Saturday, January 10, 2015

செக்மேட் - சைபர் கிரைம் திரில் தொடர் - பாகம் - 2


ஜாஷ்வா: "முக்கியமா நாளைய மீட்டிங்க் பத்தி டிஸ்கஸ் பண்ணத்தான் உங்களை அவசரமா வரச்சொன்னேன். நாம் கொஞ்சம் முன் ஜாக்கிரதையா இருப்பது நல்லது. நான் ஒரு ப்ளான் வெச்சு இருக்கேன்"

 சக்திவேல்: "என்ன ப்ளான் சொல்லு"

 ஜாஷ்வா: "நீங்க ரெண்டு பேரும் ஒரு மணி நேரத்துக்கு முன்னாடியே அந்த அண்டர்க்ரௌண்ட் பார்க்கிங்க் லாட்டுக்கு வந்து கார்லயே ஒளிஞ்சுட்டு வெயிட் பண்ணுங்க. நான் பத்து மணிக்கு என் கஸின் ஒருத்தன் கூட கார்ல வருவேன். என்னை இறக்கி விட்டுட்டு அவன் பக்கத்திலயே ஒரு ஸ்லாட்ல காரை பார்க் பண்ணிட்டு வெயிட் பண்ணுவான். நான் ஆண்டர்ஸன்கிட்டயும் ஹாஃப்மன்கிட்டயும் பேச ஆரம்பிப்பேன். அனேகமா அவங்க ரெண்டு பேர் மட்டும்தான் வருவாங்க. அவங்க ஒழுங்கா பேசினா உங்களுக்கு சிக்னல் கொடுக்கறேன். அதுக்கு அப்பறம் நீங்க கார்ல இருந்து இறங்கி வாங்க. அப்படி இல்லாம கூட வேற ஆளுங்க யாராவுது இருந்தா நீங்க கார்லயே இருங்க. வெளிய வராதீங்க. If I sense something fishy .. " என்றபடி அந்த பழுப்பு நிறக் கவரை லேசாக திறந்து காட்டினான்.

உள்ளே ஒரு பிஸ்டல் (கை துப்பாக்கி) இருந்தது.

 
நித்தின்: "ஹேய், அவ்வளவு அபாயம் இருக்குன்னா எதுக்கு இந்த மீட்டிங்க். நீ சொல்ல வேண்டியதை ஒரு ஈமெயில்ல ஹாஃப்மனுக்கு அனுப்பிடு"

 ஜாஷ்வா: "ஈமெயில் எவ்வளவு ஸேஃப்னு உனக்கு தெரியும். என்.எஸ்.ஏ காரங்க போற வர்ற மெயில் எல்லாம் மோப்பம் பிடிச்சுட்டு இருக்காங்க. ஹாஃப்மனோட பர்ஸனல் ஈமெயில் ஐடிக்கு அனுப்பினா அரசாங்கத்துகிட்ட போய் என்னை அரெஸ்ட் பண்ணுன்னு சொல்ற மாதிரி. இந்த ஒரு மெயிலுக்காக நாம் யூஸ் பண்ணற மாதிரி அவனுக்கு செக்யூர் மெயில் செட்-அப் பண்ணி கொடுக்க நான் விரும்பல. சில விஷயங்கள் நம் பாதுகாப்புக்கு மட்டும்தான். வெளியே யாருக்கும் தெரிய கூடாது"

 சக்திவேல்: "இல்லை, ஒரு லெட்டர் எழுதி அதை உன் கஸின் யார் மூலமாவுது அவங்க கிட்ட கொடுக்க சொல்லேன்?"

 ஜாஷ்வா: "ஹேய், அவங்களுக்கு தெரியுமாங்கறதே இன்னும் முடிவா நமக்கு தெரியாது. அப்படி இருக்கும் போது எதுக்கு வந்த பணத்தை அவங்க கேக்காமலே கொடுக்கணும்? யோசிச்சு பாரு. அந்த பணம் நமக்கு கிடைக்க வாய்ப்பு இருக்குன்னா கொஞ்சம் ரிஸ்க் எடுத்துதான் ஆகணும். அவங்க கூட வேற ஆள் யாராவுது இருந்து பேச்சு சுமுகமா போலைன்னா உடனே கன்னை எடுத்து ஆண்டர்ஸனை குறிவெச்சு பிடிச்ச படி இந்த கவரை அவங்க கிட்ட வீசுவேன். அதை பாத்து என் கஸின் காரை பக்கத்தில கொண்டு வருவான். கார்ல ஏறி வந்துடுவேன். இந்த பிஸ்டலை எடுத்துட்டு போறது ஒரு தற்காப்புக்காக தான். டோண்ட் வொர்ரி. ஐ கேன் ஹாண்டில் இட்" என்றபடி இருவரையும் சகஜ நிலைக்கு கொண்டு வந்தான்.

 ஆர்வத்தில் நித்தின் அந்த கவரை ஜாஷ்வாவிடமிருந்து வாங்கி டேபிளுக்கு கீழே பிடித்த படி அந்த பிஸ்டலை கையில் எடுத்துப் பார்த்தான்.

 ஜாஷ்வா: "ஜாக்கிரதை. காலுக்கு நடுவில எதையாவுது சுட்டுட போறே. உனக்கு இன்னும் கல்யாணம்கூட அகலை"

 சக்திவேல் சிறிது அதிர்ச்சியுடன், "ஏய் ஜாஷ்வா, சேஃப்டி லாக் ஆன்ல இல்லையா?" சிரித்த படி ஜாஷ்வா, "கவலை படாதே. சேஃப்டி லாக் ஆன்லதான் இருக்கும். இந்த பிஸ்டலை பத்தி தெரியாதவங்க இதுல சுடறது ஆல்மோஸ்ட் இம்பாசிபிள். அதோட சேஃப்டி லாக் எப்படி ஆபரேட் பண்ணறதுன்னு அவ்வளவு சுலபமா கண்டு பிடிக்க முடியாது" நித்தின்: "ரொம்ப லைட்டா இருக்கற மாதிரி இருக்கு?"

 ஜாஷ்வா: "ம்ம்ம் .. GLOCK-17" சக்திவேல்: "ஓ, அந்த பாலிமர் பாடி பிஸ்டலா. எங்க குடுடா நானும் பாக்கறேன்" அது GLOCK-17 எனப்படும் செமி-ஆடோமாடிக் பிஸ்டல். பொதுவாக பிஸ்டல்கள் முழுவதும் மிக கடினமான எஃகிரும்பில் (carbonised steel) அல்லது கன்-மெட்டல் என்ற உலோகத்தில் செய்யப் பட்டு இருக்கும். ஆனால் GLOCK-17 முக்கால் பாகத்திற்கு மேல் பாலிமர் எனப்படும் ஒரு கடினமான ப்ளாஸ்டிக்கில் செய்யப் பட்டது. ப்ளாஸ்டிக் என்றதும் வாசகர்களுக்கு குளியலறை பக்கெட் மற்றும் மக் நினைவுக்கு வரலாம்.

ஆனால் இந்த ப்ளாஸ்டிக் எஃகிரும்பை விட கடினமானது. இருநூறு செல்ஸியஸுக்கும் மேல் வெப்பம் தாங்கக் கூடியது. இருப்பினும் உலோகங்களை விட மிகவும் எடை குறைவானது. 9mm குறுக்களவும் 19mm நீளமும் உள்ள பதினேழு தோட்டாக்களை நிரப்பிய கார்ட்ரிட்ஜ் மேகஸீன் லோட் செய்த பிறகும் அந்த பிஸ்டலின் எடை ஒரு கிலோவுக்கும் குறைவே. GLOCK-17 பிஸ்டலை பற்றி குறிப்பிடத்தக்க இன்னொன்று

அதன் மிகக் குறைவான ரிகாயில் (recoil). ஒரு பிஸ்டலை சுடும்போது தோட்டாவில் இருக்கும் வெடிமருந்து வெடித்து குண்டு முன்புறம் தள்ளப் படுகிறது. அதே சமயம் பிஸ்டல் நியூடனின் மூன்றாவது விதிப் படி (For every action there is an equal and opposite reaction) பின்னோக்கி அழுத்த மாக தள்ளப் படும். அந்த பின்னோக்கி தள்ளும் சக்திக்கு பெயர் ரிகாயில்.

சிலர் இதனை கிக்-பாக் என்றும் அழைப்பது வழக்கம். துப்பாக்கியின் எடை, தோட்டாவின் அளவு இவைகளைப் பொறுத்து ரிகாயிலின் அழுத்தம் வேறு படும். ரிகாயிலினால் துப்பாக்கி சுடுவதில் பழக்க மில்லாமல்லாதவர்களுக்கு கையிலோ முகவாயிலோ காயம் படுவதற்கும் வாய்ப்பு உள்ளது. உலகத்தில் உள்ள பிஸ்டல்கள் அனைத்தையும் விட மிக குறைவான ரிகாயில் கொண்டது GLOCK-17. ஏனெனின் இந்த பிஸ்டல் ரிகாயில் சக்தியையே அடுத்த தோட்டாவை மேகஸீனிலிருன்து சேம்பர் எனப்படும் தோட்டா வெடிக்கும் பகுதிக்கு தள்ள உபயோகப் படுத்துகிறது.

எஞ்சி இருக்கும் ரிகாயில் சக்தியால் ஏற்படும் அதிர்வை ஓரளவு அதன் பாலிமர் பாகங்கள் உள்வாங்கிக் கொள்கின்றன. இக்காரணத்தால் பழக்க மில்லாதோரும் இந்த பிஸ்டலை எளிதில் உபயோகிக்கலாம்.பிஸ்டலை அவர்களிடமிருந்து வாங்கிய ஜாஷ்வா அதை தன் ஜாக்கெட் பாக்கெட்டில் போட்டபடி கூடுதல் தோட்டாக்கள் இருந்த கவரை தன் கைப்பைக்குள் வைத்தான். பிறகு அந்த பையில் இருந்து ஒரு பேஸ் பால் தொப்பியையும் கூலிங்க் க்ளாஸையும் எடுத்து நித்தினிடம் கொடுத்தான்.

