Thursday, February 19, 2015

மாமன் மகள் மான்சி - அத்தியாயம் - 3


''அவ இவனை அவமானப்படுத்தி பேசினதை எல்லாம் உள்ளுர் பத்திரிகைகளில் போட்டு நாறடிச்சுட்டானுங்க இவனால வெளியே தலைகாட்ட முடியலை ..அத்தோட எங்கயோ வால்பாறை டாப்சிலிப் பக்கமா ஒரு எஸ்டேட்டை வாங்கிட்டு அது நடுவில் ஒரு வீட்டை கட்டிக்கிட்டு அங்கேயே போய் செட்டில் ஆயிட்டான் ...

ஆனா பாவம் மாமாதான் இப்போ மில்லு எல்லாத்தையும் சத்யன் பிரன்ட் சுதாகரை உதவிக்கு வச்சுகிட்டு கவனிச்சுகிறார் ..தாத்தாவும் இன்னிக்கோ நாளைக்கோன்னு இருக்கார் பாவம் அவர் மகளை அதான் உன் அம்மாவை பார்க்கனும்னு சொல்லியிருக்கார் ...மாமாவும் இதுவரைக்கும் பத்துமுறைக்கு மேல இங்கே வந்து சித்தப்பா கால் விலாத குறையாக கெஞ்சி பார்த்தார்..ஆனால் சித்தப்பா கடைசிவரைக்கும் பொள்ளாச்சி போக ஒத்துக்கவே இல்லை..

இப்போ கூட போன வாரம் மாமா இங்கே வந்துபோனார் இதுலே பாவம் உங்கம்மா தான் இப்படியும் சொல்ல முடியாம அப்படியும் சொல்ல முடியாம தவிக்கிறாங்க ''என்று வேலு சொல்லி முடிக்க காருக்குள் குண்டூசி விழுந்தா கூட பலத்த சத்தம் கேட்க்கும் போல அமைதியாக இருந்தது மான்சியின் மனது சொல்லமுடியாத அளவுக்கு பாரமாக இருந்தது.... இதை அவள் எதிர் பார்க்கவில்லை என்பதை அவள் முகமே காட்டியது...

ஒருபக்கம் அவள் ஆசை நாயகனின் சோக வாழ்க்கையும்.... மற்றொரு பக்கம் சிறு வயதிலிருந்து தன்னை மார் மேலும் தோள் மேலும் தூக்கி வளர்த்த தாத்தாவின் சுகக்கேடும் மான்சியின் கலங்க வைத்தது ....ஒரு நீண்ட மவுனத்திற்கு பிறக ''இப்போ தாத்தாவுக்கு எப்படி இருக்குன்னு உனக்கு தெரியுமா அண்ணா ''என்று மட்டும் கேட்டாள். ''வீட்டுலயே வச்சு பார்த்துகிறாங்கலாம் ரஞ்சனி சொன்னா..

சத்யன் வீட்டுக்கு எப்பவாவது மில் கணக்கை பார்க்க மட்டும் வருவானாம் போன வாரம் தாத்தாவை பார்க்க வந்தான் நானும் அவனை வழியில் பார்த்தேன் என்னை பார்த்ததும் தலையை குனிஞ்சுகிட்டான் நல்ல குடிக்கிறான் போல முகமெல்லாம் மாறிபோய் ஆளே பாதி உடம்பாயிட்டான் ''என்று கூறிய வேலுவின் குரலில் வருத்தம் இருந்தது ....பின்னே இருக்காதா ஆயிரமிருந்தாலும் மச்சான் அல்லவா ....

 மான்சி அமைதியாக இருந்தாள் வேலுவே இவ்வளவு வருந்துகிறான் என்றால் சத்யனின் நிலைமை எப்படி இருக்கும் என்று அவள் மனது குமுறியது இவ்வளவு நாட்களாக எல்லா வற்றையும் மறந்துவிட்டதாக நினைத்தது எவ்வாறு பெரிய முட்டாள் தனம் ...அவனின் நினைவுகள் ஆழ்மனதில் இருப்பதால் தானே தன் மனம் இப்படி குமுறுகிறது என்று நினைத்தாள் மான்சி சிறிதுநேரத்திற்கு பிறகு ''வண்டியை எடுண்ணா வீட்டுக்கு போகலாம் ''என்று சொல்லிவிட்டு கண்களை மூடி சீட்டில் சாய்ந்து கொண்டாள் வீட்டுக்குள் நுழைந்த மான்சி அமைதியாக தன் அறைக்கு சென்றுவிட்டாள் ...வேலு தனது சித்தியை தேடிக்கொண்டு சமையலறைக்கு போனான்

 வேலு பார்த்ததும் முந்தானையில் கையை துடைத்து கொண்டு வேகமாக வந்த அழகம்மை ''என்ன வேலு உன் தங்கச்சி கல்யாணத்தை பத்தி என்ன சொல்றா''என்று பரபரப்புடன் கேட்க ''அட போங்க சித்தி அவ பிடிகொடுக்காமல் பேசறா... நானும் எவ்வளவோ சொல்லி பார்த்தேன் அவ சம்மதிக்கவே இல்லை...இதுக்குத்தான் இந்தியா வரவே கூடாதுன்னு நெனைச்சேன்னு சொல்றா ''என்று வேலு சலிப்புடன் பதில் சொன்னான்

 ''இப்போ என்ன பண்றது வேலு..ஊர் உலகத்தில இவளைவிட சின்ன பொண்ணுங்க எல்லாம் கல்யாணம் ஆகி ரெண்டு பிள்ளைக்கு அம்மாவாயிட்டாங்க இவ மட்டும் இன்னும் இப்படியே எத்தனை நாளைக்குத்தான் இருக்க போறாளாம் ''என்று ஒருதாயாக அழகம்மை கண்ணீர் வடித்தாள் ''சித்தி நீங்க அழுவுறதை நிறுத்திட்டு நான் சொல்றதை கேளுங்க ''என்றவன் காரில் மான்சியும் அவனும் பேசியதை விபரமாக அழகம்மையிடம் சொன்னவன் ''எனக்கென்னவோ அவ மனசு இன்னும் சத்யனைத்தான் நெனைச்சுக்கிட்டு இருக்கான்னு தோனுது ...இல்லேன்னா நான் அவனை பத்தி சொன்னதும் கண்கலங்கனும் ....ஆனா மான்சியை கண்ணீர் விடவச்ச அவன் நல்லா சீரழிஞ்சு போய்ட்டான் சித்தி ...இனிமேல் அவன் தலையே தூக்கமுடியாது சித்தி அவ்வளவு அசிங்கப்பட்டுட்டான் ''என்று வேலு குரலில் வன்மத்துடன் கூறினான் அழகம்மைக்கு அவன் அப்படி பேசியது மனதை நோகச் செய்தது ...இப்போதெல்லாம் தனது அண்ணன் மகனின் வாழ்க்கையை எண்ணி வருந்தாத நாளே இல்லை ...

