Friday, January 23, 2015

செக்மேட் - சைபர் கிரைம் திரில் தொடர் - பாகம் - 7


நித்தின், "ஓ, நம்ம ட்ரான்ஸ்ஃபருக்கான என்ட்ரிக்கு முன் இருக்கும் வரி தப்பா ரெண்டு தடவை வந்த மாதிரியும் அதை வங்கி காரங்க திருத்தின மாதிரியும் மாத்தி எழுதப் போறே. சரி, இது என்ன ERR-REV அப்பறம் COMPERR Ref#" ஜாஷ்வா, "இந்த மாதிரி ஒரு நொடேஷன் எங்க வங்கி முதல் முதல்ல கணக்குகளை எல்லாம் கணிணி மயமான ஆக்கின காலத்தில இருந்து இருக்கு. யாராவது டைப்பிங்க் மிஸ்டேக் பண்ணி அதை வெரிஃபை பண்ணும் போது அந்த தப்பை கண்டு பிடிச்சா அந்த என்ட்ரிக்கு ஒரு மாற்றல் என்ட்ரி, அக்கௌண்டன்ஸியில் ஜர்னல் என்ட்ரி (Journal Entry) என்பது போல போடுவாங்க. முன்னத்து என்ட்ரி தப்பானதால அதை மாத்தி எழுதின என்ட்ரி அப்படின்னு குறிக்கும்."சக்திவேல், "இருந்தாலும் அந்த கம்பெனிக்கு தெரிய வாய்ப்பு இல்லையா? பணத்தை ட்ரக் கார்டல்காரங்க கொண்டு போய் அந்த கம்பெனியோட கணக்கில போடும்போது அவங்களுக்கு அல்லது எஃப்.பி.ஐக்கு அலர்ட் மெஸேஜ் வராதா?" ஜாஷ்வா, "இந்த மாதிரி கம்பெனி எல்லாம் அட்-பார் சலுகை, அதாவது அவங்களுக்கான பணத்தை எந்த கிளையில் இருந்தும் போடலாம் அல்லது எடுக்கலாம் அப்படின்னு ஒரு சலுகை எங்க வங்கி கொடுத்து இருக்கு. யாராவது ஒரு மில்லியனுக்கு (பத்து லட்சத்துக்கு) மேல் பணத்தை போட்டாலோ இல்லை அதை எடுத்தாலோ எஃப்.பி.ஐக்கும் (FBI) என்.எஸ்.ஏ (NSA)வுக்கும் தகவல் கொடுக்கணும்ன்னு இருக்கு. அவங்களுக்கு தினம் கொடுக்க வேண்டிய இந்த தகவல்களை கணிணியில் இருக்கும் மென்பொருள் ஒண்ணு ஒரு ரிப்போர்ட்டா (பட்டியலா) தயாரிக்குது. ஒவ்வொரு கிளையிலும் தினமும் அந்த ரிப்போர்ட்டை எடுத்து அதை அப்படியே எஃப்.பி.ஐக்கும் என்.எஸ்.ஏவுக்கும் ஈமெயில் பண்ணிடுவாங்க. இந்த ரிப்போர்ட் தயாரிக்கும் மென் பொருளில் ஒரு சின்ன பக் உண்டாக்கி இருக்கேன். அதனால அந்த டெபாசிட் விவரம் அவங்களுக்கு போகாது"
சக்திவேல், "என்ன பக்? நீ டீ.பி.ஏ தானே உனக்கு எப்படி மென்பொருளை மாத்தும் உரிமை உங்க வங்கில கொடுத்து இருக்காங்க?" ஜாஷ்வா, "எனக்கு எங்க வங்கில எந்த மென்பொருளையும் மாத்தி எழுதும் உரிமை கிடையாது. ஆனா யாருக்கு எந்த மென்பொருளை மாத்த உரிமை இருக்குன்னு எனக்கு தெரியும். இன் ஃபாக்ட் அது எல்லோருக்கும் தெரிஞ்ச விஷயம். அவங்களோட லாக் இன் பாஸ்வர்ட் ஹாக் பண்ணறது ஒண்ணும் பெரிய விஷயம் இல்லை. பாதி பேர் அவன் பொண்டாட்டி பேரையோ இல்லை குழந்தைங்க பேரை பாஸ்வர்டா வெச்சுட்டு இருப்பாங்க. சில சமயம் அவங்க நாய்குட்டி பேரை பாஸ்வர்டா வெச்சு இருப்பாங்க. அவங்க கூட ரெண்டு நாள் பழகினா போதும் அவனோட எல்லா பாஸ்வர்டும் தெரிஞ்சுக்கலாம்." நித்தின், "சோ, அவங்க லாக் இன்ல நுழைஞ்சு அந்த மென் பொருளை மாத்தி எழுதினே. என்ன பக் அது?" ஜாஷ்வா, "அந்த ரிப்போர்ட் எப்படின்னா, ஒவ்வொரு கிளையிலும் அன்னைக்கு பத்து லட்சத்துக்கு மேல வசூலிச்ச டெபாசிட் விவரமும் அவங்க கிளையில் இருக்கும் எந்த கணக்கிலாவுது அன்னைக்கு பத்து லட்சத்துக்கு மேல டெபாசிட் ஆன விவரமும் அந்த ரிப்போர்டில ப்ரிண்ட் ஆகும். நான் அந்த கிளை கணக்கில அந்த கிளையில் வசூலிச்ச டெபாசிட் ஆனதை மட்டும் ப்ரிண்ட் பண்ணற மாதிரி அதை மாத்தி எழுதிட்டேன்." சக்திவேல், "இதனால என்ன ஆகும்? " ஜாஷ்வா, "நம்ம உபயோகிக்க போற