 'என்ன ?' என்று புருவத்தை உயர்த்தியவனிடம், "இன்னோர் முன் எச்சரிக்கை கார்ல வரும்போது இதை போட்டுட்டு வா. ஓரளவுக்கு உன்னை அடையாளம் தெரியாம இருக்கணும். சக்தி, நீ பின் சீட்டுல உக்காந்துட்டு வா. பார்க்கிங்க் லாட்டுக்கு உள்ள நுழையும் போது கீழ குனிஞ்சுக்கோ. பாக்கறவங்களுக்கு ஒரே ஒரு ஆள் காரோட்டிட்டு வர்ற மாதிரி இருக்கணும்"

 சக்திவேல்: "எதுக்கு இந்த சீக்ரஸி?"

 ஜாஷ்வா: "என்னோட ரெண்டாவுது சந்தேகம் ... ஒருவேளை நம்மை மிரட்டி எப்படி இந்த ட்ரான்ஸ்ஃபர் பண்ணறோம்னு தெரிஞ்சுக்கறதுக்காக இந்த மீட்டிங்குக்கு கூப்பிட்டு இருந்தா?இந்த ஆபரேஷன்ல எனக்கு தெரிஞ்ச சில விஷயம் உங்க ரெண்டு பேருக்கும் தெரியாது. அதே மாதிரி உங்க ரெண்டு பேருக்கும் தெரிஞ்ச விஷயம் எனக்கு தெரியாது. சோ, மூணு பேரும் ஒண்ணா அவங்க கைல சிக்க கூடாது அதனால எனக்கு எந்த விதமான டவுட்டும் இல்லைன்னு தோணறவரைக்கும் நான் உங்களுக்கு சிக்னல் கொடுக்க மாட்டேன்"

 நித்தின்: "ஹேய், இது என்ன புது ட்விஸ்ட்?"

 சக்திவேல்: "ஜஷ்வா சொல்றது சரி தான். நம்மளோட பாட்நெட்டை காப்சர் பண்ண எவ்வளவு சைபர் அட்டாக் வந்துதுன்னு மறந்துடுச்சா?" (BotNet என்று அழைக்கப் படும் ஒரு ஸைபர் சூழ்ச்சி முறையை அடுத்த அப்டேட்டில் ஆராயலாம்)

 நித்தின்: "அதெல்லாம் வலை உலகத்தில. நிஜத்தில பண்ணுவாங்களா?"

 ஜாஷ்வா: "உன் பாங்க் பாலன்ஸை பாரு உனக்கே தெரியும் உன் பாட்நெட்டுக்காக நீ டிவலப் பண்ணினதை வெச்சுட்டு எவ்வளவு சம்பாதிக்க முடிஞ்சுதுன்னு. மத்தவங்க கைக்கு அது போய் இருந்தா அந்த மாதிரி பத்து மடங்கு சம்பாதிச்சு இருப்பாங்க. இன்னும் சம்பாதிக்க முடியும்"

 சக்திவேல்: "என்ன ஜாஷ்வா? இன்னும் சம்பாதிக்கணும்னு உனக்கு இருக்கா?" 

ஜாஷ்வா: "நோ வே! ஐ ஹாவ் இனஃப் .. "

 நித்தின்: "இந்த மாதிரி சொல்றதுக்கு ஒரு மெச்சூரிட்டி வேணும் .. அது உங்கிட்ட இருக்கு"

 சக்திவேல்: "எங்க ஊர்ல ஒரு பழமொழி இருக்கு" என்றவன் தமிழில் "போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து" என்றபின் அதற்கு விளக்கத்தை ஆங்கிலத்தில் தொடர்ந்தான், "போதும் என்று சொல்லும் மனம் இருந்தா அதை வெச்சுட்டு தங்கம் செய்யலாம்"

 ஜாஷ்வா: "You mean like Philosopher's Stone? நல்லா இருக்கு!"

 நித்தின்: "ம்ம்ஹூம் ... தங்கத்தை செயற்கையா செய்ய முடியாதுங்கறதுக்கு ஒரு விளக்கம் மாதிரி இருக்கு"

 சக்திவேல்: "எல்லாத்தையும் இப்படி ஏண்டா விதண்டா வாதமா யோசிக்கறே? சரி ஜாஷ்வா, எப்படி சிக்னல் கொடுக்க போறே"

 ஜாஷ்வா: "அவங்களை பாக்கறதுக்கு முன்னாடி என் செல்லுல இருந்து உன் நம்பரை கூப்பிடறேன். காலை கட் பண்ணாம ஃபோனை பாக்கெட்ல வெச்சுக்கறேன். நாங்க என்ன பேசறோம்னு உங்களுக்கு கேக்கும். நிலமை சரியா இருந்தா பேச்சு வாக்கில நான் 'தே ஷுட் பீ ஹியர் இன் தெ நெக்ஸ்ட் த்ரீ மினிட்ஸ்' அப்படின்னு சொல்வேன். எக்ஸாக்டா அப்படி சொன்னால் மட்டும் இறங்கி வாங்க"

 சக்திவேல்: "எனக்கு என்னமோ இன்னமும் இந்த மீட்டிங்க் தேவையான்னு படுது ... "

 நித்தின்: "டோண்ட் வொர்ரி டா, ஜாஷ் சமாளிப்பாங்கற நம்பிக்கை எனக்கு இருக்கு"

ஜாஷ்வா: "தட்ஸ் தெ ஸ்பிரிட். அப்பறம் இன்னொரு விஷயம்." என்றபடி கை பையில் இருந்து இன்னோரு கவரை எடுத்து சக்திவேலிடம் கொடுத்து, "இதுல ரெண்டு ஷீட்ஸ் இருக்கு, ஒண்ணுல இந்த நம்பர் அக்கௌண்ட் டீடெயில்ஸ் அப்பறம் நெட் பாங்கிங்க் லாகின் ஐடியும் பாஸ்வர்டும் இருக்கு. "

 
சக்திவேல்: "அதை எதுக்கு எங்கிட்ட கொடுக்கற?"

