Monday, February 23, 2015

மாமன் மகள் மான்சி - அத்தியாயம் - 10


சிறிதுநேரம் மான்சி சொன்னதையெல்லாம் அமைதியாக யோசித்த அர்ச்சனா “ சரி மான்சி நீ சொல்றதும் எனக்கு நியாமாகத்தான் படுது இப்போ என்ன செய்யப்போற” என மான்சியிடம் கேட்க “ எனக்கு நீதான் உதவனும் அர்ச்சனா... இங்கேயிருந்து வேற வீட்டுக்கு போயிறனும்.... இந்த வேலையை விட்டுட்டு வேற ஜாப் தேடிக்கனும்....

அதுவரைக்கும் என்னோட சேவிங்ஸ் இருக்கு அதை வச்சு அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்......இதை பத்தி யாராவது கேட்டா அவர் வெளிநாட்டுக்கு போயிருக்கிறார்ன்னு சொல்லிறலாம்...... என் வீட்டுக்கு நான் புராஜெக்ட் விஷயமா ஒரு வருஷம் அமெரிக்காவுக்கு போயிருக்கிறதா சொல்லலாம்.... என்ன அர்ச்சனா நீ என்ன சொல்ற” என்று அர்ச்சனாவிடம் தனது யோசனைக்கு ஆதரவு கேட்டாள் மான்சி “ ம் நீ சொல்றது எல்லாம் சரியாத்தான் இருக்கு... ஆனா தனியா இருந்து குழந்தை பெத்துக்கறது சதாரணமான விஷயம்ன்னு நெனைச்சயா....

அது ரொம்ப கஷ்டம் மான்சி” “நான் அதையும் யோசிச்சுட்டேன் அர்ச்சனா... இப்போ என் வீட்டில் வீட்டுவேலை செய்றாங்களே ஒரு லேடி அவங்களுக்கு யாரும் இல்லை.... இருந்த ஒரு பொண்ணும் மேரேஜ் ஆகி போய்ட்டா..... அதனால அவங்களை என்கூடவே இருந்துக்க சொன்னா நிச்சயமா இருப்பாங்க அர்ச்சனா” என்று முடித்தாள் மான்சி



“ பிளானெல்லாம் கரெக்டாதான் இருக்கு.... சரி எனக்கு தெரிஞ்ச சிலரிடம் சொல்லி வேற வீடு பார்க்க சொல்றேன்.... நீ அதுக்குள்ள அந்த வேலைக்காரம்மா கிட்ட விஷயத்தை சொல்லி இன்னிலேர்ந்தே உன்கூட தங்கச்சொல்லு.... இனிமேல் நீ தனியா இருக்க வேனாம்....அப்புறம் ஜாப்ப ரிசைன் பண்றதுக்கு ஏற்பாடு பண்ணு..... ஆனா இதுபோல ஒரு நல்ல வேலை கிடைக்காது பார்க்கலாம்....

சரி மான்சி நான் கிளம்பறேன் குழந்தை ரொம்ப நேரமா டிரைவர்கிட்ட இருக்கு அப்புறம் அழ ஆரம்பிச்சுடுவா" என்று சொல்லிவிட்டு வாசலை நோக்கி அர்ச்சனா போக "அர்ச்சனா கொஞ்சம் இரு" என்று மான்சி அவளை மறுபடியும் அழைத்தாள் .... அர்ச்சனா நின்று திரும்பி பார்த்தாள் "அர்ச்சனா தயவுசெய்து இந்த விஷயம் நம்ம ரெண்டு பேர்குள்ளயே இருக்கட்டும்.... வேற யார்க்கும் தெரியவேண்டாம் ப்ளீஸ் அர்ச்சனா " என்று கண்களில் கண்ணீருடன் மான்சி கெஞ்ச அர்ச்சனா வேகமாக அவளருகில் வந்து அவள் கைகளை பற்றிக்கொண்டு " ச்சீ இதுக்கு போய் ஏன்டி அழற நான் யார்கிட்டயும் சொல்லமாட்டேன் ....

ஆனா என்னோட ஹஸ்பண்ட் விஜய்க்கு மட்டும் சொல்லித்தான் ஆகனும் ஏன்னா நீ இப்போ இருக்கிற நிலைமையில் ஒரு ஆணுடைய ஆதரவு இருந்தால்தான் எதையும் நாம சரியா செய்ய முடியும்... ஆனால் விஜயால உனக்கு எந்த பிரச்சனையும் இருக்காது உனக்குத்தான் அவரைப் பற்றி தெரியுமே ... சரி மான்சி நான் கிளம்பறேன் ரொம்ப நேரமாச்சு' என்றவள் அவசரமாக வெளியேறினாள் மான்சியின் மனசு நிம்மதியாக அப்பாடி என்று சோபாவில் சாய்ந்தாள்

 "மகனோ மகளோ...... "மட்டற்ற மகிழ்ச்சி தான்..... "மகளென்றால் தாயாவேன்..... "மகனென்றால் சேயாவேன்..... "ஒரே சமயத்தில் ...... "தாயாகவும் சேயாகவும்..... " ஆசையெனக்க - உனக்கு...? மான்சி நினைத்தது போலவே எல்லாம் நடந்தது வீட்டை மாற்றி வேறு இடத்துக்கு போனாள்....... புராஜக்ட் விஷயமாக அமெரிக்கா சொல்வதாக தன்வீட்டுக்கு தகவல் சொன்னாள்..... தன்னுடன் மெயிலில் மட்டும் தொடர்பு கொள்ளபடி அஸ்வினுக்கு சொன்னாள்....
 மான்சியின் வீட்டு வேலைக்காரம்மாள் அஞ்சனா என்ற நாற்பத்தைந்து வயது பெண் கிட்டத்தட்ட மான்சியைப் பற்றிய விஷயங்கள் அனைத்தும் தெரிந்துகொண்டு அவளை நன்றாக புரிந்துகொள்பவளாக ஒரு தாயைப்போல ஆதரவுடன் இருந்தாள் ஆனால் மான்சி தைரியமாக இருந்து குழந்தை பெற்றுக்கொள்கிறேன் என்று அர்ச்சனாவிடம் சொல்லிவிட்டலே தவிர ஒவ்வொரு நாளும் துன்பம் நிறைந்த நாட்களாகவே இருந்தது ஜந்தாவது மாதம் வரை வாந்தி. மயக்கம் .தலைசுற்றல் ரொம்ப அவதிப்பட்டாள்....


