Saturday, January 24, 2015

செக்மேட் - சைபர் கிரைம் திரில் தொடர் - பாகம் - 9


தீபா ராவ் ஒரு அறிமுகம் 2008 மே மாதத் தொடக்கம் வரை Deepa Rao - An Introduction Till the beginning of May 2008 தீபா ராவ் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவள். அவளது தந்தை வீரபத்ர ராவ் இந்தியாவில் இருக்கும் வெவ்வேறு உயர் நீதி மன்றங்களிலும் அவ்வப் போது உச்ச நீதி மன்றத்திலும் வாதாடும் பிரபல வழக்கறிஞர். அவளது அண்ணன் சுதாகர் ராவ் தந்தையின் கால் சுவட்டில் சென்று வழக்கறிஞராக தந்தையின் கீழ் ஜூனியராக பணியாற்றிக் கொண்டிருந்தான். தாய் கோமதி ராவ் ஒரு கைனகாலஜிஸ்ட். தாய் தந்தை இருவரும் அவர்கள் தொழிலுக்கு அவள் முடிந்த வரை தூரத்தில் இருப்பதே நல்லது என்று நினைத்தனர். "அவ லாயர் ஆனான்னா அவளுக்கு இருக்கற மூளைக்கு எப்பேர்பட்ட கிரிமினலையும் வெளிய கொண்டு வர முடியும். ஆனா அவளுக்கு இருக்க குறும்புத்தனத்துக்கு மதர் தெரஸாவை கூட கம்பி எண்ண வெச்சுறுவா ... நல்ல வேளை அவளுக்கு லாயராக இஷ்டம் இல்லை" .. இது வீரபத்ர ராவின் தன் செல்ல மகளைப் பற்றிய அன்பான விமர்சனம்.
"ஐய்யோ, வேண்டவே வேண்டாம் .. உனக்கு எதுக்கு இன்னோரு குழந்தைன்னு பேஷண்டுக்கு தெரியாமலே கருத்தடை பண்ணினாலும் பண்ணிடுவா .. நல்ல வேளை அவளுக்கு டாக்டர் ஆக இஷ்டம் இல்லை" ... இது அவள் அன்புத் தாய் கோமதியின் விமர்சனம். "நல்லா படிக்கற பொண்ணுங்கற ஒரே காரணத்துக்காக அவளுக்கு நாங்க இன்னமும் டீ.சீ கொடுக்காம இருக்கோம் ... அவளை கொஞ்சம் கண்டிச்சு வையுங்க" இது அவளது பள்ளி தலைமை ஆசிரியர் அவளுடைய ஒவ்வொரு வருட ரிப்போர்ட் கார்டிலும் எழுதியது. இருந்தாலும் தாய், தந்தை, அவளை விட எட்டு வயது மூத்த அண்ணன், அண்ணி சாரதா இவர்கள் எல்லோருக்கும் அவள் ஒரு செல்லக் குட்டி. ஐந்தடி நான்கு அங்குல உயரம், எந்த விதமான உடல் பயிற்சியும் இல்லாமலே உடலில் தேவையான இடங்களை தவிற வேறு எங்கும் சதை பற்று இல்லாத மணல் கடிகார உடல் அமைப்பு, மாசு மருவில்லாத முகம், அளவுக்கு அதிகமான குறும்பு, 'என்னதான் நடக்கும் பாக்கலாமே' என்று மனதில் எப்போதும் ஒரு குறுகுறுப்பு, அசட்டு தைரியம், Razor sharp wits (மன்னிக்கவும், இதை கூர்மையான அறிவு என்று தமிழில் சொன்னால் ஏதோ ஒப்புக்கு சப்பாக தோன்றுகிறது) இவை அனைத்தும் கூடிய ஒரு அழகு பெட்டகம் தீபா ராவ். வீட்டில் யாரும் படிக்காததாலே தீபாவுக்கு கணிதம் மற்றும் பொறியியலின் மேல் சிறு வயது முதல் பற்று அதிகம். கரக்பூர் ஐ.ஐ.டியில் பி.டெக் முடித்தபின் மேலும் படிக்கும் ஆர்வத்தினால் தீபா ராவ் பெங்களூரில் இருக்கும் ஐ.ஐ.எஸ்ஸி (IISc - Indian Institute of Science)ல் எம்.டெக் படிக்க சேர்ந்தாள். ஒன்றரை வருடங்கள் பெங்களூரில் தங்கி படித்துக் கொண்டு இருந்தவள் தன் கடைசி செமஸ்டரில் ப்ராஜெக்ட் செய்வதற்காக ஒரு நல்ல நிறுவனத்தை தேர்ந்தெடுக்க வேண்டி இருந்தது. மைரோஸாஃப்ட் நிருவனத்தின் ஹைதராபாத்தில் இருக்கும் சென்டருக்கு விண்ணப்பித்து இருந்தாள். அது கிடைக்காமல் போக தந்தையிடம் முறையிட்டாள். மகள் அந்த ஆறு மாதமும் ஹைதராபாத்திலேயே இருக்க வேண்டும் என்று விரும்பிய வீரபத்ர ராவ் தெரிந்தவர் ஒருவர் மூலம் ஒரு மத்திய அரசின் ஆராய்ச்சி மையத்தில் அவளுக்கு ப்ராஜெக்ட் வேலை செய்ய அனுமதி வாங்கி கொடுத்தார். இந்திய அரசுக்கு சொந்தமான செயற்கை கோள்கள் பல விண்வெளியில் பூமியை சுற்றி வந்த படி உள்ளன. அவைகளில் சில செயற்கை கோள்கள் தகவல் சேகரிப்பதற்காகவே விடப் பட்டவை. இவைகளுக்கு ரிமோட் ஸென்ஸிங்க் சாட்டிலைட் (Remote Sensing Satellite) என்று பெயர். இந்த வகை செயற்கை கோள்கள் விண்வெளியில் இருந்தபடி பூமியை (அவைகளின் காலடியில் இருக்கும் பகுதிகளை) புகைப் படங்களாகவும், வெப்ப பிம்பங்களாகவும் (Infra red imagery) எடுத்து அந்த ஆராய்ச்சி மையத்துக்கு அனுப்புகின்றன. அந்த புகைப் படங்களையும் பிம்பங்களையும் ஆராய்ந்து அரசின் வெவ்வேறு துறைகளுக்கு பயன் படும்(?) தகவல்களாக கொடுப்பதற்கென உருவாக்கப் பட்டதே இந்த மையம். அரேபியக் கடலில் மீன் கூட்டம் கடலில் எந்த பகுதியில் இருக்கிறது என்ற தகவல் தினமும் மாநில மீன் துறை வாயிலாக மீனவருக்கு இந்த மையத்தில் இருந்து அனுப்பப் படும். கரைக்கு வருமுன்னரே மீனவர்கள் பிடித்த அதிகப் படியான