Tuesday, January 27, 2015

செக்மேட் - சைபர் கிரைம் திரில் தொடர் - பாகம் - 13


சஞ்சனா (தமிழில்), "வா அண்ணா, வா வந்தனா" தொடர்ந்து குழப்பத்துடன் சக்தியை பார்த்த வந்தனாவிடம், "உனக்கு தமிழ் தெரியாதா?" என்று ஆங்கிலத்தில் கேட்டாள் இல்லை என்று தலையாட்டியபடி வந்தனா, "சுத்தமா தெரியாது" சஞ்சனா, "அண்ணான்னா தமிழில் மூத்த சகோதரன்" என்ற பிறகு சக்தியை பார்த்து "அப்ப இவ என் வீட்டுக்காரரைவிட மோசம்" சக்தி, "எங்கே என் மச்சான்?" சஞ்சனா, "அய்யோ! நீ மச்சான்னு அவர்கிட்ட சொல்லி வைக்காதே. நேத்து தான் மாமன் மச்சான் உறவை பத்தி பேசிட்டு இருக்கும் போது, தமிழில் உன்னை மச்சான்னு கூப்பிடுன்னு சொல்லி இருக்கேன். நீ இப்ப அவரை மச்சான்னு கூப்பிட்டா என் கிட்ட அது எப்படி தான் தானே உன்னை அப்படி கூப்பிடணும்ன்னு மறுபடி விளக்கம் கேக்க ஆரம்பிச்சுடுவாரு" சக்தி, "நான் அவனை மாமான்னும் கூப்பிடலாம் மச்சான்னும் கூப்பிடலாம்ன்னு சொல்லலையா?"
சஞ்சனா, "ம்ம்ம் அவருக்கு புரியற மாதிரி கம்ப்யூடர் பாஷைல நீயே சொல்லு. நடுவில் தமிழில் பேசினதுக்கு சாரி வந்தனா, .. சக்தி, இன்னைக்கு நைட்டு வரைக்கும் இங்கிளீஷ் தான் ஓ,கே?" வந்தனா, "பரவால்லை .. நானும் புரிஞ்சுக்க முயற்சி பண்ணறேன்" என்றவளை சஞ்சனா சற்று வியப்புடன் பார்த்தாள் பேசிக்கொண்டு இருக்கையில் அமர உள்ளே இருந்து வந்த ஜாஷ்வாவை சஞ்சனா அறிமுகப் படுத்தி வைக்க வந்தனா வாயடைத்துப் போனாள். சக்தி ஜாஷ்வா ஒரு ஆஃப்ரிக்க-அமெரிக்கன் என்று சொல்ல மறந்து இருந்தான். ஜாஷ்வா, "ஹாய் வந்தனா, "எப்டி இருக்கே (தமிழில்)" என்றதும் மேலும் கண்கள் விரிய பார்த்த வந்தனாவிடம் சக்தி, "சாரி சொல்ல மறந்துட்டேன்" என்று முணு முணுத்தான் சஞ்சனா, "யோவ், அவளுக்கு தமிழ் தெரியாது!" ஜாஷ்வா, "ஓ சாரி வந்தனா, சக்தி நீ சொல்லவே இல்லையே" சக்தி, "நான் நிறைய விஷயம் சொல்லலை. நீயா எதுக்கு அஸ்ஸ்யூம் பண்ணிக்கறே" ஜாஷ்வா, "இல்லை நீ இவளை டின்னருக்கு அழைச்சுட்டு வரேன்னு சொன்னப்ப உனக்கு அவ ரொம்ப க்ளோஸ்ன்னு நினைச்சேன். அட் லீஸ்ட் உன் குரலில் இருந்து எனக்கு அப்படி தோணுச்சு. சோ, அவளும் தமிழ் நாட்டில் இருந்து வந்து இருக்கான்னு அனுமானம் பண்ணிட்டேன்" சஞ்சனா, "ஹெல்லோ சார், தமிழ் தெரிஞ்சாதான் க்ளோஸா? இப்ப நீயும் நானும் க்ளோஸ் இல்லையா?" சக்தி உட்கார்ந்த இடத்தில் நெளிவதை ரசித்த சஞ்சனா வந்தனாவின் முகம் மேலும் சிவப்பதை ஓரக்கண்ணால் பார்த்தபடி அவனிடம், "நான் சொல்றது சரி தானே?" இந்திய ஜோடி பேசாமல் சிரித்து மழுப்பியது. கல கலப்பான பேச்சுடன் டின்னர் முடிந்தது. சஞ்சனா செய்து இருந்த ஐஸ் கிரீம் வகை ஒன்றை சாப்பிட்டபடி அமர்ந்து இருந்த போது சஞ்சனா, "சோ என் மச்சான் உன் ஃப்ரெண்ட்கூட டின்னர் போயிருக்கானா?" வந்தனா, "யாரு?" சஞ்சனா, "நித்தின், இவருக்கு உடன் பிறவா சகோதரன்" வந்தனா, "ஆமா .. என் ஃப்ரெண்டுதான் இன்னைக்கு உங்க ப்ரோக்ராம் சேஞ்ச் ஆனதுக்கு முக்கிய காரணம்" சஞ்சனா, "அண்ணா, இவங்க ரெண்டு பேரையும் இந்த வீக் எண்ட் கூட கூட்டிட்டு போலாமா?" சக்தி, "இந்த வீக் எண்ட் உன் ப்ரோக்ராம் என்ன வந்தனா?" வந்தனா மனதுக்குள் 'முழுக்க முழுக்க உன்னோட இருக்கணும்ன்னு ஆசைப் பட்டேன்' என்றபடி, "நத்திங்க் ஸ்பெஷல்" சக்தி, "எதுக்கும் நித்தின் தீபாவையும் கேட்டுக்கலாம்" என்றபடி கைபேசியில் நித்தினை அழைத்தான். டின்னர் முடித்தபின் மௌனமாக தங்களது நெருக்கத்தில் திளைத்தபடி நடந்து கொண்டு இருந்தவர்களை நித்தினின் கைபேசி தரை மட்டத்திற்கு கொண்டு வந்தது. நித்தின், "என்ன சக்தி? எங்கே இருந்து பேசறே?" சக்தி, "ஜாஷ் வீட்டில் இருந்து. உன் கிட்ட ஒண்ணு கேக்கணும்" நித்தின், "என்ன?" சக்தி, "இந்த வீக் எண்ட் லேக் ஜார்ஜ் ரிசார்ட்டுக்கு வந்தனாவையும் தீபாவையும் கூட்டிட்டு போலாமா?" நித்தின், "நானும் அதைதான் நினைச்சுட்டு இருந்தேன். வந்தனாவுக்கு ஓ.கேதானே?" சக்தி, "அவளுக்கு ஓ.கே" நித்தின், "அப்ப தீபாவுக்கும் ஓ.கேவாதான் இருக்கும்" என்றபடி அருகில் இருந்தவளிடன், "இந்த வீக் எண்ட் லேக் ஜார்ஜ் கிட்ட ஒரு ரிஸார்ட்டுக்கு போறதுக்கு உனக்கு ஓ.கேவா?" அவன் புஜங்களை பற்றி நடந்த வண்ணம் வேகமாக தலையசைத்த தீபாவை ரசித்தபடி, "இந்த பிசாசுக்கு ஓ.கே .. ஏய், வலிக்குது" என்று தீபா கிள்ளியதில் கத்தினான். சிரித்த படி இணைப்பை துண்டித்த சக்தி, "அவங்க ரெண்டு பேருக்கும் ஓ.