அப்போதெல்லாம் அர்ச்சனாவும் அஞ்சனாவும் மான்சியை கவனமாக பார்த்துக்கொண்டனர் மான்சிக்கு ஒவ்வொரு மாதமும் செக்கப்புக்காக மருத்துவமனைக்கு போவது அதைவிட கஷ்டமாயிருந்தது...... அங்கே வரும் மற்ற கர்ப்பிணி பெண்கள் தங்கள் கணவனுடன் வர இவள் மட்டும் அர்ச்சனாவுடன் போய் அவர்களை பார்த்து தனக்கு மட்டும் ஏன் இப்படி என்று மனம் குமுறுவாள்.....

 வயிற்றை தள்ளிக் கொண்டு தன் கணவனின் கையை பிடித்துக்கொண்டு முகம் மலர கதை பேசும் மற்ற கர்ப்பிணி பெண்களை பார்த்து இவள் மனம் ஏங்கும் அப்போதெல்லாம் அர்ச்சனா தான் மான்சியின் கைகளைத் பற்றிக்கொண்டு ‘’எல்லாம் சரியாகிவிடும் மான்சி’’ என்று ஆறுதல் சொல்வாள் மான்சி நாளாக நாளாக தனது உப்பிய வயிற்றை தடவிப்பார்த்து சத்யனின் அருகாமைக்காக ரொம்பவும் ஏங்க ஆரம்பித்தாள் ஏற்க்கனவே அவன்மீது அளவுகடந்த காதலை மனம் நிறைய சுமந்தவள்.... இப்போது அவன உயிரையும் தன் வயிற்றில் சுமந்தாள் தம்பி அஸ்வினும் அவள் அப்பா ராஜவேலுவும் அடிக்கடி மெயில் செய்தார்கள்.....

அஸ்வின் அனுப்பும் மெயில்களில் அதிகமாக சத்யனைப் பற்றியே இருக்கும்..... சத்யன் இப்போதெல்லாம் அடிக்கடி சென்னை வருவதாகவும்....அவள் அப்பா கூட சிலநேரங்களில் கோபமின்றி அவனுடன் பேசுவதாகவும்....என்று இவளுக்கு மெயில் நிறைய தகவல் வரும் ஒருநாள் இவளின் மெயில் ஐடி கேட்டு சத்யன் ரொம்ப தொல்லை செய்வதாகவும்... கொடுக்கலாமா என்று அஸ்வின் இவளிடம் கேட்டு மெயில் செய்தான் மான்சிக்கு கொடுக்க வேண்டியதுதானே லூசு மாதிரி என்னை கேட்கிறேனே என்று மனம் நினைத்தாலும்.... கொடுக்க வேண்டாம் என்று உடனே அஸ்வினுக்கு மெயில் செய்தாள்

 அவளின் மனதின் ஒருபக்கம் சத்யனுக்காக நாளுக்கு நாள் ஏங்கி தவித்து துவண்டாலும்... மறுபக்கம் அன்று அவன் ரம்யாவின் பெயரைச்சொன்னது வஞ்சினமாக புகைந்தது...... இரவு முழுவதும் என்னை புணர்ந்துவிட்டு காலையில் அவள் பெயரைச்சொல்லி என்னை அணைத்தது எந்த விதத்தில் நியாயம் என்று அவனுக்காக ஏங்கிய மனதை கேள்வி கேட்டாள் மான்சி குழந்தை பிறக்க வேண்டிய நாள் நெருங்க அர்ச்சனாவின் கணவன் விஜய் மான்சியின் நிலைமை உணர்ந்து அர்ச்சனாவை மானசியின் வீட்டிலேயே தங்கச் சொன்னான் அர்ச்சனாவும் விஜய்யும் டாக்டர் குறித்த தேதியில் மான்சியை அழைத்துச் சென்று மருத்துவமனையில் சேர்த்தார்கள்

 தனிமையும் குழப்பமும் மான்சியை ரொம்பவே பலவீனப்படுத்தி இருந்தாலும்..... முயற்சிசெய்து தன் குழந்தையை நல்ல படியாக பெற்றாள் சத்யனின் மகள் அவனைப் போலவே நீளமான விரல்களுடன் நீள்சதுர முகத்துடன் கூர்மையான மூக்குடன் வெளேரென்று இருந்தாள்.... மான்சி தன் மகளை தொட்டுத்தொட்டு பார்த்து பூரித்தாள்..... அர்ச்சனாவும் வேலைக்காரம்மாவும் அவளையும் அந்த அழகு குழந்தையையும் விட்டு எங்கேயும் நகரவில்லை

 “ஏன்டி மான்சி உன் பொண்ணோட மூக்கு இவ்வளவு நீளமா இருக்கே அப்புறம் பெரியவளான இன்னும் நீளமாக வளர்ந்து அசிங்கமா இருக்கும் போலடி” என்று அர்ச்சனா குழந்தையின் மூக்கைப் பார்த்து கிண்டல் செய்ய “அதெல்லாம் ஒன்னும் அசிங்கமா இருக்காது.... இப்போ அவ அப்பாவுக்கு என்ன அசிங்கமாவா இருக்கு..... நல்ல அழகாத்தானே இருக்காரு அதேபோல அவரு பொண்ணும் அழகாத்தான் இருப்பா “ என்று தன் குழந்தையோடு சத்யனையும் சேர்த்து வக்காலத்து வாங்கி பேசினாள் மான்சி மருத்துவமனையில் இருந்து ஐந்தாவது நாள் மான்சியும் குழந்தையும் வீட்டுக்கு வந்தனர்.....

 குழந்தை அழும் அழகை மான்சி தலையில் கையை ஊன்றிக்கொண்டு படுத்தபடி ரசிப்பாள் “ச்சு அப்படியே அப்பனைப் போலவே பிடிவாதம் பிடிக்குது பாருங்கம்மா’’என்று அஞ்சனாவிடம் சொல்வாள்...... அஞ்சனாவுக்கு சத்யனைப் பற்றி எதுவும் தெரியாது என்பதால் மான்சியை பார்த்து சிரித்துவிட்டு போவாள் நாளாக நாளாக குழந்தை வளர்ச்சி ரொம்ப வேகமாகவும் அழகாகவும் இருக்க....

மான்சிக்கு தன் மகளே உலகம் என்று ஆகிவிட்டது மான்சி தன் மகளுக்கு தபஸ்யா என்று பெயர் வைத்தாள்.... சத்யனின் பெயரிலிருந்து ஒரு எழுத்தாவது தன் மகளின் பெயரில் வரவேண்டும் என நினைத்துதான் அந்த பெயரை வைத்தாள் மான்சி வேலைக்கு போகாததால் அவள் கையிலிருந்த சேமிப்பு சிறுகச்சிறுக கரைந்தது குழந்தைக்கு ஆறு மாதம் ஆனபோது அஸ்வினிடம் இருந்து ஒரு மெயில் வந்தது.....

தாத்தா மிகவும் கவலைக்கிடமாக சென்னையில் மருத்துவமனையில் சேர்த்திருப்பதாகவும்... தாத்தா மான்சியை உடனே பார்க்க விரும்புவதாகவும்.... அதனால் அவளை உடனடியாக கிளம்பி வரச்சொல்லி மெயில் வந்திருந்தது மான்சி மெயிலை பார்த்துவிட்டு அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் தலையில் கைவைத்துக்கொண்டு உட்கார்ந்துவிட்டாள் "

 இப்போது............ " தோட்டாக்கள்த் துளைத்தாலும்........... " என்னுயிர் போகாது........ " மண்ணுயிர் வந்திருக்கும்......... " என்னுயிரை காணாமல்..! அஸ்வினின் மெயிலைப் பார்த்துவிட்டு மான்சி தலையில் கைவைத்துக்கொண்டு உட்கார்ந்துவிட்டாள்.... சிறிதுநேரம் அமைதியாக யோசித்தவள் பிறகு அர்ச்சனாவையும் விஜய்யிடமும் யோசனை கேட்கலாம் என்று நினைத்து முதலில் விஜய்யின் செல்லுக்கு போன் செய்தாள்..... ஒரே ரிங்கில் செல்லை எடுத்தான் விஜய் “

 சொல்லு மான்சி என்ன விஷயம்” “விஜய் உங்க ஆபிஸ் முடிஞ்சதும் நீங்களும் அர்ச்சனாவும் கொஞ்சம் என் வீட்டுக்கு வந்து போகமுடியுமா” என்று மான்சி கேட்டாள் “என்ன மான்சி குழந்தைக்கு ஏதாவது உடம்பு சரியில்லையா நேத்துதானே பார்த்தேன் நல்ல இருந்தாளே” என பதட்டமாக விஜய் கேட்க “குழந்தைக்கு ஒன்னும் இல்லை அண்ணா அஸ்வின் கிட்ட இருந்து ஒரு மெயில் வந்திருக்கு அது விஷயமா பேசனும் அதனால்தான் வரச்சொன்னேன்” என்று மான்சி கூறியதும்

 “சரி மான்சி நான் ஈவினிங் அர்ச்சனா ஆபிஸ் போய் அவளை கூட்டிகிட்டு உன் வீட்டுக்கு வர்றேன்” என்று விஜய் இணைப்பை துண்டித்தான் அன்றுமாலை இருவரும் வந்தவுடன் அஸ்வினிடமிரு்து வந்த மெயில் பற்றி மான்சி சொல்ல...... அர்ச்சனா விஜய் இருவருக்கும் இனி என்ன செய்வது என்று குழப்பமாக இருந்தது “ ஏன் மான்சி நீ வெளிநாட்டுக்கு போயிருக்கிறதா உங்க வீட்டில சொல்லியிருந்தயே.... இப்போ அங்கிருந்து வந்துட்டதா வீட்டுக்கு தகவல் சொல்லிட்டயா” என விஜய் தாடையை தடவிக்கொண்டே யோசனையுடன் கேட்க

 “ம் போன மாசமே அஸ்வினுக்கு மெயில் பண்ணி சொல்லிட்டேன்.... ஏன் கேட்கிறீங்க விஜய்” என்றாள் மான்சி “அப்படின்னா நான் ஒரு யோசனை சொல்றேன் சரியா வரும்மான்னு பாரு” என்றவன் அஞ்சனாவிடம் திரும்பி “ ஏம்மா நீங்க மான்சி கூட வெளியூருக்கு போகத் தயாரா” என்று இந்தியில் கேட்க... அஞ்சனா சரியென்று தலையசைத்தாள் “ அப்ப சரி மான்சி நான் சொல்றதை கவனமா கேளு.... நான் நாளைக்கு பிளைட்ல உனக்கும் அஞ்சனாவுக்கும் சென்னைக்கு டிக்கெட் எடுக்கறேன்.... நீங்க ரெண்டு பேரும் குழந்தையோட போய்ட்டு வந்திருங்க” என்று விஜய் சொல்ல

