Tuesday, January 27, 2015

செக்மேட் - சைபர் கிரைம் திரில் தொடர் - பாகம் - 12


ஷான், "ஸோ, நாம் எப்படிப் பட்டவங்களை ட்ரேஸ் அவுட் பண்ணும் முயற்சியில் இறங்கி இருக்கோம்ன்னு இப்ப தெரிஞ்சு இருக்கும். இல்லையா" வந்தனா, "சார், ஒரு சின்ன சந்தேகம். அவங்களோட ஹாக்கர் ஐ.டியே தெரிஞ்சு இருக்கும் போது அவங்களை ட்ரேஸ் அவுட் பண்ண முடியாதா?" ஷான், "நாம் ஒவன் வாக்கரை எப்படி ட்ரேஸ் அவுட் பண்ணினோம்? அவன் AKBOTக்கு கொடுக்கும் ஆணைகள் உங்களுக்கு முதலில் தெரிஞ்சுது. பிறகு அந்த ஆணை எந்த கணிணியில் இருந்து வருதுன்னு தேடினோம். அந்த மாதிரி ஒரு க்ளூவும் கிடைக்கலைன்னா? கில்9, மோர்லா இது ரெண்டும் ரெண்டு பெயர்கள் அவ்வளவுதான். அவங்களை நேரடியா அணுக முடியாது. அவங்க மெயில் ஐ.டி, ஃபோன் நம்பர் இதெல்லாம் யாருக்கும் தெரியாது." தொடர்ந்து, "இன்னொரு விஷயம் கொஞ்ச நாளா ஹார்ஷ்7 அப்படிங்கற ஒரு பிரபலமான ஹாக்கரும் மாங்க்ஸ் பாட் நெட்டில் சம்மந்தப் பட்டு இருக்கறதா எனக்கு ஒரு ஃபீல்ட் ரிப்போர்ட் வந்தது" தீபா (கண்கள் அகல!), "வாட்? ஹார்ஷ்7ஆ? (You mean THE one and only HARSH7?)"
ஷான், "எஸ் ... அதுவும் இந்த மாங்க்ஸ் பாட் நெட்டை பத்தி நாங்க சந்தேகப் படாம இருக்க ஒரு காரணம்" வந்தனா, "எனக்கு புரியலை .. " ஷான், "ஹார்ஷ்7 எந்த விதமான சட்ட விரோதமான செயல்களிலும் ஈடு படாத ஒரு ஹாக்கர். அதே சமயம் அவன் தன்னை எதிகல் ஹாக்கர் அப்படின்னும் விளம்பரப் படுத்திக்கறது இல்லை. ஏன்னா, எதிகல் ஹாக்கர்களுக்கு வருமானம் கம்மி. ஆனா, ஹார்ஷ்7 வெவ்வேறு தளங்களிலும் ஹாக்கர்கள் தாக்கக் கூடிய விஷயங்களை கண்டு பிடித்து அதை உலகுக்கு அறிவிக்காமல் அந்த வலை தளங்களின் சொந்தக்காரர்கள்கிட்டயே பேரம் பேசி அவங்களுக்கு காட்டி உதவுவான். வேற வழி இல்லாமல் அவங்களுக்கு பணம் கொடுப்பாங்க. ஆனா இது வரைக்கும் எந்த தளத்தையும் அவன் தாக்கினது இல்லை. இதனாலயே அவன் ரொம்ப பிரபலமாயிட்டான். இப்ப எல்லாம் சில நிறுவனங்கள் தானா அவனை தொடர்பு கொண்டு அவங்க தளங்களில் இருக்கும் ஓட்டையை கண்டு பிடிக்க சொல்லி பணம் கொடுக்கறாங்க" தீபா, "எனக்கு ஹார்ஷ்7 பத்தி நல்லா தெரியும். அவர் இதில் சம்மந்தப் பட்டு இருக்கார்ன்னா நிச்சயம் மாங்க்ஸ் பாட் நெட் எந்த விதமான சட்ட விரோத செயலிலும் ஈடு பட்டு இருக்க மாட்டாங்க" வந்தனா, "அப்படியே இருக்கட்டும். முதலில் இந்த மாங்க்ஸ் பாட் நெட்டை பத்தி முழுசா தெரிஞ்சுக்கலாமா?"