நல்லா இருந்த குடும்பத்துக்கு சனிபிடித்தது போல எங்கிருந்துதான் வந்தாளோ அந்த ரம்யா என்று அவளை திட்டாத நாளே கிடையாது ...தனது அப்பா மரணப்படுக்கையில் இருக்கும் போதுகூட விரோதம் பாராட்டும் தன் கணவனை நினைத்து உள்ளம் நொந்தாள் அழகம்மை. இது நடந்த மறுநாள் மான்சி ஹாலில் அமர்ந்து டிவி பார்த்துக்கொண்டு இருக்க வேலைக்காரன் வேகமாக வந்து ''சின்னம்மா நம்ம பொள்ளாச்சிகார பெரியமாமா காரல வந்திருக்காரு..நம்ம ஐயா அவர் வந்தா உள்ளே விடக்கூடாதுன்னு சொல்லிருக்கார் நான் இப்போ என்னம்மா செய்யட்டும் ''அவளை கேட்டு பணிவுடன் நின்றான்

 மான்சி ஒருநிமிடம் கண்களை மூடித்திறந்து ''நீ போய் அவரை அனுப்பு ''என்று உத்தரவிட ...வேலைக்காரன் வாசலுக்கு ஓடினான் சிறிதுநேரத்தில் சத்யனின் அப்பா உள்ளே வர ...மான்சி எழுந்து நின்று ''வாங்க மாமா ''என்றாள் அவரை பார்த்து ...அவருக்கு இருந்திருந்து பார்த்தால் ஒரு 55 வயதுதான் இருக்கும் ஆனால் 70வயது முதியவர் போல துவண்டு போயிருந்தார் சத்யனின் அப்பாவும்

 மான்சியின் மாற்றங்களை பார்த்து வியப்புடன் ''நல்லாயிருக்கியா மான்சி.... நீ வந்திருக்கிறதா ரஞ்சனி சொன்னா அதான் உன்னை பார்த்துட்டு போகலாம்னு வந்தேன்... வீட்ல யாரும் இல்லையம்மா ''என்று சுற்றுமுற்றும் பார்த்தபடி கேட்க ... ''ம் அம்மா பின்னால தோட்டத்தில் இருக்காங்க ...அப்பா கடைக்கு போயிட்டார்..அஸ்வின் எங்க போயிருக்கான்னு தெரியலை''என்றவள் ''நின்னுகிட்டே இருக்கீங்களே உட்காருங்க மாமா ''என்று மான்சி சோபாவை காட்டினாள் அவரும் ராஜவேலு இல்லையென்றதும் லேசாக முகம் மலர இன்னும் உள்ளே வந்து சோபாவில் உட்கார்ந்தார் ...

பிறகு மான்சியிடம் அவளது படிப்பு வேலை பற்றிய விவரங்களை கேட்டு சம்பிரதாயமாக விசாரித்தவர் ...மான்சி அவளின் வேலை சம்பளம் ஆகியவற்றை சொன்னதும் வாயை பிளந்தார் ..மனதுக்குள் நம்ம வீட்டுக்கு வரவேண்டிய மகாலட்சுமி இப்போது எங்கேயோ போய் படித்து முன்னுக்கு வந்திருக்கிறாள் என்று நினைத்தார் அப்போது தோட்டத்தில் இருந்து வீட்டுக்குள் நுழைந்த அழகம்மை தனது அண்ணனை பார்த்ததும் கண்கலங்க ஓடிவந்து அவர் கைகளை பற்றிக்கொண்டு ''அப்பா இப்போ எப்படிண்ணா இருக்கார் ...என் அப்பாவை கூட போய் பார்க்க முடியாத பாவியாயிட்டேன் ''என்று கண்ணீர் விட... அவரு தங்கையின் கைகளில் தன் முகத்தை வைத்துக்கொண்டு கண்ணீர் விட்டார் '

'ஸ் என்னம்மா இது நீங்களும் அழுது மாமாவையும் அழவைக்கிறீங்க போங்கம்மா போய் அவருக்கு குடிக்க ஏதாவது எடுத்துட்டு வாங்க ''என்று மான்சி தன் அம்மாவின் கண்களை துடைத்துவிட்டு... வலுக்கட்டாயமாக சமையலறைக்கு அனுப்பினாள் பிறகு தன் மாமாவிடம் திரும்பி ''மாமா நான் அப்பாகிட்ட எப்படியாவது இன்னைக்கு நைட் பேசி அம்மாவை பொள்ளாச்சிக்கு அனுப்புறேன் நீங்க என்னை நம்பி இப்போதைக்கு கிளம்புங்க

 ..இன்னும் கொஞ்ச நேரத்தில் அப்பா மதிய சாப்பாட்டுக்கு வந்துருவார்... அப்புறம் உங்களை பார்த்தால் பிரச்சனைதான் ஆகும் அதனால நீங்க கிளம்புங்க மாமா''என்று அவள் வற்புறுத்தி சொல்ல அவர் சரியென்றார் மான்சி சொன்னதும் சரியென்ற சத்யனின் அப்பா அழகம்மை எடுத்து வந்த காபியை வாங்கி பருகிவிட்டு ''அப்ப நான் கிளம்பறேன் அழகு ''என்று தங்கையிடம் விடைபெற்றவர் மான்சியிடம் திரும்பி''

உன் நம்பிதான் போறேன் எப்படியாவது உன் அப்பாவிடம் பேசி சம்மதம் வாங்கி தாத்தாவை வந்து பாருங்க பாவம் வயசானவர்...... போகிற காலத்திலயாவது நல்லபடியாக போய்ச் சேரட்டும் ...மான்சி தாத்தாவுக்கு முக்கியமா உங்கம்மாவைவிட உன்மேல மனசு அடிச்சுக்குதுன்னு நினைக்கிறேன் அதனால நீயும் தயவுசெய்து வரனும் ''என்று கையெடுத்துக் கும்பிட்டு கேட்க மான்சி அவசரமாக அவர் கையை பற்றி ''ச்சே என்ன மாமா நீங்க கையெல்லாம் கும்பிட்டுகிட்டு நான்தான் அப்பாகிட்ட பேசிட்டு வர்றோம்ன்னு சொன்னேன்ல...