 ஜாஷ்வா: "நாம் பணம் ட்ரான்ஸ்ஃபர் பண்ணலைன்னு அவங்களுக்கு சந்தேகம் இல்லைன்னா உடனே அதுல இருக்கற பணம் எல்லாத்தையும் நம் அக்கௌண்டுகளுக்கு ட்ரான்ஸ்ஃபர் பண்ணிடனும். நான் என் கஸின் கிட்ட சொல்லி அதை க்ளோஸ் பண்ண சொல்லுடுவேன். நீங்க ரெண்டு பேரும் ஆளுக்கு மூணு மில்லியன் எடுத்துக்குங்க. ஒரு மில்லியனை சாரிட்டிக்குன்னு நாம் வெச்சு இருக்கற அக்கௌண்டுக்கு ட்ரான்ஸ்ஃபர் பண்ணிடுங்க. அதுக்கு அப்பறம, அந்த சாரிட்டி அக்கௌண்ட்ல மொத்தம் ஒன்றரை மில்லியன் டாலருக்கு கொஞ்சம் அதிகமா இருக்கும். இதுவரைக்கும் நாம் சாரிட்டிக்குன்னு ஏழரை லட்சம் (முக்கால் மில்லியன்) தான் செலவழிச்சு இருக்கோம்.

பாக்கியை நீங்க இந்தியாவிலயும் நான் பஹமாஸ்லயும் செலவு செய்யறதா இருந்தோம். கூடிய சீக்கிரம் அந்த அக்கௌண்ட்ல இருக்கறது முழுக்க செலவு செஞ்சுடணும். மனசுல வெச்சுக்குங்க."

 நித்தின்: "இந்தியா போன உடனே முதல் வேலை என்னோடது அது தான். ஏற்கனவே நாங்க சில அனாதை விடுதி அப்பறம் ஓல்ட் ஏஜ் ஹோம் எல்லாம் ஷார்ட் லிஸ்ட் பண்ணி வெச்சு இருக்கோம்"

 சக்திவேல்: "அது சரி, ரெண்டு ஷீட்ஸ் இருக்குன்னு சொன்னே?"

 ஜாஷ்வா: "சொல்றேன். இன்னோரு ஷீட்ல நான் இங்க இருந்து அண்டர்க்ரௌண்ட் ட்ரான்ஸ்ஃபர் பண்ணறதை பத்தி டீடெயில்ஸ் இருக்கு" 

சக்திவேல்: "உன்னோட பணத்தை இங்க இருந்து எடுத்துட்டு போறதை பத்தி ... என் கிட்ட ஏன் குடுக்கறே?"

 ஜாஷ்வா: "நான் அதை பிரிச்சு கூட பாக்கலை. பாக்க வேண்டாம்னு சொல்லி சஞ்சனா சொன்னா. அப்படியே உன் கிட்ட கொடுக்கறேன்"

 சக்திவேல்: "அதான் ஏன்?.. "

 ஜாஷ்வா: "இந்த அண்டர்க்ரௌண்ட் ட்ரான்ஸ்ஃபர் எப்படி வொர்க் பண்ணும் தெரியுமா? ஒரு பாங்க் மாதிரி தான். ஆனா கொஞ்சம் வித்தியாசமா .. நான் என் பணத்தை எல்லாம் அவங்க கிட்ட கொடுத்துட்டேன். அதுக்கு பதிலா அவங்க எங்கிட்ட அந்த ஷீட்ல ஒரு ஃபோன் நம்பர், ஒரு அக்கௌண்ட் நம்பர் அப்பறம் ஒரு சாலஞ்ச் ரெஸ்பான்ஸ் லிஸ்ட் (challenge-response list) கொடுத்து இருக்காங்க. அந்த நம்பருக்கு ஃபோன் பண்ணி அக்கௌண்ட் நம்பரை சொன்னதும் அந்த லிஸ்ட்ல இருக்கற ஒண்ணு ரெண்டு சாலஞ்ச் கேள்விகளை கேப்பாங்க.

அதுக்கு நீ அந்த கேள்விக்கு அதுக்கு நேரா இருக்கற ரெஸ்பான்ஸை பதிலா சொல்லணும். அதுக்கப்பறம் நீ எவ்வளவு பணத்தை எந்த நாட்டில எந்த ஊர்ல யார் கிட்ட கொடுக்கணும் இல்லை எந்த பேங்க்ல எந்த அக்கௌண்ட்ல டெபாசிட் பண்ணனும் அப்படின்னு சொல்லலாம்."

 நித்தின்: "ஹே, நம்பகமான பார்டிங்க தானே?"

