Friday, January 23, 2015

செக்மேட் - சைபர் கிரைம் திரில் தொடர் - பாகம் - 6


அறைக்குள் நுழைந்த மேனகா தன் ஆடைகளை ஒவ்வொன்றாகக் களையத் தொடங்கினாள். சேலையையும் ரவிக்கையையும் அவிழ்த்தபின் பிராவுடன் நின்றவளின் முலைக் காம்புகள் விரைத்து பிராவுக்கு வெளியே எட்டிப் பார்த்தன. பிராவை களைந்தபின் பெட்டிகோட்டின் நாடாவை இழுக்க அது அவளை சுற்றி வட்டமாக தரையில் விழுந்தது. அணிந்து இருந்த பேண்டீஸையும் களைந்து மழுக்கப் பட்ட மன்மத வாசலுடன் காட்சி அளித்தவளைப் பார்த்து சுந்தரின் ஆண்மை எழவில்லை. நிர்வாணமாக குளியலறையை அடைந்து குளித்து முடித்து ஒரு டவலை சுற்றியபடி வந்தவள் அதனையும் களைந்து கொண்டு வந்திருந்த பையிலிருந்து ஒரு வலை போன்ற நைட்டியை எடுத்து அணிந்து கொண்டாள். அருகிலிருந்த கூஜாவில் இருந்த நீரை எடுத்து பருகிய பிறகு டீ.வியை பார்த்த வாறு படுக்கையில் சாய்ந்தாள். அறைக்குள் வருபவருக்கு பேன்டீஸ் அணியாத அவளது மன்மத வாசலின் தரிசனம் கிடைக்கும்படி படுத்து இருந்தாள்.
ஐந்து மணிக்கு தாளிடாத அறைக் கதவை திறந்து உள்ளே நுழைந்த பிரகாஷைப் புன்முறுவலுடன் பார்த்தபடி ஒன்றும் பேசாமல் கால்களை மட்டும் அகட்டிக் பலாச்சுளைகளை சேர்த்து வைத்தார் போன்றிருந்த அவளது மன்மத வாசலை அவனுக்கு காட்டினாள். சுந்தருக்கு மூச்சடைத்தது. கோபமும் தாபமும் அவரை வாட்டின. கண்களில் வழிந்த கண்ணீர் அவர் சட்டையை நனைக்க அமர்ந்து இருந்தார். "வாவ், ஹனி, யூ டிட் இட் அகேய்ன் .. அப்படியே இரு " என்றவாறு பிரகாஷ் தன் உடைகளைக் களைந்தான். நிர்வாணமாக கட்டிலை நெருங்கி மண்டியிட்டு அமர்ந்து மேனகாவை தொடாமல் தன் நாக்கை மட்டும் அவளது மன்மத மேட்டின் மேல் ஓடவிட்டான். மேனகா சிலிர்த்தாள். முனகினாள். சிறிது நேரத்தில் அம்மேட்டை முழுவதும் தன் எச்சிலால் ஈரப் படுத்தியவன் அவளது குகைக்குள் நாக்கை செலுத்தினான். மேனகா புழுவாகத் துடித்தாள். முனகலை அதிகரித்தாள். ஒரு விரலை அவளது வாசலுக்குள் நுழைத்து முன்னும் பின்னும் விட்டு எடுத்தபடி நாக்கால் அவளது மன்மதப் பருப்பினை சுண்டினான். மேனகாவின் முனகல் ஒரு சிறு அலறலாகி அவள் உச்சம் அடைந்தாள். அந்த காட்சி அவர் கண்ணுக்கு ஒரு கீழ்தரமான போர்னோ வீடியோவை பார்ப்பது போல் இருந்தது. இல்லை .. இல்லை ... இரு மிருகங்கள் சேர்வதைப் பார்ப்பது போல் உணர்ந்தார். உடனே தன் அன்பு மனைவியை நினைத்து அழுதார். கண்களை கணிணித் திரையில் இருந்து அகற்றி அதிலிருந்து வரும் ஒலிகளை மட்டும் காதில் வாங்கியவாறு அமர்ந்து இருந்தார். சில நிமிடங்களில் அழுத்தமாக முத்தமிடும் சத்தம் .. சிறு சல சலப்பு .. பிறகு ஒரு சத்தமும் இல்லாமல் இருக்க கண்களை கணிணித் திரைக்கு திருப்பினார். பிரகாஷ் படுக்கையில் மல்லாந்து படுத்து இருக்க அவனருகே மண்டியிட்டு குனிந்த படி மேனகா சீரான வேகத்தில் அவன் உறுப்பை தன் அழகான உதடுகளால் கவ்வி சப்பி வாயில் குதப்பிய எச்சிலை வழியவிட்டபடி இருந்தாள். மறுபடி வயிற்றைக் குமட்ட கண்களை கணிணித் திரையில் இருந்து அகற்றினார். "பிரகாஷ், நாங்க இந்த எழுச்சிய வீணாக்க போறதில்லை. இதுக்குன்னு ஈரமா கதகதப்பா ஒண்ணு காத்து கிட்டு இருக்கு நான் இதை அதுக்குள்ள விட்டுகிட்டு உன் மேல சவாரி செய்யறேன் (Prakash, We are not going to waste that erection. I have something warm and snug waiting for it. Let me put this in it and ride you)" என்ற அவளது குரல் அவரது இதயத்தை ஈட்டியால் தாக்கியது. கணிணித் திரையிலிருந்து கண்களை அகற்றிய சுந்தர் முதலில் கூரையைப் பார்த்து பின் தன் இருக்கையின் கையூன்றி தன் தலையை