மீன்களை ஏற்றுமதி நிறுவனங்களுக்கு ஏலம் விட்டு எஞ்சி இருப்பதை பாமர மக்களுக்கு யானை விலைக்கு விற்பது இந்த மையம் வந்த பிறகு வாடிக்கையானது. அதே போல எந்த காட்டில் எந்த இடத்தில் மக்கள் மரங்களை வெட்டி காட்டை அழித்துக் கொண்டு இருக்கிறார்கள் என்ற தகவலை வனத்துறைக்கு அனுப்பி மரம் வெட்டுபவர்களை தேடிப் பித்து லஞ்சம் வாங்கும் வேலையை வெகுவாக குறைப்பதும் இந்த மையத்தின் ஒரு முக்கிய அன்றாட கடமை!! அங்கு அவள் சேர்ந்த பின் அவள் குறும்பு எல்லையை கடக்க ஆரம்பித்தது. இந்த மையத்தில் நடக்கும் வேலைகள் அனைத்தும் கணிணி சார்ந்தவையே .. ஆராய்ச்சி வேலைகளுக்கென தனி கணிணிகள் இருப்பினும், ஒவ்வொருவ்ருக்கும் ஒரு விண்டோஸுடன் கூடிய பி.சி (PC running on Windows) கொடுக்கப் பட்டு இருந்தது. அந்த மையத்தில் இருந்த கணிணிகள் அனைத்தும் ஒரு லோகல் ஏரியா நெட்வொர்க் (LAN - Local Area Network) மூலம் இணைக்கப் பட்டு இருந்தன. இணையத்தில் பல தளங்கள் தடுக்கப் பட்டு இருந்தன. இதனால் கொடுத்த வேலையை அதற்காக கொடுப்பட்ட நேரத்தில் பாதியில் செய்துவிட்டு மீதி நேரத்தை தன் பொழுது போக்கில் கழிக்கும் தீபாவுக்கு அளவு கடந்த எரிச்சல். அவள் பொழுது போக்கு என்ன? அவள் ஒரு ஹேக்கர்! VGSD247 என்ற ஐ.டியில் ஹாக்கர்கள் மத்தியில் ஓரளவு பிரபலமாக தொடங்கி இருந்தாள். ஹார்ஷ்7 (harsh7) அவளது மானசீக குரு. (படிப்பவருக்கு யாரிந்த ஹார்ஷ்7 என்று நினைவுக்கு வருகிறதா?). ஒரு முறை அவர் பாட் நெட்டுகளை (Bot Net) பற்றி எழுதி இருந்த ஒரு கட்டுரையை படித்து விட்டு அவைகள் எப்படி இயங்குகின்றன என்பதை தெரிந்து கொள்வதற்காகவே அமெரிக்காவில் பிரபலமான ஸ்டார்ம் பாட் நெட்டின் வைரஸ்ஸை (Storm Bot Net Virus) தன் லாப் டாப்பில் புகுத்தி அது என்ன செய்கிறது என்பதை ஆராய்ந்து இருந்தாள். அந்த மையத்தின் கெடுபிடியை வெறுத்தவள், இணையம் மூலம் வெளியுலகத்தை அணுக முடியாவிட்டாலும் தன் விளையாட்டை மையத்துக்குள்ளே தொடங்கினாள். முதலில் ஒரு சிறு வைரஸ் எழுதி மையத்துக்குள் உலவ விட்டாள். பல வலைதளங்கள் தடுக்கப் பட்டு இருப்பினும் மின் அஞ்சலுக்கு (Email) இருந்த தனி மென்பொருளுக்கு (MS Outlook) எந்த தடையும் இல்லை என்பதை அறிந்தவள் முதலில் தன் குறும்பை அதில் தொடங்கினாள். திடீரென்று ஒரு நாள் எல்லோருடைய மின் அஞ்சலில் இருந்தும் ஆங்கில உயிரெழுத்துக்கள் காணாமல் போய் இருந்தன (to put it better in English, she waged a war on vowels and phonetics). IMAGERY என்ற வார்த்தை அதிகமான புழக்கத்தில் இருக்கும் அந்த மையத்தில் அன்று MGR பிரபலமானார். அடுத்த நாள் மறுபடி எல்லோரது மின் அஞ்சலும் சரியாக சென்றன. எல்லோரும் என்ன நடந்தது என்று தலையை சொறிந்து கண்டு பிடிக்கும் முன் ஒரு நாள் எல்லோருக்கும் பால் மாற்றம் (sex change) செய்ய முடிவெடுத்தாள். அன்று (மட்டும்) எல்லோரும் அனுப்பிய மின் அஞ்சல்களிலும் "Dear Sir" என்பது "Dear Madame" ஆகவும் "Dear Madame" என்பது "Dear Sir" அகவும் மாறி இருந்தன. இதைப் போலவே "Mr" என்பது "Mrs" ஆகவும் "Miss" மற்றும் "Mrs" என்பவை "Mr" ஆக மாறின. அந்த மையத் தலைவர் எழுதிய மின் அஞ்சலில் மனைவிக்கு மிகவும் பயந்த மத்திய அமைச்சகத்தின் காரியதரியின் அனுமதிக்கு பதிலாக அவரது மனைவியின் அனுமதிக்காக காத்திருப்பதாக எழுதி இருந்தது புது டில்லியில் பிரபலமானது! இந்த செயல்கள் போரடிக்கத் தொடங்க, அந்த மையத்தின் இருக்கும் கணிணிகளை ஹாக் செய்யத் தொடங்கினாள். எல்லோரது கணிணியும் லோகல் ஏரியா நெட்வொர்க் மூலம் இணைக்கப் பட்டு இருந்தது அவளுக்கு மிக வசதியாக இருந்தது. பலரது கணிணிகளில் விண்டோஸ் இயக்கும் ஒலிகள் மாற்றப் பட்டு இருந்தன. ஒரு பிரிவின் தலைவரின் கணிணியில் விண்டோஸ் தொடங்கும் போது வரும் இசைக்கு பதிலாக அவரது கணிணியில் அவர் சேகரித்து வைத்து இருந்த ஒரு செக்ஸ் படத்தில் வரும் பெண்ணின் உச்ச கட்ட அனத்தல் ஒலித்தது. பலர் சேகரித்து வைத்து இருந்த செக்ஸ் படங்கள் அவர்களது கணிணியின் வால் பேப்பராக மாறின. வெளியில் வேலை தேடிக் கொண்டு இருந்தவர்களின் பயோ டேட்டாக்கள் அந்த மையத்தின் தலைவருக்கே அனுப்பப் பட்டன! கணிணிகளில் இந்த வேலையை யார் செய்கிறார்கள் என்பதை உடனே கண்டு பிடிக்கும் படி மையத் தலைவர் கணிணிகளை பராமரிக்கும் பிரிவின் தலைவருக்கும் கடுமையான