Saturday, January 24, 2015

செக்மேட் - சைபர் கிரைம் திரில் தொடர் - பாகம் - 10


6 July 2008 Around 2:00 PM A Resort near Niagara Falls, U.S.A ஜூலை 6 2008 ஞாயிறு மதியம் 2 மணி அளவில் நயாகரா நீர் வீழ்ச்சி அருகே இருக்கும் ஒரு ரிசார்ட் நால்வரும் கடந்த இரண்டரை நாட்கள் நேரம் போனது தெரியாமல் கழித்து அன்று மாலை நியூ யார்க் புறப்படுமுன் மதிய உணவுக்கு அமர்ந்து இருந்தனர். ஜாஷ்வா, "எப்படி இருந்தது லாங்க வீக் எண்ட்?"
நித்தின், "ரொம்ப நல்லா இருந்துது ஜாஷ் .. " சக்தி, "இட் வாஸ் க்ரேட் மேன் " சஞ்சனா, "நாங்க ரெண்டு பேரும் இதுக்கு முன்னாடி ஒருதரம் வந்து இருக்கோம். நான் தான் சஜ்ஜஸ்ட் பண்ணினேன் இங்க போலாம்ன்னு" சக்தி, "தாங்க்ஸ்டா நான் ரொம்ப நல்லா எஞ்சாய் பண்ணினேன்" ஜாஷ்வா, "நித்தின், சக்தி, உங்க கமிஷனை டெபாசிட் பண்ணறதுக்கு ரெண்டு அக்கௌண்ட் ஓபன் பண்ணி இருக்கேன். என் கஸின்ஸ் பேர்ல. அவங்க கை எழுத்து போட்டதோட சரி. அவங்களுக்கு அக்கௌண்ட் நம்பர்கூட தெரியாது. சோ, உங்க பணத்தை பத்தி எந்த கவலையும் வேண்டாம். நான் கூட என் கமிஷனை அப்படி ஒரு அக்கௌண்டில டெபாசிட் பண்ணப் போறேன். இது தான் உங்க அக்கௌண்ட் நம்பர், நெட் பாங்கிங்க் லாக் இன் ஐடி, அப்பறம் பாஸ்வர்ட். இது உங்க ஏ.டி.எம் கார்ட். எடுக்கும் போது நிறைய பணம் எடுக்கணும்ன்னா நாலஞ்சு தடவையா கொஞ்சம் கொஞ்சமா எடுங்க" நித்தின், "இப்போதைக்கு நான் அதை தொடக்கூட போறது இல்லை" ஜாஷ்வா, "ஏன் ?" சக்தி, "எங்க செலவுக்கு வேணுங்கற அளவு எங்களுக்கு அல்லவன்ஸ் வருது. அதுவே போதும்" ஜாஷ்வா, "அடுத்த வாரம் புதன் நாம் மூணு பேரும் ஹாஃப்மனையும் ஆண்டர்ஸனையும் டின்னர்ல மீட் பண்ணறோம் மறந்துடாதீங்க" சக்தி, "ஓ.கே. அப்பறம் பணம் கைக்கு வந்ததுன்னு அவனுக கிட்ட இருந்து கன்ஃபர்மேஷன் வந்துதா" ஜாஷ்வா, "பணம் கைக்கு வந்து சேரலைன்னா மட்டும் காண்டாக்ட் பண்ண சொல்லி இருக்கேன். எதுக்கு அனாவிசியமான தொடர்பு?" நித்தின், "இல்லை .. இவ்வளவு பணம் .. ட்ரான்ஸ்ஃபர் பண்ணின எங்களுக்கு த்ரில்லிங்கா இருந்துது. சரியா போய் சேந்துதான்னு தெரிஞ்சுக்கத்தான் சக்தி கேட்டான்" ஜாஷ்வா, "ஃப்ரெண்ட்ஸ்! இந்த இருநூறு மில்லியன் (இருபது கோடி) டாலர் அவங்க மாச வருமானத்தில் ஒரு சின்ன பகுதி. மறந்துடாதீங்க. பணம் போய் சேரலைன்னா கூட உடனே நம்மை காண்டாக்ட் பண்ண மாட்டாங்க. ஆனா இன்னும் ஒரு நாலு அஞ்சு ட்ரான்ஸ்ஃபருக்கு அப்பறம் யூ.எஸ்ல இருந்து போற எல்லா பணத்தையும் ட்ரான்ஸ்ஃபர் பண்ணி கொடுக்க சொல்லி கேப்பாங்க" நித்தின், "அப்படி கேட்டா?" ஜாஷ்வா, "நம்ம வசதியைப் பொறுத்து அப்பறம் யோசிக்கலாம்"7 July 2008 to 12 Aug 2008 ஜூலை 7 2008 முதல் ஆகஸ்ட் 12 2008 வரை ஜூலை 7ம் தேதியில் இருந்து வந்தனா-தீபா இருவரும் எஃப்.பி.ஐ நடத்திய ஆபரேஷன் பாட் ரோஸ்ட் 2 (Operation Bot Roast II) என்ற பாட் நெட் வேட்டையில் இந்தியாவில் இருந்தபடி பங்கேற்றனர். அமெரிக்க வலை தளங்களை மட்டுமே AKBOT தாக்கி வந்ததால் அதனை இயக்குபவர்கள் அமெரிக்காவில் இருக்கக் கூடும் என்ற எஃப்.பி.ஐயின் கணிப்பு முதலில் தீபாவின் ஒரு கண்டு பிடிப்பால் உடைத்து எறியப் பட்டது. அதன் பிறகு வேட்டை சூடு பிடித்தது. வந்தனாவிடம் அவளுக்கு உதவ, அமெரிக்காவில் இருந்து கொண்டு பணியாற்றிய ஒரு குழு ஒப்படைக்கப் பட்டது. எஃப்.பி.ஐ குழுவும் தீபா-வந்தனா ஜோடியும் நிமிடத்துக்கு நிமிடம் தகவல் பரிமாறிக் கொண்டு பணியாற்றினர். அந்த பாட் நெட்டை இயக்கும் சர்வர் கணிணிகள் மலேசியாவில் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டது. அடுத்த கூட்டு முயற்சியில் அந்த பாட் நெட்டுக்கு நியூசிலாந்து நாட்டில் இருந்து ஆணைகளை வருவதை கண்டு பிடித்தனர். தொடங்கிய ஒரே மாதத்தில் வேட்டை வெற்றிகரமாக முடிந்தது. அந்த பாட் நெட்டை இயக்கி வந்த எட்டு பேர் கொண்ட கூட்டத்தையும் அதன் தலைவனான் AKILL என்ற சந்தேகப் பெயரில் இயங்கி வந்த ஓவன் வாக்கர் (Owen Walker) என்ற பதினெட்டு வயது வாலிபனையும் நியூசிலாந்து போலீசாரும் எஃப்.