Wednesday, January 28, 2015

செக்மேட் - சைபர் கிரைம் திரில் தொடர் - பாகம் - 14


சக்தி, “என்ன ஜாஷ், காரோட்டும் போது சரளமா பேசிட்டே ஓட்டுவே. என்ன இன்னைக்கு ரொம்ப கான்ஸென்ட்ரேட் பண்ணி ஓட்டறே? நான் வேணும்ன்னா கொஞ்சம் தூரம் ஓட்டிட்டு வரட்டுமா?” சஞ்சனா, “விடுண்ணா, அய்யா ஆஃபீஸ்ல இருந்து வந்ததில் இருந்தே என்னவோ மூட் அவுட். அங்க போனதுக்கு அப்பறம் சரியாயிடுவாரு” எட்டு மணிக்கே லேக் ஜார்ஜில் இருக்கும் ஹாலிடே இன் ரிஸார்ட்டை அடைந்தனர். மூன்று அறைகளுக்கு சாவியுடன் நித்தின் வாசலில் காத்து இருந்தான். ஜாஷ்வா பெண்கள் மூவரையும் பார்த்து, “கால்ஸ், நீங்க மூணு பேரும் ரூமுக்கு போய் ஃப்ரெஷன் அப் பண்ணிட்டு டின்னருக்கு போங்க. நாங்க மூணு பேரும் தண்ணி அடிக்க போறோம்”
சஞ்சனா, “என்னப்பா இது திடீர்ன்னு? நம்ம ப்ரோக்ராம்ல இது இல்லையே. நாளைக்கு சாயங்காலம் போங்களேன்” ஜாஷ்வா, “நோ! எனக்கு இப்ப தண்ணி அடிக்கணும்” சஞ்சனாவின் முகம் சுருங்கியது. சக்தி, “என்ன ஜாஷ் இது?” சஞ்சனா ஜாஷ்வாவை தனியே அழைத்துச் சென்றாள். சற்று நேரத்திற்கு பிறகு திரும்பியவள் முகத்தில் பழைய உற்சாகத்துடன், “வந்தனா, தீபா, ஜாஷ்வா சொல்றதும் சரிதான். இன்னைக்கு சாயங்காலம் நம்ம மூணு பேரும் கொட்டம் அடிக்கலாம். அவங்க மூணு பேரும் தனியா கொட்டம் அடிக்கட்டும்” ஜாஷ்வா, நித்தின், சக்தி மூவரும் அந்த பெரிய ரிஸார்ட்டில் இருந்த பாரில் ஒரு மூலையில் இருந்த மேசைக்கு சென்று அமர்ந்தனர். சக்தி, “என்ன ஜாஷ் திடீர்னு?” நித்தின், “ஆக்சுவலா எனக்கு தண்ணி அடிக்கற மூட் இல்லை” ஜாஷ்வா, “உங்க ரெண்டு பேர் முகத்திலும் ஏமாற்றம் எழுதி ஒட்டி இருக்குது. ஆனா ஒரு முக்கியமான விஷயத்தை டிஸ்கஸ் பண்ணி முடிவெடுக்கணும். அதுக்கு தான் நான் அப்படி அவங்க கிட்ட இருந்து உங்களை கழட்டிட்டு வந்தேன்” நித்தின், “என்ன விஷயம்?” சக்தி, “எனி ப்ராப்ளம்?” ஜாஷ்வா, “தீபாவும் வந்தனாவும் இந்தியாவோட R&AWவின் சைபர் க்ரைம் பிரிவில் வேலை செய்யறவங்க. அதை விட முக்கியமா, மாங்க்ஸ் பாட் நெட்டை வேட்டை ஆடும் பொறுப்பை எடுத்துக்கறதுக்காக இங்கே வந்து இருக்காங்க”ஜாஷ்வா, “தீபாவும் வந்தனாவும் இந்தியாவோட R&AWவின் சைபர் க்ரைம் பிரிவில் வேலை செய்யறவங்க. அதை விட முக்கியமா, மாங்க்ஸ் பாட் நெட்டை வேட்டை ஆடும் பொறுப்பை எடுத்துக்கறதுக்காக இங்கே வந்து இருக்காங்க” சில நிமிடங்கள் மௌனமாக கழிந்தது ... மௌனத்தை கலைத்த சக்தி, "இது மாதிரி தான் இருக்கும்ன்னு நான் சந்தேகப் பட்டேன். ஆனா, நம் பாட் நெட்டை கண்டு படிக்கும் வேலையை இவங்க ரெண்டு பேரும் செய்யப் போறாங்கங்கன்னு எதிர்பார்க்கலை. சரி, நீ எதையும் தீர விசாரிக்காம சொல்ல மாட்டேன்னு தெரியும். இருந்தாலும், எப்படி உனக்கு தெரிஞ்சுதுன்னு சொல்றயா?" ஜாஷ்வா, “சக்தி, நேத்து நைட்டு சர்வரில் இருந்து ஒரு செல்ஃப் டிஸ்ட்ரக்ட் கமாண்ட் (தன்னை தானே அழித்துக் கொள்ள ஆணை) போயிருக்குன்னு சொல்லி ஒரு ஐ.பி அட்ரெஸ் (இணைய விலாசம்) கொடுத்தே இல்லையா?” சக்தி, “ஆமா ..” ஜாஷ்வா, “அது யாரோடதுன்னு விசாரிச்சேன். ஃபெடரல் ப்ளாசா கட்டிடத்தில் இருக்கும் ஃபெஸிலிட்டீஸ் ஸ்டாஃப்கிட்ட (facilities staff) கேட்டபோது அந்த இணைப்பு ‘ஓ.பி.ஆர் 2 இந்தியா டீம்’ இருக்கும் ரூமுக்குன்னு சொன்னாங்க." நித்தின், "ஓ.பி.ஆர் 2?" ஜாஷ்வா, "ஆபரேஷன் பாட் ரோஸ்ட் 2 (Operation Bot Roast II) அப்படிங்கறது AKBOT புகழ் ஓவன் வாக்கரை பிடிச்ச மிஷனோட பெயர். அந்த ரூமில் யார் வொர்க் பண்ணிட்டு இருக்காங்கன்னு விசாரிச்சேன். இந்தியாவில் இருந்து வந்து இருக்கும் ரெண்டு பெண்கள்ன்னு சொன்னாங்க." சக்தி, "இவங்க ரெண்டு பேரைத் தவிர வேறு யாராவுது ... வந்தனா நிறைய பேர் ட்ரெயினிங்கில் கலந்துக்கறாங்கன்னு சொன்னாளே?" ஜாஷ்வா, "நோ! வெளி ஆளுங்க அந்த கட்டிடத்துக்கு நுழையும் போது விசிடர்ஸ் பாஸ் எடுத்துட்டு போகணும். யாராவுது தொடர்ந்து வந்துட்டு போகணும்னா டெம்பரரி ஐ.