கைகளால் தாங்கியபடி அழுது குலுங்கினார். கண்களை மறுபடி அத்திரைக்கு செலுத்தும் போது அவர்கள் இருவரும் இடம் மாறி இருந்தனர். பிரகாஷ் மேனகாவின் அகட்டிய கால்களுக்கிடையே படுத்து அதி வேகமாக இயங்கிக் கொண்டிருந்தான். சில கணங்களில் உடலை வில்லாய் வளைத்தவன், "எனக்கு வருது, எனக்கு வருது" என்றவாறு அவள் மேல் கவிழ்ந்தான். நேரம் போனது தெரியாமல் அழுது வீங்கிய முகத்தை கழுவியபின் அந்த மெமரி ஸ்டிக்கையும் அதனுடன் திலக் கொடுத்து அனுப்பி இருந்த ரிப்போர்ட்டையும் தன் லாக்கரில் வைத்து பூட்டினார். அவர் முகம் இறுகத் தொடங்கி இருந்தது. அடுத்தது அவர்களை கையும் களவுமாக பிடிக்க எண்ணினார். மறுபடி திலக்கை அழைத்து அந்த கெஸ்ட் ஹவுஸின் அறைகளுக்கு மாற்றுச் சாவி வேண்டும் என்று கேட்டார். பதபதைத்த திலக் "சுந்தர், உன்னோட ஆதங்கம் எனக்கு புரியுது. ஆனா நீ ஒரு புகழ் பெற்ற லாயர்ங்கறதை மறந்துடாதே. சட்டப் படி என்ன நடவடிக்கை வேணும்னாலும் எடு. வேற ஒண்ணும் செய்யாதே" என்று கெஞ்சிய திலக்கிடம் "திலக், சட்டத்துக்கு புறம்பா நான் ஒண்ணும் பண்ணப் போறதில்லை. அவங்க ரெண்டு பேரையும் கையும் களவுமா பிடிச்சுட்டு அவங்க கூட ஒரு சின்ன உரையாடல் நடத்தப் போறேன். அவ்வளவுதான். அதுக்கப்பறம் நான் மேனகா மூஞ்சிலயே முழிக்கப் போறதில்லை. என்னோட லாயர்தான் மேனகாகிட்ட பேசுவார். ப்ராமிஸ்" என்றபிறகு திலக் அவர் கேட்ட சாவிகளை அமைத்துத் தர ஒப்புக் கொண்டார். சொன்னபடி அடுத்த வியாழன் அன்று சாவிகளையும் ஒப்படைத்தார். அரை மணி நேரத்திற்கு பிறகு அழுது வீங்கிய முகத்துடன் வெளியில் வந்த மேனகா தன் காரின் அடியிலிருந்து வந்த நித்தினைப் பார்த்தாள். சிறு வயதிலிருந்து காரோட்டிப் பழகிய மேனகா அவன் கையிலிருந்த காரின் ப்ரேக் பேடையும் தரையில் வழிந்து ஓடிய ப்ரேக் ஃப்ளூயிடையும் பார்த்தபின், "சோ, உனக்கும் தெரியுமா?" என்றவாறு அவனை கண்களில் கண்ணீர் வழியப் பார்த்தாள். பேசாமல் நின்று இருந்தவனின் அருகில் சென்று அவன் கன்னத்தை தடவியபடி, "எப்ப இருந்து உனக்கு தெரியும்னு தெரியல. நாலு மாசமா அவருக்கு நான் துரோகம் பண்ணிட்டு இருந்து இருக்கேன். அது தெரிஞ்சும் என்னை ஒண்ணும் பண்ணாம போற மனுஷங்கிட்ட பேசவே தகுதி இல்லாதவள்ன்னு அவர் கிட்ட என்னால ஒண்ணும் சொல்ல முடியல. ஆனா உங்கிட்ட ஒண்ணு சொல்றேன். நானும் ஒரு மனுஷிதான். உடம்பு பசிக்காக மட்டும்தான் பண்ணினேன். அதுகூட நீ ஹாஸ்டலுக்கு போகாம என்கூட இருந்து இருந்திருந்தா சத்தியமா இந்த மாதிரி அலைஞ்சு இருக்க மாட்டேன்" என்றாள். பிறகு தன் விசும்பலைக் கட்டுப் படுத்தி, "கடைசியா உன்னை ஒரு தடவை பாக்கலாம்னு தான் கிளம்பினேன். நீயே என்னை வழியனுப்ப வந்துருக்கே. நல்லவனா இரு. என்னை மாதிரி ஒரு அம்மா உனக்கு வேண்டாம்." என்றவாறு காரில் ஏறி காரை வேகமாகக் கிளப்பிச் சென்றாள். சில கணங்கள் உறைந்து நின்றிருந்த நித்தின் காரின் பின்னால் "அம்மா! அம்மா!! " என்று கதறியபடி ஓடினான். அதற்குள் அவன் கண்களிலிருந்து மேனகாவின் கார் மறையத்தொடங்கி இருந்தது. சாலையில் இறங்கி ஓடத் தொடங்கியவன் சுற்று முற்றும் பார்த்து சாலையில் வரும் வாகனங்களை தடுத்து நிறுத்த கையசைத்தான். பாதி இருளிலிருந்த அந்த மலைச் சாலையில் ஒருவரும் அவனுக்காக நிறுத்தவில்லை. சிறிது தூரம் ஓடியவன் மகன் அதிகமாக ஓடி களைக்க வேண்டாம் என்று கருதிய தாயின் கார் மலைச் சரிவில் விழுந்து கொழுந்து விட்டு எரிவதைப் பார்த்தான். தன் தாயின் விபத்துக்கு தான் காரணம் என்று எவரிடமும் சொல்லாமல் மறைத்தான். அப்படிப் பட்ட தாயின் மறைவுக்கு தன் தந்தை கதறி அழுததைக் கண்டு