பி.ஐ ஏஜண்டுகளும் சேர்ந்து கைது செய்தனர். ஒவன் வாக்கருக்கு அவன் தனது குற்றங்களை எல்லாம் ஒப்புக் கொண்டு எஃப்.பி.ஐ மற்றும் இன்டர்போலுக்கு உதவினால் அவர் சிறை தண்டனை குறைக்கப் படும் என்ற நிபந்தனை விதிக்கப் பட்டது. வேறு வழி இன்றி அவன் அதை ஏற்றான். அடுத்த இரண்டு வாரங்கள் பல அண்டர்க்ரௌண்ட் சைபர் க்ரைம் விவரங்கள் எஃப்.பி.ஐக்கு தெரிய வந்தன. அவன் பிடி பட்டதை போலீஸாரும் எஃப்.பி.ஐயும் பறை சாற்றியதன் பலனால் அந்த விசாரணையைப் பற்றி வெளி உலகிற்கு தெரிய வந்தது. பத்திரிகை நிருபர்கள் ஓவன் வாக்கரை அணுக அவர்களுக்கு அவன் கொடுத்த ஒரு பேட்டியில் அவன் சொன்ன ஒரு திடுக்கிடும் தகவல்: "என் AKBOT ஒண்ணும் அவ்வளவு சக்திவாந்தது இல்லை போலீஸ் ஒழுங்கா வேலை செஞ்சு இருந்தா ரொம்ப நாளைக்கு முன்னாடியே பிடிச்சு இருக்கலாம். மாங்க்ஸ் பாட் நெட் அப்படின்னு ஒரு பாட் நெட் இருக்கு. அதில இப்ப சுமார் ஒரு லட்சம் கணிணிகள் தான் இருக்கு. ஆனா அந்த பாட் நெட்டை மாதிரி ஒரு சக்தி வாய்ந்த பாட் நெட்டை நான் இது வரைக்கும் பாத்தது இல்லை. என்னோட AKBOT உள்பட நான் இது வரைக்கும் பாத்த பாட் நெட் எல்லாம் ஆக்ரமிச்ச கணிணிகளில் இருக்கும் தகவல்களை சேகரிக்கவும் அந்த கணிணிகளில் இருந்து இணையம் மூலம் மெஸேஜ் அனுப்பவும்தான் முடியும். ஆனா இந்த மாங்க்ஸ் பாட் நெட் வைரஸ் என்ன வேலை வேணும்னாலும் செய்யும். அதை கண்டு பிடிக்கறது அசாத்தியம். அந்த பாட் நெட்டை இயக்கறவங்க நினைச்சா எந்த நாட்டையும் அவங்க காலடில விழ வைக்க முடியும்" இந்த தகவல் உலகில் இருக்கும் பல மூலைகளுக்கு சென்றது. மாங்க்ஸ் பாட் நெட்டைப் பற்றி இதற்கு முன்னரே அறிந்து இருந்தாலும் அதனை உருவாக்கியவர்களின் நேர்மையான அணுகு முறையை (இது ஜாஷ்வாவை சந்திப்பதற்கு முன்) அறிந்து கொண்ட எஃப்.பி.ஐ அவர்களது பாட் நெட்டில் அதிக கவனம் செலுத்தவில்லை. ஒரு முறை கள்ளச் சந்தையில் இருந்து தகவல் அனுப்பவதைப் போல் அதனுக்கு விலை பேசியும் பார்த்திருந்தார்கள். நித்தினும் சக்தியும் பாட் நெட்டை விற்க விருப்பமில்லை என்று பதிலளித்து இருந்தனர். அவர்கள் உருவாக்கியது அவர்களையும் அறியாமல் தீய சக்திகளின் கைகளுக்கு போய் சேர விருப்பமில்லை என்பதை மறைமுகமாக அறிவித்து இருந்தனர். அதனால், மாங்க்ஸ் பாட் நெட்டின் மூலம் விளம்பர ஈமெயில்களைத் தவிர வேறு எதாவது நடக்கின்றதா என்று மட்டும் எஃப்.பி.ஐ (முடிந்தவரை!) கண்காணித்து வந்தது. இருப்பினும், ஓவன் வாக்கர் மாங்க்ஸ் பாட் நெட்டின் மகிமையை உலகுக்கு வெளிச்சப் படுத்தியபின் மேலும் கேள்விகள் எழும் என்ற காரணத்தினால் மாங்க்ஸ் பாட் நெட்டை வேட்டை ஆட ஒரு குழு அமைத்தது. 12 August 2008 5:00 PM Central Park, New York ஆகஸ்ட் 12 2008 மாலை 5 மணி சென்ட்ரல் பார்க் பூங்கா, நியூ யார்க் டைம் வார்னர் செண்டரில் இருந்த பௌச்சன் பேக்கரி ரெஸ்டாரண்டில் கப் கேக் (actually muffin, and it's a grave injustice to it to call it cup cake!) மற்றும் காஃபியை வாங்கிக் கொண்டு எதிரில் இருந்த சென்ட்ரல் பார்க்கில் ஒரு பெஞ்சில் அமர்ந்தனர். மூவரின் மனதிலும் ஒரு பயம் கலந்த பட படப்பு; த்ரில்லிங்கான உணர்வு என்று கூட சொல்லலாம். சக்தி, "எஃப்.பி.ஐயோட தேடுதல் எவ்வளவு சீரியஸா இருக்கும்?" ஜாஷ்வா, "தெரியலை. ஆனா. அவங்களுக்கு மாங்க்ஸ் பாட் நெட்டில் அவ்வளவு ஆர்வம் இருக்கற மாதிரி தெரியலை. ஆனா நீங்க ரெண்டு பேரும் உங்க பாட் நெட்டை பத்தி தம்பட்டம் அடிச்சுக்காம இருந்து இருந்தா இந்த பிரச்சனையே வந்து இருக்காது" நித்தின், "சாரி ஜாஷ், அப்ப எங்களுக்கு பெருசா சாதிச்ச மாதிரி ஒரு ஃபீலிங்க் ... இன் ஃபாக்ட் நாங்க சாதிச்சது பெரிசு தான் .. வெளில சொல்லி பெருமை படாம இருக்க முடியலை" சக்தி, "உன் அளவுக்கு எங்களுக்கு மெச்சூரிடி இல்லை. விடு, ஏன் எஃப்.