கே. எக்ஸ்ட்ரா ஒரு ரூமுக்கு ஏற்பாடு பண்ணனும்" சஞ்சனா, "அதை நான் பாத்துக்கறேன். வந்தனா, வெள்ளிக் கிழமை நீயும் தீபாவும் கொஞ்சம் சீக்கரமா ஆஃபீஸ்ல இருந்து புறப்பட முடியுமா? ஒரு மூணு மணி வாக்கில்?" வந்தனா, "ம்ம்ம் .. முடியும்" சஞ்சனா, "அண்ணா, எல்லாம் ஒரே கார்ல போலாம்ன்னு இருந்தோம். இப்ப நித்தின் தன் டூ சீட்டர் ஸ்போர்ட்ஸ் காரில் ஹைவேல போகணும்ன்னு ஆசைப் பட்ட படி தீபாவை கூட்டிட்டு அவன் காரில் போகட்டும். நாம் நாலு பேரும் எங்க காரில் போலாம். நீ வந்தனாவை பிக் அப் பண்ணிட்டு இங்கே அஞ்சு மணிக்கு முன்னாடி வந்துடணும். நாம் நாலு பேரும் அஞ்சு மணிக்கு புறப்பட்டா எட்டு எட்டரைக்கு ரிஸார்ட்டில் இருப்போம். ஒன்பது மணிக்குள்ள அந்த வெல்கம் டின்னருக்கு போக முடியும்" சக்தி, "நீ என்னோட ப்ராஜெக்ட் மேனேஜரா வந்து இருக்கணும்" சஞ்சனா, "அண்ணா நீ ஒரேயடியா காலை வாராதே" ஜாஷ்வா, "நோ ஹனி! அவன் சொல்றது சரிதான்" வந்தனா, "ஏன்?" ஜாஷ்வா, "நிச்சயமா. ஜஸ்ட் சுற்று முற்றும் பாரு. என் வீட்டில் எலலாம் எவ்வளவு நீட்டா எடுத்து வைச்சு க்ளீனா இருக்கு? எல்லாம் அவளோட மேற்பார்வை, என்னோட கடுமையான உழைப்பு" சஞ்சனாவின் பொய்க் கோபத்தை பொருட் படுத்தாத சக்தி, "சொல்ல மறந்துட்டனே. வந்தனாவும் மேனேஜர் மெடீரியல்தான்" இப்போது வந்தனாவின் முகத்தில் அந்த பொய்க் கோபம் குடி கொண்டது. இரவில் ஹோட்டல் அறையில் பேசிக் கொண்டது தீபா, "ஹேய், எப்படி இருந்தது உன் ஈவினிங்க்." வந்தனா, "நல்லா இருந்துச்சு. I really enjoyed" தீபா, "சாரி, சக்திகூட உன்னால தனியா டைம் ஸ்பெண்ட் பண்ண முடியலை தானே? வந்தனா, "அப்படி இல்லை. போகும் போது வரும் போது எல்லாம் தனியாதானே இருந்தோம். பட், ஜாஷ்வா, சஞ்சனா கூட இருக்கும் போது என் குடும்பத்தோட இருக்கற மாதிரி ஒரு ஃபீலிங்க். கூட சக்தியும் இருந்தது எனக்கு ரொம்ப பிடிச்சு இருந்துச்சு" தீபா, "ஹெய், நித்தின் சஞ்சனாவைப் பத்தி சொன்னான். ரொம்ப பாவம் இல்லை?" வந்தனா, "ஆமா, இருந்தாலும் அவ்வளவு கஷ்டத்தில் இருந்து விடுபட்டு வாழணும் அப்படிங்கற வைராக்கியம் அவ முகத்தில் தெரியுது. அதே சமயத்தில் அவளை இந்த அளவுக்கு முன்னுக்கு கொண்டு வந்த ஜாஷ்வா மேல அவ வெச்சு இருக்கும் அன்பு, பாசம் அதே மாதிரி ஜாஷ்வாவுக்கு அவகிட்ட இருக்கும் அன்னியோன்னியம் ரொம்ப டச்சிங்க்கா இருக்கு. உண்மையை சொல்லட்டுமா? அவங்க ரெண்டு