ஆணையிட்டபடி இருந்தார். அவரும் பதிலுக்கு தலையை சொறிந்து கொண்டு இருந்தார். ஒரு நாள் அந்த மையத்தின் தலைவரின் கணிணியை அவள் ஹாக் செய்து கொண்டு இருந்த போது வேறு ஒருவர் அதை பார்க்க நேரிட கையும் களவுமாக பிடிபட்டாள். அங்கு ப்ராஜெக்ட் செய்யும் தன்னை யாரும் கண்காணிப்பது இல்லை என்ற கவனக் குறைவினால்தான் அவள் பிடிபட்டாள். அந்த மையத்தின் பாதுகாப்புக்கென நியமிக்கப் பட்ட மத்திய தொழில் பாதுகாப்பு படையிடம் (CISF - Central Industrial Security Force) ஒப்படைக்கப் பட்டாள். அவள் தந்தையும் அண்ணனும் வந்து ஜாமீனில் எடுத்து விவரங்களை அவளிடம் இருந்து தெரிந்து கொண்டனர். "என்ன வேலை பண்ணி வெச்சுருக்க? நீ பண்ணின வேலைக்கு உன்னை உள்ள தள்ளாம விடமாட்டாங்க" என்று அலுத்துக் கொண்ட வீரபத்ர ராவ் புது தில்லியில் அவருக்கு தெரிந்தவர்களிடம் உதவியை நாடினார். R&AWவில் புதிதாக தொடங்கி இருக்கும் என்.டி.ஆர்.ஓ (NTRO) வின் சைபர் க்ரைம் பிரிவின் தலைவர் முரளீதரனின் காதுகளுக்கு அவளைப் பற்றிய விவரம் அடைந்தது. அடுத்த நாள் அவர் ஹைதராபாத்துக்கு வந்தார். "உனக்கு ரெண்டு ஆப்ஷன் இருக்கு. ஒண்ணு உன் பராஜெக்ட் முடிந்ததும் நீ என்னோட டிபார்ட்மெண்ட்ல மூணு வருஷமாவுது வேலை செய்யணும். ரெண்டாவுது ஆறு மாசம் கம்பி எண்ணனும். உனக்கு எது வேணும்" என்று அவர் போட்ட நிபந்தனைகளில் எளிதானதை தேர்ந்தெடுத்தாள். அடுத்த பதினைந்து நாட்களில் தன் ப்ராஜெக்டை முடித்து (பலத்த கண்காணிப்புடன்!) கல்லூரியில் சப்மிட் செய்து அதற்கான தேர்வையும் முடித்து புது தில்லிக்குப் புறப்பட்டாள்.R&AW Head QuartersJune 9 2008 Vandhana Meets Deepaவந்தனா-தீபா அறிமுகமாவதுஜூன் 9, 2008 ஆர் அண்ட் ஏ டபுள் யூ தலைமை அலுவலகம் வந்தனாவும் தீபாவும் காத்துக் கொண்டு இருக்கையில் முரளீதரன் அங்கு வந்து ஜாயிண்ட் டைரக்டரின் அறைக்குள் சென்றார். பிறகு அவர்கள் இருவரும் அறைக்குள் அழைக்கப் பட்டனர். வந்தனா எப்போதும் ஒரு சீனியர் அதிகாரிக்கும் அளிக்கும் மரியாதையான சல்யூட் அடித்து, "வந்தனா ராத்தோட் ரிப்போர்டிங்க் சார்" என்றாள். தீபா முரளீதரனைப் பார்த்து, "நீங்க போட்ட கண்டிஷன்ல சல்யூட் அடிக்கறதெல்லாம் இல்லை" என்றாள். அதிகாரிகள் இருவரும் வாய் விட்டு சிரிக்க அந்த அறையின் இறுக்கம் முழுவதும் காணாமல் போனது. ஜாயிண்ட் டைரக்ட்ர், "வெல்கம் தீபா, உன்னை மாதிரி ஆளுங்களை முரளி இந்த பிரிவு ஆரமிச்சதில இருந்து தேடி தன் பிரிவில் சேத்துட்டு இருக்கார். வந்தனா, மீட் J.C.P முரளீதரன் I.P.S. இவருக்கு கீழதான் நீ வொர்க் பண்ணப் போறே. முரளி, இது வந்தனா, அகடெமி டைரக்டர் சொன்ன ஐ.பி.எஸ் ப்ரொபேஷனர் (IPS Probationer)" என்று அறிமுகப் படுத்தினார். பிறகு அவர் தொடர்ந்து, "என்.டி.ஆர்.ஓ என்கிற அமைப்பில பெரும்பாலானவங்க சைபர் சர்வேலன்ஸ் (cyber surveilance) அப்பறம் டிஜிடல் ஃபோட்ரஸ் (Digital Fortress) பிரிவுலதான் இருக்கப் போறாங்க. நீங்க ரெண்டு பேரும் சேரப் போறது சைபர் க்ரைம் ப்ரிவு. சைபர் க்ரைமுக்குன்னு ஒரு பிரிவு இருக்கணும்னு கொஞ்ச நாள் முன்னாடிதான் முடிவு எடுத்தாங்க" தீபா, "சைபர் சர்வேய்லன்ஸ் பிரிவு என்ன செய்யுது" ஜாயிண்ட் டைரக்டர், "செய்யுது இல்லை. செய்யப் போகுது. இணையம் மற்றும் கைபேசிகள் மூலமாக நடக்கும் தகவல் பரிமாற்றங்களை கண்காணிப்பதுதான் இந்த பிரிவோட வேலை" வந்தனா, "யூ மீன் எல்லா ஈமெயிலையும்?" என்று சற்று அதிர்ச்சியுடன் கேட்க ஜாயிண்ட் டைரக்ட்ர, "எஸ், ஒவ்வொண்ணையும் யாரும் படிச்சு பாக்கப் போறது இல்லை. ஆனா ஒவ்வொரு ஈமெயிலோட நகலும் இந்த பிரிவுக்கு போகும். சந்தேகப் படற மாதிரி இருக்கும் விலாசங்கள் இருந்தா அதை மட்டும் படிச்சு பாப்பாங்க" தீபா, "அப்ப ஜிமெயில் எல்லாம்?" ஜாயிண்ட் டைரக்டர், "உலகத்தில இருக்கும் எல்லா ஈமெயில் வசதி கொடுக்கும் கம்பெனிகளும் ஒரு அக்ரிமெண்டில கையெழுத்து போட்டு இருக்காங்க. இந்தியாவுக்குன்னு தனியா இல்லை. ஐ.நா சபையின் சைபர் க்ரைம் எதிர்ப்பு பிரிவுக்கு. அதன் மூலம் நாம் எப்ப வேணும்னாலும் எந்த ஈமெயிலையும் பிரிச்சு பாக்கற உரிமை நமக்கு இருக்கு" வந்தனா, "அந்த டிஜிடல் ஃபோர்ட்ரஸ் பிரிவு என்ன பண்ணும்" ஜாயிண்ட் டைரக்டர், "இந்தியாவில் இருக்கும் எல்லா பாதுகாக்கப் படவேண்டிய தகவல்களுக்கும் அது ஒரு நிலவறை; பேங்கில இருக்கும் லாக்கர் வசதி மாதிரி" தீபா, "எங்க பிரிவு என்ன செய்யப் போகுது?" ஜாயிண்ட் டைரக்டர், "சைபர் க்ரைமை பத்தி துப்பறியறதுக்கும் தடுக்கறதுக்கும் ஒவ்வொரு மாநில போலீஸ்லயும் ஒரு தனி பிரிவு இருக்கு அதை தவிற ஸீ.