வியந்தான். தனியே தந்தையிடம் இருந்த போது "அப்பா, அம்மா உங்களுக்கு தெரியாம .. பூனாவுக்கு வரும்போதெல்லாம் கெஸ்ட் ஹவுஸ்ல பிரகாஷ் அங்கிளோட .." என்று ஆரம்பிக்க. அவனை மேலும் சொல்ல விடாமல் அவனுக்கு எப்படித் தெரிந்தது என்று கேட்க அவன் நடந்தவற்றை அவரிடம் கூறி அழுதான். கதி கலங்கிய சுந்தர் "நீ ப்ரேக்கை கழட்டினேன்னு தெரிஞ்சும் உன்னோட அம்மா காரை எடுத்துட்டு போனாங்க. அவங்க பண்ணிகிட்டது தற்கொலை. போலீஸும் அதைத்தான் நம்பறாங்க. இதை யார் கிட்டயும் சொல்லி உன் ஃப்யூச்சரை பாழடிச்சுக்காதே" என்று ஆறுதலளித்தார். Joshua's Plan Explained Sunday, May 4, 2008 ஜாஷ்வாவின் திட்டம் விளக்கப் படுகிறது ஞாயிறு, மே 4, 2008 காலை பதினோறு மணி அளவில் ஜாஷ்வா நித்தின், சக்திவேல் இருவரையும் அழைத்து செல்ல அவர்கள் ஃப்ளாட்டுக்கு வந்தான். "என்ன ரெண்டு பேரும் நான் சொன்னதை யோசிச்சு பாத்தீங்கள?" நித்தின், "எஸ் ஜாஷ்வா, ஆனா உன்னோட ப்ளான் என்னன்னு தெரிஞ்சதுக்கு அப்பறம் எங்களோட சம்மதத்தை சொல்றோம்" ஜாஷ்வா, "நோ ப்ராப்ளம் .. வாங்க என் வீட்டுக்கு போலாம். என் மனைவி ஒரு நல்ல சௌத் இண்டியன் லஞ்ச் சமைச்சுட்டு இருக்கா. நித்தின் உனக்கு ஓ.கே தானே. என் மனைவி கேட்டுக்க சொன்னா" சக்திவேல்,"அவன்கிட்ட நீ அதை கேக்கவே வேண்டாம். அவன் என்னை விட சௌத் இண்டியன் ஃபுட்டுக்கு அலையறவன்" ஜாஷ்வா, "வாட் அபௌட் நான்-வெஜ்?" நித்தின், "வெஜ் சாப்பாடுன்னா நாங்க ரெண்டு பேரும் வரலை!" மூவரும் சிரித்தபடி வெளியில் வந்து ஜாஷ்வாவின் வெள்ளை நிற டொயோடா ப்ரிய்ஸ் (Toyota Prius) காருக்கு வந்தனர். நித்தின், "வாவ், டொயோடா ப்ரியஸ்! எவ்வளவு மைலேஜ் உனக்கு கிடைக்குது" ஜாஷ்வா, "அவங்க விளம்பரம் பண்ணின அளவுக்கு இல்லை. ஆனா ஓரளவு பரவாயில்லை" சக்திவேல், "ஏன்? இங்க உனக்கு லாங்க் டிஸ்டன்ஸ் ட்ராவல் அதிகம் இல்லையா?" ஜாஷ்வா, "ரொம்ப கம்மி. வீக் எண்டுல கொஞ்சம் வெளிய போயிட்டு வருவோம். அதோட சரி" என்றவாறு காரைக் கிளப்பினான். நித்தின், "எங்களுக்கும் கார் தேவைப் படுது. ஒரு வருஷத்துக்கு உபயோகிக்கப் போறோம். எது பெட்டர். வாங்கறதா இல்லை ரெண்டல் எடுத்துக்கறதா?" ஜாஷ்வா, "அது நீங்க என் ப்ளானுக்கு ஒத்துக்கறதை பொறுத்தது" சக்திவேல், "நாங்க உன் ப்ளானுக்கு ஒத்துக்கறதுக்கும் காருக்கும் என்ன சம்மந்தம்?" ஜாஷ்வா, "என் ப்ளானை அமுல் படுத்தறதுக்கு நாம் மூணு பேரும், எந்த மாதிரி கார்ல போறோம், எந்த இடத்துல வசிக்கறோம், இப்படி எல்லா விஷயத்திலும் முன் ஏற்பாடுகள் நிறைய செய்யணும். வீட்டில விரிவா சொல்லறேன்" மௌனமாக மூவரும் பயணம் செய்ய சில நிமிடங்களில் ஜாஷ்வாவின் இருப்பிடம் வந்து சேர்ந்தனர். நித்தின், "உன் வீடு இவ்வளவு பக்கத்தில இருக்கா?" ஜாஷ்வா, "இந்த ஏரியாவுக்கு பேரு ஹார்லம் .." நித்தின், "ஓ, ப்ளாக் கெட்டோ (Black Ghetto).. " என்ற பிறகு நாக்கை கடித்துக் கொண்டு மேலும் எதுவும் சொல்லாமல் நிறுத்தினான். ஜாஷ்வா, "ஹேய், நீக்ரோன்னு (Negro) சொன்னாலும் நான் தப்பா எடுத்துக்க மாட்டேன். உண்மையில் வெள்ளைக்காரங்கள் எல்லாம் எங்களை ஆஃப்ரிக்கன்-அமெரிக்கன் அப்படின்னு கூப்படறாங்க. ஆனா எங்க ஜனத்துக்குள்ள பாத்தீங்கன்னா ஒருத்தனை ஒருத்தன் நிக்கர் (Nigger) அப்படின்னு சொல்லிக்குவானுக!" சக்திவேல், நித்தின் மௌனமாக அவன் வீடு இருந்த கட்டிடத்துக்குள் நுழைந்தனர். வாசற்கதவை தன் பாக்கெட்டில் இருந்த சாவியை எடுத்து ஜாஷ்வா திறக்க, சக்திவேல், "வீட்டுல உன் மனைவி இல்லையா?" "அவ இருந்தாலும் அவளுக்கு எதுக்கு சிரமம் கொடுக்கறதுன்னு நான் எப்பவும் வீட்டு சாவி