பேரும் எனக்கு ஒரு ரோல் மாடல் கப்பிள் ஆயிட்டாங்க. அவங்களை மாதிரி இருக்கணும்ன்னு இருக்கு" தீபா, "யார் கூட?" வந்தனா, "ம்ம்ம் தெரியாதாக்கும்" தீபா, "அப்பறம் ஏன் வாயை திறந்து சொல்ல மாட்டேங்கறே? இன்னும் சக்தி உனக்கு ஏத்தவனான்னு சந்தேகமா இருக்கா?" வந்தனா, "சே! அப்படி இல்லை. சக்திக்கு என்னை முழுசா பிடிச்சு இருக்கான்னு சந்தேகமா இருக்கு" தீபா, "ஏன்?" வந்தனா, "நாம் அன்னைக்கு டிஸ்கஸ் பண்ணினமே? அதேதான். இன்னைக்கு நேரடியாவே நான் என் வேலையை பத்தி மழுப்பறேன்னு சொல்லிட்டான்" தீபா, “என் ஆளு அப்பப்ப வாழைப் பழத்தில் ஊசி ஏத்தற மாதிரி எதாவுது கமெண்ட் அடிச்சுட்டுத்தான் இருக்கான். ஆனா இன்னைக்கு ஒரு பெரிய இம்ப்ரூவ்மென்ட்!” வந்தனா, “என்ன?” தீபா, “அவங்க அப்பாவைப் பத்தி, அம்மா ஆக்ஸிடெண்டில் இறந்து போனதைப் பத்தி எல்லாம் பேசிட்டு வந்தான். ஒரு விஷயம் தெரியுமா? எங்க அப்பாவுக்கு அவனோட அப்பாவை தெரியும்! ரெண்டு பேரும் லாயர்ஸ். அவனோட அப்பா இண்டர்நேஷனல் சிவில் லாயர் எங்க அப்பா க்ரிமினல் லாயர். இருந்தாலும் சில கேஸ்ல ஒருத்தருக்கு ஒருத்தர் ஹெல்ப் பண்ணி இருக்காங்க!” வந்தனா, “ஸோ, ஃபேமிலி அளவுக்கு நெருக்கம் வந்துடுச்சுன்னு சொல்லு”
தீபா, “நெக்ஸ்ட் டைம் மீட் பண்ணும்போது நானே அவன் கிட்ட ப்ரோபோஸ் பண்ணலாம்னு இருக்கேன். எதாவுது முரண்டு பிடிச்சான்னா, நேரா எங்க அப்பாகிட்ட போய் அவனோட அப்பா கிட்ட பேச சொல்லிடுவேன் அப்படின்னு பயமுறுத்தப் போறேன்!” வந்தனா, “சரியான புல் டோஸர் நீ!”அடுத்த நாள் ஷானும் சான்ட்ராவும் அவர்கள் மங்க்ஸ் பாட் நெட்டை கண்காணிக்கும் செயல் முறைகளை விளக்கினார்கள், ஷான், “மாங்க்ஸ் பாட் நெட் பாதிக்கப் பட்ட ஒரு கணிணியில் இருந்த வைரஸ்ஸோட காப்பி ஒண்ணு எடுத்து ஸ்டோர் பண்ணி வெச்சு இருக்கேன். அதை ஒரு தனி நெட் கனெக்ஷன் இருக்கும் கணிணியில் புகுத்தி என்ன பண்ணுதுன்னு கண்காணிக்கறோம்” தீபா, “நாங்களும் அந்த காப்பியையே இன்னும் ஒரு காப்பி எடுத்துட்டு போய் எங்க ஆஃபீஸ்ல இருக்கும் கணிணியில் புகுத்தி கண் காணிக்கறோம்” சான்ட்ரா, “தப்பி தவறி கூட ஒரு நெட்வொர்க்கில் (LANஇல் இணைத்து) இருக்கும் கணிணியில் புகுத்தக் கூடாது. எப்படி பரவுதுன்னே தெரிய மாட்டேங்குது. ஒரு