பி.ஐ (CBI)லயும் சைபர் க்ரைமுக்குன்னு ஒரு தனி பிரிவு இருக்கு. கணிணி சம்பத்தப் பட்ட எல்லா விதமான தீய செயல்களும் சைபர் க்ரைம்தான். ஸாஃப்ட்வேர் பைரஸி (Software Piracy) கூட ஒரு சைபர் க்ரைம்தான். இதெல்லாம் அந்த ஐ.நா சபை அக்ரிமெண்டில எல்லா நாடுகளும் சேர்ந்து ஒத்துகிட்ட விஷயம்". தீபா, "மைக்ரோஸாஃப்ட் (Microsoft) அமெரிக்க அரசுல இருக்கறவங்களுக்கு நிறைய லஞ்சம் கொடுத்து ஐ.நா சபைல சொல்ல சொல்லி இருப்பாங்க" என்றாள் நக்கலாக ஜாயிண்ட் டைரக்ட்ர், "மைக்ரோஸாஃப்ட் (Microsoft) மட்டும் இல்லை நம்ம இந்தியால இருக்கும் பல சினிமா கம்பெனிகளும்தான். பாட்டு சினிமா எல்லாம் ஏ.வி.ஐ ஃபைலா (AVI file) வெளிய வருதே அதுவும் பைரஸிதானே. அதுவும் சைபர் க்ரைம்தான். அப்படி பாத்தா, அமெரிக்காவுக்கு அடுத்த பெரிய சினிமா தொழில் இந்தியால தான் நடக்குது" என்று விவரித்தார். உடனே தீபா தன் ஐபாடை பார்த்தாள். சிரித்தபடி தொடர்ந்த ஜாயிண்ட் டைரக்டர், "நாம் அதை எல்லாம் பிடிக்க ஆரமிச்சா போலீஸ் படை பத்தாது. எதாவுது ஆதார பூர்வமான புகார் வந்தா மட்டும் இந்த பிரிவுகள் ஆக்ஷன் எடுக்கும்." வந்தனா, "ஒவ்வொரு மாநிலத்திலயும் தவிர ஸீ.பி.ஐலயும் சைபர் க்ரைப் பிரிவு இருக்கும்போது என்.டி.ஆர்.ஓல எதுக்கு ஒரு பிரிவு?" ஜாயிண்ட் டைரக்டர், "இந்த பிரிவுகள் எல்லாம் கண்காணிப்பாங்க; யார் செய்யறாங்கன்னு தெரிஞ்சா, பிடிப்பாங்க. ஆனா, ரொம்ப நுட்பமான சைபர் க்ரைம்மை பிடிக்கற அளவுக்கு அவங்க கிட்ட ஆளுங்க இல்லை" வந்தனா, "அப்படி என்ன பெரிய ஆள் பலம் தேவை?" ஜாயிண்ட் டைரக்டர், "தீபா மாதிரி ஆளுங்க இல்லை. மேற்கொண்டு முரளி உங்களுக்கு விளக்குவார், வந்தனா தீபாவை பொறாமையுடன் பார்த்தாள். தீபாவோ பலியாட்டு களையுடன் காட்சி அளித்தாள்.மானதென்பதை உணர்ந்தாள். விஞ்ஞானிகளுக்கும் பொறியாளர்களுக்கும் மத்தியில் பணிபுரிய வேண்டும் என்று நினைத்து மனம் குழம்பி இருந்த வந்தனா, அவருக்கு கீழ் தான் பணியாற்றப் போவதைப் அறிந்து நிம்மதியும் பெருமிதமும் அடைந்தாள். முரளீதரன் தொடர்ந்தார், "தீபா, வந்தனா, என்னைப் பத்தி ஒரு சின்ன இன்ட்ரோ. இதுக்கு முன்னாடி நான் இன்டர்போலில் (Interpol) டெபுடேஷன்ல இருந்தேன். அங்க இருக்கும் போது தான் நான் சைபர் க்ரைம் பிரிவுக்கு மாத்திகிட்டேன். சிவில் சர்வீஸ் எக்ஸாம் எழுதி ஐ.பி.எஸ் தமிழ்நாடு கேடர்ல சேர்ந்தேன். பத்து வருஷம் தமிழ்நாட்டில இருந்ததுக்கு அப்பறம் இன்டர்போலுக்கு என்னை டெபுடேஷன்ல அனுப்பினாங்க. அதில ஒரு பத்து வருஷம். இப்ப ஒரு வருஷமா இந்த பிரிவுல இருக்கேன். அனேகமா இதில இருந்துதான் ரிடையர் ஆவேன்னு நினைக்கிறேன்" தீபா, "பாவம் சார், நீங்க" முரளீதரன், "கிண்டலா? இன்னும் ஒரு வருஷம் கழிச்சு சொல்லு இந்த வேலையை விட்டு போக விருப்பமா இல்லையான்னு" என்ற பிறகு வந்தனாவை பார்த்து, "உண்மைதான் வந்தனா. இது அவ்வளவு இன்ட்ரெஸ்டிங்கான ஒரு வேலை. அப்பறம் இனிமேல் நீ யூனிஃபாரத்தில் வரக் கூடாது. ஓ.கே" வந்தனா, "எனக்கு நான் பண்ண போற வேலையை பத்தி ஒண்ணுமே தெரியாது. எனக்கு ட்ரெயினிங்க் ... " என்று இழுக்க முரளீதரன், "உன்னோட ப்ரொஃபைலைப் பாத்த உடனே ஓ.கே பண்ணின முக்கிய காரணம் என்ன தெரியுமா? தீபாகூட வொர்க் பண்ணறதுக்கு என் டீம்ல யாரும் இல்லை. என்னோட டீம் ரொம்ப சின்னது. என்.டி.ஆர்.ஓவுக்குன்னு தனி செண்டர் ஹைதராபாத்துல ரெடி ஆகிட்டு இருக்கு. அது முழுசா ரெடி ஆகறதுக்கு இன்னும் குறைஞ்சது ஆறு மாசம் ஒரு வருஷம் ஆகலாம். அதுவரைக்கும் என்னோட டீம் வெவ்வேறு ஊர்ல வேலை செஞ்சுட்டு இருக்கு. இங்க டெல்லில என்.ஐ.சி (National Informatics Center எனப்படும் NIC) கொஞ்சம் பேர், சி.பி.ஐ சைபர் க்ரைம் செல்லில் டெபுடேஷன்ல சிலர், அப்பறம் அவங்க அவங்க வீட்டில இருந்துட்டு வேலை செய்யற சிலர்." என்ற பிறகு ஜாயிண்ட் டைரக்டரைக் காட்டி, "ஜே.டி எனக்கு முழு சுதந்திரம் கொடுத்து இருக்கார். அவருக்கு கீழ நான் இருந்தாலும் R&AWல இருக்கும் மத்த பிரிவுகளும் நம் சேவையை பயன் படுத்திக்க வாய்ப்புகள் இருக்கு".