கம்பெனியோட கணக்கு மன்ஹாட்டன் ஸென்ட்ரல் (Manhattan Central) அப்படிங்கற கிளைல இருக்குன்னு வெச்சுக்குவோம். அவங்க ஹார்லம் (Harlem) கிளையில் பணத்தை டெபாசிட் பண்ணினா. அந்த பக் இல்லைன்னா ரெண்டு கிளையில் எடுக்கும் ரிப்போர்டிலும் அந்த டெபாசிட் விவரம் வரும். இப்ப நான் உண்டாக்கின பக் இருக்கறதால ரெண்டு கிளையில எடுக்கற பட்டியலிலும் வராது." நித்தின், "பணம் வந்து இருப்பதை வேற எந்த வழியிலாவுது அவங்க பாத்தா?" ஜாஷ்வா, "இந்த கம்பெனி எல்லாம் பல நூறு கோடி கணக்கில பண பரிமாற்றம் செஞ்சுட்டு இருக்கும் கம்பெனிகள். அவங்களை எப்பவும் சந்தேகப் படமாட்டாங்க. அந்த மாதிரி கம்பெனிகள்தான் அமெரிக்காவின் பணப் பசியை போக்குதுன்னு அவங்களுக்கு நல்லா தெரியும். அவங்களை தொடறதுக்கு முன்னால் ஆயிரம் தடவை யோசிப்பாங்க" சக்திவேல், "சோ, எங்களோட பாட் நெட் வைரஸ், உன்னோட PDF எழுதற வைரஸ், அப்பறம் நீ அந்த ரிப்போர்ட் எழுதற மென்பொருளில் உண்டாக்கி இருக்கும் பக் (bug) இது மூணுதான் இந்த ட்ரான்ஸ்ஃபர் ஆபரேஷனுக்கு முக்கிய அம்சங்கள். ஆனா இருந்தாலும் உங்க வங்கில எதாவுது செக் பண்ணினாங்கன்னா?" ஜாஷ்வா, "இந்த ட்ரான்ஸ்ஃபர் ஆபரேஷன்ல என் வங்கில இருந்து நான் மட்டும் இல்லை. பேங்கிங்க் செக்யூரிட்டி ஆடிட் செல் (Banking Security Audit Cell) அப்படின்னு ஒரு பிரிவு இருக்கு, அந்த பிரிவோட மேனேஜர் பெஞ்சமின் ஹாஃப்மன். அவருக்கும் இதுல பங்கு. ஆனா அவர் பங்கு நம்ம கமிஷனுக்கு வெளியே" நித்தின், "ஜாஷ்வா, நேத்துத்தான் உன்னை நாங்க பாத்தோம். இருந்தாலும் உன் கிட்ட எங்களுக்கு ஒரு நெருக்கம் வந்துடுச்சு. இந்த ஆபரேஷன்ல வெளி ஆளுங்களும் இருக்காங்கன்னா ... " என்று இழுத்தான்ஜாஷ்வா, "முதல்ல இருந்து என்ன நடந்துதுன்னு சொல்றேன். சுமார் ஒரு வருஷத்துக்கு முன்னாடி மைக்கல் ஆண்டர்ஸன் அப்படின்னு ஒருத்தன் என்னை அணுகினான். அவனுக்கு நான் தான் ஹார்ஷ்7ன்னு எப்படி தெரிஞ்சுதுன்னு முடிவா தெரியலை. அனேகமா, சைபர் திருட்டுக் கள்ளச் சந்தையில் இருக்கறவங்க என்னை மோப்பம் பிடிச்சு அவன்கிட்ட சொல்லி இருக்கணும். அவனுக்கும் நான் சொன்ன பெஞ்சமின் ஹாஃப்மனுக்கும் பழக்கம். அதுவும் எப்படின்னு எனக்கு தெரியலை. என் கிட்ட இந்த மாதிரி ஒரு ஆபரேஷன் அமைக்க முடியுமான்னு ஒரு ப்ரோபோஸல் கொடுத்தான். அப்படி பண்ண முடிஞ்சா ஒரு பர்ஸென்ட் (percent) கமிஷன் கொடுக்கறேன்னு சொன்னான். அதுக்கு அப்பறம்தான் நான் என் வேலையை ஆரம்பிச்சேன்." சக்திவேல், "அவன் கொலம்பியன் ட்ரக் கார்ட்டல்காரங்களோட பிரதிநிதியா?" ஜாஷ்வா, "இல்லை. அவன் கொலம்பியன் ட்ரக் கார்ட்டல் காரங்களுக்கு பணத்தை இங்க இருந்து வெளிய எடுத்துட்டு போறதுக்கு ஏற்பாடு பண்ணும் ஒரு ஏஜண்ட். அவன் பண்ணறதும் கடத்தல் மாதிரிதான், பணக் கடத்தல்! அதை கள்ள சந்தையில் கேஷ் ம்யூல் ஆபரேஷன் (Cash Mule Operation) அப்படின்னு சொல்லுவாங்க. பணத்தை இங்கே இருந்து மெக்ஸிகோ, ப்ரேசில், வெனிஸுவேலா மாதிரி நாடுகளுக்கு எடுத்துட்டு போறதுக்குன்னு ஸ்டூடண்ட்ஸ், அல்லது வெளிநாட்டில் இருந்து, முக்கியமா தென் அமெரிக்க நாடுகளில் இருந்து இங்கே வேலைக்கு வந்தவங்க இந்த மாதிரி ஆளுங்களை பிடிப்பான். அவங்களுக்கு டிக்கெட் விசா எல்லாம் வாங்கி கொடுத்து அவங்க லக்கேஜ்ல பணத்தை