பி.ஐக்கு ஆர்வம் இல்லைங்கறே" ஜாஷ்வா, "இதை விட பெரிய தலைவலிகள் அவங்களுக்கு இருக்கு. இது வரைக்கும் மாங்க்ஸ் பாட் நெட்டை பத்தி ஒரு கம்ப்ளெயிண்ட்டும் அவங்களுக்கு போகலை." சக்தி, "அது சரி. நாம் க்ரெடிட் கார்ட் தகவல் திருட்டு மாதிரி எதாவுது பண்ணி இருந்தாதானே நம்மை பத்தி கம்ப்ளெயிண்ட் போகும்" நித்தின், "What about the companies we use to transfer money? (நாம் ட்ரான்ஸ்ஃபர் பண்ணுவதற்கு உபயோகிச்சுக்கற கம்பெனிகள் கம்ப்ளெயிண்ட் பண்ணி இருந்தா?" ஜாஷ்வா, "இது வரைக்கும் மூணு ட்ரான்ஸ்ஃபர் தான் பண்ணி இருக்கோம். அப்படி கம்ப்ளெயிண்ட் பண்ணி இருந்தா முதல்ல எங்க வங்கிக்கு, ஹாஃப்மனுக்குத்தான் தகவல் வரும். அந்த மூணு கம்பெனிகளுக்கும் ஒரு தகவலும் தெரியாது" சக்தி, "ஜாஷ், நீ எங்களை கண்டு பிடிச்ச மாதிரி அவங்களும் பாட் நெட்டை மானிடர் பண்ணி இருந்தா?" ஜாஷ்வா, "நான் உங்களை கண்டு பிடிச்சது என் லக். உங்க சர்வரை மூணு நாலு மணி நேரம் ஸ்டாட்டிக் ஐ.பி மூலம் கனெக்ட் பண்ணி வெச்சு இருந்தீங்க. உங்க கவன குறைவினால் என்னால கண்டு பிடிக்க முடிஞ்சுது. அவங்களும் அதை நோட் பண்ண முடிஞ்சு இருக்கும். ஆனா, அசால்டா விட்டுட்டாங்கன்னு நினைக்கறேன். இல்லைன்னா இந்நேரம் உங்க ரெண்டு பேரையும் தேடி வந்து இருப்பாங்க" சக்தி, "பழைய தகவல் பரிமாற்றங்களை அவங்க ஸ்டோர் பண்ணி வெச்சு இருந்தாங்கன்னா?" ஜாஷ்வா, "பாட் நெட்டில் நடக்கும் தகவல் பரிமாற்றங்களை மட்டும் தனியா ஸ்டோர் பண்ணி வெச்சு இருந்தா இந்நேரம் சுலபமா உங்களை கண்டு பிடிச்சு இருக்க முடியும். இணையத்தில் நடக்கும் எல்லா தகவல் பரிமாற்றங்களையும் ஒண்ணா கலந்து ஸ்டோர் பண்ணி வெச்சு இருப்பாங்க என்பது என் யூகம்" நித்தின், "அதை வெச்சுட்டு நம்மை ட்ரேஸ் ஔட் பண்ணறது முடியாத ஒரு காரியம்" சக்தி, "அப்படி நாம் அசால்டா இருக்க கூடாது. எதுக்கும் எந்த வழியில் எல்லாம் நம்மை அவங்க ட்ரேஸ் ஔட் பண்ண முடியும்ன்னு நாம் மூணு பேரும் தனி தனியே யோசிச்சு நோட்ஸ் எழுதலாம். நாளைக்கு மூணு பேர் நோட்ஸ்ஸையும் ஒப்பிட்டு பாக்கலாம். எங்கேயாவுது ஒரு ஓட்டை இருந்தா அதை உடனே அடைக்கணும்"" ஜாஷ்வா, "நீ சொல்றதுதான் சரி. ... நாளைக்கு மீட் பண்ணலாம். சஞ்சனாவை ஒரு கான்சர்ட்டுக்கு கூட்டிட்டு போறதா சொல்லி இருந்தேன். நான் புறப்படறேன்"14 August 2008 10:00 AM ஆகஸ்ட் 14 2008 காலை 10 மணி முரளீதரன் வந்தனாவின் கை பேசியில் அழைத்தார், முரளீதரன், "வந்தனா? நீங்க ரெண்டு பேரும் ரொம்ப பிரபலம் ஆயிட்டீங்க" வந்தனா, "கிவ் மீ அ மினிட் நான் கான்ஃப்ரென்ஸ்ல தீபாவையும் கனெக்ட் பண்ணறேன்" தீபா, "சொல்லுங்க சார் ... " முரளீதரன், "நீங்க ரெண்டு பேரும் ரொம்ப பிரபலம் ஆயிட்டீங்க" தீபா, "நாங்க ரெண்டு பேரும் இன்னும் அதிகமா பிரபலம் ஆக வேண்டியவங்க சார். ஆனா வெளில சொல்லிக்க முடியாத இந்த வேலைனால எங்களை பத்தி யாருக்கும் தெரியறது இல்லை. பரவால்லை, பரம் வீர் சக்கரம் மாதிரி ஒரு ப்ரெஸிடண்ட் மெடலாவுது கிடைக்குமா சார்?" வந்தனா, "ஏய், போதும் நிறுத்து .. சொல்லுங்க சார், எதுக்கு கூப்பிட்டீங்க?" முரளீதரன், "உங்க ரெண்டு பேர் கிட்டயும் பாஸ்போர்ட் இருக்கா?" வந்தனா, தீபா இருவரும், "இருக்கு சார்" முரளீதரன், "சரி, pack your bags and get ready for two week US trip (இரண்டு வார அமெரிக்க பயணத்துக்கு தயாராகுங்க)" வந்தனா, "எதுக்கு?" முரளீதரன், "மாங்க்ஸ் பாட் நெட் வேட்டையில் பங்கேற்கறதுக்கு. முழுக்க முழுக்க நம் கைல ஒப்படைக்கறதா இருக்காங்க. அதனால அவங்க இதுவரைக்கும் சேகரிச்ச விவரங்களை பத்தி டிஸ்கஸ் பண்ணறதுக்கு உங்களை அங்கே வர சொல்லி இருக்காங்க" தீபா, "வாவ்! எப்ப புறப்படணும் சார்?" முரளீதரன், "இன்னைக்கு நைட்டு ஒரு மணிக்கு ஃப்ளைட்" இருவரும் "சார் !!!" என்று அலறினர் முரளீதரன், "என்ன ஆச்சு?" வந்தனா, "அடுத்த மூணு நாள் லீவ்ல நாங்க ரெண்டு பேரும் ஊருக்கு போலாம்ன்னு ப்ளான் பண்ணி இருக்கோம்" முரளீதரன், "யூ.