அதே போல அம்மா வரும்போது நானும் வர்றேன் நீங்க தைரியமா ஊருக்கு போங்க'' என்றாள் ''ம் சரிம்மா என்று வாசலை நோக்கி போனவர் நின்று திரும்பி மான்சியை பார்த்து ''நீ கடைசிவரைக்கும் சத்யன் எப்படியிருக்கான்னு கேட்கவே இல்லையேம்மா ''என்றார் வருத்தத்துடன் கேட்க மான்சி அவருக்கு பதில் சொல்த்தெரியாமல் தலைகவிழ்ந்து நின்றாள்

 அவர் மறுபடியும் மான்சியின் அருகில் நெருங்கி அவள் கைகளை பற்றி ''மான்சி இப்போ சத்யன் ரொம்ப மாறிட்டான்ம்மா வீட்டுக்கே வர்றது கிடையாது எஸ்டேட்லயே இருக்கான்... உன்னை வேனாம்னு சொன்ன பாவத்துக்கு வாழ்க்கையில் ரொம்பவே சீரழிஞ்சு போயிட்டான் ...தயவுசெய்து இனிமேலும் அவன் மேல் வெறுப்பை வளத்துக்காத மான்சி ''என்று கொஞ்சுவது போல கூற அவர் பற்றியிருந்த மான்சியின் கைகளில் அவருடைய கண்ணீர் துளிகள் விழுந்தன் ...

மான்சி எதுவுமே பேசாமல் அவரிடமிருந்து தன் கையை விடுவித்துக்கொண்டு தனது அறைக்கு போய்விட்டாள் மான்சியின் வீட்டில் அன்று இரவு சாப்பிட்டுவிட்டு ஹாலில் அமர்ந்து டிவி பார்த்துக்கொண்டு இருக்க மான்சி மெதுவாக தன் அப்பாவிடம் பேச்சை ஆரம்பித்தாள். ''அப்பா இன்னிக்கு மதியம் மாமா வந்திருந்தார் ...தாத்தாவுக்கு ரொம்ப முடியலையாம் அம்மாவை அனுப்புங்கப்பா போய் பார்த்துட்டு வரட்டும் ''என்று மான்சி கூற

ராஜவேலு வேகமாக திரும்பி மகளை முறைத்து ''உனக்கென்ன பைத்தியமா புடிச்சிருக்கு மான்சி அவங்க வீட்ல நமக்கு பண்ணதை எல்லாம் மறந்துட்டியா ''என்று கோபமாக கேட்டார் ''எதையும் நான் மறக்கலை அப்பா... ஆனால் சத்யன் செய்ததுக்கு தாத்தா என்ன செய்வார் பாவம் வயசானவர் தன் மகளை பார்க்கனும்னு ஆசை படுறார் அதை ஏன்ப்பா தடுக்கிறீங்க ''என்றவள் எழுந்து அவர் அருகில் வந்து அமர்ந்து ''அப்பா சத்யன் ஒன்னும் என்னை காதலிச்சு ஏமாத்திடலை... அவருக்கு என்னை பிடிக்கலை அதை ஓப்பனா சொன்னார்...

மத்தபடி அவர் மேல அளவுக்கதிகமா கற்பனையை வளர்த்துக்கொண்டது என்னோட தப்புதானே ...இதுக்காக ஒரு குடும்பத்தையே ஒதுக்கி வைக்கிறது ரொம்ப தப்புப்பா...நான் இவ்வளவு நாள் இருந்த நாட்டிலே எல்லாம் குடும்பங்களே கிடையாது அப்பா... எல்லாருமே அவங்க அவங்க இஷ்டப்படி தனித்தனியாகத்தான் வாழ்றாங்க ... நம்ம கலாச்சாரத்தில் மட்டும்தான் இன்னமும் கூட்டு குடும்பங்கள் இருக்கு ..அதனால தயவுசெய்து அம்மாவை அனுப்பிவைங்க அப்பா ''என்று எதைஎதையோ பேசி அவர் மனதை கரைத்து தனது காரியத்தை சாதித்தாள் மான்சி

 மறுநாள் இரவு மான்சி அழகம்மை இருவரும் வேலுவுடன் காரில் பொள்ளாச்சிக்கு கிளம்பினார்கள் ... மான்சி கிட்டத்தட்ட ஏழு வருடம் கழித்து பொள்ளாச்சிக்கு போகிறாள் ...மான்சியின் மனம் முழுவதும் ஒரு இனம் புரியாத உணர்வு ஆக்ரமிக்க மவுனத்துடன் இறுக்கமாக அமர்ந்திருந்தாள் மறுநாள் காலை கார் சத்யனின் வீட்டில் நின்று இவர்கள் காரைவிட்டு இறங்கியதும் வேலைக்காரன் பார்த்துவிட்டு உள்ளே ஓடிச்சென்று அவர்கள் வந்திருக்கும் தகவலைச் சொல்ல ...அவளின் அத்தையும் மாமாவும் வாசலுக்கே வந்து அழைத்துச் சென்றனர்

 மான்சியின் அத்தை அவளை கட்டிக்கொண்டு கதறி அழுதாள் ...அவளை சமாதானம் செய்த மான்சி ''மொதல்ல தாத்தாவை பார்க்கனும் அத்தை எங்கே இருக்கார் ''என்று கேட்டாள் ''ம் வாம்மா மான்சி உன்னையும் அவர் மகளையும் பார்க்கத்தான் உயிரை கையில பிடிச்சிட்டு இருக்கார்''என்ற அத்தை அவர்களை பக்கவாட்டில் இருந்த ஒரு அறைக்கு அழைத்துச் சென்றாள் அங்கே தாத்தா கட்டில் படுத்திருக்க அவருக்கு செயற்கை சுவாசம் போய்க்கொண்டு இருந்தது ரொம்பவும் மோசமான நிலையில் தான் இருந்தார் ...

இவர்களை பார்த்து அடையாளம் தெரிந்தார் போல் தலையசைத்து கண்கலங்கினார்..அவ்வளவுதான் அழகம்மை தனது தகப்பனின் கால்களை பற்றிக்கொண்டு ஓவென்று கத்தி அழ ஆரம்பிக்க மான்சிக்கும் அழுகை வந்தது அந்த அறையில் இருந்த சோகநிலை மாற வெகுநேரம் ஆனது... தாத்தா மான்சியை அருகில் அழைத்து தனது நடுங்கும் கைகளால் அவள் கையை பற்றி தனது நெஞ்சில் வைத்துகொண்டார் ..

மான்சிக்கு ரொம்ப மனசுக்கு கஷ்டமாக இருந்தது அதன்பிறகு இவர்கள் அங்கே வந்திருப்பதை அறிந்து அந்த ஊரில் அனைவரும் ஏதோ திருவிழாவை பார்க்க வருவது போல வந்தனர் ...வந்தவர்கள் எல்லோரும் மான்சியின் அழகையும் அவளின் நாகரீகமான உடையையும் அவளின் ஸ்டைலான ஆங்கில பேச்சையும் பற்றி பேசிப்பேசியே சத்யனின் அம்மா அமுதாவின் மனதை மேலும் ரணமாய் ஆக்கினார்கள் ...