அனுப்புவான். இம்மிக்ரேஷன் (immigration), கஸ்டம்ஸ் (customs) அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து சரி கட்டுவான்." நித்தின், "அவனை எப்படி நம்பினே?" ஜாஷ்வா, "ஆண்டர்ஸன், ஹாஃப்மன் இந்த ரெண்டு பேரைப் பத்தியும் என் கஸின்ஸ் மூலம் விவரம் சேகரிச்சு எந்த விதத்திலாவுது அவங்க மூலம் ஆபத்து இருக்கான்னு பாத்தேன். எதுவும் இல்லை. இருந்தாலும், அவனும் ஹாஃப்மனும் செய்ய வேண்டியதையும் நான் செய்ய் வேண்டியதையும் தனியா பிரிச்சேன். ட்ரான்ஸ்ஃபர் பண்ணறதுக்கு முன்னாடி எனக்கு, அதாவுது நமக்கு, சேர வேண்டிய கமிஷனை கொடுத்துடணும். எவ்வளவுதான் பக்காவா செஞ்சாலும் குறைந்தது ஐந்து பர்ஸன்ட் ஆபரேஷன் தோல்வி அடையறதுக்கு வாய்ப்பு இருக்கு. நூறு சதவிகிதம் உத்திரவாதம் கொடுக்க முடியாதுன்னும் கண்டிஷன் போட்டேன். எப்படி ஆபரேஷனை செய்யப் போறோம்ன்னு யாருக்கும் சொல்ல மாட்டேன்னு சொன்னேன்" சக்திவேல், "இந்த ஆபரேஷனில் ஹாஃப்மனோட வேலை என்ன?" ஜாஷ்வா, "இப்படி அதிக பண பரிமாற்றம் இருக்கும் கம்பெனி கணக்கு மூலமா அவங்களுக்கு தெரியாம ட்ரான்ஸ்ஃபர் பண்ண முடியுமான்னு கேட்டவனே அவன் தான். நாம் உபயோகிக்க கூடிய கம்பெனி கணக்குகளோட ஒரு லிஸ்ட் அவன் தயார் பண்ணி கொடுத்தான். ஒவ்வொரு மாதமும் ராண்டமா (random) சில கணக்குகளை தேர்ந்து எடுத்து அந்த கணக்குகளில் நடந்து இருக்கும் பண பரிமாற்றங்கள் எல்லாம் செக் பண்ணுவாங்க. இதுக்கு ராண்டம் ஆடிட் சைக்கிள் (Random Audit Cycle) அப்படின்னு பேர். ட்ரான்ஸ்ஃபருக்கு பிறகு நாம் உபயோகிச்ச கணக்கு ஆடிட்டுக்கு வராம அவன் பாத்துக்குவான். கம்பெனி பேங்க் ஸ்டேட்மெண்டை மாத்தி எழுதறது அவன் சொன்ன ஐடியா இல்லை. அது என்னுது. அவன் சொன்ன படி ட்ரான்ஸ்ஃபர் மட்டும் பண்ணினா போதும். அவன் சொல்ற கம்பெனிகள் மாதா மாதம் அவங்க கணக்கை பாக்க மாட்டாங்கன்னு அவனுக்கு தெரியுமாம். வருஷத்துக்கு ஒரு முறை பார்ப்பாங்களாம்" நித்தின், "அவங்க எவ்வளவு கமிஷன் வாங்குவாங்க?" ஜாஷ்வா, "அவங்க ரெண்டு பேரும் சேர்த்து அரை பர்ஸன்ட் (1/2 %)" சக்திவேல், "எப்படி அவங்க அதுக்கு ஒத்துகிட்டாங்க?" ஜாஷ்வா, "ஒரு வேலையும் செய்யாம அரை பர்ஸன்ட் வருது இல்லையா? அது மட்டும் இல்லை. நானே இந்த ஆபரேஷனை தனியா பண்ண முடியாது, மத்தவங்களுக்கும் கொடுக்கணும்ன்னு அவங்களுக்கு தெரிஞ்சு இருக்கு" நித்தின், "ட்ரான்ஸ்ஃபருக்கு உங்க வங்கி அந்த கம்பெனிகிட்ட சார்ஜ் வசூலிப்பாங்க இல்லையா? அது அந்த கம்பெனிகளுக்கு நஷ்டம்தானே? எப்படியும் இருநூறு மில்லியன்னா பாங்க் ரெண்டு பர்ஸன்ட்டாவுது வசூலிக்கும். நாலு மில்லியன் டாலர், ஒண்ணும் சின்ன அமௌன்ட் இல்லை. விடுவாங்களா?" ஜாஷ்வா, "அந்த கம்பெனியோட வருடாந்திர ஆடிட்டின்போது அவங்க ஆதாரத்தோட பாங்கை அணுகுவாங்க. பாங்க் தலையை சொறிஞ்சுட்டு அந்த பணத்தை திருப்பி கொடுக்கும்" நித்தின், "என்ன ஆதாரம்?" சக்திவேல், "ஜாஷ்வாவோட் வைரஸ் மூலம் திருத்தம் செய்த அவங்களோட பேங்க் ஸ்டேட்மென்ட். இல்லையா ஜாஷ்வா?" ஜாஷவா "ஆமா" நித்தின், "பேங்க அது எங்க ஸ்டேட்மென்ட் இல்லைன்னு சொல்ல வாய்ப்பு இருக்கா?" ஜாஷ்வா, "இல்லை. ஒவ்வொரு PDFலயும் வங்கியோட டிஜிட்டல் கையெழுத்து இணைக்கப் பட்டு இருக்கும். அதனால வங்கி அந்த PDF வங்கியோடது இல்லைன்னு மறுக்க முடியாது" சக்திவேல், "சோ, வ்ங்கிக்கு நிச்சயம் நஷ்டம் இல்லையா?"