டி கார்ட் இஸ்ஸ்யூ பண்ணுவாங்க. இப்போதைக்கு இவங்க ரெண்டு பேருக்குத்தான் இஸ்ஸ்யூ பண்ணி இருக்காங்க. இதை அங்கே இருக்கும் செக்யூரிடி ஏஜன்ஸிகிட்ட இருந்து தெரிஞ்சுகிட்டேன்." நித்தின், "எப்படி அவங்க மாங்க்ஸ் பாட் நெட் வேட்டைல இறங்கி இருக்காங்கன்னு சொல்றே?" ஜாஷ்வா, "இன்னைக்கு காலைல இருந்து நாலஞ்சு பேர் மூலமா தகவல் சேகரிச்சேன். தீபாவும் வந்தனாவும் AKBOT வேட்டையில் முக்கிய பங்கு ஏற்று இருக்காங்க. மாங்க்ஸ் பாட் நெட்டை சில மாதங்கள் வரைக்கும் எஃப்.பி.ஐயில் இருக்கும் ரெண்டு பேர் கண்காணிச்சுட்டு வந்து இருக்காங்க. ஒரு வருஷமா கண்காணிச்சதில் மாங்க்ஸ் பாட் நெட் மூலம் எந்த விதமான அபாயமும் இல்லைன்னு நம்பறாங்க. இப்போதைக்கு அவங்க ஸ்டார்ம் பாட் நெட்டை(Storm Bot Net)யும் க்ரெடிட் கார்ட் விவரங்களை திருடும் இன்னும் சில பாட் நெட்டுகளையும் தீவிரமா வேட்டை ஆடிட்டு இருக்காங்க. இந்த சமயத்தில் நியூஸ் பேப்பர்காரங்க அரசியல் வாதிகள் எல்லாமா சேர்ந்து சத்தம் போட்டதும் எதாவது செஞ்சாகணும். அதனால இந்தியாவை உதவிக்கு அழைத்து இருக்காங்க. முக்கியமா, முரளீதரன் தலைமையில் இயங்கிய வந்தனா-தீபா டீமை கேட்டு இருக்காங்க. இப்போ அவங்களுக்கு மாங்க்ஸ் பாட் நெட்டை பத்தி அவங்களுக்கு தெரிஞ்ச விவரங்களை கொடுத்துட்டு இருக்காங்க. கண்காணிக்கும் பணியையும் கண்டு பிடிக்கும் பணியையும் அவங்க இந்தியா போய் தொடரப் போறாங்க" இந்திய நண்பர்கள் இருவரும் மௌனமாக தலை குனிந்து அமர்ந்து இருந்தனர். ஜாஷ்வா, "நீங்க இந்தியாவில் மேலும் விசாரிச்சா இவங்க ரெண்டு பேரைப் பத்தி முழு விவரமும் தெரியும்" நித்தின், "எனக்கு அவ குடும்ப சரித்திரமே தெரியும். " சக்தி, "அப்படியா?" நித்தின், "எஸ், அவங்க அப்பாவும் ஒரு பிரபலமான லாயர். நேத்து சாயங்காலம் அப்பாகிட்ட பேசிட்டு இருந்தப்ப அவர் கிட்ட காஷுவலா கேட்டேன். எங்க அப்பாவுக்கு அவரை நல்லா தெரியும். நான் எதோ மழுப்பறேன்னு புரிஞ்சுட்டு அவர் என் கிட்ட அவளை விரும்பறையான்னு நேரடியா கேட்டார். இல்லை, இப்போதைக்கு ஃப்ரெண்டாதான் பழகிட்டு இருக்கேன்னேன். அவருக்கு ரொம்ப சந்தோஷம். நான் ஒரு வார்த்தை சொன்னா போதும் உடனே அவரே அவங்க வீட்டில் போய் பேசி முடிச்சுடுவார்" ஜாஷ்வா, "சக்தி, உன் முகத்தில் ஏமாற்றம் தாண்டவமாடுது. வந்தனா உனக்கு ரொம்ப பொருத்தமானவன்னு சஞ்சனா என் கிட்ட பத்து தடவையாவுது சொல்லிட்டா. நிச்சயம் உங்க ரெண்டு பேர் வீட்டிலும் இதுக்கு ஒரு அப்ஜெக்க்ஷனும் இருக்காது இல்லை?" சக்தி, "எங்க அம்மா என் இஷ்டத்துக்கு எப்பவும் குறுக்கே நின்னது கிடையாது" ஜாஷ்வா, "கய்ஸ், இட்ஸ் ஓ.கே. உங்க ரெண்டு பேருக்கும் அவங்களை பிடிச்சு இருக்கு. அவங்களுக்கும் உங்களை பிடிச்சு இருக்கு. அவங்களோட வேலை உங்க காதலுக்கு இடையூறா இருக்கக் கூடாது. மாங்க்ஸ் பாட் நெட்டால மட்டும் உங்க காதலுக்கு எந்த இடையூறும் வராது. ஆனா நம் ட்ரான்ஸ்ஃபர் ஆபரேஷன் அரசாங்கத்தின் கண்களில் சட்ட விரோதமான செயல். உடனே நம் ஆபரேஷனை இழுத்து மூடிடலாம்" இன்னும் சில நிமிடங்கள் மௌனமாக கழிந்தது. குறும்பு புன்னகையுடன் சக்தி, "ஜாஷ், நித்தின், மாங்க்ஸ் பாட் நெட்டை அவங்களால கண்டு பிடிக்க முடியும்ன்னு நினைக்கறீங்களா?" ஜாஷ்வா, "இதை பத்தி நாம் முன்னாடி ஒரு தடவை டிஸ்கஸ் பண்ணி இருக்கோம். நிச்சயமா கண்டு பிடிக்க முடியாது." சக்தி, "நீ என்னடா சொல்றே?" நித்தின், "முதல்ல அப்படித்தான் நானும் நினைச்சேன். ஆனா தீபாகூட பழகினதுக்கு அப்பறம் கொஞ்சம் சந்தேகமா