Monday, February 9, 2015

மான்சியும் நானும் - அத்தியாயம் - 1

"என்னை இரும்பு மனிதன் என்பார்கள்,
"
பெண்ணே உன் விழிகள் என்ன காந்தமே,
"
என்னை பார்த்தவுடன் என் இதயததில்
"
இதமாய் ஒட்டிக்கொண்டதே ,
"
ஆனால் அதன் இயக்கத்தை மட்டும் நிறுத்திவிடாதே,
"
அது உன்னை நேசித்தபடியே,
"
உயிர் காற்றை சுவாசித்தபடியே இருக்கட்டும்,இரவும் பகலும் நட்புடன் கைகோர்க்கும் ஒரு பொன்மாலைப் பொழுது


கோவையில் பலஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக இருந்த அந்த கல்லூரி தன்னை வண்ண விளக்குகளால் அலங்கரித்துக் கொண்டு வரபோகும் சிறப்பு விருந்தினர்களுக்காக காத்திருந்தது

அந்த கல்லூரியின் ஆண்டுவிழாவுக்காக கல்வி அமைச்சர் முக்கிய விருந்தினராக அழைக்கப்பட்டிருக்க அமைச்சரைவிட அந்த கல்லூரி வேறு ஒரு முக்கிய நபருக்காக காத்திருந்தது

அந்த நபர் அந்த கல்லூரி நிறுவனரின் பேரனும் தற்போதைய முதல்வர் கண்ணபிரானின் ஒரே மகனுமான சத்தியானந்தன் சிறுவயது முதல் தன் சித்தப்பா குடும்பத்துடன் சிங்கபூரில் வசிக்கும் இவன் ஒரு அல்ட்ரா மார்டன் மேன் என்று சொல்லலாம் எப்பவும் எதிலும் ஒரே விளையாட்டுத்தனமாக இருப்பவன் இவனுக்கு இந்தியாவை அதிகமாக பிடிக்காது காரணம் இந்தியா முழுவதும் ஒரே குப்பை என்பான்

அவன் அப்பாவின் வற்புறுத்தல் காரணமாக அந்த ஆண்டுவிழாக்கு வந்திருந்தான்

சத்தியானந்தன் நல்ல உயரத்தில் சிவந்த நிறத்தில் நம்ம 25வயது ராகுல்காந்திக்கு பிரஞ்ச்பேக் வைத்தால் எப்படி இருப்பாரோ அப்படி இருந்தான்

அவனை பார்பதற்கு கல்லூரியே காத்திருக்க B.C.A இறுதி ஆண்டு படிக்கும் மான்சி மட்டும் எந்த பரபரப்பும் இல்லாமல் அன்று தான் பொருப்பேற்றிருந்த ஒரு கலை நிகழ்ச்சிக்கு தன்னை தயார் செய்து கொண்டிருந்தாள்

மான்சி ஹாஸ்டலில் தங்கி படிப்பவள் அம்மாவும் அண்ணன்னும் திருப்பூரில் இருக்கிரார்கள் அம்மா அரசு மருத்துவமனையில் நர்ஸாகவும் அண்ணன் ஒரு பனியன் கம்பெனியில் சூப்பர்வைசராகவும் பணி செய்கிறார்கள்

மான்சி அழகின் மொத்த உருவம் என்று சொல்ல முடியாது ஆனால் ஒரு வித்யாசமான அழகுள்ளவள் அவளுக்கு மிக நீளமான கூந்தல் கண்கள் பெரியதாக செம்பழுப்பு நிறத்தில் பிரஞ்சு நாட்டுகாரி போல் இருப்பாள் அவள் கூந்தலுக்கும் கண்களுக்கும் கல்லூரியில் பெரிய ரசிகர்கள் கூட்டமே உண்டு

அதில் அவளுக்கு கர்வம் அதிகம் அழகான உடலமைப்பும் நேர்த்தியான உடைகளும் அவளை அந்த கல்லூரியில் முதன்மையானவளாக ஆக்கி இருந்தது

அன்று அவளுக்கு ஒரே குழப்பம் காரணம் அவள் நடத்தவிருந்த கோவலன் கண்ணகி நாடகத்தில் கோவலனாக நடிக்கும் பெண்ணுக்கு வயிற்றுவலி என்பதால் அந்த பாத்திரத்தில் இவளே நடிக்க வேண்டியதாக இருந்ததுஇறக்குமதி செய்யப்பட்ட ஒரு வெளிநாட்டு காரில் வந்து இறங்கிய சத்யன் அனைவரின் வரவேற்ப்பையும் பெற்றுக்கொண்டு கல்லூரி ஆடிட்டோரியத்தில் தன் இருக்கையில் அமர்ந்தான்

முதலில் சில நடனநிகழ்ச்சிகளும் அதன் பிறகு மான்சியின் நிகழ்ச்சியும் வர மான்சியை பார்த்ததும் அரங்கமே ஆராவாரம் செய்யதது