எஸ் போயிட்டு வந்தப்பறம் ஒரு வாரம் கொடுக்கறேன் நிதானமா ஊருக்கு போயிட்டு வாங்க. ஆக்சுவலா இந்த ரெண்டு வாரமும் நீங்க யூ.எஸ்ஸில் ஜாலியா சுத்தத்தான் போறீங்க .. " தீபா, "ஜாலியா சுத்தறது கொஞ்சம் நாள் கழிச்சே சுத்தலாமே சார்?" வந்தனா, "என்ன சொல்றீங்க சார்? ஜாலியா சுத்தப் போறோமா?" முரளீதரன், "எஃப்.பி.ஐகாரங்க மாங்க்ஸ் பாட் நெட்டைப் பத்தி நல்லா தெரிஞ்சு வச்சு இருக்காங்க. இந்த வேட்டையை அவ்வளவு சீரியஸா எடுத்துக்கலை. மாங்க்ஸ் பாட் நெட்னால ஒரு அபாயமும் இல்லைன்னு நம்பறாங்க. இருந்தாலும் நியூஸ் பேப்பர் காரங்களையும் அவங்களோட காங்க்ரஸ்ல, செனேட்ல இருக்கறவங்களை சமாதான படுத்தறதுக்கு எதாவுது செஞ்சாகணும். அவங்களுக்கு இது வரைக்கும் தெரிஞ்சதை உங்களுக்கு சொல்லப் போறாங்க. அவ்வளவுதான். நீங்களும் திரும்பி வந்து நிதானமா அந்த அசைன்மெண்டை செஞ்சா போதும். " தீபா, "அவங்களே சீரியஸா எடுத்துக்கலை. நாம் ஏன் சார் எடுத்துக்கணும்?" முரளீதரன், "ஆக்சுவலா, அவங்க நம்மை உடனே வர சொல்லலை. வெளி உலகுக்கு இது ஒரு ஜாயிண்ட் ஆபரேஷன். எஃப்.பி.ஐ இந்த மாதிரி ஜாயிண்ட் ஆப்ரேஷன் பத்தி எழுதும் போது என்னோட பாஸுக்கும், எக்ஸ்டர்னல் அஃப்ஃபேர்ஸ் மினிஸ்ட்ரிக்கும் (External Affairs Ministry) நகல் அனுப்புவாங்க. ஆனா அவங்ககிட்ட டிஸ்கஸ் பண்ண மாட்டாங்க. பண்ணினாலும் பெரிய தலைகளுக்கு புரியப் போறதும் இல்லை. என்னோட ஜே.டியும் மினிஸ்ட்ரில இருக்கற அண்டர்-செக்ரடரியும் சேந்துட்டு உடனே போன்னு குதிக்கறாங்க. நான் என்ன பண்ண?" வந்தனா, "நீங்களும் வர்றீங்களா சார்?" முரளீதரன், "உங்க கூட நான் வரலை. நீங்க ரெண்டு பேரும் முதல்ல கிளம்பறீங்க .. நான் தனியா அடுத்த வாரம் வந்து ஒரு மீட்டிங்க்ல கலந்துக்க போறேன்." தீபா, "எங்களுக்கு விசா, மத்த பேப்பர்ஸ் எல்லாம்?" முரளீதரன், "நான் இன்னும் கொஞ்ச நேரத்தில் ரெண்டு லெட்டர்ஸ் உங்களுக்கு ஸ்கேன் பண்ணி ஈமெயிலில் அனுப்பறேன். ஒண்ணு உங்களுக்கு எஃப்.பி.ஐல இருந்து வந்தது. அடுத்த லெட்டர் ஜே.டி கொடுத்த அஃபீஷியல் ஆர்டர். நீங்க நியூ யார்க் ஏர்போர்டில் இந்த ரெண்டு லெட்டரையும் காண்பித்தால் போதும். உங்களை வரவேற்கறதுக்கு எஃப்.பி.ஐல இருந்து யாராவுது வருவாங்க. அவங்க கிட்ட மட்டும் உங்க அஃபீஷியல் ஐ.டி கார்டை காண்பிக்கணும். மத்ததை அவங்க பாத்துப்பாங்க"
தீபா, "நியூ யார்க்கா? வாஷிங்க்டன் டி.சியில் இருக்கும் எஃப்.பி.ஐ தலைமையகத்துக்கு நாங்க போகலையா?" முரளீதரன், "இல்லை, அவங்களோட் நியூ யார்க் ஃபீல்ட் ஆஃபீஸ்" வந்தனா, "ஏன் நியூ யார்க்?" முரளீதரன், "முன்ன மாங்க்ஸ் பாட் நெட் வந்த புதுசில அதை கண்காணித்தவரும் அவரோட அஸிஸ்டண்ட்டும் அங்கேதான் இருக்காங்க. அதனலதான்." தீபா, "நீங்களும் நியூ யார்க்தான் வருவீங்களா?" முரளீதரன், "தேவை இருந்தா வருவேன். இல்லைன்னா நான் வாஷிங்க்டன் டி.சில என்னோட மீட்டிங்கை முடிச்சுட்டு அங்கிருந்தே திரும்பி வந்துடுவேன். " அன்று இரவே இருவரும் நியு யார்க் புறப்பட்டனர். அடுத்த நாள் ஆகஸ்ட் 15 சனிக்கிழமை மதியம் நியூ யார்க்கை அடைந்தனர். அரசாங்க விருந்தினரான இருவரையும் வரவேற்க எஃப்.பி.ஐ ஏஜென்ட் சாண்ட்ரா ஆஸ்டின் (Sandra Austin) ஏர்போர்ட்டுக்கு வந்து இருந்தாள். நியூ யார்க்கில் இருக்கும் ஃபெடரல் ப்ளாஸா (Federal Plaza) என்ற கட்டிடத்தில் எஃப்.பி.ஐ அலுவலகம் இருந்தது. அதற்கு அருகே இருந்த மில்லினியம் ஹில்டன் (Millinium Hilton) என்ற ஹோட்டலில் அவர்கள் தங்கள் ஏற்பாடு செய்து இருந்தார்கள். அடுத்த நாள் (ஞாயிறு) அவர்கள் தங்கி இருந்ததற்கு அருகில் (நியூ யார்க் தூர கணக்கில்!) இருந்த ஸ்டாச்சு ஆஃப் லிபர்டி (Statue Of Liberty) எனப்படும் பிரம்மாண்டமான சுதந்திர தேவியின் சிலைக்கு (சிலை வடிவத்தில் இருக்கும் கட்டிடத்திற்கு) சுற்றுலா பயணம் செல்லவும் ஏற்பாடு செய்து இருந்தார்கள். சாண்ட்ரா அதற்கான டிக்கட்டுகளை அவர்களிடம் கொடுத்து திங்கள் காலை வந்து அவர்களை எஃப்.