இருக்கு ... பாரேன், வந்து ஒரே வாரத்தில் அவ எதையோ நோண்டி இருக்கா சர்வரில் இருந்து ஸெல்ஃப் டிஸ்ட்ரக்ட் மெஸ்ஸேஜ் போயிருக்கு. நிச்சயம் சர்வரில் இருந்து நேரடியா போற மெஸ்ஸேஜுன்னு தெரிஞ்சு இருக்கும். அதை வெச்சுட்டு சர்வரை ட்ராக் பண்ண முயற்சிக்கலாம் இல்லையா?" சக்தி, "நானும் அதை யோசிச்சேன். அவங்க நோண்டின கணிணிக்கு வரும் பல மெஸ்ஸேஜ்களுக்கு நடுவே ஒண்ணு சர்வரில் இருந்து போயிருக்கும். முதல்ல அதை அவங்க எதுன்னு கண்டு பிடிக்கணும். அதுக்கப்பறம், ஒரு மெஸ்ஸேஜை வெச்சுட்டு ஒரு மயிரையும் புடுங்க முடியாது. எந்த ஒரு கணிணியையும் அணுக நமக்கு குறைஞ்சது நாலு ரூட் இருக்கும். இது நாம் முதல்லயே மாங்க்ஸ் பாட் நெட்டை உருவாக்கும் போது ப்ளான் பண்ணினது. தவிர, Thanks to Joshua's insistence, மூணு ப்ராக்ஸிக்கு பின்னாடி நம் சர்வர் இருக்கு. அதை ட்ரேஸ் அவுட் பண்ண அவங்களுக்கு எக்கச்சக்கமான நேரடி மெஸ்ஸேஜஸ் தேவைப் படும். அத்தனையும் ஒரே நாளில் அனுப்பினதா இருக்கணும். ஏன்னா நாம் டெயிலி ப்ராக்ஸி சர்வரை மாத்தறோம். ஒரு நாள் உபயோகிச்ச ப்ராக்ஸி சர்வரை அடுத்த பதினஞ்சு நாளுக்கு உபயோகிக்கறது இல்லை. இதை எல்லாம் வெச்சு பாத்தா நம் சர்வரை அவங்களால் கண்டு பிடிக்க முடியும்ன்னு எனக்கு தோணலை" ஜாஷ்வா, "அது மட்டும் இல்லை. அவங்க எந்த வழியில் முயற்சி செய்யறாங்கன்னு நமக்கு இப்போ தெரிஞ்சுருச்சு. ஒரு வேளை ஒரே நாளில் நிறைய மெஸ்ஸேஜ் போச்சுன்னா அன்னைக்கே நாம் சர்வரையே மாத்திடலாம்!" நித்தின் (சற்று யோசித்த பிறகு சிரித்தபடி), "எஸ் நீ சொல்றது சரி ... It will be fun to play hide-and-seek with that devil (அந்த பிசாசு கூட கண்ணாமூச்சி ஆட ஜாலியா இருக்கும்) .. " சக்தி, "அப்படியே அவங்க நம் பாட் நெட் சர்வரை கண்டு பிடிக்கறாங்கன்னு வெச்சுக்குவோம். அவங்களுக்கு நம் ட்ரான்ஸ்ஃபர் ஆபரேஷனைப் பத்தி தெரிஞ்சுக்க முடியுமா?" நித்தின், "முடிஞ்சு போன ட்ரான்ஸ்ஃபர் ஆபரேஷனைப் பத்தி நாமே எங்கேயும் ஸ்டோர் பண்ணி வெக்கறது இல்லையே. அவங்களுக்கு எப்படி தெரியப் போகுது? ட்ரான்ஸ்ஃபர் ஆபரேஷன் எப்படி நடக்குதுன்னு முன் கூட்டியே தெரிஞ்சுட்டு, எந்த எந்த கணிணிகள் அதில் இன்வால்வ் ஆகியிருக்குன்னும் தெரிஞ்சுகிட்டு, ஆபரேஷன் நடக்கும் போது கண்காணிச்சாத்தான் கண்டு பிடிக்க முடியும்". சக்தி, "சோ, அப்படி பாட் நெட் சர்வரை கண்டு பிடிக்கும் பட்சத்தில் நாம்தான் பாட் நெட்டை உருவாக்கினோம் அப்படிங்கற விவரம் மட்டும்தான் வெளிய வரப் போகுது. இல்லையா?" ஜாஷ்வா, "நீ சொல்றது சரி சக்தி. நீ எந்த அளவுக்கு வந்தனாவை நேசிக்கறே முதல்ல அதை சொல்லு" சக்தி, "ரொம்ப. அவளை கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு ஆசைப் படறேன்" ஜாஷ்வா, "அப்ப இதை சொல்லு. நாளைக்கு உனக்கு மனைவியா வரப்போறவகிட்ட உன்னால் நீ செய்யறதை மறைக்க முடியுமா? இல்லை மனைவியானதுக்கு அப்பறம் நீ செஞ்சதை மறைக்க முடியுமா. உன் மனசாட்சி உறுத்தும்" சக்தி, "இப்ப ஆபரேஷனை இழுத்து மூடிட்டா மட்டும் உறுத்தாதா? மூணு மாசமா செஞ்சுட்டுதானே இருக்கோம்?" ஜாஷவா (சற்று நேர யோசனைக்கு பிறகு), "யூ ஆர் ரைட் சக்தி, நான் இந்த கோணத்தில் யோசிக்கலை"