ஜாஷ்வா, "வங்கி எதுல எல்லாம் லாபம் சம்பாதிக்கறாங்கன்னு பாத்தா இந்த நஷ்டம் ஒரு பெரிய விஷயம் இல்லை" நித்தின், சக்தி இருவரும் மௌனம் காக்க ஜாஷ்வா தொடர்ந்து, "சோ, என்ன சொல்றீங்க?" நித்தின், "ஜாஷ், மேலோட்டமா பாத்தா பண்ண முடியும்ன்னு தோணுது. ஒத்துக்கறேன் ஒரு வேளை இந்த ட்ரான்ஸ்ஃபர் விஷயம் எஃப்.பி.ஐ அல்லது என்.எஸ்.ஏவுக்கு தெரிஞ்சா யாரை உள்ள தள்ளுவாங்க?" ஜாஷ்வா, "யாரையும் உள்ள தள்ள முடியாது. ஒரு வேளை மாங்க்ஸ் பாட் நெட் உங்களோடதுதான்னு அவங்க கண்டு பிடிச்சாகூட அந்த கம்பெனிக்கு உள்ள எப்படி போக முடிஞ்சுதுன்னு அவங்கனால விளக்க முடியாது. நாம் எல்லாம் சேந்து செய்யறதை முழுசா தெரிஞ்சாதான் அவங்க நடவடிக்கை எடுக்க முடியும். அப்படி எடுத்தா நம்ம மேலதான் எடுப்பாங்க" நித்தின், சக்திவேல் இருவரும் மௌனம் காக்க ஜாஷ்வா, "லிஸன் கய்ஸ், இந்த ப்ளானுக்கு நான் எடுத்துட்ட சிரமத்துக்கும் உங்க பாட் நெட்டோட திறனுக்கும் நாம் நினைச்சா வேணும்னா எங்க பாங்கில் இருக்கற அத்தனை அக்கௌண்டையும் காலி பண்ணிட்டு அந்த கொலம்பியா, பெரு மாதிரி இடத்துக்கு போய் செட்டில் ஆக முடியும். ஆனா, நாம் சில வியாபாரிகளுக்கு உதவறோம் அவ்வளவுதான். எனி ஹவ், இன்னும் ரெண்டு நாள் யோசிங்க. உங்களுக்கு ஓ.கேன்னா வரும் புதன் கிழமை சாயங்காலம் மீட் பண்ணி நம்ம ஆபரேஷனை ஃபைனலைஸ் பண்ணலாம். சரியா?" என்ற பிறகு "வாங்க போய் பியர் எடுத்துட்டு வரலாம்" நித்தின், சக்தி இருவரும் "ஒ.கே" என்றவாறு எழுந்தனர்.Vanthana Rathod I.P.S - An Introduction Friday, May 23, 2008 11 AM, Dausa Collectorate, Dausa, Rajasthan வந்தனா ராத்தோட் I.P.S - ஒரு அறிமுகம் வெள்ளி, மே 23 2008 காலை 11 மணி, தவுசா மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம், தவுசா, ராஜஸ்தான் ராஜஸ்தானில் பல மாநிலங்களில் பல மாதங்களாக அறிக்கையும் எதிர் அறிக்கையுமாக இருந்த குர்ஜார் (இதை குஜ்ஜார் என்று அழைப்பதும் வழமை) வகுப்பினரின் போராட்டம் அன்று கலவரமாக உருவெடுத்து இருந்தது. தவுசா மாவட்ட ஆட்சியாளர் தலைமை வகித்த அந்த கலந்தாய்வு கூடத்தில் சுற்றிலும் இருந்த நாற்காலிகளில் வெவ்வேறு காவல் துறை அதிகாரிகள் அமர்ந்து இருந்தனர். மாவட்ட ஆட்சியாளருக்கு அருகே அந்த மாவட்டத்தின் தலைமை காவல் துறை அதிகாரி S.P காஷிநாத் ஷர்மா அமர்ந்து இருந்தார். "மதியம் ரெண்டு மணி வரை வந்த தகவல்படி போராட்டம் நடத்தறவங்க சிக்கந்த்ரா ஊராட்சி எல்லைக்குள் இருக்கும் ரெண்டு காவல் நிலையங்களை சுத்தி நின்னும் கோஷம் போட்டுட்டு இருக்காங்க. நிலைமை மோசமாயிட்டு வருது. அவங்களோட நோக்கம் ஜெய்ப்பூர் - தில்லி நேஷனல் ஹைவேயில் போக்குவரத்தை முழுசா நிறுத்தறது. சில இடங்கள்ல பண்ணிட்டும் இருக்காங்க. போலீஸ் படை உதவி (Police Force Reiforement) கேட்டுட்டு இருக்காங்க. நான் இவ்வளவு நேரம் சி.எம்மோட ஆணைக்காக வெயிட் பண்ணிட்டு இருந்தேன். இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி முழு அதிகாரம் கொடுத்து இருக்காங்க" என்றவாறு தலைமை காவல் துறை அதிகாரியிடம் "நீங்க என்ன நடவடிக்கை வேணும்னாலும் எடுக்கலாம். துப்பாக்கி சூட்டுக்கான ஆணையும் (Shooting Order) இதில இருக்கு." என்றபடி ஜெய்ப்பூரில் இருந்து ஃபாக்ஸில் (fax) வந்து இருந்த ஆணைகளை அவரிடம் கொடுத்தார் "சரி, நீங்க டிப்ளாய்மென்ட் (Deployment) பத்தி சீக்கிரம் அலோசிச்சு முடிவெடுங்க. பொது ஜனங்களுக்கும் அரசாங்க ஊழியர்களுக்கும் இதுக்கு மேல் எந்த சேதாரமும் இருக்கக் கூடாது" சிறு விவாதங்களுக்கு பிறகு தலைமை காவல் அதிகாரி யார் எந்த பகுதிக்கு செல்ல வேண்டும் என்று ஆணைகள் இட்டார். ஒவ்வொருவராக அறையை விட்டு வெளியேற, முடிவில் பயிற்சியில் இருக்கும் உதவி காவல் ஆணையாளர் (A.S.P Under Training) வந்தனா ராத்தோட் I.P.S மட்டும் அங்கு இருந்தாள். மாவட்ட ஆட்சியாளர் கேள்விக் குறியுடன் பார்க்க தலைமை காவல் அதிகாரி, "வந்தனா இங்க ஹெட் குவார்டர்ஸ்ல என் கூட இருப்பா. தேவையா இருந்தா மட்டும் அவளை அனுப்பலாம். பத்து