ஒண்ணு வெச்சுக்குவேன்" என்ற ஜாஷ்வாவிக்கு தன் மனைவி மேல் இருந்த கரிசனத்தைக் இந்திய நண்பர்கள் இருவரும் ரசித்தனர். ஜாஷ்வாவை தொடர்ந்து உள்ளே நுழைந்தவர்கள் சமையலறைக்குள் இருந்து வந்த அழகான பெண்ணை கண் கொட்டாமல் பார்த்தனர். தோள்வரை வெட்டப் பட்ட அடர்ந்த கூந்தல், மாநிறம், வட்ட முகம், அளவான நெற்றியின் நடுவே வட்டப் பொட்டு, வில்லாய் வளைந்த புருவங்களுக்கு கீழ் மைதீட்டாமலே மிளிறும் மீன் விழிகள், கொழு கொழு கன்னங்கள், சிறிய வாயை சுற்றிய சற்றே தடித்த உதடுகள். இடுப்புக்கு மேல் அவள் அணிந்து இருந்த கம்பளியாலான ஆரஞ்சு வர்ண கார்டிகனும் கீழே இருந்த ஜீன்ஸும் அவளது அங்க வளைவுகளை அழகாக எடுத்து காட்டின. புன் முறுவலுடன், "ஹாய், ஐ அம் சஞ்சனா எட்வர்ட்ஸ்." என்றவள் இந்திய நண்பர்கள் இருவருக்கும் புரியும்படி, "ஐ அம் திஸ் மேன்'ஸ் தர்மபத்தினி (I am this man's Dharma pathini)" என்றாள். நித்தின், "ஹாய், மிஸஸ் எட்வர்ட்ஸ்" என்றவாறு கை நீட்டினான். குலுக்கிய கையை விடாமல், "மிஸஸ் எட்வர்ட்ஸ் ஆனதுக்கும் மத்தவங்க அப்படி கூப்படறதுக்கும் ரொம்ப நாள் சந்தோஷப் பட்டாச்சு" என்றபடி ஜாஷ்வாவை பார்த்து முகத்தில் ஒரு போலி நக்கலுடன் "இப்ப கொஞ்சம் போரடிக்குது. சஞ்சனான்னே கூப்பிடுங்க" என்றாள். சக்திவேல், "ஹாய், சஞ்சனா" என்று தொடர்ந்து தமிழில், "நீங்க தமிழ்ன்னு ஜாஷ்வா சொன்னார். தமிழ்நாட்டில இருக்கற ஈரோட் என் சொந்த ஊர்" சஞ்சனா, "இப்பதான் உங்க ஃஃப்ரெண்டுகிட்ட ஃபார்மாலிடி ஒண்ணும் வேண்டாம்னு ஃபர்ஸ்ட் நேம் சொல்லி கூப்பட சொன்னேன். உங்க கிட்ட தனியா சொல்லணுமா. உங்களை விட நான் வயசிலும் சின்னவ தான். நீ, வா, போன்னு கூப்பிடுங்க" சக்திவேலுக்கு சஞ்சனா, ஊரில் இருக்கும் தங்கை சாந்தியை நினைவு படுத்தினாள். சஞ்சனாவுக்கு சக்திவேல், மறைந்த சந்தோஷை நினைவு படுத்தினான். அவளை அறியாமல் அவள் கண்கள் பனிக்க, "உங்களை நான் அண்ணான்னு கூப்படலாமா?" என்றதும் சக்திவேல் 'இது தெய்வச் செயலோ. அல்லது என் மனதை இவள் படித்தாளோ' என்று எண்ணி "ஓ, தாராளமா. உண்மையில் நான், நீ என் தங்கையை நினைவு படுத்தறேன்னு சொல்ல இருந்தேன்" சஞ்சனா, "நீங்க என் அண்ணன் சந்தோஷை நினைவு படுத்தறீங்க. அவன் உங்க உயர மில்லை ஆனா ஆள் பாக்க உங்களை மாதிரி கொஞ்சம் வாட்ட சாட்டமா இருப்பான்"
சக்திவேல், "ஓ, அப்படியா, இப்ப எங்க இருக்கார்" சஞ்சனா வான் நோக்கி விரலைக் காட்டி தமிழில், "மூணு வருஷம் ஆச்சு" சக்திவேல், நித்தின் இருவரும் ஒரு சேர, "ஓ, சாரி சஞ்சனா" என்றதும் நித்தினை சற்று வியப்புடன் பார்த்தாள். நித்தின், "இவன்கூட இவன் அம்மா தங்கைகூட எல்லாம் பேசி எனக்கு கொஞ்சம் தமிழ் தெரியும். அதே மாதிரி இவனுக்கும் கொஞ்சம் மராட்டி தெரியும்" ஜாஷ்வா, "எனக்கும் தமிழ் தெரியும்" என்று ஆங்கிலத்தில் சொல்ல சஞ்சனா, "ஐய்யோ, வேண்டாம் இவர் நிஜமாவே தமிழ்நாட்டில இருந்து வந்து இருக்கார். எங்களுக்கு எல்லாம் எங்க மொழியை கேவலப் படித்தினா பிடிக்காது" என்று கிண்டலடித்தாள். பிறகு, "என்ன குடிக்கறீங்க? ஜூஸ் அல்லது பியர்?" என்க ஜாஷ்வா இடைமறித்து, "ஹனி, நாங்க கொஞ்சம் டிஸ்கஸ் பண்ணனும். அதனாலதான் கொஞ்சம் சீக்கரமா அழைச்சுட்டு வந்தேன். பியர் இப்ப வேண்டாம். கொஞ்ச நேரம் கழிச்சு" என்றான். சஞ்சனா, "அப்ப காஃபி?" என்றதும் எதிரில் இருந்த மூவரும் "எஸ்" என்றனர். சஞ்சனா, "சரி, நீங்க ரெண்டு பேரும் காஃபி பிரியர்கள் தானா? போட்டுட்டு வர்றேன்" என்று தொடர்ந்து "அண்ணா, உங்களுக்கு ஃபில்டர் காஃபிதானே?" என்று சக்திவேலிடம் கேட்க நித்தின், "எனக்கும் ஃபில்டர் காஃபிதான்" சஞ்சனா, "சரி, அப்ப