சக்தி, "Besides, அடுத்த வாரம் ஒரு ட்ரான்ஸ்ஃபர் செய்யறதுக்கு ஒத்துகிட்டு இருக்கோம். எப்படியோ இறங்கியாச்சு இனி பாதில எதுக்கு விட்டுட்டு போகணும்? ஜாஷ்வா, நாங்க இங்கே இருக்கும் இந்த ஒரு வருஷத்துக்கு அப்பறம் நாம் ட்ரான்ஸ்ஃபர் ஆபரேஷனை தொடர முடியுமான்னு தெரியலை. நீயே அதை சொன்னே ஞாபகம் இருக்கா? இந்த ஒரு வருஷத்துக்கு அப்பறம் மாங்க்ஸ் பாட் நெட் மட்டும் தான் இருக்கும். இதன் மூலம் நடந்த ட்ரான்ஸ்ஃபர் ஆபரேஷன் யாருக்கும் தெரியப் போவது இல்லை. திரும்பிப் போனதும் நாமே வந்தனா-தீபா கிட்ட மாங்க்ஸ் பாட் நெட்டை நாங்கதான் உருவாக்கினோம்னு சொல்லிடலாம்" நித்தின், "சரணடையப் போறியா?" ஜாஷ்வா, "சக்தி சொல்ற லாஜிக் சரிதான். ஆனா எதுக்கு நீங்க சரணடையணும்? மாங்க்ஸ் பாட் நெட்டை என்ன சட்ட விரோதமான செயலில் ஈடு படுத்துனீங்க? அவங்களுக்கு தெரிஞ்ச அளவில் அதால் யாருக்கும் எந்த விதமான நஷ்டமும் இல்லை. எஸ், அதை வெச்சுட்டு நிறைய தீங்கு விளைவிக்கலாம். அப்படி எதுவும் செய்யாமல் பாதுகாத்து இருக்கீங்க. உங்களை பாராட்டுவாங்களே ஒழிய கைது செய்ய மாட்டாங்க"நித்தின், "What about the money we earn .. இந்த ட்ரான்ஸ்ஃபர் ஆபரேஷன் மூலம் நாம் சம்பாதிக்கும் பணம்? அதை எப்படி மறைக்கப் போறே?" சக்தி, "மாங்க்ஸ் பாட் நெட் மூலம் விளம்பர் ஈமெயில் அனுப்பி சம்பாதிச்சோம்ன்னு சொல்லலாம். ஒவ்வொரு டெபாசிட்டுக்கும் தகுந்தா மாதிரி ஈமெயில் அனுப்பினதுக்கு ஆதாரம் தயாரிக்கறது ஒண்ணும் பெரிய வேலை இல்லை. வேணும்ன்னா வருமான வரி கூட கட்டலாம்” ஜாஷ்வா, "இருந்தாலும் சக்தி. உன் மனைவிகிட்டயே மறைக்க வேண்டியதா இருக்கும். பரவால்லையா?" சக்தி, "ஜாஷ், வந்தனா என் கிட்ட எங்கே வேலை செய்யறான்னு மறைக்கலையா?. அப்படியே அவ R&AWவில் வேலை செய்யறதா சொன்னாலும் என்ன வேலைன்னு சொல்ல மாட்டா. R&AWவின் விதி முறைகள் அதுக்கு இடம் கொடுக்காது. நான் அதை புரிஞ்சுக்கத்தான் வேணும் இல்லையா? அவ வேலைக்காக அவளுக்கு ஒரு ஞாயம் எனக்கு ஒரு ஞாயமா? அவ அப்படி நினைப்பான்னு தோணலை. அவளும் என்னை புரிஞ்சிப்பா. நான் சொல்லாத, அவங்களுக்கு தெரியாத, அவங்களால கண்டு பிடிக்க முடியாத ஒண்ணு மூலம் நான் பணம் சம்பாதிச்சேன்னு அவ என் மேல் சந்தேகப் பட எந்த காரணமும் இல்லை. என்னால் யாருக்கும் எந்த நஷ்டமோ கெடுதலோ ஏற்படலைன்னு நான் சொன்னா அவ நிச்சயம் நம்புவா. நித்தின், நீ என்னடா சொல்றே" நித்தின், "உண்மையில் அந்த பணத்தை நான் எடுப்பேனான்னு தெரியலை. ஆனா ஒண்ணு. தீபா எதுக்கும் அசராத ஆளு. அவகிட்ட மறைக்கறதை விட உண்மையை சொன்னா பெரிசா எடுத்துக்கவே மாட்டான்னு தோணுது.” ஜாஷ்வா, “என்னது? பெரிசா எடுத்துக்க மாட்டாளா? பெரிய கேடியா இருப்பா போல இருக்கே” நித்தின், “நிஜமா! அவளோட மெண்டாலிட்டிக்கு எப்படி அவளை R&AWவில் வேலைக்கு சேர்த்துகிட்டாங்கன்னு எனக்கு குழப்பமா இருக்கு." சக்தி, "ஏன் ?" நித்தின், "போலீஸ் புத்தியை விட திருட்டு புத்திதான் அவளுக்கு அதிகம். அவளுக்கு எதையும் திருட வேண்டிய அவசியம் இல்லைங்கறது வேற விஷயம்" சிரித்த மற்ற நண்பர்கள் இருவரில் சக்தி, "இப்ப நீ இல்லையா? உனக்கு இவ்வளவு பணம் சம்பாதிக்க என்ன அவசியம்?" ஜாஷ்வா, "பட், நித்தின், அந்த மாதிரி புத்தியும் தேவைன்னு இப்ப போலீஸே நம்பறாங்க." நித்தின், "இல்லை ஜாஷ்வா, அவளா போய் R&AWவில் சேர்ந்து இருப்பான்னு எனக்கு தோணலை. எதோ ஒர் வற்புறுத்தலில் தான் போய் சேர்ந்து இருப்பா" ஜாஷ்வா, "ஸோ, எப்படி ஹாண்டில் பண்ணப் போறீங்க?" சக்தி, "இந்த ஒரு வாரமா எப்படி ஹாண்டில் பண்ணினமோ அதே மாதிரிதான். நான் அவ கிட்ட இதுவரைக்கும் நெருக்கமா பழகலை. இனி அப்படி இருக்கப் போறது இல்லை. ஆனா, எப்பவும் போல நான் அவ வேலையை பத்தி சொல்றதை நம்பலைன்னுதான் சொல்லப் போறேன். அவ கொஞ்சம் நெளிவா. பரவால்லை. திடீர்ன்னு அதை பத்தி கேட்காம இருந்தா நம் மேல் சந்தேகம் வரும்" நித்தின், "நீ சொல்றது சரி. நமக்கு தெரியும்ன்னு காண்பிச்சுக்க வேண்டாம். எப்பவும் போல நமக்கு தெரியாத மாதிரி கிண்டலடிச்சு கொஞ்சம் நெளிய விடலாம்" ஜாஷ்வா, "உண்மையில் நான் கொஞ்சம் கலங்கிப் போய் இருந்தேன். நீங்க ரெண்டு பேரும் எடுத்துக்கற விதம் சூபர்ப். ஐ அட்மையர் யூ சக்தி." நித்தின், "சரி, கொஞ்சமா தண்ணி அடிச்சுட்டு அவங்க கூட டின்னருக்கு போலாமா" சக்தி, "அவங்க பாதி டின்னர் முடிச்சு இருப்பாங்க. அட்லீஸ்ட் தண்ணியாவுது உருப்படியா அடிப்போம்" ஜாஷ்வா, "ஆமா, இன்னைக்கு கொஞ்சம் மட்டை ஆகலாம்"மூவரும் அவர்கள் விரும்பிய ட்ரிங்க்ஸை இரண்டு சிப்கூட எடுத்து இருக்கவில்லை. அதற்குள், "தேர் ... அங்கே பார் நான் சொன்னேன் இல்லையா? தண்ணி அடிச்சு மட்டை ஆகும் மூஞ்சிங்களை பாத்தியா? உக்காந்து எதாவுது பஸ்ஸில்ஸ் அல்காரிதம்ன்னு அரட்டை அடிச்சுட்டு ட்ரிங்க்ஸ் ஆர்டர் பண்ண மறந்து இருக்குங்கன்னு நான் சொன்னது சரி தானே?" என்ற சஞ்சனாவின் கிண்டலுக்கு இந்திய அழகிகள் இருவரும் சிரித்தபடி அவர்களின் மேசைக்கு வந்து சேர்ந்தனர். ஜாஷ்வா, "ஏய் என்னாச்சு உன் வெல்கம் டின்னர்? தலைக்கு 100 டாலர் டின்னர் ஃப்ரீயா கொடுக்கறான்னு சொல்லிட்டே இருந்தே?" சஞ்சனா, "நைட்டு பனிரெண்டரை வரைக்கும் இருக்குமாம். இப்ப ஒன்பதரை மணிதானே ஆகுது?" நித்தின், "இவ்வளவு நேரம் என்ன பண்ணிட்டு இருந்தீங்க?" தீபா, "ஃப்ரெஷன் அப் பண்ணி ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிட்டு வந்து இருக்கோம். பாத்தா தெரியலை?" நித்தின், "புளுகு மூட்டை. நான் உன்னைக் கேக்கலை ... " பேசாமல் அவள் முகத்தை பார்த்துக் கொண்டு இருந்த சக்தியிடம் வந்தனா, "சஞ்சனா இன்னைக்குதானே தீபாவை முதல் முதலா மீட் பண்ணறா. உக்காந்து அரட்டை அடிக்க ஆரம்பிச்சோம். நேரம் போனதே தெரியல" சஞ்சனா, "சரி, பாவம் பசங்க. கம்பெனி கொடுக்கலாம்ன்னு வந்தோம்" ஜாஷ்வாவுக்கு அருகே இருந்த ஒரே காலி நாற்காலியில் சஞ்சனா அமர்ந்தாள். சஞ்சனா, "அண்ணா, நீ எடத்தை காலி பண்ணு தீபா உட்காரட்டும். எதிரிலில் இருக்கும் கார்டன் ரொம்ப நல்லா இருக்குன்னு வந்தனா சொல்லிட்டு வந்தா. நீ அவளை கூட்டிட்டு போ" நித்தின், "ஏன் அவனை துரத்தறே?" சஞ்சனா, "தீபா உட்காரட்டும். இதுவரைக்கும் தீபா ஜாஷ்வாகூட பேசினது இல்லை அதனாலதான் .. " சக்தி தன் ட்ரிங்க்ஸ் க்ளாஸை எடுத்துக் கொண்டு எழுந்தான். வந்தனா அந்த மேசையில் இருந்த நொறுக்கு தீனி தட்டுகளில் ஒன்றை எடுத்துக் கொண்டு அவனுடன் சென்றதை சஞ்சனா வாஞ்சையுடன் பார்த்துக் கொண்டு இருந்தாள். நித்தினுக்கு அருகே அமர்ந்த தீபா ஜாஷ்வாவிடம் கைநீட்டி, "ஹாய் ஜாஷ்வா, நீங்க எனக்கு டென்ஸில் வாஷிங்க்டனை நினைவு படுத்தறீங்க" ஜாஷ்வா, "O thanks Deepa I am honored .. என் மனைவி முன்னால இதுக்கு மேல நீ எதாவது சொன்னா உன்னோட பாதுகாப்புக்கு நான் பொறுப்பு இல்லை" என்று சஞ்சனாவிடமிருந்து இடுப்பில் ஒரு கிள்ளல் வாங்கினான். தீபா, "சஞ்சனா நீ என்ன சொன்னாலும் சரி, உன் ஹஸ்பண்ட் ரியலி ஹாண்ட்ஸம்" சஞ்சனா, "ஏய், போதும் நிறுத்து ... நித்தின், என்னது இது விட்டா அடிமடியிலே கை வெக்கறா?" நித்தின், "எப்படியோ எனக்கு கொஞ்சம் ரிலீஃப். என்னை கொஞ்சம் கம்மியா தொந்தரவு பண்ணுவா" சட்டென தீபாவின் முகம் சற்று சுருங்கியது. அடுத்த கணம் சுதாரித்தவள், "ஹெல்லோ! அப்படி எல்லாம் தப்பு கணக்கு போடாதே. அடுத்த ரெண்டு நாளும் உனக்கு இருக்கு" அவளது ஒவ்வொரு செயலும் பேச்சும் அவனை மதி மயங்க வைத்தது. 'பிசாசே .. எவ்வளவு நாள் .. இல்லை .. எவ்வளவு நேரம் உன்னை இழுத்து கிஸ் அடிச்சு ஐ லவ் யூன்னு சொல்லாம இருக்க முடியும்ன்னு தெரியலை' என்று மனதுக்குள் அவளை திட்டினான். தீபா, "ஜாஷ், டெல் மி அபௌட் யூ ... நீங்க எங்க படிச்சீங்க?" நித்தின், "ஆரம்பிச்சுட்டியா?" என்றபடி எதிரில் பார்த்து, "இவளுக்கு இவளை பத்தி தம்பட்டம் அடிச்சுக்கணும். அதனால யாரைப் பார்த்தாலும் முதல்ல இதைத்தான் கேப்பா" தீபா, "இதில் தப்பு என்ன இருக்கு நித்தின்? ஒருத்தரை பத்தி தெரிஞ்சுக்க அவங்களோட படிப்புதான் நல்ல