படி முன் கூட்டி யோசிக்கக் கூடியவள். அவள் என்னுடன் தலைமை அலுவலகத்தில் இருந்தால் எனக்கு உதவியாக இருக்கும்" என்றதும் மாவட்ட ஆட்சியாளர் அவளை வியப்புடன் பாத்தபடி தலையசைத்தார். தலை குனிந்து அமர்ந்து இருந்தாள் வந்தனா ராத்தோட் I.P.S அங்கிருந்து அவள் மாவட்ட தலைமை காவலகத்தை அடைந்த சில மணி நேரங்களில் S.P காஷிநாத் ஷர்மாஅவளை அழைத்து, "சிக்கந்த்ராவில நிலைமை கை நழுவி போயிட்டு இருக்கு. ஜெய்ப்பூரில் இருந்து வந்திருக்கற ரிஸர்வ் போலீஸ் படையை (Reserve Police Battalion) உடனே அங்க போக சொல்லி இருக்கேன். நீயும் அவங்க கூட போ" என்று ஆணை பிறப்பித்தார். அவள் வெளியே சென்றதும் ரிஸர்வ் போலீஸ் படையின் தலைவர் S.P. தல்பத் சிங்க்கிடம் "She is with you only for officiating your actions. Please ensure her safety (அவள் உங்களுடன் இந்த மாவட்டத்தின் ஒரு பிரதிநிதியாக மட்டும் வருவாள். அவளை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள்)" என்றார். அவரும் தலையசைத்தவாறு வெளியில் சென்றார்.அந்த படையின் முன்னணியில் இருந்த ஜீப்பில் S.P. தல்பத் சிங்க்குடன் வந்தனா சென்றாள். அவர்கள் சிக்கந்தராவை அடைந்த போது ஒரு காவல் நிலையம் தீக்கிரையாக்கப் பட்டு இருந்தது. இன்னொரு காவல் நிலையமும் எரியத் தொடங்கி இருந்தது. குர்ஜார் வகுப்பினர் எறியத் தொடங்கிய காவல் நிலையத்தை சுற்றி நின்று வெறியுடன் கோஷமிட்டுக் கொண்டு இருந்தனர். அவர்களை அந்த இடத்தை விட்டு அமைதியாக அகலும் படி தன் கையில் இருந்த மைக்கில் S.P தல்பத் சிங்க் வந்தானாவை அறிவிக்க சொன்னார். வந்தனா அவ்வாறு அறிவித்த பிறகும் கூட்டம் கலையாமல் இருக்க. அடுத்த கட்டமாக சுட வேண்டி இருக்கும் என்று அறிவிக்க சொன்னார். அதையும் வந்தனா அறிவித்தாள். மேலும் கூட்டம் கலையாமல் இருக்க காவல் நிலையத்தில் இருந்தவர்களை காப்பாற்றும் பொருட்டு தன் படையிடம் முதலில் கண்ணீர் புகை வெடிகளை வீச ஆணையிட்டார். ஜீப்பில் இருந்தவர்கள் உட்பட படையில் இருந்த அனைவரும் தத்தம் முகமூடிகளை அணிந்த பிறகு கண்ணீர் புகை வெடி குண்டுகள் கூட்டத்தை நோக்கி வீசப் பட்டன. அதன் பிறகும் கலையாமல் இருப்பவரை சுடுவதற்கு ஆணை பிறப்பித்தார். அடுத்ததாக துப்பாக்கி ஏந்திய காவல் துறை வீரர்கள் முன்னணிக்கு வந்து கூட்டத்தை நோக்கி ஐந்து முறை சுட்டனர். கூட்டம் சிதற பலரும் காயமுற்று விழுந்தனர். S.P. தல்பத் சிங்க்கின் கவனம் முழுவதும் அந்த தாக்குதலில் இருக்க, வந்தனா அவர்களுக்கு தேவையான அளவுக்கு உள்ளே செல்ல வழி கிடைத்ததும் கூட்டத்தின் நடுவே புகுந்து ஒரு ஜீப்பில் பின்னால் இரண்டு வேன்களுடன் காவல் நிலையத்தை அடைந்தாள். உடன் வந்த ரிஸர்வ் போலீஸ் படையினருடன் வந்தனா எரிந்து கொண்டு இருந்த காவல் நிலையத்திற்குள் சென்று அங்கிருந்தவர்கள் அனைவரையும் வெளியேற்ற தொடங்கினாள். காயமுற்று இருந்தவர்களை எல்லோரையும் ஒரு வேனில் ஏற்றியபிறகு மற்றவர்களை வீரர்களுடன் அடுத்த வேனில் ஏற்றி திரும்பிச் செல்ல ஆணை இட்டாள். மறுபடி ஜீப்பில் ஏறி அந்த காவல் நிலையத்தை விட்டு வெளியேறுகையில் கூட்டம் ஓரளவு கலைந்து இருந்தது. அருகில் நின்று கோஷமிட்டுக் கொண்டு இருந்தவர்கள் இப்போது துப்பாக்கி சூடு படாத தூரத்திற்கு சென்று நின்று இருந்தனர். சிலர் இன்னமும் கோஷமிட்ட படி இருந்தனர். பலர் காவல் துறையினர் அருகே துப்பாக்கி சூட்டில் காயமுற்று கிடந்தவர்களை கண்டு மலைத்து நின்று இருந்தனர். அபாயம் ஏதும் இல்லை என்று சற்று கவனக் குறைவாக இருந்தவளின் இடுப்பில் எங்கிருந்தோ வந்த ஒரு கத்தி பாய்ந்தது. கண்கள் இருண்டு சாய்ந்தவளை தக்க சமயத்தில் பார்த்த அருகில் இருந்த காவல் துறை அதிகாரி ஒருவர் தாங்கிப் பிடித்தார். S.P தல்பத் சிங்க் மாவட்ட தலைமை அதிகாரியை கைபேசியில் அழைத்து நடந்தவற்றை கூறியபின் வந்தனாவின் நிலைமையை பற்றியும் சொன்னார். பிறகு முதலுதவி சிகிச்சை மட்டும் பெற்று இன்னமும் மயக்கமுற்று இருந்த வந்தனாவை ஒரு தனி ஜீப்பில் ஏற்றி ஜெய்ப்பூர் மருத்துவ மனைக்கு எடுத்து செல்ல ஆணையிட்டு தன் கடமையை தொடர்ந்தார். மூன்று நாட்களில் அபாயகரமான நிலையில் இருந்து மீண்டாள். ஒரு வாரத்திற்கு பிறகு மருத்துவ மனையில் இருந்து ஜெய்ப்பூரில் இருக்கும் அவளது சித்தப்பா வீட்டிற்கு பெற்றோருடன் சென்றாள். Friday, 30 May 2008 10 AM, Residence of IGP Yogeshwar Rathod I.P.S வெள்ளி, மே 23 2008 காலை 10 மணி, ஐ.