 அர்ச்சனா அவனை தடுத்து “ என்னங்க சொல்றீங்க குழந்தையை அங்கே யாருக்கும் தெரியாது அப்புறம் எப்படி அங்க குழந்தையை தூக்கிட்டு போகமுடியும்.... வேற ஏதாவது யோசனை சொல்லுங்க” என்று சலிப்புடன் சொன்னாள் “ ஏய் இறேன்டி அதுக்குள்ள அவசரப்படுற... இவங்க சென்னைக்கு போறதுக்கு முன்னால நான் இன்னிக்கு நைட்டே என் பிரன்ட்கிட்ட சொல்லி சென்னையில நல்ல ஓட்டலாப் பார்த்து ஒரு ரூமுக்கு ஏற்பாடு செய்யச்சொல்றேன்.... "அஞ்சனாவும் குழந்தையும் ஓட்டல் ரூமில் தங்கட்டும் மான்சி மட்டும் போய் மருத்துவமனையில் அவ தாத்தாவை பார்த்துட்டு உடனே வந்துரட்டும்.... என்ன மான்சி நான் சொன்ன யோசனை சரியா வருமா” என மான்சியை பார்த்து விஜய் கேட்டதும் மான்சி முகமலர்ந்து

“ ம் சரியா வரும் விஜய்.... ஆனா எனக்கு லீவு கிடைக்கலைன்னு சொல்லிட்டு தாத்தா பார்த்துட்டு உடனே கிளம்பி வந்துரனும் இல்லேன்னா சிக்கலாயிடும்” என்று சொன்னாள் " சரி மான்சி நீ நாளைக்கு வர்றதா அஸ்வினுக்கு போன் செய்து தகவல் சொல்லிடு.... நான் மொதல்ல என் பிரண்டுக்கு போன் பண்ணி ஓட்டல்ல ரூம் ஏற்பாடு செய்யச்சொல்றேன்....என்ற விஜய் உடனே மான்சிக்கு டிக்கெட் ஏற்பாடு செய்ய கிளம்பிவிட.... அர்ச்சனா குழந்தை தபஸ்யாவை கவனமாக பார்த்துக்கொள்ளச் சொல்லி மான்சிக்கும் அஞ்சனாவுக்கும் ஆயிரம்முறை புத்திமதிகள் சொல்லிவிட்டு அவளும் தன் வீட்டுக்கு கிளம்பினாள்

 அஞ்சனா சென்னை செல்ல தேவையானவற்றை எடுத்து வைக்க உள்ளே போய்விட்டாள் மான்சி மனதில் இனம்புரியாத குழப்பத்துடன் சோபாவில் உட்கார்ந்தாள்.....நாளை எப்படி தன் வீட்டில் உள்ளவர்களை எதிர்கொள்ளவது.... தன் உடல் மாற்றங்கள் ஏதாவது தன்னை காட்டி கொடுத்துவிடுமா...என நினைத்த மான்சி அவசரமாக குனிந்து தன் உடம்பை பார்த்தாள்..... அவளின் பருத்து பால் நிறைந்து பூரித்த அவள் மார்புகளை தவிர உடலில் வேறு எந்த மாற்றமும் இல்லை.... மான்சி தன் மார்புகளை கைகளால் தடவி பார்த்து “ ச்சே இது ஏன்தான் இப்படி பெரிசாகிப் போச்சே தெரியலை....

ஐயோ இதை யாராவது கவனிச்சுட்டா என்ன பண்றது... அதிலேயும் சத்யன் கவனிச்சு பார்த்துட்டான்னா அவ்ளோதான்... ஆனா அவன் அங்கே இருப்பானா என்று தெரியவில்லையே.....சரி ரொம்ப ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் இல்லையென்றால் எல்லாரிடமும் மாட்டிக்கொள்ள வேண்டியதுதான்... ஆனால் மான்சியின் காதல் நிறைந்த பைத்தியக்கார மனது நாளை சத்யனை எப்படியாவது பார்க்க வேண்டும் என கடவுளை வேண்டியது இப்படி எதைஎதையோ நினைத்த சரி வருவது வரட்டும் என்று மனதை திடப்படுத்திய மான்சி குழந்தைகளுக்கு தேவையானவைகளை எடுத்து வைக்க எழுந்து போனாள்



" காதலிப்பவர்கள் எல்லாம்.... "பைத்தியம் பிடித்தவர்களா..? "அப்படியானால் " பைத்தியம் பிடித்தவர்கள்... "எல்லாம் ஏற்கனவே..... "காதலித்தவர்களா....?? பொள்ளாச்சியில் இருந்து தாத்தாவை கூட்டிவந்து சென்னை மருத்துவமனையில் சேர்த்த சத்யன் மான்சியின் வீட்டில் அஸ்வின் ரூமில் தங்கினான்.....சத்யன் அங்கே தங்கியதால் வேலுவை தவிர வேறு யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை தன் சித்தப்பா வீட்டில் சத்யனைப் பார்த்ததும் ‘இவன் ஏன் இங்கே வந்தான்

தங்க வேற இடமே கிடைக்கலையா’என்று உள்ளுர புகைந்த வேலு முறைத்துக்கொண்டு வந்த உடனே கிளம்பிவிட்டான் ஆனால் சத்யன் மாமியார் வீட்டு விருந்துக்கு வந்திருக்கும் மருமகனைப் போல ரொம்ப சவுகரியமாக இருந்தான் அன்று மாலை தாத்தாவை பார்க்க மருத்துவமனைக்கு கிளம்ப வேண்டிய சத்யன் அலைச்சல் காரணமாக நன்றாக தூங்கிவிட்டான் ...