ஷான், "எஸ், அவங்க அறிவிக்கும் போதே ஏறக்குறைய 20,000 கணிணிகள் இந்த மாங்க்ஸ் பாட் நெட் ஆக்கரமிச்சு இருந்துது. இந்த வைரஸ் மூலம் என்னவெல்லாம் செய்ய முடியும் அப்படின்னு அப்ப ஒரு ஆன்லைன் டெமோ கொடுத்தாங்க. கூடவே, மாங்க்ஸ் பாட் நெட் விளம்பர ஈமெயில் (ஸ்பாம் மெயில்) அனுப்புவதை தவிர வேறு எதுக்கும் பயன் படுத்தப் போறது இல்லைன்னு ஹாக்கர்கள் மத்தியில் ஒரு அறிக்கையும் கொடுத்தாங்க. வைரஸ் மெதுவா இணையத்தில் பரவ ஆரம்பிச்சுது. மாங்க்ஸ் பாட் நெட் பெரிசாக ஆரம்பிச்சுது. அவங்க சொன்ன படி ஸ்பாம் மெயில் மட்டும் இந்த மாங்க்ஸ் பாட் நெட் மூலம் அனுப்பப் படுது. வேறு எந்த விதமான தகவல் திருட்டும் நடக்கற மாதிரி தெரியலை" வந்தனா, "அவங்க வைரஸ் மூலம் எந்த மாதிரி செயல்களை செய்ய முடியும்ன்னு விளக்கி சொல்லறீங்களா?" ஷான், "மாங்க்ஸ் பாட் நெட் வைரஸ் பல வேலைகள் செய்யும்" என்றபடி சான்ட்ராவை நோக்கி தலையசைக்க அவர்களுக்கு எதிரே இருந்த திரையில் ஒரு ப்ரெஸெண்டேஷன் ஓடத் துவங்கியது. ஷான் திரையைக் காட்டியபடி தொடர்ந்தார், 1. அது ஆக்ரமித்த கணிணிக்கு எந்த விதமான ஆணையும் அதனால் கொடுக்க முடியும். அதிலும் ஒரு குறிப்பிடத் தக்க வேறுபாடு என்ன்ன்னா அந்த ஆணை அந்த கணிணியை உபயோகிப்பவர் கொடுத்த மாதிரி விண்டோஸுக்கு கொடுக்க முடியும். இந்த அம்சத்தின் மூலம் ஒரு கணிணியில் இருக்கும் தகவல்கள் அத்தனையும் அழிக்கணும்ன்னாலும் அதனால் முடியும். அதுவும் அந்த வைரஸ் அதுவா போய் அழிக்கத் தேவையில்லை. அழிப்பதற்கு அது விண்டோஸுக்கு ஆணை இடும்; விண்டோஸும் கணிணியை உபயோகிப்பவர் அந்த ஆணையை கொடுத்தார் என்று தப்பா புரிஞ்சுட்டு எல்லாத்தையும் அழிச்சுடும். தற்கொலை செஞ்சுக்கற மாதிரி! 2. அருகில் இருக்கும் கணிணிகளுக்கும் கணிப் பொறிகளுக்கும் எந்த விதமான ஆணையையும் அது கொடுக்க முடியும். இணையத்தில் கணிணிகளை இணைக்க ரௌட்டர், ப்ரிட்ஜ்ன்னு பல கணிணி மாதியான பொறிகள் இருக்கு. இதுக்கு எல்லாம் இதனால் ஆணைகள் கொடுக்க முடியும். இந்த மாதிரி ஆணைகள் மூலம் ஒரு நெட்வொர்க்கை பயன் இல்லாமல் செய்ய முடியும். 3. ஆக்கிரமிச்ச கணிணியில் ஸ்டோர் ஆகி இருக்கும் எந்த தகவலையும் மாங்க்ஸ் பாட் நெட்டை கன்ட்ரோல் செய்யும் சர்வருக்கு அனுப்ப முடியும். இந்த அம்சம் பொதுவா எல்லா பாட் நெட்டிலையும் இருக்கும். இதை வெச்சுத்தான் நிறைய க்ரெடிட் கார்ட் விவரத் திருட்டு நடக்குது. 