகளை பிடித்து, “நிஜமாவா?” என்று பாவனை செய்வது போல கேட்க “ஆமாம் கா….” என்று மெதுவாக சொல்ல “நீதாண்டி என் தங்கச்சி” என்று சொல்லி அவளை தன் தோளில் சாய்த்தாள் சங்கீதா. “நீ அழாதடா, எவளோ பெரிய காரியம் பண்ணி இருக்கே!.. நிஜமாவே சில நேரத்துல எப்படிதான் இந்த முட்டாள் CEO ஆனான்னு எனக்கு சந்தேகம் வரும். பொறுமையே இல்லாத ஜென்மம்…. ச்ச….” – சஞ்சனாவை தோளில் சாய்த்து ராகவை பொய்க் கோவத்துடன் முறைத்தாள் அவனது சரா.. “கரெக்டா சொன்னீங்கக்கா.. எனக்கு கூட அப்போ அப்போ அது தோணும்….” – கண்களைத் துடைத்துக் கொண்டு ராகவை முறைத்தாள் சஞ்சனா…. “ஆமா, பொறுமையா இருக்குறதைப் பத்தி பேங்க் மேனேஜர் பேசுறாங்க..” என்று மெதுவாக உள்ளுக்குள் முனு முணுத்துக் கொண்டான் ராகவ்…. “என்ன சொன்ன?” – சொடக்கு போட்டு கேட்டாள் சரா.. “ஒன்னும் இல்ல…. எனக்கு பொறுமை கம்மின்னு நானே சொல்லிக்கிட்டேன்….” – சங்கீதாவின் கேள்விக்கு, ராகவ் அசடு வழிந்து அடிபணிந்து பதில் சொன்னதைப் பார்த்து “ஹா ஹா.. உனக்கு சங்கீ அக்காதான் டா கரெக்ட்….” என்று ஈர விழிகளுடன் இருக்கும்போதே குபுக்கென சிரித்தாள் சஞ்சனா..
மூவரும் பேசி முடித்து சற்று அமைதியாய் இருக்கும்போது ராகவ் செல் ஃபோனில் “வேக்.. வேக்…” என்று சத்தம் வந்தது… – வேறு யாரும் அல்ல, அவனது நண்பன் Mr.வாத்து தான்!.. அமைதியாக இருக்கும்போது அந்த வித்யாசமான சத்தம் கேட்டு சங்கீதாவும், சஞ்சனாவும் புருவம் உயர்த்தி சிரித்தார்கள்.. அவனது நண்பனின் ஃபோன் கால் எடுத்து அட்டென்ட் செய்தான் ராகவ், அப்போது கார்த்திக் நாளை விடிகாலை வருவதாக சொல்லிவிட்டு ஃபோன் கட் செய்தான். அதைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்து “ஹ்ம்ம்… நாளைக்கு ஒரு கிறுக்கன் வரான், நாம நாலு பேரும் எங்கயாவது ஒரு ஒளடிங் போய்டு வரலாம்.” என்று உற்சாகமாய் சொன்னான் ராகவ். “கிறுக்கனா? யாரு?” – என்றாள் சஞ்சனா ஸ்வாராஸ்யமாக, அந்த ஸ்வாராஸ்யத்தை கவனிக்க தவறவில்லை சங்கீதா….

No comments:

Post a Comment