பி.ஐ அலுவலகத்துக்கு அழைத்து செல்வதாக கூறி விடைபெற்றாள்.Players Meet Off The Game Sunday, 17 August 2008 9:00 AM சதுரங்கத்துக்கு வெளியில் முதல் சந்திப்பு ஞாயிறு, அகஸ்ட் 17 2008 காலை 9 மணி நியூ யார்க்கில் பாட்டரி பார்க் எனும் இடத்தில் இருந்த படகுத்துறை முன் இருந்த க்யூவில் வந்தனாவும் தீபாவும் நின்று கொண்டு இருந்தனர். வந்தனா, "இன்னும் ஒரு அரை மணி நேரம் முன்னாடி வந்து இருந்தா முதல் ஃபெர்ரியிலயே (பெரிய படகு) இடம் கிடைச்சு இருக்கும். இப்ப பார் இன்னும் ஒரு மணி நேரம் வெயிட் பண்ணி மூணாவுது ஃபெர்ரியில் தான் போக முடியும்" தீபா, "நமக்கு டிக்கெட் வாங்கி கொடுத்தவன் ஃபெர்ரிக்கும் சேத்தி புக் பண்ணி இருக்கலாம் இல்லை?" வந்தனா, "ஏன், டாக்ஸிக்கும் ஏற்பாடு பண்ண சொல்றதுதானே?" தீபா, "சரி, இன்னும் ஒரு மணி நேரம் சுத்தி இருக்கறவங்களை சைட் அடிக்கலாம்" வந்தனா, "க்யூல கடைசில நின்னுட்டு யாரை சைட் அடிக்கப் போறே? உனக்கு முன்னாடி நிக்கற தாத்தாவையா?" தீபா, "பரவால்லையே உனக்கு சைட் அடிக்கறதில் எல்லாம் இன்ட்ரெஸ்ட் இருக்கா?" வந்தனா, "ஏய், விட்டா சும்மா பேசிட்டே போறே?" தீபா, "சரி, நீ காலேஜ்ல யாரை சைட் அடிச்சே?" வந்தனா, "ஃபர்ஸ்ட் இயர்ல இருந்து நாலஞ்சு பெர் எனக்கு ரூட் போட்டுட்டு இருந்தாங்க. நான் யாரை செலக்ட் பண்ணலாம்ன்னு யோசிச்சுட்டு இருந்தேன். ஆனா, தர்ட் இயர்ல அண்ணா போனதுக்கு அப்பறம் எனக்கு இன்ட்ரெஸ்ட் சுத்தமா போயிடுச்சு" தீபா, "தெரியுமே, ஐ.பி.எஸ்ஸே குறின்னு படிக்க ஆரம்பிச்சுட்டே. நான் எத்தனை பேரை செலெக்ட் பண்ணினதுக்கு அப்பறம் கழட்டி விட்டு இருக்கேன் தெரியுமா?" வந்தனா, "எந்த அளவுக்கு பழகி இருக்கே?" தீபா, "சிலர்கூட க்ளாஸ் ரூம் வரைக்கும், சிலர்கூட காஃபீ ஷாப்வரைக்கும், ஒரு சிலர்கூட மட்டும் மூவி போய் டின்னர் சாப்பிடற அளவுக்கு. அதிலயும் ஒருத்தன் நான் கிஸ் அடிப்பேன்னு நினைச்சு அடிக்கடி கழுத்தை நீட்டுவான். அவனுக்கு கழுத்து வலி வந்து அவனா என்னை கழட்டி விட்டுட்டான்" வாய் விட்டு சிரித்த வந்தனா, "ஏன், அடுத்த கட்டத்துக்கு போறதுக்கு பயமா?" தீபா, "அடுத்த கட்டத்துக்கு போற அளவுக்கு எனக்கு யார் மேலயும் ஈடுபாடு வரலை" வந்தன, "ஈடுபாடு வந்து இருந்தா அடுத்த கட்டத்துக்கு போயிருப்பியா?" தீபா, "சத்தியமா தெரியலை. நீ போய் இருப்பியா?" வந்தனா, "எனக்குத்தான் அந்த மாதிரி விஷயங்களில் இன்ட்ரெஸ்ட்டே வரலைன்னு சொன்னேன் இல்லையா?" தீபா, "இப்ப ஐ.பி.எஸ் முடிச்சுட்டு உனக்கு பிடிச்ச மாதிரி ஒரு வேலைல இருக்கே. இன்னமும் உனக்கு இன்ட்ரெஸ்ட் இல்லையா?" வந்தனா, "ம்ம்ம் ... இன்ட்ரெஸ்ட் இருக்கு அதுக்காக ஏக்கம் இல்லை." தீபா, "அப்ப, ரெண்டு வருஷம் கழிச்சு முன்ன பின்னே தெரியாத ஒருத்தனை கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு சொல்லு" வந்தனா, "அதான் எனக்கு பெரிய பயம். நீ என்ன பண்ணறதா இருக்கே?" தீபா, "நான் இந்த பயத்தை என் பேரண்ட்ஸ்கிட்டயே சொல்லி ஆச்சு" வந்தனா, "அதுக்கு அவங்க என்ன சொன்னாங்க?" தீபா, "அப்படின்னா நீயா ஒருத்தனை செலெக்ட் பண்ணிட்டு வா. நாங்க கல்யாணம் பண்ணி வெக்கறோம் அப்படின்னாங்க" வந்தனா, "நாம் ரெண்டு பேரும் ஒரே நிலைமைல இருக்கோம். நமக்கா யார் மேலயும் ஈடுபாடு வராது. யாரையும் சந்திக்கவும் வாய்ப்பு இல்லை. இனிமேல் எங்கே யாரை சந்திச்சு அவனை நமக்கு பிடிச்சு, ஈடு பாடு வரும் அளவுக்கு அவனை புரிஞ்சுட்டு .. பேசாம இப்போ இருந்தே மனசை தேத்திக்க வேண்டியதுதான்" தீபா, "அவனுக்கும் உன்னை பிடிச்சு இருக்கணும். அதை விட்டுட்டயே" இருவரும் வாய்விட்டு சிரித்தனர். பிறகு மறுபடி