கணிணியில் புகுந்த ஒரு மணி நேரத்தில் அந்த LANஇல் இருக்கும் சர்வர்கள் உள்பட, எல்லா கணிணியிலும் புகுந்து இருக்கும்” ட்ரேஸ் அவுட் புலியான வந்தனா, “என்னென்ன ஆக்டிவிடீஸ்ஸை (செயல்களை) கண் காணிக்கறீங்க?” ஷான், “அந்த வைரஸ்ஸுக்கு இணையம் மூலம் ஆணைகளை வருவதை பாக்க முடியுது. ஆனா அந்த வைரஸ் விண்டோஸுக்கும் பிறப்பிக்கும் ஆணைகளை கண்காணிப்பது முடியாத ஒரு காரியம்.” வந்தனா, “சாண்ட் பாக்ஸ் உபயோகிச்சா?” சான்ட்ரா, “ம்ம்ஹூம் .. வைரஸ் பிறப்பிக்கும் ஆணைகளுக்கும் மத்த மென்பொருள்கள் பிறப்பிக்கும் ஆணைகளுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை. பல சமயங்கள் மத்த மென் பொருள் கொடுப்பது போல் அந்த வைரஸ் ஆணை பிறப்பிக்குது” வந்தனா, “அந்த வைரஸ்ஸை மட்டும் ஐஸொலேட் பண்ணினா?” ஷான், “ஹார்ட் டிஸ்கில் இருக்கும் வைரஸ்ஸை நீ ஐஸொலேட் பண்ண முடியும். ஒன்ஸ் விண்டோஸ் இயங்க ஆரம்பிச்சுடுச்சுன்னா வைரஸ் இயங்கிட்டு இருக்குங்கறதுக்கு எந்த தடயமும் இல்லை” தீபா, “ஓ இட்ஸ் அ பாரஸைட் கோட்? (Oh, it is a parasite code? – மற்ற மென்பொருள்களுடன் தன்னை பொருத்திக் கொண்டு இயங்கும் மென்பொருள்)” சான்ட்ரா, “பாரஸைட் அண்ட் ம்யூடண்ட் கொட் (parasite and mutant code - மற்ற மென்பொருள்களுடன் தன்னை பொருத்திக் கொண்டு இயங்கும் அடிக்கடி உருமாறும் மென்பொருள்)” தீபா, “வாவ்! “ வந்தனா, “அப்ப எப்படித்தான் ட்ராக் பண்ணறது?” ஷான், “வைரஸ் எப்படி செய்யுதுன்னு பார்க்கறதை விட்டுட்டோம். அது விளைவிக்கும் செயல்கள், கணிணியில் ஏற்படுத்தும் மாற்றங்கள், மற்றும் வெளியுலகுடன் அதன் தகவல் பரிமாற்றம் இவைகளை மட்டும் கவனிச்சுட்டு வர்றோம்” தீபா, “என்ன மாதிரி தகவல் பரிமாற்றங்கள் ஏற்படுது?” சான்ட்ரா, “ஒண்ணு, அதுக்கு வரும் ஆணை, ரெண்டாவுது அது கொடுக்கும் பதில்கள், மூணாவது வைரஸ் புகுந்த மற்ற ஒரு கணிணிக்கு அது அனுப்பும் தகவல்கள்” வந்தனா, “அதுக்கு சர்வர்கிட்ட இருந்து வருவதைதானே ஆணைன்னு சொல்றீங்க?” ஷான், “அப்படித்தான் யூகிச்சு இருக்கோம். ஏன்னா, வைரஸ் புகுந்த மற்ற கணிணிகளிடம் இருந்துதான் அந்த வைரஸ்ஸுக்கு இது வரைக்கும் ஆணைகள் வந்து இருக்கு” தீபா, “ஓ, சர்வர் ஒரு கணிணிக்கு அனுப்பும் ஆணையை மத்த கணிணிகளுக்கு