ஜீ.பி. யோகேஷ்வர் ராத்தொட் I.P.S அவரகளின் இல்லம் வீட்டை அடைந்து தனது பெற்றோர், சித்தி, சித்தப்பாவுடன் அமர்ந்து சிறிது நேரம் பேசிக் கொண்டு இருந்தாள். "என்ன வந்தனா, இப்ப எப்படி இருக்கு? இன்னும் வலி இருக்கா?" "வலி இல்லை சித்தப்பா, ஆனா கொஞ்சம் பலவீனமா இருக்கு" "பின்னே, எவ்வளவு இரத்தம் போயிருக்கு?" சிரித்தவாறு அமர்ந்து இருந்தவளருகே அது வரை மௌனமாக இருந்த அவள் தாய் கௌரி தன் கொழுந்தனிடம், "யோகி, போதும்பா இந்த வேலை. என்னால இன்னோரு இழப்பை தாங்க முடியாது. இவருக்கும் இது மனசில இருக்கு. ஆனா, ராத்தோட் குடும்பத்தில மத்தவங்க எல்லாம் அவரை கேவலமா பாப்பாங்கன்னு வெளியில சொல்லாம இருக்கார்." வந்தனா, "அம்மா, இப்ப என்ன ஆயிடுச்சுன்னு இப்படி கவலை படறே?" யோகேஷ்வர், "வந்தனா, அண்ணி சொல்றதுலயும் ஞாயம் இருக்கு ... " வந்தனா தந்தை என்ன சொல்லப் போகிறார் என்று அவரை பார்த்த படி இருந்தாள். அவள் தந்தை, "அமா வந்தனா. உங்க அம்மா சொல்றது சரி. என்னாலயும் நிச்சயம் தாங்க முடியாது. எனக்கு முன்னாடி அவ வாய்விட்டு சொல்லிட்டா" யோகேஷ்வர், "வந்தனா, நீ போலீஸ்ல இருந்து வெளிய போக வேண்டாம். உன் ட்ரெயினிங்க் முடுஞ்சப்ப உனக்கு என்ன சிபாரிசு செஞ்சு இருந்தாங்க? யோசிச்சு பாரு. அதுவும் போலீஸ் வேலைதான். அதிலயும் உன்னால நீ அன்னைக்கு சிக்கந்தராவில சாதிச்சதை விட நிறைய சாதிக்க முடியும்" அவளது சித்தி எல்லோரையும் அமைதி படுத்தும் விதமாக, "ஒரு வாரம் ஹாஸ்பிடல்ல இருந்துட்டு இப்பதான் வந்து இருக்கா. இன்னும் ஒரு வாரம் ரெஸ்ட் எடுத்துக்க சொல்லி இருக்காங்க அதுக்குள்ள என்ன பேச்சு? வந்தனா, இந்த டீயை குடிச்சுட்டு ரூம்ல போய் படுத்து ரெஸ்ட் எடும்மா" என்று அந்த விவாதத்திற்கு முற்று புள்ளியிட்டாள்.
வேலையாள் கொண்டு வந்த டீயை வாங்கி குடித்துவிட்டு மாடிக்கு செல்ல எழுந்தாள். படிகளை ஒட்டிய சுவற்றில் அழகாக மாட்டி இருந்த குடும்ப படங்களை பார்த்தவாரு மாடிக்கு சென்றாள். முதலில் இருந்த படத்தில் இருந்தது அவள் பெரியப்பா ஜெனரல் மஞ்சுநாத் ராத்தோட், பெரியம்மா கோமள் மற்றும் பெரியப்பாவின் மகன் A.C.P மனீஷ் ராத்தோட் I.P.S. அடுத்த படம் அவள் குடும்ப படம். பல வருடங்களுக்கு முன் எடுத்தது. மாறுகண்ணுடன் அவளது தந்தை வீரேந்திர ராத்தோட், தாய் கௌரி, அண்ணா விக்ரம் இவர்களுடன் வந்தனா. அடுத்தது அவளது சித்தப்பாவின் குடும்பம் I.G.P யோகேஷ்வர் ராத்தோட் I.P.S, சித்தி சுலக்ஷணா, பள்ளிப் படிப்பில் இருக்கும் சித்தப்பாவின் மகன் பிரவீண். அடுத்த படம் அவள் எப்போதும் விரும்பிப் பார்ப்பது. பெரியப்பா, சித்தப்பா இவர்களை தவிர அவர்களது சித்தப்பா, பெரியப்பா மக்கள், பிறகு அவர்களின் பிள்ளைகள். படத்தில் பாதி காக்கி சட்டைகள். நடு நடுவே சில கடற்படையின் வெள்ளைச் சட்டைகளும் விமானப் படையின் வெளிர் நீலச் சட்டைகளும் இருந்தன. அவர்களுக்கு நடுவே கோட்-சூட்டுடன் இருந்த சிலரில் அவளது தந்தை இருந்தார். மாடியில் ஏறக்குறைய அவளது அறையாகி விட்டு இருந்த கெஸ்ட் பெட்ரூமை அடைந்தவள் எதிரில் இருந்த ஆளுயரக் கண்ணாடியில் தன்னை பார்த்தாள். விறைப்பாக நின்றபடி 'வந்தனா ராத்தோட் I.P.S' என்று மனதுக்குள் ஒரு சொல்லிக் கொண்டாள். அடுத்த கணம் மாடிப் படியோரம் படத்தில் அடுத்த நாளைப் பற்றிய கவலை ஏதுமற்று இருந்த தனது முகத்தைக் நினைவு கூர்ந்தாள். தான் அடைந்த மாற்றங்களை நினைக்க அவளுக்கே வியப்பாக இருந்தது. அவளை அறியாது பெருமூச்சு விட்டாள். படுக்கையில் படுத்தவள் தூக்கம் வராமல் கடந்த காலத்தின் வெவ்வேறு கட்டங்களை அசை போடத் தொடங்கினாள்..