மான்சியின் நிகழ்ச்சி முடியும் நேரத்தில் அவள் கூந்தலின் கணம் தாங்காமல் கட்டியிருந்த தலைப்பாகை அவிழ்ந்து விழ கூட்டத்தில் மறுபடியும் ஒரே கூச்சல்

மான்சிக்கு அவமானமாகிவிட முன் இருக்கையில் அமர்ந்திருந்த சத்யனோ அதை கைத்தட்டி ரசித்து சிரிக்க

அதை பார்த்த கூட்டத்தில் இருந்த மற்ற மானவர்கள் இன்னும் உற்சாகமாக கத்த

மான்சி முன்னாலிருந்த சத்யனை முறைத்துவிட்டு உள்ளே போனாள்

சிறிது நேரம் கழித்து மேக்கப் ரூமைவிட்டு வெளியே வந்த மான்சி ஹாஸ்டலை நோக்கி நடக்க

'
ஏய் ஏய் பொண்ணு கொஞ்சம் நில்லு 'என்று பின்னால் குரல் கேட்க நின்று திரும்பினாள்

அங்கே சத்யனும் கூடவே இரண்டு மானவர்களும் நிற்க்க என்ன எனபது போல் மான்சி பாரக்க

'
ஒன்னுமில்ல இன்னிக்கு உன் நாடகம் நல்லாத்தான் இருந்திச்சு ஆனா உனக்கு இரண்டு விஷயம் ஒத்துவரலை, என்று குறும்பு சிரிப்புடன் சொல்ல

இவள் பதில் எதுவும் பேசாமல் முறைத்துக்கொண்டு நிற்க்க

'
அது கோவலன் வேசத்துக்கு உனக்கு இரண்டு விஷயம் ரொம்ப அதிகம் ஒன்னு உன் நீளமான தலைமுடி இரண்டு, என்றவன் எதுவும் கூறாமல் சுடிதாரினுல் திமிறி கொண்டிருந்த அவள் மார்பை பார்க்க

'
ஏய், என்று ஆத்திரத்துடன் தன் வலது கையை மான்சி அவனை நோக்கி வீச

சத்யன் அவள் வீசிய கையை பற்றி 'ஏய் என்னையே கை நீட்ரியா நான் யார் தெரியுமா, என்று நக்கலாக கேட்க

'
நீ யாராயிருந்தா என்னக்கென்ன ஒரு பொண்ணுகிட்ட எப்படி மரியாதையா நடந்துக்கணும்ன்னு உனக்கு தெரியாதா ச்சே நீயெல்லாம் ஒரு மனுஷனா, என்று வெறுப்புடன் கத்தியவள் திரும்பி ஹாஸ்டலை நோக்கி நடக்க

பின்னால் எக்காளமிட்டு சிரிப்பது நன்றாக அவள் காதில் விழுந்தது

ஆத்திரத்தில் முகமெல்லாம் சிவக்க தன் அறையின் படுக்கையில் விழுந்தவள் சகமாணவர்கள் முன்பு அவன் தன்னை அவமானப்படுத்தியது பெரும் ரணமாக வலித்ததுபங்களாவில் தனது அறைக்கு வந்த சத்யனுக்கோ அந்த நிகழ்ச்சியை நினைத்து மறுபடியும் மறுபடியும் சிரிப்பு வந்தது யப்பா எவ்வளவு நீள தலைமுடி அவளுக்கு ஏன் கண்கள் அந்தமாதிரி இருக்கு என்று நினைத்து கொண்டே உறங்கினான்

மறுநாள் தொடர்ந்து மூன்றுநாள் விடுமுறை என்பதால் திருப்பூருக்கு கிளம்பிய மான்சி அறைச் சாவியை பூட்டி வார்டனிடம் கொடுத்துவிட்டு கல்லூரியின் கேட்டை நோக்கி நடந்தாள்

அவளருகில் அந்த வெளிநாட்டு கார் வந்து பிரேக்கடித்து நிற்க்க காருக்குள் யார் என்று மான்சி திரும்பி பார்க்க

காரின் கண்ணாடியை இறக்கிய சத்யன் 'ஹாய் எங்க போகணும் கார்ல வாயேன் டிராப் பண்றேன்,என்று கூலாக கூப்பிட

மான்சி நீதானா என்பது போல் முறைத்து விட்டு நடையைக்கட்டினாள்

கார் மெதுவாக அவளருகே ஊர்ந்து வர காரின் ஜன்னல் வழியாக கைநீட்டி அவள் சுடிதாரின் துப்பட்டாவை பற்றியவன் 'ஏய் வா பஸ்டாண்ட் தானே போற நான் இறக்கிவிட்டுறேன்,என்று கூப்பிட