 ஜாஷ்வா: "இந்த அண்டர்க்ரௌண்ட் நெட் வொர்க் ஓடறதே நம்பிக்கைலதான். கமிஷன் கொஞ்சம் அதிகம். மூணரை பர்சன்ட். நாம் சார்ஜ் பண்ணின மாதிரி ஒன்றரை பர்ஸன்ட்னா கொலம்பியா ட்ரக் கார்டல் காரங்க நம்ம கிட்ட வந்து இருக்க மாட்டாங்க"

 சக்திவேல்: "இன்னும் இதை என் கிட்ட ஏன் கொடுக்கறேன்னு சொல்லலை .. " 

ஜாஷ்வா: "சொல்றேன் .. நாங்க ரெண்டு பேரும் லாங்க் டர்ம் விசா எடுத்துட்டு போறோம். பஹாமாஸ் மாதிரி இடங்களுக்கு இந்த மாதிரி நிறைய பேர் போறாங்க. இட் சீம்ஸ், இப்படி வர்றவங்களை சில கும்பல்கள் கண்காணிச்சு அவங்களை தள்ளிட்டு போய் ட்ரக் பண்ணி ட்ரான்ஸ்ஃபர் விவரங்களை கேட்டு தெரிஞ்சுக்கறாங்களாம்.

நாங்க என் கஸின்ஸ் மூலம் முன் ஏற்பாடுகள் செஞ்சுட்டுதான் போறோம். இருந்தாலும் ஒரு முன் ஜாக்கிரதைக்கு இதை நான் உன் கிட்ட கொடுக்கறேன். நான் அங்க போனதுக்கு அப்பறம் தேவையான ஏற்பாடுகள் எல்லாம் செஞ்சுட்டு அந்த அண்டர்க்ரௌண்ட் ட்ரான்ஸ்ஃபர் எங்க எல்லாம் பண்ணனும்னு சொல்றேன். நீ ஃபோன்ல கூப்பிட்டு அதை முடிக்கணும். இது உன் தங்கச்சியோட கட்டளை. நாளன்னைக்கு பாக்கும் போது அவளும் சொல்லுவா" சஞ்சனாவை பற்றி சொன்னதும சக்திவேல் முகம் மலர்ந்தான். 

நித்தின்: "ஐ சப்போஸ் இதை தவிர நார்மல் ட்ரான்ஸ்ஃபர்லையும் கொஞ்சம் பணம் எடுத்துட்டு போறே தானே?"

 ஜாஷ்வா: "என் சம்பளப் பணம் முழுக்க என் அக்கௌண்ட்ல இருக்கு. நான் அதை அங்க இருந்தும் எடுத்துக்கலாம். மத்த பணம் தான் அண்டர்க்ரௌண்ட் ட்ரான்ஸ்ஃப்ர்ல போகுது"

 சக்திவேல்: "இஃப் யூ டோண்ட் மைண்ட் ... எவ்வளவு அண்டர்க்ரௌண்ட் ட்ரான்ஸ்ஃபர் மூலம் அனுப்பறே? "

 ஜாஷ்வா: "நாட் அட் ஆல். உனக்கு எப்படியும் தெரிஞ்சுதானே ஆகணும். மொத்தம் நாலரை மில்லியன். இதை தவிர இந்த அக்கௌண்ட்ல இருந்து என்னோட ஷேரான மூணு மில்லியனுக்கு ஒரு செக்கும் அவங்ககிட்ட இன்னைக்கு கொடுத்து இருக்கேன். நாளன்னைக்கு வரைக்கும் நான் அவங்ககிட்ட எதுவும் சொல்லலைன்னா அவங்க அதை நாளன்னைக்கு டெபாசிட் பண்ணுவாங்க"

 நித்தின்: "ஹே தாட் இஸ் ஃபன்னி... சொன்னா டெபாசிட் பண்ணுவாங்கன்னு கேள்வி பட்டு இருக்கேன். சொல்லலைன்னா டெபாசிட் பண்ணுவாங்க அப்படிங்கறே?"

 ஜாஷ்வா: "அவங்களை பொறுத்த வரைக்கும் காண்டாக்ட் ரொம்ப கம்மியா இருக்கணும். எனக்கும் நல்லதுதானே. நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. சரி, நான் கிளம்பறேன். என் டெரரிஸ்ட் மனைவி இன்னும் நாளைக்கு டின்னர்னு நினைச்சுட்டு இருப்பா. இப்ப போய் சொன்னா கொஞ்சம் ஒதை விழுந்தாலும் விழும் .. "

 சக்திவேல்: "ஏண்டா அவளை இன்னும் டெரரிஸ்ட்டுன்னு சொல்றே. அவ மனசு கஷ்டப் படும் இல்லையா?"