மூணு பேருக்கும் ஃபில்டர் காஃபி" என்று சமையல் அறைக்குள் நுழைய இந்திய நண்பர்கள் இருவரும் ஜாஷ்வாவை வியப்புடன் பார்த்தனர் ஜாஷ்வாவை தொடர்ந்து ஹாலுக்கு அருகே இருந்த அவனது அலுவலக அறையை அடைந்த நித்தினும் சக்திவேலும் அங்கு இருந்த கணிணிகளையும் உப கருவிகளையும் பார்த்து வாய் பிளந்தனர். நித்தின், "ஹேய், வாட் இஸ் திஸ்? ஒரு கணிணி ஆராய்ச்சிக் கூடம் மாதிரி இருக்கு?" ஜாஷ்வா, "நிஜமா இது ஆராய்ச்சி கூடம்தான்" என்றவன் அங்கு ஒரு மேசைக்கு எதிரே இருந்த இரு நாற்காலிகளை அவர்களுக்கு இழுத்து கொடுத்து விட்டு "உக்காருங்க .. " என்றபடி எதிரில் ஒரு கணிணியின் முன் இருந்த நாற்காலியை தனக்கு இழுத்து கொண்டு அமர்ந்தான். அவனுக்கு அருகே சிறு வகுப்பறைகளில் உபயோகிப்பது போன்ற ஒரு வெள்ளை பலகை நிறுத்தப் பட்டு இருந்தது. அதன் அடியில் இருந்த தட்டு போன்ற அமைப்பில் மூன்று வெவ்வேறு வண்ண மார்க்கர் பேனாக்களும் எழுதுவதை அழிக்கும் இரேசரும் இருந்தன. ஜாஷ்வா, "ஆரம்பிக்கட்டுமா?" சக்திவேல், "ம்ம்ம் .. " நித்தின், "ப்ளீஸ் .. " ஜாஷ்வா, "சோ, நான் நேத்து சொன்னது மாதிரி கொலம்பியன் ட்ரக் கார்ட்டெல்காரங்களுக்கு அவங்க பணத்தை இங்க இருந்து பாங்க் மூலம் அவங்க நாட்டுக்கு ட்ரான்ஸ்ஃபர் பண்ணி கொடுக்கறதுதான் என்னோட ப்ளான். எப்படி பண்ணப் போறோம்னு விளக்கறேன்" நித்தின், "ம்ம்ம் .. வேற ஒரு கம்பெனி அக்கௌண்டை அந்த கம்பெனிக்கு தெரியாம உபயோகித்து பண்ண முடியும்ன்னு சொன்னியே ..." ஜாஷ்வா, "எஸ், முதல்ல நான் எங்க வேலை செய்யறேன்னு சொல்றேன்" என்றபடி தான் பணி புரியும் பன்னாட்டு வங்கியின் பெயரை சொல்லி "அதில நான் டீ.பீ.ஏ (DBA என்று அழைக்கப் படும் Data Base Administrator)" நித்தின், "ஓ, So, you will be the insider (சோ, நீ இந்த ஆபரேஷன்ல வங்கிக்கு உள்ள இருந்து காரியம் செய்யப் போற ஆள்)!" ஜாஷ்வா, "எஸ், லெட் மீ எக்ஸ்ப்ளைன். முதல்ல ஆபரேஷன் எப்படி நடக்கப் போகுதுன்னு சொல்றேன். அதுக்கு அப்பறம் அதை எப்படி பண்ண முடியும்ன்னு சொல்றேன்" சக்திவேல், "ஓ.கே .. ஷூட்" ஜாஷ்வா, "ஒரு கன்ஸைன்மெண்டுக்கு நியூயார்க்கில இருந்து அவங்களுக்கு கிடைக்கற பணம் நூற்றி ஐம்பதில் இருந்து இருநூறு மில்லியன் (பதினைந்தில் இருந்து இருபது கோடி) டாலர். நாம் என் வங்கில இருக்கும் எந்த கம்பெனி கணக்கில போடணும்னு சொல்லுவோம். அவங்க அந்த கணக்கில போடுவாங்க (deposit பண்ணுவாங்க). அந்த பணத்தை உடனே நாம் வெளிநாட்டில இருக்கற கார்ட்டெல் காரங்களோட வங்கி கணக்குக்கு உங்க வைரஸ் மூலம் ட்ரான்ஸ்ஃபர் பண்ணிடுவோம். அவ்வளவுதான்" நித்தின், "எப்படி எங்க வைரஸ் மூலம் அதை ட்ரான்ஸ்ஃபர் பண்ண முடியும்?" ஜாஷ்வா, "சொல்றேன். " என்றவாறு அவன் சொன்னது: "பெரிய அளவில வெளிநாடுகள் கூட வியாபாரம் வெச்சுகிட்டு நிறைய பண பரிமாற்றம் செய்கிற கம்பெனிகள் நிறைய எங்க பாங்குல அக்கௌண்ட் வெச்சுட்டு இருக்காங்க. இதில நிறைய ஷிப்பிங்க் (shipping) கம்பெனிகளும் இன்டெர்னேஷனல் ட்ரேடிங்க் (international trading) கம்பெனிகளும் இருக்கு. இந்த மாதிரி கம்பெனிகளில் முக்கால் வாசி பண பரிமாற்றங்கள் வெளி நாடுகள் கூடதான். அவங்க பண பரிமாற்றத்துக்கு செக் (cheque) அல்லது டிமாண்ட் ட்ராஃப்ட் (demand draft) அல்லது வயர் ட்ரான்ஸ்ஃபர் (wire transfer) உபயோகிச்சுட்டு இருந்தாங்க. பணம் போய் செர செக் (cheque) டிமாண்ட் ட்ராஃப்ட் (demand draft) இது ரெண்டுலயும் ரொம்ப நாள் எடுக்கும். வயர் ட்ரான்ஸ்ஃபர் (wire transfer) முறையில் பாங்க் பணி பரிமாற்றம் செய்யும் போது ஒவ்வொரு ட்ரான்ஸ்ஃபருக்கும் ஒரு