மான்சிக்கு நேற்றய நினைவில் பயங்கர ஆத்திரம் வர 'ஏய் ச்சீ விடுடா உனக்கு அறிவில்ல,என்று கத்த பக்கத்தில் இருந்த அவள் தோழி 'ஏய் மான்சி அவர் நம்ம டீன்னோட பையன் ப்ளீஸ் பிரச்சினை வேனாம் வாடி போயிடலாம்,என்று பதட்டமாக அழைக்க

அதற்க்குள் காரைவிட்டு இறங்கியிருந்த சத்யன் 'என்னாச்சு நான் சும்மா கார்ல டிராப் பண்றேன்னுதான சொன்னேன் அதுக்கு போய் இவ்வளவு அலட்டிக்கிற, என்று கிண்டல் குரலில் கூற

அந்த குரல் மான்சிக்கு மேலும் ஆத்திரத்தை மூட்ட 'நீ யார் என்னை டிராப் பண்ண,என்று அடிக்குரலில் அதட்ட அதற்க்குள் அங்கே சிறு கூட்டம் கூடிவிட்டது

இதுதான் இவனை பழிவாங்க நல்ல சமயம் என்று நினைத்த மான்சி தன் காலில் இருந்த செருப்பை கலட்டி அவனை கண்ணத்தை நோக்கி வீச

சத்யன் சுதாரித்து விலகுவதற்குள் செருப்பு அவன் தாடையில் பதிய

கூடிய கூட்டம் மொத்தம் அதிர்ச்சியில் அப்படியே நிற்க

மான்சி கூட்டத்தை விலக்கி வெளியே வந்து ஒரு ஆட்டோவில் ஏறி கிளம்ப

சத்யனுக்கு என்ன நடந்தது என்று புரிய சிறிது நேரமானது புரிந்த போது கொதித்து போனான்

ஒரு சாதரணமான விஷயத்துக்கு போய் அவளது அனுகுமுறை அவனுக்கு கண்மூடித்தனமான கோபத்தை உண்டாக்கியது

அவளை ஒன்றும் இல்லாமல் அழித்துவிட்டால் என்ன என்று அவன் மூளை அவனை கேள்விகேட்டது
ஆனால் விஷயம் அவன் அப்பா வரை பரவி 'இது என்ன சிங்கப்பூர்ன்னு நினைச்சியா ஒரு பொண்ணோட துப்பட்டாவை பிடிச்சி இழுக்கறது எவ்வளவு பெரிய தப்புன்னு தெரியுமா,என்றுஆத்திரப்பட்டவர்

'
சிங்கப்பூரில்தான் பொறுக்கித்தனமா சுத்துறேன்னா இங்கே வந்துமா இப்படி காலேஜில் என் மரியாதையே போச்சு நீ முதல் வேலையா சிங்கப்பூர் கிளம்பு என்று சத்யனை கழுத்தை பிடித்து தள்ளாத குறையாக அவனை அனுப்ப

ஒரு பெண்ணிடம் பட்ட அவமானம் அவனை மிருகமாக மாற்றியிருக்க மனம் நிறைந்த வன்மத்துடன் சிங்கப்பூர் கிளம்பினான் சத்யன்

மான்சியோ தன்னை தரக்குறைவாக விமர்சித்து அவனுக்கு தக்க பதிலடி கொடுத்துவிட்ட திருப்தியுடன் கல்லூரியில் உலாவர

இதோ இன்றோடு படிப்பு முடிந்து எல்லோரும் ஹாஸ்டலில் இருந்து காலி செய்து சொந்த ஊர்களுக்கு கிளம்ப

மான்சி எல்லாறிடமும் சொல்லிவிட்டு அறையை காலிசெய்து கிளம்பும் போது இரவு மணி ஏழரையாகிவிட்டது பஸ்ஸில் திருப்பூர் சென்று இறங்கும் போது இரவு 8-50ஆக வீட்டுக்கு செல்லும் டவுன்பஸ்ஸில் ஏறி அவள் வீடு இருக்கும் தெருவில் இறங்கி நடக்க

அப்போது அவளருகில் வந்து நின்ற ஒரு வெள்ளை சுமோவில் இருந்து இறங்கிய இருவரில் ஒருவன் அவள் வாயை பொத்தி தூக்க மற்றொருவன் அவள் உடைமைகளை எடுத்து காரில் போட மயக்க மருந்தில் நனைக்கப்பட்ட கைகுட்டையின் உதவியால் உடனடியாக மயக்கமானாள் மான்சி ஆள்