4. அது ஆக்கிரமித்த கணிணியில் ஸ்டோர் செஞ்சு வைத்து இருக்கும் ஈமெயில் ஐடிகளை உபயோகிச்சு அந்த ஈமெயில் ஐடிக்கு தன்னிச்சையா ஈமெயில் அனுப்ப முடியும். அது அனுப்பும் ஈமெயில் மூலமே அதால மத்த கணிணிகளுக்கு பரவ முடியும். நான் சொன்ன நாலு அம்சங்களில் முதல் ரெண்டும் ரொம்ப அபாயகரமான அம்சங்கள். ஒரு கணிணிக்குள் மாங்க்ஸ் பாட் நெட் வைரஸ் புகுந்தப்பறம் அந்த வைரஸ்ஸை கண்டு பிடிச்சு அகற்றினால் ஒழிய அதை தடுக்க முடியாது. ஆனா, கடைசி அம்சத்தை தவிர மத்த மூணும் அவங்க டெமான்ஸ்ட்ரேட் பண்ணின பிறகு உபயோகிக்கலை. இது வரைக்கும் எங்களால இதோட கன்ட்ரோல் சர்வரை கண்டு பிடிக்க முடியலை. ஆனா எங்க அலுவலகத்தில் தனி நெட் கனெக்ஷனோட இருக்கும் ஒரு கணிணியில் மாங்க்ஸ் பாட் நெட்டை புகுத்தி இருக்கோம். அது என்ன செய்யுதுன்னு தொடர்ந்து மானிடர் பண்ணிட்டு இருக்கோம்.” தொடர்ந்து ஒவ்வொரு அம்சங்களையுன் அடுத்த மூன்று நாட்களும் விரிவாக அலசி ஆராய்ந்து விவாதித்தனர். வந்தனாவும் தீபாவும் அந்த அம்சங்களை முழுவதுமாக புரிந்து கொண்டனர். இரண்டு நாட்களும் சக்தி, நித்தின் இருவரும் தொடர்பு கொள்ளவில்லை. வந்தனா, தீபா இருவருக்கும் அவர்களுடன் பெச வேண்டும் என்று இருந்தாலும் அவர்களே அழைக்கட்டும் என்று காத்து இருந்தனர். செவ்வாய் அன்று இரவு உணவை முடித்த பிறகு தோழிகள் இருவரும் கனத்த மனத்துடன் தங்கள் கைபேசியின் அழைப்புக்கு காத்து இருந்தனர். தீபா, "நாம் கூப்பிடணும்ன்னு வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க" வந்தனா, "ஆமா" தீபா, "நீ என்னமோ பண்ணிக்கோ நாளைக்கு நானே நித்தினைக் கூப்பிடப் போறேன்" வந்தனா சக்தியை மனதுக்குள் திட்டியபடி மௌனமாக இருந்தாள். புதனன்று மதியம் தீபா நித்தினை அவன் கைபேசியில் அழைத்தாள் நித்தின், "ஹாய் தீபா, கட் பண்ணிட்டு அங்கே இருக்கும் லாண்ட் லைன் நம்பரில் இருந்து கூப்பிடு. இல்லைன்னா பில் பழுத்துடும்" என்று அவனே காலை கட் செய்தான். சற்றும் யோசிக்காமல் தீபா அவகளுக்கு ஒதுக்கப் பட்ட அறையில் இருந்த தொலைபேசியில் இருந்து அவனை அழைத்தாள். நத்தின், "ஹெல்லோ ..." தீபா, "நித்தின், நான் தீபா .. " நித்தின், "எப்படி இருக்கே? உன் ட்ரெயினிங்க் செமினார் எப்படி போயிட்டு இருக்கு?" தீபா, "ம்ம்ம் ... கோயிங்க் ஆன்" நித்தின், "ஸோ?" தீபா, "ஒண்ணும் இல்லை சும்மாத்தான் கூப்பிட்டேன்" நித்தின், "ம்ம்ம் சொல்லு" தீபா, "நீ ரொம்ப பிஸியா?" நித்தின், "ரொம்ப பிஸின்னு