வந்தனா, "மத்த பிரிவுகள்னா?" முரளீதரன், "நார்காடிக்ஸ் (narcotics - போதைப் பொருள்) பிரிவுக்கு நம் உதவி தேவைப் படும். அதே மாதிரி ஆண்டி-டெரரிஸம் (anti-terrorism - தீவிர வாத தடுப்பு) பிரிவிலும் நம் சேவை தேவை படும்" இரண்டுமே வந்தனாவுக்கு மிகுந்த உற்சாகத்தை கொடுத்தன. தீபா, "சார், நாம் என்ன பண்ணப் போறோம். அதை முதல்ல சொல்லுங்க" முரளீதரன், "சார் தன் வேலையை பார்க்கட்டும் நாம் வெளில போய் கண்டின்யூ பண்ணலாம்" தீபா, "எங்கே உங்க ஆஃபீசுக்கா?" முரளீதரன், "எனக்குதான் ஆஃபீஸே இல்லைன்னு சொன்னேனே மறந்துடுச்சா?" என்ற படி எழுந்து, "பக்கத்தில இருக்கற காஃபீ ஷாப் எதுக்காவுது போலாம்" என்றார். சற்று தொலைவில் இருந்த பரிஸ்டா ரெஸ்டாரண்டுக்கு சென்றடைந்தனர். முரளீதரன், "என்னோட பிரிவில் இருக்கறவங்க எல்லாரையும் ஜோடிகளா (pairs) பிரிச்சு இருக்கேன். ஒவ்வொரு ஜோடிக்கும் ஒரு அசைன்மென்ட் கொடுப்பேன். தேவைப் பட்டா ரெண்டு மூணு ஜோடிகள் சேர்த்து ஒரு டீமா வொர்க் பண்ணவும் வைப்பேன். நீங்க ரெண்டு பேரும் ஒரு ஜோடில பார்ட்னர்ஸா வேலை செய்யணும்" தீபா, "என்ன மாதிரி அசைன்மென்ட்ஸ் சார்?" முரளீதரன், "ஹாக்கிங்க் செய்யறவங்களை கண்டு பிடிக்கறது, ஸ்பாம் மெயில் அனுப்பறவங்களை கண்டு பிடிக்கறது, வைரஸ் மூலம் தகவல் திருடறவங்களை கண்டு பிடிக்கறது இது மாதிரி அசைன்மென்ட்ஸ்" தீபா, "ஓ, அப்ப பாட் நெட்டுகளை கண்டு பிடிக்கற வேலையும் இருக்குமா?" முரளீதரன், "நிச்சயம் .. " இவர்கள் பேச்சில் திணறிய வ்ந்தனா, "சார் எனக்கு ட்ரெயினிங்க் ... " என்று இழுத்தாள் முரளீதரன், "நீ கத்துக்கற வேகத்தை பொறுத்து அடுத்த ஒரு மாசம் வரைக்கும் இங்க டெல்லி ஐ.ஐ.டில நீங்க ரெண்டு பேரும் ட்ரெயினிங்க் எடுத்துக்க ஏற்பாடு செஞ்சு இருக்கேன். நிறைய விஷயம் தீபாவுக்கு தெரிஞ்சதுதான் இருந்தாலும் நீங்க ரெண்டு பேரும் ஒருத்தர் கூட் ஒருத்தர் பழகி புரிஞ்சுக்கறதுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு. இந்த ட்ரெயினிங்க் முடிஞ்சதும் உங்களுக்கான முதல் அசைன்மென்ட் ரெடியா இருக்கும்"அடுத்த மூன்று வாரங்களின் முடிவில் வந்தனா மறுபடியும் ஒரு கல்லூரி மாணவியை போல் உணரத் தொடங்கினாள். அதன் காரணத்தில் பாதி அவர்கள் எடுத்துக் கொண்ட பயிற்சியினால் என்றாலும் மீதி பாதி தீபாவுடன் சேர்ந்து கழித்த நேரத்தினால். பார்ப்பதற்கும் பழக்க வழக்கங்களிலும் இருவரும் மாறுபட்டு இருப்பினும் அவர்களிடையே ஒரு இணை பிரியாத நட்பு உருவாக தொடங்கியது. நுணுக்கங்களை அவள் கற்றுக் கொண்ட வேகம் தீபாவை வியக்க வைத்தது. தீபாவின் குறும்புத் தனமும் கேலிக் கூத்தும் வந்தனாவின் போலீஸ் இறுக்கத்தை முற்றிலும் அகற்றியது. வீரபத்ர ராவ் தில்லி வரும்போதெல்லாம் தங்குவதற்காக சௌத்எக்ஸ் பகுதியில் ஒரு உயர்தர ஃப்ளாட் இருந்தாலும் தனியாக இருக்க விரும்பாமல் தீபா ஜெனரல் ராத்தோடின் வீட்டில் வந்தனாவுடன் தங்கினாள். ஒவ்வொரு சமயம் எந்த விதமான் கட்டுப்பாடும் இல்லாமல் தீபாவுடன் சுற்றித் திரியும் போது கடந்த ஒரு வருட காலமாக மிகுந்த கட்டுப் பாட்டுடன் கழித்த ஐ.பி.எஸ் பயிற்சியால் வந்த மனப் பக்குவம் அவள் மனத்தை உறுத்தும். அடுத்த கணம் தான் இப்போது செய்வதும் போலீஸ் வேலையே என்ற எண்ணம் வந்து அவள் மனம் குதூகலிக்கும். தன் அண்ணனின் மறைவைப் பற்றி சொன்ன போது முதல் முதலாக தீபாவின் கண்களில் கண்ணீர் துளிர்த்ததைக் கண்டாள். வந்தனாவின் பெற்றோர் இரண்டு வாரங்கள் கழித்து புதி தில்லி வந்திருந்த போது வீரபத்ர ராவும் தன் மனைவியை அழைத்துக் கொண்டு வந்து இருந்தார். எல்லோரும் அன்று இரவு உணவுக்கு ஜெனரல் ராத்தோடின் வீட்டில் கூடிய போது தீபா தான் ப்ராஜெக்ட் செய்த போது செய்த கைங்கரியத்தை ஒன்று விடாமல் சொல்ல சிரிப்பொலியால் வீடே அதிர்ந்த படி இருந்தது. வீரேந்தர் ராத்தோட், "வந்தனாவுக்கு நேர் மாறா இல்லை இருக்கா இவ? ஆனா, வந்தனா இந்த மூணு வருஷமா ரொம்ப மாறிட்டா. முன்னே தீபா அளவுக்கு குறும்பு இல்லைன்னாலும் ஜாலியா இருப்பா. மறுபடி அவ பழைய வந்தனா ஆகறதுக்கு தீபாதான் சரியான மருந்து!" வீரபத்ர ராவ், "வேண்டாம் சார். வந்தனா முழுசா மாற வேண்டாம். அப்பறம் தீபாவை அடக்க ஆளே