காவல் துறையிலும் ராணுவத்திலும் இருப்பதை ஒரு பாரம்பரியமாக கொண்ட குடும்பச் சூழலில் பிறந்தவர் அவளது தந்தை வீரேந்தர் ராத்தோட். பிறவியில் இருந்த மாறு கண்ணால் அவரால் தன் குடும்ப பாரம்பரியத்தில் பங்கு கொள்ள முடியவைல்லை என்பது அவர் மனதில் பெரியதொரு ஆதங்கம். தன் மகன் விக்ரம் ஒரு காவல் துறை அதிகாரி ஆகவேண்டும் என்பது அவன் பிறந்த போதிலிருந்து அவர் கண்ட கனவு. ஆஜ்மெரில் இருக்கும் மேயோ காலேஜ் (Mayo College, Ajmer) எனும் உயர்தர போர்டிங்க் பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தார். பள்ளிப் படிப்பு முடிந்ததும் தில்லியில் இருக்கும் செய்ன்ட் ஸ்டீஃபன்ஸ் (St Stephens) கல்லூரியில் அவனுக்கு பி.ஏ பொருளாதாரம் ஹானர்ஸில் (B.A Economics Hons) இடம் கிடைத்தது. அவனுக்கு கிடைப்பதற்கரிய அந்த இளகலைப் பட்டப் படிப்பில் இடம் கிடைத்ததும், ஐ.பி.எஸ் (IPS) இல்லாவிடில் அந்த படிப்புக்கு ஏற்ற ஐ.ஏ.எஸ் (IAS) யில்லாவது சேருவான் என்று கனவு கண்டார். விக்ரம் படிப்பை முடிக்கும் முன்னரே அவன் தந்தைக்கு தெரியாமல் இங்கிலாந்தில் இருக்கும் லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் (London School Of Economics) இடம் பிடித்தான். வருடத்திற்கு ஒரு முறை தங்கள் குடும்பத்துடன் பெரியப்பா, சித்தப்பா குடும்பங்களும் வந்து கூடி இருக்கும் சமயத்தை பயன் படுத்திக் கொண்டு தனக்கு ஐ.பி.எஸ் அல்லது ஐ.ஏ.எஸ் படிப்பில் விருப்பமில்லை என்று அறிவித்தான். இவ்வளவு நாளும் தனக்கு ஆசை காட்டிய பின் மறுக்கும் மகனை கண்டு வீரேந்தர் கொதிப்படைந்தார். இருப்பினும் தன் சகோதரர்கள் உடனிருந்து அவரை சமாதானப் படுத்த, தன் ஆசை நிராசை ஆனதை பொருட் படுத்தாமல் அவனை மேலும் படிக்க லண்டனுக்கு செல்ல அனுமதித்தார். மனதோரத்தில் மகன் எல்.எஸ்.ஈ (LSE) யில் இடம் பிடித்ததை பற்றி சிறுது கர்வமும் பட்டார். விக்ரம் வந்தனாவுக்கு நான்கு வயது மூத்தவன். மகனை காவல் துறை அதிகாரியாக பார்க்க வேண்டும் என்று கனவு கண்ட வீரேந்தருக்கு மகளை பற்றி அப்படி எந்த கனவும் இல்லை. அவருக்கு அவள் ஒரு செல்லக் குட்டி. சிறு வயதிலிருந்து தாயைவிட தந்தையிடம் வந்தனாவுக்கு அளவு கடந்த பாசம். சிறு வயதில் இருந்து வந்தனாவுக்கு கணிதம் மற்றும் விஞ்ஞான பாடங்களில் நாட்டம் அதிகம். தன் அண்ணனைப் போலவே பல விளையாட்டுகளிலும் பங்கேற்பாள். பதினைந்து வயதில் விக்ரம் குதிரை ஏற்றம் கற்கும் போது அவனுடன் சேர்ந்து பனிரெண்டு வயதில் அவனுக்கு நிகராக கற்றாள். பத்தாம் வகுப்பில் அவள் பெற்ற மதிப்பெண்களைக் கண்டு வியந்த தன் சகோதரர்களின் வற்புறுத்தலால் அவளை கோட்டா என்ற இடத்தில் ஐ.ஐ.டி நுழைவு தேர்வுக்கு தனிப் பயிற்சி அளிக்கும் பன்ஸால் இன்ஸ்டிட்யூட்டில் (Bansal Institute, Kota, Rajasthaan) சேர்த்தார். ஐ.ஐ.டியில் இடம் கிடைக்காவிட்டாலும் ஐ.ஐ.டிகளுக்கு அடுத்தவையாக கருதப் படும் என்.ஐ.டி கல்லூரிகளுக்கான நுழைவு தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்றாள். ஜெய்ப்பூரிலே இருக்கும் மாலவியா தேசிய தொழில்நுட்பக் கல்லூரியில் (Malaviya National Institute of Technology) கணிணி விஞ்ஞானம் (Computer Science) படிக்க அவளுக்கு இடம் கிடைத்ததில் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அவள் பி.டெக் படிப்பில் காலடி எடுத்து வைக்கும் போது விக்ரம் இங்கிலாந்து புறப்பட்டான். அண்ணன் தான் விரும்பிய எம்.பி.ஏ படிக்க செல்கிறான் என்று ஒரு புறம் அவள் மனம் குதூகலித்தாலும் தந்தையின் எதிர்பார்ப்பை நிராகரித்தான் என்பதில் அவளுக்கு மன வருத்தமே. விக்ரமை வழியனுப்ப குடும்பத்தினர் எல்லோரும் கூடி இருந்த சமயம், யோகேஷ்வர் வந்தனா பி.டெக் படித்தாலும் ஐ.பி.எஸ் நுழைவுத் தேர்வில் பங்கேற்கலாம் என்று கூறி அவள் மனதில் ஐ.பி.