 ஜாஷ்வா: "ஜஸ்ட் கிட்டிங்க் .. அவ எனக்கு பர்ஸனல் டெரரிஸ்ட் .. அதாவுது அவளோட விக்டிம் நான் மட்டும்தான்!" என்றதும் மூவரும் வாய்விட்டு சிரித்த படி விடை பெற்றனர்


.Joshua's Flat, Harlem, N.Y 7:30 PM ஜாஷ்வாவின் ஃப்ளாட், ஹார்லம் பகுதி, நியூ யார்க் நகரம், மாலை மணி 7:30

 இந்திய சமையலின் மணம் ஃப்ளாட்டிற்கு அருகே வரும்போதே அவன் நாசியை துளைக்க கதவை தட்டாமல் தன்னிடமிருந்த சாவியால் திறந்து நுழைந்தான். வாசல் தெரியும்படி இருந்த சமையல் அறையிலிருந்து சஞ்சனா ஓரக்கண்ணில் பார்ப்பதை அறியாமல் தன் ஜாக்கெட்டை சுவற்றில் இருந்த கொக்கியில் மாட்டிவிட்டு பூனை போல் நடந்து சமையலறைக்குள் சென்றான்.

குளித்து முடித்து அடர்ந்த கூந்தலை ஒரு டர்கி டவலால் சுற்றி கொண்டையாக போட்டு வெற்றுடலை ஒரு டர்கி பாத் ரோப் தழுவ நின்று கொண்டிருந்தவளின் இடையை பற்றி காது மடல்களை கடித்தான். எக்ஸ்ட்ரா ஸ்ட்ராங்க் ஃபில்டர் காப்பி நிறத்தில் இருந்த அவனது முகத்தருகே அவளது மாநிறம் விளக்கொளியில் தங்கம் போல் ஜொலித்தது.

 ஜாஷ்வா: "ஹேய் ஹனி! டெஸ்ட் ரிஸல்ட் வந்துதா? டிட் யூ மீட் த கைனிக்?" 

சஞ்சனா: "ம்ம்ம்ம் ... ஜாஷ்வா ஜூனியர் கன்ஃபர்ம்ட்"

 ஜாஷ்வா: "அதுக்குள்ள ஜாஷ்வா ஜூனியரா இல்லை சஞ்சனா ஜூனியரான்னு தெரியுமா என்ன?" திரும்பி நின்று அவன் கழுத்தில் கரங்களை மாலையாக போட்டவள். அவன் தலையை குனியவைத்து நுனிக்காலில் நின்று அவன் இதழ்களை தன் இதழால் கவ்வினாள்.

சில நிமிடங்கள் நீடித்த முத்தத்திலிருந்து மனமில்லாமல் விடுபட்டு தமிழில், "மண்டு!" என்று தொடர்ந்து ஆங்கிலத்தில், "என் ஸ்வீட் ஹஸ்பண்ட் பெரிய விஸ் கிட் சில சமயத்துல டம்போ. அதுக்குள்ள தெரியாது. நாலு மாசத்துக்கு அப்பறம் தான் டாக்டர்ஸ் கன்ஃபர்ம்டா சொல்லுவாங்க"

 ஜாஷ்வா: "எனக்கும் அது தெரியும் மை லவ். நீ ஜாஷ்வா ஜூனியர்னு சொன்னதுனால அப்படி கேட்டேன்"

 சஞ்சனா: "ஆனா .. ஜாஷ்வா ஜூனியர்தான்னு நான் 100% ஷ்யூர்" ஜாஷ்வா: "எப்படி சொல்றே?"

 சஞ்சனா: "கணவன் மனைவிமேல் வெச்சு இருக்கற காதலை விட அதிகமா மனைவி கணவன் மேல் வெச்சு இருந்தா நிச்சயம் ஆண் குழந்தைதான் பிறக்கும் அப்படின்னு எங்க ஊர்ல பாட்டிங்க சொல்லுவாங்க. அதனால தான்!"

 ஜாஷ்வா: "அப்ப நான் உன்னை லவ் பண்ணலைங்கறயா?"

 சஞ்சனா: "நான் அப்படி சொல்லலை. நீ என்னை லவ் பண்றதை விட அதிகமா நான் உன்னை லவ் பண்றேன்னு சொன்னேன்"

 ஜாஷ்வா: "உன்னை தவிர வேற யாரையும் நான் லவ் பண்ணலை. பண்ணினதும் இல்லைன்னு உனக்கு தெரியும்தானே?"

 சஞ்சனா: "உயிருள்ள ஜீவராசியில நீ என்னை மட்டும்தான் லவ் பண்ணறேன்னு தெரியும். ஆனா என்னை லவ் பண்ணற அளவுக்கு உன் கம்ப்யூடர், அல்காரிதம் இதை எல்லாத்தையும் லவ் பண்றே. எனக்கு அந்த மாதிரி டிஸ்ட்ராக்ஷன் எதுவும் இல்லை. சோ, உன்னை விட நான் தான் அதிகமா லவ் பண்றேன்"

 ஜாஷ்வா: "உன் லாஜிக் பிடிச்சு இருக்கு. ஆனா இன்னும் ரெண்டு மாசம் பொறுத்துக்கோ. அப்பறம் பஹாமாஸ்ல எனக்கு ஒரு வேலையும் இருக்காது. இதுக்கு அடுத்தது சஞ்சனா ஜூனியர் ஒன், டூ, த்ரீன்னு சிக்ஸ் வரைக்கு அரை டஜன் பேபி டால்ஸ் வரும்"

 சஞ்சனா: "உன்னை மாதிரி ஒரு அப்பாவுக்கு நான் ஒரு டஜன் பிள்ளைங்ககூட பெத்து கொடுக்க தயார்"

 ஜாஷ்வா: "என்னை மாதிரி ஒரு அப்பாவா?"