 அஸ்வின் அவனை “ சத்யா மாமா டைமாச்சு எழுந்திருங்க ஆஸ்பிட்டல் போகனும் “என்று எழுப்ப கண்களை கசக்கிக்கொண்டு வாட்ச்சை பார்த்த சத்யன் ரொம்ப நேரமாகிவிட்டதை உணர்ந்து அவசரமாக எழுந்து பாத்ரூம் போய் குளித்து ரெடியாகி வந்தான் சத்யன் சமையலறைக்கு போய் தனது அத்தையிடம் காபி கேட்டு வாங்கி அங்கேயே சமையல் மேடையின் மீது ஏறி உட்கார்ந்துகொண்டு காபியை குடித்தான்..... அப்போது அங்கே வந்த அஸ்வின் அழகம்மையிடம் போய் “ அம்மா மான்சி நாளைக்கு வறாலாம் இப்போதான் போன் பண்ணாம்மா” என்று உற்சாகத்துடன் கத்த

 அதை கேட்ட சத்யன் பதட்டத்தில் காபியை மேலே கொட்டிக்கொண்டு “ ஏய் அஸ்வின் எப்படா போன் பண்ணா என்னை கூப்பிட்டு இருக்கலாம்ல..... நானும் அவகிட்ட பேசியிருப்பேனே” என்று வருத்ததுடன் சொல்ல “ இல்ல மாமா உடனே கட் பண்ணிட்டா...... அதான் நாளைக்கு வர்றாளே நல்ல உட்கார்ந்து மணிக்கணக்கில் பேசுங்க” என்று கிண்டல் பேசிய அஸ்வின் தன் அம்மாவிடம் திரும்பி “பார்த்தியாம்மா உன் அண்ணன் மகனை.... மான்சி வர்றான்னு சொன்னவுடனே முகத்தில் தவுசண்ட் வாட்ஸ் பல்பு எரியுது” என்று சொல்லி சிரித்தான்

 மான்சி வருகிறாள் என்றதும் சத்யன் மனம் துள்ளியது..... டீன்ஏஜ் பையன் போல விசிலடித்துக் கொண்டு சமையலறை விட்டு வெளியே வந்தவன்..... மறுபடியும் அஸ்வின் ரூமுக்கு போய் கண்ணாடியில் தன்னை பார்த்தான் ம் லேசாக தாடியிருக்கு அதை மொதல்ல நாளைக்கு எடுத்துறனும்..... ச்சே தாத்தாவை கூட்டிட்டு வர்ற அவசரத்தில் போட்டுக்க நல்ல சட்டைக்கூட எடுத்துட்டு வரலையே.... என்று வருந்தியவன் ....

சரி அஸ்வினை கூட்டிப்போய் மான்சிக்கு பிடிச்ச மாதிரி கலர்ல சட்டை எடுக்கலாம் என்று நினைத்தவனுக்கு திடீரென்று ஒரு விஷயம் ஞாபகம் வந்தது மான்சி இன்னேரம் முன்பு நடந்தது எல்லாத்தையும் மறந்திருப்பாளா....... என் தரப்பு வாதத்தை பத்தி யோசிச்சிருப்பாளா....கோபம் குறைஞ்சு என்னை ஏத்துக்குவாளா...... அப்படி எல்லாத்தையும் மறந்தவளா இருந்தா இன்னேரம் என்னுடன் போனில் பேசியிருப்பாளே.....

 ம் எது எப்படி இருந்தாலும் நாளைக்கு அவளிடம் இறுதியாக பேசி ஒரு முடிவெடுக்க வேண்டும்..... இனிமேலும் அவளை நினைத்துக்கொண்டு கனவில் குடும்பம் நடத்த முடியாது..... நிஜமாகவே அவளுடன் வாழ்ந்து பார்க்க வேண்டும்..... இதில் அனைவருக்கும் சம்மதமாகத்தான் இருக்கும்.... என்ன இந்த வேலுதான் ஏதாவது தகராறு செய்வான்.....

 அப்படி ஏதாவது தகராறு செய்தால் டாப்சிலிப்பில் மான்சிக்கும் எனக்கும் நடந்த உறவைப்பற்றி சொல்ல வேண்டியதுதான்..... அதன்பிறகு முடியாதுன்னு எப்படி சொல்வான்.... வேற வழியில்லாமல் அவன் தங்கச்சியை எனக்கு கொடுத்துதான் ஆகனும்.. என்றெல்லாம் பலவாறு நினைத்துக்கொண்டிருந்த சத்யனை மறுபடியும் கீழே இருந்து அஸ்வினின் குரல் அழைக்க சத்யன் உற்சாகமாக தாவிக்குதித்துபடி கீழே ஓடினான் " காதலித்தால் கண்கள் பரிமாறும்.....

 "முகம் புன்னகை பூக்கும்...... "
நம்மை சுற்றிலும் மனம் வீசும்..... 
"பின்னணியில் இசை ஒலிக்கும்...... 
"உலகமே எதிர்ப்பது போல தோன்றும்.....
 "உள்ளம் போரிடும்..... "
எங்கும் நம்மைச்சுற்றி பனிமழை பொழியும்.....
 "பார்க்கும் அத்தனையும் அழகாக தெரியும்......
 "மாமலைகளையும் உடைத்தெறியும்
தைரியம் வரும்.......... "அவளுடன் மறுபிறவிலும்
 சேர மனம் ஏங்கும்....... "
இவை எல்லாமே எனக்கு .... " உனக்கு.......???

 மான்சி குழந்தை அஞ்சனா மூவரும் சென்னை புறப்பட விஜய்யும் அர்ச்சனாவும் அவர்களை வழியனுப்பிவிட வந்தனர்...... “ மான்சி நீ எந்த டைமில் சென்னைக்கு வர்றேன்னு அஸ்வினுக்கு தகவல் சொல்லியிருக்கியா ” என்று மான்சியிடம் விஐய் கேட்டான்

 “ம்ஹூம் இல்லை விஜய் நான் இன்னிக்கு சென்னை வர்றேன்னு சொன்னேனே தவிர எந்த ப்ளைட் எந்த நேரம் எதுவுமே சொல்லலை.... ஆனால் அஸ்வின் டைட் ரெண்டு தடவை போன் பண்ணி எத்தனை மணிக்கு வர்றேன்னு கேட்டான்... அதுக்கு நான் இன்னும் டிக்கெட் கிடைக்கலை அப்படி கெடச்சு கன்பார்ம் ஆனதும் போன் பண்றேன்னு சொல்லிருக்கேன் ” என்றாள் மான்சி “ அதுதான் சரி மான்சி.... ஏன் கேட்டேன்னா உங்க வீட்ல யாராவது உன்னை ரிசீவ் பண்ண வந்திட்டா அப்புறம் உன்னோட சேர்த்து குழந்தையைப் பார்க்க வாய்ப்பிருக்கு அதுக்குத்தான் கேட்டேன்” என்றான் விஜய்