அரவமற்ற அந்த தெருவில் இவர்களை கவனிப்பாரில்லை

மான்சி காரில் ஏற்றப்பட்டதும் கார் திருப்பூரை கடந்து புறநகர்ச் சாலையில் பரந்தது

ஆமாம் மான்சி கடத்தப்பட்டாள்
இது நடந்து சரியாக நான்கு ஆண்டுகள் கழித்து

ஊட்டியில்

அந்திநேர தென்றல் சுகமாய் தாலாட்ட இரவின் வருகைக்காக மேகங்கள் வரவேற்புரை வாசிக்க

வரபோகும் கடும்குளிருக்காக மலைராணி தன் முந்தானையால் மேகங்களை மூடிக்கொண்டிருந்த ஒரு இனிய மாலை பொழுது

ஊட்டியின் வளைவுகள் நிறைந்த சாலையில் சத்யன் தனது காரில் சில்வர் ராக் எஸ்டேட் நோக்கி சென்றுகொண்டிருந்தான்

அவன் குடும்பத்தில் அவன் அப்பாவும் சித்தப்பாவும் அக்கா தங்கைகளை மணந்திருக்க சித்தப்பா மகள் சுமித்ராவை சத்யனின் அத்தை மகன் கார்திக்க்கு திருமணம் செய்து கொடுத்திருக்க அவர்களுடையதுதான் சில்வர் ராக் எஸ்டேட்

சத்யனுக்கு அடுத்த மாதம் திருமணம் பெண் அவன் அப்பாவின் பார்ட்னருடைய மகள் திருமணம் ஏற்பாடுகளை கவனிக்க சிங்கப்புரில் இருந்து வந்தவன் தன் தங்கையை காண ஊட்டி வந்திருக்கிறான்

இரவு தங்கையின் வீட்டில் சாப்பிட்டுவிட்டு உறங்கியவன்

காலையில் கார்திக்குடன் ஜாக்கிங் செல்லும் போது எதிரே வந்த ஜீப்க்கு வழிவிட்டு இருவரும் ஒதுங்க

ஆனால் இவர்களை பார்த்து ஜீப் ஓரங்கட்டி நிற்க்க அதிலிருந்து இறங்கியவன் கார்த்திக்கை நோக்கி வர

'
வா சிவா, என்ற கார்த்திக் சத்யனிடம் திரும்பி 'சத்யா இவர் சிவகுரு நம்ம எஸ்டேட் மானேஜர்,என்று அறிமுகம் செய்ய இருவரும் பரஸ்பரம் கைகுலுக்கி விசாரிக்க

அப்போதுதான் சத்யன் ஜீப்பிலிருந்தவளை கவணித்தான்

அட இது மான்சிதான இவ எப்படி இங்கே வந்தா ஏன் இப்படி எதையோ வெறித்து படி இருக்கிறாள் என அடுத்தடுத்த கேள்விகள் எழ

'
அவங்க யார், என்று சிவாவிடம் விசாரிக்க

'
அவ தங்கச்சி சார்,என்று சத்யனுக்கு பதில் சொன்னவன் கார்த்திக்கிடம் திரும்பி 'நைட் மான்சிக்கு திடீர்ன்னு உடம்பு சரியில்லை சார் அதான் ஆஸ்பத்திரிக்கு போய்ட்டு இப்போ காலையிலதான் அனுப்பினாங்க சார், என கூற

'
அப்படியா இப்ப பரவாயில்லையா ஜாக்கிரதையா கூட்டிட்டு போ சிவா,என்று சிவாவிடம் கூறிவிட்டு 'சரி வா சத்யா என்று ஜாக்கிங்கை தொடர

வழியில் ஒரு இடத்தில் இளைப்பாற இருவரும் அமர

சத்யன் 'அந்த பொண்ணுக்கு என்ன ஏன் இப்படி இருக்கா என்று விசாரிக்க

சிவாவோட அப்பாதான் முன்னாடி நம்மகிட்ட மானேஜரா இருந்தார் அவர் நம்ம எஸ்டேட்ல ஒருநாள் எஸ்டேட்டை சுத்தி பார்க்கும் போது பாம்பு கடிச்சி இறந்துட்டார்

அதுக்கப்புறம் இவங்க எல்லோரும் திருப்பூர் போய்ட்டாங்க

அங்கே இந்த பொண்ணு மான்சிக்கு யாரையோ ஒரு பையன கல்யாணம் பண்ணிருக்காங்க பாவம் அவன் இவ கூட மூன்று மாசம் கூட சேர்ந்து வாழல ஒரு ஆக்ஸிடென்ட்ல இறந்துட்டான்

ஆனா பாவம் இந்த பொண்ணு பித்துபிடிச்ச மாதிரி ஆயிட்டா இதைவிட கொடுமை என்னன்னா அவ புருஷன் சாகும் போது இவ கர்ப்பமா வேற இருந்திருக்கா சிவா வீட்ல அதை யாரும் கவனிக்காமல் இருந்து அப்புறமா தெரியும் போது ஒன்னுமே பண்ண முடியலை அப்புறம் குழந்தை பிறந்தபோது இந்த மான்சி ஒரே பிரச்சினை செய்ய பாவம் அந்த குழந்தையை கோவையில் நம்ம டிரஸ்ட் மூலமா நடக்கிற அனாதை ஆசிரமத்தில் நானும் சிவாவும் கொண்டு போய் சேர்த்திட்டோம்

