Saturday, January 3, 2015

அன்பே மான்சி...!!! அத்தியாயம் - 5


உடனே வேலு என்ன சார் என்னாச்சு என கேட்க

வேலு நான் கையில எடுத்திட்டு போனேனேல்ல ஒரு கவர் அதை அங்கேயே வச்சிட்டு வந்திட்டேன் என்றான் பதட்டமாக

ஆனால் அதற்க்குள் கார் ஊருக்கு வெளியே கண்மாயினின் (ஏரி)மேலிருந்த ஒரு சிறு பாலத்தின் மீது போய்கொண்டிருந்தது

இப்போ என்ன சார் பண்ணலாம் என்று வேலு கேட்க

அதை உடனே எடுத்துட்டு வந்துரனும் வேலு என சத்யன் கூற

அதுக்கென்ன சார் திரும்ப போய் எடுத்துட்டு வரலாம் வாங்க சார் என்றான்

உடனே சத்யன் அவசரமாக மறுத்து இல்லை இல்லை நான் இங்கயே இருக்கேன் நீ போய் அங்க சோபா மேல இருக்கும் கவரை நான் எடுத்துட்டு வர சொன்னதா சொல்லி எடுத்துட்டு வந்துரு என்றான் அடைத்த குரலில்

அவனுக்கு மான்சியை மறுபடியும் எதிர்கொள்ள தைரியமில்லை

சரியென்ற வேலு சத்யனை இறக்கி விட்டுவிட்டு காரை திருப்பி கொன்டு போக

சத்யன் வாராபதியின் (பாலம்)மேல் கைகளில் தலையை தாங்கி சேர்ந்து போய் அமர்ந்தான்

அவள் அந்த கவரை பிரித்திருப்பாளா

இருக்காது என்றது அவன் மனம்

'
பிரித்திருந்தால், அதை நினைக்கவே சத்யனுக்கு கலக்கமாக இருந்தது

ஆனால் மான்சியின் வீட்டுக்குள் நுழையும் போது மான்சி அந்த கவரை பிரித்து கடைசி பக்கத்தை படித்துக்கொண்டிருந்தாள்

அவளின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து மார்பு சேலையை நனைத்து கொண்டிருந்தது

அவள் கண்ணீரை பார்த்த வேலுவுக்கு சங்கடமாக இருந்தது மேடம் என்று குரல் கொடுத்ததான்

மான்சி என்ன என்பது போல் திரும்பி அவனை பார்த்தாள்

வேலு தயக்கத்துடன் சார் இந்த கவரை வாங்கிட்டு வரச்சொன்னார் என்றான்

அவர் எங்கே

ஊருக்கு வெளியே இருக்கிற கண்மாய்க்கிட்ட வெயிட் பண்றார் மேடம் என வேலு

என்னை அவர்கிட்ட கூட்டிட்டு போறீங்களா என மான்சி கேட்க

வேலு உடனே கிளம்பி வாங்க மேடம் நான் காரை திருப்பிக்கொண்டு வர்ரேன் என்று வெளியேறினான்

மான்சி தன் அறைக்கு போய் அந்த பேப்பர்களில் கையெழுத்திட்டு மேலும் சில பேப்பர்களிலும் கையெழுத்திட்டு கவரில் வைத்துவிட்டு கதவை பூட்டி பக்கத்து வீட்டில் ஏதோ தகவல் சொல்லிவிட்டு காரில் ஏற

வேலு அவள் நிலைமையை உணர்ந்து மெதுவாக காரை ஓட்டினான்

கண்மாயருகே கார் வருவதை கவனித்த சத்யன் வேகமாக எழுந்து காரருகே வர

காரிலிருந்து இறங்கிய மான்சியை பார்த்ததும் அவனது முகம் பேயறைந்தது போலானது

அவனருகே வந்த மான்சி கவரை அவனிடம் நீட்டி இதுக்குதான் வந்திருக்கிறத நீங்க அப்பவே சொல்லியிருக்கலாம் இது தெரியாம நான் பைத்தியக்காரி போல நடந்துகிட்டேன் என்னை மன்னிச்சிடுங்க என்று அவனை பார்த்து கைகூப்பினாள்