தொடக்கம். அதிலிருந்து அவங்களோட ஸ்டேட்டஸ்ஸை, பெடிக்ரீயை (pedigree - வம்சாவழி) எல்லாம் தெரிஞ்சுக்க முடியும்" ஜாஷ்வா, "உனக்கு பெரிய ஏமாற்றத்தை கொடுக்கப் போறேன். எனக்கு பெடிக்ரீன்னு சுத்தமா ஒண்ணும் இல்லை. ஹார்லம் பகுதியில் பிறந்து வளர்ந்த பல அனாதைகளில் நானும் ஒருத்தன்" தீபா முகத்தில் எப்போதும் தாண்டவம் ஆடும் குறும்பும் சிரிப்பும் மறைய, "வாட்? .. ஐ யம் சோ சாரி தட் ஐ ஆஸ்க்ட் (I am so sorry that I asked)” சஞ்சனா, "பரவால்லை. அவர் பெடிக்ரீ மட்டும் தான் அப்படி" தீபா, "என்ன?" சஞ்சனா, "அய்யா எம்.ஐ.டில படிச்சுட்டு பிடிவாதமா இங்கேதான் திரும்பி வருவேன்னு நியூ யார்க்கில் குப்பை கொட்டிகிட்டு இருக்கார்" தீபா, "வாட்! நீங்க எம்.ஐ.டி .. யூ மீன் மஸாஷுசட் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி (Massachusetts Institute Of Technology)? இது வரைக்கும் அந்த காலேஜை பத்தி கேள்வி பட்டதோட சரி. ஆனா அங்கே படிச்ச ஒருத்தரை இப்போதான் நேரில் பார்க்கறேன். இன்னோரு தடவை கை குடுங்க" என்று அவன் கையை பற்றி குலுக்கினாள் தீபா, “அந்த காலேஜைப் பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன் .. “ ஜாஷ்வா மேலோட்டமாக அக்கல்லூரியை பற்றியும் அதில் சேர்வதற்கு தேவையான தகுதிகளையும் விளக்கினான்.தீபா, “நீங்க பெரிய ஆள் ஜாஷ்வா” ஜாஷ்வா, "தாங்க்ஸ் ஃபார் தி காம்ப்ளிமெண்ட்ஸ் (Thanks for the compliments)”
சஞ்சனா, "யோவ், காம்ப்ளிமென்ட்ஸ் நீ படிச்ச காலேஜுக்கு உனக்கு இல்லை" ஜாஷ்வா, "நித்தின் உனக்கு ஒண்ணு தெரியுமா Behind every successful man there is a woman” நித்தின், "தெரிஞ்ச பொன் மொழிதான் ஆனா .. " ஜாஷ்வா, "இரு இரு நான் இன்னும் முடிக்கலை .. limiting his success” நித்தின், "Now, that I fully agree .. “ சொல்லி முடித்தபின் இருவரும் அதற்கேற்ற அளவுக்கு கிள்ளப் பட்டனர். சஞ்சனா, "எத்தனாவுது ட்ரிங்க் இது?" நித்தின், "இதுதான் முதல் ட்ரிங்க். நாங்க ஆர்டர் பண்ணி ஒரு சிப் அடிச்சு இருப்போம் நீங்க வந்துட்டீங்க. ஏன் கேக்கறே? ஜாஷ்வா எப்படி சரளமா உண்மை பேசறானேன்னு பாக்கறையா?" இம்முறை தீபாவிடம் இருந்து முதுகில் ஒரு குத்து. ஜாஷ்வா, "பட், தீபா உனக்கு ஒண்ணு தெரியுமா. இவனுக்கு இன்னைக்கு தண்ணி அடிக்க மூடே இல்லையாம். நான் கூட்டிட்டு வந்ததுக்கு அப்பறம் இப்பதான் சார் மூஞ்சில கொஞ்சம் சிரிப்பு வந்து இருக்கு" நித்தின், "எட் டூ ப்ரூடே" (Et tu Brute? Were the Latin words written by Shakespear in his Julius Ceasar... meaning You Too Brutus ..அதாங்க, நம்ம சிவாஜிசார் அப்பறம் ரஜனிசார் கூட ஜூலியஸ் ஸீஸர் நாடகத்தில் கடைசியா நண்பன் ப்ரூடஸ் கிட்ட குத்து படும் போது சொன்ன வரி! அவங்க யூ டூ ப்ரூடஸ் அப்ப்டின்னு சொன்னாங்க. ஆனா ஷேக்ஸ்பியர் தன் நாடகத்தில் அந்த லத்தீன் மொழி வாக்கியத்தை அப்படியே எழுதி இருந்தார்) தீபா, "தெரியும். ஆனா காண்பிச்சுக்க மாட்டான். அது சரி, எம்.ஐ.டில படிச்சுட்டு ஏன் பாங்க்கில் டேட்டா பேஸ் அட்மின் வேலை?" ஜாஷ்வா, "ஈஸ்ட் கோஸ்ட்டில் (East Coast) எனக்கு கிடைச்ச வாய்ப்புகள் கம்மி. அதில் அதிக சம்பளம் கிடைச்ச வேலையில் சேர்ந்தேன்" நித்தின், "For God’s sake தீபா, உனக்கு எதுக்கு அதல்லாம்?” தீபா, "ம்ம்ம் .. நான் கட்டிக்க போறவனோட உடன் பிறவா அண்ணன் என்ன பண்ணிட்டு இருக்கார்ன்னு எங்க அப்பா அம்மா கேட்டா சரியா பதில் சொல்லறதுக்காக கேட்டேன்" என்று போட்டு உடைத்தாள். எதிரில் இருந்த தம்பதியினர் அமைதியாக பார்த்துக் கொண்டு இருக்க, ஒரு கணம் உறைந்து போன நித்தின் மறுகணம் அவளை இழுத்து அவள் இதழ்களில் இதழ் பதித்தான். எதிரில் இருப்போரை பதட்டத்துடன் பார்த்த