என்று மான்சியின் கதையை கார்த்திக் சொல்ல சத்யனுக்கு ஒன்றும் புரியவில்லை குழப்பமாக இருந்ததுசத்யனுக்கு ஒரே குழப்பமாக இருந்தது


'
அதுக்கில்லை கார்த்திக் இந்த காலத்தில் புருஷன் செத்துப்போய்ட்டா பொண்ணுங்க இப்படியா இருக்காங்க இந்த மான்சியோட மேட்டர் கொஞ்சம் ஓவரா தெரியல, என்ற சத்யனை பார்த்த கார்த்திக்

'
இதிலென்னடா ஓவர் கம்மின்னு அந்த பொண்ணு அவ புருஷனை அதிகமா நேசிச்சிருக்கலாம் அவன் நினைவுகளை மறக்க முடியாம இப்படி ஆகியிருக்கலாம் எனக்கு சின்ன வயசில் இருந்தே அவங்க பேமலிய தெரியும் ரொம்ப நல்ல குடும்பம் சிவகுரு இன்னும் ரொம்ப நல்லவன் இப்ப அவன் தங்கச்சிகாகவே வாழ்றான் அவனும் நிறைய டாக்டர்கிட்ட காண்பிச்சுட்டான்
டாக்டர்ஸ் எல்லாம் மான்சி நல்லாத்தான் இருக்கா இது லேசான மன அழுத்தம்தான் போக போக சரியாயிடும்ன்னு சொல்றாங்க ஆனா நான பார்த்ததில் அவ மாறவேயில்லை இதுல ரொம்ப பாவம் அந்த குழந்தைதான் இப்ப ஒரு மூன்று அல்லது மூன்றரை வயசு இருக்கும்ன்னு நினைக்கிறேன் இந்த வயசுக்குள்ளவே அது தகப்பனை இழந்து தாயின் ஆதரவு இல்லாமல் வளரனும்ன்னு தலையெழுத்து சிவாதான் அடிக்கடி போய் பார்த்துட்டு வருவான்,என்று நீளமாய் பேசிய கார்த்திக் சரி வா சத்யா நேரமாயிடுச்சு என்று கிளம்பியவன் மறுபடியும் நின்று திரும்பி 'ஏன் சத்யா எனக்கு ஆச்சர்யமா இருக்கு அடுத்தவங்க கதையை நீ இவ்வளவு நேரம் கேட்கறே ,என்று கண்களை விரிக்க

அதுவரை எழாமல் உட்கார்திருந்த சத்யன் ஊப்ஸ் என்ற பெருமூச்சுடன் 'எனக்கும் அந்த மான்சிக்கும் ஒரு சம்மந்தம் இருக்கு, என்று சொல்ல


'
என்னடா சத்யா சொல்றே,என்று அதிர்ச்சியுடன் கார்த்திக் கூவ

'
ம்ம் நான்கு வருஷம் முன்னாடி நம்ம காலேஜில் எனக்கும் ஒரு பொண்ணுக்கும் பிரச்சனை நடந்து அப்பா என்னை சிங்கப்பூர் அனுப்பினார்ல அந்த பொண்ணு இவதான், என்று தலையை கவிழ்ந்தபடி சத்யன் கூற

சிறிது நேரம் அமைதியாக இருந்த கார்த்திக்'சரி விடு சத்யா அன்னிக்கு நடந்தது எனக்கும் தெரியும் தப்பு இரண்டு பேர் மேலயும்தான் நீயும் அவளை தொட்டு பேசியிருக்கக்கூடாது அவளும் உன்னை செருப்பால அடிச்சிருக்ககூடாது எல்லாம் முடிஞ்சு போச்சு இனிமேல் பேசி என்ன ஆகப்போகுது இப்ப அவ செத்தபாம்பு மாதிரி இனி அடிச்சா வலிக்காது நீ வா போகலாம் என்று நடக்க ஆரம்பித்தான் கார்த்திக்.
கார்த்திக் பின்னாலேயே நடந்த சத்யன் 'சரி கார்த்திக் நீ சொல்றபடி பார்த்தாக்கூட புருஷனை அவ்வளவு நேசிச்சவ குழந்தையை மட்டும் ஏன் வெறுக்கனும்,என்று கேட்க

'
அதுதான் சத்யா எனக்கும் புரியல ஒருவேளை இப்படி இருக்கலாம் இந்த குழந்தை உருவானதால்தான் நம்ம புருஷனை இழந்துட்டோம் அப்படின்னு ஒரு பத்தாம்பசலித்தனமான என்னமாய் கூட இருக்கலாம்,என்று கார்த்திக் கூற