இல்ல மான்சி ப்ளீஸ் நான் சொல்றத கேள் என்று அவளின் கூப்பிய கையை பற்ற

அவள் உதறி விலகி தயவுசெய்து என்கிட்ட வராதீங்க அங்கேயே இருங்க என்றவள்

அந்த பேப்பர்ஸ் எல்லாத்திலேயும் கையெழுத்து போட்டிருக்கேன் ஆனா நீங்க இதை எதிர்பார்கலன்னு நினைக்கிறேன் ,என்று தனது வயிற்றை தொட்டு காண்பித்து.'இது பிறந்து ஏதாவது பிரச்சினை வரக்கூடாதில்லையா அதனால இதுக்காக இன்னும் சில பேப்பர்ல கையெழுத்து போட்டு வைச்சிருக்கேன் பயன்படுத்திக்கங்க என்றாள்

இதை சொல்லும் போது அவளுக்கு அதிகமாக வியர்த்து உடல் நடுங்கியது

அவள் நடுங்குவதை பார்த்து கவலையுடன் அவளை நெருங்கிய சத்யனை அங்கேயே நில் என்பது போல் கைநீட்டி தடுத்தாள் மான்சி

நீங்க கையெழுத்து போட்ட செக்கும் கவர்லயே இருக்கு அதை யாராவது அப்பன் இல்லாத பிள்ளைக்கு குடுங்க புண்ணியமாவது கிடைக்கும்

இத்தோடு நமக்குள்ள எதுவும் இல்லன்னு நான் நினைக்கிறேன் சந்தோஷமா இருங்க குட்பை நான் போறேன் என்று திரும்பி ஊரை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்

சத்யன் எதுவும் பேசமுடியாத கற்சிலையாக நின்றான்

வேலு தான் 'சார், என்று உரத்தகுரலில் அழைத்து அவனை கலைத்தான்

என்ன என்பது போல் சத்யன் பார்க்க

சார் அவங்க இருக்கிற நிலைமையில் அவங்களால கொஞ்ச தூரம் கூட நடக்க முடியாது நீங்க கூப்பிடுங்க சார் நான் கார்ல கொண்டு போய்விட்டுர்றேன்

சுதாரித்த சத்யன் அவள் பின்னால் ஓடி எதிரில் நின்றான்

இப்போது மான்சிக்கு அதிகமாக வியர்த்து ஜாக்கெட் முலுவதும் நனைந்துவிட்டிருந்தது

ஏதோ அளவுக்கதிகமான சுமையை தலையில் வைத்திருப்பவள் போல அவள் முகம் வேதனையை சுமந்திருந்தது

அதை கண்ட சத்யன் மான்சி உனக்கு என்ன பண்ணுது ஏன் இப்படி வேர்க்குது வா கார்ல போய் விடச்சொல்றேன் என்று பதறி அவள் கையை பிடித்தான்

பிடித்த கையை உதறி நீங்க கிளம்புங்க உங்களுக்கு ஏதாவது வேலையிருக்கும் நான் இப்படியே மெதுவா போயிடுவேன் மீறி என் பின்னால் வந்தா அப்புறம் நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது எனறாள் கடுமையான குரலில் கூறிவிட்டு கொஞ்ச தூரம் நடந்தவள்

அம்மா என்று பலமாக முனங்கி தரையில் அப்படியே மண்டியிட்டாள்

ஐயோ மான்சி என்று அலறி அவளருகில் போய் அவள் தோள் பற்றி எழுப்பி தன் மார்பில் சாய்க்க

அதற்க்குள் அவளுக்கு இரண்டாவதாக வலி வர இது பயங்கரமாக இருந்தது

முதுகுத்தண்டில் ஆரம்பித்து வயிறு முழுவதும் படர்ந்து தொடையிடுக்கில் போய் முடிய மான்சி கைகளால் அவன் தோள்களை அழுத்தி பற்றினாள்

வயிற்றில் இருந்த குழந்தை அதிவேகமாக சுழன்று தன் நிலையை மாற்றியது

இதில் அனுபவமில்லாத சத்யன் 'வேலு,என்று உரக்க குரல் கொடுத்து கத்த

நிலைமை சரியில்லை என்று உணர்ந்த வேலு ஓடிவந்து மெதுவா கூட்டிட்டு வாங்க சார் கார்ல போயிடலாம் என்றான்

அதற்க்குள் வலி கொஞ்சம் குறைய சத்யனை விட்டு விலகிய மான்சி இல்ல வேன்டாம் இந்த பக்கம் யாரவது வருவாங்க அவங்களோட போயிடுவேன் நீங்க கிளம்புங்க என பிடிவாதமாக கூற