சொல்ல முடியாது. வொர்க் பண்ணற ப்ராஜெக்ட் சீரான வேகத்தில் போயிட்டு இருக்கு." தீபா, "ஓ .." நித்தின், "அப்பறம்?" தீபா, "வந்து ... இன்னைக்கு சாயங்காலம் நீ ஃப்ரீயா?" நித்தின், "ஃப்ரீயா இருந்தாலும் ஷாப்பிங்க் பேக் சுமந்து கிட்டு கடை கடையா நடக்க எனக்கு விருப்பமில்லை" தீபா, "ஷாப்பிங்க் ஒண்ணும் வேண்டாம் .. வேற எங்கேயாவுது கூட்டிட்டு போறியா?" நித்தின், "வேற எங்கேயாவுதுன்னா?" தீபா, " எங்கேயாவுது டின்னருக்கு போலாமா?" நித்தின் (சற்று யோசித்த பிறகு), "நான் இன்னைக்கு வீட்டு சாப்பாடு சாப்பிடலாம்ன்னு இருந்தேன். உனக்கு உங்க ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் நல்ல சாப்பாடு கிடைக்கும்" தீபா, "எனக்கும் ஸ்பெஷலா சாப்பிடணும்ன்னு இல்லை" நித்தின், "ஏன் ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் சாப்பாடு அதுக்குள்ள அலுத்துப் போச்சா?" தீபா, "நித்தின்! ப்ளீஸ்"
நித்தின், "என்ன?" தீபா, "உன் கூட கொஞ்ச நேரம் ஸ்பெண்ட் பண்ணலாம்ன்னு கேட்டேன்" நித்தின், "ஏன் உன் ஃப்ரெண்ட் ரொம்ப போரடிக்கறாளா?" தீபா (சற்று தடுமாறிய பிறகு), "இல்லை அவ இன்னைக்கு எங்கேயோ வெளில போறா" நித்தின், "எங்கே?" தீபா, "தெரியலை. யாரோ அவ ஃப்ரெண்ட்கூட" நித்தின், "ஸோ, உனக்கு தனியா இருக்க போரடிக்கும் அதனால் தான் என்னை கூப்படறே. இல்லையா?" தீபா, "ஏய், அப்படி இல்லை. வந்தனா எங்கேயும் வெளில போலேன்னாலும் நான் உன்னை இன்னைக்கு கூப்படலாம்ன்னு இருந்தேன்" நித்தின், "உன் ஃப்ரெண்டை அம்போன்னு தனியா விட்டுட்டு வரலாம்ன்னு இருந்தியா?" தீபா, "ஹூம்ம்ம் .. க்ர்ர்ர்ர் ... சரி, இதை மட்டும் சொல்லு. நீ சாயங்காலம் அஞ்சு மணி வரைக்கும் உன் ஆஃபீஸ்லதானே இருப்பே?" நித்தின், "ஆமா ... " தீபா, "அஞ்சு மணிக்கு நான் உன் ஆஃபீஸ் வாசலில் உன்னை மீட் பண்ணறேன். எதாவுது சைட் கேட் வழியா போயிடலாம்ன்னு பாக்காதே" நித்தின், "சைட் கேட் வழியா போனா என்ன பண்ணுவே" தீபா, "உன் ஆஃபீஸ் வாசலில் நின்னுட்டே இருப்பேன் ... நீ நாளைக்கு காலைல திரும்ப ஆஃபீஸ் வர்ற வரைக்கும்" தொண்டை அடைக்க அந்தக் கணம் நித்தின் பேச்சிழந்தான் ... நித்தின், "வெளிய நிக்காதே. உள்ளே ரிஸப்ஷனுக்கு வா .. " தீபா, "சரி .. " என்றபடி ஃபோனை வைத்தாள். அருகில் இருந்த வந்தனாவிடம், "நீ யார்கூடயோ வெளில போறதா சொல்லி இருக்கேன். எதுக்கும் நீயும் ரெடியா இரு" வந்தனா, "ஏன் ?" தீபா, "நான் பொய் சொல்றது அவனுக்கா தெரியாம இருக்கும்? நீ சொல்லற அளவுக்கு சக்திக்கு உன் மேல் இன்ட்ரெஸ்ட் இருந்தா நிச்சயம் உன்னை சக்தி கூப்பிடுவான். அது மட்டும் இல்லை. அவங்க ரெண்டு பேரும் எங்கேயோ டின்னருக்கு போறதா இருந்தாங்கன்னு நினைக்கிறேன். நித்தினுக்கு பதிலா நீ சக்திகூட போ" அவள் சொன்னதில் வந்தனாவின் மனம் குதூகலித்தது.