அதன் பிறகு சத்யன் எதுவும் பேசவில்லை ஆனால் மனதுக்குள் மான்சி ஒன்றும் பத்தாம்பசலி தனமானவள் அல்லஎன நினைத்தவன் எது எப்படி இருந்தாலும் இது அவளுக்கு தேவையான தன்டனைதான் என்று உறுதியாக நம்பினான்

வீட்டுக்கு போய் டிபன் சாப்பிட்டவன் சுமித்ராவிடம் சிவகுரு வீடு எங்கே இருக்கிறது என்று விசாரித்துவிட்டு கிளம்பினான்

சத்யன் சிவகுருவின் வீட்டு கதவை தட்டியபோது சிவாவின் அம்மாதான் கதவை திறந்தாள்

தான் இன்னார் என்று அறிமுகம் செய்து கொண்டவன் மான்சிய பார்க்கனும் என்றான்

அவன் கார்த்திக்கின் மச்சான் என்றதும் உள்ளே வாங்க சார் என்ற மான்சியின் அம்மா வேதம் 'மான்சி தோட்டத்தில் இருக்கா என்று தோட்டத்துக்கு அவனை அழைத்து செல்ல

அங்கே நிலையே இல்லாத எதையோ வெறித்துக்கொண்டு உடம்பில் எந்த நகைகளும் இல்லாமல் ஒரு பழைய கைத்தறி சேலை கட்டி துணி துவைக்கும் கல்லில் அமர்திருந்தாள் மான்சி

அவளது நீளமான கூந்தல் முதுகுவரை வெட்டப்பட்டிருக்க அவளின் அழகான விழிகள் ஜீவனிழந்து கானப்பட்டது

மெதுவாக அவளை நெருங்கிய சத்யன் 'மான்சி என்று அழைக்க

அவள் திரும்பவில்லை

மறுபடியும் சத்யன் அழைக்க

சோம்பலாய் திரும்பியவளின் கண்களில் இவனை அடையாளம் தெரிந்ததற்கான சுவடேஇல்லைசத்யனுக்கோ அவள் தன்னை அடையாளம் தெரிந்து 'ஐயோ இவன் முன்னால் தன் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என்று மான்சி கூனிக்குறுக வேன்டும் என்று ஆசை ஆனால்

அவளுக்குத்தான் அவனை அடையாளமே தெரியவில்லையே

ஒருவேளை நடிக்கிறாளோ என நினைத்த சத்யன் மறுபடியும்

'
மான்சி என்னை தெரியலையா நான்தான் சத்யன் கோயமுத்தூர் காலேஜுல நாம சந்திச்சிருக்கோம் ஞாபகப்படுத்தி பார் மான்சி,என்று கூற

ஒரு நீண்ட அமைதிக்குப் பின்னர் 'ம் ஞாபகம் இருக்கு, என்றவள் 'எனக்கு ஒன்னும் பைத்தியம் கிடையாது எனக்கு ஏற்பட்ட வலிகள் காரணமாக நான் யார்கிட்டயும் பேசறதிலலை அவ்வளவுதான் என்று கூறியவள் இன்னும் ஏதாவது தெரிஞ்சுக்கனுமா என்பது போல் சத்யனை பார்க்க

ஏனோ அந்த பார்வையில் இருந்த அளவு கடந்த சோகம் சத்யன் மனதை ஊசி நுல் இல்லாமலேயே தைத்ததுயே சிறிது நேரம் பார்த்த மான்சி

'
நான் கடைசியா எப்படியாவது உங்களை பார்த்து மன்னிப்பு கேட்கனும்னு இருந்தேன் அன்னிக்கு காலேஜுல நீங்க என்கிட்ட நடந்துகிட்ட முறைக்கு நான் உங்களை திட்டி இருக்கலாம் இல்லேன்னா உங்க அப்பாகிட்ட கம்ப்ளைண்ட் செய்திருக்கலாம் அதைவிட்டு உங்களை செருப்பால் அடிச்சது ரொம்ப தப்பு எனக்கு அப்ப அது பெரிசா தோணலை ஆனா இப்ப என் வாழ்க்கை இப்படி வீணாகிப்போன பின்னர் இதல்லாம் எனக்கு எவ்வளவு பெரிய தப்புனனு புரியுது ஆனா எனக்கு ஏன் இவ்வளவு பெரிய தன்டனை கடவுள் கொடுத்தார்ன்னு தெரியலை இப்ப உங்ககிட்ட நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன் சார் என்னை மன்னிச்சிருங்க சார் என்று கைகூப்பி ஜீவனே இல்லாத குரலில் மான்சி வேன்ட

மான்சியின் அம்மாவுக்கு மகள் இவ்வளவு பேசுகிறாளே என்று ஆச்சரியமாக இருந்தது இந்த நான்கு வருடங்களில் மான்சி அதிகமாக பேசியது இன்றுதான்