அமுதாவுக்கு தன் மகன் எப்படிபட்ட வாழ்கையை இழந்திருக்கிறான் என்று நினைத்து மான்சியை பார்த்து பார்த்து கண்ணீர் விட்டாள் மான்சி வந்திருப்பதாக வேலு அவன் வீட்டில் போய் சொன்னதும் அங்கிருந்த ஆடுமாடுகளை தவிர மொத்த பேரும் சத்யன் வீட்டுக்கு வந்து விட்டனர் ...குழந்தைகள் பெரியவர்கள் என அந்த வீடே நிறம்ப ....மெதுவாக பழைய கலகலப்பு திரும்பி அந்த வீடு இயல்பானது...தனது வீட்டுக்கு மறுபடியும் கலகலப்பை கொண்டுவந்த தன் தம்பி மகளை தாங்கினாள்

 மான்சி மாடியில் வெறிச்சோடிக்கிடந்த சத்யனின் அறையை பார்க்க ரஞ்சனி அவளருகே வந்து மான்சியின் தோளில் கைவைத்து ''சத்யன் இப்பல்லாம் வர்றதே இல்லை மான்சி... நேத்துகூட அவன் பிரன்ட் சுதாகர் கிட்ட தாத்தா ரொம்ப சீரியஸா இருக்கார் சத்யனை ஒருமுறை வந்து பார்த்துட்டு போகச்சொன்னோம்...சுதாகரும் போய் சொல்லியிருக்கான் ஆனா சத்யன் இன்னும் வரவேயில்லை ''என்று ரஞ்சனி வருத்தத்துடன் சொல்ல மான்சி எதுவும் பேசாமல் கீழே போய்விட்டாள்

 அன்று மாலை பெங்களூரில் இருந்து சத்யனின் பெரிய அக்கா ரத்னாவும் தனது பிள்ளைகளுடன் வந்துவிட்டாள் ...அவளும் தன் பங்குக்கு மான்சியை தனது கண்ணீரால் குளிப்பாட்டினாள்... சத்யன் ரம்யாவை கல்யாணம் செய்துகொண்டதற்க்கு தானும் தான் காரணம் என்று மான்சியிடம் மன்னிப்பு கேட்டாள் அன்று இரவு மொத்த பேரும் சாப்பிட்டுவிட்டு பேசிக்கொண்டு இருந்தனர்... தனது தாய்வீட்டுக்கு வந்ததால் அழகம்மைக்கு முகம் முழுவதும் சந்தோஷமும் சிரிப்புமாக இருந்தது ...

சிறிது நேரத்தில் எல்லோரும் அவரவர் அறைகளில் போய் உறங்க ....ரஞ்சனி சமையலறையில் நாளைக்கு செய்ய வேண்டிய சமையல்கள் பற்றி சமையல்காரியிடம் சொல்லிக்கொண்டு இருக்க .....மான்சி மட்டும் ஹாலில் அமர்ந்து தனது லேப்டாப்பில் தனக்கு வந்திருக்கும் மெயில் பார்த்துக்கொண்டு இருந்தாள் அப்போது வெளியே கார் வந்து நிற்க்கும் சத்தமும் அதை தெடர்ந்து யாரோ கதவை தடாலென்று திறந்துகொண்டு உள்ளே வர மான்சி திரும்பி பார்த்தாள் அங்கே சத்யன் நிற்க்கவே முடியாமல் தள்ளாடிக்கொண்டு இருக்க அவன் நன்பன் சுதாகர் அவனை கீழே விழுந்து விடாமல் தாங்கி பிடித்துக்கொண்டு இருந்தான் ...

அவர்கள் மான்சியை கவனிக்கவில்லை ...மான்சி அதிர்ந்து போய் சத்யனையே பார்த்துக்கொண்டிருந்தாள் ....அவள் சத்யனா இது இளைத்து துரும்பாகி.. முகமெல்லாம் கறுத்துப் போய்.. கண்கள் சிவந்து ..உதடுகளில் நிக்கோடின் கறைபடிந்து நிறமாறி ..கசங்கிய சட்டையும் கலைந்த தலைமுடியுமாக அவனை பார்த்த மான்சிக்கு இப்போது ஒரு பூகம்பம் வந்து தன்னை இந்த பூமி விழுங்கிவிட கூடாதா என்று இருந்தது

அதற்க்குள் சத்தம் கேட்டு அங்கே வந்த ரஞ்சனி தனது தம்பியின் நிலையை பார்த்து வேகமாக அவனருகே போய் ''என்ன சத்யா இது இன்னிக்கு போய் இப்படி குடிச்சுட்டு வந்திருக்க ....தாத்தாவை பார்க்க மான்சியும் அழகுஅத்தையும் வந்திருக்காங்க ...இப்போ போய் இதுமாதிரி வந்திருக்கயே ''என்று வருத்தத்துடன் சொல்ல மான்சி என்ற வார்த்தையை கேட்டதும் அவ்வளவு போதையிலும் சத்யன் சட்டென்று உடல் விறைக்க நிமிர்ந்து நின்று சுற்றிலும் அவளை தேடி ...

அவளை பார்த்ததும் கண்களை இப்படி அப்படி திருப்பாமல் அவளையே பார்த்துக்கொண்டு இருந்தான் சத்யன் அதிர்ச்சி அடைந்து இவள் முன்பு இப்படி ஒரு கேவலமான நிலையில் நிற்கிறோமே என்ற அவமானம் அவன் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது.. அவளை நெருங்கி முதலில் ஏறஇறங்க பார்த்தவன் அவளின் கலங்கிய கண்களை பார்த்தவுடன் தானும் கண்கலங்கி ''எப்ப வந்த மான்சி ''என்று வாய் குழறலாக கேட்க மான்சி பதில் எதுவும் சொல்லமல் தன் முன்னே நிற்பது சத்யன் தானா என்பது போல திகைப்புடன் வெறித்துப் பார்த்தாள்

 ''என்ன மான்சி அப்படி பார்க்கிற நான் அதே சத்யன்தான்... ஆனால் அப்போ உயிருள்ள சத்யன்.. இப்போ ஒரு நடமாடும் பிணம் ..ஆனா இந்த முட்டா பசங்க ஏன் இன்னும் என்னை அடக்கம் பண்ணாம இப்படியே வச்சுருக்காங்கன்னு தெரியலை ...ஒருவேளை நீ வந்துதான் எனக்கு இறுதிச்சடங்கு செய்யனும்னு நெனைச்சிருக்கானுங்களா ... மான்சி நான் உன்னை அலட்சியப்படுத்தியதுக்கு இன்னும் நெறைய அனுபவிக்கனும் ...ஆனா இதுக்கு மேல நான் தாங்குவேனான்னு சந்தேகமாயிருக்கு ...ரொம்ப வலிக்குது மான்சி ''என்று அவன் தன் கையால் நெஞ்சில் குத்தி காட்ட ... ரஞ்சனி ஓடிவந்து கண்ணீருடன் அவன் பிடித்து '' வேண்டாம் சத்யா பேசாமல் போய் உன் ரூம்ல படுடா''என்று அவனை கையை பிடித்து இழுத்தாள்