அதுவரை பொறுமைகாத்த சத்யன் ஆத்திரத்துடன் ஏய் என்னடி நினைச்சுகிட்டு இருக்க நானும் இவ்வளவு கெஞ்சறேன் வேன்டா வேன்டாம்ன்னு பிடிவாதமா சொல்லிகிட்டே இருக்க பிடிவாதம் பிடிக்கும் நேரமா இது என்று அவள் தோள் பற்றி உலுக்க

வயற்றில் குழந்தை மறுபடியும் தன் நிலையை மற்ற

மான்சிக்கு மூத்திரம் வருவது போல இருந்தது அடக்க முயன்றாள் முடியவில்லை தப தபெவன கால் வழியாக இரங்கி தரையில் தேங்கியது

அனுபவஸ்தனான வேலு அதை கவனித்துவிட்டு சார் என்று அலறினான்

என்னாச்சு வேலு என்றவனிடம்

சார் அவங்களுக்கு பனிக்குடம் உடஞ்சிட்டுதுன்னு நினைக்கிறேன் இதுக்கு மேலே இங்கே இரந்தா ஆபத்து சார் அவங்களை சீக்கிரம் தூக்குங்க சார் என்று பதறினான்

அப்போதுதான் தரையை கவனித்த சத்யன் கலங்கி போனான் ஒரு கையை அவள் முதுகிலும் மறுகையை தொடையிலும் செலுத்தி அவளை அள்ளியெடுத்து காரை நோக்கி ஓட அவன் கைகளில் வழிந்தது அவளது பனிநீர் ஆனால் அவனுக்கு அருவருக்கவே இல்லை.

மான்சி வலியால் அவன் சட்டை காலரை கொத்தாகப்பற்றி கசக்கியபடி வேனாங்க கார் வீனாகிவிடும் என்றாள்

சத்யன் என்னப் பேச்சு இது என்பது போல இரக்கத்துடன் பாரக்க

வேலு கார் கதவை திறக்க அவளை பின் சீட்டில் ஏற்றி படுக்க வைத்து தானும் அமர்ந்து அவள் தலையை தன்மடியில் எடுத்து வைத்துக்கொன்டு 'வேலு நேராக ஆஸ்பத்திரிக்கு போயிடலாம்' என கூற

மான்சியோ வீட்டில் அம்மா வந்திருப்பாங்க அவங்களையும் கூட்டிட்டு போகலாம் என்றாள் வேதனை குரலில்

அதுவும் சரிதான் நீ வீட்டுக்கு போ வேலு இப்ப ஒரு லேடிஸ்ஸை கூட கூட்டிட்டு போறதுதான் நல்லது என்ற சத்யன் அவள் முகத்தை தனது அடிவயிற்றில் வைத்து மென்மையாக அனைத்து கொண்டான்

வீட்டில் கார் நிற்க நீங்க இங்கேயே இருங்க சார் நான் போய் விபரம் சொல்லி கூட்டிட்டு வர்றேன் என்று வீட்டுக்குள் ஓடினான் வேலு

அங்கே மான்சியின் அம்மாவும் அத்தையும் இருக்க அவர்களிடம் பதட்டத்துடன் விபரம் சொல்லி அழைத்து வர

அவர்கள் அவளுக்கு தேவையான பொருட்களுடன் முகத்தில் கலவரத்துடன் வேகமாக வந்து காரில் ஏற கார் வேலுவின் கைகளில் கார் சீறிக்கொண்டு பறந்தது

இருந்த பதட்டத்தில் வந்த மருமகனை நலம் விசாரிக்ககூட இல்லை ரேவதி

மருத்துவமனையில் மான்சியை ஸ்ட்ரெச்சரில் வைத்து லேபர் வார்டு நோக்கி தள்ளிக்கொண்டு போக அவள் அத்தையும் கூடவே போனாள்

ஆனால் வெகுநேரமாகியும் குழந்தை பிறக்கவில்லை

மாலை மணி 5

மூர்த்தி,நிவேதா,விஷ்ணு,என எல்லோரும் வந்து காத்திருக்க

மனதில் ஏகப்பட்டகுழப்பங்கள்,கேள்விகள்,சஞ்சலங்களுமாக சத்யனும் காத்திருந்தான்

அப்போது மான்சியின் அத்தை லேபர் ரூமிலிருந்து பதட்டமாக வர ரேவதி என்னாச்சு அண்ணி என்று விசாரிக்க