எஸ் படிக்கும் ஆர்வத்திற்கு வித்திட்டார். அவளது இரண்டாம் வருட இறுதி தேர்வுக்கு படிப்பு விடுமுறையில் வீட்டில் இருந்தாள். விக்ரம் தனது இறுதி ஆண்டின் ப்ராஜக்ட்டுக்கு ஒரு பன்னாட்டு முதலீட்டு வங்கியின் ஸ்பெய்ன் (Spain) நாட்டின் தலை நகரமான மாட்ரிட்டில் (Madrid) இருந்த கிளையில் பணியிட இடம் கிடைத்து இருந்தது. மார்ச் 11ம் தேதி மாலை தொலைக் காட்சியில் மாட்ரிட் நகரத்தின் மின்சார ரயில்களில் அன்று காலை நடந்த சரமாரியான குண்டு வெடிப்புகளில் இருநூறு பேர் இறந்ததாகவும் ஆயிரக் கணக்கானோர் காயமுற்றதாகவும் செய்தி வந்தது. உடனே பதறிய வீரேந்தர் தன் மகனை அவன் கைபேசியில் அழைத்தார். பதிலேதும் இல்லாமல் போக அவனது அலுவலகத்தை அழைத்தார். வெவ்வேறு மேசைகளுக்கு அவரது இணைப்பு திசை திருப்பப் பட்டு முடிவில் அவன் பணிபுரிந்த பிரிவின் மேனேஜருடன் தொடர்பு கொண்டார். விக்ரம்மும் அவனுடன் லண்டனில் இருந்து ப்ராஜெக்ட் செய்ய வந்திருந்த அவனது நண்பனும் அன்று அலுவலகத்திற்கு வந்து இருக்கவில்லை. மேனேஜர் பதட்டப் பட வேண்டாமென்றும் அன்று பலர் வேலைக்கு வந்து இருக்க வில்லை என்றும் தெரிவித்தார். அவனை தொடர்பு கொள்ள வேறு வழியறியாமல் தவித்த படி இருந்தார். சற்று நேரத்தில் அவர்களை தொலைபேசியில் அழைத்த யோகேஷ்வர் விவரம் அறிந்து மாட்ரிட் தூதரகத்தில் பணியிடும் ஒரு சக ஐ.பி.எஸ் அதிகாரியை அணுகினார். இரண்டு நாட்களுக்கு பிறகு அல்-கைதாவின் தீவிரவாத செயலில் உயிரிழந்த விக்ரம்மின் உடல் குளிர் சாதனச் சவப் பெட்டியில் வந்து சேர்ந்தது.அண்ணனின் மறைவும் உயிரிழந்த மகனின் உருத்தெரியாமல் அழிந்து இருந்த முகத்தை கண்ட பெற்றோரின் கதறலும் அவளை பெரிதும் பாதித்தது. அந்த தீவிரவாதத்தை நினைத்து அவள் மனம் கொதித்தது. தீவிரவாதத்தின் மேல் இருந்த வெறுப்பு ஒரு இனம் புரியாத வெறியாக மாறியது. விதையாக மனதில் இருந்த ஐ.பி.எஸ் ஆர்வம் வேரூன்றி மரமானது. பி.டெக் மூன்றாம் வருடத்தில் காலடி வைக்கும் போது இருந்தே ஐ.பி.எஸ் நுழைவு தேர்வுக்கான படிப்பிலும் இறங்கினாள். முதலில் அவள் முடிவைக் கேட்ட வீரேந்தர் மகிழ்ச்சி அடைந்தார். இருப்பினும் சிறு வயது முதல் தெருவில் அடிபட்ட நாய்க் குட்டிகளையும் பூனைக் குட்டிகளையும் வீட்டிற்கு கொண்டு வந்து பராமரிக்கும் மென்மையான மனப் பாங்கு கொண்ட வந்தனா அந்த துறைக்கு ஏற்றவளா என்ற சிறு அய்யம் அவர் மனதில் இருந்து வந்தது. பி.டெக் முடித்து அடுத்த சில மாதங்களில் யூ.பி.எஸ்.ஸி (UPSC) நடத்தும் இண்டியன் சிவில் சர்வீஸஸ் (Indian Civil Services) தேர்வில் பங்கேற்றாள். ராஜஸ்தானில் பங்கேற்றவர்களில் முதலாக வந்ததோடு அகில் இந்திய அளவிலும் நல்ல ராங்க்குடன் தேர்வு பெற்றாள். 2006ம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் ஹைதராபாத்தில் இருக்கும் ஸர்தார் வல்லப் பாய் படேல் நேஷனல் போலீஸ் அகாடெமி (Sardar Vallabh Bhai Patel National Police Academy)யில் ஐ.பி.எஸ் பயிற்சி முகாமில் சேர்ந்தாள். ஒரு வருட பயிற்சியில் பல வகுப்புகளிலும் பாடங்களிலும் முதல் இடத்தில் தேர்வு பெற்றாள்.
ஐ.பி.எஸ் பயிற்சி முடிவில் ஒவ்வொருவரும் எந்த மாகாண அரசு அல்லது மத்திய அரசு பிரிவுக்கு அனுப்பப் படுவர் என்பதை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுப்பது வழக்கம். இதை கேடர் (Cadre) என்று அழைப்பார்கள். ஒவ்வொரு மாகாணத்தின் முதலிடத்தை பெற்றவர் மட்டும் விருப்பப் பட்டால் தங்கள் சொந்த மாகாண கேடரை தேர்ந்தெடுக்கலாம். வந்தனா ராஜஸ்தான் மாநிலத்தில் முதலிடத்தில் இருந்ததால் அவள் ராஜஸ்தான் கேடரில் சேரும் விருப்பத்தை தெரிவித்து இருந்தாள். ஆனால் அந்த கல்லூரியின் டைரக்டரும் அவளது பயிற்சி முகாமின் தலைவரும் அவளை சாதாரண போலீஸ் வேலையில் சேர வேண்டாமென்று அறிவுரைத்தனர். அவளைப் போன்ற அறிவாற்றல் (IQ) கொண்டவர்கள் ஐ.பி.எஸ்ஸில் சேர்வது அரிது. அப்படிப் பட்டவள் சாதாரண சட்ட-ஒழுங்கு மேற் பார்வை பணியிலோ, குற்றப் பிரிவிலோ சேர்வதற்க்கு பதிலாக அவளுக்கு உகந்த ஒரு மத்திய அரசு பிரிவில் சேர்வதே சரி என்று பரிந்துரைத்தனர். ராஜஸ்தான் ஐ.பி.எஸ் போலீஸ் பிரிவில் (Rajashthan I.P.S Cadre) சேர்ந்து தன் தந்தையின் முன் காக்கிச் சட்டையில் வலம் வர விரும்பிய வந்தனாவின் மனம் அதை ஏற்றுக் கொள்ள மறுத்தது.

No comments:

Post a Comment