 ''ஏய் என் கையை விடு ரஞ்சி... எங்கே உன் அக்கா அந்த ரத்னா வந்திருக்காளா ..அவளால்தான் என் வாழ்க்கையே வீணா போச்சு அந்த ரம்யாவை இவளும் இவ புருஷனும் சேர்ந்துதான் என் தலையில் கட்டினாங்க கூப்பிடு அவளை ''என்றவன் உரக்க குரல் கொடுத்து ''ஏய் ரத்னா இங்கே வா''என்று கத்தினான் அதுவரைக்கும் இவர்கள் பேச்சில் குறுக்கிடாமல் தள்ளி நின்றிருந்த சுதாகர் வேகமாக சத்யன் அருகில் வந்து

''டேய் என்னடா இது இந்த நேரத்தில இப்படி கத்தறே... உள்ளே தாத்தா வேற உடம்பு சரியில்லாம இருக்கார்... இப்போ போய் இப்படி கத்தி கலாட்டா பண்றே..வாடா போகலாம் ''என்று சத்யன் கையை பிடித்து இழுத்து சொல்ல ..சத்யன் அதிக போதையில் தடுமாறி கீழே சரிந்து விழுந்தான் அதை கண்டு மான்சியின் ஐயோ கடவுளே என்று உள்ளம் பதறியது... ரஞ்சனியும் சுதாகரும் ஆளுக்கொரு பக்கமாக சத்யனை கைகொடுத்து தூக்கி மாடியை நோக்கி அழைத்துச் செல்ல ..

சத்யன் ஏதேதோ உளறிக்கொண்டே படிகளில் ஏறினான் ..பாதி படிகளில் நின்று திரும்பி மான்சி பார்த்து கையெடுத்து கும்பிட்டு '' என்னை மன்னிக்க மனசிருந்தால் மன்னிச்சுடு மான்சி ... என்னோட மரணம் நல்லபடியாக சீக்கிரமே வரனும்னு எனக்காக கடவுளை வேண்டிக்கோ மான்சி ''என்று சொல்லிவிட்டு மேலே ஏறினான்... இதைச்சொல்லும் போது அவன் கண்கள் கலங்கி இருந்தன மான்சியின் கண்களிலும் கண்ணீர் வழிந்தது

 மான்சி திக்பிரமை பிடித்து சத்யன் மாடிக்கு போய் வெகுநேரம் ஆகியும் அங்கேயே நின்று மாடிப் படிகளை வெறித்துக்கொண்டு இருந்தாள் மறுபடியும் கீழே இறங்கி வந்த ரஞ்சனி மான்சி அப்படியே நிற்பதைப் பார்த்து வேகமாக அருகில் வந்து ''மான்சி சத்யன் ரொம்ப அநாகரிகமா நடந்துகிட்டான் ஸாரிம்மா''என்றவள் மான்சியின் கையை பற்றி ''வா மான்சி போய் படுக்கலாம்'' என்று அழைத்துச் சென்றாள் படுக்கையில் விழுந்த மான்சிக்கு தூக்கமே வரவில்லை... கண்களை மூடினால் சத்யனின் கலங்கிய கண்களும் அவனின் வார்த்தைகளும் மனதில் வலம்வந்தன ...

 ஏன் இப்படி ஆனது ஏழு வருசத்துக்கு முன்னாடி வரைக்கும் எல்லாமே நல்ல படியாகத் தானே இருந்தது.... இடையே இந்த சூராவளி எப்படி வந்து எங்கள் இருவரின் வாழ்க்கையையும் புரட்டிப்போட்டது....இதுக்கெல்லாம் யார் காரணம் முகம் தெரியாத விதியா இல்லை.... வக்கிரமான மனித மனங்களில் சதியா... எப்படி இருந்தவன் குறும்புப் பார்வையும் கிண்டல் பேச்சும் துள்ளல் நடையும் அழகான தேகமும் நேர்த்தியான உடைகளும் இவையெல்லாம் எங்கே போனது ....ஒரு தவறான துணையால் மனிதனை இப்படி வீழ்த்த முடியுமா .... இந்த கடவுள் சத்யனை இந்த நிலைமையில் வைத்திருப்பதற்கு பதிலாக ஏதாவது ஒரு விபத்தை ஏற்படுத்தி ஒரு நிம்மதியான மரணத்தை வழங்கியிருக்கலாம் ...

  இவனுடைய புறக்கணிப்பால் நான் எடுத்த தற்கொலை முயற்சிக்கு பிறகு என் வாழக்கை பாதை நன்றாக அமைந்துவிட்டது ....ஆனால் என்னை புறக்கணித்த ஒரே காரணத்துக்காக இவனுக்கு இவ்வளவு பெரிய தன்டனையை கடவுள் கொடுத்திருக்கிறார் என்றால் அது பெரிய அநியாயம் அல்லவா....இந்த சிறிய பிரச்சனைக்கு இவனுக்கு இவ்வளவு பெரிய தண்டனையை இறைவன் தருகிறான் என்றால் அப்படிபட்ட இறைவனே இந்த உலகுக்கு தேவையில்லை ...

இனி அவன் பழைய நிலைமைக்கு மாறுவானா ..என்று பலவாறு யோசித்து குழம்பி கண்ணீர் விட்டு கதறியது மான்சியின் மனம் ... கண்களில் வழியும் கண்ணீரைக் கூட துடைக்க மனமில்லாமல் விட்டத்தை வெறித்து கொண்டு படுத்திருந்தாள் ....இதுவரை அவள் படித்த படிப்பு ....தேடிய செல்வம் ....கிடைத்த அந்தஸ்து இவை அத்தனையும் சத்யனின் கலங்கிய தோற்றத்தையும் ...அவனின் நொந்து போன மனநிலையையும் பார்த்து தூள்தூளாக சிதறியது ....

அவளின் பழைய கிராமத்து காதல் கிளி மறுபடியும் அவள் மனதில் தன் சிறகுகளை விரித்தது ...ஆனால் முன்பு ஏற்ப்பட்ட பலத்த காயங்களால் அதன் சிறகுகள் பழுதுபட்டிருக்க இருந்த இடத்தில் இருந்து வெளியே வரமுடியாமல் அங்கேயே தன் சிறகுகளை படபடவென அடித்துக்கொண்டு கண்ணீர் விட்டது. மான்சி எல்லாவற்றையும் எண்ணி மனம குமுறி ஏங்கி தவித்து பிறகு தூங்குவதற்கு வெகுநேரம் ஆனது இது தெரியாத சத்யன் தனது அறையில் சுதாகரிடம்... மான்சியின் முன் தான் இப்படி சீரழிந்து போய் நிற்கிறோமே என்று புலம்பி தவித்து கண்ணீர் விட்டு ..... காலையில் அவள் முகத்தில் விழிக்காமலேயே எஸ்டேட்டுக்கு ஓடிப்போனான்

 காலையில் வெகுநேரம் கழித்து கண்விழித்து எழுந்த மான்சி ரஞ்சனியைப் பார்த்து முதலில் கேட்ட கேள்வி சத்யன் எங்கே என்றுதான் ....அவன் அதிகாலையிலேயே எழுந்து எஸ்டேட்க்கு போய்விட்டதாக ரஞ்சனி சொன்னதும்...... மான்சியின் மனம் தனது மிச்சமிருந்த சந்தோஷத்தையும் தொலைத்து ஊமையானது...... ஏன் என்னுடைய முகத்தை பார்க்க அவனுக்கு விருப்பமில்லையா .... இன்னும் நான் அவனுக்கு தகுதியற்றவள் என்று நினைக்கிறானா ..... இல்லையே இப்போது நான் அழகாகத்தானே இருக்கிறேன் ...என்று மறுபடியும் மனம் குமற மான்சி நின்றபோது ..