இருக்காது. இப்ப இருக்கற மாதிரியே இவங்க நல்ல ஜோடி தான்" ஜெனரல் ராத்தோட், "சோ, நீங்க ரெண்டு பேரும் சேந்து சைபர் க்ரைமை எதிர்த்து நிக்கப் போறீங்க. குட்" தீபா, "அங்கிள், எங்க ரெண்டு பேர் அப்பா பேர்ல வீரம் இருக்கு. நாங்க அதை செயல்ல காட்டப் போறோம். கூடவே கொஞ்சம் ஜாலியாவும் இருக்கப் போறோம். ஆனா அப்பா, அம்மா, இப்பவே சொல்லிட்டேன். இன்னும் ரெண்டு வருஷத்துக்காவுது கல்யாணம் அது இதுன்னு தொந்தரவு பண்ணக் கூடாது. பண்ணினா எதாவுது ஆக்ஷன் எடுக்க வேண்டி இருக்கும்!" வந்தனா, "ஆமா .. டாடி, கேட்டீங்க இல்லை? அம்மாகிட்ட் சொல்லி வையுங்க இன்னும் ரெண்டு வருஷத்துக்கு கல்யாணத்தை பத்தி பேச்சே இருக்கக் கூடாது"4 July 2008 6:00 PM Cafe Coffee Day, Cunnaught Circus, New Delhi ஜூலை 4 2008 மாலை 6 மணி காஃபீ டே ரெஸ்டாரன்ட், கன்னாட் ஸர்கஸ், புது தில்லி முரளீதரன், "சோ வந்தனா, எப்படி இருந்தது உன் ட்ரெயினிங்க்? இப்ப ஒரு அளவுக்கு தன்னம்பிக்கை வந்து இருக்கா?" வந்தனா, "ஐ.டி.பி.எஸ் (IDPS), ஸேண்ட்பாக்ஸ் (Sandbox) உபயோகிச்சு ரோக் எலமென்ட் ட்ரேஸ் ஔட்(Rogue Element Trace Out*) பண்ணறது எனக்கு அத்துப் படி .. ஒரு வைரஸ்ஸோட லாஜிக்கை புரிஞ்சுக்கறதுக்கு இன்னும் கொஞ்சம் நாள் ஆகணும். வைரஸ் மாதிரி ஒரு கோட் எழுத இன்னும் ரொம்ப நாள் ஆகும். ..." (*Tracing Out of rogue elements: is a standard procedure in cyber crime fighting. This procedure involves using a system of computers and software called Intrusion Detection and Prevention System a.k.a IDPS to detect malicious network data traffic. Besides it also involves using a software mechanism called Sandbox to identify malicious code in a computer - ரோக் எலமென்ட் ட்ரேஸ் ஔட் என்பது இணயம் மற்றும் கணிணிகளின் மூலம் நடக்கும் சட்ட விரோத செயல்களை (yes! Cyber Crime!!) கண்டு பிடிக்க உபயோகிக்கப் படும் ஒரு செயல் முறை. இந்த செயல்முறை மூலம் இணையத்தில் நடக்கும் தவல் பரிமாற்றங்களை ஆராய்ந்து, தீங்கு விளைவிக்கும் தகவல் பரிமாற்றங்களை கண்டு பிடிக்க முடியும். தவிர, ஸேண்ட்பாக்ஸ் (ஆம்! மணல்பெட்டி தான்!) என்ற மென்பொருளை உபயோகித்து ஒரு கணிணிக்குள் வைரஸ்ஸின் செயல்களை ஆராய்வதும் இந்த செயல் முறையில் ஒரு பகுதி). தீபா, "சார், ட்ரேஸ் ஔட் பண்ணுவதில் இப்ப இவ புலி! இவ யோசிக்கற சில கோணங்களில் நான் இதுவரைக்கும் யோசிச்சதே இல்லை" முரளீதரன், "அதான் போலீஸ் புத்தி! சோ, நீங்க ரெண்டு பேரும் ஒரு டீமா வொர்க் பண்ணறது உங்களுக்கு ஓ,கேதானே?" வந்தனா, "நிச்சயமா சார். எங்களுக்குள்ள எந்த மாதிரி வேலை யார் பண்ணணும்ன்னு இப்ப ஒரு நல்ல அண்டர்ஸ்டேண்டிங்க் வந்து இருக்கு .. " முரளீதரன், "வெரி குட். நான் உங்களுக்கு கொடுக்க போற முதல் அசைன்மென்ட் எஃப்.பி.ஐக்கு உதவறது .. ஒரு பாட் நெட்டை ட்ரேஸ் ஔட் பண்ணி அதன் சர்வரையும் அதை கன்ட்ரோல் பண்ணறவங்களையும் கண்டு பிடிக்கறது" வந்தனா, "எதுக்கு எஃப்.பி.ஐக்கு உதவணும்?" தீபா, "வாவ், எந்த பாட் நெட் சார்?" முரளீதரன், "வந்தனா, சைபர் க்ரைம் என்பது ஒரு நாட்டில் மட்டும் நடக்கற வேலை இல்லை. உருவாக்கினவன் ஒரு நாட்டில இருப்பான் அதனால் பாதிக்கப் படறவங்க இன்னொரு நாட்டில் இருப்பாங்க. சைபர் தாக்குதல் ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டுக்கு போகும். நம்ம பிரிவு இந்தியாவுக்கு ஒரு நோடல் ஏஜன்ஸி (Nodal Agency). நாம் எடுத்துக்கற அசைன்மென்ட் எல்லாம் பல நாட்டு எல்லைகளை கடக்கும் சைபர் க்ரைம் தான் (CROSS BORDER CYBER CRIMES). இப்ப தீபா, உன்னோட கேள்விக்கு வரேன். AKBOT அப்படின்னு ஒரு பாட் நெட். யூ.எஸ்ல தொடங்கப் பட்டு யூ.எஸ்ல இருக்கறவங்க அதை கன்ட்ரோல் பண்ணறாங்க என்பது எஃப்.பி.ஐயோட கணிப்பு. அதன் அடிமை கணிணிகள் எல்லா நாட்டிலயும் இருக்கு, இந்தியா உள்பட. இந்த AKBOT இப்ப ஒரு புது ட்ரெண்ட்டை ஆரம்பிச்சு இருக்கு. .. " தீபா, "நான் இது வரைக்கும் கேள்வி படாத பேரா இருக்கு. என்ன புது ட்ரெண்ட்?" முரளீதரன், "டி.ஓ.