தீபாவின் இமைகள் சில நொடிகளில் மூடின .. பல நொடிகள் தொடர்ந்த முத்ததை முடித்தவன், "பிசாசே .. ஐ லவ் யூ" என்றான். வெட்கத்தில் முகம் சிவந்து தீபா தலை குனிந்தாள். சஞ்சனா (ஜாஷ்வாவை பார்த்து), "இவனுக்கெல்லாம் ரொமான்ஸ் பண்ண வருமான்னு சந்தேகமா இருந்துது. பரவால்லை, தம்பிக்கு ஒரு அளவுக்கு ட்ரெயினிங்க கொடுத்து வச்சு இருக்கே .. " தலை நிமிர்ந்த தீபா நித்தினை ஒரக் கண்ணால் பார்த்தபடி, "ஆனா போன வாரம் முழுக்க கடுப்பு ஏத்தினான் .. But, he made me suffer the whole week” என்றாள் நித்தின், "பின்னே? வண்டி வண்டியா புளுகினா?" தீபா சட்டென நிமிர்ந்து, "பாரு நித்தின். நானும் வந்தனாவும் ஒரு முடிவுக்கு வந்து இருக்கோம். என்னைப் பத்தி, நான் எங்கே வேலை செய்யறேங்கறதைப் பத்தி எல்லாம் உன் கிட்ட நான் மறைக்க விரும்பல. ஆனா என்ன வேலைன்னு மட்டும் நீ என்னை கேக்கக் கூடாது. உண்மையில் நான் எல்லார்கிட்டயும் மறைக்கற விஷயத்தைக் கூட நான் உங்கிட்ட பகிர்ந்துக்க விரும்பறேன் .. " நித்தின், "சரி, எங்கே வேலை செய்யறே?" தீபா, "R&AW - Research And Analysis Wing” நித்தின் முகத்தில் வியப்பை வரவழைத்துக் கொண்டு, "ஹேய், யூ மீன் CIA மாதிரி இந்திய உளவு நிறுவனமா?" தீபா, "ஏய், ஆச்சர்யப்படற மாதிரி ரொம்ப கஷ்டப்படாதே. நீ ஏற்கனவே இந்த மாதிரி ஒரு நிறுவனம்ன்னு யூகிச்சு இருப்பேன்னு எனக்கு தெரியும். பட், நீ சொல்றது ஒரு அளவுக்கு சரி. வெளிநாட்டில் உளவு வேலை பார்க்கறதை தவிர மத்த சில பிரிவுகளும் R&AWவில் இருக்கு. NTRO அப்படின்னு ஒரு நிறுவனம் R&AWவுக்கு கீழ இருக்கு. அதில் சைபர் க்ரைம்மை தடுக்கறதுக்குன்னு ஒரு பிரிவு இருக்கு. அதில் தான் நானும் வந்தனாவும் வேலை செய்யறோம்" நித்தின், "அப்பா, இவ்வளவு டீடெயில் கொடுக்கறே? இப்ப நம்பறேன்" தீபா, "ஆனா, இதுக்கு மேல சொல்ல மாட்டேன்" நித்தின், "பரவால்லை. உனக்கு அப்படி விதி முறைகள் இருக்கும்ன்னு எனக்கு புரியுது. சரி, எல்லார்கிட்டயும் மறைக்கற விஷயம்ன்னு சொன்னியே அது என்ன" ஜாஷ்வா, "நாங்க ரெண்டு பேரும் கொஞ்சம் வெளியில் போறோம் நீங்க தனியா பேசுங்க .." தீபா, "நோ ஜீஜாஜி! என் ஃபேமிலியில் வந்தனா ஃபேமிலியில் எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம் தான்" நித்தின், "அக்காவோட புருஷனுக்கு ஹிந்தியில் ஜீஜாஜி" முகம் மலர்ந்த சஞ்சனா, "சரி சொல்லு .. " தீபா, "நாம் எல்லாம் ஒண்ணா ஒரு பெரிய டேபிளில் உக்காந்துட்டு பேசலாம். ஜாலியான சமாசாரம் .. நான் வந்தனாவை கூப்படறேன்" என்றபடி கைபேசியில் வந்தனாவை அழைத்தாள்.வெளியில் அந்த அழகான தோட்டத்துக்கு முதலில் வந்த ஜோடி என்ன செய்தது என்று பார்ப்போம் ... அங்கு இருந்த பெஞ்ச் ஒன்றில் சக்தி அமர்ந்தான். வந்தனாவின் கையில் இருந்த நொறுக்கு தீனி தட்டை இருவருக்கும் இடையே வைத்து அதிலிருந்து இருவரும் எடுத்து கொறித்த படி இருந்தனர். நடு நடுவே சக்தி தன் ட்ரிங்க்ஸ் க்ளாஸில் இருந்து சிப்பிக் கொண்டு இருந்தான். மௌனத்தை கலைத்த வந்தனா, "ஏன் ஜாஷ்வா அப்ப ரொம்ப டல்லா இருந்தார்?" சக்தி,"அவன் வேலை செய்யற இடத்தில் வேறு யாரோ முடிக்க வேண்டியதை இவன் தலையில் கட்டி இருக்காங்க. அதைத்தான் இவ்வளவு நேரம் எங்ககிட்ட பொலம்பி தீர்த்தான்" என்று உதாசினமாக தன் ட்ரிங்க்ஸில் கவனம் செலுத்தியபடி சொன்னான். வந்தனா, "அப்பறம் எப்படி அரை நாள் லீவ் போட்டுட்டு வர முடிஞ்சுது?" சக்தி, "அந்த வேலை அடுத்த வாரம். ஏற்கனவே மாசக் கடைசில வேலை கொஞ்சம் அதிகமா இருக்கும். அதுக்கு மேல் எக்ஸ்ட்ரா வேலைன்னு சொல்லிட்டு இருந்தான்" வந்தனா, "ஏன் மாசக் கடைசில வேலை அதிகமா இருக்கும்?" சக்தி, "ஃபினான்ஷியல் இன்ஸ்டிட்யூஷன்ஸ் (Financial