கைகளில் சில பைல்களுடன் அங்கே வந்த சுதாகர் சத்யன் அப்பாவின் அறைக்குள் நுழைய ...அப்போதுதான் மான்சிக்கு திடீரென ஒரு யோசனை தோன்ற தன் மாமாவின் அறை வாசலில் சுதாகரக்காக காத்திருந்தாள் சிறிதுநேரத்தில் சுதாகர் வெளியே வர ...அவனை நெருங்கி தன்னை சத்யன் இருக்குமிடத்துக்கு அழைத்து போகச்சொன்னாள் மான்சி

 அவள் சொன்னதைக் கேட்டு சிறிதுநேரம் அவளை உற்றுப் பார்த்த சுதாகர் முகம் மலர ''சரி ரெடியாகுங்க மேடம் நான் கூட்டிட்டு போறேன்'' என்றான்

 ''நான் உன்னை உனக்காகவே ..... '
'நேசிக்கிறேன்- அதை.... ''
உன்னிடம் பகரமுடியாமல் .... '
'தயக்கமெனும் பனிப் போர்வைக்குள்.... ''
தத்தளிக்கிறேன்..... ''இந்த மொழி புரியா .... ''
மௌனக் கவிதையின் ''
பூரணத்துவத்தை படிக்க .... ''
வார்த்தையின்றி தவிக்கிறேன்... ''
என்று முடியும் எனது .... '
'மௌனத் தவம்....!

 மான்சி சத்யனை பார்க்க டாப்சிலிப் போகிறாள் என்றதும் அந்தவீட்டில் அனைவரின் முகத்திலும் சூரியன் உதயமானது போல பளிச்சென்று ஆனது ...வேலுவை தவிர ..அவனுக்கு மான்சி சத்யனைத் தேடி போவதில் கொஞ்சம் கூட விருப்பம் கிடையாது வேலு மான்சியை தனியே அழைத்து ''என்னம்மா உனக்கு புத்தி பேதலிச்சு போச்சா அவனை ஏன் பார்க்க போற இப்போ நீ இருக்கிற தகுதிக்கும் அந்தஸ்துக்கும் அவனை போய் பார்க்கறது சரியான்னு யோசிச்சு பாரு ''என்று கடுமையான குரலில் எச்சரிக்கை செய்தான்

 மான்சிக்கு அவனுடைய கடுமையான குரலில் மனதை பாதித்தாலும் ''அண்ணா நீ தகுதி அந்தஸ்துன்னு எதை சொல்ற ..நீ சொல்ற அதெல்லாம் நிலையே இல்லாததுண்ணா ...நாளை எப்படி வேண்டுமானாலும் மாறும்.. ஆனால் குடும்ப உறவுமுறை அதை மாத்தி அமைக்க முடியுமா ...நான் பதிக்கப்பட்ட என்னோட அத்தை மகனுக்கு ஆறுதல் சொல்லத்தான் போறேன் மத்தபடி வேற எதுவுமே இல்லை ...என்று வேலுவை நேராக பார்த்து சொன்னாள்

 ''சரிம்மா நீ சொல்ற மாதிரியே இருக்கட்டும் ...ஆனா நீ ஒரு விஷயத்தை மறந்து பேசற நேத்து நைட்டு வந்த சத்யன் காலைல உன்கிட்ட சொல்லிக்காமலேயே ஏன் போனான் ...நீ வந்தது அவனுக்கு பிடிக்கலைன்னு நான் சொல்றேன்... இதுக்கு நீ என்ன பதில் சொல்லுவ மான்சி''...என்று வேலு நேரடியாக கேட்க மான்சி அவனுக்கு என்ன பதில் சொல்வது என்று புரியாமல் தவித்த பிறகு''நானும் அதை பத்தி யோசிச்சேன் அண்ணா ...ஆனால் நைட்டு சத்யன் என்னிடம் பேசினத வச்சு பார்த்தா அந்த மாதிரி எதுவும் இருக்கும்ன்னு எனக்கு தோணலை ...

என்ன நடக்குதுன்னு போய்தான் பார்க்கலாம் ...ஆனால் என்னோட தன்மானத்தை மட்டும் யாருக்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டேன் இதை நீ உறுதியாக நம்பலாம் ''என்ற மான்சி அவனின் பதிலை எதிர்பாராமல் அறைக்குள் போய் தனக்கு தேவையானவற்றை எடுத்து வைக்க ஆரம்பித்தாள் வேலுக்கு மான்சி கடைசியாக சொன்ன... 'தனது தன்மானத்தை யாருக்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டேன்'...என்ற வார்த்தையால் மனதில் நிம்மதி ஏற்பட மான்சியை சுதாகருடன் அனுப்ப காரை தயார் செய்வதற்காக போனான்

 மான்சி காரில் ஏறி உட்கார்ந்ததும்.... காரின் ஜன்னல் வழியாக உள்ளே கையைநீட்டி அவள் கையை பற்றிக்கொண்ட சத்யனின் அம்மா அமுதா... சொல்வதற்கு வார்த்தைகள் எதுவும் வரமால் தன் கண்ணீரால் அவள் கைகளை நனைத்து வழியனுப்பினாள்...

 கார் கிளம்பி கடுமையான மலைப்பாதைகள் வழியாக.. பல கொண்டைஊசி வளைவுகளை கடந்து.. டாப்சிலிப்பை தாண்டி... பரம்பிக்குளம் டாம் செல்லும் வழியில் இருந்து பிரிந்து.... ஒரு கடுமையான மண்சாலையில் சத்யனின் எஸ்டேட்டை நோக்கி போய்க் கொண்டு இருந்தது...வழிநெடுகிலும் இறைவன் கொடுத்த பச்சை விரிப்பாக தேயிலை தோட்டங்களும் ....வானுயர்ந்த பிரமாண்டமான மரங்கள் நிறைந்த காடுகளுமாக இருந்தது ....