விண்ணப்பத்தை அவங்க வங்கிக்கு அனுப்பணும். வங்கி அந்த விண்ணப்பத்தை வாங்கிட்டு அதில அவங்க சொல்லி இருக்கற மாதிரி அவங்க கணக்கில் இருந்து அவங்க சொல்ற கணக்குக்கு பணத்தை அனுப்பும். இந்த மாதிரி பண பரிமாற்றத்தினால அந்த கம்பெனிகளுக்கும் வங்கிக்கும் நிறைய வேலை. செலவும் அதிகம். அந்த மாதிரி கம்பெனிகள் உபயோகப் படுத்தறதுக்காக எங்க வங்கில ஒரு மென்பொருள் எழுதினாங்க. அந்த மென் பொருள் மூலம் எங்க வங்கிகூட அவங்க தொடர்பு கொண்டு அவங்களுக்கு தேவையான பண பரிமாற்றங்களுக்கான ஆணைகள் கொடுக்கலாம். அவங்க தொடர்பு கொள்ளும் போது அந்த மென்பொருள் அவங்க அனுப்பற ஒவ்வொரு தகவலையும் ஒரு பிரத்தியேக சங்கேத முறையில மாத்தி (encrypt செய்து) இணையம் மூலம் அனுப்பும். அப்படி சங்கேத முறையில் வரும் தகவலை எங்க வலை தளத்தில் இருக்கற இன்னொரு மென்பொருள் மறுபடி மாத்தி (decrypt செய்து) உள்ளே அனுப்பும். இப்படி சங்கேத முறையில் அனுப்பறதுனால யாரும் தகவலை போகும் வழியில் படித்து பார்க்க முடியாது, அது மட்டும் இல்லை அந்த மென்பொருள் மூலம் ஒரு க்ளர்க் அல்லது அக்கௌண்டண்டின் கணிணியில் இருந்து அவங்க பண பரிமாற்றத்துக்கு விண்ணப்பம் எழுத முடியும். ஆனால் மேனேஜர் கணிணியில் இருந்து மென்பொருள் மூலம் கையெழுத்து போடற மாதிரி ஒரு அங்கிகாரம் செஞ்சாத்தான் அந்த பண பரிமாற்றத்தை வங்கி ஏற்றுக் கொள்ளும். இந்த காரணங்களால இந்த மென்பொருள்மூலம் வங்கியை தொடர்பு கொள்ளறது ரொம்ப பாதுகாப்பானதுன்னு இந்த கம்பெனிகளுக்கு எல்லாம் விளம்பரம் பண்ணினாங்க. எல்லா கம்பெனிகளும் இப்ப இந்த மென் பொருள் மூலம்தான் வங்கியை தொடர்பு கொண்டு பண பரிமாற்றம் செய்யறாங்க. மேலும் இந்த மென்பொருள் முலம் மாதா மாதம் அவங்க வங்கி கணக்கு பட்டியலையும் (bank statement) இறக்கம் செஞ்சுக்கறாங்க." இடையில் குறுக்கிட்ட நித்தின், "ஏன், இன்டர்நெட் பாங்கிங்க் உங்க வங்கில இல்லையா?" ஜாஷ்வா, "சமீப காலத்தில நெட் பாங்கிங்க் வந்து இருக்கு. ஆனா இன்னும் அதை கம்பெனிகளுக்கு கொடுக்கல. பிஸினஸ் டு பிஸினஸ் (B2B என்று அழைக்கப் படும் Business-to-Business) பரிமாற்றங்கள் இன்னும் இந்த மென் பொருள் உபயோகிச்சுதான் பண்ணிட்டு இருக்காங்க. இந்த கம்பெனிகளும் இந்த மென் பொருள் உபயோகிச்சு பண்ணறது ரொம்ப பாதுகாப்பானதுன்னு நம்பறாங்க. ஏன்னா அவங்க கணிணில இருந்து மட்டும்தான் அவங்க பண பரிமாற்றம் பண்ண முடியும். நெட் பாங்கிங்க்ன்னா எந்த கணிணி மூலமும் பண்ணலாம் இல்லையா?" சக்திவேல், "சோ, இந்த மென்பொருள் மூலம்தான் வங்கியை தொடர்பு கொள்ள முடியும். எங்க வைரஸ்மூலம் அந்த மென் பொருளை ஆக்கிரமிச்சு அந்த மென் பொருளில் ஒரு ஆள் டைப் பண்ணினது மாதிரி பண பரிமாற்றத்துக்கான ஆணை அனுப்பணும். இல்லையா?" ஜாஷ்வா, "எஸ் .. யூ காட் இட் (Yes, you got it)" நித்தின், "நீ அந்த வங்கில டீ.பி.ஏதானே, பேசாம அந்த மென் பொருளில் இருந்து வந்த மாதிரி தகவலை நீயே வங்கியோட கணிணில பதிச்சுடலாமே?" ஜாஷ்வா, "என்னை மாதிரி இன்னும் பத்து டீ.பி.ஏ இருக்காங்க. அது மட்டும் இல்லை வங்கில பதிக்கறது அவ்வளவு சுலபமானது இல்லை. நானே நேரடியா ஒரு தகவலையும் மாத்தவோ அழிக்கவோ முடியாது" சக்திவேல், "சரி, அவங்க கம்ப்யூடரை எங்க பாட் நெட்டுக்குள்ள கொண்டு வந்து எங்க வைரஸ் மூலம் ட்ரான்ஸ்ஃபரருக்கான ஆணையை அவங்களே டைப் பண்ணின மாதிரி செய்யறோம்னு வெச்சுக்கோ. அதுக்கு அப்பறம் அவங்க வங்கி கணக்கை பாக்கும் போது அந்த ட்ரான்ஸ்ஃபரும் அந்த பட்டியலில் வரும் இல்லையா? அப்ப அந்த கம்பெனி காரங்க வங்கி கிட்ட கம்ப்ளெயிண்ட் பண்ணுவாங்களே?"