Institutions) எல்லாத்திலயும் அப்படித்தான். பாங்க், நாங்க ஆன்-சைட் வந்து இருக்கும் இன்ஷ்யூரன்ஸ் கம்பெனி இதில் எல்லாம் கணக்குகளை நேர் செய்யறது, வாடிக்கையாளர்களுக்கு அவங்க கணக்குக்கான ஸ்டேட்மென்ட் அனுப்பறது இதெல்லாம் மாசக் கடைசில தான் நடக்கும். எங்க ரெண்டு பேருக்கும் கூட அடுத்த வாரக் கடைசில தலைக்கு மேல வேலை இருக்கும்" என்று தான் அடுத்த வாரம் ட்ரான்ஸ்ஃபர் ஆபரேஷனில் மூழ்கி இருக்கப் போவதற்கு இப்போதே ஒரு காரணத்தை உருவாக்கினான். வந்தனா, "எனக்கு இதெல்லாம் ஒண்ணுமே தெரியாது. உன் வேலை இன்டரெஸ்டிங்கா இருக்குமா?" சக்தி, "ரொம்ப இன்டரெஸ்டிங்க்ன்னு சொல்ல முடியாது. ஆனா போரடிக்காது" தொடர்ந்து அவளை சீண்டுவதற்காகவே, "உன் வேலை எப்படி இருக்கும்?" வந்தனா, "ம்ம்ம் ... என் வேலையும் அப்படித்தான்" சக்தி, "ஆனா என்ன வேலைன்னுதான் சொல்ல மாட்டே. பரவால்லை விடு" வந்தனா, "ஷக்தி, நான் எங்கே வேலை செய்யறேன்னு நான் சொன்னதை நீ இன்னும் நம்பலை இல்லையா?" சக்தி, "உண்மையா இருந்தா நிச்சயம் நம்பி இருப்பேன்" வந்தனா, "ஷக்தி, நான் எங்கே வேலை செய்யறேன்னு என் குடும்பத்துக்கு மட்டும்தான் சொல்லி இருக்கேன். அவங்களுக்கே குறிப்பா என்ன வேலை செய்யறேன்னு நான் சொல்ல முடியாத நிலைமையில் இருக்கேன். அவங்களும் கேக்க மாட்டாங்க" பிறகும் மௌனம் காத்த சக்தியை பார்த்து, "என்னைப் பத்தி, என் குடும்பத்தைப் பத்தி, எதுவுமே, உன் கிட்ட நான் மறைக்க விரும்பலை ஷக்தி. இன் ஃபாக்ட், என்னோட இவ்வளவு நாள் வாழ்க்கையை பத்தி ஒண்ணு விடாம உன் கிட்ட எல்லாத்தையும் சொல்லணும்ன்னு இருக்கு ஷக்தி" பிறகும் சக்தி மௌனம் காக்க அவன் கையை பற்றி .. "ப்ளீஸ் எதாவது சொல்லேன் .. " இடது தோளை பெஞ்சில் சாய்த்து அவளை பார்த்தபடி அமர்ந்து இருந்த சக்தி இருவருக்கும் நடுவே இருந்த நொறுக்கு தீனி தட்டை எடுத்து அவனுக்கு பின் புறம் வைத்தான். பிறகு அவளிடம், "எங்க அப்பா உயிரோட இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்ன்னு யோசிச்சேன்" வந்தனா, "ஏன்?" சக்தி, "ஏன்னா அவருக்கு நல்லா ஹிந்தி பேச தெரியும்"
வந்தனா, "ஸோ?" சக்தி, "உங்க வீட்டுக்கு உன்னை பெண் கேட்டு வரும் போது, அவங்க கூட பேசறதுக்கு வசதியா இருந்து இருக்கும்" சில கணங்கள் அளவிட முடியாத சந்தோஷத்துடன் அவனைப் பார்த்தவள் நகர்ந்து வந்து விரித்திருந்த அவன் கைகளில் தஞ்சம் புகுந்தாள்.அவனுக்கு பின் புறம் இருந்த நொறுக்கு தீனி தட்டை பார்த்த வந்தனா சக்தியின் தோளில் புதைத்து இருந்த முகத்தை எடுத்து, "எல்லாத்தையும் முன் கூட்டி ப்ளான் பண்ணிட்டுத்தான் பேசுவையா?" சக்தி, "பின்னே? இல்லைன்னா இந்நேரம் எல்லாம் கீழ விழுந்து இருக்கும், என் ட்ரிங்க் இன்னும் பாதி இருக்கு. அதை முடிக்கறதுக்கு நொறுக்கு தீனி?" மறுபடி அவனை இறுக்கி அணைத்தவளின் முகத்தை நிமிர்த்தி, "உன்னை பாத்த முதல் நாளே சொல்லணும்ன்னு இருந்தேன் .. ஐ லவ் யூ" வந்தனா, "நான் நிச்சயம் சொல்லி இருப்பேன். நீதான் தள்ளி தள்ளி போனே" சக்தி, "என்னடா இப்படி ஒரு புளுகு மூட்டையா இருக்காளேன்னு யோசிச்சுட்டு இருந்தேன்" வந்தனா, "நான் எங்கே வேலை செய்யறேன் தெரியுமா?" சக்தி, "வெய்ட் வெய்ட். ... உன் ஃபேமலிக்கு மட்டும் தெரிஞ்சதுன்னு சொன்னே" வந்தனா, "ம்ம்ம் .. ரோட்ல போறவனை கட்டி பிடிக்கற பழக்கம் எனக்கு இல்லை" என்று அவள் சொல்லி முடிக்க அவள் முகத்தை இரு கைகளில் ஏந்தி தன்னிடம் இழுத்தான். எதற்கு இழுக்கிறான் என்று புரிந்தவள் கண் மூடிய வண்ணம் நெருங்கினாள். இருவரின் இதழ்கள் சேர்ந்து தொடங்கிய முத்தம் சில நிமிடங்கள் நீடித்தது. விடுபட்ட போது வெட்கத்தில் முகம் சிவந்தவள் மறுபடி அவன் தோளில் சாய்ந்தாள்.

No comments:

Post a Comment