 “ ம் நானும் அதையெல்லாம் யோசிச்சுதான் அஸ்வின்கிட்ட அதுமாதிரி சொன்னேன்..... சரி விஜய் இப்போ நாங்க சென்னை போனதும் டாக்ஸி பிடிச்சு ஹோட்டலுக்கு போயிறவா” என விஜயிடம் மான்சி கேட்க “இல்ல மான்சி ஹோட்டல்ல இருந்தே உன்னை ரிசீவ் பண்ண கார் வரும்.... நீங்க அதிலேயே ஹோட்டல் போய் அஞ்சனாவையும் குழந்தையையும் ஹோட்டல் ரூமில் விட்டுட்டு அதுன்பிறகு அந்த கார்லயே நீ மட்டும் உன் தாத்தாவை பார்க்க ஆஸ்பிட்டல் போயிடு....

ஆனால் ஜாக்கிரதை மான்சி போய் கொஞ்சநேரம் மட்டும் இரு..... அதன்பிறகு ஏதாவது சாக்கு சொல்லிட்டு உடனே ஹோட்டலுக்கு வந்துரு” என்றான் விஜய் “ ம் ரொம்ப நன்றி விஜய்... ஆனால் என்னால உங்களுக்கு ரொம்ப சிரமம்..... தொந்தரவுக்கு ஸாரி அர்ச்சனா” என்று மான்சி அர்ச்சனாவை பார்த்து சொல்ல “ ஏய் இதுக்கு ஏன்டி ஸாரி சொல்ற.... நாம என்ன அப்படியா பழகியிருக்கோம்..... ஆனா மான்சி எனக்கும் விஜய்க்கும் நீ குழந்தையை சத்யன்கிட்ட இருந்து மறைக்கனும்னு நெனைக்கறது சுத்தமா பிடிக்கலை....

சத்யன் தபஸ்யாவோட அப்பா மான்சி அவர்கிட்ட நீ குழந்தையை பத்தி சொல்லாதது ரொம்ப தப்புன்னு விஜய் பீல் பண்றார்.....உன்னோட பிடிவாதத்தை உன் குழந்தைக்காக மாத்திக்க முயற்சி பண்ணு மான்சி... இதை நான் உன் தோழியா சொல்லலை..... நானும் ஒரு குழந்தையோட அம்மாங்கிறதால சொல்றேன்..... ஒரு குழந்தைக்கு தன் தகப்பனின் அன்பு எவ்வளவு முக்கியம் தெரியுமா மான்சி...... உன் பிடிவாதத்தால் அந்த அன்பு தபஸ்யாவுக்கு கிடைக்காத மாதிரி பண்ணிடாத மான்சி....

நான் சொன்னதை நிதானமாக நல்ல யோசிச்சு பாரு ப்ளீஸ்” என்று உருக்கமாக அர்ச்சனா மான்சியிடம் கேட்டுக்கொண்டாள் மான்சி எதுவுமே பேசவில்லை தன் மகளை மார்போடு அணைத்தபடி கண்கலங்கி நிற்க்க.... விஜய் அவளின் கலங்கிய முகத்தை பார்த்துவிட்டு அர்ச்சனாவை அதட்டினான் “ ஏய் அர்ச்சு இதை சொல்ல உனக்கு இப்பதான் நேரம் கெடச்சதா....பாரு கிளம்பற நேரத்தில் மான்சிய கண்கலங்க வச்சிட்ட’... என்றவன் மான்சியிடமிருந்து குழந்தையை வாங்கிக்கொண்டான் “

 இதோ பாரும்மா மான்சி அவ ஏதோ தெரியாம சொல்லிட்டா நீ அதையெல்லாம் மனசுல வச்சுக்காத.... நீ என்ன முடிவெடுக்கனும்னு நெனைக்கிறயோ அதை உன் இஷ்டப்படி எடு... ஏன்னா பாதிக்கப்பட்டது நீ.... உனக்குத்தான் உன் மனசோட வலிகள் தெரியும்.... ஆனா எந்த முடிவாக இருந்தாலும் நீ தபஸ்யாவை மனசுல வச்சு எடுக்கனும்.. இனிமேல் அவளுக்கு எது கெட்டது எது நல்லதுன்னு நல்லா தீர்க்கமா யோசிச்சு அதன்பிறகு முடிவெடு எல்லாம் சரியாக இருக்கும்... என்ன சரியா மான்சி “... என விஜய் மான்சியிடம் பக்குவமாக நிலைமையை எடுத்துரைத்தான்

 அரைமனதோடு விஜய்க்கு சரியென்று தலையசைத்து பதில் சொன்ன மான்சி குழம்பிய மனதுடன் சென்னைக்கு விமானம் ஏறினாள் அவளுக்கு விஜய்யும் அர்ச்சனாவும் சொல்வது சரிதான் என்று மனதில் பட்டாலும் அவளுடைய தன்மானத்தை விட்டுக்கொடுத்து சத்யனுடன் சேர்ந்து வாழ வேண்டுமா என்ற கேள்வி பெரிதாக எழுந்தது ஆனாலும் தபஸ்யாவின் எதிர்காலத்தை நினைத்து கலக்கமாக இருந்தது....