அத்தை புலம்ப ஆரம்பித்தாள்

இந்த மான்சிக்கு என்னாச்சுன்னு தெரியல டாக்டரம்மா எவ்வளவோ முயற்சி பண்றாங்க இவளும் ஒத்துழைச்சாதான குழந்தை பிறக்கும்

வலி வர்ர நேரத்துல மூச்சை மேலுக்கு இழுக்கிறா

ஏண்டி இப்படி பண்றேன்னா

கேவி கேவி அழறா கேவாத குழந்தை மேலுக்கு ஏறிக்கும்மான்னா

இவ மதிக்காம சாவறேன்ங்குறா

இன்னும் கொஞ்ச நேரம் பார்த்துட்டு சிசேரியன் பண்ணிரலாம்ன்னு டாக்டரம்மா சொல்றாங்க

இவ ஆப்ரேஷன் வேனாங்றா

ஏன் இப்படி செய்றான்னு தெரியலை என்று அத்தை புலம்ப

அதை கவனமாக கேட்டுக்கொண்டிருந்த சத்யன் மான்சி ஏன் இப்படி செய்கிறாள்ன்னு புரிய நேராக அங்கிருந்த நர்ஸ்சிடம்
'
நான் மான்சியோட புருஷன் நான் அவளை பார்க்கனும் அவகிட்ட பேசனும் அவகூட இருக்கனும் என்னை உள்ளே அனுமதியுங்க என்று கேட்க

அந்த நர்ஸ் இவனை வித்யாசமா பார்த்துட்டு இருங்க டாக்டர்கிட்ட கேட்டுட்டு வர்றேன் என்று உள்ளே போக

போன வேகதத்தில் திரும்ப வந்து இவனை வாங்க என்று உள்ளே அழைத்து போனாள்


உள்ளே மான்சி படுக்க வைக்கப்பட்டிருக்க அவள் கால்கள் மடக்கப்பட்டு முட்டியில் பெல்ட் போட்டு மாட்டப்பட்டிருந்தது

அவள் உடலில் புடவை இல்லை வெறும் ஜாக்கெட் மட்டுமே இருக்க மடக்கிய முட்டிமீது பச்சை நிற துணி போட்டு மூடப்பட்டிருக்க மிகவும் சோர்ந்து கலைத்து தெரிந்தாள் மான்சி

வேகமாக அவளருகில் சென்ற சத்யன் ஒரு கையில் குளுக்கோஸ் ஏறிக்கொண்டிருக்க மறு கையை எடுத்து தன் மார்பில் வைத்து அழுத்த அவள் கண்விழித்து இவனை பார்த்து திகைக்க

சத்யன் மெதுவாக அவள் காதருகில் குனிந்து பேச ஆரம்பித்தான்

மான்சி 'நான் எந்த தப்பு செய்திருந்தாலும் அதுக்காக இந்த சமயத்தில் உன்கிட்ட மன்னிப்பு கேட்டுக்கிறேன் ப்ளீஸ் என்னை மன்னிச்சிரும்மா என் மேல் இருக்கிற கோபத்தில் குழந்தையை பழிவாங்காத மான்சி

நீ நல்லபடியாக வீட்டுக்கு வந்ததும் எல்லா பிரச்சினையும் பேசி தீர்க்கலாம் உலகத்தில் தீர்வே இல்லாத பிரச்சினை எதுவும் கிடையாது

ப்ளீஸ் மான்சி முயற்சி செய்து குழந்தையை வெளியே கொண்டு வாம்மா உருக்கமாக சத்யன் வேன்ட

அப்போது அவளுக்கு அதி தீவிரமாக இடைவெளி இல்லாது வலி வர

இன்னும் கொஞ்சம்தான் ம்ம்ம் புஷ் பண்ணும்மா மான்சி ம் ஒன் டூ த்ரீ என்று டாக்டர் குரல் கொடுக்க

மான்சி மூச்சை அழுத்தி முக்கி கீழ் வழியாக விட்டாள்

உடம்பின் மொத்த ரத்தமும் முகத்தில் பாய சிவந்த முகத்தோடு கண்களை இறுக மூடி பற்களை கடித்து முக்கி தன் குழந்தையை வெளியே தள்ள முயற்ச்சிக்க

அவனது பிள்ளையை பெற அவள் படும் கஷ்டத்தை பார்த்து சத்யனுக்கு கண்ணீர் வரும் போல் இருந்தது.