 சஞ்சனா: "நீ எப்படிப் பட்ட ஒரு அப்பாவா இருப்பேன்னு உன்னை பாத்த முதல் மூணு மாசத்துல தெரிஞ்சுகிட்டேன்" என்றாள்

ஜாஷ்வா: "ம்ம்ம்... அப்பறம் நான் கேட்டதை டாக்டர்கிட்ட கேட்டியா?" சஞ்சனா: "நான் சொன்னதையேதான் டாக்டரும் சொன்னாங்க. எனக்கு ப்ளீடிங்க் மாதிரி ஒரு காம்ப்ளிகேஷனும் இல்லை. அதனால் கடைசி மாசம் வரைக்கும் ஓ.கே அப்படின்னாங்க" ஜாஷ்வா அவள் சொல்ல சொல்ல அவளை இன்னும் இறுக்கினான். அவனது ஆண்மை அவளது வயிற்றில் முட்டியது.

 ஜாஷ்வா: "எனக்கு இப்ப வேணும் .. "

 சஞ்சனா: "ம்ம்ஹூம் ... என்னை நம்பாம பத்து நாளா காயப் போட்டே இல்லை?"

 ஜாஷ்வா: "உன்னை எங்க பட்டினி போட்டேன். இந்த பத்து நாள்ல என் நாக்கு தமிழ் பேசற அளவுக்கு ஃப்ளெக்ஸிபிள் ஆகி நல்லா ஸ்ட்ராங்கா ஆகி இருக்கு!" 

சஞ்சனா: "சீ .. " என்றவாறு முகம் சிவந்தாள் பிறகு, "நான் ஒண்ணு கேட்டா நீ வேற கொடுத்தே இல்லை?" என்றவாறு வெட்கத்தில் அவன் மார்பில் முகம் புதைத்தாள்.

 ஜாஷ்வா: "சரி, பெட் ரூம் போலாம் வா"

 சஞ்சனா: " நான் எப்படி ஃப்ரெஷ்ஷா இருக்கேன்? அந்த மாதிரி நீயும் போய் குளிச்சுட்டு வா. அதுக்கு அப்பறம்தான்"

 ஜாஷ்வா: "அப்பறமா போய் குளிக்கறேனே?"

 
சஞ்சனா: "அப்பறமா பசி பசின்னு பறப்பே. வத்தக் குழம்பு வெச்சு இருக்கேன். கூட அப்பளம் இல்லைன்னா குதிப்பே. அப்ப ஒரு வேலைக்கும் எனக்கு மூடு வராது. நான் இப்பவே எல்லாத்தையும் முடிச்சுட்டு வந்துடறேன்... ப்ளீஸ் டியர்" தொடர்ந்து தமிழில் "என் செல்ல ஜாஷ் குட்டி இல்ல?" என்றபடி அவன் கன்னத்தை தடவினாள்.

 ஜாஷ்வா: "நீ பேசறது எல்லாம் புரியுது .. ஆனா பேசத்தான் வரமாட்டேங்குது" 

சஞ்சனா: "யோவ் .. நான் உனக்கு சொல்லி கொடுத்ததை நாளைக்கு டின்னரப்ப சக்திகிட்ட சொல்லணும் .. மறந்துடாதே"

 ஜாஷ்வா: "ஹே, சொல்ல மறந்துட்டேன் ... நாளைக்கு டின்னர் இல்லை .. " 

சஞ்சனா: "ஏன்? " ஜாஷ்வா: "நாளைக்கு ஆண்டர்ஸனும் ஹாஃப்மனும் மீட்டிங்க்குக்கு கூப்பிட்டு இருக்காங்க. அது பத்து மணிக்கு; அது முடிஞ்சதுக்கு அப்பறம் ரொம்ப லேட்டாயிடும். அதனால நாளன்னைக்கு டின்னர் வெச்சுக்கலாம். டின்னர் முடிஞ்சதுக்கு அப்பறம் நாம் போய் அவங்களை செண்ட் ஆஃப் பண்ணிட்டு வரலாம்" சஞ்சனாவின் முகத்தில் சிறு ஏமாற்றம் தோன்றி மறைந்தது.

பிறகு, "ஏன் இப்படி கடைசி நேரத்துல? போன வாரம்தான் நீங்க எல்லாம் அல்ரெடி குட் பை சொல்லி ஆபரேஷனை முழுசா வைண்ட் அப் பண்ணிட்டீங்கன்னு சொன்னே?"

 ஜாஷ்வா: "ஒண்ணுமில்லை சில விஷயங்கள் டிஸ்கஸ் பண்ண மறந்துட்டோம். அதான்" ஜாஷ்வாவை தீர்க்கமாக பார்த்த படி, "என்ன எங்கிட்ட இருந்து மறைக்கறே?"

 ஜாஷ்வா: "நோ ஹனி நான் எதையும் உங்கிட்ட மறைக்கலே"

 சஞ்சனா: "பின்னே எதுக்கு உன் ஜாக்கெட் பாக்கெட்ல கன் இருக்கு?"

 ஜாஸ்வா: "கன்னா? .." என்று மழுப்பப் பார்த்தவன் சஞ்சனாவின் கண்களை சில கணங்களுக்கு மேல் பார்க்க முடியாமல் திரும்பினான்.