தீபாவிடம் பேசிய சில நிமிடங்களில் நித்தின் சக்தியுடன் பேசினான். நித்தின், "சக்தி, நான் இன்னைக்கு ஜாஷ்வா வீட்டுக்கு வரலை. இப்ப நான் சொன்னா சஞ்சனா கத்துவா" சக்தி, "ஏண்டா?" நித்தின், "நான் தீபாவை கூட்டிட்டு டின்னருக்கு போறேன்" சக்தி, "அப்படி ப்ளான் இருந்து இருந்தா முதல்லயே சொல்லி இருக்கலாம் இல்லையா? பாவம் சஞ்சனா நீ வருவேன்னு இன்னைக்கு நார்த் இண்டியன் ஐடம் எதோ செய்யப் போறேன்னு சொல்லிட்டு இருந்தா" நித்தின், "நான் ப்ளான் பண்ணலை. அந்த பிசாசுதான் ஃபோன் பண்ணி ஆஃபீஸ் வாசலில் தவம் கிடப்பேன்னு பயமுறுத்தினா" சக்தி, "ஸோ, நீ மனம் இளகி ஒத்துகிட்டியாக்கும். சும்மா ஓட்டாதடா" நித்தின், "சரி, சாரி .. எனக்கே அவளை இன்னைக்கு கூப்பிட்டு பேசணும்ன்னுதான் இருந்துச்சு. ஆனா அவ என்னை விட ஜெட் வேகத்தில் டின்னருக்கு போலாம்ன்னு முடிவு பண்ணிட்டா. பட், நான் ஒண்ணு சொல்லட்டுமா?" சக்தி, "என்ன?" நித்தின், "நீ வந்தனாவை ஜாஷ் வீட்டுக்கு கூட்டிட்டு போயேன். Both Josh and Sanjana will like her company" சக்தி, "அவ ஃப்ரீயா இருப்பாளா?" நித்தின், "நிச்சயமா .. என் கூட வரணுங்கறதுக்காக வந்தனா அவ ஃப்ரெண்ட்கூட வெளிய போறதா தீபா ஒரு மைல் நீளத்துக்கு புளுகினா. வந்தனா தனியாதான் இருப்பா" சக்தி, "சரி, முதல்ல நான் ஜாஷ்கிட்டயும் சஞ்சனாகிட்டயும் கேட்டுட்டு அப்பறம் அவளுக்கு ஃபோன் பண்ணறேன்" மாலை நான்கு மணி ... வந்தனாவுக்கு எதிலும் ஆர்வம் இல்லை. தன் கைபெசியை சில நிமிடங்களுக்கு ஒரு முறை அருகே இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டாள். நாலரை மணிக்கு தீபாவிடம், "என்ன தீபா கிளம்பலையா?" தீபா, "இல்லை வந்தனா, ஒரு ஆர்வத்தில் நித்தினை கேட்டுட்டேன். கூடவே சக்தியையும் கூட்டிட்டு வான்னு சொல்லி இருக்கணும். உன்னை தனியா விட்டுட்டு நான் போகலை" வந்தனா, "ஏய், நான் இப்ப ஹோட்டலுக்கு போய் என் கிட்ட லண்டன் ஏர்போர்ட்டில் வாங்கின புக் இன்னும் திறக்காம இருக்கு. எடுத்து படிக்க ஆரமிச்சேன்னா நேரம் போறதே தெரியாது. நீ போய்ட்டு வா. கம் ஆன்! கிளம்பு!!" தீபா, "உனக்கு ஓ.