மௌனம். தீபா, "உன்னை கல்யாணம் பண்ணிக்கப் போறவன் எப்படி இருக்கணும்? அதாவுது உன் மனசில் தெளிவா இருக்கா?" வந்தனா, "ஓ! என்னை ரொம்ப லவ் பண்ணறவனா இருக்கணும். நல்லா ஜாலியா சிரிச்சு பேசறவனா இருக்கணும். முன்கோபியா இருக்கக் கூடாது. இன் ஃபாக்ட் கோபமே வராத ஒருத்தனா இருக்கணும். பாக்க ஸ்மார்ட்டா இருக்கணும். என்னை விட உயரமா இருக்கணும. சோம்பேறியா இருக்கக் கூடாது. நல்லா படிச்சு இருக்கணும். நிறைய விஷயம் தெரிஞ்சு இருக்கணும். ரொம்ப சம்பாதிக்கணும்ன்னு நான் எதிர்பார்க்க மாட்டேன். அவன், தன் குடும்பத்தில் இருக்கறவங்க எல்லார்கூடவும் ரொம்ப பாசமா இருக்கணும்" தீபா, "அவன் குடும்பத்தின் மேலா ?" வந்தனா, "ம்ம்ம்.. அப்படி இருந்தா எங்க அப்பா அம்மா மேல அவனுக்கு தன்னைப் போல பாசம் வந்துடும். எங்க அப்பா அம்மா கிட்ட பாசமா இல்லைன்னா நான் உடனே டைவர்ஸ் பண்ணிடுவேன்" தீபா, "அதுக்கு முதல்ல கல்யாணம் பண்ணனும்" வந்தனா, "உனக்கு வரப்போறவன் எப்படி இருக்கணும்?" தீபா, "ஓரளவுக்கு நீ சொன்னது மாதிரி தான். ஆனா கோபமே வரக்கூடாதுன்னு நான் எதிர்பார்க்க மாட்டேன். அப்பறம் லைஃப் போரடிச்சுடும். அப்பறம் ஒரேடியா என்கிட்ட வழியக் கூடாது. நான் தான் அவனை ரொம்ப லவ் பண்ணனும். அவன் என்னை ஒரு அளவுக்கு மட்டும் லவ் பண்ணினா போதும்" வந்தனா, "எனக்கு தெரிஞ்ச ஆந்திராக்காரங்க யாரும் அப்படி இல்லை. சோ, நீ உனக்கு எல்லா விதத்திலும் பிடிச்ச மாதிரி ஒருத்தனை கல்யாணம் பண்ணிக்கறதுக்கு சான்ஸே இல்லை" தீபா, "ஏய், அவனும் ஆந்திராவை சேந்தவனா இருக்கணும்ன்னு நான் எதிர்பார்க்கலை. உனக்கு ராஜஸ்தானியா இருக்கணுமா" வந்தனா, "அப்படி எல்லாம் இல்லை. எனிவே எங்க வீட்டில் ஹிந்தி, ஆங்கிலம் ரெண்டும் கலந்துதான் பேசுவோம். அதனால க்ம்யூனிகேஷனுக்கு ப்ராப்ளம் இருக்காது" தீபா, "பட், தமிழனா இருந்தா. ஏன்னா அவங்களுக்குதான் ஹிந்தி தெரிஞ்சு இருக்காது" வந்தனா, "ஆனா, அவங்க ஆங்கிலம் அதுக்கு சரிக்கட்டிடும். நம்ம முரளிசார் எப்படி?" சக்தியும் நித்தினும் க்யூவுக்கு வந்து அவர்களுக்கு பின்னால் நின்றார்கள்.சக்தி (தமிழும் ஆங்கிலமும் கலந்து), "மடையா! அங்க பாரு க்யூ how long it is" நித்தின் (மராட்டியும் ஆங்கிலமும் கலந்து), "Relax, டைம் இருக்கு" சக்தி (ஆங்கிலமும் மராட்டியும் கலந்து), "We have a reservation for the Crown also and you are allowed there only till 2 (க்ரௌனுக்கும் டிக்கட் எடுத்து இருக்கிறோம். அதுக்கு ரெண்டு மணி வரைக்கும்தான் விடுவாங்க) லேட்டாச்சுன்னா டிக்கட் பணம் போச்சு" அவர்கள் பேசியதை ஒட்டுக் கேட்ட வந்தனா, "ஏய், இது என்ன க்ரௌன் டிக்கட்ன்னு கேட்டுட்டு இருந்தியே. பின்னால நிக்கறவங்களும் அந்த டிக்கட் வாங்கி இருக்காங்க. அவங்க கிட்ட கேட்டு என்னன்னு தெரிஞ்சுக்கலாம்" என்று சொல்லி முடிக்கும் முன் தீபா திரும்பி சக்தியை பார்த்து, "Hi, Are you also from India? (ஹாய், நீங்களும் இந்தியாவில் இருந்து வந்து இருக்கீங்களா?)" சக்தி, "நாங்க இந்தியாவில் இருந்துதான் வந்து இருக்கோம். ஆனா க்ரௌண் (கிரீடம்) அப்படின்னு என்னன்னு தெரியாத நீங்க இந்தியாவில் இருந்து வந்து இருக்கீங்களான்னு எனக்கு சந்தேகமா இருக்கு ... " வந்தனா (கோபத்துடன்), "ஹெல்லோ! க்ரௌன் அப்படின்னா என்னன்னு தெரியும் ஆனா அதுக்கு டிக்கட் ... " என்று பாதியில் நிறுத்தி அந்த டிக்கட் சுதந்திர தேவி சிலையின் கிரீடப் பகுதிக்கு செல்வதற்கு என்று உணர்ந்து நாக்கை கடித்தாள். அதை ரசித்து புன்னகைத்து நின்ற சக்தியை பார்த்து அவளும் புன்னகைக்க, விட்டுக் கொடுக்க விரும்பாத தீபா கொபத்துடன், "அப்ப நீங்க நாகரீகமில்லாமல் ஒட்டுக் கேட்டீங்க ... " என்றதும் நித்தின், "உங்களை மாதிரி எங்களுக்கும் காது இருக்கு இல்லை?" என்று அவர்கள் ஒட்டுக் கேட்டதை சுட்டிக் காட்ட நால்வர் முகத்திலும் சிரிப்பு. சக்தி (வந்தனாவிடம்), "Hi, I am Shakthivel, call me Shakthi (நான் சக்திவேல், நீங்க என்னை சக்தி என்று அழைக்கலாம்)" என்று தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டு கையை நீட்டினான் சிறிதும் தயங்காமல் அவன் கையை குலுக்கி, "ஐ ஆம் வந்தனா ராத்தோட்" என்றாள் சக்தி, "அப்ப நான் உங்களை மிஸ் ராத்தோட்ன்னு கூப்படணும் இல்லையா? நான் சக்திவேல் முத்துசாமி கவுண்டர். ஆனா நீங்க என்னை சக்தின்னே கூப்படலாம்" என்றான் கிண்டலாக தன் தவறை உணர்ந்த வந்தனா, "சாரி, I didn't mean to be rude. நீங்களும் என்னை வந்தனான்னே கூப்பிடலாம்" தீபா (நித்தினிடம்) "ஹாய், நான் தீபா ராவ். நீங்க என்னை மிஸ் ராவ்ன்னு கூப்பிட்ட நான் திரும்பிக் கூட பாக்க மாட்டேன்" நித்தின், "ஐ அம் நித்தின் தேஷ்பாண்டே. நீங்க என்னை மிஸ்டர் தேஷ்பாண்டேன்னுதான் கூப்பிடணும்" என்றபிறகு சிரித்தவாறு ".. just kidding" என்றான் நால்வருக்கிடையே கல கலப்பு அதிகமானது. முன்புறம் இருந்த தீபா மெதுவாக பின்னோக்கியும் பின்னால் இருந்த சக்தி முன்னோக்கியும் நகர்ந்து நின்றனர். தீபா, "சொல்லுங்க மிஸ்டர் தேஷ்பாண்டே. இந்தியாவில் எங்க இருந்து வந்து இருக்கீங்க?" நித்தின், "சொந்த ஊர் பூனா. இங்கே வருவதற்கு முன்னால் இருந்தது பெங்களூர். இன்னும் ஒன்பது மாசம் கழிச்சு திரும்பி போகும் போதும் அனேகமா அங்கேதான் போவேன்னு நினைக்கிறேன். What about you Deepa?" தீபா, "ஓ, சொந்த ஊர் ஹைதராபாத் இப்ப புது தில்லியில் வேலைல இருக்கேன். இன்னும் ரெண்டு வாரத்தில் புது தில்லிக்குத்தான் திரும்பி போக போறேன்" சக்தி, "ஓ, நீங்க ஷார்ட் அசைன்மென்ட்டில் வந்து இருக்கீங்களா?"
வந்தனா, "இல்லை, ஒரு செமினார், ட்ரெயினிங்க்ன்னு கூட சொல்லலாம்; அதில் பங்கேற்க வந்து இருக்கோம். நீங்க எங்கே வேலை செய்யறீங்க?" நித்தின், தாங்கள் பணியாற்றும் கம்பெனியின் பெயரை சொல்லி வந்து இருக்கும் கம்பெனியின் பெயரையும் சொன்னான். தீபா, "நாங்க ரெண்டு பேரும் NICயில் வேலை செய்யறோம்" என்றாள் மொட்டையாக சக்தி, "ஓ, அரசாங்க வேலையா? I am surprised as well as impressed" வந்தனா, "ஏன்?" நித்தின், "நிச்சயம் நீங்க ரெண்டு பேரும் நல்ல காலேஜில் படிச்ச மாதிரி தெரியுது. இருந்தும் கம்மி சம்பளத்தில் அரசாங்க வேலையில் சேர்ந்து இருக்கீங்க ...அதான்" தீபா, "உங்களை மாதிரி நாட்டோட அன்னிய செலாவணியையும் எங்க பாங்க் பாலன்ஸையும் அதிகப் படுத்துவதில் எங்களுக்கு அவ்வளவு ஆர்வம் இல்லை" சக்தி, "ஏன் அப்பா அம்மா சேத்து வெச்சதை செலவு செய்யவே நேரம் போறலையா?" வந்தனா, "நோ! நாங்க ஒண்ணும் எங்க அப்பா அம்மாவை நம்பி இல்லை" சக்தி, "அவங்களும் உங்களை நம்பி இல்லை .. சரி தானே?" தீபா, "நீங்க ரெண்டு பேரும் எந்த காலேஜில் படிச்சீங்க" நித்தின், "நீ படிச்ச காலேஜ் பேரை சொல்லி பெருமை அடிச்சுக்கலாம்ன்னு கேக்கறே. பரவால்லை நீ அதை நாங்க கேக்காமலே சொன்னாலும் பாராட்டுவோம்" தீபா, "ஆமா, பெருமை படறமாதிரி காலேஜ்தான். நான் ஐ.ஐ.டி. இவ என்.ஐ.டி. நீங்க எந்த காலேஜ்?" சக்தி, "வாவ்! நாங்க ரெண்டு பேரும் சாதாரண காலேஜ்தான்" என்று பொய் சொன்னான். க்யூ நகரத் தொடங்க இரண்டு ஜோடிகளாக பிரிந்து பேச்சை தொடர்ந்தனர். வந்தனா, "நீ தமிழ்நாடு தானே?" சக்தி, "ஆமா, நீ ராஜஸ்தான் சரியா?" வந்தனா, "நீ தமிழ் பேசினதை வெச்சு நான் சொன்னேன். நான் ராஜஸ்தான்னு உனக்கு எப்படி தெரிஞ்சுது?" சக்தி, "உன் பட்டப் பெயரை வெச்சு ஒரு யூகம்தான். ஆனா, நீ ஐ.டி ஃபீல்டில் இருக்கே அப்படிங்கறதை என்னால நம்ப முடியலை" வந்தனா, "ஏன்?" சக்தி, "உன்னை பாத்தா மென்பொருள் எழுதற ஆள் மாதிரி தெரியலை. உன் ஃப்ரெண்ட் தீபாவை பாத்தா நிச்சயம் அப்படித்தான் தெரியுது" வந்தனா, "அதான் ஏன்? என்னை பாத்தா புத்திசாலி மாதிரி தெரியலையா?" சக்தி, "சே, ஐ.