ஜாஷ்வா, "குறைஞ்சது ஒரு வருஷத்துக்கு அவங்களுக்கு தெரியாத மாதிரி பண்ணறதுக்கு என் கிட்ட ஒரு உபாயம் இருக்கு" நித்தின், "அது மட்டும் இல்லை. எங்க வைரஸை நாங்க வெவ்வேறு ஈமெயில் மூலம் அல்லது சில வெப் சைட் மூலம் பரவ வைக்கறோம். அந்த கம்பெனி காரங்களுக்கு அந்த மாதிரி ஈமெயில் அனுப்பினா அவங்க ஸ்பாம் (spam) மெயில்ன்னு ஃபில்டர் பண்ணிடுவாங்களே. அதே மாதிரி அவங்க கம்பெனில இருந்து நாங்க வைரஸ் பரப்பும் வெப் சைட்டையும் அணுக முடியாது. அவங்களோட ஃபையர் வால்(Fire-wall - இணைய தொடர்பு பாதுகாப்பு அரண்) தடுத்து விடும். எப்படி அவங்க கம்ப்யூடரை எங்க பாட் நெட்டுக்குள்ள கொண்டு வர்றது?" ஜாஷ்வா, "அதுக்கும் என் கிட்ட ஒரு உபாயம் இருக்கு. சொல்றேன்" என்ற பிறகு சஞ்சனா வருவதை பார்த்து "ஒரு சின்ன ப்ரேக் எடுத்துக்கலாம்" அப்போது சஞ்சனா மூவருக்கும் காஃபியும் தனக்கு ஒரு கோப்பையில் டீயும் கொண்டு வந்து அவர்களுடன் அமர்ந்தபடி, சக்தியிடம் தமிழில், "என்ன அண்ணா உங்க மச்சினன் சன் டீவில வர்ற மாதிரி ஷார்ட் ப்ரேக்குன்னு சொல்றார்?" அறிமுகம் ஆகி சில நிமிடங்களில் அவள் எடுத்துக் கொண்ட உரிமை சக்திக்கு மிகவும் பிடித்து இருந்தது. பிறகு, நித்தினிடம் அழகான ஆங்கிலத்தில், "நித்தின் கண்டுக்காதீங்க .. எனக்கு சக்திகூட தமிழ்ல பேசிட்டே இருக்க்ணும் போல இருக்கு" என்றாள். சக்திவேல், "ஜாஷ்வாக்கு நீ தமிழ் சொல்லி கொடுக்கற மாதிரி இருக்கு?" சஞ்சனா, "பின்னே, அப்பறம் பொறக்கப் போற குழந்தைகள் கூட இவர் பேசணும் இல்லை? அதனால் தினமும் உக்காந்து தமிழ் சொல்லி கொடுத்துட்டு இருக்கேன். முதல்ல குழந்தை பிறக்கறதுக்கு முன்னாடி சொல்லி கொடுத்திடலாம்ன்னு நினைச்சுட்டு இருந்தேன். ஆனா, சாகறதுக்கு முன்னாடி நாலு வார்த்தை உருப்படியா பேசினா போதும்ன்னு இருக்கு." சக்திவேல் ஜாஷ்வாவிடம், "ஏன் ஜாஷ், தமிழ் அவ்வளவு கஷ்டமா?" நித்தின், "நம்ம பெங்களூர் சிவாஜிநகர்ல பேசற தமிழ் ஈஸி. இவ பேசற தமிழ் கஷ்டம்தான்" சஞ்சனா, "ஓ நீங்க ரெண்டு பேரும் பெங்களூர்காரங்க இல்லை? அங்க தமிழை வெச்சு சமாளிச்சுக்கலாம்ன்னு கேள்வி பட்டு இருக்கேன்" சக்திவேல், "உனக்கு எப்படி தெரியும் தமிழ் தெரிஞ்சா சமாளிக்கலாம்ன்னு?" சஞ்சனா அவனை கூர்ந்து பார்த்து பிறகு ஜாஷ்வாவிடம், "கேன் ஐ டெல் ஹிம் (அவனுக்கு நான் சொல்லட்டுமா) ?" என்க ஜாஷ்வா தலை அசைக்க, சில வரிகளில் தன் வாழ்க்கை வரலாற்றை தலை குனிந்தவாறு சொன்னாள். "ராஜிவ் கொலை வழக்கில சிக்கின போராளி சிவராசனோட கஸின் ஒருத்தி என்னோட முகாம்ல இருந்தா. அவமூலம் தான் பெங்களூரைப் பத்தி கேள்வி பட்டேன்" என்ற பிறகு தலை நிமிர சக்தியின் கண்கள் குளமாகி இருந்ததைக் கண்டாள். சஞ்சனா, "என்ன இது? என் கதையை கேட்டு கண் கலங்கறீங்க?" நித்தின், "எங்க டீம்ல இவனுக்கு வெச்சு இருக்கற பேர் என்ன தெரிய்மா? ஜெண்டில் ஜயன்ட் (Gentle Giant)!" சஞ்சனா, "எங்க அண்ணன் என்ன ராட்சசன் மாதிரியா இருக்கார்? ஒரு என்.பி.ஏ (NBA) ஸ்டார் மாதிரி இல்ல இருக்கார்?(NBA என்று அழைக்கப் படும் National Basketball Association அமெரிக்காவில் கூடைப் பந்து ஆட்டத்துக்கு நமது ஐ.பி.எல் (IPL) பொன்ற ஒரு அமைப்பு) " சக்திவேல், "அப்ப வேணும்னா வேற ஒரு தொழிலுக்கு மாற தகுதி இருக்குன்னு சொல்லு" சஞ்சனா, "சரி, நான் போய் சமயலை கவனிக்கறேன். சாதத்துக்கு கூட செட்டிநாட்டு கோழி வருவல், மட்டக்களப்பு மீன் குழம்பு, எலுமிச்சை ரசம், மிக்ஸ்ட் வெஜிடபிள் சாலட், கூட எங்க வீட்டுக்காரர் எப்ப கொடுத்தாலும் சாப்பிடற அப்பளம், வடகம், மோர் மிளகாய். ஓ.கேவா?" நித்தின், "சொல்லாதே. எனக்கு இப்பவே நாக்கில் எச்சில் ஊற ஆரம்பிச்சுடுச்சு" சஞ்சனா, "ஓ, சாப்பட்டுக்கு கொஞ்சம் முன்னாடி சொல்லுங்க பியர் அல்லது வொய்ட் வைன் கொண்டு வந்து தரேன். சாப்பிட்டதுக்கு அப்பறம் ஃப்ரூட்ஸ் கூட சூஃப்ளே அப்படின்னு நான் பண்ணற ஒரு டெசர்ட்" சக்திவேல், "அப்பா! இப்பதான் நீ என்னோட பாஷை பேசறே" சஞ்சனா, "என்ன பியரும் வைனுமா?" நித்தின், "இல்லை சஞ்சனா, இவன் ஒரு ஸ்வீட் டூத் (sweet tooth) இனிப்பா விஷம் கொடுத்தா கூட வாங்கி சாப்பிட்டு விடுவான்" சஞ்சனா, "வேண்டாம் விஷத்தை பத்தி பேச வேண்டாம். ரொம்ப நாள் சர்க்கரை கலந்த விஷத்தை கழுத்தில கட்டிட்டு திரிஞ்சு இருக்கேன்" நித்தின், "சாரி சஞ்சனா .. " என்றதும் சஞ்சனா, "நான் விளையாட்டா சொன்னேன்" என்றவாறு சென்றாள். ஜாஷ்வா, "இட்ஸ் ஓ.