சஞ்சனா: "ரெண்டு வருஷம் நான் பிஸ்டல், ரைஃபிள், ஹாண்ட் க்ரனேட் எல்லாத்தையும் உடம்பில மாட்டிட்டு திரிஞ்சு இருக்கேன். எதிரியை பாத்த உடன் உடம்பில் எங்கே என்ன வெப்பன் ஒளிச்சு வெச்சு இருக்கான்னு என்னால் சொல்ல முடியும். உன் ஜாக்கெட் சுவற்றில் தொங்கற விதத்தில இருந்து அதோட ரைட் சைட் பாக்கெட்ல ஒரு பிஸ்டல் இருக்குன்னு தெரியுது. அனேகமா லோட் பண்ணாத பரேட்டா இல்லைன்னா லோட் பண்ணின க்ளாக். எதுக்கு உனக்கு? என்ன நடக்குது? ஒண்ணு விடாம எங்கிட்ட சொல்லு"

 பெரு மூச்செறிந்த ஜாஷ்வா அவளிடம் நடந்தது அத்தனையும் சொல்லி முடித்தான்.

 சஞ்சனா: "சோ, நீ பிஸ்டலோட அவங்களை மீட் பண்ண போறே? மீட்டிங்க்குக்கு முன்னாடி அவங்க ஆளுங்க உன்னை ஃப்ரிஸ்க் (சோதனை) பண்ண மாட்டாங்களா?"

 ஜாஷ்வா: "அவங்க ரெண்டு பேர் மட்டும்தான் எப்பவும் வருவாங்க. அதெல்லாம் இது வரைக்கும் பண்ணினது இல்லை"

 சஞ்சனா: "நாளைக்கு கூட ஆள் கூட்டிட்டு வந்து இருந்தாங்கன்னா?"

 ஜாஷ்வா: "நான் என் கஸின் கார்ல இருந்து இறங்கவே போறது இல்லை" 

சஞ்சனா: "யார் காரோட்டிட்டு வரப் போறது"

 ஜாஷ்வா: "க்ரிஸ் ..." கடந்த இரண்டரை வருடங்களில் சஞ்சனாவுக்கு ஜாஷ்வாவின் ஒவ்வொரு உடன் பிறவா சகோதரன் சகோதரியுடனும் அறிமுகமாகி இருந்தாள். க்ரிஸ் டேனியல் போதை பொருள் வினியோகத்தில் ஈடு பட்டவன். அவன் காரோட்டும் திறமையை சஞ்சனா நன்கு அறிந்து இருந்தாள்.

 சஞ்சனா: "சரி, உன் ப்ளான்ல ஒரு சின்ன சேஞ்ச். ..."

 ஜாஷ்வா: "என்ன சேஞ்ச்? ... "

 சஞ்சனா: "நானும் வரேன். முடிஞ்சா இன்னோரு கன் எனக்கு ஏற்பாடு பண்ணு; இல்லைன்னா, இந்த கன்னை உன் கீழ் முதுகுல பெல்ட்ல சொருகிட்டு வா அவசரத்துக்கு நம்ம ரெண்டு பேரும் எடுக்க வசதியா இருக்கும்"

 ஜாஷ்வா: "நோ ஹனி. என்னால ஹாண்டில் பண்ண முடியும்"

 சஞ்சனா: "நீ மத்த கீக்ஸ் (geeks) மாதிரி நோஞ்சான் இல்லைன்னு தெரியும். ஹார்லம்ல பொறந்து வளந்ததனால உனக்கு கன்ஸ் புதுசு இல்லைன்னும் தெரியும். பட், ஒரு வேளை அந்த கன்னை உபயோகப் படுத்தணும்னு வந்துன்னா. என்னால அங்க இருக்கற எல்லாரையும் விட நல்லா உபயோகிக்க முடியும். என்னோட ஸேஃப்டியை பத்தி கவலைப் படாதே. நான் உன் ஸேஃப்டியை பத்தி கவலைப் பட்டு சொன்னேன். நோ மோர் ஆர்க்யூமென்ட்ஸ்".

 
ஜாஷ்வா முகம் சுளித்தபடி, "ஹே, இந்த ப்ரிகாஷன் எல்லாம் தேவையே இருக்காது தெரியுமா?"

 சஞ்சனா: "எனக்கு புரியுது. நானும் அப்படிதான் நினைக்கறேன். அதுக்காக ப்ரிகாஷன் தேவை இல்லைன்னு சொல்லாதே. ஒரு பிரச்சனையும் வரலைன்னா என்ன? நான் உன் கூட ஜாலியா ஒரு ரைட் வரப்போறேன். பொண்டாட்டியை ரைட் கூட்டிட்டு போறதுக்கு அதுக்குள்ள அலுத்துருச்சா?.

இப்ப சும்மா பேசிட்டு இருக்காதே. போய் குளிச்சுட்டு வா. வந்ததும் எனக்கு மூடை கிளப்பி விட்டுட்டே. எனக்கு நீ நைட்டு முழுக்க வேணும்" என்றவாறு அவனை குளியலறை பக்கம் தள்ளினாள்.



No comments:

Post a Comment