 தகப்பன் இல்லாமல் ஒரு பெண் குழந்தையை தனியாக வளர்க்கமுடியுமா என்ற சிந்தனை மான்சியின் மனதில் பலமாக எழுந்தது சென்னையில் வந்து இறங்கியதும் விஜய் ஏற்பாடு செய்த ஹோட்டலுடைய காரில் ஹோட்டலுக்கு வந்தார்கள் மான்சி இதுவரை மகளை ஒருமணிநேரம் கூட பிரிந்ததில்லை என்பதால் இப்போது அஞ்சனாவையும் குழந்தையையும் தனியே விட்டுவிட்டு போவதற்க்கு ரொம்ப கலங்கினாள்

 அவளின் கலக்கத்தை பார்த்த அஞ்சனா பயப்பட வேண்டாம் குழந்தையை ஜாக்ரதையாக பார்த்துக்கொள்வதாகவும் அவளை நிம்மதியாக மருத்துவமனைக்கு போய் தாத்தாவை பார்த்துவிட்டு வரும்படி இந்தியில் கூறினாள் மருத்துவமனைக்கு எந்த உடை அணிந்து செல்வது என்று மான்சிக்கு குழப்பமாக இருந்தது.... சுடிதார் அணிந்தால் தனது பருத்த மார்புகள் தன் தாய்மை நிலையை காட்டிக்கொடுத்துவிடம்..... மெல்லிய நைலக்ஸ் புடவை கட்டினால் அதுவும் ஆபத்துதான் என்று நினைத்தவள்...

தனது பரிமானங்களை மறைக்கும் ஒரு மொடமொடப்பான காட்டன் புடவை கட்டினாள் மான்சி குழந்தைக்கு தேவையானவற்றை மேசையின் மீது எடுத்து வைத்தாள்... அஞ்சனாவிடம் ஒரு செல்போனைக் கொடுத்து குழந்தைக்கு ஏதாவது தேவையென்றால் தனக்கு உடனே தகவல் தெரிவிக்கும்படி சொல்லிவிட்டு ஹோட்டலில் ஏற்பாடு செய்திருந்த காரில் மருத்துவமனை நோக்கி சென்றாள். மான்சி காரிலிருந்து இறங்கி மருத்துவமனைக்குள் நுழைந்த போது சுதாகர் வெளியே வந்துகொண்டிருந்தான்......

மான்சியை புடவையில் பார்த்ததும் அடையாளம் தெரியாமல் முதலில் தடுமாறியவன் பிறகு சுதாரித்து “வாங்க மான்சி நீங்க வர்றீங்கன்னு காலையிலிருந்தே எல்லாரும் உங்களை எதிர்பார்த்துக்கிட்டு இருந்தாங்க.... நீங்க இப்பதான் வர்றீங்க..... தாத்தா இருக்கிறது முதல் மாடியில் 25 நம்பர் ரூம்ல வாங்க போகலாம்”........ என்று சுதாகர் மான்சியை அழைத்துச்சென்றான் மான்சி அறைக்குள் நுழைந்தபோது சத்யனின் அம்மா அப்பா மான்சியின் அம்மா அழகம்மை ரஞ்சனி என இவர்கள் மட்டும் இருக்க தாத்தா பார்க்க ரொம்ப கவலைக்கிடமாகத்தான் இருந்தார்........

அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு நினைவின்றி படுக்கையில் கிடந்தார் மான்சியை பார்த்ததும் அழகம்மை மான்சியா இது என்ன புடவையெல்லாம் கட்டியிருக்கா என குழம்பிப்போய் பின்னர் வந்து அவள் கைகளை பற்றிக்கொண்டு ‘’என்னம்மா எப்போ வந்தே நீ எந்த பிளைட்டில் வர்றேன்னு தெரியாமா எல்லாரும் உனக்காக காத்திருந்தோம்.... தாத்தாவுக்கு நேத்து நைட் வரைக்கும் நினைவு இருந்தது அடிக்கடி உன்னை கேட்டுகிட்டே இருந்தார்..... இன்னிக்கு காலையில இருந்துதான் இப்படி இருக்கார்” என்று அழகம்மை சொல்லிக்கொண்டு இருக்க மான்சி தாத்தாவிடம் போய் கண்கலங்க அவரையே பார்த்துக்கொண்டு இருந்தாள் மான்சியை விட்டுவிட்டு வெளியே வந்த சுதாகர் அவசரமாக தனது செல்லை உயிர்பித்து வெளியே போயிருந்த சத்யனுடன் தொடர்பு கொண்டான்....

ஒரே ரிங்கில் சத்யனின் குரல் கேட்க.....சுதாகர் உற்ச்சாகமாய் “ டேய் சத்யா உன் ஆளு மான்சி வந்தாச்சுடா சீக்கிரமா ஆஸ்பத்திரிக்கு வாடா’”என்று சொல்ல எதிர் முனையில் இருந்த சத்யன் ஆர்வமாக “ எப்போ வந்தா சுதா இன்னும் கொஞ்ச நேரத்தில் நான் அங்கே இருப்பேன்” என்று கூறி இனைப்பை துண்டித்தான் சுதாகர் முகத்தில் சிரிப்புடன் ‘ம் பையனுக்கு இனி ஜாலிதான்’என்று நினைத்துக்கொண்டு மருத்துவமனையில் இருந்து வெளியேறினான் அடுத்த அரைமணிநேரத்தில் சத்யன் தாத்தாவின் அறையில் இருந்தான்.....