கேவா?" வந்தனா, "நோ பராப்ளம் .. யூ கேரி ஆன்" ஐந்து மணிக்கு அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு ஹோட்டல் அறையை அடைந்தாள். தன் மீது சக்திக்கு ஆர்வம் இல்லை என்று அவள் மனம் ஏற்க மறுத்தது. வெகு நாட்களுக்கு பிறகு அவள் கண்கள் கலங்கின. விட்டத்தைப் பார்த்தபடி படுத்து இருந்தாள். அறையில் இருந்த தொலைபெசி ஒலித்தது .. சக்தி, "ஹாய் வந்தனா. எப்படி இருக்கே?" வந்தனா, "ஹாய் ஷக்தி. ஐ ஆம் ஃபைன். நீ?" சக்தி, "ஐ அம் டூயிங்க் குட். எப்படி போகுது உன் ட்ரெயினிங்க்?" வந்தனா, "ம்ம்ம் .. கோயிங்க் ஆன் .. " சக்தி, "என்ன ஃப்ரெண்டுகூட இன்னைக்கு வெளிய போறியா?" வந்தனா, "ம்ம்ம் .. ஆமா .. எதுக்கு கேக்கறே?" சக்தி, "ஓ, இன்னைக்கு நானும் நித்தினும் என் ஃப்ரெண்ட் வீட்டுக்கு டின்னருக்கு போறதா ப்ளான். அவன் தீபாகூட டின்னர் போறேன்னுட்டு போயிட்டான். நீ தனியா இருப்பியே கூட்டிட்டு போலாமேன்னு நினைச்சேன். என் ஃப்ரெண்ட்கிட்டயும் அவன் மனைவிகிட்டயும் பேசின பிறகு உன்னை கூப்பிட்டேன். பரவால்ல. இன்னொரு நாள் பார்க்கலாம், ஓ.கே தென்" வந்தனா, "ஷக்தி ... வெய்ட் .. " அவள் அவனை அழைத்தது அலறியது போல இருந்தது சக்தி, "என்ன?" வந்தனா, "வந்து நான் என் ஃப்ரெண்ட்கூட வேற ஒரு நாள் போயிக்கறேன். உன் ஃப்ரெண்ட் வீட்டுக்கே போலாம்" சக்தி, " .... " வந்தனா, "என்ன ஷக்தி?" சக்தி, "உன் வேலையை பத்தி கேட்டேன். எதோ சொல்லி மழுப்பினே. நான் மேற்கொண்டு எதுவும் கேட்கலை. பட், இந்த சின்ன விஷயத்தில் கூட ஏன் வெளிப்படையா பேச மாட்டேங்கறேன்னு யோசிக்கறேன்" வந்தனா (கோபம் ஆதங்கம் எல்லாமும் கலந்து தொண்டை கறகறக்க), "சாரி .. "
சக்தி, " ... " வந்தனா, "உன் காலுக்காக ரொம்ப் நேரமா வெயிட் பண்ணிட்டு இருந்தேன். அஞ்சு மணி வரைக்கும் நீ கூப்பிடலைன்னு எனக்கு கோபமா வந்தது. நான் ஆஃபீஸ்ல இருந்து இப்ப ஹோட்டலுக்கும் வந்து சேர்ந்தாச்சு." சக்தி, "தெரியும் .." வந்தனா, "எப்படி?" சக்தி, "இப்ப நான் கீழ ரிஸப்ஷனில் இருந்துதானே பேசிட்டு இருக்கேன். ஒருத்தர் வீட்டுக்கு டின்னருக்கு போகும்போது எப்படியும் நீ ஃப்ரெஷன் அப் பண்ணிட்டு ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிட்டு போகணும்ன்னு விருப்பப் படுவேன்னு நினைச்சேன். அதான் நேரா இங்கே வந்துட்டேன்" வந்தனா, "சாரி, .. " சக்தி, "அப்ப தீபா நித்தின் கிட்ட நீ ஃப்ரெண்டுகூட வெளிய