திடீரென குறுக்கிடும் சிறுசிறு ஓடைகளுமாக மான்சியின் மனது நல்ல நிலையில் இருந்திருந்தால் இவற்றையெல்லாம் பார்த்து உற்சாகத்துடன் கைத்தட்டி சிரித்து சந்தோஷப்பட்டிருப்பாள் ...ஆனால் இப்போது அவளால் எதையுமே ரசிக்க முடியவில்லை கார் சத்யனின் எஸ்டேட்டை நெருங்கியது....

காரை ஓட்டிக்கொண்டு வந்த சுதாகர் மான்சியிடம் திரும்பி ''மேடம் நீங்க சத்யனை பார்க்க வர்றேன்னு சொன்னதும் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது ....ஆனால் அவன் அங்கே எப்படி என்ன நிலையில் இருப்பான்னு என்னால சொல்ல முடியாது ..அதனால நீங்கதான் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கனும் ...இப்பல்லாம் ரொம்ப நேரம் தனியாவே இருக்கறான் ... யார்கிட்டயும் சரியா பேசறது இல்லை ...அவன் மனசால ரொம்ப நொந்து போய்ட்டான் மேடம் .... நீங்கதான் அவனுக்கு நிகழ்காலத்தை பத்தி கொஞ்சம் எடுத்து சொல்லனும் ... என்று சொல்லிவிட்டு பதிலுக்காக மான்சியின் முகத்தையே பார்த்தான்

 சிறிதுநேரம் அமைதியாக இருந்த மான்சி பின்னர் ''அவருடைய எக்ஸ் மனைவி கடைசி கோர்ட்டில் அவரை ஏதோ தரக்குறைவாக பேசி அவமானப்படுத்தியதாக சொன்னாங்க ...அப்படி அவ என்னதான் சொன்னா '' என்று சுதாகரை பார்த்து கேட்க மான்சி இதை கேட்டதும் சுதாகரின் முகம் கோபம் .வருத்தம். இயலாமை இவையெல்லாம் கலந்த கலவையாக மாறியது
.... கண்கலங்க மான்சியை பார்த்து ''அவன் அந்த ரம்யாவை ரொம்ப விரும்பினான் ...எப்படியாவது அவளை திருத்தி அவகூட சேர்ந்து வாழனும்ன்னு நெனைச்சுத்தான் சத்யன் அவளுக்கு டைவர்ஸ் கொடுக்க மறுத்தான்.... ஆனால் அவ திருந்தவில்லை இவன் பணம் ஒன்றே குறிக்கோள்ளாக இருந்தா .... அன்னைக்கு நானும்தான் அவன்கூட கோர்ட்டுக்கு போனேன்... ரம்யாவும் மலேசியாவில் இருந்து வந்திருந்தா ... ரெண்டு பேரையும் ஜட்ஜ் கூப்பிட்டு விசாரிச்சார் ... சத்யன் டைவர்ஸ் கொடுக்க முடியாது அவளோட சேர்ந்து வாழ ஆசை படுறதாக சொன்னான்... ஜட்ஜ் அவளை கூப்பிட்டு இதுக்கு என்ன பதில் நீங்க சொல்றீங்கன்னு கேட்டார் .... அதுக்கு அந்த மூதேவி ....என்றவன் மேல்கொண்டு சொல்ல முடியாமல் காரை ஒரமாக நிறுத்திவிட்டு கார் கண்ணாடியை இறக்கி வெளியே பார்த்து தனது கொதிப்பை அடக்க முயன்றான் .

 ''ம் சொல்லுங்க சுதாகர் அவ அதுக்கு என்ன சொன்னா'' என்று மான்சி கலவரமான குரலில் கேட்க ... மறுபடியும் அவளிடம் திரும்பிய சுதாகர் கண்கலங்கி ரொம்ப படபடப்புடன் ''அவ சத்யனை ஆண்மை இல்லாதவன்னு சொன்னா மேடம் ...இவனால தன்னை திருப்த்தியாக வைச்சுக்க முடியாதுன்னு சொன்னா மேடம்.... இவன் குடும்ப வாழ்க்கைக்கு லாயக்கில்லாதவன்னு சொன்னா மேடம்.... இவனால எந்த பொண்ணையுமே சந்தோசப்படுத்த முடியாதுன்னு சொன்னா மேடம் ...'' பத்தாததுக்கு இதையெல்லாத்தையும் உள்ளுர் பத்திரிகைக்காரனுங்க மறுநாள் பேப்பரில் எழுதி மேலும் சத்யனை அசிங்கப்படுத்திட்டானுங்க .... நாங்கெல்லாம் இது உன்மையில்லைன்னு நிரூபிக்கலாம்னு சத்யன் கிட்ட எவ்வளவோ சொன்னோம் அவன் ஒத்துக்கலை....

மேலும் என்னை அசிங்கப்படுத்தாதீங்கன்னு சொல்லிட்டு இங்கே வந்துட்டான்'' .... என்று குமுறலாய் கூறியவன் ..... காரில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்துக்கொண்டு காரைவிட்டு இறங்கி தன் முகத்தில் நீரை வாறியடித்து கழுவினான் மான்சி உடம்பெல்லாம் நடுங்கியது .... இப்போது ரம்யா மட்டும் அவள் எதிரில் இருந்திருந்தால் அவளை உருத்தெரியாமல் அழித்து இருப்பாள்.....

என் சத்யனா ஆண்மை இல்லாதவன் ..... வயிற்றில் பயங்கரமான இரைச்சல் கேட்க வயிறு திகுதிகுவெனஎரிந்தது ..... மான்சி அய்யோ என்று சத்தமிட்டு அடிவயிற்றை கைகளால் அழுத்தமாக படித்து கொண்டாள் .. வெளியே இருந்த சுதாகர் இவளின் சத்தம் கேட்டு..... என்னாச்சு மேடம் என்று பதட்டத்துடன் காருக்குள் எட்டி பார்த்து.....

உள்ளே அவள் இருந்த நிலையை கண்டு ....ச்சே இதைப்போய் ஏன் இவங்ககிட்ட சொன்னோம் என்று வருந்தி ... தன்கையில் இருந்த தண்ணீர் பாட்டிலை அவளிடம் கொடுத்து ''கொஞ்சம் தண்ணீர் குடிங்க மேடம்'' என்று சொல்ல மான்சி மறுபேச்சின்றி அதை வாங்கி மடமடவென்று குடித்தாள் ... பிறகு தன்னை நிதானப்படுத்தி கொண்டு ''காரை எடுங்க நாம போகலாம்''' என்றவள் ''என்னை இனிமேல் மேடம்னு கூப்பிடாதீங்க ...நான் உங்களை விட வயசுல சின்னவளாகத்தான் இருப்பேன் .... அதனால மான்சின்னு பெயர் சொல்லியே கூப்பிடுங்க '' என கண்டிப்புடன் கூறிவிட்டு சீட்டில் சாய்ந்து கொண்டாள் சத்யன் எஸ்டேட்டில் கார் நின்றதும் கீழே இறங்கி மான்சி எஸ்டேட்டின் அழகைப்பார்த்து வியந்து போனாள்