எஸ் (DOS) அப்படின்னு சொல்லற டினையல் ஆஃப் சர்வீஸ் அட்டாக் (Denial of service attack) பத்தி கேள்வி பட்டு இருக்கீங்களா?" வந்தனா, "ம்ம்ம் ... வலை தளங்களை மத்தவங்க உபயோகிக்க முடியாதபடி செய்யறதுதானே. பொதுவா அந்த மாதிரி தாக்குதல் வீம்புக்கும் தற்பெருமைக்காகவும் சிலர் பண்ணறதுன்னு கேள்வி பட்டு இருக்கேன்" முரளீதரன், "அந்த ட்ரெண்ட்டைத்தான் இந்த AKBOT மாத்திட்டு இருக்கு. பொதுவா நீ சொன்ன மாதிரி தங்களை பத்தி தம்பட்டம் தட்டிக்கறதுக்கும், அல்லது ஒரு கம்பெனி மேல இருக்கும் வெறுப்பை காண்பிக்கறதுக்கும் ஹாக்கர்ஸ் டி.ஓ.எஸ் தாக்குதல் நடத்துவாங்க. போன வருஷம் ஏறக்குறைய ஒரு வாரம் மைரோஸாஃப்ட் (Microsoft) வலைதளம் யாராலயும் திறக்க முடியாதபடி இருந்தது. யாரோ மைக்ரோஸாஃப்ட் மேல இருக்கற வெறுப்பில பண்ணினது டி.ஓ.எஸ் தாக்குதலின் விளைவு அது. ஆனா, இந்த AKBOT பாட் நெட் காசு வாங்கிட்டு தாக்குதல் நடத்தற மாதிரி தெரியுது. அவங்க இதுவரைக்கும் செஞ்ச ஒவ்வொரு தாக்குதலினாலும் அவங்க குறிவைத்த வலை தளத்தோட போட்டி வலை தளம் பலன் அடைஞ்சு இருக்கு. போன கிருஸ்மஸ் ஸீசனின் போது பல விற்பனை வலை தளங்கள் இந்த AKBOTனால தாக்கப் பட்டு இருக்கு. அதனால அவங்களோட போட்டி வலை தளங்களுக்கு வியாபாரம் அதிகமாகி இருக்கு." தீபா, "சுமார் எத்தனை கணிணிகள் இந்த AKBOTஇல் இருக்கும்? அதாவது எத்தனை கணிணிகளில் இந்த AKBOT வைரஸ் புகுந்து இருக்கும்?" முரளீதரன், "எஃப்.பி.ஐயோட யூகம் சுமார் பதிமூணு லட்சம் கணிணிகள்" வந்தனா, "யார் அதனால லாபம் அடைஞ்சாங்கன்னு பாத்து அவங்களை விசாரிச்சா தெரிஞ்சுடுமே?" முரளீதரன், "வெளிநாட்டில் இருக்கும் பல கம்பெனிகள் மார்கெடிங்க் ஸ்லஷ் ஃபண்ட் (Marketing Slush Fund) அப்படின்னு பணம் ஒதுக்கி வெச்சு இருப்பாங்க. அது யார் கைக்கு போகுது, எதுக்கு போகுதுன்னு அந்த கம்பெனிக்கே தெரியாது. ஸ்பாம் மெயில் அனுப்பறதுக்குன்னு முதல்ல இந்த மாதிரி ஃபண்ட் உருவாச்சு. அந்த மாதிரி வேலைகளை செய்யறதுக்குன்னு சில ஏஜன்ஸிகள் இருக்கு. அந்த ஏஜன்ஸிகளை கண்டு பிடிக்கறது கஷ்டம்." வந்தனா, "ஏன் கஷ்டம்?" முரளீதரன், "வந்தனா, கருப்பு சந்தையை ரொம்ப சாதாரணமா ஏதோ முட்டாள்கள் கூடி இருக்கும் ஒரு இடம்ன்னு எடை போடக் கூடாது. அவங்களில் ஒருத்தரை அணுகணும்னா முதல்ல அவங்களுக்கு தகவல் அனுப்பறதுக்குன்னு ஒரு பிரத்தியேக சிக்னல் இருக்கும். அதை கொடுத்ததுக்கு அப்பறம் அவங்களே அணுகுவாங்க. எதாவுது சந்தேகம் வந்தா வரமாட்டாங்க. அப்படியே அவங்களை அணுகி அவங்களை விசாரிச்சாலும் அந்த ஏஜன்ஸிக்கும் யார் மூலம் காரியம் நடக்கப் போகுதுன்னு தெரியாது. அவங்க உதவியோட அவங்களுக்கு அடுத்த லெவலான ஹாக்கர்களை அணுகணும்" தீபா, "Which is next to impossible, I know! (ஹாக்கர்களை அணுகுவது என்பது முடியாத ஒரு செயல். எனக்கு தெரியும்)"வந்தனா, "Still, I am not convinced ... அவங்க ரொம்ப சட்டரீதியா மட்டும் கண்டு பிடிக்க முயற்சி செய்யறாங்கன்னு நினைக்கறேன். நம்ம ஊர் மாதிரி லாடம் கட்டினா எல்லா உண்மையும் வெளில வந்துடும்" முரளீதரன், "அவன் நம்ம ஊர்காரன்னா நீ லாடம் கட்டுவே. அவன் முன்னே சோவியத் யூனியனுக்கு உள்ள இருந்த எதாவுது ஒரு நாட்டில் இருந்தான்னா? இந்த மாதிர் நாடுகளில் நிலையான அரசாங்கமும் சட்டம் ஒழுங்கும் இல்லைன்னாலும் மொபைல் ஃபோனும் இணையமும் இருக்கு" வந்தனா, "International repurcussions..., ம்ம்ம் ... நீங்க சொல்றது புரியுது" தீபா, "சோ, நாங்க இந்த AKBOTஐ ட்ரேஸ் ஔட் பண்ணணும். அதானே எங்க அசைன்மென்ட்?" முரளீதரன், "எஸ், இன்னைக்கு நைட் பத்து மணிக்கு ஒரு கான்ஃபரன்ஸ் கால் மூலம் எஃப்.பி.ஐல இருக்கும் டீம் கூட டிஸ்கஸ் பண்ணப் போறோம். அவங்க யூ.எஸ்ல இருக்கும் கணிணிகளை எப்படி மானிடர் பண்ணறாங்கன்னு சொல்லுவாங்க. நீங்க இந்தியாவில் இந்த AKBOT ஆக்ரமிச்சு இருக்கற கணிணிகளை கண்காணிக்கணும். ஏற்கனவே AKBOT வைரஸ் புகுந்த இந்தியாவில் இருக்கும் சில கணிணிகளை அவங்க ஐடெண்டிஃபை (அடையாளம் அறிந்து) பண்ணி இருக்காங்க. அந்த பாட் நெட்டில் நடக்கும் தகவல் பரிமாற்றத்தை வெச்சு வேணும்னா இன்னும் சில கணிணிகளை நீங்க கண்டு பிடிச்சு எல்லா கணிணிகளிலும் நடக்கும் தகவல் பரிமாற்றத்தை கண்காணிக்கும் போது சில க்ளூ கிடைக்கலாம்."