டி ஃபீல்டில் இருக்கும் 99% வேலைக்கு புத்தி தேவையே இல்லை. இன்னும் சொல்லப் போனா மக்கா இருந்தா நல்லா ஷைன் பண்ணலாம்" சிரித்த வந்தனா, "அப்பறம் ஏன் அப்படி சொன்னே?" சக்தி, "உன்னை பாத்தா மத்தவங்களை வேலை வாங்கறவ மாதிரி தெரியுது (Someone used to bossing around people)" வந்தனா, "என் வீட்டில் எனக்கு ரொம்ப செல்லம் கொடுத்துட்டாங்க அதனால் இருக்கும்" சக்தி, "சோ, எங்கே உங்க ட்ரெயினிங்க்?" வந்தனா, "சொன்னா பயப் படக்கூடாது" என்று பீடிகை போட்டாள். சக்தி, "சொல்லு. நீ எதிர்பார்த்த அளவுக்கு பயப்படறேனான்னு பாக்கலாம்" வந்தனா, "எஃப்.பி.ஐ" சக்தியின் முகத்தில் தோன்றி மறைந்த சிறு கலக்கத்தை அவள் கவனித்தாள். வந்தனா, "ரொம்ப பயப்படாதே. கம்யூடர் செக்யூரிட்டி பத்தி அவங்க ஒரு செமினார் நடத்தறாங்க. நிறைய நாடுகளில் இருந்து அதில் பங்கேற்க வந்து இருக்காங்க. இந்தியாவில் இருந்து நாங்க வந்து இருக்கோம்" சக்தி, "எஃப்.பி.ஐ எதுக்கு கம்ப்யூடர் செக்யூரிடி பத்தி செமினார் நடத்தறாங்க?" வந்தனா, "சைபர் தீவிரவாதம் இப்ப அதிகரிச்சுட்டு வருது இல்லையா? அதுக்கு என்ன முன்னேற்பாடுகள் எடுக்கணும் அப்படின்னு சொல்லிக் கொடுக்கப் போறாங்க" என்று சமயோசிதமாக பொய் சொன்னாள். கூர்ந்து பார்த்த சக்தியின் கண்களை தவிர்த்தாள். பேச்சை மாற்ற "தமிழ்நாட்டில் எந்த ஊர்?" என்றாள் சக்தி, "ஈரோட். பெரியார் மாவட்டம், கோவை மாவட்டத்துக்கு பக்கத்தில் இருக்கு" வந்தனா, "ஈரோட் எதுக்கு ஃபேமஸ்" சக்தி, "ஈரோட் ஒரு வியாபார தலம். மஞ்சள், எண்ணை, டெக்ஸ்டைல்ஸ் இந்த மாதிரி நிறைய வியாபாரங்கள்; ஏற்றுமதி நிறுவனங்கள் இருக்கு." வந்தனா, "ஸ்கூலிங்க் காலேஜ் எல்லாம் ஈரோடிலா" சக்தி, "ஸ்கூலிங்க் மட்டும். காலேஜ் சென்னை" வந்தனா, "கோவைக்கு பக்கம்ன்னா சென்னை ரொம்ப தூரமாச்சே. கோவைல நல்ல எஞ்சினியரிங்க் காலேஜஸ் இருக்கு இல்லையா? ஏன் சென்னை?" சக்தி, "நான் படிச்சது ஐ.ஐ.டி சென்னை" வந்தனா, "வாவ், அப்ப ரொம்ப சாதாரண காலேஜுன்னு சொன்னே?" சக்தி, "உன் ஃப்ரெண்ட் ரொம்ப ஜம்பம் அடிச்சு கிட்டா. எதுக்கு பதில் ஜம்பம்னு அப்படி சொன்னேன். ராஜஸ்தானில் நீ எந்த ஊர்?" வந்தனா, "உதைப்பூர்" சக்தி, "வாவ்! டூரிஸ்ட் ஸ்பாட் இல்லை. அந்த ஏரிக்கு உள்ள இருக்கும் அரண்மனை அங்கேதானே இருக்கு?" வந்தனா, "ஆமா ..." சக்தி, "அப்ப நீயும் என்னை மாதிரி ஃபேமிலியை விட்டுட்டு தனியா டெல்லில இருக்கே" வந்தனா, "ஒரு விதத்தில சரி. ஆனா டெல்லியில் என் பெரியப்பா இருக்கார். அவர் வீட்டில நான் தங்கி இருக்கேன்" சக்தி, "லக்கி .. " வந்தனா, "ஏன் தனியா இருப்பதும் ஜாலிதானே. வீட்டில் செய்ய முடியாதது எல்லாம் தனியா இருக்கும் போது செய்யலாம்" சக்தி, "வீட்டில் இருக்கும் போது செய்ய முடியாததுன்னு எனக்கு ஒண்ணும் இல்லை." வந்தனா, "அப்ப நீ ரொம்ப காந்தியா?" சக்தி, "ஏன் அப்படி கணக்கு பண்ணறே? எனக்கு வீட்டில் ரொம்ப சுதந்திரம் கொடுத்து இருக்காங்கன்னு எடுத்துக்கலாம் இல்லையா?" வந்தனா, "ஓ சாரி .. ஆக்சுவலா என்னோட பேரண்ட்ஸும் அப்படித்தான்" சக்தி, "எங்க அம்மா நான் என்ன பண்ணினாலும் ஒண்ணும் சொல்ல மாட்டாங்க. அவங்க சொல்ற மாதிரி எதுவும் நான் பண்ண மாட்டேன்" வந்தனா, "அப்பா?" சக்தி வானத்தை நோக்கி விரலைக் காட்ட, வந்தனா, "ஓ, சாரி ... எப்போ?" சக்தி, "நான் ப்ளஸ் டூ படிக்கும் போது" வந்தனா, "ஐ ஆம் சோ சாரி" சக்தி, "பரவால்லை .. இப்ப ரொம்ப ஞாபகம் வருவது இல்லை" வந்தனா, "உனக்கு வராம இருக்கலாம். ஆனா உங்க அம்மா இன்னும் ரொம்ப கஷ்டப் படுவாங்கதானே?" முகம் இறுக அவன் தலையசைத்தான், பிறகு "வேற எதாவுது பேசலாமே" என்றான் வந்தனா, "உன்னோட கஷ்டம் எனக்கு நல்லா புரியுது. நான் த்ர்ட் இயர் படிக்கும் போது என் அண்ணன் இறந்துட்டான். என் துக்கத்தை விட என் அப்பா படற கஷ்டத்தை என்னால் இன்னும் ஜீரணிக்க முடியாது" சக்தி, "ஐ ஆம் சோ சாரி" என்று அவனையறியாமல் அவள் கைகளைப் பற்றினான்.

No comments:

Post a Comment