கே, என்னவோ தெரியலே அவ இன்னைக்கு கொஞ்சம் இமோஷனலா இருக்கா. கண்டின்யூ பண்ணலாமா" சக்திவேல், "உங்க வங்கில கணக்கு வெச்சு இருக்கற கம்பெனில இருக்கும் கணிணியில் இருந்து எங்க வைரஸ் மூலம் பணத்தை ட்ரான்ஸ்ஃபர் பண்ணற ஆணை கொடுக்கணும்ன்னு சொன்னே. ஒன்ஸ், எங்க வைரஸ் அவங்க கணிணிக்கு உள்ள போயிடுச்சுன்னா அந்த கணிணியை நம்ம ட்யூனுக்கு தகுந்த மாதிரி டான்ஸ் கூட ஆட வைக்கலாம். வைரஸ்ஸை எப்படி அவங்க கணிணிக்கு உள்ள பரவ வைக்கறது? அப்பறம் அவங்க பேங்க் ஸ்டேட்மென்ட் (bank statement - வங்கி கணக்கு பட்டியல்) எடுத்தா நாம் பண்ணின ட்ரான்ஸ்ஃபர் எப்படி தெரியாம இருக்கும்? இது ரெண்டுக்கும் உங்கிட்ட உபாயம் இருக்குன்னு சொன்னே" ஜாஷ்வா, "அது என்னோட ஒரு சின்ன கண்டுபிடிப்பு ... உங்க வைரஸை என்னால் PDF ஃபைல் மூலம்அனுப்ப முடியும்" நித்தின், "PDF மூலமாவா? எப்படி?" ஜாஷ்வா, "மாத்தி எழுத முடியாதபடி கோப்புக்ளை PDF மூலம் அனுப்பறதை அரசாங்கமே அங்கீகாரம் செஞ்சு இருக்கு. PDF ஃபைலில் நாம் எதை வேணும்னாலும் இணைக்கலாம். டிஜிடல் கையெழுத்து (Digital Signature) அப்படின்னு ஒண்ணை PDF ஃபைலில் சேர்க்கறதுக்காக அந்த அம்சத்தை அமைச்சு இருக்காங்க. ஆனா, டிஜிடல் கையெழுத்துக்குன்னு ஒரு பொதுவான நியமம் (Common Standard) இன்னும் வரல. டிஜிடல் கையெழுத்து ஒரு இமேஜ் மாதிரி இருக்கலாம், இல்லை சங்கேத முறையில் எழுதின ஒரு தகவலா இருக்கலாம் இல்லை ஒரு மென்பொருள் வடிவில் கூட இருக்கலாம். அதனால அடோபி (Adobe) காரங்க (PDFஐ கண்டுபிடித்த மென்பொருள் நிறுவனம்) டிஜிடல் கையெழுத்துன்னா இப்படிதான் இருக்கணும்னு அமுல் படுத்த முடியல. ஒரிஜினல் PDF ஃபைல் எழுதற அடோபியின் (Adobe) அக்ரோபாட் டிஸ்டிலர் (Acrobat Distiller) மூலம் எறக்குறைய எதை வேணும்னாலும் டிஜிடல் கையெழுத்துன்னு சொல்லி ஒரு PDF ஃபைலில் இணைக்கலாம். ஒரே ஃபைலுக்கு ரெண்டு மூணு டிஜிடல் கையெழுத்தை கூட சேர்க்கலாம். அந்த கையெழுத்து உங்க வைரஸாகூட இருக்கலாம்!" சக்திவேல், "அப்படின்னா ஒரிஜினல் PDF எழுதற அடோபி டிஸ்டிலர் (Adobe Distiller) மூலம் எங்க வைரஸ்ஸை PDFஇல் இணைக்க வைக்கணும். சரி, இணைக்க வைக்கறோம்னு வை. எந்த PDF ஃபைலில்? அந்த PDF ஃபைலை எப்படி அந்த கம்பெனிகளுக்கு அனுப்பறது. அதுவும் ஸ்பாம் (spam) அப்படின்னு ஃபில்டர் ஆயிடுமே?" ஜாஷ்வா, "அந்த PDF ஃபைல் அவங்க பேங்க் ஸ்டேட்மென்டா இருந்தா ஃபில்டர் ஆகாது!" நித்தின், "வாவ், சோ, அவங்க இறக்கம் செய்யற வங்கி கணக்கு பட்டியல் (bank statement) PDF வடிவத்திலதான் போகுதா?" ஜாஷ்வா, "அது மட்டும் இல்லை, எங்க வங்கில அந்த PDF எழுதும் கணிணில நான் ஒரு வைரஸ்ஸை ஏத்தி இருக்கேன். அந்த வைரஸ் நான் கொடுக்கற எந்த ஃபைலையும் நான் சொல்ற கம்பெனியோட பேங்க் ஸ்டேட்மென்ட் PDF ஃபைலில் சேத்துடும். நீங்க உங்க வைரஸ்ஸை கொடுத்தீங்கன்னா அதை நான் PDF ஃபைலில் சேத்துடுவேன்." நித்தின், "Smart thinking Josh!" ஜாஷ்வா, "அதை தவிர என்னோட வைரஸ் இன்னோரு வேலையும் செய்யும்"
சக்திவேல், "என்ன வேலை?" ஜாஷ்வா, "பேங்க் ஸ்டேட்மேன்டை மாத்தி எழுத வைக்கும். அதாவது, கோர்வையா நாம் சொல்லும் சில எழுத்துக்கள் வந்தா அவைகளை நாம் சொல்லும் வேற ஒரு கோர்வையான எழுத்துக்களாக மாத்தி எழுதவைக்கும். நாம் பண்ணும் ட்ரான்ஸ்ஃபரினால் பேங்க் ஸ்டேட்மென்டில் ரெண்டு வரிகள் வரும். முதல் வரி பணம் அவங்க கணக்கில் போட்டதுக்கு. அடுத்த வரி அவங்க கணக்கில் இருந்து பணம் ட்ரான்ஸ்ஃபர் ஆனதுக்கு. இதோ இந்த மாதிரி என்றவாறு ஒரு பேங்க் ஸ்டேட்மெண்டின் ப்ரிண்ட் அவுட்டை காண்பித்தான். பிறகு "இதை நான் இந்த மாதிரி மாத்தி எழுத போறேன்" என்றவாறு இன்னும் ஒரு பேங்க் ஸ்டேட்மென்ட் ப்ரிண்ட் அவுட்டை காண்பித்தான்.

No comments:

Post a Comment