சத்யனுக்கோ ஐயோ என்றிருந்தது அவன் நினைத்து ஒன்று இங்கு நடந்தது ஒன்றாக இருக்க என்ன பேசுவது என்று புரியாமல் சிறிது நேரம் நின்றவன் பிறகு'மான்சி உனக்கு ஏதாவது உதவி வேனும்னா எந்த நேரத்திலும் நீ என்கிட்ட கேட்கலாம், என்று அவள் முகத்தை பரிதாபமாக பார்த்தபடி சொல்ல

'
ம்ஹூம் எனக்கு எந்த உதவியும் இனிமேல் தேவைப்படாதுன்னு நினைகிறேன் சார்,என்றவள் அவ்வளவுதான் விஷயம் நீங்க கிளம்பலாம் என்பது போல் பார்க்க

அதற்க்குமேல் அங்கே நிற்க்காமல் 'சரி வர்றேன் மான்சி வரறேன் ஆன்ட்டி, என்று வெளியேறியவனின் மனதில் ஆயிரம் விடை தெரியாத கேள்விகள்அதன்பிறகு சத்யன் மான்சியை மறந்து ஊட்டியை சுற்றினான்

ஊட்டியின் அழகு அவனை மயக்கியது

தூரத்தில் சூரியன் அஸ்தமிக்கும் காட்சி கருப்பு கண்ணாடியின் வழியே ஒரு புகைபடிந்த ஓவியத்தை பார்ப்பது போல் இருந்தது

தூரத்து மஞ்சள் விளக்காய்
சூரியன்
தூரத்து பச்சை விரிப்பாய்
வயல்வெளி
தூரத்து படகாய்
வான் மேகம்
தூரத்து தேவதையாய்
மலைமகள்
தூரத்து வெள்ளி கம்பிகளாய்
சூரியக்கதிர்கள்
தூரத்து புன்சிரிப்பாய்
ரோஜாக்கள்
.......இயற்க்கையே
நீதான் என் கற்பனைக்கு
குருகுலம்அதன் பிறகு சத்யன் கோவை கிளம்ப அவனுடன் எஸ்டேட்ககு உரம் வாங்க சிவாவும் வந்தான் வரும்போது உரங்களை வேனில் ஏற்றி வருமாறு கார்த்திக் கூற

இருவரும் காரில் புறப்பட காரை சத்யன்தான் ஓட்டினான்

கார் சிறிது தூரம் போனதும் 'ஏன் சிவா இந்த காலத்தில் புருஷன் இறந்து போனா யார் இப்படி இருக்காங்க பூ பொட்டு எல்லாம் வைச்சுக்கிட்டு ஏன் மறுபடியும் கல்யாணமே பண்ணிக்கிறாங்க மான்சி மாறுவதற்கு நீங்களும் கொஞ்சம் முயற்சி செய்யனும் அவள மேல படிக்க வைச்சு ஒரு நல்ல வேலைக்கு அனுப்பினா அவள் வாழ்வில் ஒரு மாற்றம் வரும் நீங்க அவளை நிறைய வெளியிடங்களுக்கு கூட்டி போகனும் சிவா 'என்று சிவாவை பார்க்க அவனிடம் பதில் எதுவும் வராததால்'என்ன சிவா நான் ஏதாவது தப்பா சொல்லிட்டேனா,என்று கேட்க

சத்யனை பார்த்த சிவாவின் கண்கள் கலங்கியிருக்க 'என்னாச்சு சிவா ,என்று சத்யன் பதறிய சத்யன்

சாலையில் ஒரு வளைவை கடந்து அடுத்து வந்த அகலமான இடத்தில் காரை ஓரங்கட்டி நிறுத்தி 'சாரி சிவா,என்று அவன் கைகளை பற்றி கூற

சிவா கண்களை துடைத்துகொண்டு 'ஒன்னும் இல்ல சார் நீங்க மான்சி மேல இவ்வளவு அக்கறை காட்றதால உங்ககிட்ட ஒரு உன்மையை சொல்றேன் என்றவன்பெரும் அமைதிக்கு பிறகு

'
மான்சிக்கு இன்னும் கல்யாணமே ஆகலை சார் அவளை கடத்திட்டு போய் மூன்று போரா சேர்ந்து கற்பழிச்சிட்டானுங்க சார் மான்சி செத்தபிணம் மாதிரி சார் அதுக்கு உயிர் குடுக்க முடியும்ன்னு எனக்கு தோனலை சார்,என்ற சிவா கைகளால் முகத்தை மூடி குமுற

'
என்னது,என்று கூவிய சத்யனுக்கு இதயம் தொண்டையருகில் வந்து துடித்ததுஆமா சார் காலேஜ் முடிஞ்சு திருப்பூரில் இருந்த எங்க வீட்டுக்கு வரும்போது யாரோ மூனு பேர் சேர்ந்து அவளை கார்ல