உள்ளே நுழைந்ததும் அவன் கண்கள் மான்சியை தேட.... அவள் அறையில் கிடந்த சிறு கட்டில் உட்கார்ந்து ரஞ்சனியிடம் வேலுவையும் மற்றவர்களைப் பற்றியும் விசாரித்துக்கொண்டு இருந்தாள் சத்யன் வேறு யாரையும் கவனிக்காமல் அவளருகில் போய் நின்றான்... அவனை நிமிர்ந்து பார்த்த மான்சி முகத்தில் லேசான திகைப்புடன் எழுந்து நின்றுவிட்டாள்.... சத்யனின் கண்கள் அவளை விட்டு இப்படி அப்படி நகரவில்லை அவளை தன் பார்வையாலேயே விழுங்கிவிடுபவன் போல பார்த்துக்கொண்டிருந்தான்

 மான்சிக்கு அவன் பார்வை அவளின் கண்கள் வழியாக இதயத்தை ஊடுருவி அங்கிருந்த அவளின் முரட்டு பிடிவாதத்தை உடைத்து பொடிப்பொடியாக்குவது போல இருந்தது.... மான்சிக்கு ஏழு வருஷத்துக்கு முந்தய அவளுடைய அழகன் சத்யனை பார்ப்பது போல இருந்தது அவனுடைய மாற்றங்கள் அவளுக்கு நன்றாக புரிந்தது..... சத்யன் அவள் இஞ்ச் இஞ்சாக கண்களால் அளந்து அவளின் அற்புதமான தாய்மையின் அழகை தனது இதயத்தில் பதிவுசெய்து கொண்டிருந்தான்

 அவனின் அந்த ஊடுருவும் பார்வையில் மான்சிக்கு அவளின் இதயத்தில் இருந்து ஏதோ உருகி வழிந்து ஓடி சத்யனின் காலடியில் சென்று சரனடைவது போல இருந்தது அவளுடன் தினமும் கனவில் தாம்பத்யம் நடத்தும் சத்யனுக்கு அவள் உடலின மாற்றங்கள் நன்றாக தெரிந்தது......அவளின் செழித்து அங்கங்கள் அவன் பார்வையில் இருந்து தப்பவில்லை.... வந்த பெருமூச்சை முயற்சிசெய்து அடக்கிய சத்யன்.... தன் மனதில் இருந்த பேரோசையுடன் எழுந்த ஏக்கத்தையும் விரகத்தையும் கஷ்டப்பட்டு தனித்தான்....

 அவள் கண்களை பார்த்துக்கொண்டே “ ம் எப்ப வந்தே மான்சி” என்று கேட்டான் “ ம் இப்போதான் வந்தேன் நீங்க எப்ப வந்தீங்க” என மான்சி தரையை பார்த்துக்கொண்டு கேட்க “ நான் தாத்தாவை கூட்டிவந்ததில் இருந்து இங்கேதான் இருக்கேன்..... அதுசரி நீ வீட்டுக்கு போய்ட்டு தானே வர்றே” “ இல்ல ஏர்போர்ட்டில் இருந்து நேரா இங்கேதான் வர்றேன் ஆபிஸ்ல லீவு கெடைக்கல அதனால உடனடியாக போகனும்” என் சத்யனுக்கு அவள் உடனே போகவேண்டும் என்று சொன்னது ரொம்ப ஏமாற்றமாக இருக்க..... மனதில் முனுமுனுத்த கோபத்துடன் தாத்தாவின் கட்டிலருகே போய் நின்று கொண்டான் அப்போது மான்சியின் செல்போன் ஒலிக்க மான்சி யாரென்று டிஸ்ப்ளேயில் பார்த்தாள் .

.ஹோட்டலில் இருந்து அஞ்சனாவின் நம்பர் என்றதும் அவசரமாக அறையைவிட்டு வெளியே வந்து வராண்டாவில் கைப்பிடிச் சுவரின் அருகே யாருக்கும் கேட்காதவாறு சுவரில் கவிழ்ந்து குனிந்து பேசினாள் எதிர் முனையில் இருந்த அஞ்சனா ‘ குழந்தை பசியால் அழுவதாகவும் பால் கலக்க வென்னீர் இல்லை என்றும் வெளியே போய் வாங்கி வரவா என்று இந்தியில் கேட்க... “ம்ஹூம் அதெல்லாம் வெளியே போகாதீங்க நான் ஹோட்டல் ரிசப்ஷனுக்கு போன் பண்ணி ரூமுக்கே எடுத்து வந்து தரச்சொல்றேன்” என்று அவசரமாக பேசிய மான்சி அந்த இனைப்பை துண்டித்துவிட்டு ஹோட்டல் ரிசப்ஷனுக்கு தொடர்புகொண்டாள்....

 அங்கே போன் உடனே எடுக்கப்பட்டது


தனது அறை எண்ணை சொல்லி குழந்தைக்கு பால் கலக்க வென்னீர் தேவையென்றும் உடனே கொண்டுபோய் தருமாறு தகவல் சொன்வள்.... தான் வர இன்னும் சிறிதுநேரம் ஆகும் என்பதால் அந்த அறைக்கு என்ன தேவையென்றாலும் உடனடியாக கொடுக்குமாறு சொல்லிவிட்டு இனைப்பை துண்டித்தாள் தாத்தாவுக்கு தேவையான சில மருந்துகளை வெளியே இருந்து வாங்கிவந்த சுதாகர் கீழ் வராண்டாவில் நடந்து வரும்போது அவன் செல்லில் மெசேஜ் வர அது என்ன என்று செல்லை ஆன் செய்து பார்த்துக்கொண்டிருந்தவன் தன் தலைக்கு நேர் மேலே மான்சியின் குரல் கேட்டு அப்படியே நின்று என்ன பேசுகிறாள் என்று கவனித்தான்

 மான்சி பேசியதை முழுவதையும் கேட்ட சுதாகருக்கு முதல் சந்தேகம்... இவள் ஏன் ஹோட்டலில் அறையெடுத்து தங்கியிருக்கிறாள்.... இரண்டாவது சந்தேகம் பால் கலக்க வென்னீர் கேட்டாளே அந்த குழந்தை யாருடையது.... மூன்றாவது சந்தேகம் மான்சி ஏன் இதை ரகசியமாகவும் பதட்டமாகவும் பேசினாள்....

 என்று வெகுநேரம் யோசித்த சுதாகர் தனது செல்லை உயிர்ப்பித்து சத்யனிடம் தொடர்புகொண்டு....”டேய் சத்யா ஒரு முக்கியமான விஷயம் உடனே கீழே வா நான் வெயிட் பண்றேன்” என்று கூறிவிட்டு சத்யனுக்காக காத்திருந்தான்


No comments:

Post a Comment