தீபா, "இதுக்கெல்லாம் எங்களுக்கு கணிணிகள் அப்பறம் சில மென்பொருள் எல்லாம் வேணுமே. இதை எல்லாம் எங்க சொந்த லாப் டாப்பில் பண்ண முடியாது" முரளீதரன், "உங்களுக்கு தேவையான கணிணிகள், மென் பொருள் எல்லாம் நீங்க வாங்கிக்கிட்டு பில்லை எனக்கு கொடுங்க" தீபா கண்கள் பளிச்சிட, "தேவையானதுன்னா, என்ன வேணும்னாலும் வாங்கிக்கலாமா சார்?" முரளீதரன், "நீங்க பண்ணற வேலைக்கு தேவையான என்ன வேணும்னாலும் வாங்கிக்கலாம். எனக்கு பட்ஜெட் லிமிட் எதுவும் கிடையாது!" தீபா, "வாவ்! இந்த பிரிவிலேயே இருந்து ரிடையர் ஆக போறேன்னு நீங்க சொன்னதோட அர்த்தம் இப்ப தான் கொஞ்சம் கொஞ்சமா புரியுது" வந்தனா, "ஹெல்லோ! நாம் செலவு செய்யப் போறது ஜனங்க கட்டின வரிப் பணம். ஞாபகம் இருக்கட்டும்" தீபா, "அம்மா தாயே ஐ.பி.எஸ்! சார், இந்த ஒரு விஷயத்துல தான் சார் எங்க பார்ட்னர்ஷிப் சரி வராது. ரொம்பவே தேசியவாதியா இருக்கா!!" முரளீதரன், "கவலைப் படாதே வந்தனா, நாம் செலவு செய்யற மாதிரி நூறு மடங்கு நமக்கு எஃப்.பி.ஐகிட்ட இருந்து NTROவுக்கு வருது. ஏன்னா சைபர் க்ரைமினால அதிக பட்சம் பாதிக்கப் படற நாடு அமெரிக்கா" பிறகு தன் தோள் பையில் இருந்த கவர்களை எடுத்து கொடுத்தார். இருவரும் அவரவர் கவரை பிரித்தனர். ஒவ்வொருவருக்கும் இரண்டு அடையாள அட்டைகள் மற்றும் ஒரு கற்றை விசிட்டிங்க் கார்டுகள். ஒரு அடையாள அட்டை அவர்களது உண்மையான பிரிவையும் பணியையும் குறித்தது. இன்னொன்றில் "ப்ரோக்ராமர் - நேஷனல் இன்ஃபர்மாடிக்ஸ் செண்டர் (Programmer - National Informatics Center) என்று இருந்தது. விசிடிங்க கார்டுகளிலும் அதே ப்ரோக்ராமர் பணியின் பெயர் இருந்தது. வந்தனாவின் பெயரை அடுத்து அவளது ஐ.பி.எஸ் இல்லாமலும் தீபாவின் பெயரை அடுத்து அவளது பட்டங்கள் இல்லாமலும் இருந்தது. வந்தனா, "எதுக்கு சார் ரெண்டு ஐ,டி கார்ட்?" முரளீதரன், "ஒண்ணு உங்க அஃபீஷியல் ஐ.டி கார்ட். இன்னொன்னு வெளி உலகுக்கு" தீபா, "இந்த அஃபீஷியல் ஐ.டி கார்டை எப்பவாவுது யாருக்காவுது காமிக்க வேண்டி இருக்குமா?" முரளீதரன், "நிச்சயம் .. நீங்க அஃபீஷியலா யாரையாவுது மீட் பண்ணும் போது ... மட்டும்" வந்தனா, "Which will never happen! சரி, தனியா நொந்து போய் இருக்கும் போது நாங்களே பாத்துக்கறோம்" முரளீதரன், "ஏய், நீ எப்ப இந்த மாதிரி கிண்டலா பேச ஆரமிச்சே?" தீபா, "சும்மாவா? யாரோட ட்ரெயினிங்க்? இந்த ஒரு மாசமா தானே என் கூட பழகிட்டு இருக்கா. அடுத்த வருஷம் பாருங்க உங்களை வறுத்து எடுத்துடுவா" சிரித்துக் கொண்டு இருந்த தோழிகளைப் பார்த்து சிரித்த படி முரளீதரன், "எப்படியோ சொன்ன வேலையை செஞ்சா போதும். பட், நீங்க ரெண்டு பேரும் உங்க உண்மையான பதவியை வெளில சொல்லக் கூடாது." தீபா, "எங்க அப்பா அம்மாவுக்கு ஏற்கனவே நான் R&AWவில் வேலைக்கு சேந்தது தெரியும் சார். வந்தனாவோட பேரண்ட்ஸுக்கும் தெரியும்." முரளீதரன், "உங்க குடும்பத்துக்கு சொல்லித்தான் ஆகணும். அவங்களை வெளில சொல்ல வேண்டாம்ன்னு சொல்லுங்க. நான் சொன்னது மத்தவங்களை, உங்க ஃப்ரென்ட்ஸ் யார் கிட்ட்யும் சொல்லக் கூடாது" வந்தனா, "நாங்க செய்யறது அவ்வளவு ரகசியமானதா தெரியலையே சார்" முரளீதரன், "இல்லை வந்தனா, இணையம் என்பது முகம் தெரியாத ஒரு உலகம் ஒரு ரகசிய மெயில் ஐ.டிக்கு பின்னாடி யார் இருக்காங்கன்னு தெரியாது. அதுவும் இல்லாமல் R&AWவின் சட்ட திட்டம் அப்படி. ஒரு சில பெரிய தலைகளை தவிர யாரும் அவங்க என்ன செய்யறாங்கன்னு வெளிய சொல்லக் கூடாது" தீபா, "எங்க ஃப்ரெண்ட்ஸ் யாரையாவுது என்ன செய்யறேன்னு கேட்டா. NICஇல் ப்ரோக்ராமர் வேலை செய்யறேன்னு சொல்லணும். இல்லையா?" முரளீதரன், "எஸ் ... " தீபா, "ஆனா, ஏன் சார் வெறும் ப்ரோக்ராமர்ன்னு கேவலமா ஒரு பதவி? பொய் சொல்றது தான் சொல்றோம் கொஞ்சம் பெருசா சீனியர் ப்ரோக்ராமர், சிஸ்டம்ஸ் அனலிஸ்ட் அப்படின்னு போட்டு இருக்கலாமே" முரளீதரன் தன் விசிடிங்க் கார்டை காண்பித்தார். அதில் "அக்கௌண்டண்ட்" என்று இருந்தது. அதற்கு மேல் அவள் ஒன்றும் பேசவில்லை.

No comments:

Post a Comment