 எஸ்டேட் நன்றாக பெரியதாக இருந்தது... சுற்றிலும் தேயிலை பயிர்செய்யப்பட்டிருக்க .... எஸ்டேட்டின் நடுப்பகுதியில் சுற்றிலும் மூங்கில்களால் வேலியமைத்து அந்த வேலியில் காட்டுக் கொடிகள் படர்ந்திருக்க.... நடுவில் ஒரு அழகான சிறிய வீடு கேரள ஓடுகள் வேயப்பட்டு கச்சிதமாக கட்டப்பட்டிருந்தது அந்த அழகையெல்லாம் கண்களால் பருகிக்கொண்டு இருந்த மான்சியை சுதாகர் ''வாங்க மான்சி'' என்று அழைக்க 'ம்' என்று அவன் பின்னே போனாள்

 முதலில் சுதாகர் உள்ளே போக மான்சி தயங்கி மெதுவாக வந்தாள் ... உள்ளே சிறியதாக ஒரு ஹாலும்... அதன் வலதுபக்கம் ஒரு படுக்கையறையும் ... இடதுபக்கம் ஒரு சமையலறையுமாக மிகச்சிறியதாக ஆனால் அழகாக இருந்தது சத்யனின் வீடு ஹாலில் இருந்த பிரம்பு சோபாவில் அமர்ந்து கையில் மதுக்கோப்பையுடன் டிவி பார்த்துக்கொண்டு இருந்த சத்யன் கதவு திறக்கும் சத்தம் கேட்டு திரும்பி பார்த்தான் சுதாகரை பார்த்தும் ''வா சுதா என்ன திடீர்னு சொல்லாம வந்திருக்க ''என்று சத்யன் ஆச்சரியத்துடன் கேட்டுவிட்டு மறுபடியும் திரும்பி டிவியை பார்க்க ஆரம்பித்தான்

 சிறிது அமைதிக்கு பின்னர் சுதாகர் ''டேய் சத்யா இங்கே யார் வந்திருக்காங்கன்னு பாருடா'' என்று கூறி முடிப்பதற்குள்.... ''யாரு வந்திருக்காங்க''என்று வேகமாக திரும்பிய சத்யன் மான்சியை கண்டதும் அதிர்ந்துபோய் அப்படியே நின்றுவிட்டான் பிறகு சுதாரித்துக்கொண்டு '' உள்ள வா மான்சி'' என்று அவளை அழைத்துவிட்டு அவசரமாக கையில் இருந்த மதுக் கோப்பையை டீபாயின் கீழே மறைத்துவைத்தான் மான்சி உள்ளே வர ...சுதாகர் அவள் கையில் இருந்த பெட்டியை வாங்கி கீழே வைத்துவிட்டு ''உட்காருங்க மான்சி '' என்று சொல்ல .....

மான்சி உடனே அமர்ந்து சுற்றிலும் பார்வையை ஓடவிட்டு இறுதியில் சத்யனிடம் நிறுத்தினாள் மான்சி சத்யனை பார்த்ததும் ....சத்யன் தலைகுனிந்து ''என்ன மான்சி திடீர்னு வந்திருக்க யாராவது எதுனாச்சும் சொன்னாங்களா''என்று கேட்க அவனையே பார்த்துக்கொண்டு '' இல்லே நேத்து நீங்க வீட்டுக்கு வந்தப்போ நான் உங்களுக்கு ஹாய் சொல்லவே இல்லை....அதை சொல்லிட்டு போகலாம்னு தான் இப்போ வந்தேன்'' என்று மான்சி நக்கலாக கூறினாள்

 அவள் நக்கலாக கூறியதும் வெடுக்கென தலையை நிமிர்த்திய சத்யன்.... மான்சி உதட்டை கடித்து சிரிப்பை அடக்குவதை பார்த்து ''இப்போ எதுக்கு சிரிப்பு .... எப்படி திமிரா பேசினவன்... இப்போ இப்படி கேவலப்பட்டு நிக்கிறானேன்னு தான சிரிக்கிற'' என்று சத்யன் எரிச்சலாக கேட்டான்

 ''ம் அதுக்கெல்லாம் சிரிக்கலை என்னவோ என் முகத்தை நிமிர்ந்து கூட பார்க்காமல் குனிஞ்சுகிட்டு இருந்தீங்க ..... அதான் சிரிப்பு வந்தது ... ஆமா நான் பார்க்கவே முடியாத அளவுக்கு அவ்வளவு அசிங்கமாவா இருக்கேன் ...முகத்தை இப்படி சுழிக்கிறீங்க ''.... என்று மான்சி அவனை பதிலுக்கு கேட்டதும் சத்யன் ஏதோ சொல்ல வாயெடுக்க ...அதற்க்குள் சுதாகர் குறிக்கிட்டு ''சத்யா இவ்வளவு தூரம் உன்னை பார்க்க வந்திருக்காங்க அவங்களுக்கு குடிக்க ஏதாவது ஏற்பாடு பண்ணாம சும்மா பேசிகிட்டே இருக்க '' என்று சத்யனை அதட்டினான்

 உடனே சத்யன் ''ஸாரி மான்சி என்ன குடிக்கிற டீயா காபியா ... இங்கே என்கூட இருக்கிற நாயர் டீ நல்லா போடுவார் அதையே கொண்டு வரச்சொல்ல வா''.... என்றவன் ஏதோ நினைவு வந்தது போல தன் நெற்றியில் தட்டிக்கொண்டு '' ச்சே உனக்கு டீ பிடிக்காதில்ல ..அப்படின்னா காபியே எடுத்துவரச் சொல்றேன்''.என்று உள்ளே திரும்பி ''நாயர்'' என்று குரல் கொடுக்க ஒரு நடுத்தர வயது மனிதர் வர சத்யன் அவரிடம் ''நாயர் இவ என்னோட மாமா பொண்ணு சென்னையில் இருந்து வந்திருக்கா'' என்று அறிமுகப்படுத்த ....

நாயர் மான்சி பார்த்து கும்பிட்டு ''எந்தா மோளே சுகந்தன்னே''என்று கேட்க ....மான்சி தலையசைத்து பதில் சொன்னாள் ''நாயர் நீங்க போய் இவங்களுக்கு காபி எடுத்திட்டு வாங்க'' என்று அனுப்பியவன் ..சுதாகரிடம் திரும்பி ''ஏன் சுதா நான் வாடான்னு கூப்பிட்டதுக்கு நாளைக்கு மில்லுல முக்கியமான வேலை இருக்கு என்னால வரமுடியாதுன்னு சொன்ன இப்ப பார்த்தா என் பின்னாடியே வந்து நிக்கிற''என்று கிண்டல் குரலில் கேட்டான்



No comments:

Post a Comment