வைரஸ் அனுப்புதா?” சான்ட்ரா, “ஆமா .. “ வந்தனா, “அப்ப எதோ ஒண்ணு ரெண்டு கணிணிகளுக்குத்தான் சர்வர்கிட்டே இருந்து நேரடியா ஆணை வரும். இல்லையா?” ஷான், “ஆமா .. அதனால்தான் அதன் கன்ட்ரோல் சர்வரை கண்டு பிடிப்பது அசாத்தியம்ன்னு ஓவன் வாக்கர் சொன்னான்” தீபா, “அந்த ஆணைகளை ஆராய்ந்து பாத்தீங்களா?” சான்ட்ரா, “ம்ம்ம் .. ஒரு அளவுக்கு. எந்த மாதிரி ஆணை வந்தா அது ஈமெயில் அனுப்புதுன்னு தெரியுது. அதை தவிர அட்டெண்டன்ஸ் எடுக்கற மாதிரி சில சமயம் ஆணைகள் வருது. அதுக்கு அந்த வைரஸ்ஸும் ‘உள்ளேன் அய்யா’ அப்படின்னு சொல்ற மாதிரி பதில்களை அனுப்புது. இந்த ரெண்டு விதமான பரிமாற்றங்களை தவிர வேறு எந்த விதமான ஆணையோ பதிலோ நாங்க இது வரை பார்க்கலை” வந்தனா, “அப்ப அந்த ஆணைகளையும் பதில்களையும் டீகோட் பண்ணலையா?” ஷான், “நோ! இதுவரைக்கும் எங்களால டீகோட் பண்ண முடியலை .. அவங்க உபயோகிக்கும் அல்காரிதம் ரொம்ப காம்ப்ளிகேட்டட். நீ வேணும்ன்னா முயற்சி செஞ்சு பாரு.” அன்று அதற்கு பின் தீபாவும் வந்தனாவும் மாங்க்ஸ் பாட் நெட் வைரஸ்ஸுடன் விளையாடத் தொடங்கினர். தீபா, “இதுக்கு ஆணைகள் வந்துட்டே இருக்கு. அதுவும் வெளியே மெஸ்ஸேஜஸ் அனுப்பிட்டே இருக்கு பாரேன்” வந்தனா, “ஷான் சொன்ன மாதிரி சாண்ட் பாக்ஸில் அது என்ன பண்ணுதுன்னு ஒண்ணும் புரியலை. எல்லாம் விண்டோஸோட சர்வீஸ்ஸ் ரன்னாகிட்டு இருக்கற மாதிரி இருக்கு” தீபா, “கணிணிக்கு உள்ளே என்னவெல்லாம் பண்ணுதுன்னு நாம் டெல்லிக்கு போய் குடையலாம். இப்போதைக்கு இருக்கும் நேரத்தில் அதோட தகவல் பரிமாற்றத்தில் மட்டும் கான்ஸென்ட்ரேட் பண்ணலாம்” வந்தனா, “பண்ணலாம் ஆனா அதுக்கு வரும் தகவலோ அது அனுப்பும் தகவலோ ஒண்ணும் புரிய மாட்டேங்குதே” தீபா, “சும்மா ஒரு விளையாட்டு விளையாடலாம்” வந்தனா, “என்ன?” தீபா, “அதுக்கு வரும் தகவலை அதுகிட்ட போறதுக்கு முன்னாடி கொஞ்சம் மாத்தலாம்” வந்தனா, “எதை மாத்துவே?” தீபா, “அது என்னன்னே தெரியாது. சும்மா நாலஞ்சு எழுத்துக்களை மாத்தலாம். முதலில் இருக்கும் எழுத்துக்களை மாத்த வேண்டாம். அனேகமா முதலில் ஃப்ரம் அண்ட் டூ அட்ரெஸ் இருக்கும். கடைசியில் சில எழுத்துக்களை மாத்தலாம்” வந்தனா, “சரி, அதுக்கு வரும் மெஸ்ஸேஜை மட்டும் இல்லை. அது