கடத்தி போய் நாசம் பண்ணிட்டாங்க அது ரொம்ப கொடுமையான விஷயம் சார் மான்சிக்கு உடம்பு பூராவும் காயம்

படுக்கையவிட்டு எழுந்திருக்கவே ஒரு மாசமாச்சு எங்க அம்மா நர்ஸ்ஸுங்கரதால மான்சிக்கு அம்மை போட்டு இருக்குன்னு

வெளியே பொய்சொல்லிட்டு வீட்ல வச்சு எங்கம்மாவே மான்சிக்கு வைத்தியம் பண்ணாங்க போலீஸ்ல புகார் செய்யலாம்ன்னு

நெனச்சோம் ஆனா மான்சிக்கு எதுவுமே அவனுங்க யாரையுமே அடையாளம் தெரியல இவ இப்படி இருக்கும் போது நம்ம

புகார் செய்தால் அது அவளுக்கு இன்னும் சித்ரவதையாகிவிடும்ன்னு நானும் என் அம்மாவும் முடிவு பண்ணி விஷயத்தை

மறைச்சிட்டோம் சார்,என்று சிறிது நேரம் நிறுத்தி வழிந்த கண்ணீரை துடைத்துக்கொண்டு மீன்டும் ஆரம்பித்தான்ஆனால் மான்சி கர்பம்ன்னு தெரிஞ்சதும் எங்கம்மாவுக்கு தெரிஞ்ச ஒரு லேடி டாக்டர்கிட்ட போய் கருவை கலைச்சிட சொன்னோம் ஆனா டாக்டர் அவளோட கருப்பை ரொம்ப பலகீனமா இருக்கறதாலே கருவை கலைச்சா அதயும் சேர்த்து எடுக்கனும்னு சொல்லிட்டாங்க

பிற்காலத்தில் மான்சிக்கு ஏதாவது ஒரு நல்ல வாழ்க்கை அமைஞ்சா அப்போது மறுபடியும் குழந்தைக்கு என்ன பண்றதுன்னு நெனச்சு குழந்தை பிறந்தா அதை அனாதை விடுதியில் விட்டுடலாம்ன்னு முடிவுசெய்து நானும் எங்கம்மாவும் மான்சிய இங்கே கூட்டிட்டு வந்துட்டோம் இங்க எல்லாரிடமும் அவ புருஷன் விபத்தில் இறந்துபோய்ட்டதா சொல்லிட்டோம் இப்ப உங்ககிட்டதான் உன்மையை சொன்னேன் சார் ,என்று நிறுத்தவே முடியாது சிவா பேசிக்கொண்டே போக

அப்படின்னா குழந்தை....என்று சத்யன் இழுக்க

'
குழந்தை பிறந்ததும் மான்சி அதை தொடவே இல்லை அதை பாரத்தாலே நெருப்பு மேல நிக்கிற மாதிரி துடிச்சா அந்த மூன்றுபேர்ல யார் அதுக்கு அப்பனோ என்கிற என்னமே அவளை சித்ரவதை பண்ணது அப்பறம்தான் குழந்தையை நம்ம கார்த்திக் சிபாரிசில் விடுதியில் விட்டுட்டோம் நான் மட்டும் எப்பவாவது கோவை போகும் போது போய் பார்ப்பேன், என்று சிவா முடிக்க

சத்யன் கைகளில் தலையை தாங்கி உறைந்து போய் உட்கார்ந்திருந்தான்

சிறிது நேரம் கழித்து சிவா 'சார், என்று அழைக்க சத்யன் என்ன என்று திரும்பி பார்க்க 'சாரிங்க சார் எங்க கதையை சொல்லி
நான் உங்களை கஷ்டப்படுத்திட்டேன் சாரி சார் ,என்று வருந்த

'
ம்ஹும் அதெல்லாம் ஒன்னும் இல்ல சிவா நான் இதை எதிர்பார்கல அதான், என்றவன் 'சிவா காரை நீங்க ஓட்றீங்களா, என்று கேட்க

'
ம் சரி சார் நீங்க இங்க வாங்க என்று இருவரும் இடம் மாறியதும் கார் கோவையை நோக்கி கிளம்பியது

அதன் பிறகு சத்யன் ஒரு வார்த்தை கூட பேசவில்லை

ஆனால் சிவா மட்டும் ச்சே இவரு ரொம்ப இளகிய மனம் படைச்சவர் போல மான்சி கதையை கேட்டு இப்படி டல்லா ஆயிட்டாரே ரொம்பவே நல்லவர் என்று நினைத்தபடி காரை ஓட்ட

சத்யன் எவ்வளவு இளகிய மனம் உள்ளவன்னு போக போக தானே தெரியும்

No comments:

Post a Comment