மாலை மணி 6-25
தனது தாயின் பக்க சுவர்களை பிளந்து அவளின் உதிரத்தை உடல் முழுவதும் பூசிக்கொண்டு தனது அழுகுரலால் அந்த அறையையே கிடுகிடுக்க வைத்துக்கொண்டு வெளியே வந்தது குழந்தை
குழந்தையின் அழுகுரல் கேட்டு சத்யன் திரும்பி பார்க்க
ஆண் குழந்தை சார் என்றாள் புன்னகையுடன் நர்ஸ்
நீங்க வெளியே போங்க சார் இனிமேல் நாங்க பார்த்துக்குவோம் என டாக்டர் கூற
சத்யன் திரும்பி மான்சியை பார்த்தான்
அவள் அரை மயக்கத்தில் கலைத்து கண்மூடி கிடந்தாள்
அவளின் நெற்றியில் தனது உதடுகளை மெனமையாக பதித்துவிட்டு சத்யன் வெளியே வர
குடும்பம் முழுவதும் அவனை மொய்த்து கொண்டது
குழந்தை பிறந்திருச்சா என்ன குழந்தை என்று எல்லோரும் கேட்க
ம்ம் ஆண் குழந்தை என்றான் முகம் முழுவதும் புன்னகையோடு
அவனுக்கு எங்கே பறப்பது போல் இருந்தது
கடும் கோடையில் வரும் குளிர் தென்றலாய் இருந்தது அவனது குழந்தையின் பிறப்பு

வேலு ஓடி வந்து சத்யனுக்கு கைகொடுத்து வாழ்த்தினான்

சத்யனுக்கோ அந்த வானமே தன் வசப்பட்டது போல் இருந்தது

வருடத்துக்கு ஒருமுறைதான் வசந்தம் வரும்
சத்யனுக்கு மட்டும் இனி வருடம் முழுவதும் வசந்தம் வரும் போல் இருந்தது

ஆனால் மான்சியின் நிலை இவனுடன் இணைவாளா
காலம்தான் பதில் சொல்ல வேன்டும்

வேலு வந்து சாப்பிட அழைத்த பிறகுதான் பசியின் உணர்வே வந்தது சத்யனுக்கு

வேலுவிடம் சிறிது பணத்தை கொடுத்து இருப்பவர்களின் தேவைகளை கவனித்துவிட்டு மறுபடியும் ஹோட்டல் சென்று சத்யன் குளித்து சுத்தமாகி வருவதற்க்குள் மான்சியை அறைக்கு மாற்றி இருந்தார்கள்

வந்தவன் நேராக மான்சியிடம் வர அவள் உறங்கிக்கொண்டிருந்தள்

குழந்தையின் தொட்டிலருகே போய்ப்பார்க்க

வெள்ளைநிற டவலில் முகம் மட்டும் தெரியும்படி சுற்றப்பட்டிருந்தது குழந்தை

ரொம்ப அழகாக இருந்தது குழந்தை

மான்சி ஒரு பூங்கொத்து என்றால்
குழந்தை ஒற்றை ரோஜா போல் இருந்தது

சத்யனுக்கு குழந்தையை தொட்டு பார்க்கவேன்டும் போல இருந்தது

இது என் குழந்தை எனது ரத்தம் என்று மனதுக்குள் கர்வப்பட்டான்

தொட்டிலருகே வந்த ரேவதி குழந்தை யார்மாதிறின்னு தெரியல ஆனா வலது கையில் ஆறு விரல் இருக்கு என்றவள் டவலை நீக்கி குழந்தையின் விரல்களை பிரித்து காண்பிக்க

அங்கே சுண்டுவிரல் அருகே ஒரு சிறு சதை துணுக்கு ஆறாவது விரலாக உறுவாக்கியிருந்தது

ஆச்சரியமாக இருந்தது சத்யனுக்கு கடவுளின் ஜித்து விளையாட்டை என்னி சிலிர்த்தது சத்யனுக்கு
எவளை வேன்டாம் என்று வெறுத்தாளே அவன் அம்மா அவளின் வயிற்றிலேயே அவன் அம்மாவின் ஜெராக்ஸ் என நினைத்தவன் குழந்தையை தொட்டு தொட்டு பார்த்தான்

மான்சி விழிக்க காத்திருந்தான்

அந்த நிமிடத்தில் சத்யன் சில முடிவுகள் எடுத்தான்




No comments:

Post a Comment