அனுப்பும் மெஸ்ஸேஜையும் மாத்தலாம். மாத்திட்டு என்ன பண்ணுதுன்னு பாக்கலாம். நீ அது அனுப்பும் மெஸ்ஸேஜஸ்ஸை மாத்து நான் அதுக்கு வரும் மெஸ்ஸேஜுகளை மாத்தறேன். அதுக்கு அப்பறம் கண்காணிக்கலாம்” அன்று முழுவதும் இப்படி அவர்கள் ஒன்று இரண்டு முறை செய்த பிறகு கண்காணித்தபடி இருந்தனர். அன்று மாலைவரை ஒரு மாற்றமும் இல்லை. அடுத்த நாள் (வெள்ளிக் கிழமை) காலை அவர்கள் அன்று மாலை செல்லும் பயணத்துக்கு தேவையானவற்றை பாக் செய்து, எடுத்து செல்வதற்கு தயாராக வைத்து விட்டு அலுவலகத்தை அடைந்தனர். தங்களது அறைக்கு வந்து அந்த கணிணியை கண்காணிக்க தொடங்கிய போது அவர்களுக்காக ஒரு ஆச்சர்யம் காத்து இருந்தது. அந்த கணிணியில் இருந்த வைரஸ் தன்னை தானே அழித்துக் கொண்டு இருந்தது! மறுபடி தீபா அந்த கணிணிக்குள் வைரஸ்ஸை புகுத்தினாள். அதுவும் தான் புதிதாக புகுத்தப் பட்டு இருப்பதை பிரகடனப்படுத்துயது. ஆனால் அதற்கு ஒரு மெஸ்ஸேஜும் வரவில்லை. அது எந்த மெஸ்ஸேஜையும் அனுப்பவும் இல்லை!! தோழிகள் இருவரும் அதை ஆராய்ந்தனர். பிறகு கரைபுரண்டோடும் உற்சாகத்துடன் தங்கள் புதுக் கண்டு பிடிப்பை பகிர்ந்து கொள்ள ஷானையும் சான்ட்ராவையும் அழைத்து நடந்ததை விவரித்தனர். ஷான், “இது ஒரு புது திருப்பம். இதில் இருந்து நமக்கு தெரிய வருவது என்ன?” சான்ட்ரா, “மாங்க்ஸ் பாட் நெட்டில் இருக்கும் ஒரு கணிணியில் இருந்து (அதாவது அதில் இருக்கும் வைரஸ்ஸில் இருந்து) போகும் மெஸ்ஸேஜை டேம்பர் (tamper – கொச்சையாக சொன்னால் நோண்டி பார்ப்பது) செய்தால் அதன் பிறகு அந்த கணிணியை மாங்க்ஸ் பாட் நெட்டே விலக்கி விடுகிறது” தீபா, “அது அதை உருவாக்கினவங்க எடுத்த முடிவு!” ஷான், “என்ன சொல்றே?” வந்தனா, “நாங்க இன்கமிங்க் மெஸ்ஸேஜையும் அவுட்கோயிங்க் மெஸ்ஸேஜையும் டாம்பர் பண்ணினதுக்கு அப்பறம், உன்னை அழிச்சுக்கோன்னு அதுக்கு ஒரு ஆணை வந்து இருக்கு. அந்த மாதிரி ஒரு ஆணைக்கு பதிலா கணிணியில் இருப்பதை அழின்னும் வரலாம் இல்லையா?” ஷான், “மை காட்! நிச்சயம் இவனுக அஹிம்சாவாதிகள் தான். இதுவே சில வக்கிர புத்தி இருக்கும் ஹாக்கர்ன்னா நீ ரெண்டாவதா சொன்னபடி தான் ஆணை கொடுத்து இருப்பாங்க” தீபா, “ஷான், ஆனா நாங்க சொல்ல வந்தது அது இல்லை” சான்ட்ரா, “பின்னே என்ன?”