போறதா சொன்னது பொய்தானே?" வந்தனா, "ஆமா .. நித்தின் கூட வெளிய போறதுக்காக அவ அப்படி பொய் சொன்னா" சக்தி, "ஏன் சினேகிதிகள் ரெண்டு பேரும் மாத்தி மாத்தி பொய் சொல்லறீங்களோ" வந்தனா, "ஓ ப்ளீஸ் ஷக்தி, தனியா உக்காந்து இருந்த வெறுப்பில் நீ அப்படி கேட்டதும் நான் கோபத்தில் சொன்னேன். ஐ அம் சாரி." சக்தி, "சரி .. ரெடியாகி கீழ வா" வந்தனா, "முதல்லயே மொபைலில் கூப்பிட்டு சொல்லி இருந்தா நான் ரெடியா இருந்து இருப்பேன். இப்ப நீ வெயிட் பண்ணனும். கிவ் மீ ஃபிஃப்டீன் மினிட்ஸ்" சக்தி, "பரவால்லை. நான் என் ஃப்ரெண்ட் வீட்டுக்கு எட்டு மணிக்குதான் வர்றதா சொல்லி இருக்கேன்" வந்தனா மனதுக்குள், 'மடையா நான் சொன்னது அதுக்கு இல்லை. நீ இப்ப வெயிட் பண்ணும் நேரமும் நான் உன்னோட இருந்து இருக்கலாம்ன்னு சொன்னேன்' ________________________________________ பதினைந்து நிமிடங்களுக்கு பிறகு அழகான சுடிதாரில் வந்தனா வந்தாள். சக்தி, "வாவ், யூ லுக் கார்ஜஸ் (Wow, you look gorgeous)" தன்னை அலங்கரித்துக் கொண்ட விதம் அவளுக்கே ஆச்சர்யமாக இருந்தது. சக்தியின் கண்கள் அவளை மொய்ப்பதை கண்டு முகம் சிவந்தாள். வந்தனா, "போலாமா ..?" சக்தி, "பக்கத்தில் இருக்கும் ஷாப்பிங்க் செண்டருக்கு போயிட்டு போலாமா. எனக்கு அங்கே சில ஐடம்ஸ் வாங்கணும்" வந்தனா, "ஓ எஸ்" என்று அவள் தலையாட்டிய போது அலை அலையாக விரித்து விட்டு இருந்த அவள் கூந்தலும் காதுகளின் அணிந்து இருந்த ஜிமிக்கியும் சேர்ந்து ஆடியதில் சில கணங்கள் லயித்தான்.
இருவரும் அருகில் இருந்த ஷாப்பிங்க் செண்டருக்கு சென்றனர். சென்ற முறை அவர்கள் நயாகரா சென்று இருந்த போது தன் கூலிங்க் க்ளாஸ் உடைந்து போனதை சஞ்சனா கூறியதை நினைவு கூர்ந்து ஒரு கூலிங்க் க்ளாஸ் வாங்கினான். பிறகு அருகே இருந்த ஒயின் கடையில் ஒரு ரெட் ஒயின் பாட்டில் வாங்கினான். காரில் செல்லும் போது வந்தனா யார் அந்த நண்பன் என்று கேட்பதற்கு முன்பு ஜாஷ்வா-சஞ்சனாவிடம் சொல்லி இருந்தபடி சஞ்சனாவை தற்செயலாக சந்தித்ததாகவும் அவள் மூலம் ஜாஷ்வாவை சந்தித்ததாகவும் சரளமாகப் பொய் சொன்னான். ஆனால், தீவிரவாதிகளை அவள் வெறுப்பதை உணர்ந்து முன் கூட்டியே அவளை தயார் படுத்தும் விதத்தில் சஞ்சனாவின் வரலாற்றை சொன்னான். அவன் சொல்லி முடித்ததும் வந்தனாவுக்கு உடனே சஞ்சனாவை பார்க்க வேண்டும் என்று மனத்தில் ஒரு ஆவல். ஜாஷ்வாவின் வீட்டை அடைந்தனர்.

No comments:

Post a Comment