வந்தனா, “அந்த மாதிரி ஒரு ஆணை நிச்சயம் சர்வரில் இருந்துதான் வந்து இருக்கும். இதை வெச்சு சர்வரை ட்ரேஸ் பண்ண முடியும்” ஷான், “ஓ எஸ்! யூ கால்ஸ் ஆர் ப்ரில்லியண்ட்! (Oh Yes! You gals are brilliant!!)” தீபா, “Sorry to dampen your spirits Shawn. It is possible, but not easy” (உங்கள் உற்சாகத்துக்கு தடைபோடறதுக்கு மன்னிக்கணும். முடியும் ஆனா அவ்வளவு சுலபம் இல்லை)” சான்ட்ரா, “ஏன்?” வந்தனா, “நாங்க டாம்பர் பண்ணின கணிணிக்கு அன்னைக்கு நைட்டு வரைக்கும் பல மெஸ்ஸேஜஸ்கள் வந்துட்டு இருந்து இருக்கு. அதில் ஒரு மெஸ்ஸேஜ்தான் சர்வர்கிட்ட இருந்து நேரடியா வந்த ஆணை. அது எதுன்னு முதலில் கண்டு பிடிக்கணும்” தீபா, “அது மட்டும் இல்லை ஒரு மெஸ்ஸேஜை மட்டும் வெச்சு ட்ரேஸ் அவுட் பண்ண முடியாது. எத்தனை ப்ராக்ஸி சர்வருக்கு பின்னாடி அவங்க சர்வர் இருக்குன்னு தெரியாது. நமக்கு பல மெஸ்ஸேஜுகள் தேவைப் படும் (for triangulation we need many messages – ட்ரையாங்குலேஷன் எனப்படுவது மின் தகவல்கள் எங்கு இருந்து வருகின்றன என்பதை கண்டு பிடிக்க பயன் படுத்தப் படும் ஒரு செயல்பாட்டு முறை)” ஷான், “இருந்தாலும் ஒரு விதத்தில் நாம் சர்வரை நேரடியா மெஸ்ஸேஜ் அனுப்ப வைக்க முடியும் அப்படிங்கறதை கண்டு பிடிச்சு இருக்கீங்க. மேற்கொண்டு என்ன நடவடிக்கை எடுக்கலாம்ன்னு யோசிக்கலாம்” வந்தனா, “அதை திங்கள் கிழமை பார்க்கலாமா ஷான்? நாங்க இன்னைக்கு சீக்கரமா புறப்படணும்” ஷான், “அடுத்த வாரம் உங்களுக்கு ஒரு வேலையும் இருக்காதுன்னு நினைச்சுட்டு இருந்தோம். ஹாட்ஸ் அஃப் டு யூ போத்! சரி, திங்கள் கிழமை பார்க்கலாம்” சரியாக நாலு மணிக்கு நித்தினும் சக்தியும் அவர்களை அழைத்து செல்ல வந்தனர். நித்தின், தீபா ஜோடி லேக் ஜார்ஜை நோக்கி புறப்பட, சக்தி வந்தனாவை அழைத்துக் கொண்டு ஜாஷ்வாவின் வீட்டை நோக்கி புறப்பட்டான். சஞ்சனா சொன்னபடி ஐந்து மணிக்கு ஜாஷ்வாவின் காரில் லேக் ஜார்ஜ் நோக்கி பயணித்தனர். பயணம் முழுவதும் சஞ்சனா, வந்தனா மற்றும் சக்தி பேசிக் கொண்டு வந்தாலும் ஜாஷ்வா வழக்கத்துக்கு மாறாக மௌனம் காத்தான்.

No comments:

Post a Comment